Jul 20, 2012

அலர்ஜி அலர்ஜி என்று அல்லல்படுபவரா?

 சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒப்புக்காது. சிலருக்கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது. இந்த ஒவ்வாமையைத்தான் அலர்ஜி என்கிறோம். ஒருத்தருக்கு உடம்பு ஏற்றுக்கொள்கிற விஷயம் இன்னொருத்தருக்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத்தது. 

பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்' சிலருக்கு விஷமாகவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி' போட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன? தொடர்ச்சியாகத் தும்மல் போடுவார்கள். மூக்கில் நீர் கொட்டும். நமைச்சல், மூக்கடைப்பு போன்றவை உண்டாகி, அதனால் வாசனை அறியும் திறன் குறையும். தலை வலிக்கும்.

Jul 18, 2012

அத்துமீறும் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து போராட்டம்!!

 பெரம்பலூர். july,19: பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது.
ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M பாக்கர், த.மு.மு.க மூத்த தலைவர் ஹைதர் அலி, SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி,

Jul 16, 2012

இன அழித்தொழிப்பு செய்ய சதி திட்டம்! ஸுல்ஹி!!


கெய்ரோ, july.17: கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.
முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரங்களை குறித்து ஆயிஷா ஸூல்ஹி அல் வதனுல் மிஸரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்  கூறியது: “பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ளமு ஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.