May 7, 2011

இராம கோபாலனும், ஒசாமா பின்லாடனும் - ஓர் ஒப்பீடு!!

May 08, விமர்சனங்களுக்குட்பட்ட ஒசாமா கொல்லப்பட்டார். அவருக்கு தமிழ்நாட்டில் தொழுகை. இந்த பிரார்த்தனை தொழுகை இராம கோபாலனுக்கு பயங்கரவாதமாக தெரிகிறது.

ஒசாமாவால் கொல்லப்பட்டவர் எத்தனை பேர்? இரட்டை கோபுர கட்டிடங்களின் தகர்ப்புக்கு பின்னால் நடந்த அரசியல் சூட்சுமங்கள் என்னென்ன?

இந்தியாவில் இராம கோபாலன்களால் நடத்தப்பட்ட சாதி வெரிச்செயல்களினாலும், மத கலவரங்களினாலும் கொன்று குவிக்கப்பட்ட இந்திய உயிர்கள் எத்தனை?

இறந்துவிட்ட ஒசாமாவிற்கு தூக்கு தண்டனை கொடுக்கலாமா இராம கோபாலனின் ஆத்மா சாந்தி அடைய?

ஒசாமாவை ஆய்வு செய்யாமலேயே ஒரு பேச்சுக்கு பல ஆயிரம் மக்களை கொன்றதாக வைத்துக்கொண்டாலும், இந்த இராம கோபால் வகையராக்களால் கொல்லப்பட்ட என்னருமை இந்திய உயிர்கள் எத்தனை கோடிகள்?

இந்த வாழும் பயங்கரவாதிக்கு என்ன தண்டனை? கொடுக்குமா இந்திய அரசியல் சாசனச்சட்டம்? பல கோடி மக்களை விஷ வாயுவாலும், தீயாலும் கொன்றொழித்த ஹிட்லரின் வெற்றியை நமது கும்ப கோணத்திலேயே மிட்டாய் கொடுத்து போற்றிக் கொண்டடினார்களே இந்த ஈனப்பிறவிகளான இராமகோபாலன்கள்.

சரித்திரத்தை மீள்பார்வை செய்து அதே பாசிச கொள்கையிலேயே இன்னும் ஊறிகொண்டிருக்கும், ஹிட்லர் பாணியிலேயே அப்பாவி மக்களை தீயிட்டு பொசுக்கி சாகடிக்கும் இந்த இராம கோபாலனுக்கும் நரேந்திர மோடிக்கும், இரத்த யாத்திரை நடத்திய அத்வானிக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம்?

தொடர் குண்டு வெடிப்பு நடத்தி அதை வழக்கம்போல் அப்பாவி முஸ்லிம்களின் தலையில் போட்டு, பூனை வெளியே வந்தவுடன் அதை மறைக்க அன்ன ஹசாரே எனும் காந்தியம் பேசும் மனிதரை வைத்து உண்ணாவிரத நாடகம். அன்று இருந்தவன் ஒரே ஏகலைவன் இன்று பல்லாயிரம் ஏகலைவன்கள்.

மூன்று முறை தடை செய்யப்பட்டு தேசத்தந்தையையே கொன்றிருந்தும் அதை இன்றும்கூட நியாயப்படுத்தி பேரினவாதத்தின் செல்வாக்கால் மீண்டும் உயிர் பெற்று அணு தினமும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த இராம கோபாலன்கள் ஹிட்லரைகூட பயங்கரவாதி என்று விமர்சிக்க தகுதியற்றவர்கள்.

mothers Day!! பெண்களை அவமதிக்கும் இந்தியா!!

May 8, புதுடில்லி: வளர்ந்த நாடுகளின் வரிசையில் தாய்மை கவனிப்பில் இந்தியா பின்னடைவை கொண்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் வேளையில் ஒவ்வொரு நாட்டிலும் தாய்மையின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் வளரும் நாடுகள், குறைந்த வளர்ச்சி நாடுகள் என்ற மூன்று பிரிவுகளில் ஆய்வு நடத்தப்படுகிறது.

மேலும் பெண்களின் பிறப்பு விகிதம், கல்வி வளர்ச்சிநிலை, அரசில் பெண்களின் நிலை போன்றவை கணக்கெடுக்கப்படுகிறது.

கடந்த 2010 ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின்படி 77 நாடுகளின் வரிசையில் இந்தியா 73-வது இடத்தை பிடித்துள்ளது.

மகப்பேறு காலத்தை பொறுத்த வரையில் இந்தியாவில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் 43 வளர்ச்சியடைந்தநாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துதுவாவால் இறக்கி விடப்பட்ட பூதம்!!

8, ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறி திரியும் அன்னா ஹசாரேவுக்கு எதிராக, ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளை மறைக்க ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் ஏற்படுத்தி விடப்பட்ட பூதம்தான் அன்னா ஹசாரே.

மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஹேமந்த் பட்டீல் என்ற சமூக சேவகர் அன்னா ஹசாரே மீது பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அன்னா ஹசாரேவும், அவர் நடத்தி வரும் அறக்கட்டளையும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்த மனு, கோடை விடுமுறைக்கு பின்பு விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகளால் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக இப்பதான் ஊழல் நடப்பது மாதிரி இந்த ஹிந்துத்துவா பத்திரிக்கைகள் இவரை தலையில் தூக்கி வைத்து ஆடும்போதே தெரியும் இதன் பின்னால் ஏதோ ஒரு மர்மம் இருக்கு. இது ஹிந்துதுவாவின் ஒரு தந்திரம் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்.

நரேந்திர மோடியின் ஆட்சி நல்லாட்சியா? ஒரு ஆய்வு!!

May 8, நரேந்திர மோடி இவர்தான் இந்தியாவின் மரண வியாபாரி' நரேந்திர மோடி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவன் பிணக்குவியல்களின் மீதேறி பதவியேற்றுக் கொண்டவன்.

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களைக் கொடூரமாகக் குதறிய சிங்களப் படைகளுக்கு தலைமையேற்ற ராசபக்சேக்கு சமமானவன்.

குஜராத்தில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களை சிதைத்துச் சீரழித்த இந்துத்துவப் படைகளுக்குத் தலைமை ஏற்றவன்.

இன்று இந்தியாவைத் தாண்டி எந்த மண்ணிலும் கால்வைக்க முடியாத அளவுக்கு, உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரன்.

அவன் வந்தாலே கேவலம் என உலகம் அவனை காறி உமிழ்தது, ஆர்.எஸ். எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கொள்கையால் உருவாக்கபட்டவன்.

குஜராத்தில் தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நல்ல நிர்வாகமும் கிடைக்கிறதாம். நரேந்திர மோடி இலவசங்களை அறிவித்து மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லையாம் இப்படி சிலர் கூறி திரிகிறார்கள்.

அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் ஏதேனில், எது நல்ல நிர்வாகம்? ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் தமிழ் மக்கள் அடைபட்டு வதைபடுவதைப் போல, குஜராத் மண்ணின் சொந்த மக்களான முஸ்லிம்களை இன்றைக்கும் அகதி முகாம்களுக்குள் அல்லல்பட வைத்திருக்கிறானே நரேந்திர மோடி. அவன் நிர்வாகமா நல்ல நிர்வாகம்?

தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் மட்டும்தான் ஒரு நல்லாட்சிக்கான அடையாளமா? அப்படியெனில் சொந்த மக்களை அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்த இந்துத்துவ மதவெறியர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த மோடியின் நிர்வாக ஆற்றலை என்னவென்று சொல்வது?

அதிகார மட்டம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை தேடிப்பிடித்து பதவியிலமர்த்தும் மோடியின் நிர்வாக ஒழுங்கை என்ன சொல்லி அழைப்பது?

மோடி முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் அசல் பங்கங்கள் எத்தனை பேருக்கு தெரியும். ’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க இந்துக்களுக்கு மட்டும்தான்.

மேலும் குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 800 மடங்கு அதிகம்.

கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 200 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குஜராத்தில் 60 சதவீத முஸ்லிம்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மாணவர்களிடையே, குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். மத்திய அரசு அறிவித்த கல்வி உதவித்தொகை மோடி அரசு முஸ்லிம்களுக்கு புறக்கணித்து வருகிறது.

குஜராத் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தபடுபவர்கள் பெரும்பாலோர் இந்துக்கள் என்றும், அங்குள்ள முஸ்லிம்கள் பீடி சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், பட்டம் தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல், கை ரிக்‌ஷா இழுத்தல் போன்ற குறைந்த வருமானங்களைத் தரக் கூடிய சுய தொழில்களைச் செய்யவேண்டி உள்ளது என்று ஒரு ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.

குஜராத் முஸ்லிம்களுக்கு உயர் கல்வியிலோ தொழில் துறையிலோ இடஒதுக்கீடு இல்லை. குஜராத்தில் முஸ்லிம்களின் வங்கிக் கணக்கில் பங்கு 12 சதவீதமாகும். வங்கிக் கணக்கில் 89 சதவீத பங்கும் இந்துக்களுடையதாகும். மொத்தமாக விநியோகம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் இந்துக்களுக்கே கிடைத்துள்ளது. இதுவும் அந்த ஆய்வு கூறும் உண்மையாகும்.

குஜராத்தில் மிக அதிகமான வழிப்பறிக் கொள்ளைக்கும்,வீடுகளில் திருட்டுக்கும் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே என்றும், பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் படிக்க அனுமதி கிடைப்பது கடினம் என்றும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் போக்குவரத்து நன்றாக இல்லை என்றும், பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் இல்லை என்றும் அடுக்கடுக்கான தகவல்களைக் கூறி அதிர்ச்சியூட்டுகிறது அவுட்லுக்கின் அறிக்கை.

இப்படி சொந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மோடியின் ஆட்சி நல்லாட்சியா?
மோடியின் கரங்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையை அகற்றவும், மோடியின் குறியீடாகப் பரவியிருக்கும் மதவெறியன் முத்திரையை அழிக்கவும், தொடர் முயற்சிகளை செய்து வருகின்றனர் இந்துத்துவ சக்திகள்.

மோடி இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் முன்மாதிரி முதல்வர் என்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்தி வருகின்றனர். அதற்காகவே இந்துத்துவச் சார்புள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் துணையுடன், குஜராத்தில் அதிகமதிகம் தொழில் முதலீடுகளைக் குவியச் செய்து, மோடியின் நிர்வாகத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். மோடியின் நிர்வாக அசைவுகள் ஒவ்வொன்றையும் 'செய்தி' யாக்குகின்றனர்.

நாடு முழுவதும் மோடியின் புகழைப்பரப்பும் கருத்தியலாளர்களைக் கொண்டு பொதுக்கருத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் அந்த வேலைக்கான மொத்தக் குத்தகையையும் 'துக்ளக் சோ' எடுத்துள்ளான். அவர் செல்லுமிடமெல்லாம் மோடியின் புகழ் பாடித் திரிகிறான்.

உலக தமிழர்களே வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம்!!

May 8, நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்பதை விடுத்து நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று ஒவ்வொருவரும் நெஞ்சைத்தொட்டுக் கேட்டுப்பார்க்க வேண்டும்.

நாடுகடந்த அரசும், உலகத் தமிழர் பேரவையும், மற்றய அமைப்புகளும் தம்மால் ஆனதைச் செய்யட்டும், அது சரி என்று உனக்குப்பட்டால் ஒத்துழைப்புக் கொடு.

ஒரு வேளை உன்னிடம் அதனைவிடப் பன்மடங்கு திறமை இருக்கலாம். எவன் ஒருவன் மக்கள் அதிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய திறமையையும் கொள்கையையும் கொண்டிருக் கிறானோ அவன்தான் தலைவன்.

ஆகவே நீயும் தலைவனாகலாம். உன்னுடைய திறமையை வெளியில் கொண்டுவா, உன் துணிச்சலை வெளியில் கொண்டுவா, உன்னுடைய அர்ப்பணிப்பை வெளியில் கொண்டுவா.

மகாத்மா காந்தி அகிம்சைவழியில் போராடிக்கொண்டு இருந்தபோது சுபாஸ் சந்திரபோஸ் வேறு வழியில் போராடிக்கொண்டிருந்த படியால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

போராட்டங்கள் வேறுபடலாம் போய்ச் சேரவேண்டிய இடம் ஒன்றாக இருக்கவேண்டும்.
நாம் ஆயுதம் ஏந்தத்தேவையில்லை. சர்வதேச நீதிநெறிகளை மீறத்தேவையில்லை,

அறவழிப்பாதையிலே இராஜதந்திரத்தைக் கையில் எடுத்து கத்தியின்றி இரத்தம் இன்றி வரும் யுத்தத்தை எதிர்கொள்வோம்.

சர்வதேச காலநிலை எமக்குச் சாதகமாக இருக்கிறது. அந்தமுகில் எப்போதும் கலையலாம், அல்லது பாதகமான திசைக்குத் திரும்பலாம் ஆகவே இப்போதே செயல்படு.

முப்பத்திமூன்று நாடுகள் எமக்கெதிராக எமது எதிரிக்கு ஆயுதம் கொடுத்ததாக அறிகிறோம். குறைந்தது மூன்று நாடுகள் எமக்கு ஐ.நா வில் நீதிகிடைக்க விடமாட்டார்கள் என்கிற செய்தியும் வருகிறது.

இவர்களை எவ்வாறு எமக்கு ஆதரவாக மாற்றலாம், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? இவர்கள் வழிக்கு வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? எல்லாவற்றிற்கும் மருந்திருக்கிறது.

அன்று அண்ணா சொன்னார் ”நாங்கள் நான்கு கோடி தமிழர்கள் இருக்கிறோம், ஈழத்தமிழனுக்கு ஒரு துன்பமென்றால் இரண்டு கோடி தமிழர்கள் பாக்கு நீரிணைக்குப் பாலமாவார்கள்.

மற்ற இரண்டுகோடி தமிழர்களும் தமிழீழத்தில் இருப்பார்கள் என்று” இன்று அண்ணாவும் இல்லை, அண்ணாவின் பாசறையில் வாழ்ந்த தம்பிகளும் எம்மோடில்லை.

ஆனால் அந்த தம்பிகளை எம்மால் உருவாக்க முடியும் என்பதை முத்துக்குமாரன் தொடங்கி கிருஷ்ணமூர்த்தி வரை உயிரைக்கூடக் கொடுக்கக்கூடிய பல தம்பிகள் எமக்கு நினைவூட்டியிருக்கிறார்கள்.

ஆனால் நீதான் சோர்வாய் இருக்கிறாய். பொறுத்தது்போதும் பொங்கி எழு தமிழா. எதிரியைக் கண்டு அச்சம் கொள்ளும் கோளைகள் எமக்குத் தேவையில்லை.

வாழ்வா சாவா பார்த்துவிடுவோம் ஒருகை என்று வெஞ்சினம் கூறும் வீரர்களே பொங்கி எழுங்கள்.

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை, இருப்பது ஓர் உயிர் , அது போவதும் ஒருமுறைதான்.

அது எம்மக்களுக்காக, மண்ணுக்காக போகுமானால் அதை விடபெரும்பாக்கியம் வேறொன்றும் இல்லை.

இன்று நீ தூங்கிவிட்டால் இனி என்றும் உன்னால் எழுந்திருக்கவே முடியாது. எம்முன்னால் பெருமளவு வேலை இருக்கிறது. சில அமைப்புகள் நிறையவே செய்கின்றன.

இருந்தாலும் அதன் வேகத்தை இன்னும் அதிகரிக்கவேண்டிய கட்டாயம் எமக்கிருக்கிறது. அவர் செய்வார் இவர் செய்வார் என்று சும்மா இருக்காமல் எம்மால் ஆனதைச் செய்யவேண்டிய காலம் இது.

இது எமக்குக் கிடைத்திருக்கின்ற மிகமுக்கியமான கடைசிச் சந்தர்ப்பம். எல்லோரோடும் புரிந்துணர்வை வளர்த்துக்கொண்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் எமது அறவழிப் போராட்டத்தை முன்நகர்த்துவோம்.

புத்தன் வந்த திசையிலே போர், புனித ஈழமண்ணிலே போர், சத்தியத்தின் நிழலிலே போர், தர்மத்தின் மடியிலே போர்.

போர் மறுபடியும் வீழ்வதில்லை வா - மரணமேனும் பெறுவதென்று வா, கொடியவர்கள் கொட்டமடக்க வா - பொன்னழந்த மண் அழக்கவா - வா - வா. இலங்கையில் நடந்தது இன ஒழிப்புத்தான் என்று கருதுபவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.

அன்புடன் : உலகத்தமிழர் சமாதானப் பேரவை.

இந்தியாவின் பூர்வீக குடிமக்களை அழிக்க கூலிப்படை!!

May 8, சட்டிஸ்கர் : காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.

தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்;

சட்டிஸ்கர் மாநில அரசு மாவோயிஸ்டுகளையும், பழங்குடியின மக்களையும் வேட்டையாடுவதற்காகவே சல்வாஜுடும் என்ற குண்டர்படையை நடத்தி வந்தது.

இந்தப் படையினரின் கொலைவெறியாட்டமும் மனித உரிமை மீறல்களும் அம்பலமானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இப்படையைக் கலைக்குமாறு சட்டிஸ்கர் அரசிற்கு உத்தரவிட்டது.

இதன்படி, தற்போது சல்வாஜுடும் கலைக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், கோயா கமாண்டோஸ் என்ற பெயரில் மற்றொரு அரசு கூலிப்படையை உருவாக்கி, அதில் சல்வாஜுடுமில் இருந்த கூலிப்படையினரை இணைத்துக் கொண்டிருக்கிறது.

பழங்குடியின மக்களைக் கொண்ட படையைப் போல இதனைக் காட்டுவதற்காகவே, கோயா என்ற பழங்குடியின சமூகத்தின் பெயரை இக்கூலிப்படைக்கு வைத்து ஊரை ஏய்த்து வருகிறது, சட்டிஸ்கர் மாநில அரசு.

இவ்வாறு அமைக்கப்பட்ட 200 கோயா கமாண்டோக்களையும், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா படைப் பிரிவின் 150 சிப்பாய்களையும் கொண்ட கூட்டுப் படையைக் கொண்டு, மொர்பள்ளி, திம்மாபுரம், தர்மேத்லா ஆகிய மூன்று ’மாவோயிஸ்டு ஆதரவு’ கிராமங்களின் மீது ஏவி தாக்கத் திட்டமிட்டது, சட்டிஸ்கர் மாநில அரசு.

May 6, 2011

இராமநாதபுரம் பாஸ்போர்ட் அலுவுலகமா!! சிறைக்கூடமா!!

May 8, ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வருவோரை கொத்தடிமைகள் போல உட்கார வைத்து கொடுமைபடுத்துவது தொடர்கிறது.

மண்டல அளவில் திருச்சியில் மட்டுமே பாஸ்போர்ட் தொடர்பான பரிவர்த்தனைகள் இருந்தன. இதனால் பலரும் அலைக்கழிப்புக்கு ஆளாகினர்.

இந்நிலையில் மதுரையை மையமாக வைத்து பாஸ்போர்ட்டு தொடர்பான பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்னும் இதை எளிதாக்க மாவட்ட தலைநகரங்களில் தனிப்பிரிவு ஏற்படுத்தினர். ராமநாத புரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான பிரிவு செயல்படுகிறது.

தமிழக அளவில் பெரும்பான்மையாக வெளிநாடுகளுக்கு செல்வோர் ராமநாதபுரத்தில் தான் உள்ளனர்.

பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், கோளாறுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தினமும் குவிந்து வருகின்றனர்.

இவ்வாறு வருபவர்களுக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் போதிய மரியாதை இருப்பதில்லை. குறுகிய இடத்தில் அனைவரையும் கைதிகள் போல உட்கார வைத்து விசாரணை நடத்துகின்றனர்.

இன்னும் சிலர் வெளியே தியேட்டரில் டிக்கெட் வாங்குவதை போல நிற்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.

அருகில் அலுவலக கழிப்பறையில் துர்நாற்றத்திற்கு மத்தியில் வேறு வழியின்றி சிரமப்படுகின்றனர்.

இன்றைய நிலையில் அதிக வருமானம் கிடைக்கும் பிரிவாக பாஸ்போர்ட் இருந்தும், வருவோரை உட்கார சொல்ல ஒரு நாற்காலி கூட இல்லை.

பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளில் சென்று தான் கொத்தடிமையாக பணியாற்றுகிறார்கள் என்றால், இங்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க வரும் போதே கொத்தடிமையாக மாறிவிடுகின்றனர்.

இடுப்பில் துண்டு கட்டாத குறையாக அனைவரும் தரையில் உட்கார்ந்திருக்க, அதிகாரிகள் மட்டும் ஒய்யாரமாக நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர்.

தொடரும் இந்த கொத்தடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் முன்வந்து மனிதனை மனிதனாய் பாவிக்கும் முறைக்கு உத்தரவிட வேண்டும்.

மே.வங்க சட்டசபை தேர்தல் : ஓட்டு பதிவு துவங்கியது!!

May 7, கோல்கட்டா : மேற்குவங்க மாநிலத்தில் 6 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7.30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. 38 தொகுதிகளுக்கு நடைபெறும் ஓட்டுப் பதிவில் 193 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

மேற்கு மித்னாபூர். புருலியா, பங்கூரா ஆகிய தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

ஈழ தமிழர்களின் எஞ்சி இருக்கும் ஒரே நம்பிக்கையாக!!

May 7, விசுவநாதன் உருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், எஞ்சி இருக்கும் நம்பிக்கையாக இவரைத்தான் இலங்கைத் தமிழர்கள் பார்க்கிறார்கள்.

இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி.

நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை.

உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், ஆனந்த விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

1) முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இந்த இரு ஆண்டுகளில் தமிழினம் கற்றுக்கொண்டு இருப்பது என்ன? கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?''

''முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய கடந்த இரு ஆண்டுகளில், அனைத்துலக அரசுகளின் நலன்களையும் தமிழர் நலன்களையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைக்க வேண்டிய அவசியத்தை நாம் மேலும் உணர்ந்து இருக்கிறோம்.

சுயநலன்களின் அடிப்படையில், தமது புவிசார் அரசியல் தளத்தில் இயங்கும் உலக அரசுகளிடம், நீதியையும் நியாயத்தையும் அறத்தின் அடிப்படையில் மட்டுமே எதிர்பார்க்க முடியாது என்பது யதார்த்தம்.

இந்த நிலையில், நாடு கடந்த சமூகமாக வாழும் தமிழர்களாகிய நாம், கீழிருந்து மேல் எழும் சக்தியாக மிளிர்ந்து, நீதியின்பால் பற்றுகொண்ட உலக மக்கள் சமூகத்தின் உதவியுடன் நமது விடுதலையை வென்றெடுக்கும் வாய்ப்பு களை மேலும் துல்லியமாகக் கண்டறிந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்!''

இறுதிப் போர் தொடர்பான ஐ.நா குழுவின் அறிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?''
இந்த அறிக்கை அனைத்துலகச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும். கொடூரமான முறையில் நடத்தப் பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக மட்ட விசாரணைதேவை என்ற குரலை மேலும் வலுவடையச் செய்யும்.

நீதியை மதிக்கக்கூடிய உலகச் சமூகத்தின் மத்தியில், களங்கப்பட்ட அரசாக சிறீலங்கா அரசு கூனிக் குறுகும் நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கைத் தீவில் இன்னும் ஒரு முறை இனப் படுகொலை நடக்காமல் இருப்ப தற்கான மாற்று வழி கருத்துப் பரி மாற்றத்தை சர்வதேச சமுதாயத்தில் ஏற்படுத்தும்.

தென் சூடான்,கொசாவோ, கிழக்கு திமோர் ஆகிய நாடுகள் தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு சுதந்திரத் தனி நாடே அவசியம் என்ற முடிவை சர்வதேச சமுதாயம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதே சமயம், இந்த அறிக்கை ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வியையும் வெளிப்படுத்துவதாகக் கருதுகிறோம். இது ஐ.நா சபையின் மறுசீரமைப்பு குறித்த விவாதங்களைத் தோற்றுவிக்கலாம். இத்தகைய மறுசீரமைப்பு, ஐ.நா சபையை நீதியின் ஆலயமாக மாற்ற வேண்டுமே தவிர, அதிகார அரசியலின் பலிபீடமாகத் தொடர வழி செய்யக் கூடாது!

போரின் இறுதிக் காலகட்ட இன அழிப்பின்போது கொல்லப்பட்ட 80,000-க்கும் மேற்பட்ட நமது மக்களுக்கு நீதி கிடைக்கும் நாள் விரைவில் வந்தடைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்!''

''தமிழ் மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?'' ஈழத் தமிழ் மக்களை ஆக்கிரமிப்புக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும், கொடூரமான வாழ்க்கைச் சூழலுக்கும் உள்ளாக்கியது யார் என்பதை நமது மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்துலக விசாரணைகள் இதனை உறுதிப்படுத்தும்!''

2) இறுதிப் போரின்போது தமிழகத்தில் வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிநடத்தலால் தான், புலிகள் தலைமையைக் காப்பாற்ற முடியாமல் போனதாகச் சொல்லப்படுவதுபற்றி..?''

''தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தேசியத் தலைமையின் மீதும் நெடுமாறன் ஐயா மற்றும் வைகோ அண்ணனுக்கு இருக்கும் விசுவாசம் குறித்து நாம் அப்பழுக்கற்ற நம்பிக்கை கொண்டு இருக்கிறோம்!''

3) இப்போதைய சூழலில் தமிழகத் தமிழர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''

''ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்னைக்கு, தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய முடியும். இதை வலியுறுத்தியும், தமிழீழத் தனிஅரசை அங்கீகரித்தும், தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்ய வேண்டும்.

சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசை வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றச் செய்ய வேண்டும். சுதந்திரத் தமிழீழ அரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில், இந்திய அரசிடம் முன்வைத்து அதை வென்றெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துஉள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான, பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தப்படுவதுடன், இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப் படுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி, இந்தியச் சிறைக் கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களை மனிதாபி மான அடிப்படையில் விடுவிக்க, மாநில, மத்திய அரசுகளைத் தூண்ட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பத் தேவையான உதவிகள், நம் மக்களை நேரடியாகச் சென்று அடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும், மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுக்க வேண்டும். இவையே எமது எதிர்பார்ப்புகள்!''

May 5, 2011

கனிமொழி சார்பாக வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜர்!!

May 6, டெல்லி: 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் கனிமொழி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

கனிமொழி சார்பாக பிரபல கிரிமினல் வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார்.

அவர் கனிமொழிக்கு முன் ஜாமீன் கேட்டு வாதம் செய்து வருகிறார். அவர் கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார்.

மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவிகிதம் தான் பங்கு இருக்கிறது.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை இவர் கவனிப்பதில்லை. நிர்வாகத்தின் முழு பொருப்பையும் சரத்குமாரே கவனித்து வருகிறார்.

கலைஞர் டிவியின் நிர்வாக பொருப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொருப்பில் இருந்து விலகிவிட்டார். அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.

ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாதான் பொருப்பு. எனவே, கனிமொழியை இந்த வழக்கில் கைது செய்யக்கூடாது என்று வாதிட்டு வருகிறார்.

முருங்கை மரமும் அதன் மருத்துவ குணமும்!!

May 6, வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது.

முருங்கையின் இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை.

முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

இரத்தம் சுத்தமடையும், மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

இலையின் சாறு விக்கல் போக்கும், அதிக அளவில் வாந்தி தூண்டும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும்.

கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது.

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும்.

வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.

உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

* நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

* முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

* முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

* முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

* முருங்கை பிஞ்சில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

* ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது.

* முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.

* வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.

* சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.

ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

இந்தியாவில் தமிழ்நாடு இல்லை!! சுப.வீரபாண்டியனின் ஆவேசம்!!

May 6, இந்தியா உதவக் கூட வேண்டாம். குறைந்த பட்சம் இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா?

என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசினார்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஐ.நா.மனித உரிமை குழு தலைவராக இருந்த ரவிப் பிள்ளை 2009ஆம் ஆண்டே சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை எதிர்த்தது முதலில் ஸ்விட்சர்லாந்து தான். காரணம் அந்த நாடு இராணுவத்தை வைத்துக்கொள்ளாத நாடு போரில் காயமடைவோரை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் காப்பாற்றுகின்ற நாடு.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொன்னது ஸ்விட்சர்லாந்து. இலங்கைக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்த நாடு இந்தியா.
இந்தியாதான் முதலில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவாக சீனா செயல்பட்டது ரஷ்யா செயல்பட்டது. கியூபாவும், வெனிசுலாவும் இலங்கையை ஆதரித்தது. இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று இந்தியா ஒதுங்கிக் கொண்டது.

மூன்றாயிரம் அமெரிக்கர்களை கொன்றதற்கே 40 நிமிடத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கே தெரியாமல் பின்லேடன் கதையை முடித்தது அமெரிக்கா. மூன்று லட்சத்து முப்பதாயிரம் தமிழர்கள் இலங்கையிலே கொல்லப்பட்டார்களே.

எந்த நாடாவது கேள்வி கேட்டதா? இந்தியாவைச் சார்ந்த தமிழன் கொல்லப்பட்டானே இந்தியா கேட்டிருக்க வேண்டாமா? இந்தியாவில் தமிழ்நாடு இல்லை என்று கருதிவிட்டது. முள்ளி வாய்க்கால் பகுதி போர் அற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதி.

அந்தப் பகுதியில் இருந்த அவ்வளவு தமிழர்களையும் இலங்கை இராணுவம் அழித்தது.
இதைப் பார்க்க ஐ.நா.குழு வருகிறோம் என்று சொன்னால் உங்களுக்குப் பாதுகாப்புத் தர முடியாது என்று இலங்கை சொல்லிவிட்டது.

அதேபோல போரில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வந்த செஞ்சிலுவை சங்கத்தையும் நாட்டைவிட்டே வெளியேறு என்று சொல்லிவிட்டது இலங்கை. எகிப்தில் லிபியாவில் மக்கள், ஆளும் அரசை எதிர்த்துப் போராடினால் அதற்கு அமெரிக்க அரசு ஆதரவு தருகிறது.

காரணம் என்ன? ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லை. ரத்தம் தான் இருக்கிறது என்ற காரணத்திற்காக அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வில்லையா? ஏன் உலக நாடுகள் எதிர்த்தன? விடுதலைப் புலிகளைப் பார்த்து அச்சப்பட்டனர்.

உலகிலேயே மக்களுக்காகப் போராடிய ஒரே ஒரு அமைப்பிற்கு மட்டும் முப்படைகள் இருந்தன. தரைப்படை, விமானப்படை, கப்பற்படை வைத்திருந்த அமைப்பு தம்பி பிரபாகரன் தலைமையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு.

தம்பி பிரபாகரன் முப்படைகளையும் வைத்திருந்தததோடு நான்காவது படையையும் வைத்திருந்தார். அது தான் தற்கொலைப் படை. பெண் புலிகளை பெண் தற்கொலைப் படையை வைத்திருந்த ஒரே அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு தான்.

சொந்த மண்ணில் கவுரமாக வாழ நினைத்தார்கள் நிம்மதியாக வாழ நினைத்தார்கள். ராஜபக்சே சொல்கிறார். இந்தியா எங்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறது என்று.

இப்படி ராஜபக்சே சொல்லியிருப்பது இந்தியாவுக்கு அவமானம் இல்லையா? குறைந்த பட்சம் இலங்கைக்கு துணை போகாமலாவது. இந்தியா இருக்க வேண்டாமா? ராஜபக்சேவை எப்பொழுது தண்டிக்கப் போகிறீர்கள் என்ற குரல் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

உள்ளூர் அரசியலைப் பற்றிப் பேச வேண்டாம். வெறும் ஈழமக்களுடைய பிரச்சினைகளை மட்டும் பேசுவோம் வாருங்கள். இதற்கு எத்தனைக் கட்சிகள் தயாராக உள்ளன? இவ்வாறு சுப.வீரபாண்டியன் பேசினார்.

கார் விற்பனையில் மாருதி சுசூகி முதலிடம்!!

May 6, இந்தியாவில் நடந்து முடிந்த 2010-11 நிதியாண்டின், கார் விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கார் தான் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 840 ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த விற்பனையில் இரண்டாவது இடத்தையும், மாருதி சுசூகி நிறுவனம் தான் பிடித்துள்ளது.

இந்த நிறுவனத்தை சேர்ந்த வேகன் ஆர் தான் 2வது இடத்தில் உள்ளது. இந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 19 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த 200910 நிதியாண்டில் இரண்டாவது இடத்தை பிடித்து இருந்த ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ10 கார், 201011 நிதியாண்டில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே நிறுவனத்தின் சான்ட்ரோ காரும் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 200910 நிதியாண்டில் விற்பனையில் மூன்றாவது இடத்தை பிடித்து இருந்த டாடா நிறுவனத்தின் இன்டிகா கார், 201011 நிதியாண்டில் ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் ஸ்பெசல்!! ஒவ்வொரு மேஜையிலும் வீடியோ கேமரா!!

May 6, தமிழகத்தில் வரும் 13ந் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 13ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன.

அந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் விழிப்புடன் பாதுகாத்து வருகிறார்கள். வருகிற 13ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க ஒவ்வொரு மேஜையிலும் வீடியோ கேமரா பொருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

இலங்கை துறைமுகத்தை புனரமைக்க இந்தியா உதவி!!

கொழும்பு, மே.5: தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் நிதி உதவியுடன் புனரமைக்க இலங்கை முடிவுசெய்துள்ளது.

இந்தியாவின் உதவியுடன் அந்த துறைமுகத்தை புனரமைக்கும் அதிபர் ராஜபட்சவின் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய அரசுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக உள்ளது. 2 கட்டமாக அந்த துறைமுகம் மேம்படுத்தப்பட உள்ளது.

துறைமுக விரிவாக்கம் இந்தியா, இலங்கை இடையே வர்த்தக மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிந்திக்கவும்: தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்து ஒரு மிகபெரிய இனப்படுகொலையை செய்துவிட்டு தமிழர்கள் வாழும் பகுதியில் வர்த்தகத்தை மேம்படுத்த துறைமுகம் கட்ட போகிறார்களாம்.

இந்தியா, இலங்கை இரண்டு போரும் போற்குற்றவாளிகள் இவர்கள் ராணுவ தேவைகளுக்கு துறைமுகம் அமைத்து மீதம் இருக்கும் தமிழர்களையும் அந்த நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு துரத்திவிட்டு சிங்கள நாடாக்கலாம் என்ற திட்டத்தின் ஒரு பகுதிதான் இது.

இந்தியாவில் மக்கள் பட்டினியில் சாவுகிரார்கள். குடிக்க தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல், சாலைவசதி, மருத்துவ இல்லாமல் இந்தியாவில் எத்தனையோ கிராமங்கள் இருகின்றன. இந்நிலையில் இந்திய மக்களின் வரிபணத்தை எடுத்து செலவு செய்வது ஒரு அராஜக செயல்.

பாரதிய ஜனதா கட்சி!! தோற்றமும் வரலாறும்!!

May 6, பா.ஜ.க., அடிப்படையில் பார்ப்பனியத்தை, மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சி வருணாசிரமத்தைப் பாதுகாக்கும் கட்சி. வெளிப்படையாக இந்துத்துவா பேசும் ஓர் அமைப்பு.

இந்திய மக்கள் கட்சி எனப் பொருள் தரும் பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party), இந்தியாவின் முக்கிய எதிர் கட்சியாகும்.

1980 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கட்சி இந்துத்துவ வலதுசாரி கொள்கை உடையது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் அணியாகும்.

இக்கட்சி தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1999 முதல் 2004 வரை இந்தியாவை ஆட்சி செய்தது.

இந்துத்துவம், தேசியவாதம், வலதுசாரி கொள்கை என்று சொல்லிகொண்டாலும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை, மற்றும் சிறுபான்மை சமூகங்களை அரசியல் மற்றும் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ஒடுக்குவதே அதன் முக்கிய நோக்கமாக செயல்படுவது.

உத்தரப்பிரேதச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும், காஷ்மீரில் முஸ்லீம்களை விரட்டியடிப்பதையும், குஜராத்தில் முஸ்லீம்களே இல்லாமல் செய்வதையும்
கொள்கையாக வைத்திருக்கும் கட்சி.

இந்தியாவை இந்து நாடக்க போகிறோம் மற்றவர்கள் அங்கு வாழலாம் ஆனால் இரண்டாம்தர குடிமக்களாக, மேலும் இது பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் அணியாக செயல்படுகிறது.

மதக்கலவரங்களை நடத்துவதிலும் இவர்கள் துணை இயக்கங்கள் ஆகிய விஸ்வஹிந்து பரிசத், இந்து முன்னணி, பஜ்ராங்க்தல் போன்ற அமைப்புகள் நடத்தும் கலவரங்களுக்கு உறுதுணையாக இருப்பது, அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுக்காக வழி செய்வது போன்றவைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி.

இதன் முக்கிய தலைவர்களான அத்வானி, வாஜ்பாய், நரேந்திர மோடி போன்றவர்கள் இந்துதுவா பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சால் உருவாக்க பட்டவர்கள். இந்தியாவின் அமைதிக்கும் மதசார்பின்மைக்கும் ஒரு சாவாலாக இருக்கும் கட்சி.

May 4, 2011

தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றிலும் முடிவு!!

May 5, ஒவ்வொரு சுற்று முடிவும் வெளியிட்ட பிறகே அடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்படும் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறுகிறது.

மே 13ஆம் தேதி மாலையே முழு முடிவுகள் வெளியாகும். ஒவ்வொரு சுற்று முடிவும் வெளியிட்ட பிறகே அடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்படும். பல கட்டங்களாக தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை ஒரு மாதம் தாமதமாகிறது என்றார்.

கனிமொழி கைது செய்யப்படுவாரா?

May 5, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த 2வது குற்றப்பத்திரிகையில் டி.பி. ரியாலிட்டி' குழுமத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது.

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டனர். ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவருமே சிறையில் உள்ளனர்.

இந்த வரிசையில், கனிமொழியும் அடுத்ததாக வருவதால், என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யப்போவது ஒரே நபர் தான். அவர், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மட்டுமே.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருக்குமே இதுவரை சைனி தரப்பில் இருந்து கருணை கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் சம்பந்தப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், கனிமொழி விஷயத்தில் சைனி என்ன செய்வார் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், கனிமொழி நேற்று டில்லி வந்து சேர்ந்தார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் வந்தனர். ராஜ்யசபா எம்.பி., சிவா மற்றும் நாகை லோக்சபா எம்.பி., விஜயனும் கனிமொழியுடன் வந்தனர்.

கனிமொழி, தன் குடும்பத்தினருடன் டில்லியில் உள்ள அவர் இல்லத்திற்கு சென்றார். அதன் பிறகு, மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி இல்லத்தில், தி.மு.க., முக்கிய எம்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றது.

57 வது படை அணி தளபதி மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா?

May 5, இலங்கை இராணுவத்தின் 57 வது படை அணியின் தளபதி ஜகத் டயஸ் தலைமையில் யுத்தக் குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய இயக்கம் ECCHR ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுக்களை பாரதூரமான ஒன்றாக எடுத்துக் கொள்ளுமாறும், அவரின் தனிப்பட்ட இந்த யுத்தக் குற்றங்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை நடத்தும்படி கோரி இந்த அமைப்பு ஜேர்மன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெர்மனியில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விசாவை ரத்துச் செய்து இவரை வேண்டத்தகாத நபராகப் பிரகடனம் செய்யுமாரும் இந்த அமைப்பு ஜெர்மன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுவிட்ஸர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் செயற்படும் தமிழ் அமைப்புக்கள் உட்பட பல அரச சார்பற்ற அமைப்புக்களின் நெருக்குதலின் பேரிலேயே இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் பிரதான பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமே ECCHR ஆகும்

இலங்கை இனப்படுகொலையை ஏன்? இந்தியா மூடி மறைகிறது!!

May 5, இந்தியப் பெருங்கடலில் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகவே இலங்கை அரசுக்கு ரஷ்யா, சீனா முதலான நாடுகள் ஆதரவளிக்கின்றன.

இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையை தாஜா செய்யும் நோக்கத்துடன் பாகிஸ்தான், ஈழப் போரின்போது இலங்கைக்கு ஏராளமான ஆயுதங்களை விற்று ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்றது.

இலங்கை அரசு சீனா பக்கம் சாய்ந்து விடாமல் தனது மேலாதிக்கப் பிடியில் இருத்தி வைப்பதற்காகவே இந்தியா, ஈழத்தில் மறைமுகமாகப் போரை வழிநடத்தி ராஜபக்சே கும்பலுக்கு உற்ற துணையாக நின்றது.

மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இத்தகைய நிலைமைகள்தான் இலங்கை அரசை இந்த நாடுகள் ஆதரிக்கக் காரணமாக உள்ளன.

இந்திய அரசு ஈழத்தமிழின அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்திருப்பது மட்டுமல்ல; காஷ்மீர், வடகிழக்கிந்தியாவின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் காட்டுவேட்டை என்ற பெயரில் நடத்திவரும் நரவேட்டை முதலானவற்றிலும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அப்பட்டமான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர அரசு என்பது நிரூபணமாகியுள்ளது.

உடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ!

May 5, உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைக்க தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். ஆனால் இறுதியில் மிஞ்சுவது என்பது எடைக்குறைப்பில் ஏமாற்றமே!. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமே போதுமா? போதாது. உணவை உண்பதில் கவனம் தேவை.

கலோரி கூடிய உணவுகளான இனிப்பு, காரம், மற்றும் எண்ணெய், பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் இருக்கக்கூடாது. பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும், கேரட், வெங்காயம், தக்காளி, கீரைவகைகள் இவைகளை பச்சையாக சாப்பிடவேண்டும்.

மேலும் தேவையற்ற உணவுகளான கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள், தவிடு நீக்கப்பட்ட தானிய உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

காலை உணவை ஒன்பது அல்லது பத்து மணி என்று தாமதமாக உண்ண வேண்டும். இரவு உணவை ஆறு அலலது ஏழு மணி என்று சீக்கிரம் முடித்துவிடவேண்டும். அப்போது உண்ணும் உணவின் அளவும் குறையும். உடல் எடையும் குறையும்.

காலை உணவில் பழ ஜூஸ், மற்றும் பப்பாளி, ஆப்பிள் என்று சாப்பிடலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் என தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.

உணவை எத்தனை நேரம் வாயில் வைத்து மெல்ல முடியுமோ அத்தனை நேரம் வாயில் வைத்து நன்கு மென்று அதன்பின் உணவை உள்ளே இறக்கவேண்டும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகும்.

மணி அடித்தால் சாப்பாடு என்பது போல உண்ணும் நேரம் வந்துவிட்டதே என சாப்பிட உட்கார்ந்து விட கூடாது. நல்ல பசி வரும் வரை உணவைத் தொடக்கூடாது. பசி வந்தபின் இரண்டு டம்ளர் நீர் அருந்தவேண்டும்.

அதன்பின் அரைமணி நேரம் சென்ற பின் உணவை உண்ண வேண்டும். அப்போதும் அரைவயிறு உண்டபின் எழுந்துவிட வேண்டும். பசியை முழுவதுமாக சாகடிக்கக் கூடாது. பசியை முழுவதுமாக கொன்றுவிட்டால் உடலும், மூளையும் சோர்வான நிலையில் மந்தமாக இருக்கும். எனவே லேசான பசி இருக்கும் போதே சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்.

சாம்பார் நன்றாக ருசிக்கிறதே என்ற ஆசையோடு அதிக இட்லியை உண்ணக்கூடாது. அப்படி சாம்பாரின் சுவைக்கு அடிமையாகிவிட்டால் அந்த சாம்பாரை மட்டும் கொஞ்சம் எடுத்து ரசித்து குடித்து ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம். அப்போது அதிகப்படியாக இரண்டு இட்லி உள்ளே செல்வது குறையும்.

உணவைக் குறைப்போம், உடல் நலம் காப்போம். எனவே நல்ல மிளகு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு போன்ற மருத்துவ குணம் உள்ள பொருட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சி மூலம் நாம் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். ஒரு மைல் நடந்தோமானால் சர்க்கரை, பருமன் குறையும். உடற்பயிற்சியில் இரண்டு வகைகள் உள்ளன, ஏரோபிக்ஸ், அன் ஏரோபிக்ஸ். இதில் ஏரோபிக்ஸ் என்பது சுறுசுறுப்பாக நடப்பது, ஓடுவது, நீச்சல் பயிற்சி போன்றவை இதில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

மற்றது அன் ஏரோபிக்ஸ் என்பது எடை தூக்குதல், ஜிம்னாடிக்ஸ் போன்றவை. இங்கே குறைந்த அளவிலேயே கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதனால் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளே நீரிழிவு உள்ளவர்களுக்கும், வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லது.

நீங்கள் கேட்கலாம், 40-50 வயதுகளில் ஓடமுடியுமா? நீச்சல் அடிக்க முடியுமா? என்று நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி என்பதே எங்கள் பதில். நடப்பதற்கு வயது வரம்பு தேவையில்லை. இருபாலரும் நடக்கலாம். தவிர உபகரணப் பொருட்களும் தேவையில்லை. செலவும் இல்லை. சாலையில் இறங்கி நடக்க வேண்டியதுதான் பாக்கி.

சராசரியாக ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்யலாம். அந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 4 - 5 கிலோ மீட்டர் வரை நடக்கலாம். பொறுமையாக வேகத்தை அதிகரித்தீரானால் 5 கிலோமீட்டர் என்பது ஒரு பொருட்டே அல்ல. எடை நோய்களுக்கு தடை.

ருசியான முட்டை குழம்பு!!

May 5, தேவையான பொருட்கள்: முட்டை 4, வெங்காயம் 1/2, மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, தக்காளி 1, உப்பு, கடுகு, சீரகம்.

எண்ணெயில் வறுத்து அரைக்க: மல்லி 2 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 3, பூண்டு 2 பல்,
இஞ்சி 1/2 இன்ச், மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, தேங்காய் துருவல் 4 தேக்கரண்டி, அரிசி 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிது.

செய்முறை: முட்டைகளை வேக வைத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும்.

அரிசி வெள்ளை ஆனதும் இறக்கி, ஆற வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

ஸ்டெர்லைட் அதிபயங்கர ஆள்கொல்லி ஆலை!!

May 5, சுற்றுச்சூழல் சட்டத்துக்கு எதிராக திறக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு நேஷனல் ட்ரஸ்ட் என்ற அமைப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்தது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 14 ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 29, 2010 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. 1995இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆணையத்தின் இசைவு சட்டத்துக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சட்டத்தின்படி நடத்தப்பட வேண்டிய இந்த ஆலையால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாறுபாடுகளை கண்டறியும் கணிப்பு நடத்தப் படவில்லை, மேலும் பொதுமக்களின் கருத்து கேட்கும் கூட்டமும் நடத்தப்படவில்லை.

இந்த ஆலைக்கு என நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விதிகளையும் இந்த ஆலை மீறியுள்ளது. இந்த விதி மீறல்கள் சுற்றுச்சூழல் அமைச்சகத்தாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தாலும் பலமுறை கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளன என்று அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டு இருந்தது.

இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வரும் முன் அக்டோபர் 1, 2010 அன்று ஸ்டெர்லைட் ஆலையை உச்ச நீதி மன்றத்தில் ஒரு தடை உத்தரவை வாங்கியது. இந்த வழக்கு இன்னும் எத்தனை வருடங்கள் நடக்குமோ. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது தூத்துக்குடி மக்கள் என்பதுதான் உண்மை.

ஸ்டெர்லைட் ஏற்கெனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. நிலத்தடி நீர் மாசடைந்து குடிப்பதற்கு பயனற்ற நிலையில் உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு ஒட்டுமொத்த தூத்துக்குடியின் குடிநீரும் (நிலத்தடி நீர்) மாசடைந்து தூத்துக்குடியில் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

சிங்கள குள்ள நரிகளால் மிரட்டப்படும் தமிழர்கள்!!

May 4, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

இராசபக்சேயின் போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் மே முதல் தேதியன்று நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிங்களச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும் சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளத் தவறினால் மீண்டும் சிறையில் அடைக்கப் படுவார்கள் என இராணுவத்தினால் மிரட்டப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக கிளிநொச்சிப் பகுதியிலிருந்து 20க்கு மேற்பட்ட பேருந்துகளில் தமிழர்கள் கொழும்புக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன. இராசக்சேயின் இந்த முயற்சிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சிறைகளிலிருந்து விடுவிக்கப் பட்டப் பிறகும் தமிழர்கள் இன்னமும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. இந்தக் கொடிய சூழ்நிலையிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு ஐ.நா. பேரவை விரைந்து செயல்பட வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

( பழ. நெடுமாறன் ) ஒருங்கிணைப்பாளர் - இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்.

‘ஸ்கூல் சலோ’ (பள்ளி செல்வோம்)!! கல்வி விழிபுணர்ச்சி!!

இந்தியாவில் அனைத்து சிறுவர், சிறுமிகளும் பள்ளிச்சென்று பயில வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கம் சார்பாக நாடு முழுவதும் ‘ஸ்கூல் சலோ’ (பள்ளி செல்வோம்) என்ற நிகழ்ச்சி மே மாதம் முதல் தேதி துவங்கியது.

மே, ஜூன் மாதங்களில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிக்கூட அட்மிஷன் நடைபெறும் வேளையாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளிலுள்ள குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான களப்பணிகளில் ஈடுபடுவர்.

’ஸ்கூல் சலோ’ பிரச்சார நிகழ்ச்சியில் சுவரொட்டி மூலம் பிரச்சாரம், வீடுகளிலுள்ள மாணவர்கள் குறித்த ஆய்வு, மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க உதவுதல், படிப்பை பாதியில் கைவிட்டவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்தல், பள்ளிக்கூடம் செல்லத் தேவையான பொருட்களை வழங்குதல்.

கல்வி உதவி திட்டம் குறித்து தெரிவித்தல், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை ஏற்பாடு செய்தல் ஆகியன அடங்கும். இந்த பிரச்சாரத் திட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும்.

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பிரிவு குறிப்பிட்ட கிராமங்களை கண்டறிந்து அதனை தொடர் கண்காணிப்பு மூலம் வளர்ச்சியடைய முயற்சி மேற்கொள்ளும். இத்திட்டத்திற்கு ’சர்வ சிக்‌ஷ க்ராம்’ என்று பெயர்.

படிப்பில் சிறந்து விளங்கும், ஏழ்மையான மாணவர்கள் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பது உறுதி செய்யப்படும். உள்ளூர்களிலுள்ள நன் கொடையாளர்கள் ஏழ்மையான நிலையிலுள்ள மாணவர்களில் ஒருவரை தத்தெடுத்து அவரது படிப்பை முடிக்கும் வரை படிப்பதற்கான ஏற்பாடுகள செய்ய வேண்டும்.

கடந்த சில வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திவரும் ‘ஸ்கூல் சலோ’ பிரச்சாரம் நல்ல பலனை தந்துள்ளது. சமுதாய ஆர்வலர்கள், நலன் நாடுவோர், உள்ளூர் தலைவர்கள் அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் காலத்துக்கு உகந்த இந்த பிரச்சாரத்திற்கு தங்களது மிகுந்த ஆதரவை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.

May 3, 2011

பாதுகாப்பு படையா? அல்லது பயங்கரவாத படையா?

May 4, இந்திய‌ பாதுகாப்பு ப‌டை தாண்டேவாடா மாவ‌ட்ட‌த்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள‌ மூன்று கிராம‌ங்க‌ளை முற்றிலுமாக‌ தீவைத்து கொளுத்தியுள்ள‌து. இதில் மொத்த‌ம் முன்னூறு குடிசைக‌ள் எறிந்து சாம்ப‌லாயின‌.

நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் வீடிழ‌ந்தார்க‌ள். மூன்று பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். மூன்று ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.

ப‌ழ‌ங்குடிக‌ளின் தானிய‌ சேமிப்புக‌ள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ள‌ன‌. ப‌ழ‌ங்குடிக‌ள் சேமித்து வைத்திருந்த‌ த‌ங்க‌ ந‌கைக‌ள், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ப் பட்டுள்ள‌‌ன‌.

கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ரின் உட‌ல் ஒரு ம‌ர‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்டும், ம‌ற்ற‌ ஒருவ‌ரின் உட‌ல் கோடாரியால் இர‌ண்டாக‌ பிள‌க்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்த‌து. அவ‌ர்க‌ளின் வாழ்வாதார‌மான‌ கோழி, ஆடு, உண‌வுப் பொருட்களும் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.

இந்த‌ ப‌டுகொலை நிக‌ழ்வுக்கு பின்ன‌ரான‌ மார்ச் இறுதி வார‌ங்க‌ளில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளில் நுழைவ‌த‌ற்கு ப‌ல தனிப்பட்ட விசாரணை குழுக்க‌ளுக்கு த‌டைவிதிக்க‌ப்ப‌ட்ட‌து.
உள்ளூர் ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ப‌ல‌ர் தாக்க‌ப்பட்டுள்ளார்கள், மேலும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என்று காவ‌ல்துறையால் மிர‌ட்ட‌ப்பட்டு உள்ளார்க‌ள்.

தாண்டேவாடா மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் கொடுத்த‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ஏற்றிச் சென்ற‌ வாகனத்தின் ஓட்டுநர், சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியினால் தாக்க‌ப்ப‌ட்டார். பாதுகாப்பு பிர‌ச்ச‌னை என்ற‌ பெய‌ரில் ச‌ட்டீசுக‌ர் மாநில‌ எதிர் க‌ட்சியைச் சேர்ந்த‌ 11 ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ ப‌குதிக்குள் நுழைவ‌த‌ற்கு அனும‌தி ம‌றுக்க‌ப்பட்டுள்ள‌‌து.

ப‌ல‌ வித‌மான‌ இழுத்த‌டிப்புக‌ளுக்கு பின்ன‌ர் வேலை செய்ய‌த்துவ‌ங்கிய‌ மாநில‌ நிர்வாக‌ம் தாண்டேவாடா மாவ‌ட்ட‌ காவல்துறை த‌லைமை அதிகாரி க‌ல்லுரியை இட‌மாற்ற‌ம் செய்து, மேலும் இந்த‌ ப‌டுகொலை தொட‌ர்பான‌ நீதி விசார‌ணை ந‌ட‌க்கும் என்று உத்திர‌வாத‌த்தையும் வ‌ழ‌ங்கியுள்ள‌து.

க‌ட‌ந்த‌ வார‌ம் காவ‌ல்துறையின் அர‌ண்க‌ளை தாண்டி செல்வ‌த‌ற்காக‌ மிக‌வும் தொலைவான‌ காட்டுப்ப‌குதியின் மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளை தெக‌ல்கா குழுவின‌ர் சென்ற‌டைந்த‌ன‌ர்.

ம‌த்திய‌ காவ‌ல் ப‌டை வீர‌ர்க‌ள், “கோப்ரா”, “கோய” அதிரடி படையைச் சேர்ந்த அதிகாரிக‌ள், காவ‌ல்துறை அதிகாரிக‌ள் எல்லாம் சேர்ந்து தான் இந்த‌ ப‌டுகொலையை நிகழ்த்தினார்கள் என்று நிக‌ழ்வை நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் எம்மிடம்(தெகல்கா) கூறினார்க‌ள்.

தீ வைத்து கொழுத்த‌ப்ப‌ட்ட‌ மோர்பளி, திமாபுர், தர்மத்லா கிராம‌ங்க‌ள் ம‌யான‌ பூமியைப் போல‌ எங்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌ன‌. அந்த‌ நில‌ப்ப‌குதி மொத்த‌‌மும் எரிந்த‌ குடிசைக‌ளையும், ஆள் அரவமற்ற எரிந்து போன தானிய‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌ழ‌ங்கால‌ தாழிக‌ளையும் கொண்ட இடிந்து போன வீடுகளையும் மட்டுமே கொண்டிருந்த‌து.

சிந்திக்கவும்: சொந்த குடிமக்களை கொன்று குவிக்கும் இந்த அரசு ஜனநாயக அரசல்ல சர்வாதிகார அரசு.

பொய் சொல்லும் மின்சாரவாரியம்!! நூறு வருடங்கள் வேண்டும்!!

May 4, தமிழ்நாட்டில் இன்னும் 2 ஆண்டுகளில் மின்பற்றாக்குறை பிரச்சினை இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சி.பி.சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

மின்வெட்டு பிரச்சினையை கண்டித்து கோவையில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் நாளை (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் மற்றும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சி.பி.சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கூட்டம் முடிந்ததும் சி.பி.சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர்,

காற்றாலை மின் உற்பத்தியை மின்வாரியம் வாங்குவதில்லை என்று கூறுவதில் உள்ள நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும். காற்றாலைகள் மூலம் தற்போது ஒரே நாளில் ஒரு சீரான மின் உற்பத்தி இல்லாததால் அது சாத்தியமில்லாத நிலை உள்ளது.

வருகிற 15-ந்தேதிக்கு பிறகு காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

ஆனால் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. அவ்வாறு வாங்கப்படும் மின்சாரம் 2 மாதத்துக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டு தான் வாங்கப்படுகிறது.

ஆகவே அந்த மின்சாரத்தை திடீரென நிறுத்திவிட முடியாது. ஆகவே தொலை நோக்கு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் இன்னும் 2 ஆண்டுகளில் மின்பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆரல்வாய்மொழி, கயத்தார், உடுமலை, தேனி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் காற்றாலை மின் உற்பத்தியை வாங்கி வினியோகம் செய்வதற்கு ரூ.4 ஆயிரம்கோடி செலவில் 400 கே.வி திறன் கொண்ட 6 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இது 2 அல்லது 3 ஆண்டுகளில் செயல்பட தொடங்கும்.

கனிமொழிக்கு சம்மன்!! அதிர்ச்சியில் கருணாநிதி!!

May 4, சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகை ஏப்ரல் 25-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 5 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றது.

2-வது குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்களில் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கனிமொழி எம்.பி., சரத்குமார் மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரிம்முரானி ஆகியோர் மே 6-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இதுபற்றி ஆலோசிக்க 27-ந் தேதி தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சரின் சி.ஐ.டி. காலனி வீட்டில் நேற்று தீவிர ஆலோசனை நடந்தது. காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனை மதியம் 1.20 மணி வரை நடந்தது.

இந்த ஆலோசனையில் முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட நிபுணர்கள் பி.எஸ்.ராமன், சண்முகசுந்தரம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். வீட்டில் இருந்த கனிமொழியும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.

6-ந் தேதி கோர்ட்டில் ஆஜராவது தொடர்பாக சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் பரவியதும் சி.ஐ.டி. காலனி வீடு அருகே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்தனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியில் வந்த கி.வீரமணியிடம் இதுபற்றி கேட்டபோது, இது வழக்கமான சந்திப்பு தான், வேறு ஒன்றுமில்லை’’என்றார். ஆனால் வேறு யாரும் பத்திரிகையாளர்களுடன் பேசவில்லை.

மரபணு மாற்றக் கத்தரிக்காயை தடை செய்ய வேண்டும்!!

May 4, மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அனுமதிக்கக் கூடாது என்று இந்திய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் உடல் நலனுக்கு பெரும் கேடு விளைவிப்பதுடன், விவசாய நிலங்களையும் தரிசு நிலமாக மாற்றிவிடும்.

இந்திய விவசாயிகளின் நலனுக்கு புறம்பாக, சர்வதேச நிறுவனங்களை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். மரபணு பயிர்கள் அனைத்தும் வைரஸ் கிருமிகளை கொண்டு உருவாக்கப்படுவதால், ஏற்கெனவே நமது நாட்டில் உள்ள பல வைரஸ் நோய்களுடன் இதுவும் சேர்ந்து நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

May 2, 2011

சீமான் உண்ணாவிரதம்!! புதுக்கோட்டையில் பதட்டம்!!

May 3, நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரனான சுபா. முத்துக்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலையாளிகளை இதுவரை காவல்துறை பிடிக்கவில்லை. கொலையாளிகளை பிடிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களை இதுவரை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் இன்று உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை பழைய பேருந்து நிலையம் அருகே இடம் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

ஆனால் நாம் தமிழர் கட்சியினர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட இடத்தில்தான் உண்ணாவிரதம் இருப்போம் என்று தடையை மீற தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

கட்சியின் தலைவர் சீமான் வந்ததும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவிருக்கின்றனர்.
இதனால் புதுக்கோட்டையில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற சதி!!

May 3, கொழும்பு கொம்பனி வீதியா பகுதியிலுள்ள சுமார் 10 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து அகற்றி தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் சிங்கள அரசு இரகசியமாக ஈடுபட்டுள்ளது.

என்கிற தகவல் அறிந்து கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் கொழும்பு முஸ்லிம்கள்.
மத்திய கொழும்பு பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள்.

இதை சிங்கள அரசு பிரச்சினையாகக் கருதுகிறது. முஸ்லிம்களை அப்புறப்படுத்தி சிங்கள மக்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக கொழும்பு நகரத்தை மாற்றியமைக்க இராஜ பக்ஷே அரசு முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

“முன்பு கொழும்பில் 92 சதவிகித பெரும்பான்மையாக இருந்த சிங்களச் சமூகத்தின் ஜனத்தொகை தற்போது 27 சதவீதமாக குறைந்து போயுள்ளதாக சில சிங்களப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

ஆனால் உண்மை அதுவல்ல. கொழும்பு நகரம் உருவானதே முஸ்லிம்களால்தான். முஸ்லிம்கள்தான் கொழும்பு நகரை வளர்த்தெடுத்தவர்கள். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன என்கிறார் கொழும்பு பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைத்துறையின் விரிவுரையாளரான எம்.எஸ். அனீஸ்.

தற்போது மாநகர சபையாக இருக்கும் கொழும்பு நகரத்தை மாநகர அதிகார சபையாக மாற்றப் போவதாக அறிவித்து அதன் அடிப்படையில் முஸ்லிம்களை இடமாற்றம் செய்ய ராஜபக்ஷே அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு, “கொழும்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்வதென்றால் அதற்கு அதிகார சபை என்று ஒன்று தேவையில்லை. மாநகர சபையை வைத்துக் கொண்டே அந்த அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த முடியும்'' என்று கருத்து தெரிவித்தார் அனீஸ்.

தற்போது சிறிது சிறிதாக கொழும்பில் முஸ்லிம் குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. கொம்பனி வீதியா பிரதேசத்தில் 400 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த இரகசியமான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது'' என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்.

கடந்த 2010 ஜூன் மாதத்தில் கொம்பனி வீதியா பிரதேசத்திலிருந்த முஸ்லிம் குடியிருப்புகளை இடித்துத் தள்ளியது சிங்கள அரசு. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் நகர அபிவிருத்தி அத்தாரிட்டி போலிஸ் மற்றும் ராணுவத்தினரின் உதவியுடன் கொம்பனி வீதியா பகுதியில் மியூஸ் தெருவிலுள்ள வீடுகளை இடித்துத் தள்ளியது.

பல குடும்பங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அவர்களின் உடமைகளோடு வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும், அங்கிருந்த வீடுகள் சட்டப்பூர்வமானது என்பதற்கான ஆவணங்களை குடியிருப்புவாசிகள் வைத்திருப்பதாகவும் செய்தி கூறுகிறது.

2010 மே 8ம் தேதி அதிகாலையில் போலீஸ், இராணுவம், கலவரத் தடுப்பு போலீசார் ஆகிய படைகளின் துணையோடு, மியுஸ் தெருவிலிருந்த 20 முஸ்லிம் வீடுகள் புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

வேறு மாற்று இடம் குறித்த எவ்வித உத்திரவாதமும் தராமல் அரசாங்கம் வீடுகளை இடித்துத் தள்ளி, 20 குடும்பங்களின் எதிர் காலத்தை கேள்விக் குறியாக்கியது என்று நீண்ட பட்டியலைத் தருகிறது M.I.C. எனப்படும் முஸ்லிம் தகவல் மையம்.

“மியுஸ் தெருவிலிருந்து குடியிருப்புவாசிகள் கட்டாய வெளியேற்றம்'' என்ற தலைப்பில் கொம்பெனி வீதியா பகுதியில் நடந்த கட்டாய வெளியேற்றம் குறித்த தகவல்களைத் திரட்டி கையேடாக அது வெளியிட்டிருக்கிறது.

தற்போது மாநகர அதிகார சபை என்ற பெயரில் முஸ்லிம்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற நடைபெறும் நிகழ்வுகளை நீண்ட கால திட்டத்தின் வெளிப்பாடுகளாகவே பார்க்க முடிகிறது. கொழும்பு மாநகர சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டால் மேயராக, துணை மேயராக முஸ்லிம்களே தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கிறது.

அதிகாரப் பதவிகளுக்கு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை இருப்பதாலும், மாநகர அதிகார சபை ஒன்றை உருவாக்கி முஸ்லிம்களின் பலத்தைக் குறைக்க அரசு முயற்சிப்பதாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எது எப்படி இருப்பினும், விடுதலைப் புலிகளுடனான யுத்த முடிவுக்குப்பின் அல்லது புலிகளின் வீழ்ச்சிக்குப்பின் முஸ்லிம்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் பார்வை அழுத்தமாக பதிந்திருக்கிறது என்பதைத்தான் இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

ஆனாலும், இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மௌனம் சாதித்து வருகின்றன. அது இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு கேடாகவே முடியும் என்பதை இந்தத் தலைமைகள் உணர்ந்து கொண்டு, சிங்கள அரசின் சதித் திட்டங்களை முறியடிக்க அரசியலுக்கு அப்பால் நின்று கைகோர்க்க வேண்டும் என்பதே இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்காவில் இருந்து கனடாவில் தஞ்சம் போகும் வெளிநாட்டினர்!!

அமெரிக்காவில் இருந்து கனடாவில் முறைகேடாக அயல்நாட்டு நபர்கள் ஊடுருவுகிறார்கள் என விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசியல்வாதிகள் நீண்டகாலமாக கொண்டுள்ள கருத்தின்படி கனடாவில் இருந்து தான் முறைகேடான குடியேற்றம் நடக்கிறது என கூறப்பட்டது.

ஆனால் முறைகேடான குடியேற்றம் அமெரிக்காவில் இருந்து கனடாவில் நிகழ்கிறது என வான்கூவரில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது.

வான்கூவரில் உள்ள யு.எஸ் பிலிப் சிகோலோ வெள்ளை மாளிகைக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்தவர்கள் கனடாவில் ஊடுருவி தங்குவதற்கு சட்ட உரிமைக் கோருகிறார்கள் என தெரிவித்துள்ளது.

இத்தகவலானது 2010 ம் ஆண்டு பெப்பிரவரி 23ம் திகதி வான்கூவர் தூதரக அதிகாரி அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு எழுதிய கடிதத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். இக்கடிதத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டி இழுத்துச்செல்லப்பட்ட ராஜபக்சே!

May 3, நார்வே தலைநகர் ஓசிலோவில், நடந்த மே தின ஊர்வலத்தில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் ராஜபக்சேவின் உருவச்சிலையை கூண்டில் ஏற்றி அதனைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல நார்வே நாட்டவர்கள் இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, இலங்கை நிலவரத்தைக் கேட்டும் அறிந்துள்ளனர்.

பலர் இதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர். பெருந்திரளாக நார்வே மக்கள் கலந்துகொண்டு மே தின ஊர்வலத்தில் ராஜபக்சேவின் இவ்வுருவ பொம்மை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ராஜபக்சேவை, கூண்டில் ஏற்றவேண்டும் என்பதில் நார்வேத் தமிழர்கள் உறுதியோடு இருக்கிறார்கள் என்பதை இந்த ஊர்வலம் காட்டுகிறது.

May 1, 2011

ஒசாமா பின்லேடன் கொல்லபட்டார்!! ஒபாமா அறிவிப்பு!!

May 2, அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளார். இதை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 150 கி.மீ., தூரத்தில் இருக்கும் அட்டோபாபாத்தில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் ஒசாமாவின் மறைவை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.,யும் உறுதி செய்துள்ளது.

தமிழக தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை: ப. சிதம்பரம்!!

May 2, மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

வெற்றியோ, தோல்வியோ, தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறினார்.

சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன.

ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.
இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும். தமிழகத்தில் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

விமானம் மூலம் துப்பாக்கிகள் போட்டது யார்?

கடந்த 1995-ம் ஆண்டு, மேற்கு வங்காள மாநிலம் புரூலி என்ற இடத்தில், விமானம் மூலம் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தரையில் போடப்பட்டன.

இது ஆனந்த மார்க்கம் என்ற ஹிந்துத்துவா அமைப்புக்கு போடப்பட்டது. இதன் பின்னணியில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் இந்திய உளவு அமைப்பான "ரா" வும் இருந்து செயல்பட்டுள்ளனர்.

இந்த ஆயுதங்கள் ஏன்? ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு அனுப்பப்பட்டது. பரபரப்பான இந்த சம்பவம் பற்றி, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.,

துப்பாக்கிகளை மேற்கு வங்காளத்தில் போட ஏற்பாடு செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்''அதன் முழு விபரமும் அறிவிக்கப்பட வேண்டும். என்று இடதுசாரி கட்சிகள் கோரி வருகின்றன.

இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் ஏ.பி. பரதன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,

``இந்த சம்பவம் பற்றிய முழு விவரங்களை மத்திய அரசு வெளியே கொண்டு வர வேண்டும். எனவே இதுபற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

இந்தியா இலங்கையை ஆதரிக்க கூடாது!! திருமாவளவன்!!

May 2, இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோரியும், இலங்கையில் தமிழர்களை கொன்றொழித்தது இனப்படுகொலை என்றும் ஐ.நா. அறிவிக்க வேண்டும்.

சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கைது செய்ய வலியுறுத்தியும், ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க இந்தியா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது ராஜபக்சேவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது.

இலங்கையில் படுகொலை நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தாமதமாக அறிக்கை வெளியிட்டாலும், உண்மையான அறிக்கையை வெளியிட்ட ஐ.நா.சபை முடிவை வரவேற்கிறோம். வெறும் போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்காமல், இனபடுகொலை என்று அறிவிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளைம் அவசரமாக கூட்டி, ஐ.நா. சபை அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். சினா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையை இந்தியாவும் ஆதரிக்கக் கூடாது.

இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் நினைவாக கூட்டம் நடத்தப்படும் என்றும், ஒரு லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றார்.

இந்தியாவில் விபச்சாரத் தொழில்!! ஒரு ஆய்வு!!

ஏறக்குறைய எழுபது சதவிகித விபச்சாரத் தொழில் செய்யும் பெண்கள் யாரும் வற்புறுத்தாமலும், யார் மூலமும் விற்கப்படாமலும் தானாகவே முன்வந்து விபசாரத் தொழிலில் சேர்ந்துள்ளனர்.

வறுமையில் வாழும் ஏழைப் பெண்களுக்கு விபசாரத் தொழில் எளிதில் அமையக் கூடிய வாழ்வாதார தொழிலாக உள்ளது என்ற அதிர்சிதரக் கூடிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

சாதரணமான வேலைகலான வீட்டு வேலை மற்றும் இன்ன பிற தொழில்களில் ஈடுபட்ட மூத்த வயதுடையவர்கள் கூட இந்த விபசாரத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பதும் இந்த அறிக்கையின் தகவலாகும்.

இவை “புனே யுனிவர்சிட்டி”யைச் சேர்ந்த “ரோகினி சஹ்னி” மற்றும் “V கல்யாண ஷங்கர்” ஆகியோர் விபச்சார ஊழியர்கள் பற்றி நடத்திய முதற்கட்ட கணக்கெடுப்பில் அறிய வந்த சில தகவல்களாகும். இந்த முதற்கட்ட ஆய்வறிக்கை பெண்கள் கூட்டமைப்பான “அக்ஷரா தகவல் மைய”த்தில் வெளியிடப்பட்டது.

பெண்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான குழுவின் மூலம் இந்த ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது. சங்கிலித் தொடராக 14 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் 3000 க்கும் அதிகமான விபச்சார தொழில் செய்யும் பெண்களயும், அத்தொழிலோடு தொடர்புடைய ஆண்களையும் பயன்படுத்தி கண்டறியப்பட்ட விஷயங்கள் முடிவுகளாக வெளியிடப்பட்டுள்ளது. “எத்தனைப் பெண்கள் விபசாரத் தொழிலில் உள்ளனர் என கண்டறிவது.

மேலும் HIV மற்றும் சுகாதார நிலை பற்றி அறிந்து கொள்வதும் தான் இந்த ஆய்வின் பிரதான எண்ணம் என்ற போர்வையில் இந்த முயற்சியை மேற்கொண்டோம். விபச்சார தொழில் செய்பவர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் நேர்காணல்களுக்கு பிறகே அவர்களது வாழ்க்கை நிலை பற்றிய நிலவரங்கள் முடிவு செய்யப்பட்டன.

இந்த ஆய்வறிக்கையின் படி விபச்சார தொழில் ஈடுபட்டுள்ளவர்களில் 65 சதவிகித பெண்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் 60 சதவிகித பெண்கள் கிராம புறங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் வேறு வேலைகளில் பணியாற்றிய பின்னரே இந்த விபசாரத் தொழிலுக்கு வந்துள்ளனர்.

இதில் மிக சிலர் மட்டுமே நேரிடையாக விபசாரத் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளனர். மற்ற துறைகளின் ஊழியர்களை பார்க்கும் பொது, இது தான் மிகவும் மோசமான ஒரு வேலை என சாஹினி தெரிவிக்கிறார்.

இந்த ஆய்வறிக்கை மூலம் விபச்சார தொழில் செய்பவர்கள் சமூகத்தின் மிக தாழ்ந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை அவர்களுக்கு உணரச் செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் சாஹினி கூறினார்

இந்த ஆய்வின் அடுத்தக் கட்டமாக விபசாரம் செய்யும் ஊழியர்களை துன்புறுத்தி செய்யப்படும் கொடுமைகள், மனோ ரதியாக இழைக்கப்படும் கொடுமைகள், வெவ்வேறு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படும். அதற்கு அவர்களது உதவிகள் இன்றியமையாதது என்று சாகினி கூறினார் .

கல்வித்துறையை காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!!

May 2, ஏகல் வித்யாலயா என்ற அமைப்பு ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 34343 பள்ளிக்கூடங்களை இந்தியா முழுவதும் நடத்திவருகின்றது.

இது இந்து பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி. தொடர்புடையது. ஏகல் வித்யாலயா என்பது இந்துச் சிறுவர் சிறுமியருக்கு இந்துமத அடிப்படைவாதத்தை கற்பிப்பதற்காக இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஒரேயோர் ஆசிரியரைக் கொண்டு, குருகுல பாணியில் ஆர்எஸ்எஸ் நடத்தும் தொடக்கநிலை பள்ளிக்கூடங்களாகும்.

1988 ஆம் ஆண்டு ஜார்க்ண்டில் தொடங்கப்பட்ட ஏகல் வித்யாலயா இயக்கம் இன்று 22 மாநிலங்களில் 34000 கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஏகல் பள்ளிகளில் 10,00,000 மாணவர்கள் பயிலுகின்றனர்.

ஒரு இலட்சம் கிராமங்களை 2015க்குல் சென்றடைய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். சங் பரிவார அமைப்புக்கு 2006 ஆம் ஆண்டு 2 மில்லியன் டாலர் கொடுத்துள்ளது ஏகல் வித்யாலயா.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஆலோசனைக் குழுவில் ஏகல் வித்யாலயா என்ற சங் பரிவார அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய சோனால் ஷா எனும் இந்திய அமெரிக்கப் பெண்மணி இடம் பெற்றிருக்கிறார் என சர்ச்சை கிளம்பியது.

வெளிநாட்டு நிதி: யு.எஸில் இவ்வமைப்பு வேகமான முறையில் நிதி சேகரிக்கிறது. ஜூலை 2009 ஆம் ஆண்டு சிகாகோவில் 1,60,000 டாலர் நிதி சேகரித்தது. செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு சான் டிக்கொவில் கலாச்சார நிகழ்ச்சி மூலம் 14000 டாலர் கொடுத்துள்ளது.

மே 2010ல், 600 பேர் கலந்துக் கொண்ட சிகாகோ நிகழ்ச்சியில் 82, 525 டாலர் சேகரித்தது. அதே மாதத்தில் மத்திய அட்லாண்டிக் பகுதியில், 500,000 டாலர் ஐந்து கருணை இல்லம் மூலம் நிதி சேகரித்தது.

85 பள்ளிகளை 2004 மற்றும் மார்ச் 2006 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவில் உள்ள அமைப்பு தத்து எடுத்துள்ளது தேசிய இந்து மாணவர் அமைப்பு (UK) வெளிநாட்டு நிதி திரட்டலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

மே 1ந்தேதி பற்றி உலக அளவில் ஒரு கண்ணோட்டம்!!!

மே 1நாள் - உலகத் தொழிலாளர் நாள். இத்தாலி - தேசிய நாள் (Giorno dei Lavoratori, செக் குடியரசு - தேசிய காதல் நாள்.

* 1328 - ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

* 1707 - இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.

* 1778 - அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.

* 1834 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.

* 1840 - உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.

* 1851 - லண்டனில் பெரும் பொருட்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.

* 1886 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

* 1898 - அமெரிக்க கடற்படையினர் மணிலா விரிகுடாவில் ஸ்பானிய கடற்படைக் கப்பலை தாக்கியழித்தனர்.

* 1915 - ஆர்.எம்.எஸ். லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 அவதும் கடசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.

* 1925 - சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும். 1930 - புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

* 1931 - நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

* 1940 - கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்க தீவான கிறீட் மீது மிகப் பெரும் வான் தாக்குதலை நிகழ்த்தினர்.

* 1945 - சோவியத் இராணுவத்தினர் பேர்லினில் நாடாளுமன்றக்க் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.

* 1946 - மேற்கு அவுஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

* 1948 - கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டாது. கிம் உல்-சுங் அதன் முதலாவது அதிபரானார்.

* 1950 - குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.

* 1956 - இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

* 1960 - மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது.

* 1961 - கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

* 1978 - ஜப்பானியரான நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதரானார்.

* 1987 - இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு ஈடித் ஸ்டெயின் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.

* 1989 - இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.

* 2004 - சைப்பிரஸ், செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலவாக்கியா,, சிலவேனியா ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

* 2006 - புவேர்ட்டோ ரிக்கோ அரசு நாட்டின் பணவீக்கம் காரணமாக பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் மூடியது.`

தகவல் தொழில் நுட்பமும் பெருகி வரும் வேலை வாய்ப்பும்!

May 01, நடப்பு நிதி ஆண்டில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் புதிதாக 2.50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என நாஸ்காம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்கள் முழு வீச்சில் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இத்துறையில் முன்னணியில் உள்ள நான்கு நிறுவனங்கள் மட்டும், நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்த உள்ளன என நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.

சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 60,000 புதியவர்களை பணியில் அமர்த்தப் போவதாக கூறியுள்ளது. மகிந்திரா சத்யம் நிறுவனம் 18,000 பேரை சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஐ.டி. சேவை துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் புதுடெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பூனா ஆகிய நகரங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.