Nov 19, 2011

காவல்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!

NOV 20: சங்கரன்கோவில் அருகே வங்கி காவலாளி கொலையில் ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காததால் போலீசார் ஜோதிடரை அணுகி குறிகேட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் காவலாளி ராமராஜ்(47) என்பவர் கடந்த மாதம் 25ம்தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.

எஸ்பி விஜயேந்திரபிதாரி உத்தரவின்பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் கள் 15 வாகனங்களில் ரோந்து சுற்றி குற்றவாளி களை தேடிவருகிறார்கள். வங்கி செயலாளர், ஊழியர்கள் மட்டுமின்றி ஊர் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தியதில் பலன் இல்லை. நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். 25நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை.

இந்நிலையில் தனிப் படையில் உள்ள சில போலீசார் எட்டையபுரம் அருகே கீழஈரால் பகுதி யில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல் லும் ஜோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொள்ளை யில் குற்றவாளி சிக்கு வானா என்று கேட்டனர். மேலும் காவலாளியை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட தாக தெரிகிறது. இலங்கை அகதிகள் மூலம் இந்த துப்பாக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததால் விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிந்திக்கவும்:
ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான். ஏதோ இந்தியாவுக்கு கள்ள துப்பாகிகளை அறிமுகபடுத்தி விட்டவன் ஈழத்தமிழன் என்பது போல் ஒரு மாயை ஏற்படுத்தி இந்த பேங்க் காவலாளி கொலையிலும் அவர்களை துன்புறுத்துவது காவல்துறை கயவர்களின் இயலாமையையே காட்டுகிறது. புருலியா ஆயுத மழையை முதல் முபையில் தினம்தோறும் நடக்கும் துப்பாக்கி சண்டை வரை, கள்ளத்துப்பாக்கி மார்கட்களும், துப்பாக்கிகளும் வருவதும் அனைத்தும் வடநாட்டில் இருந்தே இப்படி இருக்க தமிழன்தான் இவர்களுக்கு இளிச்சவாயன்.

கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது. இந்திய காவல்துறை கயவர்கள் லஞ்சம் வாங்குவதிலும், அப்பாவிகளை குற்றவாளிகள் என்று சொல்லி சிறையில் தள்ளுவதிலும் கில்லாடிகள். லஞ்சம் வாங்குவது எப்படி, சக காவல்துறை பெண் ஊழியர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது எப்படி, குடித்து கூத்தாடுவது எப்படி என்பதை கற்று கொள்ள  இந்திய காவல்துறையினரிடம் பயிற்சி எடுக்க வேண்டும். இவர்கள்தான் உலகுக்கு முன்னோடிகள்.

இவர்கள் ஒன்றும் முறைப்படி துப்பு துலக்கி கண்டுபிடிப்பது எல்லாம் இல்லை, யார் மேல் சந்தேகமோ அவர்களை உள்ளே கொண்டுவந்து அடித்து துன்புறுத்தி அதன் மூலம் கண்டுபிடிப்பது, அப்படியே கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் பழைய குற்றவாளிகள் மீது திரும்ப வழக்கை போட்டு உள்ளே தள்ளுவது இதுதான் இவர்கள் வழக்கம். குற்றம் செய்தவன் ஏழையாக இருந்தால் அவனை நோக்கி சட்டம் தன் கடமையை திறம்பட செய்யும், அவனே பணக்காரனாக இருந்தால் சட்டம் சல்யூட் போட்டு வளைந்து கொடுக்கும்.
இவர்களை அடக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும்.

இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை  இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது என்றே சொல்லவேண்டும். ஒரு சிலரை தவிர.இத்துறையில்  நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது சதவீதம் ரவுடிகளும், கிரிமினல்களும், பயன்கரவாதிகலுமே நிறைந்துள்ளனர். இத்துறையை ஒழித்து முன்புபோல் கிராம காவல்படையை அந்த அந்த கிராமத்து மக்களே நியமித்தால் அந்த படை இவர்களை விட சிறப்பாக பணிபுரியும். 

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

ஓ..... மனமே!..... ஓ..... மனமே!!

கடவுள் படைத்ததை மனிதன் அழித்தான் 
மனித மமதைஅழிக்க கடவுள் மனத்தைப் படைத்தான் ..!!
 
உள்ளிருந்துகொல்லும் ஒட்டுண்ணியாய் மனசு..
உடலெனும் மரத்தில் முளைத்த நாள்முதலாய் முரண்டு..
 
தீனியிட்டே தீர்ந்துபோகிறேன்
தீயிலிடவும் துணிந்து போகிறேன்.
 
ஏ மனமே உன்னைக் கைக்கொள்ளத்துடிக்கிறேன்
கைமீறியே போகிறாய் செய்வதறியாது திகைக்கிறேன் .
 
உடலோடும்..உலகோடும் ஒட்டாத மனமே..
இனிப்பாய்ப் பேசினால் உடனே ஓடுகிறாய்..
 
பச்சை நாணலெல்லாம் கொழுக்கொம்பென்றே எண்ணிப் படர்ந்திட நினைக்கிறாய் .
 
எச்சரிக்கும் உள்ளுணர்வில் ஏதோ....  
சொன்னாலும் உடனே பகைக்கிறாய்.
 
நல்லதைக்கொள்ளெனிற்  எனைக்கொல்லும் மனமே
உனைக்கொன்றிட நினைக்கிறேன்..
 
உன்னுள்ளிருக்கும்உதறியெழ  
உடைந்து மடிகிறேன்.
 
படைத்தவன் கணக்கு பாங்காய் நிறைவேற
பாவியேன் என்னசெய்ய ...?
 
ரௌத்திரம் பழகு 
...யாழினி...

Nov 18, 2011

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்!

சென்னை NOV 20: மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின்சார கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என தெரிகிறது.

சாதாரண பேருந்து முதல் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் வரை அனைத்து பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று காலை முதல் அதிரடியாக அமுலுக்கு வந்துள்ளது.

சென்னையில் நகர பேருந்துகளில் குறைந்த கட்டணமாக 3 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மற்ற கட்டணங்கள் இரு மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 6 மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. சென்னை தவிர மற்ற நகரங்களில் தினமும் 4 மணி நேரம், கிராமங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு மின்வெட்டு அமலில் உள்ளது.

கூடுதல் மின்சாரம், மண்ணெண்ணெய், மீனவர் மேம்பாட்டுக்கு நிதி ஆகியவை கேட்டு பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது. மனு குறித்து திட்டக்குழு முடிவு எடுக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் எந்த உதவியும் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.

அதே சமயம், மேற்கு வங்க அரசுக்கு  ரூ21,614  கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் அரசுகளை மத்திய அரசு புறக்கணிப்பது தெரிகிறது.

இந்த நிலையில் திவாலாகும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம்  ரூ40,659 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி. மின்சாரம் விற்றவர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்க வேண்டியது 10,000 கோடி. அரசின் மொத்த கடன் ஒரு லட்சத்து ஆயிரத்து 349 கோடியுடன், மின்வாரிய கடன் 53,000 கோடியை ஒப்பிட்டால், வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெரியும். இதற்கு மேலும் வாரியத்திற்கு அளிக்க அரசிடம் பணம் இல்லை.

இந்த நிலையில் திவாலாகும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம்  ரூ40,659  கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. வாரியத்தின் கடன் சுமை 42,175 கோடி. மின்சாரம் விற்றவர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்க வேண்டியது 10,000 கோடி. அரசின் மொத்த கடன் ஒரு லட்சத்து ஆயிரத்து 349 கோடியுடன், மின்வாரிய கடன் 53,000 கோடியை ஒப்பிட்டால், வாரியத்தின் மிக மோசமான நிதிநிலை தெரியும்.

இதே போன்றுதான் அரசு போக்குவரத்து கழகங்களின் நிலையும் உள்ளது. டீசல், உதிரி பாகங்கள் வாங்கவும், விபத்து நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்கள் பிடித்து வைத்துள்ள வாகனங்களை விடுவிக்கவும், ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் இயலாத சூழ்நிலையில் போக்குவரத்து கழகங்கள் ஸ்தம்பித்து விட்டன. அவற்றின் சொத்துக்கள் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. டயர், டியூப், உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ6,150  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்படும். இதே போன்று ஆவின் நிலைமையும் மோசமடைந்துவிட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத நிலையில் ஆவின் உள்ளது. கொள்முதல் செய்யும் ஒவ்வொரு லிட்டருக்கும் நான்கு ரூபாய் அளவுக்கு ஆவின் நஷ்டத்தை சந்திக்கிறது. 

சிந்திக்கவும்: தமிழகத்தின் மின்சாரத்தை மற்றைய மாநிலங்களுக்கு வாரி வழங்கிவிட்டு தமிழக மக்களை மின்வெட்டில் ஆழ்த்துவதும், தமிழக வளங்களை எல்லாம் சுரண்டி விட்டு தமிழக மேன்பாட்டுக்கு உதவாமல் தமிழகத்தை புறக்கணிப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருபவை. வெள்ளையன் தமிழகத்தை கொள்ளையடித்ததை விட இந்தியா தமிழகத்தில் நடத்தியே கொள்ளையே அதிகம். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்தி  இந்தியாவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டாள் மட்டுமே நாம் வளம் பெற முடியும். தமிழர்கள் சிந்திப்பார்களா?
  *மலர்விழி*

Nov 16, 2011

எங்கே தேடுவேன்! தமிழனை எங்கே தேடுவேன்!

எங்கேதேடுவேன்.. 
தமிழனை எங்கே தேடுவேன்..
முள்ளி வாய்க்காலில் முடிந்துபோனாயோ..
குண்டடிக்கு தப்பி ஐரோப்பா சென்றாயோ..
குடும்பத்தோடு அகதியானாயோ..
மானங்கெட்ட தமிழ்அரசியல்வாதிப்  பேச்சில் மயங்கிப்போனாயோ..
போன இடத்தில் தமிழீழம்  மறந்து
செட்டில் ஆன தமிழா..
 
எங்கே தேடுவேன் ஈழ தமிழனை எங்கே தேடுவேன்..
Mc Donalds - ல் மேய்கின்றாயோ.. 
saturday nights -ல் களிக்கின்றாயோ..
இரவல் மொழிகளில் கதைக்கின்றாயோ.. 
அந்நிய இரவல் மொழிகளில் கதைக்கின்றாயோ..
டொலர் வாசத்தில் தமிழ் மண்ணின்மணம் மறந்த தமிழா...
 
எங்கே தேடுவேன்..உனை எங்கே தேடுவேன்..
சுவிஸ்- ன் சுகங்களில் மூழ்கிப்போனாயோ..
சூப்பர் மார்க்கெட்டில் அலைகின்றாயோ..
ஹைப்பர் மார்க்கெட்டில்தான்  தொலைந்து போனாயோ..
கிரெடிட் கார்டைத்தேய்த்தே தேய்ந்துபோன தமிழா...
 
எங்கே தேடுவேன் தமிழனை எங்கே தேடுவேன்...
உறவுகள் மரணம் மறந்துபோனாயோ.. உன் பண்பாடு அழிவதை  நீயறியாயோ..??
இன்டெர் நெட்டில் சிக்கிக்கொண்டாயோ - தொல்லைக் காட்சிப்பெட்டியைத்தான்  கட்டிக்கொண்டாயோ
போலிச் சாமியார்மடிகளில் புதைந்துபோனாயோ..
சிங்களப் பேயின் வெறி அறிந்த தமிழா....
 
எங்கே தேடுவேன்... ஈழத் தமிழனை எங்கே தேடுவேன்..
நம் குடிசிதைந்ததை மறந்துவிட்டாயோ...
விடுதலைஉணர்வைத் துறந்துவிட்டாயோ..
சிங்கள வெறியனையும் மன்னிப்பாயோ..???
உன் நரம்புகளில் தான் தமிழ்வலி இல்லையோ..??
மாவீரர் தியாகங்கள் உன் நெஞ்சில் இலையோ..??
பிரிவினை சக்திகையில் சிக்கிச்சிதைந்து... 
KFC மொறுமொறுப்பில் நமுத்துப்போன தமிழா...
 
எங்கே தேடுவேன்...தமிழனை எங்கே தேடுவேன்...
எமை விடுவிக்கும் இறைத்தமிழனை எங்கே தேடுவேன்..
'எம் மக்களைக் கொன்றவனைக்  கொல்லும்'
தமிழ்மகாத்மாவை எங்கே தேடுவேன்..
சிவப்புத்தமிழனை எங்கே தடுவென்.. 
எங்கள் "சே"  வின் பிள்ளைகளை எங்கே தேடுவேன்..
 
 ரௌத்திரம் பழகு
...யாழினி...

Nov 15, 2011

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!

தமீழ உணர்ச்சி கவிஞசர் காசியானந்தனின் கவிதை வரிகளில் இருந்து நான் பெற்ற கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் தனது கவிதை ஒன்றில் "கொல்லாதவன் உனக்கு மகாத்மா" கொன்றவனை கொல்கிறவன் எனக்கு மகாத்மா" என்று சொல்லி இருப்பார்.

அநீதம் இழைக்கப்பட்ட மக்கள் அதாவது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், இயலாதவர்கள்  இவர்கள் கேட்கிறார்கள் இந்த அநியாய காரர்களை அழிக்க யாரும் முன்வரமாட்டார்களா என்று. அந்த பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள்.

ஈழத்திலே கொல்லப்பட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உறவுகளின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள். இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள பயங்கரவாதிகளை அழிக்க வருபவர்களே எங்களுக்கு மகாத்மா என்று உணர்ச்சி பொங்க  சொல்கிறது அந்த கவிதை வரிகள்.

அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை மூலம் சமாதனம் செய்ய வருகிறோம்  என்று  சொல்லி சமாதிகள் எழுப்பிய அநியாயகாரர்களை, ஈழத்து விடுதலை தீயை அணைக்க சிங்கள பேரினவாதத்திற்கு ஆயுதம் கொடுத்து உதவியவர்களை தண்டிக்கும் மகாத்மா யார் என்று கேள்வி கேட்கிறது அந்த கவிதை வரிகள்.

ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா என்று  ஈழத்து படுகொலைகளுக்கு பழி  தீர்க்கப்பட வேண்டும் என்பதை சொல்லும் வீர வரிகள் அந்த கவிதை வரிகள்.

தமிழக மீனவர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்தும், மீனவர்கள் கடல் எல்லை தாண்டி போககூடாது என்று எச்சரிக்கை செய்யும் அதிகார வல்லூறு அரசை நோக்கி இவர்களை அழிக்க வருபவர்கள் யாரோ அவர்களே எங்களுக்கு மகாத்மா என்று மாண்டுபோன மீனவர்களின் குரலாய் ஒலிக்கிறது.

சத்திஷ்கர் மாநில பழங்குடி மக்களை  காட்டு வேட்டை என்கிற பெயரிலே  வேட்டையாடியவர்களை தண்டிப்பவர்களே எங்கள் மாகாத்மாக்கள். போபால் விசவாய்வு கசிவில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காத அரசு இயந்திரத்தையும், நீதி துறையையும் தண்டிக்க வல்லவர்களே எங்களுக்கு மகாத்மாக்கள் என்று வீரத்தோடு முழங்குகிறது இந்த கவிதை வரிகள்.

ஒரிசாவிலே கற்பழிக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரி பெண்களின் குரலாய், காரோடு எரித்து கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பாதிரியார், மற்றும் அவரது பிஞ்சு குழந்தைகளின் குரலாய் அது ஒலிக்கிறது. குஜராத், பகல்பூர், மீரட், பீவாண்டி, கோவை, மும்பை, நெல்லி, ஒரிசா, ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா  நடத்திய  கலவரங்களினால் கொல்லப்பட்ட சிறுபான்மை இன மக்களின் குரலாய் அது ஒலிக்கிறது.

லஞ்சம், மற்றும் ஊழல், ஜாதிகொடுமை, மதகலவரங்கள், ரவுடிசம், இவற்றால் பாதிக்கப்பட்ட  அப்பாவி மக்களின் குரலாய் இது ஒலிக்கிறது. உங்களில் யார் மாகாத்மா ஆக போகிறீர்கள். என்று கேள்வி எழுப்பும் அருமையான வரிகள் நிறைந்த  கவிதை இது. இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி சொலுத்தும் மகாத்மாவாக ஒவ்வொரு மனிதனும் உருவெடுக்க வேண்டும்.

நம் கண்முன்னே நடக்கும் தீமைகளை பார்த்து கொண்டு, இனவாதம் மதவாதம் பேசாமல் பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி செலுத்தவும், பாதிப்பை ஏற்ப்படுத்தும் மனித குல விரோதிகள் அவர்களது செயல்களுக்கு ஏற்ப தண்டனை பெற வழி செய்யும் மகாத்மாவாக ஒவ்வொருவரும் தங்களை வார்த்தெடுக்க வேண்டும். எல்லாவிதமான அநீதிகளுக்கும் எதிராய் நியாத்தின் குரலாய் நம்மை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதே அந்த கவிதை வரிகள் தரும் பாடமாகும்.
நட்புடன்: மலர்விழி.

Nov 14, 2011

தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்!

NOV 15: கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த பெண் சவுமியா, 23. அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதை செய்தவன் விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி.இவனுக்கு கேரளா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை வைத்து மொத்த தமிழர்களையும், தமிழர் போராட்டங்களையும் கொச்சை படுத்துகிறது  பார்பன விஷம் கக்கும் தினமலர் (மலம்) பத்திரிகை.

இதை குறித்து தினமலம் சிறப்பு நிருபர் கூறுவதை கேளுங்கள்! உங்களுக்கே பத்திக்கிட்டு வரும்! இந்த வந்தேறி பார்பன தினமலர், தினமணி, சோ வகைராக்களை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என்று. இந்த பரதேசிகள் ஆதரிக்கும் பார்பன ஹிந்துதுவாவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழர்கள் ஒழித்து கட்ட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இனி ஒரு மானம் உள்ள தமிழன் கூட ஹிந்துத்துவாவை ஆதரிக்கவோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமுன்னணி, சங்கபரிவார் கூடத்தின் வலையில் விழுந்து விடாமல் இருக்க இது உதவும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஹிந்துத்துவா தினமலம் எப்படி தமிழர்களை,  கேவலப் படுத்துகிறது என்று படியுங்கள். திடீர் என்று தலித் மக்கள் மீது பார்பன வந்தேறிகளுக்கு பாசம் வந்து விட்டமாதிரியும், அவர்களை கேவலப்படுத்தியும் இந்த செய்தி நீள்கிறது.

தினமலம் வெளியிட்ட செய்தி (நவம்பர் 13,2011): இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக் குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமான மில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான்.

உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா?

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா? ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!  (  -நமது சிறப்பு நிருபர்-)

தினமலத்தை செருப்பால் அடிப்போம் வாருங்கள்! இந்த பார்பன வந்தேறிகள் தமிழர்களை கேவலப்படுத்தியது போதும்.  இனியும் இவர்களை அனுமதிக்க முடியாது. ஒரு கேவலமான இழி காரியத்தை ஒருவன் செய்திருக்கிறான் அவனுக்கு தூக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் தமிழர் போராட்டங்கள் அத்தனைக்கும் முடிச்சு போட்டு தமிழர்களின் போராட்ட களத்தை கொச்சைபடுத்த இந்த பார்பன ஹிந்துத்துவா வந்தேறிகள் சத்திட்டம் தீட்டுகின்றன. பார்பனர்கள் எவ்வளவு கேவலமானவர்கள், மனித நேயம் அற்றவர்கள் என்பதை தமிழர்கள் இப்போதாவது புரிந்தால் சரி.

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

Nov 13, 2011

மானம்கெட்ட கடல்படையும் அதன் கமாண்டரும்!

NOV 15: தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் இந்திய கப்பல் படை கமாண்டர் பிஜ்ரானியா எச்சரிக்கை விடுத்தார்.


சிந்திக்கவும்:  இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல. அன்றாடம் வாயிற்று பிழைப்பை தேடி உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க சொல்கிறார்கள் தமிழக மீனவர்கள். உங்களை மாதிரி பெரிய, பெரிய கப்பலில் எல்லாவிதமான பாதுக்கப்பு உபகரணங்களுடன்  ஊர்வலமா போகிறார்கள் எம்குல மீனவர்கள்.

சிறு சிறு படகுகளில், கட்டு மரங்களில், மீன்பிடிக்க பல்வேறு இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில்  மீன்பிடிக்க சொல்கிறார்கள் நமது மீனவர்கள். சூராவ்ளிகாற்று, மழை, சுனாமி, சிங்கள பயங்கரவாத படை இப்படி தினம்,  தினம் உயிரை கையில் பிடித்து கொண்டு தங்கள் ஒருஜான் வயிற்ரை நிறைக்க பாடுபடும் மீனவ பெருமக்களின்  துன்பத்தை  நினைத்தால் கண்கள் கலங்குகின்றன.

வெளிநாடுகளில் மீன்பிடி என்பது ஒரு சிறந்த வியாபாரம். அவர்களுக்கு என்று கடல்படை பாதுகாப்பு கப்பல்கள், ஹெலிஹோப்டேர்கள், மீன்பிடி படகுகளிலே வயர்லஸ் கருவி, பாதுகாப்பு உபகரணங்ககள் ஆகிய லைப் ஜாக்கெட், மிதவைகள், பிராணவாய்வு சிலிண்டெர்கள், சிறியரக ராடர்கள் என்று எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏதாவது ஒரு பிரச்சனயில் மீன்பிடி படகுகள் மாட்டிகொண்டால் உடனே அவர்களை மீட்க்க "கோஸ்ட் கார்ட்" என்று அழைக்கப்படும் கடற்கரை பாதுகாப்பு கப்பல்களும், ஹெலிஹோப்டேர்களும் விரைந்து சொன்று அவர்களை பாதுகாக்கின்றன. அவர்களுக்கு என்று சிறந்த காப்பீடு திட்டம், மருத்துவம் என்று பட்டியல் நீள்கிறது.

இங்கே என்னவென்றால் உள்ளதும் போச்சே என்று சொல்லும் அளவுக்கு உள்ளது நிலைமை. நீ என்ன கடலில் எல்லை கோடா போட்டு வைத்திருக்கிறாய். அன்றாடம் பிழைப்புக்கு அல்லல் படும் மீனவர்களிடம் என்ன ரெடேர்களா இருகின்றன. அவர்கள் ஒரு குத்து மதிப்பாக வானிலை கணித்து காற்று போகும் திசையில் படகை செலுத்தி மீன்பிடிகிரார்கள். அவர்கள் வைத்திருக்கும் சிறிய ரக விசை படகுகளை வைத்து அவர்கள் கடலுடன் போராடும் உள்ளம் எல்லாம் பதறுகிறது.

தினம் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் திரும்பி வந்தால்தான் நிஜம். அவர்கள் குடும்பத்தார் கடலை பார்த்தபடி கவலையோடு அமர்ந்திருப்பதும் வேதனையான விஷயம். கடலை கரையில் இருந்து பார்க்கும்போதே பயமாக இருக்கு. ஆர்பரிக்கும் கடலில் மீன்பிடிக்க சென்று கோர அலைகளோடு தினம் தினம் உயிர்போராட்டம் நடத்துகிறார்கள் மீனவர்கள். உங்களுக்கு என்ன ஊரான் வீட்டு வரிபணத்தில் சொகுசு பயணம் போகும் வெத்து வேட்டுகள்தானே. இந்த வீர முழக்கத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல.

மீன்பிடிக்கும் மக்களின் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் மானம் கெட்டவர்களே இவர்களை பாதுகாப்பதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை. கடல் எல்லைகளில் உங்கள் கப்பலை நிறுத்தி வைத்து எல்லைத்தாண்டும் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கலாமே திரும்பி போங்கள் நீங்கள் இந்திய எல்லையை தாண்டி போகிறீர்கள் என்று சொல்லலாமே.

இந்திய கடல் எல்லைகளில் சென்சார் பொருத்தப்பட்ட மிதவைகளை போடலாமே, அல்லது உன் சிங்கள முதலாளியின் காலை பிடித்து கெஞ்சலாமே தமிழக மக்களின் வரி பணமும் எங்கள் உடம்பில் ஓடும் ரேத்ததில் கலந்திருக்கிறது, நாங்கள் பவனிவரும் கப்பல்களில் கலந்துள்ளது அதனால் தயவுசெய்து தமிழர்கள் மேல் கைவைக்க வேண்டாம். அவர்கள் தப்பி தவறி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க வந்துவிட்டால் திரும்பி போகும்படி கப்பலில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு கொடுங்கள் என்று சொல்லலாமே.

இப்படி எத்தனையோ வழிகள் இருக்க மீனவர்களை எச்சரிக்கிறார்கலாம் எச்சரிக்கை!. உங்கள் வீரத்தை இலங்கை கடல்படையிடம் காட்ட வேண்டியதுதானே. அதற்க்கு துப்பு இல்லை, துணிவும் இல்லை. ஏழை மீனவர்களிடம் தான் உங்கள் வீரம் எல்லாம். இதில்வேறு வல்லரசு புல்லரசு என்று கூப்படுவேறு. தமிழர்களின் மானம் காக்கவும், தமிழர்கள் அடிமைகள் இல்லை என்பதை உரக்க சொல்லி சுதந்திர காற்றை சுவாசிப்போம் வாருங்கள்.

ரௌத்திரம் பழகு
...ஈழப்பிரியா...