Mar 10, 2012

சங்கரன்கோவிலில் நடப்பது தேர்தலா? போர்களமா ?

March 11: சங்கரன்கோவில் தொகுதியில் 20 கிராமங்கள் அதிக பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப் பட்டுள்ளன. இதையொட்டி கூடுதலாக 16 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 18ம் தேதி நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 242 வாக்குச்சாவடிகள் 118 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவம் நாளை வருகிறது.

Mar 8, 2012

இந்தியாவின் மானம் சந்தி சிரிக்கிறது!

March 09: அமெரிக்காவில் இந்திய தூரக அதிகாரியாக பணிபுரிபவர் நீனா மல்கோத்ரா. இவர் கடந்த 2006  ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வீட்டு வேலைகள் செய்ய சாந்தி என்கிற பெண்ணை அழைத்து வந்தார்.

அமெரிக்கா வந்ததும் அந்த பெண்ணின் பாஸ்போர்டை பறித்து வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாது அவருக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்கினார். மேலும் அவருக்கு சரியான உணவும்,  தாங்கும் இடம் வசதியும் செய்து கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளார்.

Mar 6, 2012

மாவேஸ்ட் தோழர்களை வரவேற்கும் தமிழகம்!

March 07: இந்தியா என்கிற வல்லாதிக்க அரசால் தமிழக மக்கள் தொடர்ந்து பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

ஈழத்தமிழர் விசயத்திலே ஆகட்டும், தமிழக மீனவர்கள் படுகொலை விசயத்திலே ஆகட்டும், முல்லை பெரியாறு விசயத்திலே ஆகட்டும், காவரி நதிநீர் பிரச்சனையிலே ஆகட்டும், தொடர்ந்து தமிழர்கள் இந்திய வல்லாதிக்க அரசால் புறக்கணிக்கப்பட்டு,  ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வருகிறார்கள்.

ஈழத்தமிழர் விவகாரத்தை உலகிலேயே பேச அதிக உரிமை படைத்த ஒரு நாடு இந்தியா மட்டும்தான். அப்படி இருந்தும் அதை பேசாமல் சிங்கள பேரினவாதத்திற்கு துணை புரிந்து ஒரு மாபெரும் மக்கள் படுகொலையை நடத்த காரணமாக அமைந்தது இந்தியா. தனது நாட்டில் உள்ள ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தது.

Mar 5, 2012

பெண்களை அவமதிக்கும் பேய்களா ஆண்கள்!

மனம் வரைந்த கோலங்களை சிதைத்து விடுகிறது
சிலருக்கு  மணக்கோலம்

காதலித்த தவறுக்கு பனிஷ்மென்ட் டிரான்ஸ்பர்
உடனே திருமணம்

கருத்தில் முரண் படுபவனோடு  கட்டிலில் உடன்பாடு ....பரிதாப ஜீவனாய் கற்புக்கரசிகள்.

மனம் நிறைய கணம்  கை நிறைய பணம்
ATM எந்திரமாய் சம்பாதிக்கும் பெண்கள்

மணவரை நுழைந்து  கருவரையை  நிறைத்து கொண்டதால்
கலாச்சார கல்லறைக்குக்  கால்வாய் இன்றும் பெண்கள்

Mar 4, 2012

அறியாமையின் உச்சத்தில் காயல்பட்டினம்!

March 5: தூத்துக்குடி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊர்தான் காயல்பட்டினம்.

இது படிப்பறிவு பெற்ற மக்களை, பெரும் செல்வந்தர்களை, தொழில் அதிபர்களை கொண்ட ஒரு ஊர். இவர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு வியாபாரங்கள் மற்றும் வேலைகளில் பரவிக்கிடந்து அளப்பரிய அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு கொண்டு  வருபவர்கள்.

ஒரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த அறிஞர்கள் மக்கள் பணிகளில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். அப்படிப்பாட்ட ஊரில் இருந்து சிலர்  நமது விஞ்சான வடிவேலு அபுல் கலாமின் தம்பிகள் ஆகி கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர்.