Jul 27, 2012

மக்களின் மன சாட்சியை பாதித்த மன நோய்க்கு மருந்தில்லை?


நியு டெல்லி.july.28:  இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமைக் குறித்து உண்மையான தகவல்கள் அடங்கிய அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சாரின் தலைமையிலான ஏழு உறுப்பினர்களை கொண்ட உயர்மட்ட குழு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கடந்த 2006 நவம்பர் 17-ஆம் தேதி சமர்ப்பித்தது.
முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைமைகளை குறித்து விரிவான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 2006 நவம்பர் 30-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சச்சார் கமிட்டி பரிந்துரைத்த சிபாரிசுகளின் அடிப்படையில் இந்தியாவில் மிகவும் பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் துயரமான நிலைமைகளுக்கு பரிகாரம் காண தேவையான சில நடவடிக்கைகளை மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் வாயிலாக அறிவித்தது.

Jul 25, 2012

பிரதமர் ஆகும் ஆசையில் ஒரு பயங்கரவாதி.?


அஹ்மதாபாத். july, 26: மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த காரணத்தால் குஜராத் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீது தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை 3 வார காலத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து மோடி தனது வீட்டில் கூட்டிய அவசர கூட்டத்தில் ஹிந்துக்கள் அவர்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதி அளிக்கவேண்டும் என போலீஸ் அதிகாரிகளிடம் உத்தரவிட்டதை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Jul 23, 2012

ராகிங் கொடுமையால் துயர சம்பவம்?


ஹைதராபாத்,july,24: ஆந்திர பிரதேச மாநிலத்தில் சீனியர் மாணவிகளின் ராகிங்கால் மாணவிக்கு பேசும் சக்தி இழக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் ஒன் மாணவியான ஷியாமிலுக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் காயத்ரி ஜூனியர் கல்லூரி ஹாஸ்டலில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.