Jun 25, 2011

அடுப்பை விட வயிறுதான் அதிகம் நேரம் எரிகிறது!

ஜூன் 26,இன்றைய காலைப் பொழுதில் பல வீட்டு சமையல்கட்டில் அடுப்புகள் மெதுவாகத்தான் எரிந்திருக்கும். ஆனால் வயிறு மட்டும் வேகமாக பற்றி எரிந்தது.

பால்காரன் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட தலைப்பு செய்தி இதுதான்! கியாஸ் விலை ரூ.50  ஏத்திப்புட்டாங்களாமே...”

ஏன்தான் இப்படி ஏத்தி தொலைக்கிறாங்களோ... நம்ம மாதிரி நடுத்தர ஜனங்க இனி வாழவே முடியாது... ம்ம் என்ன செய்றது...? என்று அங்கலாய்த்து தவித்த பெண்கள் ஏராளம்.

வாழ்க்கை ஒரு போராட்டம் என்பார்கள். வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் கல்விக்கட்டணம் என்று பல செலவுகள் கழுத்தை நெரிக்கிறது. வரவுக்குள் திட்டமிட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தினர் குடும்பம் நடத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் துண்டு விழுவதால் மாத கடைசியில் கடனுக்கு கையேந்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கியாஸ் விலை திடீரென்று சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியது அவர்கள் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் உள்ளது.

சென்னையில் இதுவரை சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.352.35 ஆக இருந்தது. தற்போது ரூ.402.35 ஆக உயர்ந்துள்ளது. டெலிவரி சார்ஜையும் சேர்த்தால் ரூ.425 கொடுக்க வேண்டியதிருக்கும். கடுமையான விலை உயர்வை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள் பெண்கள்.

ருவாண்டா இனப்படுகொலை அமைச்சருக்கு ஆயுள்தண்டனை!

JUNE 26, ருவாண்டா இனப்படுகொலை தொடர்பாக ஜ.நா. அனுசரணை நீதிமன்றம் அன்னாட்டின் முன்னாள் பெண் அமைச்சருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தன்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 2001 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலை நடைபெற்ற காலத்தில் அன்னாட்டு அமைச்சராக இருந்த போலினின் கண்காணிப்பின் கீழ் சிறுபான்மையின மக்கள் மற்றும் தாராளவாத போக்குடையவர்கள் என எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு பின்னர் தப்பிசென்ற போலின் 1997 ஆம் ஆண்டு கென்யாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ருவாண்டா படுகொலை விவகாரம் தொடர்பாக ஜ.நா அனுசரணை குற்றவியல் நீதிமன்றம் படுகொலைகளுக்காக பெண்ஒருவரை குற்றவாளியாக இனம் கண்டு தீர்ப்பளித்துள்ளமை முதல்தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டு தப்பவைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!

JUNE 26, சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஐந்து பேர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை சமர்பித்தது தேசிய புலனாய்வு ஏஜன்சி ஆன என்.ஐ.ஏ.

மேற்குறிய ஐந்து பேர்களின் குற்றப்பத்திரிக்கையில் பல இடங்களில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் இந்திரேஷ் குமாரின் பெயர் வருகிறது.

இவர் குற்றவாளிகளுக்கு பணஉதவி மற்றும் ஆலோசனை வழங்கி அந்த குற்றத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் இவரை குற்றவாளியாக்கி இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பயங்கரவாத செயல்களை குறித்து சதித்திட்டம் தீட்ட சபரிடாமில் நடத்திய ரகசிய கூட்டத்தில் அஸிமானந்தா மற்றும் சுனில் ஜோஷியுடன் இந்திரேஷ் குமாரும் பங்கேற்றுள்ளார். சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை அஸிமானந்தா, சுனில்ஜோஷி கும்பலுக்கு இந்திரேஷ் குமார் அளித்தார் என்பதும் குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது.

ஆனால் இவ்வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளின் வாக்கு மூலமும், சூழ்நிலை ஆதாரங்களும் இருந்த பிறகும் கூட இந்திரேஷ் குமாரிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தவில்லை. முன்னர் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவரை சி.பி.ஐ விசாரணை செய்ததை என்.ஐ.ஏ புறக்கணித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளின் பங்கு வெளியான சூழலில் அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றும் கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இந்திரேஷ் குமாரின் பங்கு வெளியான பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அரசின் பகிரங்கமான இரட்டை வேடமாகும்.

இதில் இருந்து நம்மால் ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது ஹிந்துத்துவா பயங்கரவாதம் இந்தியாவின் எல்லா துறைகளிலும் ஊடுருவி விட்டது என்பதே. குறிப்பாக காங்கிரஸ் கட்சி முதல் கம்னிஸ்ட் கட்சிகள் வரை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் உறுபினர்கள் ஊடுருவி விட்டார்கள் என்பதை நிருபிக்கும் பல சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளது.

அதுமாதிரி இந்தியன் உளவுத்துறை, நீதித்துறை, ராணுவம், காவல்துறை இப்படி எல்ல துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் உண்மை. இந்தியாவில் மதசார்பின்மை, சமத்துவம் என்று சாகிறதோ அன்று இந்தியாவின் உடைவும் ஆரம்பமாகி விடும் என்பதே நமது கவலை.
-மலர்-

இந்தியா துண்டு துண்டாக போகும் காலம் வந்து விட்டது!

JUNE 26, மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள். இறுதியாக அக்கட்சியின் போது செயலாளர் வைகோ பேசினார். அப்போது தனி நாடு கேட்டார் பெரியார், சுய ஆட்சி கேட்டார் அண்ணா,  நாங்கள் அப்படி கேட்கவில்லை. ஆனால் இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்....

ஈழத்தில் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள். என் இனம் அழிக்கப்பட்டபோது பிரிட்டன், இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது.

நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிர குரல் கொடுக்க வில்லையே. எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று கேட்கமாட்டோமா? மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான். ஆனால் என் தமிழக மீனவன் 543 பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா.

அதுபோல் இந்தியாவில் எங்கு பிரச்சனைகள் நடந்தாலும் தமிழன் அதற்காக குரல் கொடுக்கிறான் ஆனால் அவர்கள் தமிழக மீனவர்கள் விசயத்திலோ, ஈழத்தமிழர் விசயத்திலோ கொடுக்கிறார்களா?

மற்ற மாநிலங்களின் பிரச்சனைகளில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழன் விசயத்தில் எந்த நடவடிக்கையும் இல்லையே அது ஏன்? எங்கே இருக்கிறது இந்த தேசத்தில் ஒருமைப்பாடு. ஆனால் இந்த நிலை நீடித்தால் இந்தியா துண்டு துண்டாக போகும் காலம் வந்து விட்டது என்று சொல்லலாம்.

சேனல் 4 ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது. பல கொடுமைகள் நடத்தப்படும் காட்சிகளை இங்கிலாந்து பார்லிமென்ட் பார்க்கிறது. இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சே தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா.

இசை ப்ரியாவை கொடுரமாக கேங் ரேப் செய்து கொன்றார்கள். அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் சிங்கள காடையர்கள். ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள். இதற்க்கு தீர்வு என்ன? சுதந்திரமான தனி ஈழம் தான், அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும் என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன். உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு எடுத்து உருவாகிநீர்கள். ஈழம் எப்போது.

சேனல் 4 ஒளி பரப்பிய காட்சிகளை கொண்டு போய் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள். நாம் என்ன தவறு செய்தோம் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா? வழக்கறிஞர்கள் என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம், தன் மானத்தோடு வாழ்வோம்,’’ என்று பேசினார்.

இம்மாநாட்டில் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார். அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள். காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை.

புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும். தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.
இலங்கை அரசு 2009க் கு பிறகு எங்கள் மண்ணில் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் புலிகளுக்கு தடை நியாயமா. எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் புலிகளுக்கான தடை நீங்கும். பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’ என்று பேசினார்.

கார்பரேட் சாமியார் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை!

JUNE 26,  சாமியார் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சாரியா பாலகிருஷ்ணன்.

அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடம் அனுமதி பெறப்படாத துப்பாகிகள் இருந்தன என்றும் இவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் படி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இது தொடர்பாக, போலீசாரின் பார்வை தன் மீது விழுந்ததால், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார்.  பின்னர், திடீரென நிருபர்கள் முன்பு தோன்றிய ஆச்சாரியா பாலகிருஷ்ணன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இந்நிலையில், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக சி.பி.ஐ.க்கு மத்திய அரசிடம் இருந்து புகார் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த புகாரை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. திங்கட்கிழமை ஆச்சாரியா பாலகிருஷ்ணன் மீது முதல்கட்ட விசாரணை பதிவு தொடங்கப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

Jun 24, 2011

ஹிந்துத்துவா நடத்திய நெல்லி, பாகல்பூர் இனப்படுகொலைகள்!

JUNE 25,  அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ.  தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.

இந்திய அரசு நெல்லியில் உயிரிழந்தோருக்கான நிவாரணத் தொகையாக ரூ 5,000 வீதம் வழங்கியது. அதே சமயம் இதற்கு ஒரு வருடத்திற்கு பிறகு நடைபெற்ற சீக்கியர் படுகொலைக்காக ரூ.7 இலட்சத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகல்பூர் கலவரம்:  பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

 இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின.  ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

2 வயதுக்கு மேல் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாகும்!

JUNE 25, வாஷிங்டன்: இரண்டு வயதை கடந்த பிறகும் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் 5 வயதுக்கு பிறகு குண்டாவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் டெம்பிள் யுனிவர்சிட்டியில் பொது சுகாதாரம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள ரச்சல் கூஸ் தலைமையிலான குழுவினர், சிறு வயது உடல் பருமன் குறித்து 6,750 குழந்தைகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டார். அதன் விவரம்:

ஆய்வில் பங்கேற்றவர்களில் 5ல் 1 குழந்தை 2 வயதான பிறகும் பாட்டிலில் பால் குடிப்பதும், இப்படி நீண்ட காலம் புட்டி பால் குடிப்பவர்களில் 5ல் ஒரு குழந்தையின் உடல் 5 வயதுக்குப் பிறகு பருமானாவதும் தெரியவந்தது. அதேநேரம், 1 வயதுக்குப் பிறகு பாட்டில் பழக்கத்தை கைவிட்ட 6ல் ஒரு குழந்தை மட்டுமே குண்டாவது உறுதி செய்யப்பட்டது.

நீண்ட காலம் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளில் 33 சதவீதம் பேருக்கு உடல் பருமனாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, 2 வயதுக்கு முன்பாக பாட்டில் பழக்கத்தை நிறுத்தி விடுவது நல்லது என கூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசை கண்டித்து முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்!

JUNE 25, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டம்  மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை 24.06.2011 மாலை 4 மணிக்கு இலங்கை துணைத் தூதரகம் முன்பு நடைபெற்றது. .

இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கட­ல் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களுக்குச் சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

தொடர்ந்து இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. ஆகவே இலங்கை அரசைக் கண்டித்து துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செயப்பட்டனர்.

ஈழப்போராட்டத்தை சீர்குலைத்த இந்தியாவின் 'ரா'!

1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு மட்டும் உளவு நிறுவனத்தின் பிடிக்குள் சிக்குவதற்கு தயாராக இல்லை.

நாட்டின் விடுதலையில் மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதுதான் அவர்கள் செய்த “குற்றம்”; ஆனால் ஈழத்தில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக இலங்கை அரசுக்கு நெருக்கடி தருவது. ஈழப்போராளிகளைக் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இதுதான் இந்தியாவின் திட்டம். அதை செயல்படுத்துவதே உளவு நிறுவனங்களின் வேலை.

முதலில் ‘டெலோ’ என்ற அமைப்பை உளவு நிறுவனம் தனது ‘கைப்பாவை’யாக்கியது. அந்த அமைப்பு செயலிழந்தவுடன் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்பை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தார்கள். பிறகு பல்வேறு போராளிகள் குழுக்களில் ஏற்பட்ட பிளவுகளைப் பயன்படுத்தி விலகி வந்தவர்களை எல்லாம் இணைத்து ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ (ஈ.என்.டி.எல்.எப்.) என்ற அமைப்பை உளவு நிறுவனம் உருவாக்கியது.

 இந்திய உளவுத் துறைக்கு ஆதரவாக ‘இந்து’ பார்ப்பன நாளேட்டில் எழுதி வந்த டி.பி.எஸ். ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். உளவுத் துறை உருவாக்கிய, இந்த குழுக்களை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும், தேவைப்படும்போது இலங்கை ஆட்சிக்கு எதிராகவும் உளவு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.

கடைசியாக உளவு நிறுவனம் தனது ஏவல் படையாக பிடித்து வைத்த ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்புக்கு தலைவராக சென்னையில் கொலை, கடத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, 1989 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை தனது கைப்பிடிக்குள் உளவுத் துறையினர் கொண்டு வந்தனர். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலிருந்தவரை விடுதுலை செய்து வெளியே கொண்டு வர முயற்சித்தவர்களே, ‘ரா’ உளவுத் துறையினர் தான்.

பிறகு உளவுத் துறையினரே, இந்திய ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து, டக்ளஸ் தேவானந்தாவை - அந்த ராணுவ விமானத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் கொண்டு போய் துரோகம் - குழி பறிப்பு வேலைகளுக்காக இறக்கி விட்டார்கள். இந்த உண்மையை ‘டெகல்கா வார’ ஏடு (ஜூலை 1, 2006) வெளிக்கொண்டு வந்தது.

விஜயகாந்த் மகனுக்கு லயோலோ கலூரியில் சீட்டு மறுப்பு!

JUNE 25, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு  கல்லூரி முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் பிரபாகரன், +2 தேர்வில் 1200க்கு 585 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் பட்டய படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.

பிரபாகரனின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கல்லூரி நிர்வாகம் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் கல்லூரி முதல்வர் அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜை சந்தித்து,  இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் விளக்கம் அளிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்ட பிரபாகரன், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆசையில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் படிக்க ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jun 23, 2011

மாவோயிஸ்டுகளுக்கு மரண தண்டனை இரக்கமற்ற செயல்!

JUNE 24, ஜாம்ஷெட்பூர் : ""சில்காரி படுகொலை வழக்கில், மாவோயிஸ்டுகள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இரக்கமற்ற செயல்,'' என ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கூறியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில், ஜார்க்கண்ட் மாநிலம் சில்காரி கிராமத்தில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனூப் உட்பட பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்பகுதியில் திடீரென நுழைந்த மாவோயிஸ்டுகள், சரமாரியாக சுட்டனர். இதில், மராண்டியின் மகன் அனூப் உட்பட, 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, மாவோயிஸ்டுகள், 10 பேர் கைது செய்யப்பட்டனர். கிரிதிக் மாவட்ட கோர்ட் இந்த வழக்கை விசாரித்தது.

சத்திரபதி மண்டல், மனோஜ் ராஜ்வர், ஜிதன்மராண்டி, அனில்ராம் ஆகியோரை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கோர்ட் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு, என்ன தண்டனை என்பதை, கோர்ட் நேற்று அறிவித்தது. நான்கு மாவோயிஸ்டுகளுக்கும் மரண தண்டனை அளித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பு குறித்து, முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கருத்து கூறுகையில்," மரண தண்டனை விதிக்கப்பட்டது இரக்கமற்ற செயல். தண்டனை விதிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் அனைவரும் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உடனடியாக மாவோயிஸ்டுகளுடன், ஜார்க்கண்ட் அரசு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். தங்களின் குற்றங்களுக்கு மாவோயிஸ்டுகள் வருத்தம் தெரிவித்தால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, பொது அரசியலில் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

புற்று நோய்க்கு எலுமிச்சை மூலம் மருந்து! அமெரிக்கா சாதனை!

JUNE 24, கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை. உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.

 இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டு பிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.

உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.

கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை. அதுமட்டுமா? ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.

இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை.... பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

-உஸ்மான்-

ஈழத்தமிழர் விடயமாக வட அயர்லாந்து அரசுடன் ஒரு சந்திப்பு!

JUNE 24, வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.

நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளி விவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன், போர்குற்றங்கள் இனப்படுகொலை மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகாரத்துறை அமைச்சர் டிலக்சன் மொறிஸ் ஆகியோர் தலைமையில் சென்றடைந்துள்ளது

நா.த.அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினரை, அரச மரியாதையுடன் வட அயர்லாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (யூன்21) வட அயர்லாந்து துணை முதலமைச்சர் Martin Mcguinness பாராளுமன்ற துணை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 2மணி நேரம்வரை இடம்பெற்றது.

தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலை, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமை மறுப்பு, ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் ஆகிய விடயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாசையான தமிழீழக் கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் அதனுடைய சனநாயக நடைமுறைச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக் குறித்து தணிகாசலம் தயாபரன் அவர்கள், தமிழ் மக்களுடைய சனநாயகவழி போராடத்தின் உயர்பீடமாக அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, வெளிப்படையயை கிடைத்து வருகின்ற உலக நாடுகளின் அங்கீகாரமாகவே இதனைக் கருதுவதாக தெரிவித்தார்.

அமைச்சர் டிலக்சன் மொறிஸ் அவர்கள் கருத்துரைக்கையில், தமிழ் மக்களுடைய நிலைப்பாடு - நிலைவரம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டு வட அயலர்லாந்து அரச பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுவது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டதோடு, தமிழ் மக்களுடைய சனநாய பொறிமுறையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும் வரவேற்றுள்ளனர். வட அயர்லாந்து அரச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களுடனான தொடர் சந்திப்புக்களை நா.த.அரசாங்க உயர் மட்டக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணிருந்தும் குருடர்கள்! இது காதலா காமமா!

JUNE 24, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாறு அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீசார் ஓடிச் சென்று தூக்கில் தொங்கிய அவரை தாங்கி பிடித்தனர்.

பின்னர் தூக்கு கயிரை கழற்றி அவரை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பது தெரிய வந்தது. பெங்களூரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்த திருப்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த லூர்துமேரி என்ற பெண் போன்மூலம் அறிமுகமானதாக தெரிகிறது.

இவர்கள் போன் மூலமாகவே பேசி நட்பை, காதலை  வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வி என்ற பெண்ணுக்கும் திருப்பதிக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் போன் மூலம் பழக்கமான லூர்துமேரியை அண்மையில் திருப்பதி நேரில் சந்தித்ததாக தெரிகிறது.

அப்போது லூர்துமேரி 60 வயது மூதாட்டி என தெரிய வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட திருப்பதி ஒகேனக்கல் சின்னாற்றின் அருகே தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவு ரைகள் கூறினார்கள். பின்னர் குடும்பத்தாருடன் அவரை அனுப்பி வைத்தனர்.

Jun 22, 2011

தமிழீழ போராட்டமும் இலங்கை முஸ்லிம்களும் ஒரு பார்வை!

JUNE 23, கொழும்பின் தென்புற நகரான தெஹிவளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி. கல்கிஸை தெஹிவளை மாநகர சபையில் முஸ்லிம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு அதிக முஸ்லிம்கள் வாழும் ஒரு பகுதி.

தெஹிவளை 5 ஜீம்மா பள்ளிவாசல்கள் 8 சாதாரண பள்ளிவாசல்களை கொண்டது. அந்த அளவுக்கு அங்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கை அரசியல் பொளத்த மயமாக்கப்பட்டு வருகிறது. பொளத்த மதம் அமைதியை விட்டு ஆயுதமயப்படுத்தப்பட்டு வருகிறது,

புத்தர் உயிர் வதை கூடாது என்று அகிம்சை போதித்தவர், அவர் பெயரை சொல்லி மனித வேட்டை ஆடப்படும் பூமியாக இலங்கை மாற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெஹிவலை பாத்தியா மாவத்தை மஸ்ஜிதை பொளத்த துறவிகள் முற்றுகையிட்டு, தடைசெய்ய முற்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு பயந்து முஸ்லிம்களும் அந்த பள்ளிவாசலை மூடிவிட்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் ஒன்றை நம் கவனிக்க வேண்டியது உள்ளது அது " ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பதே. ஆரம்பம் முதல் தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையின்மை இப்பொது சிங்கள காடையர்களுக்கு ஒரு ஆயுதமாக மாறிவிட்டது.

தெஹிவளை விவகாரம் வெறுமனே அப்பகுதி முஸ்லிம்களின் பிரச்சனையல்ல. இலங்கை வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் உரிமை தொடர்பான பிரச்சனை.

தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பு இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அதில் முஸ்லிம்களையும் இணைத்து கொள்ளாதது ஒரு பெரும் தவறான விடயமே. இதனாலேயே தமிழீழ போராட்டம் தோல்வியை நோக்கி நகர்ந்தது.

புலிகள் ஆரம்பத்தில் பயிற்சிகள் கற்று கொண்டது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடமே! இப்படி யாசர் அரபாதிடம் கொரில்லா பயிற்சி உக்திகளை கற்றவர்கள், ஏனோ இந்த போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் வித்தையை மறந்தார்கள்.

முஸ்லிம்களை வெறும் நிதி வசூல் செய்யும் ஒரு இயந்திரமாகவே பயன்படுத்தினார்களே அல்லாமல் 'அவர்களை அந்த போராட்டத்தில் இணைத்து கொண்டு முன்னேறும்' ஒரு வழியை புலிகள் தவறவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாது பிற்காலத்தில் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்தது, மூதூர் வெளியேற்றம் இப்படி புலிகள் முஸ்லிம்களின் வெறுப்பை பரிபூரணமாக சம்பாதித்து ஈழத்தமிழர் போராட்டம் என்பது முஸ்லிம் சமூகம் இல்லாத ஒரு போராட்டமாக வடிவமைக்கப்பட்டது.

இதன்காரணமாக இவர்கள் போராட்டம் ஒரு வீரியம் பெற்றிருக்கவில்லை என்பதோடு, உலகின் ஒரு பெரும் சமூகத்தின் ஆதரவை, இலங்கையின் மூன்றாவது பெரும் மக்கள் சக்தியாக திகழும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை பெற தவறியது அவர்களின் பேராட்டத்தை தோல்வியை நோக்கி தள்ளியது.

இது விசயத்தில் முஸ்லிம்களையும் நம்மால் குறை சொல்ல முடியும். அவர்களும் ஈழத்தமிழர் போராட்டத்தில் தங்களை தாமாகவே   இணைத்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அது விசயத்தில் ஏற்படுத்திய வெற்றிடம் 'இப்போது ஈழத்தமிழர் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்ட கையோடு' சிங்கள இனவாத காலிகளின் கவனம் முஸ்லிம்கள் பக்கம் திரும்பி விட்டது.

ஈழத்து  போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடி இருந்தால் இப்போது தனி தமிழீழம் அமைந்திருக்கும். உலக அளவில் அதற்க்கு ஆதரவும் இருந்திருக்கும். இப்போது சிங்களவர்களின் கண்கள் முஸ்லிம்கள் தொழில் வளங்களை கண்டு பொறாமை கொண்டுள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை கைப்பற்றுவது அவர்களை இரண்டாம் தர சமூகமாக மாற்றுவது இதுவே அவர்கள் திட்டம்.

இனி பழையதை பேசி காரியம் இல்லை! இப்போதாவது இவர்கள் இணைந்து செயல்படுவார்களா? அப்படி செயல்படுவார்கள் என்றால் வெற்றி நிச்சயம். இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்கள் இன்னும் பள்ளிவாசலில் புலிகள் நடத்திய தாக்குதலையும், மூதூர் வெளியேற்றத்தையும், சில லங்கா ஸ்ரீ இணையதளங்கள் முஸ்லிம்களை, அவர்களின் போராட்டங்களையும் தீவிரவாதம் என்று எழுதி வருவதையும் பற்றி பேசி வேறுபட்டு நிற்க வேண்டாம்.

மறப்போம் மண்ணிப்போம் என்று எண்ணி தமிழீழ போராட்டம் என்பது மதங்களை கடந்து தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒரே தளத்தில் இருந்து செயல்பட்டாலே வெற்றி பெற முடியும் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

இலங்கை அரசைக் கண்டித்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்! MMK!

JUNE 23, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கட­ல் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களுக்குச் சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பரப்பு கடந்த சில நாட்களாக கடும் சீற்றத்துடன் காட்சி அளித்தது. காற்றின் வேகத்தில் திசை தெரியாமல் தவித்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நடுக்கட­ல் திசை தெரியாமல் பரிதவிக்கும் மீனவர்களை இலங்கை அரசு பத்திரமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களைக் கைது செய்வதும் கொடுமைகள் புரிவதும் நிச்சயம் மனித உரிமை மீறலுக்குரிய செயலாகும்.

தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை (24.06.2011) அன்று மாலை 4 மணிக்கு இலங்கை துணைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தாய் பாலுக்கு இணையான பால்!

JUNE 23, உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்துகுளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம்புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால்தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

இப்பசுவின் மரபணுக்களில்இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவைதாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை.

இந்த மரபணுக்கள்பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசுமனிதர்களின் தாய்ப்பாலைப் போலவிட்டமின்கள் கொண்டபாலைத் தரும்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி,  பிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.எஸ்.ஏ.எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிறக்கும் போதே 45 கிலோவுக்கும் அதிகமாக இருந்ததால்அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் முதன் முறையாக மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டு குளோனிங் மூலம் ரோசிட்டா ஐ.எஸ்.ஏ.உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பால்தாய்ப்பாலில் உள்ள விட்டமின்களைக் கொண்டிருக்கும்எனதெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பசு உருவாக்கத்திற்கான முயற்சியை இந்நிறுவனமும்சான்மார்ட்டின் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டன.
-உஸ்மான்-

இலவசமாக வந்த இளமை ஊஞ்சல் ஆடியது!

ம்..சொல்லுடா சோம்பலாய் கைப்பேசியை காதுக்குகொடுத்தான் கதிர். " டே கதிரு,  நம்ம கோவாலு சூப்பரா ஒரு கிளிய சுட்டுகிட்டு வந்திருக்கான்  "டா',  டென்னிஸ் மேட்ச்ல  ..பாக்குறியா " எதிர்முனையில் பீட்டர் குரல்கேட்டதும் சுறுசுறுப்பானான் கதிர் .

" டென்னிஸ் மேட்ச்சா அப்ப ரெண்டுன்னு சொல்லு" , என்ற கதிருக்கு..." ஆசையப்பாரு ஒப்போசிட்ல ஆடினது அவன் ஆளாம்,  அதப்பாக்க போனப்பதான் இது செல் போன்ல  சிக்கியிருக்கு" , ரொம்ப பொறுப்பாய் விளக்கினான் பீட்டர் .

" சரிசரி அனுப்பு டா அசத்தலாஇருந்தா அப்புடியே forward பண்ணிடுவோம் நம்ம பசங்களுக்கு"  கையை ஏரோபிளேனாக்கி காற்றைக் கிழித்தபடி கூவினான் கதிர்.

ஓக்கே டா ஈவினிங் பாப்போம்,  என்றபடி கட் செய்ததும் எம் எம்எஸ் மணியடித்தது.  ஆவலாய்த்திறந்தவனுக்கு அத்தனையும் ஹேங்ஆனது . எதிர்ப்புறமிருந்து பறந்துவரும் பந்தைஅடிக்க எகிறும் கோவாலுகாதலி கண்மணி!

இந்தப்பக்கம் கண்மணின்னா அந்தப்பக்கம் ..? " அய்யோ என்தங்கை கல்யாணி " அலறியபடி கவிழ்ந்தான் கதிர்.  தன் வினை தன்னைச்சுடும் பழமொழி நினைவுக்கு வந்தது.


  ..யாழினி..

காமடி பீஸு ஊழலை ஒழிக்க போகுதாம்!

JUNE 23, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தான் எப்போதும் ஆதரவு அளித்து வருவதாக தி.மு.க., தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டுவருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், மாநிலத்தில் முதல்வர் பதவியையும் ஊழல் எதிர்ப்பு மசோதா வரம்பிற்குள் கொண்டு வர தி.மு.க., ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசாரே குறித்த கேள்விக்கு பதிலளித்த கலைஞர், ஊழலுக்கு எதிராக நடத்தப்படும் நல்ல நடவடிக்கைகளுக்கு தான் எப்போதும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: கருணாநிதி சொல்வதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. இவரு என்ன சிரிப்பு அரசியல்வாதியா? இவர் பண்டாரமாக அரசியலுக்கு வந்தார். இப்ப ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவர் ஊழலை ஒழிக்க ஆதரவு கொடுப்பாராம். கருணாநிதியை அரசியல் சாணக்கியன் அது, இது என்று புகழ்ந்தார்கள் இப்போ பார்த்தால் காமடி பீஸு ஆகி போனார்.

வேலியே பயிரை மேயும் கொடுமை!

JUNE 22, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி தலைமை ஆசிரியரை 10ஆம் வகுப்பு மாணவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளிக்கு பந்த் காரணமாக 21.06.2011 அன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதுதெரியாமல் பள்ளிக்கு வந்த மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பள்ளிக்கு திரண்டு வந்த அவரது உறவினர்கள் தலைமை ஆசிரியரை ஆடைகளை கழற்றி, ஜட்டியுடன் நிற்க வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியும் தனது பங்கிற்கு தலைமை ஆசிரியரை, தனது செருப்பால் அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கூறப்பட்டதையடுத்து, தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஈழத்து சாவுகளும் சலனமில்லா எழுத்துக்களும்!

ஈரோடு தமிழன்பன்

காலை!!..... தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு!!......அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்! நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின் இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை நிரப்புகின்றன
தமிழ்ப்பிணங்கள் கொண்டு!.

கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நனவுகளின் மார்பிலிருந்து இரத்தம்
குறுக்கும் நெடுக்குமாய் ஈழத்தில்.

தமிழ்மொழி பதைக்கிறது!
தமிழ் இயல், தமிழ் இசை, தமிழ் நாடகம்
எல்லாமே, போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.

இங்கோ தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்கு உள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.

பூண்டோடு தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத் தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.
ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில் உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.

கடைசியாகப் பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும் அந்தக் குழந்தை?
மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது, நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன நட்சத்திரங்களை மீட்பது எப்படி?

-யாழினி-

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!

JUNE 22, இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும்.

இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!

*  காஞ்சி சங்கராச்சாரி: காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.

புகழ்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை. சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது. காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக நேபாள பெண்மணி ஒருவருடன் தலைக் காவேரிக்கு ஓடியது.

அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து இழுத்ததால் அவர் டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக பேட்டி கொடுத்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது, தமிழில் குடமுழுக்கு கூடாது என்று சொன்னது. சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கியில் இருந்து தவறாக ரூ.1 கோடி நிதியுதவி பெற்றது. ரா என்ற எழுத்தில் தொடங்கும் நடிகையோடு உல்லாசம் புரிந்தது.

*  பிரேமானந்தா: திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இவருக்கு உண்டு. பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம், மற்றும் நகைகள், பணம் என்று இவரிடம் கோடிகள் குவிந்து கிடந்தன.

புகழ்: போதை பொருள் வியாபாரம், ஆசிரமத்தில் உள்ள இளம் ஏழை பெண்களை வெளிநாட்டுகாரனுக்கு கூட்டி கொடுத்தது, கொலை செய்தது.  இதனால் அவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

*  நித்யானந்தா: 32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணா மலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு,

புகழ்:  நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் சல்லாபம். ஆசிரமத்து பெண்களை அமெரிக்கா லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்து சென்று நிர்வாண நடனம் நடக்கும் கிளப்களில் அவர்களை நிர்வாணமாக்கி அவர்களோடு நடனம் ஆடியது பின்னர் விடுதி அறையில் அவர்களோடு செக்ஸ் வைத்து கொண்டது.

சாப்ட்வேர் என்ஜீனியர் படித்த பெண்ணை மது வாங்கி வரச்சொன்னது, மதத்தின் பெயரால் அவரை மது அருந்த சொல்லி பலவந்தபடுத்தி அவர் மயக்கநிலையில் இருக்கும் போது கற்பழித்தது. இப்படி பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தது.

வாழ்க்கைக்குத் தேவையான 64 தந்திரங்களில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை என்றும், அதைக் கற்றுத் தரும்போது நிர்வாணமாக இருப்பதும், உடலுறவு போன்றவற்றில் ஈடுபட வேண்டி வரும்.

என்று கூறி தனது தியான பீடத்துக்கு வரும் பெண்களிடம் ஒரு 10 பக்கம் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது,  இதுபோல் கூறி அந்த பெண்களை ஏமாற்றி செக்ஸ் உறவு கொண்டது. அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவரின் மனைவி ஷியாமளாவை அவரிடம் இருந்து அபகரித்தது.

சிவ் முரத்திவேதி: இவர் சத்ய சாய்பாபாவின் சீடர். சொந்தமாக கோவில், புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள்.

புகழ்: கோவில் சுரங்க அறையில் இளம் பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது. கல்லூரி மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் என பல பெண்கள் கணவனை பிரிந்த பெண்கள் இவர்களை வைத்து கோவிலின் உள்ளே சுரங்க அறை அமைத்து விபச்சாரம் நடத்தியது.

டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைக்கப்பட்டது. டெல்லி தவிர பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி விபச்சாரத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.

* கல்கி பகவான்: விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் சொல்லிக்கொண்டவர். தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம்.

புகழ்:  அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 கோடியும் அடித்தது. இளம் ஆசிரம பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விருந்தாக அளித்தது. போதைப் பொருள் பதுக்கல், பல கோடி ரூபாய் மோசடி செய்தது.

* பாபா ராம்தேவ்: வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. பாபா ராம்தேவின் மொத்த சொத்து மதிப்பு 1100 கோடிக்கு மேல்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம். மற்றொரு நாட்டில் சொந்தமாக தீவு. வெளிநாட்டு விலை உயர்ந்த கார்கள், தனிவிமானத்தில் பவனி. ஓட்ட சைக்களில் வலம் வந்தவர் இப்போது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.

ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்கு வதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.

* ஸ்ரீ ஸ்வாமிஜி: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஸ்ரீ ஸ்வாமிஜி என்று அழைக்கப்படும் பிரகாஷனந்த் சரஸ்வதி சாமியாரின் இருப்பிடம். அவருக்கு அங்கே 200 ஏக்கர் அளவில் ஆசிரமம் உள்ளது. வெளி நாடுகளிலும் கோவில்கள், மருத்துவ மனைகள் உண்டு.

புகழ்:  இவர் தனது ஆசிரமத்தில் இருந்த இரு பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட இரு பெண்களும் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. முடிவில் இந்த சாமியாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சத்திய சாய்பாபா: ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளில் சொத்துக்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும் வருமானம்.

புகழ்:  ஆசிரமத்தில் நடந்த படுகொலைகள். அவர் இறப்புக்கு பின்னே அவரது அறையை திறந்து பார்த்தால் கோடி கோடியாய் பணம் மற்றும் நகைகள், வைரங்கள் இப்படி புதையலாக கிடைத்தன. இணையதளங்களில் சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.

*  ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர்: பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி.

*  ஆஸ்ரம் பாபு: டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஓராண்டு வரவு செலவு வர்த்தகம் 350 கோடி.

*  சுதன்ஷன் மகராஜூ:  நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு ஓராண்டு வரவு செலவு 300 கோடி.

*  அமிர்தானந்த மாயி:  பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. அமிர்தானந்த மாயியின் மொத்த சொத்து மதிப்பு 1200 கோடிக்கு மேல்.

*  முராரி பாபு:  பணக்காரர்களுக்காக மட்டும் பல ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி.

இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம்.

*  பங்காரு சாமியார்:  கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர்.

*  தீபக் தாக்கூர்: அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத் தருகிறேன் என்று உலக ஆளவில் பல மோசடிகளை செய்து மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டுபவர்.

தீவிரவாத சாமியார்கள்:

*  சுவாமி ஆசிமானந்தா:  குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம். பலகோடி ரூபாய் சொத்துக்கள்.

புகழ்:  மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் முக்கிய குற்றவாளி. இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

* பெண் சாமியார் சாத்வி பிரக்யா: இவர் ஹிந்துத்துவா சாமியார். இவருக்கும் வழக்கமான சாமியார்கள் போல ஆசிரமங்கள் உள்ளது.

புகழ்: இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி போன்ற குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆலோசனை மற்றும் பொருளாதார உதவி செய்தவர்.

இதுவல்லாமல் மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே  “குணமாக்கி’  நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.

Jun 21, 2011

ஆவாரம் பூவு சர்க்கரை நோய்க்கு அரும் மருந்து!

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு.

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

தமிழக மீனவர்களை மீட்டுக் கொடுங்கள்! ஜெ கடிதம்!

JUNE 22, மீன்பிடிக்கும்போது இலங்கையின் கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்ற 23 மீனவர்களை அந்நாட்டின் கடற்படை கைது செய்துள்ளது.

அவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கும்போது தவறுதலாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை நேற்று பிற்பகலில் இலங்கை கடற்படைக் கைது செய்து தலைமன்னார் போலீசிடம் ஒப்படைத்துள்ள தகவல் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

நான் மே மாதம் பதவியேற்ற பின்னர் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஜூன் 7 ம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டுசென்றிருப்பதாக ஜூன் 15 ம் தேதியிட்ட கடிதத்தில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அவர்கள் ஜூன் 17 ம் தேதி விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமேஸ்வரம் கடற்கரைக்கு வெகு அருகில் உள்ள சர்வதேச கடல் எல்லையை கடக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் மீனவர்களிடையே பதற்றம் ஏற்படுகிறது.
ஜூன் 14 ம் தேதி நான் உங்களை தில்லியில் சந்தித்திருந்தேன். அப்போது இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் விவாதித்தேன். அதற்கு முன்பு ஜூன் 9 ம் தேதி அவர் கொழும்பு செல்வதற்கு முன்பாகவும் இந்த விவகாரத்தை அவருடன் விவாதித்திருந்தேன்.

தற்போது இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாகச் சென்ற 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 5 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே அவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க நீங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசு!

JUNE 22, ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சில நேரங்களில் கடற்படையினரின் தாக்குதலுக்கு மீனவர்கள் பலர் பலியாகியும் உள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில் தமிழக கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்

ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ள 23 மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.

சிந்திக்கவும்: சொந்த நாட்டின் குடிமக்களை பாதுகாக்க முடியாத ஒரு அரசு எல்லாம் ஒரு அரசா! வல்லரசாம் இல்ல வல்லரசு.

சீசன் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரியுங்கள்!!


கணவன்:  குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி:  ஏன், என்னாச்சு?
கணவன்:  குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.

அவன்:  என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
மற்றவன்: 
அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க.

கடவுள்:  மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடுபோட்டு கொடுங்க சாமி!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...
கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!

அந்த வீட்ல இப்பல்லாம் மாமியார் மருமகள் சண்டை போடுற சத்தமே காணோமே! சமரசம் ஆயிட்டாங்களா?" "நீங்க ஒண்ணு... சண்டை போடுறதுக்குன்னே ஒரு ஏ.சி.ரூம் தயார் பண்ணிட்டாங்க!"

"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்." "எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"

Jun 20, 2011

தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை!

JUNE 21,  சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்தியா VS பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

கடந்த நான்கரை ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பின், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சுவாமி அசீமானந்த், சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கலசங்கரா ஆகியோருக்கு எதிராக இன்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

CBI  மற்றும் NIA போன்ற புலனாய்வு அமைப்புகள் கடந்த நான்கரை ஆண்டு காலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தன அதன் அடிப்படையில் இன்று பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் அபிநவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக உள்ள அசீமானந்த் ஹைதராபாதில் மக்கா மசூதி குண்டுவெடிப்பு தொடர்பாக 2010 நவம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று சொல்வது இதனால் தானோ!

ஜூன் 20,ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், குரங்குகளுக்கு திருமணம் செய்து வைக்கும், விநோதமான நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக, பத்திரிகை அடிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தல்வாஸ் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அனுமன் கோவிலில் புரோகிதராக இருப்பவர் நிரஞ்சன் பஞ்சோலி. இவர், இரண்டு வயது நிரம்பிய, சிங்கி என்ற பெண் குரங்கை வளர்த்து வருகிறார்.

அதேபோல், டோங்க் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்த் சைனி என்ற ஆட்டோ டிரைவர், ராஜு என்ற ஆண் குரங்கை வளர்த்து வந்தார். மூன்று வயது நிரம்பிய, இந்த குரங்கிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக, தகுந்த பெண் குரங்கை தேடி வந்தார்.

தல்வாஸ் கிராமத்தில் சிங்கி என்ற குரங்கு இருப்பதாக தெரிந்ததும், தன் விருப்பத்தை, நிரஞ்சன் பஞ்சோலியிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இரண்டு குரங்கிற்கும், அடுத்த மாதம் 6ம் தேதி, திருமணம் செய்து வைப்பது என, இருவரும் முடிவு செய்தனர். இந்த திருமணத்தை விமரிசையாக நடத்துவது என்றும் முடிவு செய்தனர்.

திருமணத்துக்காக, 200 பத்திரிகைகள் அடிக்கப்பட்டு, முக்கிய விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரஞ்சன் பஞ்சோலி," இந்த திருமணத்துக்காக, மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை எதுவும் கொடுக்கப்படவில்லை' என, மிகவும் "சீரியஸ்'ஆக பதில் அளித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்! திருமா!

JUNE 21, இலங்கை அதிபர் ராஜபக்சேவை இனக்குற்றவாளியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை குழு வெளியிட்ட அறிக்கையில இலங்கை அதிபரை மட்டும் போர்க்குற்றவாளியாகக் கூறவில்லை. இருதரப்பையும் குற்றம் சாட்டிதான் அவர்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபை திரும்பப் பெற வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களுக்காக, மக்களின் விடுதலைக்காகப் போராடிய இயக்கமாகும்.

லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை இனப்படுகொலை குற்றவாளியாக அறிவித்து, சர்வதேச நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அவருக்குரியதண்டனையை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழீழ விடுதலைக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் விரைவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் தொடங்கப்படும் என்றார்.

தினமும் டீ குடித்தால் உடல் குண்டாவதில் இருந்து தப்பிக்கலாம்!

JUNE 21, டோக்யோ : நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும் என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஜப்பானின் கோப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து எலிகளை வைத்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த எலிகளை மேலும் பல சிறு குழுக்களாக பிரித்து, இவற்றுக்கு 14 வாரங்கள் வரை தொடர்ந்து தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ கொடுத்தனர். பின்னர் அந்த எலிகளை ஆய்வு செய்ததில், இரண்டு வகையான டீ குடித்த எலிகளின் உடல் பருமன் குறைந்திருந்தது. மேலும் வயிற்று பகுதியில் தேவையற்ற சதை வளர்வதற்கு உதவும் கொழுப்பு சத்தையும் இந்த டீ கரைத்து விடுவது ஆய்வில் தெரியவந்தது.

அதிக கொழுப்புச் சத்துள்ள உணவால் ரத்தத்தில் கலந்துள்ள, கொலஸ்ட்ரால், உயர் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ வெளியேற்றி விடுகிறது. 2ம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இன்சுலின் பாதிப்பையும் சரிசெய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-உஸ்மான்-

இன்றைய அட்டைக்கத்திகளும் அன்றைய போர்வாளும்! M.R. ராதா!

JUNE 21, ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனப்படும் எம். ஆர். ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன.

இவருடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, “குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது” என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா

பார்ப்பான் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் பெரியார் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் தெரிந்த ‘அட்டைக்கத்திகள்’ நிறைந்த இந்தக் காலத்தில். ‘ராதா எனும் பெரியாரின் துருவேறாத போர்வாளை’, நினைவு கூர்வது, அவசியமாகும் நாடகத் துறையில் பலருக்கு முன்மாதிரியாக இருந்த ராதாவிற்கு ஈரோட்டில் நாடகம் நடந்தபோது பெரியாரும் அவரது குடியரசு இதழும் அறிமுகம் ஆனது.

பார்ப்பனரல்லாத இந்துக்கள் பலர் முதல் தலைமுறையாகக் கல்வி பெறத் துவங்கிய காலமது. 1942இல் ராதா நடித்த ‘இழந்த காதல்’ எனும் நாடகம், நிலவுடைமை ஆணாதிக்கத்திற்கு எதிராகக் காதலை ஆதரிக்கிறது. சிற்றரசு எழுதி 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த ‘போர்வாள்’ நாடகம், மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருமணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் பேசுகிறது.

1947இல் கருணாநிதி எழுதிய ‘தூக்குமேடை’ பார்ப்பனர்களின் சூழ்ச்சி, மிராசுதாரர்களின் காமக் களியாட்டங்கள், நேர்மையானவர்களின் காதலைத் தோற்கடிக்கும் பொய் சாட்சிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது. ரத்தக்கண்ணீர் ஆரம்பத்தில் நாடகமாகவும், 1954 நவம்பரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. இறுதிக்காட்சியில் நண்பனுக்கே தனது மனைவியை மணம் முடித்து வைப்பார் தொழுநோயாளியான ராதா.

தாசி வீட்டுக்குப் போனாலும் கணவனே கண்கண்ட தெய்வமென்று காத்திருந்த பெண்களுக்கு சரியான வழியைக் காட்டினார் ராதா. தனது சிலையை ஊருக்கு நடுவே வைத்து எப்படி வாழக்கூடாது என்பதற்கு தன்னுடைய பாத்திரத்தையே உதாரணமாக்குமாறும் கோருவார். இளைஞர்கள் ரசித்தார்கள். பழமை விரும்பிகளுக்கோ இப்படம் வயிற்றில் புளியைக் கரைத்தது.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திய கம்பராமாயண நாடகம் அன்று மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து வருகையில் சென்னையில் 28.8.1954 அன்று உண்மையான ராமாயண நாடகம் நடத்த ராதா முன்வந்தார். நாடகத்திற்கு தடை விதித்தது அரசு. இதற்காகவே தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு பெரியார் சென்னை திரும்பினார்.

ராமாயண ஆராய்ச்சி பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். சட்டப்பூர்வமான போராட்டத்தை மேற்கொண்டதுடன், சட்டத்தை மீறி நாடகம் நடத்தி சிறை செல்லவும் தயார் என அறிவித்தார் ராதா. அரசு பணிந்தது. ராதாவின் ராமாயண நாடகம் பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் நடந்தது.

வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு ராமாயணங்களிலிருந்தும் தனது நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து, எதிரிகளின் வாயை அடைத்தார் ராதா. பார்ப்பனர்களால் ராதாவின் நாடகத்தை கீமாயணஎன்று தூற்ற முடிந்ததேயன்றி அவரை மறுக்க முடியவில்லை.

கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா. ‘ராமன் வேடத்தைக் கலையுங்கள்’ எனக் கூறிய காவல்துறையினரிடம் ‘வேடம் கலையாது, வில் கீழே விழாது, கலசம் கீழே வராது’ எனக் கூறி, காவல் நிலையம் நோக்கி நடந்தார் ‘ராதா’ராமன். வீதியையும் மேடையாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது

ராதாவின் ராமாயணத்திற்காக சென்னை மாகாண சட்டசபையில் சி.சுப்ரமணியம் ஒரு நாடகத்தடைச் சட்டத்தையே கொண்டு வந்தார். “எங்களால் பழைய ராமாயணத்தை பல நூற்றாண்டுகளாகத் தாங்கிக் கொள்ள முடிந்தது. அவர்களால் புதிய ராமாயணத்தை ஐந்து ஆண்டுகள் கூடத் தாங்க முடியாது” என்று சனாதனவாதிகளைக் கேலி செய்தார் அண்ணா.

தனது ராமாயண நாடகத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால் ராதா இம்மியளவும் அசரவில்லை. மாறாக, திருவாரூர் தங்கராசுவை எழுத வைத்து, பத்து அவதாரங்களையும் தோலுரிக்கும் ‘தசாவதாரம்’ நாடகத்தை அடுத்ததாக நடத்தத் தொடங்கினார். காளிமார்க் பரமசிவம் நாடார் எம்.ஆர். ராதா சோடா என்ற பெயரில் ஒரு சோடாவையே அறிமுகப்படுத்தினார்.

ராதா வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்தான் எனினும் அதிகார வர்க்கத்தின் மீதும், பணக்காரர்கள், மிட்டாமிராசுகள் மீதும் ஒருவிதமான வெறுப்பையும் ஏளனப் பார்வையையும் அவர் கொண்டிருந்ததைக் காண முடிகிறது. ராதாவின் ரத்தக்கண்ணீர் நாடகத்தைப் பார்க்க வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் ராதாவின் சொல்லடிக்குத் தப்பவில்லை. “அடியே காந்தா, சினிமாவுல முதலாளிங்க அதச் செய்றேன், இதச் செய்றேன்னு ஆசை காட்டுவாங்க. அதெல்லாம் நம்பி மோசம் போயிராத” என்று காந்தாவை எச்சரிப்பார் ராதா.

இம்பாலா காரில் தன்னுடைய மாட்டுப்பண்ணைக்கு வைக்கோலை ஏற்றி பண்ணையில் வேலை செய்யும் ஆட்களையும் ஏற்றி அனுப்புவார் ராதா. அந்தஸ்தின் சின்னமாக இந்தக் காரை வைத்து மினுக்கிக் கொண்டிருந்த பெரிய மனிதர்கள் இதைக் கண்டு புழுங்கினர்.  சிவாஜி போன்ற நடிகர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கேட்டபோது “சாயம் பூசிய தகரத்துக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்குறீங்களே” என்று அவர்களைக் கேலி செய்திருக்கிறார் ராதா.

“நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான். சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளிக் கொடுக்கிறான். உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளைப் பிரதேசம்னா அது சினிமா ஒண்ணுதான்” என்று பொது மேடையிலேயே சாடியிருக்கிறார் ராதா. பகல் நேர சினிமாக் காட்சியை எதிர்த்திருக்கிறார். எம்ஜியார், சிவாஜி ரசிகர் மன்றங்கள் கொள்ளை நோயாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ‘கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே’ என்று தாக்கியிருக்கிறார்.

அவர் தி.க. உறுப்பினராக இல்லாத போதிலும், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், பிராமணாள் ஓட்டல் என்ற பெயரில் உள்ள பிராமாணாள் என்ற வார்த்தையை அழிக்கும் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம் போன்றவற்றை ஆதரித்து பிரச்சாரம் செய்ததுடன் சிலவற்றில் கலந்தும் கொண்டார்.

பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்கள், சோசலிச அபிமானம், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் கலக மனோபாவம், அலங்காரமற்ற பெரியாரின் எளிய எள்ளல் மொழி இவற்றுடன் ஒரு விதமான நிலப்பிரபுத்துவ தோரணையும் கலந்த ஆளுமைதான் ராதா.
-யாழினி-

அன்னா ஹசாரே கோரிக்கை சாத்தியமற்றது! மத்திய அரசு!

JUNE 21, புதுடில்லி:"அரசுத் துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினர் மீதான ஊழல் வழக்குகளையும், லோக்பால் தான் விசாரிக்க வேண்டும் என, அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வலியுறுத்துவது சாத்தியமற்றது.

ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்படும். இவை அனைத்தையும் லோக்பால் விசாரிப்பது என்பது, நடைமுறைக்கு ஒத்து வராது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்களில் இருந்து, உயர்மட்ட அதிகாரிகள் வரை, அனைவரின் மீதான ஊழல் புகார்களையும், லோக்பால் அமைப்பு தான் விசாரிக்க வேண்டும் என, அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வலியுறுத்துகின்றனர்.

இதில், நடைமுறை சிக்கல் உள்ளது. அரசுத் துறையில் பணியாற்றுவோர் மீது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.இவை அனைத்தையும், லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியாது.

இது மிகப் பெரிய வேலையாகி விடும். நியாய விலைக் கடைகளில் பணியாற்றுவோர், ரேஷன் கார்டு வழங்குவோர், டிரைவிங் லைசென்ஸ், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை வினியோகம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவோர் மீது தான், அதிகமாக லஞ்ச குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

எனவே, இணைச் செயலர் மற்றும் அதைவிட உயர்வான பதவிகளில் உள்ளவர்கள் மீதான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை மட்டுமே லோக்பால் விசாரிக்க வேண்டும் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதை, அன்னா ஹசாரே உள்ளிட்டோர் ஏற்க மறுக்கின்றனர்.மேலும், பிரதமர் பதவி வகிப்போரையும், லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என, அன்னா ஹசாரே கூறி வருகிறார்.

இதை நடைமுறைப்படுத்தினால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.குறிப்பாக, பிரதமர் மீது, ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால், விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்யும் வகையில், பிரதமராக இருப்பவர் தன் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், மத்திய அரசில் நிலைத் தன்மை இருக்காது. இது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

JUNE 20, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைதாகி சிறையில் இருக்கும் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது இதுகுறித்து விளக்கம் கேட்டு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் விசாரிக்க மறுத்ததையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் கொண்ட புதிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. 20.06.2011 அன்று மனு மீதான விசாரணையின் போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: கொள்ளைகார கருணாநிதி குடும்பத்து ஆண்கள் ஒரு பெண்ணை சிறையில் தள்ளிவிட்டு வெளியே உலாவருகிறார்கள். கனிமொழியை இந்த விவகாரத்தில் சிக்கவைத்த கருணாநிதியோ அல்லது ஸ்டாலின் போன்றோரோ உள்ளே இருக்க வேண்டியவர்கள்.

துப்பாக்கி சூடு கர்ப்பிணி பெண், 6 மாத குழந்தை, 5 பேர் பலி!

ஜூன் 19 : பீகார், அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ்கஞ்சில் பொதுவழி சாலையை ஆக்கிரமிக்க முயன்றார் ஹிந்து பயங்கரவாத இயக்கமான பாரதிய ஜனதாவின் மாநில தலைவரின் மகன் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர் முஸ்லிம் கிராமவாசிகள்.

அவர்கள் மீது கடந்த ஜூன் 4-ஆம் தேதி பீகாரின் காவி பயங்கரவாத போலீஸ் நடத்திய அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

இதைப்பற்றி, பாலிவுட் திரைப்பட இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ்பட், சமூக சேவகர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு பீகார் போலீஸின் கொடூர முகத்தை வெளிக்கொணர்ந்தது.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக நாங்கள் உபயோகிக்கும் சாலையை ஆக்கிரமிக்க முயன்றதை கண்டித்து போராட்டம் நடத்தினோம்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட மதில் சுவரை இடித்ததற்கு போராட்டம் நடந்த சென்றோம். அப்பொழுது பழிவாங்கும் விதமாக போலீஸ் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியது. இதில் கர்ப்பிணியான பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றதாக கிராம மக்கள் கூறினார்.

மேலும், கைக்குழந்தைகளுடன் குண்டடிப்பட்டு விழுந்த பெண்களையும், குழந்தைகளையும் லத்தியால் அடித்த போலீஸ் வீடுகளில்நுழைந்து கண்ணில் கண்டவற்றையெல்லாம் உடைத்தது என ஆமினா என்ற பெண் கூறினார்.

போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார்அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன.

எல்லோரும் பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை கொண்டாடும் வேளையில் தான் நாங்கள் உண்மை நிலையைகண்டறிய பீகாரின் போர்ப்ஸ்கஞ்சிற்கு சென்றோம் என மகேஷ் பட் கூறுகிறார். சச்சார் கமிட்டியின்அறிக்கையில் கூறியபடி முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான சமூக சூழலில் வாழும் மாவட்டம் தான் போர்ப்ஸ்கஞ்ச் உள்படும் அராரியா மாவட்டம்.

இத்தகையதொரு சூழலில் வாழும் மக்களை இவ்வாறு கொன்றொழித்து விட்டா சிறுபான்மை நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்? மகேஷ் பட் கேட்கிறார். போலீஸ் வகுப்புவாதமயமாக்கப்படும் வேளையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மெளனம் சாதிப்பது மர்மமாக உள்ளது. நிதீஷ்குமாரை சந்திப்பதற்கு அவரை 26 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஒரு முறை கூட அவர் பதிலளிக்கவில்லை என மகேஷ் பட் கூறினார்.

கிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக கொலை செய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

போர்ப்ஸ்கஞ்சில் விசாரணை நடத்திய உண்மை கண்டறியும் குழு சேகரித்த தகவல்களை வெளியிடமகேஷ் பட்டும், ஷப்னம் ஹாஷ்மியும் இணைந்து டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். கொல்லப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ஒருலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என இருவரும் கோரிக்கை விடுத்தனர். சனிக்கிழமை காலை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தியை சந்தித்த இவர்கள் நாளை மனித உரிமை கமிஷனிடம் புகார் அளிப்பர்.

இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில், இந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும், ஆறுமாத பிஞ்சு க்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். ஜூன் மூன்றாம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு மேற்கண்ட மிரட்டலை பீகார் துணை முதல்வர் விடுத்தார்.

சிந்திக்கவும்: இந்தியாவில் ஹிந்து பயங்கரவாதம் எப்படி கட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. இன்னும் பிரியாணி ஆக்கி தின்று கொண்டு இருந்தால் ஈழத்தில் தமிழ் மக்களை எப்படி சிங்கள பயங்கரவாதிகள் ஒரு பாரிய இனப்படுகொலை மூலம் அழித்தார்களோ அதே நிலைதான் உங்களுக்கும்.

குஜராத், நெல்லி, பாகல்பூர், பீவாண்டி, இப்படி உங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை பார்த்தும் நீங்கள் திருந்தியதாக தெரியவில்லை. ஈழத்தின் போர்வீக குடிகளான தமிழ் மக்கள் அனாதைகளாக சொந்த நாட்டை அயல்நாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்களோ அது போல் நீங்களும் வாழவேண்டி வரும்.

இந்தியாவில் இருந்து ஹிந்து பயங்கரவாதத்தை துடைத்தெறிய பெரும்பான்மையான நல்ல இந்து மக்களோடும், இந்து தலைவர்களோடும் இணைந்து செயல்படாதவரை இதை வென்றெடுப்பது கடினம். இந்த ஹிந்து பயங்கரவாதிகளால் இந்தியா சிதறுண்டு போகும் காலம் வெகுதுலைவில் இல்லை என்றே நமக்கு எண்ணத்தோன்றுகிறது.

இந்தியாவில் விரைவில் “புல்லட்” ரெயில் அறிமுகம்!!!

புதுடெல்லி, ஜூன்.20-பிரான்ஸ் நாட்டில் உள்ளது போன்று புல்லட் ரெயில் எனப்படும் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க இந்திய ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்த ரெயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.  பிரான்ஸ் நாட்டில் புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு மணிக்கு 280 to 300 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்தியாவிலும் புல்லட் ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.  புல்லட் ரெயில்களை இயக்க சில வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில் புல்லட் ரெயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ஆலோசனை வழங்க உலகளாவிய காண்டிராக்ட் விடப்பட இருக்கின்றன.

600 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் சென்று அடையும் வகையில் புல்லட் ரெயிலின் வேகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும். புதிய நகரங்களை உருவாக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது பெருமளவில் குறையும் என்றும் நம்பப்படுகிறது.

Jun 19, 2011

ஊழல்,வரி ஏய்ப்பு, கர்நாடக பாஜக முன்னோடி!

ஜூன் 20, மைசூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 339 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக,  எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

 ரெட்டி சகோதரர்கள் சுரங்க ஊழல், கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற மாநில கவர்னரின் புகார் உள்ளிட்ட விஷயங்களால், எடியூரப்பா சிக்கலுக்கு ஆளானார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரான சித்தராமையா இப்போது, புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், ""எடியூரப்பாவும் அவரது குடும்பத்தினரும், 339 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.

இது குறித்த ஆவணங்களை நாளை வெளியிடுவேன். ஹன்சூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. மைசூரில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து விட்டது,'' என்றார்.

சிறுவர்களை கேடயமாக வைத்து கிராம மக்கள் போராட்டம்!

JUNE 19, ஒரிசா மாநிலம், ஜனத்சிங்பூர் மாவட்டத்தில் போஸ்கோ என்ற மிகப்பெரிய இரும்பு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

போராட்டத்தை ஒடுக்க ஆயுதம் தாங்கிய போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் போராட்டம் மேலும் பல பகுதிகளுக்கு பரவி வருகிறது.

இதற்கிடையே போலீசை எதிர்த்து கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்ட சிறுவர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 12 நாட்களாக இவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் மறியல் போன்றவற்றில் சிறுவர்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு பின்னால்தான் பெரியவர்கள் வருகிறார்கள். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இது பற்றி போஸ்கோ ஆலை எதிர்ப்பு குழுவின் தலைவர் அபய்சாகு கூறுகையில், இரும்பு தொழிற்சாலைக்காக திங்கியா கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிக்கப்படுகிறது.

இதை எதிர்த்து 6 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. மாநில அரசு போலீசாரை கொண்டு போராட்டத்தை அடக்க நினைக்கிறது. காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலை சமாளிக்க போராட்டத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தி உள்ளோம்” என்றார்.

போராட்டத்தில் சிறுவர்களை கேடயமாக பயன்படுத்துவதற்கு மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜெகத்சிங்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு எஸ்.கே. சவுத்திரியும் இதில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிந்திக்கவும்: பயங்கரவாத அரசு, பயங்கரவாத போலீஸ் இவர்களை எதிர்த்து ஏழை கிராமமக்கள் என்ன செய்வார்கள். தொழில்சாலைகள் அமையுங்கள் அதற்க்கு விவசாய நிலங்களை கைப்பற்றியா?.

இந்திய பயங்கரவாத போலீஸ் துறையை எதிர்த்து அப்பாவி ஏழை மக்களால் என்ன செய்ய முடியும். இந்த சிறுவர்கள் ஒன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள் இல்லை அவர்களும் அந்த கிராமத்தின் குழந்தைகளே.

பெரியவர்களுக்கு வேறு வழிதெரியாமல் இதை செய்கிறார்கள். இந்த பயங்கரவாத போலீஸ்சை சமாளிக்க கிராம மக்கள் செய்த உக்தியாகவே இதை பார்க்க முடிகிறது.

அன்றாடம் தங்கள் உணவு தேவைகளுக்கு போராடும் அடித்தட்டு மக்களை நோக்கித்தான் இவர்கள் கைகள் நீளும். இந்திய அரசு பயங்கரவாதிகளால் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பதிக்கப்படும் ஏழை மக்களின் அவலங்களை எதிர்த்து ஒவ்வொருவரும் போராட வேண்டும்.