Apr 28, 2012

ரஞ்சிதாவின் அருளால் மடாதிபதியான நித்யானந்தா!

1) ரஞ்சிதாவுடன் ஆபாச லீலைகளை அரங்கேற்றிய நித்தியானந்தா மாடாதிபதி ஆனார்.

தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீன பதவி வழங்கப்பட்டுள்ளது. அடுத்து காஞ்சி சங்கராச் சாரியாரின் இடத்தை பிடிப்பார் என்று நம்புவோம்.

2) குஜராத் முதல்வர் இனகலவர வெறியர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Apr 25, 2012

வருங்கால இந்தியாவின் தலைவர்கள் அணிவகுக்கும் பேரணி!

April 26: உலகில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் பலஸ்தீனில் செய்யும் அக்கிரம்மங்களுக்கு அளவே இல்லை.

பலஸ்தீனில்  பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்து வருவதோடு பாலஸ்தீனியர்களை  அவர்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி சிறைவைத்துள்ளது.

தன்னை சுற்றி உள்ள நாடுகளை அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டியும் வருகிறது. இஸ்ரேலிய உளவு அமைப்பு இந்தியாவில் ஊடுறுவி ஹிந்துத்துவா சக்திகளுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.


Apr 23, 2012

மக்களின் சாவில் மகிழ்ச்சி கொள்ளும் அரசு!

April 24: மேட்டுப்பாளையத்தில் அனந்தசாகர் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தோல்வி பயம் பிளஸ் 2 மாணவி வினோதினி வயது 17 தற்கொலை செய்துகொண்டார்.

சிந்திக்கவும்: ஒருநாட்டின் வருங்கால தூண்கள் அதன் மாணவர்கள் என்று சொல்லலாம். அப்படிபட்ட மாணவர் சமுதாயத்துக்கு பாதுகாப்பற்ற ஒரு சூழலே இந்தியாவில் நிலவி வருகிறது. வீட்டில் இருந்து படிக்க வெளியே இறங்கும் பிள்ளைகள்  உயிரோடு திரும்பி வருவார்களா என்று ஒவ்வொரு பெற்றோரும் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு வாழவேண்டியது இருக்கிறது.