Apr 9, 2011

போலி என்கவுண்டர் சாட்சிகளை கொலை செய்த மோடி அரசு!!

புதுடெல்லி: சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய நேரடி சாட்சியான துளசிராம் பிரஜாபதியின் கொலைவழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இவ்வழக்கை சீர்குலைக்க குஜராத் போலீஸ் முயற்சி மேற்கொள்வதாக அளிக்கப்பட்ட புகார் மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் ஆறுமாதத்திற்குள்ளாக விசாரணையின் முன்னேற்றத்தைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

நீதிபதிகளான பி.சதாசிவம், பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் வழங்கிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொஹ்ரபுதீன் ஷேக் கொலை வழக்கில் சாட்சியான பிரஜாபதியை ஆதாரங்களை அழிப்பதற்காக போலீசார் அவரை கொலை செய்தார்கள்.

இதை விசாரிக்க கோரி அவருடைய மனைவி நர்மதாபாய் சி.பி.ஐ விசாரணையை கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார். பிரஜாபதி வழக்கை விசாரித்து குஜராத் போலீஸ் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளது.

இதனால் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்ற குஜராத் அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. சி.பி.ஐ விசாரிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குதான் இது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

குஜராத், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த போலீசாருக்கு இவ்வழக்கில் தொடர்பிருப்பதுக் குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தியது.

குஜராத்திற்கு வெளியே வசித்த சொஹ்ரபுதீன், பிரஜாபதி கொலை வழக்குகளின் சாட்சிகளை அச்சுறுத்தியும், கடத்திச் செல்லவும் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சரும், வழக்கில் முக்கிய குற்றவாளியுமான அமீத் ஷா குஜராத் போலீஸின் உதவியுடன் முயன்றதாக சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நிறுத்திவைக்க குஜராத் போலீஸிடம் கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சரையும், உயர் போலீஸ் அதிகாரிகளையும் பாதுகாப்பதற்காக சி.பி.ஐ விசாரணையை தடுக்கும் நோக்கத்துடன் அவசர அவசரமாக குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது.

பிரஜாபதி கொல்லப்படுவதற்கு முன்பும், அதற்கு பிறகும் 331 தடவை அமித்ஷா, கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளான டி.ஐ.ஜி வன்சாரா, எஸ்.பி.ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்டவர்களுடன் பேசியதாக சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.

நூறு சதவீதம் கொலைக்கான பின்னணி தெரியவேண்டும்!!

ஏப்ரல் 10, புதுடெல்லி: மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் ராஜ்குமார் மற்றும் பத்திரிக்கை நிருபர் H.C.பாண்டே ஆகியோர் போலீசாரால் கொல்லப்பட்டது குறித்து தகவலறிக்கையை சமர்பிக்குமாறு ஆந்திர அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

நீதிபதி அப்தாப் ஆலம் மற்றும் R.M.லோதா ஆகியோரைக் கொண்ட தலைமை பெஞ்ச் கூறுகையில் இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளரை நாங்கள் விமர்சிக்கவில்லை.

ஆனால் இவ்வழக்கின் மீது நம்பிக்கை கொள்வதற்காக இவ்வறிக்கையை கேட்பதாக தெரிவித்தனர். இந்த வழக்கில் சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நூறு சதவீதம் இந்த இரண்டு நபர்களின் கொலைக்கான பின்னணி தெரியவேண்டும் என்று கூறியுள்ளனர்.

மாநில மனித உரிமை ஆணையம் இவ்விஷயத்தில் விசாரனை மேற்கொண்டால் அதையும் இவ்வழக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட நிருபரின் மனைவி பிநேட்டா பாண்டே தன்னுடைய கணவர் மற்றும் ஆசாத் என்கவுண்டர் வழக்கை மாநில புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டுமென்று அளித்திருந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் இதயத்தில் இடம் பிடித்தது யார்?!!!

ஏப்ரல் 10, எஸ்.எம். பாக்கர், தேசிய தலைவர், தவ்ஹீத் ஜமாஅத் கட்சி. நான் தான் முஸ்லிம்களின் முதல் நண்பன் என்றும், சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்றும் சொல்லிக்கொள்ளும் கருணாநிதியால் நேரடியாக முஸ்லிம்களுக்கு சென்றடையும் திட்டம் ஏதுமில்லை.

உலமாக்களுக்கு முதலில் எம்.ஜி.ஆர்., தான் பென்ஷன் வழங்கினார். வக்பு போர்டுக்கு கட்டடம் கட்ட எம்.ஜி.ஆர்., தான் நிலம் கொடுத்து உதவினார். ஜெயலலிதா கட்டடம் கட்டிக் கொடுத்தார்.

முஸ்லிம்களுக்கு ஜீவாதார பிரச்னை இட ஒதுக்கீடு குறித்து, 1997ம் ஆண்டு லத்தீப், சட்டசபையில் கருணாநிதியிடம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டதற்கு, "லத்தீப் பாய்! என்னை குழப்ப பார்க்கிறீர்கள். முடியாது என்று உங்களுக்கு தெரியாதா' என்று கேட்டவர் தான் கருணாநிதி.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2006ம் ஆண்டு சிறுபான்மை நல பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் புதுப்பிக்கப்பட்டு, அதில் திருத்தம் கொண்டு வர, ஓராண்டு காலம் நிர்ணயம் செய்யப்பட்டது.

கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, ஆணையத்தை கலைத்துவிட்டு, சிறுபான்மை மக்கள் நல ஆணையம் அமைத்து, வரைமுறைகளை ஏற்படுத்த இரண்டு ஆண்டு அவகாசம் அளித்தார். ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.

"நாங்கள், 156 ஜாதியில் ஒரு ஜாதியாக இருக்கிறோம். அதிலிருந்து எங்களை தனியாக பிரித்துவிடுங்கள்' என்று கேட்டதற்கு, முடியாது என்று கருணாநிதி சொல்லிவிட்டார். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடை 7 சதவீதம் ஆக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினோம்.

பயன் ஏதுமில்லை, தி.மு.க., அரசில், முஸ்லிம்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர். வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. தேர்தல் நெருங்கியதும், 5 சதவீத இட ஒதுக்கீடு தருகிறேன் என்கிறார். இது முஸ்லிம்களை ஏமாற்றும் வேலை.

வக்பு போர்டுக்கு சொந்தமான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று வக்பு போர்டு தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில், தி.மு.க., அறிவாலயம் கட்டியுள்ள இடத்தில் வாகன நிறுத்தம் உள்ள இடம், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது. அதை, அந்த இடத்தை வைத்திருந்தவரிடம் எழுதி வாங்கியுள்ளனர்.

ஜெயலலிதா, சிறுபான்மையினரை அடக்கி ஆள நினைக்கவில்லை. ஆனால், தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவாக முஸ்லிம் லீக் மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் மிகப்பெரிய சாதனை, முஸ்லிம்களை தீவிரவாதி என 1996ம் ஆண்டு கருணாநிதி சொன்னது தான்.

1996ம் ஆண்டு கோவையில் நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லவில்லை. 1998ம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடந்தது.

கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லியிருந்தால் அனைவரிடமும் சமாதானம் நிலவியிருக்கும். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 164 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12பேரை தவிர மற்றவர்கள், 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் சிறையில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருப்பர் என்று கருணாநிதிக்கு தெரியாதது இல்லை. எஸ்.எம்.இதயத்துல்லா, தமிழக அமைப்புச் செயலர், அகில இந்திய காங்கிரஸ். தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் கிடைத்துள்ளன.

சென்னை காயிதே மில்லத் கல்லூரிக்கும், மதுரை வக்பு போர்டு கல்லூரிக்கும் 50 ஏக்கர் நிலம் வழங்கி, கல்லூரி கட்டிக் கொடுக்கப்பட்டது. ஷேக் மற்றும் சையது போன்ற இனங்களைத் தவிர, உருது முஸ்லிம் உள்ளிட்ட அனைவரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவித்து, உலமாக்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கி நல வாரியம் அமைக்கப்பட்டது. இலவச சைக்கிள் வழங்கப்பட்டது; சிறுபான்மை கமிஷன் அமைத்தது; அதற்கு அரசு அதிகாரம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அமைத்து, கடன் உதவி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்து, மூன்றே மாதங்களில் அரசாணை வெளியிடப்பட்டது.

இட ஒதுக்கீட்டில் வந்த ரோஸ்டர் பிரச்னை சரி செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்கள் உதவிச் சங்கம் அமைத்து மாவட்டந்தோறும் 10 லட்சம் ரூபாய் மானியத்தை தி.மு.க., அரசு வழங்கியது.

பிற மாநிலங்களில் வழங்கப்படாத சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதற்காக மாநில அரசின் 25 சதவீதத்தை தி.மு.க., அரசு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் உருவான திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு திருத்தம் வழங்கப்பட்டது. கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் வேலை செய்யும் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தி.மு.க., அரசு சம்பளம் வழங்கியது.

சமச்சீர் கல்வி முறையில் அரபி, உருது போன்ற சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த பிரச்னையையும் தி.மு.க.,வே தீர்த்து வைத்துள்ளது. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு தேவைப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளாட்சித் துறையே அதிகாரம் வழங்கலாம் என, சமீபத்திய தேர்தல் அறிக்கை மூலம் தி.மு.க., தெளிவுபடுத்தியுள்ளது.

இரண்டு முஸ்லிம்கள், இரண்டு கிறிஸ்தவர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கி முஸ்லிம்களை முதல்வர் கருணாநிதி பெருமைப்படுத்தினார். ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், மற்ற கட்சிகளை விட கூடுதல் எம்.எல்.ஏ., சீட்டுகள் வழங்கி பரிவு காட்டி வருகிறார்.

இட ஒதுக்கீடு மூலம் நான்கு மடங்கு பொறியியல் கல்லூரி இடங்களும், மூன்று மடங்கு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தன.

எனது கோரிக்கையை ஏற்று, 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்குவேன் என வாக்குறுதி அளித்துள்ளார் முதல்வர். ஆனால், அ.தி.மு.க., அரசு சிறுபான்மையினரை தண்டிக்கும் வகையில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது.

முஸ்லிம்களின் பாரம்பரிய தொகுதியான வாணியம்பாடி இடைத்தேர்தலில், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சீட் வழங்கவில்லை. ஆந்திராவில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார். நான்கு ஆண்டுகளாக, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் இல்லாமல் அ.தி.மு.க.,வின் முந்தைய ஆட்சி நடந்தது.

காப்பியடித்த ஜெயலலிதா!! கண்டுபிடித்த சிதம்பரம்!!

ஏப்ரல் 10, காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா என, ப.சிதம்பரம் பேசினார். கரூர் தொகுதிகளில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில்,

கடந்த 2009ல் லோக்சபா தேர்தலில் சாதனை முன்னிறுத்தி ஓட்டு கேட்டோம். அப்போது, ஆளும்கட்சியாக உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராது என்று ஆரூடம் கூறினர். முடிவில், ஆரூடம் பலிக்கவில்லை.

சாதனைதான் பலித்தது. பணத்துக்கு ஓட்டில்லை. குணத்துக்கு தான் ஓட்டு. ஐந்து ஆண்டு கழித்து திரும்பி பார்த்தால் ஜாதி, மதம், பணம், குடும்பம் எதுவும் தேர்தலில் எடுபடாது.
கடந்த தேர்தலில் தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதி, "அரசியல் ஆத்திச்சூடி' போன்றது.

9,600 கோடி ரூபாய் பட்ஜெட் போடும் தமிழக அரசு, 7,500 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்தது. இதைக்கண்டு, மத்திய அரசும், 72 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை நாடு முழுவதும் தள்ளுபடி செய்தது.

அரசு என்றால் வளர்ச்சியும், வசதியும் இருக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சி ஓர் இருண்டகாலம். இப்போதைய தேர்தல் அறிக்கையில் அம்மிக்கல்லுக்கும், ஆட்டுக்கல்லுக்கும் டாட்டா காட்டியவர் கலைஞர்.

இதை காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. கிரைண்டர் அல்லது மிக்சி தருவதாக கலைஞர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும், "அல்லது' என்பதை நீக்கி, இரண்டுமே தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

சிந்திக்கவும்: ஆமா இவர்கள் எல்லாரும் அவர்கள் பாக்கெட்டில் இருந்து கொடுத்த மாதிரி எல்லாம் மக்கள் பணம். இவர் என்னமோ வாத்தியார் மாதிரி காப்பி அடித்தை கண்டு பிடித்தது மாதிரி. சும்மா எல்லாரும் மக்களை ஏமாற்றும் வேடதாரிகள்.

குஸ்பு உங்கள் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது!!

கலைஞரை தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசிவரும் ஜெயலலிதாவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று நடிகை குஷ்பு பேசினார்.

தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே சிலர் வெளியே வந்து பொய்களை கூறி வாக்கு கேட்கின்றனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஓய்வெடுக்க சென்று விடுவார்கள்.

முதல்வர் கலைஞர்தான் என்றென்றும் மக்களுக்காக ஓயாது உழைக்கும் தலைவராக இருக்கிறார். மக்களின் நலன்களை சிந்தித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கின்றனர். ஆனால் ஜெயலலிதா கூட்டணியை சேர்ந்தவர்கள் எல்லாம் கலைஞரை தனிப்பட்ட முறையிலும் நியாயமற்ற முறையிலும் திட்டி விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்களின் பொய் பிரசாரங்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

சிந்திக்கவும்: தமிழக அரசியல் இப்பொது கலை கூத்தாடிகள் கையில். இப்போதுதான் உங்கள் எல்லார் சுயரூபமும் வெளியே வரும். ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆளும்கட்சி அடங்கிவிடும் என்னென்றால் கொள்ளை அடிக்கவேண்டுமே.

எதிர் கட்சி முதலில் அடித்த கொல்லைக்கு ஜெயிலுக்கு போகாமல் இருக்கணுமே இதனால் அவர்களும் அடக்கி வாசிப்பார்கள். இந்த கூத்துகள் எல்லாம் தேர்தல் சமயத்தில் மட்டும்தான். குஸ்பு அம்மா அடங்குங்கள்!! நீங்கள் யார்? எப்படி அரசியலுக்கு வந்தீங்கள் எல்லாம் மக்கள் பார்த்து கொண்டு இருகிறார்கள்.

பாவம் தமிழக மக்கள் போதிய கல்வி அறிவு இல்லாதாதால் இந்த மக்களை உங்கள் இஸ்டத்திற்கு ஆட்டி படைக்க முடிகிறது. மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் நீங்கள் அம்போதான்.

உங்களுக்கு கொள்கையும் கிடையாது கோர்பாடுகளும் கிடையாது. பணம் கொடுக்கும் பக்கம் பதவி கொடுக்கும் பக்கம் அல்லது வரி எய்ப்பு பண்ண ஏதாவது ஒரு கட்சியில் உங்களை நுழைத்து கொண்டுளீர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

கொஞ்சம் அடக்கி வாசிங்கமா!! உங்கள் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது. எல்லா அரசியல்வாதிகளும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

நியூயார்க் நகரம் கடலில் மூழ்கும் அபாயம்!!

உலகின் வெப்ப அதிகரிப்பின் காரணமாக கடலில் மூழ்கவுள்ள நகரங்கள் வரிசையில் நியூயார்க் நகரம் முன்னணியில் இருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

படிப்படியான வெப்ப அதிகரிப்பு நிகழும் பட்சத்தில் எதிர்வரும் 2100 ம் ஆண்டில் நியூயார்க் முற்றாக கடலில் மூழ்கி விடும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மகாநாட்டில் இது சம்மந்தாமான தகவல் வெளிவந்துள்ளன. நகரம் கடலில் மூழ்கக்கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஏனைய நகரங்களை விட இருபது வீதம் அதிகமான ஆபத்தை எதிர் கொண்டுள்ளது.

ஆர்க்டிக் சமுத்திர பிரதேசம் மட்டுமே குறைந்தளவான பாதிப்பை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக வான்கூவரின் டாஸ்மானியா பிரதேசம் மற்றும் மாலைதீவு என்பனவும் அவ்வாறு கடலில் மூழ்கக் கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

மேலும் உலகின் வெப்ப அதிகரிப்பின் காரணமாக எதிர்வரும் காலங்களில் கடல் சூறாவளி மற்றும் குறுகிய கால புயல் அபாயங்களையும் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Apr 8, 2011

அதிமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும்!! ஜவாஹிருல்லாஹ்!!

தமுமுக தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை.

முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித உள்ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்படும். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்படும்.

முஸ்லிம் ஜமாஅத்துகள் வழங்கும் திருமணப் பதிவுச் சான்றிதழை (தஃப்தர்) சட்டப்பூர்வமாக ஏற்கப்படும். ஆகிய வாக்குறுதிகளை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், கூட்டணியின் தலைவருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அளித்துள்ளார்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களிடமும் அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்தத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளது.

மேற்கண்ட வாக்குறுதிகள் அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. எனவே அக்கோரிக்கைகள் நிறைவேறாது என திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக இயங்கி வரும் பேரா. காதர் மைதீனும் மற்றும் சில வாய்ஜாலக்காரர்களும் பேசி வருகின்றனர்.

இவ்வாறு பேச அவர்களுக்கு அருகதையே இல்லை. 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் இடஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரசும், அதற்கு முழுமுயற்சி எடுப்பதாக திமுகவும் தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டன.

2004ல் பதவியேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நீதிபதி ராஜிந்தர் சச்சார் உயர்நிலைக் குழுவையும், பிறகு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தையும் அமைத்து, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறிக்கைகளையும் பெற்றது.

இந்திய முஸ்லிம்களின் அவலநிலையை ராஜிந்தர் சச்சார் குழு வெளிப்படுத்தியது. ரங்கநாத் மிஸ்ரா ஆணையம், இந்திய அளவில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு, அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என மிகத்தெளிவாகப் பரிந்துரைத்தது.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மேற்கண்ட பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும்கூட அவை இன்றுவரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் நிறைவேற்றப்பட வில்லை.

இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு திமுக சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. தேர்தல் அறிக்கையில் கூறுவிட்டு, முஸ்லிம்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என்பதை ஆணையப் பரிந்துரைகள் மூலம் அறிந்துகொண்டு முஸ்லிம்களை ஏமாற்றுவதும், முதுகில் குத்துவதும், காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்கு கைவந்த கலையாகும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்று குறைபேசும் இவர்கள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, பிறகு சமுதாயத்தை ஏமாற்றிய மோசடிக்காரர்களுடன் ஏன் கூட்டணியில் இருக்கிறார்கள்.

ராஜிந்தர் சச்சார் அறிக்கை குறித்தும், ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரை குறித்தும் இதே காதர் மைதீன் எம்.பி.யாக இருந்தபோது ஏன் நாடாளுமன்றத்தில் பேசவில்லை. அவற்றை நிறைவேற்றப் போராடவில்லை.

இப்போது எம்.பி.யாக இருக்கும் அப்துல் ரகுமானாலும் ஏன் அவை குறித்துப் பேச முடியவில்லை. காரணம் இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் இல்லை. மாறாக, திமுகவின் பிரதிநிதிகள். திமுக சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்கள்.

அஇஅதிமுக, முஸ்லிம் சமுதாயத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவம் தேவை என்பதை முழுமனதாக ஏற்று, திமுக, முஸ்லிம் லீக்கை அடிமைப்படுத்தி உதயசூரியனில் நிற்கவைத்தது போல் அல்லாமல், மனிதநேய மக்கள் கட்சி தனிச் சின்னமான இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிட முழுமையான ஆதரவை அளித்துள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தை வாய்ஜாலங்களால் ஏமாற்றி, நம்பவைத்து முதுகில் குத்தி, அடிமைப் படுத்தும் போக்கையும் இனி முஸ்லிம் சமுதாயம் ஏற்காது. முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவோம் என திமுக கூறுவது பித்தலாட்டம்.

ஏனெனில் ஆட்சியில் இருக்கும்போது அதிகரிக்காமல், தேர்தல் நேரத்தில் கூறுவது ஏமாற்று வேலையன்றி வேறில்லை. முஸ்லிம் ஜமாஅத்களின் உரிமையில் தலையிட்டு, முஸ்லிம் திருமணங்களில் நெருக்கடியை ஏற்படுத்தும், திருமணப் பதிவுச் சட்டத்தைத் திருத்த வேண்டும்.

என 6.3.2010 அன்று சமுதாயப் பிரதிநிதிகள் சட்ட அமைச்சர் துரைமுருகனை சந்தித்து வலியுறுத்தினார்கள். இதில் மாற்றம் செய்யப்படும் என்று வாக்களித்த திமுக அரசு, மாற்றம் செய்யவில்லை. ஏமாற்றம்தான் தந்தது.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தாய்மொழியில் கற்கும் உரிமை பறிக்கப்பட்டது. அதைச் சுட்டிக்காட்டிய பிறகு, தீர்வு காணப்படும்; உருதுமொழியில் கற்க வழிசெய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். அவரது வார்த்தை நீர்மேல் எழுத்தானது.

4.5 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கியதாக திமுக அரசு கூறுகிறது. இதில் 3.5 சதவீதம் அதாவது 15,750 முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதா என வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு வலியுறுத்தினோம். பதிலில்லை ஏனெனில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டிலும் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு சொன்னதைச் செய்யாமல், தொடர்ந்து ஏமாற்றுபவரோடு அணி சேர்ந்து கொண்டு, இன்னும் ஒருபடி மேலே போய் திமுகவிலும் உறுப்பினராகி விட்டவர்கள், முஸ்லிம் சமுதாயத்திற்கான உரிமைகள் பற்றியோ, அதிமுக பற்றியோ பேச அருகதை அற்றவர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

எங்கள் கூட்டணி தேனும், பாலும் போல்!!

ஏப்ரல் 8, கடலூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அவர், திமுக ஆதரவு டிவி'க்களில் என்னைப் பற்றி தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் பணத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த விஜயகாந்த் பணத்துக்கு விலை போகிறவன் அல்ல.

நீங்கள் (தொண்டர்கள்) கூட்டணி வேண்டும் என, சேலத்தில் சொன்னீர்கள். அதன்படி, என் மானசீக குரு எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளேன்.
தி.மு.க., கூட்டணி எண்ணெய் தண்ணீரை போன்றது. ஒட்டாது. நம் கூட்டணி தேனும், பாலும் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு ஜீரோ மார்க் என, குரல் கொடுத்த ராமதாஸ் இப்போது அதை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? டில்லியில் அன்னா ஹசாரே என்ற சமூக சேவகர் ஊழலை ஒழிக்கவும், லோக்பால் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகிறார்.

இது காங்., கட்சிக்கு சேர்த்துதான். அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. அன்னா பெயரை கொண்டவர் டில்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார்.

இங்கு அண்ணா துரை பெயரைச் செல்லி கொள்ளை அடிக்கிறார்கள். சோனியா, இங்கு தி.மு.க., அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்க வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார்.

இவர்கள் செய்தது சாதனைகளா? சோதனையும், வேதனையும் தான் உள்ளது. திமுக தோல்வி என மக்களால் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இந்த தீர்ப்பு திருத்தி எழுத முடியாது’’என்று பேசினார்.

தானே இறைவன்!! சாயிபாபாவும் அவரது அற்புதங்களும்!!

ஏப்ரல் 8, புட்டபர்த்தி : 1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில் மந்திர தந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது, இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம்.

தன்னை சீரடி சாயிபாபாவின் மறு உருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார், அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்.

வீசிய பூக்கள் தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா என்று இருந்ததாம். இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.

இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள் உண்டு. பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு. 1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம் இன்று ஒரு சிறு நகரமாக வளர்ந்து நிற்கிறது.

பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி, பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக வளர்ந்திருக்கிறது.



”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”

இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் சத்ய சாயிபாபாதான்.வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம்.

ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்தியவர்’ சாயிபாபா.

உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில் சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக் கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவரோ மருத்துவத்தின் அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.
சாயிபாபாவை பற்றி பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார்.

இவை எல்லாரும் ஒரு சில பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…

அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.

தமிழக மக்களுக்கு ஓர் வேண்டுகோள்!! பிரதமர் ருத்ரகுமாரன்!!

ஏப்ரல் 8, இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம்.

இந் நேரத்தில் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம்.

தமிழக தோ்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

எமது பேரன்புக்கும் பாசத்துக்கு முரிய தமிழக மக்களே! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எமது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் உங்கள் தொப்புள்கொடி உறவுகளாக வாழும் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம்.

’தானாட மறந்தாலும் தசையாட மறக்காது’ என்பார்கள். உங்களைத்தவிர நமது மக்களின் சோகத்தையும் அவலத்தையும் நாம் யார்க்கெடுத்துரைப்போம்? நேசத்துக்குரிய தமிழக மக்களே! நாகரீக உலகை அதிரச் செய்த பெரும் இனப்படுகொலைக்கு ஈழத் தமிழ் மக்கள் ஆளாகியதை நீங்கள் நன்கறிவீர்கள்.

இந்த இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தில் 80,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே சிங்களத்தால் கொல்லப்பட்டார்கள். வீதிகளில், வீடுகளில், பள்ளிக்கூடங்களில், வழிபாட்டுத்தலங்களில், மருத்துவமனைகளில், திருமணவீடுகளில், இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டார்கள்.

நடக்கும்போது கொல்லப்பட்டார்கள். படிக்கும்போது கொல்லப்பட்டார்கள். உண்ணும்போது கொல்லப்பட்டார்கள். உறங்கும்போது போது கொல்லப்பட்டார்கள். கூடும்போதும் கொல்லப்பட்டார்கள். ஓடும் போதும் கொல்லப்பட்டார்கள்.

இயற்கை கழிக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். இயலாது இருக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக் கொழுத்துவதைப்போல கொல்லபட்டார்கள்.

மூட்டைப்பூச்சிகைள தட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்து காலால் நசுக்குவதைப்போல நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்று கடற்கரையோரத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.

அதுவும் 21 ஆம் நூற்றாண்டில், நவீன ஊடக உலகம் 24 மணிநேரமும் விழிமூடாது பார்த்திருக்கும் காலத்தில், உலகின் 600 கோடி மக்களின் கண்களின் முன்னால், இந்திய உபகண்டத்தில் தமிழகத்துக்கு அருகாமையில் இப் பெரும் இனப்படுகொலையில் இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அண்டையில், ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட 120 கோடி மக்களின் முன்னால் இக் கோரதாண்டவத்தை ஆட சிங்களத்தால் முடிந்திருக்கிறது.

இது இராணுவ உத்தியின் வெற்றி அல்ல. சிங்கள வீரத்தின் வெற்றியுமல்ல. இனப்படு கொலையின் வெற்றி. மக்களைத் தங்குதடையின்றி, மிகப் பெரும் தொகையில் கொன்று குவிக்க முடிந்தமையின் வெற்றி.

எந்த அரசு இந்த மக்களைத் தமது சொந்த மக்கள் என்று உரிமை கொண்டாடியதோ அந்த அரசே அந்த நிராயுதபாணியான மக்களை எறிகணைகளாலும், போர் விமானங்களாலும், யுத்த டாங்கிகளாலும் கொன்று குவித்துப் பெற்ற வெற்றி.

இப்படியான அபகீர்த்தி உடைய ஒரு வெற்றியைத்தான் தமது வரலாற்றுப் பெரும் வெற்றியென மீசை முறுக்குகிறது சிங்களம். இராணுவ அர்த்தத்தில் இது ஒரு கோழைத்தனம் என்றாலும் கூட அரசியல் இராஜதந்திர அர்த்தத்தில் சிங்களம் வெற்றி பெற்றிருக்கிறது.

உண்மையில் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்தது சிங்களமும் சீனாவும்தான். தோல்வியடைந்தது இந்தியாவும் ஈழத் தமிழர்களும். தொப்புள் கொடி உறவுகளான இந்திய மக்களையும் ஈழத் தமிழர்களையும் பிரிப்பதில் சிங்களத் தலைவர்களும் இராஜதந்திரிகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

இது நம்மிரு தரப்பினருக்கும் பெரும் இழப்பாகும். இந்த இழப்புக்கள் நடந்து முடிந்தவை மட்டுமல்ல, எமது உறவு ஒட்டப்படாவிட்டால் இனியும் தொடர்ந்து நடக்கக்கூடியவையும்கூட.
இனி இந்த உறவை ஒட்டப்போவது யார் என்பதே இப்போதய கேள்வி.

இப்பணி முதலில் தமிழக மக்களையும் அடுத்து இந்திய மக்களையும் தலைவர்களையும் இராஜதந்திரிகளையும் சாரும். இதற்கான தொடக்கப் புள்ளியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் இவ்வேண்டுதலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த காலத்தை ஒரு தடவை திருப்பிப் பார்ப்போம். இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது ஈழத் தமிழர் தேசம் பெருந்துயரில் ஆழ்ந்து போனது. மக்கள் தாமாகவே வீடுகளெங்கும், வீதிகளெங்கும் கறுப்புக் கொடிகளும் கண்ணீருமாக தமது வணக்கத்தை செலுத்தி நின்றார்கள்.

இதேபோல் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் மறைவின் போதும் ஈழத் தமிழர் தேசமே பெருந்துயரில் தோய்ந்து போனது. காந்தி, நேரு போன்ற இந்தியப் பெரும் தலைவர்களின் படங்கள் ஈழத் தமிழர் வீடுகளில் மாட்டப்பட்டிருந்த காலம் நம் கண் முன்னாலேயே இருந்தது.

இப்படியாக இந்திய மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் இடையே பாரம்பரிய நட்புறவு இருந்து வந்தமையினை நாமெல்லோரும் அறிவோம். இத்தகையதொரு உறவில் விரிசல் வந்தமை தற்செயலானதல்ல. சிங்கள இராஜதந்திரத்தின் வலைக்குள் இந்தியாவும் ஈழத்தமிழர்களும் சிக்குண்டு பாரிய தோல்விக்கும் பெருந்துயருக்கும் உள்ளாகியிருக்கிறோம்.

இந்த இராஜதந்திரவலைக்குள் இரு தரப்பினரையும் முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான் இழுத்தி வீழ்த்தி சிக்குண்ட வைத்தார் என்பது ஒரு கசப்பான வரலாற்றுப் பேருண்மையாகும்.

2400 ஆண்டுக்கு மேலாக சாணக்கிய இராஜதந்திர பாரம்பரியம் கொண்ட இந்திய இராஜதந்திரமும், தொன்மையும் செழிப்பும் மிக்க தமிழ் நாகரிகமும் இங்கு தோல்வி கண்டன. இதனை இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் டிக்சித் தனது Assignment Colombo எனும் நூலில் ஒப்புக் கொள்கிறார்.

ஜே. ஆர் தம்மை ஏமாற்றிவிட்டார் எனக் கூறும் டிக்சித், பைபிளில் வரும் ’நான் பெரும் பாவி’ எனும் அர்த்தத்தைத் தரக்கூடிய லத்தின் சொல்லாகிய ’Mea Culpa’ எனும் பாவமன்னிப்புக் கோரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தமது தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.

இதுவே பிற்காலத்தில் நம் இரு தரப்புகளும் கண்ட தோல்விகளுக்கு அடிப்படையானதாக அமைந்தது. இது மட்டுமன்றி, சிங்களம் இந்தியாவை எப்போதும் தனக்கு அச்சுறுத் தலாகத்தான் நோக்குகிறது. தமிழர்களை இந்திய விரிவாக்கத்தின் குறியீடாகத்தான் பார்க்கிறது.

இந்தியாவிலிருந்து காலத்துக்கு காலம் படையெடுப்புகளும் பண்பாட்டு விரிவாக்கமும் ஏற்பட்டு வந்த பின்னணியில் சிங்களவர்களிடம் இந்திய எதிர்ப்புவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்நிலையில் தமிழர்களை இந்திய ஆதிக்க விஸ்தரிப்பின் கருவிகளாக நோக்கும் மனநிலையினை சிங்களவர்கள் கொண்டுள்ளனர்.

இத்தகைய பண்டைய சிந்தனையைக் கொண்ட மகாவம்ச இதிகாச மயக்கத்தினுள் சிங்களம் தோய்ந்து போயுள்ளது. இம் மனப்பாங்கைக் கொண்ட சிங்கள இனம் தமிழர்களுக்கு எதிராகத் தொடுத்த போரை உண்மையில் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எதிராக நடாத்திய போராக தமிழ் ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.

ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவின் பெயராலேயே சிங்கள ஆட்சியாளர்களால் கொன்று குவிக்கப்பட்டும் சிறுமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர் என்ற கருத்து ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியதொன்று. இன்று ஈழத்தமிழ் மண் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பகுதியாகவே உள்ளது.

அது இராணுவத்தினருக்குப் போகபூமியாகவும் தமிழ் மக்களுக்கு நரகபூமியாகவுமே காட்சியளிக்கிறது. இராணுவத்தினர், கடற்படையினர், காவற்துறையினர், துணைப்படையினர் எனத் தமிழ் மண்ணில் நிலை கொண்டுள்ள ஆயுதப்படையினரின் தொகையை மொத்தத் தமிழ் குடும்பங்களின் தொகையால் வகுத்து பார்க்க வேண்டும்.

அப்படி வகுத்து பார்த்தால் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆயுதப்படையினன் என்ற வீதத்தில் ஈழத் தமிழ்மண் மொத்த இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை பச்சையாகப் புலப்படும். எந்நேரத்திலும் இராணுவத்தால் மக்கள் இம்சை படுத்தக்கூடிய வகையிலான இராணுவ ஆட்சியே அங்கு நிலவுகிறது.

இன்னும் சில வருடங்கள் தாமதித்தால் இலங்கைத்தீவில் முழுத் தமிழ் மண்ணும் சிங்களமயப்பட்டுவிடும் ஆபத்து துல்லியமாக உள்ளது. அவ்வாறு ஈழத் தமிழ் மண் சிங்களமயமாகி விட்டால் இலங்கைத்தீவு முழுமையாக தமிழக, இந்திய எதிரி நாடுகளின் கொல்லைப்புறமாக மாறிவிடும் ஆபத்தும் அதேயளவு துல்லியமானதாக உள்ளது.

அன்புக்குரியவர்களே! உலகில் ஒரு மக்கள் கூட்டம் சுதந்திரமாக வாழ்வதா அல்லது அடிமைகளாக வாழ்வதா என்பதை உள்நாட்டு நிலைமைகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. உலக அரசுகள் அதுவும் சக்தி மிக்க அரசுகள் ஒரு பிரச்சினையில் எடுக்கும் முடிவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானித்து விடுகின்றன.

ஈழத் தமிழ் மக்களாகிய நாம் இன்று சிங்களத்திடம் தோல்வியடைந்து சிறுமைப்படுவதற்கும் உலக அரசுகள் எடுத்த முடிவுகளே முக்கிய காரணம். இது ஈழத் தழிழ் மக்களின் தோல்வி மட்டுமல்ல தமிழக மக்களின் தோல்வியும் கூடத்தான் என்பதனையும் உங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம்.

இதனால் இந்நிலையினை மாற்றியமைத்து இந்தியா உட்பட உலக அரசுகளின் ஆதரவினை நமது பக்கம் வென்றெடுப்பதனைத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் முக்கியமானது என நாம் கருதுகிறோம்.

அதேவேளை சுயநலன்கள் என்ற அச்சில் சுழலும் இன்றைய உலக ஒழுங்கில் நியாய தர்மங்களை விட உலக அரசுகளின் நலன்களே வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருக்கின்றன என்பதனையும் நாம் நன்கு அறிவோம்.

உலக அரசுகளை நம் பக்கம் வென்றெடுப்பதற்கு தமிழக மக்களின் முதன்மைப் பாத்திரம் இன்றியமையாதது என்பதனை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இதேவேளை உள்நாட்டு நிலைமைகள் ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்தனையும் நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.

இத்தகைய ஒரு சூழலில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் தமிழகத்துக்கு மிக முக்கிமான பங்கு உண்டு. ஈழத் தமிழர் தேசத்தை விழுங்கி விடத் துடிக்கும் சிங்கள இனவாதப்பூதத்திடம் இருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தமிழக மக்களிடத்தில், தமிழக அரசியற் தலைவர்களிடம் உள்ளது என்பதனயும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

சுதந்திரத் தமிழீழம் என்ற தனியரசு இலங்கைத்தீவில் அமைக்கப்படுவதே ஈழத் தமிழ், தமிழக, மற்றும் இந்திய மக்களது நலன்களை ஒரேநேர்கோட்டில் சந்திக்க வைக்கக்கூடியது என்பதனையும் உறுதியாக வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இத்தகையதொரு வரலாற்றுச் சூழலில், இன்றைய தேர்தல் காலத்தில் நாம் சில வேண்டுதல்களை முன்வைக்கிறோம். எம்மால் முன்வைக்கப்பட்டிருக்கும் பின்வரும் கோரிக்கைகளுக்கு தமிழகக் கட்சிகளும் மக்களும் ஆதரவு வழங்க வேண்டுமென மனதார வேண்டிக் கொள்கிறோம்.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய முடியும் என்பதனை வலியுறுத்தியும் தமிழீழத் தனியரசினை அங்கீகரித்தும் தற்போதைய தேர்தலில் தெரிவு செய்யப்படும் தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்தல்.

சிறிலங்கா அரசின் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசினை வலியுறுத்தும் வகையில் தமிழகச் சட்டசபையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றச் செய்தல்.

சுதந்திரத் தமிழீழ அரசினை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில் இந்திய அரசிடம் முன்வைத்து அதனை வென்றெடுப்பதற்காகச் செயற்படல்.
தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப்படுத்துதல்.

இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப்படுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி தமிழக மற்றும் இந்தியச் சிறைக்கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைத்திருக்கப்படும் தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கு மாநில, மத்திய அரசுகளைத் தூண்டுதல்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளக்கட்டியெழுப்பப் படுவதற்குத் தேவையான உதவிகள் மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும் மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுத்தல்.

துயர்தோய்ந்த எமது ஈழத் தமிழர் பிரச்சினையினை தேர்தற்களத்தில் முதன்மைப்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான கௌரவமான வாழ்வுக்கு தோள்கொடுப்பீர்கள் என்ற மேலான நம்பிக்கையுடன் தங்களின் மேலான கவனத்துக்கு இதனைப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.

நன்றி: என்றும் அன்புடன்

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

விஜயகாந்த் டெபாசிட் வாங்கக் கூடாது!!

ஏப்ரல் 9, ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் வாங்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பொன்முடி அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதாவது எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது.

இதேபோல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிவராஜ் அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும்.

இதேபோல் உளுந்தூர் பேட்டையில் முகமது யூசப், கள்ளக்குறிச்சியில் பாவரசு, விக்கிரவாண்டியில் ராதாமணி, சங்கராபுரத்தில் உதயசூரியன் ஆகியோர் வெற்றி பெற வேண்டும். இதற்கு பாமக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Apr 7, 2011

ஊழலை எதிர்த்து காந்தியவாதி சாகும்வரை உண்ணாவிரதம்!!

புதுடெல்லி: முழுமையான லோக்பால் மசோதா தாக்கல் செய்யக்கோரி சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹஸாரே ஜந்தர் மந்தரில் சாகுவரையிலான உண்ணாவிரதம் நடத்தி வருகிறார்.

இதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியுள்ளது. இதனால் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது.

லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன.

எனவே, மசோதா தயாரிப்பு குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மேலும் அக்குழுவின் தலைவராக அன்னா ஹசாரே இருக்கவேண்டுமென்பது ஹசாரே தரப்பினரின் கோரிக்கையாகும்.

இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது.
மனித வளதுறை அமைச்சர் கபில்சிபலுடன் ஹசாரேயின் பிரதிநிதிகளான சுவாமி அக்னிவேஷ் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

அதேவேளையில் போராட்டம் தொடரும் என அறிவித்த ஹசாரே, இந்தியாவிற்கு அச்சுறுத்தல் பாகிஸ்தானிலிருந்து அல்ல. ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளிடமிருந்துதான் என தெரிவித்துள்ளார்.

ஹஸாரே தலைவராகக் கொண்ட உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளதாக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டுமென்பது பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கையாகும். இரண்டு காரியங்கள் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றில் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் பேச்சுவார்த்தைக்கு பிறகு கபில்சிபல் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அன்னா ஹஸாரேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊழலை தடுக்கும் விஷயத்தில் தங்களுக்கு இரண்டு கருத்து இல்லை.

ஊழலை தடுக்க வலுவான பயனுள்ள சட்டம் தேவைப்படுகிறது. தங்களின் போராட்டம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கருதுவதாக சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் 71 வயதான அன்னா ஹஸாரேவுக்கு ஏராளமான அமைப்புகளும், தனிநபர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஊழலை தடுக்க வலுவான லோக்பால் சட்டம் தேவை என சி.பி.எம் கட்சி கூறியுள்ளது.

சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை குழுவின் உறுப்பினர் அருணா ராய் ஹஸாரேக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பிரபல மனித உரிமை ஆர்வலர் தீஸ்டா செடல் வாட் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஜெய்ப்பூர், மும்பை, சட்டீஷ்கர், லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்றன.

பாரதிய ஜனதாவை ஆதரித்து ஹேமமாலினி பிரச்சாரம்!!


நடிகை ஹேமமாலினி சென்னையில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்களான விருகம்பாக்கம் டால்பின் ஸ்ரீதர், துறைமுகம் ஜெய்சங்கர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

மத்தியில் 5 ஆண்டுகள் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தபோது நாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை வாஜ்பாய் நிறை வேற்றினார்.

பொருளாதாரத்தில் நாடு முன்னேறியது. இந்தியாவுக்கு உலக அளவில் கவுரவம் கிடைத்தது. மிகச்சிறந்த நிர்வாகத்தை பா.ஜனதா வழங்கியது.

பாரதீய ஜனதாவால் மட்டுமே ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை தர முடியும். எனவே, பா.ஜனதா வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்கள்’’ என்று பேசினார்.

மாலை மைலாப்பூர் தொகுதியில் வானதி சீனிவாசன், வேளச்சேரி தொகுதியில் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

சிந்திக்கவும்: இவர்கள் ஆட்சியில்தான் 2ஜி ஊழல் விவகாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கார்கில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு சவபெட்டி வாங்கியதில் ஊழல் செய்த கேடு கெட்டவர்கள் இவர்கள். இவர்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள்.

ஒரு கவர்ச்சி நடிகை, கனவு கன்னியை வைத்து பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்க நினைக்கும் கீழ்த்தரமானவர்கள். இவர்கள் இந்தியாவை தலைகீழாக மாற்ற போகிறார்களாம்.

கடை தேங்காயை!! வழி பிள்ளையாருக்கு உடைத்த பிஜேபி!!

ஏப்ரல் 8, புதுடெல்லி: முன்னாள் பா.ஜ.க தலைவர் குஷபாவு தாக்கரேக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு 30 ஏக்கர் நிலத்தை வழங்கிய மத்திய பிரதேச பா.ஜ.க அரசின் நடவடிக்கையை ரத்துச்செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

உமாபாரதி முதல்வராக இருந்தபோது 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி அறக்கட்டளை தொடர்பான சட்டங்களை மீறி அரசு நிலத்தை வழங்கியது.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கைய்யா நாயுடு, கைலாஷ் ஜோஷி ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டது இந்த அறக்கட்டளை.

முற்றிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டிலுள்ள குஷபாவுவின் அறக்கட்டளைக்கு 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வெறும் ஒரு ரூபாய் குத்தகைக்கு அளித்தது மத்திய பிரதேச அரசு.

நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார வசதிகளை மேற்கொள்வதற்காக பஸவத்யா கிராமத்தில் ஒதுக்கியிருந்த நிலத்தை குஷபாவு தாக்கரேயின் அறக்கட்டளைக்கு 33 வருடகால குத்தகைக்கு ம.பி அரசு வழங்கியது.

வைகோ திமுகவுக்கு ஆதரவா? அதிர்ச்சி ரிபோர்ட்!!

ஏப்ரல் 8, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து வாக்களிக்கப் போவதாகவும், உதயசூரியன் உதிக்கட்டும் என்று தலைமை சொல்லியதாகவும் மதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக கூடிய மதிமுகவினர் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியை அவமதித்த ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று தெரிவித்தனர்.

திருமங்கலத்தில் திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, மதிமுக நகர இளைஞரணி செயலாளர் போஸ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உதயசூரியன் உதிக்கட்டும். எங்கள் தலைமை உத்தரவு போட்டுவிட்டது.

எந்த தியாகத்தையாவது செய்து மணிமாறனை வெற்றி பெறச் செய்வோம். அதிமுகவுக்கு பாடம் புகட்ட இதுதான் சரியான நேரம் என்றார். இதேபோல் ராஜபாளையத்தில் நாங்கள் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை தோற்கடிப்போம் என்றார்.

இதேபோல் வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கணேசனை ஆதரித்து மதிமுக தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போங்க திருமா சார் காமடி பண்ணாதீங்கள்!!

ஏப்ரல் 8, எதிர் அணியினர் தாமரை இலை தண்ணீரும் போல உள்ளனர் என, திருமாவளவன் கூறினார்.

கலைஞர் இதுவரை மக்களுக்கு செய்த திட்டங்களுக்கும், செய்யபோகும் திட்டங்களுக்கும் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கிறார்கள்.

இதனால் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். எதிர் அணியினர் தாமரை இலை தண்ணீரும் போல உள்ளனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

கோவையில் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கு விஜயகாந்த் செல்லவில்லை. இதுவே அவர்கள் கூட்டணி எவ்வாறு இருக்கிறது என்று தெரிகிறது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்றார்.

சிந்திக்கவும்: அட போங்க திருமா சார்!! உங்கள் தமிழ் உணர்வும்!! உங்கள் தலித் உணர்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது!! என்னமோ கருணாநிதி அவர் பாக்கெட்டில் இருந்து செலவழித்த மாதிரி எல்லாம் மக்கள் பணம்.

போங்க திருமா சார் காமடி பண்ணாதீங்கள் உங்களுக்கு ரொம்ப மறதி ஜாஸ்தி!! ஒரு ஏழை கருணாநிதி எப்படி இத்துணை பெரிய பணக்காரனாய்!! குடும்பமே பணக்காரர்களாக!! ஒரு மாறுதல் தேவை அம்புட்டுதேன். ஒரே ஆளே கொள்ளை அடித்தால் எப்படி?

அட!! பூமியில் பண்ணிய அட்டூழியங்கள் போதாதா?

ஏப்ரல் 8, சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்கா மற்றும் ரஷிய நாடுகள் விண்வெளி ஓடங்களை அனுப்பி வருகின்றன.

2 நாட்களுக்கு முன்பு ரஷியா தனது "சோயுஸ்" ஓடத்தை விண்வெளி மையத்துக்கு அனுப்பியது.

ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் அலெக்சாண்டர், போரி சென்கோ, அமெரிக்க விண்வெளி வீரர் ரொனால்டு கேரன் ஆகியோர் அதில் பயணம் செய்தனர்.

2 நாள் பயணம் செய்து சோயுஸ் ஓடம் இன்று சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.

3 வீரர்களும் விண்வெளி மையத்தில் இறங்கினார்கள். விண்வெளி மையத்தில் ஏற்கனவே 3 வீரர்கள் தங்கி உள்ளனர். அவர்களுடன் இவர்களும் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர்.

1 மாதம் கழித்து ஏற்கனவே அங்கு தங்கி உள்ள 3 பேர் பூமிக்கு திரும்பி விடுவார்கள்.
இப்போது சென்றுள்ள 3 பேரும் 170 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்து விட்டு பின்னர் திரும்புவார்கள்.

சிந்திக்கவும்: அட மனிதா பூமியில் பண்ணிய அட்டூழியங்கள் போதாதா? இப்ப வான் உலகையும் நாசம் பண்ண போறிங்களா?

போலி அரசியல்வாதிகளும்!! அவர்களது வாக்குறுதிகளும்!!

ஏப்ரல் 7, யானையைப் பிடிப்பேன் பூனையைப் பிடிப்பேன் என்று அள்ளி விடும் இவர்களின் உண்மையான யோக்கியதை என்ன? வாய்க்கு வந்ததையெல்லாம் வாரிவிடும் இவர்களின் யோக்கிதை என்னவென்று பார்ப்போம்.

கடலில் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் குறித்து இந்த கட்சிகள் ஒப்பாரி வைக்கின்றன. ஆனால் எவரும் தாம் ஆட்சிக்கு வந்தால் தனிப்படை அல்லது போலீசு மூலம் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கவில்லை. அதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

மாணவர்களுக்கு இலவசமாய் முட்டை போடுவோம் என்று சொல்லும் இவர்கள் அரசுப் பள்ளிகளை நவீனமாக விரிவுபடுத்தி உலகத் தரமான கல்வியை அரசாங்கமே தரும் என்று சொல்ல முடியவில்லை.

நோயாளிகள் தனியாருக்குச் சொந்தமான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காசு கொடுப்போம் என்று சொல்லும் இவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தனியார் நட்சத்திர மருத்துவமனைகளை விட நவீனமான வசதிகள் கொண்டதாக மாற்றுவோம் என்று சொல்ல முடியவில்லை.

இலவசமாய் அரிசி கொடுப்பேன் என்று சொல்ல முடிந்த இவர்களுக்கு அரிசியை காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை பரவலாக்குவோம் என்று சொல்ல முடியவில்லை.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று ஆரவாரமாக அறித்த கருணாநிதியால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை, அதே நேரம் பன்னாட்டுத் தொழில் சாலைகளுக்கு மனம் கோணாமல் அவர்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்க முடிகிறது.

விவசாயிகள் வளம் பெற உழவர் சந்தைகள் அமைத்தோம் என்று கருணாநிதி தனது குடும்பத் தொலைக்காட்சிகளில் ஆரவாரமாக பிரஸ்தாபிக்கிறார். ஆனால், இங்கே விவசாயமே அழிந்து போயிருக்கிற நிலையில், விதைக்கும் உரத்துக்கும் ஏகபோக பன்னாட்டு நிறுவனங்கள் விதிக்கும் இமாலய விலையின் முன் விவசாய்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

விவசாயப் பொருட்களின் வினியோக சந்தை என்பது ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்ற உள்ளூர் தரகு முதலாளிகள் கையிலும் பன்னாட்டு ஊகபேர வர்த்தகச் சூதாடிகள் கையிலும் இருந்து கொண்டிருக்கும் போது கருணாநிதியோ விவசாய சந்தை திறந்தேன் என்கிறார்.

திருச்சி பஸ்ஸில் 5 கோடி பணம்!! பரபரப்பு!!

ஏப்ரல் 7, திருச்சியில் பிடிபட்ட அந்த 5 கோடி பணம் பற்றி பெரும் பரபரப்பா இருக்கும் நிலையில் அந்த பணம் என்னோடது! ஆனா கணக்கு கிடையாது! என்று கூறியிருக்கிறார் பேருந்தின் உரிமையாளர் உதயகுமார்.

திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ் ஒன்றின் மேற்கூரையில் 5 பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பணத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் சங்கீதா பறிமுதல் செய்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை கண்டோன்மெண்டில் உள்ள ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் செலுத்தினர். தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் உதயகுமரன், அவரது மகன் அருண் பாலாஜி, மேலாளர் பாலு ஆகிய 3 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பஸ்சில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா? யாருடைய பணம், எதற்காக வைக்கப்பட்டிருந்தது? என துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவத்தன்று தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா பணத்தை பறிமுதல் செய்தபோது அங்கு காரில் வந்த 4 பேர் தப்பியோடினர். அவர்கள் யார்? பணம் யாருக்குரியது என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரனையில் எம்.ஜே.டி. உரிமையாளர் உதயகுமார், ‘’அந்த 5 கோடி பணமும் என்னோடதுதான். என்கிட்ட இன்னும் 20 கோடி இருக்கு. ஆனா எல்லா பணத்துக்கும் என்கிட்ட கணக்கு கிடையாது.

நான் 8வது வரைக்கும்தான் படிச்சிருக்கிறேன். அதனால் கணக்கு வச்சிக்கிறது கிடையாது. இதுவரை இன்கம்டாக்ஸ் கட்டாம இருந்தேன். எல்லோரும் சொன்னாங்க. நீ ஒரு நாள் மாட்டப்போறேன்னு. அது போல இப்ப நான் நல்லா வசமா மாட்டிக்கிட்டேன்.

ரியல் எஸ்டேட்டுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கத்தான் இந்த 5 கோடியை எடுத்துக்கிட்டு மெட்ராஸ் போனேன். எலக்‌ஷன் நேரமா இருக்குறதுனாலதான் என்னோட பஸ்சுலேயே டாப்ல கட்டிப்போட்டு எடுத்துக்கிட்டு போனேன்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

Apr 6, 2011

பாரம்பரிய கட்சிகளை புறக்கணிப்போம்!!

April 7th, 2011: கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமையவும், அடிதட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வகையிலும் ஒரு நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இதியாவின் தேசிய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குவது என முடிவு செய்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சிபிஐ (எம்) மற்றும் மாநில அளவிலான கட்சிகளான இந்தியா யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், திமுக, அதிமுக, TMC, அஸ்ஸாம் கன பரிஷத் ஆகிய அனைத்து கட்சிகளுமே ஊழல், குடும்ப ஆட்சி, சமூக விரோத செயல்கள் மற்றும் அடாவடித்தனம் போன்ற விஷயங்களில் ஒத்த கொள்கையுடையவர்களாக உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் இவர்கள் பல ஆண்டு காலமாக ஆட்சி புரிந்து வருகின்றனர். இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள், அவர்களுடன் இருப்பவர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆகியோர் மட்டுமே கடந்த அறுபது ஆண்டுகால ஆட்சியில் பயன் அடைந்துள்ளனர்.

இக்கட்சிகளால் மக்கள் விரக்தி அடைந்திருந்தாலும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டு வேறு வழியில்லாமல் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ மாற்றி மாற்றி வாக்களித்து வருகின்றனர். எனவே மாறி மாறி இந்த பாரம்பரிய கட்சிகளே ஊழல்கள் பல செய்து மாநிலத்தை சுரண்டி ஆட்சி செய்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில் மட்டும் சிபிஐ(எம்) ஏகபோகமாக ஊழல் ஆட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இத்தகைய பாரம்பரிய கட்சிகளால் மக்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லாத சூழ்நிலையிலும் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் வேறு வழியில்லாமல் மாறி மாறி வாக்களிக்கும் இந்த எதிர்மறை அரசியலால் நாட்டை சுரண்டி பிழைக்கும் அரசியல் சாம்ராஜ்யம் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.

எனவே தான் நாட்டு மக்களை பசியில் இருந்தும் பயத்திலிருந்தும் விடுவிக்ககூடிய நேர்மறையான ஆக்கபூர்வமான மாற்று அரசியலை உருவாக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பாடுபட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்த முயற்சியில் ஒரு சில முன்னேற்றம் அடந்துள்ளது.

ஒரு சில மாநில கட்சிகள் மற்றும் தேசிய அளவில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா எழுச்சி பெற்று வருவது ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது. தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி இந்த பாரம்பரிய கட்சிகளுக்கு எதிராக கணிசமான எண்ணிக்கையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கு வாக்களித்தே ஆக வேண்டும் என நிர்பந்தத்தால் தவித்த மக்களின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு நல்ல மாற்றாகவும், மருந்தாகவும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே ஐந்து மாநிலங்களில் நடைபெறும் இந்த தேர்தல் பாரம்பரிய கட்சிகளின் ஊழல் கூட்டணிக்கு நல்ல பாடம் புகட்டுவதொடு, மக்களுக்கு நிவாரணமும் நிம்மதியையையும் கொடுக்கக் கூடிய தேர்தலாக அமையும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் ஊடக தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார் .

டங் சிளிப்பான வடிவேலு!! குழம்பிய திமுகவினர்!!

ஏப்ரல் 7, நத்தம் கோபால்பட்டியில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட நடிகர் வடிவேலுவால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து, நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார்.

அப்போது வடிவேலு பேசும்போது, ‘’தி.மு.க.,வை ஆதரித்தால் உங்கள் இல்லங்களில் விளக்கு எரிந்து சுபிட்சம் உண்டாகும்.

எதிரணியினர் பேச்சை கேட்டு நன்றி மறந்தவர்களாக இருக்க வேண்டாம். எனவே, உங்கள் ஓட்டை விசுவநாதனுக்கு (அ.தி.மு.க., வேட்பாளர்) போடுங்கள்’’ என்றார்.

வடிவேலுவின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் ஆவேசமடைந்து சப்தம் போட்டதால், சுதாரித்துக்கொண்ட வடிவேலு, க.விஜயனுக்கு ஓட்டுப் போடுங்கள் என மாற்றி கூறினார். வடிவேலுவின் பேச்சால் கூட்டத்திற்கு வந்த திமுக தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.

உலகம் முழுவதும் 3 இலட்சத்து 50 ஆயிரம் நர்சுகள் தேவை!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள குழந்தைகளை காப்போம் என்ற அமைப்பு உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் குழந்தைகள் பராமரிப்பு விசயங்களுக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் நர்சுகள் தேவைப்படுகிறார்கள்.

அந்த அளவுக்கு நர்சுகள் தட்டுப்பாடு உள்ளதால் ஆண்டுக்கு 10 இலட்சம் குழந்தைகள் பலியாகின்றன என்பது தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கர்ப்பிணி பெண்கள் தக்க மருத்துவ உதவி, பிரசவ கால நிபுணர்கள் உதவி இல்லாமல் 3ல் ஒரு பெண், அதாவது 4 கோடியே 80 இலட்சம் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

பிரசவ காலத்தின் போது எளிதில் தீர்க்கக்கூடிய சிக்கல்களுக்கு தினமும் ஆயிரம் பெண்களும், 2 ஆயிரம் வரையான குழந்தைகளும் உலகெங்கும் பலியாகிறார்கள்.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 7 இலட்சத்து 49 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அங்கு 26 ஆயிரத்து 825 நர்சுகள் பணிபுரிகிறார்கள்.

ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவில் ஆண்டு தோறும் 4 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அங்கு 46 தாதிகள் தான் இருக்கிறார்கள்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தானில் தான் அதிக அளவில் குழந்தைகள் இறக்கிறார்கள்.

அங்கு பிறக்கும் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளில் 52 குழந்தைகள் இறந்து போய் விடுகின்றன.

ரொம்ப நல்லவரு சொல்றார் கேளுங்கள்!!

எப்ரல் 7, தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.

திமுக ஆட்சியில்தான் மதுரையில் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை பற்றி யார் குறை கூறினாலும் கவலைப்பட போவதில்லை.

மக்களுக்கு ஆற்றும் பணியை திமுக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். இன உணர்வோடு தான் கொடிய ஆட்சி மலராமல் தடுக்க முடியும் என்றார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்றார்.

பிரிட்டனின் புதிய ரூல்ஸ்!! இந்தியர்களுக்கு வேட்டு !!!

ஏப்ரல் 6,பிரிட்டன் நாளை முதல் அமல்படுத்த உள்ள புதிய குடியேற்ற விதிகள் காரணமாக ஏராளமான,இந்திய பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்லாதோர் பிரிட்டனில் குடியேறுவதைக் குறைப்பதற்காக பிரதமர் டேவிட் கேம்ரூன் தலைமையிலான அரசு இந்தப் புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலாவதால் வெளிநாட்டு மாணவர்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான எண்ணிக்கையும் மட்டுபடுத்தப்படும்.

மேலும் ஏற்கனவே பிரிட்டனிலேயே குடியேறியவர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால் இந்திய பணியாளர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது

Apr 5, 2011

தொடர் குண்டு வெடிப்பில் சாட்சிகளை கலைக்கும் உமாபாரதி!!

புதுடெல்லி: சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அளித்த வாக்குமூலத்தை ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா வாபஸ் பெற்றாலும் நீதிமன்றம் அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் என கருதப்படுகிறது.

வழக்கில் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 154-பிரிவின்படி மாஜிஸ்ட்ரேட் முன்பு முன்னர் அளித்த வாக்குமூலத்திலிருந்து வாபஸ் பெறுவது அவ்வளவு எளிதானல்ல என சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் முன்பு அளித்த வாக்குமூலத்தை வேண்டுமானால், நிர்பந்தம் மற்றும் சித்திரவதையின் காரணமாக வாக்குமூலம் அளித்தேன் என கூறி மறுத்தால் நீதிமன்றம் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.

ஆனால், மாஜிஸ்ட்ரேட் முன்பு அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்காது. மட்டுமல்ல, அஸிமானந்தாவின் மீது நீதிமன்றத்தை தவறாக புரிந்துக்கொள்ள வைத்ததாக இன்னொரு வழக்கும் தொடரப்படும்.

முன்னாள் பா.ஜ.க தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி உமாபாரதி அஜ்மீர் சிறையில் வைத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் சந்தித்த பிறகே அஸிமானந்தா குண்டுவெடிப்பு வழக்குகளில் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு நாச வேலைகளில் தங்களுடைய தலைவர் இந்திரேஷ்குமார் உள்ளிட்டவர்களுக்கு பங்குண்டு என அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நிம்மதி பெருமூச்சுவிட்டது.

அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏவும், சி.பி.ஐயும் வழக்குகளை விசாரிக்கின்றன என்ற எண்ணத்தில் ஆர்.எஸ்.எஸ் இருந்து வந்தது.
ஆனால், வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் கண்டுபிடிக்கப்பட்டன.

சில ஆவணங்கள் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களிலிருந்து கிடைத்ததாகவும், அவை சங்க்பரிவார் தலைவர்களின் தொடர்பை ஊர்ஜிதப்படுத்துவதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

குண்டுவெடிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்கிய கடைகளையும் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனடிப்படையில் அஸிமானந்தா வாக்குமூலத்தை வாபஸ் பெற்றாலும், குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவாரத்தின் பங்கு நிரூபிக்கவியலும் என என்.ஐ.ஏ உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பான விபரங்களை இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைத்திருந்தது.

இந்தியாவும்!! போலி என்கவுண்டரும்!!

ஸ்ரீநகர்: கடந்த ஆண்டு கஷ்மீரின் மச்சில் பிரதேசத்தில் 3 இளைஞர்களை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது.

இதில் தொடர்புடைய ராணுவத்தினரின் கைவசம் சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்கள் இருந்தனவா? என்பதுக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென மாநில மனித உரிமை கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

அப்துல் ரஷீத் எம்.எல்.ஏ அளித்த மனுவைத் தொடர்ந்து மாநில மனித உரிமை கமிஷனின் உறுப்பினர் ஜுவைத் கவுஸ் விசாரணைக்கோரி மாநில அரசிற்கு சிபாரிசுச் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி ஷஹ்ஸாத் கான், ரியாஸ் அஹ்மத் லோன், முஹம்மது ஷாஃபி லோன் ஆகியோரை ராணுவம் போலி என்கவுண்டரில் கொலைச் செய்தது.

நிறைய சம்பளம் தருவோம் எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். என்கவுண்டர் சம்பவம் விவாதத்தை கிளப்பியதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் ராணுவத்தின் வாதம் பொய்யானது.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிட்ட ராணுவம் தொடர்புடைய மேஜரை இடைநீக்கம் செய்தது. கமாண்டிங் ஆபீஸர்களை வெளியேற்றியது.

பதவி உயர்வு, விருது ஆகியவற்றிற்காக ராணுவம் போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியதாக மனித உரிமை கமிஷனின் உறுப்பினர் கவுஸ் குற்றஞ்சாட்டுகிறார்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதமும், குடும்பத்தினருக்கு அரசு வேலையும் அளிக்கவேண்டுமென கவுஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கமும்!! முஸ்லீம் வாக்குகளும்!! ஒரு பார்வை!!

எப்ரல் 6, புதுடெல்லி :மேற்குவங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் முஸ்லிம்களை கவருவதற்காக பல தந்திரங்களை மேற்கொண்டு வருகின்றன.

மேற்குவங்காளத்தில் 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது.

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி 141 தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு 147 இடங்கள் தேவை.

ஆகவே, 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் மேற்குவங்காள அரசியலில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் எனக் கருதப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 25.25 சதவீத முஸ்லிம்கள் மேற்குவங்கத்தில் வசிக்கின்றனர்.

நடைபெறவிருக்கும் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 48 தொகுதிகளில் முஸ்லிம் மக்கள்தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.

17 தொகுதிகள் 40-50 சதவீதத்திற்கு இடைப்பட்டதாகும். 30-40 சதவீத முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 26 ஆகும். 50 தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள்தொகை சதவீதம் 20-30 ஆகும்.

அட்டவணைப்படுத்த ஜாதியினருக்காக ஒதுக்கப்பட்ட 35 தனி தொகுதிகளில்(ரிசர்வ் தொகுதிகள்) முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாகும். 20 தனித் தொகுதிகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 20-30 சதவீதமாகும்.

ஆறு தனித் தொகுதிகளில் 30-40 சதவீதமாகும். மூன்று தனித் தொகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தேசிய கட்சிகளில் 115 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 78 பேருக்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு உள்ளது. 38பேர் வெற்றிப் பெறுவது உறுதி எனக் கருதப்படுகிறது.

மக்களவை-உள்ளாட்சி தேர்தல்களில் முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பாதிப்பால் இடதுசாரிகள் தற்பொழுது 56 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகள் 44 முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாய்ப்பளித்தனர்.

228 வேட்பாளர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் 39 முஸ்லிம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆறுபேர் பெண்களாவர். 65 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் 21 பேர் முஸ்லிம்களாவர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமான முர்ஷிதாபாத்தில் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். முர்ஷிதாபாத்தில் 18 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மத்தியில்தான் போட்டி நிலவுகிறது.

தமிழகத்துக்கு கருணாநிதி என்ன? செய்தார்!!

எப்ரல் 6, தஞ்சை மாவட்டம், பேராவூரணி தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் நடிகர் அருண் பாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பேராவூரணி தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது. அடிப்படை வசதிகள் இல்லை. காவிரி பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அடிப்படை வசதி, குடிநீர் வசதிகளை ஜெயலலிதா நிவர்த்தி செய்வார்.

தி.மு.க.வினர் ஊர், ஊராக சென்று பொய் சொல்லி வருகிறார்கள். விஜயகாந்த் தனித்து நின்றால் அவர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். நான் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து இருந்தால் கொண்டாடி இருப்பார்கள். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் திண்டாடி வருகிறார்கள்.

என்னை தி.மு.க.வோடு கூட்டணி சேர்க்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் நான் அ.தி.மு.க.வோடு தான் கூட்டணி என்று கூறிவிட்டேன். என்னைப்பற்றி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து குடிநீர் கொண்டுவந்து சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தார். கருணாநிதி 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார். அனைவருக்கும் கிடைத்ததா?

திருவாடானை தொகுதி மக்கள் அதற்கு தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர்ரகுமானுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி ஆட்சி அமைந்தால் குடிநீர் தட்டுப்பாடு, தடையில்லா மின்சாரம், மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு தமிழகம் ஒரு வளமையான பூங்காவனமாக, முதன்மை மாநிலமாக மாறும்’’ என்று பேசினார்.

கலைஞ்சர் டிவி! சன் டிவி!! கொள்ளையோ கொள்ளை!!

கலைஞர் டிவிக்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474-தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம்.

சில விளம்பரங்கள்: 3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன.

அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.

அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இது குறித்து செய்தி ஒன்று: சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ. தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.

கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும்!

சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள். கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.

அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன? சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி,

கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள்? இதில் விநோதம் என்னவென்றால் அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும்?)

அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?

மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி. சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை

கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம்!!

எப்ரல் 6, உலகம் வெப்பமாகி விட்டதால் வழக்கத்தை விட பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கி விட்டன.

அவை கடந்த 350 ஆண்டுகளை விட தற்போது கூடுதலாக உருகி வருகிறது. தென் அமெரிக்காவின் படகோனியாவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை. அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன.

இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும்.

அதே போன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப்பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும்.

அதே நேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உருவாகும். இந்த ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ஆபெர்ட்வித் பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டனர்.

இந்த பனிப்பாறைகள் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக உருகுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்மாவும்! கேப்ட்டனும்! ஒரு மேடையில் பிரச்சாரம்!!

எப்ரல் 5,; கோவையில் நாளை ஏப்ரல் 6ல் நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதிமுக தலைமைக்கழகம் இதை அறிவித்துள்ளது.

கோவை சிதம்பரம் பூங்காவில் நாளை மாலை தேர்தல் பிரச்சார கூட்டம் நடக்கிறது. ஜெயலலிதா, பிரகாஷ் காரத், விஜயகாந்த், பரதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கு பெறுகின்றனர்.

விஜயகாந்த் பிரச்சார பயண பட்டியலின் படி நாளை தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் இந்த திடீர் முடிவால் விஜயகாந்த் தஞ்சாவூர் பிரச்சாரத்தை தள்ளிவைத்துவிட்டு நாளை கோவை செல்கிறார்.

சென்னையில் எஸ். டி. பி. ஐ. யின் தேர்தல் பிரச்சாரம்!

சென்னை 5 ஏப்ரல்: சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள ஏழுகிணறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை அன்று எஸ்.டி.பி.ஐன் சார்பாக மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக எந்த கட்சிகளோடும் கூட்டணி இல்லாமல் எஸ்.டி.பி.ஐ தனியாக மொத்தம் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

அதில் மிக முக்கியமாக கருத்தப்படும் துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ-ன் தென் சென்னை மாவட்ட தலைவர் பி.முஹம்மது ஹூஸைன் போட்டியிடுகின்றார்.

நேற்று திங்கட்கிழமை (04.04.2011) அன்று மாலை சரியாக 7.00மணி அளவில் சென்னை ஏழுகிணரு பூங்கா அருகில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அவர்கள் பேசும்போது, இந்த நாட்டில் அரசியலுக்கு ஏற்பட்ட அவல நிலையை பட்டியலிட்டு பேசினார்.

தொடங்கப்பட்டு வெறும் 18 மாதங்களே ஆன நிலையில் எஸ்.டி.பி.ஐ நாடு முழுவது 20ற்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான வேகத்தில் வளர்ந்து வருவதாக கூறினார்.

மேலும் ராஜஸ்தானிலும், மேற்குவங்காளத்திலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் சென்ற ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் கணிசமான வெற்றியை எஸ்.டி.பி.ஐ பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் எஸ்.டி.பி.ஐக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார்.

துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் நமக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காக தொண்டர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இருக்கின்ற எல்லா திராவிடக்கட்சிகளையும், மததுவேஷ கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள் என்றும் இனி எதிர்காலம் எஸ்.டி.பி.ஐற்குத் தான் என்று கூறினார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்ம் முஹம்மது நாஜிம் அவர்கள் பேசும் போது, இந்த நாள்வரை மற்றவர்களை போன்று நாமும் மாறிமாறி இரு திராவிடக்கட்சிகளை ஆதரித்து வந்தோம், ஆனால் அவர்கள் நமக்கு துரோகம் இழைத்ததை தவிற வேறு ஏதும் செய்து விடவில்லை.

14 ஆண்டு காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு இம்முறை அரசியல் களம் காணும் நமது வேட்பாளர் முஹம்மது ஹுஸைன் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தனக்கும் வேட்பாளருக்கும் இடையே இருந்த பழைய பசுமையான நினைவுகளை பொதுமக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

சாதாரண ஏ.சி மெக்கானிக்காக இருந்து வரும் நமது வேட்பாளர் அதிக தியாகங்களை செய்யக்கூடியவர் என்றும் மக்களுக்காகவே, சமூக அக்கறைக்காகவே தமது முழு வாழ்க்கையையும் அற்பணித்தவர் என்று கூறினார்.

குடிகாரர்களும், ஊழல் வாதிகளையும் ஒதுக்கி விட்டு இந்த முறை மக்கள் அனைவரும் எஸ்.டி.பி.ஐற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மற்றுமொரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் எஸ்.டி.பி.ஐற்கு உள்ள தொடர்பு என்ன என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கினார்.

ஊழல் அற்ற ஆட்சி வரவேண்டும், மக்கள் ஆட்சி ஏற்படவேண்டும், லஞ்ச லாவண்யம் ஒழிய வேண்டும் என்றால் மக்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினார்.

அதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் நீண்ட அலோசனைக்கு பிறகு, நிறைய கருத்துக்கணிப்பிற்கு பிறகு சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து, அதன் மூலம் தொடங்கப்பட்டதே எஸ்.டி.பி.ஐ ஆகும். இனி வரக்கூடிய காலங்களில் இந்தியாவை ஆளக்கூடிய அளவிற்கு எஸ்.டி.பி.ஐ தனித்துவமிக்க கட்சியாக, மக்கள் சக்தியாக மாறும் என்று கூறினார்.

இறுதியாக உரையாற்றிய துறைமுக தொகுதி வேட்பாளர் மற்ற கட்சிகளில் இருக்கும் வேட்பாளர்களுக்கு அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்துத்தான் அவர்களுக்கு சீட் ஒதுக்கப்படுகிறது.

பொதுமக்கள் மத்தியிலேயே, பிரச்சார நேரத்தின் போதே தங்களுடைய‌ தலைவர்களிடம் அடிவாங்குவது, தகாத வார்த்தைகளால் திட்டு வாங்குவதும், கீழ்த்தரமாக நடத்தபடுவதையும் காண முடிகிறது.

இப்படி இருக்க இவர்களால் சட்டமன்றத்திற்குச் சென்று மக்களுக்காக குரல் கொடுக்க முடியுமா? ஆகவே மக்களுக்காக பேசக்கூடியவர்களைத்தான் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இறுதியாக தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் புஹாரி அவர்கள் நன்றி உரை கூற பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

மக்களிடம் வசூல் செய்துதான் அரசியலிலே இறங்கி இருக்கின்றோம். எனவே தாங்களால் இயன்ற அளவு பொருளாதார உதவி செய்யுங்கள் என்று கூறிய போது எஸ்.டி.பி.ஐன் தொண்டர்கள் அல்லாத பல பொதுமக்கள் பொருளாதார உதவி செய்தனர். இக்கூட்டத்திற்கு ஐனூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது எத்தனையோ அரசியல் கட்சியின் வேட்பாளர்களின் கணக்குகளை பார்வை இட்டிருக்கின்றோம் எவறுமே சரியான செலவு கணக்கை காண்பித்ததில்லை நீங்கள் மட்டும் தான் உண்மையான கணக்குகளை காண்பித்திருக்கிறீர்கள் என்று கூறி தனது தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Apr 4, 2011

ஜெயாவிடம், விஜய் அப்பா! கேட்டதென்ன?

எப்ரல் 5, நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் திமுக மீது அதிருப்தி கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் விஜய்யின் மக்கள் இயக்கத்தலைவர் ஜெயசீலனுக்கு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க விருப்பம் இல்லாமல் இருந்தது. அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மறுத்து வந்தார்.

நாளுக்கு நாள் ஜெயசீலனின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால் அவரை தலைவர் மற்றும் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

மேலும், நமது இயக்கத்தினர் ஜெயசீலனுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம், என்றும் அறிவித்தார்.

இதனால் ஆத்திரம் கொண்ட ஜெயசீலன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, ’ஜெயலலிதாவை சந்தித்த எஸ்.ஏ.சி. இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தனக்கு மதுபான ஆலை வைக்க லைசென்ஸ் தரும்படி கேட்டிருப்பதாக சந்தேகப்படுகிறேன்.

இந்த தேர்தலில் நிற்க சீட் கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர் கேட்டது இந்த லைசென்சைதானாம்’’ என்றும் கூறி அதிரவைத்திருக்கிறார்.

விஜயகாந்த் ஒரு ஜானிவாக்கர்! அரசியல் கோமாளி சுவாமி சாடல்!!!

ஊ‌ட்டி ஏப்ரல் 4-ஊ‌ட்டி‌யி‌ல் ஜனதா க‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி செ‌ய்‌தியாள‌ர்களின் சந்திப்பின் போது நடிக‌ர் ‌விஜயகா‌ந்‌த் ஒரு ஜா‌னிவா‌க்க‌ர் எ‌ன்றா‌ர்.

தே.மு.‌தி.க.வு‌க்கு முர‌சு ‌சி‌ன்ன‌த்து‌க்கு ப‌திலாக மதுபா‌ட்டி‌ல் ‌சி‌ன்ன‌த்தை ஒது‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர். நடிக‌ர் ‌விஜயகா‌ந்‌த் பேசுவது யாரு‌க்கு‌ம் பு‌ரிய‌வி‌‌ல்லை என்றும் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கூறினார்

தே‌‌ர்த‌ல் ‌பிரசார‌த்‌தி‌ன்போது ‌விஜயகா‌ந்‌த் அநாக‌ரீகமாக நட‌ந்து கொ‌ள்‌கிறா‌‌ர் எ‌ன்று‌ம் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கு‌ற்ற‌ம்சா‌ட்டினார்.

ஜெயல‌லிதா த‌ே‌ர்த‌ல் அ‌றி‌க்கையில் மாணவ‌- மாணவ‌ர்க‌ளி‌‌ன் எ‌தி‌ர்கால‌த்தை கரு‌த்‌தில‌் கொ‌‌ள்ளாம‌ல் த‌ே‌ர்த‌ல் அ‌றி‌க்கை வெ‌‌‌ளியி‌ட்டு‌ள்ளா‌ர் என்றும் அவ‌ர் கூ‌றினா‌ர்.

மகாத்மா காந்தி புத்தகமும் ! சர்ச்சையும்!!!

நாக்பூர் ஏப்ரல் 4-அமெரிக்க எழுத்தாளர் ஜோசப் வேலிவெல்ட் மகாத்மா காந்தி பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்தில் காந்தி இருபால் உறவு கொள்பவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் மற்றும் பல்வேறு அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் புத்தகம் தொடர்பாக மராட்டிய சட்ட மேலவையில் விவாதம் நடந்தது. அப்போது பல உறுப்பினர்களும் மராட்டிய மாநிலத்தில் சர்ச்சைக்குரிய புத்தகத்தை தடை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதை போல் குஜராத் மாநிலத்திலும் அப்புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இப்புத்தகத்திற்கு மத்திய அரசு தடைவிதிக்காது என்று சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று நாக்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்த புத்தகத்தை எழுதிய அமெரிக்க எழுத்தாளரே மகாத்மாவைப் பற்றி அவதூறான கருத்துகள் எதுவும் எழுதவில்லை என மறுத்துள்ளதாக அவர் கூறினார்.

நாடு முழுவதும் கடும் விளைவுகளை ஏற்படுத்திய காந்தி தொடர்பான அந்த கருத்துகள், மொழிபெயர்ப்பாளர்களால் எழுதப்பட்ட புத்தக விமர்சனம் என்று கூறினார் மொய்லி.

புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுபவை தான் எழுதியதல்ல என அந்த எழுத்தாளரே விளக்கம் அளித்துள்ளதால் அதைத் தடை செய்யும் கேள்விக்கே இடமில்லை என தெரிவித்தார்.

Apr 3, 2011

இன்று இரவு சனியை பார்க்கலாம்!!!

புது தில்லி, ஏப். 3: திங்கள்கிழமை இரவு சனி கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இந்திய கோளியல் சங்கத்தின் செயலர் ரகுநந்தன் குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: "எந்த ஒரு கிரகமும் சூரியனுக்கு நேர் எதிராக இருக்கும்போது அந்த கிரகம் சூரிய ஒளியால் பிரதிபலிக்கப்பட்டு ஒளிரும்.

திங்கள்கிழமை சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று எதிராக ஒரே நேர்கோட்டில் வருகின்றன.

திங்கள்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயம் வரை சனி கிரகத்தை அதன் வளையங்களுடன் வெறும் கண்களால் காணலாம்.

வானத்தின் கிழக்கில் ராசி மண்டலத்தின் 6-வது பகுதியான கன்னி ராசிப் பகுதியில் சனி கிரகம் மஞ்சள் நிறத்தில் தெரியும். இதை தொலைநோக்கிகள் மூலம் பார்த்தால் வளையங்கள் மிகத் தெளிவாகத் தெரியும்.

378.1 நாள்களுக்கு ஒரு முறை, சனி கிரகம் இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வரும். அதாவது 30 ஆண்டுகளில் 29 தடவை இவ்வாறு நேர்கோட்டில் வரும். அப்போதெல்லாம் நாம் சனியை வெறும் கண்களால் கண்டுகளிக்கலாம்.

இதற்கு முன் சென்ற ஆண்டு (2010) மார்ச் 22-ம் தேதி இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வந்தது இனி அடுத்த ஆண்டு (2012) ஏப்ரல் 15-ம் தேதி இவ்வாறு வரும்' என்றார் அவர்.

முதுகு வலியும்!! மருத்துவமும்!!

எப்ரல் 4, இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.

நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.

சியாடிக்கா என்றால் என்ன? நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.

முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.

ஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.
அறிகுறிகள்

‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.

இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.

அதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை “கன்ட் ரோல்” செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ஏறினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம்.

காரணங்கள்:
• முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.

இதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.

• ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.

• சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.

• ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.

வீட்டு வைத்தியம்:
• விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

• பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

• புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

• சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

• விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.

• ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.
ஆயுர்வேத அனுபவம்

முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.

முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.
மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.

ஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.

உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள்:
1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.

2. குப்புற படுக்கக் கூடாது.

3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.

4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.

5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.

6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.

7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.

8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.

9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.

10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.

12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.

13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.

14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.

15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.

16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.

உணவு முறை:
• குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
• பழைய உணவுகளை தவிர்க்கவும்.
• கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.
• எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.
• இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
• இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.
• இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.
• இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.

ஹீரோ அல்ல!! அவர் என்றுமே ஜீரோதான்!!

எப்ரல் 4, நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் போது அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

வடிவேலுவின் இந்த விமர்சனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து இரவில் வடிவேலு பேசிக்கொண்டிருந்தார்.

’விஜயகாந்த் ஹீரோ அல்ல; அவர் என்றுமே ஜீரோதான்’’ என்று வடிவேலு பேசியபோது கூட்டத்தில் கல்வீச்சு நடந்தது. இந்த கல்வீச்சில் வடிவேலுவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஆட்சி மாற்றத்தால் பயன் இல்லை!! அரசியல் மாற்றம் தேவை!!


எப்ரல் 4, காரைக்கால்: நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அவர், ‘’காங்கிரஸ் கட்சியை அழித்து ஒழிப்பதும், வருங்கால சந்ததியினருக்கு காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சி இருந்தது என்ற நினைவே தெரியாத வகையில் அதனை வேரறுப்பதும்தான் நமது லட்சியம்.

இலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதி யுத்தத்தில் என் இன மக்கள் கொத்து கொத்தாய் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாம் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் சிங்களர்கள் மீதான கோப நெருப்பை தனது உடலில் அள்ளித் தெளித்துக் கொண்டு தனது உயிரை தியாகம் செய்த தம்பி முத்துக்குமாரின் கனவு காங்கிரசை அழிப்பது.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ஒரே நல்ல தலைவர் ரங்கசாமி மட்டும்தான்.
ஆனால் அந்த நல்ல மனிதரையும் கட்சிக்குள் வைத்துக் கொள்ளத் தெரியாத கட்சி காங்கிரஸ் கட்சி. அவரும் பொறுத்திருந்து பொறுத்திருந்துதான் பார்த்தார்.

அவரால் முடியாத பட்சத்தில் கட்சியை விட்டு வெளியே வந்து விட்டார். என்.ஆர். காங்கிரஸ் பிறந்தது. காங்கிரஸ் செத்து விட்டது. அந்த கட்சி இனிமேல் வாழப்போவது இல்லை.

தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். அய்யா ரங்கசாமி கடைசி வரை காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற ஒன்றைத்தான் நாங்கள் கேட்கிறோம். அவர் கடைசி வரை காங்கிரசை எதிர்த்து நின்றால் நாங்கள் அனைவரும் உங்கள் தோளோடு தோள் நிற்போம்.

550 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொலை செய்தபோது இந்திய அரசு என்ன செய்தது? தமிழக அரசு என்ன செய்தது? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தரவு கூறினார்ளா?

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக்கொலை செய்வதை அனுமதிக்க செய்ய மாட்டோம் என்று கண்டனக்குரல் எழுப்பினார்களா? இல்லையே! எத்தனையோ தமிழச்சிகளின் தாலியை அறுத்த காங்கிரஸ் கட்சியை வேரறுக்காமல் விட மாட்டோம்.

ஆட்சி மாற்றத்தால் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை. எனவே அரசியல் மாற்றம் ஒன்றுதான் வழி. ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முதல் படி காங்கிரஸ் கட்சியை இந்த நாட்டை விட்டு அழிப்பதுதான்.

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வேறோடு அழித்து விரட்டுங்கள். அதற்கு எங்கெங்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்களோ அத்தனை பேரையும் தோற்கடியுங்கள்’’என்று பேசினார்.

தமிழீழ அரசாங்கத்தின் அறிவிப்பு!!

எப்ரல் 4, : நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத 29 உறுப்பினர்கள், மார்ச் 26, 2011ல் இருந்து தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளனர்.

சபாநாயகர் பொன் பாலராஜன் இது தொடர்பில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு அறிவித்ததோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்ளக விவகார அமைச்சகத்திற்கும் அறியத் தந்துள்ளார்.

சபாநாயகர் அறிவித்தலின் பிரகாரம், கீழ்வரும் உறுப்பினர்கள் தங்களது இழந்து விட்டார்கள் என்பதனை மக்களுக்குத் அறியத்தருகின்றோம். கனடா: திரு. பாலன் இரட்ணராஜா, திரு. ஈசன் தெய்வேந்திரன் குலசேகரம், திரு. மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன.

திரு. சுரேஸானந்த் ரட்ணபாலன், திரு. எஸ். திருச்செல்வம், திருமதி. வனிதா ராஜேந்திரம். பிரித்தானியா: திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, செல்வி. ஜெயவாணி அச்சுதன், திரு. கார்த்திகேசன் பரமசிவம், திரு. மகேஸ்வரன் சசிதர், திருமதி. வாசுகி சோமஸ்கந்தா.

ஜெர்மனி: திருமதி. வித்தியா ஜெயசங்கர், திரு. சந்திரபாலா கணேசரட்ணம், திரு. முகுந்தன் இந்திரலிங்கம், திரு. நடராஜா திருச்செல்வம், திரு. இராசையா தனபாலசுந்தரம், திரு. ரேணுகா லோகேஸ்வரன், திரு. பரமு ஆனந்தசிங்கம்.

பிரான்சு: திரு. சரவணமுத்து சசிகுமார், திரு. சிவகுரு பாலச்சந்திரன், திரு. தர்மேந்திரன் கிரிசாந். நோர்வே: திருமதி. ஜெயசிறி பாலசுப்பிரமணியம், திரு. சிவானந்தன் முரளி, திரு. சிவகணேசன் தில்லையம்பலம்,

டென்மார்க்: திரு. பொன்னம்பலம் மகேஸ்வரன், திரு. ரேமன் ராஜீவ், திருமதி. சுகேந்தினி நிர்மலநாதன். ஒஸ்ரெலியா: திரு. சிறீபாலன் சேரன் இத்தாலி: திரு. மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்.

மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தமிழீழ அரசுடன் தங்களை முறைபடி இணைத்து கொள்ளாததால் இவர்கள் தானாகவே பதவி இழக்கிறார்கள். நன்றி. நாகலிங்கம் பாலச்சந்திரன் உள்ளக விவகார அமைச்சர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

நான் யாரையும் அடிக்கவில்லை!! அது கிராபிக்ஸ்!!

எப்ரல் 4, தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், ’இன்றைய தினம் ஏழைகளின் அடிவயிறு பற்றி எரிகிறது. ஏழைகளின் இந்த வயிற்றெரிச்சல் நிச்சயம் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாது.

’’தமிழகத்தில் எமர்ஜென்சி நடக்கிறது என்று கருணாநிதி சொல்கிறார். அரசு அதிகாரிகள் சரியாக வேலை செய்வது தவறா?. அனைத்து மக்களும் நிம்மதியாக நட மாடுகிறார்கள்.

எல்லாமே சரியாக தான் நடக்கிறது. அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்தால் எமர்ஜென்சி என்கிறார். நீங்கள் சென்றால் மட்டும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும். மற்றவர்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா?. அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும்.

2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி தரவில்லை. எல்லா விஷயத்தை பற்றியும் பேசுகிறார், ஆனால் விலைவாசி உயர்வை பற்றி மட்டும் பேசவில்லை. ஒருகிலோ அரிசி ரூ.1-க்கு கொடுத்தார்.

பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். அதனை செய்யாமல் இப்போது ஓட்டுபோடுங்கள் பருத்தி கொட்டை, புண்ணாக்கு தருகிறோம் என்று கூறுகிறார்கள்.

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி, விற்பனை விலையை உயர்த்தாமல் இடைப்பட்ட விலையை அரசு ஏற்கவேண்டும். ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும். அதுவும் காவல்துறையில் காட்சிகள் உடனே மாறும்.

நான் யாரையும் அடிக்கவில்லை. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் செய்து ஒளிபரப்புகிறார்கள். தேர்தல் அதிகாரியை அடித்ததை ஒளிபரப்ப வேண்டியது தானே. கருத்து கணிப்பையும் மக்களுக்கு டி.வி.யில் காண்பிக்கலாமே. ஏன் காட்டவில்லை’’ என்று பேசினார்.