Jan 15, 2011

அதிகரித்து வரும் தற்கொலை சாவுகள்: ஒரு ஆய்வு.


டெல்லி: ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் இந்தியாவில் 30 வயதுக்கு கீழ் உள்ள ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
அன்மையில் விபத்து மற்றும் தற்கொலை சாவுகள் 2009 என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2009ம் ஆண்டில் இநதியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 68 சதவீதம் (அதாவது 1 லட்சத்து 27 ஆயிரத்து 151 பேர்) 15 முதல் 44 வயது உள்ளவர்கள் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரசேம் மற்றும் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் 15 முதல் 29 வயது உடையவர்கள். இதில் அருணாச்சலப் பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 110 பேரில் 42 பேரும், டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட 1,477 பேரில் 817 பேரும் 15 முதல் 29 வயது உடையவர்கள். நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்டவர்களில் 34.5 சதவீதம் பேர் 15-29 வயது மற்றும் 34வயதுடையவர்கள் ஆவர் என்று கூறப்பட்டுள்ளது.

உடல் சிலிம் ஆக வேண்டுமா???

ஜன.16:உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.

உசார் ஐயா!! உசார்!! காமசூத்ரா வைரஸ்!!!

லண்டன்: கடந்த 2006-ம் ஆண்டு வந்த காமசூத்ரா என்றழைக்கப்பட்ட கம்ப்யூட்டர் வைரஸ் கிருமிகளால் ஏராளமான கம்ப்யூட்டர்கள் செயல் இழந்தன. அது போன்ற வைரஸ் மீண்டும் அதேபெயரில் வந்துள்ளதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வந்துள்ள வைரஸ் கிருமி Real kamasutra.pps.exe என்ற பெயரில் வந்துள்ளது. இது போன்ற வைரஸ்கள் நீங்கள் புதிதாக ஏதாவது சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்யும் போது வருகின்றன.எனவே கம்ப்யூட்டரில் இதுபோன்ற வைரஸ் கிருமிகளை அழிக்க கூடிய சாப்ட்வேர்களை அமைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய ரெஜிஸ்டரியில் காணப்படும் வைரஸ்களை அழித்துவிட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர் இத்துறை வல்லுநர்கள்.

ஹி... ஹி....மறக்கமுடியுமா என்னை? நான்தான் ஜகக்குரு!!!

இதோ காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பேசுகிறார்:
1) என்மீதுள்ள வழக்குகள் குற்றப்பிரிவு 302, 120பி,34, 201 ஆகிய பிரிவுகள் கொலை செய்யத் தூண்டுதல் கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை இந்தப் பிரிவுகளில் என்னைக் கைது செய்துள்ளனர். (11.11.2004). என்மீதுள்ள முக்கிய குற்றச்சாற்று. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் ஆனந்த சர்மா மகன் சங்கரராமனைக் கொலை செய்தது.(3.9.2004)

2)என்மீதுள்ள இன்னொரு குற்றச்சாற்று சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது (இ.பி.கோ. 120பி, 307).

3)மற்றொரு குற்றச்சாற்றும் உண்டு. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது (31.8.2004) நெல்லை மாவட்டம் திருக்கருக்குடி பெருமாள் கோயிலில் இருந்த சிவன் கோயிலை நான் இடித்தேன். இடித்தது தவறு என்றுகூறி இந்த மாதவன் மறுபடியும் சிவன் கோயிலைக் கட்ட முயற்சி செய்தான். அதனால் மாதவனைத் தாக்கியது.

4)1987 இல் (23.8.1987) காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக தண்டத்தை விட்டு விட்டு தலைக் காவேரிக்கு ஓடினேன் (நேபாள பெண்மணி ஒருவருடன்)

5)தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு ஓடியதால் மடத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விட்டது. காமத்தைத் துறந்த நிலையிலிருந்து விடுபட்டு, காதல் உலகில் சஞ்சரித்ததாக இதன் பொருள். நான் தண்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு மடத்தைவிட்டு ஓடியதால், காஞ்சிப் பெரியவாள் அவசர அவசரமாக விஜயேந்திரனுக்கு அடுத்த பட்டத்தைச் சூட்டி விட்டார்.

6)அன்றைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் முயற்சியால் மீண்டும் காஞ்சி மடத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். தண்டத்தைத் துறந்து மடத்தைவிட்டு நான் வெளியேறி விட்டதால், மடத்துக்கும் எனக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொன்னதை மகா பெரியவாள் கடைசி வரை வாபஸ் வாங்கவேயில்லை. ஆனாலும் விவஸ்தைகெட்டு மடத்தில் இருந்தேன் இருக்கிறேன்.

7)என்மீது வேறு குற்றச்சாற்றுகளும் உண்டு. திருப்பதி தோமலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்து ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தேன். கோயில் அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதனைச் செய்தேன். அர்ச்சகர் என்னைத் தடுத்தார்; நான் அதைச் சிறிதும் சட்டை செய்யவேயில்லை.(3.11.2000).

8)பெண் விஷயத்திலும் என்மீது ஏகப்பட்ட புகார்கள். இந்த வகையில் பிரேமானந்தா. நித்யானந்தாக்களுக்கு முன்னோடி நான். அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து நான் இழுத்ததாக டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக எடுத்துக்கூறி என் மானத்தைக் கப்பலேற்றி விட்டார்.

9)திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து அணிவித்தேன் (5.4.2002) இதன் மூலம் கடவுளையும் என் பிராமண ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டேன்.

10)தாம்ப்ராஸ் என்னும் பார்ப்பன சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் கடவுளுக்கும் மேலே உயர்ந்தவன் பிராமணன் என்று பேசினேன் (9.10.2002). இதன்மூலம் என் ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தினேன். (மும்மலத்தையும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்தவர்கள் தான் காமகோடி என்று சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஆட்பட்டவன் தான்).

11)மதுரை மாவட்டம் தும்பைப்பட்டிக்குச் சென்றேன்,(10.11.2002). கக்கன் பிறந்த ஊர் அது. ஹரிஜன்கள் என்னைத் தொட்டு விடாதபடி தோளில் தொங்கிய துணியை எடுத்துக் காலில் சுற்றிக் கொண்டேன். இதன் மூலம் நான் தீண்டாமையை ஆதரிக்கும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன்.

12)எல்லா ஜாதியாருக்கும் ஒரே சுடுகாடு கூடாது என்ற கருத்தைச் சொன்னவன் நான் (விடுதலை 8.3.1982). இதனால் ஜாதி வெறியன் என்று தூற்றப்பட்டேன்.

13)பா.ஜ.க., ஆட்சியின் போது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதற்கு எனது பாராட்டுதலை வெளிப்படையாகத் தெரிவித்தேன் (தினமணி 16.5.1998). இதன் மூலம் உலகில் சாந்தம் தழைக்க வேண்டும் ஹானி நீடிக்கக் கூடாது என்கிற பொதுவான மனிதப் பண்புக்கு எதிரியாக அடையாளம் காட்டப்பட்டேன்.

14)ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று விஜயகாந்துக்கு அட்வைஸ் செய்தேன். (குமுதம் 18.1.2001) இதன் மூலம் ஒரு மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தவன் ஆனேன்.

15)அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறினேன் (தினமணி.27.11.2000). இதன்மூலம் வன்முறைக்கு வித்திட்டவன்; சட்டத்தை மதிக்க மறப்பவன் என்று விமர்சிக்கப்பட்டேன்.

16)தமிழில் குடமுழுக்கு கூடாது என்றேன்.(இந்தியாடுடே.2.10.2002). இதன் மூலம் தமிழ் நீஷப்பாஷை என்று என் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தில் உறுதியாக நான் இருந்ததால் தமிழர்களால் நான் தூற்றப்பட்டேன்.

17)பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றேன் (தி பயனீர் 17.3.1997) பெண்களால், எதிர்க்கப்பட்டேன். விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுப் பேட்டி அளித்தேன். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூறினேன். மகளிர் உண்டு இல்லை என்று எதிர்ப்புச் சூட்டைக் கிளப்பினார்கள். தி.க. மகளிர் அணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்தினர் (9.3.1998).

18)கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டான். எனது இன்னொரு பக்கமான ஆபாச நடவடிக்கைகளை எல்லாம் வண்டி வண்டியாக ஏற்றி விட்டான்.

19)குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்வரை மடத்தின் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்று துவாரகா பீடம் ஸ்வரூபானந்துகூட கூறினார்.(தி இந்து 3.12.2004) நான் சட்டை செய்யவில்லையே!

ஆனாலும் பார்த்தேளா, எனது 76ஆவது ஜெயந்தி விழா ஜாம்ஜாமென்று நடக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! பிராமணாள் ஒரு பக்கம் சூத்திராள் இன்னொரு பக்கம் ஜமாயிக்கிறார்கள். எவ்வளவு கேவலமாக எங்கள் நடத்தை இருந்தாலும் எங்களவாள் விட்டுக் கொடுக்க மாட்டவே மாட்டாள்.

இவ்வளவு நடந்திருக்கே... எங்க மனுஷாள் என்மீதோ, மடத்தின் மீதோ கரித்துக் கொட்டியதுண்டா? உங்களவாள் மாதிரியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை இல்லாத ஒன்று. ஆயிரம் பெரியார் தான் வரட்டுமே உங்களில் விபீஷணன்களை நாங்கள் உற்பத்தி செய்து கொண்டே இருப்போம்! அந்தக் கைத்தடிகள் அனுமார்கள் இனாமாக எங்களுக்குக் கிடைக்கும் போது எங்களுக்கு ஏது பயம்?
ஹி... ஹி....

கேணல் கிட்டு!!! தமிழர் விடுதலை வரலாற்றின் வீரகாவியம்.


வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது.

கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரணடையாத புலிகள் கட்டளைக்குப் பணிய மறுக்கின்றனர். சரணடையா விட்டால் கப்பலைத் தாக்கப் போவதாக மீண்டும் ஒரு கட்டளை! புலிகளின் முகங்களில் கேலிப்புன்னகை! கப்பல் வெடித்துச் சிதறுகிறது! விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியையும் தோழர்களையும் உயிருடன் பிடித்துவிடலாம் என்ற பாரதத்தின் நப்பாசை கப்பலுடன் சேர்ந்து சிதறிப்போகிறது!

ஆம்! கிட்டுவும் தோழர்களும் வங்கக்கடலில் சங்கமமாகி ஒரு மாபெரும் தியாக காவியம் வீர வரிகளால் எழுதி விட்டனர்! நாம் மூத்த தளபதி கிட்டுவை இழந்தோம்! கிட்டு எதிரிகளைக் கலங்க வைக்கும் ஒரு ஒப்பற்ற வீரத் தளபதி! கிட்டுவின் அணி வருகிறது என செய்தி கிடைத்தாலே சிங்களப் படை அஞ்சிப் பின்வாங்கும் அளவுக்கு அவனிடம் ஒரு ஆளுமை கொப்பளித்தது! களத்தில் கிட்டு இறங்க விட்டால் சக போராளிகளிடம் பலம் பன்மடங்கு பெருகிவிடும்.

கிட்டு ஒரு அரசியல் வாதி!: விடுதலையுணர்வை மக்களுக்கு விதைப்பது, போராட்டப் பணிகளில் மக்களை ஈடுபடுத்துவது, தெளிவான அரசியல் பார்வையை தோழர்களுக்கு ஊட்டுவது, எந்நேரமும் மக்களோடு மக்களாக உறவாடுவது - இவையெல்லாம் அவன் அரசியல் ஆளுமை!

கிட்டு ஒரு ராஜதந்திரி!: இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த போது இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்து கொண்டே எமது போராட்டத் நியாயங்களை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு விளக்கினான். ஆங்கில வெளியீடுகள் மூலம் பரப்புரை மேற்கொண்டான். இலண்டனில் இருந்து கொண்டு பன்னாட்டு போராட்ட அமைப்புகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டான்.

கிட்டு ஒரு ஊடகவியலாளன்!: பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு ஊடகங்களை ஆரம்பித்து தானே நெறிப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஊடகப் பலம் சேர்த்தவன் கிட்டு.

கிட்டு ஒரு புகைப்படக் கலைஞன்!: கிட்டுவின் கழுத்தில் என்றுமே இணைபிரியாமல் இருப்பவை இரண்டு. ஒன்று - சயனைட் குப்பி! மற்றது புகைப்படக் கருவி! எந்த நெருக்கடியான சண்டையிலும் அவன் ஒரு கையில் துப்பாகியுடனும் மறுகையில் கமெராவுடனும் நிற்பான். எந்த ஒரு சம்பவத்தையும் அவன் ஆவணப்படுத்த தவறுவதில்லை.

கிட்டு ஒரு ஓவியன்!: அவனின் ஓவியங்களில் கற்பனைகளும் கனவுகளும் சிறகடிக்கும்! ஆத்மார்த்த உணர்வுகள் கொப்புளிக்கும் விடுதலையுணர்வு வீறுகொண்டெழும்" அவனின் ஓவியங்கள் வெறும் படைப்புக்களல்ல! மனிதரை செயல் நோக்கி உந்தித்தள்ளும் விசைகள்!

கிட்டு ஒரு கவிஞன்!: அவனின் கவிதைகளில் மண் மணக்கும்! வல்லை வெளிப் பூவசரசும், உடல் தழுவும் உப்புக்காற்றும் மெல்ல நடை பயிலும். கள்ளிறக்கும் கந்தனும், மீன்பிடிக்கும் மரியானும் சமத்துவம் தேடி அவன் கவிதைகளில் சங்கமிப்பார்கள். காதல் உணர்வு கடல் கடந்தும் சிறகடிக்கும்! இப்படி இப்படியாக கிட்டு ஒரு பன்முக ஆளுமையின் அவதாரம்! ஒரு விடுதலைப் போராட்டத் தளபதியின் தலைசிறந்த முன்னுதாரணம்!

இந்தி அரசே! அந்த அற்புதத்தை வங்கக்கடலில் வைத்து அழித்தாய்! இப்போது கேட்கிறோம்!
அவனை உன்னால் எமது நெஞ்சிலிருந்து அழிக்க முடியமா? எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் அவனின் நினைவுகளை அழிக்க முடியுமா?
முடியாது! உன் இலட்சக் கணக்கான படையினராலும் முடியாது! உன் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாலும் முடியாது!ஏனெனில் - கிட்டு எங்கள் மண்ணில் ஒவ்வொரு துகள்களிலும் உயிர் வாழ்கிறான்!

நன்றி : செண்பகப்பெருமாள்.

இவனெல்லாம் ஒரு பிரதமர்!!! எங்கே? நாடு உருப்பட போகுது.

இரவு விடுதியில் நடனமாடும் 17 வயது இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(74) செயல் குறித்து, போலீஸ் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மாஜிஸ்திரேட் முன்பும் புகார் செய்யப்பட்டிருக்கிறது. இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது பெண்கள் உடனான தொடர்பு, ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், இரவு விடுதியில் நடனமாடும் ரூபி ரூபாகுவோரி என்ற 17 வயது இளம்பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருட்டு வழக்கில் சிறை சென்றார்.பிரதமர் பெர்லுஸ்கோனி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை விடுதலை செய்தார்.

அதிபர் வீட்டில் நடந்த நடன நிகழ்ச்சியில் இந்த ரூபி என்ற இளம் பெண் பங்கேற்றதாகவும், அந்த இரவைக் கழித்த பின் அவருக்கு 7,000 யூரோ (இந்திய ரூபாயில் ரூ.3.5 லட்சம்) தந்ததாகவும் அப்பெண்ணே அளித்த பேட்டி விசாரணை, முக்கியத்துவம் பெறக் காரணமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மிலன் நகர போலீசார் இது குறித்து விசாரிக்கத் துவங்கியதும் பெர்லுஸ்கோனி தலையிட்டாராம். இதையடுத்து, தற்போது ரூபியுடனான உறவு குறித்து விளக்கம் கேட்பதற்காக பெர்லுஸ்கோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்

பிரேசில் கடும் மழை வெள்ளம் 500 பேர் பலி.


பிரேசில்லா,ஜன.1 பிரேசில் நாட்டில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் தொடர்ந்து கடும் மழை பெய்து வந்தது. இதையடுத்து, சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்தனர். பலநகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.

பிரேசில் நாட்டில், 43 வருடங்களுக்குப் பிறகு இயற்கைப் பேரழிவில் இவ்வளவு பேர் உயிரிழந்தது இதுவே முதல்முறை. கடந்த 1967-ம் ஆண்டு சா பாலோ மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு தற்போது வெள்ளத்திற்கு 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மலைப்பாங்கான பகுதிக்கு தப்பிச் சென்றனர். இதையடுத்து, அத்தகையப் பகுதிகளில் மீட்புக் குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளப் பாதிப்பு காட்சிகள் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்று நேரில் பார்வையிட்ட பிரேசில் அதிபர் ரூஃசெப் கூறினார்.

காங்கிரஸின் கரசேவையும் & போலி மதச்சார்பின்மையும்.


புதுடெல்லி,ஜன.15:டெல்லியில் காங்கிரஸ் அரசின் கரசேவையினால் இடிக்கப்பட்ட மஸ்ஜிதில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தது.டெல்லி இமாம் அஹ்மத் புகாரி ஜும்ஆ தொழுகைக்கு தலைமை தாங்கினார்.
டெல்லி நிஸாமுத்தினூக்கு அருகிலுள்ள ஜங்புராவில் பழமையான நூர் மஸ்ஜித் கடந்த புதன்கிழமை டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகளால் அநியாயமாக இடித்துத் தள்ளபட்டது.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ஜும்ஆ தொழுகை நடத்தப்படும் என முன்னரே டெல்லி இமாம் அஹ்மத் புகாரி அறிவித்திருந்தார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகைக்கு அனுமதிப்பதாகவும், மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்த டி.டி.ஏவிடமிருந்து வாங்கி மீண்டும் மஸ்ஜிதை புனர் நிர்மாணிக்க வக்ஃப் போர்டிடம் ஒப்படைக்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் டெல்லி இமாமை சந்தித்து உறுதியளித்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியபிறகு ஷீலா தீட்ஷித் இந்த உறுதியை அளித்தார்.

டெல்லியில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் நிஸாமுத்தீன் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடைகள் மூடிக்கிடந்தன. போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாலும் மக்கள் ஜும்ஆ தொழுகையை நடத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர். வழியில் போலீஸ் தடுத்தபொழுதிலும் அதனை மீறிய மக்கள் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் கூடினர். ஆனால், போலீசார் மஸ்ஜித் இடிக்கபட்ட இடத்திற்கு மக்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து டெல்லி இமாம் அவ்விடத்திற்கு வருகைதந்தார்.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகை நடத்தப் போவதாகவும், போலீசார் தடுக்கக்கூடாது எனவும் டெல்லி இமாம் கூறினார். தொடர்ந்து, போலீசார் தடைக் கட்டைகளை அப்புறப்படுத்தினர். இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்கள் மீது ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தேறியது. தொழுவதற்குத் தேவையான தொழுகை விரிப்புகளை அருகிலுள்ள வீடுகளிலிருந்து பெண்கள் கொண்டுவந்துக் கொடுத்தனர். அதேவேளையில் பெரும் மக்கள் திரள் போலீஸ் ஸ்டேசன் முன்னால் கூடியிருந்தது. காங்கிரஸின் ரகசிய திட்டம்தான் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நிகழ்வு என டெல்லி இமாம் குற்றஞ்சாட்டினார்.

பின்னர் டெல்லி இமாம் தலைமையில் ஜங்புராவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக புறப்பட்டபொழுது போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நடந்த மோதலில் ஒரு டி.டி.ஏ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டது. மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவம் துயரமானது என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். மஸ்ஜித் புனர் நிர்மாணிக்க முஸ்லிம்களுடன் போராடுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Jan 14, 2011

இந்த பதிவு ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளுக்கு சமர்ப்பணம்!!!


இந்திய அரசு, இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. துப்பாக்கி தோட்டக்களை வெறும் கற்களால் எதிர் கொண்டு சிறுவர் முதல் பெண்கள் வரை அங்கே உயிரைத் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். கடந்த மதங்களில் நூற்றுக்கணக்கில் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த அநீதியை எதிர்த்து அருந்ததிராய் குரல் கொடுத்ததால் அவரையே கைது செய்வதாக மிரட்டியது இந்திய அரசு. “காஷ்மீரின் விடுதலைக்கு குரல் கொடுத்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்ய வேண்டுமென்றால் இந்த குற்றத்தை இலட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் அன்றாடம் தெருக்களில் செய்து வருகிறார்கள், முடிந்தால் அவர்களை கைது செய்து பாருங்கள்” என்று நெற்றியடி அடித்தார் அருந்ததி ராய். அதன் பிறகு தேசபக்தி குஞ்சுகள் ஒன்றும் சவுண்டு விடக் காணோம்.

ஆனால் தற்போது பா.ஜ.க என்ற பண்டாரங்களது கட்சி பெரியதாக ஒரு சவுண்டு விட்டிருக்கிறது. அதாவது வரும் ஜனவரி 26 குடியரசு நாளில் ஸ்ரீநகர் லால் சவுக்கில் இவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றப் போகிறார்களாம். “இந்திய அடக்கு முறையாளர்களே காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்” என்று உரக்க குரல் கொடுக்கும் மக்களை வெறுப்பேற்றுவதற்கு பா.ஜ.க விற்கு கிடைத்திருக்கும் ஒரு ஆயுதம்தான் இந்த கொடியேற்று தேசபக்தி. ஆயிரக்கணக்கான உறவுகளை பலிகொடுத்து விட்டு வீட்டை விட்டு தெருவில் இறங்கினால் துப்பாக்கிகளின் அடக்குமுறையில் வாழ்க்கையை கழிக்கும் அந்த மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வில்லை என்றாலும் இப்படி குரூரமாக குத்திக் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். பா.ஜ.க அப்படி கொடியேற்றும் முயற்சியை செய்தால் இந்தியத் துணைக் கண்டமே தீப்பிடித்து எரியும் என்று அவர் அதை கண்டித்திருக்கிறார். மேலும் பா.ஜ.க மத்தியில் ஆண்டபோது கூட அவர்கள் இதை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். உண்மைதான் இதிலிருந்து தேசபக்தி என்பது கூட எதிர்க்கட்சி அரசியல் நடவடிக்கைகளின்போது மட்டுமே பொங்கி வழியும் என்றாகிறது இருக்கட்டும். உடனே நமது தேசபக்திக் குஞ்சுகள் ” இந்தியாவின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானலும் ஏற்றலாமே.. அது உரிமை, அதை எதிர்ப்பது தேச துரோகம்” என்று பொங்குவார்கள்.

அந்த கூ முட்டைகளுக்கு ஒன்றை புரியும் விதத்தில் சொல்வோம். தேசம் என்பது அந்த தேசத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏழைகள் என்ற விதத்தில் வாழ்வைக் கழிக்க போராடுபவர்கள் யாரும் காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் இவர்களுக்கு இந்தியா என்ற நாடு எந்த வாழ்க்கையையும், விடுதலையையும் தந்துவிடவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களை அடக்கி ஆளும் மேட்டுக் குடி கும்பல்தான் இந்தியா என்பதை பட்டாப் போட்ட அவர்களது அப்பன் வீட்டு சொத்து போல ஆட்டம் போடுகிறது.

சரி, அவர்களது வாதப்படியே பார்ப்போம். இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” அவர்கள் ஸ்ரீநகரில் கொடி ஏற்றட்டும். அதே போல நாமும் வரும் ஜனவரி 26 அன்று இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” கீழ்க்கண்ட சமத்துவ தேசபக்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

1. கன்னியாகுமரியிலுள்ள மீனவர்கள் தங்களது உணவான மீனை எடுத்துக் கொண்டு விவேகானந்த கேந்திரத்திற்கு சென்று சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு இந்தியக் குடிமகன் தனது உணவை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சாப்பிடலாம். விவேகானந்தா கேந்திராவில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று எவனாவது தேச துரோகம் புரிந்தால் செருப்பு கிழியும்.

2. நெல்லை மாவட்டம் கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு தலித் பக்தர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கருவறையில் நுழைந்து அப்பனை பூஜை செய்வார். ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று நுழைந்து பூஜை செய்வதற்கு உரிமை உண்டு. மறுப்பவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டும். கருணை மனு வெங்காயங்கள் எல்லாம் கிடையாது.

3. ஜனவரி 26 அன்று இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சபரி மலைக்கு சென்று ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்வார்கள். எந்தக் கபோதியாவது தடுத்தால் துடப்பக்கட்டை பிஞ்சு போகும்.

4. 26 அன்று பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிகள் அருப்புக் கோட்டையில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் நாயுடுகளிடமிருந்து நிலத்தை தேசபக்த்தியோடு கைப்பற்றி இந்தியனாகப் பிறந்த எவருக்கும் இந்தியாவில் நிலம் இருக்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டுவார்கள். இல்லை என்று சொன்னால் இரட்டை ஆயுள் தண்டனை.

5. இந்த பொன்னாளில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அய்யங்கார் அக்ரகாரத்திற்கு பெண் கேட்டு சமயபுரத்தை சேர்ந்த பறையர்களாக இருக்கும் தலித்துகள் செல்வார்கள். இந்தியாவில் பிறக்கும் எவரும் எவரையும் மணப்பதற்கு உரிமை உண்டு. அதன்படி தலித்துக்களின் மண உரிமையை யாராவது மறுத்தால் அவர்களை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்.

6. கோயம்புத்தூர் கொங்கு வேளாளக் கவுண்டர்களது மாளிகைகளுக்கு ஜனவரி 26 அன்று அருந்ததி இளைஞர்கள் பெண் பார்த்து மணம் முடிப்பதற்கு வருவார்கள். கூட வரும் நகர சுத்தி வேலை செய்யும் அவர்களது பெற்றோர்கள் முறைப்படி பேசுவார்கள். ” பீ அள்ளுற சக்கிலிப் பயலுக்கு கவுண்டன் பொண்ணு கேக்குதா” என்று எவனாவது சவுண்டு விட்டால் அவனது நாக்கை அங்கேயே அறுப்போம். இல்லையேல் இந்தியாவில் சமத்துவ உரிமை இல்லை என்றாகிவிடும். என்ன இருந்தாலும் இந்திய தேசபக்தி முக்கியமில்லையா!

7. நமது சிவனடியார் ஆறுமுகசாமியை சங்கர மடத்தில் சங்கராச்சாரி ஆக்குவதற்கு இதே 26 அன்று பெரும் ஊர்வலத்துடன் காஞ்சிபுரம் வருவோம். எங்கள் சாமியாரின் அர்ப்பணிப்பும், பக்தியும் அந்த பன்னாடை ஜெயேந்திரனது பொம்பிளை பொறுக்கித்தனங்களோடு ஒப்பிட முடியாது. எனவே இந்தியாவில் பிறந்த எவரும் சங்கரமடத்தில் சங்கராச்சாரியாக ஆக முடியும் என்ற உரிமையை நிலை நாட்ட அன்றைக்கு வந்தே தீருவோம். இதை சங்கரசாச்சாரி மறுத்தால் அவரை மடத்தோடு சேர்த்து இந்திய அரசு சொந்த செலவில் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்க வேண்டும் !

8. இந்தியா குடியரசாக மலர்ந்த இந்த திருநாளில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் செம்மஞ்சேரி மக்கள் தமது இருப்பிடத்தைக்காலி செய்து விட்டு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்கள் வீட்டில் குடியேற வேண்டும். பதிலுக்கு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களை சைதாப்பேட்டை கூவத்தின் கரையில் குடிசைகளை போட்டு குடியேற வைக்க வேண்டும். இந்த எக்ஸ்சேன்ஞ் மேளா மூலம்தான் உண்மையான சமத்துவத்தை இந்தியாவில் படைக்க முடியும். மறுப்பவர்களை காஷ்மீரிலோ அல்லது மணிப்பூருக்கோ நாடு கடத்த வேண்டும்.

9. இந்த உன்னதமான நாளில் இந்தியாவிலேயே பணக்கார வசதிகளோடு வாழும் காஷ்மீர் பண்டிட் அகதிகளை டெல்லியிலிருந்து காலி செய்து கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள ஈழ முகாமிற்கு அனுப்ப வேண்டும். அதே போல அந்த முகாமில் உள்ள அகதிகளை டெல்லியில் உள்ள ஹடெக் பண்டிட்களின் குடியிருப்புக்கு அனுப்ப வேண்டும். இப்படித்தான் இந்தியாவில் உள்ள அகதிகளின் உரிமையில் கூட நாம் சமத்துவத்தை கொண்டு வரமுடியும். மறுப்பவர்கள் ராமேஸ்வரம் கடலில் இறக்கிவிட வேண்டும் அதற்கு மேல் ராஜபக்சேவின் சிங்கள கடற்படை உரிமையோடு பார்த்துகொள்ளும்.

10. பெங்களூருவில் உள்ள விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஆலையை இனிமேல் அதே ஊரில் உள்ள ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி எடுத்து நடத்துவார். பதிலுக்கு மல்லையா இனி செருப்பு தைத்து தனது வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லாரும் எல்லாத் தொழில்களையும் பாகுபாடு இல்லாமல் செய்யும் உரிமையை இதன் மூலம் நிரூபிக்கமுடியும். இதையெல்லாம் செய்வதற்கு துப்பிருந்தால் காஷ்மீரில் கொடி ஏற்றும் உரிமையை பற்றி பேசு !

நன்றி: வினவு.

ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லுங்கள்: திக்விஜய் சிங்.


கொச்சி,ஜன.15:ஹிந்துத்துவா பயங்கரவாதம் இந்தியாவில் வலுவாக உள்ளது என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திக்விஜய் சிங் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் சில கட்சிகளும் ஹிந்துத்துவா பயங்கரவாதத்திற்கு உத்வேகமளித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ஹிந்துத்துவா பயங்கரவாதம் சக்திப்பெற்று வருகிறது. நான் அன்றே இதனை சுட்டிக்காட்டி வருகிறேன். காவி நிறம் ஹிந்து மதத்துடன் தொடர்புடையது என்பதால் காவி பயங்கரவாதம் என பயன்படுத்துவது சரியல்ல. ஹிந்துதுவா பயங்கரவாதம் என்று கூறுவதுதான் சரி. இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

குடிக்காமல் உலறும் காஞ்சி சங்கராச்சாரியார்!!!


காஞ்சிபுரம்,ஜன.15:பொங்கல் திருநாளையொட்டி காஞ்சிபுரத்தில் பேட்டியளித்த காஞ்சி காமக்கோடி ஜெயேந்திரனின் உளறல்கள்.

உளறல் 1. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வருமான வளர்ச்சியால்தான் விலைவாசி உயர்ந்ததாக கூறக் கூடாது. விலைவாசியைக் குறைக்க காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்கள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். அவைகளை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் உரம் முதலிய மூலப் பொருள்களுக்கும் அதிக அளவு மானியம் வழங்க வேண்டும்.

உளறல் 2. அயோத்தி பிரச்னை சுமூகமாக தீர வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் 27-ம் தேதி புனேவில் நான் இமாம்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். முதலில் அயோத்தி பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம். பின்னர் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்த முடியாத நிலை உள்ளது. அங்கு தொழுகை நடத்துவதற்கு அனுமதி வாங்குவதற்கான முயற்சிகளை எடுப்போம் என்றேன். அவர்கள் முதலில் உடன்பட்டு சென்றனர். பின்னர் அவரவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்று விட்டனர். அதனால் பேச்சு வார்த்தை பலனில்லாமல் ஆகிவிட்டது.

உளறல் 3. ஆந்திரத்தை பிரிக்கலாம்' தெலுங்கானா கோரிக்கை என்பது நீண்ட நாள் கோரிக்கை. சண்டிகரைப்போல் ஹைதராபாதை தெலுங்கானாவுக்கும், ஆந்திரத்துக்கும் பொது தலைநகராக வைத்து ஆந்திரத்தைப் பிரிக்கலாம். ஹைதராபாத்தை தெலுங்கானாவுடன் மட்டும் சேர்த்து தனி தெலுங்கான உருவாக்குவது ஆபத்தானது. ஹைதராபாத் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறும் அபாயம் ஏற்படும் என்றார் ஸ்ரீஜயேந்திரர்.

காம...கோடியின் காறி உமிழவைக்கும் உளறல் பேட்டியை பற்றி அலசுவோம்:

1.விலைவாசி உயர்வதற்கு வருமான வளர்ச்சி என்று கூறக்கூடாதாம். அது சரி அப்ப காரணம் என்னவென்று சொல்ல வேண்டியதுதானே? நீ என்ன பதுக்கல் காரர்களுக்கும், வெளிநாட்டு தரகு முதலாளிகளுக்கும் பினாமியா?

அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வுக்கு காரணம் பதுக்கலும், அரசின் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடியும்தான். அதுமட்டுமல்லாமல் இந்த விலைவாசி உயர்வுக்கு, வெளிநாட்டு தரகு முதலாளிகளான வால்மார்ட்டையும், டெலஸ்கோவையும் சில்லரை வியாபாரத்தில் நுழையவிடுவதற்கான தந்திரம் என்றுதான் நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.

உரத்தையும்,மூலப்பொருட்களையும் மானியமாக வழங்க வேண்டுமென்று கூறும் நீ இந்நாட்டில் பல ஆண்டுகளாக எத்தனையோ விவசாயிகள் தற்கொலைச் செய்ததற்கு ஏதாவது பரிகாரம் கூறினாயா? அல்லது திருஷ்டிதான் கழித்தாயா? அல்லது இந்தியாவில் ஏழைகள் படும் அவஸ்தைக்கு தீர்வைக் கண்டறிந்தாயா? உனக்கும் உனது அவாள்களுக்கும் காய்கறி வேண்டுமென்பதற்காக இப்பொழுது ரொம்ப கரிசனம் வந்துவிட்டதோ?

2.அயோத்தி பிரச்சனையில் வி.ஹெச்.பியின் பினாமிதான் நீ என்பது ஊரறிந்த ரகசியம். இந்நிலையில் சமாதானம் பேசலாம் என நாடகமாடி சதிவேலை செய்ய நீ திட்டமிட்டதை உணர்ந்துக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் மேல் முறையீடு செய்வதுதான் ஒரே வழி என புரிந்துக் கொண்டனர். இதற்கிடையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பினாமியான உனக்கு ஏன் பொத்துக்கொண்டு வருகிறது?

3.தெலுங்கானாவை பிரிக்கும்பொழுது ஹைதராபாத்தை அத்துடன் சேர்க்கக் கூடாதாம். தீவிரவாதிகளின் மையமாகிவிடுமாம். கூ முட்டை! உனக்கு புத்தி எங்கடா போச்சு! பத்திரிகையையெல்லாம் படிப்பதே கிடையாதா? உனக்கு கூத்தடிக்கவே நேரம் பத்தலை! பத்திரிகை படிக்க எங்க நேரம்! உனது உற்றத் தோழர்களான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்தார்கள் என்பது உனக்கு தெரியாதா என்ன? அப்ப நீ ஹிந்துத்துவாவின் பயங்கரவாத மையமாக ஹைதராபாத் மாறிவிடும் எனக் கூறவருகிறாயா? நீயே ஒரு பயங்கரவாதி! சங்கரராமன் கொலை வழக்கையையும் நீ போட்ட காம, கொலை வெறியாட்டங்களையும் தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தாயோ? முட்டாள் கம்முனு கிட.

Jan 13, 2011

காங்கிரசும் அதன் கருங்காலி ஹிந்துத்துவா சிந்தனையும்.

புதுடெல்லி,ஜன.13:ஹஸ்ரத் நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகிலுள்ள ஜங்புராவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மஸ்ஜித் ஒன்றை டெல்லி வளர்ச்சி ஆணைய(டி.டி.எ) அதிகாரிகள் அநியாயமாக இடித்துத் தள்ளியுள்ளனர். இச்சம்பவத்தைக் கேள்விபட்டு கொதித்துப்போன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. போலீசார் மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர்புகையை உபயோகித்து லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.

சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி மஸ்ஜிதை இடிக்க பெரும் போலீஸ் படையுடன் வந்த டி.டி.எ அதிகாரிகள் வந்ததனர். ஆனால், மஸ்ஜித் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படவில்லை என போராட்டத்திற்கு தலைமை வகித்த தர்வீந்தர் சிங் மார்வே எம்.எல்.ஏ தெரிவித்தார். இந்த அராஜகத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் நிஸாமுத்தீன் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னால் நடுஇரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

டி.டி.எவின் நடவடிக்கையை கண்டித்து டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதிலும், ஜாமிஆ நகரிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன. சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக்கூறி ஏற்கனவே நான்கு தடவை மஸ்ஜிதை இடிக்க டி.டி.எ அதிகாரிகளும் போலீசாரும் முயன்ற பொழுதும் மக்களின் எதிர்ப்பின் மூலம் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.

நேற்று காலை ஆறுமணிக்கு பெரும் போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் மஸ்ஜிதை இடித்துத் தள்ளினர். தடையரண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்த பொழுதிலும் தடை அரண்களை தகர்த்த மக்கள் கூட்டம் முன்னேறியது. போலீசார் கண்ணீர்புகையை வீசி லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.

டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது எனவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுத்தொடர்பாக ஆய்வு செய்த கமிட்டியின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மஸ்ஜிதை இடிக்க தீர்மானித்ததாக டி.டி.எவின் துணை இயக்குநர் மார்கத் சிங் தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்த டெல்லி இமாம் அஹ்மத் புகாரி, மஸ்ஜித் கட்டப்பட்டது வக்ஃப் நிலத்திலாகும். அரசு கெஜட்டில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என இமாம் அஹ்மத் புகாரி தெரிவித்தார்.

இரண்டு தினங்களுக்குள் டி.டி.எ இப்பிரச்சனைக்கு பரிகாரம் காணாவிட்டால் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் வருகிற வெள்ளிக்கிழமை என் தலைமையில் ஜும்ஆ தொழுகை நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்பொழுதும் மோதல் சூழல் நிலவுகிறது.

நன்றி செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அப்துல் ரசாக்கும் அற்புதமான "சேப்டி லாக்கும்' !!!

மதுரை: மதுரையில் அடிக்கடி கார், ஆட்டோ டயர்கள் திருடு போகாமல் இருக்க, 200 ரூபாய் செலவில் "சேப்டி லாக்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார் அப்துல்ரசாக். மதுரை பீபீகுளத்தைச் சேர்ந்த இவர், இதுவரை 22 புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதற்காக கடந்தாண்டு தேசிய விருதும் பெற்றார். இவரது பகுதியில், ஆட்டோ டயர்கள் அடிக்கடி திருடு போயின. "இதுவரை 100 டயர்கள் காணாமல் போய்விட்டன. இனி திருட்டு நடக்காமல் இருக்க ஏதாவது கண்டுபிடிங்க' என்று ஆட்டோ டிரைவர்கள் கூறினர்.

இதைதொடர்ந்து, "சேப்டி லாக்கை' கண்டுபிடித்த அப்துல்ரசாக் கூறியதாவது: "வீல்'லில் உள்ள நட்டுகள் எளிதாக கழற்றும் வகையில் இருப்பதால்தான் டயர்கள் திருடு போகின்றன. நான் கண்டுபிடித்துள்ள இந்த "சேப்டி லாக்' நட்டுகளை மறைப்பதோடு, புது டிஸைனாகவும் இருக்கும். எந்த சாவி போட்டாலும் திறக்க முடியாது. இதன் காரணமாக, டியூப் காற்றை இறக்கவும் முடியாது. இதற்கு காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கார் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுகொண்டால், அவர்களிடமும் இதை செயல்படுத்தி காட்டுவேன், என்றார். இவரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் குமாரவேல் பாராட்டினர்.

இந்தியாவில் கிளைத் துவங்க விக்கிபீடியா முடிவு.

நியூயார்க், ஜன.13: இந்தியாவில் கிளையை துவங்க விக்கிபீடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆன்-லைன் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படுகிறது விக்கிபீடியா. இணையதளத்தில் தேடும் விவரங்களை உடனுக்குடன் முழு தகவல்களை தரும் வகையில் விக்கிபீடியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தற்போது முதல்முறையாக அமெரிக்காவைத் தவிர இந்தியாவிலும் கிளையைத் துவங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து விக்கிபீடியா தலைவர் சூ கார்ட்னர் செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: முதலில் ஹிந்தியிலும், அதன் பின்னர் இந்திய நாட்டின் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தகவல்களை அளிக்கவுள்ளோம். மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே முதலில் இந்தியாவில் கிளையைத் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மக்களுக்குத் தேவையான தகவல்களை, அவர்களது மொழியிலேயே வழங்குவது சரியாக இருக்கும். இதன்மூலம் விக்கிபீடியாவும் இந்தியாவில் வேரூன்றும். விக்கிபீடியா என்சைக்ளோபீடியாவில் உள்ள விவரங்கள், கட்டுரைகள், தகவல்களை மேலும் அதிகரிப்பதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஒரு சம்பவம் அல்லது இடம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவந்தால் அதை எங்களுக்கு அவர்கள் அளிக்கலாம். இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில், மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்க நாடுகளில் கிளைகள் துவங்கப்படும் என்றார் அவர்.

இலங்கையில் கனமழை வெள்ளம் பலி 21 ஆக உயர்வு.

கொழும்பு, ஜன.13: இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி மேலும் 3 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து கனமழைக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்குப் பகுதி மாகாணங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இலங்கையின் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் இதைத் தெரிவித்துள்ளது.

சிறுவகை தானியங்களும், அதன் பலன்களும்!!!


மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய இப்பயிர்களில் கிடைக்கும் சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்ந்து வந்தது. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.

இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. மேலும், இவை அதிக நார்சத்து கொண்டுள்ளன. இதனால் இவை இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை. மேலும், மக்காட்சோளத்தில் சப்டூஆலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக்குழாய் நோயை குணப்படுத்தும் வல்லமை படைத்தது.

கேழ்வரகு: இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது இதுவாகும். இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

சத்துக்கள்: கேப்பை என்றழைக்கப்படும் 100 கிராம் கேழ்வரகில் 7.3கி புரதம், 1.3கிராம் கொழுப்பு, 3.9 கிராம் இரும்புச்சத்து, 3.6 கிராம் நார்ச்சத்து, 344 மில்லி கிராம் கால்சியம், 203மில்லிகிராம் பாஸ்பரஸ், 420 மில்லி கிராம் தய்மின், 72 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பிகரேட்டின் (42மிகி), நயசின் (1.1மிகி), ரிபோப்ளேவின் (1.1மிகி) போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இதே நேரத்தில் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .06 மற்றும் 1.5 கிராம் இரும்புச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோலவே நாம் அதிகமாக உட்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .02 மற்றும் 1.2 கிராம் நார் சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோன்றே கால்சியம் .045 மற்றும் .041 மில்லி கிராம் மட்டுமே அரிசி மற்றும் கோதுமைகளில் கிடைக்கிறது. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் வலிமையுடையவர்களாகவும், நல்ல திடகாத்திரமானவர்களாகவும், உடலுழைப்பாளிகளாகவும் திகழ்ந்து வந்துள்ளனர்.

இதுபோலவே சிறுதானியங்களான திணை (8 கிராம்), சாமை (7.6 கிராம்), பனிவரகு (7.2கி), வரகு (9கி), குதிரைவாலி (9.8கி) ஆகியவை அரிசியைக் (.02கி) காட்டிலும் எட்டு மடங்கு அதிகமான நார்ச்சத்தினைக் கொண்டுள்ளன. அதேபோன்றே தாதுப்பொருட்களையும் அதிகளவில் கொண்டுள்ளன. திணையை உட்கொண்டால் இது இரைப்பையிலுள்ள ஈரம் நீக்குவதற்கு உதவும். எனவே தான் மலைகளில் வாழக்கூடிய பழங்குடி இன மக்கள் தேனும் திணை மாவும் தங்களுடைய முக்கிய உணவுப் பொருளாக உட்கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு மிகுதியான சத்துக்களைக் கொண்ட இப்பயிர்கள் குறைந்த காலத்தில் விளைச்சலைத் தரக் கூடியவையாகவும், குறைந்தளவிலான தண்ணீருடன் அதிகளவு வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவையாகவும் உள்ளன.

கடற்கொள்ளையர்கள் ஜாக்கிரதை!!!!

புதுதில்லி, ஜன.12- இந்தியாவைச் சேர்ந்த 14 மாலுமிகளுடன் இந்தியக் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இத்தகவலை கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குநரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனவரி 9-ம் தேதி, ஓமன் கடலோரத்தில் சலஹா என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று பிணையத் தொகை கேட்டு மிரட்டுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

Jan 12, 2011

மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம்! - சீமான்.

சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிமுக பக்கம் இழுத்தார் வைகோ. இப்போது சீமானின் முறை. தன் பங்குக்கு முஸ்லிம் அமைப்புகளான மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலை ஆனார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. பழ நெடுமாறன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதிமுகவுடன் கூட்டணி என்பதையும் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை மண்ணடியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சீமான் சென்றார்.

மனித நேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாகிருல்லா அவரை வரவேற்றார். த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி, இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், இலங்கை தமிழர்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்புக்கு பின்னர் சீமான் கூறும் போது, சட்டசபை தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்தார்

கேப்ட்டன் ஒரு காமடி பீசு: வெத்துவேட்டு விஜயகாந்த்.


இந்த உலகில் பைசாவுக்கு அருகதை இல்லாத விசயங்களுக்கெல்லாம் தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று சிலர் கூறுவது உண்மைதானோ? தமிழக அரசியலின் திசையை தீர்மானிப்பவர்களாக திரையுலக மாந்தர்கள் இருக்கும் அவலத்தினை பார்க்கும் போது அது பொய்யில்லை என்றே தோன்றுகிறது. பின்னே ஒரு தி.மு.க, அ.தி.மு.க தொண்டனுக்கு இருக்கும் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத விஜயகாந்த் போன்ற அட்டை கத்திகள் அரசியல் உலகில் சுழற்றும் வாள் சண்டையைப் போய் ஆகா, ஓகோ என்று உளமாற உருகி ரசிப்பதற்கும் இங்கு ஒரு பரிதாபத்திற்குரிய கூட்டம் இருக்கிறதே!!.

2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது. ஜெயா எதிர்ப்பு அலையில் தி.மு.க கரையேறிது போல கேப்டனும் ஏதோ ஏழு, ஏட்டு சதவீத வாக்குகளைப் பெற்றார். விட்ட சவுண்டுக்கு இது பெரிய வெற்றி இல்லையென்றாலும் ஊடகங்களும், துக்ளக் சோ போன்ற கருணாநிதியை கட்டோடு வெறுக்கும் பார்ப்பன தரகர்களும் இதை மாபெரும் வெற்றியாக கொண்டாடி ஐயாவை உசுப்பி விட்டனர். துக்ளக் சோவைப் பொறுத்தவரை கேப்டனை கொஞ்சம் சரிக்கட்டி போயஸ் தோட்டத்தில் சேர்த்து விட்டால் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று படாதபாடு பட்டார். ஆனாலும் ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது அது போல இரண்டு ஈகோ பார்ட்டிகள் (ஜெ & விஜயகாந்த்) சேர்வதற்கான சாத்தியம் இல்லை. இரண்டு தான்தோன்றி தன்னகங்காகர ஆளுமைகள் அவ்வளவு சீக்கிரத்தில் ஒன்றுபடாது என்பதையும் வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

இது போக கேப்டன் சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்ற உண்மையை அம்மா சொல்ல, கேப்டனும் “நீதான் கூட இருந்து ஊற்றி கொடுத்தாயா?” என்ற ஜாலி ஜம்பர் சண்டையை நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். மேலாக கருணாநிதியின் துரதிர்ஷடத்தை பாருங்கள், அரசியலில் தெற்கு வடக்கு தெரியாத விஜயகாந்தை எல்லாம் மதித்து பேச வேண்டியிருந்தது.

தனக்கு கூடிய கூட்டம், தேர்தலில் வாங்கிய எட்டு சதவீத வாக்குகள் எல்லாம் சேர்ந்து கேப்டனுக்கு முழு போதையை குடிக்காமலேயே அளிக்கத் தவறவில்லை. அடுத்த தேர்தலில் தான்தான் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று அவர் உண்மையிலேயே நம்பினார். இடையில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் வாழமுடியாத பண்ருட்டி போன்ற பழம்பெருச்சாளிகள் கேப்டன் கட்சியில் குவிய ஆரம்பித்தனர். கேப்டனும் தனது கட்சியில் ஏழை இரசிகன் செலவழிக்க முடியாது என்று தெளிந்து அந்த பணக்கார பெருச்சாளிகளை மானாவாரியாக சேர்க்க ஆரம்பித்தார். அந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் எவ்வளவு செலவழிப்பீர்கள் என்பதுதான் கேப்டனின் முக்கியக் கேள்வியாக இருந்தது.

சேலம் மாநாட்டில் அவர் கூட்டணி வேண்டுமா என்று கேட்ட போது தொண்டர்கள் அனைவரும் வேண்டு மென்று கை தூக்கினார்களாம். வேண்டா மென்று யாரும் சொல்ல வில்லையாம். இதையே கேப்டனது கட்சியினர் கொண்டிருக்கும் சமரச பிழைப்பு வாதத்திற்கு அடையாளமாக சுட்டிக்காட்டலாம். அதாவது வறுமை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, மானாட மயிலாட ஒழிப்பு, முதலான அன்லிமிட்டட் ஒழிப்புகளை யாருமே பேசாத அளவில் மாபெரும் கொள்கையாக பினாத்தும் ஒரு கட்சி அதை சாத்தியப்படுத்துவதற்காக ஊழல் நாயகியோடு அணிசேருமாம். என்ன ஒரு கொள்கை பிடிப்பு!

கூட்டணி தயவில்தான் இனி மிச்சமிருக்கும் காலத்தை ஓட்ட முடியும் என்பதை அறிந்ததினால்தான் கேப்டன் சமீப காலமாக, கூட இருந்து ஊற்றிக் கொடுத்தாயா என்று எகத்தாளம் பேசிய தலைவி குறித்து எதுவும் பேசுவதில்லை. அதுவும் மாலை பத்திரிகை ஒன்றில் அ.தி.மு.கவுக்கு எதிர்ப்பு காட்டும் விளம்பரம் ஒன்று தே.மு.தி.க சார்பில் வந்ததும் கேப்டன் படாதபாடுபட்டு அதை மறுத்தார். இது கூட்டணியை பிளப்பதற்கு கருணாநிதியின் சதி என்று சாடினார். காரியம் கை கூடும் நேரத்தில் காலை வாரிவிடும் வஞ்சகம் என்றும் அதை பார்த்தார்.

சரி, கேப்டன் போயஸ் தோட்டத்திலே போய் ஊழல் எதிர்ப்பு வசனம் பேசட்டும். ஆனால் இந்த யோக்கிய சிகாமணிக்கு ஊழலை எதிர்க்க என்ன அருகதை இருக்கிறது? ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் அரசு நிர்ணயித்திற்கும் மேலாகவும், சொந்த ஒதுக்கீட்டில் இலட்சம் இலட்சமாகவும் பணம் பெறுவதில் என்ன எழவு நேர்மை இருக்கிறது? அந்த கல்லூரி என்ன தர்ம சத்திரமாகவா இயங்குகிறது? கேப்டன் இதுவரை நடித்த படங்களில் கருப்பாகவும், வெள்ளையாகவும் வாங்கிய ஊதியத்தை வெளியிடுவாரா? இல்லை அவர் உச்சத்தில் இருந்தபோது அவரது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்றதைத்தான் திரும்பத் தருவாரா?

ஊரைக் கொள்ளையடித்து ஆளாகி, பிறந்த நாள் வந்தால் ஐந்து பேருக்கு தையல் மிஷன், நாலு மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு சைக்கிள்கள், பத்து பேருக்கு அன்னதானம் வழங்கிவிட்டு கொடை வள்ளல் என்று போஸ்டர் அடித்து விட்டு நானும் ஊழலை எதிர்க்கிறேன் என்றால் என்ன சொல்ல? ஊழலை எதிர்ப்பது இத்தனை சுலபமா என்று கையில் பேகான்ஸ்பிரேவுடன் நாளைக்கு வடிவேலுவும், சந்தானமும் இறங்கிவிட்டால் தமிழகத்தின் கதி, மோட்சமா இல்லை நரகமா?

கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்க்கும் கேப்டனின் யோக்கியதை என்ன? சாம்பார் எப்படி வைக்க வேண்டுமென்பது கூட தெரியாத, தெரிந்து கொள்ள தேவையில்லாத பண்ணையாரம்மா பிரேமலாதாவை மகளிர் அணி தலைவியாக்கி எல்லா கூட்டத்திலும் அமரவைத்து அந்த அம்மாவும் தே.மு.தி.கவை தனது பிறந்த வீட்டு சீதனம்போல உரிமை கொண்டாடி செய்யும் அளப்பறைகள் ஆபாசமாக இல்லையா? கேப்டனின் மச்சான் சதீஷ் இளைஞர் அணித் தலைவர். இந்த குடும்ப கிச்சன் கேபினட்தான் கூட்டணி பேரங்களுக்கான வரவு சேமிப்பு குறித்து முடிவெடுக்கிறது. இப்படி கட்சியையே முழு குடும்பத்தின் வருமானம் ஈட்டும் தொழிலாக்கி தமிழகத்தை வலம் வருபவர், கருணாநிதியை குடும்ப ஆட்சி என்று சாடினால் சொறிநாய் கூட காறித்துப்பாதா?

பண்ணையாரம்மா பிரமேலதா சேலம் மாநாட்டில் பேசும் போது, ” இதுவரை நாம் நம் தலைவரை கேப்டன் என்று அழைத்தோம், இனி இந்த மேடையில் அவரை நாம் டாக்டர் என்று அழைக்கப் போகிறோம்” என்று உச்சிமோந்திருக்கிறார். இதையெல்லாம் எழுதித் தொலைப்பதற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஜேப்பியாருக்கோ, இல்லை பச்சமுத்து முதலியாருக்கோ ஒரு போனை போட்டு ஒரு மாலை கல்லூரி விழாவுக்கு கால்ஷீட் கொடுத்தால் டாக்டர் பட்டம் கலை ஞானி கமலுக்கோ, இளைய தளபதி விஜயிக்கோ வீடுதேடி வரப்போகிறது. இந்த எழவை ஏதோ அமெரிக்க அல்லேலூயா பார்ட்டிகளிடம் வாங்கி அதையும் கூச்சநாச்சமில்லாமல் இதயம் வெட்கப்படுமளவு கூவித்திரிவதை பார்த்தால் மீண்டும் கண்ணகி உயிர்பெற்று முழு தமிகத்தையே எரித்து விட்டால் தேவலை.

சேலம் மாநாட்டில் அந்த அம்மா பிரேமலதா, ” நாங்க எங்க கைக்காசைப் போட்டுத்தான் மாநாடு நடத்துகிறோம்” என்று வேறு பீற்றியிருக்கிறார். அதே மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அருண்குமார் 51 இலட்சம் ரூபாய் நிதியை கட்சிக்கு வழங்கியிருக்கிறார். மற்ற மாவட்டத்து கணக்குகள் நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த காமா சோமா கட்சிக்கெல்லாம் இவ்வளவு நிதி எங்கிருந்து வரும்? யார் கொடுப்பார்கள்? இதை திரட்டுமளவு யாருக்கு சாமர்த்தியம் இருக்கும்? எல்லாம் முதலீடு போட்டு திரும்ப எடுக்கும் அந்த ஏனைய கட்சிகளிலிருந்து வந்த பெருச்சாளிகள்தான் காரணம். கூட்டணி தயவில் அம்மாவின் பிச்சையில் நாளைக்கு இவர்களிடமும் காரியம் சாதிக்க வேண்டியிருக்கலாம் என்று கூடவா திருவள்ளூர் மாவட்ட முதலாளிகளுக்குத் தெரியாது? தமிகத்தின் ஆக்டோபஸ்ஸாக உருவெடுத்துவிட்ட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வீழ்த்த, கேப்டனது குடும்பத்தால்தான் முடியுமென்று யாராவது நம்பினால் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளோம். அந்த கொடுமைக்கு நாம் கருணாநிதியையே சகித்துக் கொள்ளலாம்.

நன்றி: வினவு

ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை மத்திய அரசு அலசியப்படுத்தியது :ஆனந்த் பட்வர்தன்.

திருச்சூர்,ஜன.12: ஆட்சியாளர்களும், போலீசும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட்டு முன்னரே முஸ்லிம்களை தீவிரவாதிகள் என தீர்மானித்ததன் விளைவுதான் அஸிமானந்தாவின் வாக்குமூலம் வெளிப்படுத்துகிறது என பிரபல ஆவணப்பட தயாரிப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஆனந்த்பட்வர்தன் தெரிவித்துள்ளார். திருச்சூரில் 6வது விப்ஜியார் சர்வதேச திரைப்பட விழாவிற்கு இயக்குநராக வருகைத்
தந்துள்ள அவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி வருமாறு:

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பே 1992 ஆம் ஆண்டு "ராம் கீ நாம்" என்ற ஆவணப்படத்தை ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வெளியிட்டேன். தெளிவான ஆதாரங்களுடன் சங்க்பரிவார்கள் பாப்ரி மஸ்ஜிதை இடிப்பார்கள் என்பதை இந்த ஆவணப்படத்தின் மூலம் உணர்த்தினேன். ஆனால் மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அத்வானியின் ரதயாத்திரையும், மோடி நடத்திய கோத்ரா ரயில் எரிப்பும் ஏற்கனவே தீட்டப்பட்ட சதித்திட்டமாகும். 'எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர்! ஆனால் தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள்' என்ற அதிகாரப்பூர்வ பிரச்சாரம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, அவர்களில் சிலர் வழி தவறிச் செல்லவும் காரணமானது. கேரளாவிலும், மேற்குவங்காளத்திலும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பாசிசத்தின் மிரட்டல்களுக் கெதிராக வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வந்தபிறகுதான் ஊடகங்கள் 'ராம் கீ நாம்' ஆவணப்படம் அளித்த செய்தியை புரிந்துக்கொண்டன. மூன்று தனியார் சேனல்கள் அச்சூழலில் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பின. அப்பொழுதும்கூட ஒளிபரப்பு அசோசியேசனின் எதிர்ப்பு தொடரத்தான் செய்தது. நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான ஒளிபரப்பு அசோசியேசன், இந்த ஆவணப்படத்தைக் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ஆபத்து நிறைந்தது என குறிப்பிட்டது.

அரசும், போலீசும் இரண்டுவிதமாக தீவிரவாதத்தை அணுகுகின்றனர். எங்கேயாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் தீவிரவாத இயக்கங்களின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச்சென்று சிறையிலடைத்து கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர்.
மூன்றாம் தரமான சித்திரவதைகள் மூலம் அவர்களை நிர்பந்தப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். நீதிமன்றத்தில் போலியான ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளியாக்கி சிறையிலடைக்கின்றனர். நிரபராதிகள் தண்டிக்கப்படும் பொழுது மக்கள் நீதிபீடத்தின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் உற்பத்திச் செய்யும் தீவிரவாதம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்தியாவை தகர்த்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிரிகளாக பாவிக்கும் அவர்கள் மனிதத் தன்மையற்றவர்களும், ஜனநாயகத்திற்கு எதிரானவர்களுமாவர். ஹிட்லரும், முசோலினியும்தான் அவர்களின் வழிகாட்டிகள். சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மரியாதை அளித்தது 1979 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கமாகும்.

காந்தியின் படுகொலை மூலம் மக்களால் வெறுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஜனதா கட்சி ஆட்சியின் மூலம் தங்களுடைய மரியாதையை பலப்படுத்திக் கொண்டார்கள். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும், இனக் கலவரங்களைக் குறித்தும் விசாரணை நடத்தினால் சங்க்பரிவாரின் ஆக்டோபஸ் கரங்கள் இவற்றின் பின்னணியில் இருப்பதை கண்டறியலாம்.

தங்களது இயக்கத் தலைவர்களையும், உறுப்பினர்களையும், அரசியல் லாபங்களுக்காகவும், பயங்கரவாத யுக்திகளுக்காகவும் கொலைச் செய்யவும் தயங்காதவர்கள்தான் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். இந்திய நாட்டு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாத வரலாற்றைக் குறித்த விழிப்புணர்வு ஊட்டவேண்டும். இவ்வாறு பட்வர்தன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆனந்த் பட்வர்தன் தேஜஸ் பத்திரிகையின் ரெஸிடென்ட் எடிட்டரான மறைந்த மனித உரிமை ஆர்வலர் முகுந்தன் தனது உற்ற நண்பர் என தெரிவித்த ஆனந்த் பட்வர்தன், பாசிசத்தோடு சமரசத்திற்கு இடமில்லாமல் போராடிய முகுந்தன் சி மேனன் மனித உரிமை களத்தில் விலைமதிப்பில்லா சேவைகளை புரிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
நன்றி செய்திகள்: தேஜஸ் மலையாள நாளிதழ்

16 வயதா? இனி ஒட்டு போடலாம் வாங்க!!!

புவனேஸ்வரம்,ஜன.12:வாக்காளர் தகுதி வயதை 16 ஆக குறைப்பது குறித்து மத்திய அரசிடம் பரிந்துரைக்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார். ஒரிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.இளம் வயதிலேயே இளைஞர்கள் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தேர்ந்து விடுகின்றனர். எனவே, வாக்காளர் தகுதி வயதை 16 ஆக குறைப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஒட்டக பால் இனி கிடைக்காதுங்கோ!!!

ஷார்ஜா,ஜன.12:ஒட்டகத்தின் பாலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அரப் சயன்ஸ் இன்ஸ்ட்யூட் அண்ட் டெக்னாலஜி ஃபவுண்டேசனின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல் நஜ்ஜார் அறிவித்துள்ளார். ஒட்டகத்தின் பாலும், சிறுநீரும் கலந்து எலிகள் பின்னர் மனிதர்களில் சோதனை நடத்தியதாக அவர் விளக்கமளித்தார். 2008 ஆம் ஆண்டு ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் துவங்கிய இந்த பரிசோதனை பூர்த்தியானது பாக்தாத் கேன்ஸர் இன்ஸ்ட்யூட்டிலாகும். இந்த மருந்திற்காக பிரிட்டனில் காப்புரிமைப் பெற்று தனியாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

Jan 11, 2011

ஆச்சரியப்பட வைக்கும் சீனாவின் ராணுவபலம்!!!

பீஜிங் : முதன் முதலாக சீனா தனது உளவு விமானம் ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது குறித்து தங்களுக்கு கவலையில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும், கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வடகொரியா தயாரிக்கக் கூடும்' என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ்.

ரேடாரில் சிக்காத விமானம்: "ஸ்டெல்த்' விமானம் எனப்படும் அதிநவீன போர் விமானத்தின் உலோகம், பெயின்ட் உள்ளிட்டவற்றிலிருந்து எவ்வித கதிர்வீச்சுகளும் வெளிப்படாது. இதனால் விமானம் ரேடாரில் சிக்காது. இதன்மூலம் எதிரிகளின் ஏவுகணை கூட இதைத் தாக்க முடியாது. இது ஒலியை விட 4 மடங்கு வேகமாகச் செல்லும் திறனுடையது. சீனா தற்போது பரிசோதித்துள்ள விமானம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

உளவு விமான பரிசோதனை: சீனா வெற்றி: ராபர்ட் கேட்ஸ் - ஹூ ஜிண்டாவோ சந்திப்பிற்கு சில மணிநேரங்கள் முன்பாக, சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள "செங்டு' ராணுவ தளத்தில் இருந்து ஜே-20 ரக சிறிய விமானம் ஒன்று 15 நிமிடங்கள் வானில் பறந்தது. இதுகுறித்த செய்திகள் சீன இணையதளங்களில் வெளியானது. இதே விமானம், கடந்த வாரம், இதே விமான தளத்தில் ஓட்டப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "வால்ஸ்ட்ரீட்' பத்திரிகை நேற்று முழுப்பக்க அளவில் செய்திகளை வெளியிட்டிருந்தது. அது தனது செய்தியில்,"இது உளவு விமானம் போலத் தெரிகிறது. இவ்விமானத்தை "ரேடார்' கருவிகளில் கண்டறிய முடியாது. இது சீனாவின் ஐந்தாவது தலைமுறை விமானம்' என்று நிபுணர்கள் கூறியுள்ளதாக எழுதியிருந்தது. இப்படி ஒரு விமானம் சீனாவிடம் இருக்கிறது என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் முன்பே குறிப்பிட்டிருந்தனர்.

அதேநேரம், கடந்த வாரம் ஜப்பானியப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த பசிபிக் பகுதிக்கான அமெரிக்க அதிகாரி அட்மிரல் ராபர்ட் வில்லார்ட், "சீனா, போர்க்கப்பலை தாக்கும் ஏவுகணையின் முதற்கட்ட பரிசோதனை முடிந்து விட்டது. தரைத்தளத்தில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை, கடலில் உள்ள போர்க்கப்பலை அதிவேகமாக தாக்கும் திறன் உடையது. அமெரிக்காவின் மிகப் பெரிய போர்க்கப்பல்களைக் கூட தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது' என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் எதிர்பார்த்ததை விட சீனா தனது ராணுவத்தை மின்னல் வேகத்தில் நவீனப்படுத்தி வருவது உறுதியாகியுள்ளது.

ஆபாசம்!!! அதுதான் தேவாமிர்தம்!!! தினமணி ஆசிரியர்.

தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் அம்பத்தூரில் பேசிய ஓர் இலக்கியக் கூட்டத்தில் தேன் தடவிய நஞ்சுருண்டையை அருளியுள்ளார். கம்பன் என்ற ஒருவன் இல்லாமல் போயிருந்தால், அவனது சமய இலக்கியம் இல்லாமல் போயிருந்தால் தமிழ் என்றோ அழிந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது என்று ஒரு பொய்யை பேசி தனது பார்பன ஹிந்துவா நச்சு கருத்தை வெளிபடுத்தயுள்ளார். சமய இலக்கியம் இல்லாமல் போயிருந்தால் தமிழ் என்றோ அழிந்திருக்கும் என்ற தலைப்பில் அந்தச் செய்தி தினமணி யில் (3.1.2011) -- பக்கம்5) வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தக் கூற்று உண்மைதானா? அல்லது இலக்கியம் என்ற பெயரில் பார்ப்பனீயத்தை, ஹிந்துத்துவாவை தமிழ்மீது தமிழர்கள் மீது குதிரை சவாரி செய்விக்கும் ஏற்பாடா? சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும். சமய இலக்கியங்கள் தமிழுக்கு நோயே தவிர, தமிழுக்கு ஆரோக்கிய மானதல்ல என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அலை அலையாக அடுக்கிச் சொல்ல முடியும். அதில் ஒரு சில....

திருவெம்பாவை காட்டும் ஒழுக்கம்: (1): காளமேகப் புலவர் வைணவப் பார்ப்பனர், குடந்தையில் பிறந்தவர், திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப் பள்ளியில் பூசைக்கு வேண்டிய பிரசாதம் தயாரிக்கும் வேலை செய்து வந்தார். அக்காலத்துத் திருவரங்கத்திற்கு அண்மையிலுள்ள திருவானைக்கா என்னும் சிவத்திருப்பதியில் மோகனாங்கி என்னும் பெயருடைய வேசி தொண்டு செய்து வந்தாள். மிக்க அழகி. அவளிடம் காளமேகப் புலவருக்குத் தொடர்பு உண்டாயிற்று. அவளுடன் கூடி சிற்றின்பத்தில் திளைக்கலானார். திருவானைக்கா திருப்பதியில் மார்கழி மாதத்தில் ஒருநாள் திரு வெம்பாவையை இசையுடன் ஓதினாள். பக்கத்தில் பல வேசியர்களும் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்பாட்டைக் கேட்ட மற்றைய வேசியர்கள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க எனப் பாடி விட்டு, வைணவனோடு கூடிக் கலக்கிறாயே என இழித்துப் பேசினர். அவ்விழிச் சொல் மோகனாங்கியின் உள்ளத்தில் தைத்தது. அன்று இரவு காளமேகப் புலவர் தன் இல்லத்திற்கு வரும்போது உள்ளே வரவிடாமல் கதவைச் சாத்திக் கொண்டாள். உடனே புலவர் இவ்வளவு நாள் ஆதரித்த என்னை இப்போது ஏன் வெறுத்து ஒதுக்குகிறாய்? எனக் கேட்டார். அதற்கு அவள் வைணவனோடு நான் இனிச் சேரமாட்டேன் என்றாள். அதற்குப் புலவர் நானும் சைவனாகி விட்டால் என்னை ஏற்றுக் கொள்வாயா? என்றார். அதற்கு அவளும் சம்மதித்தாள். உடனே சிவன் கோயிலில் தீட்சை பெற்றுக் கொண்டு சைவராக மாறினார். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை காட்டும் ஒழுக்கம் இதுதானா?

கேவலம் சதைப் பசிக்காக மதம் மாறினான் என்பது பெருமைதானா? இப்படிப்பட்ட பக்தி இலக்கியம் சமய இலக்கியம் இல்லாது போயிருந்தால் தமிழ் அழிந்திருக்கும் என்று ஒரு அய்யர் கூறுவது எதன் அடிப்படையில்? ஆபாசங்களின் குப்பைகள் நிறைந்ததுதான் தமிழ் - _ அதுதான் தமிழுக்குப் பெருமை என்று கூறுவது நையாண்டி அல்லாமல் வேறு என்னவாம்?

திருவாய்மொழி காட்டும் ஒழுக்கம்?: (2): முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்! புணர்வதோராசையினால் - என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் அங்குயிலே! கண்ணீர்கள் முலைக்கு வட்டில் துளி சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கு இங்கிலக்காய் நானிருப்பேனே என்னாகத்திளங் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும் பொன்னாகம் புல்குதற்கு எனப் புரிவுடைமை செப்புமினே! சொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஓர் நந்நாள் தங்குமேல் என்னாவி தங்குமென்று உரையீரே! கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா! கொங்கைக்கும் - செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது! இருக்கட்டும் , இதைக் கேளுங்கள்: - காமப்பாதையில் கண்ணன் நாமம் குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப்பணைத் தாளோடு அற்றகுற்றமவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே!

மேற்கண்டவாறு ஆண்டாள் என்னும் ஒரு பெண் பக்தை பாடினாள் என்றால் இதுதான் பக்தி காட்டும் ஒழுக்கம் என்றால், ஒழுக்கம் என்பதற்கு என்ன பொருள் என்பதே கேள்விக்குறியாகி விடவில்லையா? கடவுளைப் புருஷனாக்கி அவனுடன் புணர வேண்டும் என்று துடிதுடிக்கும் கொக்கோகக் காட்சிதான் சமய இலக்கியமா? இந்தக் கேள்வியை ஆசிரியர் வைத்தியநாத அய்யர்வாளிடம் தான் கேட்டுத் தொலைய வேண்டும்.

திருவிளையாடற் புராணம் காட்டும் ஒழுக்கம்?: (3): அன்னையைப் புணர்ந்து தாதை குரவனாம் அந்த ணாளன் தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடளித்த தென்றால் பின்னை நீ விழிநோய் குட்டம் பெருவயி றீளை வெப்பென்று இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை! (மாபாதகம் தீர்த்தபடலம் திருவிளையாடல் புராணம்) தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற பார்ப்பனருக்கு சிவபெருமான் மோட்சம் அளித்தான் என்பதுதானே திருவிளையாடற் புராணம் என்னும் சமய இலக்கியம் காட்டும் நெறி? இது நெறியா காமவெறியா? காமத்துக்குக் கண்ணில்லை என்று கூறி, தாயைப் புணர்வதுவரை சென்று நியாயப்படுத் துவதுதான் சமய இலக்கியமா?

இந்தக் கேவலமான சமய இலக்கியம் தான் தமிழைச் சாக விடாமல் காப்பாற்றியதா? தினமணி ஆசிரியர் வைத்தியநாதய்யரின் யோக்கியதைக்கு இதுவும் நல்லதோர் எடுத்துக்காட்டுதானோ!

திருஞானசம்பந்தன் காட்டும் ஒழுக்கம்: (4): மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த் திண்ணகத் திருவால வாயருள் பெண்ணகத் தெழில் சாக்கியர் பேயமண் பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே! மதுரையில் இருக்கும் சிவனை திருஞானசம்பந்தன் யாதுகேட்டு வேண்டுகிறான்? பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் புரியவாயாக என்று வேண்டுவதுதான் சமய இலக்கியம் காட்டும் நெறி என்பதை திருவாளர் வைத்தியநாதய்யர் ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும்?

பார்ப்பனர்களுக்கு ஒழுக்கம் என்பது ஒரு பொருட்டல்லதான்; அதற்காக அதனைத் தமிழர்கள்மீது ஏற்றிச் சுமக்க வைக்க வேண்டுமா?

அங்கமோ ராறும் அரு மறை நான்கும் அருள் செய்து பொங்கு வெண்ணூலும் பொடி யணி மார்பிற் பொலிவித்து சிவபெருமானைப் பாட வந்த திருஞானசம்பந்தன், சிவன் பூணூல் அணிந்திருப்பதாகக் கூறுவது எதன் அடிப்படையில்? நான் சேர்ந்த பார்ப்பனக் குலத்தைச் சேர்ந்தவன்தான் நான் பூசிக்கும் கடவுள் சிவன் என்று சொல்லுவது ஜாதி உணர்வு அல்லாமல் வேறு என்னவாம்? கடவுளையே ஜாதிக்குள் அடைக்கும் கீழ்மைப் புத்தியைத்தானே தேவாரம் என்னும் சமய இலக்கியம் பறைசாற்றுகிறது?

புத்தன் எங்கே? பார்ப்பனர்கள் எங்கே?: திருவிளையாடல் புராணத்தில் சமணர்களைக் கழுவேற்றிய படலம் என்ற ஒன்றே இருக்கிறது. திருஞான சம்பந்தன் வாதில் தோற்றவர்களைக் கழுவில் ஏற்றுக் கொன்றானாம். அதே நேரத்தில் கவுதமப் புத்தரின் கவுரவமான நன்முறைகளை ஒரே ஒரு முறை யாரும் எண்ணிப் பார்க்கட்டுமே! இதனை நாம் சொல்லுவதைவிட இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று ஏற்றுமதி செய்து வந்த விவேகானந்தர் சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

விவேகானந்தர்: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்ய மில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகைய தாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன? சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; பஹுஜன ஹிதாய பஹுஜன ஸூகாய பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார் புத்தர் எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!

புத்தர் காலத்தில் எத்தனை மடங்கள், எத்தனை பாடசாலைகள், கலாசாலைகள், வைத்தியசாலைகள், விலங்குக்குச் சிகிச்சை புரியும் சாலைகள் ஏற்பட்டன. சிற்பம் எவ்வளவு சிறந்து விளங்கியது! புத்த தேவருடைய வருகைக்கு முன் இந்த நாட்டில் என்ன இருந்தது? ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஒரு சிலரால் மாத்திரம் அறியப்பட்டிருந்த சமய உண்மைகள் சில இருந்தன. புத்தர் அவற்றைத் தம் வாழ்க்கையில் மெய்ப்பித்து, மக்களுடைய வாழ்க்கையிலே அவற்றைப் பயன் படுத்தும் நெறிகளைக் காட்டினார்.
(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் நூல்- பக்கம் 81-82)

சமய இலக்கியங்களின் சித்தத்தை விவேகானந்தரே எடுத்து விளக்கிய பிறகு நாம் கூற என்ன இருக்கிறது? தங்களுக்கு வசதிப்பட்டபோது விவேகானந்தரைத் தோளில் தூக்கிப் பாடும் வைத்தியநாத அய்யர்கள் இதுபோன்ற இடங்களில் மவுன விரதம் பூண்டு விடுவார்கள் -_ அதுதான் பார்ப்பனீயம் என்பது!

குற்றாலக் குறவஞ்சி பாடல் காட்டும் நெ(வெ)றி பொருள்: அடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வழுத்தும் சிவபெருமானின் திருநீற்றை அணி யாதவர்களின் கைந்நரம்பினை எடுத்துக் கின்னரம் என்ற இனிய யாழில் தொடுத்து, நீறில்லா நெற்றியினையுடைய தீவினையாளர்களுடைய (பாவிகளுடைய) தோலினால் செய்யப்பட்ட தவிலினை அடித்துப் பறவைகளைப் பிடிக்கின்ற குறவனும் நானே என்று பாடப்பட்டுள்ளது.

திருநீறு பூசாதவர்களை எப்படி எப்படியெல்லாம் வன்முறைக்கு ஆட்படுத்த வேண்டும் என்று கூறுகிற குற்றாலக் குறவஞ்சிகூட சமய இலக்கியம்தானே! இதுதான் சமயம் காட்டும் நெறியா? அல்லது வெறியா?இதனைப் பள்ளிப் பாடத்தில்கூட வைத்தனர் என்பது எவ்வளவுப் பெரிய விபரீதம்? சமயம் காட்டும் இந்த வன்முறை இலக்கியம் இல்லாதொழியின் தமிழ் செத்து ஒழிந்து விடுமாம் -_ சொல்லுகிறார் தினமணியார்.

கம்பன் படம் பிடிக்கும் ஒழுக்கம்: அனுமனை இராவணனிடம் அகப் பட்ட சீதையிடம் தூது அனுப்புகிறான் இராமன். தன் மனைவி சீதை எப்படி எப்படியெல்லாம் இருப்பாள்? அவளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதுபற்றி இராமன், தூது செல்லும் குரங்காகிய அனுமனிடம் கம்பன் கூறும் காட்சி இதோ:

வாராழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள் தன் தாராழிக்கலைசார் அல்குல் தடங் கடற்கு உவமை தக்கோய் பாராழி பிடரில் தங்கும், பாந்தமும் பணி வென்றோங்கும் ஓராழித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன? இராமபிரான் சொல்கிறார் அனுமானிடம். தக்கவனே, என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் போன்றன! அல்குலோ, தடங்கடற்கு உவமை என்று.

உலகிலே உள்ள, எந்தப் பித்தனும் வெறியனுங்கூடத் தன் மனைவியின் கொங்கையையும் மறைவிடத்தையும், வேறொருவனிடம் வர்ணிக்கமாட்டான். அங்ஙனம் வர்ணிக்கும் கதாநாயகனை எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக் கவியும் சித்திரிக்கவில்லை. ஹோமர் முதற் கொண்டு பெர்னாட்ஷா வரையிலே எடுத்துப் பாருங்கள்! மதனகாமராஜன் கதை முதற்கொண்டு மன்மத விஜயம் என்பன போன்ற காமக்கூத்து ஏடுகளையும்கூடப் பாருங்கள் என்று கூறுகிறார் அறிஞர் அண்ணா.

(நூல் கம்பரசம்) : சீதையின் உள் உறுப்புகளைக் கண்டுபிடிக்கும் வேலையை பிரம்மச்சாரியாகிய அனுமனிடம் ஒப்படைக்கிறான் கணவனாகிய இராமன்! என்னதான் கற்பனைவளம், இலக்கிய ரசனை என்றாலும் இப்படியா?

இதுதான் சமய இலக்கியமா? இது தான் நல்லொழுக்கம் காட்டும் மார்க்கமா? ஆனால் தினமணி ஆசிரியர் கூறுகிறார். கம்பன் என்ற ஒருவன் இல்லாமல் போயிருந்தால் அல்லது அவரது சமய இலக்கியம் இல்லாமல் போயிருந்தால் தமிழ் என்றோ அழிந்திருக்கும் என்று பசப்புகிறார்.

ஆபாசமும், தீயொழுக்கமும் பார்ப்பனர் பண்பாடு என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த இரண்டும் அற்று ஒழிந்த இலக்கியத்தையோ, வழி காட்டுதலையோ பார்ப்பனர்களி டமிருந்து பெறவே முடியாது. கோயில் கோபுரங்களிலும் தேர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆபாசக் களஞ்சியங்களே இதற்குப் போதுமான எடுத்துக்காட்டு. இந்த அழுக்குச் சேற்றை தமிழ் இலக்கியங்களிலும் அப்பி அதன் முகத்தையே அருவருப்பானதாக ஆக்கி விட்டார்களே!

பக்தியின் பெயரால் எப்படி மக்களின் அறிவையும் பொருளையும் சுரண்டிக் கொழுத்தார்களோ, அதுபோலவே இலக்கிய ரசனை என்ற தேனைத் தடவி அதற்குள் ஆபாசத்தையும், அயோக்கியத்தனத்தையும் திணித்து, கடவுள்களே ஆபாச லீலைகளைச் செய்தன என்று இதமாக எடுத்துச் சொல்லி, நம் மக்களைக் சாக்கடையில் உருட்டி விட்டனர். தமிழ் இலக்கியங்களை அருவருப்பான அநாகரிகக் குட்டைக்குள் மூழ்கச் செய்தனரே! அருவருப்பை அற்புதம் என்றனர்; ஆபாசத்தை அடேயப்பா தேவாமிர்தம்! என்றனர். அறியாமையை அடுத்த மோட்ச லோகத்திற்கு அழைத்துச் செல்லும் அனுமதிச் சீட்டு என்று ஆர்ப்பரித்தனர்.

நன்றி: விடுதலை இதழ்.

தமிழர்களின் துரோகிகள் யார்?? யார்?? அடையாளம் காணப்படவேண்டும்: வைகோ.

தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து, தமிழீழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஈழத் தமிழர் என்ற போர்வையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழீழ மக்களின் துயரமும் தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கை வன்னியன்களும், கருணாக்களும், தொடர்ந்து துரோகம் இழைப்பவர்களும் தமிழீழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும். சோனியா காந்தி இயக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயுதங்களும் ஆயிரமாயிரம் கோடிப் பணமும் கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி, தமிழர் அழிப்பு யுத்தத்தை இயக்கியது மன்னிக்க முடியாத கொடிய துரோகம்.

லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி, 2010 டிசம்பர் 30-ல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள், தமிழர் நெஞ்சில் நெருப்பைப் போட்டு துடிக்கச் செய்கின்றன. பிரித்தானியத் தமிழர்கள் கொட்டும் பனியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ராஜபக்ஷேவை லண்டனை விட்டு ஓடச் செய்தனர். உலகின் மனச்சாட்சி இப்பொழுதுதான் தமிழர் துயரத்தை உணரத் தொடங்கி உள்ளது. இச்சூழலில், இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் தலைமை ஈழத் தமிழர்க்குச் செய்த துரோகத்தை மூடி மறைக்கவும், உண்மைகளைப் புதைக்குழிக்கு அனுப்பவும், பொய்ப் பிரசாரத்தை அவிழ்த்து விடவும், இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து, தமிழீழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளளனர். அத்துடன், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர். தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், இந்த மோசடி முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிக்கவும் மிக்க விழிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும்," வைகோ கூறியுள்ளார்.

அட!! உலகம் போற போக்க பாருங்க!!!


மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் குளிர்கால ஷாப்பிங்கை படு கேவலமா தொடங்கியுள்ளனர் அங்குள்ள டெசிகுவல் என்ற ஆடைவிற்பனை நிறுவனத்தினர். தனது நிறுவனக் கிளைகளில் முதல் நாள் விற்பனை இலவசம். முதலில் வரும் 100 பேருக்கு இந்த சலுகை. ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே. ஷாப்பிங் செய்ய வருவோர் பிரா மற்றும் ஜட்டி ஆகியவற்றை மட்டுமே அணிந்திருக்க வேண்டும். வேறு ஆடைகளுடன் வரக்கூடாது. அவ்வளவுதான் நூற்றுக் கணக்கானோர் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல், ஜட்டி பிரா மட்டும் அணிந்தபடி கடைகள் முன்பு குழுமி விட்டனர்.அவர்களில் முக்கால்வாசிப் பேர் இளம் பெண்கள், இளைஞர்கள்தான்.

ஜட்டி மட்டும் அணிந்து வந்த ஆண்களுக்கு ஒரு டீசர்ட், ஜீன்ஸ் இலவசமாக அனுமதிக்கப்பட்டது. பிரா, பேன்டீஸுடன் வந்த பெண்களுக்கு பிளவுஸ் அல்லது டீசர்ட், அதேபோல கால்சட்டை அல்லது மினி ஸ்கர்ட் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டன.
ஸ்பெயின் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. ஐரோப்பிய யூனியனிலேயே அதிக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்ச்சாதிபதி ஆகவேண்டுமா??? தேடுங்கள் இவர்களை.

புதுடெல்லி,ஜன.11:சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA) அறிவித்துள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தின் மூலம் கடந்த 2007ம் ஆண்டு மே18-ல் 68 பேர் பலியாக காரணமான சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஹிந்து பயங்கரவாதிகளின் பங்கு வெட்டவெளிச்சமானது.

அச்சமயத்தில் நடைபெற்ற அஜ்மீர், மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் பங்குகொண்ட தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோருக்கும் சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரியவந்தது. ஆகவே தலைமறைவான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அறிவித்துள்ளது.

முன்னதாக சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டுவரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் புதுடெல்லியிலுள்ள என்.ஐ.ஏ அலுவலக எண்ணை(1-29947020, 011-29947021) தொடர்பு கொள்ளவும்.

பணிப் பெண்ணை தாக்கிய எஜமானிக்கு 3 வருடம் சிறைத்தண்டனை.


தனது வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இந்தோனேசிய பெண்ணொருவரை மோசமாக தாக்கி, சூடுவைத்த சவூதி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மெதீனா நகர நீதிமன்றம் 3 வருட காலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான 23 வயது பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்தோனேசிய ஜனாதிபதி சுசீலோ மாம்பாங் தனது நாட்டு பிரஜைக்கு உடனடியாக நீதி வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் கடந்தவாரம் இப்பெண்ணின் எஜமானிக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி மெதீனா நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இவ்விடயம் தொடர்பில் சவூதி அரசாங்கம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தது. ஒ இவர்கள் பரவாயில்லையே நம்ம நாட்டில் பெரும் கலவரங்களை நடத்தி ஆயிர கணக்கில் மக்களை கொன்று குவித்த சங்கபரிவாரும் அதன் தலைவர்களும் சுதந்திரமாக நடமாட முடிக்றதே? நம் நீதிமான்கள் படம் படிப்பார்களா?.

என்று தனியும் இந்த ஜாதிய கொடுமை???

ஜன.11:பீகார் மாநிலத்தில் கோபால் குஞ்ச் மாவட்டத்தில் சீமா குமாரி என்ற ஆசிரியை ஓர் அரசுப் பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களாக 3 முதல் 12 வயது வரையுள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்து வருகிறார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இவரது வகுப்பறையில் இருக்கை கிடையாது. இவர் தரையில் அமர்ந்துதான் பாடங்களை நடத்துகிறார். "நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள். அதனால் எனக்கு இருக்கை தர மறுத்து விட்டார்கள். இந்தப் பாரபட்சத்தால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்" என்கிறார் இந்த அபலை ஆசிரியை.

அவர் இந்தப் பாரபட்சத்திற்கு எதிராக நீண்ட நெடிய போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த வருடம் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம், "வகுப்பறைகளில் மற்ற ஆசிரியர்கள் இருக்கைகளில் அமர அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். எனக்கு அந்த அனுமதியில்லை" என்று முறையிட்டார். இதற்கு தண்டனையாக சில நாட்களுக்கு அந்த அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் லால் தாரி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.ஆனால் பணிக்குத் திரும்பிய அந்தத் தலைமையாசிரியர் அதே நிலையைத்தான் மீண்டும் தொடர்கிறார். எந்த வருத்தமும் அவரிடம் தெரியவில்லை. "நாங்கள் இதனை விசாரிப்போம். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது" என்று கோபால்குஞ்ச் மாவட்ட கல்வி அதிகாரி டாக்டர் ராகேஷ் சௌத்ரி கூறியுள்ளார்.

Jan 10, 2011

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் & தினமலர் ஒரு சமூக பார்வை.


குஜராத் மாநிலம் சூரத்தில், "மகர சங்கராந்தி திருவிழா' தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எ ஸ்.எ ஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசுகிறார். இது ஜனவரி 10 தேதி தினமலரில் படத்துடன் வந்த செய்தி. இதுதான் தினமலரின் மத துவேச சிந்தனை.
இந்தியா முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் இருப்பதும், இவர்கள் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் 'தான்' இந்த குண்டு வெடிப்புகள் நடந்தது என்றும் நிருபிக்கபட்டு உள்ள இந்த சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை பற்றியோ, அல்லது அவர்களின் ஆணைபடி நடத்தபட்ட குண்டு வெடிப்புகள் பற்றியோ, எந்த செய்தியும் வெளியிடாமல் தினமலர் அமைதி காத்துவருகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாட்டை ஹிந்து மதத்தோடு தொடர்பு படுத்துவது போல் அவர்கள் 'தான்' ஹிந்து மதத்தின் ஒட்டு மொத்த பாதுகாவலர்கள் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்த இந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை ஏதோ ஹிந்து மத சாது போல சித்தரிக்கும் வேலையை செய்து வருகிறது தினமலர் நாளேடு. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரல் இந்தியா முழுவது ஒழிக்க துடங்கி இருக்கும் இந்த நிலையில் தினமலர் அமைதிகாப்பது பத்திரிகை தர்மம் இல்லை.

அதுபோல் இந்த செய்திகளை வெளியிடாத, இதுபற்றி பேசாத யாரும், எந்த அமைப்பும், எந்த கட்சியும் நடுநிலை தவறியவர்களே. அது மட்டும் அல்லாமல் இவர்கள் இப்படி செயல் படுவதன் மூலம் இந்த பாசிச பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகவே கருதபடுவர். அது மட்டும் அல்லாமல் இவர்களது தேசபக்தியை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு இவர்கள் உள்ளாக்க படுகிறார்கள். ஏன்? என்றால் இப்படி பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் பெரும் சவால் ஆகும். இதை சம்மந்த பட்டவர்கள் உணர்ந்து இது போன்ற செய்திகளை வெளிக்கொண்டு வருவது,அதை எதிர்ப்பது ஒவ்வொரு இந்தியன் மீதும் கடமையாகும். இவர்கள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தானவர்கள். இவர்கள் செய்யும் மத தீவிரவாதம் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் என்பதனை உணர்ந்து எல்லோரும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம். ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சு செடியை பிடுங்கி இந்தியா சிறப்பாக ஒளிர பாடுபடுவோம். மதசார்பின்மை காப்போம். வேற்றுமையில் ஒற்றுமை அதுவே இந்தியா!! என்று பெருமையோடு சொல்லுவோம். இதை செய்யவேண்டியது பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை.

அன்புடன் : ஆசிரியர் சிந்திக்கவும்.

போர்ப்படைக்கு உதவும்: "தேஜஸ்' முழு வெற்றி!!!

பெங்களூரு : இந்தியாவின் இலகு ரக விமானம் தேஜஸ், விமானப் படையிடம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த விமானம், போர்ப் படை பிரிவில் சேர்க்கப்பட உள்ளது. பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இணைந்து, 1983ம் ஆண்டு 560 கோடி ரூபாய் முதலீட்டில் தேஜஸ் இலகு ரக விமான வடிவமைப்பு திட்டம் துவங்கின. தற்போது 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இத்திட்டத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த விமானத்துக்கு, "தேஜஸ்' என பெயர் சூட்டினார். 98ம் ஆண்டு "பொக்ரான்' அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதால், அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக தேஜஸ் வடிவமைப்பில் பின்னடைவு ஏற்பட்டது.

குடிமகனே!! பெரும் குடிமகனே!!: ஒ போடு டாஸ்மாக்கு ஒ போடு!!


அன்று சில நூறு கடைகளை இருந்ததென்றால் இன்று பல்கிப் பெருகி 7,434 கடைகளாய் பெரும் ஆல விருட்சமாய் விரிந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். உலகெங்கும் பெப்சி கோக் கிடைப்பது போல தமிழகமெங்கும் டாஸ்மாக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நுகர்வு பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் விளம்பரம் செய்து விற்பனையை அதிகரிக்கும் நவீன யுகத்தில் டாஸ்மாக் மட்டும் எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் சக்கை போடு போடுகிறது.

தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், என்று எதை வேண்டுமானாலும் கணக்கெடுங்கள். நீங்கள் என்னதான் கணக்கெடுத்தாலும் அவை யாவும் டாஸ்மாக் சில்லறை அங்காடிகளின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. தமிழகத்தில் அரசுப் பேருந்துகளும், மத்திய இரயில்வேயும் ஒரு நாளில் ஏற்றிச் செல்லும் பயணிகளை விட டாஸ்மாக்கிற்கு ஒரு நாளில் வந்து போகும் குடிமக்கள் மிகவும் அதிகம். இந்தியாவின் பிளாக்பஸ்டர் என்று சாதனையாக காட்டப்படும் எந்திரன் படத்தின் வருவாயெல்லாம் டாஸ்மாக்கின் ஒரு நாள் வசூலோடு போட்டி போட முடியாது.

டாஸ்மாக் அங்காடிகள் மூலம் கடந்த 2010ஆம் ஆண்டு மட்டும் 16, 445 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்திருக்கிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 2,464 கோடி ரூபாய் அதிகமாகும். சராசரியாக கணக்கிட்டால் மாதம் ஒன்றுக்கு 200 கோடி, நாள் ஒன்றுக்கு ஏழு கோடி ரூபாய் சென்ற ஆண்டை விட அதிகம் வருகிறது. தற்போது தினந்தோறும் 1.26 லட்சம் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானப் (IMFL) பெட்டிகள் விற்பனையாகிறது. ஒரு கேஸ் 12 பாட்டில்கள் வீதம் 57,000 கேஸ் பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன.
இன்னும் சாதனை படைக்கும் டாஸ்மாக்கின் புள்ளிவிவரங்களை பாருங்கள். அலுவலக நாட்களில் சராசரி விற்பனை 45 கோடி என்றால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அது 53 கோடியாக இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு எட்டாயிரம் கோடி ரூபாயாக இருந்தது இன்று இரண்டு மடங்கு அதிகமாயிருக்கிறது என்றால் பாருங்களேன்.

தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கைதுசெய்க: PFI.

பெங்களூர்,ஜன.10:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்டு சுவாமி அஸிமானந்தா வாக்குமூலம் அளித்துள்ள சூழலில் புலனாய்வு ஏஜன்சிகள் இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாத சக்தியான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களுடைய பங்கினை வெளிக்கொணர்ந்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

சுவாமி அஸிமானந்தாவின் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் சமீபத்தில் இந்தியாவில் நடந்த மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர்களின் பங்கினை நிரூபித்துள்ளது.
இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை ஒரு கும்பலை வழிநடத்தியதுடன், அதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் ஸின் மூத்தத் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் ஒப்படைத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் புலனாய்வு ஏஜன்சிகள், இதுவரை இந்திரேஷ் குமாரை கைது செய்யாததுடன், இந்தியாவுக்கு எதிரான குண்டுவெடிப்பு சதித்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பங்கினைக் குறித்து வெளிப்படுத்தவும் தயாராக இல்லை.
மத்திய அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து விசாரணை மேற்கொள்வதுடன், இவ்வழக்குகளில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்து அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.

மேலும் இவ்விவகாரத்தில் மனதை உறுத்தும் உண்மை என்னவெனில் தற்போது உண்மை வெளிக் கொணரப்பட்ட சூழலிலும் குண்டுவெடிப்புகளில் வழக்குகள் ஜோடிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தற்பொழுது சிறைலிடைக்கப்பட்டோ அல்லது வழக்குகள் வாபஸ் பெறப்படாத சூழலிலோ உள்ளனர். நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்ததற்கு பதிலாக குண்டுவெடிப்புகளில் உண்மையான குற்றவாளிகளை கைதுச் செய்ய போலீஸ் துணிந்திருந்தால் ஏராளமான குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானது தடுக்கப்பட்டிருக்கும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் மற்றும் அந்த இயக்கத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கீழிலிருந்து மேல்மட்டம் வரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுதான் இந்திய சமூகத்தின் விருப்பமாகும். இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை பெற்றுகொள்ளவேண்டுமா? இதைப்படியுங்கள்!!.


ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். குழந்தை பெற்று கொள்வதற்கு சில அறிய ஆலோசனைகள்.

1) ஆரோக்கியமாக இருங்கள் :முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.

2) சரியான விதத்தில் சாப்பிடுங்கள்: மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

3) உடல் பயிற்சி: அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

4) சரியான நேரம்: ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.

5) பாலியல் அறிவு அவசியம்: படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.

6) உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்: கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

ஈரான் விமான விபத்தில் 72 பேர் பலி.

தெஹ்ரான், ஜன.10: ஈரானின் போயிங் 727 விமானம் வடமேற்கு நகரம் ஒன்றில் அவசரமாகத் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக கீழே விழுந்து சிதறியதில் அதில் பயணம் செய்த 72 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். எதனால் அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது என்பது தெரிவிக்கப் படவில்லை. அந்த விமானம் ஒரு அசம்பாதவித்தை எதிர்கொள்ள நேரிட்டது என்று மட்டும் ஈரான் விமானப் போக்குவரத்துத் துறையின் செய்தித்தொடர்பாளர் அப்பாஸ் மொசயீபி தெரிவித்தார். இந்த விபத்தில் 2 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேர் உயிர் பிழைத்துள்ளனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் விமானத்தில் இருந்து நடந்து வெளியே வர முடிந்துள்ளது. சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அப்பாஸ் மொசயீபி தெரிவித்தார்.

Jan 9, 2011

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா ஆடுகளும் போய் கடைசியாக ஆட்டுச் சட்டை போட்ட ஓநாய் மட்டுமே மிஞ்சியது. இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்ட மேய்ப்பன் அதை மட்டுமாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கையில் எடுத்தானாம். அப்போது பார்த்து சட்டை நழுவிக் கீழே விழுது உள்ளே பதுங்கியிருந்த ஓநாய் அம்பலப்பட்டதாம்
மேலே சொன்ன அம்புலிமாமாக் கதையின் வில்லனான ஓநாயின் இருபத்தோராம் நூற்றாண்டுப் பதிப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதில் ஒரு சிறப்பான விசயமென்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் ஓநாய் எந்தக் காலத்திலும் மனிதச் சட்டை எதையும் அணிந்து கொள்ளவில்லை. அப்பட்டமாகத் தனது இந்து பாசிச செயல் திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டே அப்படியொரு சட்டையை அணிந்து கொண்டிருப்பதாக நம்மிடம் சொல்லியது. தாம் தேசபக்தர்கள் என்றும் நல்லவர்களென்றும் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்கள் நம்பினார்களோ இல்லையோ, இந்த அரசும் ஆளும் வர்க்கமும் மனதார நம்பியதோடு பரப்பவும் செய்தார்கள். கூடவே அது காட்டிய திசையிலெல்லாம் பாய்ந்து ஒநாயின் குற்றங்களுக்காக அப்பாவி ஆடுகளைப் பிடித்து ஓநாய் என்று அறிவித்ததோடு சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகராஷ்ட்டிர மாநிலம் மாலேகான் நகரின் முசுலீம்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தது. 2007ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதேயாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாக்கிஸ்தான் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் இரயிலில் குண்டுகள் வெடித்தன. அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் ஷெரீப் தர்காவிலும் குண்டுகள் வெடித்தன. மேலே குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள். ஒவ்வொரு முறை குண்டுகள் வெடிக்கும் போதும் பார்ப்பன இந்துமதவெறி தலைக்கேறிய முதலாளித்துவ ஊடகங்கள் எந்த யோசனையுமின்றி இசுலாமிய சமூகத்தை நோக்கி விரலை நீட்டின. அரசு தனது குண்டாந்தடிகளான போலீசு இராணுவத்தைக் கொண்டு இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிவளைத்தது. அதிகாரப்பூர்வமான முறையிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் சட்ட ரீதியிலும் சட்டத்திற்கு விரோதமான முறைகளிலும் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்தரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு முதலில் அவசரகதியில் விசாரணை நடத்தி சிமி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. மூன்று பேர் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தனர். தமது சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பழியையும் சுமக்கும் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த முசுலீம்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசு இதன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. 2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டார்கள்; 50 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கஸூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த நேரமாகும். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் அடக்கம் செய்வதற்குள் பார்ப்பன - முதலாளித்துவ ஊடகங்கள் விசாரணையை நடத்தி தீர்ப்பையும் எழுதி விட்டன. ஒட்டு மொத்தமாக பத்திரிகைகள் “இது பாகிஸ்தான் சதி” என்று முன்மொழிய, அமெரிக்காவும் ஆமாம் இது ஹூஜி மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் சதி என்று வழி மொழிந்தது. சம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது. இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.இந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது.

அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு, அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளைப் பயன்படுத்துவர். அசீமானந்தின் இந்த மனமாற்றம் அத்தனை லேசில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. நீதிமன்றக் காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப் பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், இதுமட்டுமே முழுமையான காரணமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், ஆர். எஸ். எஸ் ஒருவனுக்கு அளிக்கும் ஆரம்ப கட்டப் பயிற்சியே அவனது மனசாட்சியைக் கொன்று விட்டு மாஃபியா கும்பலின் பாணியில் உத்தரவுக்குக் கீழ்படியும் குணத்தை ஏற்படுத்தும் விதமாகத் தான் திட்டமிடப்பட்டுகிறது. ஆர்.எஸ்.எஸில் புதிதாக சேரும் எவரும் ஷாகா எனப்படும் அவர்களது தினசரி ஒருமணி நேர பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எங்காவது இரகசிய மைதானங்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் குறைவான கோயில்களிலோ கூடும் அவர்கள், முதலில் உடற்பயிற்சி செய்வார்கள். பின்னர் இந்துத்வ பாசிசக்கதைகளை பேசி பயிற்சி கொடுப்பார்கள்.
ஆர்.எஸ்.எஸ்இன் இந்த ஷாகா பயிற்சியானது பொதுவில் கேள்விக்கிடமற்ற கட்டுபாட்டையும், அடிமைத்தன சிந்தனையையும் உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகிறது. மேலும் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்க நடைமுறைகள் இந்த அடிமைத்தன உளவியலை மேலும் வலுவாக்குகிறது. ஆர். எஸ்.எஸ்ஸின் பயிற்சி முறைகள் நேரடியாக இத்தாலி பாசிஸ்ட் கட்சியிலிருந்து பெறப்பட்டது. இதற்காகவே பி.எஸ். மூஞ்சே எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் 1930களில் இத்தாலிக்குப் பயணித்து முசோலினியைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்த பாசிஸ்டு பயிற்சி முகாம்களை நேரடியாக கவனித்து அதன் அடிப்படையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டது. இந்துத்துவ இயக்கங்களுக்கு பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்ட் கட்சியோடிருந்த தொடர்புகள் பற்றிய மார்ஸியா கஸோலரி என்பரின் விரிவான ஆய்வுகளும் வேறு பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரான கோல்வல்கர் ஹிட்லரை ஆதர்ச நாயகனாகவே வழிபட்டுள்ளார். இது குறித்த அவரது புத்தகம் இன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.புதிதாக சேரும் சாதாரண உறுப்பினர்களையே இந்தளவுக்குத் தயாரிக்கிறார்கள் எனில் முழு நேர ஊழியர்களான ப்ரச்சாரக்குகளை எந்தளவுக்குத் தீவிரமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருப்பார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். தானும் தனது கூட்டாளிகளும் வைத்த குண்டுகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஏற்படுத்தாத குற்ற உணர்ச்சியை, அதனால் நாடெங்கும் கோடிக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் சுற்றிவளைக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட போது ஏற்படாத குற்ற உணர்ச்சியை, பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் இளைஞனின் நற்செயல்கள் ஏற்படுத்தியதென்று அசீமானந்த் குறிப்பிடுகிறார்.

இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உண்மையை முழுமையாக்கும் முக்கியமான விஷயங்கள் சன்ச்சல்குடா சிறைச்சாலைக்கு வெளியேயும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தற்போது தன்னோடு சதியில் ஈடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்திய பிரதேச மாநில பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர பிரச்சாரக்கான சந்தீப் டாங்கே, மூத்த ப்ரச்சாரக் ராம்ஜி, மேல் மட்ட உறுப்பினர் சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், பிரச்சாரக் தேவேந்திர குப்தா, பிஜேபி எம்.பி யோகி ஆதித்யானந், குஜராத் விவேகானந்த சேவா கேந்திரத்தின் பாரத்பாய், மாநில அமைப்பாளர் டாக்டர் அசோக், இன்னொரு முக்கிய பிரமுகர் லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, சாமியார் தயானந் பாண்டே ஆகிய பெயர்களை உதிர்த்திருக்கிறார்.

இதில் ஆர்.எஸ்.எஸ் மத்திய கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமார் தான் குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்ட சதிக்குழுவுக்கு வழிகாட்டும் தலைவராக செயல்பட்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றிய கீழ் மட்ட பயங்கரவாத அலகுகளுக்குத் தொடர்பாளராக சுனில் ஜோஷி இருந்துள்ளார். குறிப்பாக குஜராத் - பரோடா – பெஸ்ட் பேக்கரி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை சுனில் ஜோஷி தனது பொறுப்பில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர்கள் மாட்டிக் கொண்டால் இந்திரேஷ் குமாரும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களைக் கொன்று போடும் படி அசீமானந்த் ஜோஷியிடம் சொல்லியிருக்கிறார்.. அதற்கு சில தினங்களுக்குள் டிசம்பர் 2007ஆம் ஆண்டு ஜோஷி தனது சக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஆறு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் பெரியளவில் வெடித்து வருவதும், புலனாய்வுத் துறையினரின் விசாரணை ஒரு சங்கிலி போல் கீழ்மட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை நீண்டு வருவதையும் யூகித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது சொந்த உறுப்பினர்களையே கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கக் கூடும்.

அசீமானந்தின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அப்பாவி கலீமின் நன்னடத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி ஒரு காரணமென்றால், ஜோஷியின் படுகொலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மனக்கிலேசமும் முக்கியமான பங்காற்றியிருக்க வேண்டும். அசீமானந்தின் ஷாப்ரிதம் ஆஷ்ரமிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் தொடங்கி இன்னாள் தலைவர் மோகன் பாகவத் வரை பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

தெட்டத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இப்போது கிடைத்துள்ள நிலையிலும் இது வரை இந்த அரசு அதன் மேல் ஒரு சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது பாரதிய ஜனதா ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமென்வெல்த் உள்ளிட்ட ஊழல்களைக் குறித்து எழுப்பும் கூச்சலின் அளவைப் பொருத்து வாயை அடைப்பதற்கு மட்டும் பயன்படும்.

ஆனால், இந்த பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை காங்கிரசின் கைகளில் கொடுத்து விட்டு மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் அப்பாவி ஆடுகளின் வெகுளித்தனத்திற்கு ஒப்பானதாயிருக்கும். அந்த மந்தையின் மேப்பன் வேண்டுமானால் ஓநாய் புகுந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூடனாயிருக்கலாம் – ஆனால், காங்கிரசு அப்பாவியும் அல்ல மூடனும் அல்ல. தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் தனது லட்சியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் வளங்களைத் திறந்து விடும் நடைமுறைக்கும் பாரதிய ஜனதாவாவும் வெகுவாக உதவுகிறதுஎன்பதால் பார்ப்பன பயங்கரவாதிகளின் எந்தச் செயலும் மன்னிக்கப்பட்டு விடும்.

இத்தனை நாட்களாக தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை ஒட்டி பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத், வனவாசி கல்யாண் ஆஷ்ரம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பரிவார அமைப்புகளின் பெயர்கள் அம்பலப்பட்ட போதும், குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொண்டதைப் போல இந்த பெயர்களைத் தனித் தனியே உச்சரித்து வந்தன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால், ஆக்டோபஸின் கரங்கள் தனித்தனியே இயங்கினாலும் அதன் மூளை ஒன்றாக இருப்பதை போல, இந்த அமைப்புகளின் மூளையாகவும், மைய்யமாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது..சாதாரணமாக குண்டுவெடிப்புகள் என்றால் உடனே அப்பாவி இசுலாமிய மக்கள் கைது செய்யப்படுவதும், பாக் சதி என்று ஊடகங்கள் கதை பின்னுவதுமான நாட்டில் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகள் இத்தனை ஆதரங்களோடு வெளிப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டுமென்றோ, அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படவேண்டுமென்றோ யாரும் பேசுவதைக்கூட நாம் கேட்க முடிவதில்லை. காரணம் இந்து மதவெறி பயங்கரவாதம் என்பது இந்த நாட்டின் அமைப்பு முறையின் ஆசிர்வாதத்தோடு செயல்படுகிறது என்பதால் அதை எவரும் கண்டு கொள்வதில்லை.

ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்.

நன்றி: வினவு.