Mar 26, 2011

முன்னால் கதாநாயகனும், கதாநாயகியும்! ஸ்டாலின்!

மார்ச் 27,: எதிரணியில் முன்னாள் கதாநாயகனும், கதாநாயகியும் மட்டும்தான் இருக்கிறார்கள் என, மு.க.ஸ்டாலின் பேசினார்.

திமுக ஆட்சியின் சாதனைகளும், நலத்திட்டங்களும் தொடர, நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,

கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு, மக்களிடம் வாக்கு கேட்கிறோம். அதோடு மட்டும் அல்ல. இனி செய்யப்போகும் திட்டங்களையும் சொல்லி வாக்கு கேட்கிறோம்.

சாதனைகளும், திட்டங்களும் தொடர கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சராக ஆதரவு தர வேண்டும். எதிரணி தலைவர் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பியை வெளியிட்டிருக்கிறார்.

இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது!! கலைஞர்!!

மார்ச் 27, : அதிமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமிய பெருமக்களை ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

10 ஆண்டுகாலம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் இடஒதுக்கீடு செய்யவில்லை. இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சியில் தான் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அதனையும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து அதனை பரிசீலிப்போம் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்தலுக்காக சொல்வது யார்? உண்மையான அக்கறையோடு செயல்படுவது யார்? என்பதை இஸ்லாமிய பெருமக்கள் நன்றாகவே அறிவார்கள்.

அயோத்தியில் கரசேவையை ஆதரித்து தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பேசிய ஜெயலலிதா, ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வரும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது இயலாது என்று கூறினார்.

இப்படியெல்லாம் பேசியதை ஜெயலலிதா மறைத்துவிட்டு, தற்போது இடஒதுக்கீடு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் பிரச்சாத்தில் பேசினால் அதை முஸ்லீம்கள் நம்புவார்களா? இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவிடம் நடிக்கும் பா.ஜ.க கட்சி!!

புதுடெல்லி:பா.ஜ.கவின் ஹிந்து தேசியம் என்பது வாக்கு வங்கிக்கான சந்தர்ப்பவாதம் மட்டுமே என மூத்த பா.ஜ.க தலைவர் அருண் ஜெட்லி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கம்பிவட(கேபிள்) செய்தி கூறுகிறது.

2005 ஆம் ஆண்டு மே மாதம் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் ப்ளேக்கிடம் நடத்திய உரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் ‘தி ஹிந்து’ பத்திரிகை வழியாக வெளியிட்டு வரும் செய்திகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தொடந்து பா.ஜ.கவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட்டுள்ளதால் டெல்லி உள்ளிட்ட இடங்களில் தற்போது ஹிந்து தேசியவாதத்திற்கு போதிய அரசியல் முக்கியத்துவம் இல்லை.

ஆனால், பங்களாதேஷ் குடியேற்றம் நடைபெறும் வடகிழக்கு பிரதேசங்களில் ஹிந்து தேசியவாதம் நல்லதொரு விஷயமாகும்.

பாராளுமன்ற தாக்குதலைப்போல் பாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டிய ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஹிந்து தேசியவாதம் நாட்டில் தீவிரமடையும் என ஜெட்லி கூறியுள்ளார்.

அருண் ஜெட்லியின் இக்கூற்று,பாராளுமன்றத் தாக்குதல் மற்றும் மும்பை தீவிரவாதத் தாக்குதல் ஆகியன பா.ஜ.கவுக்கு தெரிந்தே நடந்ததா? என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

அரசியல் அதிகாரத்தைப் பெற எதனையும் செய்ய தயாரான கூட்டம்தான் பா.ஜ.க மற்றும் சங்க்பரிவார் என்பது அருண் ஜெட்லியின் கூற்று உறுதிப்படுத்துகிறது.

வைத்த ஐஸில் ஜன்னி வந்திருச்சி!! கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா!!

சென்னை, மார்ச். 26-தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பா.ஜ.க. முன்னாள் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

தமிழகத்தின் முக்கிய இரு கட்சிகளான தி.மு.கவும்,அ.இ.அ.தி.மு.கவும் இலவசங்களை அள்ளி வீசி தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டன.

தமிழர்களை சோம்பேறிகளாக்கும் அதேவேளையில் வேலை வாய்ப்பிற்கோ, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித அறிவிப்புகளும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் புறம்போக்கு கட்சியான பா.ஜ.க ஏதோ அடுத்து தாங்கள்தாம் ஆட்சிக்கு வருவதைப் போல கனவு கண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

புறம்போக்கு கட்சி எனக் கூறக் காரணம், தமிழகத்தின் பிரபலமான எந்த சிறுகட்சியும் கூட இவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* தமிழர்களின் உண்மையான புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்.

* சிறுபான்மை மாணவி களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

* அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும்.

* மாணவர்களுக்கு வருட தொடக்கத்திலும், தேர்வு நேரத்திலும் பேனா, பென்சில் இலவசமாக கொடுக்கப்படும்.

* அரசு பள்ளிகளில் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படும்.

* 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு யோகா, தியானம் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும்.

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டு இலவச பால் கொடுக்கப்படும்.

* பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பெயரில் வங்கியில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.

* ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும்

* சுய உதவிக்குழுக்கள் மூலம் “நாப்கின்”கள் தயாரித்து ஏழைப் பெண்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக கொடுக்கப்படும்.

* பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.

* இரட்டை தம்ளர் முறை ஒழிக்கப்படும்.

* நதிநீர் இணைப்பு கொள்கைப்படி தமிழக நதிகள் இணைக்கப்படும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

* விவசாயத்துக்காக தனிபட்ஜெட் போடப்படும்.

* மலிவு விலையில் விவ சாயிகளுக்கு விதைகள் கொடுக்கப்படும். மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பது தடை செய்யப்படும்.

* ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒரு கறவை பசு மாடு இலவசமாக கொடுக்கப்படும்.

* கச்சத்தீவை திரும்ப பெற்று தமிழர்களின் மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்.

* அரசே சூப்பர் மார்க் கெட் நடத்தும். * மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

* பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். அதுவரை விவசாயிகள் நலன்கருதி கள் இறக்க அனுமதிக்கப்படும்.

* இந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

* அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும்.

* வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றும் உரிமை ஆகாது. எனவே அச்சுறுத்தி ஆசைகாட்டி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகும். எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்.

அவர் மேலும் கூறுகையில் பா.ஜ.க. சார்பில் 194 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: இவர்கள் பின் பற்றும் வர்ணாசிரம் கொள்கைதான் தீண்டாமையை ஆதரிக்கிறது. இந்த தீண்டாமை உண்டானதே இவர்களது ஹிந்த்துதுவா வர்ணாசிரம கொள்கை மூலம்தான் அப்படி இருக்க எப்படி இவர்கள் இதை எல்லாம் ஒழிக்க போவதாக தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்கிறார்கள்.

தலித் மக்கள் அர்சகராக எப்படி உங்கள் ஆன்மிக குரு சங்கராச்சாரியார் ஒத்துகொள்வார். இவர்களுக்கு எப்போதிருந்து தமிழர்கள் மேல் தமிழ் மேல் அக்கறை வந்தது. இவர்கள் சமஸ்கிருதத்தை தூக்கி பிடிபவர்கள் ஆச்சே! இவர்கள் எப்படிதான் பசுதோல் போத்தி வந்தாலும் இவர்கள் காட்டு மிருகம் ஆகிய புலி என்று எல்லாருக்கும் தெரியும்.

Mar 25, 2011

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்!! இரு நாட்டு பிரதமர்கள் வருகை!!

மார்ச் 26, மொகாலி: உலக கோப்பை கிரிக்கெட் தற்போது கடும் உச்சக்கட்டத்தை தொட்டிருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் என்றால் ஆர்வத்திற்கு சொல்லவே வேண்டாம். இரு தரப்பு ஆட்டம் யுத்தம் போல் இருக்கும். ரசிகர்கள் வரும் 30ம் தேதிக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புதன்கிழமை நடக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுகிறது. இதற்கான டிக்கெட் வாங்கிட கடும் போட்டி நிலவுகிகிறது. பலர் டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இரு நாட்டு தரப்பிலும் இருந்து ரசிகர்கள் வரவுள்ளதால் டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் டிக்கெட் ஏழாயிரம் வரை பிளாக்கில் விற்கப்பட்டு வருகிறது.
இந்த போட்டியை காண இந்திய பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானிக்கும் ஆட்டத்தை காண வருமாறு பிரதமர் தரப்பில் இருந்து வரவேற்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருவரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெட் விமானம் நிறுத்த இடம் கிடைக்காமல் தவிப்பு.

இங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்கள் இப்போதே ஹவுஸ்புல்லாகி விட்டன. இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள், இங்கு குவிய தயாராகி வருகின்றனர். இவர்கள் செல்லும் தங்களுடைய ஜெட் விமானத்தை நிறுத்திக்கொள்ள இடம் ஒதுக்குமாறு அரசு அதிகாரிகளிடம்மும், விமானதுறையினருடமும் கேட்டு வருகின்றனர்.

பல விமானங்களை சண்டிகாரிலோ அல்லது அருகிலோ நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரும் புதன்கிழமை மதியம் முதல் இரவு வரை மொகாலி ஆர்வ மின்னொளியில் ஜொலிக்க தயாராகிறது.

மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!!

மதுரை: மதுரையில் எஸ்.எஸ் காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலக வளாகத்தில் மாட்டின் தலையை கண்டெடுத்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கான தீவிரவாத சங்க்பரிவாரின் சதித்திட்டம் என சந்தேகிப்பதாக உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரணை நடத்த வேண்டுமென நேசனல் கான்ஃபெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனைசேசன் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வலியுறுத்தியுள்ளது.

இம்மாதம் ஒன்றாம்தேதி ப்ளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட நிலையில் மாட்டின் அறுத்தெடுக்கப்பட்ட தலை ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் 5 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்திருந்தது.

இவர்கள் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் அருகிலுள்ள ஆற்றங்கரையிலிருந்து மாட்டின் தோலும், கத்தியும், பயன்படுத்திய வாகனமும் கண்டெடுத்ததாக போலீஸ் கூறியிருந்தது.

ஆனால், தங்கள் மீது பொய் குற்றம் சுமத்தி கலவரத்தை உருவாக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிவேலைக்கு போலீஸ் துணை போவதாக முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மனித உரிமை ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான அ.மார்க்ஸ், பீப்பிள் யூனியன் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் ரஜனி, ஃபெடரேசன் ஃபார் பீப்பிள்ஸ் ரைட்ஸ் செயலாளர் ஜி.சுகுமாரன், வழக்கறிஞர்களான முஹம்மது அப்பாஸ், பாதுஷா(என்.சி.ஹெச்.ஆர்.ஒ) ஆகியோர் உண்மைக் கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், ஜமாஅத் நிர்வாகிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் ஆகியோரை சந்தித்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் சித்திரவதைச் செய்ததாகவும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகவும் உண்மைக் கண்டறியும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சம்பவம் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித் திட்டமாக இருக்கலாம். ஏனெனில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் கடந்த கால அனுபவங்கள் இதனை நிரூபிக்கின்றன என என்.சி.ஹெச்.ஆர்.ஓ குற்றஞ்சாட்டியுள்ளது.

முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை!! முலாயம் சிங்!!

மார்ச் 26, புதுடெல்லி : நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, இன்று மக்களவையில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்;”மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. முக்கியமான 14 மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம். ஆகவே இந்த நிலை மாற வேண்டுமானால், மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தார்.

ம.தி.மு.க. எதிர்காலம் குறித்து வைகோ கருத்து!!

மார்ச் 26, ஜெயலலிதா முதல்வராவார் என்று நான் கூற வில்லையென ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பேசினார். ஈரோட்டில் ம.தி.மு.க., மாவட்டக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ம.தி.மு.க., பொது செயலர் வைகோ,

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்றுதான்
கூறினேன். ஜெயலலிதா முதல்வராவார் என்று கூறவில்லை. ம.தி.மு.க. உண்மையான ஜனநாயகக் கட்சி. இந்த முடிவின் மூலம் மக்கள் நல்லெண்ணத்தை கட்சி பெற்றுள்ளது.

இந்த காலகட்டத்தில் படித்தவர்களையும், கட்சி மீது நல்லெண்ணம் கொண்டவர்களையும் பெருமளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். ஜனநாயக முறைப்படி கட்சியை வலுப்படுத்த தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

மதுரை முஸ்லிம்கள் தேர்தல் புறக்கணிப்பு.

மார்ச் 26, கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்தனர்.

4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

மேற்படி அத்துமீற‌ல் சம்மந்தமாகவும், மததுவேசமாகவும், நடந்து கொண்ட காவல் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், போடப்பட்டுள்ள பொய் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய படவேண்டும். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற மாற்றவேண்டும்.

இது சம்மந்தமாக கடந்த 15.03.2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினரும், மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுடனும் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.

பின்னர் மேற்படி மனுவை உள்துறைசெயலாளரும், டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, தென்மண்டல ஐ.ஜி., ஆகியோரும் பதிவு தபாலில் அனுப்பினோம். பின்னர் மதுரை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இது சம்பந்தமாக பல முறை புகார் செய்தோம்.

பின்னர் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட கோரி மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்டு அமைதியான முறையில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

பின்னர் கடந்த 23.03.2011 அன்று மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பரிந்துரை செய்ய கோரினோம். கடந்த 22.03.2011 அன்று பல்வேறு மனித உரிமை அமப்புகள் ஒன்றிணைந்து உண்மை கண்டறியும் குழு ஒன்றை பேராசிரியரும் பிரபல எழுத்தாளருமான அ. மார்க்ஸ் அவர்கள் தலைமையில் உருவாக்கினார்கள்.

இந்த குழு பல்வேறு உண்மைகளை கண்டறிந்து கடந்த 23.03.2011 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையிலும் மேற்படி வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற இதுவரை உத்தரவிடாததால் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் உள்ள 90 ஜமாத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும், அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றினைந்து எதிர்வரும் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக மதுரை வாழ் முஸ்லிம்களை அனைவரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜெ. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு!!

மார்ச் 25, திருச்சி: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 2ம் நாள் பிரசாரத்தை இன்று மாலை 5 மணிக்கு துவக்கிய ஜெயலலிதா, கருமண்டபம், தீரன் நகர், ராம்ஜி நகர் டோல்கேட், புங்கனூர் வழியாக மரவனூர் வரை பிரசாரம் செய்கிறார்.

தமிழீழ நாட்டு பிரதமரின் உருக்கமான வேண்டுகோள்!!


ஒருங்கிணைந்து செயற்பட முன்வருமாறு பிரதமர் வேண்டுகோள்!!முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழீழ மக்களின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளினால் முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதனை வடிவமைப்பதற்காக மதியுரைஞர் குழுவும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் செயற்பாட்டுக் குழுக்களும் எனது ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டு – 12 நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டது.

இதற்க்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற ஓராண்டு காலகட்டமாகிய 2010 ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட பிலடெல்பியா நகரில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டபத்தில் கூட்டப்பட்டதனையும் நீங்கள் அறிவீர்கள்.

முதலாமது அமர்வின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசவை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைக்கப்பட்டது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன.

அரசியலமைப்பின் முன்வரைவினை விவாதித்து ஏற்றுக்கொண்டு – அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தினை அமைத்துக் கொள்வதற்காகக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இறுதிப்பகுதியில் நியுயோர்க் நகரில் கூடினோம்.

அரசியலமைப்பினை விவாதித்தோம். ஏற்றுக் கொண்டோம். இவையெல்லாம் வீடியோ பதிவுகளாக நம்மிடம் உள்ளன. அமர்வின் இறுதி நேரத்தில் சில உறுப்பினர்கள் அதிருப்தி காரணமாகச் சபையில் இருந்து வெளியேறினர். ஜனநாயக முறையின் ஓர் அங்கமாகத் தான் இதனையும் அணுகினோம்.

இதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியில் அமைப்பின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வழிநடாத்திச் செல்லும் நிர்வாக பீடமாக அமைச்சரவையை உருவாக்கினோம்.

இவ் அமைச்சரவையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தமது விருப்பத்தையும் தாம் ஆற்றக்கூடிய பணிகளையும் அறியத் தருமாறு சபையில் இருந்து வெளியேறியோர் உட்பட அனைத்து உறுப்பினர்களிடமும் கோரினோம்.

தமது விருப்பத்தைத் தெரிவித்தவர்கள் மத்தியில் இருந்து அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் தெரிவுசெய்தோம். இளையோர்கள், மூத்தோர்கள், பெண்கள் என அனைவரைம் உள்ளடக்கிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தொடங்கினோம்.
தமிழீழ விடுதலை என்ற நமது இலக்கினை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் பணிமனையினையும் 10 அமைச்சுக்களையும் கொண்டமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தை 10 மாதம் கருவில் இருந்து உருவாகிப் பிறந்து தவழத் தொடங்கி இன்று நடை பயிலவென நிமிரத் தொடங்கும் கால கட்டத்திலேதான் நாம் நிற்கிறோம்.

இக் குழந்தையின் வளர்ச்சியில் படிநிலைகள் உள்ளன. இவ் வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றையும் நாம் கட்டம் கட்டமாகத் தான் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்குரிய தொலை நோக்குடன் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு எண்ணக்கருவாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதனைத் தாங்கள் எல்லோரும் நன்கறிவீர்கள். நேரடித் தேர்தல்கள் மூலம் உறுப்பினர்களைத் தெரிவு செய்து அரசாங்கத்தை அமைத்து அமைச்சுக்களை உருவாக்கியுள்ள நாம் அமைச்சுகளுக்குரிய கட்டமைப்புக்களைத் தற்பொழுதுதான் உருவாக்கத் தொடங்கியுள்ளோம்.

முதற்தடைவையாக அமைக்கப்படும் அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கத்தின் கட்டமைப்புக்களை உருவாக்கும் பணியும் எம்மிடமே உள்ளது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி அவற்றின் ஊடாக செயற்பாடுகளையும் முன்னெடுப்பது என்பது இரட்டிப்பு சவால் நிறைந்த பணியாகும்.

நாம் தற்போது உருவாக்கி வரும் அரசாங்கக் கட்டடைப்புக்கள் எதிர்காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுமையமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக அமைய வேண்டியவை. தற்போதைய சூழலில் நாம் ஒருங்குபட்டு கடினமாக உழைப்பதன் ஊடாகவே வலுவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அடித்தளத்தை இட முடியும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இக் குறுகிய கால இயக்கத்தின்போது தனது செயற்பாடுகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்சூடானுடன் நட்புறவுப்பாலம் கட்டப்பட்டள்ளது.

ஏனைய பல முனைகளிலும் இராஜதந்திர உறவுகள் கட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். உரிய நேரம் வரும் போது அவற்றை மக்களுக்கு அறியத் தருவோம். சிங்கள தேசமும் அனைத்துலக சமூகமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்துள்ளதையும் அவற்றின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அச்சத்தைத் தருவதாக உள்ளது என்பதை அவர்களின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. ஈழத் தமிழர் தேசமானது தனது பலத்தை தமிழக மற்றும் உலகத் தமிழர்கள் எல்லோரது பங்கு பற்றலுடனும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்கள், சக்திகளின் துணையுடனும் கட்டி எழுப்புவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் இது.

இத்தகையதொரு சூழலிலே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசமைப்பினை ஏற்றுக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தம்மை உறுப்பினர்களாகப் பிரகடனம் செய்யாமல் இன்றுவரை இருந்து வருவது நமக்குக் கவலையையும் ஏமாற்றத்தையும்; தருகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்று உறுதிமொழி எடுக்கும்போதுதான் உறுப்பினர் தகைமையைப் பெறுகின்றனர். இதனால் அனைத்துத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் முறையாக எல்லோரது அங்கீகாரத்துடனும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசியலமைப்பின்படி உறுதிமொழியெடுத்து உறுப்பினர்களாகுமாறு நாம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகிறோம்.

எத்தகைய கருத்து முரண்பாடுகளையும்; உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து அணுகுவோம் என்பதுதான் இவ் விடயத்தில் எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இக்தகைய சூழலில் பெப்ரவரி மாதம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்காத சிலரதும் தெரிவு செய்யப்படாதவர்கள் சிலரதும் பெயர்களில் சில கோரிக்கைகளும் நிபந்தனைகளும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இக் கடிதம் என்னை வந்தடைவதற்கு முன்னரே ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஓரிரு இணையத்தள ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது. இக் கடிதம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்ற ரீதியில் எனக்கு எழுதப்படவில்லை. இக் கடிதத்திற்கு நான் பதிலளிக்காமைக்குப் பல காரணங்கள் உண்டு.

முதலாவதாக இக் கடிதம் ஊடகங்களில் முதலில் வெளிவந்து ஒரு கிழமைக்குப் பின்னர் தான் எனக்குக் கிடைத்தது. இரண்டாவதாக நாடு கடந்த உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படாத சிலரது பெயர்களும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. மூன்றாவதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் எல்லாம் என்னிடம் இல்லை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பில் உள்ளடங்கும் அதிகாரங்கள் மட்டும் எனக்கு உண்டே ஒழிய, நான் சர்வ அதிகாரங்கள் கொண்டவன் அல்ல. நான்காவதாக இக்கடிதத்தில் காணப்பட்ட மிரட்டல் தொனி. இக்கடிதம் எனக்குப் பிரதமர் என்ற ரீதியில் எழுதப்படா விடினும், இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பானது என்ற படியினால் இக்கடிதம் பற்றி நான் அமைச்சரவையின் கருத்தைக் கேட்டேன்.

மேலே கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலும் இக்கடிதம் ஒரு நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட கடிதமாக அமையவில்லை என்பதனாலும் நான் அதற்குப் பதில் அனுப்பவேண்டிய அவசியம் இல்லையென அமைச்சரவையும் கருதியது. இச் சிக்கலை மேலும் நீடிக்க விரும்பாத நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உறுதிமொழி எடுத்து உறுப்பினர்களாக தகைமைப்;படுத்துமாறு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அழைத்தோம்.

இக் கால அவகாசம் போதாது எனத் தெரிவிக்கப்பட்டமையால் இது இம்மாதம் 25 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டள்ளது. அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் அறிவித்தவாறு இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் உறுதிமொழி எடுக்கத் தவறும் தெரிவு செய்யுப்பட்ட உறுப்பினர்கள் தாங்களாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகக் கருதி அடுத்த கட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலை தோன்றிவிடும்.

இந் நிலை தோற்றம் பெறுவதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற நிலையில் இருந்து நான் விரும்பவில்லை. அவைத்தலைவர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.

இவ் வேளையில், உறுதிமொழி எடுக்காதவர்களை உறுதிமொழியை எடுத்து அவையின் உள்ளே வந்து எமது ஒற்றுமையைப் பலப்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசங்கத்தின் இளம் தலைமுறை உறுப்பினர்கள் எடுத்திருக்கும் முயற்சியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இம் முயற்சிக்குப் பாராட்டும், இம் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இலக்கினைக் கொண்டவர்கள். ஒரே நோக்கத்துக்காhகச் செயற்படுபவர்கள். அணுகுமுறை வேறுபாடுகள் நமக்கிடையே இருக்கக்கூடினும் நாம் வென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்கிடையே மாறுபாடுகள் எதுவுமில்லை. இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார் களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியே நின்று அணிபிரிந்து இயங்கும் செயற்பாடுகளைக் கைவிடுமாறு ’ஜனநாயக அணி’ எனத் தம்மை அழைத்துக் கொள்வோரை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின்படி உறுதிமொழி எடுத்து உறுப்பினர் தகைமையினை எட்டிக் கொள்ளுமாறும் அவர்களிடம் கோருகிறேன்.

நமக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நாம் பேசித் தீர்ப்போம் வாருங்கள். முரண்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் ஜனநாயக வரையறைக்குள் இருந்து அணுகுவோம் வாருங்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இதுவரை தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைத் தெரிவு செய்யவும், நியமனம் செய்யப்படும் பேராளர்களை நியமனம் செய்யவும,; செனட்சபையை நிர்ணயம் செய்வதற்குமான ஏற்பாடுகளை நாம் இப்போது முன்னெடுத்து வருகிறோம்.

பிரான்சிலும் பிரித்தானியாவிலும் நெதர்லாந்திலும் பின்லாந்திலும் இருந்து இன்னும் தேர்தல்கள் மூலம்; தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் தேர்தல் ஆணையத்தைக் கோரியுள்ளோம்.

இத் தெரிவுகள் நடைபெற்ற பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உட்பட உறுப்பினர்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை அரசியலமைப்புக்குட்பட்டு மேற்கொள்ள முடியும். பேச்சுக்களின் மூலம் மாறுபட்ட கருத்துக்களுக்குள் உடன்பாடு காணவும் முடியும்.

நாம் அரசாங்கத்தினை அமைத்த பின்னர் அரசாங்க நடைமுறைகளில் இருந்து பின்வாங்குவதோ, விலகிச் செயற்படுவதோ அல்லது தடம் பிறள்வதோ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சிறப்புக்கோ உதவாது. இந்த விடயத்தில் நாம் தெளிவாகத் தான் இருக்கின்றோம.;

நாம் இப்போது உருவாக்கும் அரசாங்கத்தை அதன் கட்டமைப்புக்களை மக்களால் தெரிவு செய்யப்படவர்களே எதிர்காலத்திலும் நடாத்திச் செல்லப் போகின்றனர். இங்கு நான் உட்பட தனி மனிதர்கள் எவரும் அரசாங்கத்தின் நிலையான தலைவர்களாக இருக்கப் போவதில்லை.

ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்கள் தமது முழுமையான விடுதலையை அடைந்து கொள்வதற்கு வழிகோலும் வலுமையமாக நிலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக எம்முன்னே விரிந்து நிற்கின்றது. அதனைக் கவனத்தில் கொண்டு அவ்வுண்மையை ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை உரிமையுடன் கோரி நிற்கின்றேன்.

தமிழ் உறவுகளே! நாம் அதிவேகமாகச் செயற்பட வேண்டிய காலம் இது. தமிழ் ஈழத் தேசத்தவராகிய நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கோர வேண்டிய காலகட்டம். நமது மக்களுக்கு அநீதியினை இழைத்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு நாம் அணிவகுக்கும் காலகட்டம். நமது மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் வேண்டி நாம் போர்க்கொடி தூக்கும் காலகட்டம்.

தமது குருதியால் நமது தாயகப் பூமியினை நனைத்து, தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து, இக் கனவுகளுடன் தம்விழி மூடிய நமது மாவீர்களின் எண்ணங்களுக்கு நாம் வடிவம் கொடுக்கும் கால கட்டம்.

தாயக பூமியில் சிங்கள இனவாதப் பூதத்தால் பிய்த்தெறியப்பட்ட நமது மக்களின் மற்றும் மாவீரர், போராளிகள் குடும்பங்களின் வாழ்க்கையினை நிமிரச் செய்வதற்கு நாம் உறுதுணையாக நிற்க வேண்டிய காலகட்டம்.

நமது தேசத்தின், மக்களின் நலன் சார்ந்து, நமது மக்களுக்கு விசுவாசமாக நாம் செயற்பட வேண்டிய காலகட்டம். இக் காலகட்டத்தில் மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அனைத்தும் அமையட்டும்.

உறுதிமொழி எடுக்காதிருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் இவ் அழைப்பினைத் தனிப்பட்ட அழைப்பாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற ரீதியில் இரு கரம் விரித்து உங்களை அழைக்கின்றேன். வாருங்கள்;. ஒன்றாகப் பயணிப்போம். சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைப்போம்.

நன்றி. விசுவநாதன் ருத்திரகுமாரன், பிரதமர் :நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

அமெரிக்க முதலாளியும் இந்திய கோமாளிகளும்!!

மார்ச் 24, உலகப் பணக்காரன், அமெரிக்க கோடீஸ்வரன் வாரன் பப்பெட்டின் இந்திய விஜயம் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற அவாளின் மேல் லோகங்கள் மட்டுமல்ல, தினகரன் பத்திரிகை வரை எஜமான் காலடி மண்ணெடுத்து எழுத ஆரம்பித்து விட்டன.

விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க உன் பொண்டாட்டிய தர்றியேன்னு கேட்ட கதையாய், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும் என்கிறான் பப்பெட்.

வாரன்பப்பெட்டுடன் யார் விருந்தில் கலந்து கொண்டாலும் அவனுக்கு 11 கோடி ரூபாய் தரவேண்டுமாம். அவனோடு விருந்து சாப்பிட தரப்படும் “மொய்” அவனது அறக்கட்டளைக்கு போய்ச் சேருமாம். இதற்குப் பெயர்தான் ஊரை அடித்து உலையில் போடுவது!

இதில் விதிவிலக்காக இந்திய இன்சூரன்ஸ் துறையின் அதிகாரி நாராயணனை மட்டும் விரும்பி அழைப்பதாகவும், அவர் தனக்கு 11 கோடிக்குப் பதில் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் வெளிநாட்டு மூலதனத்திற்கான வரம்பு 26 சதவீதம் என்பதை 49 சதவீதமாக உயர்த்த வேண்டும் என திருவாய் மலர்ந்திருக்கிறான் பப்பெட்.

அதாவது மத்தவன மாதிரி நான் மட்டமான ஆள் கிடையாது. ஒரு வேள விருந்துக்கு உன் வீட்ட எழுதித் தர்றவேணாம்…. வயசுக்கு வந்த பொண்ண குடுங்குறான்… விலை மதிப்பில்லாத பொதுத்துறைகளை.

பொதுவாக நம் ஊரில் விருந்துக்குப் போகிறவன்தான் மொய் வைத்துவிட்டு வருவது வழக்கம். அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளோ இந்தியாவில் விருந்துக்கு வந்தாலே மின்சாரம், தண்ணீர், மருத்துவம் என்று எல்லாப் பொதுத்துறைகளையும் மொய்யாய் வை.. என அன்புக் கட்டளையிடுகிறான்.

எச்சிலை எடுக்கும் பாராளுமன்ற மாமாக்களோ பப்பெட் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் மன்மோகன் சிங்குக்கு மாமலையும் ஓர் கடுகாம்..என ஆடை வரைக்கும் அவிழ்த்துப் போட தயாராகி விட்டார்கள்.

பொதுத் துறைகள் மட்டுமல்ல வெளிநாட்டுக் காரன் பிள்ளை பெற இந்தியாவின் கருப்பைகள் வரை உலகச் சந்தைக்கு திறந்துவிடப் பட்டுவிட்டது. வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள்.

நன்றி; வினவு.

போலி அரசியல்வாதிதான் கருணாநிதி!!

மார்ச் 24, திருக்கோவிலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்து விஜயகாந்த், திருக்கோவிலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், போலிச்சாமியார், போலி மந்திரவாதி, போலி ஆபிசர் போல் போலி அரசியல்வாதிதான் கருணாநிதி.

இந்த கருணாநிதிக்கு ஜீரோ மார்க் போட்ட ராமதாஸ் தற்போது கருணாநிதியை பார்த்து ஹீரோ என்கிறார். இதுபோன்று கூட்டணி அமைத்து கொள்கைக் கூட்டணி என்று சொல்லிக் கொள்ளும் போலி அரசியல்வாதிகளை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பிட மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

Mar 24, 2011

எஸ்.வி. சேகர் ஒரு காமடி பீசு!!

மார்ச் 25, பாஜகவில் இருந்த நடிகர் எஸ்.வி. சேகர் அதிமுகவுக்கு மாறினார். அவரை மயிலாப்பூரில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா.

அதிமுகவில் தனக்கு மதிப்பில்லை என்று கூறி திமுகவுக்கு சாதகமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தபடியே திமுககாரராக செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து அவரை அதிரடியாக கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இருப்பினும் தனது எம்.எல்.ஏ. பதவியை விடாமல் பிடித்துக் கொண்டார். பின்னர் இவர் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென கம்ப்யூட்டர் மூலம் ராகுல் காந்தியைத்தொடர்பு கொண்டேன் நேரில் பார்க்கச் சொன்னார் என்று கூறி ராகுல் காந்தியை சந்தித்தார் எஸ்.வி.சேகர். பின்னர் காங்கிரஸில் இணைந்தார்.

ப.சிதம்பரம் கோஷ்டி மூலமாக இவர் காங்கிரஸில் போய்ச் சேர்ந்ததால் தங்கபாலு தரப்பு காட்டத்துடனேயே இருந்தது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாப்பூரில் போட்டியிட டிக்கெட் கேட்டிருந்தார் எஸ்.வி.சேகர்.

தமிழக காங்கிரஸில் விருப்ப மனு தாக்கல் செய்த முதல் நபர் எஸ்.வி.சேகர்தான்.
ஆனால் எதிர்பாராத வகையில் தனது மனைவிக்கு மயிலாப்பூர் சீட்டை வாங்கி விட்டார் தங்கபாலு. இதை எதிர்பார்க்காத எஸ்.வி.சேகர் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.

தற்போது காங்கிரஸ் தரப்பில் திருப்பூர் தெற்கு, ராமநாதபுரம், பூந்தமல்லி ஆகிய மூன்று தொகுதி வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் இதில் எந்த சீட்டும் சேகருக்கு தரப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருக்கும் எஸ்.வி.சேகரிடம், காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவேண்டும் என்று கேட்டிருக்கிறார்களாம். உட்கார சீட்டு இல்லை; நின்னுக்கிட்டு பிரச்சாரமா? என்ன கொடுமைங்க என்று புலம்பித் தள்ளுகிறாராம் எஸ்.வி.சேகர்.

கலாய்த்த வடிவேலு - கடுப்பான விஜயகாந்த்!!

மார்ச் 25, நாளை கழிச்சி முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்று சொல்லிக்கிட்டு திரியறான் ஒருத்தன்; என்நேரமும் தண்ணிய போட்டுக்கிட்டு.

அட மூதேவி நீ தண்ணியப்போடு. ஆனா முதலமைச்சர் ஆகப்போறேன்னு சொல்லாத. முதலமைச்சர் சீட்டு என்ன மியூசிக்கல் சேரா?

அந்த சீட்டு என்ன சாதாரண சீட்டா? தண்ணியப்போட்டா என்ன வேணும்னாலும் பேசிட வேண்டியதா? ஒருத்தன் கேட்டான் என்னய.....அவர எதிர்த்து நிக்கப்போறீங்கன்னு சொன்னீங்களே எதிர்த்து நிற்கப்போறீங்களான்னு.

ஒரு மேடையில ஏறுனாலே ஸ்டடியா நிக்க முடியல.. ( ஆடிக்காட்டுகிறார்) இந்த ஆள எதிர்த்து நின்னா எனக்குத்தாங்க கேவலம். அதனால நான் ரிஜக்ட் பண்ணிட்டு மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை.

அய்யா மன்னிசிக்குங்க என்று கலைஞரை பார்த்து சொல்லிவிட்டு. டேய் நீ முதலமைச்சர்னா நான் பிரதமர் நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி. நீ ஜனாதிபதின்னா நான் ஒபாமா என்று உரக்கக் சொன்னார், பலத்த ஆரவாரத்திற்கிடையே.

அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார்.

கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு. கேப்டன் என்றால் என்னன்னு தெரியுமா? தண்ணியில மிதக்குற கப்பலை ஒட்டுகிறவர் பேர் தான் கேப்டன்... எந்நேரமும் தண்ணியிலயே மிதக்குறவானுக்கு பேர் கேப்டன் இல்லை... என்று இதையே இரண்டு முறை அழுத்தமாக சொன்னார்.

தொடர்ந்து கிங் மேக்கரா நீ... நீ டிரிங்க் மேக்கார் என்றார். திருவாரூர் தெற்கு ரதவீதியில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வடிவேலு இப்படி பேசியதைக் கேட்ட விஜயகாந்த் கடுப்பாகி இருக்கிறாராம். விஜயகாந்த் வடிவேலு விவகாரம் பழைய கதை என்று பார்த்தால் இப்போதுதான் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது.

காங்கிரசை தோற்கடிக்காமல் ஒயமாட்டேன் சீமான் ஆவேசம்!!!

சென்னை, மார்ச், 24நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைரக்டர் சீமான் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயல்பட்டு இலங்கை தமிழ் இனத்தை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம். இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 63 தொகுதிகளிலும் எதிர்த்து பிரசாரம் செய்வோம்.

நாளை எனது பிரசாரத்தை நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தொடங்குகிறேன். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரசாரம் செய்வேன். தமிழரால் உருவெடுத்து உள்ளோம். காங்கிரசை கறுவறுப்போம். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரசாரம் அமையும்.

இலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம். வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.

எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம். காங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பேராசிரியர் தீரன், ஷாகுல்அமீது, தடா சந்திரசேகர், நெல்லை சிவா, வெற்றிக்குமரன், ஆவல் கணேசன், ஆகியோர் உடனிருந்தனர்.

அட இந்த நடிகர்களின் அலும்பு தாங்கலப்பா!!


மார்ச் 24, எதிர்ப்புகள் இருந்ததால் நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் திமுகவில் இருந்து விலகி அதிமுக பக்கம் போனார். அவர் தற்போது எடுத்திருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’ படத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை வாங்கக்கூடாது என்று விநியோகஸ்தர்களுக்கு மிரட்டல்கள் வந்ததாகவும், அதனால் எஸ்.ஏ.சந்திரசேகரனே சொந்தமாக ரிலீஸ் செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலையில் விஜய் யாருக்கு பிரச்சாரம் செய்வார்? விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று தெரிவித்தூள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

’நான் இயக்கிய ‘’நீதிக்குத் தண்டனை’’ படம் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் ரிலீஸ் ஆனது. "நான் சிகப்பு மனித'னும் அப்படிதான். இதில் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அது கற்பனையாக இருக்கலாம். அந்த கற்பனையில் உண்மையும் கொஞ்சம் கலந்திருக்கலாம்.


இதுக்கு யார் பொறுப்பாவது. நான் சினிமாக்காரன். என் வேலையை நான் பார்க்கிறேன். நீதிக்கு தண்டனை' எடுக்கும் போது நான் தி.மு.க. உறுப்பினர் இல்லை. "சட்டப்படி குற்றம்' எடுக்கும் போது நான் அதிமுகவுக்கு சொந்தமானவன் அல்ல.

விஜய் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். பொது மக்களுக்கே விஜயின் மனநிலை புரிந்து இருக்கிறது. அவர் ஒரு அமைதியான போராளி. அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எல்லா விஷயங்களையும் புரிந்து வைத்திருக்கிறார். அனைத்து விதத்திலும் செல்வாக்கில் இருக்கும் நமக்கே இவ்வளவு பிரச்னையா? என்று அவர் யோசிக்கிறார்.

இப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொல்லியும் நம்மை ஏன் குத்துகிறார்கள்? என சிந்திக்கிறார். அவர் பலவீனமானவர் அல்ல, பலமானவர் என்பது இதில் இருந்தே புரிகிறது. கண்டிப்பாக விஜய் யாருக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்யமாட்டார். விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டால்,
அது அவர்களுக்கே தெரியும்’ என்றுதான் சொல்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்

சட்டீஷ்கர் தந்தேவாடாவில் தொடரும் துயரங்கள்!!

மார்ச் 24, தர்மேட்லா: சட்டீஷ்கரில் தந்தேவாடாவில் மூன்று கிராமங்களை பாதுகாப்பு படையினர் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள அனைத்துவித தயாரிப்புகளுடன் வந்த 350க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர்.

300 வீடுகளை அவர்கள் சேதமாக்கினர். மூன்று பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். மேலும் கிராமவாசிகளின் தானியக் கிடங்குகளை அழித்துள்ளனர். இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் ஆர்.பிரசன்னா உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரசன்னா தெரிவிக்கிறார்.

தாக்குதல் நடந்த கிராமங்களை பார்வையிட முயன்ற பத்திரிகையாளர்களை ஆதிவாசிகளை உட்படுத்தி அரசு உருவாக்கிய ஸ்பெஷல் போலீஸ் அதிகாரிகளின் ஆயுதக்குழு தடுத்து நிறுத்தியது. காடுகளினூடே சஞ்சரித்த ‘தி ஹிந்து’ பத்திரிகையின் செய்தியாளர்தாம் பாதுகாப்பு படையினரின் அராஜகத்தை வெளிக்கொணர்ந்தார்.

கிராமங்களில் மாவோயிஸ்டுகளை வேட்டையாட இந்த மாதம் துவக்கத்தில் பாதுகாப்பு படை திட்டம் உருவானது. மோர்பள்ளி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுத தொழிற்சாலை நடத்துவதாக போலீஸிடம் சரணடைந்த மாவோயிஸ்டு ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைக்கு திட்டம் தயாரானது. இந்த தொழிற்சாலையை அழிக்க பாதுகாப்புபடை சிந்தல் நகரிலிருந்து காட்டை நோக்கி புறப்பட்டது. அருகிலுள்ள பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகளிருப்பதாக ரகசிய புலனாய்வு தகவல் கிடைத்திருந்தன.

மோர்பள்ளி கிராமத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதனைக் கேட்டவுடன் நாங்கள் ஓடிவிட்டோம் என மோர்பள்ளியின் முன்னாள் ஸர்பஞ்ச் (பஞ்சாயத்து நிர்வாகி) நுபோமுத்தா தெரிவிக்கிறார்.

மரத்தின் அருகே புளியை சேகரித்துக் கொண்டிருந்த தனது கணவர் மாதவி சுல்லாவை பாதுகாப்பு படையினர் கொன்று மரத்தில் தொங்கவிட்டதாக அவரது மனைவி மாதவி ஹங்கே கூறுகிறார்.

பீடியிலையை சேகரித்துக் கொண்டிருந்த தன்னை தனது இரண்டு மகள்கள் பார்த்துக் கொண்டிருக்கவே பாலியல் பலாத்காரம் செய்ததாக 45 வயதான ஐம்லா கங்கி தெரிவிக்கிறார். தனது கைவசமிருந்த பத்தாயிரம் ரூபாயை பாதுகாப்பு படையினர் திருடியதாகவும் கங்கி கூறுகிறார்.

மாதவி கங்கி, மகன் பீமா, மகள் ஹுரே ஆகியோரை பாதுகாப்பு படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.அதேவேளையில் முதல்நாள் ஆயுத தொழிற்சாலையையோ , மாவோயிஸ்டு களையோ மோர் பள்ளியில் தங்களால் கண்டறிய இயலவில்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் பாதுகாப்புப் படையினர் திம்மாபுரத்தில் முகாமிட்டனர். மார்ச் 14-ஆம் தேதி மாவோயிஸ்ட்கள் பதிலடிக் கொடுத்தனர். இதில் ஸ்பெஷல் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். 9 பேருக்கு காயமேற்பட்டது. மறுநாள் 50 கட்டிடங்களை பாதுகாப்பு படை தீக்கிரையாக்கியதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பாரதிய ஜனதாவின் பொய் விடியோ!! பரபரப்பு!!

மார்ச் 24, புதுடெல்லி: அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் அளித்ததாக கூறும் விவகாரத்தை பா.ஜ.கவும், ஐ.பி.என் – சி.என்.என் தொலைக்காட்சி சேனலும் திட்டம் தீட்டி விரித்த வலை என டெஹல்கா வெளிக் கொணர்ந்துள்ளது.

விக்கிலீக்ஸ் வசமிருக்கும் அமெரிக்கா தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்கள் அடங்கிய இந்தியா தொடர்பான கேபிள் செய்திகளை ‘தி ஹிந்து’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இச்செய்தியில்தான் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.

இந்நிலையில் டெஹல்காவில் வெளியான செய்தியானது௦ காங்கிரஸிற்கு பா.ஜ.கவுக்கு எதிரான தற்காப்பு ஆயுதமாக மாறியுள்ளது. பா.ஜ.கவின் மூத்ததலைவர் எல்.கே. அத்வானி, மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, சுதீந்தர் குல்கர்னி ஆகியோரின் ஆதரவுடன் சி.என்.என்.-ஐ.பி.என் சேனலுடன் இணைந்து நடத்திய ரகசிய கேமரா ஆபரேசனின் மோசடியை டெஹல்கா வெளிப்படுத்தியுள்ளது.

இதுத் தொடர்பான 10 தொலைபேசி உரையாடல்களின் ஆவணங்களை டெஹல்கா தம் வசம் வைத்துள்ளது. BJPMPAshokArgal_Call_1, BJPMPAshokArgal_Call_2, சி.என்.என்.-ஐ.பி.என் தொலைக்காட்சிக்காக கேமரா ஒளிப்பதிவுக்கு தலைமை வகித்த செய்தியாளர் சித்தார்த் கவுதம் வெளியிட்ட தகவல்களுடன் டெஹல்கா இதனை தெரிவித்துள்ளது.

ரகசிய ஆபரேசனுக்கு கவுதமிற்கு கட்டளை பிறப்பித்தவர் பா.ஜ.கவின் மாநிலங்களவை தலைவரான அருண் ஜெட்லியாவார். சுதீந்தர் குல்கர்னி சேனல் குழுவினருக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுத்துள்ளார். ரகசிய கேமரா ஆபரேசனுக்கு பிறகு எல்.கே.அத்வானி நேரடியாக கவுதமை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அசோக் அர்கார்,ஃபகான் சிங் குல்ஸ்தே,மகாவீர் பகோரா ஆகிய பா.ஜ.க எம்.பிக்கள் ரகசிய கேமரா ஆபரேசனில் பங்கேற்றுள்ளனர். சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அஹ்மத் பட்டேல் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங் ஆகியோரை இந்த ரகசிய கேமரா ஆபரேசனில் சிக்கவைக்க திட்டமிட்டப் பொழுதும் அவர்கள் அதில் சிக்காமல் தப்பிவிட்டனர்.

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2008 ஜூலை 22-ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது பாராளுமன்ற அவையின் நடுவே பா.ஜ.க எம்.பிக்கள் பண கட்டுகளுடன் வந்து தங்களுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டது எனக்கூறி உயர்த்தி காண்பித்தனர்.

இச்சம்பவம் இந்திய தேசத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங் அளித்த லஞ்சப் பணம் என அவர்கள் குறிப்பிட்டனர். லஞ்சப் புகாரை விசாரித்த கிஷோர் சந்திரதேவ் கமிட்டி அமர்சிங்கையும், அஹ்மத் பட்டேலையும் குற்றமற்றவர்கள் என கூறியது.

நேற்று பாராளுமன்றத்தில் டெஹல்காவின் அறிக்கையை உயர்த்திக்காட்டி பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்ஸால் பிரதமருக்கெதிரான பா.ஜ.கவின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க தலைமையின் ஆசீர்வாதத்துடன் சேனல் இந்த ரகசிய கேமரா ஆபரேசனை நடத்தியதாக பன்ஸால் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு காங்கிரஸோ, சமாஜ்வாதிக் கட்சியோ எம்.பிக்களை விலைக்கொடுத்து வாங்கவில்லை என டெஹல்கா தெரிவித்துள்ளதாக பன்ஸால் தெரிவித்தார்.

Mar 23, 2011

பூண்டும் அதன் மருத்துவ குணமும்!!

நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் பூண்டுக்கு இருக்கிறது. பூண்டில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வேதிப்பொருளை மாத்திரை வடிவில் உட்கொண்டபோது முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் குணமடைகிறார்கள்.

எலிகளிடம் நடத்திப் பார்த்த சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக ஜப்பானின் சுஷுகா மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் ஹிரோமு சாக்குராய் கூறுகிறார். பூண்டில் காணப்படும் வெனேடியம் மற்றும் அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்படுகிறதாம்.

இதற்கு முன்பாக வெனேடியம்-அல்லிக்ஸின் கூட்டுப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஊசிமருந்து 1ம் வகை 2ம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு குணமளித்தது. இந்த புதிய ஆராய்ச்சியின் விளைவாக வாய்வழி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் கணையநீரில் உள்ள பீட்ட செல்கள் கணைய நீரை சுரக்காமல் இருந்தால் அது முதல்வகை நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இந்த நோயாளிகள் இன்சுலினை தினந்தோறும் ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும்.

தசைகள், கொழுப்பு, கல்லீரல் இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப கணையத்தில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்படுகிறது. நாளடைவில் தேவை பெருக்கிக்கொண்டே போகும்போது தேவைக்கேற்ப இன்சுலினை சுரக்கும் சக்தியை கணையம் இழந்துவிடுகிறது.

இந்தவகை நோயாளிகள் மருந்துடன், உடல் எடையைக் குறைக்கவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டாம் வகை நீரிழிவுநோய் எனப்படும். இவர்கள் சாப்பிடும் மருந்துகளால் பக்கவிளைவை எதிர்கொள்ளுகிறார்கள். இந்த மருந்தை மனிதர்களுக்கு பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மிளகு கறி!!

தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு முழு பூண்டு
எண்ணை - 5 தேக்கரண்டி
வெங்காயம் - 4
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை: எண்ணையைக் காய வைத்து அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் பூண்டை பொடியாக அரிந்து போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும். கடைசியாக மிளகு சீரகத் தூள் தூவி மீண்டும் கிளறி 5 நிமிடம் தீயை சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.

பகுத்தறிவா? அது ஏந்த கடையில் கிடைக்கும்!!

மார்ச் 24,: பகுத்தறிவு பகலவனாக பவனி வந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் மஞ்சள் துண்டின் மகிமையில் மனதை பறிகொடுத்த சம்பவம் அனைவரும் அறிந்ததே! பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் பாடம் பயின்றதாக படம் காண்பிக்கும் கலைஞர் வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக சென்னையில் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

அவர் புறப்பட்ட பிரச்சார வேனுக்கு முன்னால் தேங்காய் உடைத்து ஆசிர்வாதித்துள்ளனர் அவரது கட்சியின் கொள்கை கோமான்கள். இதுக்குறித்து கேள்வி எழுப்பினால்,வட நாட்டிலிருந்து வந்த பிள்ளையாருக்கு உடைக்கும் தேங்காயை எனக்கு உடைத்தால் என்னவாம்? என கலைஞர் எதிர்கேள்வி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முன்பு இவரது கட்சியின் அமைச்சர் ஒருவர் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் தீ மிதித்தபொழுது தனது காலையே மிதித்ததுபோல் துள்ளிக் குதித்தார் கலைஞர். காட்டுமிராண்டித்தனம் என கண்டித்தார். ஆனால்,கோவில் கும்பாபிஷேகங்களில் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்வது, வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் பின்னால், தன் குடும்பத்தினர் சுற்றுவது இவற்றை எல்லாம் மறந்துவிட்டார், பகுத்தறிவு குறித்து அறிக்கை விடும் கலைஞர்.

பாசிச பா.ஜ.க பரிவாரத்தை பண்டாரங்கள், பரதேசிகள் என திட்டித் தீர்த்தவர்தாம் பின்னர் அவர்களோடு கூட்டணி வைத்தார். சர்ச்சைக்குரிய சாயிபாபவுடன் கூடிக்குலாவி கொஞ்சநஞ்ச பகுத்தறிவையும் பறிகொடுத்தார். சாயிபாபா கலைஞரை சந்தித்த வேளையில் அவர் கொடுத்த மந்திர மோதிரத்தை (இது ஒரு மோசடி என நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்) விரலில் அணிவதற்கு போட்டிப் போட்டார்களாம் கலைஞரின் போர்ப் படைத் தளபதிகள்.

தஞ்சை பெரிய கோவிலின் பிரதான வாசல் வழியாக ஆபத்து ஏற்படும் என்ற மூட நம்பிக்கையால் பின்வாசல் வழியாக சென்றவர். திருக்குவளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கலைஞர் பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றிய விளம்பரத்தில் எமதர்மன் வீசும் பாசக் கயிற்றை கலைஞர் தடுப்பது போன்ற படம் நாளிதழ்களில் விளம்பரமாக வந்தது. ஆர்.எஸ்.எஸ். ஸால் உருவாக்கப்பட்ட கிராமப் பூசாரிகள் சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தை வழங்கியவர் கலைஞர்.

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தபொழுது அக்கட்சி இந்துத்துவாவை முன்னிறுத்தவில்லை என பேட்டியளித்தார். இவ்வாறு பகுத்தறிவுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமில்லை என தனது செயலால் பிரகடனப்படுத்தும் கலைஞர் பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாநாட்டில் பேசும் வேளையில், அரசியலைத் துறந்து பெரியார் வழியில் சமூக சீர்திருத்தத் தொண்டில் ஈடுபடுவதை நோக்கி என் மனம் அவாவுகிறது என்றார்.

உடனே, பலரும் பகுத்தறிவு பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடிக்கும் என கனவுக் கண்டனர். ஆனால், அவையெல்லாம் வெற்று வார்த்தைகளும், தனது கட்சியினரை ஏமாற்றும் தந்திரமும்தான் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்துக் கொண்டனர். ஆக மொத்தத்தில் கலைஞர் ஒரு கைத்தேர்ந்த அரசியல்வாதி.

தனிப்பட்ட ரீதியாக அவர் ஒரு கவிஞர், கதாசிரியர், வசன கர்த்தா. ஆனால், பகுத்தறிவிலிருந்து கலைஞர் பத்தடி தூரம் விலகியே உள்ளார். இன்னமும் கலைஞரிடம் பகுத்தறிவு இருக்கிறது என நம்புபவர் தி.க தலைவர் அய்யா கி.வீரமணி மட்டுமே. அடுத்து கலைஞர் ஆட்சிக்கு வருவதைப் பொறுத்து அய்யா வீரமணியின் நிலைப்பாடும் மாறலாம்.

பாகிஸ்தான் அபார வெற்றி!! அரையிறுதிக்குள் நுழைந்தது!!

மிர்பூர், மார்ச் 24: வங்கதேச தலைநகர் டாக்காவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான். இதன்மூலம் உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 43.3 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 20.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்த உலகக் கோப்பையில் இரண்டு முறை 5 விக்கெட்டுகள், இரண்டு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 21 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் அப்ரிதி. இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ஜாகீர்கான் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

58 வயதா!! இனி நீங்கள் பஸ்ஸில் இலவசமாக போகலாம்!!

மார்ச் 24,: தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இலவச லேப் டாப் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும். 60 வயதான மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதி என்பது 58 வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கும் வழங்கப்படும்.

திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி,

அனைவராலும் தற்போது பாராட்டப்பட்டு வரும் திமுக தேர்தல் அறிக்கையில், சொன்னவற்றை நிறைவேற்றுவோம். சொல்லாதவற்றையும் நிறைவேற்றுவோம். கடந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இதற்கு எடுத்துக்காட்டு.

போபால் விஷவாயு!! ஆண்டர்சனை கொண்டுவர சி.பி.ஐ மனு!!

மார்ச் 24, புதுடெல்லி: 1984-ஆம் ஆண்டு நடந்த போபால் விஷவாயு விபத்துத் தொடர்பாக யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சேர்மன் வாரன் ஆண்டர்சனை ஒப்படைக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவதற்கு அனுமதியளிக்க கோரி சி.பி.ஐ டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் வினோத் யாதவ் முன்பாக 33 பக்கங்களைக் கொண்ட மனுவை சி.பி.ஐ சமர்ப்பித்துள்ளது. போபால் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் ஆண்டர்சனை விசாரிப்பதற்காக அவர் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது.

இம்மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணத்திற்கு காரணமான போபால் விஷவாயு விபத்து வழக்கில் போபால் நீதிமன்றம் வாரன் ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

விஷவாயு ஏற்பட்டு சில தினங்களுக்குள்ளாகவே போபால் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட ஆண்டர்சனுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. அதன் பிறகு அமெரிக்காவிற்கு சென்ற ஆண்டர்சன் பின்னர் ஒருபோதும் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை.

அட சூட்கேசை வாங்கிட்டு கட்சியை உடைச்சிட்டான்களா!!

மார்ச் 23,: அதிமுக கூட்டணியில் இருக்கும் டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம் இரண்டாக உடைந்தது. ’புதிய மூவேந்தர் முன்னணி கழகம்’’ என்று தனிக்கட்சி உருவானது.

மாநில இணை பொதுச்செயலாளர் ஒச்சாத்தேவர் தலைமையில் புதிய மூவேந்தர் முன்னணி கழகம் உருவானதும், ஒச்சாத்தேவர் மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒச்சாத்தேவர், ‘’எங்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும். திமுகவை ஆதரித்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம்’’ என்று தெரிவித்தார்.

சிந்திக்கவும்: திமுக எல்லா கூத்துகளையும் நடத்தும் இந்த தேர்தலில். அட பாவிகளா? சரியா தேர்தல் நேரத்தில் கட்சி உடைப்பு பண்ணி என்னையா? செய்யபோகிறாய். ஏதாவது லாபம் இல்லாமலா இது நடந்து இருக்கும். எத்தனை சூட்கேஸ் மாறியதோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். கேடுகெட்ட அரசியல் என்பது இந்த கூத்துகளை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடிகிறது.

SDPI மேலும் இரண்டு தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு.

மார்ச் 23,: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் SDPI எந்த கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என் ஏற்கனவே அறிவித்தது. அதன் படி முதல் கட்டமாக ஆறு தொகுதிகள். கடையநல்லூர், இராமநாதபுரம், பூம்புகார், நாகை தொண்ட முத்தூர், துறைமுகம், காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டின ஆகிய தொகுதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக நேற்று நடந்த செயற்குழுவில் கூடி முடிவெடுக்கப்பட்டது. அதன் படி பாளையங்கோட்டை மற்றும் திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி பாளையங்கோட்டை வேட்பாளராக மேலபாளையத்தை சேர்ந்த மொவ்லவி சாகுல் ஹமீத் உஸ்மானியும், திருப்பூர் தொகுதி வேட்பளராக அமானுல்லவும் தேர்ந்தடுக்கப் பட்டுள்ளனர்.

Mar 22, 2011

திருவாரூரை நோக்கி தேர்தல் பிரச்சார தேர் கிளம்பியது!!

மார்ச் 23, தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் கருணாநிதி திருவாரூரில் இன்று மாலை துவக்குகிறார். இதற்காக இன்று காலை 6.45 மணியளவில் சென்னையில் இருந்து முதல்வர் கருணாநிதி வேனில் திருவாரூருக்கு புறப்பட்டுச் சென்றார். மாலை நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

சிந்திக்கவும்: எந்த கோட்டையை பிடிக்கபோறார். ஒருநாளும் ஆட்சி பீடத்தை பிடிக்க முடியாது. வருடத்தில் ஒரு முறையாவது இப்படி தேர்தல் நேரத்தில் தமிழகத்தை சுற்றி பார்ப்பதோடு சரி. இந்த அரசியல்வாதிகள் எல்லேரும் ஒன்றுதான் குத்துங்கள் ஐயா குத்துங்கள் கத்தியால இல்ல ஓட்ட குத்துங்கள் சாமி இந்த அரசியல் பிச்சைகாரர்களுக்கு.

தேர்தல் ஜோக்ஸ் கொஞ்சம் சிரியுங்கள் !!!

மார்ச் 23,: 63 தொகுதிக்கு பின்னும் கட்சிக்குள்ள பேச்சு வார்த்தை நடக்குதாமே..." "மொத்தம் கட்சியிலே 9 கோஷ்டி இருக்கே.. ஒரு கோஷ்டிக்கு ஒன்பது தொகுதிகள் கேட்டு பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு...."

* தலைவர் டெல்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்..." "அவங்க சொல்றதெல்லாம் புரியாம.. மௌனமாகவே இருந்திருக்கார்.. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு.. பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க..."

* சரத்குமாருக்கு இரண்டு தொகுதியை ஜெ ஒதுக்கி இருக்காரே..." "இரண்டாவது யார்..?"

* இந்த தேர்தல்ல யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு நினைக்கறே..?" "யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு தெரியாது.. ஆனா யார் தோப்பாங்கன்னு தெரியும்.. ஜனநாயகம் தோற்கும்."

* காங்கிரஸ் ஏன் 63 தொகுதிகள் கேட்டங்களாம்...?" "ஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்."

ராமதாஸ் தனக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து ஒரு தொகுதியை எப்படி விட்டுக் கொடுத்தார்." "ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் கேட்டாப்போல மேலவைல ஒரு சீட் அவர் சொல்றவருக்குத் தரதா கலைஞர் சொல்லி இருப்பார்."

நாட்டுல எவ்வளவு ஜாதிகள் இருக்கு..." "ஒரு சீட், இரண்டு சீட் வாங்கின கட்சியெல்லாம் லிஸ்ட் எடுத்துப் பார்.. தெரிஞ்சிடும்.

முஸ்லிம் காவல்துறை அதிகாரி எரித்து கொலை!!


மார்ச் 23, ஜெய்பூர்: ராஜஸ்தானிலுள்ள சவை மதோபூர் மாவட்டத்தில் முஹம்மத் என்ற முஸ்லிம் காவல் அதிகாரியை பாரதீய ஜனதா கலவரக்காரர்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொலைச் செய்தனர்.

இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில் அந்த முஸ்லிம் அதிகாரியை கலவரக் கூட்டம் தாக்கும் போது உடன்வந்த மற்ற காவலர்கள் நம்மைவிட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்துள்ளனர் என்பதுதான்.

சவை மதோபூர் மக்கள் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில் பெண் கொலைக்கு கடந்த இரண்டு வாரங்களாக மதச்சாயம் பூசப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் காவலருடைய கொலை அரங்கேரியதாகவும் தெரிவித்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சில மர்ம நபர்கள் ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்து கொலை செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவலதுறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதற்கிடையில் கொலையில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மையினச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் காவல்துறை அதிகாரி முஹம்மது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பி.ஜே.பி. தூண்டுதலால் இந்த கலவரம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 17 ஆம் தேதி மீனா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வதாக தகவல் வந்ததின் பேரில் தற்கொலையை தடுக்க முஹம்மது தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்கொலையைத் தடுக்க முஹம்மது முயன்று கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்த ஒருவர் முகமதுவின் தலையில் அடித்ததால் மயக்கமுற்றார். பின்னர் கலவரக்காரர்கள் முஹம்மதுவை காவல் வேனில் போட்டு தீவைத்தனர்.

சம்பவ இடத்தில் டிஎஸ்பி மற்றும் சக காவலர்கள் இருந்தும் முஹம்மதுவை காப்பாற்றாமல் ஓட்டம் பிடித்தனர். காவலர் முஹம்மது நேர்மையாக நடந்ததால் DSP அவரிடம் விரோதப் போக்கை கடைப் பிடித்ததாக தெரிகிறது. இந்த கொடூரக் கொலையால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த வியாழனன்று முஹம்மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க முடியாதென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை சமாதானப்படுத்தியதோடு கொல்லப்பட்ட முஹம்மதுவின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுமென்று முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட டிஎஸ்பி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 1000 க்கும் அதிகமான நபர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 21 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த காவல் அதிகாரி முஹம்மதுவின் உடல் தனது சொந்த ஊரான சிகாரில் கடந்த வெள்ளியன்று அடக்கம் செய்யப்பட்டது.

முதல்ல கரண்டை கொடுங்கப்பா!! மிக்சி, கிரண்டேர்லாம் அப்புறம்!!

மார்ச் 23,; ஆளும் கட்சியான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், குடும்பத்திற்கு கிரைண்டர் அல்லது மிக்சி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் இன்றளவும் மூன்று மணி நேரம் வரை மின் தடை இருந்து வருகிறது.

அதை சரி செய்யாமல் கிரைண்டரும் மிக்சியும் கொடுத்து என்ன பயன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக மின் தடை இருந்து வருகிறது. சில இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடை உள்ளது. இதனால், பல தொழில்கள் முடங்கியுள்ளன.

சிறு தொழில் செய்யும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பும் இழந்து, அவர்களின் குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன், மின் தடை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, மின் வாரியம் அறிவித்திருந்தது

ஆனால், இன்றளவும் அப்பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிரைண்டர் அல்லது மிக்சி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு மக்களிடம் இருந்து பரவலான அதிருப்தி எழுந்துள்ளது.

இது குறித்து பல மாவட்டங்களை சேர்ந்த பொதுநல விரும்பிகள் கருத்து தெரிவித்ததாவது, கடந்த ஆறு மாதங்களில் மின் வினியோகம் தடை காரணமாக, பல்வேறு தொழில்கள் நலிந்துவிட்டன.

ஆயிரக்கணக்கான சிறு தொழில்புரிவோர் பாதிக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய நிறுவனங்கள் கூட "ஷிப்ட்'களை குறைந்துக் கொண்டுள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். இதனால், குடும்ப வருமானமும் குறைந்துள்ளது.

இதற்கு இன்றளவில் தீர்வு காணப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க, வரும் தேர்தலுக்காக, கவர்ச்சிகரமான திட்டமாக, கிரைண்டரும், மிக்சியும் தருவதாக தி.மு.க., அறிவித்துள்ளது. இதற்கு பதில், அடுத்த ஐந்தாண்டிற்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தாலும் அது மக்களை திருப்திபடுத்தியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது சிறப்பு நிருபர்

பசை உள்ள பக்கம் தாவும் பச்சோந்தி!!

மார்ச் 23,: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். தேர்தலுக்கு தேர்தல் கூடு விட்டு கூடு தாவும் ராமதாசுக்கு இம்முறை தி.மு.க 31 இடங்களை ஒதுக்கியது.

இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட சூழலில், ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட ராமதாஸ் அறிவிக்கவில்லை எனக்கூறி அவரது கட்சியைச் சார்ந்த முஸ்லிம்கள் சிலரும், காயிதேமில்லத் பேரவையைச் சார்ந்தவர்களும் ராமதாஸின் உருவப் பொம்மையை நெல்லையில் எரித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாகவே ராமதாஸ் வன்னிய ஜாதிக் கட்சியை நடத்திவருபவர். எக்காலத்திலும், அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டதே இல்லை என்பதுதான் உண்மை. இவரை நம்பி இன்னுமா பா.ம.கவில் முஸ்லிம்கள் உள்ளனர் என ஆச்சரியம்தான் நமக்கு ஏற்படுகிறது.

ஏனெனில் முஸ்லிம்களுக்கு துரோகமிழைப்பதையே பிழைப்பாகக் கொண்டவர் ராமதாஸ் என்பது பெரும்பாலோனோருக்கு தெரிந்த உண்மை. சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ராமதாஸையும், அவரது கட்சியையும் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்த ஓயாது உழைத்தவர்தாம் சமுதாயப் போராளி "பழனிபாபா" அவர்கள்.

என்னையும், ராமதாஸையும் அடுத்தடுத்து அடக்கம் செய்யவேண்டும் எனக் கூறியவர் பழனிபாபா. இன்னும் அளவுக்கதிகமாகவே புகழ்ந்து ராமதாஸை புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றார் பாபா. ஆனால், அவர் வாழும் காலத்திலேயே இந்து தமிழர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தவர் ராமதாஸ்.

ஆர்.எஸ்.எஸ்ஸை கருவருப்பேன் என முழக்கமிட்ட ராமதாஸ் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தார். இலங்கையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும் கூறியவர்.

அவர்களால் இந்தியாவிற்கு ஆபத்து என்றும், குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையம் போன்ற கேந்திரங்களுக்கு பெரும் ஆபத்து என ராமதாஸ் பேட்டியளித்தது இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் கூட இந்த அளவுவுக்கு முஸ்லிம்கள் மீது அவதூறு பேசியது இல்லை என்கிற அளவுக்கு அதையும் தாண்டி பேசியவர்.

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட கூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள் என்பதை மறந்து ஆதாரம் இல்லாத அவதூறு சேற்றை வாரி வீசியவர். அடிக்கடி நான் முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று கருணாநிதி மாதிரி பேசுவதில் வல்லவர்.

அவரது கட்சியில் முக்கிய பொறுப்பை வகிக்கும் கஸ்ஸாலிக்கு எப்பொழுது சீட் கொடுத்தார். ஆகவே ராமதாஸை பொறுத்தவரை அவர் ஒரு ஜாதீய அரசியல்வாதி. எங்கு பசை இருக்கிறதோ அங்கே சென்று ஒட்டிக்கொள்ளும் சந்தர்ப்பவாதி. அந்த கட்சியில் ஒரு முஸ்லிம்கள் கூட இருப்பது அவமானம்.

அவரை நம்பியிருக்கும் ஒரு சில முஸ்லிம்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களது பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும், முயற்சிகளையும் ஜாதீய கட்சியான பா.ம.கவிற்கும் சந்தர்ப்பவாதியான ராமதாஸிற்கும் செலவழிப்பதை நிறுத்திவிட்டு சுயமரியாதை மிக்க கட்சி எதுவோ அதில் இணைந்து சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக உழைப்பதுதான் உத்தமமான செயல்.

வீரமணி ஐயா!! ஏன் இந்த விபரீத முடிவு!!

மார்ச் 23,: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். வரும் 25ஆம் தேதி வில்லிவாக்கம் தொகுதியில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனை ஆதரித்தும், கொளத்தூரில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதரித்தும் பிரச்சாரம் செய்கிறார்.

26ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். 28ஆம் தேதி மேட்டுப்பாளையம், குன்னூர் தொகுதிகளிலும், 29ஆம் தேதி பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் தொகதிகளிலும், 30ஆம் தேதி பெரம்பலூர், குன்னம் தொகுதிகளிலும், 31ஆம் தேதி விராலிமலை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், ஏப்ரல் 1ஆம் தேதி தூத்துக்குடி, பாளையங்கோட்டை,
திருநெல்வேலி, 2ஆம் தேதி உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை மையம் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

சிந்திக்கவும்: ஈழதமிழர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட காரணமாக இருந்த "காங்கிரசோடு ஆல்லவா" இவர் கூட்டு வைத்துள்ளார் . இவர் உங்கள் திராவிட கொள்கையில் இருந்து மாறி "துருபிடித்து போயி" ரொம்பநாளாச்சி. அவர் தமிழ்நாட்டை எப்படி? தன் குடும்பத்தார்களுக்கு பிரித்து கொடுக்கலாம் என்று பார்கிறார். இவரை மீண்டும் வனவாசம் அனுப்பினால்தான் சரியாக வரும்.

புதுச்சேரியில் 10 தொகுதிகளில் திமுக போட்டி!!

மார்ச்,23: புதுச்சேரி மாநிலத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

1. நெல்லித்தோப்பு
2. முதலியார்பேட்டை
3. முத்தியால் பேட்டை
4. தட்டான்சாவடி
5. உருளையான்பேட்டை
6. உப்பளம்
7. காரைக்கால் தெற்கு
8. ஊசுடு (தனி)
9. உழவர்கரை
10. நிரவி திருப்பட்டிணம்

டாக்டர். அ‌ம்பேத்கரின் பிறந்த நாள்! விடுமுறை நாளாக அறிவிப்பு!!

மார்ச் 22, புதுடெல்லி: டாக்டர். அ‌ம்பேத்கரின் பிறந்த ந‌ாளான ஏப்ரல் 14-ம் தேதியை மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; டாக்டர். அ‌ம்பேத்கரின் பிறந்த நாள் ஏப்ரல் 14-ம் தேதி ‌கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏப்ரல் 14-ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அந்நாளில் மத்திய அரசு சார்பான அனைத்து ‌அலுவலகங்கள், ‌தொழில்துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவன ஒப்பந்த சட்டத்தின் படி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் ஏப்ரல்14-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படாது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அட! தோற்க போகும் கட்சியில இப்படி ஒரு ரூல்ஸா!!

சென்னை. மார்ச்.22-தமிழகத்தில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க சோனியா மறுத்து விட்டார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையிலான 20 பேர் கொண்ட மாநில தேர்தல் குழு கடந்த 17-ந் தேதி டிக்கெட் கேட்டவர்களின் விருப்ப மனுக்களை ஆய்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 3 முதல் 5 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலை இறுதி செய்தது.

காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவில் இடம்பெற்றுள்ள வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் இந்த பட்டியலை தங்கபாலு வழங்கினார். நால்வரும் வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியல் தயாரித்தனர்.

அதனை லண்டனில் இருந்து டெல்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினர். பட்டியலைப் பார்த்த சோனியா கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
அப்பட்டியலில் பெரும்பாலானோர் ஏற்கனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்தவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும், புதியவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் சோனியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேட்பாளர் பட்டியலில் தங்கபாலு மனைவி பெயரும் இடம் பெற்று இருந்ததாகவும், அப்பட்டியலை நிராகரிக்கு மாறும் கூறிவிட்டாராம். புதிய வேட்பாளர் பட்டியலுடன் தன்னை வந்து சந்திக்கு மாறு தங்கபாலுவிடம் கூறியுள்ளார்.

சோனியாவின் புதிய திட்டப்படி தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் யசோதா (ஸ்ரீபெரும்புத்தூர்), பீட்டர் அல்போன்ஸ் (கடைய நல்லூர்), ஞானசேகரன் (வேலூர்), அமர மூர்த்தி (அரியலூர்), கோபிநாத் (ஓசூர்), சிவராஜ் (ரிஷிவந்தியம்), கோவை தங்கம் (வால் பாறை), ஜெயக்குமார் (நாமக்கல்), ஆர்.ராம்பிரபு (பரமக்குடி), கே.ஆர்.ராமசாமி (திருவாடானை),.

சுந்தரம் (காரைக்குடி), வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர இரு முறைக்கு மேல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருந்த எஸ். ஆர். பாலசுப்பிரமணியன், பி.வி.ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர்.செல்லக் குமார் போன்றோரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சோனியா முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.

மனித உரிமைகள் மறுக்கப்பட்ட காஷ்மீர்!! ஆம்னஸ்டி தகவல்!!

மார்ச் 22, புதுடெல்லி: பொது பாதுகாப்புச் சட்டம் (Public Safety Act in kashmir) கஷ்மீரில் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் கஷ்மீரில் 20 ஆயிரம் பேர் இச்சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எவ்வித குற்றமும் சுமத்தப்படாமல்,விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என ஆம்னஸ்டியின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

சட்டமில்லாத சட்டம் என பொது பாதுகாப்புச் சட்டத்தைக் குறித்து ஆம்னஸ்டி கூறுகிறது.
இச்சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென மாநில அரசிடம் ஆம்னஸ்டி வலியுறுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இச்சட்டத்தின்படி சிறையிலடைக்கப்படுகின்றனர்.

2010 ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 322 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். எவ்வித குற்றத்தையும் சுமத்தாமலும், விசாரணை யில்லாமலும் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் நோக்கம், பொது சமூகத்திலிருந்து இவர்களை அகற்றுவதே.

இவர்களில் பலர் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகளை தடைச் செய்யும் நோக்கில்தான் இவர்கள் பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்படுகின்றனர் என ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் ஆசியா பசிபிக் இயக்குநர் ஷாம் ஸரீஃபி தெரிவிக்கிறார்.

அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள்,போராளிக் குழுக்களின் உறுப்பினர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் இச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுவர்களும் அடங்குவர் என ஸரீஃபி சுட்டிக்காட்டுகிறார். பல நேரங்களில் இவர்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றார்கள்.

இவ்வேளையில் வழக்கறிஞர்களுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ இவர்களை காண்பதற்கு கூட அனுமதிப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே கஷ்மீரில் ஆயுதக் குழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும், கடந்த ஐந்து வருடங்களுக்கிடையே வீதியில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்துவது பெருமளவில் அதிகரித்திருப்பதாகவும் ஆம்னஸ்டியின் அறிக்கை கூறுகிறது.

போராட்டத்தின் பாணி மாறிய பிறகும் குற்றம் இழைப்பவர்கள் மீது ஏதேனும் குற்றவியல் சட்டத்தை சுமத்துவதற்கு பதிலாக பொது பாதுகாப்புச் சட்டத்தை ஜம்மு கஷ்மீர் அதிகாரிகள் பிரயோகிப்பது தொடருகிறது. சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்துவிட்டு சட்டத்திற்கு அப்பால் போலீஸிற்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிக அதிகாரத்தை வழங்குவதற்குத்தான் இத்தகைய சட்டங்கள் வழிவகுப்பதாக ஸரீஃபி கூறுகிறார்.

பொது பாதுகாப்புச் சட்டத்தின் படி குற்றஞ்சாட்டப்படுபவர்கள் சாதாரண கிரிமினல் குற்றம் சுமத்தப்படும் அளவுக்குக்கூட எவ்வித குற்றத்தையும் செய்யாதவர்கள் என இந்தியாவின் உச்சநீதிமன்றமே இச்சட்டத்தைக் குறித்து விமர்சித்துள்ளது. சட்டவிரோதமாக சிறையிலடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலைச் செய்யவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கஷ்மீர் மாநில அரசு இதுவரை நடைமுறைப்படுத்த வில்லை என ஆம்னஸ்டி குற்றஞ்சாட்டுகிறது.

பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்படுபவர்களுக்கு குற்றம் சுமத்தாமலேயே இரண்டு ஆண்டுகள் வரை ஜாமீன் வழங்கத் தேவையில்லை. அரசுத் தரப்பிற்கு இச்சட்டம் ஏராளமான அதிகாரங்களை வழங்கியுள்ளது. சிறையிலடைக்கப்பட்டவர்களுக்கு முறையான சட்டரீதியிலான போராட்டத்திற்குரிய வாய்ப்புகளை மறுக்கிறது இச்சட்டம்.

ஒருவர் நிரபராதி என கண்டறிந்து பல வருடங்களுக்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டால் அவர் அனுபவித்த கொடுமைகளுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சாத்தியமில்லை என ஆம்னஸ்டியின் அறிக்கை கூறுகிறது. மனித உரிமைக் குறித்த சர்வதேச சட்டங்களை மதித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆம்னஸ்டி ஜம்மு கஷ்மீர் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவது இந்தியா பேணும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிரானதாகும். கஷ்மீரில் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க இந்தியா ஐ.நா பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டுமென ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது.

ரஞ்சிதா & நித்தியானந்தா!! ஒரு சினிமா உருவாகிறது!!!

பெங்களூர், மார்ச். 22-சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா படுக்கையறை காட்சிகள் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்படுத்தின. இதில் நித்யானந்தா கைதானார். ரஞ்சிதா தலைமறைவானார். தற்போது இருவரும் அது உண்மையான படமல்ல, கிராபிக்ஸ் என்று மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நித்யானந்தா ரஞ்சிதா சர்ச்சையை மையமாக வைத்து கன்னடத்தில் சத்யானந்தா என்ற பெயரிலும், தெலுங்கில் ஐ.ஆர்.ஏ. என்ற பெயரிலும் படம் தயாராகி வருகிறது. கன்னடத்தில் நித்யானந்தா வேடத்தில் ரவிசேத்தனும், தெலுங்கில் ராஜேந்திரபிர சாத்தும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையை படமாக்க கூடாது என்று வலியுறுத்தி கன்னடத்தில் படத்தை தயாரிக்கும் மதன் பட்டேலுக்கும், ரவிசேத் தனுக்கும் வக்கீல் கிருஷ்ண குமார் பகவதி மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுபோல் தெலுங்கில் தயாராகும் படத்தை தடை செய்ய கோரி ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் மதன் பட்டேல் கூறும்போது, சத்தியானந்தா படத்தின் படப்பிடிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்த மாட்டோம். படம் முடிந்து ரிலீசாகும்போது பார்த்து அதில் ஆட்சேபனையான காட்சிகள் இருந்தால் நித்யானந்தா எதிர்க்கட்டும். படம் வருவதற்கு முன்பே இது போன்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி தடுக்க முயல்வதை ஏற்க முடியாது என்றார்.

நித்யானந்தாவாக நடிக்கும் ரவிசேத்தன் கூறும் போது, இந்த படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. நித்யானந்தா வேடத்தில் நடிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். நான் பயப்பட மாட்டேன் என்றார்.

இந்த படத்துக்கு ஆந்திரா, கர்நாடகாவில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. நித்யானந்தா ஆசிரம நடவடிக்கைகள் அனைத்தும் இப்படம் மூலம் அம்பலமாகும் என்று பேசுகின்றனர். படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

கடையநல்லூர் SDPI வேட்பாளர் முபாரக் வேட்புமனு தாக்கல்!!

மார்ச் 22,: முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. தனித்து போட்டியிட முடிவெடுத்தது.

மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சி.அதன் அடிபடையில்

எஸ் டி பி ஐ யின் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என் முடிவு எடுக்கபட்டது அதன் அடிபடையில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட ஆறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஆறு தொகுதில் ஒரு தொகுதியான நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நெல்லை முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி வேட்புமனு தாக்கல் முதல் நாளான நேற்று ஜங்ஷன் பள்ளியில் இருந்து ஊர்வலமாக வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த போது அப்பொழுது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தடுக்கப் பட்டால் கடையநல்லூரில் நீண்ட நாளாக தீர்க்கபடாமல் இருக்கும் தண்ணீர் பிரச்சனை தீர்த்து வைப்பேன் ,கடையநல்லுரை வேலை வாய்ப்பு மிக்க நகரமாக மாற்றுவேன், பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கு முயற்சி எடுப்பேன் மேலும் தொகுதி மக்களின் தோளோடு தோளாக நின்று அவர்களின் எந்த பிரச்சனை என்றாலும் உடனடியாக தீர்த்து வைப்பேன் என கூறினார்.

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!

மார்ச் 22,: சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றிய‌ை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என மத்திய அமைச்சர் மு.க., அழகிரி பேட்டியளித்தார். மதுரையில் இன்று மத்திய அமைச்சர் அழகிரியை சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் நிர்வாகி முத்தையா பசும்பொன் சந்தித்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., வுக்கு ஆதரவு நல்குவதாக அவர் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ரத்னா 50 பேருடன் , அமைச்சர் அழகிரி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அழகிரி, தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

அ.தி.மு.க., கூட்டணி தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் இயங்குவது போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 13ம் தேதி தேர்தலுக்குப் பின்னர் மக்கள் அ.தி.மு.க., வென்டிலேட்டரை அகற்றி விடுவார்கள். அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்ததன் மூலம் விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் விஜயகாந்த் படாத பாடு படுவார் என்றார். மேலும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற வியூகம் வகுத்து தர இருப்பதாகவும் கூறினார்.

Mar 21, 2011

பி, ஜைனுல் ஆப்தீனை சந்தித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆதரவு கேட்பாரா?

மார்ச் 22,: சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுக கூட்டணிக்கும் ஆதரவு கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் ஆகியோர் சந்தித்து வருகிறார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். மேலும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ம.ம.க. தலைமை நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

அதை தொடர்ந்து தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தங்களிடம் இருந்து பிரிந்து போன இயக்கமாகிய தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்திடம் ஆதரவு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் அமைப்பாளர் பி. ஜெய்னுல் ஆப்தீன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ப்பார் என்று தெரிகிறது.

அரசியலுக்கு வந்த பின்னால் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை அப்படின்னு நீங்கள் சொல்வது எங்கள் காதுக்கு கேட்குது. அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா.
பொறுத்திருந்து பார்ப்போம் பேராசிரியரின் அரசியல் வியூகத்தை.

இந்நிலையில் தமுமுக தலைமையகத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் வருகை புரிந்தனர். அவர்களை தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். இச்சந்திப்பின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

இலங்கையில் புரட்சி வெடிக்குமா?

கொழும்பு, மார்ச்22: லிபியாவின் நிலை மிக விரைவில் இலங்கையிலும் வரலாம் என்றும் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையில் தன்னை சந்திக்க வந்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. பாலித ரங்கே பண்டாரவிடம், அவர் இவ்வாறு கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் வாழ்க்கைத் தரம் மட்டுமின்றி, வாழ்வதற்கான சுதந்திரமான சூழலும் இல்லாமல் போய்விட்டது என்றும், அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோதப் போக்குகள் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் பொன்சேகா கூறினார்.

எனவே, மிக விரைவில் அதிபர் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அப்போது மக்களை யாராலும் தடுக்கவோ அடக்கவோ முடியாது என்றும் பொன்சேகா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிந்திக்கவும்: இலங்கையில் புரட்சி நிச்சயம் ஏற்படும். அது சிங்கள பேரினவாத தலைவர்களால் அல்ல. இந்த பொன்சேக ராணுவ தளபதியாக இருந்து தமிழர்களை கொன்று குவித்து விட்டு இப்பொது நீலிகண்ணீர் வடிக்கிறார். இவர்களின் சாக்கடை அரசியலை நம்பி தமிழர்கள் இனிமேலும் ஏமாற தயாராக இல்லை.

தனி தமிழ் நாடு அதுதான் நமது குறிக்கோள், கொள்கை என்ற ஒரு கூட்டம் உருவாகும் அவர்கள் செய்வார்கள் புரட்சி. அந்த புரட்சியில் இந்த ராஜபக்சே கூட்டங்கள் அழித்து ஒழிக்கப்படும். ஒவ்வொரு தமிழனுடைய குறிக்கோளும் தனி தமிழ் ஈழம் அமைப்பதே. அதை அடைய ஒற்றுமையோடு, தமிழர் சிந்தனைகளை ஒருங்கிணைத்து போராடுவதே சிறந்த வழி.

நினைவாற்றலை அதிகரிக்க பாதம் சாப்பிடுங்கள்!!

மார்ச் 22; பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

அதுபோல் பாதாம் நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி கொண்டது. குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட கொடுத்து வந்தால் அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும்.
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும்.

நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

தி.மு.க., அ.தி.மு.க., 84 தொகுதிகளில் நேரடி மோதல்!!

மார்ச் 22,: தி.மு.க., அ.தி.மு.க., இடையே 84 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., 160 தொகுதிகளிலும், தி.மு.க., 119 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேரடியாக மோதும் தொகுதிகளின் விபரம்.
1. ஆயிரம் விளக்கு அசன்முகமது ஜின்னா - பா.வளர்மதி
2. சைதாப்பேட்டை மகேஷ்குமார் - செந்தமிழன்
3. ஆர்.கே.நகர் பி.கே.சேகர்பாபு - வெற்றிவேல்
4. கொளத்தூர் மு.க.ஸ்டாலின் - சைதை துரைசாமி
5. வில்லிவாக்கம் க.அன்பழகன் - ஜே.சி.டி.பிரபாகரன்
6. பொன்னேரி (தனி)மணிமேகலை - பொன்.ராஜா
7. திருவள்ளூர் இ.ஏ.பி.சிவாஜி - பி.வி.ரமணா
8. அம்பத்தூர் ப.ரங்கநாதன் - எஸ்.வேதாச்சலம்
9. மாதவரம் டாக்டர் கனிமொழி - வி.மூர்த்தி
10. திருவொற்றியூர் கே.பி.பி.சாமி - கே.குப்பன்
11. பல்லாவரம் தா.மோ.அன்பரசன் - ப.தன்சிங்
12. தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா - சின்னையா
13. உத்திரமேரூர் பொன் குமார் - வாலாஜாபாத் கணேசன்
14. காட்பாடி துரைமுருகன் - எஸ்.ஆர்.கே.அப்பு என்ற ராதாகிருஷ்ணன்
15. ராணிப்பேட்டை ஆர்.காந்தி - முகம்மத்ஜான்
16. திருப்பத்தூர் எஸ்.ராஜேந்திரன் - கே.ஜி.ரமேஷ்
17 திருவண்ணாமலை ஏ.வ.வேலு - எஸ்.ராமச்சந்திரன்
18 கீழ்பெண்ணாத்தூர் கு.பிச்சாண்டி - ஏ.கே.அரங்கநாதன்
19 வந்தவாசி (தனி) கமலக்கண்ணன் - செய்யாமூர் குணசீலன்
20 வானூர் (தனி) புஷ்பராஜ் - ஜானகிராமன்
21 விழுப்புரம் க.பொன்முடி - சி.வி.சண்முகம்
22 சங்கராபுரம் உதயசூரியன் - மோகன்
23 கடலூர் புகழேந்தி - எம்.சி.சம்பத்
24 குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - சொரத்தூர் ராஜேந்திரன்
25 திருவிடைமருதூர் கோவி.செழியன் - பாண்டியராஜன்(தனி)
26 கும்பகோணம் க.அன்பழகன் - ராம.ராமநாதன்
27 திருவையாறு கல்லணை செல்லக்கண்ணு - ரத்தினசாமி
28 தஞ்சாவூர் எஸ்.என்.எம்.உபயதுல்லா - எம்.ரங்கசாமி
29 ஒரத்தநாடு மகேஷ் கிருஷ்ணசாமி - வைத்திலிங்கம்
30 மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா - சிவா.ராஜமாணிக்கம்
31 திருவாரூர் மு.கருணாநிதி - குடவாசல் ராஜேந்திரன்
32 நன்னிலம் இளங்கோவன் - ஆர்.காமராஜ்
33 ஸ்ரீரங்கம் என்.ஆனந்த் - ஜெ.ஜெயலலிதா
34 திருச்சி மேற்கு கே.என்.நேரு - மரியம்பிச்சை
35 திருச்சி கிழக்கு அன்பில் பெரியசாமி - ஆர்.மனோகரன்
36 மணச்சநல்லூர் என்.செல்வராஜ் - டி.பி.பூனாட்சி
37 துறையூர் (தனி) பரிமளா தேவி - இந்திராகாந்தி
38 பெரம்பலூர் (தனி)எம்.பிரபாகரன் - இளம்பை தமிழ்ச்செல்வன்
39 அரவக்குறிச்சி கே.சி.பழனிசாமி - வி.செந்தில்நாதன்
40 கிருஷ்ணராயபுரம் பெ.காமராஜ் - எஸ்.காமராஜ்(தனி)
41 குளித்தலை மாணிக்கம் - பாப்பாசுந்தரம்
42 கந்தர்வக்கோட்டை கவிதைப்பித்தன் - சுப்ரமணியன் (தனி)
43 விராலிமலை எஸ்.ரகுபதி - டாக்டர் விஜயபாஸ்கர்
44 ஏற்காடு (தனி) தமிழ்செல்வன் - பெருமாள்
45 சங்ககிரி வீரபாண்டி ஆறுமுகம் - விஜயலட்சுமி பழனிச்சாமி
46 சேலம் தெற்கு எஸ்.ஆர்.சிவலிங்கம் - எம்.கே.செல்வராஜ்
47 வீரபாண்டி வீரபாண்டி ராஜேந்திரன் - எஸ்.கே.செல்வம்
48 சேலம் மேற்கு இரா.ராஜேந்திரன் - ஜி.வெங்கடாஜலம்
49 ராசிபுரம் (தனி) வி.பி.துரைசாமி - ப.தனபால்
50 குமாரபாளையம் வெப்படை செல்வராஜ் - பி.தங்கமணி
51 பாப்பிரெட்டிபட்டி முல்லைவேந்தன் - பழனியப்பன்
52 மேட்டுப்பாளையம் அருண்குமார் - சின்னராஜ்
53 கவுண்டம்பாளையம் சுப்ரமணியன் - ஆறுக்குட்டி
54 கோவை வடக்கு வீரகோபால் - மலரவன்
55 கோவை தெற்கு பொங்கலூர் பழனிசாமி - சேஞ்சர் துரை
56 கிணத்துக்கடவு மு.கண்ணப்பன் - செ.தாமோதரன்
57 தாராபுரம் (தனி) ஜெயந்தி - பொன்னுசாமி
58 திருப்பூர் வடக்கு கோவிந்தசாமி - எம்.எஸ்.எம்.ஆனந்தன்
59 மடத்துக்குளம் மு.பெ.சாமிநாதன் - சண்முகவேலு
60 அந்தியூர் என்.கே.கே.பி.ராஜா - எஸ்.எஸ்.ரமணிதரன்
61 மேலூர் ராணி ராஜமாணிக்கம் - ஆர்.சாமி
62 மதுரை கிழக்கு மூர்த்தி - தமிழரசன்
63 திருமங்கலம் மணிமாறன் - ம.முத்துராமலிங்கம்
64 மதுரை மேற்கு தளபதி - செல்லூர் ரா ஜு
65 பழனி செந்தில்குமார் - வேணுகோபாலு
66 ஒட்டன்சத்திரம் சக்கரபாணி - பாலசுப்பிரமணி
67 நத்தம் விஜயன் - இரா.விஸ்வநாதன்
68 ஆண்டிபட்டி எல்.மூக்கையா - தங்க தமிழ்செல்வன்
69 போடிநாயக்கனூர் லட்சுமணன் - ஓ.பன்னீர்செல்வம்
70 முதுகுளத்தூர் சத்தியமூர்த்தி - மு.முருகன்
71 திருப்பத்தூர் கே.ஆர்.பெரியகருப்பன் - ராஜகண்ணப்பன்
72 மானாமதுரை (தனி) தமிழரசி - குணசேகரன்
73 ராஜபாளையம் தங்கபாண்டியன் - கே.கோபால்சாமி
74 சாத்தூர் கடற்கரை ராஜ் - உதயகுமார்
75 சிவகாசி வனராஜா - உதயகுமார்
76 அருப்புக்கோட்டைசாத்தூர் ராமச்சந்திரன் - வைகைச்செல்வன்
77 சங்கரன்கோவில் உமாமகேஸ்வரி - சொ.கருப்பசாமி (தனி)
78 ஆலங்குளம் பூங்கோதை - பி.ஜி.ராஜேந்திரன்
79 திருநெல்வேலி ஏ.எல்.எஸ்.லட்சுமணன் - நயினார் நாகேந்திரன்
80 அம்பாசமுத்திரம் ஆவுடையப்பன் - இசக்கி சுப்பையா
81 தூத்துக்குடி கீதா ஜீவன் - ஏ.பால்
82 திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் - பி.ஆர்.மனோகரன்
83 கன்னியாகுமரி சுரேஷ்ராஜன் - கே.டி.பச்சைமால்
84 நாகர்கோவில் மகேஷ் - நாஞ்சில் முருகேசன்

திமுக தலைவர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள்!!

மார்ச்22,: முதல் அமைச்சர் கருணாநிதி, துணை முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், நிதி அமைச்சர் க.அன்பழகன் ஆகிய திமுக தலைவர்களை எதிர்த்து அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும் முதல் அமைச்சருமான கருணாநிதியை எதிர்த்து, திருவாரூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் குடவாசல் எம்.ராசேந்திரன் போட்டியிடுகிறார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல் அமைச்சரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து, தென்சென்னை மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் சைதை சா.துரைசாமி போட்டியிடுகிறார்.

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளரும், நிதி அமைச்சருமான க.அன்பழகனை எதிர்த்து, அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பிரபாகர் போட்டியிடுகிறார்.

இதேபோல், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து, சாந்தாபுரம் திமுக கிளைக் கழக முன்னாள் செயலாளர் என்.ஆனந்த் போட்டியிடுகிறார்.