JUNE 10, பெங்களூர்: நித்தியானந்தாவின் அமெரிக்க
பெண் சீடர் ஆர்த்தி ராவ், பிடதி ஆசிரம ரகசியங்களை வீடியோ எடுத்து
வெளியிட்டார். இது தொடர்பாக சமீபத்தில் கன்னட டி.வி யில்
பேட்டி ஒன்றும் அளித்தார்.
டி.வி பேட்டியில் நித்தியானந்தா குறித்து
ஆர்த்தி ராவ் கூறுகையில்; “நித்யானந்தா, காவி உடை அணிந்து மக்களை
ஏமாற்றுகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அந்தஸ்தை எண்ணி,
வெளியில் சொல்லாமல், குமுறிக் கொண்டுள்ளனர். அவரிடம் எந்த சக்தியும் இல்லை.
பக்தர்களை ஏமாற்றி, பணம் சம்பாதித்தார்.









