Mar 14, 2013

போராளிகளை மோசமாக பேசும் பயங்கரவாதிகள்!

மார்ச் 15/2013: "சிவசேனா கட்சிக்குச் சொந்தமான புலித் தலை சின்னத்தை, நாம் தமிழர் கட்சி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' என சிவசேனா மாநில தலைவர் குமாரராஜா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: சிவசேனா இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. சிவசேனா கட்சியின் சின்னம் புலித் தலை.  இதை நாம் தமிழர் கட்சி நடத்தி வரும் சீமான் பயன்படுத்தி வருகிறார். இது சட்ட விரோத செயல் ஆகும். 

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தை, சீமான் பகிரங்கமாக ஆதரிக்கிறார். இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க, சதி செயலில் ஈடுபட்டு வருகிறார். இந்த சதி செயலுக்கு, வெளிநாடுகளில் நிதி திரட்டப்படுவதாகவும், தகவல்கள் வருகின்றன. ஆகவே, காவல்துறையினர், சீமானின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவசேனாவுக்கு சொந்தமான புலித் தலையை, சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சிந்திக்கவும்: மராட்டிய ஹிந்துத்துவா இனவெறி பயங்கரவாத அமைப்பான சிவசேனை ஈழத்தமிழர் விடுதலை இயக்கமான புலிகளுக்கு ஆதரவாக சீமான் செயல்படுவதை குற்றம் காண்கிறது. ஈழ விடுதலை போராளி அமைப்பை குறை கூற இந்த அயோக்கியர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

நம்தமிழர் கட்சி இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க சதி செய்வதாக குற்றம் சாட்டுகிறது சிவசேனை. இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செய்து வரும் கொடுமைகளுக்கு, நம்தமிழர் கட்சி மட்டும் இல்லை, மொத்த தமிழர்களும் இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று நினைக்க தொடங்கி விட்டார்கள்

சிவசேனை அயோக்கியர்கள் மராட்டிய இனவெறி, மொழி வெறி தலைக்கேறி  மற்ற மாநிலத்தவர்கள் மீதும், அவர்கள் சொத்துக்கள் மீதும் பல்வேறு கொலை வெறி தாக்குதல்ககளை நடத்தினர். ஆனால் தமிழர்கள் வந்தவர்களை வாழ வைத்தார்கள். தமிழகம் முழுவதும் பல்வேறு மாநில மக்கள் வந்து நிம்மதியாக பிழைப்பு நடத்துகிறார்கள். தமிழர்கள் எல்லோரும் வாழ வேண்டும், எல்லோரும் நமது சகோதரர்கள் என்று எண்ணுகிறார்கள்

பெங்களூரில் கன்னட இன வெறியர்கள் தமிழர்களை அடித்து, அவர்ளது  சொத்துக்களை நாசம் செய்தனர். அதுபோல் மும்பையில் சிவசேனை மராட்டிய வெறியர்களால் தமிழர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இப்படியெல்லாம் நடந்தும் தமிழகத்தில் உள்ள கன்னட, மராட்டிய மக்கள் நிம்மதியாகவே தொழில் செய்கின்றனர், வாழ்கின்றனர்.   இதுதான் தமிழர் பண்பாடு

தமிழர்களுக்கு குறுகிய மொழிவெறி இனவெறி என்பது கிடையாது. இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகள் மறுக்கப்படுவதற்கும், தங்கள் மீது நடத்தப்படும்  கொடுமைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராகவே வேறு வழியின்றி  ஆயுதம் ஏந்தினார்கள். அதே நிலைதான் இன்று இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு நடக்கிறது. ஆறரை கோடி தமிழர்களுக்கு இழைக்கப்படும் பல்வேறு அநீதிகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை
*மலர் விழி*

2 comments:

சிவா said...

அருமையான பதிவு...சிந்திக்கவேண்டிய விசயமே

Anonymous said...

ஈழ மக்களின் இன அழிப்புப்போரை முன்னின்று நடத்திய பாசிஸ்ட் இந்திய அரசை கண்டிக்கின்றோம்! இந்திய ஆளும் வர்க்க நலனுக்காக ஒரு இனத்தையே அழித்த இந்திய அரசின் உதவியோடு அதே இனத்துக்கு விடுதலை பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் அல்லது கோரிக்கை வைப்பதும், மனித குலத்துக்கே ஆபத்தான அமெரிக்க அரசின் தீர்மானம் ஈழ மக்களின் துயரத்தை துடைத்துவிடும் என்று நம்புவதும் முட்டாள்தனமானதும் ஈழ விடுதலைக்கு துரோகமிழைப்பதுமே ஆகும். எனவே இந்திய பிராந்திய மேலாதிக்க அரசை எதிர்க்காமல், ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடிக்காமல் மீண்டும் இவர்களை நம்பியே ஈழ விடுதலையை சாதித்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுப்போமானால் இன அழிப்பு குற்றவாளி ராஜபக்சே, மன்மோகன்சிங், சோனியா மட்டும்மல்ல ஈழ மக்களுக்காக போராடுகிற நாமும்தான் என்கிற அனுபவத்தை 30 ஆண்டுகால ஈழ விடுதலைப்போராட்டம் படிப்பினையை கற்றுத் தந்துள்ளது.