Oct 8, 2011

ஆணாதிக்க வெறியும் அவதிப்படும் பெண்களும்!

OCT 09, பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டம், தகானியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிரா யாதவ்,30. இவரின் மனைவி ரினாதேவி, 25. கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் மனைவி வேறொருவருடன் தகாத உறவு வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி, கடந்த 5ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியின் முடியைப் பிடித்து இழுத்து, யாதவ் சண்டையிட்டார்.

மனைவியும் பதிலுக்கு பேசினார். ஆத்திரம் அடைந்த யாதவ், அருகில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். துண்டான தலையை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார். வெட்டப்பட்ட தலையுடன், ஊர்வலமாகச் சென்ற அவரைப் பற்றி, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், ஹிரா யாதவை கைது செய்தனர்.

சிந்திக்கவும்: கற்பொழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பது போல ஒரு மாயயை ஆணாதிக்க வெறியர்கள் சித்தரித் துள்ளனர். கற்பொழுக்கம் என்பது ஆண்களுக்கும்தான் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். ஹிந்துத்துவா மனுதர்மம் இவர்களுக்கு போதித்தது அப்படித்தான் பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள், கணவனே கண்கண்ட தெய்வம் இப்படி சொல்லி பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளார்கள்.

காலையில் எழுந்ததும் பெண்கள் தங்கள் கணவனின் காலை தொட்டு கும்பிடுவது முதல் இது தொடங்குகிறது. மேலே செய்தியில் சொல்லப்பட்ட தகாத உறவு ஆண்களுக்கு இருந்தால் இதை இவர்கள் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். இதை சம்மந்த பட்ட ஆண்களின் தாய்மார்கள் தாங்களும் ஒரு பெண் என்பதை மறந்து என் மகனுக்கு என்ன அவன் ஆம்பள சிங்கம்! சேத்தை கண்டால் மிதிப்பான்! தண்ணியை கண்டால் கழுவுவான்! என்று ரொம்பவும் பெருமையாக வேறு சொல்லி கொள்வார்கள்.

ஆண்கள் குடிக்கலாம், கற்பொழுக்கம் தவறி நடக்கலாம், கட்டிய மனைவியை வைத்து கொண்டு வைப்பாட்டிகள், சின்ன வீடுகள் வைத்துக் கொள்ளலாம் இதுவெல்லாம் ஆண்வர்க்கம் பெருமைப்படும் விஷயங்கள். அதே ஒரு பெண் அறியாமையில், தனது இயலாமையில், தவறிழைத்தால் அதற்க்கு இதுபோல் தலையை வெட்டி கோரதாண்டவம் புரிவார்கள். இதை மற்ற ஆண்களும் பெருமையாக பேசிகொள்வார்கள் அவன் வீரன் பெண்டாட்டி தப்பு பண்ணினாள் வெட்டி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போயிட்டான் என்று.

ஆண்கள் காதலிப்பார்கள் அது தப்பில்லை அதை வைத்து ஆட்டோ கிராப் படம் எல்லாம் எடுப்பார்கள் ஒரு காதல் இல்லை! வாழ்க்கையில் பலகாதலை தாண்டி வருவார்கள். அதே நேரம் பெண்கள் படிக்க கூடாது, அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் என்று ஆயிரம் கட்டுபாடுகள். பெண்பிள்ளைகளை நம்பாமல் அவர்களை தொடர்ந்து உளரீதியாக நெருக்கடிகளை கொடுப்பது இப்படியாக அவர்களுக்கெதிரான வன்முறை அவர்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். ஒழுக்கம், கட்டுப்பாடு என்பது நாணயத்தின் இரண்டு பகுதிகள்! ஆண்கள், பெண்கள் இருவரும் அதை சமமாக பாவிக்க வேண்டும். அதைவிட்டு அதை பெண்களுக்கு மட்டும் என்று திணிக்கும் நிலை மாறவேண்டும்.

*நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்*

Oct 6, 2011

தமிழர்களின் விடியல்! விடிவெள்ளி!! இவர்கள்தான்!!!

OCT 07, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிந்திக்கவும்: தமிழகத்தை கொள்ளையடித்து குடும்ப அரசியல் நடத்தி, ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படும் போது அதை வேடிக்கை பார்த்து கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கொண்டிருந்த கருணாநிதி இப்பொது அரசியல் அனாதையாக தவிக்கிறார். கடந்த தேர்தலில் தனது ஆஸ்த்தான கொள்கைபரப்பு  செயலாளர் குஷ்புவை நம்பி தேர்தல் களம் இறங்கி பெரும் தோல்வியை சந்தித்தார். இப்பொது வேறு வழியில்லாமல் பேரறிவாளன், முருகன், சாந்தன் விஷயத்தை கையில் எடுத்து பொழுது போகாமல் அறிக்கை போர் நடத்துகிறார்.

கடந்த தேர்தலில் பட்டது போதாது என்று இந்த பஞ்சாயத்து தேர்தலிலும் தனது ஆஸ்தான கொள்கைபரப்பு செயலாளர் குஷ்புவை நம்பி தேர்தல் களம் காணுகிறார். எங்கு திரும்பினாலும் பத்திரிக்கைகளில் குஷ்பு திமுக விற்கு பிரச்சாரம் செய்யும் படங்களும் முழக்கங்களும்தான். சிந்தனையாளர்களும், தமிழ் அறிஞசர்களும், நடமாடும் பல்கலைக் இப்பொது பிரச்சாரம் செய்ய கூட  நாதியில்லாமல் நடிகை குஷ்புவை  நம்பி நிற்கிறது. கழகங்களும் இருந்த திமுகவில்

மறுபுறம் ஜெயலலிதா இவர் பார்பனர் என்கிற ஆணவம், உயர்குலம் என்ற ஹிந்துத்துவா குடுத்த மமதை, பார்பன ஹிந்துத்துவா சித்தாந்தவாதி சோ ராமசாமியின் கைப்பாவையாக செயல்படுபவர். கருணாநிதிக்கு மாற்று இவர் என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இவர் ஒருசார்பு சிந்தனை படைத்த ஹிந்துத்துவா சித்தாந்தவாதி என்பதை மக்கள் நீண்டகாலம் ஆகியதால் மறந்துவிட்டார்கள் என்று சொல்வதை விட மக்களுக்கு வழியில்லை என்றே சொல்லலாம். இவரது ஆட்சி துக்ளக் சோ ராமசாமியின் ஆட்சியாகவே மாறிவிட்டது.

இந்த பழைய பெரிச்சாளிகளுக்கு மாற்றாக சினிமாவில் இந்தியாவின் எதிரிகளை அழித்து இந்தியாவை பாதுகாக்கும் தேசபக்தி நாயகன் கேப்டன் விஜயகாந்தை நம்பி கொஞ்ச மக்கள் வாக்களித்தார்கள். இவரது வீரவசனங்கள் எல்லாம் படத்தில் மட்டும்தான் நிஜவாழ்க்கையில் கிடையாது என்பது அவர் ஈழமக்கள் விசயத்தில் மவுனம் காத்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.  இவர் தேர்தலுக்கு பின்னால் சிறந்த எதிர்கட்சி தலைவராக செயல்படுவார் என்று பார்த்தால் அம்மையாரின் காலடியில் அடங்கி போய்விட்டார்.

தமிழா! இவர்களை நம்பி மீண்டும் மீண்டும் இந்த அரசியல் சாக்கடையில் விழாதே! இந்த போலி அரசியல் வாதிகளை விட்டு ஒழி. செகுவார, திப்புசுல்தான், பகத்சிங் இப்படி அநீதிகளுக்கு எதிராக போராடிய தலைவர்களின் வாழ்கையை படி. கரும்புலி வீரர்களின் வீரத்தை நினைவில் கொள். இலஞசர்களே எழுச்சி கொள்ளுங்கள். ஒன்று சேருங்கள்! தமிழினம் காட்க்க தனித்தமிழகம் அமைப்போம். தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு அதுதான் தமிழ்நாடு தொடங்கி ஈழம் வரை. அதன் தலைநகர்தான் மதுரை.
-நட்புடன் மாவீரன்-

Oct 4, 2011

இந்தியா தமிழனின் தாய்நாடா? அண்டை நாடா?

OCT 05, இந்தியா: 2011 ஜூலையில், இந்தியா இராணுவத்தின் போர் கப்பல் ஐராவதி வியட்நாம் போகும் போது சீனாவின் கடல் எல்லையை கடந்தது, அப்போது சீனா இராணுவத்தால் இனி எங்கள் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைகூடாது என்று அச்சுறுத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின் வியட்நாம் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கடலுக்கு எல்லைகள் கிடையாது யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று பேசினார். இதே கிருஷ்ணா தமிழக மீனவர்கள் 550 பேரை இலங்கை ராணுவம் கொன்றப் போது பாராளுமன்றத்தில் பேசினார் "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடத்தானேச் செய்வார்கள் என்று" இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் இவர்களுக்கு தமிழர்கள் என்றால் கிள்ளுகீரைகள் என்று.

தமிழர்கள் இனியும் பொருத்துகொண்டிருந்தால் இந்த குள்ளநரிகள் நம் தமிழ் இனத்தையே அழித்துவிடுவார்கள். இந்தியாவின் துரோகத்தை மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். ஏதோ காசு பணம் என்றால் கூட போனால் போகுது என்று பொறுமை காக்கலாம். ஆனால் அங்கே அப்பாவி தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்படுகிறது. இலங்கையில் ஈழத்தமிலர்களையும், தமிழக கடலோர மீனவர்களையும் அனாதைகள் போல் இலங்கை அரசு கொன்றுகுவித்து வருகிறது. அதை சிறிதும் சட்டை செய்யாமல், கண்டு கொள்ளாமல் இருக்கிறது இந்திய அரசு.

*உலகத்தில் எந்த இன மக்கள் செத்தாலும் இந்தியா வருத்தம், கண்டனம் தெரிவிக்கும்* ஆனால் தமிழர்கள் செத்தால் மட்டும் கவலைபடாது.* இந்தியா தமிழரின் தாய்நாடாக இருக்கவே முடியாது. இந்தியா என்ற எண்ணம் நீர்த்து போய்விட்டது. இந்தியா என்பது தமிழனின் தாய் நாடு அல்ல, தாய் நாடாக இருக்க முடியாது, இந்தியா தமிழனின் ஒரு அண்டை நாடு என்பதை தமிழன் உணர வேண்டும்,

இன்று இந்தியா தமிழனுக்கு துரோகம் செய்யும் நாடாக இருக்கிறது. நம் வரி பணத்தில் உண்டு வாழும் இந்த அரவேக்காடு ஹிந்திக்காரனிடம் தமிழன் அடிமை போல் மண்டியிட்டு தமிழ் மக்களை காக்க மன்றாடியும் இந்தியா சிறிதும் சட்டைசெய்யவில்லை, இந்தியா சொல்கிறது..........

1. அண்டை நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது:

சரிதான்! ஆனால் ஈழத்தமிழர்களின் 35 வருட போராட்டத்தை அழிக்க இலங்கைக்கு பணம், போர் கருவிகள் எல்லாம் கொடுத்து உதவியதை என்னவென்று சொல்வது. இந்தியாவின் துரோகத்தை தமிழ்மக்களிடத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் இலங்கைக்கு செய்த ஆயுத உதவிகளில் தமிழரின் வரிபணம் அடங்கி உள்ளது. தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களை கொல்லும் இந்தியா. யார் வீட்டு பணத்தை யார் வீட்டுக்கு கொடுப்பது

2. இலங்கை தமிழர்களுக்கு போராடுபவர்கள் இந்திய இறையாண் மைக்கு எதிரானவர்கள்:

இலங்கைக்கு உதவினா நாட்டுபற்று! தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் தேசதுரோகம். அப்படிப்பட்ட ஒரு தேசம் தமிழர்களுக்கு தேவையில்லை. அப்படிப்பட்ட ஒரு போலி தேசபக்தியும் தேசமும் நமக்கு வேண்டாம்.

இலங்கை கடற்படை தமிழர்களை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொல்லுகிறான். அதை பற்றி ஒரு சிறு கண்டனம் கூட சொல்ல இந்தியாவுக்கு நேரம் இல்லை. தமிழன் போலி தேசபக்தியில் மூழ்கி பாரத மாதாகீ ஜே என்று முழங்குவதால் தமிழக மீனவர்கள் கேட்க்க நாதியின்றி அனாதைகள் போல் செத்து மடிகிறார்கள். தமிழக மக்களை காபாற்ற தமிழ்நாடுஅரசு இந்திய அரசாங்கத்தின் காலை நக்கிக்கொண்டுயிருக்கிறது.

ஏன் இந்த இழிநிலை?. இந்தியாவும் இலங்கையும் குலாவிகொள்ள தமிழர்கள் (தமிழ் மீனவர்கள், இலங்கை தமிழர்கள்) என்ன பலிஆடா!!!தமிழர்கள்தான் தன்னை இந்தியர்கள் என்று உணர்ச்சி பொங்க சொல்லுகிறார்களே தவிர இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பார்க்கவில்லை ஏன் மனிதர்களாய் கூட பார்க்கவில்லை. இந்திய ஆதிக்கதில் தமிழ்நாடு இருக்கும்வரை இந்த நிலைதான். தமிழ்நாடு இந்திய ஆதிக்கத்தில் இருந்துவிடுபட்டு தனிநாடாக வேண்டும்.
- புகழ்-

தோழர் புகழ் எழுதிய கருத்துக்கள் ஒருபதிவாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.