Feb 26, 2011

ஆயுத போராட்டத்தை நோக்கி தள்ளப்படும் இந்திய முஸ்லிம்கள்!!

மும்பை, பிப்.26- கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங் தாகூர் என்பவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் இவரை சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மற்றும் இந்தியா முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து செயல்பட்ட சுனில் ஜோஷி என்பவரை சுட்டு கொன்ற வழக்கில் மீண்டும் சிபிஐ வழக்கு பதிவு செய்து தங்களது கஸ்டடியில் எடுத்துள்ளது.

யார்? இந்த சுனில் ஜோஷி!! ஏன்? இவரை ஹிந்துத்துவா இயக்கத்தை சேர்ந்த பெண்சாமியார் சாத்வி பிரக்யா சிங் சுட்டு கொல்ல வேண்டும்! இதுதான் நம் ஒவ்வொருவரிடமும் எழும் கேள்வி. இதுதான் பாசிச ஹிந்துதுவாவின் மற்றொரு கோரமுகம்.

இந்த சுனில் ஜோஷி என்பவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். இவரை கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த திட்டம் தீட்டியது. அதன்படி அஜ்மீர் தர்கா, சம்ஜெளதா எக்ஸ்பிரஸ், மலோகேன், ஹைதராபாத் மக்கா மசூதி உள்ளிட்ட பத்து இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். நடாத்தியது.

இந்த குண்டுவெடிப்புகளில் சுனில் ஜோஷி மட்டும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நேரடி தொடர்புடையவர். மற்ற நபர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்புகளை சேர்ந்தவர்கள். இந்த குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டதில் அதிகமானோர் முஸ்லிம்களே! இருந்தும் இந்த குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் நடத்தியதாக குற்றம் சாட்டி இந்தியாவின் பாசிச காவல்துறையால் முஸ்லிம்கள் பெருவாரியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்கள்.

இப்படி தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு என்ன? லாபம்! என்று உங்களுக்கு இயல்பான ஒரு சந்தேகம் வரலாம். இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு பலவிதமான லாபங்கள் உண்டு.

ஒன்று இதன் மூலம் முஸ்லிம்களை கொன்று குவிப்பது. அடுத்து இந்த குண்டு வெடிப்புகளின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களை குற்ற பரம்பரை ஆக்கி மனரீதியாக சோர்வுற செய்வது. மற்றும் இந்த வழக்கின் மூலம் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை கைது செய்து சிறையில் தள்ளுவது.

இதை வைத்து இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தும் அநீதங்களை பார்த்தீர்களா? என்று கூறி தங்களது ஹிந்துத்துவா வெறியை வளர்ப்பதன் மூலம் தங்களது இயக்கத்தை வளர்ப்பது. சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது என்று பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடிப்பது இதுதான் இவர்களது முக்கிய குறிக்கோள்.

எனவே இந்த குண்டு வெடிப்பின் முக்கிய மூளையாக செயல்பட்ட சுனில் ஜோஷியை எஸ் ஐ டி சிறப்பு புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்து நெருங்கும் வேளையில் இவர் மர்மாமான முறையில் சுட்டு கொல்லபட்டார். இவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனது துணை அமைப்பை சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் மூலம் சுட்டு கொன்றது. தங்களது சொந்த இயக்கத்தை சேர்ந்தவர்களையும் இந்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். கொல்ல தயங்குவது இல்லை.

இதன் மூலம் இவர்கள் இவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை அறிய முடியும். இது தொடர்பான வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் ரோஹிணி சாலியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூரை, மத்திய பிரதேச மாஜி முதல்வர் உமாபாரதி சந்தித்து பேசினார் என்பதும் இவரைபற்றி உமாபாரதி கூறுகையில், பிரக்யாசிங் தாகூர் ஒரு அப்பாவி பெண் மகாராஜ் அவ்தேசஷ் ஆன்ந்த என்பவரின் அமைதி தியானத்தை பின்பற்றுபவர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவருக்கு எந்த தொடர்பு இருக்காது இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இவரை சி.பி.ஐ. சுனில் ஜோஷி சுட்டு கொல்லபட்ட வழக்கில் மீண்டும் கைது செய்திருப்பது குறிப்பிட தக்கது. தங்களது ஹிந்துத்துவா இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் இவர்கள் எப்படி எல்லாம் பேசுகிறார்கள்.

இது போன்ற செய்திகளை ஹிந்துத்துவா ஆதரவு நாளேடுகளான தினமணி, தினமலர், இந்தியா டுடே போன்ற நாளேடுகளும், ஹிந்துத்துவா செய்தி நிறுவனங்களும் திட்டமிட்டு மூடி மறைகின்றன. இன்று பத்திரிகை துறை என்பது ஹிந்துதுவாவின் கைகளில் உள்ளது. இது போன்ற செய்திகளை முழுவதுமாக வெளியிடாமல் ஏதோ ஒரு மூலையில் ஒரு துண்டு செய்தியாக போட்டு இருட்டடிப்பு செய்கின்றன.

இந்த தினமணி, தினமலர் பத்திரிக்கையை படியுங்கள் முழுவது உலக நாடுகளின் நடக்கும் பயங்கரவாதம் பற்றி எழுதுவார்கள். இங்கு சொந்த நாட்டில் தங்களது ஹிந்துத்துவா இயக்கங்கள் செய்யும் கலவரங்களை, குண்டு வெடிப்புகளை திட்டமிட்டு மறைத்து செய்திகள் வெளியிடுகிறார்கள். ஏதாவது ஒரு வழக்கில் முஸ்லிம் பெயர் வந்தால் போதும் இவர்கள் அல்கொய்தா, லஸ்கர் தொய்பா, என்று கற்பனை குதிரையை ஓடவிட்டு கவர் ஸ்டோரி எழுதுவார்கள்

இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ள கூடிய ஒரு மோசமான பிரிவினைவாத சக்தியாக ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் திகழ்கிறது இதுவே உண்மை. சிங்கள பேரினவாத பயங்கரவாததிற்க்கும், ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாததிற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையில் என்ன? நடந்தது. சிங்கள பேரினவாதம் சிறுபான்மை இனமான தமிழர்களை அடக்கி ஒடுக்கியதன் விளைவுதான் இந்த ஈழ தமிழர் போராட்ட வரலாறு. இனி தனி தமிழ் ஈழநாடே தீர்வு என்ற நிலை உருவாகிவிட்டது.

 இதுபோல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து அடக்குமுறைகளுக்கும், பயங்கரவாத தாக்குதலுக்கும் ஆளாக்கபட்டால், இந்த மதசார்பின்மை மீது உள்ள நம்பிக்கை தகர்க்கபட்டால் முஸ்லிம்களுக்கு ஆயுதம் தூக்குவதை தவிர வழியில்லை என்ற நிலைமை உருவாகும். இதை ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும். இந்திய அரசும், நீதி மன்றங்களும், காவல்துறையும் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல், தடை செய்யாமால் அவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் ஒரு நிலை எடுப்பார்களே ஆனால்! இந்தியா ஒரு உள்நாட்டு யுத்தத்தை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி நகரும் என்பது காலத்தின் காட்டாயமகி விடும். இந்த அரசும், நீதிமன்றங்களும், காவல்துறையும், முஸ்லிம்களை ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளிவிடுவார்களோ என்பதே நடுநிலையாளர்களின் கவலை.

-மணிமாறன்-

"தேங்காயில்" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையின் பயன்கள்:

1) புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. குறிப்பாக கொப்பரை தேங்காய் ஆண்மையைப் பெருக்கும் .

2) தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

3) மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

4) மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

5) தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

6) தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

7) தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

8) தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

9) முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

10) இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன? மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

நன்றி : மாற்று மருத்துவம்

திமுக, காங்கிரஸ், கூட்டணி குழப்பம் தொடர்கிறது!!

சென்னை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் கோரிக்கையை தி.மு.க., தரப்பில் கிண்டல் செய்ததால், காங்கிரஸ் ஐவர் குழு, கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், இரு கட்சிகளிடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தி.மு.க., மூத்த அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் குழுவினரிடம், "உங்களிடமும் உளவுத்துறை உள்ளது; எங்களிடமும் உளவுத்துறை உள்ளது. இரு கட்சிகளின் பலத்தையும், இருவரும் அறிவோம். வேண்டுமானால், கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள். அதில், நாங்கள் சேர்ந்து கொள்கிறோம். லோக்சபா தேர்தலில், நாங்கள் 200 இடங்கள் கேட்டால், நீங்கள் தந்து விடுவீர்களா? சும்மா மிரட்டாதீர்கள்' என கிண்டலாக கூறியுள்ளார். இதனால், காங். குழுவினர் வருத்தம் அடைந்து, பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாக சில செய்திகளும், பேச்சுவார்த்தை தொடக்கத்திலேயே 53 இடங்கள் தான் தரப்படும் மேலிடத்தில் கேட்டு விட்டு வாருங்கள் என, தி.மு.க.,வினர் கூறியதால், பேச்சுவார்த்தையை தொடர முடியாமல் காங். குழுவினர் சென்றனர்' என்று சில செய்திகளும் தெரிவிக்கின்றன.

அட பாவமே!! லீக்குக்கு கிடைச்ச கெதியா இது!!

சென்னை, பிப்.26: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்தி்ப்புக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காதர் மொய்தீன், வெற்றிகரமாக அமைந்துள்ள இந்தக் கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கூட்டணியின் வெற்றிக்கு தாங்கள் பாடுபடப் போவதாகவும் கூறினார். ஐயோ பாவம்! கருணாநிதியை காலம் காலம் நம்பிய முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் லீக்குக்குமா இந்த கெதி. புதிதாக தொடங்கிய ம.ம.க. ஜெயலலிதாவிடம் 3 சீட்டு வாங்கிட்டர்களே! இது தான் நம்ம கருணாநிதி. ரொம்ப கருணை உள்ளவர். இவரு தமிழர் தலைவர் என்று சொல்லிவிட்டு ஈழ தமிழர்களை கொன்று குவிக்கும் பொது வேடிக்கை பார்த்தாரே அப்பவே இவர் சுயரூபம் தெரிந்துவிட்டது. கோவை கொலைகார போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பொய்வழக்கு ஜோடித்த உளவு துறை அதிகாரிக்கு பதவி உயர்வு இதுதான் நம்ம கருணாநிதி.

10 கிலோ தங்க கட்டிகள்!! லஞ்சத்தின் பரிமாண வளர்ச்சி!!

டெல்லி,பிப்.26: இந்தியாவின் மிக முக்கிய அரசு நிறுவனங்களுள் ஒன்றான தேசிய அலுமினிய கழகத்தின் (நால்கோ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அபய்குமார் ஸ்ரீவத்ஸவா லஞ்சப் புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இன்று அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜபர்படுத்தப்படுகிறார். மத்திய அரசுக்கு அதிக வருவாய் பெற்றுத்தரும் நவரத்னா நிறுவனங்கள் எனப்படும் 9 பொதுத்துறை நிறுவனங்களில் தேசிய அலுமினியம் கழகமும் (நால்கோ) ஒன்றாகும். மத்திய சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக அபய்குமார் ஸ்ரீவஸ்தவா உள்ளார்.

2009-ம் ஆண்டு நல்கோ தலைவர் பொறுப்பை ஏற்ற ஸ்ரீவஸ்தவா, லஞ்சம் வாங்கி குவிப்பதாக சி.பி.ஐ.க்கும் மத்திய அரசுக்கும் ஏராள மான புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ஸ்ரீவஸ்தவாவின் நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய மாக கண்காணித்து வந்தனர். அப்போது ஸ்ரீவஸ்தவா பல இடைத் தரகர்களை வைத்திருப்பது தெரிய வந்தது. அவர்களில் ஒரு இடைத்தரகரான பஜாஜ் என்பவர் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் அலுமினிய நிறுவனத்துக்கு உரிமம் பெற, ஸ்ரீவஸ்தவாவை அணுகினார். அந்த உரிமம் கொடுக்க 3 கிலோ தங்க கட்டிகளை ஸ்ரீவஸ்தவா கேட்டதாக தெரிகிறது. இதற்கு சம்மதித்த அந்த நிறுவனத்தினர் 3 கிலோ எடை உள்ள 3 தங்க கட்டிகளை பஜாஜிடம் கொடுத்தனர்.

ஸ்ரீவஸ்தவா பேரம் பேசி 3 கிலோ தங்க கட்டிகள் வாங்கி இருப்பது சி.பி.ஐ.க்கு தெரிய வந்தது. ஸ்ரீவஸ்தவாவை கையும், களவுமாக பிடிக்க நினைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக அவரைப் பின் தொடர்ந்தனர். இது தெரியாமல் ஸ்ரீவஸ்தவா தன் மனைவி சாந்தினி, இடை தரகர் பஜாஜ், அவரது மனைவி அனிதா பஜாஜ் ஆகியோருடன் டெல்லி ஷாஜகான் சாலையில் உள்ள பேங்க் ஆப் மகராஷ்டிராவுக்கு சென்றார். அங்கு அவர் லாக்கரில் தங்க நகைகளை வைத்துக் கொண்டிருந்த போது சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக அவரைப் பிடித்தனர்.

ஸ்ரீவஸ்தவா உள்பட 4 பேரிடமும் விசாரித்தனர். அப்போது அவர்கள் ஊழல் செய்து பலகோடி ரூபாய் சம்பாதித்து இருப்பது தெரிந்தது. உடனடியாக 4 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். வங்கி லாக்கர் இடைத்தரகர் பஜாஜின் மனைவி அனிதா பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. அவரை பினாமியாக வைத்துதான் ஸ்ரீவஸ்தவாவும், அவர் மனைவியும் லஞ்சமாக தங்க கட்டிகளாக வாங்கி வைத்திருப்பது தெரிந்தது. லாக்கரில் இருந்த 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் மதிப்பு 2 கோடி ரூபாயாகும். இதையடுத்து டெல்லி, நொய்டா, புவனேசுவர் உள்பட சில நகரங்களில் உள்ள ஸ்ரீவாஸ்தவாவின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத 30 லட்சம் ரூபாயை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். ஸ்ரீவஸ்தவாவின் மனைவி சாந்தினி வைத்திருந்த கைப்பையை வாங்கி அதிகாரிகள் சோதித்தபோது, அதற்குள் 5 லட்சம் ரூபாய் ரொக்கமாக இருந்தது தெரிய வந்தது. ஸ்ரீவஸ்தவாவும் அவர் மனைவியும் வேறு எங்கெங்கு ஊழல் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்ற விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவை நாகரீகமடைந்த தேசம் என்று சொல்லலாமா?

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நமது நீதிபீடத்தின் வறட்சியையும், வீழ்ச்சியையும் குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. 31பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி பி.ஆர்.பட்டேல், 63 பேரை குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளார். மோடியின் மாநிலத்தில் சிறைக் கொட்டகையிலிருந்து 63 பேருக்கு விடுதலை கிடைத்தது ஆறுதலான செய்திதான். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக இவர்கள் ஒரு முறைக்கூட ஜாமீன் கிடைக்காமல் சிறைக் கொட்டகைகளின் இருள் நிறைந்த சூழலில் தங்களின் வாழ்க்கை கழித்துள்ளனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளி என குறிப்பிடப்பட்ட வயோதிகரான இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜியும், ஏறத்தாழ தனது பார்வையை இழந்துவிட்ட சிறுவனும் அடங்குவர். ஐந்து சிறுவர்களை குஜராத் போலீஸ் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தது. இவர்கள் இழந்துபோன 9 ஆண்டுகளுக்கும், இவர்களுடைய குடும்பத்தினர் அனுபவித்த தீராத வேதனைகளுக்கும் நமது நீதிபீடங்களால் உரிய இழப்பீட்டை வழங்கவியலுமா? பிணைக் கிடைக்கும் என்ற நீதிபீடத்தின் கருணையை எதிர்பார்த்து இவ்வளவு காலம் அவர்கள் சிறைக் கொட்டகைகளில் தங்களது வாழ்க்கையை கழித்துள்ளனர்.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரெயில்வே நிலையத்தில் வைத்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீப்பிடித்தது. அதற்கான குற்றத்தை முஸ்லிம்களின் மீது சுமத்திவிட்டு நரேந்திர மோடியின் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரமான கோரத்தாண்டவத்தை அரங்கேற்றினர்.
சிசுக்களும், சிறுவர்,சிறுமிகளும், பெண்களும், ஆண்களும், வயோதிகர்களும் என அப்பாவி முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் படு கோரமாக கொலைச் செய்யப்பட்டனர். முஸ்லிம் சகோதரிகள் கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். சொத்துக்களும், மஸ்ஜிதுகளும் அழித்தொழிக்கப்பட்டன. இவ்வாறு இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என ஹிந்துத்துவா சக்திகளும், குஜராத் அரசும் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால், யு.சி.பானர்ஜியின் விசாரணை கமிஷன் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நிகழ்வதற்கு காரணம் ரெயில் பெட்டிக்குள் பயன்படுத்தப்பட்ட எரிபொருள்தான் எனக்கூறியது. இதற்கு சாட்சிகளின் வாக்குமூலங்களும், அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் ஆதாரமாக இருப்பதாக பானர்ஜி கமிஷன் தெரிவித்தது. மேலும், போலீஸ் கூறுவதைப்போல், 60 கி.மீ வேகத்தில் செல்லும் ரெயில் மீது பெட்ரோலை ஊற்றுவது சாத்தியமல்ல.

பெட்டியின் உள்பகுதி பூட்டியிருந்ததால் வெளியேயிருந்து எவரும் உள்ளே நுழையவும் வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் பெட்டியிலிருந்து உருவான கரிந்த வாசனையும், புகையும் பெட்ரோல் மூலமாக பெட்டியில் தீப்பிடிக்கவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளன. கரசேவகர்கள் ரெயிலுக்குள் வைத்து சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ பரவி பயணிகளின் பேக்கேஜ்களில் தீப்பிடிக்க காரணமாயிருக்கலாம் என பானர்ஜி கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால், குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷனின் இடைக்கால அறிக்கை பெட்ரோல் வெளியேயிருந்து ரெயில் பெட்டியின் மீது ஊற்றப்பட்டதாகவும், திட்டமிட்ட சதி எனவும் தெரிவித்தது.

நீதிமன்றம் நானாவதி கமிஷனின் அறிக்கையை ஒப்புக்கொண்டு விட்டு, பானர்ஜி கமிஷனின் அறிக்கையை புறக்கணித்துள்ளது அதன் தீர்ப்பிலிருந்து தெரியவருகிறது. கோத்ரா ரெயில் எரிப்பில் கைதுச் செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு நிர்பந்தப்படுத்தி வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு முடிவடைந்துவிட்டது. ஆனால், பல ஆயிரம் முஸ்லிம்களை கொடூரமாக கொன்றொழித்த குஜராத் இனப்படுகொலைத் தொடர்பான வழக்குகள் இழுத்துக் கொண்டே செல்கின்றன.

முஸ்லிம்கள் குற்றவாளிகளாக்கப்படும் வழக்குகளின் விசாரணைகள் மட்டும் இந்தியாவில் வேகமாக நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனைகள் அளிக்கப்படுவது எதேச்சையான ஒன்றல்ல. அப்துல் நாஸர் மஃதனி கோவைக் குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறையில் கழித்து உடலும் உள்ளமும் பலகீனம் அடைந்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் சிறைக்கொட்டகைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம்களை இதுவரை விடுதலைச் செய்யவில்லை. அஸிமானந்தாவின் வாக்குமூலத்தில் மலேகான் குண்டுவெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்பது நிரூபணமாகியும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிப்பதற்கு தடையாக நிற்பது மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐயாகும்.

மஹராஷ்ட்ரா அமைப்பு ரீதியான குற்றத்தடுப்பு சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் போன்ற கறுப்புச்சட்டங்கள் போலீஸாருக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கும் பொழுது அது மூலமாக நிரபராதிகள்தாம் சிறைக் கொட்டகையில் தள்ளப்பட்டு தங்களது வாழ்க்கையின் மதிப்புமிக்க காலங்களை இழந்து வருகின்றனர். தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கும் பொறுப்பும் இத்தகைய அப்பாவிகள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது என்பது மிகக் கொடூரமானதாகும். நிரபராதிகள் சிறையிலடைக்கப்பட்டு, குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தேசத்தில் ஜனநாயகம் எவ்வாறு தழைத்தோங்கும்? அந்த தேசத்தை முன்னேறிய தேசம் என்றோ அல்லது நாகரீகமடைந்த தேசம் என்றோ கூற இயலுமா?

நன்றி: ASA : நன்றி: பாலைவனதூது.

Feb 25, 2011

ஆம்பூர் மட்டன் பிரியாணி!!

தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கிலோ, மட்டன் - 1 கிலோ, மிளகாய் - தூள் 2 தேக்கரண்டி, வெங்காயம் - 500 கிராம், பழுத்த தக்காளி - 500 கிராம், பச்சை மிளகாய் - 5
புதினா - 1 கொத்து, எண்ணெய் - 200 மில்லி, நெய் - 50 மில்லி, எலுமிச்சை -அரை பழம்
பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2, பிரியாணி இலை - 2, உப்பு தூள் - தேவையான அளவு

செய்முறை: அரிசியை ஊற வைக்க வேண்டும். மட்டனை கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு புதினா, தயிர் சேர்க்க வேண்டும். அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்க வேண்டும்.

அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விட வேண்டும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும். மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும். பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

நன்றி : நலன்

இரத்தம் விருத்தியாக, சுத்தமாக சாப்பிட வேண்டியவை!!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

ஆண்டன் பாலசிங்கத்திடம் பிரபாகரன் என்ன கூறினார்!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கடந்த 15ஆம் தேதி புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. முத்துக்குமார் உயிர்விட்ட இடத்தில் நடைபெறும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரை நீதிமன்றத்தில் நான் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்த காலத்தில் முதல் முறையாக முத்துக்குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருடன் நீண்ட நேரம் என்னால் பேச முடியவில்லை. அதன் பிறகே அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அண்ணன் ஆண்டன் பாலசிங்கத்திடம் அண்ணன் பிரபாகரன், தீவிரவாதத்திற்கு பயங்கர தீவிரவாதமே தீர்வு என்று சொல்லியிருந்தார். அந்த வார்த்தைகள் தான் உண்மையாக இருக்கிறது. முத்துக்குமார் சொன்ன வேலைகளை சரியாக செய்து முடிப்பவர். அவரிடம் ஒருவேலையை ஒப்படைத்துவிட்டால் அந்த வேலைக்காக அலையவேண்டியதில்லை. நேரத்தையும், காலத்தையும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்.

நானும் முத்துக்குமாரும், இந்த இயக்கத்தில் இணைந்திருப்பது பலருக்கும் விருப்பமில்லை. ஆனால் நாங்கள் ஒத்த கருத்துடையவர்கள் என்பதால், ஒற்றுமையுடன் செயல்பட்டோம். இனியும் அரசியலில் தொடர்ந்து அப்படியே செயல்படுவோம் என்று எண்ணியிருந்தோம். இங்கு வரும்போதெல்லாம் என் பாதுகாப்புக்காக அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர் முத்துக்குமார்தான். ஆனால் என்னால் அந்த சகோதரனை பாதுகாக்க முடியவில்லை. எனக்கும், என் இயக்கத்திற்கும் பெரிய இழப்பு. இதை நினைக்கும்போது எனக்கு அவமானமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

முத்துக்குமார் படுகொலை தகவலை கேட்டவுடன் மனநோயாளியாக திரிந்தேன். அவர் வெட்டப்பட்ட அவரது ரத்தத்தைப் பார்த்து கோபமும் வெறியும்தான் எனக்கு வந்தது. நான் முன்னின்று நடத்தி வைத்த திருமணம். ஆனால் இப்படி ஆகிவிட்டது. நான் முத்துக்குமார் வீட்டிற்கு சென்று, யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் அழுதுகொண்டிருந்தேன். ஆனால் பிள்ளை மாதரசி, மாமாவின் லட்சியத்தை நிறைவேற்றுங்கள் என்று எனக்கு தைரியம் சொன்னார். எங்களுக்கு சாவைக் கண்டு பயம் இல்லை. இவ்வளவு வலிமையாக நின்றபோது, முத்துக்குமாரை வெட்டிவிட்டு சென்றான் என்றபோது, அவன் யார் என்பதுதான் எங்களுக்கு தெரிய வேண்டும். இன்பமோ, துன்பமோ எங்களுக்கு கொடுத்தவனுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.

நாங்கள் மக்கள் ஜனநாயக கட்சியாகத்தான் செயல்பட நினைக்கிறோம். வன்முறைக் கட்சியாக அல்ல. தொடர்ந்து எங்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது. உண்மையான குற்றவாளியை கைது செய்ய தவறினால், இதுபோன்ற கண்டன கூட்டங்களை மட்டும் நடத்திக்கொண்டிருக்க மாட்டோம். பெரிய போராட்டங்கள் வெடிக்கும். சிபிஐ வரை இந்த வழக்கை கொண்டுபோவோம். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், 4 நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அந்த அவகாசத்தை உங்களுக்கு தருகிறோம். உண்மை கொலையாளிகளை பிடித்துக்காட்டுங்கள். முத்துக்குமாரின் இழப்பு எனது வலது கையை வெட்டி எடுத்ததுபோல உணருகிறேன்.

தேர்தலில் காங்கிரஸ் ஒழிப்புதான் எங்களது லட்சியம். காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதற்காக இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பேன் என்று சொன்னபோது, விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சொன்னவர் முத்துக்குமார். நான் பத்து நாட்கள்தான் சிறைபட்டிருந்தேன். ஆனால் முத்துக்குமார் 10 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்தார். ஆனால் அது பெரியதாக வெளியே தெரியவில்லை. நான் சினிமாகாரன் என்பதால் மட்டுமே நான் சிறைப்பட்டது வெளியே தெரிந்தது. ரத்த பொட்டலம் கொடுப்பது தவறு என்று இந்த நாட்டிலே கூறுகிறார்கள். ஆனால் இது தவறு இல்லை. இந்த மண்ணை சேர்ந்தவனின் உதவியில்லாமல் முத்துக்குமார் படுகொலை நடக்கவில்லை. விரைவில் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

ஈழ படுகொலைகள் போல் லிபியாவில் நடக்காமல் தடுக்கவேண்டும்!! தமிழீழ அரசு கோரிக்கை!!

கடந்த 2009 ஆம் ஆண்டு சிறிலங்காவில் ஈழத்தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையானது தவறியதைப் போன்று, மீண்டும் ஒரு தடவை அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு லிபியாவிலும் தவறக் கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஐ.நா. சபையிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றது. சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளின் போது 60,000 வரையிலான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சமயம், ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையின் "மூடிய கதவுகளின்" உள்ளே நடைபெற்றிருந்த கூட்டங்கள் அனைத்தினாலும், சிறிலங்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகம் கூட ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், அந்த மனிதப் படுகொலைகளை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் பேரினவாத அரசாங்கத்திற்கு தன்னுடைய ஆசீர்வாதங்களையும் வழங்கியிருந்தது. ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தை அனுமதித்திருந்தது போன்று, ஐ.நா.சபையானது லிபியாவிலும் பொதுமக்களைக் கொல்வதற்கு லிபிய அரசாங்கத்தை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது.

சிறிலங்காவில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை நீதியின் முன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு அரச தலைவர்களுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையானது உடனடியாக ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்கவேண்டும்.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கும், இப்பாரிய மனிதத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ள சிறிலங்காவின் அரச தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகத்தினர் இன்றுவரையில் தவறியிருப்பதும், இந்த விடயங்களில் சர்வதேச சமூகத்தினரின் இயலாமையைக் காட்டுவது மட்டுமல்லாமல்; இன்று சர்வதேச எங்கினும் லிபியாவின் அரச தலைவர்களைப் போன்று, இறைமையின் பெயரால் மனிதத்திற்கு எதிராகப் பாரிய குற்றங்களை இழைப்பவர்களுக்கு மிகப்பெரிய துணிச்சலையும், அளவற்ற உற்சாகத்தினையும் கொடுத்திருக்கின்றது.

எனவே சிறிலங்காவில் போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களை தாமதமின்றி, உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து அநீதிகள் இழைக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம், ஐ.நா. சபையானது லிபிய அரச தலைவர்களைப் போன்று மனிதத்திற்கு எதிராகப் பாரிய குற்றங்கள் இழைப்பவர்கள் எவராயினும் அவர்கள் இனிமேலும் நீதியின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதனை இத்தகைய கொடுங்கோலர்களுக்கு தெட்டத் தெளிவாக நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் ஒன்றினையும் விடுக்கின்றது.

சிறிலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது, 60,000 வரையிலான ஈழத்தமிழ்ப் பொதுமக்கள் அரச பயங்கரவாதப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர். சர்வதேச போர் விதிகளை மீறும் வகையில் மருத்துவமனைகளும், பாடசாலைகளும் அரச படைகளின் விமான மற்றும் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின.
போரின் மத்தியில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகங்களில் பல்வேறு தடைகளை அரசபடையினர் ஏற்படுத்தியிருந்தனர். மருந்தின்மையாலும், பட்டினியாலும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை அறிவித்திருந்தது.

போரில் காயப்பட்டிருந்த பொதுமக்களுக்கு அவசியமான மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்திருந்த காரணத்தினாலும், பொதுமக்களில் பலர் இறக்க வேண்டி நேரிட்டது. போரிலிருந்து தப்பியோடிய பொதுமக்களில் பலர் சிறிலங்காவின் அரச படைகளினால் உருவாக்கப்பட்டிருந்த இரகசிய மற்றும் திறந்த வெளி முகாம்களில் சிறை வைக்கப்பட்டு, இவர்களில் பலர் அரச பயங்கரவாதப் படைகளினால் பின்னர் சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்,
பெண்களில் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

மே 26 ஆம் நாள் 2009 ஆண்டு அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான திருமதி. மக்டலீனா செபுல்வேதா அவர்கள், "சிறிலங்காவின் அரசாங்கமானது பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, போரிலிருந்து தப்பியோடிய ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் உட்பட 300,000 இற்கு மேற்பட்ட பொதுமக்களை தனது முகாம்களில் தொடர்ந்தும் அடைத்து வைத்திருக்கின்றது. போதிய உணவின்மையாலும், பட்டினியாலும் பொதுமக்களில் பலர் இந்த முகாம்களில் இறந்து கொண்டிருக்கின்றனர். இவற்றை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்." என அறிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசாங்கமானது இதனை தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், அரச பயங்கரவாதப் படைகளானது பொதுமக்கள் செறிந்திருந்த இடங்களிலும், பொதுமக்களின் பாதுக்காப்பிற்கென அரசாங்கத்தினாலேயே அறிவிக்கப்பட்டிருந்த "பாதுகாப்பு வலயங்களினுள்ளும்" தொடர்ந்தும் மோட்டார் குண்டுத் தாக்குதல்களை அவ்விடங்களின் மீது மேற்கொண்டிருந்தார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது, சிறிலங்காவில் உரிமைகள் மறுக்கப்பட்டு அரச பயங்கரவாத அடக்குமுறைகளுக்கு தினசரி முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஈழத்தமிழினத்தின் அடிப்படை மனித உரிமைகளுக்காக உலக அரங்கினில் குரல் எழுப்புவதற்காகப், போரினால் புலம் பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழர்களினால் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய, உருவாக்கப்பட்டுள்ள ஓர் சர்வதேச அமைப்பு ஆகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், 12 புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் மக்களால் ஜனநாயக வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆவர். இந்த மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு அரசியல்-சாசனத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது பிரதமரையும், அரசவைத் தலைவரையும், பத்துப் பேர் அடங்கிய அமைச்சரவையையும் கொண்டுள்ளது.

அன்று சிறிலங்காவில் நடந்தது, இன்று லிபியாவில் நடந்து கொண்டிருப்பதைப் போன்று, இறைமையின் பெயரால் உலக எங்கினும் மனிதப் படுகொலைகளையும், அரச பயங்கரவாதங்களையும் நடாத்திக் கொண்டிருக்கும் கொடுங்கோலர்களிடம் மேலும் பொறுமை காட்டாது, இனிமேலாகினும் சர்வதேச சமூகமானது மனிதத்திற்கு எதிராகப் பாரிய குற்றங்களைப் புரிந்து கொண்டிருக்கின்ற இந்தக் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்தி தண்டிப்பதன் மூலம் மனித சமூகத்தை போர்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும், பேரழிவிலிருந்தும் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஜனநாயகத்தை நேசித்து மதித்துப் போற்றுகின்ற அனைத்து உலகத் தலைவர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும், உலக மாந்தரையும் வேண்டிக் கொள்கின்றது. மேலதிகத் தொடர்புகளுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

திரு. தணிகாசலம் தயாபரன்,
அரசியல் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், மின்னஞ்சல்: t.thayaparan@tgte.org

தயவுசெய்து வாருங்கள்: http://www.TGTE.ORG

ஹெலிகாப்டரில் வலம்வரும் புதிய சாமியார்!!!

புதுடெல்லி,பிப்.24:யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக் கின்றார்கள் பல சாமியார்கள். 'கதவைத்திற காற்று உள்ளே வரட்டும்' என கட்டுரை எழுதிய ஒரு சாமியார் 'கதவை மூடமறந்ததால்' சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். இந்நிலையில் பல்வேறு சாமியார்களின் கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பொழுதிலும் பலருக்கு யோகா மற்றும் சுவாமிகள் மீதான பற்று விட்டப்பாடில்லை.

இப்பொழுது புதியதொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர்தாம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகா சாமியார் ராம்தேவ். கடந்த 10 ஆண்டுகளில் அவர் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த சொத்துக்களைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரப்பட்டுள்ளது. இந்தியாவின் பல இடங்களிலும் சொத்துக்களை குவித்துள்ள சுவாமிஜிக்கு கோயில்கள் நிறைந்த ஹரித்துவாரில் மட்டும் 1000 கோடிக்கான சொத்துக்கள் உள்ளனவாம்.பத்து ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சஞ்சரித்த சுவாமி ராம்தேவ் இன்று ஹெலிகாப்டருக்கு சொந்தக்காரர்.

தனக்கு சொந்தமான சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வக்கில்லாத ராம்தேவின் நம்பமுடியாத வளர்ச்சியின் பின்னணியைக் குறித்து சி.பி.ஐ விசாரித்து உண்மையை வெளிக்கொணர கோரியது நாத்திகர்கள் அல்லர். மாறாக அகில பாரதீய அகாரா பரிஷத்தின் செய்தித் தொடர்பாளர் பாபா ஹட்யோகிதான். இதேக் கோரிக்கையை முன்வைத்து பலரும் முன்வந்துள்ளனர். வட இந்தியர்களுக்கு மத்தியில் ஆஷ்தா தொலைக்காட்சி சேனல் மற்றும் இதர சேனல்கள் வாயிலாக அதிகாலைகளில் யோகா பயிற்சியை துவங்கிய ராம்தேவின் வளர்ச்சி திடீரென உருவானதாகும். ராம்தேவால் உருவாக்கப்பட்டதுதான் உடல் நலனுக்கான பயிற்சியான யோகா கலை என பல மக்களும் தவறாகவே விளங்கி தொலைக்காட்சிக்கு முன்பாக உட்கார்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். சுவாமி என்ற நிலையில் கட்சி பேதமற்ற அனைவரும் பாபா ராம்தேவின் ஆதரவை பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தை சார்ந்த சங்கர்தேவ் என்ற சன்னியாசி சந்தேகமான நிலையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து ராம்தேவின் ஆசிரமத்தின் செயல்பாடுகளில் மர்மம் நீடிக்கிறது என ஹட்யோகி கூறுகிறார். ராம்தேவின் ஆசிரமத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளில் மோசடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மருந்துகளில் அஸ்திகள் இருப்பதாக சுட்டிக்காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். இந்நிலையில் ராம்தேவை ஆதரித்து பாசிச பா.ஜ.க களமிறங்கியுள்ளது. சாமியார்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதல்லவா?

கத்தாஃபியை சுட்டுத் தள்ளுங்கள்!! யூசுஃப் அல் கர்தாவி வேண்டுகோள்!!

தோஹா,பிப்.25:சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி அல்ஜஸீராவுக்கு அளித்த நேர்முகத்தில், லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தின் சாரம்சம் வருமாறு: தனது சொந்த நாட்டு மக்களுக்காக எதிராக ஏவுகணகளை பயன்படுத்தி மக்களை கொன்று குவிப்பது ஹீரோயிஸம் அல்ல. லிபியா ராணுவத்தைச் சார்ந்த எனது ராணு சகோதரர்களுக்கு கூறிக்கொள்கிறேன், நீங்கள் மக்களைக் கொல்வதற்கான கட்டளைகளுக்கு கீழ்படியாதீர்கள். ராணுவத்தினரில் எவருக்காவது முடியுமானால் அவர் கத்தாஃபியை கொல்லட்டும் என ஃபத்வா(மார்க்கத்தீர்ப்பு) வழங்குகிறேன். அவரைச் சுட்டு வீழ்த்துங்கள். அவரின்(கத்தாஃபி) தீங்கிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ இவ்வாறு கத்தாஃபி கூறியுள்ளார்.

கோத்ரா தீர்ப்பிற்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!!

புதுடெல்லி,பிப்.25:கோத்ரா ரெயில் எரிப்புத் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கோத்ரா வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தீர்ப்பு நீதியை ஏளனம் செய்கிறது. இந்திய நீதிபீடத்தின் நொடிப்பு நிலையை இது தெளிவாக்குகிறது.

குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் இவ்வளவு காலம் பெரும்பாலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. சந்தேகத்தின் பெயரால் அவர்களுக்கு மதிப்புமிக்க ஒன்பது ஆண்டுகள் நஷ்டமானது. ரெயிலை எரிக்க முஸ்லிம்கள் சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற போலீஸாரின் அறிக்கையை ஒத்து நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. ஆனால், குஜராத் போலீஸ், அரசுக்கு சார்பாக செயல்படுவதாகும்.

ஏற்கனவே குஜராத் இனப்படுகொலைத் தொடர்பான சில வழக்குகளை குஜராத்திற்கு வெளியே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது நினைவுக்கூறத்தக்கதாகும். கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிஷனும், குஜராத் மோடி அரசால் நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷனும் வெளியிட்ட அறிக்கைகளில் வேறுபாடுகள் உள்ளன.

ரெயில் சென்றுக்கொண்டிருக்கும் பொழுது 60 லிட்டர் பெட்ரோலை வெளியேயிருந்து ஊற்றமுடியாது எனவும், எரிக்கப்பட்ட ரெயில் பெட்டி உள்ளே பூட்டப்பட்டிருந்தது எனவும் பானர்ஜி கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியது. நானாவதி கமிஷன் அறிக்கையை மட்டும் நீதிபதி கவனத்தில் கொண்டுள்ளாரா? என்று கருதவேண்டியுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன் பானர்ஜி கமிஷனின் கண்டறிந்தவைகளை நீதிபதி புறக்கணித்துள்ளார். தண்டிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோர் குஜராத் அரசால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சித்திரவதைச் செய்து வாக்குமூலம் வாங்கப்பட்டவர்கள்." இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.

மனித உரிமையா? கிலோ எவ்வளவு? கேட்க்கும் குஜராத்!!

புதுடெல்லி,பிப்.25: 'இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸ்' என்ற அமைப்பின் சார்பாக "குஜராத்தின் நிலைமை குறித்து ஆராயப்பட்டு கொடுக்கப்பட்ட அறிக்கை என்னவென்றால்.

(1) வருமான அளவீட்டில் பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இருக்கும் குஜராத், இன்னும் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index) கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகாவை விட பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மேலும், மிகவும் பின்தங்கிய மாநிலமான ஒரிஸா கூட தற்போது தங்களின் நிலமையை மனித மேம்பாட்டுக் குறியீட்டிலும், ஏழ்மையிலிருந்து ஏழ்மையற்ற நிலைக்கு தன்னை முன்னேற்றி வருவதில் முனைந்து செயல்பட்டு வருகிறது.

ஆனால் வருமானத்தில் நான்காம் இடத்தில் இருக்கும் குஜராத் பசி, பட்டினி அதிகம் உள்ளோர் மாநிலப் பட்டியலில் முதலில் பதிவாகி இருப்பது அதிர்ச்சி தரக் கூடியது. வருமானம் அதிகம் உள்ள ஒரு மாநிலத்தில் பசி, பட்டினி இருப்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்று தெரிவித்தார். இதைச் சற்று கூர்ந்து கவனிக்கும்பொழுது, குஜராத்தில் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் மட்டுமே வறுமையிலும், வருமானத்தில் சமமற்ற நிலையிலும் வேரூன்றி இருப்பதை உணர முடிகிறது. அதிகமான முஸ்லிம்களே ஏழ்மையான நிலையில் வலுக்கட்டாயமாக வாழ வைக்கப்பட்டுள்ளனர்.

(2) கல்வி ரீதியிலும், முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட நிலையில் உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் குழந்தைகள் தொடக்க நிலைப் பள்ளியில் 75 சதவிகிதம் சேர்ந்தாலும், வெறும் 26 சதவிகிதம் மட்டுமே உயர்நிலைப் படிப்புக்குச் செல்கின்றனர்.

(3) இந்த அறிவிப்பின் மூலம், நாம் அறியக்கூடிய மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் குஜராத்தில் மட்டுமே 2 சதவிகித முஸ்லிம்கள் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். 11 சதவிகித மக்கள் அடிப்படைத் தேவைகளான வீட்டு உபயோகப் பொருட்கள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தேசிய அளவில், 13 சதவிகித முஸ்லிம்கள் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்பது மற்றொரு தகவல்.

(4) நகர்ப்புறங்களில் முஸ்லிம் பெண்களின் நிலையைக் கவனிக்கும் பொழுது, அதிக அளவில் தொந்தரவுக்கு உட்படுத்த படுபவர்களில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையே அதிகம். 11 சதவிகிதம் மட்டுமே உள்ள மக்கள் தொகையில், 17 சதவிகித வழக்குகள் பதிவாகியுள்ளது மிகவும் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

(5) இன்னும் மிகக் குறைந்த அளவில் பணிபுரிபவர்களும், அதிக அளவில் படிப்பறி வற்றவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர். மரபு ரீதியாக பார்க்கையில் முஸ்லிம்கள் கலை, இயந்திரம் மற்றும் கருவிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் ஆட்சியில் இருந்த போது மற்ற மக்களை விட வைர வியாபாரத்திலும், கைத்தறி வியாபாரத்திலும் அதிக அளவில் இருந்தனர். ஆனால், இன்றைய முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாகி விட்டது. பொருட்கள் உற்பத்தி செய்யும் பணிகளுக்கும், நிர்வாகப் பகுதியில் உள்ள வேலைகளுக்கும் இன்று அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Feb 24, 2011

காங்கிரஸ் & தி.மு.க. கூட்டணி குழப்பம் நீடிக்கிறது!!

சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 48 "சீட்'கள் வழங்கப்படும்; ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கையை தேர்தலுக்குப் பின் பரிசீலிக்கலாம்' என்ற தி.மு.க.,வின் திட்டத்தை, காங்கிரஸ் ஏற்க மறுத்து விட்டது. 80 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்ட நிலையில், 48 தொகுதிகளை ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்தது காங்கிரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட முடிவெடுக்க, முன்னணி நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.

"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும்; குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்க வேண்டும்; அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும்' என, தி.மு.க.,வுடன் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு தி.மு.க., மறுப்பு தெரிவித்ததால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில், இரு கட்சிகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து காங்கிரசின் ஐவர் குழு உறுப்பினர்களான மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் சோனியாவிடம் விளக்கினர். தி.மு.க.,வின் நிலை குறித்து, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மூலம் சோனியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, "காங்கிரசுக்கு கூட்டணியில் 48 தொகுதிகள் வழங்கப்படும்.

கம்யூனிஸ்டுகள் தற்போது கூட்டணியில் இல்லாததால், கடந்த முறை அவர்கள் போட்டியிட்ட 23 தொகுதிகள் கைவசம் உள்ளன. இதில், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் வழங்கியது போக, மீதமுள்ள இடங்கள் காங்கிரசுக்கு கொடுக்கப்படும். ஆட்சியில் பங்கு குறித்த பேச்சு தற்போது எழவில்லை. தேர்தலுக்கு பின்னர் அவசியம் ஏற்படும்போது, அது குறித்து பேசிக் கொள்ளலாம்' என்று, சோனியாவிடம் தி.மு.க., சார்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகிக்கும் நிலையில், கூட்டணியை முறித்துக் கொள்வது தி.மு.க.,விற்கு சாதகமாக இருக்காது என்பதால், கூட்டணியை தொடருவதற்கான முயற்சிகளை தி.மு.க., எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பெண் சாமியாரும்!! பெண் முதல்வரும்!! சந்திப்பு.

போபால்: மலேகான் குண்டு வெடிப்பு வழக்கி்ல் போபால் ‌ஜெயிலில் உள்ள முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா சாத்வி பிரக்யா சிங் தாகூரை , மத்திய பிரதேச மாஜி முதல்வர் ஹிந்துத்துவா உமாபாரதி சந்தித்து பேசினார். கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதி பெண் சாமியார் சாத்விபிரக்யாசிங் தாகூர் என்பவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது போபால் சிறையில் உள்ளர். இந்நிலையில் மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனசக்தி கட்சித் தலைவருமான உமாபாரதி அவரை சிறையில் சென்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின், உமாபாரதி கூறுகையில், பிரக்யாசிங் தாகூர் ஒரு அப்பாவி பெண் மகாராஜ் அவ்தேசஷ் ஆன்ந்த என்பவரின் அமைதி தியானத்தை பின்பற்றுபவர். அவரை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவருக்கு எந்த தொடர்பு இருக்காது இவ்வாறு அவர் கூறினார். இந்த உமாபாரதி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவர் பார்மசூதி இடிப்பில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிட தக்கது. ஒரு முன்னாள் முதல்வர் ஒரு பயங்கரவாத இயக்கத்தின் சாமியாருக்கு வெளிப்படையாக ஆதரித்து கருத்து சொல்லி இருப்பது பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முடிவை நோக்கி நகரும் லிபிய சர்வாதிகார ஆட்சி!!

கெய்ரோ,பிப்.24: டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடியாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி ஒழியப் போவது நிச்சயமாகி விட்டது. அதிபர் மம்மர் கடாஃபியின் 41 ஆண்டுக்கால ஆட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. லிபிய நாட்டின் கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது. ராணுவத் தளபதிகளே கடாஃபியின் ஆட்சி பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டுவிட்டனர். லிபியாவின் தூதரக அதிகாரிகள் ஒவ்வொருவராக பதவி விலக ஆரம்பித்துவிட்டனர். அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூனும் அறிவித்துவிட்டார்.

தடைகள் விதிக்கப்படும்: முதல் கட்டமாக லிபியா மீது ராணுவ, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அதன் பிறகும் நிலைமை சீரடையவில்லை என்றால் பன்னாட்டுப் படைகள் மூலம் லிபிய ஆட்சியாளர்கள் விரட்டப்படுவார்கள் என்றும் தெரிகிறது. கடாஃபிக்கு விசுவாசமாக இருக்கும் ராணுவத்தினரும் கூலிப்படையினரும் தலைநகர் திரிபோலியில் மக்களைக் கொடூரமாக அடக்கி ஒடுக்குகின்றனர். மேற்கிலும் பரவியது கலகம்: அதிபர் கடாஃபிக்கு எதிரான கலகம் லிபிய நாட்டின் மேற்குப் பகுதிக்கும் பரவியது. மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருந்து செயல்படுவோம், கடாஃபி கட்டளை இட்டாலும் மக்களைச் சுடமாட்டோம் என்று ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.

வெற்றிகரமாக தொடங்கிய அதிமுக & தேமுதிக பேச்சுவார்த்தை!!

சென்னை, பிப்.24: நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடைபெற உள்ள 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறும் வகையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் இன்று மாலை பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங் கோட்டையன், பொள்ளாச்சி வ. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேமுதிக சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி மன்றமா? காவி மன்றமா?

ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின் ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இம்மி பிசகாமல் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.

“அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்ட பொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன? அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.

இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது. இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவரை எழுப்பி மிரட்டிவிட்டு, ரெண்டு தட்டுதட்டிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர். தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.

ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை. இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.

ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது. எப்பேர்பட்ட நடுநிலை! எப்பேர்பட்ட மதச்சார்பின்மை!

இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது. இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ இந்த உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மதம் மாற்றுவதைத்தான் அபாயகரமானதைப் போலத் தீர்ப்பு எழுதியுள்ளனர்.

பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகளின் சூக்குமமான வார்த்தைகளுக்கு, கிறித்தவர்கள் மருந்து கொடுத்து, கல்வி கொடுத்துப் பழங்குடியின மக்களை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையைத்தான் பொழிப்புரையாக எழுத முடியும்.

இக்காவித் தீர்ப்பைக் கண்டித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவுடன், “பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.

இதை நீக்கியவுடன், ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர். தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

600-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பக் கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் மறைந்துவிட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால், இக்குற்றச் செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது.

“பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்பதற்குப் பதிலாக, “மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையீடு செய்வதையும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பு தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. முழுக்க நனைந்த பின்னும் முக்காடு போட்டுத் திரிவது என்பது இதுதானோ!

கத்தாஃபியின் ஊழல்கள்!! விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது!!

வாஷிங்டன்,பிப்.24:லிபியா நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி மற்றும் அவரது குடும்ப அங்கத்தினரின் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியன வெளிவரத் துவங்கியுள்ளன. அதிகாரத்தைக் கைப்பற்ற கத்தாஃபியின் பிள்ளைகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளையும், ஊழலையும் விக்கிலீக்ஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது. திரிபோலியில் அமெரிக்க தூதரகத்திடமிருந்து விக்கிலீக்ஸிற்கு இதுத் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளன.

நாட்டின் சொத்துக்களை பயன்படுத்தி கத்தாஃபியும்,அவருடையை பிள்ளைகளும் நடத்திவரும் ஆடம்பரச் செலவுகளும், பகட்டு வாழ்க்கையும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான குடும்ப கலகமும் ரகசிய ஆவணங்கள் மூலமாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு கத்தாஃபியின் மகன் முஃதஸிம் சொந்தமாக ஒரு படையை உருவாக்குவதற்காக 120 கோடி டாலர் தொகையை தேசிய ஆயில் கார்ப்பரேசன் தலைவரிடம் கோரியுள்ளார். சகோதரன் காஸிமின் படைக்கு போட்டியாக ஒன்றை உருவாக்க வேண்டுமென்பதுதான் முஃதஸிமின் நோக்கம்.

நாட்டின் பல்வேறு சொத்துக்களையெல்லாம் கைவசப்படுத்துவதற்கு தனது மகனின் பகை உணர்வுடனான முயற்சிகளை அறிந்து கொண்ட கத்தாஃபி அதனை எதிர்த்தார் என்பதுக் குறித்த 2006-ஆம் ஆண்டிற்கான ரகசிய ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009, 2010 ஆம் ஆண்டுகளுக்கான ரகசிய ஆவணங்களில் கத்தாஃபி தனது ஆட்சியை காப்பாற்றுவதற்காக நடத்திய கேவலமான அரசியல் ஊழல் கதைகள் வெளிவந்துள்ளன.
குடும்பத்தில் நடக்கும் கலகங்கள் வெளியே கசியாமலிருக்க ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தும், எதிரிகளை அழித்தொழித்தும் கத்தாஃபி ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தார் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Feb 23, 2011

மோடி தலைமையில் இந்தியாவில் மனுதர்ம ஆட்சி!!

கொலை செய்தல், கொலை செய்யத் தூண்டுதல், கலவரம் செய்தல் இபிகோ 147, 153 (ஏ), 153(பி), 295 (ஏ), 505, 102 (பி)) இந்தப் பிரிவுகளின் கீழ்குற்றம் சாட்டப்பட்டவர்களை நினைவில் இருக்கிறதா? சாதாரண மானவர்களா அவர்கள்? இந்தியாவின் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்கள் ஆயிற்றே! மத்திய தணிக்கைத் துறை அறிக்கை கொடுத்துவிட்டது, அறிக்கை கொடுத்து விட்டது என்று இன்று அலறுகிறார்களே, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அறிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்று முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறார்களே அவர்கள் ஒன்றை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

லிபரான் ஆணையத்தின் அறிக்கையை ஜமக்காளம் போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள். 68 பேர்கள் குற்றவாளிகள் என்று லிபரான் ஆணையம் பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டது.
மிகப் பெரிய மனிதராகத் தூக்கிக் காட்டப்படும் அடல் பிஹாரி வாஜ் பேயும் அந்தப் பட்டியலில் அடங்குவார். எப்படி வாஜ்பேயியை இதில் சேர்க்கலாம் என்று காட்டுக் கூச்சல் போடுகிறார்கள்.

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு வாஜ்பேயியை எப்படி குற்றவாளி என்று கூறலாம் என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்றே விளங்க வில்லை. 19 ஆண்டுகளாக குற்றவாளிகள் ராஜ நடை போட்டுத் திரிகிறார்கள். அரசு நியமித்த ஆணையமும் அவர்கள் குற்றப் புரிந்தவர்கள்தாம் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டது. ஆ. இராசாமீது வழக்கைப் பதிவு செய்து வேகவேகமாக வழக்கை நடத்தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உலக நாடுகள் முன் இந்தியாவை தலைகுனிய வைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கை வேகமாக நடத்த முன் வராதது ஏன்?

19 வருடங்களா ஒரு முக்கியமான வழக்குக்குத் தேவைப்படும்? நீதிமன்றங்கள்தான் ஆகட்டும் மற்ற மற்ற வழக்குகளை விரைவாக நடத்திட வேண்டும் என்று சாட்டையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்களே. இதில் மட்டும் ஏன் பாம்பும் நோகாமல் கொம்பும் நோகாமல் மந்திரித்துக் கொண்டு இருக்கிறார்களாம்? கொலை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் கொஞ்சம் கூட வெட்கமின்றி ஆனை நடைபோட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். சாட்சியங்கள் எல்லாம் பிறழ்சாட்சியங்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றன.

நீதிமன்றங்களுக்கு வராமல் வெளியில் ஆட்டம் போட்டுத் திரிகிறார்கள். இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தச் சொல்லி எந்த நீதிமன்றமும் சாட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட வில்லையே, ஏன்? காலம் கடத்த கடத்த அத்தனை சாட்சிகளும் அந்தர் பல்டி அடிக்கும் நிலைதான்! அதுவரை காவல்துறையும், நீதித்துறையும் காவி வேட்டி சங்கராச் சாரியார்களை விட்டு வைக்கும் என்றே நம்பலாம்.

சங்கரராமன் கொலை மட்டும் தானா? ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது, திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்டது, காஞ்சிபுரம் சங்கராச்சாரியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவியின் மர்ம மரணம், 1994-இல் சங்கர மடத்தில் வேதம் பயின்று வந்த 15 வயது மாணவன் நாக சுப்பிரமணியம் பிணமாகக் குளத்தில் மிதந்தது, ஜெயேந்திரர் சென்றால் தங்கும் இடமான சூர்யலட்சுமி காட்டன் மில் ஓய்வு விடுதியில் ஜெயேந்திரர் தங்கி இருந்தபோது (18.3.1998) அந்த மில்லில் பணியாற்றிய நிர்மலம்மா (வயது 18) தம்மம்மா (வயது 16) ஆகியோர் கொலை என்று ஒரு பட்டியலே உண்டு. சங்கர மடம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கையும் தண்ணீரில் மூழ்கடித்து விடக் கூடாது.

பாபர் மசூதி காவிக் கும்பலால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் பால்தாக்கரே தலைமையில் வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலை மையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேமீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியது. அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் வற்புறுத்தியிருந்தது. அவர்மீது ஒரு துரும்பையாவது அரசு தூக்கி எறிந்ததுண்டா? மாநிலத்தை ஆண்டு வந்த சிவசேனா, பா.ஜ.க. அரசு 1371 வழக்குகளை ஊற்றி மூடியது. 112 வழக்குகளை மட்டுமே சிறப்புக் குழு மறு ஆய்வு செய்தது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிலுவையில் இருக்கும் வழக்குகளையாவது நாணயமாக நடத்தியிருக்க வேண்டாமா? சிவசேனா தலைவர் என்றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? ஊருக்கு இளைத்தவர் ஆ. இராசா மட்டும்தானா? 2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் மீது நரேந்திர மோடி தலைமையில் மாநில அரசு நரவேட்டையாடியதே! உச்சநீதிமன்றமே முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னன் என்று சாடி யதே! குஜராத் கலவரம் குறித்த விசா ரணை, அவருக்கு எதிராக இருக்கிறதே! அவர் எப்படி முதல் அமைச்சராகத் தொடருகிறார்?
தெகல்கா ஏடு கொலைகாரர்களைக் கூட, பேட்டியளித்து வெளிச்சத்தில் வாரி இறைத்ததே ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை?

டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்த திராய் போன்றவர்கள் மோடியின் மீதும், நிருவாகத்தினர் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக சொன்னார்களே, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசின் செயல்பாடுதான் என்ன? ஆ.கே. இராகவன் தலைமையிலான மோடி மீதான சிறப்பு விசாரணைக்குழு மோடியின் முகமூடியைக் கிழிந்து எறிந்து விட்டது. பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. சோ ஒரு வரிகூட இதைப்பற்றி எழுதாதது ஏன்?

அரைகுறையாக விசாரணை அறிக்கையிலிருந்து கிடைத்திட்ட தகவல்களை வைத்துக் கொண்டு அத்வானி என்ன சொன்னார் தெரியுமா? வெகு நீண்ட காலத்திற்குப் பிறகு நான் படித்த மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று ஆனந்தமய மாகிக் குதித்தாரே! ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது. சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்ற மோடிக்கு எதிரான தகவல்களை பெரும்பாலும் ஊடகங்கள் வெளியிடாத நிலையில் தெகல்கா இதழ் மட்டும் உண்மையான தகவல்களை வாரிக் கொண்டு வந்து கொட்டிவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழு உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்டது. அது 600 பக்கங்களையும் கொண்ட ஓர் அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ளது. கலவர காலத்தில் காவல்துறையின் கம்பியில்லாத் தந்தி போக்குவரத்துப் பற்றிய ஆவணங்களை மோடி அரசு முற்றிலுமாக அழித்து விட்டது. கலவரங்களின் போது சட்டம் ஒழுங்குபற்றி நடத்தப்பட்ட முக்கியமான கூட்டங்கள் பற்றி எந்த ஓர் ஆவணமும், குறிப்புகளும் கிடையாது (அறிக்கை பக்கம் 13)

ஏன் ஆவணங்களை அழித்தார்கள்? அந்த ஆவணங்கள் கிடைக்கப் பெற்றால் மோடி அரசு எப்படி எப்படி யெல்லாம் முஸ்லிம்களை வேட்டையாடியது, அவர்கள் தொழில் நிறுவனங் களையெல்லாம் தீயிட்டு எரித்தனர் என்ற விவரங்கள் தெரிந்து விடுமே. கலவரங்களுக்கு ஒத்துழைத்த அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளும், சட்டப்படி, நடுநிலையோடு நடந்து கொண்ட கண்ணியமான அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அற்ற துறைகளும், தண்டனைகளும் கொடுக்கப்பட்டன என்றால்? மோடி அரசின் மோசகரமான, மூர்க்கத்தமான நர வேட்டை எப்படி நடந்திருக்கும் என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியுமே! கலவரங்களின் போது காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்களுக்கு இடம் ஏன்? அசோக்பட் மற்றும் ஜடஜா ஆகிய இரு அமைச்சர்கள்தான் அவர்கள்.

எந்தவித குறிப்பிட்ட செயல் திட்டமும் இன்றியே இந்த இரு அமைச்சர்களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர். காவல்துறையின் பணியில் குறுக்கிட்டு, அலுவலகங்களுக்கு தவறான முடிவுகளை, கட்டளைகளை அளிக்கவே அமைச்சர்கள் காவல்துறைக் கட்டுப் பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர். (சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரின் குறிப்பு பக்கம் 12). இதற்குப்பின்னாலும் குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சி தொடருவதற்குக் கிஞ்சிற்றும் நியாயப்படியான சட்டப்படியான தகுதி இருக்கிறதா? இந்த ஆட்சி ஏன் கலைக்கப்பட வில்லை? இந்த முதல்வர்மீது ஏன் சட்டப்படியான நடவடிக்கை இல்லை? இராசாதான் இளக்காரமா? நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது? மனுதர்மம் நடக்கிறதா? என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் கிளர்ந்து எழ வேண்டாமா? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!


நன்றி : மின்சாரம், விடுதலை நாளிதழ் (19-02-2011)

4 வயது குழந்தையை அடித்த ஐஏஎஸ் அதிகாரி!!!

சண்டீகர், பிப்.23- பஞ்சாபில் பொது இடத்தில் 4 வயது குழந்தையை அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மீது குழந்தைகள் உரிமை ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரீமா என்னும் 4 வயது குழந்தை சண்டீகரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் நர்சரி பிரிவில் படித்து வருகிறார். சமீபத்தில், பள்ளி முடிந்து அக்குழந்தை ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் வேறொரு குழந்தையை அவரது வீட்டில் விடுவதற்காக ஆட்டோ ஓட்டுநர் வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோவில் அமர்ந்திருந்த கரீமா, கியர் கம்பியை இழுத்ததால் ஆட்டோ பின்புறம் வந்த காரின் கதவில் இடித்ததாக கூறப்படுகிறது. அந்த காரில் சுஜாதா தாஸ் என்னும் பெண் ஐஏஎஸ் அதிகாரி இருந்தார். தனது காரில் கோடு விழுந்ததால் கோபமடைந்த அவர் காரை விட்டு இறங்கி வந்து கரீமாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். தகவல் அறிந்த கரீமாவின் தந்தை போலீஸாரிடம் புகார் அளிக்கச் சென்றார். ஆனால், அவரிடம் ஐஏஎஸ் அதிகாரி
சுஜாதா தாஸ் தரப்பில் சமாதானம் பேசப்பட்டது. மேலும், குழந்தையின் கன்னத்தில்
அறைந்ததற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சண்டீகரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று அளித்த மனுவின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி மீது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. "ஒரு அரசு ஊழியர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. இது நடத்தை விதிமீறல் என்பது தெளிவாகிறது. இச்சம்பவம் மீது நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதன் பதில் கிடைத்த பின்னர் அடுத்த நடவடிக்கை குறித்து ஆராயப்படும்." என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிந்திக்கவும்: இவர் எப்படி? ஐ.எ.எஸ். அதிகாரி ஆனார் என்ற சந்தேகம் வருகிறது. தகுதி இல்லாதவர்கள் எல்லாம் வட இந்தியாவில் இருந்து ஐ.எ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை இது நிருபிப்பதாக அமைந்துள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்க கூடாது என்ற சட்டம் நடை முறையில் இருக்கும் போது, ஒரு ஐ.எ.எஸ். அதிகாரி அதுவும் 4 வயது குழந்தையின் கன்னத்தில் அடித்திருப்பது இவர்களது தேர்வு முறையை சரியில்லை என்பதையே காட்டுகிறது. ஒன்றும் அறியாத 4 வயது பட்சிளம் குழந்தையின் கன்னத்தில் அடிப்பது என்பதை சாதாரண அறிவு உள்ள ஒருவர் கூட செய்யமாட்டார். அப்படி இருக்க இவர் எல்லாம் ஐ.எ.எஸ். அதிகாரியாக இருந்து ஒரு மாவட்டத்தை எப்படி நீதியோடு பரிபாலம் செய்யப்போகிறார்.

பாகிஸ்தான் அபார பந்து வீச்சு!!

அம்பந்தோட்டம், பிப்.23: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் கென்யாவுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 206 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பாகிஸ்தான் பதிவுசெய்தது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானுக்கும் கென்யாவுக்கும் இன்று இலங்கையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது பாகிஸ்தான். அந்த அணியில் கம்ரான் அக்மல் 55, யூனுஸ் கான் 50, மிஸ்பா உல் ஹக் 65, உமர் அக்மல் 71 என ரன்கள் விளாசினர். 50 ஓவர்களின் இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய கென்ய அணியின் துவக்கம் ஓரளவு நன்றாக அமைந்தபோதும், பின்வரிசை ஆட்டக்காரர்கள் மெதுவாக ஆடினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் விழுந்தன. அந்த அணியின் ஒபுயா அதிக பட்சமாக 47 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சாகித் அப்ரிதி 5 விக்கெட்களை சாய்த்தார். கென்ய அணி 34 வது ஓவரில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

கருணாநிதி அரசின் முஸ்லிம் விரோத போக்கு!!!

சென்னை,பிப்.23: கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு: 'கடந்த 22.06.2007அன்று கோவையை தகர்க்க சதி என தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியவர் ரத்தின சபாபதி. இவர் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையாளராக பதவி வகித்தவர். சில பொருள்களை கைப்பற்றியதாகக் கூறி சில முஸ்லிம் இளைஞர்களையும் கைதுச் செய்து அவர்கள் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று அறிக்கையும் விடுத்தார்.

இவ்வழக்கில் உள்ள போலித் தன்மையை உணர்ந்துக் கொண்ட பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரிடையே எழுந்த நீதிக்கான குரல்கள் எழுந்தன. இதன் விளைவாக அரசு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலன் அவர்களுடைய தலைமையில் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சுமார் ஒருவருடமாக இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், "இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிக்குண்டுகள் காவல் துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவை. மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன. எனவே இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கின்றோம்" என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அரசு ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு கோவை மாநகரிலேயே காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இத்தகைய அரசின் கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும், ரத்தினசபாபதி மீது வழக்குப்பதிவுச் செய்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொய்வழக்கு புனையப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்கள், கையெழுத்து இயக்கங்களின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்தின சபாபதி மீது வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலும், ரத்தின சபாபதிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை தெளிவாக உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், அரசின் இந்த கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து மக்களை திரட்டி போராடும்.' என அவர் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்; இது போல்தான் கோவை கலவரத்திற்கு காரணமாக அமைத்த போலீஸ் கயவர்களுக்கு பதவி உயர்வு அளித்து மகிழ்ந்தார் இந்த கருணாநிதி. கோவையில் ட்ராபிக் போலீஸ்காரர் விசமிகளால் கொல்லபட்டார். இதில் சம்மந்த பட்டவர்கள் மேல் வழக்கு தொடுக்காமல் போலீஸ் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளோடு கூட்டு சேர்ந்து திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது கலவரத்தை நடத்தி 19 முஸ்லிம்கள் கொல்லபட்டார்கள். இதற்க்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கருணாநிதி பதக்கம் அணிவித்து பதவி உயர்வு கொடுத்தார். இந்த கருணாநிதி எம்.ஜி.ஆர். இடம் தொடர்ந்து 14 வருடங்கள் தோற்று வனவாசம் இருந்த பொது முஸ்லிம் ஒட்டு வங்கி இல்லை என்றால் இவரது கட்சியே இருந்திருக்காது. இந்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் 99 சதவிதம் ஓட்டை பெற்றே இவர் தமிழகத்தில் கட்சி நடத்தினார். அப்போது முழுக்க திராவிட சிந்தனை உள்ளவர் போல் காட்டி கொண்டு முஸ்லிம்கள் வாக்குகளை பெற்றார். என்று ஆட்சிக்கு வந்தாரோ அதோடு தோளில் மஞ்சள் துண்டு ஏறிவிட்டது. அதில் இருந்து இதுவரை நோன்பு கஞ்சி குடித்து தொப்பி போட்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகிறார்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

அரசு பயங்கரவாதத்தால் நசுக்கப்படும் மக்கள் போராட்டம்!!!

திரிபோலி,பிப்.23: அரசுக்கெதிராக மக்கள் எழுச்சி தீவிரமடைந்துள்ள சூழலில் லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. ஹெலி காப்டர்களும், போர் விமானங்களும் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்கள் சாலையோரங்களில் சிதறிக் கிடக்கின்றன. 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைச் செய்த லிபியாவின் சர்வாதிகார கொடுங்கோன்மை ஆட்சியை எதிர்த்து இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் லிபியா தூதர்கள் ராஜினாமாச் செய்துள்ளனர்.

இதற்கிடையே, "நான் திரிபோலியில்தான் இருக்கிறேன்" என ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி தொலைக் காட்சியில் தோன்றினார். அதிகாரத்திலிருந்து மாறுவதற்கு நான் விரும்பவில்லை. வெனிசுலாவுக்கு நான் செல்லவில்லை. ஊடகங்களில் குரைக்கும் நாய்களை நம்பாதீர்கள் என கத்தாஃபி தெரிவித்தார். போராட்டத்தை அடக்கி ஒடுக்குவோம் என அவர் மிரட்டல் விடுத்தார்.

கத்தாஃபி ராஜினாமாச் செய்யவேண்டுமென ஐ.நாவின் லிபியா தூதர் இப்ராஹீம் தப்பாஸி கோரிக்கை விடுத்துள்ளார். லிபியாவின் அமெரிக்க தூதர் அலி அட்ஜாலியும் இதனை வலியுறுத்தியுள்ளார். கத்தாஃபி வெனிசுலாவுக்கு வந்ததாக வெளியான செய்தியை வெனிசுலாவின் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரஸ் இஸரா மறுத்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கூட்டுப் படுகொலைச் செய்த ராணுவ நடவடிக்கையை கண்டித்து ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் கவலை தெரிவித்துள்ளார்.

லிபியாவின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு எண்ணை நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை திரும்ப அழைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டத்தைக் குறித்து சர்வதேச தளத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நாவின் மனித உரிமைக்கான ஹைக்கமிஷனர் நவி பிள்ளை வலியுறுத்தி யுள்ளார்.

மனிதத் தன்மையற்ற தாக்குதலை லிபியா நிறுத்த வேண்டுமென பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். லிபியாவிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை அழைப்பதை வெளிநாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. எகிப்தின் எல்லையில் கூடுதலான ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. எகிப்திற்கு திரும்ப வருபவர்களுக்கு சிகிட்சைக்காக சிறப்பு மருத்துவமனைகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன. தென்கொரிய எண்ணை நிறுவனம் தங்களது தொழிலாளர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பத் துவங்கியுள்ளது. இவர்களில் 100 பேர் பங்களா தேஷைச் சார்ந்தவர்களாவர். ஊடகங்களுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை லிபிய அரசு விதித்துள்ளதால் கூடுதலான செய்திகள் அந்நாட்டிலிருந்து வெளிவரவில்லை.

Feb 22, 2011

கேலிக்கூத்தான இந்தியாவின் நீதி துறை.

புதுடெல்லி,பிப்.23:கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் நீண்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு 63 பேரை குற்றமற்றவர்கள் என கூறியுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிபீடத்தை நையாண்டிச் செய்வதாகும் என இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்பது வருடங்களாக ஒரு முறைக்கூட ஜாமீன் வழங்கப்படாமல் சிறையிலடைக்கப் பட்டிருந்த 63 நபர்களைத்தான் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்துள்ளது என அவர் தெரிவித்தார்.

சிறையிலடைக்கப்பட்ட இத்தனை நபர்களின் இழந்துபோன வருடங்களையும், அவர்களுடைய குடும்பம் இவ்வளவு காலம் அனுபவித்த துயரங்களுக்கும் பதிலாக எதனை கொடுக்கவியலும் என அவர் கேள்வி எழுப்பினார். மெளலவி உமர்ஜியைப் போன்ற வயோதிகரையும், ஏறக்குறைய கண்பார்வை இழந்த சிறுவனையும் இவ்வளவு காலம் எக்காரணமுமில்லாமல் சிறையிலடைத்த பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ள சூழலில் இந்தியாவின் நீதிபீடத்தின் கட்டமைப்பைக் குறித்து மறுபரிசீலனைச் செய்வது இன்றியமையாதது என சமூக நல ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் தெரிவித்துள்ளார். எதனடிப்படையில் கோத்ரா ரெயில் எரிப்பில் திட்டமிட்ட சதி என்ற சித்தாந்தத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதை புரிந்துக் கொள்ள இயலவில்லை என அவர் கேள்வியெழுப்பினார்.

நன்றி: தேஜஸ் மலையாள நாளிதழ்

இருதய நோய் சம்மந்தமான ஒரு விழிப்புணர்வு!!!

பிப். 22: இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறது. இதயநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த ரூ.11,37,600 கோடி (237 பில்லியன் யு.எஸ் டாலர்) தேவை. இந்தியாவில் எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட பரவக்கூடிய நோய்கள் குறைந்து வருகிறது. தற்போதுள்ள 36.2 சதவீதத்திலிருந்து 2030-ல் 21 சதவீதமாக குறைந்துவிடும். ஆனால் இதய நோய் 29 சதவீதத்திலிருந்து 2030-க்குள் 36 சதவீதமாக உயர்ந்துவிடும்.

ஆனால் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளில் இதயநோய் சதவீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 35 வயது முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. பொருளாதார அளவில் நாம் வளர்ச்சி ஊற்றுள்ளதால் உயர்தர சிகிச்சை பெற்று வாழ்நாள் நீடித்துள்ளது. தற்போது 75 முதல் 80 வயது வரை வாழ்கின்றனர். வருமானம் அதிகமானதால் அதிகம் உண்ணுகின்றனர். இதனால் சமையல் எண்ணெய் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் இதய நோய், கொழுப்பு, உயர் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. 1983-ல் எண்ணெய் உபயோகம் 31 லட்சம் டன்னாக இருந்தது. இது 1993-ல் 51 லட்சம் டன்னாகவும், 2003-ல் 1 கோடியே 50 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது.

இதய நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புகையிலை உபயோகத்தை நிறுத்தவும், உப்பு உபயோகத்தை குறைக்கவும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மக்கள் பழங்கள், காய்கறிகள் அதிகம உபயோகிக்க அரசு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
அதோடு மட்டுமல்லாமல் காய்கறி, பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி அதிக உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். நமது கலாசார நடைமுறை பழக்க வழக்க உணவு முறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? கி.வீரமணி!!

பிரபாகரன் தாயார் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைத் தடுப்பதா? இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துக்கம் விசாரிக்க அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தொல்.திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும்கூட.ஏற்கனவே இந்திய அரசு அனுப்பிய தூதுக் குழுவில் சென்று, ராஜபக்சே விடமே நேரில் விவாதித்துத் திரும்பிய குழுவினரில் ஒருவர் அவரை ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் .கூடாது என்று திரும்பி அனுப்புவது பச்சை பாசிசப் போக்கு அல்லவா?

காரணத்தைக் கூறுங்கள் என்று பலமுறை அவர் வலியுறுத்தி அதிகாரிகளிடம் வாதாடியும் பலனில்லை. அவர் அரசியல் நிகழ்வுக்குப் போகவில்லை. துக்க நிகழ்ச்சி மரண வீட்டுக்குச் செல்வதுகூட கூடாது என்றால், அங்கு காட்டாட்சியா நடக்கிறது? இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடு இன்றி இலங்கை அரசின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை அரசு காக்கை குருவிகளைப் போல சுட்டுக்கொல்லுவது, சிறைப்பிடிப்பது, மத்திய அரசு தலையிடுவது, பிறகு விடுதலை எனும் நாடகம் நடத்துவது ஒரு வாடிக்கையான வேடிக்கைக் கூத்தாகிவிட்டது. இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

சாக்கடை அரசியல்வாதிகளின் தமிழ் பற்று!!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. காலம் கடந்த நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். "தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?' என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். விரக்தி அடைந்த பாலமுருகன் கூறியதாவது, தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

சிந்திக்கவும்: தமிழை இவர்கள் ஒன்றும் மாநாடு போட்டு வளர்க்க வேண்டாம். முதலில் ஏன் இன்றைய இளைய தலை முறை மாணவர்கள் ஆங்கில வழி கல்விக்கு ஆர்வம் கொடுகிறார்கள் என்றால்? தமிழ் படித்தால் வேலை கிடைக்காது, தமிழில் படித்தல் ஐ.எ.எஸ். போன்ற பெரிய நுழைவு தேர்வுகள் எழுத முடியாது, இப்படி பல காரணங்களுக்காக மாணவர்கள் தமிழை தேர்ந்தெடுக்க மாறுகிறார்கள். அப்படியே தமிழை தேர்ந்தெடுத்தாலும் இந்த மாணவருக்கு ஏற்பட்ட கதிதான். இந்நிலையில் நமது தமிழக அரசியல் தலைவர்கள் தமிழ், தமிழ் என்று வாய்கிழிய பேசி ஒட்டு பொறுக்க கோடி கணக்கில் செலவழித்து செம்மொழி மாநாடுகள் நடத்துவது இந்த பணத்தில் இருந்து கொஞ்சத்தை இதுபோல் உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்க உதவலாம். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொல்லி தமிழர்களை ஹிந்தி படிக்கவிடாமல் செய்து இந்தியாகுள் இவர்களை அண்ணியம் ஆக்கினார்கள். தமிழர்கள் தமிழ் நாட்டை விட்டு அடுத்த மாநிலத்திற்கு போகவேண்டும் என்றால் அவர்கள் படும்பாடு இருக்கிறதே சொல்லி முடியாது.

தமிழை வளர்ப்பது என்பது வேறு இன்னும் ஒரு மொழியை கற்றுகொள்வது என்பது வேறு என்பதை நன்குணர்ந்த இவர்கள் தமிழை வைத்து அரசியல் செய்து பிழைப்பு நடத்தினார்கள். தங்களது வாரிசுகளை ஆங்கில வழி கல்வி கற்க வைத்தார்கள், ஹிந்து மொழி கற்க வைத்தார்கள். இந்த அரசியல் தலைவர்களின் வாரிசுகள் ஹிந்து, ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதை பார்க்கலாம். இதில் இருந்து தமிழா பாடம் கற்றுகொள் இந்த ஒட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களை நம்பாதே. அறிவு என்கிற ஆயுதம் எடு, இந்த ஒட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களை நம்பி உன் காலங்களை வீண் செய்வதை விட்டு விட்டு. ஒரு மக்கள் புரட்ச்சிக்கு தயார் ஆவோம். இந்த ஊழல் பெரிச்சாளிகளை, சாக்கடை அரசியல்வாதிகளை உள்ளே அனுப்பிவிட்டு, எகிப்த், துசினியா, போன்று இளைஞ்சர்கள் இந்த நாட்டின் விடிவுக்கு ஒரு காரணியாக அமைவோம்.

அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்

போபால் விஷவாயு கசிவும்!! தீர்க்கப்படாத மக்கள் பிரச்சனையும்!!!

புதுதில்லி, பிப்.22- போபாலில் நச்சு வாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் கூட இந்த கோர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை நீடிக்கிறது. மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது. இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.

போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உரிய நஷ்டஈடு மற்றும் நிவாரண உதவிகளை வலியுறுத்தி இன்று தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிருந்தா காரத், வாசுதேவ் ஆச்சாரியா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

சோதனை நிலையில் உள்ள மருந்துகள் தங்களுக்கு வழங்கப்படுவதாகவும், தவறான அடையாள அட்டைகளை பயன்படுத்தி விஷவாயுவில் பாதிக்கப்படாதவர்களும் முறைகேடாக உதவிகள் பெறுகின்றனர் என்றும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் குற்றம்சாட்டினர். ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் சார்பில், பிரதமரிடம் ஒரு மனுவும் அளிக்கப்பட்டது. அதில், நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தங்கள் கோரிக்கைகளை அரசு விரைந்து பரிசீலித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரணம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் ஹைலைட் செய்தி என்னவென்றால்: விபத்து நடந்த போது யூனியன் கார்பைடு தலை வராக இருந்த ஆண்டர்சனை கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் பலமுறை வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், மத்திய புலனாய்வுத்துறை அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கப்பட வில்லை. இந்திய அரசினால் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்ட ஆண்டர்சன் இன்னமும் நியூயார்க் அருகில் உள்ள தீவு ஒன்றில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். பல ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான இந்தவழக்கில் ஆண்டர்சன் ஒருமுறை கூட விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் போபால் விஷவாயு கசிவு தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

இலங்கை தூதரகத்தை மூட வேண்டும்!! விடுதலை சிறுத்தைகள் போராட்டம்!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது தனிச் செயலாளர்கள் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், இளஞ்சேகுவாரா ஆகியோர் இலங்கை சென்றனர். அவர்களை வல்வெட்டித் துறைக்கு அனுப்ப மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். இலங்கை அரசின் கெடுபிடி காரணமாக திருமாவளவன் இன்று காலை 5.45 மணிக்கு சென்னை வந்தார். இதையடுத்து இலங்கை அரசை கண்டித்து ஆழ்வார் பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரகத்தை திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் இலங்கை கொடி மற்றும் அதிபர் ராஜபக்சேயின் உருவ படங்களை தீ வைத்து எரித்தனர்.

பின்னர் பார்வதி அம்மாள் உருவ படத்தை ஏந்தியபடி டி.டி.கே.சாலையில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திருமாவளவன், ரவிக்குமார் எம்.எல்.ஏ. மாநில பொருளாளர் முகமது யூசுப், பொது செயலாளர் கலைக்கோட்டுதயம், வன்னியரசு, வீரமுத்து, இளஞ்செழியன், சைதை பாலாஜி, கபிலன், இரா.செல்வம், பொன்னிவளவன், கமலக் கண்ணன் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை வல்வெட்டித்துறையில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவே கொழும்பு சென்றேன். ஆனால் இலங்கை அரசு வல்வெட்டித்துறைக்கு செல்ல அனுமதி மறுத்துவிட்டது. வேறுவழியின்றி திரும்பி வந்தேன். நான் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிடாமல் இலங்கை அரசு தடுத்ததற்கு மத்திய அரசுதான் காரணம். ஒரு எம்.பி.யை திருப்பி அனுப்பியது வெட்கக்கேடானது.

எனவே மத்திய அரசு இலங்கை அரசை கண்டிக்க வேண்டும். அதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டம் தொடரும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். என்னை திருப்பி அனுப்பியதன் மூலம் இந்தியாவை இலங்கை அரசு அவமதித்துள்ளது. இது பற்றி நான் பாராளுமன்றத்தில் விளக்கம் கேட்டு கேள்வி எழுப்புவேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார். திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதை கண்டித்து விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 25 பேர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Feb 21, 2011

தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ராணுவ தொழில் நுட்பம்!!!

புதுடெல்லி,பிப்.22:கடந்த 2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ராணுவத்தின் 'பங்கர் டெமோலிஷன் டெக்னிக்' பயன்படுத்தப்பட்டுள்ளது என புலனாய்வில் தெரியவந்துள்ளது. சிறிய அளவிலான குண்டு வெடிப்புகளுக்குக் கூட பெரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்த இந்த தொழில் நுட்பத்தால் இயலும். இதே தொழில் நுட்பத்தை உபயோகித்து தான் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

வார்ப்பிரும்பு பைப்புகளை(caste-iron) பரஸ்பரம் பிரித்தெடுத்து அதில் ஆர்.டி.எக்ஸ், அமோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணை ஆகியவற்றை பயன்படுத்தி இந்த குண்டு தயாரிக்கப்படுகிறது. இத்தகைய வார்ப்பிரும்பு பைப்புகளை ராணுவம் மட்டுமே உபயோகிக்கிறது. ஆர்.டி.எக்ஸ், அமோனியம் நைட்ரேட், எரி எண்ணைய் ஆகியவற்றை சேர்த்து குண்டுகள் தயாரிக்கும் தொழில் நுட்பம் ராணுவம் மட்டுமே அறிந்தது என ஃபாரன்சிக் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்திய ராணுவத்தில் உள்ள பாசிச ஹிந்துவா ஆதரவு உள்ள அதிகாரிகளோ அல்லது முன்னாள் ராணுவ அதிகாரிகளோ இதற்க்கு உதவி இருக்கவேண்டும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலேகான் குண்டுவெடிப்பில் முன்பு முஸ்லிம் இளைஞர்கள அநியாயமாக கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போதும் அவர்கள் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தில் மலேகான் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மலேகான் குண்டுவெடிப்பு விசாரணையை மீண்டும் நடத்த மத்திய அரசு தீர்மானித்தது. இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்துதான் மலேகான் குண்டுவெடிப்பிற்காக சதித்திட்டம் தீட்டியதாக அஸிமானந்தா வாக்குமூலம் அளித்திருந்தான்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.

அஸ்தமிக்கும் ரஜினியின் அரசியல் வாழ்க்கை!!

பிப் 22: ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், கட்சி துவங்க வேண்டும் என அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் தொடர்ந்து பல காலகட்டங்களில் வலியுறுத்தி வந்தனர். எனினும் தான் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை தற்போது தமிழகத்தில் இல்லை என்றும், இது குறித்து தான் பரிசீலித்து வருவதாகவும், "ஆண்டவன் நினைத்தால் நாளையே கட்சி" என்றும் ரஜினி பல கட்டங்களில் கூறிவந்தார்.

மூப்பனார் இருக்கும் போது இவர் ஜெயலலிதாவை எதிர்த்து அறிக்கைகள் பல கொடுத்தார். திமுக, மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்தார். மூப்பனார் மற்றும் பலரும் இவரை அரசியலுக்கு கொண்டுவர முயற்ச்சித்தனர் ஆனால் முடியவில்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதாவது காரணத்தை சொல்லி அரசியலுக்கு வருவதில் தயக்கம் காட்டி வந்தார். இதை தயக்கம் என்பதை விட பயம் என்று சொல்வதே சாலச்சிறந்தது.

இவர் நினைத்து கொண்டார் எந்த உழைப்பும் செய்யாமல் நேரடியாக அரசியலுக்கு வந்துவிடலாம் என்று. அதாவது மக்கள் பிரச்சனைகளை எதையும் பேசாமல், சினிமா துறையில் பெரிய நடிகர் என்ற புகழ் ஒன்று மட்டும் போதும் நாம் அரசியலுக்கு வந்துவிடலாம் என்று எண்ணி கொண்டிருக்கிறார். தினம், தினம் எத்தனையோ மக்கள் பிரச்சனைகள், சமீப காலமாக மீனவர்கள் பிரச்சனை இவர் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார். இவர் நினைக்கிறார் போலும் தமிழக மக்கள் இவரை நேரடியாக முதலமைச்சர் சீட்டில் உட்கார வைப்பார்கள் என்று. எப்படி ஈசியாக நடிப்பின் மூலம் கோடி கணக்கில் பணம் வந்ததோ அதுபோல் ஈசியாக முதலமைச்சர் சீட்டும் கிடைக்கும் உட்காரலாம் என்று பார்கிறார்போல.

இவர் ஒன்றும் அப்படி ஈசியாக அரசியலில் நேரிடையாக நுழைந்து விடமுடியாது. அது ஒரு காலம் எம்.ஜி.ஆர். அரசியலில் வந்து வெற்றி பெற்றது. இப்பொது மக்கள் தெளிவாக இருகிறார்கள். நடிகர்கள் கேமிரா முன்னால் நடித்த நடிப்பு என்பது வேறு அரசியல் பொது வாழ்க்கை என்பது வேறு. சிறந்த நடிகர் என்ற ஒரு தகுதியை வைத்து மட்டும் அரசியலில் நுழைந்து விட முடியாது. இப்பொது உள்ள மக்கள் கல்வி கற்றவர், சிந்திக்க தெரிந்தவர்கள். நடிப்பு வேறு, சமூக, அரசியல் செயல்பாடுகள் என்பது வேறு என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள்.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றால்? இவர் தொடர்ந்து மக்கள் தொண்டராக இருந்து மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றி பேச வேண்டும், அதை தீர்க்க தனது ரசிகர் மன்றங்கள் மூலம் போராட வேண்டும். அதை விட்டு விட்டு ரசிகர் மன்றங்கள் என்பதை வைத்து சம்பாதித்த கோடிகளுக்கு கணக்கு காட்ட பணக்கார்கள் நடத்தும் ட்ரஸ்ட் போல் நடத்தி எந்த பிரோஜனமும் இல்லை. இவர் மக்களுக்காக சிலவருடங்கள் உண்மையிலே தொண்டு செய்து விட்டு அரசியலுக்கு வந்தால் மக்கள் நல்மதிப்பை பெற முடியும். அப்போது தான் அவரது அரசியல் வாழ்க்கை ஒளிர முடியும். அப்படி இல்லை என்றால் ரஜினியின் அரசியல் வாழ்க்கை என்பது வெறும் கனவுதான் என்றே என்ன தோன்றுகிறது. அப்படியே இவர் அரசியலுக்கு வந்தாலும் நான்காம் பெயரோடு ஐந்தாம் பெயராக ஒதுக்கி தள்ளப்படுவார். கடைசியில் ஐந்து சீட்டுக்கும் பத்து சீட்டுக்கும் இங்கும் அங்கும் அலையை வேண்டியது தான். நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும்! ஆனால் நடிப்பு ஒன்று மட்டுமே அவர்களது தகுதி என்றால் அதுதான் இல்லை. முதலில் மக்கள் தொண்டு செய்யட்டும் பின்னால் அரசியலுக்கு வரட்டும். எல்லாரும் ஆதரிக்கலாம்.

சிந்திக்கவும்; அன்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

இலங்கை அரசின் சர்வாதிகார போக்கு!! திருப்பி அனுப்பபட்டார் திருமாவளவன்!!

இலங்கை, பிப்.22: பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்ற திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டார். நேற்று முன்தினம் பிப்.20ம் தேதி மரணமடைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதன்படி இலங்கை சென்ற அவரை இலங்கை அதிகாரிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க வில்லை. வேறு வழியின்றி அவர் தான் சென்ற விமானத்திலேயே மீண்டும் சென்னைக்குத் திரும்பினார்.

சிந்திக்கவும்: இறுதி சடங்குக்கு போக அனுமதி மறுத்ததன் மூலம் இலங்கை தனது பாசிச பயங்கரவாத சிந்தனையை மீண்டும் உலகுக்கு எடுத்துக் காட்டி உள்ளது. இறுதி ஊர்வலங்களில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது உலக நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒன்று தான். தொல். திருமாவளவனை தடுத்தான் மூலம் இலங்கை அரசு தனது சர்வாதிகார, பயங்கரவாத முகத்தை உலகிற்கு மீண்டும் அடையாளம் காட்டி உள்ளது. இலங்கையில் மக்களாட்சி நடக்கவில்லை சர்வாதிகாரி, பயங்கரவாதி அதிபராக இருக்கிறார் என்பதை இந்த நிகழ்வு தெளிவு படுத்தி உள்ளது.

ஒரிசா அரசு பணிந்தது! மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளுக்கு வெற்றி!!

புவனேசுவரம்,பிப்.21: மாவோயிஸ்டுகள் விடுத்த 14 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது ஒரிசா மாநில அரசு. மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. கிருஷ்ணா, பொறியாளர் பவித்ரா மஜ்சி ஆகிய இருவரையும் விடுவிப்பது தொடர்பாக அரசுக்கும், மாவோயிஸ்டு களுக்கும் இடையேயான 2-ம் நாள் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது மாவோயிஸ்டுகள் விடுத்த 14 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு விட்டதாக அந்த மாநில உள்துறை செயலர் பெஹரா தெரிவித்தார். பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. அதைப்போல பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை மாவோயிஸ்டுகளும் விரும்பத்தகாதச் செயல்களில் ஈடுபடக்கூடாது.

முக்கிய மாவோயிஸ்டு தலைவர் ஸ்ரீராமுலு சீனிவாசுலு தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை ஒரிசா விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளிக்க உள்ளது. இதனிடையே, தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மற்றொரு முக்கிய மாவோயிஸ்டு தலைவர் காண்டி பிரசாதம் உள்பட 5 பேர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுக்களும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியரையும், பொறியாளரையும் விடுவிக்க மாவோயிஸ்டுகள் விடுத்துள்ள கோரிக்கைகளில் கைதாகியுள்ள தங்களது இயக்கத் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.