Apr 30, 2011

புரூலியா ஆயுத மழையும்!! நரசிம்மராவும்!! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!!

புதுடெல்லி: 1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன.

நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.

இந்திய எல்லையை விட்டு வெளியேறிய இந்த விமானம் சில நாள்கள் கழித்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது, இந்திய விமானப்படையினர் அந்த விமானத்தை மடக்கி மும்பையில் தரையிறங்க வைத்தனர்.

அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் பிளீச், டென்மார்க்கைச் சேர்ந்த கிம் டேவி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“ஆனந்த மார்க்கம்’ என்கிற அமைப்பு இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டதாகக் கூறப்பட்டது. எனினும், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

குற்றம்சாட்டவர்களில் சிலர் சுதந்திரமாக இருக்கின்றனர். சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கிம் டேவி தொலைக்காட்சி ஒன்றுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், “இந்தப் பணியைச் செய்ததில் எம்.பி.ஒருவரே தங்களுக்கு உதவியாக இருந்ததாகவும், வேலை முடிந்ததும், அவரே தங்களை நேபாள எல்லையில் கொண்டுபோய் விட்டதாகவும்” கூறினார்.

மத்திய அரசு, இந்தியாவின் ரா உளவு அமைப்பு, பிரிட்டனின் எம்ஐ-5 உளவு அமைப்பு ஆகியவற்றுக்குத் தெரிந்தே இது நடந்ததாகவும், மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி அரசுக்கு எதிராகப் போராடுவதற்காக மக்களுக்கு ஆயுதம் வழங்கவே விமானத்தில் இருந்து ஆயுதங்கள் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சிந்திக்கவும்: நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமராக இருக்கும் போதுதான் இந்த கொடூரம் நிகழ்ந்தது. சொந்த நாட்டில் ஜனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிபாசுவின் அரசுக்கு எதிராக செய்யப்பட்ட சதி இது.

ஹிந்துத்துவா அமைப்பான "ஆனந்த மார்க்கம்" என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வெளிநாட்டு ஆயுத வியாபாரிகள் மூலம் விமானம் வழியாக போட வைத்தார்கள். எவ்வளவு? கேடு கெட்டவர்கள் இவர்கள். நாட்டை பாதுகாக்க வேண்டிய "ரா" உளவு அமைப்பும் இதற்க்கு உடந்தை. இது ஒரு கேடு கெட்ட உளவு அமைப்பு என்பதை மீண்டும் நிருபித்துள்ளது.

உலகிலேயே இது மாதிரி ஒரு கேடு கேட்ட அரசியல் மற்றும் உளவுத்துறையை கேள்வி பட்டிருபீர்களா? இந்திய மக்களை, தமிழர்களை இவர்கள் பாதுகாப்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள். இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை ஹிந்துத்துவா இயக்கங்கள் நடத்தி இந்தியாவின் ஆட்சி கட்டிலை பிடிக்கலாம் என்று பார்த்தார்கள்.

1992 பாபர் மசூதி இடிக்க மறைமுகமான ஆதரவு கொடுத்த நரசிம்மராவ் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மறைமுக உறுப்பினர் என்பதை ஹிந்த்துதுவா தலைவர்களே சொல்ல கேட்டோம். நரசிம்மராவ் பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர்கோவில் கட்ட வேண்டும் என்ற எங்கள் எண்ணத்திற்கு ஆதரவு அளித்தார் என்று ஹிந்துத்துவா இயக்கங்கள் அவரை புகழ்ந்தன.

இந்தியாவின் கேடு கெட்ட பிரதமர்களில் இந்த நரசிம்மராவும் ஒருவர். இவர் பாபர் மசூதி இடிக்கப்படும் 1992 டிசம்பர் 6ஆம் தேதி தன்னை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி ஒளிந்து கொண்டார். ஒரு நாட்டின் பிரதமர் ஒரு நாள் முழுவதும் ஒளிந்து கொண்டு கண்ணாமுச்சி காட்டிய விஷயம் உலக வரலாற்றில் கேள்விபடாத ஒன்று.

இதே ஹிந்துத்துவா நரசிம்மராவ், மேற்கு வங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர் முதல்வராக ஜோதிபாசு இருப்பது பிடிக்காமல் வெளிநாட்டு ஆயுத வியாபாரிகள் மூலம் ஹிந்துத்துவா அமைப்பான ஆனந்த மார்க்கம் என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கினார்.

இதன் மூலம் ஜோதிபாசு அரசுக்கு எதிராக ஹிந்து அடிப்படைவாதிகளை போராட வைத்து ஒரு உள்நாட்டு யூத்தத்தை நடத்தி ஆட்சியை கவிழ்த்து தாங்கள் ஆட்சியை பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டி இருக்கும் கொடுமையை என்ன வென்று சொல்வது.

தங்கள் சித்தாந்தத்திற்கு எதிரானவர்களை கலவரங்கள் மூலம் முற்றிலும் அழிப்பதே ஹிந்துத்வாவின் நோக்கம். அதன் ஒரு பகுதிதான் இந்த புருலியா ஆயுதமழை.
இந்த ஹிந்துத்துவா இயக்கங்கள் இந்தியாவில் இன்னும் என்ன? என்ன? செய்யபோகிறதோ.

மோடி நடத்திய போலி என்கவுண்டர்!! சி.பி.ஐ விசாரணை!!

அஹ்மதாபாத்: துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ ஏற்றுக்கொண்டது.

சி.பி.ஐயின் மும்பை அலுவலகம் இது தொடர்பான புதிய வழக்கை பதிவுச்செய்துள்ளது. பிரஜாபதி போலி என்கவுண்டர் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாக சி.பி.ஐ, ஐ.ஜி கந்தசாமி கூறினார்.

சொஹ்ரபுத்தீன் ஷேக் அவரது மனைவி கவ்ஸர்பீ ஆகியோரின் கொலை வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருந்த பிரஜாபதியின் போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இம்மாதம் எட்டாம் தேதி உத்தரவிட்டது.

பிரஜாபதியைன் தயார் நர்மதாபாய் தொடுத்த வழக்கை தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இரட்டைப் படுகொலைக்கு சாட்சியாக மாறியதால் தனது மகனை குஜராத் போலீஸ் சுட்டுக்கொன்றதாக நர்மதாபாய் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சொஹ்ரபுத்தீன் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளான டி.ஜி.வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என் ஆகிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் பிரஜாபதி கொலை வழக்கிலும் குற்றவாளிகளாவர். இவ்வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு குஜராத் அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

சரணடைந்த தலைவர்கள் சித்தரவதை செய்து கொலை!! ஐநா!!

கொழும்பு, ஏப். 30,விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் கொடிய சித்திரவதைக்குப் பிறகு சீருடை அணிவித்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கான புகைப்பட ஆதாரம் ஐநா அறிக்கையின் போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளது. சிங்கள ராணுவத்திடம் ரமேஷ் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், ராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இருந்தன.

எனினும் ரமேஷ் எங்கே என அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் குறித்து எதுவும் தெரியாது என்று அரசுத் தரப்பில் பொய் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் சேர்ந்தே ரமேஷ் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடேசனையும், புலித்தேவனையும் எரித்துக் கொன்ற சிங்கள ராணுவம், ரமேஷை கொடுமையாக தாக்கி, தலையை நசுக்கி சுட்டுக் கொன்றுள்ளது. தற்போது வெளியாகி உள்ள போர்க் குற்றப் படங்களில் ரமேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட படம் இடம்பெற்றுள்ளது.

அதே போல, புலிகளின் கட்டளைத் தளபதிகளுள் ஒருவரான கேணல் பானுவும் கொடுமையாக கொல்லப்பட்டுள்ளார். அவரை கொடூரமாக கொன்ற சிங்களப் படை, பின்னர் சீருடை அணிவித்து படமெடுத்து உலகுக்கு கொடுத்து நாடகமாடியது. ஆனால் அதற்கு முன் அவர் எப்படியெல்லாம் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார் என்பது இப்போது படங்களாக வெளிவரத் துவங்கியுள்ளன.

ஆயுத விற்பனையை துவங்கியது 'வால் மார்ட்'!!!

வாஷிங்டன், ஏப். 30-'வால் மார்ட்' சில்லறை வணிக நிறுவனம், ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதப் பொருட்கள் விற்பனையை மீண்டும் துவக்கியுள்ளது.

'வால் மார்ட்' சில்லறை வணிக நிறுவனத்திற்கு, அமெரிக்கா முழுவதும் 3,600 கிளைகள் உள்ளன. வணிகப் பொருள் விற்பனைக்காக, துவக்கப்பட்ட 'வால் மார்ட்' காலப்போக்கில், ரைபிள்ஸ், கை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றையும் விற்க துவங்கியது.

எனினும், போதிய வரவேற்பு இல்லாததால், கடந்த 2006ல், ஆயுதப் பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆயுதப் பொருட்கள் விற்பனையை துவங்கியதாக, வால் மார்ட்' அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, 'வால் மார்ட்' செய்தி தொடர்பாளர் லொரன்சோ லோபஸ் கூறியதாவது: மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, மீண்டும் ஆயுதப் பொருட்கள் விற்பனையை, வால் மார்ட்' துவங்குகிறது. முதற்கட்டமாக, அமெரிக்காவில் உள்ள 500 கிளைகளில் மட்டும், ஆயுதப் பொருட்கள் விற்கப்படும்.

கடைகளில் ரைபிள்ஸ், கை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவை கிடைக்கும். அதன்பின், படிப்படியாக, இதர கிளைகளிலும் விற்பனை துவங்கப்படும். ஏற்கனவே, இந்த முயற்சியில் தோல்வியடைந்ததால், இம்முறை உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆயுதப் பொருட்களுக்கான கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் உள்ள வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடி தொழில் நிறைந்த பகுதிகளையும் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு லொரன்சோ லோபஸ் கூறினார்.

தமிழர்கள் மீது பற்று இருப்பதை இந்தியா நிறுபிக்குமா??

சென்னை, ஏப். 30, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அதிபர் ராஜபக்சேயையும், ராணுவமும் போர் குற்றம் புரிந்தவர்களாக வழக்கு தொடுக்க வேண்டி ஐ.நா.சபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்.

இதன் மூலம் தமிழர் மீது தனக்கும் பற்றுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும், என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை அரசு எவ்வளவோ முயற்சித்தும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க முடியவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவர்கள் இந்த போர்க் குற்றம் பற்றி சர்வதேச குற்ற விசாரணை மன்றத்திற்கு உறுப்பு நாடுகள் அல்லது ஐ.நா. பாதுகாப்பு குழுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழினப்படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் மகிந்தா ராஜபக்சே போர்க் குற்றவாளி என்றும் ஐ.நா. மன்றமே அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

இந்த தீர்மானத்தை இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவளித்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்தியாவிலேயே உள்ள தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.

கனிமொழியை காப்பது என்பது கட்சியை காப்பதாகும்!! முதல்வர்!!

சென்னை, ஏப். 30, கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார்.

நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது, என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கின்ற சூழ்ச்சிக்கு என்றைக்கும் அடி பணிந்தவனல்ல. என்னைத் தலைவனாகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடி பணிய வேண்டுமென்று கருதுகிறவனும் அல்ல.

நானே கைது செய்யப்பட்ட போது கூட என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடு தான் ஏற்றுக் கொண்டேன். இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் அல்ல.

சமீபத்தில் பத்திரிகையில் வந்த கணக்கெடுப்பு படி தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலை கிடைக்க கனிமொழி உதவி உள்ளார்.

எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.

சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப்படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயிலிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்க காத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.

அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்லவில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன்.

எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன் என்றார் கருணாநிதி.

Apr 29, 2011

சாவும் முன்னே சவப்பெட்டி!! புதிய சர்ச்சை!!!

ஐதராபாத், ஏப். 30, ஆந்திராவில் உள்ள 3 தெலுங்கு தொலைக்காட்சிகள் நேற்று சில செய்திகளை ஒளிபரப்பின.

அதில் சாய்பாபா மார்ச் 28-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 1-ந் தேதியே பெங்களூரை அடுத்த மல்லேஸ்வரம் என்ற ஊரில் சாய் பாபாவுக்காக சவப்பெட்டி செய்ய அறக்கட்டளை சார்பாக ராஜேந்திர ரெட்டி என்பவர் ஆர்டர் கொடுத்து உள்ளார்.

அந்த சவப்பெட்டியும் ஏப்ரல் 5-ந் தேதி புட்டபர்த்தி வந்து சேர்ந்து உள்ளது. இவ்வாறு அந்த தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்ததற்காக ரூ.57,000 கொடுக்கப்பட்ட ரசீதையும் ஆதாரமாக காட்டின.

இந்த சர்ச்சை குறித்து இன்று அறக்கட்டளை நிர்வாகிகள் நிருபர்களை சந்தித்து பேட்டி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த முதல்வர் நானா? அழகிரியா? ஸ்டாலினா?

சென்னை, ஏப். 30: "ஆட்சிக்கு வந்தால் முதல்வராக யார் வருவார் என்பது குறித்து கட்சியின் பொதுக்குழு தான் முடிவு செய்யும்' என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கத்தின் மீது மக்களுக்கு ஓர் ஆர்வமும், அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளுங்கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளைச் செய்து முடித்து இருக்கின்றது.

நம்பகத் தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கின்றது. தேர்தல் முடிவுக்குப் பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப திமுக முடிவெடுக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல; கூட்டணி ஆட்சிதான் மத்தியிலே நடக்கின்றது.

ஆட்சிக்கு வந்தால் நான் முதல்வராக வருவேனா? அல்லது ஸ்டாலின் முதல்வராக வருவாரா? அழகிரியா? என்றெல்லாம் இப்போதே கூற முடியாது. அதெல்லாம் எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள் என்றார்.

சிந்திக்கவும்; இப்பவும் இவர் குடும்பத்தார்கள் தான் முதல்வராக வரவேண்டுமா? மற்றவர்களுக்கு வாய்ப்பில்லையா? இன்னும் இவருக்கு முதல்வர் நாற்காலி ஆசை போகவில்லை. வயதாகி விட்டால் வீட்டில் இருக்கவேண்டியதுதானே.

பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்!!

April 30, ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் படித்திருப்பீர்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார்கள். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார்.

தமிழக விவசாயிகள் பாத்திரம் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பிழைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நிரந்தர வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும்படி நகரத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள்.

நமது பிள்ளையாவது படித்து முன்னேறினால் போதும் என்ற பெற்றோரின் நம்பிக்கையை சுமந்து வரும் அந்த குழந்தைகளின் குறைந்த பட்ச ஆரம்ப கல்விக்கான வழியை ஆசிரியர்களும், பெற்றோர்க்ளும் சேர்ந்து அடைக்கிறார்கள். அவர்களைக் கண்டுதான் மூக்கைப் பொத்துகிறார்கள். துரத்தியடிக்கிறார்கள்.

இந்திய உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம். சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.

புதிய பார்ப்பனியம்! பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று பார்ப்பனியமும், வெள்ளை நிற ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று ஹிட்லரின் நாசிசமும் பேசிய வரலாறு இன்று திரும்புகிறது. ஒரு வேளை இந்தியா வல்லரசாக வேண்டு மென்பதற்காக ஏழைகளை மொத்தமாகக் கொன்றுவிடுவார்களோ தெரியவில்லை.

சிந்திக்கவும்: உழைக்கும் ஏழை மக்கள் முன்னேற கூடாது என்று நினைக்கும் இந்த கொடூர சிந்தனை ஒழிக்க படவேண்டியது. இவர்கள்தான் பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் கொடியவர்கள்! இதுபோல் சிந்திப்பவர்களது பொருளாதாரத்தை பிடுங்கி விட்டு ரோட்டுக்கு கொண்டு வரவேண்டும். எப்படி ஏழைகளாக வாழ்வது என்று இவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இந்தியாவின் வளமே வெள்ளை உள்ளம் படைத்த ஏழை மக்களே!! ஒழுக்கம் மற்றும் எல்லா விசயங்களிலும் பணக்காரர்களை விட ஏழை மக்களே சிறந்து விளங்க கூடியவர்கள்.

காங்கிரசுக்கு ஆதரவு!! சிரஞ்சீவி மீது செருப்பு வீச்சு!!

April 30, ஆந்திர மாநிலம் கடப்பா பாராளுமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மந்திரி டி.எல். ரவீந்திராரெட்டி போட்டியிடுகிறார்.
கடப்பா தொகுதிக்குட்பட்ட பூக்கடை சவுராஷ்டிரா என்ற இடத்தில் அவருக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் ஜெகன்மோகன்ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் அவர் மீது முட்டை மற்றும் செருப்பை சரமாரியாக வீசினார்கள்.

இதில் ஒரு செருப்பு ராஜசேகரரெட்டியின் சகோதரர் மீது விழுந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கூட்டத்தினரை தடியடி நடத்தி கலைத்தனர்.

எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி!! எஸ்.டி.பி.ஐ தர்ணா!!

April 29, புதுடெல்லி: எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச் செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கேரளாவிலும்,கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றஞ்சாட்டினர்.

எண்டோஸல்ஃபான் குறித்து மேலும் ஆய்வறிக்கைகளை காத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக மத்திய அரசு தடைச்செய்ய வேண்டுமென அவர்கள் கோரினர். 74 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் என்ற கொடூரமான பூச்சிக்கொல்லி மருந்தினால் இந்தியாவில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் அதனை தடைச்செய்ய மத்திய அரசு தயங்குகிறது.

எண்டோஸல்ஃபானை தடைச்செய்ய பிரதமர் முன்வரவேண்டும். தடைக்கான வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் மத்திய விவசாயத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

மக்களின் உயிர்களைவிட எண்டோஸல்ஃபான் நிறுவனத்திற்கும், விவசாயிகளுக்கும் கிடைக்கும் லாபத்திற்கு மேற்கண்ட அமைச்சகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமருக்கு மனு அளித்தனர்.

இப்போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ டெல்லி கன்வீனர் அப்துற்றஷீத் அக்வான் துவக்கிவைத்தார். இப்போராட்டத்தில் அம்பேத்கார் சமாஜ் கட்சியின் தலைவர் தேஜ்சிங், எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில கன்வீனர் அன்ஸான் இந்தோரி, எஸ்.டி.பி.ஐ டெல்லி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அஸ்லம்,கேரள மாநில பொதுச்செயலாளர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப், இமாம்ஸ் கவுன்சில் உத்தரபிரதேச கன்வீனர் மெளலானா ஷஹ்தாஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் நோக்கங்களும்!

April 29, கோழிக்கோடு: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும்.

ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச் செய்யப்படுவர்.

கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.

நாட்டின் கல்வி வளாகங்களில் நன்மையின் பிரச்சாரகர்களாக மாற முன்மாதிரிகளை மாணவர்கள் தேடுகிறார்கள். ஏகாதிபத்தியமும், ஃபாசிசமும், அரச பயங்கரவாதமும், கறுப்புச் சட்டங்களும் கொடூரத்தை வெளிக்கொணரும் வேளையில் அதனை திருத்த வேண்டிய பொறுப்பை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என அனீஸ்ஸூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம்!!

April 29, அயோத்தி: பாரதிய ஜனதாதள கட்சியில் தலைமைத்துவம் ஏற்று முதல் முறையாக அயோத்தியை காண சென்ற கட்காரி ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்றார்.

இதில் எந்த வித அரசியல் இடையூறோ அல்லது தேர்தல் இடையூறோ இல்லை என்றும், கோவிலை திரும்பக் கட்டுவதால் பல கோடி மக்களின் நம்பிக்கை திரும்ப கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார்.

அதற்கு நீதித்துறையும் அனுமதி அளித்துள்ளது. அவருடன் சென்ற மற்ற சில தலைவர்கள், அயோத்தியில் உள்ள அந்த இடமானது சற்று விவகாரமானது என்றும், ராமர் கோவிலை கட்ட முடிவு எடுத்தால், பஞ்சகோசி பரிக்ரமா பகுதியின் வெளிப்புறத்தில் முஸ்லிம்களின் மசூதியை கட்டவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்காவில் கடும் புயல், மழை 300 பேர் பலி!!

April 29, வாஷிங்டன்: அமெரிக்காவின் தென் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கடும் சூறாவளி புயல் தாக்கி, அலபாமா, அர்கன்சாஸ், கென்டுகி, மிசிசிப்பி, மிசோரி, டென்னிசீ, டெக்காஸ் ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்த கடும் சூறாவழி மற்றும் புயல் மழைக்கு இதுவரை 300 பேர் பலியாகிவிட்டனர். மேலும் தொடர்ந்து வீசும் புயலால் பலியாவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் ஆபாயம் உள்ளது.

பலத்த சுழல் காற்றுடன் பெய்யும் பெருமழை காரணமாக கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இது டோர்னாடோ என்று அழைக்கப்படும் சுற்றிச்சுழலும் சூராவழிக்காற்று.
இது போன்ற புயல் அமெரிக்காவில் அவ்வப்போது வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள், வீடுகள், வீடுகளில் உள்ள வாகனங்கள் மற்றும் பொருட்கள் மற்றும் ஆட்கள் யாவரும் காற்றுச்சுழலில் உறிஞ்சப்பட்டு தூக்கி வீசப்பட்டு மோதி சிதறும் அதிர்ச்சியான நிலை நிலவுகிறது.

குறிப்பாக இந்த கொடும் புயல் மற்றும் சூராவழியில் அதிகம் பாதிக்கப்பட்டது அலபாமா மாநிலம்தான். இங்கு மட்டும் சுமார் 162 பேர் உயிரிழந்து மேலும் 150 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அருகில் உள்ளா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அலபாமாவில் துஸ்காலீ சியா என்னும் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தகவல் தொடர்பு, மின்சாரம் மற்றும் குடிநீரின்றி மக்கள் தவிப்புக்குலாகின்றனர். இதே நிலை தான் சூறாவளி புயல் பாதித்த ஜார்ஜியா, மிசிசிப்பி மாகாணங்களிலும் உள்ளது.

புயல் மழைக்கு இதுவரை 300பேர் பலியாகி உள்ளனர். இன்னும் தொடர்ந்து புயல் வீசுவதால் சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இதற்கிடையே புயல் பாதித்த அலபாமா, ஆர்கன் சாஸ் கென்டுகி, மிசிசிப்பி, மிசோரி, டென்னிசீ, ஒகல கோமா ஆகிய 6 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மீட்பு பணிகளில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட வரும்படி அம்மாகாண கவர்னர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே புயல் பாதித்த மாகாணங்களில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் படி அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விர்ஜீனியா, மேரிலேண்டு, அட்லாண்டிக் உள்ளிட்ட 21 கடற்கரை மாகாணங்களிலும் தட்பவெப்ப நிலை மோசமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

தமிழக பாஸ்போர்ட் அதிகாரியின் வேண்டுகோள்!!

April 29,பாஸ்போர்ட் பெறுவதற்கு புரோக்கர்களை அணுக வேண்டாம். அதிகாரிகளை நேரடியாக சந்தித்து முறையிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

என சென்னை மண்டல புதிய பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும், மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன.

சென்னை மண்டலத்தைப் பொருத்தவரையில் ஒரு மாதத்தில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. தினசரி ஏறத்தாழ ஆயிரம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்.

சாதாரணமாக விண்ணப்பித்த 8 முதல் 10 வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. தக்கல் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு 7 முதல் 10 நாட்களில் பாஸ்போர்ட் வழங்குகிறோம்.

பொதுமக்களுக்கு எவ்வளவு விரைவாக பாஸ்போர்ட் வழங்க முடியுமோ அவ்வளவு வேகமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 35 நாட்களில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

உடனடியாக பாஸ்போர்ட் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அதிகாரிகளை நேரடியாக சந்தியுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எக்காரணம் கொண்டும் புரோக்கர்களை அணுக வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பாஸ்போர்ட் அலுவலகத்தில் புரோக்கர்களின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கு அவரை தெரியும், வி.ஐ.பி.யை தெரியும் என்று சொல்லி பாஸ்போர்ட் விண்ணப் பிப்பவர்களிடம் பண வசூலில் ஈடுபட்டு வரும் 10 புரோக்கர்களை இதுவரையில் அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் புரோக்கர்கள் யாரும் நுழையக்கூடாது என்றார்.

ராணா படம், கானா படம்!! ரஜினியை கேலி செய்த வடிவேலு!!

April 29, திமுக தலைவர் கலைஞரை, நடிகர் வடிவேலு 29.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கருத்துக்கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பயன் அடைந்தோர் பட்டியல் அதிகமாக இருப்பதால், கலைஞர் அய்யாவின் வெற்றி உறுதி.

மக்களின் எழுச்சியை நான் பார்த்தேன். பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் நுழைந்து போகும்போது மக்கள் ஆரவாரம் செய்தனர்.

குழந்தைகள் முட்டையை கையில் எடுத்து வந்து காட்டியது போன்றவைகளையெல்லாம் பார்க்கும்போது பயன் அடைந்தவர்கள் ஓட்டே திமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்று தரும்.

ஏழை எளிய மக்கள் தங்களது நன்றி கடனை செலுத்தியுள்ளனர். இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக கலைஞர் அய்யாவை இன்று நான் சந்தித்தேன் என்றார்.

கேள்வி: விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

பதில்: ராணா படம், கானா படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13 ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.

கேள்வி: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா?

பதில்: பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும் என்றார்.

Apr 28, 2011

மணிக்கு 3300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஏவுகணை !!

நாகர்கோவில், ஏப். 28-பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை நாகர்கோவிலில, இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரமோஸ் ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. உலகில் மிக வேகமாக செல்லும் ஏவுகணை இதுதான். அந்த பெருமை நமக்கு கிடைத்துள்ளது.

பிரமோஸ் ஏவுகணை ஒரு மணி நேரத்திற்கு 3300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதன் திறனை மேலும் அதிகரிப்பதற்காக ஆராய்ச்சி செய்து வருகிறோம். இப்போது பிரமோஸ் ஏவுகணை தரைப்படையிலும், கப்பல் படையிலும் பயன்படுத்தப்படுகிறது.

விமானப்படையில் பயன்படுத்துவதற்கு முயற்சி நடந்து வருகிறது. 2012ல் விமானப்படையில் பிரமோஸ் ஏவுகணை பயன்படுத்தப்படும். நவீன நுட்பங்களுடன் பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்துவதற்காக நானோ டெக்னாலஜி புகுத்தப்படுகிறது.

இதன் மூலமாக பிரமோஸ் ஏவுகணையை கண்ணில் தெரியாத அளவிற்கு செலுத்த முடியும். குறிப்பிட்ட இலக்கை பிரமோஸ் ஏவுகணையே முடிவு செய்து தாக்கும் தன்மை கொண்டதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்டு!! படிப்போம்!!


ஆச்சரியம் ஆனால் உண்மை!இன்றைய மாணவ மாணவிகளுக்கு ஆச்சிரியத்தை உண்டுப்பன்னும் விதமாக கேரளா மாநிலம் ஆலப்புழ மாவட்டத்தில் முதியவர்களுக்கு நடந்த பரீச்சையில் ஏற்றமும் வயது கூடிய மாணவி
தொண்ணூறு வயதை தாண்டிய பாத்திமா பீவி.

பரீட்சை ஹால்லில் இருந்து பரீட்சை எழுதி வயது ஒன்றுக்குமே தடை இல்லை என்பதை நிரூபித்தது அனைவரையும் அச்சரியத்தில் ஆள்ள்த்தி உள்ளது!ஆரயிரதிர்க்கும் மேலாக பரீட்சை எழுதியதில் இவரே நாயகியாக திகழ்ந்தார்.

சிறுவயதில் படிப்பதற்கு வசதி இல்லாததால் படிக்கமுடியாமல் போனதாக சொல்லும் இந்த முதியவர் சுறுசுறுப்பாக பரீட்சை எழுதினாலும் ரிசெல்ட் வரும் வரை டென்சனாக இருபதாகவும் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன் என்றும் பாத்திமா பீவி கூறினார்.

Apr 27, 2011

கள்ளக்காதல் கொலை!! பிரபல சாமியார் தலைமறைவு!!

April 28, நெல்லை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த கிராமத்தில் உள்ள கிணற்றில் ஒரு உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மிதந்தது.

சம்பவ இடத்திற்கு தச்சநல்லூர் போலீசார் சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குலவணிகர்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது43) என்று தெரியவந்தது.

கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன.

குலவணிகர்புரத்தை சேர்ந்த ரவி என்பவர் தச்ச நல்லூரில் லட்சுமி (32) என்ற பெண்ணுக்கு காண்டிராக்ட் முறையில் வீடு கட்டினார்.

அவர் அவ்வப் போது சென்று கட்டிட வேலைக்கான உதவிகள் செய்து வந்துள்ளார். அப்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

லட்சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கும் கோவையை சேர்ந்த பிரபல சாமியார் மற்றும் ஜோசியரான மூகாம்பிகைதாசன் என்பவருக்கும் ஏற்கனவே தொடர்பு ஏற்பட்டு இருந்தது.

அந்த தொடர்பின் காரணமாகவே சாமியார் மூகாம்பிகைதாசன் உதவியுடன், லட்சுமி தச்சநல்லூரில் வீடு கட்டி வந்துள்ளார்.

இருவரின் கள்ளக்காதல் விவகாரம் சாமியார் மூகாம்பிகை தாசனுக்கும் தெரியவந்து அவர் லட்சுமியை எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதனால் கோவை சாமியார் மூகாம்பிகை தாசனின் தூண்டுதலின் பேரில் இக்கொலை நடந்திருக்கலாம் என்ற ரீதியில் விசாரணையை தொடங்கினர்.

இதுதொடர்பாக சுப்பிர மணியனின் கள்ளக்காதலி லட்சுமியையும், அவரது உறவினர்கள் 4 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

மேலும் கோவையில் உள்ள பிரபல சாமியார் மூகாம்பிகை தாசனிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை அழைத்தனர். ஆனால் அவர் போலீசில் ஆஜராகாமல் தலைமறை வாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவரை தேடிவருகின்றனர்.

இவர்களை அடக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும்!!

கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் வந்தது.

அந்த பஸ்சில் 3 கல்லூரி மாணவிகள் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

அவர்களுக்கு பின்னால் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

அந்த நபர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

மாணவிகள் இருக்கையின் முன் பகுதிக்கு சென்றாலும் அந்த நபர் விடாமல் தனது சில்மிஷத்தை அரங்கேற்றி வந்தார்.

அந்த நபரின் சில்மிஷம் அதிகமானதால் அந்த 3 மாணவிகளும் வேறு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டனர்.

ஆனாலும் அந்த நபர் அந்த இருக்கை அருகே சென்றும் அந்த மாணவிகளிடம் சில்மிஷம் செய்தார். மாணவிகள் அவரை முறைத்து பார்த்து திட்டினர்.

ஆனாலும் அந்த நபர் இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அத்துமீறலில் இறங்கியுள்ளார். பஸ் தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது 3 மாணவிகளும் கீழே இறங்கி கொண்டனர்.

அந்த நேரத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய அந்த நபரை 3 மாணவிகளும் சுற்றிவளைத்து தாங்கள் அணிந்திருந்த செருப்பால் சரமாரியாக அடித்தனர்.

இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த மாணவிகளிடம் ஏன் அடிக்கீறிர்கள் என்றனர். அப்போது நடந்த விபரங்களை மாணவிகள் கூறியதும், அருகில் இருந்த பஸ் பயணிகள் அனைவரும் சேர்ந்து தாக்க தொடங்கினர்.

வலி தாங்க முடியாத அந்த நபர் தான் போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டே அவர்களிடம் இருந்து தப்பி தர்மபுரி பஸ்நிலையத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் ஓடி ஒளிந்தார்.

இதையடுத்து 3 மாணவிகளும் தங்களது செல்போனில் அந்த சில்மிஷ போலீஸ்காரரை போட்டோ எடுத்தனர். மேலும் உன்னை சும்மா விட மாட்டோம் போலீசில் உன்மீது புகார் கூறுகிறோம் என்றனர்.

இந்த சம்பவம் காரணமாக பஸ்நிலையம் முழுவதுமே பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் பஸ்நிலைய தாதாக்கள் சிலர் அந்த மாணவிகளை பார்த்து நீங்கள் படிக்கின்ற மாணவிகள் போலீசில் புகார் செய்யவேண்டாம்.

உங்கள் படிப்பு வீணாகி விடும் போய் விடுங்கள், இந்த பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி அந்த மாணவிகளை புகார் கொடுக்க விடாமல் தடுத்து அனுப்பி வைத்தனர்.

சிந்திக்கவும்: இவர்களை அடக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும். அப்போதான் இவனுங்கள் அடங்குவாங்கள்!! வேலியே பயிரை மேந்த கதை!! இந்த போலீஸ் பொறுக்கிகளின் தொல்லைகள் தாங்கலப்பா!!

இவனுங்கள கட்டுபடுத்த முதல்ல ஒரு நல்ல சட்டமா கொண்டுவரணும். அமெரிக்க போன்ற நாடுகளில் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள அளவு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் போதும். இந்திய போலீஸ் மாதிரி கேடுகெட்ட போலீஸ் உலகில் எங்கும் பார்க்க முடியாது.

கருணாநிதி உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறார்!! விஜயகாந்த்!!

April 28, ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம்.

ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம்.

தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

அந்த காலக் கட்டத்தில்தான் தமிழக முதல்வர் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள இனவெறி அரசு இத்தகைய தமிழினப் படுகொலை நடத்துவதற்கு இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும்.

ஏற்கனவே சர்வதேச அரங்கில் சிங்கள இனவெறி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட பொழுதெல்லாம் இந்திய அரசுதான் தலையிட்டு காப்பாற்றி உள்ளது.

எனவே, மத்திய அரசின் ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.க விற்கும் சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்.

தற்பொழுது ஐ.நா. மன்றமே சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் ராஜபட்ச போர்க் குற்றவாளி என்றும் அறிவித்திருக்கிறது.

இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சிங்கள அரசின் இனவெறி அதிபர் ராஜபக்சேயையும், அதன் ராணுவத்தையும் போர்க் குற்றம் புரிந்தவர்களாக வழக்குத் தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவு அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை இந்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும்.

இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.

இந்திய அரசு வழக்கம்போல் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் கருணாநிதி அதை எதிர்ப்பாரா?

அல்லது மத்திய அரசின் துதிபாடியாக வழக்கம்போல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜனதா தளத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றைய காங்கிரஸ் ஆட்சி வரை மத்திய அரசின் ஆட்சியில் சுமார் 25 ஆண்டுகள் முதல்வர் கருணாநிதி பங்கு பெற்றுள்ளார்.

அப்பொழுதெல்லாம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு என்பது தெரியவில்லையா?

அங்குள்ள தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டு அவர்கள் வாழும் பகுதிகள் சீரழிக்கப்பட்டுள்ளன.

ஒன்றும் தெரியாதவர்போல் இன்று தமிழ் ஈழம்தான் தி.மு.கவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு?

உண்மையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு துணை போய்விட்டு, இன்றும் நீலிக் கண்ணீர் வடிப்பது தமிழர்களை இன்னும் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலா?

கருணாநிதி நடத்தும் கபட நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆட்சி உங்கள் கையில், அதிகாரம் உங்கள் கையில், செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் கருணாநிதி உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறார்’’ தெரிவித்துள்ளார்.

எகிப்த் & லிபியா புரட்சி!! ஒரு ஒப்பாய்வு!!

உலகின் நாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் நாடு எகிப்த். இவர்கள் நாகரிகத்தில் அடைந்த உட்சம் அதனால் அவர்கள் வாழ்வில் உல்லாசம்.

இந்த உல்லாசத்திலே லயித்து அரசியல் பற்றி ஆராய கூட மனமில்லாமல் 35 வருடங்களுக்கு மேல் கழித்து விட்டார்கள்.

தங்கள் வாழும் வாழ்வில் சில குறைபாடுகள் பொருளாதார ரீதியில் குறுக்கிட நேர்ந்த போது விழித்து பார்த்ததன் விளைவுதான் மக்கள் புரட்சி.

வேலை வேண்டும், நல்ல கல்வி வேண்டும், நல்ல நவீனயுக யுக்திகளை கையாள வேண்டும் என சிந்தித்ததின் விளைவு மக்கள் ஆட்சி மாற்றத்தை நாடினர்.

கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை முறையிலும் அழகிய முறையிலும் ஒரு போராட்டத்தை, புரட்சியை நடத்தி காட்டினர்.

ஊழல் செய்வதில், சுகபோகம் அனுபவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவந்த எகிப்த்து அதிபர் செய்வதறியாது திகைத்தார்.

அடக்குமுறைகளை கையாண்டு எதுவும் பலிக்காமல் பதவி விலகியது எல்லாமே நாகரிகமான முறையில் நடந்தேறியது.

ஒரு பெரும் போராட்டத்தை நடத்திய மக்கள்! போராட்டம் முடிந்து வீடு திரும்பும் முன் சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தது வியப்பின் உட்சம்.

சில இடங்களில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து! எதுவுமே நடக்காதது போன்று கலைந்து சென்ற செயல்! உலகில் புரட்சி செய்யவேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு! ஒரு முன்மாதிரி.


லிபியா நாட்டின் புரட்சி.................

லிபிய மக்கள் கடாபியை ஒரு ஹீரோவாக, கடாபி எது செய்தாலும் ஆகோ!! ஓஹோ என்று போற்றி! அவரை தலையில் வைத்து கூத்தாடினார்கள்.

எளிமையான தலைவன், யாருக்கும் பயப்படாத தலைவன் என்று தம்பட்டம் அடித்ததன் விளைவு கடாபியால் அந்த ஆட்சியை துறக்க முடியவில்லை.

21 நூற்றாண்டை கடந்து வந்த மக்கள் நவீன விஞ்சான யுகத்தில் உலகில் நடக்கும் ஆட்சிகளை, மாற்றங்களை பார்கிறார்கள்.

அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கபடும் ஒரு ஆட்சியை விரும்புகிறார்கள். குடும்ப அரசியலுக்கு, ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று நினைகிறார்கள்.

ஆனால் அந்த மக்கள் கையாண்ட போராட்ட முறைதான் தவறாக அமைந்து விட்டது.
தலைவனின் மூர்க்கம் நன்கு அறிந்த மக்கள் ஆயுத போராட்டத்தில் குதித்ததின் விளைவு அழிவுகள் பலவற்றை லிபிய சந்தித்து வருகிறது.

என்று மக்கள் ஒரு ஆட்சியாளனை விரும்பவில்லையோ உடனே ஆட்சியை விட்டு இறங்கிவிடு என்று சீன அறிவாளி பைதீகூ சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது.

தாங்கள் ஆளும் நாடே சுடுகாடானாலும் அதை அலட்சியம் செய்யாமல் தங்கள் ஆட்சி கட்டிலை தக்கவைத்து கொள்ள நினைப்பவர்கள் தான் லிபிய ஆட்சியாளர்கள்.

இது லிபியாவில் மட்டும்தான் என்று இல்லை உலகம் முழுவதும் பலநாடுகளில் இதே நிலைதான்.

இதில் நம் ஜனநாயக கோமாளிகள் நடத்தும் தெருக்கூத்து ரொம்பவும் வேடிக்கையானது. இவர்கள் ஆட்சி கட்டிலுக்காக நாகரிகம் இல்லாமல் மிருகங்கள் போல் அடித்து கொள்வதும், கோமாளித்தனமான கொள்கைகள் பேசித்திறிவதும் விநோதமானது, வேடிக்கையானது.

----------- ராஜ யோகி -----------

Apr 26, 2011

மோடி மீது நடவடிக்கை வேண்டும்!! PFI வலியுறுத்தல்!!

April 27, புதுடெல்லி: குஜராத் இனப்படுகொலையில் நரேந்திரமோடியின் பங்கினை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் வெளியான சூழலில் மோடி மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சங்க்பரிவார சக்திகள் சிறுபான்மையினருக்கெதிராக திட்டமிட்டு நடத்தியதுதான் குஜராத் இனப்படுகொலை எனவும், ஹிந்துத்துவ சக்திகள் கோரத்தாண்டவம் ஆட மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் தெளிவுப்படுத்துகிறது. இனப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி) தாங்கள் மோடியின் பணியாளர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

அதனால்தான், இனப்படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்யப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனிதர்களுக்கும், இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என நிரூபணமான என்டோ ஸல்ஃபான் கிருமிநாசினியை தடைச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென செயற்குழு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

63 நாடுகளில் தடைச்செய்யப்பட்ட என்டோ ஸல்பான் 70 சதவீதம் இந்தியாவில் தான் தயாராகிறது. பெரும் கிருமி நாசினி நிறுவனங்களின் விருப்பத்திற்கு மத்திய அரசு அடிபணிந்து விட்டது. என்டோஸல்பான் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே நடத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கபளீகரிக்க வலதுசாரி ஹிந்துத்துவா குழுக்கள் நடத்தும் முயற்சியைக் குறித்து பாப்புலர் ப்ரண்ட் கவலை தெரிவித்துள்ளது.

ஊழல்வாதிகளான ஹிந்துத்துவா சக்திகள் நடத்தும் முயற்சிகள் குறித்து சமூக-கலாச்சார ஆர்வலர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும், முழுமையான லோக்பால் மசோதாவிற்கான முயற்சி தொடர வேண்டும் எனவும் தேசிய செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜய்தாப்பூரில் உள்ளூர் மக்களின் விருப்பத்தையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி அணுமின் நிலையம் நிர்மாணிக்க முயலும் அணுசக்தி துறைக்கு பாப்புலர் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் உருவான சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட அணுசக்தி விபத்தும் அணு உலைகள் மிகப்பெரிய ஆபத்தையும், அதிகமான செலவினத்தையும் கொண்டது என்பதை நிரூபித்துள்ளன.

இது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேட்டை விளைவிப்பதாகும். பிரான்சில் பரிசோதனை செய்து உறுதி செய்யப்படாத தொழில் நுட்பத்தை ஜய்தாப்பூர் அணுமின் நிலையத்தில் உபயோகிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

ரத்னகிரியில் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆதரவு தெரிவிக்கிறது. பாப்புலர் ப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, மவ்லானா உஸ்மான் பேக், பேராசிரியர் பி.கோயா, யா முஹைதீன், ஹாமித் முஹம்மது, அனீஸ் அஹ்மத், இல்லியாஸ் தும்பெ, அஷ்ரஃப் மெளலவி, ஒ.எம்.எ.ஸலாம், முஹம்மது ரோஷன், எ.எஸ்.இஸ்மாயீல் ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருப்பு பணம் இந்தியர்களின் பட்டியல்!! விக்கிலீக்ஸ்!!

April 27, புதுடெல்லி: சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்துள்ள நபர்கள் குறித்த ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் இது தொடர்பான ஆவணங்களை உடனடியாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட, வெளியிடப்போகும் ஆவணங்களில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்ளன.

உடனடியாக வெளியிடப்போகும் ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்களை தான் வாசித்துள்ளதாக அஸாஞ்ச் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மிகப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் இந்த பட்டியலில் நிச்சயம் இருக்கும் என்று கூறிய அவர், ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள தனியார் வங்கிகளில் பணத்தைப் போடுவதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் டாலர் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த அளவுக்குப் பணத்தைப் போடுபவர் சாதாரண இந்தியராக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். ஆவணங்கள் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டதற்கு, நம்பிக்கை இழக்காமலிருங்கள், பட்டியல் நிச்சயம் வெளியிடப்படும் என்றார்.

இருப்பினும் இது தொடர்பாக வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் தவிர வேறு எவரும் பணத்தை முதலீடு செய்திருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். ஊழல் முறைகேடுகளை விட மோசமானது

பாபாவுடைய மரணத்தில் சந்தேகமா?

பாபாவுடைய மரணத்தில் சந்தேகம் இர்ருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக பாபாவுடைய நம்பிக்கைக்குரிய சேவகன் தமிழ் நாட்டை சேர்ந்த சத்யஜித் என்பவரை போலீஸ் தங்களுடைய பாதுகாப்பில் வைத்துள்ளது.

இதற்க்கு போலீஸ் கூறும் காரணம் என்ன வென்றால் ஏற்கனவே இவர்மீது கணக்கில்ப்படாத குற்றச்சாட்டுகள் இர்ருக்கின்றன. தற்போது பாபாவின் மரணதிர்க்கே இவர்தான் காரணமோ?

என்று நினைக்க தோன்றும் விதமாக இவர் பாபாவுக்கு சரியாக மருந்து, உணவு கொடுக்காத காரணதின்னால்லும்,அதிகமாக வேதனையே குறைக்கவுள்ள மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக கொட்டுததும் தான் காரணம் என்கின்றனர்

எல்லாம் நடந்து முடிந்த பிறகு கருத்து சொல்லும் நம்முடைய போலீஸ் ( வ)உயர் அதிகாரிகள்!எப்போதும் பாபா கூடேயே இர்ருக்கும் சத்தியஜித் பாபாவுடைய மரண சடங்குகளில் சில நேரம் மாத்திரமே இருந்ததும் அதிகமான சந்தேகத்தை உண்டுபண்ணுவதாக மூளை கூடிய அதிகாரிகள் தெரிவித்தார்கள்!

பாபா இறந்து விட்டார்!

அவர் உயிருடன் இருக்கும் போதும் கொலை என்றும் கற்பழிப்பு என்றும் சர்சைக்கு உள்ளான அவருடைய ஆசிரமம் அந்தோ பரிதாபம் இதோ அவருடைய மரணமும்
சர்ச்சைக்கு உள்ளாக்கபட்டிருக்கிறது.

என்றுதான் முடியுமோ?இந்த பாபாகளின் சர்ச்சைகள்!


கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!

சென்னை:ஏப்ரல் 26, வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்

சிங்களராணுவ வெறிக்கு 40 ஆயிரம் தமிழர்கள் பலி !!!

நியூயார்க், ஏப். 26-இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது.

அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படா மல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள சில தகவல்கள் ரகசியமாக வெளி வந்தன.

இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர்.

அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மனித உரிமைகளை மீறி இரு தரப்பினருமே போர் குற்றங்களை செய்தனர்.

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் குண்டுகளை வீசியது. ஆஸ்பத்திரி மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள்.

இதன் மூலம் 40 ஆயிரத் துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளை யும் வீசினார்கள்.

இரு தரப் பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார் கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை.

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறும்போது, இலங்கையில் நடந்த போர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு இதுவரை உத்தர விடவில்லை.

ஆனால் ஐ.நா. சபை விசாரணை நடத்தி இலங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

விஞ்ஞானிகளின் மூளையோ மூளை !!!

வாஷிங்டன், ஏப்.26-நம் உடலில் ஏற்படும் செயல்பாடுகளை மூளைக்கும், மற்ற நரம்புகளுக்கும் நரம்பணுவில் உள்ள “சினார்பஸ்” என்ற மூளை செல்கள் செய்து வருகின்றன.

அவற்றை செயற்கை முறையில் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ளது விடர்பி என்ஜினீயரிங் கல்லூரி.

இதன் பேராசிரியர்கள் அவிஸ்பார்கர், சாங்கு ஷோஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

மூளை செயல்பாட்டில் குறைபாடு உள்ளவர்களின் பிரச்சினையை தீர்க்க இந்த செயற்கை மூளை செல்லை தயாரித்தனர்.

பென்சில் முனையை விட 10 லட்சம் மடங்கு மிக சிறிய அளவிலான கார்பன் மூலக்கூறு மூலம் கார்பன் நானோ குழாய்களை உருவாக்கினர்.

அந்த நானோ குழாய்கள் மின் அதிர்வுகளை ஏற்படுத்தும் சர்கியூட் ஆக பயன்படுத்தப்பட்டது. அவற்றின் மூலம் மூளைக்கு தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தங்கள் அறிக்கையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை நோயா பெரிய வெங்காயம் சாப்பிடுங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.

இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவுஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது.

இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.

இது தவிர கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.

Apr 25, 2011

இலங்கை சொன்னது பொய்!! போர் குற்றம் நிருபிக்கப்பட்டது!!

April 26, இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு கூறிவந்த தகவல்கள் முற்றிலும் பொய்: ஐ.நா. அறிக்கை

பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது.

மருத்துவமனைகள், முகாம்கள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குண்டு வீசித் தகர்த்தது ஆகியவை உண்மைதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், போரின் போது தமிழர்களுக்கு மனிதாபிமான சேவைகளை இலங்கை அரசு திட்டமிட்டு தடுத்தது. இலங்கை போரின்போது 40,000 தமிழர்களை இலங்கை அரசு குண்டு வீசி அழித்தது.

போரின் போது சர்சதேச மனித உரிமை சட்டங்களை இலங்கை அரசு கடுமையாக மீறி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு இதுவரை கூறிவந்த தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் கூறியுள்ளது.

புலிகளை முற்றிலுமாக அழிப்பதையே இந்தியா விரும்பியது!!

April 25, இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுவதையே விரும்பியது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் பிபிசி சிங்கள சேவையில் இதை தெரிவித்துள்ளார்.

தவிர, யுத்தப் பிரதேசத்தில் இந்திய அரசின் உளவுத்துறை செயற்பட்டதால் இந்திய அரசிற்கு பொது மக்கள் அழிக்கப்படுவது குறித்தும் தெளிவாகத் தெரிந்திருந்தது.

மேலும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் எந்த நடவடிக்கைகளையும் அழிவுகளை நிறுத்துவதற்கு மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

என்னை கவர்ந்த சாய் பாபா!! மிஸ்டர் அருள்!!

சாய் பாபாவிடம் உள்ள நல்ல விசயங்களை பார்ப்போமே என்று மிஸ்டர் அருள் சொல்கிறார். கேளுங்கள் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்.

1. நல்ல நேரம் - கெட்ட நேரம் என்கிற கருத்துக்களை பாபா நம்பவில்லை. மனதில் நல்ல நோக்கத்தோடு நல்ல செயலில் ஈடுபடும் எல்லா நேரமும் நல்ல நேரமே.

அதுபோல கெட்ட நோக்கில் கீழான காரியங்களில் ஈடுபடும் எல்லா நேரமும் கெட்ட நேரமே. எனவே, இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்ப்பது வீண் வேலை.

2. பூசை, யாகம் செய்வது, விரதம் இருப்பது, கோவிலுக்கு போவது, உண்டியலில் பணம் போடுவது போன்ற எல்லாமும் அவரவர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவே செய்யப்படுகின்றன.

இதனாலெல்லாம் கடவுளை வசப்படுத்தவோ, காரியங்களை சாதிக்கவோ முடியாது. ஒரு மனிதன் சிறிதாக வழிபடுகிறானா, பெரிதாக வழிபாடுகளை நடத்துகிறானா? என்றெல்லாம் இறைவன் எதிர்பார்ப்பது இல்லை.

மனிதனால் இறைவனுக்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்க முடியாது. அன்பும் சகமனிதர்களை நேசிப்பதுமே இறவனை வழிபடும் ஒரே வழியாகும்.

3. கோவில் கட்டுவதற்காக ஒரு ரூபாய் கூட நன்கொடை அளிக்காதீர்.

4. இராமனுக்கு கோவில் கட்டுவதாகக் கூறி, இன்னொரு வழிபாட்டு தளத்தை இடிப்பது மூடச்செயல். அது உண்மை பக்தி அல்ல. இராமனுக்கு கோவில் கட்ட வேண்டுமானால், அவரவர் மனதில் கட்டுங்கள்.

5. பல ஆறுகள் ஒரே கடலில் கலப்பது போல - எல்லா மதங்களும் ஒரே கடவுளைத்தான் போதிக்கின்றன.

சாய் பாபாவின் சாதனை;

பார்ப்பனர் அல்லாத வகுப்பில் பிறந்து - இந்திய ஆன்மீகத்திலும் சேவையிலும் மிக உயர்ந்த நிலையை எட்டியவர் சாய் பாபா. சாதியை மட்டுமின்றி மதத்தையும் கடந்தவர். அன்பும் சேவையுமே லட்சியம் என வாழ்ந்தவர்.

பாபா ஒரு ஆன்மீக வாதியாகவே பார்க்கப்பட்டாலும் - அவரிடம் அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்டு அவர் கோவில்களையோ மடங்களையோ எழுப்பவில்லை.

மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர்த் திட்டங்கள் என சமூக நலப்பணிகளுக்காகவே அவர் நிதியை செலவிட்டார்.

இந்தியாவின் ஜனாதிபதிகளும், பிரதமர்களும், பல மாநில முதல்வர்களும் அவரை நாடி வந்ததே வரலாறாக இருக்கையில் - சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாத்திகரான கலைஞரை தேடிவந்தார் சாய் பாபா.

அத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை அளித்தார் அவர். சாய் பாபா ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி. ஆனால், அவர் உலகில் ஒருவருக்கும் கேடிழைத்தவர் அல்ல.

ஊடக பண்முகம்!!!!!!

என் துயர் நீங்க....
உன் மடி சாய்ந்தால் .... உன்
வருடல் எனக்கிதமாய்
இருக்கும்.

உனது பார்வை....
கனிவாய் தோன்றும்....
எனக்கிழைத்த கொடுமையை
உன் செவி சேர்த்தால்....
நீ கவனமாய் கேட்பாய்.

ஆனால் .......... நீ கழுகு
உனது இலக்கு மட்டும்....
தெளிவாய் தெரியும்....
உனது காலடியில் தஞ்சமடைந்த
கோழி குஞ்சு நான்....

நீ நினைத்தால்!!!!
கொடூர கொலையை....
சாதாரணமான மரணமென்பாய்....
சாதாரண மரணத்தை கொடூர கொலை என்பாய்....
கொலையாளியை வீரன் என்பாய்.

அழிந்து வரும் சமூகத்தில்!!!!
எழுந்து நிற்பவனை தீவிரவாதி என்பாய்....
உன் சொல் அம்பலமேறும்
என் சொல் செவிடன் காதில் சங்குதான்....
ஊடகமே நீ யார்? கையில் இருக்கிறாய்....
எமபாதகனிடமா????

சிந்திக்கவும்.நெட், வாசகர் கவிதை: MR. ராஜ யோகி.

நீங்களும் கவிதை எழுதலாம் வாருங்கள். நல்ல சமூக பொறுப்புள்ள கவிதைகளை எழுதுங்கள்!! நீங்கள் உங்கள் கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி sinthikkavum@yahoo.com, puthiyathenral@gmail.com

கனிமொழியை கைது செய்ய வேண்டும்!! ஜெயலலிதா!!

April 25, இன்று மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இருப்பதில் எவ்வித வியப்பும் இல்லை.

இருப்பினும், 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி மற்றும் சரத் குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருத்தது.

இந்த சூழ்நிலையில், 60 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது தான் இதில் உள்ள வியப்புக்குரிய அம்சம்.

214 கோடி ரூபாய் ஷாகி பால்வாவால் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம். மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்யவில்லை.

இந்த 214 கோடி ரூபாய் லஞ்சப் பணம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை சென்றடைந்து இருக்கு.

எனவே, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற வேண்டும்.

கனிமொழி உட்பட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த இமாலய ஊழலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

Apr 24, 2011

ஐ.நாவின் அறிக்கையை ஆதரித்து கையழுத்து வேட்டை!!

APRIL 24, ஐ.நாவின் அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்து வேட்டையை தொடங்கியுள்ள நிலையில், ஐநாவின் அறிக்கையை முன்னிறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் கையெழுத்து வேட்டையைத் தொடங்கவுள்ளது.

சிறிலங்காவின் போர்க் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழினப் படுகொலையை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்கவும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்க வேண்டியும் இந்த கையெழுத்து கோரப்படுகின்றது.

ஈழத்தமிழர்கள் வாழுகின்ற புலம்பெயர் நாடுகளிலும் மற்றும் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா உட்பட உலகத் தமிழர்களின் ஒன்றிணைக்கின்ற வகையில் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் " இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல்வெளி அறுபட்டு, அடக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைத் தீவுக்கு வெளியே வாழுகின்ற தமிழர்களின் கைகளிலேயே இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை, சனநாயக ரீதியாக உலக அரங்கில் வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்த கையெழுத்து வேட்டை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதில் அனைவரையும் பங்கெடுக்க வேண்டப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்திற்குள் தொடங்கவுள்ள இந்தக் கையெழுத்து சேகரிப்பு, நிறைவில் ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கையளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

நாதம் ஊடகசேவை - தகவல்துறை அமைச்சகம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

குற்றாலம் அருவியிலே குளிப்பது போல் இருக்குமா!!

APRIL 24, குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில்தான் சீசன் தொடங்கும்.

அப்போது மிதமான வெயிலுடன், சாரல் மழைம் பெய்யும்.

அப்போது அருவிகளில் குளித்துமகிழ அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவர்.

இந்நிலையில், குற்றால வனப் பகுதியில் சில நாள்களாக பரவலாக மழை பெய்கிறது. இதனால், அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.

கோடை மழை பெய்த முதல்நாளில் பேரருவியின் பாதுகாப்பு வளைவைத் தாண்டி சீறிப்பாய்ந்த நீரின் சீற்றம் படிப்படியாகக் குறைந்து இப்போது குளிப்பதற்கேற்ற அளவில் விழுகிறது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவியின் 3 கிளைகளில் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் சீசன் தொடங்கும் முன்பே இந்த ஆண்டில் குற்றாலம் களை கட்டத் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையென்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை அருவிப் பகுதியிலும், பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.

சாமியார் முதல் ஊழல் ஒழிப்பு வரை எல்லாமே போலி!!

APRIL 24, அன்னா ஹசாரே என்பவர் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர் என்பது போல ஒரு மாயத் தோற்றம் தோன்றும். அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

சங்கரலிங்கனார், பொட்டி சிறிராமுலு, திலீபன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்கள். அவர்களை எல்லாம் இந்த நாடு கண்டு கொள்ளவில்லை.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் ஏன் மத்திய அரசு இப்படித் தலைவணங்குகிறது? ஊழல் ஒழிப்பு என்பது சட்டப் பிரச்சினை அல்ல சமூகத்தை ஒட்டிய பிரச்சினை.

ஹசாரே குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன், அவரது மகன் பிரசாந்த் பூஷன்தான் இந்தக் குழுவில் இருக்க வேண்டுமா? ஊழல் குற்றச்சாற்று சாந்தி பூஷன் மீது வந்த பொழுது இவர் பதவி விலகியிருக்க வேண்டாமா?.

ராஜா ஊழல் செய்தார் - ரூ.1,76,000 கோடி என்று சொன்னார்கள். ஆனால் நீதிமன்றத்திலோ வெறும் 22 ஆயிரம் கோடி என்று சொன்னார்கள். அப்படியானால் மீதி 1 லட்சத்து 54 ஆயிரம் கோடியை எடுத்துக் கொண்டு சென்றது யார்?

ஆதிக்கவாதிகள், இந்து மத மனப் பான்மையினர், அவாள் கூட்டத்தினர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். நீதிமன்றம் செய்கின்ற வேலையை ஹசாரே குழு செய்வதா? அப்படியானால் எதற்கு நீதி மன்றங்கள்? கலைத்துவிடலாமே!

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கின்ற நடிகர் ரஜினிகாந்த் தான் சம்பாதித்ததற்கு ஒழுங்கா வரி கட்டி இருப்பாரா? அவரிடம் இரண்டு கணக்கு இல்லையா?

அன்னா ஹசாரேயின் எண்ணம் இந்துத்துவா நாட்டை ஆள வேண்டும் என்பதே! லோக்பால் குழு உடனடியாக கலைக்கப்பட வேண்டும்

ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் மதச்சார் பின்மையை ஒழித்து இந்த நாட்டை இந்துத்துவா கொள்கை ஆள வேண்டும் என்பதற்காக நடத்தப் பட்ட ஒத்திகை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. இதிலே யாருக்கும் மறுப்பு கிடையாது. எந்த வித கருத்து மாறுபாடும் கிடையாது.

யுத்த காலங்களில் எப்படி உண்மைகள் களபலியாகின்றனவோ அது போல அமைதியான இந்தக் காலகட்டத்தில் உண்மைகள் களபலியா கின்றன.

ஊழலை ஒழிப்பதற்கென்றே சில பேர் புது அவதாரங்களை எடுத்ததைப் போல சமீபத்தில் திடீரென்று அவதாரங்கள் எடுத்திருக்கிறார்கள்.

இதற்கு ஊடகங்கள் அபாரமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது புரட்சி பூபாளத்தை நாட்டில் ஏற்படுத்த அன்னா ஹசாரே வந்திருக்கிறார்.

ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் காவித் துணியையும் பாரதமாதா படத்தையும் முன்வைத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

இதில் நோய் நாடி, நோய் முதல் நாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய வாதம்.
பத்திரிகையாளர்களைக் கேட்கிறோம். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்துக் கேட் கிறோம். திக் விஜய் சிங் ஒரு கேள்வி கேட்டாரே!

ஊழலை ஒழிப்பதற்காக ஹாசரே நடத்திய உண்ணாவிரதத்திற்கு ஆன செலவு 50 லட்ச ரூபாய். இந்தப் பணம் எப்படி வந்தது? யார் செலவு செய்தது? இதன் பின்னணி என்ன? இதற்கே 50 லட்ச ரூபாய் செலவு செய்தவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள் என்றுகேள்வி கேட்டாரே!

டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஹேமந்த் பாபுராவ் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்திலே ஒரு வழக்கைத் தொடுத்திருக்கிறார். அன்னா ஹசாரே மீது 2.5 லட்சம் ரூபாய் ஊழல் புரிந்துள்ளார் என்று வழக்குத் தொடுத்திருக்கிறார்.

ஹசாரே தலைமையில் உள்ள குழுவினர்களே ஊழல் வாதிகள். சாந்தோஷ் ஹெக்டே என்பவர் மட்டுமே வேண்டுமானால் இந்தக் குற்றச் சாற்றிலிருந்து மிஞ்சலாம், அவ்வளவுதான்.
அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், மற்றும் அவரது மகன் பிரசாந்த் பூஷன் போன்றவர்களை வைத்து கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது?

அன்னா ஹசாரே குழுவினர் மிரட்டினால் மத்திய அரசு பணிவதா? சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடிக்க இன்னும் 12 கி.மீ. தான் பாக்கி. இராமனைக் காட்டி அந்தத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தின் மூலம் முடக்கி வைத்திருக்கிறார்களே

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் மக்களைத் திரட்டி சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாமா? அதேபோல ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மக்களை நாங்கள் ஒன்று திரட்டினால் இவர்கள் ஒப்புக்கொள்வார்களா?

மத்திய அரசு சும்மா இருந்துவிடுமா? எதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா? அன்னா ஹசாரே குழு அரசியல் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? சட்டரீதியான அங்கீகாரம் உண்டா?

இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் உண்டா? இது டில்லியில் நடத்தப்பட்ட கட்டப் பஞ்சாயத்து.
மத்திய அரசாலே அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்டப் பஞ்சாயத்து.

பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அவர்களுடைய கருவிகளை எல்லாம் போலிசார் பறித்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்பதற்காக நாங்கள் தான் சென்றோம். பிரபாகரன் அவர்களிடத்திலே சொன்னோம். ஒரு போர் வீரன் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று சொல்லி உண்ணாவிரதத்தையே முடித்து வைத்தவர்கள் நாங்கள்.

உண்ணாவிரதம் என்ற பெயரில் அச்சுறுத்தல். இது சமூகத்திற்கு பொது ஒழுக்கக் கேட்டைத்தான் உருவாக்கும். மத்திய அரசாங்கத்தை அச்சுறுத்தி காரியம் சாதிக்கலாம் என்று நினைத்தால் இது எங்கே போய் முடியும்? இந்த ஹசாரே குழு அமைக்கப்பட்டதே போலித் தனமானது.

அன்னா ஹசாரே குழுவில் உள்ளவர்களில் ஒவ்வொருவருடைய ஊழலும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் உள்ள ஊழல் பேர்வழிகள் ஒவ்வொருவரும் இப்பொழுது வரிசையாக நிற்கிறார்கள். இவர்களா ஊழலை ஒழிக்கப் போகிறவர்கள்?

நீதிபதிக்கு ரூ. 4 கோடி கொடுத்தால் அவரை சரிப்படுத்தி விடலாம் என்று சாந்தி பூஷன் சொன்னது ஆதாரப் பூர்வமாக வெளிவந்துவிட்டது. இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விலையே உச்சகட்டமாக 4 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஊழல் பேர்வழிகள் இவர்கள்.

அது மட்டுமல்ல - மாயாவதி அவர்களுக்காக சாந்தி பூஷன் ஒரு வழக்கில் ஆஜரானார். அதற்காக சாந்திபூஷனுக்கு பண்ணை வீடு வழங்கப்பட்டிருக்கிறது. சாந்திபூஷன் மகனுக்கு ஒரு பண்ணை வீடு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகின்ற உத்தமர்களா?

சாந்தி பூஷன் போன்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? எப்பொழுது என்மீது இப்படி ஒரு குற்றச்சாற்று வந்ததோ இனி நான் அந்தக் குழுவில் இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அல்லவா விலகியிருக்க வேண்டும்? அதுதானே சான்றாண் மைக்கு அழகு?

மத்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று இருக்கக்கூடாது. அடுத்து மத்தியில் இந்துத்துவா ஆட்சிதான் வரவேண்டும் என்பதற்குப் பார்க்கப்பட்ட ஒத்திகைதான் இந்த அன்னா ஹசாரே குழு நாடகம். ஊழலை ஒழிப்போம் என்று பேசுவது இப்பொழுது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. நாட்டில் எல்லாவற்றிலும் போலி.

மருந்தா அது காலாவதியான மருந்து, மருந்தில் போலி. அதே போல தண்ணீரில் கலப்படம் போலி. உணவா அதிலும் கலப்படம் போலி, சாமியார் என்றாலே போலி. அதையும் தாண்டி போலி சாமியார்கள். போலி சர்டிபிகேட். சரி, விமானம் ஓட்டுவதிலும் போலி சர்டிபிகேட் கொடுத்து விமானத்தை ஓட்டியிருக்கின்றான். ஊழலை ஒழிக்கவேண்டுமானால் அதன் அடித்தளத்திற்குப் போக வேண்டும்.

சீனாவில் மனித உரிமை மீறல்கள்!! அமெரிக்கா வருத்தம்!!

April 24, சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்காவும், சீனாவும் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக யார் போர்க்கொடி தூக்கினாலும் அவர்களின் கதி அதோ கதி தான்.

அரசுக்கு எதிராகப் போராடியவர்கள் பலர் காணாமல் போய்விட்டனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தண்டனை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச நாடுகள் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் சீனா அதை கண்டு கொள்ளாமல் தனது மனித உரிமை மீறல்களை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சீனாவின் பிரபல ஓவியக் கலைஞரான அய் வெய்(53) தற்போது சிறையில் உள்ளார். இதனால் சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.

இதுகுறித்து இம்மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கு சீனாவும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.யின் பிடியில் மத்திய பிரதேசம்!! அதிர்ச்சி தகவல்!!

APRIL 24, புதுடெல்லி: மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்ய உள்ளனர்.

2003-ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு கல்வி துறையை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ சிறுபான்மையினரின் சமூக வாழ்க்கைக் குறித்து தனியாக கணக்கெடுப்பு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது முன்னர் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

2011-12 கல்வியாண்டில் பகவத் கீதையை பாடத் திட்டத்தில் உட்படுத்த முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக இதற்கான பணிகள் துவங்குமென அவர் உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ.க அரசின் காவிமயமாக்கல் நடவடிக்கைகள்: 2007-ஆம் ஆண்டு சூரியநமஸ்காரம் கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்தது. மூச்சுப் பயிற்சியும் கட்டாயமாக்கப்பட்டது.
மதிய உணவுக்கு பிறகு போஜன மந்திரம் சொல்ல அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் நூல் பள்ளிக்கூடங்களில் விநியோகம் செய்ய அரசு தீர்மானித்தது. பாடத் திட்டத்திற்கும் இந்நூலுக்கும் சம்பந்தம் இல்லை. எனினும், இந்த நூலை மாணவர்கள் வாங்குகின்றார்களா? என்பதை உறுதிச்செய்ய அரசு பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.

பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற்கான பணி அரசு அச்சகங்களிலிருந்து மாற்றி ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள அச்சகங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினரைக் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் அரசு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

கிறிஸ்தவர்களின் சமூக வாழ்க்கை, பாதிரியார்களின் எண்ணிக்கை, பிஷப்களின் விபரங்கள், மாநிலத்திலுள்ள சர்ச்சுகளின் எண்ணிக்கை, கிறிஸ்தவ நிர்வாகங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களைக் குறித்த விபரங்களை தயார் செய்ய உத்தரவிட்டது.

கிறிஸ்தவர்களின் பொருளாதாரப் பின்னணி, கிறிஸ்தவ அரசியல்வாதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. சில பாதிரியார்கள் இத்தகைய விபரங்களை ஒப்படைக்க மறுத்ததைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று அச்சுறுத்தினர்.

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேருவதற்கு முதல்வர் அழைப்பு விடுத்தது சர்ச்சையானது. பா.ஜ.கவின் கட்டுப்பாட்டிலுள்ள குஷபாவு தாக்கரே அறக்கட்டளைக்கு அரசு நிலம் வழங்கியதை சமீபத்தில் உச்சநீதிமன்றம் ரத்துச்செய்தது.

போலீஸ் அராஜகம்!! நீதிவிசாரணைக்கு உத்தரவு!!

April 23, திருவனந்தபுரம்: பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக க்ரைம் ப்ராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியபிறகு கைவிடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க திருவனந்தபுரம் ஜூடிஸியல் முதன்மை வகுப்பு மாஜிஸ்ட்ரேட்(இரண்டு) எ.எம்.பஷீர் க்ரைம் ப்ராஞ்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.

2009 மே 17-ஆம் தேதி பீமாப்பள்ளி-சிறியதுறை கடற்கரையில் வைத்து நடந்த அநியாயமான போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். 39 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. மரணித்த ஆறு நபர்களின் பின்பகுதியில் குண்டு தாக்கியிருந்தது.

துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஹகீமின் உறவினர் இஸ்ஹாக்கின் புகாரைத்தொடர்ந்து துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர் என குற்றஞ்சாட்டப்பட்ட துணை கமிஷனர்களான சுரேஷ்குமார், பிரதீப்குமார், ஜான்சன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி கொலைக்குற்றத்திற்கும், கொலை முயற்சிக்கும் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஈழத் தமிழர் விசயத்தில் கருணாநிதி துரோகி!! விஜயகாந்த்!!

APRIL 24, ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

அவர் இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது.

பல்லாயிரம் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை அரசின் முப்படைகளும் வீசிய கொத்து குண்டுகளுக்கு இரையாயினர். தமிழக முதல்வர் கருணாநிதி இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் தமிழின வாழ்வை விட முதல்வர் பதவி பெரிது என்று கருதிய கருணாநிதி காலை உணவுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்ணாவிரதம் இருந்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாக தெரிவித்துவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போரும் ஓயவில்லை, இனப் படுகொலையும் தவிர்க்கப்படவில்லை.

ப. சிதம்பரம் சொன்ன சிதம்பர ரகசியம் என்ன என்பதை கருணாநிதி வெளியிடுவாரா? போர் தொடர்ந்த பொழுது கருணாநிதி, மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று மழுப்பினாரே, அது கபட நாடகம் இல்லையா? அப்பாவித் தமிழ்ப் பெண்களை கற்பழித்தது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது, தமிழ் மக்களை கடத்திக் கொன்று காணாமல் செய்தது.

ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழர்கள் மீது குண்டுமாரி பொழிந்தது, உணவு வழங்காமல் தமிழர்களை பட்டினி போட்டு சாகடித்தது, மருந்துகளும், சிகிச்சையும் இல்லாமல் காயமுற்ற மற்றும் நோயுற்ற தமிழர்களை அப்படியே சாகவிட்டது,

பத்திரிகை நிருபர்களை அனுமதிக்காமல் அவர்களை பயமுறுத்தி வெளியேற்றியது போன்ற மனித உரிமை மீறல் மற்றும் இனப் படுகொலைக்கான குற்றங்கள் சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்டன என்று ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க இலங்கை அரசு எவ்வளவோ முயன்றும், வரும் 25.4.2011 அன்று ஐ.நா. சபை இந்த குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட உள்ளது. இந்தப் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது.

எனினும் கருணாநிதி, "ஏற்கனவே 1991-ல் இலங்கை தமிழர் பிரச்சனையில் ஆட்சியை இழந்ததாகவும், இப்பொழுது மூன்றாவது முறையும் நான் ஆட்சியை இழந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்கிறேனோ அவற்றை எல்லாம் செய்து முடிக்காமலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும்" என்று கூறினார்.

ஆட்சி போனால் திரும்பப் பெறலாம். ஆனால் போன உயிர்களைத் திரும்பப் பெற முடியுமா? ஐ.நா. மன்றம் இந்த உண்மையை உணர்ந்து இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. ஆனால் முதல்வர் கருணாநிதியோ தனது அணியில் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி ராஜபட்சவுடன் கை குலுக்க வைக்கிறார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் வாழ கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இந்த சோகக் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது. திடீரென்று ஒரு நாள் கருணாநிதி தனது மகள் கனிமொழியின் மூலம் இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி காலையில் கைது செய்து மாலையில் விடுவித்தார். இடைவேளை உண்ணாவிரதம் போல இதுவும் ஒரு கபட நாடகம் அல்லவா?

இன்றும் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களின் அழுகிய பிணங்கள் கடற்கரையில் ஒதுங்குகின்ற நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிதான் கருணாநிதி ஆட்சியில். தேடப்படும் கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. கருணாநிதி அவர் மூலம்தான் இலங்கையில் நாடாளுமன்ற குழுவின் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.

1956-ம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் கருணாநிதியின் இலங்கைத் தமிழர் தொண்டுக்கு நற்சான்று அளிக்க வேண்டியவர்கள் யார்? இங்குள்ள தமிழர்கள் அல்ல, இலங்கையில் குறிப்பாக இனப் படுகொலைக்கு ஆளான ஈழப் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.

அவர்கள் இன்று வெறுப்பது இலங்கை அரசுக்கு துணை போன இந்திய அரசை மட்டுமல்ல, கருணாநிதியையும் தான். பிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் தந்திரம் இனி எடுபடாது. தமிழ் இன வரலாற்றில் துடைத்தெறிய முடியாத தமிழினப் படுகொலை என்ற களங்கத்திற்கு கருணாநிதி முழு முதற்காரணம் என்பதை வரலாறு தூற்றும், வருங்கால தமிழினம் தூற்றும்’’ என்று தெரிவித்துள்ளார்.