Jun 11, 2011

மானிடம்!!

சுட்டெரிக்கும் கோடையில்
போகும் பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயைப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழத் தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ, மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?


....அப்துல் ரஹ்மான்.... 
     harmys

சர்கஸ் நடத்தும் ஹசாரே, ராம்தேவ்: மணிசங்கர் அய்யர் !!!

JUNE 12, அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரிலும்,பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது.
 
அவர்கள் இருவரும் சர்க்கஸ் நடத்தினார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா ஹசாரேஜந்தர் மந்தரிலும்,  பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது.

அவர்கள் இருவரும் சர்க்கஸ் நடத்தினார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். எனவேதான் அவர்களின் போராட்டத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பது குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் இருவரும் முறையிட விரும்பி இருந்தால் முறைப்படி சம்பந்தப்பட்ட நிலைக்குழுவை அவர்கள் அணுகியிருக்க வேண்டும்.  அதைவிடுத்து போராட்டம் என்ற பெயரில் சர்க்கஸ் நடத்த முயலக்கூடாது.

இவர்கள்தான் இப்படி என்றால் மத்திய அரசின் செயல்பாடும் மோசம். பாபா ராம்தேவ் போராட்டம் என்று அறிவித்தவுடன் அவரை சமாதானப்படுத்த அமைச்சர்களை அனுப்பி வைக்கிறார்கள்.  நான் பிரதமராக இருந்தால் நிச்சயம் இப்படி ஒரு செயலை செய்திருக்க மாட்டேன் என்றார்.

சுஷ்மா சுவராஜ் ஆடிய தேசபக்தி குத்தாட்டம்!!

ஜூன் 11, ஜனநாயகப் படுகொலையை கண்டித்து சத்தியாகிரகம் நடத்துகிறார்களாம்? விளங்கி விடும் ஜனநாயகம்?.

அப்புடியே 33 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுங்க நாடாளுமன்றத்திலும் ஒரு குத்தாட்டம் பார்க்கலாம்,  உள்ளிருப்பு போராட்டம் நடத்துனா ஒரு குழு டான்ஸ் பார்க்க உதவும்ள்ள.

ஏற்கனவே வலுவான எதிர்கட்சி இல்லாமல் சிக்கிச்  சீரழிந்து வரும் இந்திய ஜனநாயகத்தை தூக்கி நிறுத்துகிறேன் என்று ப.ஜ.க நடத்திய சத்தியாகிரகத்தில் நடந்த கூத்துதான் இந்த சம்பவம்.

ஏன் இந்த நடனம் என்று கேட்டால் "உயிருள்ளவரை தேசபக்தி பாடலை கேட்டால் டான்ஸ் ஆடிக்கொண்டே இருப்பேன்" என்று சொல்கிறார் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர்.

சுஷ்மா சுவராஜிடம் இவ்வளவு திறமை கொட்டிக் கிடப்பதை பாலிவுட் இதுவரை அறியாமல் போனது பெரும் இழப்பு. சுஷ்மாவின் கட்சியே நாட்டியக்காரர்களின் கட்சியாகி விட்டது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

காந்தியின் சமாதியில் ஆட்டமும், பாட்டமும் அடுக்குமா என்ற கேள்விக்கு சுஷ்மா காட்டமாக பதிலளித்திருக்கிறார். ‘தொண்டர்கள் கோரசாக தேசபக்தி பாடல்களை பாடினார்கள். அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆடினேன். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஆடுவேன். அது என் உரிமை’ என்கிறார்.

அகிம்சை போராட்டம் என்று அறிவிப்பு கொடுத்துவிட்டு ‘தொண்டர்கள் எல்லாரும் துப்பாக்கி ஏந்தி வாருங்கள், ராம்லீலா மைதானத்தில் நாம் ராவண லீலா அரங்கேற்றலாம்’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறார் காவியுடை தரித்த சாமியார் ராம்தேவ்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்க காந்தி சமாதியில் புறப்பட்டு ஹரித்வார் ஆசிரமத்தை அடைந்திருக்கிறார் சுஷ்மா. இவர்களின் யாத்திரையின் இலக்கு தெளிவாகவே தெரிகிறது.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள் ஏற்கனவே அழிந்துவரும் ப.ஜ.க கட்சியை இவர் போட்ட ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம்.

யோகா குரு அல்ல யோகா வியாபாரி! லாலு பிரசாத் யாதவ்!

JUNE 12, ராம்தேவ் உண்ணாவிரதம் இருப்பதை, ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், ""ராம்தேவ் யோகா குரு அல்ல, யோகா குறித்த பயிற்சியை கற்றுத் தருபவர். யோகா என்ற கலையை விற்று பணமாக்கி கோடீஸ்வரர் ஆனவர்.

இவரை பார்த்து யோகா குரு என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவது தவறு. யோகா வியாபாரி என்று சொல்லலாம். அதுபோல் இவரை போலி டாக்டர் என்றும் சொல்லலாம்.

ஏன் என்றால் இவர் முறைப்படி எந்த ஆயுர்வேத பட்டப்படிப்பும் படிக்காமல், மருந்து ஆயுர்வேத மருந்து கம்பனிகள் வைத்து முறைப்படி அரசு அனுமதி வாங்காமல் மருந்துக்களை தாயரித்து விற்பவர்.

உண்ணாவிரதம் இருப்பதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு. அவருக்கு எதிராக விசாரணை நடத்தப் போவதாக வெளியான தகவலால் தான், அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அவர் அரசியலில் ஈடுபட விரும்பினால், நேரடியாக ஈடுபடலாம். ஹிந்து தீவிரவாத இயக்கங்களாகிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., ஆகியவற்றின் பின்னணியில் ஏன் செயல்பட வேண்டும்,'' என்றார்.

கோடீஸ்வரர்களின் உண்ணாவிரதம் ஊழலை ஒழிக்காது!!

JUNE 12, ஊழல் போன்ற பொதுப் பிரச்சினைகளை, சந்தேகத்திர்குரிய, சர்ச்சைக்குரிய நபர்கள் மற்றும் ஹிந்துத்துவா வகுப்புவாத ஃபாசிச கும்பல்கள் அவர்களின் மறைமுக செயல்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவது குறித்து விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

இதுபோன்ற போராட்டங்களின் மூலம் ஹிந்துத்துவா சக்திகள் நாட்டை கபளிகரம் செய்வதை குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய வகையில் சொத்துக்களை பலமடங்கு சேகரித்து குவித்து வைத்துள்ள பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிரான பேராளியாக தன்னைக்காட்டிக் கொள்வது பரிதாபத்திற்குரியதும், ஆபத்தானதும் ஆகும்.

காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற்ற வெற்றிகரமான போராட்டத்தை தொடர்ந்து யோகா வியாபாரியின் திடீர் வருகை ஹிந்துத்துவா ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதிதான்.

எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நலன்கருதி அனைத்து உணர்வுள்ள, மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பாபா ராம்தேவ் தலைமையிலான கேலிக்கூத்தான சத்தியாக்கிரகங்களை ஆதரவளிப்பதை விட்டும் விலகியிருக்க வேண்டும்.

ஆரம்பகட்டத்தில் ராம்தேவிடம் மத்திய அரசாங்கம் கருணைகாட்டியதும் பின்னர் வலுக்கட்டாயமாக நடுநிசியில் ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற்றியதும் தேவையற்றது.

மிக உயர் மட்டத்தில் உள்ள ஒரு பணக்கார கூட்டத்தால் ஊழலை பிரித்து பார்க்கவும், தீர்க்கவும் முடியாது. அதற்கு பதிலாக மைய நீரோட்ட அரசியலை தூய்மைப்படுத்த காங்கிரஸ், பாஜக, சிபிஐஎம் போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல் மத்தியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதையே இப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வாக இருக்கும் என்பதை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக பிரச்சாரம்!

JUNE  12, கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோரின் பின்னணியில் உள்ள ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் உள்ளதை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஞாயிறு முதல் நாடுதழுவிய பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளை பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வலியுறுத்தி பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதேபோல் ஊழக்கு எதிராக அன்னா ஹசாரேவும் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இவர்கள் பின்னணியில் ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் முகமூடி பாஜக உள்ளிட்ட தீவிர ஹிந்து மதவாத சக்திகள் உள்ளதாக காஙகிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதனை நாட்டு மக்களுக்கு விளக்கும் வகையில் ஞாயிறு முதல் நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல் பிரச்சாரத்தை கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.

உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்: RSS வேண்டுகோள்!

JUNE 11, ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக ஹரித்து வாரில் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவின் உடல்நிலை மோசமானது. அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள், ராம்தேவ் இதயத்துடிப்பு குறைந்து வருவதாக எச்சரித்தனர்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை உடல் நிலை கருதி பாபா ராம்தேவ் கைவிட வேண்டும் என்று  பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உண்ணாவிரதத்தை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு ராம்தேவை கேட்டுக்கொள்கிறேன், தேச சீர்திருத்த நடவடிக்கையில் உங்களது வழிகாட்டுதல்கள் இந்த நாட்டுக்கு அவசியம் தேவை என்று மோகன் பகவத் கூறினார்.

சிந்திக்கவும் : ஆர்.எஸ்.எஸ். ஹிந்த்துதுவா பயங்கரவாத இயக்கத்தின் கைத்தடிதான் இந்த ராம்தேவ் சாமியார். இவரை வைத்து உண்ணாவிரத நாடகம் ஆடி, "எகிப்த் போல் ஒரு மக்கள் புரட்சியை உண்டாக்கி" நாட்டை கைப்பற்றலாம் என்று ஹிந்துத்துவா சதி திட்டம் தீட்டியது அது பலிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்த உண்ணாவிரத நாடகத்தை நடத்தி தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று சதி ஆலோசனை செய்தன மற்றபடி இதில் தேசபக்தியும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை.

தயாநிதி மாறனை பதவி நீக்கம் செய்யவேண்டும்!

JUNE 11, தயாநிதிமாறனை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய 2ஜி ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ்,  அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணை வளையத்துக்குள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளார்.

இந்த விவகாரத்தில் அவரது பங்கும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இருந்தபோதும், அவர் மத்திய அமைச்சராகத் தொடர்ந்து வருகிறார். எனவே, இனியும் காலம் கடத்தாமல் அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனம், மாறன் குடும்பதாருக்கு சொந்தமான சன் குழும நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் சுமார் ரூ.600 கோடி வரை அவர்கள் பயனடைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றார்.

சமீபத்தில் தமிழக முதல்வர்  ஜெ, கம்னிஸ்ட் கட்சி தலைவர்கள், மற்றும் எதிர் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் தயாநிதி மாறன் இந்த  பிரச்சனைகளுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகுவாரா?.

Jun 10, 2011

விடுதலைத் தீ வளர்ப்போம்...விடியும் நிச்சயம்!!

கலங்காதிரு மனமே நம்கவலைகள் யாவும் தீரும் ஒருதினமே!

கலங்கித்தவித்திருந்த எம்தமிழர் கவலைகள் தீரும்தினம் கண்ணில் தெரிகிறது ..

கண்ணீர்மட்டுமே சுமந்த எம்கண்கள் இனி வண்ணமிகுகனவுகளையும் சுமக்கும்

ஓலங்களால் ஒப்பாரிகளாய் ஒலித்த எம் விடியலின்பொழுதுகள் இனி பூபாலங்களால் புலரும்!

முள்வேலிகளில் முகம்கிழிந்த எங்கள் யாழின்தென்றல் இனி தமிழ்பொங்க இனிதாய்வீசும்

வன்னிவீதிகளில் வெடிச்சத்தம் இனிக்கேட்காது, எங்கள் பிஞ்சுகள் விளையாடும்!!

கொஞ்சுதமிழ்ப்பெண்டிரைக் கொத்திச்சென்ற சிங்களக்கழுகுகளின் சிறகுகள் பிய்க்கப்படும்

வன்புணர்வால் வண்ணமிழந்த கதைகள் இனியில்லை எம்தேசத்தில்.

தவழ்ந்த தாழ்வாரங்களையும், முற்றத்தின் நறுமலரையும் முகம்மலர்த்தும் உறவுகளையும் விட்டுப்பிரிந்து

உடைமைகளைத் தலையிலும் உணர்வுகளை நெஞ்சிலும் உயிரைக் கையிலும் சுமந்து நடைப்பிணமாய் நடக்கும் பயணங்கள் இனியில்லை எம்பாதைகளில் ...

ஒருவாய் உணவின்றி உடுக்க உடையின்றி காற்றின் அசைவுக்கும் காதைப்பொத்தி...

இனியிந்த இம்சைகள் எங்கள் பிள்ளைகளுக்கில்லை..அவைகள் பள்ளிக்குப்போகும்!!

சேரிடம்அறியா விதிவழிச்சென்று பன்னெடுங்காலமாய் எங்கெங்கோவாழ்ந்து சுயம் தொலைத்துக்கொண்டிருக்கும்

புலம்பெயர்ந்தோர் வாழ்வு இனிப்புதிதாய் மலரும் எம்தாய்மண்ணில்.

தன்னைவளர்க்கவும்...பிள்ளைகுட்டி பொருளைச்சேர்க்கவும் தமிழின்தலைமீதேறி சவாரிசென்றார்

எம்தமிழர்கள் இறந்துபடுகையில் ஏய்த்து நாடகமாடினார் இனி அவர் தலைக்கவிழ்ந்து மாய்வார்!!

அம்மாவென்றும்...ஆண்டவனே என்றும் அலறித்துடித்த எம் ஈனக்குரல்கள் ... இன்று கேட்டுவிட்டன உலகத்தின் காதுகளில்.

இந்தியா நினைத்திருந்தால் என்றோ செய்திருக்கலாம், ஈழத்தை வைத்து அரசியல் வளர்த்தோர் ஏனோ செய்யவில்லை

இன்று வந்திருக்கிறதோர் வெள்ளி எங்கள் வானில் விடியலின் அறிகுறி!!

எங்கள் சுதந்திரதாகம் தணிக்க வந்ததோர் மேகம்.. ஈழ விடுதலைக்குத் துணையிருங்கள் எம்மக்களை விடுவியுங்கள்

எங்கள் கோடிக்கோடி நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

இன்று வந்திருப்பதோர் தீப்பொறி ... அக்கினிக்குஞ்சு

விடுதலைத் தீ வளர்ப்போம்...விடியும் நிச்சயம் . கலங்காதிரு மனமே நம் கவலைகள் யாவும் தீரும் ஒருதினமே!!

...யாழினி...

பாசத்தை கொடுக்கும் பெற்றோர்கள் எய்ட்சை கொடுத்து வேதனை

ஜூன் 11 ,கொல்கத்தா : இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்தே அவர்களுக்கு பரவியுள்ளது என்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

யுனிசெப் மற்றும் மாநில எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சொசைட்டியின் கருத்தரங்கு, மேற்குவங்காளம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது.

இதில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து இந்தியாவுக்கான யுனிசெப் தலைவர் இவான் கேமரோனி நேற்று கூறியதாவது:

இந்தியாவில் பெரும்பாலும் பெற்றோராலேயே குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பரவுகிறது. பாதுகாப்பற்ற ஊசிகள் மற்றும் ரத்தம் செலுத்தும் போது குறைந்த எண்ணிக்கையிலேயே எய்ட்ஸ் தொற்றுகிறது.


எய்ட்சால் பாதிக்கப்படும் பெண் மூலம் அவரது குழந்தைக்கும் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெற்றோர் மூலம் ஆண்டுதோறும் 21 ஆயிரம் குழந்தைகள் எய்ட்சால் பாதிக்கின்றனர். இதை தடுக்க தேவையான மருந்துகள், உதவிகளை யுனிசெப் செய்து வருகிறது.இவ்வாறு இவான் கூறினார்.

மிருகம் பாதி மனிதன் பாதி கலவை கலந்த பசு !!!

ஜூன் 11 ,அயர்ஸ்:உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்து, குளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால், தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.


அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம், புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது.இப்பசுவின் மரபணுக்களில், இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை.


இந்த மரபணுக்கள், பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசு, மனிதர்களின் தாய்ப்பாலைப் போல, விட்டமின்கள் கொண்ட, பாலைத் தரும்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி, பிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.எஸ்.ஏ., எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிறக்கும் போதே 45 கிலோவுக்கும் அதிகமாக இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டது.


இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் முதன் முறையாக மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டு குளோனிங் மூலம் ரோசிட்டா ஐ.எஸ்.ஏ., உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பால், தாய்ப்பாலில் உள்ள விட்டமின்களைக் கொண்டிருக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பசு உருவாக்கத்திற்கான முயற்சியை இந்நிறுவனமும், சான்மார்ட்டின் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டன.

சட்டீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 10 போலீசார் பலி!!

JUNE 10,  சட்டீஸ்கர் மாநிலம் தன்டேவடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் உடல் சிதறி பலியாயினர். அவர்கள் சென்ற கண்ணி வெடி அகற்றும் வாகனம் சின்னாபின்னமானது.

தன்டேவடா காட்டுப் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரோந்து சென்ற மத்திய ரிசர்வ் போலீசார் மீது மலை உச்சியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதில் 76 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரின் ஆயுதங்களை கொள்ளையடித்த நக்சலைட்கள், காட்டுக்குள் சென்று மறைந்தனர். இது தன்டேவடா மாவட்டத்தில் நடந்த மிகப்பெரிய படுகொலை சம்பவமாக கருதப்பட்டது.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, போலீசாரின் தேடுதல் வேட்டையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் தன்டேவடா மாவட்டம் கதிகல்யான் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த சட்டீஸ்கர் போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக அந்தப் பகுதிக்கு கண்ணி வெடி அகற்றும் வாகனத்தை முதலில் அனுப்பினர். அதில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் 7 பேரும், போலீசார் 6 பேரும் புறப்பட்டனர். கதான் என்ற கிராமத்தில் உள்ள சிறிய பாலத்தை போலீசாரின் வாகனம் கடக்க முயன்றது. அப்போது தரையில் பதித்து வைத்திருந்த குண்டை நக்சலைட்கள் வெடிக்கச் செய்தனர்.

இதில் கண்ணிவெடி அகற்று வாகனம் தூள்தூளாக சிதறியது. வாகனத்தை நோக்கி நக்சலைட்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்த 10 போலீசார் உடல் சிதறி பலியாயினர். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் பஸ்தார் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். நக்சல்கள், 70 கிலோ வெடிகுண்டை தரையில் புதைத்து வைத்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

பாவம் தமிழ் மக்கள் !!!

June 10, திரு. விஜயகாந்த் அவர்களும் அவரின் தொண்டர்களும் பெற்ற வெற்றிக்கு கொஞ்சம் கூட அருகதையில்லாத வகையில் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இது வெற்றி பெற்றதினால் இவர்கள் அடிக்கும் கூத்தல்ல இது. இவர்களின் பண்பே இதுதானோ என்று அச்சுரத்தோனுகிறது.

வெற்றி பெறுவதற்குமுன் இருந்த பணிவு, அடக்கத்தைவிட வெற்றிபெற்றபின் அந்த நற்குணங்கள் அதிகமாக இருக்கவேண்டும். அந்த நன்னடத்தைக்கு அந்தந்த கட்சியின் தலைவர்களே எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.

ஏகபோக திமிருக்கும், அகந்தைக்கும் உதாரணமாக திகழ்வது அவர்களின் சுருக்கமான அரசியல் வாழ்க்கைக்கு காரணமாக அமைவது மட்டுமல்லாமல் அவர்களை வரலாறும் ஏகடியம் செய்யும்.

தலைவனாய் வருதல் விபத்து தலைவனுக்குண்டான பண்புகளை தனதாக்கிக்கொல்வதில்தான் தலைமைத்துவம் அடங்கியுள்ளது. அதுதான் மகத்துவமும் கூட.

மனதில் வரும் உணர்வுகளையெல்லாம் செயலாக்கிச்சென்றால்..... அது தலைவனின் பண்பல்ல. இன்று பதவிக்கு வந்த இவர்களின் செயல்களின் பரிணாமங்களை, அதன் முடிவுகளை 4 ஆம் வருட முடிவில் காண்போம்.

அ.இ.அ.தி.மு.க. வின் உறுப்பினர்களும் அவர்களின் தலைவியுமான செல்வி ஜெயலலிதாவும் முன்னாள் முதல் அமைச்சரை அவரின் கடந்த கால எல்லா நடவடிக்கைகளையும் விமரிசிப்பதும், மாற்றி அமைப்பதும் ஒரு உயர்ந்த தன்மைக்கு உரியதன்று.

எனவே, ஒப்பாரும், மிக்காரும் இல்லா ஒரு உன்னத ஆட்சியை கொண்டுவர தனக்கடுத்து சுயநலமில்லா சான்றோரின் சகவாசம் வேண்டும்.

தான் பெரும்பான்மை பெற்றதினால், சிறுபான்மை அவையவரின் வேண்டுகோளுக்கு செவி மடுக்காது தான்தோன்றித்தனமாய் செய்யும் செயல்கள் நல்லனவல்ல. இது ஒரு பேரினவாதத்தின் மற்றொரு முகமாகவே நல்லோரால் காணப்படும்.

Jun 9, 2011

கடலும் கரையில்லா மனிதர்களும்!

நஜீம்பாயின் வீடு சந்தோசத்தில் நிரம்பியிருந்தது, அமீரகத்திலிருந்து மகளும் மருமகனும், பேரப்பிள்ளை ஆலமும் வந்திருந்தார்கள்.  அன்று நஜீம்பாய் மனைவி வஜிஹாவின் சமையல் வாசத்தில் வீடே மணத்துப் போயிருந்தது.

காலையில் புரோட்டாவும் குடல்கறியும் அனுபவித்துச் சாப்பிட்டபடி மாப்பிள்ளை சொன்னார்," நாங்க எப்பவோஅறுத்த ஆட்டையும் என்னிக்கோ அறுத்த கோழியையும், காஞ்சுப் போன காய்கறியையும் சாப்பிட்டு நாக்கு செத்துப்போயிருக்கோம், நம்ம ஊருக்குவந்து இப்டி சாப்டும்போதுதான் நாக்குல உயிர்வருது " என்றார்.

பாயின் மகளும்," வாப்பா எங்களுக்கு வர்ற தண்ணிகூட பாடம்பண்ணி புட்டியில அடைச்சுதான் கிடைக்குது...ஒரு ருசியும் இருக்கறதில்ல.." என்று நொந்துக்கொண்டாள் .

இவர்கள் பேச்சைக்கவனித்தபடியே அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட வஜிஹா ,"ஏம்மா இன்னம் எத்தன நாள்தான் அங்கேயே இருபிங்க, சட்டுன்னு நம்மூர்லவந்து வாழற வழியப்பாருங்க, அதான் நம்ம பிள்ளைகளுக்கும் நல்லது.. மாப்பிள்ளைக்கும் தினம் வாய்க்கு இதமா சாப்பாடுகிடைக்கும் " என்று சொல்ல வீடெங்கும் சிரிப்பலைவீசியது .

" சரிம்மா நீங்க நிதானமா சாப்பிடுங்க, இப்போ போனாத்தான் மீனும்நண்டும் புதுசாக்கிடைக்கும், நான் போய் வாங்கியாறேன்" என்று கையில் பையுடன் கிளம்பினார் நஜீம்பாய். தாத்தா நானும் வாரேன் என்று ஓடிவந்து காலைக்கட்டிக்கொண்ட பேரன் ஆலமிடம் " வாங்க பிள்ள, கூப்பிடு தூரந்தான் தோணிக்கரை காலாற நடந்துபோய் வாங்கிவருவோம் " என்றவாறே கைப்பிடித்து நடக்கத்தொடங்கினார்.

தோணிக்கரையில் காலைவெயிலை மறைத்தபடி காற்றுவீசிக்கொண்டிருந்தது, சிறிதும் பெரிதுமாக படகுகள் வந்தவண்ணமிருந்தன. வேடிக்கை பார்த்தபடி நடக்கும் பேரனை ரசித்தவாறே, வழக்கமாய் மீன் வாங்கும் அந்தோனியம்மாவிடம் வந்துநின்றார் நஜீம்பாய். அந்தோனியம்மாவுடன் இன்று ஒரு சிறுமியும் வந்திருந்தாள்.

"வாங்க பாய் வீட்ல எல்லாம் சொகமா..? , வாளை, வஞ்சனை, செங்காளை, பொருவாபொடி, நீலநண்டு எல்லாம் இருக்கு என்ன வேணும் உங்களுக்கு..." என்றபடி மீன்களை எடுத்து பலகையில் அடுக்கினாள் அந்தோனியம்மாள் "பொடிமீன் கொஞ்சம் குழம்புக்கும், வஞ்சனையும் நண்டும் போடுங்க" என்றார் நஜீம் பாய், அவள் எடுத்துவைத்த மீன்களை பார்த்தபடி, சொல்லுங்கம்மா என்னவிலை என்றார்.


அந்தோணியம்மா "என்னா பாய் உங்களுக்கு தெரியாதா, பொடிமீனுக்கு நாப்பதும், வஞ்சனைக்கி இருநூறும், நண்டுக்கு என்பதும் ஆக முன்னூத்தி இருவது ஆவுது, நீங்க முன்னூறு குடுங்க போதும் " என்று சொல்ல ...நஜிம்பாய் " அதெல்லாம் இல்ல எறநூத்தம்பது தான் பொறும் இந்த மீனு" இருவரும் விலை நிர்ணயத்தில் மும்முரமாய் இருக்க, ஆலம் அந்த சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தான்.

ஒருவழியாக இருநூத்தம்பது பேசி மீதம் ஐம்பது ரூபாயை அந்தோனியம்மாவிடமிருந்து வாங்கிப் பையில் போடும்போது தான் ஆலமும் அந்தச் சிறுமியும் பேசுவதைக் கவனித்தார் நஜீம் பாய்

ஆலம் அந்தச் சிறுமியிடம், " நீ ஏன் ஸ்கூல் போகல ? " என்று கேட்டான்.
அதற்கு அவள், " எங்கப்பா கடலுக்கு போவையில சுட்டுப்புட்டாங்களாம், திரும்பி வரவேஇல்ல, ஊட்டுல அம்மைக்கு மேலுக்கு சொகமில்ல..அதான் நானு மீனுவிக்க வந்துட்டேன் . " என்றாள்அவள்.

தனக்கு நேர்ந்தது என்னவென உணரமுடியாத வயதில் அந்த சிறுமிக்கு நேர்ந்ததை அறிந்து நொறுங்கினார் நஜீம் பாய். அந்தோனியம்மாவிடம் பேரம்பேசி மிச்சம் வாங்கிப்போட்ட அம்பது ரூபாய் மலையாய்க் கனத்தது அவர் சட்டைப் பையில்.

திரும்பி நடக்கும் வழியில் பேரன் ஆலம் கேட்டான், " தாத்தா உன்கிட்ட தான் நெறைய பணம் இருக்கே, கொஞ்சம் அந்த பொண்ணுக்கும் கொடுத்தா அவளும் படிக்குவா, செய்வியா தாத்தா " என்றான்.

தன் நெஞ்சின் சுமை நீங்க வழிசொன்ன பேரன் ஆலமை அன்புடன் அனைத்து நஜீம்பாய், "யார் மனிதர் மீது இரக்கம் காட்டவில்லையோ! அவர் மீது இறைவன் இரக்கம் காட்டமாட்டான்" என்பது நபிமொழி என்று சொன்ன நாஜிம் பாய்,

ஆலம் ஈகையை புனிதக்கடமையாய் சொல்லுது நம் மார்க்கம், ரமலான் மாதம் மட்டுமல்ல, துன்பத்துல இருக்கும் உயிர்களை பாக்கும்போதெல்லாம் அவங்களுக்கு உதவுறது நம்ம கடமை. பிள்ள நீங்க சொன்னது எனக்கு நபிமொழி கேட்டது மாதிரி இருக்கு நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு நாம உதவிசெய்வோம் "என்றார்.

ஆலமின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது...

-யாழினி-

உங்கள் வாழ்வு சந்தோசமாக சில வழிமுறைகள்!!

நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும். அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை.

எப்படி? உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக: ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், பேருந்தாலும் நம் பயணத்திட்டங்கள் அனைத்துமே சில நேரங்களில் தாறுமாறாகக் குழம்பி விடுகின்றன.

அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? நாம் ஓட்டிச் செல்லும் வாகனத்தைச் சட்டத்தை மீறி முந்திச் செல்லுகிறார் மற்றொரு ஓட்டுனர். அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
இந்த 10% இல் நமக்கு எந்த ஆளுமையும் கிடையாது. இதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது. இது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. மீதியிருக்கும் 90% முற்றிலும் மாறுபட்டது. அந்த 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம்.

எப்படி? நடக்கும் சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் விதத்தில், அந்த மீதி 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம். டிராபிக் சிக்னலின் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை நம்மால் மாற்றியமைக்க இயலும். இதன் மூலம் நீங்கள் மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவதைத் தவிர்த்து விடவும் முடியும்.
சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்.

இந்த 90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:
யாராவது உங்களைத் தாழ்வாகப் பேசினால் ஈரத்தை முழுதும் உள்வாங்கும் பஞ்சுபோல ஆகி விடாதீர்கள். அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓடட்டும். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும். தவறான எதிர்கொள்ளலால் நீங்கள், நல்ல ஒரு நண்பரை இழக்கலாம் ; உங்களின் வேலையை இழக்கலாம்; மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.

உங்கள் வாகனத்தை ஒருவர், சாலை விதிகளை மீறி தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்? பொறுமையை இழந்து கடுகடுப்பாகி விடுவீர்களா?
உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? ( ஒரு நண்பர் குத்தியதில் ஸ்டீரிங் கழன்று விட்டது!) திட்டித் தீர்ப்பீர்களா? உங்களின் ரத்த அழுத்தம் எகிறுகிறதா?
முந்திச் சென்றவரின் வாகனத்தின் மீது மோத முயல்வீர்களா?

பத்து வினாடி தாமதமாகச் சென்று சேர்ந்தால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா? உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?. 90/10 கொள்கையை நினை விற் கொண்டு, அது பற்றிய சஞ்சலத்திலிருந்து விடுபடுங்கள். உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்? ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்?. மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதன் காரணமாக அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த உங்கள் திட்டங்களெல்லாம் பாழாகப் போய் விடுகின்றன.
அதற்காக விமானப் பணிப்பெண் மீது ஏன் எரிந்து விழ வேண்டும்?. விமானம் புறப்படுவதற்கும் பணிப்பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தத் தாமத நேரத்தைப் புத்தகம் படிப்பதிலோ, அருகிலிருக்கும் பயணியுடன் நல்ல கருத்துகளைப் பரிமாறுவதிலோ செலவிடுங்கள். நாமே ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.

90/10 கொள்கை பற்றி இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே! இந்தக் கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பாருங்கள். அதன் பின் விளைவுகள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வியப்பாக இருக்கும்! இதனைப் பயன்படுத்துவதால் நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை. 90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை!

மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்து, அதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.
கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும், மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும். நம் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வோமாக!

திமுக எம்.எல்ஏ. களை ஈவ்டீசிங் செய்யும் தேமுதிகவினர்!!

JUNE 10, தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் திமுக உறுப்பினர்கள் இன்று புறக்கணிப்பு செய்தனர்.

அதன்பின்னர் சட்டசபை வளாகத்தில் திமுக சட்டப்பேரவை தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ’சட்டபேரவையில் நேற்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் இந்த தீர்மானத்தின்மீது பேசும்போது திமுக அரசை இழித்தும் பழித்தும் திமுக தலைவரை கேலியும் கிண்டலும் செய்து பேசி இருக்கிறார்.

இதற்கு துரைமுருகன் ஆட்சேபனை தெரிவித்து பேசினார். இதற்கு விளக்கம் தர துரைமுருகன் முற்பட்டபோது, ‘விஜயகாந்த் பேசி முடித்ததும் பேச வாய்ப்பு தரப்படும்’ என்று சபாநாயகர் கூறினார். ஆனால் கடைசி வரை பேச வாய்ப்பு தரவில்லை.

இதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த நேரத்தில்கூட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அருகில் வந்து தேமுதிக உறுப்பினர்கள் கேலியும் கிண்டலுமாக பேசுவதும் நுழைவாயிலில் இடை மறிப்பு செய்வதும், வேட்டியை மடித்துக்கொண்டு தாக்க முற்பட்டதும் நடந்திருக்கிறது.

முன் மற்றும் பின் வரிசையில் திமுக எம்.எல்ஏக்களுக்கு ஒரே வரிசையில் இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என்று சபாநாயகர் ஜெயகுமாரிடம், தலைவர் என்ற முறையில் கடிதம் கொடுத்தேன். இன்று காலை அதற்கு பதில் கடிதம் வந்தது. அதில் சட்டமன்ற விதிகளின்படிதான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அப்படி அல்ல. எங்கள் ஆட்சி காலத்தில் பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்குமே அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. எனவே எங்களுக்கு ஒரே வரிசையில் இருக்கைகள் ஒதுக்கித் தராவிட்டால் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள மாட்டோம்’’ என்று தெரிவித்தார்.

பேச்சைக் குறை...! மூளையை பாதுகாத்துக்கொள் !!!

ஜூன் 9 ,மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல்.

புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தப் பட்டியலில் இப்போதுசெல்போனசேர்வதாலஎன்னநேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை.

ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.

அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம். இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது.

2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள்.

அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்! உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள்.

எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன.

அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம்.

ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது. அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது.

இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம். இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது.

ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .

குழந்தை திருமணங்கள்!! தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

June 10, கிருஷ்ணகிரி மாவட்டம் மலைகள் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன.

வழக்கமாக 8 வயது முதல் 14 வயதிற்குள் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். இதே போல தர்மபுரி மாவட்டத்திலும் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன.

இதற்கு காரணம் வறுமை மற்றும் படிப்பறிவு இல்லாதது. மேலும் இவர்கள் தொழில் நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இளவயதிலேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள்.

அதுவும் சொந்த உறவினர்களுக்கே பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். இந்த இரண்டு மாவட்ட மக்களும் பெங்களுர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள குவாரிகள், செங்கல் சூளைகள், பாறை உடைக்கும் இடங்கள், கல், மண் அள்ளி வரும் லாரிகளில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இதனால் இவர்களது குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கின்றன. அவர்கள் பாதுகாப்பை கருதி இளம் வயதில் திருமணம் செய்து வைத்து விடுவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். கடந்த வாரம் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 3 குழந்தை திருமணங்களை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.

கச்சத்தீவை மீட்க தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு !!!

சென்னை, ஜூன். 9-சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு தனி தீர்மானத்தை கொண்டு வந்து முன்மொழிந்தார்.அதன் விவரம் வருமாறு:-

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமேநடைமுறைப்படுத்த முடியும் என 1960-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெரு பாரி வழக்கில் தீர்ப்பளித்தது.

ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த், சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.), முத்துக்குமரன் (இந்திய கம்யூ.), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவாஹிருல்லா (மனிதநேயமக்கள் கட்சி) ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதா பதிலுரைக்கு பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபைக்குள் வரவில்லை. அதனால் விவாதத்தில் பங்கேற்கவில்லை.

Jun 8, 2011

தமிழர்கள் சந்தோசம்! ஜெக்கு தங்கர்பச்சான் வாழ்த்து!!

JUNE 9, இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று லட்சம் தமிழர்களின் உயிரிழப்பும் நாற்பதாயிரம் போராளிகளின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான போராட்டமும் வீணாகிப் போனதே என தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவித்திருந்தனர்.

இந்நிலையில்,  ஐ.நா.சபை விசாரணைக் குழுவின் போர்க்குற்ற அறிக்கை நம்பிக்கையை விதைத்தது. இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு தண்டனையாக கடந்த ஆட்சி தோல்வி கண்டு புதிய ஆட்சி மலர்ந்துள்ளது.

தேர்தல் முடிவு வரும் முன்னரே புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்பவர்கள் முதல் சட்டப்பேரவைத் தொடரிலேயே இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடையை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இலங்கை ஆட்சியாளர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என எனது கோரிக்கையை வெளிப்படுத்தியிருந்தேன்.

என்னைப் போன்றோரின் வேண்டுகோள் தற்போது நிறைவேற்றப் பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

உலகின் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பையும் தீர்த்து வைக்கும்- படியான தீர்மானம் நிறைவேறக் காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தமிழர்கள் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கு அடுத்த கட்டமாக முதல்வர், டெல்லியில் முகாமிட்டு அனைத்துக் கட்சியினரையும் கூட்டி இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என அந்த அறிக்கையில் தங்கர்பச்சான் குறிப்பிட்டுள்ளார்.

மூலிகை மருந்து தயாரிப்பில் மோசடி? ராம்தேவ் !!!

புதுடெல்லி, ஜுன். 9- ஊழல், கறுப்பு பணத்தை ஒழிக்க கோரி யோகா குரு ராம்தேவ் ஹரித்துவாரில் உள்ள தன் ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இன்று (வியாழன்) அவரது உண்ணாவிரதம் 6-வது நாளாக நீடித்தது. அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

ராம்தேவ் குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராம்தேவின் சொத்துக்கள், வருமானம் குறித்து விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ராம்தேவுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  குட்டித்தீவு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கும் அவர் மூலிகை மருந்து விற்பனை மூலம் கோடி, கோடியாக சம்பாதித்து வருகிறார்.

 ஹரித்துவாரில் உள்ள பதாஞ்சலி யோகா பீடத்தின் ஒரு பகுதியில் ராம்தேவ் வழங்கும் ஆலோசனை பேரில் தான் இந்த ஆயுர்வேத மூலிகை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது போலி மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில வகை ஆயுர்வேத மூலிகை மருந்துகள் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் ராம்தேவ் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது. அது போல மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அவர் உரிய வகையில் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ராம்தேவ் ஆசிரமத்துடன் சில ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பு வைத்துள்ளன. மருந்து தயாரிப்பு, கலவை, விற்பனை, ஏற்றுமதி போன்ற எல்லா விஷயங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.  இதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஹரித்துவார் ஆசிரமத்தில் சோதனை நடத்தி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

விரைவில் இந்த விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்தேவின் சொத்துக்கள் குறித்து ஒரு பக்கம் விசாரணை நடந்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் அவர் பண முதலீடுகள் பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. எனவே ராம்தேவ் சொத்துக்கள், ஆயுர்வேத மருந்து தயாரிப்புகள் குறித்து விரைவில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு பொருளாதார தடை: ஜெயலலிதா!!

யாழ்ப்பாணம், ஜுன். 9-ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தும் தீர்மானம் தமிழக சட்ட சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

போரில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்து, நிர்க்கதியாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு,  இந்த தீர்மானம் ஆறுதல் அளித்துள்ளது என்று தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன. இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக 6 தசாப்தங்களுக்கும் மேலாக போராடி வருகிறோம்.  இலங்கை அரசு எமக்கு பல தடவைகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாகா எமது உரிமைகளை நசுக்கிக் கொண்டே வருகின்றது.

கடந்த 2009-ம் ஆண்டு வன்னியில் இடம் பெற்ற உக்கிரமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் பல லட்சம் பேர் இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் வாழ்விடங்கள் தரை மட்டமாகி சொத்துக்கள் அழிக்கப்பட்ட நிலையில் 2 வருடங்கள் கடந்தும் இன்னுமே அந்த மக்கள் இருப்பிடங்கள் இன்றி தங்களது மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாமல் இருப்பதைக் காணலாம்.

விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததன் பிற்பாடும் தொடர்ந்து ராணுவ ஆக்கிரமிப்புகள் தமிழர் பகுதிகளில் தொடர்வதுடன்,  தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிபோய்க் கொண்டே தான் இருக்கின்றன.

இந்த நேரத்தில் ஐ.நா. சபையும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும்படி கோரி அறிக்கை விட்டுள்ளது. இந்த அறிக்கையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

அத்துடன் தற்போது தமிழக சட்டசபையில் முதல்  அமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட `இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என்ற தீர்மானத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர தொடர்ந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அரியநேத்திரன் எம்.பி. கூறினார்.

ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம்! நாமும் ஆதரிப்போமே!!

JUNE 9, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற மக்கள் அமைப்பு தமிழகம் முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை துவக்கியிருக் கிறார்கள்.  சினிமாமூலம் ஆபாசம்,  பத்திரிகைகள் மூலம் ஆபாசம் இப்படி வியாபாரமாக செய்யப்படும் ஆபாசத்திற்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தை தொடக்கி இருப்பது வரவேற்ப்புக்கு உறிய ஒன்றாகும். நல்லதை நாமும் ஆதரிப்போமே!!
 இவர்களது ஆபாசத்திற்கு எதிரான யுத்தத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

ராம்தேவ்வின் ஆயுத போராட்டத்திற்கு ஹசாரே கடும் எதிர்ப்பு!!

ஜூன் 9, யோகா குரு ராம்தேவ், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.
ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்.

அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்தி லிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்.

அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும்.

10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.

ஆயுதம் தாங்கிபோராடப்போவதாக அறிவித்துள்ள யோகாகுரு பாபா ராம்தேவின் கருத்துக்கு அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இது ஒரு பயங்கரவாத சிந்தனையை தோற்றுவிப்பதாகும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பாபா ராம்தேவ்வை ரகசிய போலீஸ்ஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ராம்தேவ் உதவியாளரிடம் துப்பாக்கிகள்!! அதிர்ச்சி ரிப்போர்ட்!!

JUNE 9, பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா.  இவர் கடந்த 2005ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கி உள்ளார்.

மேலும் ஆயுத சட்டத்தை மீறி 2 கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர்.

இப்போது பாலகிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை நடத்த பிரதமர் மன்மோகன் சிங்க்கும் உத்தரவிட்டுள்ளார். தவிர உத்தரகண்டில் நிலமோசடியில் ஈடுபட்டதாகவும் பாலகிருஷ்ணா மீது புகார் எழுந்துள்ளது.

இந்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆர்,எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மறைமுக தலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு இரண்டுவிதமான முகங்கள் உண்டு. ஒன்று மக்களுக்கு தெரியும் படி வெளிப்படியாக சாகா போன்ற பயிற்ச்சிகளை செய்வார்கள்.

அதே நேரம் மறைமுகமாக 'துப்பாக்கி சுடும் பயிற்சி', மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு, 'குண்டு தாயாரிக்கும் பயிற்சி' ஆகியவைகளும் உண்டு. மேலும், பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனவேதான் இந்த இயக்கம் நேரிடையாக தீவிரவாத செயல்களில் ஈடுபடாமல் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது.

ஆர்.எஸ். எஸ். இயக்கம் திரைமறைவாக சில தீவிரவாத இயக்கங்களை நடத்தி வருகிறது. அந்த திரைமறைவு இயக்கத்தினர் நடத்தியதுதான், இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள்'. இந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய 'ஹிந்துத்துவா தலைவர் சுவாமி அசிமானந்தா', 'மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

ஆயுத போராட்டதிற்கு அழைப்பு விடுக்கும் பயங்கரவாத சாமியார்!!

JUNE 8, மத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போலி சாமியார் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.

நள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது. போலீசார் நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஹரித்வாரில் நேற்று பேட்டி அளித்த ராம்தேவ், மத்திய அரசை மன்னித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.

ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும். அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம்.  இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம். அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.

சிந்திக்கவும்: இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதம், இவர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் என்பதே ஒரு கண்துடைப்பு.  இவரிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.

இவருக்கு சொந்தமாக வெளிநாட்டில் ஒரு சொகுசு தீவே இருக்கிறது. இது ஒன்றும் இவர் உழைத்து சம்பாதித்தது இல்லை. இந்த சொத்துக்கள் எல்லாம் மக்கள் பணம்.

இந்த மக்கள் பணத்தை வைத்துதான் இவர் தனி விமானத்திலும், ஹெலிஹாப்டர்களிலும் சுத்துகிறார். மேலும் விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களில் வளம் வருகிறார்.

இந்தியாவில் நடந்த எத்தனையோ போராட்டங்களில் போலீஸ் தடியடி நடத்தியது. அப்போது எல்லாம் யாரும் ஆயுதத்தோடு வரவேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி ஆயுதம் எடுக்கவேண்டிய சூழல்கள் இந்தியாவில் பல சந்தர்ப்பங்களில் இருந்ததும், யாரும் அப்படி செய்யவில்லை.

ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு தமிழக மக்கள் ஆயுதம் தூக்கி இருக்கவேண்டும். ஏன் என்றால் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட இந்திய அரசு ஆயுதம் கொடுத்து உதவியது.

காஷ்மீரிலே மக்கள் அமைதி போராட்டம் நடத்தினார்கள் இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இதுவரை பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.  ஆனால் அந்த மக்களும் ஆயுதம் எடுக்கவில்லை.

ஆனால் போலீஸ் தடியடி கூட முறையாக நடத்தவில்லை இவர்களே ஒருவர்மீது ஒருவர் விழுந்தது காயம் பாட்டதுதான் அதிகம் என்று நேரடி செய்திகள் சொல்கின்றன.

இவர்கள் தங்கள் ஹிந்த்துதுவாவை நிலை நிறுத்த ஒரு ஆயுத போராட்டத்திற்கு தயாராவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பயங்கரவாதி பால்தாக்ரேயை கைது செய்யச்சொல்லி கோர்ட் ஆர்டர் இருந்தும் கைது செய்ய முடியவில்லை. பயங்கரவாதி பால்தாக்ரே சொன்னான் என்னை தொட்டால் மும்பையே பற்றி எறியும் என்று.

அதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதுபோல் பாபர் மசூதியை உடைத்து கலவரம் செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி ஆகியோர் மீது கடுமையான வழக்குகள் இருந்தும் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

அதுபோல் இப்போது  ஒரு சாதாரண தடியடிக்கு எதிராக ஆயுதம் தூக்கி அரசுக்கு எதிராக போராட்டமாம். ரவுடித்தனம், பயங்கரவாதம் இதன் மூலம் இந்தியாவை ஹிந்துத்துவா தன் பிடிக்குள் வைத்துள்ளது.

பாபா ராம்தேவ், "ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் யோகா ஆசிரியர்"  என்பது குறிப்பிடத்தக்கது. "சமூக போராளி சப்னம் ஆஸ்மி கூறினார்," இவர்கள் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போல் "தங்கள் உண்ணாவிரதம் இருந்த பந்தலை தாங்களே தீயிட்டு கொளுத்த திட்டமிட்டிருந்தனர்.

அதை காரணமாக வைத்து ஹிந்து,. முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்றும், அதனைக்கொண்டு இந்தியாவில் ஹிந்துத்துவா ஆட்சியை ஏற்ப்படுத்தலாம் என்றும் திட்டம் வகுத்திருந்தனர். அதற்க்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றும் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது. இவர் போலீஸ்ஸில் முறையிட்டதாலேயே அவர்களது உண்ணாவிரதத்தை போலீஸ் கலைத்தது.

ஜெ ஆட்சியில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தீர்மானம்!!

JUNE 9, இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து,விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும்.

என்றும்,மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாழினியின் மன ஓசைகள்!!

பகிரப்படாத என் வாழ்வின் பக்கங்களில் ஆசைகள் நிறைந்திருக்கின்றன..
பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க எண்ணிய
என் ஆசைகள்...
பட்டுப்புடவையாய் செத்துப்போயின..
பட்டுப்புடவை பார்ப்போருக்கழகு...
இழைபிரிக்க வெந்நீரில் வெந்தவலி ...?
கூட்டுப்புழு கதறும் சத்தம்கூடக் கேட்காமல்
கருவே கல்லறையானது போல்...என்
ஆசைகள் எனக்குள்ளேயே புதைந்துபோயின.,,
என் சிறகிலிருந்து பிரிந்த இறகுகள்
உங்கள் காலடிகளில் சிதறிக்கிடக்கின்றன
இயன்றவர் சேகரித்துத் தாருங்கள்
மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறேன்..
இறகுகள்கூட்டி சிறகுசெய்து பறப்பதற்கு..!!

அஸ்தமித்த சூரியன் உதிக்காது ஜெயலலிதா !!!

JUNE 8, சென்னை: ""தி.மு.க., இனி ஆட்சிக்கு வந்து, சட்ட மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானது தான்; இனி உதிக்கவே உதிக்காது,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார். சட்டசபையில், மேலவை வேண்டாம் என்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

மேலவை தேவை என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி  "அரசியல் அறிஞர்கள், சான்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்று அரிய ஆலோசனைகளை கூறும் வகையில், சட்ட மேலவையை விரைவில் கொண்டு வருவோம்' என்று குறிப்பிட்டார்.

இப்போதுள்ள சட்டசபையிலேயே வக்கீல்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் போன்றோர் இருக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்களும், இங்கு இடம் பெற்றிருக்கின்றனர்.சாமானியர்களையும் சட்டசபை உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., தான். அப்படியிருக்கும்போது, சட்ட மேலவையை தோற்றுவிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

இந்த தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில், மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அவர் மகன் ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மற்றொரு மகன் அழகிரி மற்றும் பேரன் தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டன.

கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி.குடும்பத்தில் எஞ்சியிருப்ப வர்களுக்கும், தன் துதி பாடுபவர்களுக்கும் பதவிகள் வழங்க வேண்டும் என்பதற்காகத் தான், சட்ட மேலவையை தி.மு.க., கொண்டு வந்ததே தவிர, பல தரப்பட்டவர்களின் கருத்துக்களை பெறுவதற்காக அல்ல.

நாட்டில் உள்ள, 28 மாநிலங்களில், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டும் தான், சட்ட மேலவை உள்ளன. காங்கிரஸ் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில், சட்ட மேலவை கிடையாது.

இதிலிருந்தே, மேலவை வேண்டும் என்ற கருத்து, எந்தளவிற்கு வலுவிழந்து காணப்படுகிறது என்பதை அறியலாம்.முற்போக்கு சிந்தனை கொண்ட அனைவரும், ஜனநாயக அமைப்பில் இரண்டாம் அவை என கருதப்படும் மேலவை தேவையற்றது என, திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

அவர்கள் வழியை பின்பற்றி, மேலவை தேவையில்லை என்ற தீர்மானத்தை, உறுப்பினர்கள் முன் வைத்தோம். இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசும்போது, "இனிமேல் மேலவை வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுங்கள்' என்றார்.

எனக்கு தெரிந்தவரை, மேலவை வேண்டும் என்று நினைக்கும் ஒரே கட்சி தி.மு.க., தான். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன், அஸ்தமனமானது தான்; இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாது; உதிக்கவே உதிக்காது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

Jun 7, 2011

ஏழைகளுக்கு மறுவாழ்வு கிராமம் திறப்பு!

JUNE 8, புதுடெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்காக ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் மறுவாழ்வு கிராமம் திறக்கப்பட்டது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா நிறுவனம்தான் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன். அருகிலுள்ள கிராமங்களில் வாழும் வீடு இல்லாத 45 ஏழை குடும்பங்களுக்கு இந்நிகழ்ச்சியில் வீட்டிற்கான சாவி ஒப்படைக்கப்பட்டது.

1000 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதுதான் இத்திட்டம். இதில் 51 வீடுகளின் நிர்மாணம் பூர்த்தியாகிவிட்டது.  இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து நிலமும் வாங்கப்பட்டுவிட்டது.

வீடுகள் தவிர கல்வி நிலையம் மற்றும் மஸ்ஜிதும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் தலைவர் இ.அபூபக்கர் வீடுகளுக்கான சாவிகளை உரியவர்களுக்கு வழங்கினார்.

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் பொது செயலாளர் கெ.எம்.அஷ்ரஃப் அமைப்பின் செயல்பாடுகளை விவரித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், பொன்கய்காவ் மாவட்ட கூடுதல் கலெக்டர் அப்துற்றஹீம் ஷேக், ரிஹாப் அறங்காவலரும்(trustee) மில்லி கஸட் பத்திரிகையின் ஆசிரியருமான டாக்டர் ஷஃபருல் இஸ்லாம் கான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

CONTINUATION OF CONSPIRACY

June 7, In Ramleela Maidan Where Swamy Baba Ram Dev tried to make Sathya Graha against corruption and black money, was planned to burn down by Hindu Extremists (RSS and their outfits).

It has been said and believed to be the same nature of conspiracy where these extremists burnt down the Godhra Train which carried the Karsevaks and claimed more than 50 lives and created the violence against muslim community with State Government sponsorship.

Knowing this, secret police department cleared few group of people from the Maidan. The information from the secret police department is 100% true said the social activist Shabnam Azmi and he is the one who informed to the police he added.

These RSS activists planned to burn the Sathyagraha podium and then hurl the blame over muslim community or on any imaginary muslim orgnanization to massacre the muslim community as they have done successfully in Gujrath.

However a huge planned disaster against minority community has been thwarted. Since we gained freedom from Britishers, RSS and its several movements like Vishwa Hindu Parishad, Bajrang Dal, Hindu Munnani, Shiv Sena and lot more.... have lead innumerable riots succussfully... We would have been in a better position than any other country even better than China without these elements.

Our country would progress with no doubts if Saffron Terrorists are wiped out.

ராஜபக்சே தண்டிக்கப்பட நாடாளுமன்றத்திலே தீர்மானம்!

JUNE 8, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு துணைத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் சட்டப்பேரவையில் (07.06.2011) ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில்,

இலங்கையில் நிகழ்ந்துள்ளது. போர் குற்றம் என்று சிலர் கூறுகிறார்கள் இதனை இன அழிப்பு போர் குற்றம் என்று எனது கட்சி கருதுகிறது. இறுதிப் போரில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  இதற்கு உரிய ஆதாரங்களும் இருக்கின்றன.

இலங்கை அரசின் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசு மக்கள் தொகை கணக்கீட்டின் படி 2008ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கைக்கு 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர்.

போர் முடிந்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக, இலங்கை அரசு வெளியிட்ட அகதிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 பேர் இதன்படி ஒரு லடசத்து 46 ஆயிரத்து 679 பேர் காணவில்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபை தனது போர் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இத்தகைய பெரிய படுகொலை இரண்டாவது உலக பெரும்போருக்கு பின் உலகில் எங்கும் நடக்கவில்லை. கடந்த காலங்களில் போர் குற்றம் செய்தவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

ஹிட்லரின் தலைமையில் நடைபெற்ற இழிவு மிகுந்த படுகொலைக்காக நூரம் பர்க் எனும் இடத்தில் விசாரனை மன்றம் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். போஸ்னியா மக்கள் 1995 ஆம் ஆண்டில் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

இன அடிப்படையில் இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது விசாரனை நடத்தப்பட்டு 2007 ஆம் ஆண்டு தீர்ப்பும் வழங்கப்பட்டது. முன்னாள் தளபதி ரட்கோ மிலாடிஜ் என்பவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைப் போன்றே ஆப்ரிக்காவிலுள்ள ருவாண்டாவிலும் போர்க்குற்றவாளிகள் விரசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக தமிழ் மக்களை அழிப்பதற்கு தொடர்ந்த இன அழிப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

2008 2009 ஆம் ஆண்டுகளில் உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகள் அனைத்தும் அந்த மக்கள் மீது போடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17, 18 தேதிகளில் மட்டுமே 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளைக் கொடியோடு புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வருமாறு ஐக்கிய நாடுகள் பொறுப்பாளர்காளல் வழிகாட்டப்பட்டும். இவரோடு வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து கூண்டோடு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு உலகில் எங்கும் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்கள் கொல்லப்பட்டது இல்லை. இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை மட்டும் படுகொலை செய்யவில்லை. தமிழக மீனவர்களையும் படுகொலை செய்து வருகிறது.

போர் முடிந்த பின்னரும் மீனவர்கள் அவமானப் படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். இனவெறி மிகுந்த கொடுமையான இலங்கை அரசு என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை நாடு, எல்லை கடந்த வந்து இனவெறி கொண்டு தமிழக மீனவர்கள் சுடப்படுகின்றார்கள்.

தமிழ் மக்கள் இலங்கையிலும் தமிழக கடற்கரையில் தமிழக மீனவர்களும் கொல்லப்படும் போது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வன்னிப் பிரதேசத்திலே தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு ஆயுதங்களை வழங்கியது.

தமிழ் இனத்தை அழிப்பதை நோக்கமாக கொண்டு போர் நடத்திய ராஜபட்சே இன அழிப்பு போர் குற்றவாளியாக அறிவிப்பதற்குரிய முழு பொறுப்பையும் காங்கிரஸ் கட்சி செயல்படுத்த வேண்டும்.

இலங்கை தமிழ் மக்களின் தாயக உரிமைக்கான போராட்டத்திற்கு தமிழக முதல்வர்தான் தலைமையேற்க வேண்டும். தமிழகத்தின் 7 கோடி தமிழ் மக்களும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழ் மக்களும் இனதத்தான் எதிர் பார்கிறார்கள்.

இன அழிப்பு குற்றவாளியான ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை புகழ் மிக்க இந்த அவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கார்ப்பரேட் சந்நியாசி மேல் நடவடிக்கை வேண்டும்! திமுக!

JUNE 8, யோகா குரு ராம்தேவ் சொத்துக்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது.

டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருந்த ராம்தேவை போலீசார் வெளியேற்றினர்.

இதையடுத்து ஹரிதுவாரில் ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டார். நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ராம்தேவ் சொத்துக்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழு செயலாளர் ஆதிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாபா ராம்தேவ் ஒரு கார்ப்பரேட் சந்நியாசி போல் நடந்துகொள்கிறார். ராம்தேவின் நிதி தொடர்பான நடவடிக்கைகள் பற்றியும், திரண்ட சொத்துக்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்து அதிசய சிறுவன்!

JUNE 8, பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை "அம்மா" என்றழைக்குமா?

ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?

ரஷ்யாவில் சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 12 வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு.

இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர்.

இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே தானாக பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. சில நேரங்களில் சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ்.

தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும், இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான்.

மேலும் செவ்வாய் கிரக வாசியாக இருந்த போது பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான். லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்த போது ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ் லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான்.

இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால் எல்லாம் நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான். பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ் மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சியளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில் உள்ளது போலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.

போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இத்தகைய தன்மையுடையோரை "இண்டிகா குழந்தைகள்" என்றும் அழைக்கின்றனர்.

மாறிவரும் பூமியின் காந்தப் புலனானது 2012 காலகட்டத்தில் மிகப் பெரும் அழிவு ஒன்றை ஏற்படுத்தும் என்று போரிஸ் கூறுகிறான். செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங்களின் வீரியம் காரணமாக தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை.

மேலும் அவர்கள் பாதுகாப்பான கவச அறைகளில் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ் அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறுகிறான். பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான்.

விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப் பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான். இவனை வியப்புடன் நோக்கும் விஞ்ஞான உலகம், விஞ்ஞான பேராசிரியர்களே சரளமாக உரையாடுவதில் உள்ள சிக்கல்கள் இவனுக்கு இல்லை எனத் தெரிவிக்கிறது.

போரிஸ்காவைப் பொறுத்தவரை,"கள்ளங்கபடமில்லாத அன்பும், எதையும் மன்னிக்கும் தயாள குணமுமே மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி என்றும், இதைத் தாண்டிய எந்தவொரு விஷயமும் மனித குல அழிவிற்கு வழிவகுக்கும்" என்கிறான்.

தவளை தன் வாயால் கெடும் என்பது இதுதானா !!!

புதுடெல்லி,  ஜுன். 7 ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் யோகா குரு ராம்தேவ் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்து வைத்திருக்கும் அவர், அதற்கு உரிய வரிகட்டி வருகிறாரா என்று விசாரணை தொடங்கியுள்ளது.

ராம்தேவ் உலகம் முழுவதும் மூலிகை மருந்து விற்பனை செய்து வருகிறார். அதில் மனித எலும்பு கழிவுகள் சேர்த்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அதேபோல ராம்தேவ் குட்டி தீவு ஒன்று வாங்கி இருப்பதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மேலும் அவரது வருவாய்க்கு சரியான கணக்கு இல்லை. இதையடுத்து ராம்தேவ் சொத்து, செலவு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் ராம் தேவின் வலதுகரம் என்று வர்ணிக்கப்படும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

நேபாள நாட்டைச் சேர்ந்த அவர் ஒரு கிரிமினல் குற்றவாளி என்று காங்கிரஸ் அம்பலப்படுத்தியது. அவரிடம் தற்போது இந்திய பாஸ்போர்ட் உள்ளது. அவர் பாஸ்போர்ட்டில் தில்லு முல்லு செய்துள்ளதாக புதிய குற்றச்சாட்டு கூறப்படுகிறது.இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியதாவது:-

ராம்தேவ் நிழல்போல ஆச்சார்ய பாலகிருஷ்ணன் இருந்து வந்தார். நேபாள நாட்டைச் சேர்ந்த அவர் இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்து அடைக்கலம் புகுந்துள்ளார். தஞ்சம் கேட்டு வந்த அவர், இந்திய பாஸ்போர்ட் பெற்றிருப்பது அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவர் என்னென்ன மோசடி செய்து பாஸ்போர்ட் பெற்றார் என்று விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

இதற்கிடையே ஆச்சார்யா பாலகிருஷ்ணன் கடந்த சனிக்கிழமை திடீரென மாயமாகி விட்டார். அரசுடன் நடந்த பேச்சு வார்த்தைகளின் போது ராம்தேவ் சார்பில் இவர்தான் கையெழுத்திட்டார். அவர் தலைமறைவாகி விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இதற்கு ராம்தேவ் பதில் கூறுகையில், மத்திய அரசு எங்களை அழிக்க முயல்கிறது. எனவே பாலகிருஷ்ணனை நாங்கள் பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்றார்.

ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர் மீது எழுந்துள்ள சர்ச்சைகளால் ஊழலுக்கு எதிரான ராம்தேவ் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை தருமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்தியா வல்லரசா! வாய்ச்சொல்லரசா!!

JUNE 7, வளர்ந்துவரும் வல்லரசாகவும், வணிகத்தில் உலகத்தில் 4ம் இடத்தில் இருப்பதாக உலகநாடுகளிடம் இந்தியா கூறிவருவது கடைந்தெடுத்த பொய்யே ஆகும்.

உலகில் மனித உரிமைகள் அதிகம் மீறப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைதரம் இன்னும் உயரவில்லை.

அதுபோல் அடிப்படை சுகாதார வசதி, மருத்துவ வசதி, மின்சாரவசதி, சாலை வசதிகள்,  குடிநீர் பிரச்சனை இப்படி மக்களின் அத்தியாவாசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத ஒரு இழிநிலை.

இந்தியா அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பல கிராமங்களுக்கும், மலையடிவாரங்களுக்கு தனது சொந்தப் படைகளை அனுப்ப முடியாத ஒரு நிலையே இந்தியாவில் நிலவி வருகிறது.

ஏன் என்றால்? அந்த கிராமங்களிலே செயல்படும் 'மக்கள் ஆயுத குழுக்கள் இந்திய அரசுபடைகளை உள்ளே' அனுமதிப்பதில்லை. "இந்திய அரசு அவர்கள் நலனை பேணாமல் விட்டதால்" அவர்கள் தங்களுக்கு என்று தனி அரசு நடத்துகிறார்கள்.

வணிகம் மற்றும் தொழில் முதலீடுகளுக்காக காட்டையும், அங்கே குடியிருக்கும் ஆதி வாசிகளையும் அது அழித்து வருகிறது. தனது நாட்டுக்குள்ளேயே தனது மக்களைக் கொன்று குவிக்கும் ஒரு நாடு தான் இந்தியா.

தனது சொந்த நாட்டில் உள்ள பழங்குடி மக்களை அழித்து அவர்களின் நிலங்களைக் கொள்ளையடிக்கிறது இந்திய அரசு. பல மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வாழ்கிறார்கள்.

இந்திய கிராமங்களைச் சென்று பார்வையிட்டாலே தெரியும் இந்தியா வல்லரசு இல்லை என்று. இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்று கூறுவது வெறும் மாய்மாலமே இந்தியாவில் எத்தனையோ கிராமங்களுக்கு இன்னும் சரியான பஸ் வசதி கூட இல்லை.

இந்தியாவில் உள்ள ஆதிவாசிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் பாதுகாப்பது மட்டுமல்லாது, இயற்கையையையும் பாதுகாக்கவேண்டும் இதை செய்யாமல் சும்மா வல்லரசு புல்லரசு என்று கூவித்திரிவதனால் எந்த பயனும் இல்லை.

Jun 6, 2011

கூடா நட்பு கேடாய் முடியும்! கருணாநிதி விளக்கம் சொல்வாரா?

JUNE 7, கூடா நட்பு கேடாய் முடியும் என்ற கருத்து யாருக்கு எச்சரிக்கை என்பதை தி.மு.க. தலைவர் கலைஞர் தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 88வது பிறந்த நாளில் கூடா நட்பு கேடாய் முடியும் என்ற ஒரு பழமொழியை கூறியிருந்தார். அதற்கு அவர் எந்த விளக்கத்தையும் கூறாமல் விட்டுவிட்டது மக்கள் மனதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியைக் குறித்துத்தான் இப்படி குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அது பற்றி அவர் சரியான விளக்கத்தை கூறாமல் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடையே மிகுந்த வேதனையே ஏற்படுத்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திட்டமிட்டு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வினரே. இதற்கு கருணாநிதி பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

20 கிலோ இலவச அரிசியை வழங்கிய போது எந்தவித ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அரசியல் தரகர்களுக்கு இடம் தராமல் வழங்கியிருப்பது சிறந்த அரசியல் நிகழ்வாகும். அரசு அறிவித்து செயல்படுத்தி வந்த எல்லாத் திட்டங்களையும் அடுத்து வரும் அரசு புறக்கணிப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை முழுமையாக புறக்கணிக்காமல், மற்ற அரசு அலுவலகங்கள் அமைய தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதன் கட்டுமானப் பணிகளில் முறைகேடுகள் நடந்திருந்தால் பொதுநலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராம் தேவ் ஐ கொள்ள ஆர் எஸ் எஸ் சதியா?

JUNE 7, கள்ளப்பணத்திற்கு எதிராக சத்யாகிரகம் இருந்த டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் கோத்ரா மாடலில் தீ வைப்பு நடத்தி அதன் மூலம் கலவரங்கள் நடத்த திட்டம் தீட்டி இருந்ததாகவும்,

இதை முன்பே ரகசிய போலிசார் அறிந்ததினால்தான் அந்த மைதானத்தில் இருந்த ஆட்களை போலீஸ் நீக்கம் செய்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போலீஸ் சொல்லும் இந்த சம்பவம் நூறு சதவீதமான உண்மை என சமூக நீதி போராளி சப்னம் ஆஷ்மி கூறி உள்ளார்.

இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அந்த மைதான பந்தலுக்கு தீ வைத்து விட்டு அதைக்காரணம் வைத்து குஜராத்தில் நடந்ததை போல் நாடு முழுவதும் கலவரம் நடத்த திட்டம் தீட்டி
இருந்தனர். இதற்க்கான அனைத்து ஆதாரங்களும் தன் வசம் இருப்பதாகவும் இதை நான் எங்கு வேண்டும் என்றாலும் சொல்வேன் என்றும் "இந்த காவி பயங்கரவாதிகள் இப்படி ஒரு சதி திட்டம் தீட்டி இருக்கிறார்கள்" என்று தான்தான் போலீசிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

எப்படியோ பெரிய சதி திட்டம் முறியடிக்க பட்டது. நம் நாடு சுதத்திரம் அடைத்ததில் இருந்து இது வரை இவர்கள் ஆயிரத்திக்கும் அதிகமாக கலவரங்களை நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் மட்டும் கலவரங்களை நடத்த வில்லையென்றால்? நம் நாடு சீனாவை விட ஏன்? உலகத்திலேயே பெரிய வல்லரசாக மாறியிருக்கும்!

காவி பயங்கரவாதிகள் என்று ஒழிக்கப்படுகிறார்களோ அன்று தான் நம் நாடு முன்னேறும்! இது நிச்சயம்!

ஆணவத்தால் அழியப்போகும் ஜெ!!

JUNE 7, சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம். அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.

உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த தூரமே வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.
ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!

உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.

மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.

இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளை பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஏமாற்றி வருகின்றன.

இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான்.

ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர். இதில் இருந்து என்ன தெரிகிறது ஜெயலலித்தா இன்னும் திருந்தவில்லை என்று. முந்தய அரசு கொண்டுவந்த திட்டங்களை மாற்றுகிறோம் பேர்வழி என்று தேவையில்லாத செலவீனங்களை செய்துவருகிறது ஜெ அரசு.

தயாநிதி மாறன் விரைவில் கைது செய்யப்படுவார்!!

JUNE 7, புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., வசம் , "ஏர்செல்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

"ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகீர் வாக்குமூலத்தால், தயாநிதிக்கு நெருக்கடி முற்றுகிறது

காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அந்த காலகட்டத்தில், "டிஷ்நெட் வயர்லெசு'க்கு (ஏர்செல்)14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

கடந்த, 2006ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன், தான் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம், 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்துள்ளன. அவர் பலமுறை முயன்றும், லைசென்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய நிறுவனங்கள், 74 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என்று, மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, சிவசங்கரனின் ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த, "மேக்சிஸ்' கம்பெனிக்கு கைமாறியது.

ஏர்செல் நிறுவனமாக இருந்த போது கோரிய லைசென்ஸ், அது மலேசிய நிறுவனத்திற்கு கைமாறிய உடனேயே, 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், முதலீடு செய்தது.

இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டிடிஎச்' நிறுவனம். தயாநிதியின் சகோதரர் கலாநிதி நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம்.  இதனால் பாதிக்கப்பட்ட சிவசங்கரன், சி.பி.ஐ.,யில் புகார் தெரிவித்தார்.  கனிமொழி மாதிரி தாயநிதி மாறனும் கூடியவிரைவில் கைதாவார் என்று தெரிகிறது.

பாபா ராம்தேவ்க்கு வெளிநாட்டில் சொந்தமாக சொகுசு தீவு!!

JUNE 6, “இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்..

அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை மீட்க அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி பதினெட்டு கோடி செலவில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவையும் அவரது அடிப்பொடிகளையும் கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் நீட்டி முழக்குவது போலெல்லாம் இந்த சாமியாருக்கும் அரசுக்கும் பெரிய முரண்பாடு எதுவும் கிடையாது. யோகா வகுப்புகள் மூலமும் டுபாக்கூர் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலமும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம்.

அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலமும், ஓய்வாய் தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும் (நித்யானந்தாவுக்கு மாதிரி கேமேரா வைத்தால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும்), வானத்தில் பயணம் செய்ய சொந்த விமானமும், நிலத்தில் பயணம் செய்ய விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர் இந்த ”முற்றும் துறந்த” சாமியார்.

இந்தியாவில் கருப்புப் பணம் வெளுப்பதற்கும், ஹவாலா பணத்தின் சுழற்சிக்கும் அச்சாணியாக இருப்பதே இது போன்ற கார்பொரேட் சாமியார் மடங்களும் அவர்கள் நடத்தும் டிரஸ்டுகளும் தான். பாபா ராம்தேவ் யோக்கியராய் இருந்தால் முதலில் தான் சேர்த்துள்ள சொத்துக்களுக்குக் கணக்குக் காட்டி விட்டு களத்துக்கு வந்திருக்க வேண்டும்.

பாபா ராம்தேவை தில்லியை விட்டு திருப்பியனுப்பியதை எதிர்த்து இப்போது சத்தியாகிரகம் துவங்கியிருக்கும் இதே பி.ஜே.பி, தான் ஆளும் கருநாடக மாநிலத்தில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பைக் குறைத்து எடியூரப்பாவைக் காப்பாற்ற முயன்று வருகிறது.

பி.ஜே.பி ஆளும் இன்னொரு மாநிலமான குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோக் அயுக்தாவின் தலைவரே நியமிக்கப் படவில்லை. எதார்த்தம் இவ்வாறிருக்க, ஆங்கிலச் சேனல்களில் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளோ மக்களை கேனையர்களாக நினைத்துக் கொண்டு எருமை மாடு ஏரோபிளேன் ஓட்டுகிறது என்கிறார்கள்.

ஏற்கனவே இவர்களின் ‘ராமர் கோயில் + வெடிகுண்டு’ பிராண்டு இந்துத்துவ அரசியல் முற்றுமுழுதாக மக்களின் முன் அம்மணமாக நிற்கிறது. இந்நிலையில் சமீப வருடங்களாக வெளியாகிவரும் ஊழல் முறைகேடுகள் பற்றிய செய்திகள் நடுத்தர வர்க்கத்தினரிடையே உண்டாக்கியிருக்கும் ஆத்திரத்தை தமக்குச் சாதகமாக மடைமாற்றிக் கொள்ளலாம் என்று நாவில் எச்சில் ஊற டவுசர் கும்பல் கணக்குப் போடுகிறது.

அந்த அடிப்படையில் தான், முன்பு அன்னா ஹசாரே உண்ணாவிரத டிராமாவின் போதும் சரி இப்போது பாபா ராம் தேவ் நடத்தும் டிராமாவிலும் சரி ஆர்.எஸ்.எஸ் அக்கறை காட்டுகிறது. உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதில் அதற்கு அக்கறை இருக்குமென்றால் முதலில் எடியூரப்பாவையும் ரெட்டி சகோதரர்களையும் வீட்டுக்கு அனுப்புவதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.