May 28, 2011

16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!

May 29, 16 வயதினிலே படத்தில் குருவம்மா என்ற ஒரு வாயாடி, எல்லாரையும் அடக்கியாளும் ஒரு கதாபாத்திரம் வரும்.

குருவம்மா என்பது அந்த படத்தின் நாயகி மயிலுவின் தாயாக வரும் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் முதல்வர் ஜெயலலிதாவோடு மிகவும் பொருந்திவரும்.

செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடனே முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆரம்பித்து வைத்த எல்லா செயல்பாடுகளையும் முடக்க வேண்டும்,

அல்லது தொடரக்கூடாது என்ற முடிவில் வரிந்து கட்டிக்கொண்டு பழையபடியே "தான்" என்ற இறுமாப்பு, முருங்கை மரத்தில் மீண்டும் ஏறும் வேதாளத்தை நினைவு படுத்துகிறது.

சமச்சீர் கல்வி என்பது மு. கருணாநிதியின் தனி கற்பனையில் விளைந்த திட்டம் அல்ல. அதுபற்றி பல அமர்வுகள் வைத்து பல படித்த பண்டிதர்களும் அனுபவம் வாய்ந்த கல்வி அலுவலர்களையும் கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட திட்டமாகத்தான் இருக்கும்.

மு. கருணாநிதி கொண்டு வந்த திட்டமாக இருப்பதால் அதைக்களைந்து தான் விரும்பும் திட்டத்தை கொண்டுவர விரும்பினால் ஜெயலலிதா நிச்சயமாக பழைய சாக்கடையிலே கால் பதித்து அரசியலை ஆரம்பிக்கிறார் என்றுதான் அர்த்தம்.

200 கோடிகளை கொட்டி ஆரம்பித்த புதிய சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள் ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ சில்லறை காசுகளாக இருக்கலாம். ஆனால் எங்களைப்போன்ற பொது மக்களுக்கு அது ஒரு பிரம்மாண்டம்.

புதிய கட்டிடத்திலிருந்து எந்த ஜோசியரின் வழி காட்டுதலின் அடிப்படையில் மீண்டும் அவசர, அவசரமாக பழைய ஜார்ஜ் கோட்டைக்கே சட்டசபை மாற்றம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மீண்டும் முந்தய நூலகத்துக்கே மாற்றம் செய்யப்படுவது, இதனால் எத்தனை புத்தகங்கள் சிதிலமடைந்து போகும்?

அதைபற்றியெல்லாம் யாருக்குக் கவலை? என் பொருளாதாரமா விரயமாகுது? ஆறு கோடி மக்களுடையதுதானே யார் கேட்பது? என்ற அகம்பாவம்.

இங்கு மக்களே அரசு. நீங்கள் 4 வருடங்களுக்குத்தான்... அடக்கி வாசியுங்கள். முன்னாள் முதல்வர் வாங்கிய அடி இந்நாள் முதல்வரான நீங்கள் கொடுத்ததல்ல.

அது முதலாவதாக இறைவனும் பின்னர் மக்களும் சேர்ந்து கொடுத்தது. அதே அடியை நீங்களும் வாங்கலாம். உங்களின் தனிப்பட்ட அரசியல் வக்கிர புத்தியை விளக்கி வைத்துவிட்டு நேர்மையான எல்லா மக்களுக்கும் ஏற்ற அரசியல் குணத்தை கையாளுங்கள்.

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

May 29, கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.

அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.

அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.

நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.

நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.

மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.

ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.

இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.

ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.

இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.

வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.

சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

ராஜபக்சேக்கு எதிராக தீர்மானம் இயற்றவேண்டும்!! வைகோ!

May 29, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என,

தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா 28.05.2011 அன்று மாலை சென்னை சைதைப் பேட்டையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

அவர் செய்த போர்க்குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விரைவில் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

மத்திய அரசே அன்னா ஹஸாராவை காப்பாற்று!!

மே 29 என்னை கொள்வதற்கு முப்பது லட்சம் விலை விலை பேசப்பட்டதாகவும், அந்த நபர் என்னை கொள்ள மறுத்து விட்டதாகவும் அன்னஹசாரே கூறியுள்ளார் .


இந்த செய்தி இந்திய நாட்டையும், காந்திய வாதிகளையும், சமாதானத்தை விரும்பும் இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவுள்ளது.

இதன் பின்னணியில் இருப்பது யார்? என்று அவர் கூற மறுத்து விட்டார். அவர் அதை கூற மறுத்து விட்டதில் இருந்தே அவர்கள் சாதாரண ஆள்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

இருந்தாலும் ஏற்கனவே தேசபிதா மகாத்மாவை கொன்ற கயவர் கூட்டம் தான் இதற்க்கு பின்னில் இருக்கும் என்று காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

அரசு இவர்கள் விசயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என தேச நலம் விரும்பிகள் எதிர்பார்க்கிறார்கள். அன்னா ஹசாரே சமீபத்தில் மோடியியை பற்றி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உமக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடா?

கட்சியினரை உற்சாகப்படுத்த பிறந்தநாள் கொண்டாட்டமாம்..!!
ரோம் பற்றிஎரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் ..
நம் இனம் நாசக்காரர்கள் வைத்ததீயில் பற்றிஎரிந்தபோது
இவர்போட்ட நாடகம் நாடறியும் .

மெரீனா கடற்கரையில், தலைக்கு மனைவியும் காலுக்கு துணைவியும் துணைநிற்க.. பேரனும் பேத்தியும்.. பிச்சைக்கார அடிப்பொடிகளும் இணைநிற்க..
நம் இனத்தவரின் மூச்சுத்தீ சுடாதிருக்க இரண்டு குளிரூட்டிகள் புடைசூழ டாக்டர் சொன்ன டயல்கொன்ட்ரோல் மாதிரி அரங்கேறியது இவரின் உண்ணாவிரத நாடகம்.

உயிர்ப்பலி கொடுத்தும் வராத அமைதி இவர் உண்ணாவிரதத்துல வந்துடிச்சாம்.
நம்பி இனிப்பு கொடுத்து கொண்டாடினவங்க வாய்ல போட்ட இனிப்பு தொண்டைய தாண்டறதுக்குள்ள ஆயிரம் உயிர்கள் பலி ஈழத்திலே.
எத்தனை பெண்கள் மானமிழந்து கதறினார்கள் ?

அப்போது வராத கண்ணீர், பெற்றமகள் ஊழலில் சிக்கி திஹார்ல அடைபட்டா
ஆறாப்பெருகி வரும். எப்படித்தான் முடிகிறது இவரால் ?
சொந்த ஊர்க்காரன் என்ற போர்வையில் தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறார்.
கள்ளச்சாராய கும்பலைத் தட்டிக்கேட்டதால் தோழர் நாவலன்
திமுக ரௌடிகளால் கொல்லப்பட்டார்.

திருவாரூர் தொகுதியில் இவர் கட்சிக்கார ரௌடிகள் செய்த அட்டூழியத்திற்கு
வேறு யார் நின்றிருந்தாலும் டெபொசிட் போயிருக்கும்.
மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்களாம் ..நாக்கூசாமல் சொல்லமுடிகிறது இவரால்..?
ஒன்றா ரெண்டா தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகள்..

கடல்மீன்கள் கரைக்குவந்தால் பிணம்
தமிழ்மீனவன் கடலுக்குப்போனால் பிணம் ...இதுதானே இன்றுவரை நடக்கிறது ?
"கிடக்கறதெல்லாம் கிடக்க கிழவனைத்தூக்கி மனையில வை " என்பது போல இவருக்கு பிறந்தநாள்கொண்டாட்டம் ஒரு கேடா ?

............நட்புடன்...யாழினி ...........

கொள்கை கோமான்களின் குடிமிச்சண்டை!!

May 29, கடந்த 2009 ம் ஆண்டு கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்யுமாறு ரெட்டி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கியபோது,

அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், ரெட்டி சகோதரர்களை சமாதானம் செய்யுமாறு கட்சி மேலிடம் என்னை கேட்டுக்கொண்டது.

ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பதவிகளை அளிக்கும் முடிவை நான் எடுக்கவில்லை.

கட்சியின் மாநில பொறுப்பாளர் அருண் ஜெட்லி, மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, அனந்த குமார் ஆகியோரே அதற்கு காரணம் என சுஷ்மா தெரிவித்தார்.

இதனால், பா.ஜனதா மூத்த தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

சிந்திக்கவும்: இவர்கள் மத துவேசத்தை உண்டு பண்ணி ஹிந்து முஸ்லீம் கலவரங்களை உண்டாக்கி அதை வைத்து கட்சி வளர்த்தவர்கள். இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் இரத்த ஆறுதான் ஓடும்.

நமது பிரதமர் சுத்தமானவர்: அன்னா ஹசாரே!!

May 29, பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களையும் ஊழல் புகார் தொடர்பாக மக்கள் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்கும் வகையில், லோக்பால் சட்டம்' உருவாகி வருகிறது.

அந்த சட்டத்துக்காக நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், லோக்பால் சட்ட மசோதா உருவாக்கும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளை 50 சதவீதம் அளவுக்கு சேர்த்துக் கொள்ள மத்திய அரசு இறுதியாக இறங்கி வந்தது.

ஆனால், இன்னமும் அரசிடம் இருந்து பல்வேறு பிரச்சினைகளை அந்த குழு எதிர் கொண்டு வருகிறது. நமது பிரதமர் சுத்தமானவர். நல்ல மனிதர். ஆனால், ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படும் பின்னணி சக்திகள் தான் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றார்.

May 27, 2011

ஏற்காட்டில் மாபெரும் மலர் கண்காட்சி!!

May 28, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 36வது கோடைவிழா மலர் கண்காட்சி 27.05.2011 அன்று தொடங்கியது.

மலர் கண்காட்சியை கண்டு களிக்க நேற்று சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்தனர். ஏரியில் படகு சாவரி செய்யவும் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏற்காட்டிற்கு அனைத்து தரப்பு மக்கள் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மாநிலத்திலிருந்து சுற்றுலா வருகின்றனர்.

கண்காட்சியில் சிறப்பு அம்சமாக 15 ஆயிரம் மலர்களைக் கொண்டு கிரிக்கெட் உலக கோப்பை வடிவ மலர் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 வடிவங்களில் மலர் அலங்காரம் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது.

100 க்கும் மேற்பட்ட மலர் வகைகள் சுமார் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சியில் காய்கறிகளைக் கொண்டு பறவைகள், மலர்கள், சிங்கம் மற்றும் மனித உருவம் போன்ற காய்கறி அலங்காரங்களும், உலர் மலர் வகை அலங்காரங்களும் பொதுமக்கள் பிரமிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மலர் காட்சியின் நுழைவு வாயிலில் பலவகை பழங்களைக் கொண்டு தோட்டக்கலை அலங்கார வளைவும் மிக அழகாக அமைக்கப் பட்டுள்ளது.

மேலும் போன்சாய் வகை செடிகள், பழவகைகள், காய்கறி வகைகள், வாசனை பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் கருத்துக் காட்சியும் தோட்டக்கலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மலர் காட்சியினை சுமார் 50ஆயிரம் பேர் பார்வையிட்டதின் மூலம் சுமார் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 760 நுழைவு கட்டணமாக பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இம்மலர் கண்காட்சியினை பார்வையிட சுமார் 1 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்சல் குருவும், ஹிந்துதுவாவும்! ஒரு பார்வை!!

2001, டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்றத்தின் ஒரு அலுவலரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
ஒரே ஒரு நபர் துப்பாக்கியுடன் உள்ளே சென்றிருந்தால் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். எனவே, அப்சல் குரு சமர்ப்பித்துள்ள கருணை மனுவை விரைவில் தள்ளுபடி செய்து அவருக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும்’’ என்று கூறினார்.

சிந்திக்கவும்: அப்சல் குருவுக்கு தண்டனை கொடுப்பது இருக்கட்டும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் நிகழ்த்திய தீவிரவாத நடவடிக்கைகள் எத்தனை எத்தனை முதலில் இவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

மும்பை கலவரம், பகல்பூர் கலவரம், மீரட், குஜராத், பீவாண்டி, கோவை, இப்படி இவர்கள் நடத்திய கோர கலவரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளில் நாடறிந்தது.

இதில் சிக்கி சிறையில் இருக்கும் ஹிந்துவா தீவிரவாதிகள் முதலில் தண்டிக்கப்படவேண்டும்.

ஏன் என்றால் இவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்திய கலவரங்களின் பின்னணியே இது போன்ற அப்சல் குருக்கள் உருவாக காரணமாக அமைந்தது.

இந்தியாவின் சாபக்கேடு இந்த சங்கபரிவார் என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகள்தான்.

இவர்கள் நடத்திய கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பதில் நடவடிக்கையே இதுபோன்ற நிகழ்வுகள்.

இந்த பாசிச ஹிந்துத்துவா சக்திகளை இந்தியாவில் இருந்து ஒழித்தால் மட்டுமே இந்த பிரச்சனைகள் தீரும். ஒரு அப்சல் குருவை தூக்கில் போடுவதால் எந்த பிரோஜனமும் இல்லை.

நரேந்திர மோடி, அத்வானி, பால்தாக்ரே, முரளி மனோகர் ஜோதி, போன்ற வெளியே இருக்கும் தீவிரவாதிகளை முதலில் தூக்கில் ஏற்றவேண்டும். அப்போதான் இந்த நாட்டில் நிரந்தர அமைதி நிலவும். - அன்புடன் சக்தி -

படையப்பா சிகிச்சைக்காக சிங்கப்பூர் படையெடுப்பு !!!

சென்னை, மே. 27-நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் மயிலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

கடந்த 13-ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் நவீன சிகிச்சை அளித்து வருகின்றனர். அமெரிக்கா டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். சிறுநீரக பாதிப்பு இருந்ததால் “டயாலிசிஸ்” சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ரஜினியை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று நவீன சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் விரும்பினர். லண்டனுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் அங்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஆகும் என்றும் ரஜினி உடல் நிலை அதற்கு ஒத்துக்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 4 மணி நேரம் பயண தூரம் உள்ள சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள் ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல டிக்கெட் பதிவு செய்யப்பட்டு உள்ளது. “வீல் சேர் பயணியாக” ரஜினி செல்வதற்கு அனுமதி வாங்கப்பட்டு உள்ளது. “சிவாஜிராவ்” என்ற பெயரிலான தனது பாஸ்போர்ட்டில் ரஜினி பயணப்படுகிறார்.

விமான படிக்கட்டு வரை ஆம்புலன்சை கொண்டு செல்ல அனுமதி பெறும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட உள்ளார். அமெரிக்க டாக்டர்களும் அங்கு வருகின்றனர்.

சிந்திக்கவும்: ரஜினி காந்தை பார்க்க அமெரிக்க டாக்டர்கள் இருக்கிறார்கள். சிங்கபூர் மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன. அவர் பயணம் செய்ய தனிவிமானமும் உள்ளது.

ஆனால் இந்தியாவில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் எத்தனை? மருத்துவ மனைகள் உள்ளன. கோடிக்கணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவுக்கு ஏங்கும் நாடாக இருக்கிறது.

பணக்காரர்கள் அடையும் இதுபோல் வசதிகள் கூட வேண்டாம். குறைந்த பட்சம் சாதாரண சிகிச்சையாவது இந்த ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவேண்டும்.

இப்படியும் நாம் சிந்தித்து பார்த்தால் என்ன? ஒவ்வொரு மந்திரியையும், டாட்டா, பிர்லா, அம்பானி, ரஜினி போன்ற பெரும் பணக்கார்கள் இவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போகும்போது சென்னை அரசு மருத்துவமனியில் ஒரு நாள் சிகிச்சைக்கு அனுமதித்தால். இந்த ஏழை மக்கள் படும் அவதியை குறைந்த பட்சம் இவர்களால் உணரவாவது முடியும்.

கருணாநிதி திருவாரூரில் இருந்து பண்டாரமாக, திமுக கட்ச்சிக்குள் நுழைந்தார் இன்று அவர் குடும்பத்தினர்தான் ஆசியாவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்களாக மாறிவிட்டார்கள். இந்த கொள்ளைகார ஆட்சியாளர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் இங்கு நடத்தப்பட வேண்டும்.

ஆட்சி அதிகாரம் படித்த, பண்புள்ள இளைஞ்சர் சமுதாயத்திடம் கொடுக்கப்படவேண்டும். இந்த அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினர் ரவுடிகள், கைநாட்டுகள், முறையற்ற வழிகளில் சம்பாதித்தவர்கள் இப்படி பட்ட பழம்பெருச்சாளிகள்தான் அரசியலுக்குள் வரமுடியும் என்ற நிலை மாறவேண்டும்.

அடுத்து வயோதிகர்கள், தொந்தி பெருத்து, உடல்நிலை சரியில்லாமல் வீல்சேரில் வரும் சுகவீனமுற்றோர் போன்றோர் பதவிகளில் வீற்றிருக்கும் அவலத்தையும் பார்க்க முடிகிறது. இப்படி ஆரோக்கியம் இல்லாத, படிப்பறிவு இல்லாத இவர்களால் எப்படி மக்களுக்கு ஒழுங்காக சேவை செய்ய முடியும்.

என்ன, எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் படித்தவர்களா? என்று நீங்கள் கேட்பதை விளங்க முடிகிறது. எந்த தகுதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தது நல்லவர்கள் ஆக இருந்தாலும் நாம் ஒத்துக்கொள்ளலாம் அதுவும் இல்லை என்பதே வருத்தமான உண்மை.

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ரஜினி ரசிகர்கள் கூறி திரிவதும், அவர் படம் வெளியாகும் போது கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்வதுமாக, தங்கள் குடும்பங்களை கவனிக்காமல் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை. இதுபோல் கூத்துக்கள் உலகில் எந்த நாட்டிலும் நடக்காது, இந்த போன்ற கொடுமைகளை குறிப்பாக தமிழகத்திலேயே பார்க்க முடிகிறது.

May 26, 2011

குமுறும் நெஞ்சு!! - கொதிக்கும் ரத்தம்!!

எங்கள் கதைகளைக்கேட்குமுன் தயவுசெய்து கழற்றிவையுங்கள் கண்ணீர்சுரப்பிகளை
இதயச்சுரப்பிகளில் இரக்கமில்லாதவர்களின் இனவெறிப்போதையில்
இறந்துகொண்டிருக்கும் எம்இனத்தின் கதை இது.
ஆண்டுகள் கடந்தும் பச்சை இரணமாய் எங்கள் இதயங்களில்.
இப்போது உங்களுக்கும்
..

அகதி ..அர்த்தம் புரியாமல் சொல்லாடல் செய்கின்றீர்கள்.
அன்னைமண்ணில் உயிருக்கு உறுதியில்லை என உத்தரவாதம் தந்தால்மட்டுமே
அகதிப்புகலிடம் கொடுக்கும் அந்நிய நாடுகள்.
தாய்மடியில் தலைவைக்கப் பயமாயிருக்கிறது என
தன்மானம்விட்டு எழுதிக்கொடுத்தே தஞ்சம் பெற்றிருக்கிறோம்
அடித்தாலும் ஆவென்று கத்தும் அருகதையில்லாதவன் தான் அகதி.


அடிமைப்பட்ட தேசமெல்லாம் என் அன்னைபூமி என்றான் சேகுவேரா
எங்கள் அன்னைப்பூமி அடிமைப்பட்டுக்கிடக்கிறது.
அகிம்சாவழியில் போராட எங்கள்எதிராளிகள் அந்நியர்களில்லை
சொந்தவீட்டில் சோற்றில் விசம்வைக்கும் சுயநலமிகள்.
பிடுங்கியெறியப்படவேண்டிய பில்லுளிகள்.
நாங்கள் எடுக்கவேண்டிய ஆயுதங்களை அவர்களே முடிவுசெய்தனர்

அடிபட்ட காயங்கள் ஆறுமுன் அடுத்தஅடி
இதயம் நொறுங்கி இறைந்துகிடக்கிறோம் உலகமெங்கும்.
மரணஅறிவித்தல் பார்த்துதான் தெரிந்துகொள்கிறோம்
மரித்துப்போனதாய் நினைத்த உறவு
உலகின் ஏதோ ஓர் மூலையில் இதுநாள்வரை வாழ்ந்து வந்ததை.

கிளஸ்டர் குண்டுகள் கேள்விப்பட்டதுண்டா ..?
ஐ நா தடைசெய்து ஆண்டுகள் பலவாயிற்று
செல்லடித்த காயத்தில் மருந்துக்கும்வழியின்றி சீழ்சொட்ட
ஈனமாய் முனகும் ஒருகுழந்தை..அதற்கு
தன் வறண்டுபோனநாவில் எச்சில்தொட்டு மருந்திடும் இன்னோர்குழந்தை
கண்டதுண்டா...? கண்டவர்கள் கதறினோம் இன்னம் கண்ணவிந்துபோகவில்லையே என்று.
கொஞ்சங்கொஞ்சமாய் கொன்றும் குறையவில்லையாம்
கொத்துக்கொத்தாய் கொன்றார்கள்.
சிதைந்த உடலில் சிறிது உயிரே மிஞ்சியிருந்தது
சொல்லாமல் புதைத்தோமே ..எங்கள்உளம் பட்டபாட்டை எங்குசொல்ல..?
அடங்கும்வேளையில் ஆறடிநிலம் சொந்தம்..
எங்களுக்கோ ஆறடியில் ஆயிரம் உடல்களைப்புதைத்த அவலம்.

எங்கள் பச்சைத்தீவின் கவின்மிகுகரைகளில்
பாட்டன் கைப்பிடித்து நடந்திருந்தோம் ..
"பிள்ள நம் தீவைச்சுற்றி இருப்பது கடல்நீரோ..கண்ணீரோ இல்லை
நம்மை இங்க வாழவைக்கும் நம் குலசாமிகளின் செந்நீர் "
இன்றும் ஒலிக்கிறது எங்கள் காதுகளில்.
எங்கள் குலசாமிகள் கொல்லப்பட்டனர்... நாங்கள் நாடின்றி நாதியின்றி ..

பெற்றவரை இழந்த பிள்ளைகள் எத்தனை..
பிள்ளைகளை இழந்த பெற்றோர், வாழ்க்கைத்துணை இழந்த வலிகள் எத்தனையெத்தனை
சகோதரிகள் சிதைபடாமல் செத்திருக்க வேண்டும்..நெஞ்சுபிளக்கும் வேண்டுதல்கள் எத்தனை
தம்பிஅண்ணனை இழந்த சகோதரநெஞ்சங்களில் துயர் எத்தனை
ஈராண்டல்ல ...இருநூறு ..இருகோடி நூற்றாண்டுகளாயினும்
இகம் மறக்காது எங்கள் இனத்தின் இருண்டகதை.

சத்தம் செய்த துப்பாக்கிமுனைகள்
ஆற்றுப்படுத்துதல் வேண்டி மௌனித்திருக்கிறோம்..மரணித்துவிடவில்லை
எங்கள் பேனாமுனைகள் இளைத்தவையல்ல..யுத்தம் செய்யும் இடையறாது.
ஆட்சிகளை மாற்றிய பேனாமுனைகள்..ஆவன செய்யும் எங்களுக்கும்
இன்னும் தீர்ந்துவிடவில்லை மனிதம்
படிக்கும் உம்மீதும் நம்பிக்கை வைத்துக்காத்திருக்கிறோம்.

பாலுக்கழுத பிள்ளைவரை கொன்றபின்பு அமைதிநிலவுகிறதாம்
வெள்ளைக்கொடி காட்டுகிறார்கள் ..
நினைவிற்கொள்ளுங்கள் உங்கள் சமாதானக்கொடிகள்
நாட்டப்பட்டிருப்பது எம்சவக்குழிகளின் மீது.
புதைக்கப்பட்ட ஒற்றைவிதை கூட உரியநாளில் முளைத்துவரும்
நாங்கள் நட்டிருப்பது பல்லாயிரம்விதைகளை பலனெனவளரும் எமக்கான தேசம்.
எரித்த சாம்பலிலிருந்தும் எழுந்துவருவோம் சிறகுகள் சிலிர்க்க..!!

குஜராத்தில் லஞ்சம், மது, ஊழல்!! அன்னா ஹசாரே அதிரடி!!

தனது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்ட அன்னா ஹசாரே, குஜராத்தின் உண்மை நிலையை நேரில் கண்டு மனம்வெதும்பி அறிக்கை சமர்பித்தார்.

சிறிது நாட்களுக்கு முன் தன்னால் புகழப்பட்ட மனித மிருகம் நரேந்திர மோடியை குறித்து அன்ன ஹசாரே இப்பொழுது அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் காந்தி பிறந்த இம்மண்ணில் காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.

இந்த மாநிலத்தில், பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது என கோபம் பொங்க தெரிவித்தார்.

லோக்பால் பில் தயாராக்குவதர்க்காக குஜராத்திற்கு வந்தார் அண்ணா ஹசாரே. அப்போது அவர் பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்தார்.

அச்சமயம் இவர் நரேந்திர மோடியை குறித்தும் குஜராத் மாநிலத்தை குறித்தும் அறிய முடிந்தது என்றும், "இவரை பற்றியா நான் பாராட்டினேன்?" என்றும் கவலை தெரிவித்தார்.

"என்னுடைய இந்த போராட்டம் வெற்றி கண்டவுடன், எனது அடுத்த போராட்டம் குஜராத்தை நோக்கியே அமைந்திருக்கும். காந்தியை கொன்ற இவர்களிடம் இருந்து குஜராத்தை கைப்பற்றுவதுதான் என்னுடைய அடுத்த லட்சியம்" என்றார்.

அன்னா ஹசறேயின் அடுத்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இனியாவது ஹிந்துத்துவா பிடியில் உள்ள பத்திரிக்கைகளின் பொய் செய்திகளை நம்பி "குஜராத்தில் முனேற்றம்" என்ற பிரச்சாரத்தை நல்லவர்கள் நிறுத்தி கொள்ளவேண்டும். இல்லையேல் நீங்களும் அவரைப்போல் வருத்தப்படுவீர்கள்.

அன்னா ஹசாரேயோடு இணைவோம் ஹிந்துதுவா பாசித்தையும், ஊழலையும் ஒழித்து நம் நாட்டை முனேற்ற பாதையில், அச்சமற்று மக்கள் வாழவழி செய்வோம்.

மாறுவாரா ஜெ!! மக்கள் எதிர்பார்க்கின்றனர்!!

May 27, அரசு திட்டங்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் வாய் திறக்க கூடாது என்ற நிலையை, முதல்வர் ஜெயலலிதா மாற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது, அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அவர் மட்டுமே பேசுவார்; அறிவிப்புகளை வெளியிடுவார்.

விழாக்களிலும், செய்தியாளர்கள் கூட்டத்திலும் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்பட எவரும் வாய் திறக்க மாட்டர்.

மக்களுக்கு உத்தரவாதம் வழங்குதல், நம்பிக்கையான வாக்குறுதி அளித்தல் போன்றவற்றுக்கும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறுபவர்கள் பதவி பறிக்கப்பட்டதும் உண்டு.

தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்னையை சாதாரண மனிதன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பி, அது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பல சம்பவங்கள் உண்டு.

ஆனால், அமைச்சர், அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து, அது நிறைவேறிய சம்பவம் மிகச்சொற்பம் தான். அரசு விழாக்களில் அமைச்சர்கள் பேசும் போது கூட, "அம்மா அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தான் கூறுவார்களே தவிர, தங்கள் துறை தொடர்பான தகவல்கள், முன்னேற்றங்கள், திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள் இந்நிலை மாறுமா? மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நிர்வாண பூஜை!! இந்திய சாமியார் கைது!!

தோஷம் கழித்தல் என்கிற போர்வையில் பெண்களை பாலியல் உறவுக்கு உட்படுத்தி வந்த இந்திய சாமியார் ஒருவர் இலங்கையில் கைது செயப்பட்டுள்ளார்.

இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை என்ற ஊரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது வயது 32 , இவர் இறக்குவானையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

அந்த வீட்டில் வைத்து மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மாந்திரிக வேலைகளுக்காக வருபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை கட்டணமாக வசூளிந்துள்ளார்.

இவரைச் சந்திக்க பல இடங்களில் இருந்தும் பெண்கள் வந்துள்ளனர். இவர் அந்த பெண்களிடம் தோஷம் இருக்கின்றது, அதை கழிக்க வேண்டும் என கூறுவார்.

இதற்காக தனியாக பூசை அறைக்குள் அழைத்துச் செல்வார். அங்கு அந்த பெண்களை நிர்வாண பூஜை செய்யவேண்டும் அப்போதுதான் உனக்கு பிடித்த தோஷம் போகும், உன்குடும்பம் வளம்பெறும் என்று பொய் வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுவார்.

பின்னர் பெண்களை நிர்வாணமாக்கி எழுமிச்சம் பழத்தை வெட்டி சில மந்திரங்களை சொல்லி பூஜைகள் செய்வார் . பின்னர் பெண்களை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வார்.

இவரால் பலபெண்கள் சீரழிக்கப் பட்டுள்ளனர். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் மூவர் போலீஸ் இல் புகார் கொடுத்ததை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!!

மே 27, புதிதாக ஆட்சியில் அமர்ந்த உடன் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை செய்தார்.

அது என்ன வென்றால் இனி மக்கள் அஞ்சாமல் நிம்மதியாக வாழலாம் என்று!

அவர் அப்படி சொல்லி ஒரு நாள் கூட, முடியவில்லை சிறுபான்மை சமூக அதிமுக மத்திய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தின் மூலம் கொல்லப்பட்டார்.

அது சம்மந்தமாக இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. விபத்து நடத்திய லாரி கூட இதுவரை கண்டுப்பிடிக்க படவில்லை.

இதுவே அமைச்சர் ஒரு ஹிந்துவாக இருந்தால் ஐ.எஸ்.ஐ சதி என்று சொல்லி , அந்த இயக்கத்தோடு தொடர்பு, இந்த இயக்கத்தோடு தொடர்பு என்று இதுவரை எத்தனையோ? அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யபட்டு இருப்பார்கள்.

நடந்த இந்த சம்பவத்தை சில பத்திரிக்கைகள் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ என்பார்கள், ராமகோபாலன் அப்கானிஸ்தான் தலிபான்கள் என்பார், இல்லை, இல்லை, கஷ்மீர் லஷ்கரே அமைப்புதான் காரணம் என்பார்கள் காவல்துறை கண்ணியவான்கள்.

அதுவெல்லாம் இல்லை தாவூத் இபுராஹிம் தான் என்பார்கள் நமது வார இதழ்களாகிய ஜூனியர், சீனியர் விகடன்மார்கள். இதில் எதுவுமே இல்லை, இந்த விபத்தை நடத்தியது ஒரு புது அமைப்பு என்று சொல்லவார்கள் தினமணியும், தினமலரும் போன்ற பார்பன ஹிந்துத்துவா நாளிதழ்கள்.

நீங்கள் யார் சொல்லவதும் சரியில்லை நாங்கள் துப்பறிந்து கண்டுபிடித்தோம் என்று உலகத்தில் இல்லாத ஒரு புதிய பெயரை சொல்வார் பாசிச ஊது குழலாகிய நக்கீரன்.

இப்படி கற்பனையிலேயே துப்பு துலக்கும் இந்த துப்பறியும் பத்திரிகை சம்பவான்கள் எல்லாம், ஏன் இன்னும் தங்கள் கற்பனை குதிரையை ஓடவிடாமல் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நமக்கு சந்தேகம் வருகிறது.

ஜெயலலிதாவின் பதவி ஏற்ப்பு விழாவிற்கு வருகை புரிந்த குஜராத் இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியை பார்த்து சிறுபான்மை மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. மோடியின் வருகையால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்றுஅஞ்சினர்.

இந்நிலையில் தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டது பிடிக்காமல் "ஹிந்துத்துவா" இந்த விபத்தை நடத்தி இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

இந்த துப்பறியும் பத்திரிக்ககளும் வாய்திறக்க மறுக்கின்றன, விபத்தை நடத்திய லாரியும், லாரி டிரைவரும் இதுவரை பிடிக்கப்படவில்லை. அதுவும் இந்த லாரி கேரளாவை சேர்ந்தது என்ற செய்தி இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கோட்டை என்று கேரளா மாநிலத்தை சொல்லலாம். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யூனிட்கள் ( சிறு சிறு படையணிகள் ) அதிகம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம்.

முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான பழனி பாபா அவர்களை கொன்றவர்களும் கேரளத்து ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பழனி பாபாவை கொல்ல கேரள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து ஆட்களை தெரிவித்தார்கள் தமிழக ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி இயக்கத்தினர்.

கேரள ஆர்.எஸ்.எஸ். கார்கள் கேரளத்தில் இருந்து ஒரு அம்பாசிடர் கார் மூலம் தமிழகம் வந்து பழனி பாபாவை வெட்டி கொலை செய்து விட்டு திரும்பிச் சென்றார்கள். இதே போல் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் விசயத்திலும் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

வந்துவிட்டு போனதோ கொலையாளி மோடி ! கொல்லப்பட்டதோ சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்! குஜராத்தில் நடப்பதை போலவே நடந்திருக்கிறது! தமிழகத்திற்கு வருகை புரிந்த மோடியின் தூண்டுதலின் பெயரில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

புதிய அரசு சிபி ஐ விசாரணை நடத்துமா? சி.பி.சி.ஐ.டி விசாரணை அந்த அளவுக்கு உண்மைகளை வெளி கொண்டுவர போதுமானதாக இருக்காது என்றே நாடு நிலையாளர்கள் கருதுகிறார்கள்.

மீனவர்களின் படகுகளில் ஜி.பி.எஸ். கருவி போருத்தப்படுமா?

May 27, தமிழக மீனவர்களுக்கு சென்னையை சேர்ந்த வக்கீல் ஞானேஸ்வரன் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், சர்வதேச கடல் எல்லையில் கடந்த சில ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.

அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளானார்கள். இதனால் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்க அஞ்சுகிறார்கள்.

இதை தடுக்க தமிழக கடல் எல்லை கோட்டை அடையாளம் காட்டும் தானியங்கி தொடர் நிலையங்களை அமைக்க வேண்டும்.

அனைத்து படகுகளிலும் ஜி.பி.எஸ். கருவிகளை இலவசமாக பொருத்த வேண்டும். இதன் மூலம் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுத்தி விடலாம்.

படகுகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது பற்றி நான் மத்திய மாநில அரசுக்களுக்கு கடந்த மாதம் 18-ந் தேதி மனு கொடுத்தேன். இதன் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே தமிழக மீன்பிடி படகுகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார். இம்மனுவை நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர் அவர்கள், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி. தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

சுபா. முத்துக்குமார் படுகொலை சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!

May 27, தமிழக காவல்துறை இயக்குநருக்கு சீமான் புகார் மனு அனுப்பியுள்ளார். எங்களுடைய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபா. முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

எங்களுடைய கட்சியானது இலங்கை வாழ் தமிழர்களுக்காகவும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக போராடி வருகிறது. கடந்த 15.2.2011 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் முத்துக்குமாரும் வழக்கறிஞர் போத்தியப்பன்

அவர்களும் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள தாஜ் பழக்கடையில் நின்று கொண்டிருந்த போது மூன்று நபர்கள் சுபா. முத்துக்குமாரை தலையிலும் வயிற்றிலும் வெட்டி கொலை செய்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சுபா. முத்துக்குமார் உயிர் இறந்தார். மேலும், வழக்கறிஞர் போத்தியப்பன் மேற்கண்ட நபர்களால் தாக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த கொலையை நேரில் கண்ட சாட்சிகளான வழக்கறிஞர் போத்தியப்பன் மற்றும் கடையில் இருந்தவர்களை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை. மேலும், சுபா. முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை.

எனவே இவ்வழக்கினை மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு துறையான சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்டு உண்மை குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பேரினவாதம் நீதிக்கு அப்பாற்பட்டதா!!

May 26, சகோதரி யாழினி! கண்ணீர் மல்கிக்கொண்டிருக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி நிற்பது நம்மின் கடமை.

எப்படி துடித்திருக்கும் தமிழீழ மக்களின் இதயங்கள். கண் முன்னே அந்தக்காட்சிகள் நிழலாடுகின்றன. வானத்திலேசண்டை விமானங்களின், ஹெலிகாப்டர்களின் சத்தங்கள்.

தரையிலே சிங்கள இனக் கயவர்களின் துப்பாக்கி சத்தங்கள். பிஞ்சுக்குழந்தைகளை இருக்க அணைத்துக்கொண்டு ஓடவும், ஒதுங்கவும் இடம் தெரியாமல் தாய்கள்.

தாயும், தந்தையும் சென்ற இடம் தெரியாமல் யாரிடம் சென்று அபயம் தேடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் சின்னஞ்சிறார்களின் காட்சி.

துப்பாக்கிய நீட்டிய சிங்கள துன் மார்க்கர்களின் கையில் கிட்டிய அபலை பெண்கள். கனரக ஆயுதங்களால் 50 ஆயிரத்திருக்கும் மேற்பட்ட மக்களை சிலதினங்களுக்குள் கொன்று குவித்த சிங்கள இரத்தக் காட்டேறிகள். நீதிக்கு தலைவனே! இம்மக்கள் விசயத்தில் நீதி செலுத்து.

அதுபோல் குஜராத்தில் கொல்லப்பட்டனரே, வீடுகளுக்குள் பூட்டி காஸ் சிலிண்டர்களை திறந்து எரித்து கரிக்கட்டையாக்கினரே அந்த உயிர்கள் எப்படித் துடித்திருக்கும்.

தனக்கு என்ன நடக்கிறது என்றுகூட தெரியாத வயிற்றிலிருந்த சிசுவை வயிறு கிழித்து எடுத்து ஈட்டியால் குத்தி நெருப்பில் வாட்டினானே. எப்படி செய்ய முடிந்தது?

நடந்த இந்த நிகழ்வை, மிருகங்கள் கூட அதிசயிக்கும் இப்படிப்பட்ட இவர்களை வழி நடத்துபவர் யார்? இவர்களுடன் பேசிச்சிரித்து, விருந்துண்டு, விழாக்களில் கலந்துகொண்டு, கூடி, குழவி.... எப்படி முடிகிறது இவர்களால்?

தன்னால் செய்விக்கப்பட்ட அந்த ஈவிரக்கமற்ற செயலை எப்படி இரசித்து, சிரித்து அசை போட்டு பார்க்க முடிகிறது இவர்களால்? இவர்களின் இந்த ஈனச்செயல்களை என்னவென்று சொல்வது.

ஒரிசாவிலே பால் மனம் மாறா பாலகர்களிருவரை தந்தையுடன் சேர்த்து வாகனத்தில் எரித்து கொன்றனரே! வாகனத்தினுள்ளே உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளும் வெப்பம் உணர்ந்து சிறு பட்சிகள்போல் பட படத்து வெளியேறத் துடித்த பொழுது,

அந்த வாகனத்தினுள்ளே தனக்கும் தன் அன்புக்குழந்தைகளுக்கும் நேரும் பயங்கரத்தை உணர்ந்து உடல் வேதனையும், தன் குழந்தைகளுக்கு நேரும் மரணத்தின் வலியை போக்க வெளியே பாயும் அந்த தகப்பனையும்,

சிறு குழந்தைகளையும் கோடாரிகளைக் கொண்டு தாக்கி வெளியேற விடாமல் உள்ளேயே சுட்டுப்போசுக்கிய அந்த பயங்கரவாதிகளைவிடவா வேறு பயங்கரவாதிகள் இந்த உலகத்தில் இருக்க முடியும்?

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், மதத்தின் பெயரால், அரசுகளும், ஆள்பவர்களும் செய்யும் வன் கொடுமைக்கும், கொலைக்கும், சித்ரவதைக்கும் மனிதமுள்ள மக்கள்தான் முடிவு கட்டவேண்டும்.

பேரினவாதம் செய்யும் கொடுமைகளை இந்திய செய்தித்துறையும், பத்திரிகைத்துறையும் கண்டு கொள்ளக்கூடாதென்று சத்தியம் செய்து கொண்டது போல் தெரிகிறது. சுய உணர்வுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் இந்த அநியாயத்திற்கு பொறுப்பாவான்.

செய்தி குழுமங்களே! நீங்கள் பன்மையாய் இருக்கும் பட்சத்தில், உங்களின் தனி நபர் பொறுப்பு குறைந்து விடுமென்று வாலாதிருக்கவேண்டாம். அநியாயத்தை கண்டும், காணாதிருக்கும் நீங்கள் அநியாயத்திற்கு துணை போனவர்கள் ஆவீர்.

உங்களின் அநியாயத்திற்கு துணை போகும் பண்புக்கு பகரமாக உங்களின் குடும்ப வாழ்க்கையில் கூட இறைவன் நிம்மதி இல்லாமலாக்கலாம். அல்லது மற்றவருக்கு நடந்த அதே போன்ற அநியாயங்கள் சோதனையாக உங்கள் குடும்ப நபருக்கே விளைவிக்கப்படலாம்.

அநியாயங்களுக்கு எதிராக மக்களை ஓன்று திரட்ட வேண்டும். யாரும் யாரையும் அடக்கியாளக்கூடாது. தீரமிக்க, மனித நேயமிக்க நல்ல அரசுகள் வரவேண்டும். மனிதம் நிலைத்திருக்க வேண்டும். அநியாயம் செய்தது அரசே ஆனாலும் நீதியின் முன் நிறுத்தப் படவேண்டும். - MOHAMED THAMEEM

"யாழினியின் கருத்து பதிவாகிறது". என்ற பதிவுக்கு வாசகர் மிஸ்டர் தாமீம் எழுதிய கமன்ட் அது ஒரு பதிவு போல் நிறைய செய்திகளை தாங்கி நின்றதால், அவர்களது கருத்தும் ஒரு பதிவாக வாசகர்களுக்கு சமர்பிக்கப்படுகிறது. - அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

பாபர் மசூதியும் பார்ப்பன வேட்டையும்!!

May 26, முஸ்லிம்களின் 450 வருடம் வரலாற்று பழமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் ஹிந்து வெறியர்களால் இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் (சிறுபிள்ளைத்தனமான) தீர்ப்பை உச்சநீதி மன்றமே கண்டித்தது.

உச்சநீதி மன்றம் நல்லதீர்ப்பு தரும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்டவர்கள் நீதி தேவை என்று கருதுவதையும் நாம் அறிந்ததுதான்.

அப்போதைய அரசின் துரோகத்தையும், நடந்து முடிந்த பெருங்கோர நிகழ்ச்சியையும் நான் இங்கு நினைவுப்படுத்த காரணம் உண்டு.

சினிமா என்பது கலையையும், கலாச்சாரத்தையும் காட்டிய காலமெல்லாம் போய், வன்முறையையும், வக்கிரத்தையும் பிரதிபலிப்பதாய் இருக்கின்றன என்பதை நம் யாராலும் மறுக்க முடியாது.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், திப்புசுல்த்தான், நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், பகத் சிங், போன்றவர்களின் கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களை இன்னும் நாம் ரசிக்கவே செய்கிறோம்.

அப்படங்கள் தேசபக்தியின் அடையாளங்களாகத் திகழ்ந்தன. அதுபோல் இந்தியில் வெளிவந்த அமீர்கானின் "தாரே ஜமீன் பர்" ஐ பார்த்து வியக்காதவர்கள் இல்லை.

நர்கீஸின் "மதர் இந்தியா" வை பார்த்துவிட்டு அழாமல் எழமுடியாது. படங்கள் எனப்பட்டவை உண்மையை, வாழ்வின் மென்மையை அச்சு அசலாக சொல்வதாய் இருக்கவேண்டும்.

அகிரா குரோசாவின் ஜப்பானிய திரைப்படங்கள் ஏன் சாதிக்கின்றன?. இந்நிலையில் பாப்ரி என்ற பெயரில் (பாபர் மசூதியை பற்றி) ஒரு படத்தை ஹிந்துத்துவா பால்தாக்ரேயின் மருமகள் சுமிதா தாக்ரே எடுப்பதாக செய்தியை படித்த பிறகு நமக்கு ஏற்படும் ஐயங்கள் ஏராளம்.

அவர் நடுநிலையோடு பாபர் மசூதியின் வரலாற்றை சொல்வதாக இருந்தால் வரவேற்கலாம். அதே நேரம் தாக்ரேயின் குடும்ப பின்னணியில் உள்ள ஒருவர் இந்தப்படத்தை எடுப்பதால் அது வகுப்புவாத சிந்தனை அற்றதாக இருக்கும் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை.

அரசியல் ஆதாயம் தேடுவோரும், சிறுபான்மையினரை சீண்டிப்பிழைப்பு நடத்துவோரும் வாய்ப்புக்காக காத்திருக்கும் இந்த தருணத்தில், இப்படம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி பெரும் கலவரங்களோடு ரத்த பலி கேட்க்குமோ ? .................................சிந்திப்போம் !!

May 25, 2011

யாழினியின் கருத்து பதிவாகிறது!!

வணக்கம்,.. நான் யாழினி.. உங்களது ஆக்கம் படையப்பா..படுத்திரியப்பா! நண்பர்களது மின்னஞ்சல் மூலமாக எனக்குக்கிடைத்தது.

எனது மனவேதனைகள், கேள்விகள் அனைத்தையும் அதில் கண்டேன். மிக்க நன்றி!
மே 18 அன்று எத்தனைபேர் ஒரு துளி கண்ணீர் சிந்தியிருப்பார்கள், கொல்லப்பட்ட நம்தமிழ்மக்களுக்காக?

வியர்வைசிந்தி உழைத்த உழைப்புக்கு .... உகந்த கூலி கேட்ட குற்றத்திற்காக பிள்ளை குட்டிகளோடு எரித்துக்கொல்லப்பட்ட வெண்மணி விவசாய தொழிலாளர்கள்.., நினைத்தேனும் பார்த்ததுண்டா?

மக்கள் விட்டில்களாகிப்போயினர்... வெள்ளி த்திரையின் வெளிச்சம் மட்டுமே இவர்கள் கண்ணுக்குப்புலனாகிறது. அங்கும் உழைப்பவர் நிலை உயர்வதில்லை... இதுதான் உண்மை.

மே 18 அன்று ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டன. இறந்த நம் சொந்தங்களுக்காக ஒரு இரங்கல் தெரிவிக்கக்கூட மனமில்லை யாருக்கும். நாங்கள் செய்த பாவமென்ன? தமிழனாய்ப் பிறந்ததா ?

மனிதப்பிறவி என்றெடுத்தால் தமிழனாய்பிறப்போம்... ஆயிரம்முறை! நான் சில இணைய தளங்களில் எழுதி வருகிறேன். ஈழதமிழர் பிரச்சினைக்காக கையெழுத்து இயக்கம் நடப்பது குறித்தும், அஞ்சலி செலுத்தக்கோரியும் எழுதினேன்.

அதற்க்கு எனக்கு கிடைத்தபதில் புறக்கணிப்பும்,"நீங்க இலங்கை தமிழரா?" என்ற கேள்வியுமே. மனசாட்சியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையா ஈழப்படுகொலைகள்? எனது மனத்தாங்கலைப் பகிர்ந்து கொண்டேன். நன்றி!

நட்புடன்..யாழினி..
உயிர்வதை பாவமென்ற புத்தனின் மண்ணில்
புதைந்து மடிந்தன பல்லாயிரம் உயிர்கள்..
ஈசலும் உயிர்தானே ...? ஈழவன் உயிரில்லையா ...?
பிஞ்சும் அஞ்சும் பத்தும் ...அம்பதும் அறுவதும் ..ஆணும் பெண்ணும்
பேதம் தெரியவில்லை பிணக்குவியலில்
.
இனம் காக்க இறந்துபட்டீரே எம்உறவுகளே
மிஞ்சினோம் நாங்கள் உங்களின் தியாகத்தால் .
மாவீரர்கள் அஞ்சவில்லை ...சாவைக்கழுத்தில் கட்டிக்கொண்டும் சிரித்தனர்
மக்களே ...வாழ்ந்த பொழுதிலெல்லாம் மானத்திற்கும் மரணத்திற்கும்
அஞ்சியஞ்சிச்செத்தீரே... உங்கள் உயிர்பட்டபாட்டை இப்போதுதான் அறிந்ததாய் அறிவிக்கின்றன ஊடகங்கள்.
கந்தக நெருப்பில் கருகிய எம்மக்களே...
கண்ணீர் சொரிகிறோம் உங்கள் காயங்கள் ஆறுதற்கு.
இனியொரு துயரம் எவர்க்கும் வேண்டாம்...உலகோரே வேண்டுகிறோம்.
உங்களின் ஒவ்வொரு துளிக்கண்ணீரும் கரைக்கக்க்கூடும் அகந்தை மனங்களின் கறைகளை நீங்கள் ஏற்றும் தீபத்தினொளியில் தெரியட்டும்யாவர்க்கும் எங்கள் இனத்தின் துயரம் விடியல் தேடிக்காத்திருக்கிறோம்...விடிவது உங்கள் கையில்.
சிந்திக்கவும்: சகோதரி யாழினி அவர்கள் படையப்பா ...... படுத்திரியப்பா!!என்ற எமது பதிப்பிற்கு மின்னஞ்சல் வழியாக தனது கருத்தை சொல்லியிருந்தார்.

அவரது நியாயமான மன ஆதங்கத்தை, கருத்தை, சிந்திக்கவும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக அதை ஒரு பதிவாக உங்கள் முன் சமர்பிக்கிறேன்.
உங்கள் மின்னஞ்சல் பார்த்து எனது கண்கள் அழுதன, தமிழச்சி புலியை முரசால் அடித்த வரலாறு படித்திருக்கிறேன்
. இப்பொது உங்கள் எழுது வடிவில் அதை பார்கிறேன்.

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட துயர சம்பவத்தை மக்கள் மத்தியில் கெண்டு சேர்த்து பயங்கரவாதி ராஜபசேக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்ட எம்மால் இயன்ற அளவு இந்த சிந்திக்கவும் இணையதளத்தில் எழுதி வந்துள்ளோம்.
உலகில் பாதிக்கப்படும் மக்களுக்காக, அவர்கள் எந்த மொழியாக இருந்தாலும், எந்த மதமாக, இனமாக இருந்தாலும் அவர்ளது குரலாக SINTHIKKAVUM இணையத்தளம் தொடர்ந்து பதிவுகளை இட்டு வந்துள்ளது.
அதுபோல் தாழ்த்தப்பட்டவர்கள், உழைக்கும் பாட்டாளி மக்கள், மற்றும் அரசு பயங்கரவாதத்திற்கும் எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளது.

கலங்காதே சகோதரியே!! எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வுண்டு. இது முடிவல்ல துவக்கம். உலக வரைபடத்தில் ஒரு புல்லிமாதிரி தெரியும் இலங்கை தீவில், அதுவும் சிறுபான்மையாக வாழ்ந்த தமிழ் இனம், தனது மக்கள் தொகையில் பெரும் பகுதியினரை இழந்து நிற்கிறது.
அந்த மக்கள் சிந்திய இரத்தத்திற்கு நிச்சயம் விலை உண்டு. கலங்காதே சகோதரி! நிச்சயம் காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது
. பெரும் பெரும் சாம்ராஜ்யங்கள் எல்லாம் மண்ணை கவ்வி விட்டன. நிச்சயம் சிங்கள பேரினவாதிகள் வரலாற்றின் முன்னே படிப்பினை பெறுவார்கள், தண்டிக்கபடுவார்கள், அல்லது தண்டிப்போம்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

தமிழர் துரோகி குமரன் பத்மனபானின் பொய் பிரச்சாரம்!

May 26, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது.

அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட உடனே, புலிகளின் சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தளபதி கிட்டு இக்கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும், இக்கொலை சம்பந்தமான சில உண்மைகள் தங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

இந்திய புலனாய்வுத் துறை அணுகினால் அவற்றைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்திய புலனாய்வுத் துறை இறுதிவரை அவரைச் சந்தித்து அந்த உண்மைகளைப் பெற முயற்சி செய்யவில்லை.

இத்தனை ஆண்டு காலம் கழித்து குமரன் பத்மநாபன் மூலமாக இத்தகையப் பிரசாரம் செய்யப்படுவது தமிழக மக்களைக் குழப்புவதற்கான பொய்ப் பிரசாரம் ஆகும். ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் தேர்தலில் சரியான பாடம் கற்பித்துள்ளனர்.

எனவே மக்களைக் திசைத் திருப்பத் திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. ஈழத் தமிழர் பிரச்னையில், முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் மத்திய அரசைக் கலக்கமடைய வைத்துள்ளன.

மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதல்வர் எடுப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் மத்திய அரசின் உளவுத்துறை, குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது.

எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை புலிகள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவுக்கும் அல்லது வேறு யாருக்கும் ஒருபோதும் எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள். இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒளிரவேண்டும் என்றால் இவரைபோல் மாறுங்கள்!!

May 26, பரிதாபாத்: அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில், நகராட்சி உதவி ஆணையர் பிரவீன் குமார், சமீபத்தில் ஆய்வு நடத்தினார்.

பள்ளியில் இருந்த மாணவியரில் பெரும்பாலானோர், "கழிவறையை சுத்தம் செய்வதற்கு, ஒரு ஊழியர் தான் உள்ளார். இதனால், கழிப்பறைகள் மிகவும் அசுத்தமாக உள்ளன.

அவற்றை பயன்படுத்த முடியவில்லை'என, புகார் கூறினர். இதைத் தொடர்ந்து, பள்ளியின் கழிப்பறைக்குள் புகுந்த உதவி ஆணையர், தானே சுத்தம் செய்தார்.

இதைப் பார்த்து, பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், மற்றவர்களும், அதிர்ச்சி அடைந்தனர். உதவி ஆணையர், பள்ளி கழிவறையை சுத்தம் செய்த தகவல், பரிதாபாத்தில் உள்ள, மற்ற அரசு பள்ளி நிர்வாகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்துக்கு, அன்றே ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வித் துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின், பரிதாபாத் மாவட்ட கல்வி அதிகாரி கூறுகையில், "உதவி ஆணையர், தானாக முன்வந்து கழிப்பறையை சுத்தம் செய்து, எங்களுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி விட்டார்.

இதனால், கழிவறை மற்றும் சுற்றுப் புறங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்காக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். சுகாதாரம் குறித்த சிறப்பு கல்வி திட்டத்தையும் அமல் படுத்தவுள்ளோம்' என்றார்.

மாவோஸ்ட் மக்கள் போராளிகள் அதிரடி தாக்குதல்!!

May 26, சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோஸ்ட் மக்கள் போராளிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு உள்பட 10 பேர் பலியானார்கள்.

சத்தீஷ்கார் மாநிலம் கரியாபாண்ட் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் பவார் தலைமையில் 10 போலீசார், ரோந்துப் பணியிலும், காணாமல்போன போலீசாரை தேடியும் ஒரிசா மாநில எல்லைப் பகுதிக்கு சென்றனர்.

அங்கு அடர்ந்த காடுகளில் அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அவர்கள் தங்கள் பணியை முடித்து விட்டு தங்களது பல்நோக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இடையில் அவர்களின் வாகனம் பழுதாகி விட்டது. இதனால், ஒரு டிராக்டரை பிடித்து அதில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். போலீசார் தங்களது வாகனத்தை விட்டு, டிராக்டரில் வருவதை அறிந்து, மாவோஸ்ட் மக்கள் போராளிகள் அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.
டிராக்டரை தகர்க்க நிலத்தில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்தனர்.

தடுபாரா அமாபோலா என்ற பகுதியில் அந்த டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது மாவோஸ்ட் மக்கள் போராளிகள் கண்ணி வெடியில் சிக்கி டிராக்டர் வெடித்து சிதறியது. அதே சமயம் அங்கு பதுங்கி இருந்த போராளிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்கள்.

இந்த தாக்குதலில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும், அவருடன் சென்றிருந்த 9 போலீசாரும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக சாய்ந்தார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும், மத்திய ஆயுதப்படை போலீசார், அதிரடிப்படை போலீசார் கொண்ட பெரிய போலீஸ் படை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு, தப்பி ஓடிய போராளிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மன்மத லீலையை வென்றார் உண்டோ!!

May 25, தி.மு.கவின் தோல்வியை தங்களது வெற்றியாக கொண்டாடும் பட்டியலில் பொறுக்கி நித்தியானந்தாவும் சேர்ந்திருக்கிறார்.

இவரது சாபத்தால்தான் தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறதாம். இந்த உண்மையை தனது பொற்கால ஆட்சிக்காக ஏங்கித்தான் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பேசும் புரட்சித் தலைவியின் காதில் விழுந்தால் விழுந்தால் அம்பி சட்னிதான்.

திருவண்ணாமலையில் தரிசனம் கொடுத்த இந்த பொறுக்கி இன்னமும் தெனாவெட்டாக பேசியிருக்கிறார். ரஞ்சிதாவுடன் அவர் செய்த நடவடிக்கைகள் எல்லாம் மாஃபிங் செய்யப்பட்டதாம்.

வீடியோ படத்தில் இருப்பது அவரில்லையாம். அப்படியே இருந்தாலும் அதை கேட்க வேண்டியது நீதிமன்றம்தானாம். இப்படி ஃபுல் மப்பில் பேசக்கூடிய கருத்துக்களை இந்த சாமியார் நிதானமாகவே உதிர்த்திருக்கிறார்.

இத்தனை அம்பலப்பட்ட பிறகும் ஒரு மோசடிக்காரன் தனது காவி சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் எந்தப் பழுதுமில்லாமல் கட்ட முடிகிறது என்பதுதான் நாம் கவலைப்படத்தக்க ஒன்று.

ஒரு சதுர இன்ச் கொண்ட பொருளை சக்தியாக்கி 2500 கி.மீட்டர் தொலைவுக்கு அனுப்பும் சாதனையை வரும் ஜூலை 15இல் இந்த அம்பி நடத்தப் போகிறாராம்.

இப்படி சக்தி உள்ள இந்த அம்பி அந்த பலான வீடியோவை அதுவும் படுக்கை அறைக்குள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த காமராவை கண்டுபிடிக்க முடியவில்லையே? ஆய் போய்விட்டு கழுவத் தெரியாதவன் சூரியனுக்கு பேன் பார்த்த கதைதான்.

ஆனாலும் இந்த பொறுக்கி சாமியாருக்கு பணக்கார முட்டாள் பக்தர்கள் இருக்கும் வரையிலும் எந்தக் குறையுமில்லை. கோயம்பேட்டில் மூட்டை தூக்கினால்தான் மூன்று வேளை சோறு என்று இந்த ஜன்மத்தை விட்டிருந்தால் கொஞ்சமாவது திருந்தியிருக்கும்.

அதை விடுத்து இன்னமும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாலாட்டு பாடும்போது நித்தியின் திமிர் புடைத்துக் கொண்டுதான் இருக்கும்.

சிறைச்சாலை இல்லை!! சிங்காரச்சோலை!!

May 25, திகார் சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி, தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன் நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள்.

பிளாக்கில் நுழைந்த உடனே சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள்.

அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில் இருக்கும்.
ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயில், விமானம் முதல் சிறைவரை இவர்களுக்கு முதல் இடம்தான்.

சிறை என்பது ஒரு மனிதன் திருந்துவதற்க்கான இடமாக இருக்கவேண்டுமே அல்லாமல் மீண்டும் குற்றம் செய்ய தூண்டுவதாக அமைந்துவிட கூடாது. அதிலும் ஏழை பணக்காரன் பாகுபாடோடு இருக்குமே ஆனால் அதைவிட கேடு இந்த நாட்டிற்கு வேறு ஒன்றும் இல்லை.

May 24, 2011

ராஜீவ் காந்தி கொலைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்!! கே.பி.

May 25, பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதற்காக நேரு குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கேறேன் என்று விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான கே.பி. என்ற குமரான் பத்பநாபன் கூறியுள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிதி, மற்றும் ஆயுத சேகரிப்பில் வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வந்த கே.பி. என்ற குமரான் பத்பநாபன் CNN, IBL தொலைகாட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது ராஜீவ் காந்தியை கொலை செய்ய நாங்கள் முன்னமே திட்டமிட்டிருந்தோம். இதை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் போட்டு அம்மன் இருவரும் திட்டமிட்டனர்.

இதுவே பிரபாகரன் செய்த மிகபெரிய தவறு என்றும் இந்த தவறுக்காக வேண்டி புலிகள் சார்பில் நான் நேருவின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் திமுகவின் பிராமண எதிர்ப்பு கொள்கையும் ராஜீவ் காந்தியின் கொலைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் நாங்கள் அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதாவை பலமுறை கொலை செய்ய முயற்ச்சித்தோம் என்றும் அதற்க்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது இந்த படுகொலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்பிருப்பதாகவும், மேலும் தன்னை கொல்ல சதி நடப்பதாகவும் அதிமுக தலைவர் ஜெயலலிதா கூறியது நினைவு கூறதக்கது.

சிந்திக்கவும்: குமரன் பத்மநாபனின் இந்த தொலைக்காட்சி பேட்டியை பார்க்கும் போது ஒன்று துளிவாக தெரிகிறது, காங்கிரஸ் திமுகவுடன் கொண்டுள்ள கூட்டணியை முறிக்கவும், அதிமுகவுடன் கூட்டு சேரவும் செய்யப்பட்ட திட்டம் என்றே எண்ணத்தோன்றுகிறது.

மேலும் இலங்கை அரசின் மீது உள்ள போர்குற்ற பழியை திசைதிருப்ப இந்த விஷயம் இப்போது கிளப்பாப்படுள்ளதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

யுத்த நேரத்தில் புலி தலைவர்களை பாதுக்காக்க கப்பல் அனுப்பப்பட்டதா?

May 25, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தப்பிச் செல்வதற்கு கப்பலொன்றை அனுப்ப ஐ.நா.வும் மேற்குலக நாடொன்றும் முன்வந்ததாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "2009 ஜனவரியில் நாம் யுத்தத்தை நிறுத்த முயற்சித்தோம். யுத்தத்தை நிறுத்த பகல் இரவாக நான் கடுமையாக முயற்சித்தேன்.

ஆனால் விசேடமாக எமது தரப்பிலிருந்து கடைசி தருணம் வரை அதற்கு ஆதரவளிக்கவில்லை. எனவே நான் நம்பிக்கை இழந்தேன்.

கடைசி தருணத்தில் மே 16 17 அல்லது 15 ஆம் திகதியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற தயாரா என ஐ.நாவும் மற்றொரு வெளிநாட்டு அரசாங்கமும் கேட்டன.

அவர்கள் எங்கேனும் செல்வதற்கு கப்பலொன்றை அனுப்பத் தயார் என தெரிவித்தனர்" என தெரிவித்துள்ளார்.

அது எந்த நாடு என கேட்கப்பட்டபோது, "அது ஐ.நாவும் மற்றொரு நாடுமாகும். அந்த நாட்டின் பெயரை நான் குறிப்பிட மாட்டேன். ஆனால் அது ஒரு மேற்கு நாடாகும் "என கேபி. கூறியுள்ளார்.

சிந்திக்க: இது கேபியின் பொய் பிரச்சாரமாகவே அரசியல் வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது. இலங்கை பயங்கரவாத அரசின் பிடியில் இருக்கும் இவர் சொல்வதை நம்பிக்கைக்கு எடுத்து கொள்ள முடியாது என்றே சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்.

மணிமுத்தாறு அணை திறப்பு: ஜெயலலிதா உத்தரவு!!

May 25, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பெருங்கல் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இத்தகவல், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தது.

அதை ஏற்று மே 27 முதல் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, கார் பருவ சாகுபடிக்காக 105 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள 1,258 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசை வலுப்படுத்துவோம்!!

May 25, ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்சியாக, முள்ளிவாய்க்காலின் பின்னரான தமிழர்களின் அரசியல் ஆயுதமாக விளங்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக பல நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் விளக்கவுரைகளுடன், மக்களின் கேள்விகளுக்கு பதிலுரைக்கும் வகையில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது. நியூசிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் ஹோமேபுஷ் பாடசாலை முதன்மை மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் அரங்கத்தில், பேர்த், விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், குயீன்ஸ்லாந்து ஆகிய மாநில நாடு கடந்த அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.

புலம்பெயர் தமிழ் சமூகம் ஏன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்ட வேண்டும் என்ற விளக்கவுரையுடன் யோகன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நாடு கடந்த அரசாங்கத்தின் இலக்கு தமிழீழம் ஒன்று மட்டும் தான்.

இத்துடன் தமிழீழ தேசிய அட்டை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நாடு கடந்த அரசாங்கம் சனநாயக ரீதியில் தமிழீழத்தை சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுப்பது உறுதி எனத் தெரிவித்தார் நாடு கடந்த தமிழீழ அரசின் துணை பிரதமரும் நிதி அமைச்சருமான பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன்.

10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி சிறுமி அறிவு சாதனை!!

May 24. திருநெல்வேலி: இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார்.

அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு, கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்டிருந்தார்.

சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.

வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார்.

எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார்.

இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.
தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார்.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன.

ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.

May 23, 2011

40 வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது 4 வருட கல்வியே!!

May 23, சென்னை : ""நாற்பது வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்,'' என, அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மன்னர் ஜவகர் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது: படிப்பை பொறுத்தவரை மூன்று நிலைகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் நிலையாகவும், எட்டு முதல் பிளஸ் 2 வரை இரண்டாம் நிலையாகவும், கல்லூரி படிப்பானது மூன்றாவது நிலையாகவும் உள்ளன.

முதல் இரண்டு நிலையை பொறுத்தவரை மாணவர்களின் படிப்பில் பெற்றோரின் பங்கு அதிகம் இருக்கும். ஆனால், மூன்றாம் நிலையான கல்லூரி படிப்பை பொறுத்தவரை, அதற்கான பாதையை மாணவர்கள் தான் வகுக்க வேண்டும்.

கவுன்சிலிங்கை பொறுத்தவரை எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற விஷயத்தில் உறுதியாக இருங்கள். இறுதி நேரத்தில் குழப்பத்தில் சிக்க வேண்டாம். குறிப்பாக 40 வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக கடின உழைப்பு, கடமை தவறாமை, நேர்மை, ஒருங்கிணைந்து செயல்படுதல், முழு ஈடுபாடு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். கடின உழைப்பு மூலம் பெறும் பயனே சிறந்தது. அதற்கு ஈடாக எதையும் ஒப்பிட முடியாது. ஆகையால் மாணவ, மாணவியர் கல்லூரி காலங்களில் படிப்பிற்கான கடின உழைப்பிற்கு தயாராக வேண்டும்.

பெற்றோரும், மாணவர்களும் இணைந்து முடிவெடுங்கள். இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்வதற்கு முன், கல்லூரி மற்றும் துறை ரீதியான வாய்ப்புகள் குறித்து தகவல்களை திரட்ட வேண்டும். இதே போல, குறைந்த கட்டணமே வசூலிக்கும் அரசு கல்லூரிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில், சிறப்பான வேலைவாய்ப்பை அளிக்கும் குறிப்பிட்ட துறையானது, நாம் நான்கு வருட படிப்பு முடிக்கும் போது, எந்த நிலையில் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. ஆகையால், புதிய பாடப் பிரிவுகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு, பல பாடப்பிரிவுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாக இருப்பதை நாம் அறிய வேண்டும்.

ஆகையால், இரண்டு பிரிவுகளை ஒன்றாக்கி புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தும், அவற்றின் பயனறிந்தும் அவற்றை தேர்ந்தெடுத்த படிக்க முன் வர வேண்டும்.
அனைத்து பாடப் பிரிவுகளையும் ஆண், பெண் இருபாலரும் தேர்ந்தெடுக்கலாம். கல்லூரி மற்றும் துறையை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். கவுன்சிலிங்கை சந்திப்பதற்கு முன்பாகவே மாணவ, மாணவியர் பதட்டத்தில் இருந்து விடுபட வேண்டும். இதன் மூலம் இறுதி நேரத்தில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முடியும்.

கலங்காதே கனிமொழி!! கருணாநிதி ஆறுதல் கூறினார்!!

May 24, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, ஜாமின் மறுக்கப்பட்டு, டில்லி திகார் சிறையில் இருக்கும் மகள் கனிமொழியை கருணாநிதி நேற்று நேரில் சந்தித்தார்.

நேற்று காலை, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்தார் கருணாநிதி. காலை, 11.30 மணிக்கு, டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், அங்கிருந்து நேராக கான்மார்க்கெட் அருகில் உள்ள தாஜ்மான்சிங் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்தார்.

அங்கு, தி.மு.க ., எம்.பி.,க்கள் சிலருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சிறிய ஓய்வுக்கு பின், மாலை, 5 மணிக்கு, ஓட்டலை விட்டு கிளம்பினார். அவருடன் ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்தன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் சென்றனர்.

இரண்டு கார்கள் மற்றும் ஒரு எஸ்.பி.ஜி., வாகனம் புடைசூழ, திகார் சிறைக்கு சென்ற கருணாநிதி, சரியாக, 5.45 மணிக்கு உள்ளே சென்றார். மீடியாக்கள் குவிந்திருந்த கேட்டை தவிர்த்து விட்டு, வேறுவழியாக, கருணாநிதியும், அவருடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர்.

தன்னை சந்திக்க வந்த தந்தை கருணாநிதியை பார்த்ததும் கனிமொழி சற்று உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு, பயப்படாமல் இருக்கும்படி கருணாநிதி ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் ராஜாவிடமும் சில நிமிடங்கள் பேசிய கருணாநிதி, அவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சரத்குமார் ரெட்டியிடமும் ஆறுதல் தெரிவித்துவிட்டு, தனது, 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு கருணாநிதி வெளியே வந்தார்.

ஓட்டலில் தங்கியிருந்த கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். ஏற்கனவே, கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டியில், சோனியாவை சந்திக்கப் போவதில்லை' என, கூறியிருந்தார். சோனியா, நேற்று ஒரு நாள் அவசரப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். பிரதமர் மன்மோகனும் எத்தியோபியா பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராக, நேற்று, கனிமொழி வந்த போது, அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டில்லி வந்தார்.

May 22, 2011

குஜராத்தில் பெண் எம்.பி யை அவமானப்படுத்திய மோடி!!

மே 23, . குஜராத்தின் கோத்ராவில் உள்ள தாகூ கிராமத்தில் விவசாயிகளுக்கான அரசு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் குஜராத் இனபடுகொலை முதல்வர் நரேந்திரமோடி அழைக்கப்பட்டிருந்தார். உடன் காங்கிரஸ் கட்சியின் பழங்குடியின பெண் எம்.பி. பிரபாபென் தவியாத் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சி.கே. ரஜோலி உள்ளிட்ட காங்கிரஸ் நிருவாகிகள் கலந்து கொள்ள வந்தனர்.

பாதுகாப்பு என்று பொய் காரணம் சொல்லி விழா மேடையில் காங்கிரஸ் எம்.பி.க்கும் மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. அரசு விழாவில் கலந்து கொள்ள சட்டமன்ற உறுப்பினர் ரஜோலிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரஜோலி தலைமையில் பயங்கரவாதி மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடன் அவர்களை மோடியின் பயங்கரவாத காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து மேடையில் இருந்த காங்கிரஸ் பெண் எம்.பி. பிரபாபென் தவியாத், முதல்வர் நரேந்திரமோடியின் அருகில் சென்று ஏன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யுங்கள் என மோடியை கேட்டுள்ளார்.
இதனை கவனித்த மோடியின் பயங்கரவாத காவல்துறையை சேர்ந்த பெண் காவல்துறையினர் எம்.பி.யை கட்டாயப்படுத்தி மேடையைவிட்டு கீழே இறக்கிவிட்டனர்.

பயங்கரவாதி மோடியும் இதை சிறிதும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருந்துள்ளார். இது குறித்து காங். எம்.பி. கூறுகையில், நடப்பது அரசு விழா, அரசின் செலவில்தான் நடத்தப்படுகிறது. பா.ஜ.க. கட்சியினர் கொண்டாடும் விழா அல்ல. பொது விழாவில் எந்தக் கட்சியினரும் கலந்து கொள்ளலாம். என்றார்.

குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான அர்ஜூன் மோஹோத்வாடியா கூறுகையில், எம்.பி.யை அவமானப்படுத்திய மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றார்

அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்!!

திருச்சி, மே 23: திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். இவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்.

பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக நின்று முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தார்..

திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு, பாத்திமா கனி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் 3 மகன்களும் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திருச்சியில் ஒரு திரையரங்கும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், இன்று காலை தொடங்கவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தை நடத்துவதா அல்லது வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

இவரது விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அமைச்சருக்கு எஸ் கார்ட் போலீஸ்கள் இருந்தும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் எப்படி? தப்பி ஓடி இருக்க முடியும். பல கோணங்களில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

சமச்சீர் கல்வி திட்டம் ரத்து!!

சென்னை: மே 23, கடந்த தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை.

இந்த ஆண்டு பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வர ஆய்வுக் கமிட்டி அமைக்கப்படும் என்றும் தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்கவும் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., ஆகிய கல்வித் திட்டங்கள் உள்ளன.


சி.பி.எஸ்.இ., தவிர மற்ற பாடத்திட்டங்கள், அனைத்து வகை மாணவர்களுக்கும் சமமான, தரமான கல்வியைத் தரவில்லை என்றும், இதை போக்க, அனைத்து போர்டுகளையும் இணைத்து, ஒரே வகை சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வர, கடந்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்தது.


சட்டசபையில் சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த சட்டம் கொண்டு வரப்பட்டு, மாநில பொதுப்பள்ளி வாரியம் ஏற்படுத்தப்பட்டது. பின், நிபுணர் குழு மூலம் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து சிலர், சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடர்ந்தனர்.


ஆனால், கடந்த கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகமானது. மற்ற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசின் புதிய சமச்சீர் கல்வித் திட்டத்தில், தரமான கல்விக்கான பாடங்கள் இல்லையென பல்வேறு தனியார் பள்ளிகளும், சில கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஆனால், இந்த ஆண்டு 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டப்படி பாடப்புத்தகங்கள் அச்சடிக்க, கடந்த தி.மு.க., அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஏழு கோடிக்கும் அதிகமாக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன.


கடந்த கால அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமில்லை என்றும், பாடப்புத்தகங்களில் தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய படைப்புகளும், அவர் குறித்த பல்வேறு தகவல்களும் இடம்பெற்றுள்ளன என்றும் புகார்கள் எழுந்தன. இதனால், சமச்சீர் கல்வித் திட்டம் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்தது.


தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஒட்டு மொத்த கல்வித்தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது. எனவே, சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்றும் ஆராய, வல்லுனர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.


எனவே, இந்த கல்வி ஆண்டில் பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், பாடப் புத்தகங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்கலாம் என்றும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

கர்நாடகாவில் கந்தலாகிப்போன பாரதிய ஜனதா!!

May 23, புதுடில்லி: கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரிய கவர்னர் பரத்வாஜின் சிபாரிசை, மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கர்நாடகாவில், கடந்த அக்டோபரில், முதல்வர் எடியூரப்பா அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, அவரை எதிர்த்து, 11 பா.ஜ., மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கட்சி தாவல் தடைச்சட்டத்தின் அடிப்படையில், ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே, 16 எம்.எல்.ஏ.,க்களையும் சபாநாயகர் போப்பய்யா டிஸ்மிஸ் செய்தார். இதை எதிர்த்து 16 பேரும், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

"சபாநாயகர் செய்தது சரியே' என, ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். "சபாநாயகர் போப்பய்யா, அரசியல் சட்ட விதிகளை மீறி நடந்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்தது செல்லாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசை டிஸ்மிஸ் செய்யும்படி மாநில காங்கிரஸ் கட்சி கோரியது.

கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி கவர்னர் பரத்வாஜ், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். பரத்வாஜின் இந்த கடிதம் குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய அரசியல் விவகாரங்களுக்கான காபினட் கமிட்டி கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், கவர்னரின் சிபாரிசை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டது. முதல்வர் எடியூரப்பா போதுமான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளதாக, ஜனாதிபதியிடம் தெரிவித்ததால், கவர்னரின் சிபாரிசை நிராகரிக்க முடிவு செய்ததாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

இதுகுறித்து சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், "" கர்நாடக அரசுக்கு போதிய ஆதரவு உள்ள நிலையில், கவர்னர் பரத்வாஜின் சிபாரிசு குறித்து தீவிர விவாதம் நடந்தது. இறுதியில், சிபாரிசை நிராகரிக்க, முடிவு செய்யப்பட்டது.

கர்நாடக ஹிந்துத்துவா ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது. எடியூரப்பா தலைமையில் நடக்கும் பாரதிய ஜனதா ஆட்சி ஒரு மக்கள் விரோத அரசு. இந்த ஆட்சியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல அநியாயங்கள் அரங்கேற்ற பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சூரப்புலிகள்!!

May 22, சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது.

மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருப்பார்கள்.

இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் நடைமுறையில் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர்.

இது அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராட ஆனந்த மார்க்கம் என்கிற ஹிந்துத்துவா தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் அந்த ஆயுதங்கள் போடப்பட்டன.

மற்றொரு முறை இவர்கள் ஆயுதங்கள் போட வரும் போது அவர்களை மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் உண்மையில் தப்பி ஓடவில்லை அவனை நேப்பாளம் வழியாக வழியனுப்பி வைத்ததே இந்த சூரபுளிகல்தான்.

ஏன் இவர்களே வழியனுப்பி வைத்து விட்டு பின்னர் தேடுகிறார்களே என்று கேட்கிறீர்களா? தப்பியோடிய குற்றவாளியை உலகம் முழுவதும் தேடுகிறோம் பேர்வழி என்று குடிமக்கள் வரி பணத்தில் உலகை சுற்றி பார்க்கத்தான். இப்படி பெரும் புகழுக்கு சொந்தக்காரர்கள்தான் இவர்கள்.

இந்நிலையில் கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் நடக்கவில்லை, அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தார்கள்.

ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ., ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் கருவிதான் சி.பி.ஐ.

ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில்!! இந்தியாவுக்கு தகுதி உண்டா!!

May 22, நியூயார்க் : ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலுக்கு, இந்தியா உட்பட, 14 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

"கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதி இந்தியாவுக்கு இல்லை' என, ஐ.நா., செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமைப்பு ஒன்று விமர்சித்துள்ளது.

கடந்த, 2006ல் உருவாக்கப்பட்ட ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில், 47 உறுப்பு நாடுகளைக் கொண்டது.

ஆசியாவுக்கான 14 இடங்களுக்கான நாடுகள் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆசியா பிரிவில், இந்தியா, 181 ஓட்டுகளும், இந்தோனேசியா, 184 ஓட்டுகளும், பிலிப்பைன்ஸ், 183 ஓட்டுகளும், குவைத், 166 ஓட்டுகளையும் பெற்றன.

கடந்த இருமாதங்களாக நடக்கும் மக்கள் எழுச்சி காரணமாக, சிரியா அரசின் வன்முறை ஏவல் உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளானது. அதனால், இக்கவுன்சிலில் இருந்த சிரியாவுக்குரிய இடம் குவைத்துக்கு தரப்பட்டது.

இந்தியாவுக்கு தகுதி உண்டா? சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் இயங்கி வரும் ஐ.நா.,வின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பான "ஐ.நா., கண்காணிப்பு', "மனித உரிமைகள் கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதிகள் இந்தியாவிடம் இருக்கின்றனவா என்பது சந்தேகம்தான்' என்று கூறியுள்ளது.

இந்தியா உலகில் மனித உரிமை அதிகம் மீறப்படும் நாடுகளில் ஒன்று. இங்கு சிறுபான்மை மக்கள் அதிக அளவில் இனக்கலவரங்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளனர். அதை இந்தியா மறைத்து, அந்நாட்டு அரசின் சமீபத்திய அரசியல் சீர்திருத்தங்களை முன்னிறுத்தி உள்ளது.

ஐ.நா.,வுக்கான இந்திய துணைத் தூதர் இதுகுறித்து அளித்த பதிலில், "இதை ஒப்புக் கொள்ள முடியாது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தத் தேர்வு, உலக நாடுகளின் தேர்வு' என குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்திலே பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட ஆயுதஉதவி செய்து, போரை மறைமுகமாக முன்னின்று நடத்தியவர்கள். ராஜபக்சே எப்படி போர் குற்றவாளியோ அதுபோல் இந்தியாவும்தான்.

ஒரு முன்மாதிரி முதலமைச்சர்!!

May 22, மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, தான் வரைந்த ஓவியங்களை விற்றார்.

அதன் மூலம் கிடைத்த பணம் ரூ.1 கோடியை, ஏழைகளின் நலனுக்காக அரசு செயலாளர் சமர்கோஷிடம் நேற்று வழங்கினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது இந்த தொகையை ஏழைகளுக்காக அரசிடம் வழங்குவேன் என்று கூறி இருந்தேன்.

அதன்படி இப்போது முதல் கட்டமாக ரூ.1 கோடியை கொடுத்து இருக்கிறேன். இன்னும் கூடுதல் தொகையை நான் கொடுப்பேன்'' என்று தெரிவித்தார்.