Jun 18, 2011

ஆரியப் பேய்களை அடித்தோட்ட வேண்டும்!

JUNE 19, மதுரை: ""திராவிட இனம் என்பதே இல்லை. திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர்,'' என, மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி குறிப்பிட்டார்.

மதுரைக் கல்லூரியில் ஆங்கில துறை பேராசிரியர் சுப்ரமோனி எழுதிய "பரமஹம்சா-த வேதாந்திக் டேல்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை வெளியீட்டு சுப்ரமணியசாமி பேசியதாவது: அமெரிக்காவில் பொருளாதார மேம்பாடுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தனர்.

அந்தளவுக்கு அமெரிக்காவில் இந்துத்துவா, சனாதன தர்மத்தை கை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியா ஆசிரமங்களில் அமெரிக்க சாதுக்கள் அதிகளவில் உள்ளனர். திராவிட இனம் என கருணாநிதி போன்றோர் பேசுகின்றனர். திராவிட இனம் என்பதே இல்லை.

திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர். தென்னிந்தியாவின் ஒரு பகுதி திராவிடம் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். ஆங்கிலேயர் திராவிடர், ஆரியர் என இன பாகுபாட்டை ஏற்படுத்தினர்.

சிந்திக்க; திராவிடன் என்று ஒர் இனமே இல்லையாம் , முதலில் கொஞ்சம் அறிவியல் உண்மைகளைப்பார்ப்போம். ஆரிய, திராவிட இனங்கள் இருப்பது உண்மை. Biology படித்தவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மனித உடலில் உள்ள செல்களில் இரண்டு இடங்களில் டி.என்.ஏ. இருக்கிறது.

1 ) உட்கரு (Nucleus) 2 ) மைட்டோகாண்ட்ரியா. இதிலே உட்கரு டி.என்.ஏ. என்பது தாயிடமிருந்து பாதி குரோமோசோம்கள், தந்தையிடமிருந்து பாதி குரோமோசோம்கள் இணைந்து உருவாகிறது. மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. தாயிடமிருந்து மட்டுமே செல்கிறது. இந்தியாவின் பலதரப்பட்ட மக்களை ஆராய்ந்து எடுக்கப்பட்ட அறிவியல்பூர்வமான ஆய்வுகள் ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகின்றன.

தென்னிந்தியர்களுடைய ( பிராமணர் அல்லாதோர் ) உட்கரு டி.என்.ஏ. மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. இரண்டுமே திராவிட ( தென்னிந்திய ) வகையை சார்ந்தவை. அதாவது அவர்களது தாய்வழி குரோமோசோம்களும் தந்தை வழி குரோமோசோம்களும் திராவிட வகையை சார்ந்தவை. மாறாக பிராமணர், வட இந்தியாவின் பெரும்பாலான மக்களுடைய செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. திராவிட வகையை சார்ந்தவை.

ஆனால் அவர்களுடைய உட்கரு டி.என்.ஏ.வில் தாய்வழி திராவிட வகை குரோமோசோம்களும், தந்தைவழி ஆரிய வகை குரோமோசோம்களும் உள்ளன. இதிலே ராஜபுத் போன்ற இனத்தாருடைய தந்தைவழி குரோமோசோம்கள் நார்டிக்- ஆரியர்களுடைய குரோமோசோம்களை ஒத்தும், பிராமணர்களுடைய தந்தை வழி குரோமோசோகள் மத்திய ஆசியா மற்றும் யூதர்களின் குரோமோசோம்களை ஒத்தும் காணப்படுகின்றன.

இப்போ இதனோடு சிந்துசமவெளி நாகரீகம் அழிக்கப்பட்டதையும், அந்த மக்களின் பெண்களை ஆரியர்கள் அபகரித்துக்கொண்டனர் என்று சொல்லப்படுவதையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை புரியும். இந்த ஆய்வை பிரிட்டிஷ்காரர்கள் செய்யவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் இதை பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது.

ஏன்னா இதை சொன்னது ஃபின்லாந்து நாட்டு அறிவியலமைப்பு. சொல்லப்பட்ட காலமும் சுதந்திரத்துக்கு முன்பு அல்ல பிரித்தாளும் சூழ்ச்சி என்று சொல்வதற்கு. இதை அவர்கள் 2000வது ஆண்டு வெளியிட்டனர். அப்போதிருந்த பா.ஜ.க. ஆட்சி இதை வெளியே பரவலாக தெரிந்துவிடாதபடி பார்த்துக்கொண்டது. இதை தவிர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஆய்விலும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய குதிரையின் படிமங்கள் கிடைக்கவில்லை.

ஆரியர்கள் தமது குதிரைப்படையின் காரணமாகத்தான் திராவிடர்களை தோற்கடித்தனர் என்பதும், 5000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிந்துசமவெளி நாகரீகம் அழிக்கப்பட்டது என்பதையும் கவனிக்கவும். தவிர இந்த 5000 வருடத்துக்குட்பட்ட மன்னர்கள்தான் குதிரைப்படை வைத்திருந்தனர். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என்னதான் விளக்கம் சொன்னாலும் ஏற்க விரும்பாத சிலருக்காக இந்த விளக்கம்.: ஆரியர்கள் திராவிடர்கள் என்று இரண்டு இனங்கள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை.

ஆணும், ஆணும் சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும், பூமியை பாயாக சுருட்டமுடியும், மனித இனம் உருவாகி 1 லட்சம் வருடங்களே ஆகியுள்ள நிலையில் 17 லட்சத்து 50 ஆயிரம் வருடத்துக்கு முன்னாடி ஒரு மனிதர் பாலம் கட்ட முடியும், பூமியும் வராகமும் சேர்ந்து மனிதக்குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என்று சிலர் நம்பும்போது ஆரியர், திராவிடர் என்று நம்புவது முற்றிலும் சரியே.

இது வரலாறு: ஆரிய திராவிடப் பகுப்புகள் ஆங்கிலேயரின் சூழ்ச்சியாம் ! ஆங்கிலேயர் ஆண்டது வெறும் 200 ஆண்டுகள் தான். ஆனால் வாழ்ந்த இடம் வறண்டுபோனதால் கைபர், போலன் கணவாய்கள் வழியாக ( நடக்க முடியாத பெண்களையும் குழந்தை முதியோரையும் அம்போவென விட்டுவிட்டு) இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள் நாடாளும் ஆசையில் தம்மை உயர்குலத்தோர் என்றும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள்.. என்றும் சொல்லிக்கொண்டு அரசர்களுக்கு ஆலோசகராக இருந்து ஆட்சிகளைக் கைப்பற்றியது வரலாற்றில் உள்ளது.

தென்னகத்தில் (கேரளம், தமிழ்நாடு என்று பிரிக்கப்படாத காலத்தில்) ஒற்றுமையாய் வாழ்ந்துவந்த திராவிட மக்களிடையே சாதி மதப் பாகுபாடுகளை ஏற்படுத்தி அவற்றின் பெயரால் அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆரியர்களின் கொட்டத்தை திப்புசுல்தான் ஒழித்தார் என்பதும் வரலாற்று உண்மை .

தென்னகத்தின் பூர்வகுடிகள் தான் திராவிடர்கள். அவர்கள் மதம் என்ற ஒன்றால் பிரித்தறியப்படவில்லை.  இப்போதும் செல்லமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் மோர்ப்பந்தல் அமைக்கும் மரைக்காயரையும், பிள்ளைக்கு உடல்நலமாக வேண்டும் என்று தர்ஹாவில் மந்திரித்து புனிதநீர் தெளித்துக்கொள்ளும் பிராமணர் அல்லாத மற்ற இந்துக்களையும் எனக்குத் தெரியும் .

ஆதி திராவிடர் பகுதியில் கட்டப்பட்ட கோவிலுக்கு குடமுழுக்கு செய்யமறுத்த குருக்களையும் எனக்குத் தெரியும். இப்போது சொல்லுங்கள் யார் திராவிடர் என்று ... "A debt should be paid off till the last penny; An enemy should be destroyed without a trace". இது ஆரிய மாமணி சாணக்கியனின் வாக்கு. இதைப்பின்பற்றும் இந்துத்துவாவினரின் ஊதுகுழல் தான் இந்த சுப்பிரமணிய சாமி.

வரவிருக்கும் ஆபத்து; இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்கள் இப்படித்தான் வேரோடும் வேரடிமண்ணோடும் அழித்தொழிக்கப் படுகிறார்கள். ஆட்சியதிகாரத்தைக் கைக்கொள்ள நினைக்கும் இந்துத்துவாவின் எதிரி திராவிடர்களின் சமயப்பொறை தான் . ஆகவே திராவிடர்களை அழிக்கத் தலைப்படுகிறார்கள் , அதின் முதல்படிதான் சுப்பிரமணிய சாமியின் இந்தப் பேச்சு. இத்தகையோரின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது..

இல்லையெனில் இன்று, கணினிக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம், தமிழ் எழுத்துக்களும் பிராமியிலிருந்து வந்தவை என்று சொல்வதுபோல் நாளை சொல்வார்கள் திராவிடர்களை ஆளப் படைக்கப்பட்டவர்கள் ஆரியர்கள், மனிதர்களாக வாழும் முறை மனு சாஸ்திரம் என்று.

திராவிடம் என்பது ஒரு பகுதியெனில் அதில் பன்னெடுங்காலமாய் வாழ்வோர் திராவிடரல்லாமல் வேறு யார்? தமிழர்களே நாம் தான் திராவிடர்கள், இந்த ஆரியப் பேய்களை அடித்தோட்ட வேண்டும். விசமக் கருத்துக்களைப் பரப்பும் சுப்பிரமணிய சாமி போன்றோருக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.

தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் ஒப்புதல்!

 JUNE 19, புது தில்லி: 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர் ராஜிநாமா செய்வார் என தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

2-ஜி விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட பழைய சர்ச்சை இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி விட்டது. இது தொடர்பாக பிரதமருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தயாநிதி மாறனை விசாரிக்க, பிரதமரின் அனுமதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. ஏற்கெனவே மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில், தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்வது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்துவதற்கு பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் தலைமையும் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்நிலையில் தயாநிதி மாறன் தானாகவே பதவியிலிருந்து விலக வேண்டும், அவ்வாறு விலக முன்வராவிட்டால், பிரதமர் அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை!

JUNE 18, மதுரை மாவட்டத்தில் கடந்த ஜன., 1 முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது, இருந்தும் கடந்த 6 மாதம் நிறைவடைந்தும் இந்த உத்தரவு முறைப்படுத்தப் படவில்லை. இதை உடனே நடைமுறைபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பொருட்களை விற்பனை செய்பவர்கள், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கைப்பை மற்றும் கலன்களில் உணவுப் பொருட்களை அடைத்து வைப்பது, சேமித்து வைப்பது சட்டப்படி குற்றம்.

குறைந்தபட்ச தடிபடமனாக 20 மைக்ரான் அளவு இருக்க வேண்டும். 20 மைக்ரான் அளவு இல்லாத பிளாஸ்டிக் கப், கேரி பேக் முதலிய பொருட்கள் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் மதுரை மாவட்டத்தில் ஜனவரி முதல் தேதி முதல் தடை செய்யப்பட்டது.

இதற்கு மாற்றாக துணிப் பை, காகிதப் பை, கோப்பைகள், பாக்கு மட்டை தட்டுகள், தென்னை, பனை ஓலை கூடைகள் பயன்டுத்த வேண்டும். விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடிநீர் பாதிப்பு தொடர்வதற்கு பிளாஸ்டிக் பயன்பாடு ஒரு காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தைரியமான முதல்வர் என்று சொல்லலாமா?

JUNE 19, ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதுமட்டுமா ஈழத்தமிழர்கள் கொல்லப்பட ஆயுதம் கொடுத்து உதவியது இந்திய அரசுதான் என்பதை தைரியமாக சட்டசபையில் பதிவு செய்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தைரியமும் துணிச்சலும் உள்ள ஒருவரால்தான் இதை கூற முடியும். இப்பொழுதுதான் ஜெயித்து ஆட்சி அமைத்துள்ளார், பொதுவாக மத்திய அரசை பகைத்து கொள்ள மாநில அரசுகள் அஞ்சும் அப்படி இருக்க ஜெ இந்த கருத்தை பதிவு செய்ய நிச்சயம் தைரியம் வேண்டும்.

ஒரு விசயத்தை செய்யனும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை செய்தே தீருவார். அதில் ஜெ.யின் தைரியம் யாருக்கும் வராது’’ என்றே சொல்லவேண்டும்.

இந்தியாவின் தைரியமான பெண் முதல்வர் என்று ஜெ.வை சொல்லலாம். ஈழத்தமிழர்களின் வீரம் ஜெயிடம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டது என்று சொல்லாம்.

நான் வாலண்டினா! தமிழீழ மண்ணின் மலர்!

நான் வாலண்டினா..... இந்த மண்ணின் பூ!
இங்கு பூத்து என் தாய்மண்ணுக்கே உரமானவள்.
எம் தாய்மண்ணில் உலவும் ஆயிரமாயிரம்..
கதைகளைப்போன்றவள் தான் நானும். என்குரல் உங்கள் செவிகளில் கேட்குமென்ற நம்பிக்கையில் பேசுகிறேன்! நீங்கள் வசிக்கும் உலகின் மற்றோர்பரப்பில் பிறந்தவர்கள் நாங்கள் சிற்றினமாய் போனதனால் வாழும் உரிமை பறிக்கப்பட்டவர்கள். வந்தேறிகளால் சிறிதுசிறிதாய் அழிக்கப்பட்டவர்கள். இன்று நீங்கள் காணொளியில் கண்டவற்றை எங்கள்.. கண்ணெதிரில் கண்டு கருகியவர்கள்.

நான் வாலண்டினா ... அது ஒரு வசந்த காலம்!
நானும் என் தோழியரும் பள்ளிக்குப்போவோம்.
எங்கள் ஊர் நுழைவில் சோதனைச்சாவடி ஒன்று உண்டு.
அதைத் தாண்டிய பத்தடியில் எங்கள் பள்ளி.
செக்போஸ்டில் இருக்கும் சுகன் அண்ணா எப்போதும்..
சொல்லுவார் பத்திரமாப் போய்வாருங்கோ என்று.

அவன் எப்போதும் எங்கட பள்ளிக்கூட வாசலில் வந்து நிற்பான். ஆமிக்காரன். எனக்கு அவனைப்பாக்க, அவன்ட உடுப்பைப்பாக்க.. வெறுப்பாயிருக்கும்.  இதுபோல உடுப்பணிஞ்ச ஒருத்தன்தான்.. என் சகோதரனைக் கூட்டிக்கொண்டு போனான்.  பிறகு.. என் சகோதரன் அருவிக்காடு புதரில் பிணமாய்க் கிடந்தவன்.

நான் வாலண்டினா .... எனது கடைசி நாள்!
அதுதான் நான் உயிரோடிருந்த இறுதி நாள். அன்று இரவே எல்லாரும் எங்கேயோ கிளம்பினாங்கள்,  அம்மா என்னையும் எழுப்பி வெரசா வா, ஆமிக்காரன் ஊருக்குள் நுழைஞ்சு விட்டானாம்,  எல்லாரும்.. செஞ்சோலைக்கி போறாங்கள் என்று சொன்னாள். நாங்களும் எல்லாரோடவும் நடக்க ஆரம்பித்தோம்.

நான் வாலண்டினா .... கருகப்போகும் மலர்!

இன்று செக் போஸ்டில் வழமையா நிக்கும் சுகன் அண்ணாவைக் காணவில்லை. அந்த ஆமிக்காரன் நின்றிந்தான்.  என்னைப் பாத்தவன் கையசைச்சு கூப்பிட்டான். அம்மா என்னை இழுத்துக்கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.  அவனும் விடாமல் வந்து என் கையப் பிடிச்சு இழுத்துக்கொண்டு போனான், அம்மா கத்திக்கொண்டே ஓடிவந்தாள்.

எல்லாரும் தெரிஞ்ச முகங்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. நான்
என்ன செய்யோணும் என்று எனக்குப் புரிந்து போனது. பிடித்திருந்த
அவன் கையிலுருந்து என்னை விடுவித்துக்கொள்ள பலங்கொண்ட
மட்டும் போராடினேன்.

நான் வாலண்டினா .... வீரத்தமிழச்சி!

அதற்குள் இன்னொரு ஆமிக்காரனும் சேந்துக் கொண்டான். இனி என்னால் போராட முடியாது.  இந்த புலைநாய்களின் பசிக்கு நான் இரையாவக்கூடாது என்று முடிவெடுத்தேன். ஆமிக்காரனுக்கு அவன்ட உடுப்பின்மேல் கர்வம் உண்டு என்று எனக்குத் தெரியும்.  சிங்கள நாயே விடுடா எண்டு கத்தியபடியே காலைத்தூக்கி அவன்ட நெஞ்சில் எட்டி உதைத்தேன்.

ஒருத்தன் என்கையை பின்னாடி வளைத்துப் பிடித்துக்கொள்ள, இன்னொருத்தன் துப்பாக்கியின் பின்புறத்தால்..  என் மூஞ்சியிலும் நெஞ்சிலும் இடிச்சான். வாயெங்கும் இரத்தம் நிரம்பி என்னைப் பேசவிடாமல் செய்தது. அவன்ட கோபத்தை மேலும் கிளற
வேணுமெண்டு முடிவெடுத்தேன்.

நான் வாலண்டினா ...மானத்தோடு மடியப்போகிறேன்!

எங்கட தோட்டங்களிலும், தொழிலிலும் கைகட்டி நின்ன சிங்கள நாயே, எங்களை ஆளனுமெண்டு நினைச்சியோடா...  என்று அவன் யூனிபோர்மில் பொறித்திருந்த சிங்க இலச்சினையின் மீது காறிஉமிழ்ந்தேன். என் குறிக்கோள் நிறைவேறி விட்டது. இதோ துப்பாக்கியை என்னை நோக்கி நீட்டுகிறான் அதோ வந்து கொண்டிருக்கிறது எனக்கு விடுதலையளிக்கப்போகும் துப்பாக்கிக் குண்டு!!

மானத்தைக் காப்பாற்றிக்கொண்ட தமிழச்சி என்ற பெருமையோடு காற்றில் கரைகிறேன்...
-யாழினி-

சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.  இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.  அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்:  யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தைக் காக்க:
*  உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

*  புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

*  அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

*   எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.

*   தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

*   வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.
-உஸ்மான்-

நீங்க ஊருக்குப் போயி எத்தினி நாள் ஆச்சு?

வருமானத்துக்காக வளைகுடாவில் வாழ்ந்து மனிதர்களும் ஒட்டகமா மாறிட்டோம் !

Jun 17, 2011

உப்புமாவுக்கு வந்த வாழ்வு!

ஜூன் 18, நியூயார்க் : அமெரிக்காவில் முன்னணி சமையல்காரர்களுக்காக நடந்த உணவு தயாரிப்பு போட்டியில், இந்தியர் ஒருவர் உப்புமா தயாரித்து, 46 லட்சம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றார். இப்பரிசை, புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

பொதுவாக உப்புமா என்றாலே பலரும் முகம் சுளிப்பர். பெண்களுக்கு எளிதாக வேலை முடிய வேண்டுமானால், உப்புமாவை கிண்டி வைத்து விடுவர். இந்த உப்புமாவையும், விரும்பி சமைத்தால், அதன் ருசியே தனி தான் என்பதை, அமெரிக்காவில் நடந்த உணவு தயாரிப்பு போட்டியில், அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் நிரூபித்து, முதல் பரிசாக 46 லட்சம் ரூபாய் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் எளிதாக சமைக்கப்படும் உணவுக்கான போட்டி, ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்த மேரி சூ மில்லிகென் வெற்றி பெற்று வந்தார். ஆனால், நடப்பாண்டில் நடந்த போட்டியில், அமெரிக்கா வாழ் மும்பையைச் சேர்ந்த இந்தியரான பிளாய்ட் கார்டோஸ், ரவை, காளான் கொண்டு உப்புமா தயாரித்தார்.

பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு இல்லை. ஆனால், "பிரவோ' சேனலில், இவர் தயாரித்த உப்புமாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்ட போது, இவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். நடுவராக செயல்பட்டவரும், "சாவேர்' இதழின் தலைமை எடிட்டருமான ஜேம்ஸ் ஓஸ்லாந்து கூறுகையில், "மிகவும் திறமையாக, மறக்க முடியாத அளவிற்கு கார்டோஸ் உணவு தயாரித்து இருக்கிறார்' என, பாராட்டினார்.

தலித் மக்களும் சமூக விடுதலையும்!

தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் மதம் மாறுவதையும்,  இட ஒதுக்கீட்டையும் இணைத்து இந்துமத பயங்கரவாத இயக்கங்கள் அடிக்கடி கூக்குரல் இடுவதை கேட்டிருப்பீர்கள்.

அதாவது, பணம், பால் பவுடர், வளைகுடா வேலை என்று பொருள் உலக ஆசை காட்டி மதம் மாற்றப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். யின் கோரிக்கை.

ஆனால், இவர்கள் இடஒதுக்கீடு என்ற உலக ஆசையைக் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களை இந்து மதத்திலேயே இருங்கள், மதம் மாறாதீர்கள் என்று கேட்பது அதைவிட கொடுமை.

இந்து மதத்தின் சாதி, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து உங்களுக்கு விடுதலை தருகின்றோம் ஆகவே நீங்கள் மதம் மாறாதீர்கள்” என்று இவர்களால் சொல்ல முடியுமா? அதற்கு இவர்களது மநுதர்மாம்தான் சம்மதிக்குமா!

மொத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் "இங்கேயே அடிமைகளாக இருங்கள்," அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள்.

ஆன்மீகத்தினால், சமாதானத்தினால் அல்ல ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கிரிமினல் மிரட்டல்கள் மூலமாக தலித் மக்களுக்கு சமூக விடுதலையை கிடைக்கவிடாமல் தடுக்கிறார்கள்.

மேலும் தலித் மக்கள் எதாவது உலக லாபத்தை கருதியோ அல்லது தாங்களாக விரும்பியோ, வேறு மதத்திற்கு மாற விரும்பினால் அதை இடஒதுக்கீட்டை காரணம் காட்டி தடுத்து வருகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஹிந்துமதத்தின் பெயரால் இந்தியாவில் அனுபவிக்கும்  கொடுமைகள் போதும், மற்ற மதத்தில் அவர்கள் நிம்மதியாக வாழமுடியும் என்று அவர்கள் கருதினால் செல்லட்டும் அது அவர்கள் உரிமை.

இந்தியாவின் சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரே இந்து மதத்தில் தொடர்ந்து இருந்தால் ஜாதி பிடியில் இருந்து மீள முடியாது என்று உணர்ந்து புத்த மதத்திற்கு மாறினார்.

தலித் மக்கள் முஸ்லிமாக மாறி ஜாதியை  தொலைத்து "பாய்" என்று அழைக்கப்படுவதை இப்போதும் பார்க்க முடிகிறது. அப்படியாவது அவர்களை பிடித்த ஜாதி என்கிற பேய் ஒழியட்டுமே!

இந்த பார்பனர்களால் இவர்களுக்கு நன்மைதான் செய்யமுடியாது, மதம் என்கிற மாயையை காட்டி இவர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்றனர். தலித்மக்கள் மதம் மாறிவிட்டால் இவர்கள் யாரிடம் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொள்ள முடியும்?.  இதுதான் அவாள்களின் சூட்சமம்!


காஞ்சி சங்கராச்சரியாரும், அத்வானியும், இன்னபிற பிராமண உயர்குலத்தோரும் என்று தாழ்த்தப்பட்ட மக்களின் குடும்பத்துடன் திருமணம் செய்ய சம்மதிக்கிறார்களோ அப்போதுதான் இவர்களுக்கு இதை பற்றி பேசும் உரிமையும், யோக்கிதையும் இருக்கிறது.
 
-மலர் விழி-

நாடு கடந்த தமிழீழ அரசை பிரிட்டன் அங்கீகரிக்குமா?

JUNE 18, பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானிய அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர். ஐ.நா நிபுணர் குழு அறிக்கை, தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் விவாகாரம் ஆகியன முதன்மை விடயங்களாக விவாதிக்கப்பட்டன.

* Labour கட்சியின் Mitcham - Morden தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh அவர்கள், சிறிலங்காவில் போர் குற்றங்கள் இடம்பெற்றமை வெட்டவெளிச்சமாகியுள்ள நிலையில், தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுகின்றமை, பிரித்தானியா அரசு எடுத்துள்ள தவறான முடிவென சுட்டிக்காட்டினார்.

* Conservative கட்சியின் Ilford North தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Lee Scott கருத்துரைக்கையில், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களுக்கு, போதுமான ஆதாரமாக சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் உள்ளதென்றார்.

* Labour கட்சியின் Ealing Southall தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Virendra Sharma கருத்துரைக்கையில், சனநாயகரீதியாக நிறுவப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை, ஒரு அரசாங்கத்துக்குரிய மரபுகளுடனேயே தான் நோக்குவதாகவும் ,இன்றைய கூட்டம் ஒரு அரசாங்க மட்டத்திலான கூட்டமாகவே தான் எண்ணுவதாகவும் தெரிவித்தார்.

* Conservative கட்சியின் Croydon Central தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Gavin barwell கருத்துரைத்த போது, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற விவாகர குழுவின் வழியாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தமிழர்களுடைய இனப்பிரச்னை குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதாக தெரிவித்தார்.

* நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் - செயற்பாடுகள் குறித்து விளக்கவுரை அளித்த, அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின், போராட்டத்தின் நீட்சியாக சனநாயகவழி தோற்றம் பெற்றதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கான சர்வதேச சட்ட அங்கீகாரத்தை பெறுவதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோக்கமென தெரிவித்தார். தமிழினத்தின் பல்வேறு கூறுகளை அழித்துவரும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் ஒன்றின் சாட்சியமாகவே, சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் உள்ளதென சுட்டிக்காட்டினார்.

ஓரு சுயாதீனமான தமிழர்களுடைய சுதந்திரத்துக்கு உலகம் உதவவேண்டுமென கேட்டுக் கொண்ட அமைச்சர், ஐ.நா நிபுணர் குழுவின் பரி;ந்துரையை நடைமுறைப்படுத்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

* தமிழ்அதிகள் திருப்பி அனுப்பப்படும் விவாகாரம் குறித்து உரையாற்றிய உள்துறை அமைச்சின், பிரித்தானிய செயலர் வாசுகி முருகதாஸ் அவர்கள், இலங்கையில் மனிதர்களை, தனிநபர்களாக சிறிலங்கா அரசு அணுகுவதில்லை எனவும், இனரீதியாக அணுகும் சிங்கள அரசு, தமிழர்கள் என்ற அடிப்படையிலேயே அணுகுவதாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தமிழர்களுக்கு தொடர்சியான உயிர் அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில், தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பப்படுதல் குறித்து பிரித்தானிய அரசு மீளாய்வு செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள், இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூட்டம் நடாத்துவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்பது தமிழர்களுடைய அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மறைமுக அங்கீகாரமாகவே கருத்தில் கொள்ளவேண்டுமென தெரிவித்தார்.

தகவல்துறை அமைச்சகம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அமெரிக்காவில் 10வது தமிழ் இணைய மாநாடு!

JUNE 18, சென்னை: அமெரிக்காவில், 10வது தமிழ் இணைய மாநாடு நடக்கிறது. 

அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா பல்கலையில், 10வது தமிழ் இணைய மாநாடு இம்மாதம் 17ல் துவங்கி 19ம் தேதி வரை நடக்கிறது. 

இந்தியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்சு, சவுதி அரேபியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் கணினி நுட்பவியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

14 வயது சிறுமியை கற்பழித்த 150க்கு அதிகமான காமக்கழுகுகள்!

JUNE 18, கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுதீர் (48) என்பவர் தனது 14 வயது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது சமீபத்தில் தெரியவந்தது.

சினிமா பிரபலங்கள், விஐபிக்கள், பிரபல தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சிறுமியிடம் செக்ஸ் வைத்தது தெரியவந்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகாவிலும் பல விஐபிக்களின் பெயர் இதில் அடிபடுகிறது.

சினிமா பிரபலங்களின் உதவியுடன் அந்த சிறுமியை சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் சுதீர் நடிக்க வைத்தார். பின்னர், துணை நடிகை என்று சொல்லி விபசார புரோக்கர்களிடமும் அவளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது சமீபத்தில் அம்பலமாகி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி என்பதால் இதை பலாத்கார வழக்காக பதிவு செய்து கேரள மாநிலம் பரவூர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கடும் விசாரணையில் தந்தை சுதீர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் முதலில் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை சீரழித்த முக்கிய பிரபலங்கள் பெயர் பட்டியல் போலீசுக்கு கிடைத்தது.

இதற்கிடையே சிறுமியை குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (42) என்ற கான்ட்ராக்டர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கண்ணுமாமூட்டில் உள்ள தனது கெஸ்ட்ஹவுசில் வைத்திருந்தார் என்று தெரியவந்தது.

சிங்கப்பூர் தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்த மணிகண்டனை சென்னை ஏர்போர்ட்டில் எர்ணாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிஜோ அலெக்ஸாண்டர் தலைமையிலான போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். சிறுமி உள்பட பலரையும் அவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாத்கார வழக்கில் 150 பேர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தன்னுடன் இருந்தவர்களை நன்றாக ஞாபகம் இருப்பதாக மாணவி ( 9ம் வகுப்பு) கூறியுள்ளார். தங்கியிருந்த லாட்ஜ், பங்களா, கெஸ்ட்ஹவுஸ் ஆகியவற்றையும் கூறுகிறார். அவர் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுபினர்கள் தாக்கப்பட்டதற்கு திருமா கண்டனம்!

JUNE 18, யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 16.06.2011 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சார கூட்டம் யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் இடத்தில் உள்அரங்கில் நடை பெற்றுக் கொண்டிருந்தது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அக்கூட்டத்தினுள் சிங்களப் படையினர் நுழைந்து "அனுமதி பெற்றிருக்கீர்களா?" எனக் கேட்டு வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களையும் குறிவைத்து தாக்க முயன்றுள்ளனர். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மெய்க்காவலர்கள் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறையில் சுதர்சன் என்கிற இளைஞர் சிங்களப்படையினரின் வெறித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி சுயநிலையை இழக்கும் அளவில் மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் படப்பிடிப்பு மற்றும் காட்சிப் பதிவுக் கருவிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

சிங்களப் படையினரின் இத்தகைய வன்முறை வெறியாட்டத்திலிருந்து ஈழத்தில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை எத்தகைய கொடூரமான நிலையில் அமைந்துள்ளது என்பதை அறியலாம்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு பொது இடங்களில் கூட பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிறது. சிங்களக் காடையர்களின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.

இந்நிலையில் இந்திய அரசும், தமிழக அரசும் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

முற்றும் துறந்தவருக்கு ஏன் கோடிகணக்கில் பணமும், நகையும்!

JUNE 18, புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது.

அங்கு கணக்கில் வராத கோடி கோடியாக பணமும், பெருமளவில் நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. ஏராளமான கம்ப்யூட்டர்களும் கிடைத்துள்ளன.

கடந்த மார்ச் 28-ம் தேதி பகவான் சத்யசாய் பாபா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24 ம் தேதி இறையடி சேர்ந்தார். அப்போது அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர் பூட்டப்பட்டது.

தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அறை திறக்கப்பட்டது. அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

பின்னர் உள்ளே போனபோது ஒவ்வொரு அறையிலும் கணக்கில் வராத பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக கண்டுபிடிக்கப்பட்டது. வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

அங்கிருந்த கணக்கில் வராத பணம், நகைகளை கணக்கெடுத்து தனித் தனியாக பிரிக்கும் பணியில் மாணவர்கள் குழுவை ஈடுபடுத்தினர். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.

சிந்திக்கவும்: சாமியாருக்கு ஏன் இவ்வளவு கணக்கில் வராத நகைகளும் பணமும்? எல்லாம் மோசடி என்பது புரிய முடிகிறது. இது போன்ற சாமியார்கள் எல்லோரும் பெரும் கார்பரேட் முதலாளிகளின் பினாமிகள் என்ற செய்தி இப்பொது உண்மை ஆகியுள்ளது.

Jun 16, 2011

பெண்கள் மீது மநு தொடுத்த முதல் போர்!

கன்னிகா தானமாம்!
பேர் தான் தானம் ..
செய்ததென்னவோ கடன்வாங்கிக்
கல்யாணம்...

குருதட்சணை கேட்டவனே
கட்டைவிரல் மட்டும் கேட்டான் ,
வரதட்சணை வாங்கியவனோ ,
கற்றவித்தையோடு காலம் முழுதையும்
தனக்கென வாங்கிக்கொண்டான் !

எத்துணை தான் கற்றாலும் பெற்றாலும் ,
தானத்திலும் தட்சணையிலும் தன்னையிழந்த
ஏகலைவன் பரம்பரையின்
ஏக்கப்பெருமூச்சு...

வேர்கள் எவ்வழியோ ..
விழுதுகள் நாங்களும் அவ்வழியே !!!
புண்பட்டாலும் பண்பாட்டிற்காய்
பக்குவப்படுத்திக் கொள்கிறோம்.

“சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”,

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் சொன்ன உண்மைகளை உங்களுக்காக இங்கே தருகிறேன்.

எட்டுவயது பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றது. இடையில் மநு ஸ்மிருதி விளையாட ஆரம்பித்துவிட்டது என்றேனே.. மநு எப்படி விளையாடும்?...

மரப்பாச்சி வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்த பெண்குழந்தையை வைத்துதான் மநு விளையாடியது!... என்ன சொல்கிறார் இவர்?... என்ற கேள்வி எழுகிறதா?...

ஆமாம்... விளையாடிய குழந்தையை சீவி சிங்கரித்து அம்மா கூப்பிடுகிறாளே எதற்கு? தலைவாரி பூச்சூடி உன்னை... பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை என்ற அர்த்தத்திலா?

கிடையவே கிடையாது. அந்த எட்டு வயது சுட்டியை மணமேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள் எதற்கு?... மணப் பெண்ணின் பக்கத்தில் இப்போது சின்னச் சின்னக் குழந்தைகளை யெல்லாம் உட்கார்த்தி வைத்து அழகு பார்க்கிறார்களே... அதற்காகவா?...முற்றிலும் கிடையாது... மணப் பெண்ணே அந்த எட்டு வயது சுட்டிதான்.

என்னது... எட்டு வயதுப் பெண்தான் மணமகளா? குழந்தைக்குக் கல்யாணமா? இதுதான் மநுவின் விளையாட்டு மநுவின் கட்டளைகள் முன் சின்னப் பெண் குழந்தைகள் வெறும் மரப்பாச்சிகள்.

பெண்கள் மீது மநு தொடுத்த முதல் போர் இங்குதான் ஆரம்பிக்கிறது.

-யாழினி-

சனல் 4 காணொளி வழியாக புதிய போராட்ட யுக்தி!

JUNE 17, எம் இனத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை திட்டமிட்ட இனப்படுகொலை செய்த கொடுங்கோல் இலங்கை அரசு.

 இதற்க்கு  எதிராகப் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தைப் தமிழர்களாகிய நாம் நடைமுறைபடுத்த வேண்டும்.

அது எப்படி என்றால்? இலங்கை அரசால் தாயரிக்கப்பட்ட பொருள்களை நாம் வாங்காமல் புறக்கணிப்பதன் மூலம் இதை நம்மால் செய்யமுடியும். இந்த தீர்மானம் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு சனல் 4 காணொளி ஆகியவற்றை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இப்போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

1. இங்கு விற்பனைக்கு இறக்குமதி செய்யப்படும் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்கள் எதுவாயினும் அவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும்.

2. சிறிலங்காவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் மொத்த அங்காடி உரிமையாளர்கள் அதே பொருட்களை வேறு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து அதனை எமது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

3. தென்னாபிரிக்கா தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் உலக நாடுகளில் இயங்கும் துறைமுகத் தொழிற் சங்கங்களைக் கொண்டு எப்படி ஏற்றுமதி இறக்குமதி இரண்டையும் தடுத்தனரோ அதேபோல நாமும் செய்யவேண்டும்.
4. நிறவெறி பிடித்த தென்னாபிரிக்க அரசை எப்படிப் பன்னாட்டு சமூகம் விளையாட்டுத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் தனிமைப்படுத்தியதோ அதேபோல், தமிழினப்படுகொலை செய்த சிறிலங்காவையும் பன்னாட்டுச் சமூகத்திடமிருந்து நாம் தனிமைப்படுத்த வேண்டும்.

5. எமது வெளிநாட்டுப் பறப்புக்களை சிறிலங்கா விமான மூலம் மேற்கொள்வதை நாம் நிறுத்த வேண்டும்.

6. சனல் 4 காணொளி மட்டும் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையை உலகம் முழுவதும் பரப்ப முடியாது. ஆகவே நாமும் இந்தப் பரப்புரையை உலகம் அந்தந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த சனல் 4 DVD யை கொடுத்து எம்மவர்களின் இன அழிப்பை பார்வையிட கேட்கவேண்டும்.

7. அந்தந்த நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நாம் ( எம்மவர்களை கொண்டு ) தொடர்பு கொண்டு சனல் 4 காணொளியை மறு ஒளி ஒலிபரப்ப கோர வேண்டும்.

8. கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு கனேடியர்களுக்கு எம் இனத்திற்கு நடந்த இந்த கொடூர இன அழிப்பை பார்வையிட ஓர் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என கேட்க வேண்டும் ( கனடா) RADIO CBC 416.205.6301, 680 News 416 872 6397, AM 640 416.646.8640

CFRB 1010 416.924.6717 அதுபோல் TV CBC 426.205.6309 - CTV 416.384.5000 - Sun Tv 416.601.0010 - City Tv 416.599.2489 - CP 24 416.384.2400 - PRINT Toronto Star 416.869.4301 - National Post 416.386.2600 - Toronto Sun 416.947.2211 - பG & M 416.585.5000

அலை அலையாக தமிழ் மக்களாகிய நீங்கள் தொடர்பு கொண்டால் நிச்சயமாக இவர்கள் மறு ஒளி ஒலி பரப்புவார்கள் இதில் எந்த அச்சமும் இல்லை. ஆகவே தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். மறு ஒளிபரப்ப கோருங்கள். இந்த நாட்டு மக்களும் இந்த காணொளியை பார்வையிட்டு எம்து அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கட்டும்.

9. நாம் வாழும் நாடுகளின் அரசியல் தலைவர்கள், மத்திய, மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து சிறிலங்காவிற்கு எதிரான பொருளாதாரத் தடையைக் கொண்டு வருமாறு வற்புறுத்த வேண்டும். நாங்கள் எமது தொகுதி அரசியல்வாதிகளுக்கு இந்த சனல் 4 காணொளியை பார்வையிட தாழ்மையாக கேட்டுக் கொள்ளுங்கள்.

10. இலங்கையில் வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் இனத்தால், பேசும் மொழியால், சமயத்தால், பண்பாட்டால், வரலாற்றால் வேறுபட்டவர்கள் என்ற உண்மையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

இப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் எவரும் தனிப்பட்டமுறையில் பாதிக்கப்படவோ நஷ்டப்படவோ கூடாது அது வாடிக்கையாளர்களாக இருக்கட்டும்! மொத்த வியாபாரிகளாக இருக்கட்டும்! சில்லறை வியாபாரிகளாக இருக்கட்டும்.

மொத்த வியாபாரிகள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் இதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உதவ வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசிற்கு நாங்கள் உதவ வேண்டும்.

வாடிக்கையாளர்களை தயவு செய்து உங்கள் வியாபாரிகளிடம் சொல்லுங்கள் இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என அழுத்திக் கூறுங்கள். இனவாத இரத்தக்கறை படிந்த பொருட்களை புறக்கணிப்போம்!! புறக்கணிப்போம்!! இந்த சந்தா்ப்பம் இனிமேல் எமக்கு கிடைக்குமோ தெரியாது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாம் இழக்காது பயன்படுத்துவோம்.

புலம் பெயர் தமிழா்கள் நாங்கள் தான் எம் இன விடுதலையையும் எம் மக்களையும் காப்பாற்றவேண்டும். ஒருவர் மீது ஒருவர் நாம் கல்வீசிவிட்டால் எமக்கு விடுதலை கிடைக்குமா? எம் மண்ணின் மீட்புக்காக தம் உயிரை அர்ப்பணித்த எம் மாவீரர்களை ஒரு கணம் சிந்தியுங்கள்.

இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு வாடிக்கையாளர்களின், வியாபாரிகளின், மொத்த வியாபாரிகளின் ஒத்துழைப்பும் இன்றி இது சாத்தியமற்றது. நாம் எல்லோரும் தமிழனாய் ஒன்றிணைந்து எமது கோபதாபங்களை ஓரம்கட்டி ஒருமித்து போராடுவோம்.

பெண்களுக்கு எதிரா வன்முறை இந்தியாவுக்கு 4 இடம்!

JUNE 17, புதுடில்லி:பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் எவை என சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், சுகாதாரப் பிரச்னை, பாலியல் வன்முறை, பாலியல் அல்லாத வன்முறைகள், பண்பாடு, மதம் மற்றும் பாரம்பரியத்தின் பேரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளம் சரியாகக் கிடைக்காதது, ஆள் கடத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான ஆறு பிரச்னைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது . கடந்த 2009ல் சி.பி.ஐ., எடுத்த கணக்கெடுப்பின் படி, ஆட் கடத்தலில் 90 சதவீதம் இந்தியாவிற்குள் நடக்கிறது என்பதும், நாடு முழுவதும் 30 லட்சம் பாலியல் பெண் தொழிலாளர்கள் உள்ளனர்; அவர்களில் 40 சதவீதம் பேர் சிறுமிகள் என்பதும் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.

அதுபோல் மதத்தின் பெயரால் குழந்தைகள் திருமணம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை வரதட்சணை கொடுமைகள், பெண் சிசு கொலை இப்படி பெண்களுக்கு எதிரான எல்லாவித கொடுமைகளும் ஒருங்கே நடைபெறும் ஒரு நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த அறிக்கையின் வாயிலாக இந்தியாவிற்கு சுற்றலா வரும் வெளிநாட்டு பெண்களின் வரவு குறைந்து போகும் என்று நம்பப்படுகிறது.

ராகுல் காந்தி அடுத்த பிரதமரா?

JUNE 17, புதுடில்லி: ""நல்ல பிரதமருக்குரிய அனைத்து தகுதிகளும் ராகுலிடம் உள்ளன,'' என, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநில காங்கிரஸ் விவகாரத்தை கவனிக்கும் திக் விஜய் சிங் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ராகுலுக்கு போட்டியாக மாயாவதியோ, முலாயம் சிங் யாதவோ, யாரும் கிடையாது. அவருக்கு நிகர் அவர் தான்.

நல்ல பிரதமராவதற்குரிய தகுதிகள் அனைத்தும் ராகுலிடம் உள்ளன. அவருடன் நெருங்கி பழகுபவன் என்ற முறையில் இதை சொல்கிறேன். மக்களின் உள்ளக்கிடக்கை நன்கு அறிந்தவர். மன பக்குவம் பெற்ற அவர் பிரதமராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சிந்திக்கவும்: குடும்ப அரசியல் இந்தியாவின் சாபக்கேடு. கேட்டால் ஜனநாயக நாடு என்று சொல்வார்கள், அமெரிக்கா போல் இந்தியாவிலும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவரவேண்டும்.

ஈழப்படுகொலை செய்திகளை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள்!

JUNE 17, சனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்திய சிறீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர ஒளிநாடா உலகளவில் பாரிய ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழமை. ஆனால் சனல் 4 வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது.

உண்மை துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி பல்வேறு உப கேள்விகளை உருவாக்குகிறது. சனல் 4 நிகழ்வு புலிகளுக்கு ஆதரவானது என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அதில் புலிகள் செய்த குற்றச் செயல்களும் பக்கச்சார்பின்றி எடுத்துரைக்கப்படுகிறது.

மேலும் சரணடைந்த ஒருவரை புலி என்ற தலைப்பில் புறந்தள்ள முடியாது. அத்தகையோரை பாலியல் பலாத்காரம் செய்து, சித்திரவதை செய்து, இறக்கும் போது அவமானம் செய்து, இறந்த பின்னும் அவமானம் செய்து, இது எமது நாடு என்று சிங்களத்தில் கொக்கரிப்பதை பார்த்த பின்னரும் தமிழக ஊடகங்கள் மௌனம் காப்பது ஏன்...?

சிந்திக்கவும்: தமிழக பத்திரிக்கைகளில் பெரும்பான்மை பார்பன ஊடகங்கள் அவை என்றும் ஈழத்து இனப்போராட்டத்தை ஆதரித்தது இல்லை. மேலும் புலித்தலைவர் பிரபாகரன் ஒரு மீனவ சமூகத்தை சேர்ந்தவர் இதுவும் ஒரு காரணமாக இருக்கும். ஈழப்போராட்டம் ஒரு பார்ப்பனர் தலைமையில் நடத்தபட்டிருந்தால் அதை சுதந்திர போராட்டம் என்று வர்ணித்து புகழ்பாடி இருப்பார். மற்ற பத்திரிக்கைகள் இந்த பார்பன பத்திரிக்கைகளை ரோல் மாடலாக கொண்டவர்கள்.

சுவாமி நிகமானந்தா மரணம்! பாஜக அரசு ராஜினாமா செய்யுமா?

JUNE 16, கங்கை நதியை சுத்தப்படுத்தக் கோரி சுமார் 4 மாதங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சுவாமி நிகமானந்தா உயிரிழந்ததற்கு, மாநில பாஜக அரசின் புறக்கணிப்பு தான் காரணம் என்றும், அதற்கு பொறுப்பு ஏற்று உத்தரகாண்ட் முதல்வர் நிஷாங்க் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிஷோர் உபாத்யாய் கூறியுள்ளதாவது, "சுவாமி நிகமானந்தாவுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்ய மாநில அரசு தவறிவிட்டது. இதன் மூலம், முதல்வர் நிஷாங்க் தலைமையிலான பாஜக அரசு தனது கடமையில் இருந்து விலகியுள்ளது. எனவே, நிகமானந்தாவின் உயிரிழப்புக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் நிஷாங்க் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.

Jun 15, 2011

திமுக எங்களுக்கு சுமையே! காங்கிரஸ்!!

ஜூன் 16,தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புது தில்லி விஜயமும், பிரதமருடனான அவரது சுமுகமான சந்திப்பும் காங்கிரஸ் - அதிமுக உறவுக்கான தொடக்கமாக இருக்கக் கூடுமோ என்கிற யூகத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

கடந்த ஆட்சியின் விளைவாகத் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் சுமையைக் குறைக்கக் குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு உதவியாக வழங்க வேண்டும் என்றும், இது தவிர மாநில அரசு செயல்படுத்த இருக்கும் உதவித் திட்டங்களுக்கும் தேவையான நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கடந்த திமுக ஆட்சியில் மிக மோசமான நிதி நிர்வாகம் நடந்தேறிய நிலையில் அதை மத்திய அரசின் உதவியில்லாமல் புதிய அதிமுக அரசால் சரிசெய்ய முடியாத இக்கட்டில் சிக்கியிருக்கிறது அதிமுக அரசு. ஒவ்வொரு முறை அதிமுக ஆட்சி அமையும்போதும், முந்தைய திமுக அரசினால் சீர்குலைக்கப்பட்ட நிதிநிலைமையைச் சரிசெய்வதற்கே குறைந்தது மூன்று ஆண்டுகளும், அதற்காகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதால் ஏற்படும் கெட்ட பெயரும்தான் மிச்சமாகிறது என்பது உண்மையே.

இந்த நிலையில், 2001 ஆட்சியின்போது ஏற்பட்டது போல மத்திய அரசிடம் இணக்கமில்லாத சூழ்நிலை தொடர்வதை முதல்வர் ஜெயலலிதா விரும்பமாட்டார் என்பதால்தான், திமுக - காங்கிரஸ் உறவு தொடருமா என்கிற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாதைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் திமுகவுடனான தொடர்பை முறித்துக் கொள்ளும் எந்தவித எண்ணமும் காங்கிரசுக்கு கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் தரப்பிலும் அதிமுக உறவு பற்றிய சிந்தனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிறகு ஏன் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸýடனான உறவு முறிந்துவிடும் என்று பயப்படுகிறார்?""கருணாநிதி காங்கிரஸ் உறவு முறிந்துவிடும் என்று பயப்படவில்லை, விரும்புகிறார்'' என்கிறார் இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன்.

இது படுமோசமான தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருக்கும் திமுகவுக்குப் புத்துயிர் கொடுக்கக் கருணாநிதி செய்யும் முயற்சிதான் என்பது அவரது கருத்து.""திமுக பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்துகூட இல்லாத நிலைமைக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலைமை. வருகிற நகராட்சி, உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக படுதோல்வி அடைந்துவிட்டால், கட்சி அமைப்புகள் நிலைகுலைந்துபோய், கருணாநிதிக்குப் பிறகு அந்தக் கட்சி சின்னாபின்னமாகிச் சிதறு தேங்காயாக உடைந்துவிடும்.

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ்சை வெளியேற்றி அதிமுகவுடன் கைகோக்கச் செய்வதன் மூலம், அதிமுகவின் தோழமைக் கட்சிகளான தேமுதிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளை மூன்றாவது அணி அமைக்க வைப்பதுதான், கருணாநிதியின் கனவு. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி பலவீனமாகி விடுமென்றும், திமுக அணியில் முடிந்தால் இடதுசாரிகளையும் இணைத்து பலப்படுத்திக் குறைந்தது பாதிக்கு மேலான நகராட்சி, உள்ளாட்சிகளைக் கைப்பற்றுவது என்பதும்தான் கருணாநிதி போடும் கணக்கு.

அதிமுக - காங்கிரஸ் கூட்டணியும் வராது, தேமுதிக - காங்கிரஸ் மூன்றாவது அணியும் சாத்தியம் இல்லை'' என்று தெளிவுபடுத்தினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்துக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்வதுதான் அரசியல் சாதுர்யம் என்பதை முதல்வர் ஜெயலலிதா உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படுமானால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒருவர் பின் ஒருவராகக் கருணாநிதியின் குடும்பத்தினர் சிக்குவதற்கு அதிமுகவின் மறைமுக நெருக்கடிதான் காரணம் என்று அதை திசை திருப்பிக் கருணாநிதி அனுதாபம் தேடப் பார்ப்பார்

உண்மையைச் சொல்லப் போனால், திமுகதான் எங்களுக்கு சுமையே தவிர, நாங்கள் திமுகவுக்கு சுமையல்ல. ஏதோ எங்கள் கூட்டணி தொடர்வதால்தான் திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக பவனி வருகிறார்கள் என்பதைக் கருணாநிதி மறந்துவிடக்கூடாது. இந்தக் கூட்டணி இல்லாவிட்டாலும் மத்திய அரசுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை.

திமுகவுக்கு, குறிப்பாக, கருணாநிதி குடும்பத்தினருக்குத்தான் பாதுகாப்பு இருக்காது'' என்று கருத்துத் தெரிவித்த முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதுதான் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்று தலைமைக்குத் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

அதிமுகவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் பொறுத்தவரை, திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்வதுதான் நல்லது என்று கருதுவதாகத் தெரிகிறது. இல்லையென்றால், நியாயமான தவறுகளுக்காகக் கருணாநிதி குடும்பத்தினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அதிமுகவின் மீது பழி சுமத்தக் கருணாநிதி தயங்கமாட்டார் என்பது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும்.

மத்திய அரசுடன் சுமுகமான உறவு, அதேசமயம் காங்கிரஸ் கட்சியுடன் ""சற்று தள்ளியே இரும் பிள்ளாய்...'' தொடர்பு என்று முதல்வர் ஜெயலலிதா வியூகம் வகுத்திருப்பதாகத் தெரிகிறது.திமுக கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதாக இல்லை.

காங்கிரஸ் என்னதான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாராமுகமாக இருந்தாலும், தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பாக மத்திய அமைச்சர் பதவி இருப்பதால், திமுகவும் வலிய விலகிக் கொள்வதாக இல்லை. "விக்கிரமாதித்தன் கழுத்தில் ஏறிய வேதாளம்' கதையாக அந்த உறவு தொடர்வதுதான் தனக்கு சௌகரியம் என்பதால் அதிமுகவும் அலட்டிக் கொள்வதாக இல்லை.

ஆர்.எஸ்.எஸ். கோழைகளும்! வீரத்துறவியின் மரணமும்! ஆய்வு!

JUNE 16, டேராடூன்: கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுவாமி நிகமானந்தா வீர மரணமடைந்தார்.

உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா வயது 36, கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகமானந்தாவின் உயிர் பிரிந்தது.

இதற்கிடையே, சுவாமி நிகமானந்தாவின் மரணம் குறித்து, பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவருக்கு விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்ததாகவும், மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசிலும் அவர் புகார் செய்துள்ளார்.

சிந்திக்கவும்: ஆளும் பி ஜேபி அரசு இவரது உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளாமல், கல்குவாரி முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு இவரை கொன்று விட்டது என்றே சொல்லலாம். ஹிந்து மதத்தினர் புனிதமாக கருதும் கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த ஒரு சாமியார் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணமும் அடைந்துள்ளார்.

இவர் உண்ணவிரதம் இருந்ததை எந்த பத்திரிக்கையும் தலைப்பு செய்தியாக போடவில்லை. இப்படியாக கங்கை நதியை பாதுக்காக்க சாமியார் நிகமானந்தா உயிர் தியாகம் செய்து வீரத்துறவியானார். இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களும், அதன் ஊதுகுழலான பார்பன பத்திரிக்கைகளும் "இவரை பற்றி செய்திகளை போட்டு மக்கள் ஆதரவை" இவருக்கு தேடிக்கொடுக்கவில்லை. இப்படி, ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார் என்பது எத்தனை மக்களுக்குதான் தெரியும்?

ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் அனுதாபிகளும் யோகா சாமியார் ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இவரது உண்ணாவிரதத்திற்கு கொடுக்கவில்லையே அது ஏன்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் முகமூடி பி.ஜே.பி ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் இப்படி நடந்திருப்பது இவர்களுக்கு ஹிந்து மக்களின் நலனில் ஒன்றும் சிறப்பான அக்கறை கிடையாது என்பதையே காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களின் நோக்கம் ஹிந்து மக்களுக்கு நன்மை செய்வது என்பதில் இல்லை. பாபா ராம்தேவ் என்கிற மோசடி சாமியாரின் உண்ணாவிரதத்தை வைத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி, மத்திய அரசை கொடுத்த நெருக்கடி இருகிறதே அது சொல்லி மாளாது. பாபா ராம்தேவ்வின் உயிருக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று கூவினார்கள் இந்த பி.ஜே.பி. காரர்கள் அப்படி பட்டவர்கள் தங்கள் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஒரு ஹிந்து சாமியார் இறந்துவிட்டார், அதுவும் மர்மமான முறையில் இதற்க்கு இவர்கள் பொறுப்பேற்று ஆட்சி துறப்பார்களா?.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை கட்டி அமைத்தவர்கள் பிராமணர்களே. ஹிந்து மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவது, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது இதுவே இவர்களது முக்கிய நோக்கம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அதன் உயர் உயர்பதவிகளில் இருப்பது அனைவரும் பிராமணர்களே என்பது! மிகச்சிறுபான்மையினரான யூதர்கள் சூழ்ச்சியின் மூலம் எப்படி உலகத்தை ஆளுகின்றனரோ?, அதுபோல் இந்தியாவில் மதமாச்சாரியாங்களை உண்டாக்கி அதன்மூலம் 'இந்த பார்பனர்கள்' ஆட்சி மற்றும் அதிகார பீடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

அத்வானி, ராம கோபாலன் வகைறாக்கள் "ஹிந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்ப்படுத்த" ரதயாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, காசி, மதுரா இப்படி புதுபுது பிரச்சனைகளாக உண்டாக்குகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. ஏன் இவர்கள் பாபா ராம்தேவையும், அன்னா ஹசாரவையும் மட்டும் தூக்கிப்பிடித்தார்கள் என்றால்? ஒன்று இந்தியாவின் ஆட்சியை பிடிக்க, மற்றொன்று இவர்கள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளை மறைக்க. தொடர் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பங்கு வெட்டவெளிச்சமாகி உள்ள இந்நிலையில் இதில் இருந்து தப்பிக்க ஆட்சியை பிடித்தால் மட்டுமே முடியும், என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள்.

இதன் ஒரு பகுதிதான் ஊழல் ஒழிப்பு, அந்நிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்ட கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருகிறோம் என்று அன்னா ஹஸாரே மற்றும் பாபா ராம்தேவ் போன்றவர்களை வைத்து நடத்திய நாடகம். இவர்கள் இந்தியாவை ஆளும் பொழுது இதையெல்லாம் செய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. இந்த வக்கற்றவர்கள் செய்த ஊழலை சொன்னால் இந்தியாவே நாறும். கார்க்கில் யுத்தத்தில் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வாங்கிய சவபெட்டியில் ஊழல் செய்தவர்கள்தான் இந்த தேசபக்த வேடதாரிகள்.

கங்கை நதியை சுற்றி கல்குவாரி வைத்திருந்தவர்களில் பெரும்பகுதியினர், பி.ஜே.பி, மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே என்பதும், அதானால்தான் இவர்கள் சுவாமி நிகமானந்தா நடத்திய உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு முறையான சிகிச்சை அழைக்கப்படவில்லை, இவரது உண்ணாவிரதத்தை யாரும் முடித்து வைக்க முயற்ச்சிக்கவில்லை இவரை பரிதாபமாக சாகவிட்டுவிட்டார்கள் என்று கடும் குற்றச்சாட்டு இவர்கள் மேல் எழுந்துள்ளது.

மேலும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சொல்லி வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதல் பல ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடிகள் வேண்டுகோள்விடுத்தனர். ஆனால் சுவாமி நிகமானந்தாவை யாரும் கண்டு கொள்ளவில்லை அவரது உண்ணா விரதத்தை முடித்துவைக்க யாரும் முயற்ச்சிக்க வில்லை. மேலும், இவருக்கு அளிக்கப்பட சிகிச்சையின் பொழுது இவரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளதாக மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாநில ஆளும்கட்சியான பாரதிய ஜனதா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது, ஆனால் காங்கிரஸ் இவர் மரணமடைய காரணமே பி.ஜே.பி ஆட்சியின் மெத்தன போக்கே என்று குற்றம் சாட்டியது. எனவே சி.பி.ஐ. விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகிறது. கல் குவாரிகாரர்களோடு அரசுக்கு இருந்த நெருங்கிய தொடர்பு, இவரது தொடர் உண்ணாவிரதத்தை அனுமத்தித்தது, முறையான சிகிச்சை கொடுக்காதது ஆகியவையே இவரது மரணத்திற்கு காரணம் என்று காங்கிரஸ் கடும் குற்றம் சாடியுள்ளது.

எது இலவசமாக கொடுக்கப்பட வேண்டும்?

இலவசம் என்ற சொல்லைக் கேட்டாலே இப்போதெல்லாம் கோபம் தான் வருகிறது. பத்து ரூபாய் மதிப்புள்ள ஒருபொருளை ஒருவர் நமக்கு இலவசமாகத் தருகிறார் என்றால் அதில் அவருக்கு எவ்வளவு இலாபம் இருக்கிறது என்றே இப்பொதெல்லாம் மனம் கணக்குப்பார்க்கிறது.

அரிசி இலவசம் ஆனால் குடிதண்ணீர் 30 ரூபாய்! தொலைக்காட்சி  இலவசம் ஆனால் மின்சாரம் 3 மணிநேரம் வராது! மடிகணினி இலவசம் ஆனால் இணைய இணைப்பு 1000 ரூபாய்! இப்படி இன்னும் இன்னும் பலநூறு நகைச்சுவைகள் நாளுக்கு நாள் நடைமுறைக்கு வருகின்றன.

உடல் ஊனமுற்றவர்களைக் கூட இப்போதெல்லாம் அப்படிக் கூறாமல் மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்துவரும் இக்காலத்தில் ஏன் அரசு இலவசம் என்ற பெயரில் மக்களை ஊனமாமுற்றவர்களாக்குகிறது என்று தான் தோன்றுகிறது.

ஒரு அரசு இலவசமாகக் கொடுக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும் தான். கல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்தநாட்டில் மட்டும் தான் விற்பனை செய்யவேண்டும் என்று சொல்ல அந்த அரசுக்கு எப்படித் தகுதி இருக்கமுடியும்..?

இங்கு படித்தான் வெளிநாட்டுக்குப் போய் உழைத்துக்கொட்டுகிறான் என்று புலம்புவதில் ஏதாவது பொருளிருக்கிறதா? மருத்துவக் கல்வியை பணம் கொட்டிப்படித்தவரால் எப்படி இலவசமருத்துவம் பார்க்க முடியும். சிந்தித்தால் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுத்தால் போதும்.

கல்வியை இலவசமாகக் கொடுக்கமுடியுமா..? அரிசியிலிருந்து......  ஏதேதோ இலவசமாக் கொடுக்க முடிந்த அரசால் ஏன் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுக்கமுடியாது..?

“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட .. மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“  - என்பது சீனப்பழமொழி.

எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்! கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே நிறைவு செய்துகொள்கிறோம் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது. கல்வியையே விலைகொடுத்து வாங்கும் இன்றைய சூழலில், வேலையை எப்படி கல்வித்தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொடுக்கமுடியும்?

இன்றைய நிலையென்ன..? பணம் கொடுத்தால்தான் வேலை, அரசியல்வாதிகளின் பரிந்துரையிருந்தால் தான் வேலை! “வேலை வாய்ப்பு அலுவலகங்கள்“ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தால் என் கண்ணுக்கு “வேலை ஏய்ப்பு அலுவலகங்கள்“ என்றே தெரிகிறது.  இலவசங்கள் எல்லாவற்றையும் நிறுத்தினால் மக்கள் மீது சுமத்தப்படும் வரி பாதிக்குப் பாதி குறையும்.-  (P. குணசேகரன் Senior Civil & Structural Designer. தோஹா,கத்தார். )
...யாழினி...

எலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து!!

எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு.

முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.

எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் உடலுக்கு ஒத்துகொள்ளும் தன்மை உடையாது அதனால்தான் வெளிநாடுகளில் இதை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது.

சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.  நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும். எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும்.

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும். எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம். அத்தோடு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிப்பது நலம். பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம்.

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும்.
எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும். எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும்.

எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது. மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.
      ...உஸ்மான்...

தூத்துக்குடி, கொழும்பு கப்பல் போக்குவரத்து ஒரு கேடா!

JUNE 16, ""இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என, சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து சேவை துவக்கப்பட்டிருப்பது சரியல்ல.

இதை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும், தமிழகத்துக்கு என சிறப்பு நிதி ஒதுக்கீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளிக்க முன்வர வேண்டும்,'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் தேவை மற்றும் இலங்கைத் தமிழர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, 30 பக்கங்களைக் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் போர் நடந்த கடைசி நேரங்களில், அப்பாவி தமிழ் மக்கள் பல் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் வரை கொண்டு செல்ல இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு சம அந்தஸ்து, உரிமைகள் வழங்கிட இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். மத்திய அதிகாரங்களை மாநிலங்களுக்கும் பரவலாக்கி தமிழர்களுக்கு நில உரிமை மற்றும் போலீஸ் அதிகாரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாலும், பல கோரிக்கைகளை ஏற்க மறுத்துக் கொண்டே வருவதாலும் இலங்கை மீது பொருளாதார தடையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களின் புனர்வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெறுவது குறித்தும், அங்கு தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையில் துவங்கப்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்து சேவையை உடனடியாக தடை செய்ய வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வருவதற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ள நிலையில், பிரதமரே தலையிட்டு இந்த சேவையை நிறுத்த வேண்டும். ஊதியம், பென்ஷன் போன்றவற்றாலும் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளாலும் தமிழக அரசு நிதிநிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த பாரத்தை சமாளிப்பதற்காக சிறப்பு நிதிஒதுக்கீடாக ரூ. ஒரு லட்சம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

சமச்சீர் கல்வி அதிமுகவின் செயல்பாட்டால் குழப்பம் நீடிக்கிறது!

JUNE 16, அதிமுக அரசுக்கு தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை என்பதால்தான் சமச்சீர் கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்று திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு மேற்கொண்டுள்ள முடிவால் பெற்றோர்கள், மாணவர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வி தொடர்பாக திமுக கூறியதை ஏற்க முன்வராவிட்டாலும், தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொல்வதையாவது ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

அதுவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அவர்கள் செய்யும் நன்மையாக அமையும்.  கடந்த அரசின் முடிவிற்கு மாறாக வீம்பின் காரணமாக இந்த அரசு செயல்பட முயற்சிப்பதால் அரசிற்கு வீண்செலவு ஏற்பட்டுள்ளது.

Jun 14, 2011

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் யார்?

வாஷிங்டன், ஜூன் 15: குஜராத் கலவர விடியோ காட்சிகளால் நான் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டேன் என டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 இதில் டேவிட் ஹெட்லி கூறியதாவது, "லஷ்கர் அமைப்பின் முகாமில் கலந்து கொண்டேன் குஜராத்தில் மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதையும், வீடுகள் தீக்கிரையாக்கப்படும் காட்சிகளும் எனது மனதைப் பாதித்தது.

குஜராத்தில் தீவிரவாதி மோடி நடத்திய இனப்படுகொலை விடியோ காட்சிகளை பார்த்தேன், அதில் ஹிந்து தீவிரவாதிகள் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் கட்சிகளையும், முஸ்லிம் பெண்களை கற்பழித்து அதை வீடியோ எடுத்ததையும், முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து தீயில் போட்டு கொல்லும் காட்சியையும் பார்த்தேன்.

குஜராத்தில் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் முஸ்லிம்களை கொன்று குவித்து ஒரு மாபெரும் இனப்படுகொலையை நடத்தின அதற்க்கு இந்திய அரசும், நீதி துறையும் சரியான நீதி வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் இந்தியாவுக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினேன். அதன் விளைவாகவே இந்த தாக்குதலை நடத்த ஒத்துழைத்தேன் என்று தெரிவித்தார்.

தீவிரவாத விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி பாபா பஜ்ரங்கி என்பவரின் பேச்சை ரகசியமாக படம் பிடித்த விடியோ காட்சிகளையும் பார்த்தேன் அதில், ஏராளமான முஸ்லிம் பெண்களைக் கொன்றதாகவும், வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் ஹிந்து பயங்கரவாதி பாபா பஜ்ரங்கி கூறுகிறார். பாபர் மசூதி இடிப்பு விடியோ காட்சிகளையும் பார்த்தேன். இதுவே நான் இந்தியாவுக்கு எதிராக செயல்பட காரணமாக அமைந்தது.

திமுகவுடன் உறவை முறித்தால் காங்கிரஸுடன் கூட்டணி!

புதுதில்லி, ஜூன். 14, திமுகவுடனான உறவை முறித்துவிட்டு அணுகினால் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிப்போம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சூசகமாகத் தெரிவித்தார்.

முதல்வராகப் பதவியேற்ற பின்னர், தில்லி வந்த முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், திமுக, காங்கிரஸ் கூட்டணி இன்னும் நீடிப்பதாலும், மத்தியில் அதிகாரத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளதாலும், சோனியாவை சந்திப்பது பொருத்தமாக இருக்காது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

பலவீனம் என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதற்கு தயங்குகிறீர்களா என அவரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர், யாராவது என்னுடைய ஆதரவை விரும்பினால் அவர்கள்தான் என்னிடம் கேட்க வேண்டும். நீங்கள் அவர்கள் சார்பாகக் கேட்கக்கூடாது என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதற்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே கூட்டணி ஏற்படலாம் என பல்வேறு யூகங்கள் எழுந்தன. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

"இலங்கையின் கொலைக்களம்" "சேனல் 4" சிறப்பு ஒளிபரப்பு!!

கொழும்பு, ஜூன் 15,  "இலங்கையின் கொலைக்களம்" என்னும் தலைப்பில் இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடியோவின் முழுத் தொகுப்பை பிரிட்டனின் "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.

இதுகுறித்த விளம்பரங்கள் அந்த தொலைக்காட்சி சார்பில் பிரிட்டனின் முக்கியப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. த சண்டே டைம்ஸ், த இன்டிபென்டன்ட், மெயில் ஒன் சண்டே உள்ளிட்ட பிரிட்டன் பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும், தமிழர் அல்லாதவர்களும் இந்த விடியோ காட்சியை பார்க்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெரும் பணத்தை செலவழித்து இவ்வாறு பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஜூன் 14-ம் தேதி சேனல் 4-ல் ஒளிபரப்பாகவுள்ள இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விடியோ குறித்து பிரிட்டன் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

ஈழத்தமிழர்கள் ரத்தத்திலே ஒட்டப்படும் கப்பல்!!

JUNE 15, தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசி வருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு.

சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டு வரும் இந்திய அரசு, அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களை கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும்.

ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலி கொண்டு வரும் சிங்கள பௌத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.

தமிழனத்திற்கோ, தமிழ் நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்து வந்த வணிக வரிச்சலுகைகளை நிறுத்தி விட்டது.

ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது. அது மட்டுமல்ல, இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகி விடும். அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகி விடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது.

ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு.

இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதார தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம். இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம். இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு. அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சீமான் அதில் கூறியுள்ளார்.

சாமியார் நித்யானந்தாவின் எலும்பை முறித்த குதிரை!!

JUNE 15, சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி செய்யும் போது, குதிரை மிரண்டு அவரை கீழே தள்ளியது.

இதனால் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பெங்களூரு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.  பிடதி நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தில் இன்று குதிரை சவாரி செய்தார் செக்ஸ் சாமியார் நித்தி என்ற நித்யானந்தா அப்போது அவர் சாவாரி செய்த குதிரை மிரண்டதில் அவர் கீழே விழுந்தார்.

இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டது, இதனால் காலை 11 மணிக்கு, பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்குள்ள வி.ஐ.பி.,க்கள் அறையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிந்திக்கவும்: இந்த போலி செக்ஸ் சாமியார் போடும் ஆட்டத்தை பொறுக்காத வாயில்லா ஜீவன் இவரை கீழே தள்ளியது. மக்களால் செய்ய முடியாததை, சட்டத்தால் செய்ய முடியாததை குதிரை செய்திருக்கு,  இந்த குதிரைக்கு ஒரு ஓ போடுவோம்.

தனிநபர் விசயத்தில் நாம் தலையிட விரும்பவில்லை அதே நேரம் பெண்களை தவறான முறையில் பயன்படுத்தும் இது போன்ற சாமியார்களின் அட்டூழியங்களை வெளி கொண்டுவருவதே நமது நோக்கம்.

இந்த காமச்சாமியார் நித்யானந்தாவுக்கு ஹிந்துமுன்னணி பயங்கரவாத அமைப்பின் தலைவர் ராமகோபாலன் வக்கலாத்து வாங்கி பிபிசி செய்திக்கு பேட்டி அளிக்கும் போது கூறினார், "ஹிந்துமத பிரச்சாரகர் நித்யானந்தா சாமிகள் மீது கிராபிக்ஸ் செய்து செய்திகள் வெளியிட்டு," ஹிந்துமத பெருமைகளை கெடுக்க சதி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

எங்களின் கூடுகள் வன்னியின் பனைமரக்காடுகள் தான்!!

" மனித உரிமை மீறலில் மோசமானது ஊழல்",  ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையிலிருக்கும் பெருச்சாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி இந்த வார்த்தைகள்.

நேற்றைய செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம்,  25 நாட்கள் சிறையில் வாடிய கனிமொழியின் ஜாமீன் விசாரணை மீண்டும் தள்ளிப்போகிறது என்பதே.

ஊழல் வழக்கில் சிறை சென்றவள் 25 நாட்கள் சிறையிலிருப்பதையே ஏதோ ஆயுளில் பாதியை சிறையில் தொலைத்த மண்டேலா அளவுக்குப் பேசுபவர்கள் கருத்தில்,  25 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினியின் நிலை படாமல் போனதேன்?

என் மகள் ஒரு மலர் என்று அப்பனும்,  நானும் என் தந்தையும் அழுதோம் என்று மகளும் உணர்வுப்பூர்வமாக பேட்டிக் கொடுத்து,  கேட்பவர் காதில் ஒரு தொட்டியை மாட்டி அதில் மண்நிரப்பி விதைபோட்டு நீர்விட்டு வளர்த்து பூக்கும் பூவை நம் காதில் வைக்கிறாங்கள்.

கனிமொழி ஒரு மலர் என்றால் எங்கள் பெட்டைகள் என்ன கருங்கல்லா இல்லை கருவை முள்ளா?

எப்போது தமிழர்நிலை பற்றிப் பேசினாலும் நான் உண்ணா நோன்பிருந்தேன், ஈழத்திற்கான முதல் ஆதரவுக்குரல் விடுத்தவனே நான்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் கலைஞரே உம்மைப்பார்த்துக் கேட்கிறோம், 1987 ம் ஆண்டு எம் ஈழமக்களின் கோரிக்ககைகளை முன்னிறுத்தி நீரும் உண்ணாமல் 12 நாட்கள் உறுதியாயிருந்து உயிர்நீத்த எம் ஊரெழு யாழின் தலைமகன் திலீபன் கால்தூசி பெறுவீரா நீர்?

இன்று ஊழலுக்கேதிரான போராட்டம் என்று தேனும் பழச்சாறும் குடித்து ஊரை ஏமாற்றும் கோமாளிகளைப் பார்த்துக்கேட்கிறோம், 1981 ல் தம் தாய்நாட்டின் மீதான பிரித்தானிய ஆளுகையை எதிர்த்து ஐயர்லாந்து சிறையில் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த போபிசாண்ட்ஸ்ன் துணிவு இருக்கிறதா உங்களுக்கு?

" ஈயத்தைப்பார்த்து இளித்ததாம் பித்தளை " என்பார்கள் அதே கதைதான் இந்திய அரசியல் வியாதிகளுக்கும்.  கருணாநிதியைப் பார்த்து கபடநாடகதாரி என சொல்லும் ஜெயலலிதா... நீங்களும் மறக்க வேண்டாம், தமிழ்நாட்டில் புலிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்றும்,  அடுத்த நாட்டின் இறையாண்மையில் தலையிட மாட்டோம் என்றும் அறிக்கை விட்டவர்தான் நீங்கள்.

இன்று புதிதாய்க் கிளம்பியிருக்கிறது ஓர்பூதம் சிவசங்கர் மேனன் என்ற பேரில்.  இது இத்தாலியப் பேயின் கைப்பாவை! எம் தமிழ்மக்களைக் கொன்றுகுவிக்க ஆயுதமும் அளித்துவிட்டு,  தமிழ் மக்களைக் கொல்லவேண்டும் என்பது இலங்கை அரசின் நோக்கமல்ல என்று நாக்கூசாமல் நடிப்பார்கள்.

பாதுகாப்புப் பிரதேசம் என அறிவித்து மக்களை ஓரிடத்தில் குவித்து பொம்பர்களை ஏவி,  டாங்கிகளைக் கொண்டு நாற்புறமிருந்தும் தாக்கி, மிஞ்சியவர்கள் தஞ்சம் புகுந்த மருத்துவ மனையைத் தகர்த்து,  இன்றும் எம்மக்களை முள்வேலிக்குள் அடைத்துவைத்து விலங்கினும் கேவலமாக நடத்தும் ராஜபக்சேயின் சிங்களத் தீவிரவாதம் இன்று வேட்டவெளிச்ச்ச- மாகியுள்ளது.

இந்த உலகின் ஒவ்வொரு அணுவிலும் நாங்கள்பட்ட உயிர்வதை பதிவாகியுள்ளது. வீசும் காற்றின் அசைவில் எம் மக்களின் உயிர்ப்பிரியும் ஒலியே நிறைந்துள்ளது.  நீங்கள் காணும் வெளிச்சத்தில் இருளில் சிக்கி எல்லாம் இழந்து ஏதிலியாய்ப்போன எம் மக்களின் ஏக்கம் எதிரொளிக்கிறது.

கண்மூடி ஒருநிமிடம் உங்கள் உள்ளத்தைக்கேளுங்கள், உங்கள் கண்களுக்குள் தோன்றும் இருட்டின் ஒவ்வொரு புள்ளியும் சாட்சியம்கூறும் எங்கள் இனம் அழிந்தது இனப்படுகொலையில் என்று.

உலகையே தன் கையில் கட்டியாள்வதாக கெக்கலித்த சர்வாதிகாரிகள் நின்ற இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்ட கதையும்,  அரசியல் சாணக்யர்கள் மக்கள் புரட்சியில் மறைந்து அரசியல் அனாதைகளான வரலாறும் உலக வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டுள்ளன.

எங்களின் வலிகளைச்சொல்லியே தம்மை வலுவாக்கிக்கொண்ட அரசியல்உலகின் அரசர்களே...!

மறவாதீர் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!", வாழ்வின் இறுதித் தீர்ப்புநாளில் எல்லோருமே அறத்தின் முன் பதில்கூறக் கடமைப்பட்டவர்கள் .

எங்கள் தமிழினம் அழிந்துவிட்டதாக அவசரப்பட்டு அறிவித்து விடாதீர்கள், நாங்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை, வலசை போயிருக்கிறோம்.

வாழிடத்தில் சூழல் சரியில்லாதபோது பறவைகள் வலசைபோதல் இயல்புதானே?

எங்கள் வீடுகள் எங்கெங்கு அமைந்தபோதும்,  எங்களின் கூடுகள் வன்னியின் பனைமரக்காடுகள் தான்!! மீண்டு வருவோம்!! மீண்டும் வருவோம்!!
...யாழினி...

Jun 13, 2011

2050 வரை திமுக ஆட்சி நடந்திருந்தால்?

2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டின் வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்கும்.

முதலில் " கடவுள் வாழ்த்து "
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றி

அடுத்து மொழி வரலாறு: தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி ( நம்ம கவிஞர் வாலிதான்)  என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார்.  

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கணிதம்:  திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி,  பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்:  உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானம் விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,  கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

வரலாறு: தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன். திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே  சென்றார்   அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன்.  அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி. பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்.
...உஸ்மான்...