March 24: ஐக்கிய நாடுகளின் சபையில் இலங்கையின் போர் குற்றம் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு கோரி ஐ. நா.வின் மனித உரிமைகள் குழு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
47 நாட்டு பிரதிநிதிகள் பங்கெடுத்த இந்த விவாதத்தில் 24நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்கு அளித்துள்ளன. இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தனர்.
இந்தியாவின் சதி: இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் நிருபிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கி உள்ளது.









