Jun 2, 2012

கூடங்குளம் மக்களுக்கு உலக சமாதானத்திற்க்கான நோபல் பரிசு!

செய்தி 1 : குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை நிறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக அப்துல் கலாமை அறிவிக்கலாம். 

அதனை எதிர்க்கட்சிகளும் வரவேற்கக்கூடும். நாடு இப்போதுள்ள நிலையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுநிலையில் உள்ள ஒருவர்தான் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Jun 1, 2012

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

புது தில்லி: JUNE 01, பாரதிய ஜனதா கட்சி மீது மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விட்டது என்று கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். 


இதன் மூலம் கட்சித் தலைவர் நிதின் கட்கரியின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்துள்ளார் அத்வானி.

மதவாதம் பேசி மக்களை பிரித்து எத்தனை வருடங்களுக்கு இப்படி ஏமாற்ற முடியும்.  ராமர் பெயரை சொல்லி பாபர் மசூதியை இடிச்சாச்சி. ரத யாத்திரை முதல் பாகல் பூர், பீவாண்டி தொடங்கி மும்பை வரை பல கலவரங்களை நடத்தி ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்  என்கிற பிரிவினையை உண்டாக்கி மக்களை கூறு போட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்தார்கள்.

May 31, 2012

பெண்களை சீரழிக்க உதவும் பேஸ் புக்!

May 31: பேஸ்புக்கில் இணைவதை கவுரவமாக நினைத்து இணையும் பெண்கள் பலர் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து கண்ணீர் விடுகிறார்கள்.

பேஸ்புக்கில் அழகான பெண்களை பார்த்தால் இணையதளம் மூலம் அவர்களிடம் நைசாக பேசி ஆசை வலையில் வீழ்த்தி விடுகிறார்கள். ஆரம்பத்தில் நட்பில் தொடங்கும் இந்த பழக்கம் கடைசியில் கற்பில் சென்று முடிகிறது. நம்ம போலி சாமியார்கள் வரிசையில் பேஸ் புக்கும் இணைந்துள்ளது என்று சொல்லலாம்.

May 30, 2012

திரை கதை வசனம் எழுதும் இந்திய உளவுத்துறை!?


புதுடெல்லி: தீவிரவாத குற்றம் சுமத்தி சவூதி அரேபியாவில் வைத்து இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளைஞரான பொறியாளர் ஃபஸீஹ் முஹம்மதிற்கு சிவில் உரிமை ஆர்வலர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.
ஃபஸீஹை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர். இக்கோரியை வலியுறுத்தி உள்துறை அமைச்சர், தேசிய சிறுபான்மை கமிஷன் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

May 28, 2012

2 வது திருமணம்! அஸ்ஸாம் எம். எல். ஏ ருமியின் வாக்குமூலம்!!


குவஹாத்தி:”மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!” -2-வது திருமணம் புரிந்த அஸ்ஸாம் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத் தெரிவித்துள்ளார். 

அவர் தனது பெயரை ராபியா சுல்தானா என மாற்றியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத். இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.