Jul 30, 2011

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மம்தா முடிவு!

JULY 30, கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், இடதுசாரி கூட்டணி ஆட்சியில் இருந்த போது, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி, வேலை வாய்ப்பில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கான இடஒதுக்கீட்டை,10 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்தது.

இதன் மூலம், மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பயன்பெறுவர் என கூறப்பட்டது.  ஆனால், அந்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அது அமலாகவில்லை. இந்நிலையில், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா, இன்னும் மூன்று மாதங்களில் கொண்டு வரப்படும் என, முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சந்தோசப்படும் அர்ச்சகர்!

JULY 30, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தனியார் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்ப தாகவும். இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என்றும் கடந்த 7ம் தேதி போனில் மிரட்டல் வந்தது.

போனில் பேசிய மர்ம ஆசாமி இந்த விவரத்தை கூறி விட்டு திடீரென இணைப்பை துண்டித்து விட்டார்.  இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார் செய்தனர்.  புகாரின்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

இதையடுத்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சம் பந்தப்பட்ட மிரட்டல் போன் எங் கிருந்து வந்தது? என கண்டுபிடிக்க முயற்சித்தனர். இதில், திருவாரூர் சாட்டைக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணி யாற்றும் ராமநாதன் (28) என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கல்லூரிக்கு போன் செய்தவர் என தெரியவந்தது.

இதையடுத்து அர்ச்சகர் ராமநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, அதனால் பிறர்படும் அவதியை கண்டு ரசிப்பது தனது பொழுதுபோக்கு என்று அர்ச்சகர் ராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களிடமும் ஆபாசமாக போனில் பேசும் வழக்கம் உடையவர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Jul 29, 2011

கண்டுகொள்ளாத இந்திய தூதரகமும் அவதிப்படும் தமிழர்களும்!

JULY 30, சென்னை:  நல்ல வேலை கிடைக்கும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று மலேசியா சென்றவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு, முறையான ஆவணங்கள் இல்லாததால் மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் நோய் வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ள தமிழர்கள் தெரிவித்தனர். காரைக்குடியை அடுத்த நடுவிக்குளத்தைச் சேர்ந்த சின்னசாமி (31) கூறியதாவது: நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் மலேசியா செல்ல முடிவு செய்தேன். அப்போது பரமக்குடியை சேர்ந்த ஏஜென்ட் சரவணன், மலேசியாவில் ஓட்டல் வேலை உள்ளது என்றார். அவர் சொன்னபடி 85 ஆயிரம் பணத்தை கட்டினேன்.

அவர் மலேசியா செல்ல விசா, தங்கி வேலை செய்ய பர்மிட் ஆகியவை வாங்கி அனுப்பினார். ஆனால் அங்கு போனால் கோல்ப் மைதானத்தில் புல் வெட்டும் வேலை. சம்பளமும் சொன்னபடியில்லை. அங்கு அறிமுகமான வர்களின் உதவியால் ஓட்டல் வேலைக்கு சென்றேன். பர்மிட் முடிவதற்குள் புதுப்பிக்க ஏஜென்ட் சரவணனை தேடினால் கிடைக்க வில்லை. அதனால் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் கிளந்தான் மாநிலத்தில் உள்ள தனமேரா முகாமில் அடைத்தனர். அங்கு என்னைபோல் 250 பேர் இருந்தனர். அங்கிருந்து நெகிரிசெம்புலானில் உள்ள லிங்கி முகாமுக்கு மாற்றினர். அங்கு 1075 பேர். கடைசியாக கோலாலம்பூரில் உள்ள முகாமுக்கு கொண்டு வந்தனர். அங்கும் 1075 பேர் இருந்தனர். மூன்று முகாம்களில் ஆண்களின் எண்ணிக்கைதான் இது. பெண்களுக்கு தனி முகாம் உள்ளது. முகாமில் உள்ளவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் தமிழர்கள். முகாமில் சாப்பாடு தான் பிரச்னை. சரியான உணவில்லாமல் நோயுற்று அடிக்கடி யாராவது இறப்பார்கள்.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினோம். அவர்கள் கண்டு கொள்ளவில்லை அதன் பிறகு மலேசிய குளோபல் அமைப்பை நடத்தும் கமலநாதன் என்பவருக்கு வேண்டுகோள் விடுத்தோம். அவர் எங்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தில் உள்ள மீட்பு அமைப்பும், கட்டட தொழிலாளர்கள் சங்கமும் உதவின. மீட்க வேண்டியவர்கள் அங்கு நூற்றுக்கணக்கில் உள்ளனர். இனி வெளிநாடு செல்பவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவரைப்போலவே மயிலாடுதுறை அருகே உள்ள தேரெழுந்தூரைச் சேர்ந்த ஜுபைர் அலி (38), ஓட்டல் வேலை என்று சொல்லி மலேசியா அனுப்பப்பட்டார். அவருக்கும் அங்கு புல் வெட்டும் வேலைதான். இவரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டு மூன்று முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டார். இவரிடமிருந்தும் 800 வெள்ளி பணம், ஒரு செல்போனை போலீசார் வாங்கிக் கொண்டு திரும்ப தரவில்லை.

கண்டுகொள்ளாத தூதரகம்: மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டால் கண்டு கொள்வதில்லை. பர்மிட்டை புதுப்பிப்பதற்கு வாய்ப்பில்லாததால், இந்திய தூதகரத்தை தஞ்சம் அடைந்தால் அவர்கள் விரட்டி விட்டு விடுகிறார்களாம். முகாமில் இருந்து கடிதம் எழுதினாலும், பதில் வருவதில்லையாம். மலேசியாவில் 48 வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளனவாம்.

இவற்றில் 47 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள், மாதத்திற்கு ஒருமுறை முகாம்களுக்கு வந்து தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி உதவி செய்கின்றனர். ஆனால் ஓரே ஒரு நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் மட்டும் முகாம் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. அது இந்திய தூதரக அதிகாரிகள்தான். இத்தனைக்கும் முகாம்களில் தமிழர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்கின்றனர் மீட்பு அமைப்பு நிர்வாகிகள் சேரன், சிவசோமசுந்தரம்.

சிந்திக்கவும்: இந்தியாவின் தூதரகம் மாதிரி ஒரு கேடு கேட்ட தூதரகம் உலகில் இருக்க முடியாது. உலகம் முழுவதிலும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியர்களை மதிப்பதில்லை அவர்களுக்கு உதவியும் செய்வதில்லை. இது சிங்கபூர் மலேசியா தொடங்கி அமெரிக்கா வரை உள்ள அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் பொருந்தும்.

இந்த பொருக்கிகள் அந்த அந்த நாட்டில் பொருக்கி தின்று கொண்டு, குடித்து, பெண்களோடு கும்மாளம் இட்டு கொண்டு இருப்பதோடு சரி. இந்திய மக்களின் நலன் காக்க அமைக்கப்பட்ட தூதரங்கள் பாதிக்கப்பட்ட இந்தியர்களை ஒரு பொறுட்டாக நினைப்பதும் இல்லை அவர்களுக்கு உதவுவதும் இல்லை. மேலும் சொன்னால் பாதிக்கப்பட்டு வரும் மக்களிடமே லஞ்சம் பெற்று கொண்டு ஏதாவது பிச்சை போட்ட மாதிரி உதவி செய்வார்கள். உலகிலேயே கேடு கெட்ட தூதரக சேவையை கொண்ட நாடு ஒன்று இருக்குமேயானால் அது இந்தியாதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரசியல் கோமாளிகளால் அல்லல்படும் மாணவர்கள்!

JULY 29, சென்னை: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி, தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் பிசுபிசுத்தது. இந்தப் போராட்டத்துக்கு, பொதுமக்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும் வகையில் ஆதரவு எதுவும் இல்லை.

சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.தி.மு.க., தலைவர் கருணாநிதி, சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வலியுறுத்தி, போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, சமச்சீர் கல்விக்கு ஆதரவாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க., தலைமை கேட்டுக்கொண்டது.

மாணவர்களை தூண்டுவதாக தி.மு.க.,வின் செயலுக்கு, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி சங்க நிர்வாகிகளின் கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ் கண்டனம் தெரிவித்தார். பள்ளிகள் சுமுகமாக இயங்க யாரும் இடையூறு செய்யக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். "போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் சிங்காரவேலும் அறிவித்திருந்தார். . சைதாப் பேட்டையில் உள்ள தனியார் பள்ளி முன் திரண்ட போராட்டக்காரர்கள், மாணவர்களை வகுப்பறை களிலிருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர்.

சிந்திக்கவும்: இந்த ஒரு நாள் புறக்கணிப்பால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. மாணவர்களின் படிப்பில் அரசியலை நுழைக்கக் கூடாது. சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதே நேரம் பள்ளிகளை புறக்கணிக்கும் திமுகாவின் போராட்டத்தை யாரும் ஆதரிக்க முடியாது. சமச்சீர் கல்வி என்கிற ஒரு நல்ல திட்டத்தின் பாட நூல்களில் கருணாநிதி என்ற ஊழல் பெரிச்சாளி தன் புகழையும், தன் மகள் கனிமொழி மற்றும் குடும்பத்தார்கள் புகழ்பரப்ப நிறைய விசயங்களை நுளைத்ததினால் உண்டான குழப்பமே இது.

கருணாநிதி குடும்பம் என்ன சுதந்திர போராட்ட வீரர்களா? விஞ்சான ரீதியாக ஊழல் செய்த கைந்தேடுத்த அயோக்கியரின் குடும்ப வரலாற்றை தமிழக மக்கள் படிக்க வேண்டும் என்பது ஒன்றும் தேவையில்லை. இது ஜெவுக்கும் பொருந்தும். அதே நேரம் ஜெயலலிதா இந்த பாடத்திட்டத்தை இந்த வருடம் அனுமதித்து விட்டு பின்வரும் காலங்களில் அதில் மாறுதல் செய்திருக்கலாம். இவர்களது சாக்கடை அரசியல் புத்தியினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொறுப்பில்லா அரசியல்வாதிகளை, வரும் காலங்களில் மக்கள் ஒதுக்கி தள்ளிவிட்டு ஒரு புதிய அரசியல் மாற்றத்தை இளஞசர்கள் உண்டாக்க வேண்டும் என்பதே நமது ஆவல்.

இந்தியா ஒரு வல்லரசு கண்டிப்பாக நம்புங்கள்!

JULY 29, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வேதாரண்யத்தை அடுத்து புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 27.07.2011 அன்று இரண்டு படகுகளில் சென்று நடுக்கடலில் தங்கி இருந்து இரவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்றும், சிங்கள மீனவர்கள் இருந்த இரண்டு படகுகளும் வந்துள்ளன.

தமிழக மீனவர்கள் உள்ள படகுகளில் ஏறி மிரட்டிய அவர்கள், படகுகளில் இருந்த மீன்கள், நண்டு, இறால் போன்றவற்றை பறித்து சென்றனர். செல்போன், வாட்ச், பணம் போன்றவற்றையும் தமிழக மீனவர்களிடம் இருந்து அவர்கள் பறித்துள்ளனர்.  மேலும் மீனவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியடித்துள்ளனர். இதனை பாதிக்கப்பட்ட சுப்பிரமணி என்ற மீனவர் தெரிவித்துள்ளார்.  கடந்த வியாழன் கிழமை அன்று காலையில் இருவேறு சம்பவங்களில் ராமேஸ்வரம் மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிலிருந்து 48 மணி நேரத்தில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளனர்.

சிந்திக்கவும்: இந்தியா வல்ரசாம் தனது நாட்டு மீனவர்களை பாதுகாக்க துப்பில்லை இவர்கள் உலக அளவில் வேறு பெரிய நாட்டாமை மாதிரி ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் மூக்கை நுழைப்பது, காஷ்மீர் விசயத்தில் சமாதானம் பேச உலக நாடுகள் வரக்கூடாது என்று சொல்வது, ஈழத்தமிழர் விசயத்தில் தவறான முடிவு எடுத்து அவர்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்க காரணமாக அமைந்தது. இவர்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது தனது நாட்டின் குடிமக்களை பாதுகாக்க முடியாத இவர்கள் உலக பிரச்சனைகளில் வேறு தலையை நுழைகிறார்கள்.

கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம். அமெரிக்காவின் ஒரு குடிமகனை தொட்டால் போதும் மொத்த ராணுவமும் வரும். இவர்கள் ஒரு கேவலபட்ட, கேடுகெட்ட ஜென்மங்கள். சொந்த நாட்டின் குடிமக்களை எப்படி காட்டு வேட்டை என்கிற பெயரில் ராணுவத்தை கொண்டு கொன்று ஒழிப்பது என்பதும், காஷ்மீர் பெண்களை கற்பழிப்பதும், சிறுவர்களை சுட்டு கொல்வதும், ஈழத்து பெண்களை கதற கதற கற்பழித்ததும் இதுதான் இந்த கேடுகெட்ட ராணுவத்துக்கு கைவந்த கலை வேறு ஒன்றும் தெரியாது. பொதி சுமக்கும் கழுதைகள் மாதிரி.

Jul 28, 2011

இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம்களின் கட்டிட கலை!

JULY 29. புதுடில்லி: ஆக்ராவில் அமைந்துள்ள, மொகலாய மன்னர் ஷாஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜ்க்காக கட்டிய நினைவு சின்னம் தான் தாஜ்மஹால். இது இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் சிறந்த கட்டிட கலைக்கு உதாரணாமாக திகழ்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை தர மிக முக்கியமான காரணமாக தாஜ்மஹால் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம் மன்னர்கள் கட்டிய டெல்லி செங்கோட்டை, பதேபூர் சிக்ரி, ஜெயிப்பூர் அம்பர் போர்ட், ஹுமாயுன் டூம், இப்படி அடுக்கிகொண்டே போகலாம். இந்திய கட்டிட கலைக்கு முஸ்லிம்கள் மன்னர்களின் பங்களிப்பு போல் இது வரை யாரும் செய்ததில்லை.

இது கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.  கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், ரூ. 14.36 கோடியும், 2009-10ம் ஆண்டில், ரூ. 17.24 கோடியும், 2010-11ம் ஆண்டில் ரூ.19.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்க செயலாளர் எடியூரப்பா!

JULY 29, பெங்களூரு: பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார்.  டில்லியில், பா.ஜ., தலைவர்களிடம், தன் நிலைமையை விளக்கினார்.

அவரது கருத்தை, கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி தலைமை அறிவுறுத்தியது. நேற்று காலை பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் கூடுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, டில்லியிலிருந்து பெங்களூருக்கு எடியூரப்பா புறப்பட்டு வந்தார்.

தென்மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைய அரும்பாடுபட்ட எடியூரப்பா, கர்நாடகாவின் முதல் பா.ஜ., முதல்வராக பொறுப்பேற்றார். அன்று முதல் பல சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். ஒவ்வொரு முறையும், மேலிட தலைவர்களின் ஆதரவுடன் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார். லோக் ஆயுக்தா அறிக்கை வெளியானவுடன், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள பா.ஜ., மேலிட தலைவர்கள் முடிவு செய்து, எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி கட்டளையிட்டனர்.

எடியூரப்பா, கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள புக்கனகரே என்ற கிராமத்தில், 1943, பிப்., 27ம் தேதி பிறந்தார்.  1970: சிக்கரிபுர் என்ற பகுதியின் ஆர்.எஸ்.எஸ்., பயங்கரவாத அமைப்பின் செயலராக நியமிக்கப்பட்டார். 1972: பாரதிய ஜன சங் அமைப்பின் தாலுகா தலைவராக பதவியேற்றார். 1975: சிக்கரிபுர் நகராட்சி தலைவராக தேர்வானார்.  2010 நவ., : அரசு நிலத்தை மகனுக்கு ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலை 28: சட்ட விரோதமாக கட்சியினருக்கு நிலக்கரி உரிமம் வழங்கியதாக இவர் மீது, "லோக் ஆயுக்தா' அறிக்கை குற்றம் சாட்டியது. இதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி உத்தரவிட்டது. குற்றச்சாட்டு: சுரங்க ஊழல் தொடர்பாக, கர்நாடக மாநில அரசிடம் நேற்றுமுன்தினம் அறிக்கை சமர்ப்பித்த லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, "சுரங்க நிறுவனங்களிடம் இருந்து எடியூரப்பா குடும்பத்தினர், 30 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளனர்' என, தெரிவித்தார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்குத் தொடரவும் பரிந்துரை செய்தார்.

Jul 27, 2011

உலக பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஹிந்துத்துவா!

JULY 28, புதுடெல்லி:  நார்வேயில்  இளைஞர்கள் முகாமில் நுழைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி, 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.

இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான். நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080: ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.

அதில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களிடம் இருந்து நிறைய முஸ்லிம் விரோத கொள்கைகளை தான் பெற்று கொண்டதாக கூறியுள்ளான். முஸ்லிம்களை இந்தியாவை விட்டு துரத்துவதற்காக ஹிந்துத்துவா நடத்தும் போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவ ரீதியிலான ஆதரவை தெரிவித்துள்ளான்.

இவனது 1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ஒதுக்கியுள்ளான். மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவை எப்படி ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஹிந்துத்துவா செயல்படுகின்றன என்பது பற்றியும் விரிவாக தெரிவித்துள்ளான்.

மேலும் இவன் ஹிந்துதுவாவுக்கு சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறான். அதாவது இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு ஹிந்து நாட்டை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை துரத்த வேண்டும் இல்லை மதம் மாற்றவேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளான்.இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான்.

ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் ஹிந்துத்துவா மற்றும் வலதுசாரி கிறிஸ்தவ இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய மதசார்பற்ற சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் கொண்ட ஒரு திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.

இந்த லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவாவாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் குரு கோல்வால்கரின் ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும் அரசியல் கோமாளி சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ. பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

கஷ்மீர் பிரச்சனையில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு!

JULY 28, புது தில்லி: காஷ்மீர் பிரச்னையில் அமைதியான முறையில் தீர்வுகாண இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விஷயத்தில் மேலும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இதில் காஷ்மீர் விவகாரம், பயங்கரவாத பிரச்னை, இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேச்சு குறித்து இந்தியா, பாகிஸ்தான் தரப்பில் திருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பகுதி மக்கள் இருநாடுகளுக்கும் சென்று வருவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவும், காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க பரஸ்பரம் மேலும் நம்பிக்கையுடன் செயல்பட முடிவு செய்யப்பட்டது. இருநாட்டுக்கு இடையிலான வர்த்தக உறவு, புனித இடங்களுக்கு சுற்றுலா செல்வது போன்றவற்றை ஊக்குவிக்கவும், இருநாடுகளுக்கு இடையிலான போக்குவரத்தை அதிகரிக்கவும் இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மும்பை தாக்குதல் குறித்து பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வழக்கின் முன்னேற்றம், மனிதாபிமான நடவடிக்கைகள், பொருளாதார ஒத்துழைப்பு, அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இரு நாட்டு அணு விஞ்ஞானிகள் குழு, அதிகாரிகள் குழு கூட்டத்தை பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் மாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டறிக்கை: பேச்சுக்குப் பின் இருநாடுகளின் சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னை குறித்து இருநாட்டு அமைச்சர்களும் முக்கியமாகப் பேசினர். இந்த விஷயத்தில் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும். விஷயத்தை தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து, நம்பிக்கையூட்டும் வகையில் அமைதியான தீர்வை எட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தானுடன் நல்லுறவு வலுவாகும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

கர்நாடகவில் ஊழலில் திழைக்கும் BJP கட்சி!

JULY 28, பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா குடும்பத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு சட்டவிரோதமாக ரூ. 30 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளதாக லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.

கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பான லோக் ஆயுக்தவின் இறுதி அறிக்கை அந்த மாநில அரசிடம் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.  அதில் இரண்டு சுரங்க நிறுவனங்களுக்குத் தடையில்லா சான்று ஒப்புதல் எடியூரப்பா அரசு அளித்துதது தொடர்பாக  எடியூரப்பா குடும்பத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் ஊரக மாவட்டத்தில் ராச்சேனஹள்ளி கிராமத்தில் எடியூரப்பா குடும்பத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு ரூ. 1.40 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 20 கோடிக்கு ஒரு சுரங்க நிறுவனம் வாங்கியுள்ளது. இவ்வளவு அதிக விலை கொடுத்து அந்த நிலத்தை வாங்க வேண்டிய நிர்பந்தம் குறித்துக் கேள்வி எழுகிறது. நிலத்தை விற்றதற்கான ஆவணத்தில் ஏராளமான குளறுபடிகளும் உள்ளன.

அறிக்கையின் நகலை ஆளுநருக்கு அளித்துள்ளேன். லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் எடியூரப்பா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளேன். ரெட்டி சகோதரர்கள், குமாரசாமி: இரண்டு சுரங்க நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியதற்காக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் பெயரையும் அறிக்கையில் சேர்த்துள்ளோம்.

சட்டவிரோத சுரங்கத் தொழிலில் தங்கள் குடும்ப நிறுவனங்களுக்கு பங்கில்லை என்று ஜனார்தன ரெட்டி மற்றும் கருணாகர ரெட்டி தொடர்ந்து கூறிவருகிறார்கள். இதில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான சாட்சி ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றார் சந்தோஷ் ஹெக்டே.

அறிக்கை தாக்கல்: பெங்களூர் விதானசெüதாவில் மாலை 4 மணிக்கு தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத்திடம் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கையை லோக் ஆயுக்த பதிவாளர் மூசா குன்ஹிநாயர் மூலே வழங்கினார். அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ரங்கநாத் தெரிவித்தார்.

எடியூரப்பா, அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் ஜனார்த்தனரெட்டி, கருணாகரரெட்டி, ஸ்ரீராமுலு, வி.சோமண்ணா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் எம்பி அனில்லாட், பாஜக எம்எல்ஏ நாகேந்திரா உள்ளிட்ட ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் 787 அரசு உயரதிகாரிகளின் பெயர்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

25,228 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 450 பக்கங்களுக்கு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தனது பரிந்துரைகளை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
2006 முதல் 2010 வரை பெல்லாரி, சித்ரதுர்கா, தும்கூர் மாவட்டங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் குறித்து 31 தலைப்புகளில் லோக் ஆயுக்த நீதிபதி விவரித்துள்ளார்.  நான்கு லட்சம் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. 50 லட்சம் உள்ளீடுகளில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தவின் இறுதி அறிக்கை கர்நாடக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக!

JULY 28, சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாமக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பலரும் திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தினர். பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளார். 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஞ்ஞான பூர்வமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தமிழர்களின் நலனுக்காக வாழ்த்து கொண்டிருக்கும் கட்சி பா.ம.க. எந்த திராவிட கட்சியையும் சாராமல் தனிமையில் செயல்பட்டு மக்களை நாம் காப்பாற்ற வேண்டும். அந்த வழியில் நாம் முன் செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார். இறுதியில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவும், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒருங்கிணைந்த முயற்ச்சியால் ராஜபக்சேவை தண்டிக்க முடியும்!

JULY 28, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு சிங்கள இனவெறி அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.

இனப்படுகொலை குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகார குழுவை குறிப்பாக ஹாவர்ட் பெர்மன் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறது.

சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையில் கொலைக்களம் என்னும் குறுந்தகட்டின் மூலம் இத்தகைய மனமாற்றத்திற்கு அமெரிக்க  அரசு வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சிங்கள அரசுக்கு எதிரான பொருளாதார தடையாக இல்லாமல் போர்குற்றங்களை விசாரிப்பதற்குரிய ஒரு முன்நிபந்தனை அறிவிப்பாகவே விளங்குகிறது.

எனினும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு இத்தகைய முடிவெடுத்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்று பாராட்டுகிறது. இந்த சூழ்நிலையில் இராஜபக்சேவின் கட்சியை சார்ந்த முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே தமிழர்கள் மீது கருணை கொண்டு தமிழர்களுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்தளிக்கலாம் என்று அறிவுறுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இராஜபக்சேவுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான தனிமனித அரசியலில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவுகளா அல்லது சர்வதேச வலைப்பின்னலின் அடிப்படையிலான வெளிப்பாடா என்பது தெரியவில்லை.

ஆயினும் சந்திரிகாவின் அறிவிப்பும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முடிவும் சற்று ஆறுதல் அளிக்கிறது.  இதிலிருந்து தமிழ் இனத்திற்கு ஆதரவான நம்பிக்கை ஒளிக்கீற்று பிறந்துள்ளது. இராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதனை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாழும் தமிழர்களும் ஒற்றுமையாக இருந்து அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பை பெரும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தொல்.திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Jul 26, 2011

RSS வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கும் வீடியோ!

JULY 27, புதுடெல்லி: ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவவாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.

சங்க்பரிவார தீவிரவாதத்தைக் குறித்த என்னிடம் வீடியோ உள்பட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்கள் உள்ளன. 2002-ஆம் ஆண்டு மலேகானில் குண்டு வீசியதற்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை மத்திய பிரதேச போலீஸ் கைதுச்செய்தது. 2006 ஆம் ஆண்டு நந்தத்திலும், 2008 ஆம் ஆண்டு கான்பூரிலும் வெடிக்குண்டை தயாரிக்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சுனில்ஜோஷிதான் மலேகான் வழக்கில் தொடர்புடையவர். அவரை அவரது அமைப்பினரே கொலைச் செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் மத்தியபிரதேச அரசு (பா.ஜ.க) தலையிடுகிறது.  இவ்விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசினேன். பின்னர் இவ்விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக்குவதாக பா.ஜ.க தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை திக் விஜய்சிங் மறுத்தார். தீவிரவாதத்தை வகுப்பு வாதமயமாக மாற்றியது எல்.கே.அத்வானி போன்றவர்களாவர். நான் ராகுல்காந்தியின் ஆலோசகர் அல்ல. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தபொழுது ஹிந்து தீவிரவாதத்தையும், முஸ்லிம் தீவிரவாதத்தையும் எதிர்த்து கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டேன். இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.

சாட்டிலைட்டில் இருந்தும் தெரியுது கோடீஸ்வரரின் பெயர்!!

July 27,அபுதாபி: தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. மரத்தில், பஸ் சீட்டில், மலை உச்சியில்.. இப்படி பொறித்து வைப்பார்கள்.

 ஐக்கிய அரபு குடியரசின் அபுதாபி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். உலகில் அதிகம் கார் வைத்திருப்போர் லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பவர். வகைக்கு ஒன்றாக 200 கார், டிரக் வைத்திருக்கிறார்.

அபுதாபிக்கு அருகில் உள்ள ஃபுடாய்சி என்ற தீவை இவரது தந்தை இவருக்கு பரிசாக கொடுத்தார். அதில் தனது பெயரை ரத்தின சுருக்கமாக ‘ஹமத்’ என்று முக்கால் கி.மீ. உயரம், 3 கி.மீ. நீளத்துக்கு எழுதி வைத்திருக்கிறார். இந்த எழுத்துகள் அனைத்தும் பிரமாண்ட பள்ளம் வெட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து பிரமாண்ட பள்ளம் வெட்டி அதில் கடல் நீரை வரவழைத்துள்ளார்.  செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் போட்டோக்களில்கூட அவரது பெயர் தெரிகிறது.  இதற்காக அவர் ரூ.99 ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறார்.

சிந்திக்கவும்: ஒரு பக்கம் மக்கள் பசியால், பட்டினியால் சாவுகிறார்கள் இதை போன்ற செல்வந்தர்கள் பணத்தை இப்படி செலவு செய்கிறார்கள். இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீடுதான் உலகிலேயே அதிக பொருள் செலவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இப்படி பட்ட சுயநலம் கொண்டவர்களின் செல்வங்களை பறித்து ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

சீமான் பேட்டி பாலியல் புகாரை சந்திக்க தயார்!

July 27,சென்னை : நடிகை விஜயலட்சுமி கூறியுள்ள பாலியல் புகாரை சட்டரீதியாக சந்திப்பேன் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், பேராசிரியர் தீரன், சாகுல் அமீது, அய்யநாதன், சிவகுமார் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று சட்ட பேரவையில் தீர்மானம் நிறை வேற்றியதற்கு நன்றி தெரிவிக்க முதல்வரை சந்தித்தோம். இலங்கை தமிழர் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவாக இருப்போம்.

காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதால் இந்திய இறையாண்மை கெட்டு விடாது. இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நடிகை விஜயலட்சுமி என் மீது பாலியல் புகார்தான் சொல்லியுள்ளார். வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்தால் அதை சட்ட ரீதியாக சந்திப்பேன். இவ்வாறு சீமான் கூறினார்.

இந்திய அரசால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்!

JULY 27, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும்.

அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.

அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால் - இன்னும் மத்திய அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் பதில் சொல்வார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது. முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு.

இக்குழு இந்தியா முழுவதும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு 404 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்திய நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையின் அவலங்கள் இவ்வறிக்கையின் மூலம் வெளிப்பட்டபோது முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பல மாநிலங்களில் கல்வி, பொருளாதார நிலைகளில் தலித் மக்களை விடவும், துப்புரவுத் தொழிலாளர்களை விடவும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின் தங்கியிருப்பதும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை முஸ்லிம் சமூகத்திற்கு மறுக்கப்பட்டு வரும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

நாடு முழுவதும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. இதனால் முஸ்லிம்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 15 அம்சத் திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இதன்படி முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற 90 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் பொதுவாக முஸ்லிம்களை கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது மத்திய அரசு.

சச்சார் அறிக்கையில், ஓரளவு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள மதத்தைக் காரணம் காட்டி, வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கையிலெடுத்திருக்கும் மத்திய அரசு, ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து வருகிறது. இந்த வரைவுத் திட்டத்தின்படி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது வாடகைக்கு வீடு தர அல்லது வீட்டு வசதியை மறுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.

இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித பயனும் விளையப் போவதில்லை. முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தரவில்லை என்றால் சட்டப்படி அது தவறு என்பதை விளங்கிக் கொள்ளும் வீட்டின் உரிமையாளர், வாடகைத் தொகையையும், முன் பணத்தையும் வேண்டுமென்றே கூட்டிச் சொல்லி தானாகவே முஸ்லிம்கள் விலகிக் கொள்ளும் வகையில் நடந்து கொண்டால் சட்டத்தால் அவர்களை என்ன செய்து விட முடியும்?

ஒரு வேளை அதிக வாடகை இருந்தாலும் ஓ.கே. என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சிலரால் வீட்டு உரிமையாளருக்குத்தான் ஆதாயம் ஏற்படும். இதுமட்டும்தான் இச்சட்டத்தால் ஏற்படும் பயனாக இருக்க முடியும். இதுபோன்ற வீண் நடவடிக்கைகளை விட்டு விட்டு முஸ்லிம்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தித் தர மத்திய அரசு முன் வர வேண்டும். இது ஒன்றுதான் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டமாக இருக்கும். இதுவல்லாமல் 15 அம்சத் திட்டம் என்ன 80 அம்சத் திட்டம் போட்டாலும் அது - தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்ற மட்டுமே உதவும்.

ஆபாசம், வன்முறை, உள்ள சினிமாகளுக்கு வரிவிலக்கு இல்லை!

July 27,சென்னை : ‘தமிழில் சினிமா படப்பெயர் இருந்தாலும், வன்முறை, ஆபாசங்கள் இருந்தால் வரிவிலக்கு கிடையாது’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கேளிக்கை வரிச்சலுகை பெற, திரையிடப்படும் பழைய மற்றும் புதிய திரைப்படங்களின் தமிழ் பெயர், தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.

கேளிக்கை வரிச்சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கூடுதல் தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கேளிக்கை வரிச்சலுகை பெற விரும்பும் திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து ‘யு‘ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தவும், காட்சிகளை தவிர பெருமளவில் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும். வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

இந்தியாவை பாதுகாக்க முஸ்லிம்களின் ராணுவம்!

JULY 27, கோழிக்கோடு:  கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த வருடம் புனலூர், சாவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரச்செரி ஆகிய நான்கு நகரங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும் என தெரிவித்துள்ளது.

வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக என்ற முழக்கத்துடன் 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த அணிவகுப்பு மக்களிடையே சுதந்திரத்தை பாதுகாப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர்களிடையே நம்பிக்கையை விதைக்கும் தேசிய உணர்வை ஏற்படுத்தும் என பாப்புலர் ப்ரண்ட் தலைமை தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சி எங்கு நடை பெற்றாலும் அது மதம் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்ககூடியது அனைவராலும் விரும்பக்கூடிய நிகழ்ச்சியாகும்.  சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு வெறும் சம்பிரதாயமாக பார்க்கப்பட்ட ஒரு சில அரசு அலுவலங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த சுதந்திர கொண்டாட்டம் அடித்தட்டு மக்களால் தற்போது கொண்டாடப் படுவதால் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

எனவே சுதந்திர தின கொண்டாட்டத்தையும் அணிவகுப்பையும் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும் என பாப்புலர் பிரான்ட் தலைமை மக்களை கேட்டுக்கொள்கிறது கேரளாவில் மட்டுமின்றி கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கடந்த முன்று வருடங்களாக சுதந்திர தின கொண்டாட்டம் அணிவவகுப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது

சந்தனமும் அதன் மருத்துவ பயனும்!

JULY 27, சந்தனம் இதன் தாவரப் பெயர் SANTALUM ALBUM. இதில் வெள்ளை, மஞ்சளை சிவப்பு என மூன்று வகைகைள் உள்ளன. அதில் செஞ்சந்தனம் மருந்தாகப் பயன்படுகிறது.

தென் இந்தியாவில் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு வகை மரம் சந்தனம். தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடைய சந்தனமாகும்.

மருத்துவப்பயன்கள் -: சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.

முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது. கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.

பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும். சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலிவுறும்.

சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும். நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர விந்து கெட்டியாகும். தீரும். சந்தன எண்ணெய்-தைலம் -‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.

ஈரான் இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனையை நிறுத்தியது!

JULY 27, டெஹரான்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வததற்கான பாக்கி தொகை 8 பில்லியன் டாலரை இந்தியா செலுத்ததாத காரணத்தால் மேலும் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதை ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஈரானிமிடருந்து இந்தியா தேவையான கச்சா எண்ணெயினை இறக்குமதிசெய்து வந்தது.

இதற்கான தொகையினை தொடர்நது செலுத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஈரானுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை 8 பில்லியன் டாலரை இந்தியா செலுத்தாத காரணத்தால் தற்காகலிமாக கச்சா எண்ணெய் விற்‌பனை செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஈரான் எரிசக்தி கமிஷன்

துறையின் செய்தி தொடர்பாளர் ஈமாத்-ஹூசைனி கூறியதாவது: ஏற்கனவே இந்தியா 7.9 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் ஈரானிடமிருந்து வாங்கியுள்ளது. இவற்றில் 4.08 பில்லியன் டாலர் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள ‌தொகையினை செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து எண்ணெய் சப்ளை செய்யப்படும். அந்த வகையில் சீனாவும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது. ஆனால் அதற்கான தொகையினை முறையாக செலுத்தி வருகிறது என்றார்.

Jul 25, 2011

ஹிந்துத்துவாவை தப்பவைக்க நினைக்கும் புலனாய்வு துறைகள்!

JULY 26, மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிர மடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர்.

புலனாய்வு ஏஜன்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனக் குற்றஞ்சாட்டி என்.ஐ.ஏ குழு திரும்பி விட்டதாக கருதப்படுகிறது. 22 பேரின் மரணத்திற்கு காரணமான தொடர் குண்டுவெடிப்பைக் குறித்து விசாரணையை ஒருங்கிணைக்க மும்பை தாக்குதலின் பின்னணியில் உருவான என்.ஐ.ஏ அதிகாரிகள் மும்பைக்கு வருகைத் தந்தனர்.

ஆனால், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், க்ரைம் ப்ராஞ்சும் தேசிய புலனாய்வு ஏஜன்சியுடன் ஒத்துழைக்க மறுத்துள்ளன. ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ அதிகாரிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு விசாரணையை நிறைவுச்செய்ய முடியாது என ஏ.டி.எஸ் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

மும்பை குண்டுவெடிப்பு விசாரணையில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா இயக்கங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. இதற்க்கு மும்பை மாநில புலனாய்வுத்துறை ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துள்ளது. இதனால் நேசனல் புலனாய்வுதுறைக்கும் மும்பை புலனாய்வு துறைக்கும் மத்தியில் கருத்துவேறுபாடு வந்துள்ளது.

இயற்கை விவசாயத்தை தேடி இந்தியா முழுவதும் சுற்று பயணம்!

JULY 26, கோவை: இந்தியாவில் பின்பற்றப்படும் இயற்கை வேளாண்மை முறைகள் பற்றி ஆராய்ந்து ஆவணப்படுத்தும் லட்சியத்தோடு, கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் தேசிய சுற்றுப்பயணம் துவங்கியுள்ளனர்.

கோவை, சிங்கநல்லூரை சேர்ந்தவர் தீபன் (25); விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரி. திருப்பூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (25); சாப்ட்வேர் இன்ஜினியர். பள்ளித்தோழர்களான இருவரும் இயற்கை மற்றும் இயற்கை வேளாண்மை மீது, அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் இயற்கை வேளாண்மை முறைகளை பற்றி ஆராய்ந்து, ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு, இரு சக்கர வாகனத்தில் இந்தியா முழுவதும் சுற்றி வர முடிவு செய்து, நேற்று காலை பயணத்தை துவங்கினர். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எந்த மாதிரியான விவசாய முறைகளை பின்பற்றுகின்றனர்;

அங்கு இயற்கை வேளாண்மைக்கு வரவேற்பு இருக்கிறதா, என்பதை கள ஆய்வு செய்து வீடியோ ஆதாரமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் ஆவணப்படுத்த உள்ளோம். இந்த பயணத்துக்கு இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துகிறோம். 45 நாட்கள் தமிழகத்திலும், பின் கேரளா மற்றும் அங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். திரும்பி வர இரண்டு ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு, தீபன் தெரிவித்தார்.

ராம்தேவ் உதவியாளரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது!

JULY 26, புதுடில்லி: தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பால கிருஷ்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது.

தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா, நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக இவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, இவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நாட்டின் எல்லைப்புறங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்க போகிறேன் என்று வீரவசனம் பேசி கிளம்பிய பாபா ராம்தேவ் என்ற போலிசாமியார் இப்பொழுது எங்கே போனார் என்றே தெரியவில்லை.

சர்வாதிகாரியைப் போல நடந்து கொள்ளாதீர்கள்! சந்திரிக்கா!

ஜூலை 26, கொழும்பு : தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள், இலங்கையின் அனைத்துச் சிறுபான்மை இனங்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் வகையில் கூட்டாட்சி முறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அறிவுரை கூறினார்.

கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டில் இப்போது காணப்படும் சிங்களப் பேரினவாத ஆதிக்கப் போக்கு குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். இது இப்படியே நீடித்தால் நாட்டில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கும் என்று எச்சரித்தார்.

"சர்வாதிகாரியைப் போல நடந்து கொள்ளாதீர்கள். இலங்கையின் அனைத்துத் தமிழர்களையுமே விடுதலைப் புலிகள் என்று பாவித்து பகைமை பாராட்டாதீர்கள். தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதால் நம்முடைய வலிமை குன்றிவிடாது; மாறாக அவர்களுடைய உழைப்பு, திறமை, அறிவு காரணமாக இலங்கைக்கு எல்லா துறைகளிலும் அபாரமான முன்னேற்றம் ஏற்படும்.

இலங்கை என்றாலே சிங்களத்துக்கும் பெளத்தத்துக்கும்தான் முன்னுரிமை என்ற கொள்கை மூலம் நாட்டை குழப்பத்துக்கு இட்டுச் செல்லப் பார்க்கிறது அரசு. இலங்கையில் உள்ள அனைத்துச் சிறுபான்மை இனங்களின் தலைவர்களுடன் பேசி அவர்களுக்குத் தேவைப்படும் சலுகைகளையும் உரிமைகளையும் அரசு வழங்க முன்வர வேண்டும்.

என்னுடைய தகப்பனார் பண்டார நாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்னை இப்படி பூதாகரமாக வளர்ந்து நாட்டையே 30 ஆண்டுகள் நெருக்கடியில் தள்ளியது.

சிங்களத்துக்கு இணையான அந்தஸ்து தமிழுக்கும் வேண்டும் என்று தமிழர் இயக்கங்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டன; இதனால் தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது. அந்த கோரிக்கையும் ஏற்கப்படாததால் கூட்டாட்சி வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதையும் நிராகரித்த காரணத்தால் தனி தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது.

அரசு நிர்வாகத்தில் தமிழர்களுக்கு எந்தவித பங்கும் இல்லை, கல்வி - வேலைவாய்ப்பில் அவர்களுக்கு ஏதும் கிடையாது, எங்கும் எதிலும் சிங்களம் மட்டுமே என்ற கொள்கை காரணமாகவே மிகப் பயங்கரமான மோதல்கள் வெடித்தன. என்னுடைய தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்ததாலேயே தமிழர்களிடையே 5 போராளிக் குழுக்கள் தோன்றின.

அவர்களில் முன்னணியில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் உள்பட அனைத்துமே தமிழ் ஈழம் என்ற தனி நாட்டுக்காகப் போராடின. இந்த நிலையில்தான் இப்போதைய அரசு முழுக்க முழுக்க ஒரு சர்வாதிகார அரசு போல நடந்து கொள்வதைப் பார்த்து வியப்படைகிறேன். ஜனநாயகத்தை வலுப்படுத்தாமல், மனித உரிமைகளை மதிக்காமல் நேர் எதிரான பாதையில் இன்றைய அரசு நடைபோடுகிறது; இதனால் நாட்டில் கலகம்தான் வளரும்.

அனைத்துச் சிறுபான்மை இனங்களுக்கும் சம வாய்ப்பையும் உரிமையையும் வழங்க கூட்டாட்சி முறையைக் கொண்டுவாருங்கள். தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்' என்று இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இப்போதும் நீடிக்கும் சந்திரிகா அறிவுரை கூறினார். அவர் 1994 முதல் 2005 வரை இலங்கை அதிபராகப் பதவி வகித்தார். அவருக்குப் பிறகு அவருடைய கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபட்ச ஆட்சிக்கு வந்தார்.

பிரதமர் மீது பொய் குற்றச்சாட்டை எழுப்பும் பாரதிய ஜனதா!

ஜூலை 26, புது தில்லி : 2-ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்தது.

"உலகம் முழுவதுக்கும் அப்பழுக்கற்ற நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் உதாரணமாகத் திகழ்பவர் பிரதமர் மன்மோகன் சிங். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கேள்வியெழுப்பியவர் என்று சொன்னால் அது பிரதமர் மன்மோகன் சிங் ஒருவர்தான். அவரது கண்ணியத்தைக் குறைக்க முயல்வது சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றதாகும்' என்று காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.

அலைக்கற்றை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ. ராசா கூறியவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அவரது வாதமாகும். பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளவர் ஒரு அமைச்சரல்ல, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறியுள்ள கருத்துகளுக்குத் தேவையில்லாமல் அதீத முக்கியத்துவம் கொடுத்து அதை

வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்தியா முழுவது தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள். இதனால் ஹிந்துத்துவாவின் அரசியல் முகமூடியான பாரதிய ஜனதாவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் வெகுவாக சரிந்துள்ளது. தாங்கள் இழந்த செல்வாக்கை நிலைநிறுத்தவே இப்படி அபாண்டமான குற்றச்சாட்டை சொல்லிவருகின்றனர் என்றார்.

ஈழத்தமிழர் ஆதரவு ஏமாற்றும் விஜய்!

JULY 26, இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.

இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சந்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகி தகடூர் தமிழ்ச் செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், விடுதலைச் செல்வன், செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கி வரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும் படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில், உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

ராஜபக்சே கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார். மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Jul 24, 2011

ஒரிஸ்ஸாவில் தலித் எம்.எல்.ஏ, மீது தீண்டாமை கொடுமை!

JULY 25, புவனேஷ்வர்: தலித் சமூகத்தைச் சார்ந்த தன்னிடம் சக ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக எம்.எல்.ஏ காசிநாத் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகாரப்பூர்வமான கூட்டங்களில் இதர நபர்களுடன் உணவு உண்பதற்கு அனுமதிப்பதில்லை எனவும், தனக்கு உணவுக்காக தனி அறையை ஒதுக்குவதாகவும் அவர் ஒரிஸ்ஸா மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தரம் குறைந்த தட்டுக்களில் உணவு அளிக்கப்படுகிறது. பிறருடன் வாழவும், பழகவும் வாய்ப்பு தருவதில்லை. கடந்த ஜூலை 20-ஆம் தேதி அதிகாரப்பூர்வ கூட்டத்தில் பிறருடன் உணவு அருந்த தன்னை அனுமதிக்கவில்லை என காசிநாத் குற்றம் சாட்டியுள்ளார். பி.ஜெ.டி கட்சியின் எம்.எல்.ஏவான காசிநாத் இவ்விவகாரத்தில் தலையிட சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாட்டுக்கு பதிலாக மனிதர்களை வைத்து உழவு!

JULY 25, அமராவதி:மகாராஷ்டிராவில் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக, மாடுகளுக்குப் பதிலாக, தன் இரு மகன்களை வைத்து, நிலத்தை உழுத விவசாயி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் விவசாயம் தான், முக்கியத் தொழில். போதிய மழை இல்லாததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் கடன் வாங்குகின்றனர். இவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு சார்பில் பல்வேறு நிதித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அங்குள்ள விவசாயிகளின் வறுமையைப் போக்க முடியவில்லை.

இந்நிலையில், தற்போது அதிர்ச்சிகரமான ஒரு தகவல் வெளியாகி யுள்ளது.மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி மாவட்டத்தின் சீர்கேட் என்ற கிராமத்தில், கிஷன்ராவ் தபூர்கர் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு எட்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, போதிய அளவில் மழை இல்லை. இதனால், கடன் வாங்கி, பிழைப்பு நடத்தினார். வறுமை வாட்டினாலும், விவசாயத்தை விட முடியவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த, சிறிய அளவிலான மழை, இவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. உடனடியாக, நிலத்தை உழுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஆனால், உழுவதற்கு, மாடுகள் கிடைப்பது சிரமமாக இருந்தது. ஒரு ஜோடி மாடுகளை, வாடகைக்கு அமர்த்தினால், தினமும், 1,000 ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையெனில், புதிதாக மாடு வாங்க வேண்டும். ஒரு ஜோடி மாடுகளின் விலை, 20 ஆயிரம் ரூபாய் என கூறுகின்றனர்.இதனால், மாடுகளுக்குப் பதிலாக, தன் இரு மகன்களை ஏரில் பூட்டி, நிலத்தை உழுதார், கிஷன் ராவ். இதுபற்றிய செய்தி, மகாராஷ் டிராவில் உள்ள உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியானதால், அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர்.

இலங்கை உள்ளாட்சி தேர்தல்! தமிழர் கட்சி அமோகம் வெற்றி!


July 25, : இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வடபகுதியில் உள்ள 20 இடங்களில் 18 இடங்களில் விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி (டிஎன்ஏ) அமோக வெற்றி பெற்றது. இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின.

மொத்தமுள்ள 65 கவுன்சில்களில் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (யூபிஎப்ஏ) 45 இடங்களில் வெற்றி பெற்றாலும், தமிழர்களின் முக்கிய பகுதியான கிளிநொச்சி மற்றும் வடக்கு பகுதியில் உள்ள 20 இடங்களில் 18 கவுன்சில்களில் டிஎன்ஏ அமோக வெற்றி பெற்றது.

மீதமுள்ள 2 இடங்களில் ராஜபக்சே அமைச்சரவையின் தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழம் மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

இதற்கிடையில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான வீரசிங்கம் அனந்த சங்கரேயின் தமிழ் ஐக்கிய விடுதலை கட்சி 2 இடங்களையும் பிடித்துள்ளது. மேலும் முக்கிய சிங்கள எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சிகள் அனைத்து இடங்களில் தோல்வி அடைந்தன. குறிப்பாக யுஎன்பி கைவசம் வைத்திருந்த 3 இடங்களையும் இழந்தது.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சியான டிஎன்ஏ வட பகுதியில் பெருபான்மை பெற்றிருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் பகுதியில் ராஜபக்சே கூட்டணி பெரும்பான்மை பெற்ற போதிலும், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தோல்வி கண்டது ராஜபக்சே மீதான தமிழர்களின் எதிர்ப்பு பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர். தென் பகுதியில் இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி ஆகிய கட்சிகள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தேர்தல் விதிமுறைகளின்படி, கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் கவுன்சில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

மொத்தம் உள்ள 65 கவுன்சில்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (யுபிஎப்ஏ) 512 இடங்களைப் பெற்றுள்ளது. டின்ஏ 183 இடங்களைப் பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான யுஎன்பி 137 இடங்களையும் ஜேவிபி 13, டியுஎல்எப் 12 இடங்களையும் பெற்றுள்ளது.

திமுகவின் அடுத்த தலைவர் யார்?

JULY 25, கோவை: தி.மு.க.,வின் அடுத்த தலைவராக ஸ்டாலின்பெயரை பலர் பொதுக்குழுவில் பரிந்துரைத்தனர். இதைக் கேட்ட அழகிரி, "அப்செட்'ஆனார். மதிய உணவுக்கு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்ற அவர், பிற்பகலில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தார்.

காலை நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி முன்னாள் எம்.பி., ராமநாதன் பேசினார். அப்போது கட்சித் தலைவர் கருணாநிதியிடம் அவர்,"1962 முதல் கட்சியில் இருந்து சம்பத், 1972ல்எம்.ஜி.ஆர்., அதன்பிறகு வைகோ பிரிந்து சென்று விட்டனர்.

இது போல் தி.மு.க., எத்தனையோ இழப்புகளையும், சோதனைகளையும் சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் நாங்கள் கட்சிக்கு உறுதுணையாக இருந்தோம். நமக்கு வயதாகி விட்டது. நமக்குப் பின்னும்கட்சி இருக்க வேண்டும். உங்களுக்குப் பின் கட்சிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்,'' என பேசினார்.உடனே பிற உறுப்பினர்கள், "தளபதி, தளபதி' என கோஷமிட்டனர்.

இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காத கருணாநிதி, "மதிய உணவுக்குப் பின் கூட்டம் தொடரும்' என அறிவித்து எழுந்தார். மாலை 4.00 மணிக்கு மீண்டும் கூட்டம்துவங்கிய போது அழகிரி பங்கேற்காமல் ஓட்டலிலேயே தங்கிக்கொண்டார். மாலை 5.30 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டஅழகிரி, பொதுக்குழு அரங்குக்கு செல்லவில்லை; "அவர் மதுரைக்கு செல்வதாக' அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்

இந்தியாவின் பணம் வெளிநாட்டு வங்கிகளில்!

JULY 25, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் மட்டும் இந்தியர்களின் பணம் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பதாக அந்த நாட்டு தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி தலைவரின் செய்தி தொடர்பாளர் வால்டர் மெய்யர், ’’சுவிட்சர்லாந்தில் உள்ள பெரிய வங்கிகளான யு.பி.எஸ். மற்றும் கிரெடிட் சுவிஸ் ஆகிய இரண்டு வங்கிகளிலும் அதிக அளவில் இந்தியர்கள் பணம் போட்டுள்ளனர்.

இந்த வங்கிகளுடன் சேர்த்து சுவிஸ் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் மொத்தமாக கணக்கிட்டால் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இந்தியர்களின் பணம் உள்ளது. இது, 2010-ம் ஆண்டு நிலவரப்படியான கணக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: இந்தியாவில் உள்ள பணக்கார கொள்ளையர்கள் வெளிநாட்டில் வங்கிகளில் இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்து சந்தோசமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். இந்த துரோகிகளை பிடித்து அந்த பணத்தை கைப்பற்றி ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

தலித் கிறிஸ்தவர்கள் 4 நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் பேரணி!

JULY 25, தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி டெல்லியில் நாளை முதல் 4 நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் பேரணி நடத்தப் போவதாக தலித் கிறிஸ்தவர்களுக்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கர்த்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சின்னப்பா, ஆயர் பேரவை எஸ்சி, எஸ்டி பணிக்குழு ஆணையர் பிஷப் நீதிநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியிலில் சேர்க்க வலியுறுத்தி புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நாளை முதல் 27ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டமும், 28ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியும் நடத்த எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்களும் 100 கத்தோலிக்க ஆயர்களும், இஸ்லாமிய சிறுபான்மை அமைப்பினரும் கலந்துகொள்கிறார்கள்.

இதையொட்டி, தமிழகத்தில் உள்ள எல்லா கிறிஸ்தவ ஆலயங்கள், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், வீடுகளில் சிறப்பு பிராத்தனை நடைபெறுகிறது’’என்று கூறப்பட்டுள்ளது.