NOV 06, இம்பால்: 2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில், அஸ்ஸாம் படையணியைச் சேர்ந்த ராணுவத்தினர், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார். இவரின் உண்ணா விரதம் 11 ஆண்டுகளைத்தாண்டி 12வது ஆண்டை எட்டியது.
ஆயுதப்படை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐரோம் சர்மிளா தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வெறும் தண்ணீரை மட்டும் உணவாக உட்கொண்டு அவர் 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் உலக நாடுகள் பல உயர்ந்த விருதுகளை வழங்கியுள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. 1972ம் ஆண்டு வரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர், பின், தனிமாநிலமானது. கடந்த பல ஆண்டுகளாக, தனி நாடு கேட்டு நக்சலைட்களும், மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அங்கு கடந்த 1980ம் ஆண்டு முதல், நக்சலைட்களையும், மக்களையும்
ஒடுக்குவதற்காக ராணுவத்திற்கு “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ வழங்கப்பட்டது. இந்த சிறப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட, தங்கள் மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது. இதே அநியாயம்தான் காஷ்மீரிலும் இந்திய ராணுவத்தால் அரங்கேற்றப்படுகிறது.
சிந்திக்கவும்: தமிழக மக்களே சிந்தியுங்கள் இதே நிலைமைதான் உங்களுக்கும் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்களை சிங்கள பயங்கரவாத படை தொடர்ந்து சுட்டு கொன்று வருகிறது அதை வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு. ஈழத்திலே தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர்கள் ஒருசில நாட்களில் கொல்லப்பட்டார்கள் இந்தியாவின் துணையோடும், இந்தியாவின் கனரக ஆயுதங்களோடும்.
மணிபூர் மக்கள் நமக்கு முன்பே தெரிந்து வைத்திருக்கிறார்கள் இவர்களோடு சேர்ந்து இருந்தால் நமக்கு கோவணம் கூட மிஞ்சாது என்று. அதனால்தான் தனி நாடு கேட்டு ஒரு போராட்டத்தை துவைக்கி உள்ளார்கள். தமிழர்களுக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்துள்ளது. ஆனால் இதை நாம் புரிந்து கொள்ள கொடுத்திருக்கும் விலையோ மிக மிக அதிகம்.
ஈழத்தமிழர்களின் 35 வருட போராட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட ஒரு நாட்டையும், வீரம், மானம் உள்ள இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களையும், சுனாமியை கக்கும் கடலின் கோரத்தை கண்டு அஞ்சாது தினம் தினம் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தும் நம் மீனவ மக்களின் உயிர்களையும் விலையாக கொடுத்து நாம் இப்போது பாடம் கற்றிருக்கிறோம் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று. நமக்கு இந்த படிப்பினையை தர தங்கள் உயிர்களை கொடுத்த மாவிரர்களுக்கு சுதந்திர தமிழகத்தில் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்படும். அவர்களது வீர வரலாறு தமிழர்களுக்கு பாடமாக ஆக்கப்படும் என்று நம்புவோம்.

-நட்புடன்: மலர்விழி-