Jul 2, 2011

ஜல்லிக்கட்டு, மாட்டிறைச்சி, வீரத்துறவி ராமகோபாலன்! ஒரு பார்வை!

JULY 03, புதுடில்லி:""ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, பா.ஜ., எம்.பி., நடிகை ஹேமமாலினி வலியுறுத்தியுள்ளார். ஜல்லி கட்டு என்ற பெயரில் மாடுகளை கொடுமைப் படுத்துகிறார்கள் எனவே இதை உடனே தடை செய்யவேண்டும்.

சிந்திக்கவும்:  இந்த பா.ஜ கட்சியை என்னவென்று சொல்வது இந்தியா முழுவதும் அடிப்படை மருத்துவ வசதி இல்லை, போதிய மின்சார வசதி இல்லை, பசி, பட்டினி என்று வாழ வழியின்றி சாகும் மக்களை பற்றி கவலை இல்லை மாட்டை பற்றி கவலைப்படுகிறார்கள்.

ஏழை மக்கள் நடத்தும் ஜல்லி கட்டு நிகழ்ச்சி கிராமபுற மக்களின் கலாச்சாரம். மாட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் மட்டும் கொடி பிடிக்கும் இவர்கள் கோவிலில் உயிரோடு ஆட்டை வெட்டி பலி இடுகிறார்களே அப்போது எங்கே போனது இந்த ஜீவகாருண்யம்.

ஏழை மக்களின் சத்துமிக்க உணவாகிய மட்டை அறுக்காதே என்று சொல்லி முட்டாள் தனமாக மாட்டை பராமரிக்கிறோம் பேர்வழி என்று சொல்லி அதற்க்கு பசுமாதா மையங்களை அமைத்து உணவிட்டு பொருளாதாரத்தை வீண்விரயம் செய்து வருகிறார்கள்.

உழைக்கும் மக்கள் மாட்டை உழவுக்கு பயன்படுத்துவார்கள், வண்டி மாடாக பயன்படுத்துவார்கள் மாட்டுக்கு வயதானதும் அதை கரியாக அறுத்து சாப்பிட விற்று விடுவார்கள். ஆனால் ஹிந்து முன்னணி தலைவர்

வீரத்துறவி ராமகோபாலா ஐயரோ மாட்டுக்கு காப்பகம் அமைத்து மாடுகள் சாகும் வரை உணவு கொடுத்து நல்லடக்கம் செய்யச் சொல்கிறார.

மனிதனுக்கு உணவில்லை, மனிதன் வறுமையில் சாகிறான், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் நோய்களில் சாகிறான் மனிதனை கவனிக்க சக மனிதனால் முடியவில்லை. சக மனிதர்கள் மீது கருணை காட்ட முடியவில்லை மாட்டின்மீது கருணை வந்து விட்டது. அப்படியானால் இவர்களை கருணையில் சிறந்த புத்தர் மாதிரி என்று நினைத்து விடாதீர்கள். இவர்கள் ஹிந்து அல்லாத மத்த மக்களை கொன்று குவிப்பதில் ஆனந்தம் அடைவர், அவர்கள் சொத்துக்கள், பெண்களின் கற்புகளை கொள்ளையடிப்பதில் பேரானந்தம் அடைவர்.

இப்படி மனித நேயமே இல்லாத இவர்களுக்கு எப்படி மாட்டின் மீது அக்கறை வந்தது என்று பார்க்கிறீர்களா? அதுதான் தங்கள் கொண்டுள்ள ஹிந்துத்துவா வர்ணாசிரம வெறி. இதில் மாட்டை கடவுள், புனிதம் என்று சொல்லி இருக்கிறது இல்லையா? அதனால் வந்த வினை. எல்லா மக்களும் தின்னும் ஒரு உணவை கடவுள் ஆக்கினால் எப்படி? இந்தியாவில் மட்டை அறுக்காதே என்று தடை பண்ணிவிடுவாய் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு மாடு ஆச்சே என்ன செய்வார் வீரத்துறவி ராமகோபாலன்.

இந்தியவவை தவிர வேறு எங்காவது சென்று இதை சொன்னால் ராம கோபாலனையும் அவர் சார்ந்துள்ள ஹிந்துத்துவா இயக்கத்தவரையும் செருப்பால் அடிப்பார்கள். செருப்படி பட ராமகோபால ஐயரும், கேமா மாலினியும் ரெடியா? ஒரு சிறுபான்மை பிராமண சமூகம் தாங்கள் நலனுக்காக பெரும்பான்மை மக்களின் உணவை நிருத்தச்சொல்வது எந்த விதத்தில் நியாயம். இந்தியாவின் உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி இதை தடுக்க ஒரு ராமகோபாலன் இல்லை ஓராயிரம் வந்தாலும் முடியாது. வர்ணாசிரமம் என்பது பார்ப்பன செயல்திட்டம் இது இந்துக்களின் மதம் அல்ல. இந்துமதம் சாந்தி சமாதனம் மிக்கது, சாதுக்கள் நிறைந்தது.
-மலர்-

இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்!

JULY 03, போர்ப்ஸ்கஞ்ச்: பீகார் மாநிலம், போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு கிராம மக்கள் மீது இந்திய பயங்கரவாத போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

பயங்கரவாத போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக மக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலையை மறித்து சுற்றுச் சுவர் கட்டப்பட்டது.

இதற்கு, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி, கட்டுமானப் பணி நடந்தது. கோபம் கொண்ட மக்கள் போராட்டத்தில் இறங்கினர். நிலவரம் கைமீறவே,  போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.  ஒரு கட்டத்தில் தீவிரவாத போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில்,  26 வயது கர்ப்பிணிப் பெண், ஏழு வயது சிறுவன் உட்பட நான்கு முஸ்லிம்கள்  பலியாகினர். மேலும், கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை, அடித்துத் துவைத்த போலீசார், அவரது முகத்தில் ஏறி நின்று ஆடுவது போன்ற வீடியோ காட்சியும் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முஸ்லிம் கிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக முஸ்லிம்களை கொலை செய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என மனித உரிமை போராளி ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

இந்நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், நேற்று போர்ப்ஸ்கஞ்ச் வந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்ட அன்சாரி என்ற 16 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அவனை டில்லிக்குக் கொண்டு செல்லும்படி, மாநில காங்கிரஸ் தலைவர் சவுத்ரி கைசரை அறிவுறுத்தினார்.

இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில், இந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும்,  6மாத பிஞ்சுக்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.

சிந்திக்கவும்: தீவிரவாதத்தின், பயங்கரவாதத்தின் மறு உருவம்தான் ஹிந்துத்துவா இயக்கங்களும், இந்திய காவல் துறையும் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொன்று குவித்தது ஒரு கர்ப்பிணி பெண்ணை, ஏழு வயது சிறுவனை. எப்படி இந்த கயவர்களுக்கு ஒரு கர்ப்பிணி பெண்மேல் துப்பாக்கி சூடு நடத்த மனம் வருகிறது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. பெண்கள் என்றால் பேயும் இறங்கும் என்பார்களே.

இதுபோல்தான் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தீயில் போட்டு கருக்கினார்கள். அதை குறித்து அவர்கள் பெருமையாக வேறு பேசி கொண்டார்கள் இந்த குழந்தை வெளியே வந்தாலும் ஒரு நாள் எங்கள் கைகளால்தான் சாகப்போகிறது. அதனால் தான் இப்பவே கொல்கிறேன் என்று வீரவசனம் பேசி இருக்கிறார்கள் ஹிந்து பயங்கரவாதிகள்.

மேலும் முஸ்லிம் பெண்களை கூட்டம் கூட்டமாக சேர்ந்து கற்பழித்து தீ மூட்டி அதில் உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார்கள். இவர்களை மிருகங்கள் என்று சொல்லி வாயில்லா ஜீவன்களை கேவலப்படுத்த விரும்பவில்லை இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள். இந்தியாவை ஆட்டி படைக்கும் ஹிந்து பயங்கரவாதம் குறித்து மக்கள் விழிப்படைய வேண்டும். இதற்கெதிராய் போராட முன்வரவேண்டும்.

" திகார் ஒலிம்பிக்" ஸ்பெக்ட்ரம் கைதிகளும் விளையாடுகிறார்கள்!

JULY 03, புதுடில்லி: திகார் ஜெயிலில் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் கைதிகள் இடையிலான விளையாட்டு போட்டியில் ஜெயிலில் இருக்கும் முக்கிய உயர் அந்தஸ்தில் இருந்த கைதிகள் பலர் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திகார் ஒலிம்பிக்ஸ் என்பது ஜெயிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. இது கடந்த 15 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.  இந்த போட்டியில் ஒரே ஜெயிலுக்குள் உள்ள கைதிகள் , ஏனைய ஜெயில் கைதிகள் மோதிக்கொள்ளும் படி ஏற்பாடு செய்யப்படுகிறது.

இத்துடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை, காமன்வெல்த் ஊழலில் சிக்கி உள்ளே இருக்கும் கல்மாடி செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து, கோக்கோ, கபடி, செஸ், கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம் கைதிகள் மிகுந்த உற்சாகம் அடைவர். 

இந்த போட்டியில் ஸ்பெக்ட்ரம் ஊழலல் ராஜா, அவரது உதவியாளர் சந்தோலியா, கனிமொழி, தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத் சோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோரும் இந்த போட்டியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயில் அதிகாரிகளுடன் கல்மாடி அரட்டை: இந்நிலையில் திகார் ஜெயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பிரிஜேஸ் குமார் கார்க் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இவர் செல்லும் போது கல்மாடி ஜெயில் சூப்பிரண்டுடன் அவரது அறையில் டீ, பிஸ்கட் எடுத்துக் கொண்டபடி ஹாயாக சிரித்து பேசிக்கொண்டிருந்தாராம். இது குறித்து அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் அமைப்பு உண்ணாவிரதம்!

JULY 03, கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அயன் கரிசல்குளத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று கோரி கிராமமக்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் மார்ச் 15 அன்று பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.

மேலும், ஜூன் 30க்குள் கடையை மாற்றித்தருவதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் உறுதியளித்தபடி கடை மாற்றப்படவில்லை. எனவே, நாளை மறுநாள் (ஜூலை 4) அயன் கரிசல்குளம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதா?

சென்னை, ஜூலை. 2-நாம் தமிழ் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கை படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக்கழகங்களில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி, தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும்.

இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. டெல்லியில் நேற்று இலங்கை ராணுவத்தின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்கே தலைமையிலான குழுவுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளதென இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப்போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

தமிழர்களை இனப்படு கொலை செய்த இலங்கை அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்றும்,  அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்க உலகநாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும்.

இந்திய ராணுவத்தின் இம்முடிவு, அது தமிழினப் படுகொலையில் இலங்கை ராணுவத்திற்கு முழுமையாக உதவியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாகும். இலங்கை ராணுவத்தின், அந்நாட்டு அரசின் மனிதாபிமான முகம்தான் இன்றைக்கு உலகெங்கிலும் கண்டனத்திற்குரியதாக உள்ளது ஐ.நா. அமைதிப்படையின் அங்கமாக ஹைட்டி நாட்டிற்குச் சென்ற இலங்கை ராணுவத்தினர், அந்நாட்டின் சிறுமிகளின் மீது பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்று குற்றம் சாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஆனால் இந்தியாவின் ராணுவமோ அந்நாட்டிற்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிக்கற்றுத் தரப்போகிறேன் என்கிறது. இதை விடக் கேலிக்கூத்தும் கொடூரமும் வேறு என்ன இருக்க முடியும்? பன்னாட்டு மனிதாபிமானப் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவின் ராணுவம், அந்தப் பிரகடனங்களின்படி குற்றமிழைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவால் குற்றஞ் சாற்றப்படும் நாட்டிற்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது, மனிதாபிமான பிரகடனங்களை அவமதிப்பது ஆகும்.

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை இலங்கைத் தொடர்பான இந்திய அரசின் தவறான போக்கு தடையற்று தொடருவதையே காட்டுகிறது. இதனை தமிழர்களும், தமிழக அரசும் புரிந்து கொள்ளவேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் போக்கு நியாயமற்றதாகவே எதிர்காலத்திலும் இருக்கும் என்பதற்கு இந்திய ராணுவத்தின் இந்த முடிவு ஒரு சரியான அறிகுறியாகும். இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.

Jul 1, 2011

கூகுள் அதிபரை முந்தினார் சூகர்பெர்க் !!!

ஜூலை 2,பாஸ்டன்:சொத்து மதிப்பில் கூகுள் இணையதளத்தின் நிறுவனர்களான செர்ஜி பிரின், லேரி பேஜ் ஆகியோரை சூகர்பெர்க் முந்தினார்.

சூகர்பெர்க் நிறுவிய சமூக இணையதளமான பேஸ்புக் தற்போது உலக அளவில் அதிகவாடிக்கையாளருடன் பிரபலமாக திகழ்கிறது.

இந்நிலையில் சராசரியாக ஸி1317 முக மதிப்பு கொண்ட பேஸ்புக்கின் 2.25 லட்சம் பங்குகளை ஜிஎஸ்வி கேபிட்டல் நிறுவனம் வாங்கியது.

ஜிஎஸ்வி முதலீடு மூலம் ரூ.60,750 கோடியாக இருந்து சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ரூ.81,000 கோடியாக அதிகரித்தது. இதையடுத்து சொத்து மதிப்பில் கூகுள் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி சூகர்பெர்க் முதலிடம் பிடித்தார்.

மேலும் உலகின் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரூ.81,000 கோடி சொத்து மதிப்புடன் 3ம் இடத்தை பிடித்தார் சூகர்பெர்க். இந்த பட்டியலில் ரூ.2.52 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் ஒராக்ல்ஸ் லேரி எலிசன் ரூ.1.78 லட்சம் கோடியுடனும் முன்னிலை வகிக்கின்றனர்.

வந்தாச்சு இ&சிகரெட் இனி வராது கேன்சர்!

புதுடெல்லி, ஜூலை 2: புகைபிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகையில் இ& சிகரெட் விற்பனைக்கு வந்துள்ளது.

குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஜாய் 510’ என்ற அதன் விலை 1,650 ரூபாய். கடந்த ஆண்டில் ரிலீசான ஹாலி வுட் படம் ‘தி டூரிஸ்ட்’. ஜான் டெப் அதில் ஹீரோ. ஏஞ்சலினா ஜூலி ஹீரோயின்.

ரயிலில் எதிரெதிரே அமர்ந்து பயணம் செய்யும் காட்சி.  அதில் சிகரெட்டை இழுத்து புகை விட்டுக் கொண்டே இருப்பார் டெப். முகத்தில் புகை படர்ந்தாலும் அமைதி காப்பார் ஏஞ்சலினா.

‘நான் புகை பிடிப்பது உன்னை பாதிக்கவில்லையா... என்று கேட்கும் டெப், இது எலக்டிரானிக் சிகரெட்,  பாதிக்காது’’ என்பார்.  ஏஞ்சலினா ஆச்சரியமாக பார்க்க, ‘‘நம்பவில்லையா..’’ என்றபடி அதன் தீ நாக்கை கையில் தேய்த்தபடி...  இது எல்இடி லைட் என்று கூறுவார்.

ஆம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட இ& சிகரெட்,  இந்தி யாவில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது. குர்கானை சேர்ந்த இணையதள நிறுவனமான விண்ட்பைட் டாட் இன் இதை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து ‘ஜாய் 510’ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பவுண்டன் பேனா வடிவில் இருக்கும் அதில்,  அழுத்தி இங்க் நிரப்ப இருக்கும் பகுதியும் உண்டு. பேனாவில் இங்க்,  இ& சிகரெட்டில் நிகோடின் திரவம்.  ஆம்.  இந்த நிகோடின்தான் சிகரெட் பிடிப்பவர்களை திருப்திபடுத்துகிறது.  திரவத்தை சூடாக்க பேட்டரி, முனையில் எல்இடி விளக்கு.

‘ஜாய் 510’ சிகரெட்டின் ஒரு விசையை அழுத்தினால் பேட்டரி இயங்கி திரவம் சூடாகி புகை வரும். சிகரெட் முனையில் தீ நாக்கு போலவே விளக்கு எரியும்.  பிறகு வாயில் வைத்து இழுத்து வட்ட வட்டமாக புகை விடலாம்.

அந்த புகையால் யாருக்கும் பகையில்லை. இந்த இ& சிகரெட் சிலமுறை பயன்படுத்தி தூக்கி எறிவது ஸி300,  நீண்ட காலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது ஸி1,650 என 2 விலையில் கிடைக்கிறது. சிகரெட் பழக்கத்தை விட முடியாதவர்கள் இதற்கு மாறலாம்,  கேன்சரின் ஆபத்து இல்லாமல்!

மும்பை இன பயங்கரவாதத்தின் மீது நடவடிக்கை!

JULY 02, மும்பை: சிவசேனை தலைவர் பயங்கரவாதி பால் தாக்கரேவின் சொத்துக்களை முடக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்துத்துவா பயங்கரவாதி பால் தாக்கரே தனது கட்சியின் பத்திரிகையான “சாம்னாவில்’ 2008-ல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்.

இந்த கட்டுரை பிகார் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ராஜேஷ்குமார் சிங் என்ற வழக்கறிஞர் பிகார் மாநில ஆரா சப்டிவிஷனல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் ஆஜராகும்படி தாக்கரேவுக்கு பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. எனவே தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிபதி எஸ்.பி.எம்.திரிபாதி ஜூன் 27-ம் தேதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரௌட், தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாகும் என்று குறிப்பிட்டார்.

சிந்திக்கவும்:  பால்தாக்ரே சிவசேனை என்ற ஒரு பயங்கரவாத இயக்கத்தை நடத்தி வருகிறார். இது மராட்டியர் அல்லாத மற்ற மாநில மக்களுக்கு எதிரானது இயக்கம் மட்டும் அல்ல முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு இயக்கமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நடத்திய இன, மற்றும் மதக்கலவரங்கள் எண்ணில் அடங்காது. எந்த அரசும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியே வந்தது. இந்நிலையில் பீகார் அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.

உலகத்திற்கு நாம் தான் முன்னோடி பெருமைப்படுவோம்!

JULY 02, பிஞ்சுக் குழந்தைகளுக்கு இன்றுவரை திருமணம் நடத்தும் இராஜஸ்தான் மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறது.

 மூன்று லட்சம் குழந்தைகளை வைத்து சிறார் விபச்சாரத்தில் உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடும் இதுதான்.

எயிட்ஸ் தடுப்புப் பிரச்சாரத்திற்கு அதிகம் செலவழிக்கும் ஆசிய நாடும், எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவுவதில் முதல் நிலையிலுள்ள நாடும் இந்தியாதான்.

பெண் சிசுக்கொலை அதிகம் நடக்கும் நாடு, கலப்பு மணக்காதலர்களை கட்டி வைத்து எரிக்கப்படும்நாடு, ஸ்டவ் வெடித்துச் சாகும் மருமகள்கள், உடன் கட்டை ஏற்றிக் கொல்லப்படும் இளம்பெண்கள், உலகின் பழம்பெரும் விபச்சார நிறுவனமான தேவதாசி முறை ஆகியவற்றின் உறைவிடம் இந்தியாதான்.

மேலவளவுப் படுகொலை, தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தில் பெயர் எழுதும் ரன்பீர் சேனா, முசுலீம்களின் தலைகளை விதைத்துப் பயிரிடப்பட்ட பகல்பூரின் காலிஃபிளவர் வயல்கள், சிறுநீரகங்களை அறுத்துக் கொடுத்துக் கடன் வாங்கும் நெசவாளர்கள், கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயிகள் இவற்றினை உலக வரலாற்றில் பார்ப்பது சிரமம்.

குஜராத்  போன்ற இன அழிப்பு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசு அடக்குமுறைகள், பெண்களுக்கெதிரான அடக்குமுறை, போலீசின் உதவியோடு லாக்கப் கொலை – கற்பழிப்பிலும் இந்தியாவே முதலிடத்தில் வருகிறது. மேலும் தொழுநோய், காசநோய், யானைக்கால், பெரியம்மை, பார்வையற்றோர், ஊழல் இவற்றிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கின்றது.

குஜராத்தில் 15,000 பேர் தடா சட்டத்தில் கைதானது, பஞ்சாபில் 25,000 இளைஞர்கள் கொல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்தது, காஷ்மீரில் காணாமல் போனவர்களைத் திருப்பித் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களைக்கூட காக்கை குருவி போல சுட்டுக்கொல்வது, வடகிழக்கில் போராளிகளையும், ஆந்திரா – பீகாரில் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் போலி மோதலில் சுட்டுக் கொன்றது.

பஞ்சாப், ஈழம், வடகிழக்கு, காஷ்மீரில் போராடுகின்ற குழுக்களை உடைத்து கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, மனுக் கொடுக்க வந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், நாக்பூர் கோவாரி பழங்குடியினரையும் அடித்துக்கொன்றது, வீரப்பன் தேடுதலைச் சாக்கிட்டு அதிரடிப்படை கிராமம் கிராமமாகப் பெண்களைக் கற்பழித்தது
-மலர்- 

பொது நிகழ்சிகளில் மரக்கன்று நடுவது நல்ல முன்னுதாரணம்!

JULY 02, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், பிற்படுதப்பட்டவர் களுக்ககவும் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட SDPI யின் 3 ஆண்டு தொடக்க விழா இந்தியா முழுவதும் கொடியேற்று விழா மற்றும் ஒரு லட்சம் மரகன்றுகள் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக நமது ஊர் ஏர்வாடியில் நெல்லை மாவட்ட தலைவர் தலைமையில் நான்கு இடங்களில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.

சிந்திக்கவும்: ஒவ்வொரு பொது நிகழ்சிகள், விழாக்கள் இவற்றில் இப்படி மரம்நடும் நிகழ்ச்சியை இணைத்து அரசியல் கட்சிகள், மற்றும் பொதுநல அமைப்புகள், தொண்டு அமைப்புகள் செய்ய ஆரம்பித்தால் இந்தியா ஒரு பசுமை நாடாக மாறும். நல்ல ஒரு முயற்சி வாழ்த்துக்கள். அதுபோல் நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வாங்க வேண்டும் என்று அரசு எப்படி சட்டம் வைத்துள்ளதோ அதுபோல் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறும்போதும் இத்தனை மரங்கள் நட்ட வேண்டும் என்ற நிபந்தனையோடு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இந்தியாவை புறக்கணித்த இலங்கை! அவமானத்தில் இந்தியா!

கொழும்பு, JULY 02: சீனாவின் கரன்சியை (யுவான்) இலங்கையின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதியளித்துள்ளது.

இலங்கையில் இப்போது ஆஸ்திரேலியாவின் டாலர், கனடாவின் டாலர், டேனிஸ் குரோனர், யூரோ, ஜப்பானின் யென், ஹாங்காங் டாலர், நியூசிலாந்து டாலர், நார்வேயின் குரோனர், இங்கிலாந்தின் பவுண்டு ஸ்டெர்லிங், சிங்கப்பூர் டாலர், சுவிடனின் குரோனர், ஸ்விஸ் ஃபிராங், அமெரிக்க டாலர் ஆகியவை செலாவணியாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவின் கரன்சி, இலங்கையின் பன்னாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா-இலங்கையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் சீனா கரன்சி ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக பரிவரத்தனை எளிதாகும் என்றும், கரன்சி பரிமாற்ற செலவும் குறையும் என்று கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் டாக்டர் சிரிமால் அபோ ரத்னே கூறினார்.

இந்தியா-இலங்கை இடையேயான வர்த்தகம் அதிக அளவில் உள்ளது. 2008-09-ம் ஆண்டில் 2.8 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஆனால், சீனா-இலங்கை இடையிலான வர்த்தகம் 1.1 பில்லியன் டாலராக உள்ளது. இலங்கயின் மொத்த இறக்குமதியில், 18 சதவிகதம் இந்தியாவிலிருந்துதான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இலங்கை அரசு அனுமதித்துள்ள வெளிநாட்டு கரன்சிகளில் இந்திய ரூபாய் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை! உலகம் விழிக்குமா?

ஜூலை 02, ஜெனிவா:  காங்கோ நாட்டில் கடந்த மாதம் அந்நாட்டு ராணுவத்தினர் சுமார் 121 பெண்களை கற்பழித்ததாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கூறியுள்ளது.

தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள நையாகிலே என்னும் கிராமத்தில்,  ஜூன் 11 முதல் 13 வரையிலான தேதிகளில் இந்த குற்றச் சம்பவம் நிகழ்ந்ததாக ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில்லே தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து கூடுதல் விவரம் திரட்ட, ஐநா புலனாய்வாளர்கள் அடுத்த வாரம் சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு நேரில் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார். காங்கோவில் ராணுவத்தினரும் தீவிரவாதக் குழுக்களும் இவ்வாறு கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது அடிக்கடி நிகழ்கிறது.

சிந்திக்கவும்: நாகரிகம் வளர்ந்த காலத்தில் காட்டுமிராண்டிகள் போல்  பெண்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விடும் இவர்களுக்கு உடனே மரணதண்டனை விதிக்கவேண்டும். சினிமா மற்றும் கல்வியில் மாற்றம் வேண்டும். ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் மனித உரிமைகள், பெண்களை போற்றுவது பற்றி கற்று கொடுக்க வேண்டும். ஆணாதிக்க உணர்வை ஒழித்து பெண்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் வழங்கிடல் வேண்டும். நாகரிக உலகம் இதில் கவனம் செலுத்துமா?

-யாழினி-

ஞானப்பறவைகள்!

வழக்கமான வாழ்க்கையைத் துறந்து தன்னிலை அறியும் வேட்கையில் வாழ்வின் பாதையை மாற்றி பயணித்து வெற்றி கண்டவர்கள் சித்தர்கள்.

போகர், திருமூலர், கொங்கனார், சுந்தரானந்தர், சிவவாக்கியார், உரோமமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி முனிவர் போன்றோர் பிரபலமானவர்கள்.

யய்யாடி! கோவணத்தைக் கட்டிக்கிட்டு, கையிலே குச்சியை வெச்சிகிட்டு காடு, மலை, கொகைன்னு பெரிய க்ரூப்பே திருஞ்சிருக்கா? ன்னு வடிவேலுத்தனமா கேட்க வேண்டாம். இன்னும் கூட இந்தப்பட்டியல் நீளலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

இவர்கள் பழமைமிகு தமிழ்க் கலாசசரத்திற்கும், அதீத சிந்தனைக்கும் கிடைத்த அரிய பெரும் பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். அன்று சித்தர்கள் என்பவர்கள் உருவம் அற்ற ஓர் இறைவனையே வழிபட்டார்கள்.

அவர்களின் பார்வையில் கடவுள் வழிபாடு என்பது மனிதமனத்தின் செம்மைப்படுத்பட்ட உயர்நிலை. அத்தகைய மேலான மனப்பக்குவத்தை பயிற்சிசியின் மூலம் எவரும் அடையமுடியும் என்பதை அவர்களின் பல பாடல்கள் நிரூபிக்கின்றன.

இறைநிலை, இறைவன் என்கிற தத்துவார்த்தங்களை வைத்துக்கொண்டு மக்களை எமாற்றிடும் ஆன்மீகத்தை கடுமையாகச் சாடியுமிருக்கின்றனர். இது குறித்து பாம்பாட்டிச்சித்தர் பாடல் ஒன்றில்

பூசை செய்தாலே சுத்தபோதம் வருமோ?
பூமி வலம் செய்ததனார் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே ...
என்று ஆன்மீகத்தின் பெயரால் செய்யும் கேலிக்கூத்தை கேள்விக் குள்ளாக்குகிறார்.

அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் அருளிய ஹோம முறைகளும் நமக்கு கிடைக்கின்றன. இந்த ஒரு குறிப்பிட்ட உயர்சாதிப் பிரிவினரால் மட்டுமே நடத்தப்படவேண்டும என்றும், அவர்கள் தான் அதை செய்து பலனை வழங்க வேண்டும் என்ற விதிகளை உடைத்து, ஆர்வம் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்று வலியுருத்துகிறது சித்தரியல்.

வைத்தியம், வான சாஸ்த்திரம், இரசவாதம், சூத்திர சாஸ்த்திரம், யோகம் போன்றவற்றிலும் அவர்கள் தேர்ச்சி கண்டவர்களாக இருந்தனர். ஊனினைச் சுருக்கி, உள்ளொளி பெருக்கும் தன்மையினைக்கண்டு தெளிந்த மேதைகள் அவர்கள்.

இறைபக்தி இல்லாத ஒருவனிடம் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அவையனைத்தும் பயனற்றவைகளாகவே போகும் என்றும்,  இறைபக்தியே ஒருவனை வாழ்க்கையில் உயர்த்தும் என்றும் சொன்ன இடைகாட்டுச் சித்தர் தன் பாடல் ஒன்றில்....

அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே இறைபக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே " என்கிறார்.

சித்தர்களை வகைப்படுத்த முடியுமே தவிர வரையறுக்க இயலாது. அவர்கள் தனித்துவமானவர்கள் ஆதியும் அந்தமும் ஆன இறைவனிடம் ஒடுங்குவதையே இலக்காக கொண்டிருந்தனர். இந்த வகைக்கு பட்டினத்தார், அருணகிரி நாதர், தாயுமானவர் போன்றோரை சொல்லலாம்.

இப்பொழுது நாம் பயன்படுத்தும் சித்த வைத்திய முறை அவர்கள் நமக்களித்த பொக்கிஷமே. உலோகங்கள், உப்புகள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும், பல உடல் பொருட்கள் விலங்குகளின் உடலிலிருந்து கிடைக்கும் கஸ்தூரி, புனுகு சலம், சாணம், முதலியவற்றின் குணங்கள் எல்லாம் கண்டறிந்து அவற்றின் நோய்த்தீர்க்கும் பண்புகளை கண்டறிந்தவர்களும் அவர்களே .

ஜெர்மன், சுவீடன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சித்தர்களின் மருத்துவ குறிப்புகளை வியப்புடன் ஆராய்ந்து வருகின்றன. சீனாவில் அநேகர் சித்த உணவு முறையே பின்பற்றுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆஸ்ரமம் என்ற பெயரில் இவர்களுக்கு மாட மாளிகைகளோ, பக்த கோடிகளோ இல்லை என்பது போல சித்தர்களுக்கு அந்தரங்கமும் இல்லை, இதுவரை வழக்குகளேதும் பதிவானதுமில்லை.

இவர்கள் ரத்தம் குடிக்கும் அரசியவாதிகளுமல்லர், மனித அறிவு தின்னும் சாமியார்களுமல்லர். மாறாக இம்மியளவும் பிரதிபலன் பாராது மனிதகுல நல்வாழ்விற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சித்தர்களும் மகாத்மாக்களே!

Jun 30, 2011

யானைக்கு வந்த வாழ்வை பாருங்கள்!

JULAI 01, குருவாயூர்:  குருவாயூரில், 63 யானைகளுக்கு, இன்று முதல், ஆயுர்வேத சிகிச்சை துவங்குகிறது. குருவாயூர் தேவஸ்வத்தில், தற்போது, 63 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில், 12 யானைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த யானைகள் உட்பட, 63 யானைகளுக்கும், 6 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் செலவில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 378 கிலோ ச்யவனப்ராசம், 189 கிலோ அஷ்ட சூரணம், 1,440 கிலோ பச்சைப் பயறு, 450 கிலோ கொள்ளு, 283 கிலோ சார்கோ பைரோஸ், 47 கிலோ வைட்டமின்கள், 95 கிலோ மஞ்சள்தூள், 5,670 கிலோ அரிசி ஆகியவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த சிகிச்சை, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்: அட பாவிகளா! கோடிக்கணக்கான ஏழை மக்கள் நீரழிவு நோய் மற்றும் நோய்களில் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவ வசைதிகளை செய்து கொடுக்க முடியவில்லை. போதிய மருத்துவமனைகள் இல்லை, மருந்துக்கள் இல்லை. இதனால் அன்றாடம் சாகும் ஏழை மக்கள் ஆயிரம் ஆயிரம்.

இப்படி இருக்க இவர்கள் யானைகளுக்கு 6 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் செலவில் வைத்தியம் பார்க்கும் இவர்களை என்னவென்று சொல்வது. இந்த பணத்தை கொண்டு எத்தனையோ ஏழை உயிர்களை பாதுகாக்கலாம். ரேத்ததானம், கண்தானம் இப்படி ஒருபுறம் மக்கள் சமூக செயவைகளில் ஈடுபட்டு வரும் சூழலின் இவர்களை யானைக்கு வைத்தியம் பார்க்கிறார்களாம்

சாப்பிட ஒரு வேலை உணவு இல்லாமல் தினம் தினம் சாகும் மனிதர்கள் எத்தனை, அப்படியிருக்க இங்கு யானைக்கு 5,670 கிலோ அரிசி, 1,440 கிலோ பச்சைப் பயறு, 450 கிலோ கொள்ளு, 283 கிலோ சார்கோ பைரோஸ், என்று அள்ளி கொடுகிறார்கள். இவர்களுக்கு ஹிந்துத்துவா கற்றுகொடுத்த மனித நேயம் இதுதான்.

மாட்டு கறியை சாப்பிடாதே என்று கூறி அந்த மாட்டை சாகும் வரை பராமரிக்க இவர்கள் செய்தும் செலவு பல லட்ச்சங்கள். பசியில் வாடும் மனிதனை பராமரிக்க முடியவில்லை, இவர்கள் யானையும், மாட்டையும் பராமரிக்கிறார்கள். ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

புருலியா ஆயுத மழை! இந்தியாவுக்கு டென்மார் கொடுத்த அடி!

JUNE 01, புதுடில்லி: "புருலியா ஆயுத வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கிம் டேவியை, இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது' என, டென்மார்க் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில், 1995ல் விமானத்தில் இருந்து, ஏராளமான ஆயுதங்கள் கீழே போடப்பட்டன. ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் என, ஏராளமான ஆயுதங்கள் வீசப்பட்டன.

இந்த ஆயுதங்கள் ஆனந்த மார்க்கம் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்திற்கு போடப்பட்டது. இந்த ஆனந்த மார்க்கம் என்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், டென்மார்க்கை சேர்ந்த கிம்டேவி என்பவருக்கு தொடர்பு இருப்பதை, சி.பி.ஐ., கண்டு பிடித்தது. அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சில நிபந்தனைகளின் பேரில், கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க் அரசு முன்வந்தது.

கிம் டேவிக்கு தூக்கு தண்டனை விதிக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை. டென்மார்க் அரசின் இந்த முடிவை எதிர்த்து, கிம் டேவி சார்பில் விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த விசாரணை கோர்ட், கிம் டேவியை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என, தீர்ப்பளித்தது.

இதையடுத்து, டென்மார்க் ஐகோர்ட்டில் இந்த வழக்கு மேல் முறையீடுக்காக சென்றது. இதில், கிம் டேவியை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்ற விசாரணை கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்வதாக தெரிவித்த ஐகோர்ட், டென்மார்க் அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஐகோர்ட் உத்தரவில்,"இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலை மற்றும் மனித உரிமை பிரச்னை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிம் டேவி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு அவர், விசாரணை என்ற பெயரில் கொடுமைக்கு ஆளாகலாம்' என, உத்தரவிட்டது. இந்த தகவலை தெரிவித்த சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர், ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, டென்மார்க் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறினார்.

துரத்தும் சி.பி.ஐ.! ஓடும் சாமியார்!

JULY 01, ஊழல் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு ஆதரவு பிரச்சாரத்தை செய்து வந்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா மாஸ்டர் ராம்தேவின் உதவியாளர் இப்போது சிக்கலில் மாட்டி உள்ளார்.

சாமியார் ராம்தேவ் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பத்து வருடங்களுக்கு முன் ஓட்டை சைக்கிளில் வலம் வந்தவர் இப்பொழுது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.

சமாமியார் ராம்தேவ் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருந்தது மற்றும் போலி மருந்து கம்பனிகள் நடத்தி வந்தது பற்றி    சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இவரது நெருங்கிய உதவியாளர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு பொய் தகவல் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், பாபா ராம்தேவுக்கு நெருக்கமான ஆச்சாரியா பால கிருஷ்ணனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்த விசாரணை நடைபெற்றது. மேலும், பாலகிருஷ்ணனுக்கு ஹரித்துவார் நகராட்சி அலுவலகம் வழங்கிய இரண்டு பிறப்பு சான்றிதழ்களில் முரண்பாடு உள்ளது.

இது தொடர்பாக, ஹரித்துவார் நகராட்சிக்கு சென்று, பிறப்பு, இறப்பு பதிவேடுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் ஹரித்துவார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.

வர்ணாசிரமம், ஹிந்துத்துவா நமக்கு தந்த பரிசு! மேலவளவு!

JULY 01 மதுரை, மறக்க முடியுமா மேலவளவை. இங்குதான் வர்ணாசிரம ஹிந்து ஆதிக்க வெறியர்களால் ஆறு தலித் சகோதர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த ஜாதி வெறியர்கள் எப்படி தோன்றினார்கள், இவர்களிடம் ஜாதி என்ற அந்த விஷ வித்தை விதைத்து எது என்று பார்த்தால் அதுதான் ஹிந்துதுவாவின் அடிப்படை கொள்கை சித்தாந்தமான வர்ணாசிரம கொள்கை.

இந்த கொள்கைதான் ஒரு சாதாரண மனிதனை ஜாதி வெறி கொண்டவனாக மாற்றி ஆறு அப்பாவி உயிர்களை கொன்று குவிக்க காரணமாக அமைந்தது அன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் முருகேசன்.

இவர் மற்றும் துணைத்தலைவர் மூக்கன் மற்றும் இதே ஊரைச் சேர்நத ராஜா, செல்லத்துரை, பூபதி, சேவுகமூர்த்தி ஆகிய ஆறு பேரும் கடந்த 1997 ஜூன் 30ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அங்கு தீயில் எரிந்து குடிசை வீடுகளுக்கான நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் மீண்டும் ஊருக்குச் சென்ற போது ஆறு பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேலவளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளது.

யார் கூறுவது உண்மை? ராஜபக்சேவா மன்மோகன் சிங்கா?

JULY 01,  இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை நிர்பந்தித்து வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

ஆனால் நேற்றைய தினம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார். யார் கூறுவது உண்மை? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ராஜபக்சே தெரிவித்திருக்கிற கருத்தை இந்தியப் பிரதமர் மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

இலங்கையில் போர் உச்சக் கட்டமாக நடைபெற்ற வேளையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் போராடிய போது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு கூறியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

ஆனால் ராஜபக்சே அதை மறுத்தார். இந்தியா ஒருபோதும் போர் நிறுத்தம் செய்யும்படி கேட்கவில்லை என பகிரங்கமாகக் கூறினார். அதைப் போல இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவி எதையும் இந்தியா செய்ய வில்லை என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால் இந்தியா செய்த உதவியால்தான் தாங்கள் வெற்றிபெற முடிந்தது என ராஜபட்ச போர் முடிந்தபிறகு கூறினார். இவ்வாறு தங்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாடகமாடுவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

Jun 29, 2011

முதல்வரின் திட்டங்கள் இந்தியாவுக்கு முன்னுதாரணம்!!

சென்னை,ஜூன்.30 - கிராமப்புற மேம்பாடு, வெண்மை புரட்சி, பசுமை புரட்சி, சிறப்பு திட்டம் ஆகிய திட்டங்களை தந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் ஜெயலலிதா இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்வதால் இந்தியாவின் வளர்ச்சி கிராமப்புற வளங்களை மையமாக கொண்டுள்ளது.  இதுவே வளமான இந்தியாவின் 2020 ன் முக்கிய அம்சமாகும். கிராமப்புறங்களில் கல்வி தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் முதலில் அதற்கு தேவையான அனைத்து விதமான கட்டமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும்.

இதனை புரா திட்டம் மூலம் செய்ய வேண்டும். தமிழக அரசு புரா திட்டத்தை மாநிலம் முழுவதும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்த முடிவு கிராமப்புறத்தை மட்டுமல்ல, அனைத்து மற்றும் கல்வி ஆராய்ச்சி துறைகளையும் தொழில் முனைவோர்களையும், விவசாயிகளையும், சுய உதவிக் குழுக்களையும் ஒருங்கிணைத்து ஒரு சமூக பொருளாதார அறிவியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

2020 க்குள் வளர்ந்த இந்தியாவை நாம் படைக்க வேண்டும் என்றால் நம் மாநிலம் ஒவ்வொன்றும் வளர வேண்டும். கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக மாற்ற வேண்டும். சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி, எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியா திகழ வேண்டும்.

அதில் 2 வது விவசாய புரட்சி திட்டம், வெண்மை புரட்சி திட்டம், எத்தனால் பயோ எரிசக்தி உற்பத்திக்கு சிறப்பு கரும்பு வளர்ப்பு திட்டம், சோலார் மற்றும் மரபு சாரா மின்சார உற்பத்தி திட்டங்களை சிறு, குறு மற்றும் பெருந்தொழில் மேம்பாடு, கல்வி, மருத்துவம், நதி நீர், அடிப்படை கட்டமைப்பு, புரா திட்டத்தின் மூலம் நீடித்த கிராமப்புற மேம்பாடு போன்ற அனைத்து துறைகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை உருவாக்கி இருக்கிறது. இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

பதவியில் இருந்து தயாநிதி நீக்கப்படுவாரா? பிரதமர் பேட்டி!!

புதுடெல்லி,ஜூன்.30 - காங்கிரஸ் கட்சியின் கட்டளை இருக்கும்வரை நான் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தயாநிதிமாறன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கும் மன்மோகன் சிங் பதில் அளித்தார்.

நீண்டநாட்களுக்கு பிறகு நேற்று பிரதமர் மன்மோகன் சிங், மூத்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். ஆட்சி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கட்டளை எனக்கு இட்டு பிரதமராக்கியுள்ளது.

அந்த கட்டளை இருக்கும்வரை நான் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பேன் என்றார். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைமுறையினர் தலைமை ஏற்க வழி ஏற்படுத்திக்கொடுப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. இருந்தபோதிலும் எனக்கு கட்சி பொறுப்பை கொடுத்துள்ளது. கட்சி விரும்பும் வரை கடமையை நான் தொடர்ந்து ஆற்றுவேன்.

அதேசமயத்தில் காங்கிரஸ் விரும்பாவிட்டால் நான் அந்த பொறுப்பில் ( பிரதமர்) இருந்து விலகிக்கொள்வேன் என்றார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள், பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கூறுகிறார்களே என்று கேட்டதற்கு மன்மோகன் சிங் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சில கஷ்டங்கள் இருக்கின்றன என்பதை மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டார்.

கூட்டணி அரசில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதேசமயத்தில் அடுத்த தேர்தலை நாடு சந்திக்கக்கூடாது என்பதில் கூட்டணி கட்சிகளிடையே கருத்தொற்றுமை இருப்பது தெரிகிறது. அதனால் தற்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிப்பதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரையும் உட்படுத்துவது பற்றி குறிப்பிட்ட மன்மோகன் சிங், லோக்பால் மசோதாவுக்கள் பிரதமரையும் உட்படுத்துவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித ஆட்சேபகமும் இல்லை. அதேசமயத்தில் இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்குள் கருத்துவேறுபாடு இருக்கிறது.மத்திய அரசும் அதில் உல்ள அமைச்சர்களும் எதிர்க்கிறார்கள்.

மீதுமுள்ள நாட்களில் இதுகுறித்து பேசி கருத்தொற்றுமை காணப்படும் என்றும் மன்மோகன் சிங் கூறினார். நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் மற்றும் அமைச்சகத்தில் ஓட்டுக்கேட்டது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த மன்மோகன்சிங், இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கு பிரணாப் உத்தரவிட்டார்.

புலனாய்வுத்துறையும் விசாரித்தது. இந்த விசாரணையில் திருப்தி இருப்பதாக முகர்ஜியும் தெரிவித்துள்ளார் என்று பிரதமர் கூறினார். நாட்டில் ஊழலை ஒழிக்க அனைத்து கட்சிகளும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஆனால் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது நாங்கள் (காங்கிரஸ்) ஒத்துழைப்பு கொடுத்தது மாதிரி தற்போது பாரதிய ஜனதா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர் தயாநிதி மாறனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருவது குறித்து கேட்டதற்கு இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவர் முறைகேடு செய்திருந்தால் மாறனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் கூறினார். தற்போது நிலவும் சர்வதேச சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன் சிங்,அண்டை நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இந்தியாவுக்கு கவலை அளிக்கும்படி உள்ளது. இதை ஒத்துழைப்பு மற்றும் கூட்டு அணுகுமுறை மூலம் சமாளிக்கப்படும் என்றார். பிரதமர் மன்மோகன் சிங் அளித்தை பேட்டியை மூத்த பத்திரிகையாளர் அலோக் மேத்தா நிருபர்களுக்கு தெரிவித்தார்.

ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!

JUNE 30, புதுடில்லி: பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்' வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும்.

தினமலர் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, அதே நேரம் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு அதரவாக செய்திகளை வெளியிடுவதில் முதன்மை பெற்று வந்துள்ளது.

ஒவ்வொரு சந்தர்பத்திலும் தினமலர் தன்னை ஒரு ஹிந்த்துதுவா ஆதரவு பத்திரிக்கை என்பதை வெளிப்படியாக காட்டிக்கொள்ள தயங்கியது இல்லை. இவர்களின் ஒருசார்பு எழுத்துக்கள் மூலமாக எத்தனையோ இன, மத கலவரங்களை ஏற்பப்ப்பட்டுள்ளன .

இவர்கள் முஸ்லிம்கள் சம்மந்தமான செய்திகளை உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதுவதில் வல்லவர்கள். கோவை, மற்றும் இன்னபிற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாகட்டும், தலித் மக்களுக்கு எதிரான கலவரமாகட்டும் இவர்கள் செய்திகளை திரித்து வெளிட்டே வந்தனர். இதன் காரணமாக இவர்கள் பலமுறை பத்திரிக்கை கவுன்சிலுக்கு இழுக்கப்பட்டவர்கள்.

இவர்கள் மேல் பத்திரிக்கை கவுன்சிலில் பலமுறை வழக்குகள் தொடுக்கப்பட்டு அதற்க்கு மறுப்புகள் வெளியிட்டுள்ளனர். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு செய்திகளை தலைப்பு செய்தியாக்குவார்கள் அதேநேரம் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அந்த செய்திக்கு மறுப்பு வெளியிடும் பொது அதை ஒரு மூலையில் சிறிய செய்தியாக போட்டு இருட்டடிப்பு செய்வார்கள்.

அதுமட்டுமல்ல இதுவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக , கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஹிந்துத்துவா வெறியர்களால் நடத்தப்பட்ட மதக்கலவரங்களை திட்டமிட்டு மறைத்தும் இருட்டடிப்பு செய்தும் செய்தி வெளியிட்டு வந்துள்ளார்கள்.  இப்படி பட்ட பத்திரிக்கை தர்மத்தை பேணாத மேல்ஜாதி பார்ப்பன, வர்ணாசிரம வெறி கொண்ட இவர்களை பத்திரிக்கை கவுன்சிலில் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் பத்திரிக்கை துறையை ஹிந்துதுவாவின் கைகளில் கொடுக்கும் ஒரு சதியாகும் இதை நடுநிலையாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.
-மலர்-

ஒட்டுக் கேட்கும் கருவிகளை பயன்படுத்த தடை!

JUNE 30, புதுடில்லி: மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம் உள்ள ஒட்டுக் கேட்கும் கருவிகள் அனைத்தையும், தங்களிடம் ஒப்படைத்து விடும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம், எந்த ஒரு மொபைல் போனையும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் உள்ளன. இவை இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., வரை தகவல்களை ஒட்டுக் கேட்கும் திறன் கொண்டவை. இக்கருவிகள், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடியவை.

இக்கருவிகளைப் பயன்படுத்தி தொலைபேசிகள், மொபைல் போன்களை ஒட்டுக் கேட்பது சட்டப்படி குற்றம். மீறி அவற்றைப் பயன்படுத்தினால், இந்திய தொலைத் தொடர்பு சட்டத்தின் விதிகளை மீறிய குற்றமாகும். அதனால், அரசு மற்றும் தனியார் உளவு நிறுவனங்கள் அக்கருவிகளை தகவல் தொடர்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுப் படி, மத்திய அரசின் கீழ் இயங்கும், புலனாய்வுத் துறை (ஐ.பி.,), "ரா', மத்திய பொருளாதார புலனாய்வுத் துறை (சி.இ.ஐ.பி.,) வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஆகிய அமைப்புகள் தங்களிடம் உள்ள ஒட்டுக் கேட்புக் கருவிகளை, உள்துறை அமைச்சகத்தில் ஒப்படைக்க வேண்டி வரும்.

பேஸ் புக் பற்றி பாலியல் துஷ்பிரயோகம் அதிச்சி ரிப்போர்ட்!

ஜூன் 30,பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.

ஆம் http://www.orgasmprofile.com/  என்கிற இணையத் தளம்.  இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும்நேர்த்தியானது.என்கிற

எல்லாமே ஒரு ஏமாற்று வித்தைதான். ஆனால் மிகவும் நுட்பமானது. எவருடைய புகைப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும்.

இலங்கை போர் குற்றவாளிகளை தண்டிக்க இந்தியா உதவுமா?

JUNE 30, இலங்கையில் தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்திய தாக்குதலுக்கு,  பதிலடியாக இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்கள் மீது பயங்கரவாத இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்க இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

உலக நாடுகள் பல போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டபோதும், 7 கோடி தமிழர்களை தன்னகத்தே குடிமக்களாக கொண்ட இந்திய அரசு ஒப்புக்குக் கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை.

தமிழின படுகொலைக்கு துணை போன இந்திய அரசு தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்தது. இதையெல்லாம் துடைக்க இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து, சர்வதேச நீதிமன்றம் மூலம் தண்டிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது!

JUNE 30, நியுயார்க் ஜுன் 30,  ‘ஓரினச்சேர்க்கை’ யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கொடுமையான எச்.ஐ. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் ஓரினச்சேர்க்கையில்  ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச் ஐ வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளை, இவ்வாறான ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது. இது போன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்செர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதியஉண்மைகள் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, லத்தீன் அமெரிக்காவில் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு பிரதான காரணமாக ‘ஓரினச்சேர்க்கை’ விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோயால்’ தாக்கப்பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை விட மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், எய்ட்ஸ் பற்றிய சரியான அறிவுள்ள, உயர் கல்வி மற்றும் மருத்துவ துறையில் உள்ள ‘ஓரினச்செர்கையாலர்களிடையே’ நிலவும் ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று நிலவும் தவறான நம்பிக்கையாகும்.

இவ்வாறு ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று கருதும் ‘உயர் கல்வி, வேலை மற்றும் பொரளாதார’ பிரிவினரிடையே உள்ள ‘ஓரினச்சேர்க்கையில்’ ஈடுபடும் 35% பேருக்கு, எய்ட்ஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடுவோரிடையே, எய்ட்ஸ், கிளமீடியா, கோனோரியா மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பிஸ் ஆகிய நோய் பதிப்பு கடந்த பத்து வருடங்களில் 100% க்கும் மேற்பட்ட அளவில் அதிகமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்படும் பெண்களும், குழந்தைகளும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

JUNE 30, உலகில், 127 நாடுகளிலிருந்து, ஆண்டு ஒன்றுக்கு, பெண்கள், குழந்தைகள் என, 25 லட்சம் பேர் கடத்தப்படுவதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளவில், சட்டத்திற்கு விரோதமாக வருமானம் ஈட்டும் பட்டியலில், போதை மருந்து கடத்தல் முதல் இடத்திலும், இரண்டாம் இடத்தில் மனிதக் கடத்தலும் இடம் பெற்றுள்ளன.

ஆண்டு ஒன்றுக்கு, சர்வதேச அளவில் மனிதக் கடத்தலால் சட்ட விரோதமாக ஈட்டப்படும் வருமானம், 23 ஆயிரம் கோடியிலிருந்து, 41 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம் என்று, ஐ.நா., தெரிவித்துள்ளது.

கொத்தடிமைகளாக, குழந்தை தொழிலாளர்களாக மற்றும் பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்துவது, உலக நாடுகளில் அதிகளவில் நடந்து வருகிறது.

டெல்லி மேல்சபை உறுப்பினராக போட்டியிடும் ரபிபெர்னாட்!

சென்னை, ஜூன். 29, டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த கே.வி.ராமலிங்கம் தமிழக சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் அவர் தமிழக அமைச்சராக நியமிக்கப்பட்டு பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.  இதனால் அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பாராளுமன்ற மேல்-சபையில் தமிழக எம்.பி. பதவி ஒன்று காலியாக உள்ளது.  டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக ரபிபெர்னாட் நிறுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து  முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்துள்ள முடிவின்படி 22-7-2011 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ரபிபெர்னார்ட்டை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேல்-சபை உறுப்பினரை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. வுக்கு தனி மெஜாரிட்டி இருப்பதால் அந்த கட்சி சார்பில் நிறுத்தப்படுபவரே மேல்-சபை எம்.பி.யாகும் வாய்ப்பு உள்ளது. எனவே ரவி பெர்னாட் போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

Jun 28, 2011

இந்தியா-வங்கதேசம் கனவாய் பாதை விரைவில் திறப்பு!

ஷில்லாங், ஜூன். 29 - 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-வங்கதேசம் நாடுகளுக்கிடையே உள்ள ஹாட்ஸ் கனவாய் பாதை விரைவில் திறக்கப்படுகிறது.

இதனால் இருநாடுகளுக்கிடையே மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்து தற்போது மேகாலாயா மாநிலத்தில் உள்ள பாலத் மற்றும் கலைசியாரில் இருக்கும் காட்ஸ் கனவாய் பாதையில் சர்வதேச அளவில் வர்த்தகம் நடந்து வந்துகொண்டியிருந்தது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்கதேசம் நாடாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த காட்ஸ் கால்வாய் மூடப்பட்டுவிட்டது. இதனால் வர்த்தகமும் நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்க கனவாய் பாதையை திறக்க நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கனவாய் வழிநெடுகிலும் சந்தைகள் மற்றும் கடைகள் கட்டும்பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த கனவாய் மீண்டும் திறக்கப்பட்டவுடன் இந்தியா வங்கதேசம் இடையே மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கனவாய் மேற்குவங்காளத்தில் இருந்தது. மேற்குவங்காளத்தில் இருந்து மேகாலாயா மாநிலம் பிரிந்து சென்றுவிட்டதால் இதில் ஹாட்ஸ் கனவாஸ் பாதையும் சேர்ந்துவிட்டது. வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து வங்கதேச அரசு பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள்.

தமிழக மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம்! மமக!

JUNE 29, சென்னை : ""மனிதநேய மக்கள் கட்சியை வலுப்படுத்துங்கள் உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம்,'' என, ம.ம.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.

மத, இன பாகுபாடுகளை ஒழித்து தமிழக மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்க பட்ட கட்சிதான் ம.ம.க. என்றார் அவர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இக்கட்டான காலத்தில் 1995ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், அதிக அளவில் ரத்ததானம் செய்த இயக்கத்தினர் த.மு.மு.க.,வினர் தான்.

எல்லா தரப்பு மக்களுக்கும் வேண்டி இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் நடத்தி வருகிறோம். சுனாமி பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட போது, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம்.

பின், மனிதநேய மக்கள் கட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கி, அனைத்து சமுதாய மக்களுக்கும் பாடுபடுகிறோம்.  இந்த தேர்தலில் ம.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி, கட்சியினரின் உழைப்புக்கும், பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் கிடைத்த அங்கீகாரம்.

மாணவியை கெடுத்த பொருக்கி இன்ஸ்பெக்ட்டர் தப்பி ஓட்டம்!

JUNE 29, கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுதீர். இவரது மகள் விஜயா. 14 வயதான இவர் பள்ளியில் படித்து வந்தார். அப்போது விஜயாவை சினிமா நடிகையாக்குவதாக கூறி தந்தையே விபசாரத்தில் தள்ளினார்.

சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் அந்த மாணவி விருந்தாக்கப்பட்டார்.  பெற்றோரின் பண ஆசையால் செக்ஸ் சித்ரவதைக்குள்ளான மாணவி அவர்களின் பிடியில் இருந்து தப்பி எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

தந்தையே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடுமையை போலீசாரிடம் கூறி கதறி அழுதார்.  200-க்கும் மேற்பட்டோர் பலவந்தப்படுத்தி தன்னை கற்பழித்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள சட்டசபையிலும் இது எதிரொலித்தது.

இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் பெற்றோர் சுதீர், உடனடியாக கைது செய்யப்பட்டனர்.  தொடர்ந்து மாணவியை கற்பழித்த மலையாள நடிகர் விஜயன், கம்யூனிஸ்டு பிரமுகர் தாமஸ் வர்க்கீஸ் மற்றும் பெண் புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவி தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் விருந்தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைதானார்கள். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மின் வாரிய அதிகாரி முருகேசன், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும் 9 அதிகாரிகள் மாணவியை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் கோவையில் முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையே மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குமரி - கேரள எல்லையில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது காண்டிராக்டர் மணிகண்டனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

அப்போது மணிகண்டன் மீதான வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மணிகண்டன் அவருக்கு மாணவியை விருந்தாக்கியுள்ளார். மணிகண்டன் கைதானதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பற்றிய விவரத்தை கேரள போலீசாரிடம் தெரிவித்தார்.  இதையடுத்து கேரள போலீசார், குமரி மாவட்ட இன்ஸ்பெக்டரை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

ஆனால் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் சிக்காமல் தலைமறைவானார். இந்த தகவல் பரவியதும் இன்ஸ்பெக்டர், குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்துக்கான நியமன ஆணையைகூட அவர் வாங்கவில்லை. கேரள போலீசார் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அவரை தேடி வருகிறார்கள்.

ஆண் ஆதிக்கம்! பெண்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள்!

JUNE 29, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அடுத்த முதியா நெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (45). விவசாயி. மனைவி லட்சுமி (34). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று தங்கவேல் வெளியில் சென்றிருந்த நேரத்தில், தங்கவேலின் தாய் பொன்னம்மாள், தங்கவேலின் தம்பி மணி(42) ஆகியோர் லட்சுமியோடு சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் மூவருக்கும் தகராறு முற்றியது. மணி, லட்சுமியை தாக்கியுள்ளார்.

அவர், லட்சுமியை பிடித்துக் கொள்ள, மாமியார் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்துவந்து ஊற்றி, கொள்ளிக்கட்டையில் தீ வைத்து விட்டார். மளமளவென தீப்பற்றி,  லட்சுமியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது,  உடலில் நெருப்போடு மாமியாரை கட்டிபிடித்தார். இதில் மாமியாரின் உடலிலும் தீப்பிடித்தது.

ஆபத்தான நிலையில் லட்சுமி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். மாமியார் பொன்னம்மாள், காங்கயம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  மைத்துனர் மணி தலைமறைவானார். இது குறித்து தகவலறிந்த அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்கு பதிவு செய்து, மணியை கைது செய்தார். பொன்னம்மாள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழிந்து போன இந்தியாவின் போலி மதச்சார்பின்மை!

JUNE 29, இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் “மதச்சார்பற்ற அரசு” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுவிட்டது. ஆனால் நடைமுறையில் என்ன? இந்திய அரசு மதச்சார்பற்றதாகத்தான் உள்ளதா? இந்திய அரசியல் வாழ்வு அப்படித்தான் உள்ளதா?

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத்தும் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலும் சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் அமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். நேருகூட பெரும் எதிர்ப்பு காட்டவில்லை, காந்திஜிதான் எதிர்த்தார். ஆலயம் எழுப்ப வேண்டும் என்றால் இந்துக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் எழுப்ப வேண்டுமே தவிர அரசுப் பணத்தில் அல்ல என்றார்.

ஒரு தனிமனிதர் தன்னளவில் மத நம்பிக்கையாளராக இருப்பதற்கும், ஆட்சியாளர் என்ற முறையில் மதச்சார் பற்றவராக இருப்பதற்கும் இடையில் இருக்க வேண்டிய கண்டிப்பான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டினார். ஒர் ஆழ்ந்த மதநம்பிக்கையாளரான காந்திஜியிடமிருந்து வந்த எதிர்ப்பு மிகுந்த அர்த்தபாவமுடையது. இதற்கெல்லாம் சேர்த்துத்தான் அவரது உயிரைப் இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பலி கொண்டது.

இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று சட்டப்புத்தகத்தில் இருந்தாலும் அது பெரும்பான்மை மதமாகிய இந்து மதச்சார்பு அரசாகவே உள்ளது என்பதற்கு அதன் வேறு பல செயல்பாடுகளும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அரசு நிகழ்ச்சிகள் பலவும், குறிப்பாகத் திறப்பு விழாக்கள் பலவும் இந்து சாஸ்திர, அதாவது பிராமணிய முறைப்படியே நடைபெறுகின்றன. பல மதத்த- வரும் அல்லது மத நம்பிக்கையற்றவரும் கொடுத்த வரிப்பணத்தில் அரசுத் திட்டங்கள் உருவாக்கப்பட்;டவை என்கிற உணர்வே இல்லை.

அரசு அலுவலகங்களில் இந்து கோவில்கள் இருக்கின்றன, இந்து சாமி படங்கள் இருக்கின்றன. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சரஸ்வதி பூஜை நடத்தப்படுகிறது. ஒரு நூலகத்திற்குப் பொறுப்பாளராக ஒரு முஸ்லிம் இருந்தால் அவர் பாடு திண்டாட்டம்தான். அவர் ஏற்காத விக்கிரக ஆராதனை அவர் கண் முன்னாலேயே நடைபெறும். இதனினும் கொடுமை இது தவறு என்கிற உணர்வே அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களிடத்தில் இல்லாதது. அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

இதுவெல்லாம் சிறுபான்மை மதத்தவர் உள்ளத்தில் தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் எனும் எண்ணத்தை உருவாக்குகிறது, அல்லது அரசு அலுவலகங்களில் இந்து மத விழாக்கள் கொண்டாடப்படுவது போலத் தங்கள் விழாக்களும் கொண்டாடப்பட வேண்டும் எனும் கோரிக்கையைக் கிளப்புகிறது. ஆனால் சிறுபான்மையினர் என்கிற காரணத்தாலேயே அது சாத்தியமில்லாமல் போகிறது.

“சகல மதங்களிடமும் அரசு சமத்துவம்” என்பது காரிய சாத்தியமில்லாதது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. ஒரே வழி அரசு நிறுவனங்களிலிருந்து சகல மதங்களையும் ஒதுக்கி வைப்பதுதான். அரசு ஊழியர்கள் அவரவர் வீட்டில் தத்தம் மத அனுஃ;டானங்களைச் செய்ய வேண்டுமே தவிர அவர்கள் பணிபுரியும் இடங்களில் அல்ல.

இந்தியாவில் மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. இந்து காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது.

இந்துத்துவா’ வகுப்பு எடுக்கும் இயக்குனர் 'பாலா'!

JUNE 28, சமூகத்தில் ‘உதிரி’களாக்கப்ட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முறையை சினிமாவின் இலாப வெறிக்கு பயன்படுத்தும் ஒரே இயக்குனர் நமது ‘பாலா’ தான்.

மனநோயிலிருந்து விடுபட்டும் ஆசிரமத்திலிருந்து வர இயலாத கதாநாயகன், தொண்டைக் குழியை கடித்து குதறும் கதாநாயகன், மனிதர்களை Horlicks போல் அப்படியே சாப்பிடும் கதாநாயகன்,

என அவரது பாத்திர படைப்புகளின் மீது திணிக்கப்பட்ட சோகமும், வக்கிரம் பிடித்த வன்முறைக் காட்சிகளும் தவறாமல் இடம் பிடிக்கும். அந்த வகையில், அவன் - இவன் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அபத்தத்தின் உச்சம்.

ஒரு ஊர்ல ஒரு ஜமீன்தார், அவர் மீது பாசம் வைத்திருக்கும்    இருகதாநாயகர்கள். அவர்கள் இருவருக்கும் அப்பா ஒன்று அம்மா வேறு வேறு.  தாயும், மகனும் சேர்ந்து ‘தண்ணியடிக்கிறார்கள்” (குடித்து கும்மாளம் போடுகிறார்கள்) .

கதாநாயகர்கள் இருவர் குடும்பத்தின் உறுப்பினர்களுமே விரசமான மொழியில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களது நடவடிக்கைகள் அதை விட கேவலமாக இருக்கிறது. இப்படி ஒரு குடும்பமும் ஊரும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறதாம்.

அந்த காமெடி பீஸ் ஜமீன்தாரை, வில்லன் கொன்று விடுகிறான். அதற்காக நமது கதாநாயகர்கள் இருவரும் சேர்த்து அந்த வில்லனை கொன்று விடுகிறார்கள். அதோடு “a film by Bala” என்று டைட்டில் போட்டு விடுகிறார்கள்.

படத்தில் “பாலா’வின் பெயரைச் சொல்லும் விதமான காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, இருக்கவே இருக்கிறது ‘சமீன்தாரை” நிர்வாணமாக ஓடவிடச் செய்யும் காட்சி. 55 வயது மதிக்கத் தக்க ஒருவரை அம்மணமாக ஓடவிடுவதன் மூலம் பார்வையாளர்களை ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்பதே இயக்குனரின் எண்ணம்.

அதை விட கொடுமை என்னவென்றால், வில்லன் பேசும் வசனம். “குர்பானி” என்கிற பெயரில் ஒட்டகக்கறியை கொண்டு வந்து சாப்பிடுறான்களே? அவங்களை மட்டும் நீங்க ஒன்னும் சொல்லமாட்டிறீங்க?  என்று ஆதங்கப்படுகிறான் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் வில்லன்.

மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் உடையவர்களும், ஒட்டக இறைச்சி சாப்பிடக் கூடியவர்களும் முஸ்லிம்கள்களே. அதை எதிர்ப்பவர்களே ஹிந்துதுவாவினர் என்கிற அரசியல் பார்வை கூட பாலாவுக்கு இல்லை.

ஆர்.எஸ்.எஸ்.காரன் மாடு மற்றும் ஒட்டகக் கறி உண்பவர்களை மனுதர்ம அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்கிறான். ஆனால் நமது பாலாவோ, ஒட்டக இறைச்சி சாப்பிடுபவனை, மாட்டிறைச்சி சாப்பிடுகிறவன் தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறார். இராமகோபாலனுக்கே ஒரு படி மேலே போய் ‘இந்துத்துவ’ வகுப்பு எடுக்கிறார் நமது பாலா.

இந்த இடத்தில் ‘பாலா’வின் முந்தைய படைப்பான “நான் கடவுள்” திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது. ‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி புத்திசாலியாத்தாண்டா இருக்கான்’ என்று வில்லன் ஒரு வசனம் பேசுவான். அந்த வசனத்திற்கு முழுமுதற்பொறுப்பு ஜெயமோகன் என்னும் எழுத்தாளர். மேற்கூறிய வசனத்தில் இரண்டு செய்திகள் நாம் கவனிக்க வேண்டும்

(1) மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு புத்தி கிடையாது. (2) மலையாளிகள் புத்திசாலி. ஜெயமோகன் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்லும்போது, அவரின் இந்துத்துவ அரசியல் மனநிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. அதே சமயம், தன்னுடைய மலையாளி இன பாசத்தையும் விட்டுக் கொடுக்காமல், மலையாளிகள் புத்திசாலிகள் என்று ஒரு கருத்தினை பதிவு செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன்தான் அவன் - இவன் படத்திற்கு செயமோகன் பாணியில் ஒரு வசனத்தை எழுதியிருக்கிறார்.

Jun 27, 2011

திண்டுக்கல் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம்!

JUNE 28, பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த தினத்தில் பல்வேறு அமைப்புகளும் ரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 150 யூனிட்கள் ரத்ததானம் செய்யப்பட்டு மாவட்டத்திலே முதலிடம் பெற்றது.

இதற்காக மாவட்ட கலக்டர் அலுவலகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரமின் மாவட்ட அமைப்பாளர் சகோ.அப்துல் லதீப் ,மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் இலியாஸ் அவர்களுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். மாநில அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் குழு பல சிகிச்சைகளுக்கு அவசர ரத்த தான உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துதுவாவின் சூழ்ச்சியை முறியடிக்க வருகிறார் ராகுல் காந்தி!

JUNE 28, புதுடில்லி: "மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், போலிசாமியார் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். இவர்களின் போராட்டத்தால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாகவும், அன்னா ஹசாரே அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற தனிப்பட்ட நபர்கள், தங்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், அரசுக்கு இணையான, அதிகாரமிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி, நெருக்கடி கொடுக்க முயற்சிக்கின்றனர்.

இவர்களின் போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., போன்ற ஹிந்து தீவிரவாத அமைப்புகளும், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உள்ளன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை, இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், தடுத்து நிறுத்தி விட முயற்சிக்கின்றனர். பா.ஜ., முகமூடியை அணிந்து கொண்டு, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் போராட்டங்களை, இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.இவர்களுக்கு எதிராக, தீவிரமாக செயல்படுவதற்கு, காங்., பொதுச் செயலர் ராகுலை களம் இறக்க வேண்டும்.

ராகுலுக்கு, மக்களிடையே உள்ள செல்வாக்கு, புகழ் ஆகியவற்றின் மூலமாக, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோரின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோருக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களின் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் ராகுலை தீவிர பிரசாரத்தில் களம் இறக்க வேண்டும்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மத்திய இணை அமைச்சரும், உ.பி., மாநில காங்., மூத்த தலைவருமான பெனி பிரசாத் வர்மா கூறுகையில், "அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோரின் முயற்சிகளை முறியடிக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களுக்கு எதிராக, ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இதற்கு கட்சி மேலிடம் அனுமதிக்க வேண்டும்' என்றார்.

மகனை காப்பாற்ற உயிர் துறந்த அம்மா!

JUNE 28, கடலூர்: கடலூர் அருகே, விஷ வண்டு தாக்குதலில் இருந்து, மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் உயிரிழந்தார்.

கடலூர் அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பஞ்சாமிர்தம், 35; மகன் மதன்குமார், 11 மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருடன், நேற்று முன்தினம், முந்திரிதோப்பிற்கு சென்றனர்.

"கதண்டு' எனப்படும் விஷ வண்டுகள், மதன்குமாரைத் தாக்கின. மகன் அலறல் சத்தத்தைக் கேட்டு, விஷ வண்டுகள் தாக்காமல் இருக்க, தன் சேலையால் மதன்குமாரை, பஞ்சாமிர்தம் மூடினார். இதனால், விஷ வண்டுகள் பஞ்சாமிர்தத்ததையும் சூழ்ந்து தாக்கின. சற்று நேரத்தில் தாய், மகன் இருவரும், மயங்கி விழுந்தனர்.

 உடன் சென்ற பெண், தகவல் தெரிவித்ததையடுத்து, இருவரையும் படகு மூலம் உப்பனாற்று மேற்கு பகுதிக்கு அழைத்து வந்து, அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேல் சிகிச்சைக்காக இருவரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, பஞ்சாமிர்தம் இறந்தார்; மதன்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனியாரிடம் 1,200 மெகாவாட் மின்சாரம் வாங்க முடிவு!

JUNE 28, தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக, 1,200 மெகாவாட் மின்சாரத்தை, தனியாரிடம் விலைக்கு வாங்க, "டெண்டர்' அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்திற்கு 500 மெகாவாட்டும், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல், மே வரை 700 மெகாவாட்டும் மின்சாரம் சப்ளை செய்ய விரும்பும், தனியார் மின் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின் படி, குறைந்த விலைக்கு தர விரும்புவோரிடம் ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு, தற்போதைய நிலையில், 11 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், 7,500 முதல் 8,500 மெகாவாட் வரை தற்போது கிடைத்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து 2,290 மெகாவாட், காற்றாலைகளிலிருந்து 2,500 முதல் 2,800 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது.

சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஏ.முகமது ஜான் நியமனம்.

JUNE 28. ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ முகம்மது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

29ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இவரது பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை சாலை விபத்தில் உயிரிழந்ததால், இதுவரை அந்த பொறுப்பை சுற்றுச்சூழல் அமைச்சர் டி.கே.எம் சின்னையா கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா சென்றாவது ஆங்கிலம் படி! புதுமொழி!

பெய்ஜிங், ஜூன் 27: ஆங்கிலம் கற்பதற்காக அமெரிக்காவுக்கு சீன மாணவர்கள் படையெடுத்துச் செல்கின்றனர்.

சீனாவைப் பொறுத்தமட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தாய்மொழியான சீன மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆங்கிலத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.

ஆங்கில அறிவு இல்லாமல் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு மேல்படிப்பு படிக்கச் செல்வோருக்கும், வேலை தேடிச் செல்வோருக்கும் சிரமமாக உள்ளது.

இதனால் தங்களது குழந்தைகள் உள்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று சீனப் பெற்றோர்கள் இப்போது நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி தங்களது குழந்தைகளை அமெரிக்காவுக்கு ஆங்கிலம் கற்க அனுப்பி வருகின்றனர். பெரும்பாலும் அமெரிக்காவில் நடைபெறும் கோடைகால ஆங்கிலப் பயிற்சி மையங்களில்தான் சீன மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவில் உள்ள இந்தக் கோடைகால ஆங்கிலப் பயிற்சி மையங்களில் சீன மாணவர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். 

இந்த ஆண்டு மட்டும் சுமார் 60,000 மாணவர்கள் ஆங்கிலம் கற்க அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி சீனர்கள் ஆங்கிலம் கற்கப் படையெடுத்து வருவதை மையமாக வைத்து சமீபகாலமாக அமெரிக்காவில் காளான்களாய் ஆங்கிலப் பயிற்சி மையங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

இதில் சிறப்பு என்னவென்றால் இந்தப் பயிற்சி மையங்கள் அனைத்துமே சீனக் கல்விமுறையை அடிப்படையாக வைத்து ஆங்கிலத்தைப் போதிக்கின்றன என்பதுதான். இதனால் இவை சீனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்தப் பயிற்சி மையங்கள் அனைத்துமே குறுகிய கால ஆங்கிலப் பயிற்சிக்கு ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் 2 லட்சத்துக்கு மேலான கட்டணத்தைக் வசூலிப்பதாகத் தெரியவந்துள்ளது.

Jun 26, 2011

ரவுடிகள் ஒழிப்பில் தீவிரம் காட்டும் ஜெ!

சென்னை, ஜூன்.27: சென்னை நகரில் ரவுடிகள் மீதான வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கடந்த 40 நாட்களில் 60 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாகவும் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் ரவுடிகள் மற்றும் கிரிமினல்கள் மீதான வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ரவுடி மாமூல் வாங்குபவர்கள் 14 பேர், கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் 15 பேர், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் 13 பேர், திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 14 பேர். இது தவிர விபச்சார புரோக்கர்கள் ஒருவரும், திருட்டு விசிடி வியாபாரம் செய்தவர்கள் 3 பேரும் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என சென்னை போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் பேட்டரி வெடித்து வாலிபர் பலி!

JUNE 27, சித்தூர் அருகே செல்போன் பேட்டரி வெடித்ததில் வாலிபர் பலியானார்.  சித்தூர் மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலத்தை சேர்ந்தவர் சிவாரெட்டி (23).

இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.  நேற்று மாலை தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜர் செய்து கொண்டிருந்தார். பின்னர் பேட்டரியை கழற்றியபோது எதிர்பாராமல் வெடித்தது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்க த்தினர் மீட்டு மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உ. பி. யில் தொடரும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை!

JUNE 27, உத்தரபிரதேசத்தில் இளம் பெண்கள், சிறுமிகள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றும் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர்.

ஜான்சி நகரில் திருமண விழாவுக்கு சென்று விட்டு திரும்பிய 14-வயது சிறுமியை 4 வாலிபர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல, கன்சிராம் நகர் மாவட்டம் பதேபுர் கலா கிராமத்தை சேர்ந்த 11 வயது தலித் சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கற்பழித்து விட்டான்.

அந்த சிறுவன் மீது போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர். பாரபங்கி மாவட்டம் இப்ராகிம்புர் கிராமத்தை சேர்ந்த 12 வயது தலித் சிறுமியை சிவகுமார் என்ற வாலிபர் கற்பழித்து விட்டார். கடந்த 25-ந் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்!

JUNE 27, தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.

ஆம்!  இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம். எனக்கு ஆங்கிலம் தெரியும், அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.

நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம் http://translate.google.com/  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu)  மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language)  இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழி பெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழி பெயர்ப்பின் தரம் மற்ற மொழி பெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் தேவையற்றது!

JUNE 27, லோக்பால் மசோதாவில் பிரதமர் மற்றும் நீதிபதிகளை விசாரிக்க அன்னா ஹசாரே கோருவதில் தனக்கு உடன்பாடு கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஜே.எஸ்.வர்மா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வருவது அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். அதையும் மீறி சேர்க்கப்பட்டால் அவை இந்தியாவின் ஜனநாயகத்தில் பாதிப்பு ஏற்படும்.

நீதித்துறை அமைப்பு தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.  நீதித்துறையை லோக்பால் மசோதாவிற்குள் கொண்டு வரும்பட்சத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும். மேலும் இது சம்பந்தமாக அன்னாஹசாரே ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உண்ணாவிரதம் இருப்பது குறித்து தன்னை சந்திக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் PFI நடத்தும் சுதந்திரதின அணிவகுப்பு!

JUNE 27, பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட்15, 2011 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட்டின் சுதந்திர தின அணிவகுப்பினை திருநெல்வேலியில் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்: 1. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 3 வருடங்களாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாட்டங்களையும், சுதந்திர தின அணிவகுப்பையும் நடத்தி வருகின்றது. இந்த வருடம் ஆகஸ்ட்15, 2011 அன்று சுதந்திர அணிவகுப்பை நெல்லையில் நடத்துவது எனவும், சுதந்திர தின கொண்டாட்டங்களை நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானங்கள்: 2. முஸ்லிம்களின் உரிமையான இடஒதுக்கீடு முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப வழங்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் பல கருத்தரங்குகள் மற்றும் போராட்டங்களை நடத்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசிடம் தமிழக முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானங்கள்: 3. கல்வி இன்று வியாபாரமயமாகிவிட்டது. அனைவரும் அறிந்த உண்மை இது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதும், எல்.கே.ஜி. யில் குழந்தைகளை சேர்ப்பதும் ஒன்றாகி விட்டது. பள்ளிக்கட்டணங்களை முறைப்படுத்துவதற்கு கடந்த கால அரசு நியமித்த கோவிந்தராஜன் குழு பள்ளிக்கட்டணங்களை முறைப்படுத்தியது.

அதில் குளறுபடிகள் இருப்பதாக புகார் வந்ததின் அடிப்படைடியில் மீண்டும் நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு அமைக்கப்பட்டு கட்டணங்கள் மறு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மறு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விபரம் தொடர்பாக அரசும், தனியார் பள்ளிகளும் எந்த விபரத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதும், மாணவர்களை துன்புறுத்துவதும் தினசரி செய்தியாகி விட்டது. இது விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு பள்ளிக்கட்டணத்தை சீர்செய்து அதனை பின்பற்றாத பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து மாணவர் நலன் காக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானங்கள்: 4. கோவையில் கடந்த 2006 ம் ஆண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது போடப்பட்ட வெடிகுண்டு பறிமுதல் வழக்கு, உளவுத்துறை ஏ.சி. ரத்தினசபாபதியின் நாடகம் என்பதும், அது முற்றிலும் அப்பட்டமான பொய் வழக்கு என்றும் அதில் உள்ள ஆவணங்கள் காவல்துறையினராலேயே போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும் சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வுக் குழு கோவை ஏழாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த 2007ம் ஆண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.

சிறப்புப் புலனாய்வு குழுவால் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏ.சி. ரத்தினசபாபதி மற்றும் உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது முந்தைய தி.மு.க. அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தந்திருக்க வேண்டும்.

ஆனால், நடவடிக்கைக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி, அதன் பிறகு கடந்த மாதம் எஸ்.பி. என பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வை கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஏ.சி. ரத்தின சபாபதிக்கு தமிழக அரசு வழங்கியது நடுநிலையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், ஏ.சி. ரத்தின சபாபதி கடந்த தி.மு.க. அரசால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
அநீதி இழைக்கப்பட்டு 5 வருடங்களை கடந்தும் பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை; பொய் வழக்கு புனைந்த அதிகாரிகள் மீது எந்த விதமான நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு உடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு ஏ.சி. ரத்தின சபாபதிக்கு வழங்கப்பட்ட இரண்டு பதவி உயர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், டி.என்.பி.எஸ்.சி, உறுப்பினர் பதவியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மேலும், எஸ்.ஐ.டி. சமர்பித்துள்ள இறுதி அறிக்கையின் அடிப்படையில் ஏ.சி. ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு துணை புரிந்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களுக்கெதிரான கிரிமினல் வழக்கை நடத்துவதற்காக சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்து அரசே அவ்வழக்கினை நடத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.