Apr 2, 2011

இலங்கையை வென்ற வல்லரசு இல்லை புல்லரசு!!

கிரிக்கெட் என்கிற இந்த போதையை உண்டாக்கி, நாட்டில் நடக்கும் அத்தனை கொடூரங்களையும் மறைத்து மக்களின் மனங்களில் தேசபக்தி என்கிற வெறியை ஊட்டி மக்களை சிந்திக்கவிடாமல் ஆக்குவதே இதன் நோக்கம்.

கொலை செய்வது அலுத்துப் போகும் போது கொஞ்சம் விளையாட்டு தேவைப்படுகிறது அவர்களுக்கு. உள்நாட்டு குளிர்பான சந்தையை கொலை செய்த கோக்,பெப்சி. வாகனங்களை இறக்கி விட்டு வயல்வெளியை படுகொலை செய்யும் டாடா.

சிறுவணிகத்தின் விழிகளைத் தோண்டி தன் முகம் ஜொலிக்கும் ரிலையன்ஸ் இவர்களின் இழவெடுத்த மினுமினுப்பில் உலகக் கோப்பையில் உனது இரத்தம். இனக்கொலைக் கழுகுகள்
பிணச்சுவை திகட்டி மூக்கைத் தேய்த்து இளைப்பாற மும்பை வான்கடே வருகின்றன.

கொலை செய்தே ரன் குவிப்பதில் இந்தியாவில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி!மோடி!! படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில் இலங்கையில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே!
கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க கொலைகார ஆட்டம் தயார்.

இதோ இந்த நேரத்தில்… சுற்றி வளைக்கப்பட்ட முட்கம்பிகளுக்குள் ஈழத்தமிழரின் உணர்வுகள் மிதித்து அடித்து விளையாடும் சிங்கள இனவெறி…

இதோ இந்த நேரத்தில்… சொந்த நிலத்தை தாங்கிப் பிடிக்க எத்தனிக்கும் ஒரிசா-சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் உயிரை குறிவைத்து வீசப்படும் இந்தியக் குண்டுகள்…

இதோ இந்த நேரத்தில்… இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கோட்டிற்குள் பந்தாடப்படும் ஒரு காசுமீர் பெண்ணின் பிணம்…

விளையாட்டிற்கு இடையூறாக குறுக்கே விழும் பிணங்களைத் தாண்டி ரசிக்கக் கிளம்பி விட்ட இந்திய கிரிக்கெட் ரசிகனே மைதானத்திற்கு வெளியே எது நடந்தாலும் தானுண்டு, வேலையுண்டு என்று சமூக பொறுப்பற்று இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களே

கட்டாயம் உன் கிரிக்கெட் வெறி மன்மோகன்சிங்குக்குத் தேவை… விளம்பரகாரன் டெண்டுல்கர் பக்கம் உன் கவனத்தைத் திருப்பி விட்டு அந்நிய முதலாளிகள் பக்கம் இந்திய வளங்களை வீசி யெறியும் அவர் திறமை ஹர்பஜன் சிங்குக்கே கைவராதது…

“ஹௌ ஈஸ் தட்” என்று அலறும் விளையாட்டு வீரனின் குதிப்பில், “ஜெய் ஸ்ரீராம்” என்ற வெறியைப் பார்த்து அத்வானியும் கிரிக்கெட்டை ரசிக்கலாம், விளாசப்படும் ஒவ்வொரு பந்திலும் குஜராத்தில் வெட்டியெறியப்பட்ட இசுலாமியர்களின் தலைகளாய் அத்வானியின் கண்களுக்கு களிப்பு தரலாம்.

ராசபக்சே ரசிப்பதற்கும் நியாயமுண்டு… இந்திய ராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்டு எந்த இடம் பார்த்து குண்டு வீச வேண்டுமென்று களம் அமைத்து இந்தியா வழிநடத்திய ஆட்ட நுணுக்கங்கள் இறுதிப் போட்டியின் ஆடுகளமாய் ராசபக்சே கொலைகாரனுக்கு ரசிப்பு தரலாம்..

சொந்த நாட்டின் பாடுகளம் அனைத்தும் அந்நியன் கைக்கு பறிபோவதைப் பற்றி அக்கறையில்லை. கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் மட்டும் இந்தியா ஜெயிக்கிறதா என்பதுதான் உன் கவலை. இந்த ரசனையை விட பயங்கரமானது வேறு உண்டா?


நன்றி - துரை.சண்முகம்.

அரசியல் முன்னோட்டம் பார்கிறார் ரஜனி!!

எப்ரல் 2, அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு. காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை ஆதிரிப்பதென மாவட்ட ரஜ்னிகாந்த் ரசிகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

காஞ்சி நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து கிளை மன்றங்களும் வி.சோமசுந்தரத்திற்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.

இந்த தேர்தலில் ரஜினிகாந்த நேரிடையாக இறங்காமல் தனது ரசிகர் மன்றத்தை செயல்பட அனுமதிக்கிறார். இதன் மூலம் ஒரு அரசியல் முன்னோட்டத்தை பார்கிறார் என்று தகவல்கள் தெரிவிகின்றன.

திமுக எப்போது உடையும் என்று ரஜினி காத்து இருப்பதாகவும், ஸ்டாலின், அழகிரி பிரச்சனை தலை தூக்கும் போது இவர் அரசியலில் நுழைவார் என்றும் கருதப்படுகிறது.

சீமானுக்கு தைரியம் உள்ளதா? காமடி பீசு கேள்வி!!

எப்ரல் 2, சீமானுக்கு தைரியம் உள்ளதா?; எஸ்.வி. சேகர் பாய்ச்சல். நடிகர் எஸ்.வி. சேகர் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ’சென்னை மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து நான் கவலைப்படவில்லை.

தேர்தலுக்கு பின் நிச்சயம் தங்கபாலு கவலை படுவார். சினிமா இயக்குனர் சீமான் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்போம் என்கிறார்.

அவருக்கு தி.மு.க. வேட்பாளர்களையோ, பா.ம.க. வேட்பாளர்களையோ தோற்கடிப்போம் என்று கூற தைரியம் உள்ளதா? இதே சீமான் கடந்த சில ஆண்டுகளுக்கு தம்பி என்ற சினிமாவை எடுத்தார்.

அதில் நடித்தது சிங்கள பெண் பூஜா. அப்போது சீமானுக்கு தமிழன் என்ற உணர்வு எங்கே போய்விட்டது’’ என்று கேள்வி எழுப்பினார்.

தமிழர் விரோத கூட்டணி!!

எப்ரல் 2, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 5-ந் தேதி கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

அன்று கேரளாவில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். சென்னையில் தேர்தல் பிரசாரம் முடிந்ததும், சோனியா காந்தி புதுச்சேரியில் 6-ந் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

சிங்கா ! சிங்கலியா உச்சகட்ட போட்டி யாருக்கு இந்த பம்பர் !!!

மும்பை, ஏப். 2- இந்தியாவும் இலங்கையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் உச்சகட்ட போட்டியை சந்திக்கவுள்ளது யாருக்கு இந்த பம்பர் இன்னும் சிலமணிநேரத்தில் தெரிந்துவிட்டும்

கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றது இல்லை. 2003-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வீழ்த்தி இந்தயா 2-வது முறையாக உலக கோப்பை கனவை நனவாக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் கோப்பையை வெல்லும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை எப்படி வீழ்த்தும் என்ற பரபரப்பில் ரசிகர்கள் உள்ளனர். இறுதிப்போட்டி ஆர்வம் இந்தியா முழுவதும் களைகட்டி உள்ளது.

இந்தியாவின் வெற்றிக்காக நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இறுதிப்போட்டியை காண வி.ஐ.பி.க்கள் மும்பையில் திரண்டு உள்ளனர். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோர் இறுதிப்போட்டியை நேரில் ரசிக்கிறார்கள். ராகுல்காந்தியும் இறுதிப் போட்டியை பார்க்க மும்பை செல்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆசாமில் பிரசாரம் செய்வதால் இறுதிப்போட்டியை பார்க்க செல்லவில்லை. அவர் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

மொகாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி போட்டியை அவரும், ராகுல்காந்தியும் நேரில் ரசித்தனர். இதேபோல மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் திரண்டு உள்ளனர்.

Apr 1, 2011

வைகோ வெளியேறியதால் பாதிப்பில்லை!!

எப்ரல் 2, அதிமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதால் பெரிய பாதிப்பில்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் ரங்கராஜன் கூறினார்.

தேர்தல் கமிஷன் அனைத்து விதிமுறைகளையும் சுணக்கமின்றி அமல்படுத்த வேண்டும். சென்னை ஐகோர்ட்டும், சந்தேகத்தின் பேரில் எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என, தேர்தல் கமிஷனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, தேர்தல் கமிஷன் உறுதியாக தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
இலவசங்கள் எப்படி வழங்க முடியும்? கேபிள் டிவியை எப்படி அரசுடைமையாக்குது என்பது குறித்து, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

வைகோ கூட்டணியில் இருக்க நானும், என் கட்சியினரும், அ.தி.மு.க.,வும் முயற்சி எடுத்தோம். அம்முயற்சி பலன் அளிக்கவில்லை. வைகோ வெளியேறியதால் பெரிய பாதிப்பில்லை என்றார்.

சுவாமி அஸிமானந்தா!! குற்றம் நிரூபிக்கபடும்!!

புதுடெல்லி: மக்கா மஸ்ஜித் உட்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவிற்கு எதிரான தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க தேசிய புலனாய்வு ஏஜன்சியால்(என்.ஐ.ஏ) முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அஸிமானந்தா குண்டுவெடிப்பு வழக்கில் பல்டியடித்தது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ப.சிதம்பரம் இதனை தெரிவித்தார்.

அஸிமானந்தா கிரிமினல் வழக்கில் குற்றவாளி என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவரைவிட நம்பத்தக்கது தேசிய புலனாய்வு ஏஜன்சியாகும்(என்.ஐ.ஏ) என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பயங்கரவாத வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் அளித்திருந்த அஸிமானந்தா, சில தினங்களுக்கு முன்பு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் தன்னை சாட்சியாக இணைத்ததை தள்ளுபடிச் செய்ய வேண்டுமெனக்கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தான்.

ஏமனில் பத்து லட்சம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி!!

எப்ரல் 2, ஸன்ஆ: 32 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் பத்து லட்சம்பேர் திரண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் போராட்டத்தில் முதன்முறையாக இத்தகையதொரு நிகழ்வு நடந்தேறியுள்ளது. நகரம் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது. வீதிகள் நிறைந்து வழிந்தன.

ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்கள் எதிர்ப்பாளர்களின் கூடாரங்களில் தொங்கவிடப்பட்டிருந்தன. இதற்கிடையே உள்ளூர் பத்திரிகையாளர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக ஜெர்னலிஸ்ட் யூனியன் உறுப்பினர் ஜமால் அனாம் தெரிவித்தார்.

ஏடன்,தாஸ்,ஹழரல் மெளத் ஆகிய இடங்களிலும் அதிபருக்கு எதிராக பிரம்மாண்ட பேரணிகள் நடந்தன. எதிர்ப்பாளர்கள் ஸன்ஆவிற்குள் நுழைவதை தடுக்க அதிபரின் ஆதரவாளர்கள் தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

தமிழக அரசியல் நடிகர்களின் கையில்!!

எப்ரல் 2,: தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நடிகை குஷ்பு கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தை முடித்து விட்டு ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திரைப்படத்துறையை பொறுத்தவரை தி.மு.க. அரசு ஏராளமான உதவிகள் செய்து இருக்கிறது. தற்போது திரைப்படம் தயாரிக்கும் எந்த தயாரிப்பாளராவது, தி.மு.க. அரசை குறை கூற முடியுமா?.

நானும் திரைப்பட தயாரிப்பாளர்தான். திரைப்படங்களை குறை கூற என்றே சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் திரைப்படங்களுக்கு பிரச்சினை. முதலில் அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நடிகர்களாக ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். ஒவ்வொரு தலைவரை பிடிக்கும். எனவே யாரும் யாருடனும் சேரக்கூடாது என்று கூற முடியாது.

தி.மு.க.வில் சேர்ந்திருக்கும் நடிகர் நடிகைகளை பார்த்தால், தி.மு.க.வின் கொள்கைகள், தலைவர் கலைஞரின் சிறப்பான வளர்ச்சி திட்டங்களால் கவரப்பட்டு சேர்ந்து இருக்கிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க. அணியில் சேர்ந்து இருப்பவர்கள் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக இணைந்திருக்கிறார்கள். விஜயகாந்த் முதல் சிங்கமுத்துவரை அனைவரும் அப்படித்தான். இவ்வாறு குஷ்பு கூறினார்.

கிரிக்கெட் போட்டியை காண இலங்கை தூதர் அழைப்பு!!!

வாஷிங்டன்:ஏப்ரல் 2, இந்தியா-இலங்கை மோதும் உலக கோப்பைக்கான இறுதிப்பபோட்டியை கான அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி வாஷிங்டன் நகரில் உள்ள இலங்கை தூதர் இல்லத்தில் மெகா ஸ்கிரின் வைக்கப்பட்டு அதன் மூலம் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்ப படஉள்ளது.

மேலும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இலவச காலை சிற்றுண்டியும் வழங்கப்பட உள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரவேற்க உள்ளதாக இலங்கை தூதர் க அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கருணாநிதிக்கு சோப்பு போடும் இளங்கோவன்!!!

ஈரோடு, ஏப். 2, முதல்- அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்தது.

இதில் முன்னாள் மத்திய மந்தி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் மிகச்சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்த திட்டங்கள் எல்லாம் நூற்றுக்கு நூறு நிறைவேற்றப் படும் என்று நம்புங்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி சொன்னதை அப்படியே நிறைவேற்றி வெற்றிகொடி நாட்டி இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

சென்ற தேர்தல் அறிக்கையின்போது ஏழைகளுக்கு இலவச கலர் டெலிவிஷன் வழங்கப்படும் என்று சொன்னபோது நானும், ப.சிதம்பரமும் சாத்தியம் இல்லை என்று பேசிகொண்டோம். பின்னர் பொருளாதார மேதையான சிதம்பரம் இரவு முழுவதும் யோசித்து விட்டு சாத்தியம் என்றார்.

கலைஞர் சிறந்த எழுத்தாளர். அரசியல் வாதிகளில் எல்லாம் மிகச்சிறந்த அரசியல்வாதி. கடுமையான உழைப்பாளி. அவர் சிறந்த பொருளாதார நிபுணர். என் உள்மனதில் இருந்து சொல்கிறேன் கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ ரேசன் அரிசி வழங்கினார். இப்போது மாணவர்களுக்கு லேப்- டாப் தருவேன் என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எல்லாம் இலவசம் என்று சிவப்பு சட்டைக்கார்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

ஆனால் கல்கத்தாவில் ஒரு ரூபாய்கு ஒரு கிலோ அரிசி தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள். இந்த ஆட்சியில் நல்ல பால காரியங்கள் தொடர வேண்டும். எனவே தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் களை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் விவகாரம்: மாடல் பூனம் மீது வழக்கு!!!

போபால், ஏப்.1- உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால், தான் நிர்வாணமாக ஓடுவதாக அறிவித்த மாடல் அழகி பூனம் பாண்டே மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆர்.கே. பாண்டே என்னும் வழக்கறிஞர் போபால் முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

மாடல் பூனம், தனது நடவடிக்கையின் மூலம் குறிப்பிட்ட சமூகத்தினரை கேவலப்படுத்துகிறார் என்று அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

"பூனம் கூறியது போல் அவர் நிர்வாணமாக ஓடவில்லை என்றாலும், குறிப்பிட்ட சமூகத்தினரை கேவலப்படுத்திய அவரை தண்டிக்க வேண்டும். இந்தியக் கலாசாரத்தையும் அவர் அவமானப்படுத்திவிட்டார்." என்று வழக்கறிஞர் ஆர்.கே. பாண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் "கிங்பிஃஷர்" நிறுவனம் வெளியிட்ட காலண்டரில் புகைப்பட மாடலாக பூனம் தோன்றியுள்ளார்.

இதையடுத்து, பூனம் நிர்வாணமாக ஓடுவதற்கு மல்லையாவும் தூண்டுதலாக இருந்தார் என்றதன் அடிப்படையில் அவரது பெயரையும் தனது மனுவில் ஆர்.கே. பாண்டே குறி்ப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பா.ம.க., வேட்பாளரிடம் "மல்லுகட்டிய' மூதாட்டி!!!

ஏப்ரல் 2, மயிலம் : "முதியோர் பென்ஷன் கொடுக்க வரல... இதுக்கு மட்டும் வந்திட்டீங்களா...' என்று மயிலம் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் ஓட்டு கேட்டபோது, மூதாட்டி ஒருவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் பிரகாஷ், மயிலத்தில் வீடு வீடாகச் சென்று நேற்று ஓட்டு கேட்டார். அப்போது மூதாட்டி ஒருவர், "முதியோர் பென்ஷன் வாங்கித் தரல... இதுக்கு மட்டும் வந்துட்டீங்களா...' என்று கேள்வி கேட்க, வேட்பாளர் மிரண்டு போனார். அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள், "பாட்டி... அவரு இல்ல இவரு...' என்று சமாதானம் செய்துவிட்டு, பாட்டியிடமிருந்து வேட்பாளரை மீட்டு, அடுத்த வீட்டிற்கு பிரசாரம் செய்ய புறப்பட்டனர்.

அட நம்ம போலி சிறுத்தை!! பாயாது பதுங்கும்!!

சென்னை, ஏப்.1- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வரும் இலங்கை அதிபர் ராஜபட்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்ச, இந்தியாவுக்கு வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப்படுத்துவதாகும்.

பிரபாகரனின் தாயார் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றபோது, இந்திய எம்.பி., என்ற நிலையிலும் இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என தடைவிதித்தார்.

இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபட்ச இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியா வருகிறார்.

இந்திய அரசை தொடர்ந்து அவமதித்து வரும் ராஜபட்சவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக்குரியதாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது.

சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபட்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபட்சவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபட்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருப்பதிக்கு வருகைதரும் ஹிட்லர்!!

எப்ரல் 1, இந்தியா இலங்கை இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை பார்க்க இலங்கை அதிபர் தீவிரவாதி ராஜபக்சே மும்பை வருகிறான்.

முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் தீவிரவாதி ராஜபக்சே திட்டமிட்டுள்ளான். இதற்காக ராஜபக்சே இன்று சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறான்.

பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறான். அங்கு சுமார் 1மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறான்.

பின்னர் இரவில் திருப்பதி மலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்குகிறான். பின்னர் காலை அங்கிருந்து புறப்பட்டு மும்பை செல்கிறான்.

தொடர் குண்டு வெடிப்பு வழக்குகள் என்.ஐ.ஏ இடம் ஒப்படைப்பு!!

ஜெய்ப்பூர்: அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ)யிடம் ஒப்படைக்கப்படும். ராஜஸ்தான் மாநில முதலமைச்சரின் அனுமதி கிடைத்தவுடன் வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்படும்.

25 தினங்களுக்கு முன்பு வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆராய்ந்ததாக கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே.தேப் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப்படை(ஏ.டி.எஸ்), சட்ட அமைச்சகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகு கோப்பினை முதல்வருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் இதற்கு காலதாமதமில்லாமல் அனுமதியளிப்பார் என நம்புவதாகவும் தேப் தெரிவித்தார்.

அஜ்மீர், மக்கா மஸ்ஜித், மலேகான் உள்ளிட்ட வழக்குகளில் பயங்கரவாத ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கிருப்பதால் இவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

கண்களுக்கும் பயிற்சி கொடுங்களேன்!!

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஓர் அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும்.

அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது உள்ளங்கைகள் இரண்டையும் நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அப்படி செய்யும் போது உள்ளங்கைகளை எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும். மேலும் இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.

அதாவது ஈரத் துணியை பின்பக்க கழுத்தில் போட்டு விட்டு சிறிது எண்ணெய்யை புருவங்களில் தடவி விட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும் போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும் ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால் அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணணியில் இருந்து பெற்று வருகிறது.

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால் எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும்.

அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

Mar 31, 2011

மக்கள் பதிலடி தருவார்கள்!! மு.க.ஸ்டாலின்!!

எப்ரல்1,மதுரை: தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என, துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றார். மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற வீண் கெடுபிடிகளுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளதால்தான், ஜெயலலிதாவால் அதிமுக தேர்தல அறிக்கையை பற்றி பிரச்சாரம் செய்ய முடியாமல், வேறு எதையோப் பற்றி பேசி வருகிறார் என்றார்.

வடிவேலுக்கு தகுதியில்லை!! நடிகர் சிங்கமுத்து ஆவேசம்!!!

சென்னை, ஏப்.1: சினிமாவில் காமெடியில் இணைந்து கலக்கிய நடிகர் வடிவேலுவும் சிங்கமுத்துவும் நிலப் பிரச்சினையில் எதிரிகள் ஆனார்கள்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் குதித்தார்.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிவரும் வடிவேலு, விஜயகாந்தை ஒவ்வொரு கூட்டத்திலும் வெளுத்து கட்டுகிறார். வடிவேலுக்கு எதிராக களம் இறங்க சிங்கமுத்துவும் முடிவு செய்தார்.

நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார். உடனே அவரை பிரசார களத்தில் இறக்க அ.தி.மு.க. முடிவு செய்தது. அதன்படி நேற்று மாலை சென்னையில் பிரசாரத்தை தொடங்கினார்.

ஆயிரம்விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து கிரீம்ஸ் ரோட்டில் பிரசாரம் செய்தார். வடிவேலுக்கு பதிலடி கொடுக்க சிங்கமுத்து களம் இறங்கியதால் தேர்தல் பிரசார களம் அனல் பறக்கிறது.

2ஜியில் தப்பிப்பதுதான் அவர்கள் கவலை. புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு) வந்துள்ளார். அவரைப்பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்து விட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர் விமர்சிக்கிறார்.

நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப நிதானமாய் இருப்பாய் என்பது தெரியாதா? உன்னைப் பற்றி எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய்.

மதில் மேல் பூனையாக இருந்த தொகுதிகளிலும் மாற்றம்!!

எப்ரல் 1, அ.தி.மு.க. அணிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அந்த அணி தலைவர் ஜெயலலிதா கொள்கையை பற்றியோ, வாக்குறுதிகள் மற்றும் திட்டங்கள் பற்றியோ பேசாமல் தனிப்பட்ட முறையில் தரமற்ற விமர்சனங்களை செய்து வருகிறார்.

எந்த ஒரு மாநிலத்திலும் இத்தகைய அரசியல் அநாகரீகம் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் நடுநிலையோடு செயல்படுவதாக கூறி வரும் தேர்தல் ஆணையம் ஜெயலலிதா பேசுவது பற்றி கண்டு கொள்வதில்லை.

எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி. லட்சிய கூட்டணி. ஆனால் அ.தி.மு.க., நடிகர் சேர்ந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. நடிகரை கூட்டணியில் சேர்த்ததால் பொதுமக்களின் ஆதரவு மாறி தமக்கு பாதிப்பு வந்துவிடும் என்று அ.தி.மு.க. தலைமை நினைக்கிறதாம்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. மதில் மேல் பூனையாக இருந்த சில தொகுதிகளிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று அணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அவர்கள் ஒட்டு மொத்தமாக தேர்தல் ஆணையத்தை நம்பி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி கெடுபிடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கோயில் கட்ட இடம் தானம் ! மகபூப் பாஷா !!!

மதுரை: ஏப்ரல் 1, மதுரை எம்.கே.புரத்தில் முனியாண்டி கோயில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள, 200 சதுர அடி இடத்தை தானமாக வழங்கி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வலுசேர்த்திருக்கிறார் மகபூப்பாஷா(40). இப்பகுதியைச் சேர்ந்த இவர், பீரோ தயாரிப்பு கம்பெனி நடத்துகிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்துக்கள் செல்வதற்காக தனது இடத்தை தானமாக வழங்கி அப்போதே ஒற்றுமையை வெளிப்படுத்திஇருக்கிறார் இவரது தாத்தா நீருஉசேன். இவருக்கு சொந்தமான இடத்தில், சிலர் முனியாண்டி கோயிலை சிறியதாக கட்டினர். இக்கோயிலை விரிவுப்படுத்த திட்டமிட்ட நிர்வாகிகள் இடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்து மகபூப்பாஷாவை அணுகினர்.

அவர் "மதங்கள் வேறாக இருந்தாலும், சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கோயிலுக்கு இடத்தை தானமாக வழங்கினால் தான் சரியாக இருக்கும்' என்றார். இதை தொடர்ந்து, நேற்று மதியம் அரசரடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கோயில் நிர்வாகிகள் தங்கச்சாமி, கருப்பையா, ராஜூ ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை சார்' என்று நம்மை நெகிழ வைத்தார்.

தமிழ்ஈழ போராட்டம் விரைவில் துவங்கும்!!

எப்ரல் 1, கன்னியாகுமரி : பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடித்ததாகவோ, அழித்தாகவோ எந்த ஆதாரமும் இல்லை என கன்னியாகுமரியில் வைகோ கூறினார். அப்போது தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன், இலங்கை கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

உலகின் புகழ் பெற்ற கன்னியாகுமரி கடற்கரையின் கடல் அலையின் ஓசை இதே கடலின் மறு பக்கமான வெல்வெட்டி துறையில் எதிரொலிக்கும். உலகில் இதுவரை கண்டிராத ஆயுத போராட்டத்தை நடத்தியவர் பிரபாகரன்.

அவரது தாயார் பார்வதியம்மாள் சாம்பலை 31ம் நாளான கடந்த 22ம் தேதி மெரினா கடலில் தூவினோம். சிங்கள ராணுவம் பார்வதியம்மாள் இறுதி காலத்தில் கூட நிம்மதியாக சாக விடாமல் அலை கழித்து அந்த துயரத்தில் இறந்து போனார்.

சிதையில் கூட சிங்கள ராணுவம் மூன்று நாய்களை சுட்டு கொன்று அந்த பிணத்தை வீசியது. இதைவிட தமிழனுக்கு என்ன? அவமானம் வேண்டும். இலங்கை போரில் கடைபிடிக்க வேண்டிய ஜெனிவா ஒப்பந்தத்தை கூட ராணுவம் கடைபிடிக்கவில்லை.

ஆனால் பிரபாகரன் ஜெனிவா ஒப்பந்தத்தை கடைபிடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறனுக்கு ஈழ தமிழர் ஒருவர் விக்லிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவலை தெரிவித்தார்.

இதில் சிங்கள ராணுவம் பிரபாகரனை பிடித்ததாகவோ, அழித்தாகவோ எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளது. ராஜபட்ஷே போர்குற்றவாளிஎன அறிவிக்க சர்வதேச கோர்ட்டில் வாதாடுவோம். இதற்காக போரடுவோம். பொதுமக்களை ஒன்று திரட்டுவோம்.

தமிழ்ஈழ போராட்டம் விரைவில் துவங்கும். இதற்காக லட்சகணக்கான இளைஞர்கள் கடல் தாண்டி செல்லும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை சாராத இளைஞர்கள், மாணவர்களை ஒன்று திரட்டுவோம். இவ்வாறு வைகோ கூறினார்.

பேஸ்புக்’, 'டிவிட்டர், பற்றி ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் !!!!

சில புரட்சிக்கு வழி வகுத்த சமூக வலைதளங்களான ஃபேஸ்புக்’, 'டிவிட்டர் போன்றவற்றை எண்டெர் டெய்ன்மெண்டுக்காக பயன்படுத்துபவர்கள் அவசியம் படியுங்கள்.

ஆர்குட்’, 'ஃபேஸ்புக்’, 'டிவிட்டர்’... இவையெல்லாம்தான் இன்றைய ஃபேஷன் பரபரா!
நீ எந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருக்க..?' என்ற கேள்விக்கு, ''எதுலயும் எனக்கு அக்கவுன்ட் இல்ல...' என்று சொல்பவர்களை, டெக்னோ உலகில் இருந்து ஏதோ கண்காணாத தொலைவில் இருப்பவர்களைப் போல பரிகாசத்துடன் பார்ப்பதுதான் இப் போதைய நிலைமை!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவில் இருந்து... பக்கத்து வீட்டு ப்ளஸ் டூ பெண் வரை ஆண்களையும், பெண்களையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் தொழில் நுட்ப ஜனரஞ்சக ஹீரோவான இந்த சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் ஆரம்பிக்கும் ஒருவர்... அதில் தன் புகைப்படம், இ-மெயில் ஐ.டி, தொலைபேசி எண் போன்றவற்றை விரும்பினால் கொடுக்கலாம்.

அதைப் பார்த்து அந்த வலைதளத்தில் உலவும் மற்றவர்கள் (பள்ளி, கல்லூரி, அலுவலக நட்புகள் என ஏற்கெனவே அறிமுகமானவர்களும் இருக்கலாம், புதியவர்களும் இருக்கலாம்), அவருடன் ஃப்ரெண்ட்ஷிப் வைக்க விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்புவார்கள். ஏற்பதும்... ஏற்காததும் அவரவர் விருப்பம்.

ஏற்றுக்கொண்டால்... புகைப்பட பரிமாற்றங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், வாழ்த்துப் பரிமாற்றங்கள் என்று அந்த நட்பு கலகலதான்! இத்தகைய நட்பு... ஓர் எல்லையோடு இருந்தால் பிரச்னை இல்லை. எல்லை தாண்டும்போது... லகலகதான்! குறிப்பாக, பெண்கள் பலரும் அந்த இணைய உலகின் முட்கரங்களில் சிக்கிக் கொண்டு சீரழியும் செய்திகள் பகீரிடச் செய்கின்றன.

அமெரிக்காவில் ஒரு பெண், 'குடும்பத்துடன் டூர் போறேன் கைஸ்! ஒரு வாரம் ட்விட்டர் ஃப்ரெண்ட்ஸுக்கு பை!’ என்று 'ட்விட்’ செய்துவிட்டுச் சென்றார். டூர் முடிந்து வீடு திரும்பியவருக்கு... அதிர்ச்சி! துடைத்து வைத்தாற்போல வீடு திருடப்பட்டிருந்தது.

கொள்ளையனை வலைவீசி காவல்துறை பிடித்தபோது, ''ட்விட்டர்ல நான் அவங்க ஃப்ரெண்ட். ஒரு வாரம் வீட்டுல இருக்க மாட்டேன்னு 'ட்வீட்’ செஞ்சிருந்ததைப் படிச்சுட்டு, பிளான் பண்ணினேன்'' என்றான் கூலாக!

தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன்.

மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் செல்வி.

கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.

''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று செல்வி படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் செல்வியின் அப்பா.

பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், செல்வியின் வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் செல்வியின் அப்பா. செல்வியிடம் இருந்தே தொடங்கினோம் விசாரணையை.

''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்’ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.

அந்த வீக் எண்ட்...செல்வி இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான்.

அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்...செல்வி! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.

''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் செல்வி.

ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம். அவனுக்கு செல்வி மீது அப்படியென்ன வெறுப்பு?

''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல’னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா.

ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன்.

ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன்.

அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம். 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்’னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் செல்வி!

ஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!

ஏப்ரல் ஃபுல் பற்றி ஓர் ஆய்வு !!!

"The first of April is the day we remember what we are the other 364 days of the year. " - Mark Twain.முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான்.

இதை யார் துவக்கி வைத்தது? இதற்கு ஒரு ஆரம்பம் இருந்தாக வேண்டுமே. இருந்தது உண்மைதான்! முட்டாள்கள் தோன்றிய வரிசை என்று பார்த்தால், பிரான்சு முதலாவதாக , இரண்டாவதாக இங்கிலாந்து, மூன்றாவது மெக்ஸிக்கோ அடுத்து சுவீடன், இந்தியா என்று பட்டியல் ஒரு ரவுண்ட் உலகம் சுற்றி வரும்.

16ம் நூற்றாண்டில் பிரான்சு தேசத்தில் துவங்கியது இந்தப் பழக்கம். 1500களில் ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.

ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம்தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி "ஏப்ரல் முட்டாள்கள்" (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.

ரோமாபுரி... ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.

இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.

சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.

ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக் கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ·பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இல்லிநாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன்·

பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். கிரகோரியன் காலண்டரை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்."

நெப்போலியன் I , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்தில்: அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்," இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

அமெரிக்காவில்: அமெரிக்காவில் "April Fool's Day" அல்லது "All Fool's Day" என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக ஒரு நண்பர் இன்னொரு நண்பரை திடீர் என்று, "ஒன்னோட ஷ்லேஸ் அவிழ்ந்து தொங்குது பார்" என்றோ முதுகுப் பக்கம் கோட்டுல ஏதோ ஒரு கறை அசிங்கமா இருக்கு, மொதல்ல அதைக் கழட்டு என்று சொல்லி ஏமாற்றுவார்கள்.

ஏமாற்றலுக்கு ஏமாற்றல் என்றும் நடப்பதுண்டு. சர்க்கரைச்(சீனி) சாடியில் உப்பைப் போட்டு ஏமாற்றுதல், மணிப் பர்ஸில் ஒரே ஒரு பென்னியை வைத்து ஏமாந்தாயா முட்டாள் என்று எழுதி நண்பர்களை ஏமாற்றுதல் சகஜமான ஒன்று.

கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் போக விடாமல் செய்வது; அல்லது வரலாறுக்குப் பதிலாக உயிரியல் வகுப்புக்குச் செல்ல வைப்பது; ஆங்காங்கே முட்டாள்தனமான ஜோக்குகளைச் சொல்லி விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்தல் போன்றெல்லாம் நடக்கும்."

மெக்சிக்கோ; மெக்சிக்கோவில் பாரம்பரியமான முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடினாலும் இங்கு அது வேறு நாளில் வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. "El Dia los Inocents " என்று டிசம்பர் 28ம் தேதி பச்சிளம் பாலகர்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. அதிர்ஷ்டமற்ற நாட்கள் என்று முட்டாள்களாக்கப் பட்டவர்கள் கருதுகிற சூழலை பத்திரிக்கைகள், வானொலி, தொலைக் காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வழங்குகிறது.

கருணாநிதி காலை தொட்டு வணங்கி இளங்கோவன் சாதனை!!

எப்ரல் 1, ஈரோட்டில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

திமுக மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையான விமர்சன அம்புகளை எய்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த கூட்ட மேடையில் ஏறினார். அதுமட்டுமல்லாது முதல்வர் கருணாநிதிக்கு அருகில் அமர்ந்தார்.

அதுமட்டுமா? முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து தள்ளினார். பின்னர் பேச வந்த முதல்வர், பத்திரிக்கைகளில் எல்லாம் இடம்பெறப்போகும் செய்தி இதுதான். அதிசயம்!

கருணாநிதியும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒரே மேடையில்!! என்றுதான் எழுதப்போகிறார்கள். இளங்கோவன் இன்று என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

நான் பெரியார் குருகுலத்தில் பயின்றபோது குழந்தைப்பருவத்தில் இருந்த இளங்கோவன் என் மடியில் தவழ்ந்திருக்கிறார்’’ என்று பேசியபோது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எழுந்து முதல்வர் காலைத்தொட்டு வணங்கினார்.


சிந்திக்கவும் : இதுதான் பகுத்தறிவின் லேட்சனமாக்கும். ஜெயலிதா காலில் விழுந்து வணங்குகிறார்கள் இது என்ன என்று கேலி செய்த பகுத்தறிவு பாகலவர்கள் இப்பொது என்ன சொல்ல ஒரு மனிதன் காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம் என்ன? கலாசாரமோ!! இவர்கள் என்று சுயமரியாதையை கற்க போகிறார்களோ!!

சீமான் மீது வழக்கு!! காவல் துறை அராஜகம்!!

ஏப்ரல் 1, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து நேற்று, சீமான் பேசினார். அப்போது மேடையில் இருந்த பேனருக்கு, அனுமதி பெறாததால், அதை அகற்ற டி.எஸ்.பி., இளங்கோ உத்தரவிட்டார்.

பேனர், கட்சி கொடிகளை போலீசார் முன்னிலையில் அலுவலர்கள் அகற்றினர். இதற்கு சீமான், மாவட்ட அமைப்பாளர் தீனதயாளன், நிர்வாகிகள் அன்வர்ராஜா, சோமசுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்தனர்.

என்பதாக பொய் கூறி வி.ஏ.ஓ., கோபிநாத் புகாரின்படி, 143 (கூட்டம் கூடியது); 188 (அனுமதியின்றி கொடி, பேனர் கட்டுதல்); 353 (அரசு பணியை தடுத்தல்); 506(1)(கொலை மிரட்டல்) பிரிவுகளின் கீழ், இன்ஸ்பெக்டர் சங்கர், எஸ்.ஐ., வடிவேல்முருகன் வழக்கு பதிந்தனர்.

வரும் ஆனா வராது; வடிவேல்!!

எப்ரல் 1, திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேல் இன்று ஐஸ்அவுஸ், ஜாம்பஜார் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ‘’வீட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் வீடு சிறக்கும். அதே போல் நாட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் நாடு சிறக்கும்.

கலைஞர் பெரியவர் 5 ஆண்டில் நிறைய திட்டங்களை தந்திருக்கிறார். சொன்னதை செய்துள்ளார். அவர் தலைமையில் மீண்டும் ஆட்சி வந்தால் நாடு சிறப்பாக இருக்கும்.

கலைஞர்போல் ஜெயலலிதா அம்மையாரும் திட்டங்களை பட்டியல் போட்டு அறிவித்துள்ளார். கலைஞர் திட்டங்கள் வரும்.

ஆனால் அவங்க (ஜெயலலிதா) திட்டங்கள் வரும்... ஆனால் வராது அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் வராது’’ என்று பேசினார்.

இந்தியா - இலங்கை - பிரதிபா பாட்டீல் vs ராஜபக்சே!!!

புதுடில்லி : மார்ச் 31, உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் காண்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியை காண இலங்கை அதிபர் மும்பை வரயிருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், மும்பை வான்கண்டே ஸ்டேடியம் உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Mar 30, 2011

கிரிக்கெட் + மன்மோகன் + கிலானி + தமிழீழம்: உரையாடல்!!

மார்ச் 31, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்: கிலானி சார் தயவு செய்து உங்கள் கிரிக்கெட் அணியை தோற்கும் படி செய்து விடுங்கள்.

பாகிஸ்தான் பிரதமர் கிலானி: ஏன்!! நீங்கள் இப்படி ஒரு கேவலமான வேண்டுகோளை வைகிறீர்கள்?

மன்மோகன் சிங்க்: ஏன் என்றால்? மும்பையில் வைத்து பைனல் மேட்ச் நடக்கிறது அதுதான்..

கிலானி: மும்பையில் வைத்து பைனல் மேட்ச் நடந்தால் என்ன?

மன்மோகன் சிங்க்: மும்பை ஹிந்துத்துவா ரவுடி பால்தாக்ரே பாகிஸ்தான் பைனலில் ஜெயித்து வந்தால் நாங்கள் மும்பையில் விளையாட விடமாட்டோம் என்று கர்ஜிக்கிறார்.

கிலானி: என்னையா இதை சொல்ல உமக்கு வெக்கமா இல்லை. நீர் ஒரு நாட்டின் பிரதமர் உம்மால் அந்த ரவுடி மேல் ஆக்சன் எடுக்க முடியாதா?

மன்மோகன் சிங்க்: முடியாது கிலானி சார்... இது போல நிறைய ரவுடிகள் இருகிறார்கள், அத்வானி, மோடி, முரளிமனோகர் ஜோசி இப்படி நீண்டுகொண்டே போகும்..............

கிலானி: ஏன் முடியாது?

மன்மோகன் சிங்க்: அப்படித்தான் நான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சொல்கிறது...

கிலானி: என்னையா உங்கள் காங்கிரஸ்! நீங்கள் மதசார்பற்ற கட்சி ஆயிற்றே..

மன்மோகன் சிங்க்: அதுவெல்லாம் வெறும் முகமூடி, காங்கிரசில் மெஜாரட்டி இருப்பது ஹிந்துத்துவா சக்திகள்தான்.

கிலானி: காந்தியும், நேரும் வளர்த்த காங்கிரஸா இப்படி? நம்ப முடியலையே!!

மன்மோகன் சிங்க்: சரி ஒரு உதாரணம் சொல்றேன் புரிந்து கொள்ளுங்கள்.. நரசிம்ம ராவ் பிரதமரா இருக்கும் போதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

கிலானி: அதற்க்கு அவர் என்ன? பண்ணுவார் அவர் எப்படி காரணம் ஆக முடியும்.

மன்மோகன் சிங்க்: உலகத்திலே அவர் ஒருவர்தான் அதிசயமான பிரதமர் மசூதியை இடித்து முடிக்கும் வரை ஒழித்து கொண்டாரே.

கிலானி: மேல சொல்லுங்கள் அதிசயமா இருக்கு.

மன்மோகன் சிங்க்: அதுமட்டுமா? இந்தியாவில் பல கலவரங்களை நடத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் எல்லாம் இன்னும் வெளியே உலாவுகிறார்கள். அவர்கள் மேல் எங்களால் ஒரு துரும்பை கூட வைக்க முடியாது..

கிலானி: ஒ அப்படியா?

மன்மோகன் சிங்க்: அது மட்டுமல்லாமல் எங்கள் அரசு நிறைய பயங்கரவாத செய்கைகளை செய்து விட்டது. அதை எல்லாம் திசை திருப்ப தேசபக்தி முகமூடி தேவை. எப்படியாவது இந்த மேட்ச்சில் ஜெயித்தால் நாங்கள் இதை வைத்து கொஞ்ச காலத்தை ஓட்ட முடியும்.

கிலானி; எங்களை விட நீங்கள் என்ன பயங்கரவாத செயல்கள் செய்து விட்டீர்கள்? பிரியலையே பாஸ்..

மன்மோகன் சிங்க்: நீங்கள் எல்லாம்! எங்கள் முன்னாள் கத்து குட்டிகள்தான்.

கிலானி: கிலானி கோபமாக அப்படி என்னையா செய்து கிளிச்சிட்டீங்கள்?

மன்மோகன்: உங்களுக்கு சொந்த நாட்டு குடிமக்களியே வேட்டையாட தெரியுமா?

கிலானி : அதுஎன்னையா புது வேட்டை!! குடி மக்களை வேட்டைன்னு வேற சொல்ற விளக்கமா சொல்லுயா....

மன்மோகன் சிங்க்: நாங்கள் காட்டு வேட்டை என்றபெயரில் பெரிய வேட்டையே நடத்துகிறோமே... நங்கள் தினம் தினம் எங்கள் குடிமக்களை கொல்கிறோம், எங்கள் பெண்களையே கற்பளிகிறோம், கிராமங்களை தீயிட்டு கொளுத்தி மகிழ்கிறோம்..

கிலானி: அட பாவிகளா? மேல சொல்லும் உங்கள் பராக்கிரமங்களை...

மன்மோகன் சிங்க்: அது மட்டுமா? எங்கள் தேசத்தில் தமிழ் நாடு என்று ஒரு மாநிலம் உள்ளது அதில் ஆறு அரை கோடி மக்கள் வசிக்கிறார்கள் அவர்களின் உறவுகள் இலங்கை என்னும் பக்கத்து நாட்டின் பூர்வீக குடிகள். அவர்களின் 35 வருட கால இன போராட்டத்தை அழிக்க நாங்கள்தான் எங்கள் ராணுவத்தையும், ஆயுதங்கலயும் கொடுத்து உதவினோம்.

கிலானி: அட பாவிகளா? நீங்கள் உதவி செய்து இலங்கையை உங்கள் கைவசம் கொண்டு வந்து விடுவீர்கள் என்று முட்டாள் தனமா நாங்களும் உதவி செய்து விட்டோம். அந்த பயங்கரவாதி ராஜ்பெக்சே அப்பாவி மக்களை எல்லாம் கொன்று குவித்து ஹிட்லரைவிட கேவலமானவன் என்று உலகிற்கு நிருபித்து விட்டான்.

மன்மோகன் சிங்க்: இப்படி நாங்கள் இலங்கைக்கு ஆதரவு செய்து ஆறு அரை கோடி எங்கள் குடிமக்களின் மனங்களில் ஈட்டியால் குத்திவிட்டு பயந்த நிலையில் இருக்கிறோம். இந்தியாவை விட்டு முதலில் உடைந்து போகும் நாடுகளில் காஷ்மீர் முதலில் இருக்கும் என்று பயந்தோம் ஆனால் இப்பொது முதல் பயம் காட்டு வேட்டை ஆடிய மாநிலமும், தமிழர்கள் வாழும் மாநிலமும் என்று ஆகிவிட்டது.

கிலானி; நீங்கள் ஜக ஜால கில்லாடிகள்தான் ஒத்து கொள்றேன். பயப்படாதீன்கள் கிரிக்கெட்டில் நீங்கள்தான் ஜெயிபீன்கள் இந்த கிரிக்கெட் போதையை வைத்து தேச பக்தியை கிளறி, கொஞ்ச காலத்தை ஒட்டுங்கள்..

இப்படி முடிகிறது இந்த உரையாடல். உரையாடல் கற்பனையாக இருந்தாலும் உண்மைசம்பவங்களை பின்புலமாக கொண்டது.

என்றும் உங்கள் அன்புடன்: தமிழ் செல்வன்.

தேர்தல் கூத்து - எதிரிக்கு எதிரி நண்பேன்டா! !!

மார்ச் 31, விஜயகாந்தை வீழ்த்த நகைச் சுவை நடிகர் வடிவேலுவை களமிறக்கியது திமுக. வடிவேலுவும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் இடங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சரமாரியாகத் தாக்கிப் பேசி வருகிறார்.

வடிவேலுவைச் சமாளிக்க தேமுதிகவும் நகைச்சுவை நடிகர் ஒருவரை களம் இறக்கத் திட்டமிட்டுள்ளது. வடிவேலுவுடன் முட்டி மோதிய நகைச் சுவை நடிகர் சிங்கமுத்துவை தேமுதிகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அணுகியுள்ளதாகத் தெரிகிறது.

இன்னும் ஓரிரு நாளில் நகைச் சுவை சிங்கமுத்து வடிவேலுவுடன் மல்லுக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

இரு ஆட்சியையும் ஒப்பிட்டு ஓட்டுப் போடுங்கள்!! கருணாநிதி!!

மார்ச்31 கோவை: "அ.தி.மு.க., ஆட்சியையும் தி.மு.க., ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து ஓட்டுப்போடுங்கள்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

கோவை சிவானந்தா காலனியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்ற கேள்வியுடன், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் உள்ளது.

இந்த கூட்டணியை அமைந்திருக்கும் முறையைப் பார்த்தாலே தெளிவு பறிக்கும்; நம்பிக்கை பிறக்கும். கடந்த தேர்தலில் கொங்கு மண்ணில் இழப்பை சந்திக்க நேர்ந்தது. கொங்கு சங்கத்தைச் சேர்க்காததால்தான் பெரிய தோல்வி என்று காரணம் கூறினார்கள்.

அதனால், இந்த முறை அவர்களையும் கூட்டணியில் இணைத்துள்ளோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த உறுதி நிச்சயம் காப்பாற்றப்படும் என்ற எண்ணம்,கோவையிலுள்ள மக்களைப் பார்த்ததும் தெரிந்தது.

கோவை நகரம், நான் அரசியலுக்காக வந்து போகும் இடமல்ல; என் வாழ்வில் இடம் பெற்ற முக்கியமான இடம். அரசியலில் அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகளுக்குப் பின், எனது 87வது வயதில் இன்று உங்களைச் சந்திக்கிறேன்.

இந்த சந்திப்பில், நிறைய மகிழ்ச்சியும், சோகமும் உண்டு.இந்த மண்ணில் என்னோடு வாழ்ந்த, பழகிய பல நண்பர்கள், தலைவர்கள் இன்று இல்லை. என்னைப் பொறுத்தவரை, கோவை என்பது தி.மு.க.,வின் கோட்டை; என்னைத் தாலாட்டிய தொட்டில்; நான் விளையாடிய தாழ்வாரம்.

கலை உலகுக்கு அடித்தளம் அமைக்க துணை புரிந்த பகுதி என்ற உணர்வுடன்தான் நான் உங்களை சந்திக்கிறேன். 1945க்கு முன் நானும், எம்.ஜி.ஆரும் இதே ஊரில்தான் ஒரே வீட்டில் குடியிருந்தோம்.

கோவையில் செம்மொழி மாநாடு இங்குதான் நடந்தது. திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக் கூட தமிழ்த்தாய் வாழ்த்தாக தான் இருந்தது. எவரையும் புகழ்ந்து பாட இடம் தரவில்லை. அவர்கள் நடத்திய தஞ்சை மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஜெயலலிதா வாழ்த்தாக வாசித்தார்கள்.

பால் உற்பத்தியை பெருக்க, கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்ற அரசு ஆவண செய்யும். தென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்த, உயர்ரக கன்றுகள் மானிய விலையில், வழங்கப்படும். அதற்கான உதவிகளை இன்னொரு தேர்தல் அறிக்கையாக அறிவிக்கிறேன்.

திருப்பூர் சாயக் கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசு எடுத்த முயற்சிகள் கோர்ட் நடவடிக்கையால் தாமதப்படுகின்றன. மத்திய அரசின் ஒத்துழைப்பை பெற்று, தமிழக அமைச்சர்களை கூட்டி சிக்கல்களை ஆராய்ந்து, விரைவில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் வட்டியை அறவே தள்ளுபடி செய்வோம். சூரிய ஒளி, காற்றாலை மூலம் மின்சாரம் ஊக்கத் தொகை வழங்க பரிசீலிக்கப்படும். இன்று தமிழகத்தில் மின்சாரத்தை நம்பி பல தொழில்கள் உள்ளன.

உற்பத்தி ஆகும் மின்சாரம் போதுமானதாக இல்லை. ஆகவே எதிர்பாராத சிரமங்கள் ஏற்படுகின்றன. ஜெயலலிதா ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கவில்லை. அதனால் இன்று நாம் கஷ்டப்படுகிறோம்.

இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் பக்கத்து மாநிலங்களுக்கும் வழஙகும் அளவுக்கு தமிழகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில் சாதாரண மக்கள் வாழ முடியவில்லை. அரசு ஊழியர்கள் சிறையில் இருந்தார்கள்.

ஆசிரியர்கள் அடிபட்டனர்; உதைபட்டனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த என்னையே சிறையிலே பூட்டி அடித்து உதைத்து வெளியே அனுப்பினர். இன்று அவர்கள் உங்கள் ஓட்டுகளை வாங்க உத்தமி வேடம் போடுகிறார்.

அ.தி.மு.க., ஆட்சியையும் தி.மு.க., ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து ஓட்டுப்போடுங்கள். இவ்வாறு, கருணாநிதி பேசினார். ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கட்சியின் மூத்த நிர்வாகி ராமநாதன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!!!

மார்ச் 31, மதுரை: "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல,' என, வீட்டின் முன் எழுதி தொங்க விட்டுள்ளார், மதுரை அண்ணாநகர் குருவிக்காரன்சாலையில் குடியிருக்கும் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி இல்ல காப்பாளர் ஜான்(51).

சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுப்பதில் தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டுகிறது. தேர்தல் அதிகாரிகள் மூலம் அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்தும் வருகிறது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் பணம் பட்டுவாடா செய்ய முடியாமல் கட்சிகள் திணறுகின்றன.

பணம் பெற்று ஓட்டளிக்க கூடாது, என்ற விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஜான் துணிச்சலாக, "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல. ஓட்டளிக்க பணம் தர முன்வரும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை,' என, எழுதி வீட்டின் முன் தொங்கவிட்டுள்ளார்.

அவ்வழியாக செல்வோரின் கவனத்தை இவ்வாசகங்கள் ஈர்க்கின்றன. இதை கவனித்து தெருவில் குடியிருக்கும் சிலர் இது போல எழுதி வைக்க திட்டமிட்டுள்ளனர். ஜானின் மனைவி சிந்தா சேக்கிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். ஜான், பத்து தேர்தல்களில் ஓட்டளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, ஓட்டுக்கு பணம் வழங்க கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஓட்டுக்கு பணம் வழங்குவது குற்றம். அதை பெறுவது அதை விட குற்றம். லஞ்சம் வாங்குவதற்கு சமம்.

ஓரிரு நாட்களுக்கு முன், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என, கலெக்டர் சகாயம் பேசியதாக தினமலர் இதழில் செய்தி படித்தேன்.அதை பின்பற்ற முடிவு செய்து, எழுதி வைத்தேன்.

இதை பார்த்துவிட்டு, மற்றவர்களும் எழுதி வைப்பதாக கூறியது மகிழ்ச்சி என்றார்.இவரை போன்று அனைத்து வாக்காளர்களும், பணம் பெற்று ஓட்டளிக்க மாட்டேன் என்று சபதம் ஏற்க வேண்டும்.

கலைஞர் டி.விக்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை!!

மார்ச் 30, சென்னை: கலைஞர் டி.வியுடன் தனக்கு எவ்வித தொடர்புமில்லை என தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேனலுக்கு ‘கலைஞர் டி.வி’ என பெயர் சூட்டிய பிறகே எனக்கு இவ்விஷயம் தெரியவந்ததாக(?) கருணாநிதி தெரிவித்துள்ளார்.

“எனது மனைவிக்கும், மகளுக்கும் கலைஞர் டி.வியில் பங்குகள் உண்டு என்பது உண்மைதான். துவக்கத்தில் யாரிடமிருந்தோ வாங்கிய கடன் பெயரிலேயே பிரச்சனை உருவானது.அந்த கடன் வட்டியுடன் திருப்பி அடைக்கப்பட்டுவிட்டது.

எனக்கு அந்த சேனலுக்கு எவ்வித தொடர்புமில்லை.” என கலைஞர் மு.கருணாநிதி கூறியுள்ளார். அதேவேளையில், கலைஞர் டி.வியின் சி.இ.ஒ சரத்குமார் ரெட்டியை எந்த நேரத்திலும் சி.பி.ஐ கைது செய்யலாம் என கடைசியில் கிடைத்த தகவல் கூறுகிறது.

விசாரணையில் இருந்து தப்ப சாமியார் நடிப்பு!!

மார்ச் 30, மும்பை: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு உள்பட 6 பயங்கரவாத வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா சாமியார் பிரக்யாசிங் உடல்நிலை கோளாறு, மயக்கம் வருகிறது எனக் கூறுவதெல்லாம் வெறும் நடிப்புதான் என மருத்துவ அறிக்கை கூறுகிறது.

புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தும்போது மட்டுமே உடல் நிலை சரியில்லை என பயங்கரவாதி பிரக்யாசிங் புகார் கூறுகிறார். க்ராண்ட் மருத்துவக் கல்லூரியில் மருந்துப்பிரிவு மருத்துவரான அல்கா தேஷ்பாண்டே தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் அளித்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

ஏதேனும் உடல்நிலை பிரச்சனையிருந்தால் ஏன் மருத்துவர்களை பரிசோதனைக்கு அனுமதிப்பதில்லை? என மருத்துவர் அல்கா தேஷ்பாண்டே கேள்வி எழுப்புகிறார். சாதாரண நாட்களில் வழக்கமாக பணிகளில் ஈடுபடும் அவர் பொதுவாகவே உற்சாகமாகத்தான் காணப்படுகிறார் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் சி.பி.ஐயும், என்.ஐ.ஏவும் நடத்திய விசாரணையில் பயங்கரவாதி பிரக்யாசிங் ஒத்துழைக்கவில்லை என புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆம் அல்லது இல்லை போன்ற பதில்களைக் கூட அளிக்க பிரக்யா சிங் தயாரில்லை. விசாரணையின் போது அடிக்கடி மயக்கம் ஏற்படுவதாக கூறுவதுதான் அவருடைய வழக்கம் என புலனாய்வு அதிகாரி கூறுகிறார்.

Mar 29, 2011

திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை!! ராமதாஸ்!

மார்ச், 30: தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் திமுக வேட்பாளர் மற்றும் கள்ளக்குறிச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாமர மக்களையும் திமுக தேர்தல் அறிக்கை சென்றடைந்துள்ளது. தமிழகத்தின் முதல் அமைச்சராக கலைஞரே வரவேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள். நடைபெறவுள்ள தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது என்றார்.

சீனாவின் மேலாதிக்கம்! இலங்கையை உடைக்க இந்தியா திட்டம்!!

மார்ச் 30, தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் தீவிரமான முன்நகர்வாக இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகமாகத் திட்டமிடுவதாக பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலுக்காக சீனாவை நோக்கி இலங்கையின் பார்வை திரும்புகின்ற நிலையில் அதற்கு பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு திட்டமிடுவதாக நம்பகரமான முறையில் அறிய வருவதாக அப்பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

இலங்கை மக்கள் மத்தியில் இன, வகுப்பு வாதத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கையைப் பிளவுபடுத்தும் புதுடில்லியின் திட்டங்களை விக்கிலீக்ஸின் கேபிள்களும் வெளிப்படுத்தி இருப்பதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விடயத்தில் மூன்று வழிகளிலான தந்திரோபாய வேலைகளில் இந்தியா இறங்கியுள்ளது. மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துதல், இந்தியாவுக்கு விசுவாசமான போராளிக் குழுக்களுக்கு ஆதரவளித்தல், போர்க் குற்றங்கள் தொடர்பாக கொழும்புக்கு அழுத்தம் கொடுத்தல்.

சிந்திக்கவும்: இந்தியாவின் முட்டாள்தனமான செய்கையால் இப்பொது இலங்கை சீனாவின் கைக்கு போகி விட்டது. இந்திரா காந்தி தொலை நோக்கு திட்டத்தோடு இலங்கையின் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்க்கு பயிற்ச்சியும் கொடுத்தார்.

இலங்கையில் தனி தமிழீழம் அமைந்திருந்தால் அது என்றும் இந்தியாவோடு நட்போடு இருந்திருக்கும். அதை புரிந்து கொள்ளாமல் பெரிய ராஜ தந்திரமாக வேலை செய்வதாக எண்ணி இலங்கைக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

ராஜ பக்சே புத்திசாலி அவன் இந்தியாவின் ஆதரவை மட்டும் பெற்றால் பிற்காலத்தில் இடைஞ்சலாக போகும். அதனால் சைனா, பாகிஸ்தான் எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக நடித்து இந்தியாவின் கனவுக்கு வைத்தான் ஆப்பு.

உங்கள் எல்லாருக்கும் வரபோகுது பெரிய ஆப்பு பொறுத்திருங்கள். அமெரிக்காவும், பிரிட்டனும், கனடாவும், பிரான்சும், நாடு கடந்த தமிழீழ அரசை சீக்கிரம் அங்கீகரிக்கும் அப்போது தெரியும் உங்களுக்கு எப்படி நாங்கள் தமிழீழம் அமைப்போம் என்று.

ஈழதமிழர்கள் சிந்திய ரெத்ததிற்கு கூடிய சீக்கிரம் பலன் கிடைக்கும். இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. முட்டாள்களுக்கும், துரோகிகளுக்கும் பாடம் கற்பிக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

அன்புடன்: சத்திய சீலன்.

நன்றி சத்திய சீலன்: மின்னஞ்சல் செய்திகள்.

ஹிந்துத்துவா என்பது எங்கள் உயிர்மூச்சு!! ஆர்.எஸ்.எஸ்.!!

மார்ச் 30, புதுடெல்லி: ஹிந்துத்வா கொள்கை சந்தர்பவாதத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பிஜேபி தலைவர் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, ஹிந்துத்துவம் என்பது எங்கள் அமைப்பின் அடிப்படைவாதம் என்றும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ”ஹிந்துத்துவா கொள்கை விவகாரத்தில் பிஜேபி-யும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. எங்களை பொறுத்தமட்டில், எங்கள் நோக்கம் ‘ஹிந்துத்துவமே’ ஆகும்.

‘சந்தர்பவாதம்’ என்ற கருத்தை தான் சொல்லவில்லை, அமெரிக்க தூதர் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்று ஜெட்லி ஏற்கனவே விளக்கி விட்டார், அத்துடன் இந்த விசயம் முடிந்துவிட்டது. இதில் எந்த சர்ச்சையும் தேவையில்லை ” என்பதாக மாதவ் தெரிவித்தார்.

“ஒவ்வொரு சேவக்கிற்கும், ஹிந்துத்துவம் என்பது உயிர்மூச்சு, இது அவர்கள் மத நம்பிக்கையிலே கலந்த ஒன்று” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஹிந்துத்துவா கொள்கை என்பது ஹிந்து மக்களுக்காக ஒரு தனி நாடு உருவாக்குவது என்று பொருள்.

224 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு!! எஸ்.டி.பி.ஐ. !!

மார்ச் 30, சென்னை: சோசியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடாத மற்ற தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில் கூறியிருப்பதாவது; “தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகள் போக எஞ்சியுள்ள தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும்.

சேப்பாக்கம் மற்றும் ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அறந்தாங்கி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ. தனது ஆதரவை தெரிவிக்கிறது” என்றார்.

மேலும் எஸ்.டி.பி.ஐ. ஆதரிக்கும் இக்கட்சியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுமாறு பொதுமக்களுக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் நிறமும் இல்ல, குணமும் இல்ல! வடிவேலு

மார்ச் 30,: திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்துக்கு எதிராகவும் நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று சென்னையை அடுத்த தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ’கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூஷூ வந்திருக்கு. அது வந்திட்டு என்ன சொல்லுது. ’நாடு சரியில்ல...ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு.( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) நான் நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கித்தரப்போறேன்.’’ன்னு சொல்லுது.

என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு. நீ விடுதலை வாங்கித்தர்றதுக்கு. அந்த லூஸூ முதல்ல என்ன சொல்லுச்சு. அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல. சீட்டிங் அணி, காசு வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ. பிளடி ஃபூல்.

எம்.ஜி.ஆரின் நிறமும் கிடையாது, குணமும் கிடையாது அப்புறம் எதுக்கு எம்.ஜி. ஆருன்னு சொல்லிக்கிட்டு திரியற. நீ இந்த மக்களுக்கு என்னத்த புடுங்க போற?’’ என்று விஜயகாந்தை விளாசி எடுத்தார்.

மேற்கு வங்கத்து முஸ்லிம்களின் அவலநிலை!!

கொல்கத்தா: தில்குஷா காலனியில் வசிக்கும் ஆயிஷா பீவிக்கு 4 பிள்ளைகள். அவர்களில் 3 பேர் பெண்கள். தெருக்களில் செருப்புகளை பொறுக்கி அதிலிருந்து தோலை பிரித்தெடுப்பது தான் அவர்களின் பணி.

இரவு பகலாக உழைத்தாலும் ஒரு நாளைக்கு கிடைப்பதோ அறுபது ரூபாய் மட்டுமே. ஷீட்டுகளால் மறைக்கப்பட்டதுதான் அவர்களது வீடு. தலித்துகளை விட மோசமான வாழ்க்கை சூழலுக்கு சொந்தக்காரர்கள் என சச்சார் கமிட்டியால் அழைக்கப்பட்டவர்கள்.

புழுக்களைப் போல் வாழ்க்கையை கழிக்கும் முஸ்லிம்களை காண்பதற்கு கொல்கத்தா விலிருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள முர்ஷிதாபாத்துக்கு செல்ல தேவையில்லை.

மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் பார்க் சர்க்கஸின் முஸ்லிம் தெருக்களுக்கு அப்பால் வாருங்கள். அதுதான் தில்குஷா காலனி.

பெயரைப் போல அழகானதல்ல அக்காலனியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை. ஷீட்டுகளால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள். அதற்கு உள்ளே புழுக்களைப் போல பல மனிதர்கள். 500 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர்.

ஒரு குடும்பத்தை தவிர அனைவரும் இக்காலனியில் முஸ்லிம்களாவர். காலனியில் குடிநீர் இல்லை. மின்சாரமும் இல்லை. குப்பைகளை பொறுக்குவதுதான் இக்குடும்பங்களில் ஒரு பிரிவினரின் பணி. வேறு சிலரோ தையல் வேலைப் பார்க்கின்றனர்.

கடினமாக உழைத்தாலும் 50 ரூபாய்தான் ஒருநாளைக்கு கிடைக்கிறது. இக்காலனியைப் பொறுத்தவரை சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்தாம் பணக்காரர். அவர்களுக்கு சில தினங்களில் 100 ரூபாய் வரை கிடைக்கும். காலனியில் வசிக்கும் குழந்தைகளில் 5 சதவீதம்பேர் கூட பள்ளிக்கூடம் செல்வதில்லை.

ஐந்தாம் வகுப்புதான் இக்காலனியில் உயர்ந்த கல்வி. தில்குஷா காலனியில் வசிக்கும் ஒரேயொரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் சிறந்த கல்வியை அளிக்கும் கிறிஸ்தவ மிஷினரி பள்ளிக்கூடத்தில் பயில்கின்றனர்.

அக்குடும்பத்தின் மூத்த பெண்ணிற்கு கிறிஸ்தவ நிறுவனத்தில் வேலை. முஸ்லிம்களுக்கோ ஒன்றுமில்லை. காலனியில் இரண்டு வீடுகளுக்கிடையேயான தூரம் நான்கு இஞ்ச் மட்டுமே. இரண்டு வீடுகளுக்கு ஒரே ஷீட்டை சுவராக மாற்றியவர்களும் உண்டு.

கழிவு நீர் வீடுகளின் முன்னால் ஓடுகிறது. ஆனாலும்,இந்த அசெளகரியங்களை காசாக மாற்றுவது அரசுக்கு கைவந்த கலையாகும். அரசு காலனியையொட்டி காசு கொடுத்து உபயோகிக்கும் கழிவறைகளை கட்டியுள்ளது.

காலனிவாசிகளுக்கு தங்களுக்கு கிடைக்கும் அற்ப வருமானத்தில் ஒரு பகுதியை செலுத்தி இதனை பயன்படுத்துகின்றனர். வீடுகளுக்கு இடையே அமைந்துள்ள பொதுவழிக்கு ஒரு மீட்டர் கூட அகலம் இல்லை. காலனியில் பாதிபேருக்கு ரேசன் கார்டு கிடையாது.

ஆனால், அனைவருக்கும் வாக்காளர் அட்டை உண்டு. தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் கட்சியினர் இங்கு வருவர். காலனியை காலிச் செய்துவிடுவோம் என மிரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க நிர்பந்திக்கிறது.

இல்லாவிட்டால், சட்டத்திற்கு புறம்பாக வங்காளதேசத்திலிருந்து குடியேறியவர்கள் என முத்திரைக்குத்தி சிறையிலடைத்துவிடுவோம் என அச்சுறுத்துகின்றனர். தெருவில் நேராக நடந்தால் தில்குஷா காலனியை விட மோசமான இன்னொரு காலனி உண்டு.

அதன் பெயர் டாலாவாடா. இங்கு வசிப்பவர்களும் முஸ்லிம்களே. ராஜாபஸார், ஃபுல்வகன், பனியபுக்கூர், தோப்ஸியா உள்பட கொல்கத்தாவில் மிகவும் அருவருப்பான காலனிகளில் வசிப்பவர்களும் முஸ்லிம்களே.

இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட முஸ்லிம்களின் வாரிசுகள் இன்று இரண்டாந்தர குடிமக்களாகவும், வாக்கு வங்கிகளாகவும் நடத்தப்படக்கூடிய சூழலில் முஸ்லிம் சமுதாயம் எப்பொழுதுமே பிறரிடம் கையேந்தி நிற்கும் சூழலை மாற்றிவிட்டு சுயமாக பலம்பெற்று இந்திய தேசத்தின் அதிகார மையங்களில் பங்கேற்கும் வரை இம்மாதிரியான அநீதிகள் ஒழியாது என்பதுதான் உண்மை

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!!!

மார்ச் 29,வயசுல பெரியவங்களா இருப்பாங்க..சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு,சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க.

கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.

அதென்ன அல்சர்? நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும்.

லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

அல்சர் ஏன் வருது? முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது...

சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம்.

ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பி-காம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை.

டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க.. காரணம் இதுதான்.

அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்! மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர்.

மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.

எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு.

வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு - ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும். அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்... நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம்.

கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இதெல்லாம் அறவே தவிர்க்கணும்.

மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும். நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!

Mar 28, 2011

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்டும்!! தேசபக்தியும்!!

மார்ச் 29, : கடந்த 33 ஆண்டுகளாக இந்திய பாக் அணிகள் 119 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் முடிவில்லாத 4 போட்டிகளைத் தவிர பாக் அணி 69-லும்,இந்திய அணி 46-லும் வென்றுள்ளன.

நிறைய போட்டிகளில் பாக் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி சகஜம் என்று போனால் பிரச்சினை அல்ல. அதை ஒரு மானப்பிரச்சினை போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.

1986-ஆம் ஆண்டு ஷெர்ஜாவில் நடந்த போட்டியில் கடைசி பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி என்ற நிர்ப்பந்தத்தில் பாக் அணி இருக்கிறது. சேதன் சர்மா போட்ட புல்டாசை ஜாவித் மியான்தத் சிக்சருக்கு அனுப்பினார்.

இந்திய ரசிகர்கள் அதை எண்ணி எண்ணி பல மாதங்கள் தூங்கவே இல்லை. இப்படி நிறைய முறை பாக் அணி இந்திய ரசிகர்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது. இந்த பின்னணியில்தான் கிரிக்கெட் போட்டிகளையும் கார்கில் போர் போல மாற்றுகிறார்கள்.

கிரிக்கெட்டிற்கும் தேசபக்திக்கும் என்ன சம்பந்தம்? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடைகளை பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரைதானே அலங்கரிக்கின்றது? போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் பெப்சி, சோனி, ஹோண்டா போன்ற நிறுவனங்களெல்லாம் உலகமெங்கும் தொழில் செய்கின்றன.

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடந்த கால்பந்து போட்டியில் ஈரான் வென்றதை அந்நாட்டு மக்கள் அரசியல் வெற்றி போல கொண்டாடியதை கூட ஆதரிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்.

அத்வானி ,மோடி,வருகை ஒரு ஏழு நாட்டு சனி !!!

மார்ச், 29 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய பாஜக மூத்த தலைவர் அத்வானி, எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், பாஜக தலைவர் நிதின் கத்காரி, குஜராத் முதல்வர் மோடி ஆகியோர் தமிழகம் வரத் திட்டமிட்டுள்ளதாக பாஜகவின் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ் வரும் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், நிதின் கத்காரி ஏப்ரல் 7 மட்டும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பயணம் இன்னும் திட்டமிடப்பட வில்லை என்றும் ஏப்ரல் 4 ம் தேதிக்குப் பிறகு மோடி வர உள்ளதாகவும், முக்கியத் தலைவர்களின் வருகைக்குப் பின்னர் அத்வானி தமிழகம் வரவுள்ளதாக ராவ் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு அமெரிக்கா, சீனாவே காரணம்!!

மார்ச்29, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதிலும், உலகளாவிய வெப்ப அதிகரிப்பிற்கு வழிவகுப்பதுமான பசுமை வாயுவை அமெரிக்காவும், சீனாவுமே அதிகளவில் வெளிவிடுகின்றன.

இதை கட்டுபடுத்த இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார். முன்னணியில் இருந்த பிரேசில் இன்று அதனை 75 சதவீதம் வரை குறைத்துக் கொண்டிருப்பதை இந்த நாடுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கூறினார்.

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் கலந்துரையாடல் முடிவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பிரேசில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.

ஈழ தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸை வீழ்த்துங்கள்!!

மார்ச் 29, உவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை இயக்குநர் சீமான்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் மட்டும்தான் அவர் இலக்கு. 'திமுக, பாமக, அதிமுக யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் ஓட்டு போகட்டும்.

ஆனால் நமது இன விரோதி காங்கிரஸுக்கு மட்டும் ஓட்டளிக்காதீர்கள்' என்று அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். உவரி பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட சீமான், பின்னர் அப்பகுதி மக்களிடம் பேசினார்.

மீனவர்களின் இன்றைய பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியே என்றும், இந்தக் கட்சி வேட்பாளர்களை ஜெயிக்க விட்டால், இப்போதுள்ள மோசமான நிலைதான் தொடரும் என்றும் அவர் கூறினார்.

உடனே அப்பகுதி மக்கள், "நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். மீனவர்களின் ஒட்டுமொத்த வாக்கையும் உங்களுக்கே அளிக்கிறோம்," என்றனர் ஒருமித்த குரலில். அதற்கு பதிலளித்த சீமான், "இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

அடுத்த தேர்தல் வரை பொறுத்திருங்கள். இப்போது உங்கள் வாக்கை காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வீழ்த்துங்கள். அது போதும்," என்றார். மீனவ சமுதாயத்துக்கு காங்கிரஸ் அரசால் நேர்ந்த கொடுமைகளை விளக்கினார்.

ஈழத்திலும் தமிழக கடலோர மாவட்டங்களிலும் தமிழர் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸ்தான் என்பதை அவர் சொன்னபோது, உவரி மக்கள் உரத்த குரலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றனர்.

சீமான் கிளம்புவதற்கு முன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனைவரும் விரும்பினர். அவர்களை தனித் தனி குழுவாகப் பிரித்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார் சீமான்.

எக்காரணம் கொண்டும் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடவே மாட்டோம் என சீமான் முன்னிலையில் உவரி மக்கள் அனைவரும் சத்தியமடித்து கூறிச்சென்றனர்.

பால் தாக்கரேயும் கிரிக்கெட்டும்!! பார்வை!!

மார்ச் 29,: பாகிஸ்தான் அதிபருக்கும், பிரதமருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கிரிக்கெட் பார்க்க அழைப்பு விடுத்திருப்பதற்கு ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான சிவசேனை தலைவர் பால் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சிப் பத்திரிகையான "சாம்னா"வில் இன்று அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் பிரதமரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் அரையிறுதியைக் காண வரும்படி பாக். அதிபர் ஜர்தாரிக்கும், பிரதமர் கிலானிக்கும் இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமைதிக்கான நடவடிக்கை என்ற பெயரில் மொஹாலி கிரிக்கெட்டை பார்க்க ஜர்தாரியும் கிலானியும் அழைக்கப்படும்போது, கசாப்புக்கும், அப்ஸல் குருவுக்கும் மட்டும் ஏன் அநீதி இழைக்கப்படுகிறது? அவர்களுக்கும் கிரிக்கெட் பார்க்க அழைப்பு விடுத்து இருக்கலாம் என்று எழுதி இருந்தார்.

சிந்திக்கவும்: என்று எல்லாம் இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை, அல்லது நட்புறவு குறித்து பேசப்படுகிறதோ அதை இந்த ஹிந்த்துதுவா பயங்கரவாதிகளால் பொறுத்து கொள்ள முடியாது. அதை கெடுக்கும் வண்ணம் ஏதாவது செய்வார்கள்.

இந்தியா, பாகிஸ்தான் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று இருநாட்டு மக்களும் நினைகிறார்கள். அதற்காக வேண்டி இருநாட்டு அரசுகளும் ஏதாவது உருப்படியாக செய்ய நினைக்கும் பொது எல்லாம் இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அந்த பேச்சு வார்த்தைகளை சீர்குலைக்க ஏதாவது ஒரு குண்டு வெடிப்பை நடத்துவார்கள்.

இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்கள். ஒரு நாட்டில் உலக கோப்பை கிரிக்கெட் நடத்துகிறோம் என்று ஏற்று கொண்ட பின்னால் இப்படி பேசுவது பட்ச்சை தீவிரவாதம்.

உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளின் பிரதமர்களை நடத்தும் நாடு மரியாதை நிமித்தம் அழைப்பது பண்பாடுதான். அதில் அவர்கள் கலந்து கொள்வதும் ஒன்றும் கொலை குற்றம் இல்லை.

அதுபோல் இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவுகள் இதன் மூலம் ஏற்படட்டும் என்றுதான் நடுநிலையாக சிந்தனை செய்யவேண்டும் அதை விட்டு விட்டு பாகிஸ்தான் மும்பையில் பைனல் விளையாடும் நிலை ஏற்பாட்டால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தீவிரவாதமாக பேசிவருகிறார்.

ஒரு ஹிந்த்துதுவா பத்திரிக்கையை வைத்து கொண்டு மொழிவெறி பிடித்து, மதவெறி பிடித்து கலவரங்களை தூண்டும் முகமாக பேசியும், எழுதியும் வருவது இந்த ஹிந்துத்துவா சித்தாந்தவாதிகளின் யோக்கிதையை படம் பிடித்து காட்டுகிறது.

இந்த ஹிந்துத்துவா வெறியர் பால்தாக்ரே மும்பையில் நடத்திய கலவரங்கள்தான் எத்தனை? எத்தனை? இந்த வழக்குகளை விசாரித்து இவர் குற்றவாளி என்று நிரூபணம் ஆகி இவர் ஜெயிலுக்குள் போகும் நிலை வந்ததும் இவரது சாம்னா பத்திரிகையில் எழுதினார் என் மேல் கைவைத்தால் மும்பையே பற்றி எறியும் என்று.

சட்டதிருக்கு கட்டுபடாத ரவுடி இவர். இவர் செய்த செயலுக்கு தண்டனைகள் பெறாமல் சட்டத்தை ஏமாற்றி வருகிறார். மத்தியில் ஆளும் ஆண்மை அற்ற காங்கிரஸ் அரசு மும்பை கலவரகாரன் பால்தாக்ரே, ரெத்த யாத்திரை புகழ் அத்வானி, குஜராத் கலவர நாயகன் மோடி போன்ற கொடும் குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் அறிக்கை போர் நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. என்று இவர்கள் கோட்டம் அடக்கப்படுமோ!! என்று இவர்கள் ஆரஜகம் அடக்கபடுமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் அன்புடன்: சந்தோஷ்.

மரங்களை வெட்டி நாசமாக்கிவிட்டு பசுமை தாயகமா?

மார்ச் 29,: கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ஊத்துக்கோட்டை அண்ணாசிலை மற்றும் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. சாலை அருகே நடந்த பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.

அவர் ’பா.ம.க. வினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கினார்கள். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.

மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என கொள்கை வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் விலை வாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு கிலோ அரிசியை 1 ரூபாய்க்கு கொடுத்து விட்டு அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தி விட்டனர். பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படியும் மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணம் கொண்ட பா.ம.க.வினர் கும்மிடிப்பூண்டியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளனர்’’ என்று பேசினார்.

அருண் ஜெட்லியிடம் விசாரணை வேண்டும்!! பஸ்வான்!!

மார்ச் 28, புதுடெல்லி: ஹிந்துத்துவா சக்திகள் தீவிரவாதத்தை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹிந்துத்துவா தேசிய வாதத்தை பா.ஜ.கவின் சந்தர்ப்பவாதம் என அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த சூழலில் அவரை தீவிரவாத வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டுமென பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க தூதரக அதிகாரியிடம் ஜெட்லி கூறியது ஹிந்துத்துவாவாதிகளின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

முஸ்லிம்களுக்கெதிரான துவேசத்தை வளர்ப்பதற்காகவே பா.ஜ.க ஹிந்துத்துவா தேசியவாதத்தை உபயோகிக்கிறது என லோக் ஜனசக்தியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக் தெரிவித்துள்ளார்.

ஹிந்துத்துவா என்பது உண்மையான சித்தாந்தம் அல்ல. முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை வளர்த்தி வாக்கு வங்கிகளை உருவாக்கத்தான் பா.ஜ.க முயன்றுள்ளது.

பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறுவதால் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் ஹிந்துத்துவா தேசிய வாதம் நன்றாக செல்லுபடியாகும் என அருண்ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் இது செல்லுபடியாகாது. பாராளுமன்றத் தாக்குதலைப் போல ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் டெல்லியில் நிலைமை மாறும் என ஜெட்லி அமெரிக்க தூதரிடம் கூறியிருந்தார்.

மலேகான்,அஜ்மீர்,மக்கா மஸ்ஜித்,சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சந்தர்ப்பவாத அரசியலுக்காக பா.ஜ.க தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது நிரூபணமாகியுள்ளது என அப்துல் காலிக் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியும் அருண் ஜெட்லியை சாடியுள்ளது. ஹிந்து தீவிரவாத அமைப்பான பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் மதத்தை சுய ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷக்கீல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Mar 27, 2011

பணத்தை காட்டி ஆள்பிடிக்கும் பிஜேபி!! தேவகவுடா!!!

பெங்களுரூ: மார்ச் 28, கர்நாடகாவில் ந‌டைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் பண பலம் மற்றும் இந்துவா அமைப்புகளை பயன்படுத்த பா.ஜ. திட்டமிட்டிருப்பதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகவுடா ‌கூறினார்.

கர்நாடகாவில் சென்னப்பட்டணா, பங்காரப்பேட்டை, ஜகலூர் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தல்களில் ஆப்பரேசன் லோட்டஸ் என்ற பெயரில் பா.ஜ. பணத்தை வாரி இறைத்தும், ஹிந்துத்வா பயங்கரவாத மத அமைப்புகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள ஹிந்துத்வா பயங்கரவாத அமைப்புகளை பயன்படுத்தி இடைத் தேர்தல்களில் வெற்றி பெற முயற்சிக்கிறது. இவைகளுக்கு மக்கள் சரியான பதிலடி கொடு்ப்பார்கள்.

பா.ஜ.வை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும், வரும் இடைத்தேர்தல்கள் மூலம் பா.ஜ.க.வுக்கும், முதல்வர் எடியூரப்பாவிற்கும் சரியான பாடம் புகட்டுவ‌ோம். இவ்வாறு தேவகவுடா கூறினார்.

மரம் வெட்டியார் பம்பரம் விட்டவரோடு மோதல்!!

மார்ச் 28, : பா.ம.க.,வை விமர்சனம் செய்ய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

தர்மபுரியில் நடந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு, முன்னாள் எம்.பி., செந்தில் தலைமை வகித்தார். தர்மபுரியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் கட்சி நடத்தும் ஒரு நடிகர் என்னைப்பற்றி பல இடங்களில் பேசி வருகிறார். என் மீது அவதூறாக ஏதேதோ பேசுகிறார். இதுநாள் வரை அவருக்கு நான் பதில் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன்.

அந்த நடிகர் அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர். அவர் என்னை பற்றி பேசுவதா? தைரியம் இருந்தால் தனியாக போட்டி போடுங்கள் என்று ஜெயலிதாவை பார்த்து கூறினார். ஆனால் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

கேட்டால் ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை. எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறுகிறார். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.