Oct 1, 2011

குடுமி பிடி சண்டையில் பி ஜே பி குடுமி அறுபட்ட மோடி !?

அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை சொல்லி பிஜேபி-க்குள் உட்கட்சி பூசல் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

வெள்ளிக் கிழமை டெல்லியில் நடந்த தேசிய நிர்வாக சமிதி கூட்டத்தை மோடியும், எடியூரப்பாவும் புறக்கணித்தனர். வெள்ளியன்று நடந்த தேசிய நிர்வாக சமிதி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவிக்க பிஜேபி-யில் உள்ள சில தலைவர்கள் முடிவு செய்து வைத்திருந்தனர்.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியும், ஊழல் வழக்கில் சிக்கிய தன்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடியூரப்பாவும் அதில் கலந்து கொள்ளவில்லை. குஜராத்தில் முஸ்லீம்களை கொன்றொழித்தும், முஸ்லிம் பெண்களை கற்பழித்தும், குழந்தைகளை பெட்ரோல் குடிக்க வைத்து எரித்து கொலை செய்தும் நடந்த கொடூரமான கலவரங்களுக்கு தலைமை வகித்த மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் ஆசி மற்றும் ஆதரவோடு பிரதமர் போட்டிக்குள் நுழைந்தார்.

 அதற்க்கு முன்னோடியாக “ஆடு நனைந்தது என்று ஓநாய் அழுத கதையாக” அமைதிக்காகவும் மதநல்லிணக்கத்திற்காகவும் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அத்வானியோ இவருக்கு “செக்” வைக்கும் விதமாக ஊழலுக்கு எதிரான தனது ரத யாத்திரையை அமைத்தார். இதனால் அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டது.

 ஆர்.எஸ்.எஸ் யை அமைதிபடுத்தும் நோக்கில் “பிரதமர் போட்டிக்கு நான் இல்லை” என்று அத்வானி அறிவித்தாலும், மோடிக்கு எரிச்சலூட்டும் விதமாக பீகாரில் வைத்து ரத யாத்திரையை ஆரம்பித்து, அவரின் எதிரியான நிதீஷ் குமாரை வைத்து துவக்க விழா நடத்துவது என்று தீர்மானித்து தான் வேட்பாளர் களத்தில் உள்ளதை தெரிவித்துவிட்டார். இரண்டு மூத்த தலைவர்களின் குடுமி சண்டை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குள்ளும், பிஜேபி கட்சியினர் இடையேயும் பெரும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Sep 27, 2011

நரேந்திர கேடியின் ஈனச்செயல் !?

அஹ்மதாபாத் : கடந்த செப்டம்பர் 6 முதல் குஜராத்தில் பிஜேபி நடத்திவரும் பல நாடகங்கள் ரத (ரத்த) யாத்திரையில் முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது.

யாத்திரை அஹ்மதாபாத்தின் தெற்குப் பகுதியிலுள்ள வஸ்த்றல் என்னும் பகுதியில் நடைபெற உள்ளது., இதில் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

குஜராத் ஆளுநர் கமலா பணிவால் மோடியின் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மோடி அரசால் கடந்த ஏழு வருடங்களாக யாரையும் தலைவராக நியமிக்காமல் கிடப்பில் போடப்பட்டு வைத்திருந்த லோகயுக்தாவிற்கு பணி ஓய்வு பெற்ற ஆர்.ஏ.மேத்தாவை தலைவராக நியமித்ததற்காக ஆளுநரை திரும்பப் பெறக் கோரியும், முறைசாரா அமைப்புகளிடம் செயல் விளைவு கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் மற்றும் குஜராத் நிர்வாகத்தில் பெண்கள் கோட்டாவை அதிகரிப்பது ஆகிய மூன்று பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநருடன் மோதல் ஏற்பட்டுள்ளதால் மோடி யாத்திரை மேற்கொண்டு ஆளுநருக்கு எதிராக மக்களிடம் ஆதரவு கோரப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த செப்டம்பர் 17 முதல் 19 வரை குஜராத் பல்கலைக்கழக அவையில் நடத்திய உண்ணாவிரத நாடகத்திற்குப் பிறகு மோடி பங்குபெரும் முதல் பொது நிகழ்ச்சியாகும். மேலும் இதில் மாநில பிஜேபி தலைவர் பால்து கலந்து கொள்வார் என்பதும் மோடியின் (கேடியின்) திட்டத்தை குஜராத்தின் மூளை முடுக்குகள் எல்லாம் கொண்டு செல்வது குறித்து விவாதிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sep 25, 2011

இரவிலும் சூரிய விமானம் !!!

26, செப்டம்பர் இரவு நேரத்திலும் விண்ணில் பறந்து சாதனை படைத்த சூரிய ஒளி சக்தியால் இயங்கும் விமானம்.

பெயர்ன் (ஸ்விட்சர்லாந்து ஸ்விட்சர்லாந்து தயாரித்த சூரிய சக்தியில் இயங்கும் விமானம் இரவு நேரத்திலும் பறந்து சாதனை படைத்துள்ளது.

பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை அவ்வப்போது பறக்கவிட்டு சோதனை செய்து பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் சூரிய ஒளி சக்தியில் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டு சோதனை புதன்கிழமை துவங்கப்பட்டது. கேப்டன் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் விமானத்தை இயக்கினார். சுமார் 26 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விமானம் சூரிய ஒளி சக்தியால் பறந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்.

இதுகுறித்து சூரிய ஒளி சக்தியால் இயங்கும் விமானத்தைத் தயாரித்த குழுவின் தலைவர் பெர்டிரான்ட் பிகார்ட் கூறியதாவது: பைலட் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் வெற்றிகரமாக விமானத்தை இயக்கினார். 26 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக விமானத்தை அவர் தரை இறக்கினார். விமானம் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளதால் இரவிலும் விண்ணில் சூரிய ஒளி சக்தியால் பறந்த விமானம் என்ற சாதனை எங்களுக்குச் சொந்தமாகியுள்ளது.

இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தியால் விமானம் இவ்வளவு நேரம் பறந்தது உலகிலேயே இதுவே முதல்முறை. இதன்மூலம் எங்களது கனவுப் பயணம், வெற்றிகரமாக முடிந்துள்ளது. இரவு நேரம் முழுவதும் விமானம் பறந்துள்ளது என்றார் அவர்.

விமானத்தின் இறக்கைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சோலார் பேனல்களில் 12 ஆயிரம் சோலார் செல்கள் உள்ளன. இதன்மூலம் சூரிய சக்தி சேமிக்கப்படுகிறது. சூரிய ஒளி சக்தியால் விமானத்திலுள்ள பேட்டரிகள் சார்ஜ் செய்யப்படுகின்றன.

இந்த பேட்டரி சக்தி மூலம் இரவு நேரம் முழுவதும் விமானம் இயங்குகிறது. நிச்சயமாக இந்த விமானம் சிறப்பான ஒன்றுதான். அருமையான சாதனையை பெர்டிரான்ட் பிகார்ட் செய்துள்ளார் என்று முன்னாள் விண்வெளி வீரர் நிகோலியர் தெரிவித்தார்.