Sep 24, 2011

இடையில் முறிந்த ஹனிமூன்

சென்னை : தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் பலவிதமான பிரச்சனைகளுக்கு பின் இருக்கட்சிகளும் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தது, அமோக வெற்றியும் பெற்றது.

இப்போது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கூட்டணி கட்சிகளுக்கும் மதிப்பு அளிக்காமல், ‘அம்மையார்’ அனைத்து  இடங்களுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்து அனைவருக்கும் அதிரடி ‘ஷாக்’ அளித்துள்ளார்.இதனால்அதிர்ந்து போன தேமுதிக பலவித முயற்சிகளையும் எடுத்துப் பார்த்தது. எதுவும் பயனளிக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக இப்போது அறிவித்துள்ளது.

இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறி, தனியாகவே நின்று வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக என்ற குதிரையில் ஏறி ஜம்மென்று சட்டசபைக்குள் போய் விட்டது. ஆனால் இப்போது ஏற்றிய இடத்திலேயே மீண்டும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அதிமுக. இதற்குப் பெயர்தான் சிங்காரித்து மூக்கறுப்பதென்பது!

எனவே முன்பைக் காட்டிலும் பெரும் நெருக்கடி விஜயகாந்துக்கு. இந்த முறை தனது செல்வாக்கை அவர் நிரூபித்தே தீரவேண்டிய கட்டாயம். காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்றால், ஒரேயடியாக வாக்காளர்கள் புறக்கணித்துவிடுவார்களோ என்ற பயமும் அவருக்கு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான ஒரு கருத்தைக் கூட எந்தப் பிரச்சினையிலும் அவர் முன் வைத்ததில்லை. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நைஸாக அதிமுகவிடம் அதிக சீட் பெறுவதுதான் அவர் நோக்கமாக இருந்தது.

இதைப் புரிந்து வைத்திருந்த முதல்வர், ஆரம்பத்திலேயே தட்டி வைக்க நினைத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமான பிரிவா என்பது தெரியவில்லை!

இவர்களது இந்த கூட்டணி தேனிலவு வெகு சீக்கரத்தில் முடிவுக்கு வந்துள்ளதை அரசியல் நிபுணர்களும் பொதுமக்களும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

Sep 21, 2011

தான் ஒரு தீவிரவாதி என்பதை மறைக்க உண்ணாவிரத நாடகம்! சங்கர் சிங் வகேலா !!

ஆமதாபாத் : மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று நாள் உண்ணாவிரதம் முடித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா, மாதவடியா ஆகியோர், திரளான தொண்டர்களுடன், ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் அருகேயுள்ள நடைபாதையில் இவர் மோடியை விட இரண்டு மணி நேரம் அதிகமாக இருந்து உண்ணாவிரதம் இருந்து முடிதுள்ளார். 

அப்போது செய்தியாளர்களிடம் வகேலா கூறியதாவது; ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள வசதிகளுடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். அவரது இமேஜை அதிகரித்துக் கொள்வதற்காக, தான் ஒரு தீவிரவாதி என்பதை மறைக்க இந்த உண்ணாவிரத நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்.

இப்போது, குஜராத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது. வானத்தில் உள்ள சொர்க்கம், குஜராத்தில் தரை இறங்கிவிட்டதா? குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இன்னும் அந்த வழக்கு முடியவே இல்லையே. உண்ணாவிரததின் மூலம் தன்னை நிரபராதி என காட்ட முயற்சிதுள்ளார்.

இந்த உண்ணாவிரதத்துக்காக, பொதுமக்களின் வரிப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் என்ன? மேலும் 3000 க்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று விட்டு இப்பொழுது இல்லை என்று மத சார்பு நாடகம் ஆடுகிறார். இவை அனைத்துமே ஏமாற்று வேலை.

குஜராத்துக்கு தொழி்ல் தொடங்க வரும் தொழிலதிபர்களை, நரேந்திர மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கூறுமாறு  நிர்பந்திக்கப்படுவதாகவும், மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், மேலும் நான் தான்  உண்மையான் காந்தியவாதி, நான் எந்த அரசியளுக்க்காகவும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. மக்களின் நலனுக்காக மட்டுமே உண்ணாவிரதம் இருந்துள்ளேன்  என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.

மேலும் ராம் விலாஸ் பஸ்வான்,லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் கூறும்போது; தன்னை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தரம் உயர்த்திக் கொள்வதற்காக, உண்ணாவிரதம் என்ற அரசியல் நாடகத்தை நரேந்திர மோடி அரங்கேற்றுகிறார். மதச்சார்பற்ற தலைவராக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், தன் மேல் உள்ள மதச் சார்பு முத்திரையை, அவர் அழித்து விட முடியாது’ என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் இந்த உண்ணாவிரத்தை விமர்சித்துள்ளது. அதுபற்றி அக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “நாட்டில் 78 சதம் மக்கள் தினசரி 20 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள். 80 சதம் மக்கள் தினசரி பட்டினியால் தவிக்கிறார்கள். ஒரு வேளை சாப்பிட்டு, மீதி நேரம் பட்டினியால் தவிக்கும் அவர்களைப் பற்றி விவாதிக்க யாரும் இல்லை” மேலும் தேவை இல்லாத ஒன்று  என்று மோடியின் உண்ணாவிரதத்தை விமர்ச்சித்துள்ளார்.



Sep 18, 2011

சாத்தானின் போலி உண்ணாவிரதம்!

நரேந்திர மோடி என்கிற மனிதகுல விரோதி, மனிதாபிமானம் இல்லாத மிருகம் 2002-ம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் ஹிந்து பயங்கரவாதிகளால் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அச்சமயம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ஆட்சி மத்தியில் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஒரே ஒரு மிதவாத தலைவர் திரு. வாஜ்பாய் ஆவார். சுருங்கச்சொன்னால் தீவிரவாதிகளுக்கு மத்தியில் ஒரு மிதவாதி. குஜராத்தில் பயங்கரவாதி மோடி தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான மதகலவரத்தையும் அதை தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதம் இப்போது வெளியே வந்து கொலைகாரன் மோடியை துரத்துகிறது.

இப்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கடிதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளி கொண்டுவர பட்டுள்ளது. அந்த கடிதத்தில் வாஜ்பாய் கூறியிருப்பதாவது குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த துயரச் சம்பவங்களும் என்னை கடும் மனவேதனைக் குள்ளக்கி உள்ளது. குஜராத்தில் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. அங்கு சிறுபான்மை மக்கள் உயிர் வாழ்வது கேள்விக்குறியாகி விட்டது, கலவரத்தை நீங்களே (மோடி) முன்னின்று நடத்துவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன, அங்கு என்ன நடக்கிறது, உங்களுக்கு என்னவிதமான உதவிகள் தேவை என்னிடம் கேளுங்கள், உடனே அதை மத்திய அரசு செய்யும், சிறுபான்மையினரின் உயிர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

சிந்திக்கவும்: அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஹிந்துத்துவா சாத்தான் வேதம் ஓதுகிறது. வாஜ்பாயின் கடிதம் வெளிவந்திருக்கும் இந்த வேளையில் மோடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போகாமல் இருக்க இந்த போலி உண்ணாவிரதம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாஜ்பேய்க்கு அடுத்து பாரதிய ஜனதாவில் பெயர் சொல்லும் அளவுக்கு முக்கிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதால் பயங்கரவாதி மோடி முன்மொழியப்பட்டு வருகிறார்.

மேலும் மோடி குஜராத்தில் பண்ணிய கலவரத்தால் பாரதியஜனதா கட்சி மீண்டும் மத்தியின் ஆட்சியை பிடிக்கும் கனவு நினைவாகமலே இருந்து வருகின்றது.  இது இரண்டையும் ஒரே நேரத்தில் சரிசெய்யவே இந்த போலி உண்ணாவிரதம். என்று எது போன்ற பயங்கரவாதிகள் தண்டிக்கப் படுகிரார்களே அன்றே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் இல்லையேல் இந்தியாவை பாதுகாக்க யாராலும் முடியாது.