Oct 15, 2011

BJP கைதி எண்: 10462?

OCT 16, நில ஆக்கிரமிப்பு புகாரில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் பாரதிய ஜனதா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஜாமீன் மறுத்தது. இதையடுத்து எடியூரப்பாவை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை இருந்தது.

போலீசில் கைது செய்யப்படுவதை தவிர்க்க லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் எடியூரப்பா சரணடைந்தார். சரணடைந்த அவரை ஒரு வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட கைதி எண்: 10462.

சிந்திக்கவும்: கிழிந்தது லம்பாடி லுங்கி என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஹிந்துத்துவா சங்கபரிவாரின் அரசியல் முகமான பாரதிய ஜனதா ஊழலை ஒழிக்க போவதாக இந்தியா  முழுவதும் தம்பட்டம் அடித்து  இந்தியாவிலேயே தாங்கள்தான் கரைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்று பொய்களை புனைந்து வந்தது. கார்க்கில் போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல் செய்த பெரிச்சாளிகள்தான் இவர்கள் என்பது நாடறிந்த உண்மையே. இருந்தாலும் இயல்பாக மக்களுக்கு இருக்கும் மறதியை நம்பியே இவர்கள் பிழைப்பு ஓடுகிறது.

இந்நிலையில் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய பத்திரிக்கைகளோ தங்கள் பணியை மறந்து அல்லது ஹிந்துத்துவா ஆதரவு கொண்டு செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன. பாச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் முகமூடியான பாரதிய ஜனதா கட்சியின் ஊழல்களை திட்டமிட்டு மறைகின்றன. எடியூரப்பா பற்றி எழுதும் போது பாரதிய ஜனதாகட்சியின் முன்னாள் முதல்வர் என்று எழுதாமல் எடியூரப்பா என்று மட்டும் எழுதி, இவர் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பல பதவிகள் வகித்தவர் என்ற செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றன.  இதுதான் பத்திரிகை தருமமோ.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லுபவர்களும், கண்டதுக்கும் கவர்ஸ்டோரி போடும் பத்திரிக்கைகளும் ஹிந்துத்துவா சம்மந்தப்படும் செய்திகள் வரும் போது அதை பூசி மொழுகி  மறைக்கப்  பார்கின்றனர் அல்லது எங்கோ ஒரு ஓரத்தில் அடையாளம் தெரியாத சிலர், அல்லது நம்பப்படுகிறது என்று செய்தி போடுகின்றன. இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது ஹிந்துத்துவா இயக்கங்கள்தான் என்ற உண்மை முதல், சிலநாட்களுக்கு முன் ஸ்ரீராம் சேனா நடத்திய வெறித்தாக்குதல் வரை இவைகளைப் பற்றி  தலையங்கமாக, கவர்ஸ்டோரியாக செய்திகளை  வெளியிட பெரும்பான்மை பத்திரிக்கைகளுக்கு ஏனோ மனம்வரவில்லை.

இதே நேரம் சிறுபான்மை சமூகத்தினர் பற்றி எழுதும்போது உண்மைக்கு மாறாக தங்கள் கற்பனை திறனை எல்லாம் ஒன்றுசேர்த்து தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அந்த மதத்தின் பெயரை கொண்டு கற்பனை குதிரைகளை பறக்க விடுகின்றன. இது என்ன நியாயம்! தவறு யார்? செய்தாலும் தவறுதான், பயங்கரவாததிற்கு மதமில்லை, என்பதை புரிந்து பத்திரிகை தர்மம் என்பது எல்லாவிதமான அதர்மங்களுக்கும் எதிரான போர் என்பதை சம்மந்தபட்டவர்கள் உணரவேண்டும். அதுபோல் தங்கள் சார்ந்து உள்ள மதத்தினர் செய்யும் தீவிரவாதம் குறித்து மவுனம் காப்பது ஒருவகையில் அந்த தீவிரவாததிற்கு துணைபோவதே ஆகும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் நாடு நலம்பெறும். இல்லையேல் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இன்மை ஏற்ப்படும் போது விளைவுகள் விபரீதமாக போகும். சம்மந்தப்பட்டவர்கள் நடுநிலையோடு புரிந்தால் சரி.

-மலர்விழி-

Oct 13, 2011

நல்லவனா இருந்தா ஓட்டுப்போடு! இல்லேன்னா 49 'O ' போடு!

OCT 13, " தேர்தல் என்பது தன்னைத்தானே விலைப்பேசி விற்க மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு" ,இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது இந்தியாவின் தேர்தல்கள்.

ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர்,  அடுப்பு, தொலைகாட்சி பெட்டி,  அரிசி, குவார்ட்டர், அம்பது, நூறு, ஆயிரம், பிரியாணி...... விலைப்பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். இப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருப்பதால் உள்ளாட்சி அமைப்புகள் குறித்த அறிதல் அவசியமாகின்றது.

தமிழகத்தில்,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சென்னை, கோவை, திருச்சி,  மதுரை,  திருநெல்வேலி,  ஈரோடு, சேலம், வேலூர்,  திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து, 618 ஊராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம், 1 லட்சத்து, 30 ஆயிரத்து, 962 பதவிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் என்பது மற்றைய பதவிகளைப் போலல்லாமல் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய பதவி ஆகும், அரசியலமைப்பின் அடிப்படை அலகும் ஆகும்." பிரசிடென்ட் " என ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக அழைக்கப்படும் தகுதி பெற்றவர் கிராமசபைத் தலைவரே ஆவார்.

கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி அவற்றை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும் அரசியல் வியாபாரம் கொடிகட்டிப் பறப்பது ஆரோக்கியமான விடயமே அல்ல. உள்ளாட்சித் தலைவர் பதவிகள் ஏலம் விடப்படுவதாகவும், குதிரை பேரங்கள் நடப்பதாகவும் வரும் செய்திகள் நாம் அறிந்ததே. தேர்தல் தினத்தை விடுமுறை தினமாகக் கொண்டாடுவதும், அல்லது விலை போவதுமான நடவடிக்கைகளை இனியும் தொடர்வோமானால் அதன் விளைவுகள் மிகவும் கொடியதாகவே இருக்கும் என்பதனை உணர்வோம்.

மாப்பு;  கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.. அவன் யாருக்காக கொடுத்தான், ஒருத்தருக்காகொடுத்தான்... இல்லை ஊருக்காக கொடுத்தான் ...
ஆப்பு;  சும்மாவா குடுத்தான்?  உன் ஓட்டுக்காக குடுத்தான்.
மாப்பு;  அட ஆமா! வாங்க வேணாங்கறியா?
ஆப்பு;  வாங்கு மாப்பு வாங்கு, உன் வூட்டு காசுதான ...
மாப்பு;  இப்ப என்னாங்கற?
ஆப்பு;  100 குழி நிலம் வெச்சிருந்தா?
மாப்பு;  விவசாயி
ஆப்பு;  100 ஏக்கர் நிலம் வெச்சிருந்தா?
மாப்பு;  பண்ணையாரு
ஆப்பு;  ஊருக்கு 100 ஏக்கரா வெச்சிருந்தா ?
மாப்பு;  யாரு?
ஆப்பு;  அரசியல்வாதி! இன்னும் சொல்றேன் கேளு மாப்பு,
ஒருத்தனக்கொன்னவன்...
மாப்பு;  கொலைகாரன்
ஆப்பு;  10 பேரக்கொன்னா?
மாப்பு;  தாதா
ஆப்பு;  100 பேரக்கொன்னா?
மாப்பு;  அட ஆமா, அரசியல்வாதி!
ஆப்பு;  10 ரூவா திருடினா ..
மாப்பு;  திருடன்
ஆப்பு;  10000 கோடி திருடினா?
மாப்பு;  பழுத்த அரசியல்வாதி!!
ஆப்பு;  10 நிமிஷம் ஓய்வெடுத்தா ..
மாப்பு;  உழைச்ச களைப்பு ..உழைப்பாளி
ஆப்பு;  மாசத்துல 4 வாரம் ரூம் போட்டு ரெஸ்ட் எடுத்தா?
மாப்பு;  சந்தேகமேயில்ல ..சத்தியமா அரசியல்வாதி !!!
ஆப்பு;  உனக்கு 100 கோடி கொள்ளைக்காரன் வேணுமா, 1000 கோடி கொள்ளைக்காரன் வேணுமா?
மாப்பு;  நரிக்கி நாட்டாமை குடுத்தா கெடைக்கி நாலு ஆடு கேட்ட கதையால்ல இருக்கு, என்ன செய்ய நான் ?
ஆப்பு;  ஓப்போடு!
மாப்பு;  என்னங்கறே ?
ஆப்பு;  நல்லவன் கெடைச்சா ஓட்டுப்போடு, இல்லேன்னா 49 'O ' போடு, நாட்டை அவன் 'ஆ' போடுமுன்ன .. நீ 'ஒ' போடு ....

நம்மை நாமே ஆண்டுகொள்வதும் ஆப்பினைத் தேடிப்போய் அமர்வதும் நம் கையில். அழியாத மை நம் விரலில் வைக்கப்படட்டும், முகத்தில் அல்ல.
ரௌத்திரம் பழகு
...யாழினி...

அன்னா ஹசாரே தாக்கப்படுவாரா?

OCT 14, சிலவருடங்களுக்கு முன் தஸ்லீமா நஷ்ரீன், சல்மான் ருஸ்டி, போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்கியது ஹிந்துத்துவா பயங்கரவாத கூட்டம்.

இந்த ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டம் போட்ட பிச்சையை வாங்கிக்கொண்டு பார்ப்பன பத்திரிக்கைகள் பேச்சு சுதந்திரத்தை முஸ்லிம்கள் பறிக்கிறார்கள் என்று கூப்பாடு போட்டார்கள்.

இன்று ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கூட்டம் பேச்சு சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது. கஷ்மீர் விசயத்திலே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தனது கருத்தை சொன்ன காரணத்திற்க்காக ஸ்ரீராம் சேனா என்கிற வானர கூட்டத்தால் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டார்.

அன்று தஸ்லீமா, ருஸ்டி, போன்றவர்களை எதிர்த்தவர்களை தீவிரவாதிகள், தேசதுரோகிகள் என்று எழுதினார்கள். இன்றோ உண்மையான தேசதுரோகிகளை, ஹிந்துத்துவா மத தீவிரவாதிகளை, பற்றி எழுதவும், பேசவும் மறுக்கிறார்கள். அன்று பேச்சு சுதந்திரம் பறிபோவதாக வாய் கிழிய பேசியவர்கள் எல்லோரும் இன்று மவுனம் காக்கிறார்கள். இவர்களை தடுப்பது இவர்கள் சார்ந்திருக்கும் ஹிந்து ராஷ்டிர சிந்தனையும் மற்றும் வர்ணாசிரம கொள்கையே.

அன்று தேசமே ஒன்று சேர்ந்து மண்ணின் மைந்தர்களாகிய ஹிந்துக்களும் (ஹிந்து தீவிரவாதிகளான உயர்ஜாதியினர் தவிர்த்து ) முஸ்லிம்களும், கிறித்தவர்களும், வெள்ளையர்களை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள். சுதந்திர போராட்ட நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் கூட்டம் வெள்ளையர்களுக்கு சாதகமாக நடந்து சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்தார்கள்.

கடைசியில் இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் சதி வலையில் விழுந்தார் மகாத்மா! நாடும் துண்டாடப்பட்டது. பின்னர் இவர்கள் இலட்சிய இந்தியா உருவானதும் மாகாத்மாவை கொன்றார்கள். பாகிஸ்தான் என்ற நாடு உருவாக காரணமாக அமைந்தார்கள். நம்முடைய சொந்த நாட்டு சகோதரர்களையே நமக்கு எதிரியும் ஆக்கினார்கள். அதேப்போல் கஷ்மீர் மக்களையும் நமக்கு எதிரி ஆக்கினார்கள். விளைவு இதை வைத்து நம் நாட்டையே ஆள்கிறார்கள் இந்தத்தீவிரவாதிகள்.

எங்கு பிரிந்தவர்கள் ஒன்றுபட்டு விடுவார்களோ! மீண்டும் நாம் கைபர் போலன் கணவாய் வழியாக போகவேண்டி வந்துவிடுமோ! என்ற பயத்தினால் அதைப்பற்றி பேசுவர்களை கொல்லத்துடிக்கிறார்கள். இது மகாத்மா காந்தியில் இருந்து தொடராக நடந்து வருகிறது. இன்று அதற்கு இரையாகி இருப்பவர் பிரபல மனித உரிமை போராளி பிரசாந்த் பூசன். நாளை காந்தியவாதி ஹசாரே! இதுதான் நடக்கும்.

ஆச்சரியப்பட வேண்டாம் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக கோத்ரா ரயிலில் பயணம் செய்த தங்கள் இயக்கத்து தொண்டர்களையே எரித்து கொன்றவர்கள்தானே இவர்கள். காந்தியை கொன்ற இவர்கள் காந்தியவாதி அன்னா ஹசாராவையும் கொல்லத் தயங்க மாட்டார்கள். அரசு அன்னா ஹசாறேக்கு சிறப்பு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இல்லையேல் அவரை கொன்று அதைவைத்து மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று ஹிந்துத்துவா கூட்டம் சதி செய்யும். அதன் முன்முயர்ச்சிதான் பிரசாந்த் பூசன் கொலை முயற்சி.

இனியாவது ஹசாரே உண்மையை உணர்ந்து இந்த உயர் ஜாதி ஹிந்துத்துவா தீவிரவாதிகளோடு உள்ள உறவை முறித்துக் கொள்வாரா? ஏற்கனவே இவர்களால் முறிந்து கிடக்கும் நம் அண்டை நாட்டு சகோதரர்களுடனான உறவை மேன்படுத்தவும், எல்லா மண்ணின் மைந்தர்களையும் ஒருகிணைத்து ஒரு கூட்டாமையை உருவாக்க அன்னா ஹசாரே முயற்ச்சித்தால் நாடு சுவிட்சம் பெரும்.

நாம் ஒன்றிணைந்து, நம் அண்டை நாட்டவர்கள் இங்கு வர தொடங்கி விட்டாலே போதும் இந்த வந்தேறி ஹிந்துத்வா தீவிரவாதிகள் ஓடி விடுவார்கள்.

மீண்டும் நினைவு படுத்துகிறோம். நல்லவர்கள் ஒரு நாளும் ஹிந்து தீவிரவாதிகளுடன் சேரமாட்டார்கள்

Oct 12, 2011

இந்தியாவை ஆள்வது ஹிந்துத்துவாவா? ஜனநாயகமா?

OCT 13, மூத்த வழக்கறிஞரும், அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் உள்ள அவரது அறையில் வைத்து 3 ஹிந்துத்துவா ஹிந்துத்துவா தீவிரவாதிகளால்  தாக்கப்பட்டார்.

ஸ்ரீராம் சேனா  என்ற ஹிந்துத்துவா  பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளால்  இன்று அவர்   கடுமையாகத் தாக்கப்பட்டார்.  பிரசாந்த் பூஷன் மீதான தாக்குதலுக்கு காந்தியவாதி அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்:  ஸ்ரீராம் சேனா இயக்கம் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைவர் 47 வயதான முத்தாலிக். இவர்  கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தார். தனது 13 வது வயதில்  ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

2004ம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.  2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டு வெளியேறினார். பின்னர் கர்நாடக மாநில ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான சிவசேனாவின்  தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார்.  பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மங்களூரில் பள்ளிவாசலில் பன்றி இறைச்சியை வீசி அதன் மூலம் கலவரத்தை உருவாக்கியதில் இவருடைய அமைப்பும் ஒன்று.

இந்நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா. இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டினார்.

இவரது ஹிந்துத்துவா சதி திட்டங்களை தெஹல்கா பத்திரிக்கையும்,  ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தின.  பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தாலிக்கும் அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியது. இவரது ஸ்ரீராம் சேனா அமைப்புதான் காதலர் தினத்தில் காதலர்களை துரத்தி பிடித்து வன்முறை செய்தது.

இத்தனை கோரதாண்டவங்களை ஆடிய ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள்தான் இன்று மூத்த வழக்கறிஞரும், அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷனை கடுமையாக தாக்கியது. ஹிந்துத்துவா வெறியர்கள் நடத்திய கோரதாண்டவத்தை பார்பன பத்திரிக்கைகள் மூடி மறைகின்றன. ஹிந்துத்துவா இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் தீய சக்தி என்பதை மக்கள் உணரவேண்டும் . இந்தியாவை சுடுகாடாக்க ஹிந்துத்துவா உதவுமே தவிர இவர்களால் இந்தியாவுக்கு எந்த நன்மையையும் இல்லை என்பதை மக்கள் புரிந்து விழிப்படைய வேண்டும்.

Oct 11, 2011

ஸ்டெர்லைட் ஆலையும்! தமிழர்களின் கோழைத்தனமும்!

OCT 12, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள், கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் நிர்வாகம் அப்பீல் செய்தது.  ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியம் இல்லை. என்று டெல்லி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

சிந்திக்கவும்: ’’மராட்டிய மாநிலத்தில் இருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை இளிச்சவாயர்கள் ( தமிழர்கள்) வாழும் தமிழகத்துக்கு எப்படி வந்தது என்பதை பார்ப்போம். தங்கள் வாழ்விடத்தை, ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கை உணர்வுடன் போராடும் மக்களே ஒரு நாட்டின் உண்மையான குடிமைக்கள் என்று சொல்லலாம். இயற்க்கைக்கு எதிரான இதுபோன்ற பயங்கரமான நாசங்களை உண்டாக்கும், சுற்றுப்புற சூழ்நிலைகளை கெடுக்கும் நாசகார நிறுவனங்களுக்கு எதிராக தமிழக மக்களின் போராட்டம் மராட்டிய மக்களோடு ஒப்பிடும்போது வீரியம் அற்றதாகவே தோன்றுகிறது.

1990-களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்டது ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை. .மராட்டிய மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற் சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். அதே மராட்டிய மக்கள், மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு மராட்டிய மாநில அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்து இருந்த உரிமத்தை ரத்து செய்தது. மேலும் குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல் போனது. இந்தியாவில் எங்கும் கால் பதிக்க முடியாத அவர்களுக்கு இளிச்சவாயர்கள் வாழும் மாநிலமான தமிழகத்தில் இலகுவாக கால்பதிக்க முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவான தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அதிகம் வாழும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட உயர் நீதிமன்றம் கொடுத்த தடையை மறுத்து இந்திய உச்ச நீதிமன்ற களவாணிகள் அனுமதி கொடுத்திருப்பது நீதித்துறை ஆளும்வர்க்கங்களின் கைகளில் என்பது மீண்டும் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்ச நீதிமன்றமே இப்படி என்றால் மக்கள் யாரிடம் முறையிடுவார்கள். இதை தமிழக மக்களின் கையாலாகாத கோழைத்தனம் என்றே சொல்லலாம். காடுகள் அதிகம் உள்ள ஒரிசா மாநிலத்தில் கூட இந்த ஆலைக்கு அனுமதி கிடைக்க வில்லை. மக்கள் நெருக்கமாக வாழும் தூத்துக்குடி நகரத்தில் இதற்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் கையாலாகாத தனத்தை நிருபிக்கும் மற்றொரு சான்று.

ஈழத்திலே தன் ரத்த பந்தங்கள் கொல்லப்படும்போது இப்படித்தான் உணர்வில்லா பிண்டங்களாக வேடிக்கை பார்த்தார்கள். அதை பக்கத்து நாட்டு பிரச்சனை என்று சொல்லி தேசபக்தி முகமூடி அணிந்து பதுங்கி கொண்டார்கள். குறைந்த பட்சம் தமிழக மீனவர்களை சிங்கள தீவிரவாத ராணுவத்தினர் சுட்டு கொள்ளும் போதாவது கிளர்ந்தெழுவார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இப்போது ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம் என்று கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தியோடு வாழ்கிறார்கள். மராட்டிய மாநிலத்து கிராமத்து மக்களும், விவசாயிகளும் இதுபோன்ற தீய சக்திகளுக்கு எதிராக போராடி வெற்றி கொள்ள முடிந்திருகிறது. ஆனால் படித்தவர்கள் அதிகம் வாழும் தமிழர்களால் இதை சாதிக்க முடியவில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்திலே காட்டு வேட்டை என்ற பெயரிலே பழங்குடி மக்களை கொன்று குவிக்கும் இந்திய பயங்கரவாத ராணுவத்தை எதிர்த்து அந்த பழங்குடி மக்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்கள். அவர்கள் இயற்கையான தங்கள் வாழ்விடங்களை பாதுகாக்க போராடும் இந்திய நாட்டின் சிறந்த குடிமக்கள். நாமோ கோழைகள், பூனையைகூட ஒரு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினால் ஒருகட்டத்தில் புலியை போல சீறிப்பாயும் தமிழர்களோ தங்களின் வரலாற்றை மறந்து கோழைகளாக சினிமாகாரர்களின் வழித்தடங்களை பின்பற்றி சுகபோக வாழ்க்கை வாழ ஆசைபடுகிறார்கள். தமிழா நீ என்ன கோழையா! பதில் சொல்! என்று தொடங்கும் தீமைகளுக்கேதிரான உன்போராட்டம்.

நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.