Dec 9, 2011

யார்? யாரோடு?

DEC 10: இன்றைய பத்திரிகை செய்திகளை படித்ததில்  உறுத்தலான சில விடயங்களை குறித்து உங்களோடு ஒரு பகிர்வு.

செய்தி 1: கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய யாத்திரையை பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்டார்.

அத்வானிக்கு  பதில்:  ஐயா
! பயங்கரவாதி அத்வானி! நீங்கள் நடத்திய இரத்த யாத்திரையினால் ஓட்டப்பட்ட இரத்தங்கள் இன்னும் காயவில்லை எதை மறைக்க இப்படி ஒரு நாடகம். 

உங்கள் பாரதிய ஜனதா ஆட்சி செய்த கர்நாடகாவில் நடந்த ஊழல்கள் அளவுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடந்தில்லை மக்களின் மறதியை வைத்து வசதியாக மறைக்க பார்க்கிறீரா.

செய்தி 2 :
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர், நடிகைகள் சமீபத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து மக்கள் கட்சிக்கு பதில்: மதவாதம் பேசி தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கும் இரத்தவெறி பிடித்த ஹிந்த்துதுவா இயத்தை சார்ந்தவர்களே! உங்கள் கேரளா ஆர்.எஸ்.எஸ். இயக்கமும், பாரதிய ஜனதா இயக்கமும் உங்கள் இந்த கருத்துக்கு ஆதரவு தருமா? இல்லையே அவர்கள் எல்லாம் முல்லை பெரியாரை உடைக்க அல்லவா ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செய்தி 3: லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் ரஜினியின் முழு உருவ மெழுகு சிலை வைக்க வேண்டும் என்று ரசிகர்கள்  கோரிக்கை விடுத்து  உள்ளனர்.

ரஜினி ரசிகர்களின் கோரிக்கைக்கு பதில்: 12 கோடி மக்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் மக்களே உங்களுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையை உடைக்கவும் புதிய அணையை கட்டவும்  கேரள சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது .  

இது தெரியாமல் ரஜினிக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என்று கோரும் மானம் கெட்ட தமிழா! உன் கர்நாடகத்து ரஜினிகாந்த் காவிரி பிரச்சனையில் எப்படி அந்தர் பெல்டி அடித்தார் என்பது மறந்து விட்டதா?
 

செய்தி 4: ஐஸ்வர்யாராய்க்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. மேலும் குழந்தை பிறப்பு காரணமாக அவரது உடல் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க ஐஸ்வர்யா ராய் முயற்சி: உடலை அழகுப்படுத்த பயிற்சி.

பத்திரிக்கைகளுக்கு பதில்: அட மானம் கெட்ட  நாளிதழ்களே உங்களுக்கு பேச வேற செய்திகள் இல்லை. குஷ்புக்கு கோவில், ரஜினிக்கு மெழுகு பொம்மை,
ஐஸ்வர்யாராய் உடலை அழகு படுத்துகிறார், அட மானம் கெட்டவர்களே மக்கள் பிரச்சனைகளை எழுதுங்கள் அதைவிட்டு பத்திரிக்கையை நிறைக்க ஏன் இந்த அம்மண வேலை.

செய்தி 5 :
கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேசும் போது கேரள மக்களின் உணர்வுகளை தமிழகம் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

கேரளா முதல்வருக்கு பதில்:
 கேரளா தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளும், நெய்யாற்றின்கரை, நெய்யார் அணை, புத்மநாபபுரம் கோட்டையில் பெரும் பகுதி, அங்கே கட்டப்பட்டிருந்த பழம் பெரும் தமிழ் மன்னர் அரண்மனை . சேங்கோட்டைத் தாலுகாவில் பாதி, தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற தமிழர்களால் கட்டப்பட்ட முல்லை-பெரியாறு அணை இவை அனைத்தும் தமிழர்களுடையது. இவற்றை நீங்கள் வஞ்சகமாக களவாடி கொண்டீர்கள் நாங்கள் மறக்கவில்லை வரலாற்றை. இவை அனைத்தையும் நீங்கள் சீக்கிரம் திருப்பி கொடுக்க வேண்டி வரும் என்பதை முதலில் நினைவில் நிறுத்துங்கள்.

செய்தி 6: இலங்கையிடம் பயிற்சிபெற இந்திய ராணுவத்துக்கு அழைப்பு. தில்லிக்கு வந்துள்ள இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய இந்திய ராணுவத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு பெற்று வருகிறார். 

அத்துடன் இந்தியாவின் முப்படைகளின் தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசினார்.யுத்த தந்திரங்கள் தொடர்பாக இலங்கை ராணுவத்தினர் பெற்றுக் கொண்ட அனுபவங்களை இந்தியாவோடு பகிந்து கொள்ள விரும்புவதாக அவர் குறிபிட்டுள்ளார்.

இலங்கை, இந்தியா ராணுவத்திற்கு பதில்:
இலங்கை பயங்கரவாத ராணுவம் இந்திய பயங்கரவாத ராணுவத்திற்கு பயிற்சி கொடுகிறார்கலாம் வேடிக்கையான செய்தி. பயங்கரவாதம் செய்வதில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.  


இந்தியா ராணுவத்திற்கு பல முகங்கள் உண்டு. அமைதிப்படை என்கிற ஆக்கிரமிப்பு படை, சத்திஷ்கர் பழங்குடி மக்களை கொன்றுகுவிக்கும் பயங்கரவாத படை, காஷ்மீர் மக்களை கொல்லும் நாசகார படை, தமிழக மீனவர்களை இலங்கை பயங்கரவாத படைக்கு காவு கொடுக்கும் சதிகார  படை, இப்படி பல நல்ல முகங்கள் உண்டு. இவர்கள் இரண்டு பெரும் சேர்ந்து பயிற்சி எடுத்து உலகை அழிக்கவா! உலகம் தாங்காது!

பார்பனர்கள் ஹிந்துதுவாவோடு, தமிழகத்தை அண்டிப்பிழைக்கும் கர்நாடக நடிகர்கள் கர்நாடகாவோடு, நாயர்கடை, சினிமாத்துறை மலையாளிகள் எல்லாம் மலையாளிகளோடு, இந்திய ஹிந்தி ராணுவம் இலங்கை ராணுவத்தோடு தமிழா நீ மட்டும் போலி தேசபக்தி பேசி ஹிந்திகாரனோடு உறவாடி தமிழர் குடி கெடுக்கிறாய், உன்தலையில் நீயே மண்ணை வாரி போடுகிறாய்  என்பதை புரிந்து கொள். விழித்துக்கொள்.
 


 தமிழா! உணர்வு கொள்! உறுதி பெறு! போலிகளை கண்டு ஏமாறாதே! உனக்கென்று ஒரு இலட்சியம் உண்டு. உனது இலட்சியத்தை உணர்ந்து அதில் பயணி.  
 நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

Dec 8, 2011

ரஜனி! கமல்! ஜெய் ஆகாஷ்! "ஆயுதப்போராட்டம்"!

DEC 09: நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என்று இன்னும் சில அவதாரங்கள் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "ஆயுதப்போராட்டம்". வெந்த புண்ணில் வேல்பாச்சும் படம் இது.

ஈழத்து போராளிகளை மையமாக வைத்து கதையை சொல்லி இருக்கும் இவர் முடிந்த அளவு போராளிகளை கேலி  சித்திரங்களாக ஆக்கி கதையை அமைத்துள்ளார். இவர் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்றால் அதற்கும் தமிழனின் நீண்ட, நெடிய வரலாறுதான் கிடைத்ததா?

ஆயுத போராட்டம் என்ற பெயரை பார்த்ததும் அது தமிழர்களின் ஆயுதபோராட்டதிற்க்கு பெருமை சேர்க்கும்  படமாக  இருக்கும் என்று பார்த்தால் அதில்  வரும் காட்சிகளை பார்க்கும் போது நமக்கு வெறுப்புதான் மிஞ்சுகிறது. நமது போராளிகளின்  வீரம், விவேகம் அனைத்தையும் கேலி செய்வதாக  இந்த படம் அமைந்துள்ளது.

வரலாற்றில் வைர வரிகளாக பொறிக்கப்பட்டுள்ள இலங்கை விமான நிலைய தாக்குதலை காட்டு கூச்சல் மியூசிக்குடன் காட்டி அதன் மகிமையையும் கெடுத்துள்ளனர். உங்களுக்கு பணம், புகழ் என்ற அரிப்பு வந்தால் வழக்கம் போல மசாலா படத்தையோ, காதல் கதையையோ எடுத்து தொலைக்க வேண்டியதுதானே. ஈழத்து  மக்களின் துயரம் தாங்கிய 35 வருடகால வீர வரலாறை ஏன் கொச்சை படுத்துகிறீர்கள்.

ஈழ வரலாற்றை  பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஒரு யோக்கிதை இருக்கிறது. தகுதி இல்லாத ஒருவனால் எடுக்கப்பட்ட  படம்தான் இது. அதிலும் ஜெய் ஆகாஷ் வரலாற்றை திரிக்கப்பார்கிறார். இலங்கை பயங்கரவாத அரசுக்கு  இந்திய பயங்கரவாத அரசு ஆயுதம் கொடுத்தது உதவியது என்பதை மாற்றி ஏதோ இந்தியாவை சேர்ந்த ஒரு ஆயுத கம்பனி கொடுத்தது போல் திரிபுவாதம் புரிகிறார்.

லண்டனில் பிறந்து தமிழர்களின் வரலாறு தெரியாத ஒரு அரைவேக்காட்டு கூழு முட்டையால் எடுக்கப்பட்ட படம் இது. மொத்தத்தில் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே!
ரௌத்திரம் பழகு 
...யாழினி...

Dec 7, 2011

இந்தியாவின் ஜென்டில்மேன் முதல்வர்!

DEC 08: ஹைதராபாத் : மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞ்சர்களுக்கு ஆந்திர அரசு 70 லட்சம் ரூபாய் நஷ்ட்ட ஈடாக வழங்க உத்தரவு பிரபித்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இந்த  70 இலட்சம் ரூபாயும் இதில் சம்மந்தப்பட்ட காவல்துறை கயவர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2007  ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ஹைதராபாத் ஜும்மா தொழுகை நடைபெற்ற சமயத்தில் மக்கா மஸ்ஜிதில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பல உயிர்கள் பலியாயின.

மேலும் இக்குண்டு வெடிப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 70  பேரை காவல்துறை கைது செய்து அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கியது.

இந்நிலையில் சென்ற வருடம் இந்தியா முழுவதும் நடந்த தொடர்  குண்டு வெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பது நிருபிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் அடைந்த துன்பத்திற்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடம் தான் பாவமன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். காந்தியும் புத்தரும் பிறந்த குஜராத்தில் பயங்கரவாதி  மோடியின் பாசிசம் ஆட்சி செய்கிறது. அதே நேரம் ஆந்திரத்தில் இருந்து ஒரு வசந்த காற்று வீசுகிறது அதுதான் முதல்வர் கிரண் குமார் ரெட்டி இவர் நீதியன் காவலனாக, நேர்மையின் சின்னமாக உயர்ந்து விளங்குகிறார். இவர்தான் இந்தியாவின் ஜென்டில் மென். இவரை போன்றவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆனால் இந்தியாவில் மதநல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இதுபோன்று பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? பாபர் மசூதி மீண்டும் கட்டி கொடுக்கப்படுமா? ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி, பால்தாக்ரே, ராமகோபாலன், உமாபாரதி போன்றோர் தண்டிக்கப்படுவார்களா? இது நடக்குமேயானால் மீண்டும் ஒரு பிரிவினையில் இருந்து இந்தியா தப்பிக்கும். இந்தியா வல்லரசாக தேவையில்லை தனது குடிமக்களுக்கு நல்லரசாக இருந்தால் போதும்.
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

பாபர் மசூதி உடைப்பும்! அது தரும் படிப்பினையும்!

DEC 07: பாபர்  மசூதி என்ற முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை ஹிந்து பயங்கரவாதிகள் 1992  டிசம்பர் 6 தேதி உடைத்து தரைமட்டம் ஆக்கினர். இது இந்திய வரலாற்றில் கருப்பு தினமாகி போனது.

பயங்கரவாதி அத்வானி தலைமையில் ரத யாத்திரை என்றபெயரில் ஒரு ரத்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்த ரதயாத்திரை போன இடமெல்லாம் முஸ்லிம்களின் இரத்தம் ஒட்டப்பட்டது.

இறுதியாக முஸ்லிம்களின் 450 வருட பாரம்பரிய மிக்க மசூதி, ஆயிரகணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் முன்னிலையில் ஹிந்து தீவிரவாத இயக்கங்களால் திட்டமிட்டு உடைக்கப்பட்டது. அத்தோடு இந்தியாவின் மதச்சார்பின்மையும் உடைந்து போனது.

இதை செய்ய அவர்கள் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு மேல் எடுத்திருகிறார்கள். ஹிந்து பாசிஸ்டுகள்  பாபர் மசூதியோடு மட்டும் தங்கள் திட்டத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. பாபர் மசூதி தொடங்கி 3600 அதிகமான பள்ளிகளை இந்தியா முழுவதும் உரிமை கொண்டாடுகிறார்கள்.

இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்தியாவின் நீதி மன்றங்களில் நிறைந்திருக்கும் காவி நீதிபதிகள் உலகமே பார்க்க உடைக்கப்பட்ட ஒரு மசூதியை சர்ச்சை கூறிய இடம் என்று பெயரிட்டது. பின்னர் ஹிந்துக்களின் நம்பிக்கை அடிப்படையாக கொண்டு  குரங்கின் கையில் கிடைத்த பூமலைபோல் ஒரு  தீர்ப்பை கொடுத்தது அலகாபாத் காவி மன்றம்.

முஸ்லிம்கள் இப்போது உச்ச நீதி மன்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். உச்ச நீதிமன்றம் எப்படியும்  நமக்கு நீதி வழங்கும் என்று. காவரி நதிநீருக்கும், முல்லை பெரியார் அணைக்கும், தமிழக மீனவர் பிரச்சனைக்கும், சத்தீஸ்கர் பழங்குடி மக்களுக்கும், காஷ்மீருக்கும், போபால் விசவாய்வு கசிவுக்கும் பதில் சொல்லாத உச்ச நீதி மன்றமும், மத்திய அரசும்  உங்கள் பாபர் மசூதி விசயத்திற்கு மட்டும் எப்படி பதில் சொல்லும் என்று நம்புகிறீர்கள் என்பதுதான் புரியாத புதிர்.

ஆர்.எஸ்.எஸ். சொன்ன மாதிரி முஸ்லிம்களுக்கு இரண்டு வழிகள் உண்டு ஒன்று பாகிஸ்தான், மற்றொன்று கபர்ஷ்தான் ( அடக்கஸ்தலம்). கோழைகளாக இருத்தால் அதை இரண்டையும் தேர்ந்தெடுங்கள் வீரர்களாக இருந்தால் இதை எதிர்த்து போராட முன்வாருங்கள். வருடா வருடம் பாபர் மசூதி பெயரை சொல்லி ஊர்வலம் நடத்துவதால் எந்த பிரோஜனமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த அநியாய ஆட்சிகாரர்களை, பாசிச பயங்கரவாதிகளை  எதிர்த்து நீங்கள் போடும் வேற்று கோஷங்களால் எந்த பயனும் ஏற்ப்பட  போவதில்லை. ஒவ்வொரு வருடமும்  டிசம்பர் 6 தேதி நீங்கள் நடத்தும் போராட்டங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தாது. குஜராத், பாகல்பூர், நல்லி, மும்பை இப்படி கலவரங்களை பார்த்தும் இன்னும் ஏன் உறக்கம்.  ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள்  துப்பாக்கி சுடும் பயிற்சிகளை எடுத்து ஒரு சிறந்த படையணியாக உங்களை காவு கொள்ள காத்திருகின்றன. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இதுவே உங்கள் முன் நிற்கும் கேள்வி.
*மலர்விழி* 

Dec 6, 2011

உச்சிதனை முகர்ந்தால்!

DEC 07: இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் பிறந்த  பெண்போராளி 13 வய்து  Y.புனிதவதியின் வீர வரலாற்றை சொல்லும் காவியமே “உச்சிதனை முகர்ந்தால்.

சிங்கள பயங்கரவாதிகள் தமிழர்கள் மேல் நடத்திய கலவரங்களும், போர்களும் புனிதவதியை எப்படி மாற்றியது என்பதே  “உச்சிதனை முகர்ந்தால்”.என்கிற படம்! இது படம் அல்ல தமிழர்களின் வரலாற்று ஆவணம். 

சிங்கள கயவர்களிடம் இருந்து தமிழர்களின் மானம் காக்க எம்குல பெண்கள் ஆயுதம் ஏந்தினர். எம்குல பெண்களின் வீரத்தை பறைசாற்றும் ஒரு படமாகவே இதை பார்க்க முடிகிறது. சங்ககாலம் முதல் இப்போது வரை தமிழ் பெண்கள் வீரம் நிறைந்தவர்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது.

இப்படத்தில் ஈழத்து உணர்ச்சி கவிஞ்சர் காசி ஆனந்தனின் பாடல் வரிகள்.
 
இருப்பாய் தமிழா நெருப்பா... நீ!
இழிவாய் கிடக்க செருப்பா... நீ!

ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே 
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே...
துடித்து துடித்து உடல் சிதைகிறதே...
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே...
எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள் 
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்!

எரிமலை தனியுமா... தண்ணீரில்! 
கடல் அலை கரையுமா... கண்ணீரில்!
முழங்கிடும் சங்கே முழங்காயோ   
விலங்குகள் உடைக்க பிறந்தாயோ
அடிமையாய் வாழும் நிலம் ஒன்று
விடியலைக் காணும் களம் இன்று
வெட்டவெளியோ வீடானது... 
பட்டினியோ உணவானது...
போராடு நீ வீரோடு!

மின்னலின் தொடர்ச்சியே... இடியாகும்!
இன்னலின் தொடர்ச்சியே... விடிவாகும்!
கொந்தளித்து அறம் வெடிக்காதோ 
கொடியவர் மூச்சை முடிக்காதோ
ஆயிரம் அலைகளை தோளாக்கு
அடிமைக்கு விடுதலை நாடாக்கு 
மாந்தர் உயிரோ நிலையற்றது...
மானம்தானடா நிகரற்றது...
போராடு நீ வீரோடு!
 ரௌத்திரம் பழகு 
...யாழினி...

Dec 4, 2011

இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!

DEC 05: ராமேசுவரத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் பிரசாத், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், எமர்சன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.   இன்று அவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் பட்டினியால் உள்ளனர்.  

சிந்திக்கவும்:  குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம  ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே மறந்தே போச்சி. ராஜபக்சே வீட்டில் வேலை செய்துகொண்டே  இந்திய ராணுவவீரன் ஒருவன் இப்படி  நினைத்து பார்கிறான். நமது சிங்கள அண்ணன் தம்பிகளால் தமிழக மீனவர்கள் தினம் தினம் சாகிறார்கள். ராஜபக்சே மாதிரி ஒரு பிரதமர் நமக்கு தேவை.


சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில்  அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர். அதனால்தான் நாம் ராஜபக்சேவுக்கு  தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறோம். இனி சிங்களவர்கள் நமது நாட்டின் குடிமக்கள். வருங்காலத்தில் இந்தியாவில் இருக்கும் பிரச்சனிகளை தீர்க்க ராஜபக்சேவை பிரதமர் ஆக்கிவிடலாம்.


என்மனதில் உதித்த இந்த நல்ல யோசனையை ஹிந்தி ஜனாதிபதியிடம் சொல்லி மெடல் வாங்கி கொள்ள வேண்டும். ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். தமிழர்கள் என்கிற இனத்திற்கும் நமது வடஇந்திய மற்றைய இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே  இவர்களை தொடர்ந்து நமக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும். அவர்கள் தனி நாடு கேட்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை அடக்க ராஜபக்சேவை ஹிந்தி ராஜ்யத்தின் பிரதமராக்குவதை தவிர வேறு வழியில்லை நமக்கு என்று எண்ணி பெருமிதம் கொண்டான்.

நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.