Aug 4, 2012

குஜராத்தில் மோடியால் உடையும் BJP!

"பா.ஜ., கொள்கைகளை விட்டு நரேந்திரமோடி விலகிச் சென்று விட்டார். ஏழை, நடுத்தர மக்களிடம் இருந்து அரசும், முதல்வர் மோடியும் விலகிச் செல்கின்றனர்.

இதனால் மோடி மீதும், அரசு மீதும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்' என, முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்தத் தலைவருமான கேசுபாய் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பா.ஜ., வில் இருந்து விலகுவதாக, கேசுபாய் படேல் நேற்று அறிவித்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் கன்ஷிராம் ரானாவும் கட்சியில் இருந்து விலகினார்.

Aug 3, 2012

படித்த கொலைகாரர்களா? படிக்காத மேதைகளா?

செய்தி: தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போலி டாக்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் 9 மற்றும் 10&ம் வகுப்பு படித்துவிட்டு, கிளினிக் நடத்தி வந்தது அம்பலமாகி உள்ளது. இந்த சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

விளக்கம்:
அட இந்த போலி டாக்டர் ஆவது பரவாயில்லை இவர்கள் விட கேடுகெட்டவர்கள் தாம் நமது படித்த பட்டம் பெற்ற டாக்டர்கள். நம்ம படித்த போலி டாக்டர்கள் தரமற்ற  போலி மருந்து கம்பெனிகளில் இருந்து பணத்தை வாங்கி கொண்டு மட்டமான மருந்துக்களை மக்களுக்கு எழுதிக்கொடுக்கும் கயவர்கள்.

தெரியாத சில உண்மைகள்!

AUG 04: இந்தியா முழுவதும் தொடர்ந்து குண்டு வெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீண்டும் நாசகார வேலைகளை செய்ய தீவிர பயிற்சி எடுத்து வருகிறது

புனேயில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  புனே தொடர் குண்டுவெடிப்பில் சைக்கிள் குண்டில் வெடிப்பொருளாக அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

Aug 2, 2012

பயங்கரவாதிகளாக மாறிவரும் புத்த பிக்குகள்! அமெரிக்கா?


கொழும்பு. Aug, 02:  இலங்கையில் கடந்த ஆண்டு பல மத வழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்கள் மற்றும் கிறித்துவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதே போல பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 31, 2012

முருங்கையைவிட வெங்காயத்தில் உள்ளது வயாகரா!!


முருங்கைக்காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியாகமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார். மிகச்சிறிய குளவியோ, தேனீயோ கொட்டி விட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்து விடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டி விட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். 

Jul 29, 2012

என்று தணியும் இந்த ரத்த தாகம்?


குவஹாத்தி.july29: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை.

குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.