Oct 22, 2011

ரத யாத்திரையும்! ரத்த யாத்திரையும்!

OCT 23, ஊழலுக்கு எதிராக எல்.கே. அத்வானி மேற்கொண்டுவரும் ரத யாத்திரை அக்டோபர் 30 பெங்களூரில் நடைபெறுவதாக இருந்தது . ஆனால் ஊழல் வழக்குகளில் சிக்கி கர்நாடக பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் சிறையில் வாடுவதால் அத்வானி ரத யாத்திரையை கர்நாடக மாநிலத்தில் ரத்து செய்கிறார்.

சிந்திக்கவும்: பாபர் மசூதியை உடைக்க ரத யாத்திரை என்கிற பெயரில் ஒரு ரத்த யாத்திரையை நடத்தினார் மிஸ்டர் அத்வானி. இதன் மூலம் இராமாயண கற்பனை கதாபாத்திரத்தின் நிஜ நடிகர் ஆனார் அத்வானி.

ரதயாத்திரை என்பது என்னவோ இராமாயண கதாபாத்திரம்தான் ஆனால் அத்வானி அதற்க்கு தனது பாசிச ஹிந்துத்துவா என்கிற விஷ  வெறியை  பூசினார். ஹிந்துத்துவா சித்தாந்தம் மூலம் இந்தியாவை ஆட்சி செய்ய இவர்கள் கண்டேடுத்ததுதான் இந்த ரதயாத்திரை என்கிற ரத்த யாத்திரை.

பாபர் மசூதி இடிப்பிற்கு முன்னர் இந்தியா முழுவதும் அத்வானி நடத்திய ரதயாத்திரை ஆயிரக்கனைக்கில் சிறுபான்மை முஸ்லிம்களின் உயிர்களையும், ரத்தத்தையும் ஓட்டியது. இந்த யாத்திரை மூலம் இந்தியா முழுவதும் தங்கள் ஹிந்துத்துவா வெறி என்கிற விஷ விதையை இளஞ்சர்கள் உள்ளத்தில் தூவ இந்த யாத்திரை அவர்களுக்கு உதவியாக இருந்தது.

பிற்காலத்தில் இளஞசர்கள் ஹிந்துதுவாவில் நம்பிக்கை இழந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திருக்கு ஆள்பிடிக்கும் நோக்கோடும், சரிந்து போன பாரதிய ஜனதாவை தூக்கி நிறுத்தவுமே இந்த ரதயாத்திரை என்கிற இராமாயண கற்பனை பத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுகிறது ஹிந்துத்துவா. ,இந்த ரதயாத்திரையை பற்றி படிக்கும்போது ம.க.இ.க. தோழர்கள் பாடியிருக்கும் பாடல் வரிதான்  நினைவுக்கு வருகிறது.

இந்த இராமாயண குரங்குகூட மலையதானே பெயர்த்தது
இந்த அத்வானி குரங்கு எல்லாம் மசூதியா இடிக்குது.

நல்ல யோக்கியர்களாக இருந்தால் கர்நாடக மாநிலத்தில் இந்த ஊழலுக்கு எதிரான ரதயாத்திரையை நடத்தவேண்டும். அப்படி நடத்தினால் அவர்கள் முகமூடி, வேஷம் கலைந்துவிடுமே.
 
-நட்புடன் இளங்கோவன்-

Oct 20, 2011

தமிழா! இனி நீ இந்தியாவுக்கு அந்நியன்!

OCT 20, ஈழத்தமிழர்களின் 35 வருடகால போராட்டத்தை ஒரு சிலநாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த பெருமை நமது வ(பு)ல்லரசு இந்தியாவுக்கே சேரும்.

இலங்கையின் பயங்கரவாதி ராஜபக்சே தலைமையில் ஒரு ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள தமிழர்கள் அனுதினமும் தங்கள் இன்னுயிரை கையில் பிடித்தபடி வாழ்கிறார்கள். பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள். கிரீஸ் மனிதன் என்கிற பெயரில் சிங்கள பயங்கரவாதிகள் தமிழ் பெண்களின் மானத்தை பறிக்கின்றனர்.

தமிழர்கள் மானத்தோடு வாழவேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கில் மாவிரர்கள் (போராளிகள்) தங்கள் இன்னுயிரையும் கொடுத்தனர். அவர்கள் வாழவேண்டிய வயதில் தங்கள் இன்னுயிர்களை ஏன்? கொடுத்தார்கள். அவர்களின் தியாகம் வீண் போய்விட்டதா? அந்த மாவிரர்கள் செய்த தவறுதான் என்ன? தமிழர்கள் மானத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தது தவறா?

இலங்கை தமிழர்களின் தாய் மண். சிங்கள காடையர்கள் அந்த நாட்டின் வந்தேறிகள். வந்தேறிகள் அந்த நாட்டை ஆக்கிரமித்து கொண்டு மண்ணின் மைந்தர்களை அடிமைபோல் நடத்தினார்கள். அதுமட்டுமில்லாது கலவரங்கள் மூலம் அவர்களை கொன்றும் குவித்தார்கள். இந்தியாவில் எப்படி ஹிந்துத்துவா வந்திரிகள் முஸ்லிம்களை கலவரங்கள் மூலம் கொன்று குவிக்கிறார்களோ அதுபோல.

இதை எதிர்த்து தமிழர்கள் அகிம்சை வழியில் பல்லாண்டுகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டங்களை சிங்கள நாசி அரசாங்கமும், அதன் எவலாளிகளும் தங்கள் கால்களில் போட்டு நசுக்கினார்கள். இதை பொறுக்க முடியாமல் தமிழர்கள் ஒரு ஆயுத போராட்டத்தை கட்டி எழுப்பி தமிழர்களுக்கு என்று ஒரு நாடும் அமைத்து சிங்கள பயங்கரவாதிகள் தமிழர்களை கண்டு நடுங்கும் அளவுக்கு சிறப்பாக ஆட்சியையும் செய்தார்கள். அதை கண்டு பெருக்கமுடியாத இந்திய கழுகு சிங்களர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்து அந்த போராட்டத்தை முடிவுக்கும் கொண்டுவந்தது.

ஈழத்தமிழர்கள் கொல்லப்படும்போது தமிழகத்து உறவுகளால் வெறுமனே வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. இது வரலாற்றில் இந்திய தமிழர்கள் மேல் ஒரு கரையாகவே படிந்து விட்டது. தமிழர்கள் என்பது ஒரு இனம்தானே பின்னே ஏன்? நான் இந்தியா தமிழன், இலங்கை தமிழன் என்று பிரித்து சொல்கிறேன் என்றால் அப்படி சொல்லும் அளவுக்குத்தான் இந்திய தமிழகர்கள் நடந்து கொண்டார்கள். அவர்களால் தங்கள் இனமக்கள் கொல்லப்படும்போது பாரிய அளவில் எதிர்ப்புகளை காட்டமுடியவில்லை. தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி தமிழர்களும் அன்று ஒரு முடிவு எடுத்திருக்கவேண்டும். இந்தியா ஈழத்தமிழர்கள் விசயத்தில் சரியான முடிவெடுக்கவில்லை என்றால் தமிழகம் இந்தியாவோடு இல்லை என்பதை அறுதியிட்டு சொல்லியிருக்க வேண்டும் அதை செய்யாததால் வந்த வினையே இத்தனையும்.

தமிழா இனி நீ இந்திய தமிழன் இல்லை. உனக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன் இனமக்களை கொல்ல உறுதுணையாக இருந்த இந்தியாவுடன் உனக்கு எந்த ஓட்டும் இல்லை உறவும் இல்லை. இனிமேல் நீ இந்தியாவுக்கு அந்நியன். தமிழா! உன்மேல் படிந்த கரையை துடைக்கும் பொறுப்பு உனக்குண்டு. அதை நீ மறுக்கவும், மறக்கவும் முடியாது. ஈழத்து தமிழர்கள் தங்கள் விகிதாசாரத்துக்கு அதிகமாக ரத்தம் சிந்திவிட்டனர். அவர்களால் மீண்டும் இந்த போராட்டத்தை வடிவமைக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே. தமிழகத்து தமிழர்களே உங்கள் மீது உள்ள கரையை துடைக்க நீங்கள்தான் இனி ஈழத்து போராட்டத்தை எல்லா முனைகளிலும் முன்னெடுக்க கடமைப்பட்டவர்கள். வெறும் ஜனநாயகத்தை நம்பி, வெற்று அரசியல்வாதிகளின் மாய்மாலங்களில் ஏமாந்து விடாமல் வீரத்தோடும், விவகத்தொடும் செயல்படும் ஒரு மக்கள் இயக்கம் தமிழகத்திலே கட்டியமைக்கப்பட வேண்டும்.

இந்த தமிழர் இயக்கமே பிற்காலத்தில் இலங்கையை கைபற்றபோகும் ஒரு இயக்கமாக வளரவேணும். இதற்குண்டான எண்ணமும், சிந்தனையும் உள்ள இளஞசர்கள், சிந்தனையாளர்கள் ஒன்று திரள வேண்டும். இதுவே நமது ஆவல். ஈழத்தின் சுதந்திரத்திற்க்காக உயிர்த்தியாகம் செய்த மாவிரர்களின் தியாகங்களை மனதில் கொண்டு வீரத்தோடு எழுந்து நிற்ப்போம். தமிழா! ஒன்றுபடு.
-நட்புடன் மலர்விழி-

Oct 18, 2011

"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா" !

"தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கோர் குணமுண்டு "

யார் தமிழன்? "அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்"  சொல்லிலும் செயலிலும் அன்பினையே போற்றுவன் தமிழன்.

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினார் சுட்ட வடு."
மறந்தும் மாற்றாரின் மனதினைத் தைக்கும் சொற்களைக் கூறாதவன் தமிழன்.

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"  --ஔவையார்.

வருணம் நாலென்றும், இவன் புலையனென்றும், தீண்டல் தகாதென்றும் பிதற்றியோன் தமிழனா ?

இரண்டே சாதி, ஈபவன் உயர்ந்தோன், அதை மறுப்பவன் இழிசாதி. நீதி தவறாது நின்று பொருளீட்டி, ஈட்டிய பொருளில் ஈகையும் மேற்கொண்டு சிறக்க வாழ்பவன் தமிழன்!!

பெண்ணை மதியாமல், மகளையும், இல்லத்துமனுசியையும் கூட மனிதம் துளியுமின்றி சாத்திரச் சாட்டைக்கொண்டு சுழற்றியோன் தமிழனா??

" தையலை உயர்வுசெய் " , பெண்மையின் பெருமையுணர்ந்து பேசுபவன் தமிழன்!!

"கற்பெனில் இருவர்க்கும் பொதுவினில் வைப்போம்" ஒருவனுக்கு ஒருத்தியாய்க் காதலில்களித்து வாழ்பவன் தமிழன்!

பண்பாடு மிக்க மொழி தமிழ். பண்பாடு மிக்க இனம் தமிழ். இதை நாம் காண்பதற்கு பூதக்கண்ணாடி தேவையில்லை. காலக்கண்ணாடி போதும். நம் மொழியின் முன்னைய இலக்கியங்களைப் பார்த்தோமானால் இந்த உண்மையை அறியலாம். அவ்வாறு நாம் அறிய முயல்கின்றபோது -நம் உடலெங்கும் ஒரு கூதல் ஓடும். சட்டெனவே மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கும். இதனை நாம் அனைவரும் உணர்வோம்.

இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களின் முன்னர் நமது தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனார் ஒரு கவிதை பகன்றார். இந்தக் கவிதை கற்பனையில் கால்கொண்டு உள்ளத்தில் ஊற்றெடுத்து உணர்ச்சிக் கழிப்பில் பெருக்கெடுத்தது அல்ல. பாரம்பரியம் மிக்க நமது மொழியிலிருந்து பண்பாட்டிலிருந்து ஊற்றெடுத்து சுரந்து உடைப்பெடுத்துப் பெருகிறது. கணியன் பூங்குன்றனாரின் சங்ககாலக் கவிதையைச் சொல்கின்றேன்-கேளுங்கள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிஷன்
இன்னாதென்றாலும் இலமே...
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்ததும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே"
இதன் பொருளும் சொல்லவேண்டும் எனில் இதோ:

எல்லா ஊர்களும் நமது ஊர்களே. எல்லோரும் நமது உறவுகளே. தீமையும் நன்மையும் தாமே கொள்வது அல்லாது பிறர் தர வாராது. அவ்வாறே நோவும் அதன் தீர்வும் தாமே வருவன. சாவும் புதியதல்ல. வாழ்வு இனிமை என்று மகிழ்வதும் இல்லை. விரக்தி வந்துற்றபோது கொடுமை என்று வெறுப்பது இல்லை. நம்மை நாமே தெளிவாக உணர்ந்து கொண்டோ ஆதலினால் மாட்சிமை தங்கிய பெரியோரை வியந்து போற்றப் புகழமாட்டோம். அதேசமயம் சிறியோரை இகழ்தல் என்பன ஒருபோதும் செய்யோம்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு கவி தமிழ் மகனிடமிருந்து வருகின்றதென்றால் அது தமிழ்ச் சமூகத்துப் பண்பாட்டுடன் விழுமியத்தின் வெளிப்பாடு அல்லாது வேறு என்ன?

" பெரியோரை வியத்தல் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே "

என்று சொல்ல வேறு எந்த சமூகத்தால் முடிந்திருந்தது?  நமது பண்பாட்டு விழுமியப் பெருக்கின் பெறுபேறு அல்லவா இது! இதனால் பெருமிதம் அடையவேண்டும். ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தவறுகள் களைய விமர்சனம் தேவைதான். அது எமக்குள். அது ஒருபுறம் இருக்க நாம் அஞ்சத் தேவையில்லை. நம்மை நான் குறைத்து மதிப்பிடவும் தேவை இல்லை. நம் இனம் தலை நிமிர்ந்து வாழ ஆயிரக்கணக்கில் தம்மைக் கொடையாய் கொடுத்தவர்களின் சமூகம் நமது சமூகம். ஓர் உன்னத சமூகத்தின் வயிற்று மைந்தர் நாம். அதனால் பெருமிதப்படுவோம். நெஞ்சு நிமிர்த்தி வீறுநடை போடுவோம்.

பதினாறு நூற்றாண்டுகளின் முன் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்று சொன்ன சிலப்பதிகாரம் எழுந்த தமிழ்ச்சாதி நமது.

"தன்னிலையில் தாழாமை தாழ்ந்த பின் உயிர் வாழாமை" என்று பதினைந்து நூற்றாண்டுகளின் முன் பாடிய வள்ளுவன் வாழ்ந்த தமிழ்ச்சாதி நமது.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று பாடியே பன்னிரண்டு நூற்றாண்டுகள் அழிந்து விட்டன. அதுதான் நமது தமிழ்ச்சாதி.

"மானுடம் வென்றதம்மா" என்று மானுடத்தை வியர்ந்து போற்றிய காலம் கழிந்து பத்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்ச்சாதிதான் அதைச் சாதித்தது.

"மனிதனுக்கு மேலொன்ருமில்லை
மானுடம் போலொரு மெய்மையுமில்லை".

என்று மனிதரைப் போற்றி ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் பாடிய சாதி நம் தமிழ்ச்சாதி

சொல்லுங்கள்-தமிழ்ச்சாதி என்பது தரக்குறைவா?  விதியை தமிழர் நாம் வெல்வோம். தமிழ்ச்சாதி என்று தலை நிமிர்த்தி தோள் உயர்த்தி நெஞ்சு விரித்து நிமிர்வோம் வானம் அளந்த அனைத்தும் அளப்போம்.

"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா"

ரௌத்திரம் பழகு
...யாழினி..

Oct 16, 2011

பாரத் மாதா கீ கீ கீ கீ ஜெய்!



இந்தியாவில் தாமரை விரிந்த மாநிலம் கர்நாடகா. இங்கு தாமரை உடைய முதல் மந்திரி எடியுரப்ப என்ற கெட்டப்பா.  இவர் அடித்ததோ மந்திரி ராஜா அடித்ததைவிட எத்தனையோ கோடிகள் அதிகம்.

தென் இந்தியாவில் பாரதிய ஜனதா முதன் முதலில்  ஆட்சி அமைத்த உடனேயே செய்த சாதனை இது என்றால் இதுவென்றால் மத்தியில் இவர்களின் தலைவர்கள் செய்த சாதனையோ  சவப்பெட்டி ஊழல், கார்கில் ஆயுத ஊழல்ஹவாலா ஊழல் இப்படி இவற்றை எல்லாம்   செய்து  கொண்டே சொன்னார்கள் இந்தியா ஜொலிக்கிறது என்று! இதையெல்லாம் சில  மானம் கேட்ட பத்திரிகைகளும் முழு பக்கத்தில் பணம் வாங்கி கொண்டு விளம்பரம் செய்தார்கள்.

இன்றோ ஹவாலா ஊழலில் குற்றவாளியான இந்த மானம் கேட்ட அத்வானி ஊழலுக்கு எதிராக ஊர்வலம் போகிறார். அதை விளம்பரம் செய்வதற்கு மானம்கெட்ட பத்திரிகைகளுக்கு பிஜேபி உடைய ஆபீசில் வைத்து ஆயிரம் ருபாய் நோட்டுகட்டுகள் விநியோகித்து உள்ளார். இவர் ஊர்வலம் நேராக கர்நாடகாவில் உள்ள பரபன அக்ரஹாரா ஜெயிலில் உள்ள முன்னால் முதல்வர்  எடியூரப்பாவிடம்  ஆசிர்வாதம் வாங்கிவிட்டு செல்லும் என்று இவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள் .

குண்டு வைத்து மக்களை கொல்வார்கள், பாகிஸ்தான் என்பார்கள், குண்டு வைப்பார்கள், நாட்டை முன்னேற்றுவோம்! என்பார்கள். கோடிகோடியாக கொள்ளை அடிப்பார்கள்! இந்தியா ஜொலிக்கிறது! என்பார்கள்.கொள்ளை அடித்தது வெளியில் வரும்போது அது தாழ்த்தக்ஜாதிகாரன் செய்தது என்று சொல்லி தலித்துக்களை கட்சியின் உயர் பதவிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றுவார்கள். குற்றம் செய்தவர் உயர் ஜாதி காரராக இருந்தால் அவருக்காக யாத்திரை தொடங்குவது. இதுதான் இவர்களுடைய லட்சணம் இதற்க்கு வக்காலத்து வாங்குவதற்கு என்றே சில உயர் ஜாதி கூட்டங்கள் இந்தியாவிலும். அமெரிக்காவிலும் உள்ளன. இத்தனை காலம் எத்தனையோ கட்சிகள் நாட்டை ஆண்டு கொள்ளை அடித்ததைவிட இவர்கள் கொள்ளை அடித்தது தான் அதிகம்.

இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள், கலவரங்களில் முதலிடம், ஊழலில் முதலிடம், குண்டு வைப்பில் முதலிடம், ரத யாத்திரையில் முதலிடம் இப்படி கேடு செய்வதில் முதலிடத்தில் இருப்பதால்தான் இவர்கள் தங்களை   உயர் ஜாதி யினர் என்று அழைத்துக்கொள்ள முடிகிறது.
இந்த பிராமண ஜாதி பார்ட்டி நம் நாட்டிற்கு தேவையா?