Dec 17, 2011

விஷ செடியில் பூத்த விஷ மலர் ( தினமலர்)!

DEC 18: தினமலர் (மலம்) செய்தி: 1. கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு பணம் வருவதற்கான ஆதாரம் சிக்கியது: விசாரணை துரிதம்.

2. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, போராட்டத்திற்கு ஆள் சேர்க்கவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கும், பணம் தேவைப்படுகிறது.

3. இதனால்  பணம் வரும் பின்னணி குறித்து விளக்கம் அளிக்கும்படி, போராட்டத்தை முன்னின்று நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

4. கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அறவழிப் போராட்டம் என்ற பெயரில், வன்முறை போராட்டம் நடக்கிறது.

5. நாராயணசாமி புகார்: உதயகுமார் படபடப்பு. உதயகுமாருக்கு, வெளிநாடுகளில் இருந்து, தொண்டு நிறுவன நிதி வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, உதயகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது மிகவும் பதட்டமாகிவிட்டார். வழக்கமாக போராட்டங்கள் குறித்து நிறுத்தி, நிதானமாக பேசும் வழக்கமுடைய உதயகுமார்.

தினமலருக்கு பதில்:  கூடங்குளம் அணு அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தினமலம் நாளிதழ் கொச்சைபடுத்தி வருகிறது. ஹிந்துத்துவா இயக்கங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று கொக்கரிகின்றன. அவர்களுக்கு ஆதரவாக ஹிந்துத்துவா பயங்கரவாத நாளேடான தினமலம் தினமும் தனது பத்திரிகையில் வாந்தி எடுத்து வருகின்றது.

வழக்கமாக உதயகுமார் நிதானமாக பேசுவாராம் தினமலர் நிருபர் இப்படி கேட்டது பதட்டம் ஆகிவிட்டாராம் தினமலத்தின் திரிபு வாதங்களை பாருங்கள். இப்படி கேவலமாக கேள்வி கேட்டவர்களுக்கு அவர் கோபமாக பதில் சொன்னதை தினமலம் திரித்து பதட்டம் என்று எழுதுகிறது. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு, அறவழி போராட்டம் என்கிற பெயரில் வன்முறை போராட்டம் இப்படி பத்திரிகை முழுவதும் மலம் கழித்து வைத்துள்ளது தினமலம்.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதை ஒடுக்க மத்திய அரசு போராட்ட குழு தலைவர்களை பின்வாங்க செய்ய வெளிநாட்டில் இருந்து பணம் வருகின்றது என்று சொல்லி பூச்சாண்டி காட்டி மக்கள் எழுச்சியை அடக்கி விடலாம் என்று திட்டமிடுகிறது.

பார்பன தினமலமும் அதன் ஹிந்துத்துவா கோட்டான்களும்  எப்படியாவது கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விடவேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகின்றன.  அதேநேரம் பாதுகாப்பான, தமிழகத்திற்கு அதிக வருமானத்தை கொடுக்கும் சேது சமுத்திர திட்டத்தை "ராமர் பாலம்" என்று சொல்லி தடுத்தவர்கள்தான் இந்த இராமாயண வானர கூட்டங்கள்.

ஜப்பானை நேரில் பார்த்த பிறகும் இந்த நாசகார திட்டத்தை தமிழன் தலையில் தள்ளி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழனை மீண்டும் ஒரு இன அழிப்புக்கு உள்ளாக்கும் திட்டமே கூடங்குளம் அணு நாசகார திட்டம். தமிழர்கள் ஓர் அணியில் நின்று இதை எதிர்க்க வேண்டும். விஷ செடியில் பூத்த விஷ மலராகிய தினமலரை அழித்து ஒழிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகமும் தமிழர்களும் நிம்மதியாக இருக்க முடியும்.


நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

Dec 15, 2011

வெத்து வேட்டு விஜயகாந்து!

DEC 15, முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து சினிமாவில் நடிப்பதுபோல் நிஜவாக்கையிலும் நல்ல நடிகராக படம் நடித்துள்ளார் விஜயகாந்த்.


விஜயகாந்த் கேள்வி 1: தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்கள் நமக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.  

ஆந்திராவில் பாலாறு பிச்சினை, கர்நாடகாவில் காவிரி பிரச்சினை, கேரளா மூலம் முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளது. இவ்வாறு இருந்தால் தேசிய ஒருமைப்பாடு எவ்வாறு வரும் ?

பதில் :
ஐயா!  விஜயகாத் அவர்களே! இப்பொழுதுதான்  இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு  என்பது இல்லை என்று தெரிந்ததாக்கும்.  விருதகிரி படத்தில் நீங்கள் ஸ்காட்லான்ட்  யார்ட் போலீஸ்கே பாடம் எடுத்து, பன்ச் டயலாக் பேசிய உங்களுக்கே இந்த நிலைமையா?

எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்! எப்படி எல்லாம் வீர வசனம் பேசி தேசபக்தி, ஒருமைப்பாடு என்று கூக்குரல் இட்ட உங்களையே விரக்தி அடைய வைத்து விட்டார்களே. இப்பவாவது உங்கள் தேசபக்தி போதை  தெளிந்த தேசந்தோசம். உண்மையிலேயே தேசபக்தி போதை தெளிந்ததா அல்லது தமிழர்களின் வாக்குகளை பெற நாடகமா?

விஜயகாந்த் கேள்வி 2: மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறதா?

பதில் : என்னையா
கேள்வி இது  சின்னபுள்ளதனமா இருக்கு.  வருடக்கணக்கில் தூங்கிகொண்டு இருந்தீங்களா? இவ்வளவு நாளா என்ன நடக்கிறது என்று தெரியாமல் புதுசா கேட்கிறீங்கள்.  

நல்லா இருக்கையா உங்கள் வேஷம். உங்கள் படத்தில் ரொம்பவும் புள்ளி விபரம் எல்லாம் சொல்லி மக்களை அசத்துவீன்களே! ஓ! அதுவெல்லாம் வெத்து  வேட்டுன்னு சொல்லுங்கள்!  

மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது பாமர மக்களுக்கும்
இப்பதான் உங்களுக்கு புரிந்ததாக்கும்... மக்கு மக்கு... உங்களையெல்லாம் கொண்டு போயி எதிர் கட்சி தலைவன் ஆக்கினாங்களே அந்த மக்களை சொல்லணும்.

விஜயகாந்த் 
கோரிக்கை 1: அணை பிரச்சினையில் தீர்வு காண நதிகளை இணைக்க வேண்டும். இதை மத்திய அரசே முன் வந்து செய்ய வேண்டும்.

பதில்: ஐயா! விஜயகாந்த் அவர்களே! நதிகளை இணைக்க முடியும் என்று நினைக்கும்
உங்களின் அறியாமையை என்னவென்று சொல்ல. தமிழன் இளிச்சவாயன்! அதனால் தமிழர்களிடம்தான் மத்திய அரசின் ஏமாற்று
வேலையெல்லாம் பலிக்கும்.  

இந்தியாவில் உள்ள நதிகளை தேசியமயமாக்கி அதில் காவிரியை இணக்கப் போறோம் என்று சொல்லுங்கள் அப்போ தெரியும் உங்களுக்கு கர்நாடகாகாரன் யார்? என்று. தமிழகம் என்கிற ஒரு மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்கவே இத்தனை கலாட்டா செய்யும் இவர்கள் தேசிய நதி நீர் திட்டத்திற்கு ஒத்து கொள்வார்களா? இது உங்களுக்கும் தெரியும் இருந்தாலும் மேக்கப் இல்லாமல் நடிக்கிறீங்கள்.

விஜயகாந்த் கோரிக்கை 2: தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.க்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

பதில்:  சும்மா அரசியல் காமடி பண்ணாதீங்கள் சார்! ஈழத்திலே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படும் பொழுது வேடிக்கை பார்த்து கொண்டு பதவி சுகம், ஆட்சி அதிகாரம்  என்று இருந்த அரசியல் பொறுக்கிகள் ஒரு தண்ணீர் பிரச்சனைக்கா
கவா பதவியை துறப்பார்கள்!  உங்கள் பேச்சு வேடிக்கையும், விநோதமுமா இருக்கு. சும்மா இந்த பிலீம் காட்ற வேலையெல்லாம் வேண்டாம்.

தேவையில்லாத கேள்விகளையும், கோரிக்கைகளையும் வைத்து தமிழர்களின்  உண்மையான எழுச்சியை திசை திருப்ப வேண்டாம்.  தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழர்களிடம் ஏற்ப்பட்டுள்ள எழுச்சிக்கு வலு சேருங்கள். இதிலும் அரசியல் ஆதாயம் தேடாமல் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள். தமிழ் மக்கள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தின் அவசியத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள். தமிழர் எழுச்சி ஓங்கட்டும்! தனி தமிழ் நாடு என்ற முழக்கம் ஒலிக்கட்டும்.

*மலர்விழி* 

Dec 14, 2011

முல்லை பெரியாறு, கூடங்குளம்! ஒருங்கிணையும் தமிழர்கள்!

சீமான்: தமிழர்களுக்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், அம்பேத்கார் திரைப்படத்தினை வரி நீக்கி தமிழக அரசே திரையிடவேண்டும்.

கூடங்குளம் அணு உலை ஆபத்து இல்லை என்கிறார்கள். அணுகுண்டு வெடித்தால் ஆபத்தா, இல்லையா? கூடங்குளத்திற்கு தமிழகத்தில் ஆபத்தில்லை என்று சொல்லும் நாராயண சாமி, புதுச்சேரியில் அணு உலை கூடம் நியமிக்கத்தயாரா? 30 ஆயிரம் கோடி செலவு என்கிறார்கள். சேது திட்டம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது. அத்திட்டம் என்னவாயிற்று?

பழ.நெடுமாறன்: சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பழ.நெடுமாறன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

உதயகுமார்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த 4 மாதமாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மத்திய நிபுணர் குழு நாளை  3 வது கட்டமாக மாநில குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.


இதுபற்றி போராட்ட குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது, எங்களது வல்லுனர் குழு 70 பக்க அறிக்கையை தயாரித்து உள்ளது. நாங்கள் ஏற்கனவே கேட்ட 49 கேள்விகளுக்கு மத்திய குழு மேம்போக்கான பதிலை தந்துள்ளது. 4 கேள்விகளுக்கு பதில் இல்லை என்று கூறினார்.


கேரளத்தினர் வெறி:
இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த தமிழர்கள் 40 குடும்பத்தினர் கேரளத்தினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனால்  உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் தங்கள் உறவின்ர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

வைரமுத்து: கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான்  அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம்.  முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு.

கேரளா ரயில் மறிப்பு: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆகியவற்றின் தொண்டர்கள்  ஏராளமானோர் சேலம் ஜங்சன் வழியாக கேரள செல்லும் பெங்களூர்  எர்ணாகுளம் இண்டர் சிட்டி எக்ஸ்பிரசை மறிக்க முயன்று கைதாகினர். 


சிந்திக்கவும்: ஒருவகையாக பாதிப்புகளை உணர்ந்து தமிழர்கள் ஒன்று பட ஆரம்பித்துள்ளார்கள். நமது மவுனத்தால் ஒன்றரை இலட்சம்  ஈழத்து உறவுகளை இழந்தோம். முல்லை பெரியாரிலும், கூடங்குளம் அணு மின்நிலையம் விசயங்களில் மவுனம் காத்தால் தமிழகமும், தமிழர்களும் பெரும் அழிவை சந்திப்பது உறுதி.12 கோடி மக்களுக்கு என்று ஒரு நாடு தேவை என்பதை உணர்வோம். உறுதியுடன் போராடுவோம்.

ரௌத்திரம் பழகு 
...ஈழப்பிரியா...

Dec 13, 2011

மோதல்களை தடுத்து நிறுத்துங்கள்! SDPI

புதுடெல்லி DEC14:முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரண்டு மாநிலங்களின் மக்கள் இடையே மோதல் சூழல் உருவாவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய பீதியூட்டும், மோதல் சூழலை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களை குறித்து கேரள மாநில கவலை அடையும் வேளையில், நான்கு மாவட்டங்கள் வறட்சியினால் தரிசாக மாறிவிடும் தமிழகத்தின் கவலையை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்பிரச்சனையில் பீதியையும், கலக்கத்தையும் விதைத்து உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி தங்களது குறுகிய நோக்கங்களுக்கு உபயோகிக்கும் முயற்சியில் இருமாநில அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. கேரள மக்களின் பீதியை அகற்ற வேண்டும். அதேபோல் தமிழக மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு உண்டான தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்க வகை செய்யவேண்டும். அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண்பதுதான் சிறந்தது.

முல்லைப் பெரியாரின் பெயரால் நடக்கும் போராட்ட நிகழ்ச்சிகள் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இடையேயான மோதலாக மாறாதிருக்க எஸ்.டி.பி.ஐயின் தமிழக-கேரள தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு தொடர்பான அமளிக்கு இடையே இரண்டு மாநில மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் சோர்வடையாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும் இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
சிந்திக்கவும்: ஒற்றுமைக்கு முன்கை எடுத்துள்ள  SDPI  தலைமைக்கு வாழ்த்துக்கள். அதே நேரம் முல்லை பெரியார் விசயத்தினால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் சோர்வடைந்து விடாமல் பார்த்து  கொள்ளுமாறு தங்களது கட்சியினர்களுக்கு வலியிறுத்தி இருப்பது ஒரு சிறப்பான சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் மாதிரி கூடன் குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று மத்திய அரசை வேண்டாமல் அதை திறக்க கூடாது என்று வலிமையாக குரல் கொடுப்பதற்கு  நன்றி. 
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல். 

Dec 12, 2011

தமிழர்களின் எழுச்சியும்! ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்!

DEC 13: (1). சென்னையில் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு விரைந்து நடவடிககை எடுக்க வேண்டும்.  

பசு வதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து  மாநில பொதுச் செயலாளர் கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமையில் இந்து மகாசபாகாரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விமர்சனம்: 1) அட பாவிகளா! மொத்த தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும், அறிஞசர் பெருமக்களும், எதிர்க்கும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை இந்த காவி கயவர்கள் திறக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 

கூடங்குளம் அணுமின்நிலையம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஆறுமுகநேரி தாரங்கதாரா கெமிக்கல்ஸ், இப்படி மனிதனை கொல்லும் நச்சு தொழில்சாலைகளில் இருந்து மனிதனை  பாதுகாக்க மனித வதை தடுப்பு சட்டம் கொண்டு வருமாறு கேட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது.

அதை விட்டு விட்டு மனசாட்சி இல்லாத ஹிந்துத்துவா மிருகங்கள் (மிருகவதை)  பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மாட்டிறைச்சி ஏழை, எளிய மக்களின் உணவு. பெரும்பான்மையான மக்கள்  உணவாக சாப்பிடும்  பொருளை கடவுளாக ஆக்கி வைத்தால் என்ன செய்ய முடியும்.  உலகம் முழுவதும் இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகளை எப்படி தடுத்து நிறுத்த போகிறார் திருவாளர் ஸ்ரீ.

(2). இந்து முன்னணி மண் சட்டி ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டம்: நெல்லை மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக ஹெல்மெட் அணியாத நூற்றுக் கணகானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இதில் போலீசார் ஒருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய. சில இடங்களில் கண்டும் காணாமலும் நடந்து கொண்டனர். 
 

இதனால் அதிருப்தியான நகர இந்து முன்னணியினர் பாரபட்சமில்லாமல் வழக்குப்பதிவு செய்யவேண்டும். விதிவிலக்கு என்றால் அதனை அனைத்து தரப்பினருக்கும் தரப்படவேண்டும் என வலியுறுத்தி மாவட்டத் தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஹெல்மெட்டிற்கு பதிலாக மண் சட்டியை கவிழத்திக் கொண்டு பைக்கில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விமர்சனம்: 2) அட நம்ம இந்து முன்னணி கோட்டான்கள்! போலீஸ் ஒருசார்பா நடந்ததால் சீறி சினம் கொண்டு எழுந்துவிட்டார்கள்! இராமநாத புறத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேர்வரை செத்தார்களே எங்கே போனீர்கள் ஓ! அவர்கள் தலித் மக்களாச்சே! திருக்கோவிலூர் போலீஸ் பொறுக்கிகள் ஐந்து பெண்களை  காட்டு பகுதிக்குள் அழைத்து சென்று  பாலியல் வன்புணர்வு செய்தார்களே அப்போது ஏன் கொதித்து எழவில்லை ஓ! அவர்கள் பழங்குடி மக்களாச்சே!  

முல்லை பெரியார் (இன்று இருபதாயிரம் தமிழர்கள் கேரளாவுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார்கள்) தமிழக மீனவர் பிரச்சனை என்று தமிழர்கள் சினம் கொண்டு ஆர்ப்பரிக்கும் இந்த வேளையில் இந்த கோமாளிகள் ஒரு சப்பை மேட்டருக்கு மண் சட்டியியை தலையில் அணிந்து ஆர்ப்பாட்டம்!  செய்து நாங்கள் தமிழர்கள் இல்லை என்பதை நிருபித்துள்ளனர்.

தமிழர்கள் நடத்தும் போராட்டம் மனிதர்களுக்காக வேண்டி! ஹிந்துமகாசபா நடத்தும் போராட்டம் மிருகங்களுக்காக (பசு)! வேண்டி. தமிழ் இயக்கங்களுக்கு தலைவர்கள் தமிழர்கள்! ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு தலைவர்கள் பிராமணர்கள்! ஹிந்து முன்னணிக்கு ராமகோபால ஐயர்!, ஹிந்தும்கா சபாவுக்கு ஒரு ஸ்ரீ, பாரதிய ஜனதாவுக்கு ஒரு அத்வானி வாஜிபேயி, இதில் ஒரு தலித், ஒரு தமிழன் தலைவராக வரமுடியாது. இதை தமிழர்கள் புரிந்தால் சரி! 
*மலர்விழி*  

Dec 11, 2011

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 2).

* இது ஒரு அழகிய நிலா காலம்*

முத்துகுமார், தமிழ் செல்வன், அந்தோணி, இளங்கோ, ஆசாத், பசீர், மாலதி இவர்கள் பள்ளி படிப்பை முடித்து திருநெல்வேலியில் உள்ள ஜோன்ஸ் கல்லூரியில் தங்களது கல்லூரி வாழ்க்கையை துடங்கினர். கல்லூரியில் ஹொஸ்டலில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தனர்.

அதுஒரு கோடைக்கால விடுமுறை, நண்பர்கள் சந்தோசமாக ஊருக்கு புறப்பட்டனர். திருநெல்வேலி இருந்து இராமநாதபுரம் போகும் பேருந்தில் பயணித்தனர். ஒருவருக்கொருவர் கல்லூரியில் நடந்த சில நிகழ்வுகளை பற்றி பேசி சந்தோசமாக சிரித்து மகிழ்ந்தனர்.

தமிழக வரலாற்றில் பெரும் மாறுதல்களை, உண்டாக்கப்போகும் நமது வரலாற்று நாயகர்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

1) முத்துக்குமாரின் தந்தை மாணிக்கம் பெரியபட்டினம் கடை வீதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். முத்துகுமாருக்கு ஒரு தங்கை உண்டு அவள் பெயர் செல்வி, அம்மா பெயர் தங்கம் இவர்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள். முத்து குமாருக்கு ஒரு பத்திரிக்கையாளனாக வரவேண்டும் என்பதே இலட்சியம்.

2) முருகனின் தந்தை இரத்தின பாண்டி இவர் அந்த ஊரில் பரம்பரை பணக்காரர். நிறைய சொத்துக்கள், பண்ணை வீடு, கார்வசதி என்று வளமாக இருப்பவர். முருகனின் தம்பி ராஜா, தங்கை தமிழரசி அவனின் அம்மா செர்ணம்.  முருகன் வீட்டின் தலைதனையன் அவனது அப்பாவுக்கு அவனை டாக்டர் ஆக்கவேண்டும் என்று ஆசை ஆனால் முருகனுக்கோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்க  ஆசை.

3) இளங்கோவன் தந்தை கிறிஸ்டோபர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். தின கூலிக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர். இவரது மனைவி ரோஸ் மேரி, இவருக்கு யாழினி, மலர்விழி என்று இரண்டும் பெண்பிள்ளைகளும் உண்டு. இளங்கோவன்தான் வீட்டின் மூத்த பையன். இவனது தந்தையார் சிறந்த தமிழ் ஆர்வலர் அதனாலேயே பிள்ளைகளின் பெயர்களை செந்தமிழில் வைத்திருந்தார்.

4) அந்தோணியின் தந்தை தாசப்பன், இவருக்கு சொந்தமாக பல மீன்பிடி படகுகள் இருந்தன. ஊரிலே பெரும் புள்ளி. இவருக்கு மீன் வியாபாரம் முக்கிய தொழில். சொந்தமாக மூன்று பெரிய லாரியும், இரண்டு சிறிய வேன்களும் உண்டு. இவனது அம்மா ஸ்டெல்லா, அண்ணன் மரியதாஸ் தங்கை பிருந்தா. அந்தோணியின் ஆசை IPS  ஆகவேண்டும் என்பது. 

5) பசீர் உடைய வாப்பா முஸ்தபா தமிழ் ஆசிரியர், உம்மா நூர்ஜகான் கணித ஆசிரியை இவர்கள் இருவரும் பெரியபட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்தார்கள். பஷீரின் தங்கை  சபினா, தம்பி கலீல், இவனை ஆசிரியர் ஆக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். ஆனால் பஷீருக்கோ ஜெனடிக் இஞ்சினியரிங் படிக்க ஆசை.

6) ஆசாத் உடையாவாப்பா அரசியல்வாதி, பெரியபட்டினம் பஞ்சாயத்து தலைவர், கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர், காந்தியவாதி. ஆசாத் வீட்டிற்கு ஒரு மகன், இவனது அம்மா பாத்திமா இவனுக்கு கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஆகவேண்டும் என்பது ஆசை. 

7) மாலதி வசதியான குடும்பத்தை சேர்ந்தவள், தந்தை செல்வம் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர். மாலதியின் அம்மா முத்து குமாரி அண்ணன் புகழ் என்கிற புகழேந்தி MA வரலாறு படித்து விட்டு தந்தைக்கு தொழில் உதவியாக இருக்கிறான். மாலதிக்கு டாக்டர் ஆகவேண்டும் என்பது கனவு.

நண்பர்கள் ஏழுபேரின் வாழ்க்கையை காலம் எப்படி மாற்றி போடப்போகிறது என்று பார்ப்போம்.  தொடரும்..........
 நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.