Apr 11, 2012

தொடரும் நித்யானந்தாவின் காமடி!

April 12: நித்தியானந்தா, ரஞ்சிதா இன்று மதுரை ஆதீனம் மடத்துக்கு சென்றனர்.  இவர்களுடன் நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பலரும் சென்றனர்.
  
மதுரை ஆதீனம் மடத்தில் நவீன வசதி கொண்ட அறைகளில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தங்கினர். நித்தியானந்தா ஆதீனத்துக்கு 7 கிலோ வெள்ளி செங்கோல் ஒன்றை அளித்தார். 

பதிலுக்கு ஆதீனமும் நித்தியானந்தாவுக்கு  செங்கோல் ஒன்றை அளித்தார். ஆதீனத்துக்கு  வெள்ளியில் அமரும் இருக்கை ஒன்றை வாங்கி தரப்போவதாக நித்யானந்தா தெரிவித்தார். நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்கள் 2பேரை மதுரை ஆதீனம் மடத்திற்கு வழங்கினார் நித்யானந்தா.

Apr 10, 2012

காரணங்கள் மாறுகின்றன ஆனால் கலவரம் ஒன்றே!

April 11:ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள மதண்ணாபேட் மற்றும் சயீதாபாத் பகுதிகளில் வகுப்புக்கலவரம் நடந்து வருகிறது.

அங்குள்ள அனுமார் கோவிலில் மாட்டு இறைச்சி துண்டுகளை போட்டதால் கலவரம் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கலவரம் பரவ காரணம் வி.ஹெச்.பி ஹிந்துத்துவா இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சிதான் முக்கிய காரணமாக அமைந்தது என்கிற குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது.