Dec 23, 2011

கொலைகாரர்களின் போராட்டம்!

DEC 24: ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் துவங்கியிருக்கும் காலவரையற்ற போராட்டத்தினால் 10 நோயாளிகள் முறையான சிகிச்சை இல்லாமல் உயிரிழந்திருக்கின்றனர்.

ராஜஸ்தான் டாக்டர்கள் பல ஆண்டு காலமாக பதவி உயர்வுக்காக காத்திருப்பதாகவும், சம்பள விகிதாச்சாரம் போதாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு ஆஸ்பத்திரியை நம்பி வரும் ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விபத்துக்களில் சிக்கி வருவோர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த போராட்டத்தில் சுமார்  10ஆயிரம் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: உலகிலேயே டாக்டர் தொழில் செய்பவர்கள் மாதிரி பணம் சம்பாதிப்பவர் வேறுயாரும் இருக்க முடியாது. முன்னொரு காலத்தில் வைத்தியர்கள் மருத்துவம் செய்வதை மக்கள் தொண்டாக நினைத்தார்கள். இப்போது மருத்துவத்துறை என்பது கொள்ளைகாரர்களின் கூடாரமாகி விட்டது.  மக்கள் தொண்டு என்பது மறுவி பெரும் வியாபாரமாகி போனது.

சம்பளம் போக அரசின் மாத்திரை, மருந்துக்களை வெளியே விற்ப்பது, தனியாக கிளினிக் வைத்து நடத்துவது என்று சம்பாத்தியம் 'களை" கட்டும் இவர்களே போராட்டம் என்று குதித்தால் அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களின் நிலைமையை என்னவென்று சொல்வது. எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் கோஷம் போடுவதை பாருங்கள் இவர்கள் டாக்டர்களா? இல்லை கொலைகாரர்களா? இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
 ரௌத்திரம் பழகு 
...யாழினி...

Dec 21, 2011

மத்திய அரசா! மதிகெட்ட அரசா!

DEC 22: முல்லை பெரியாறு விவகாரத்தில் அடாவடி செய்யும் கேரள அரசை கண்டித்தும், இரு மாநில மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், 

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தின் 5 மாவட்டங்களின் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தேனியில் மாபெரும் போராட்டத்தை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)நடத்தியது.

1). "மத்திய அரசு தொடந்து தமிழக நலனை, தமிழர்களின் நலனை புறக்கணித்து வருகிறது. காவிரி மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை கட்டுப்படுத்தி தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் இக்கடமையிலிருந்து தொடர்ந்து பின் வாங்கியிருக்கிறது.

2). "கச்சத்தீவில் தமிழர்களின் மீன்பிடிக்கும் உரிமையை நிலை நாட்ட வேண்டிய தமிழக அரசு அதில் தவறியதோடு தொடர்ந்து கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும், வரும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. மத்திய அரசோ தமிழர்களை பாதுகாக்காமல் சிங்கள இனவெறி ராணுவத்திற்கு துணை நிற்கிறது'.

3). இலங்கையில் அப்பாவி தமிழர்கள், கொல்லப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் இலங்கை அரசால் கொலை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டது. இதை கண்டித்து ஒட்டு மொத்த தமிழகமும், தமிழர்களுக்கெதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்திட மத்திய அரசை கோரிய போது செவி சாய்க்க மறுத்ததோடு, இலங்கை ராணுவத்திற்கு தேவையான ஆயுத உதவிகளை மத்திய அரசு வழங்கியது. தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்தது.

4) கூடங்குளம் அணுஉலையில் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் மக்கள் போராட்டமாக மாறியுள்ள கூடங்குளம் அணுஉலையில் போராட்டத்தை திசை திருப்ப வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு உள்ளது.அதனாலேயே இந்த சூழ்நிலையில் முல்லை பெரியாறு பிரச்னையை உண்டாக்கி அதன் பக்கம் தமிழர்களின் கவனம் செல்லுமாறு சூழ்ச்சி செய்துள்ளது. தமிழக மக்களை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதன் மாநில தலைவர் தேகலான் பாகவி, மற்றும் முத்துபேட்டை சித்தீக் ஆகியோர் பேசினார். 

சிந்திக்கவும்: மக்கள் விரோத ஹிந்தி அரசிடம் இருந்து தமிழகத்தை பிரித்து தனிநாடாக மாற்றவேண்டும் இல்லையேல் அவர்கள் நமக்கு எஞ்சி இருக்கும் கோவணத்தையும் அவிழ்த்து விடுவார்கள். தமிழர்கள் தங்கள் வரலாற்று பெருமைகளை உணர்ந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய காலம் நெருங்கி விட்டது. இதை படிக்கும் ஒவ்வொரு தமிழனும் மனதில் ஒரு உறுதி மொழி எடுங்கள். இனிமேல் உங்களை இந்தியன் என்று அடையாளப்படுத்தாதீர்கள் தமிழர் என்று சொல்லுங்கள்.  

Dec 19, 2011

எதிரிகளுக்கு புரியும் மொழியில் பேசுங்கள்!

DEC 20: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தேனியில் வேன் டிரைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் தீக்குளித்தார்.

கேரள அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தன்மானத்தையும், வீரத்தையும் இழந்த ஒரு  இனத்திற்காக மீண்டும் ஒரு உண்மை தமிழன் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்து விட்டான். வரலாற்று ரீதியாக தமிழர்கள் வீரமும், தன்மானமும் மிக்கவர்கள். அப்படிப்பட்ட ஒரு இனத்திற்கு என்ன நிகழ்ந்தது.

வந்தேறி பிராமணர்கள் தமிழர்களின் வீரத்தை, சூடு, சுரணையை ஒற்றுமையை மதவாதம், போலி தேசபக்தி   ஆகியவற்றை  பல்லாண்டுகளாக தங்கள் மீடியாக்கள் வழியாக பரப்புரை செய்து மலுங்கடித்தனர்.

இதனால் தமிழர்களுக்கு தங்களது வரலாறு தெரியாமல் போனது. சினிமா, பொழுது போக்கு பார்பனிய ஜாதி பாகுபாடு இவற்றுக்குள் சிக்கி தமிழர்கள் சிதைந்து சின்னபின்னமாயினர்.

தங்களது வரலாற்றை அறியாத ஒரு சமூகம் அழிந்து போகும் என்பதற்கு தமிழ் இனமே சிறந்த உதாரணம். உலகில் உள்ள அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற தமிழர்களின் போராட்டங்கள் மட்டும் ஏன் தோல்வியை சந்தித்தன.

இதற்க்கு நமது ஒற்றுமையின்மை, போலி தேசியம், தேசபக்தி, ஜாதி பாகுபாடு, மதவாதம் இவைகளை காரணமாக சொல்லலாம். ஈழத்தமிழர்கள்  சிங்கள பயங்கரவாதிகளுக்கு எதிராக 35 ஆண்டுகள் போராடி  ஒரு நாட்டை கட்டி அமைத்து வரலாற்றில் வீரர்களாக தங்களை பதித்து கொண்டார்கள்.

சிறிய இனமாக இலங்கை தீவில் வசித்தாலும் வரலாறு எங்கிலும் போற்றப்படும் வீரர்களாக முத்திரை பதித்தனர். நாமோ அந்த போராட்டத்திற்கு உயிர் கொடுக்காமல் அதை ஒழிக்க பாடுபட்ட ஹிந்தி அரசுக்கும், மலையாளிகளுக்கும் துணை நின்று கோழைகள் ஆகிப்போனோம்.

இதற்க்கு நாம் சொன்ன காரணம் பிராமணியம் நமக்கு படித்து கொடுத்த போலி தேசபக்தி. இன்றும் கூடன் குளம் அணு மின் நிலையம், பாலாறு, காவேரியாறு, முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் படுகொலை  இவை அனைத்தும் ஏதோ ஆப்பிரிக்கா கண்டத்தில் நடப்பது போல் நாம் மவுனம் காட்கிறோம்.

இப்படி பட்ட ஒரு இழிநிலை அடைந்த ஒரு இனத்திற்காக அதில் எஞ்சி இருக்கும் மானம் உள்ள தமிழர்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தங்களை மாய்த்து கொள்கின்றனர்.  இதன் மூலமாவது  பாழாய்ப்போன தமிழ் இனம் உணர்வு கொள்ளும், விழிப்படையும் என்று அவர்கள் நம்பினால் அதுதான் இல்லை. எருமை மாட்டில் பேய்ந்த மழை போல் இருக்கிறார்கள் தமிழர்கள். மானம், வீரம் உள்ள தமிழா! இந்த கோழைகளுக்காக உன் உயிரை மாயத்துக்கொள்ளதே.

வீரத்துடன் போராடு! உன் உயிரை வீணே போக்கிக் கொள்ளாதே! உன்னை போன்ற வீரர்களுக்காக விரைவில் படையணி உருவாகும் அதுவரை காத்திரு! அதில் உன்னை இணைத்து கொள்!. உலக மாவிரர்கள் வழியில், போராளிகள் வழியில் மக்களுக்காக மக்களின் எதிரிகளோடு, விரோதிகளோடு போரிட்டு வீர மரணம் தழுவு. தீக்குளிப்பது, உண்ணாவிரதம் இருப்பது இது உன் போராட்டத்திற்கு எந்த பயனையும் கொடுக்காது. ரௌத்திரம் பழகு! தமிழா ரௌத்திரம் பழகு! எதிரிக்கு புரியும் மொழியில் பேசு அப்போதுதான் உன்போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும்.


நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.