Jan 8, 2011

ஹிந்துத்துவா சங்கபரிவார் தடை செய்யப்படுமா??? ஒரு சமூக அக்கறை குரல்.

திருவனந்தபுரம்,ஜன.9: தேசத்தை நடுங்கச் செய்த ஏராளமான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ், சிவசேனை, பஜ்ராங்க்தல், இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிசத்,ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார் அமைப்புகள்தான் என்பதை நீதிமன்றம் கண்டறிந்த சூழலில் தேசத்துரோக, நாச வேலைகளில் ஈடுபடும் சங்க்பரிவார அமைப்புகளை தடைச்செய்ய வேண்டுமென மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஷ்ட்ரீய சுயம் சேவக் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் உருவாகி 85 ஆண்டுகள் நிறைவுறுகிறது. 3 முறை தேசிய அளவில் தடைச் செய்யப்பட்ட இவ்வமைப்பின் அஸ்திவாரமே வெறுப்பின் மீதுதான் போடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகியுள்ள சூழலில் அவற்றின் மறைவில் வேண்டுமென்றே கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கிய முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமெனவும், அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச்செய்ய வேண்டுமென காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரே கூறியிருப்பது தேசத்தின் பாதுகாப்பில் கவலைக் கொண்டவர்களுக்கு ஆறுதலை தருகிறது.
ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த அமைப்புகளை தடைச் செய்வதற்கு காலதாமதம் செய்யக்கூடாது. நீதிமன்றத்தின் முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள கொடிய பயங்கரவாதியான சுவாமி அஸிமானந்தாவின் பெயரை மாற்றி 'ஆஸிஃப் கஸ்மானி' என்ற முஸ்லிம் பெயரை சூட்டி சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் விசாரணையை திசை திருப்பிய வெளிநாட்டு சக்திகளைக் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

குஜராத்தை மையமாக வைத்து செயல்படும் கேரள மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயரின் கேரள மாநில செயல்பாடுகளைக் குறித்து விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.
சுரேஷ்நாயரை 'நய்யார்' என மாற்றி விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தவேண்டும். காவி பயங்கரவாதத்திற்கு உத்வேகமளித்துக் கொண்டிருக்கும் மலையாள சினிமாத் துறையில் செயல்படும் பிரமுகர்களின் பொருளாதார பின்னணியைக் குறித்து விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்களான பேராசிரியர் டி.பி.விஜயகுமார், டாக்டர் பீம்ஜெயராஜ், ரமேஷ் நன்மண்டா, டாக்டர்.எஸ்.எம். ஜெயப்பிரகாஷ், கஃபூர், முகுந்தன், பேராசிரியர் ராஜூ தாமஸ், ஜாஃபர்,வழக்கறிஞர் பி.ஆர்.சுரேஷ், பேராசிரியர் பஷீர், வழக்கறிஞர் எஸ்.பிரகலாதன், டாக்டர் உஸ்மான், வழக்கறிஞர் டி.எஸ்.ஜோஷி, அஷ்ரஃப், டாக்டர்.பி.கே.சுகுமாரன், வழக்கறிஞர் எ.ஜெயராம், வழக்கறிஞர் கெ.சுபாஷ் சந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

செய்தி: நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

புற்றுநோய் பாதிப்புகளை தடுக்க "வாக்கிங்'!!!

வாஷிங்டன் : "புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு வாக்கிங்' செய்தால், மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும்' என, புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால், இதய நோய் பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் அனைத்து வகையான புற்றுநோய் பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன என தெரிகிறது. இதுகுறித்து வாஷிங்டன் பல்கலை பேராசிரியர் கத்லீன் வோலின் கூறியதாவது: ஆய்வில் பங்கேற்ற பலர்,கடந்த 10 ஆண்டுகளாக தினமும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் காணப்பட்டனர். தீவிர உடற்பயிற்சியால், பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து நமது உடலை பாதுகாக்க முடியும். புற்றுநோய்,இதய நோய்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், உடனே மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும். அனைவரும் இதை கடைபிக்க வேண்டும். இவ்வாறு கத்லீன் கூறினார்.

இளம்பெண்ணின் மீது ஆசிட் வீச்சு: ஹிந்த்துதுவா காலிகள் அராஜகம்.

பத்தணம்திட்டா,ஜன.9:கேரள மாநிலம் பத்தணம் திட்டா மாவட்டத்தில் முளகுளா என்ற இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அஞ்சலி கிருஷ்ணா(வயது 22) என்ற பெண்ணின் பா.ஜ.க தலைவர் வி.எஸ்.பிஜு என்பவரின் அடியாட்கள் பைக்கில் வந்து ஆசிட் வீசினர். இதில் கடுமையாக காயமடைந்த அவர் கவலைக்கிடமான சூழலில் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை(8/01/2011) ஒன்பதரை மணிக்கு பைக்கில் வந்த இரு கூலிபடை இளைஞர்கள் அஞ்சலியின் வீட்டில் போன் செய்து ஒரு பார்ஸல் கொரியரில் வந்திருப்பதாகவும், வீடு தெரியாததால் வெளியே வந்து நிற்கவும் என கூறியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வந்த அஞ்சலியின் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளனர்.இதனால் கடுமையாக காயமடைந்த அஞ்சலி மருத்தவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். ஆசிரியராக பணிபுரிந்துவரும் அஞ்சலிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்கவிருப்பது குறிப்பிட தக்கது. இதுத் தொடர்பாக அப்பகுதி போலீசார் உடனடியாக இந்த அக்கிரம செயலுக்கு காரணமான உள்ளூர் பா.ஜ.க தலைவர் வி.எஸ்.பிஜு என்பவர் மீது வழக்கு பதிவுச் செய்துள்ளனர். கடந்த பஞ்சாயத்து தேர்தலில் இவர் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டார். இதுதான் வர்ணாசிரம ஹிந்த்துவாவோ கொள்கையோ!!!

சட்டப்பேரவை தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியல்.

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 50 ஆயிரம் இடங்களில் வெளியிடப்படுகிறது. புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். தமிழகம் முழுவதும¢ ஜனவரி 1ம் தேதியை தகுதி அடிப்படை நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை இருந்தால், அவற்றிற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நவம்பர் 13ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்ட பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடந்தன. இங்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதுடன், புதிய விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இதில் ஏராளமானோர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாதுகாப்பு பட்ஜெட்டை குறைக்கும் அமெரிக்கா.

வாஷிங்டன்,ஜன.8:கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா பாதுகாப்பு பட்ஜெட்டை பெருமளவில் குறைக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 7800 கோடி டாலர் குறைக்க தீர்மானித்ததாக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. தரைப்படை, கப்பற்படை ஆகியவற்றில் படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கோடிக்கணக்கான டாலரை செலவுச் செய்த அமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே முதன்முறையாக பாதுகாப்புச் செலவை வெட்டிக் குறைத்துள்ளது.

எல்லாத் துறைகளிலும் செலவை குறைக்கும் ஒரு பகுதியாகத்தான் பாதுகாப்புத்துறையிலும் செலவு குறைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவிக்கிறார்.
மிக அத்தியாவசியமான காரியங்களில் மட்டும் பாதுகாப்புச் செலவை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் அமெரிக்கா நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என ராப்டர்கேட்ஸ் தெரிவிக்கிறார்.

2015 ஆம் ஆண்டு தரைப்படை, கப்பற்படை வீரர்களில் 45 ஆயிரம் பேரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 கோடி டாலர் மிச்சமாகும். அதேவேளையில், விமானப்படையில் 3400 கோடி டாலர் செலவுக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இரண்டாக செயல்படும் ஏர் ஆபரேசன் மையங்கள் ஒன்றாக்கப்படும். அடுத்த ஐந்து வருடங்களில் தரைப்படையில் 2900 கோடி டாலரும், கப்பற்படையில் 3500 கோடி டாலரும் செலவுக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிச்சையடுத்து கொண்டிருந்தவரை கோடீஸ்வரர் ஆக்கிய யூடியூப்.

தெருவோரம் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது ஒரு 97 செக்கன் கொண்ட ஒரு யூடியூப் வீடியோ. அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் டெட் வில்லியம்ஸ். இவர் முன்னர் அறிவிப்பாளராக இருந்தவர். மது,மாது என சீரழிந்து போனதால் 10 ஆண்டுகளாக தெருவில் பிச்சையெடுத்து வந்தார். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை 'குரல்' அவருடைய உள்மனதில் திடீரென ஒலிக்கத்தொடங்க, தெருவில் சென்று வரும் கார்காரர்களிடம், தனது குரலால் வானொலி அறிவிப்புக்கள் போன்றும், சில நேரங்களில் வேத வசனங்கள் கூறியும் வசீகரிக்க தொடங்கினார். இதற்காக ஒருவரிடம் ஒரு அமெரிக்க டாலருக்கு மேல் வசூலிப்பதில்லை எனவும் முடிவெடுத்தார்.

கொலம்பஸை சேர்ந்த, வெப் புரொடியூசரான டோரல் செனேவெத், தனது மனைவியுடன் அத்தெரு வழியாக ஒரு நாள் செல்கையில் டெட் வில்லியம்ஸின் அசாதாரண தங்க குரலை கேட்க முடிந்தது. 80,90 களில் வானொலி அறிவிப்புக்களில் ரசிகர்களை மூழ்கடிக்கும் திறன் பலருக்கு இருந்தது. வில்லியம்ஸிடம் இப்படி ஒரு திறமை இருப்பதாக நம்பிய செனேவெத் அவரை பற்றி விசாரிப்பதற்குள் சிக்னலில் பச்சை நிறம் காட்ட, தன்னிடமிருந்த ஒரு டாலரை வில்லியம்ஸின் கைகளுக்கு வீசிவிட்டு, புறப்பட்டு விட்டார். ஆனால் அந்த குரல் மனதுக்குள் ஏதோ செய்துகொண்டே இருக்க அடுத்த முறை தன் கமெராவையும் கொண்டு சென்று, 'எங்கே உங்கள் 'தங்க' குரலால் இரு வார்த்தைகள் கூறுங்கள்' என வில்லியம்ஸை படம்பிடித்து யூடியூப்பில் அப்லோட் செய்ய, இரண்டு வாரம் தான், மூன்று மில்லியனை தொட்டு நிற்கிறது அந்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை. இவ்வளவு பேர் பார்த்த ஒருவர் என்றால் சும்மாவா? அமெரிக்க் பிரபல க்ளிவ்லாண்ட் கவாலியர் விளையாட்டு குழுமம் உடனடியாக வில்லியம்ஸை அழைத்து, தனது வானொலிச்சேவையின் அறிவிப்பாளராக முழு நேர வேலை கொடுத்து, வீடும் கொடுத்தது. இதோ இன்றைய தேதிக்கு உலகின் பிரபல செய்தி தளங்களும், செய்தி அறிவிப்பாளர்களும் வில்லியமின் குரலை கேட்கவும், அவரை ஒரு முறையாவது நேரடியாக பேட்டி எடுக்கவேண்டுமெனவும் போட்டி போட்டு நிற்கின்றன.

தொழிலாளர்களின் ரத்தத்தில் உருவாக்கப்பட்ட உலகம்.

உலோகம் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? நாம் பயணிக்கும் பேருந்து அல்லது இரயில், தார்ச்சாலை அல்லது தண்டவாளங்கள், அதன் மேல் வாகனங்களை நகர்த்தும் எரிபொருள், கட்டிடங்களையும் பாலங்களையும் உயர்த்திப் பிடிக்கும் இரும்புக் கம்பிகள்… சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள்…. மொத்த உலகின் நாகரீகமும் ஒரு நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும். நாம் கற்களை வைத்துக் கொண்டு மிருகங்களைத் துரத்திக் கொண்டிருப்போம்.

வரலாறு நெடுக மனித உழைப்பு மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் விண் முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும். உலகின் எங்கோவொரு மூலையிலிருக்கும் சுரங்கத்தின் ஏதோவொரு குறுகிய பொந்துக்குள் பிராணவாயுவைக் கோரி விம்மும் நுரையீரலுக்கு கந்தகத்தின் நெடியை சுவாசமாய் அளித்துக் கொண்டு இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, புற்றுநோயை சம்பளமாகவும் மரணத்தை போனசாகவும் பெற்றுக் கொண்டு ஏதோவொரு முகம் தெரியாத தொழிலாளி வெட்டியெடுத்து அனுப்பும் நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தருகின்ற வெளிச்சமே நமது இரவுகளை ஒளிரவைக்கிறது.

உலகளவில் அரசினால் பதிவு செய்யப்பட்ட கணக்குகளின் படியே சராசரியாக 1,200 தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். விபத்துகள்’ என்று சொல்லப்பட்டாலும் இவை சாராம்சத்தில் திட்டமிட்ட படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். தமது லாபவெறிக்காக அத்தியாவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட வேண்டுமென்றே புறக்கணித்து, அதன் காரணமாக ஏற்படுத்தப்படும் சாவுகளை வேறு எந்தப் பெயரிட்டு அழைப்பது? ஆபத்துகளைத் தவிர்க்கச் செய்யப்படும் பாதுகாப்புச் செலவினங்களால் வெட்டியெடுக்கப்படும் கனிமங்களுக்கான லாபம் குறைவதால் அமெரிக்கா போன்ற நாடுகள் மூலப்பொருட்களை தங்களது நாடுகளில் இருந்து எடுக்காமல் இதை அந்நிய நாடுகளில் இருந்து இருக்குமதி செய்கின்றன. என்று தானியுமோ இந்த தொழிலாளர்களை சுரண்டும் நிலை.

அயோத்தியா தீர்ப்பு: இந்து பாசிச அரசியலுக்கு சட்டரீதியான அங்கீகாரம்!!!


அலகாபாத் தீர்ப்புக்கு முன் இந்துக்களின் நம்பிக்கையாக மட்டுமே இருந்த இராமஜென்மபூமி, இன்று சட்ட அங்கீகாரம் பெற்று விட்டதாகவும், இத்தீர்ப்பின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் புதியதொரு அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார் அத்வானி. “இதுதான் இராமன் பிறந்த இடம் என்று நிரூபிக்கும் பட்சத்தில், அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிடுவதாக வக்பு வாரியம் ஏற்கெனவே கூறியிருந்தது. இதோ இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடைய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. வக்பு வாரியம் தனது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும். அந்த இடத்தின் மீதான தனது கோரிக்கையைக் கைவிட வேண்டும்” என்று மிரட்டியிருக்கிறார் தொகாடியா.

“அயோத்தியில் இராமனுக்கு பிரம்மாண்டமானதொரு ஆலயம் அமைக்கும் பணியில் இந்துக்களுடன் கைகோர்த்து நிற்க முஸ்லிம்கள் முன்வரவேண்டும். இரு சமூகங்களும் இணைந்து வலிமையான இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்குக் கிடைத்திருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியத்துக்கு அடிபணிந்து விடுமாறு அறிவுரை கூறியிருக்கிறார் அசோக் சிங்கால்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது ஒதுக்கியிருக்கும் மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் இந்துக்களிடம் ஒப்படைத்து விடவேண்டுமாம். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாதாம். இசுலாமிய மக்களின் உள்ளத்தில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் காயத்தின்மீது உப்பை வைத்துத் தேய்த்துக் கொண்டே, பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது இந்து மதவெறிக் கும்பல். “சுமுகமான தீர்வு வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இயலும்” என்று பா.ஜ.க வின் கருத்தையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் காங்கிரசு கட்சியின் சத்யவிரத சதுர்வேதி. 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மசூதியை மீண்டும் கட்டித்தரவேண்டும் என்று கூறிய திமுக, இன்று இத்தீர்ப்பை விமரிசித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

“தீர்ப்பினால் மகிழ்ச்சியடைந்தோரும் சரி, ஏமாற்றமடைந்தோரும் சரி இதனைத் தெருவுக்குக் கொண்டு செல்லக்கூடாது. தீர்ப்பு யாருக்கேனும் திருப்தி அளிக்கவில்லையென்றால், அவர்கள் மேல் முறையீடு செய்யலாம்” என்றிருக்கிறார் வலது கம்யூ கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா. “நமது மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பில், பிரச்சினையைத் தீர்த்துக் கொள்தற்கான ஒரே வழி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாகத்தான் இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறது மார்க்சிஸ்டு கம்யூ கட்சி. மொத்தத்தில் எந்த ஓட்டுக் கட்சியும் இத்தீர்ப்பினை அரசியல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ விமரிசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதியை சட்டப்படி கூற வேண்டிய நீதி மன்றங்கள் இதை ஒரு மத நம்பிக்கையில் கட்ட பஞ்சாயாத்து தீர்பாகவே கூறி இருகின்றன. இதற்க்கு எதற்கு நீதிபதிகள்? இந்த நீதியை படிக்க எதற்கு சட்ட கல்லூரிகள்? இவர்களுக்கு சட்டம் படிக்க காஞ்சி சங்கரா மடமே போதுமே!! சங்கரா மடத்தில் ஹிந்துத்துவா, வர்ணாசிரம சட்டம் படித்து இதைவிட தெளிவாக தீர்ப்பு சொல்ல வசதியாக இருக்குமே.

நன்றி: வினவு, தோழர் மருதையன்.

வெங்காய பதுக்கலா? அதிரடி சோதனை.

சென்னை: கறுப்புப் பண பதுக்கலையே மிஞ்சிவிட்டது வெங்காய பதுக்கல் சமாச்சாரம். தமிழகம் முழுவதும் காய்கறி வியாபாரிகள் வீடு மற்றும் கடைகளை அதிரடியாக சோதனையிட்டு வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்தனர் வருமான வரித்துறையினர். "காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், காய்கறவியாபாரிகள் பெருமளவு லாபம் ஈட்டி வருவதாக வந்த தகவலை அடுத்து வருமானவரித்துறை சென்னை, பொள்ளாச்சி, திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் வருமானவரி சோதனைகளை நடத்தியது. 10 பெரிய காய்கறி வர்த்தகர்களிடம் சோதனை நடத்தப்பட்டதோடு, அவர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையையும் மேற்கொண்டனர். குறிப்பாக, அண்மையில் காய்கறி விலை உயர்ந்தபின் அவர்களுக்கு கிடைத்த லாபம், அவர்கள் போட்ட முதலீடு பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

இதய அறுவை சிகிச்சை!!!

இதயத்திலுள்ள சிறு சிறு ரத்த நாளங்களில் பழுது ஏற்பட்டால் ஆஞ்சியோ ப்ளாஸ்டி சர்ஜரியும், முக்கியமான ரத்தக் குழாயில் பழுது என்றால் பை பாஸ் சர்ஜரியும் செய்யப்படுகிறது. பை பாஸ் என்பது ரத்தக் குழாயின் அந்த பகுதிக்குப் பதிலாக மற்றொரு புது ரத்தப் பாதையை உருவாக்குவதாகும். நோயாளியின் உடலிலிருந்து (கால் பகுதி) ரத்தக் குழாயை அங்கு வைத்து மாற்றுப் பாதையை அடைப்பதுதான் பை_பாஸ் சர்ஜரி. பை பாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் அப்பிரச்னை வருவது அரிது.

ஆனால், ஆஞ்ஜியோ ப்ளாஸ்டியில் சுமார் இருபது சதவிகிதம் பேருக்குச் சரிசெய்யப்பட்ட இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்குக் காரணம் கொழுப்பு சத்தோடு ஸ்கார் திசுக்களும் சேர்ந்துதான் அந்த அடைப்புக்குக் காரணமாக இருந்திருக்கும். கொழுப்புச் சத்தை நீக்கினாலும் ஸ்கார் திசுக்கள் அங்கேயே இருக்க வாய்ப்புண்டு. மறுபடியும் அங்கு கொழுப்புச்சத்து சேரும் போது மீண்டும் அடைப்பு ஏற்படலாம். இதற்காக ஒரு ஸ்பெஷல் இரும்பினால் ஆன வலை ஒன்றை இந்த அடைப்பு இடத்தில் பொருத்தி விட்டால், ரத்தக்குழாய் சுருங்க வாய்ப்பு இல்லை. நாளடைவில் இந்த வலை உடலோடு ஒன்றிவிடும்.

எய்ட்ஸ் நோய்க்கு புதிய மருந்து!!!

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது பெண் குரங்குகள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 3 கோடியே 30 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோய்க்கு 2 கோடியே 50 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். எனவே இந்த நோயை குணப்படுத்த பல மருந்து களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர்.

எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் பாதித்த பெண்களிடம் பயன்படுத்தப்பட்டது. 39 சதவீதம் நோய் குணமானது. இந்த சோதனையை அமெரிக்க விஞ்ஞானிகள் தேசிய புற்று நோய் நிறு வனத்துடன் இணைந்து நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது. விலை குறைவானது. எனவே இந்த மருந்து எய்ட்ஸ் நோயா ளிகளுக்கு வரபிரசாதமாக கிடைத்துள்ளது என நியூ யார்க் பொதுமக்கள் சபை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இராமன் தொடுத்த வழக்கு!! குரங்கு எழுதிய தீர்ப்பு!!!


பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”

பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது. செப், 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூரையிலும் நிச்சயமாக அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா மூன்றா என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுயசரிதை எழுதும்போதுதான் நமக்குத் தெரியவரும்.

“ஒரு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தமானது” என்று தீர்மானிப்பதற்கான உரிமை மூல வழக்கில், பட்டா பத்திரம் போன்ற சான்றாதாரங்களைச் சார்ந்து நிற்காமல், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால், அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தை இராமபிரானுக்குச் சொந்தமாக்குவதாகத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். ஒரு உரிமை மூல வழக்கில் மனுதாரரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சொத்துரிமை வழங்கமுடியுமா என்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எழுப்பப் படும் மையமான கேள்வி. மனுதாரரின் நம்பிக்கை கிடக்கட்டும். நீதிபதியின் நம்பிக்கைதான் 1986 தீர்ப்பையே தீர்மானித்திருக்கின்றது என்பதையல்லவோ குரங்கு கதை நமக்குக் காட்டுகிறது!

நன்றி: வினவு. நன்றி தோழர் மருதையன்.

Jan 7, 2011

ஜனவரி 8 இன்று ஆம்புலன்ஸ் தினம்.

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன.

சுவாமி அஸிமானந்தாவின் மனமாற்றம்!!!! பரபரப்பு ரிப்போர்ட்.

புதுடெல்லி,ஜன.8:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த சுவாமி அஸிமானந்தா, தான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததற்கு காரணம் இதே வழக்கில் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லிம் இளைஞருடனான நல்லுறவுதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அஸிமானந்தா இதுக்குறித்து கூறியதாவது: "நான் ஹைதராபாத்தில் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்படும்பொழுது சக கைதிகளில் ஒருவர் அப்துல் கலீம் என்பவராவார். சிறைக்குள்ளே வைத்து கலீம் எனக்கு நிறைய உதவிச் செய்துள்ளார். எனது பொருட்களை எடுத்து வைக்கவும், உணவு மற்றும் தண்ணீர் கொண்டு தந்ததும் கலீம் ஆவார். கலீம் போன்ற நிரபராதிகள் சிறையில் வாடுவதைக்கண்டு இவ்வழக்கில் பிராயசித்தம் செய்வதற்காக எனது மனசாட்டி என்னைத் தூண்டியது. அதனடிப்படையில்தான் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன் என அஸிமானந்தா கூறியுள்ளான்.

சுவாமி அஸிமானாந்தா பரபரப்பு வாக்குமூலம்!!!

புதுடெல்லி,ஜன.8:மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான். ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.

வாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.எவருடைய மிரட்டலோ, தூண்டுதலோ இல்லாமல் சுயமாகவே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதாக அஸிமானந்தா தெரிவித்துள்ளான். அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டும், ஸ்டெனோ கிராஃபர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் இருந்தனர்.

சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்: "இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம். ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார். ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன். குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன். பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.

2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டு வெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.

அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர் நாம் தான் மலேகானில் குண்டுவெடிப்பை
நிகழ்த்தினோம் என தெரிவித்தார். அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது. மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது." இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏவின் கஸ்டடியில் உள்ளார்.

அராஜக தீர்ப்பும் அதை எதிர்த்து மேல் முறையீடும்.

ராய்ப்பூர்,ஜன.8: தேசத்துரோகம் குற்றஞ்சாட்டி ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள்தண்டனையை குறித்து கேள்வி எழுப்பி மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென் சத்தீஷ்கர் மாநில உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.சென்னின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கபடவில்லை என அவருக்காக வழக்கறிஞர் மஹேந்திர துபே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சுட்டிகாட்டியுள்ளார். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பி.பி.வர்மா பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை தீர்ப்பளித்தார்.

இன அழிப்பு பயங்கரவாதம் குறித்து பயிற்சி கொடுக்கும் இலங்கை.

கொழும்பு : பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த யுக்திகளை, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ராணுவத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் வகை யில், சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்த, இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர், கடந்த 2009ல் முடிவுக்கு வந்தது. இதில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலும் அழித்து வெற்றி பெற்றதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது.

இந்நிலையில் தான் செய்த பயங்கரவாதத்தை அண்டை நாடுகளுக்கும் கற்று கொடுக்கும் நோக்கோடு விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான போரில்,கையாண்ட தீவிரவாத யுக்திகளை வெளிநாட்டு ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ள இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பயங்கரவாத சிறப்பு பயிற்சி முகாம் அடுத்த வாரம் துவங்க உள்ளது. இது குறித்து இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெகத் ஜெயசூர்யா கூறியதாவது: தங்களது இன அழிப்பு பயங்கரவாத ராணுவம் மேற்கொண்ட யுக்திகளை, வெளிநாட்டு ராணுவத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது என்று கூறினார்.

விலைவாசி உயர்வு பாதிக்கடும் ஏழை மக்கள்.

புதுடில்லி : காய்கறிகள், வெங்காயம் ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வு காரணமாக, உணவு பொருட்களுக்கான பணவீக்கம் 4 சதவீதம் அதிகரித்து, 18.32 சதவீதத்தை எட்டியுள்ளது. உணவு பொருட்களின் விலை, இப்படியே உயர்ந்து கொண்டிருந்தால், மத்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெங்காயத்தின் விலை உயர்வு தான், உணவு பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணம். இதனால் பணக்காரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை ஏழை எளிய மக்களே பாதிக்கபடுகின்றார்கள். செல்வந்தர்கள் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து விட்டு ஏதும் அறியாதது போல் இருகிறார்கள். இதன் மூலம் ஏழை மக்கள்ளே மிகவும் பாதிக்க படுகிறார்கள்.

தமிழகத்தில் ரூ. 33,020 கோடியில் புதிய மின் திட்டங்கள்.


சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை முற்றிலும் நீக்கும் வகையில் ரூ. 33,020 கோடியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் ரூபாய் 4,600 கோடி செலவில் 1200 மெகாவாட் அனல் மின் திட்டம், மேட்டூரில் ரூபாய் 3,100 கோடி செலவில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம், சென்னைக்கு அருகில் வல்லூரில் மத்திய அனல் மின் நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 9,000 கோடி செலவில் 1500 மெகாவாட் அனல் மின் திட்டம், தூத்துக்குடியில் ரூபாய் 4,909 கோடி செலவில் 1000 மெகாவாட் அனல் மின்திட்டம், உடன்குடியில் பாரத மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 9,000 கோடி செலவில் 1600 மெகாவாட் அனல் மின் திட்டம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

பவானி மற்றும் பெரியார் அணைகளில் ரூபாய் 1,285 கோடி செலவில் கூடுதலாக 93 மெகாவாட் புனல் மின் உற்பத்தி செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 12 கூட்டுறவு மற்றும் அரசு சர்க்கரை ஆலைகளில் ரூபாய் 1,126 கோடி முதலீட்டில் 183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.இதனால் 2012ல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கி உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியும் ஓர் தாய்!!!

ஜெர்மனியில் ஹோட்டல் ஒன்றின் வெளியே கிடந்த சூட்கேசில் அடைக்கப்பட்டு இருந்த பிறந்த ஒரு நாளே ஆன பச்சிளங் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. ஹம்பர்க் நகரில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே கேட்பாடற்று ஒரு சூட்கேஸ் கிடந்தது. இதை கவனித்த ஓட்டலின் பாதுகாவலர் ஒருவர் சூட்கேசை திறந்து பார்த்தார். அதில் துணிகள் இருந்ததால் ஓட்டல் லக்கேஜ் அறையில் வைத்தார்.

பின்னர் அந்த சூட்கேசில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கவே திறந்த பார்த்தபோது பாதுகாவலர் அதிர்ச்சியடைந்தார், அதில் பச்சிளங் குழந்தை ஒன்று இருந்தது. இதுபற்றி தகவலறிந்த பொலிஸார் அங்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதலுதவி சிகிச்சை அளித்த வைத்தியர்கள் அந்த குழந்தை 2.2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர். குழந்தையை அனாதையாக போட்டு விட்டு சென்ற தாயை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Jan 6, 2011

இந்தியாவின் கேடுகெட்ட தூதரக சேவை.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற நம் முன்னோர்களின் வாக்குப்படி இந்திய குடிமக்கள் வேலை மற்றும் வியாபாரம் விசயமாக உலகின் பல நாட்டிற்க்கும் சென்று பொருள்தேடி இந்தியாவிற்கு அந்நிய செலவாணி கொண்டு வந்து இந்தியாவின் பெருமையை பார் எங்கும் உயரச் செய்துவருகிறார்கள். இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து வருகின்றன. ஆனால் இந்திய தூதரக சேவை மிகவும் கேடுகட்ட நிலையில் செயல்பட்டு வருவதை வளை குடா நாடுகளில் வேலை செய்யும் இந்திய மக்கள் நன்றாக அறிந்தததே. இந்நிலையில் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இவர்களின் தூதரக சேவை மிகவும் தரம் கேட்டே இருக்கிறது. இதற்க்கு பல சம்பவங்களை சொல்லலாம்.

சமீபத்தில் இந்திய மக்கள் அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் இந்திய கேடுகெட்ட துரக சேவையை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்தியதை செய்திகளில் தெரிந்திருப்பீர்கள். இதை தொடர்ந்து இந்திய மக்கள் அதிகம் வாழும் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் இந்திய துரகமும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. இங்கு பாஸ்போர்ட் புதுபித்தல், மற்றும் பல்வேறு அலுவல் விசயங்களுக்கு போகும் மக்கள் அலைகழிக்க படுகிறார்கள். சான்பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் இந்திய தூதகரத்துக்கு வரும் மக்களை மரியாதை குறைவாக நடத்துவது, அவர்களை கடும் குளிரில் வாசலுக்கு வெளியே நிறுத்தி வைப்பது, பாஸ்போர்ட் புதுப்பித்தல், மற்றும் பணிகளுக்கு போகும் மக்களுக்கு அங்கு படிவங்கள் மறுக்கபடுவது, படிவம் கேட்டால் ஆன்லைனில் படிவம் தரவிறக்கம் செய்து நிரப்பி கொண்டுவாருங்கள் என்று சொல்வது. தூதரத்தில் இந்த படிவங்களை நிரப்ப வைக்கபட்டுள்ள கம்ப்யூட்டர் பழுதடைந்து நிலையில் இருப்பது ஆகியவை இவர்கள் சேவையை பறை சாற்றுகின்றன. தூதரகத்தை அணுகும் மக்களை கனிவோடு பேசாமல் அவர்களிடம் எரிந்து விழுவது இப்படி இவர்களின் சேவை உலகம் முழுவதும் நாறுகிறது. என்று திருந்துவார்களோ? தூதரகங்களை ஒழுங்காக நடத்த முடியாத இவர்கள் ஐநாவில் நிரந்தர உறுப்பினர் இடம் கேட்டு அலைவது கேவலமாக இருக்கிறது.

சீனாவின் அதிநவீன மாயாவி போர் விமானம்.

பெய்ஜிங்: ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா. இந்த விமானம் குறித்த படங்கள் சீன இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது தற்போது சோதனைக் கட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.

stealth எனப்படும் யார் கண்ணிலும் (ரேடார், சோனார், அகச்சிவப்பு கதிர்) படாமல் செயல்படும் தொழில்நுட்பம், 2வது உலகப் போரின்போதுதான் முதல் முறையாக நடைமுறைக்கு வந்தது. இத்தகைய தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானங்களை எதிரிகளால் கண்டுபிடிக்கவே முடியாது. இதனால் இவற்றுக்கு மாயாவி விமானங்கள் என்றும் செல்லப் பெயர் உண்டு. சீனாவின் அதிவேக வளர்ச்சியை இது நிரூபிப்பதாக அமையு்ம். ஏற்கனவே விண்வெளித்துறையிலும், ரயில்வே துறையிலும் மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது சீனா. இந்த நிலையில் மாயாவி போர்விமானங்களை அது வெற்றிகரமாக தயாரித்து விட்டால் மிகப் பெரிய வல்லரசாக அது உயரும். உலகிலேயே இப்போதைக்கு ஒரே ஒரு மாயாவி போர்விமானம்தான் செயல்பாட்டில் உள்ளது. அது அமெரிக்காவின் எப்-22 போர் விமானமாகும். அந்த விமானத்துக்குப் போட்டியாக சீனாவின் ஜே20 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது.

தெலுங்கானா பிரச்சனையும், ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையும்.


டெல்லி: தெலுங்கானா விவகாரத்தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.ஆனால், அந்த அறிக்கையில் எந்த உறுதியான தீர்வும் கூறப்படவில்லை.

பரிந்துரை 1: ஆந்திராவை பிரிக்காமல் ஐக்கிய ஆந்திராவாக தொடர்ந்து நீடிக்க வைக்கலாம். அதில் தெலுங்கானாவைச் சேர்ந்தவரை முதல்வர் அல்லது துணை முதல்வராக்கலாம்.

பரிந்துரை 2: ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம். இதில் ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திர மாநிலங்கள் இருக்கலாம். ஹைதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக்கிவிடலாம். இரு தனி மாநிலங்களுக்கும் தங்களுக்கென தனி தலைநகர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

பரிந்துரை 3: ஆந்திராவின் ராயலசீமா பகுதி மற்றும் தெலுங்கானாவை இணைத்து ராயல-தெலுங்கானாவை உருவாக்கலாம். கடலோர ஆந்திராவை தனி மாநிலமாக்கலாம்.
ஹைதராபாத்தை ராயல-தெலுங்கானா பகுதியோடு இணைக்கலாம்.

பரிந்துரை 4: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரித்துவிட்டு, ஹைதராபாத்தை மேலும் விரிவாக்கலாம். ஹைதராபாத்துடன் ஆந்திரா, தெலுங்கானாவின் மேலும் பல பகுதிகளை இணைத்து அதை தனி யூனியன் பிரதேசமாக்கலாம்.

பரிந்துரை 5: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரித்து அதில் ஹைதராபாத்தை தெலுங்கானாவின் தலைநகராக்கலாம். ஆந்திராவுக்கு தனி தலைநகரை உருவாக்கலாம்.

பரிந்துரை 6: ஆந்திராவை பிரிக்காமல் தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்கு தனி கவுன்சிலை உருவாக்கலாம்.

இவ்வாறு 6 பரிந்துரைகளை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி முன் வைத்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கூறுகையில், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை கால தாமதப்படுத்தத்தான் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. அந்த அறிக்கை விவரத்தை வெளியிடுவதை கூட இழுத்தடிக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்த வரையில் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி கவலை இல்லை. இன்னும் 20 நாளில் தெலுங்கானா தராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களை ஸ்தம்பிக்க செய்வோம்.காங்கிரஸ் தலைவர் சோனியா மனது வைத்தால் தனி மாநிலம் கிடைத்து விடும். அவர் தெலுங்கானா தர ஒப்புக்கொண்டால் அவரது பாதத்திற்கு பாலாபிஷேகம் செய்யத் தயார் என்றார்.

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

மாமன்னன் ராஜராஜன் ஆட்சி காலத்தில் பார்பனர்களுக்கு எல்லாவித சலுகைகளும் வழங்கப்பட்டன. இவர்கள் அந்த ஆட்சியில் ஏழை மக்களை தஞ்சை கோவில் பெயரை சொல்லி நன்றாக சுரண்டி கொழுத்தார்கள். பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

நன்றி : வினவு.

வங்கியில் நூதன கொள்ளை!!!

அர்ஜென்டினா : வங்கிக்கு அடியில் 30 மீட்டர் தூர சுரங்கப் பாதை தோண்டிய திருடர்கள், வங்கியில் 150 லாக்கர்களை கொள்ளையடித்து சென்றனர். அர்ஜென்டினாவில் அந்நாட்டு ஸ்டேட் வங்கிக் கிளை, பெய்னோஸ் ஏர்ஸ் நகரில் உள்ளது. பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள அந்த வங்கியை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு திங்களன்று அதிகாரிகள் திறந்தனர். உள்ளே பாதுகாப்பு அறைக்கு சென்றபோது, யாரும் உள்ளே வந்து சென்ற சுவடே தெரியாமல் 150 லாக்கர்கள் திறந்து கிடந்தன. அவற்றில் இருந்த பல கோடி பணம், நகைகள் கொள்ளை போயிருந்தன.

போலீசுக்கு புகார் போனது. அவர்கள் சோதனை நடத்தியதில் வங்கியின் முன்கதவோ, சுவர்களிலோ உடைத்ததற்கான அறிகுறி இல்லை. எனவே, துப்பு கிடைக்காமல் திணறினர். லாக்கர் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து யோசித்தனர். அப்போது ஒரு இடத்தில் நடக்கும்போது சத்தம் வித்தியாசப்பட்டது. உடனடியாக அந்த இடத்தை தோண்டினர். அங்கு பக்காவாக ஒருவர் நடமாடும் அளவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டு இருந்தது. அதில் இறங்கி போலீசார் நடந்தனர். கால் கி.மீ. தூரத்துக்கு மேல்(30 மீட்டர்) நடந்த பிறகே சுரங்கம் முடிந்தது. ஏறிப் பார்த்தபோது மற்றொரு கட்டிடத்துக்குள் இருந்தனர்.

அந்த கட்டிடம் வெறிச்சோடி காணப்பட்டது. விசாரித்ததில் கடந்த ஜூன் மாதத்தில் 3 பேர் அந்தக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தது தெரிய வந்தது. அப்போது முதல் 6 மாதங்களாக கட்டிடத்துக்குள் இருந்தபடி வங்கி வரை சுரங்கம் தோண்டி கொள்ளை அடித்தது தெரிய வந்தது. சுரங்கத்தின் முழு தூரத்திலும் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள், காற்றோட்டத்துக்கு மின் விசிறிகள், காற்றை வெளியேற்ற எக்சாஸ்ட் ஃபேன்கள் என்று கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தன.

அந்த 3 திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஸ்டேட் வங்கியில் உள்ள 1,408 லாக்கர்களில் கொள்ளை போன 150 லாக்கர்கள் யாருடையது எனக் கேட்டு வங்கியை வாடிக்கையாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பதில் சொல்ல முடியாததால், வாடிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுரங்கம் தோண்டி வங்கிக் கொள்ளை நடப்பது அர்ஜென்டினாவில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பறவைகள், மீன்கள் மர்மமான முறையில் சாவு: அமெரிக்காவில் பரபரப்பு.

அமெரிக்காவில் வானிலிருந்து மர்மான முறையில் இறந்து விழுந்த 5000-த்திற்கு மேற்பட்ட கரும்பறவைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாகாணத்தில் உள்ள பீபீ எனும் சிறிய நகரம். கடந்த 1-ம் தேதியன்று புத்தாண்டு கொண்டாட இருந்தபோது இந்நகர மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நகர் முழுவதும் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான கருப்பு நிற பறவைகள் இறந்து கீழே விழுந்தன. பின்னர் தொடர்ச்சியாக கொத்து கொத்தாக பறவைகள் இறந்து விழத்தொடங்கின. இது குறித்து கால்நடைத்துறை பறவைகளை பரிசோதனை செய்தனர் அதில் எவ்வித நோய்களும் தாக்கவில்லை. விசமும் வைத்து கொல்லப்படவில்லை என்பதும் தெரியவந்தது. எனினும் இறந்து விழுந்ததற்கான காரணம் தெரியமால் திணறிவருகின்றனர்.

ஏறத்தாழ பீபீ நகரில் 100 மைல் சுற்றளவில் இறந்த பறவைகள் தான் தெரிகின்றன என ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே நகரில் உள்ள ஆர்கன்சஸ் நதியில் 10 ஆயிரம் முதல் 1 லட்சம் மீன்கள் மர்மமான முறையில் செத்த மிதந்தன என்றும் அதுபோன்ற சம்பவம் இப்போது நடந்ததுள்ளது எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Jan 5, 2011

தெலுங்கானா விவகாரத்தில் முடிவு வருமா?

ஐதராபாத் : டில்லியில் இன்று, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், தனி தெலுங்கானா மாநிலம் தொடர்பாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இக்கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்துள்ளன.

ஐதராபாத் மற்றும் ஒன்பது மாவட்டங்களை இணைத்து தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்குரிய சாதக, பாதகங்களை ஆராயும்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் உருவாக்கப்பட்டது. ஆந்திராவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துக்களை கேட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், தனி தெலுங்கானா உருவாக்குவது குறித்த தனது அறிக்கையை, கடந்த வாரம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆந்திர சட்டசபையில் மொத்தமுள்ள 294 எம்.எல்.ஏ.க்களில் 123 பேர் கடலோர ஆந்திர மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 119 பேர் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள். 52 பேர் ராயலசீமா பகுதியை சேர்ந்தவர்கள்.

டில்லியில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளும் படி ஆந்திர மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன் அறிவிக்கவும், விவாதிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு கட்சியும் இரண்டு பிரதிநிதிகளை இந்த கூட்டத்துக்கு அனுப்பி வைக்கும்படி கோரப்பட்டுள்ளது. தெலுங்கானாவை ஆதரிப்பவர், எதிர்ப்பவர் என்ற வகையில் காங்கிரஸ் கட்சி இரண்டு பிரதிநிதிகளை இந்த கூட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

முதல்வர் ஆலோசனை: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். தெலுங்கானா விவகாரத்தால் மாநிலத்தில் எழக்கூடிய பதட்டத்தை தணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சோனியாவிடம் தெளிவு படுத்தினார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்திலும் இவர் பங்கேற்க உள்ளார். தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படாவிட்டால் அப்பகுதியை சேர்ந்த எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க் களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யபோவதாக அச்சுறுத்தியுள்ளனர். இது குறித்தும் கிரண்குமார் ரெட்டி, சோனியாவிடம் விவாதித்தார். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள், பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து பேசினர். அப்போது பிரணாப் முகர்ஜி குறிப்பிடுகையில், " சிதம்பரம் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை வழங்கப்படும். அவற்றை நன்றாக படித்து ஆலோசனை கூறுவதற்கு தேவையான அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கூற வசதியாக இரண்டு மூன்று வாரங்கள் கழித்து மற்றொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யலாம்' என்றார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை.

ரே பரேலி, ஜன.3: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குறுக்கு விசாரணை திங்களன்று நடைபெற்றது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தாவிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாதுகாவல் அதிகாரியாக அஞ்சு குப்தா நியமிக்கப்பட்டிருந்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அவரும் அத்வானிக்கு அருகே இருந்தார். இது தொடர்பாக அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.எதிர்த்தரப்பு வழக்கறிஞர் எல்.பி. சிங் அவரிடம் கேள்விகள் கேட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு நீதிபதி விஷ்ணு பிரசாத் அகர்வால் ஒத்திவைத்தார்.

முன்னதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அஞ்சு குப்தா, பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சற்றுமுன்னர் சங்க பரிவார் தொண்டர்கள் மத்தியில் பேசிய அத்வானி, அவர்களது உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உரையாற்றினார் என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பத்திரிகை புகைப்படக்காரர்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹிந்துத்துவா சாமியார் அஸிமானந்தாவுக்கு மேலும் ஒரு வாரன்ட்.


அஜ்மீர்,ஜன.5:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவுக்கு எதிராக நீதிமன்றம் புதிய வாரண்டை பிறப்பித்துள்ளது. இந்த மாதம் 18-ஆம் தேதி அஸிமானந்தாவை ஆஜராக்க வேண்டுமென முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் ரத்தன் லால் முண்டு ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸிற்கு உத்தரவிட்டுள்ளார். 2007-ஆம் ஆண்டு நடந்த அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள அஸிமானந்தா தேசிய புலனாய்வு ஏஜன்சியில் கஸ்டடியில் உள்ளார். நேற்று அஸிமானந்தாவை ஆஜர்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அஸிமானந்தா 10 தினங்கள் என்.ஐ.ஏவின் கஸ்டடியில் இருப்பதாக ஏ.டி.எஸ் கூடுதல் சூப்பிரண்ட் சத்தியேந்திர ரணாவத் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஹேமந்த் கர்காரே ஹிந்துதுவாவால் மிரட்டபட்டார்!! : பரபரப்பு ரிபோர்ட்.

புதுடெல்லி,ஜன.5:மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே தான் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தீவிர ஹிந்துத்துவாக் களிடமிருந்து தனது உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்தார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தகவலை வெளியிட்டிருந்தார். இதுத் தொடர்பான ஆதாரங்களை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் அவர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாலை 5.44 மணிக்கு மும்பையில் தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைமையகமத்திலிருந்து 022308733 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து தனது மொபைல் எண்ணான 09425015451க்கு கர்காரே அழைத்ததன் ஆவணங்களை திக்விஜய் வெளியிட்டுள்ளார். அதே நாளில் மாலை 8 மணிக்கு மும்பையில் தாக்குதல் நடைபெறுகிறது. சில மணிநேரங்களில் கர்காரே கொல்லப்படுகிறார். நான் பொய்க் கூறினேன் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மன்னிப்புக் கோரவேண்டும் எனக் கூறிய திக்விஜய்சிங், கர்காரேயும், நானும் தொலைபேசியில் உரையாடியதற்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்த மஹாராஷ்ட்ரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலும் மன்னிப்புக் கோரவேண்டுமென அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

தொலைபேசி பதிவின் படி 6.21 நிமிடங்கள் இருவரும் உரையாடியுள்ளனர். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவவாதிகளின் பங்கினை வெளிப்படுத்தியதற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொண்டுதான் தான் இவ்வழக்கினைக் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கர்காரே தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக திக்விஜய்சிங் தெரிவித்தார்.

உரையாடல்களின் ஆவணங்களை ஒரு வருடத்திற்கு மேலாக பாதுகாப்பதில்லை என பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்ததாக திக்விஜய் சிங் கூறியிருந்தார்.தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் தான் நிம்மதி இழந்திருப்பதாகவும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவரை அடையாளங் காண முயற்சிப்பதாகவும் கர்காரே தெரிவித்ததை திக்விஜய்சிங் வெளியிட்டார். சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் தனக்கெதிராக வெளியிடப்பட்ட தலையங்கம் வேதனை ஏற்படுத்தியது என கர்காரே தெரிவித்துள்ளார்.

துபாயில் கர்காரேயின் மகன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக சாம்னாவில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் கர்காரேயின் மகன் துபாயில் ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான். புனே பேக்கரி குண்டுவெடிப்பு மற்றும் வாரணாசி குண்டு வெடிப்புகளைத் தவிர இந்தியாவில் குண்டுவெடிப்புகள் குறைந்துள்ளதாக திக்விஜய்சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார். "இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பின்னணியில் ஒரு தனிக்குழு செயல்பட்டு வருகிறது. சபரி கும்பமேளாவில் வைத்துதான் மலேகான் குண்டு வெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் உள்ள சுவாமி அஸிமானந்தாவை விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியாகும். தீவிரவாதத் தாக்குதல்களின் பெயரால் இவர்களை கைதுச் செய்யும்பொழுது பா.ஜ.கவுக்கு ஏன் வேதனையாக இருக்கிறது? ஏன் அவர்களுக்காக இவர்கள் களமிறங்குகிறார்கள்? இந்திரேஷ் குமாரின் நேராக விரல் சுட்டிக் காட்டப்படும் பொழுது ஏன் இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்?இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் என்.ஐ.ஏ விசாரிக்கவேண்டும்.

சுனில் ஜோஷியின் கொலை உட்பட தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் மத்தியபிரதேச அரசு உண்மைகளை மறைத்துவிட்டது. சுனில் ஜோஷியை ரகசியம் வெளியே கசியாமலிருக்க ஆர்.எஸ்.எஸ்தான் கொலைச் செய்துள்ளது. இவ்வகையில் வேறு சிலரும் அச்சுறுத்தப்படுகின்றனர்." என திக்விஜய்சிங் தெரிவித்தார்.

நன்றி :தேஜஸ் மலையாள நாளிதழ்

மிருகங்களை உளவு மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தும் மிருகங்கள் ( இஸ்ராயில்).

இஸ்ரேலிய மொஸாட் புலானாய்வு சேவையினால் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கழுகு ஒன்றினை சவூதி அரேபிய பாதுகாப்புத்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இக் கழுகானது சவூதியின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே பிடிக்கப்பட்டுள்ளது. இதன் கால்களில் டிரான்ஸ்மிட்டர் எனப்படும் ஒலி அனுப்பும் கருவி ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் அதில் இஸ்ரேலின் பிரபல 'டெல் அவிவ்' பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நடவடிக்கையானது யூதர்களின் சதியென சவூதி கருதுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் செங்கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சுறா மீன் தாக்குதலால் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையானது எகிப்திய சுற்றுலாத்துறையை சீர்கெடச் செய்ய இஸ்ரேலிய புலனாய்வுத்துறையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யெனவும் அவர்களே சுறா மீன்களை குறித்த கடற்பகுதிக்குள் அனுப்பியிருக்கலாம் என எகிப்திய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Jan 4, 2011

அழிந்து வரும் துருவக் கரடிகள்.

அண்மைய ஆண்டுகளாக துருவக் கரடியின் வாழ்விடங்கள் சுருங்கிவருவதோடு அவ்வகைக் கரடிகளின் எண்ணிக்கையும் கிடுகிடுவென வீழ்ச்சி கண்டு வருகின்றன. கனடாவின் தேசியச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த விலங்கினத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் கனடாவில் கருத்து வேற்றுமையும் காணப்படுகிறது. பெரும்பான்மை கனடியர்கள் துருவக் கரடியை நேரில் கண்டிருக்கமாட்டார்கள். ஆனாலும் கனடாவோடு இந்த விலங்கு அதிகம் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் தபால் தலைகள், நாணயங்கள் ஆகியவற்றில் இந்த விலங்கின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. கனடாவில் துருவக் கரடிகள் கிட்டத்தட்ட 15 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
ஆபத்தில் உள்ள விலங்கினங்களில் வரிசையில் துருவக் கரடியை சேர்ப்பதா வேண்டாமா என்பது பற்றி கனடிய சுற்றாடல் அமைச்சகம் விரைவில் முடிவெடுக்க உள்ளது.

சூரியனுக்கே டார்ச்சா!!! : பயங்கரவாத இலங்கை அரசின் சாதனை.


இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இந்தியா மலேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேங்காயை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் இறங்குவதாக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக சூரியனுக்கே டார்ச்சா!!என தனது கோபத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் தேங்காய் உற்பத்தியில் இலங்கை தன்னிரைவு பெற்றதோடு அல்லாமல், அதை 750 வருடங்களாக உலகளவில் இலங்கை ஏற்றுமதியும் செய்து வந்ததாக குறிப்பிட்ட அவர் தற்போது தேங்காயை கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை தோன்றியது துரதிருஷ்டமானது என்றும் அவர் குறிப்பிட்டார். "இது ஒரு உலக சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இதை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவு செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

எங்களை கவர்ந்த இந்திய கலாசாரம்!!: உலகம் சுற்றும் தம்பதியினர்.

ராமநாதபுரம் : உலகத்தை சுற்றியப்படி ,பல்வேறு நாடுகளில் வாழும் மிருகங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஜெர்மன் தம்பதியினர் , "தங்களை இந்திய கலாசாரம் கவர்ந்துள்ளதாகவும், இங்குள்ளோர் மென்மையானவர்கள்,' என, கூறினர். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிரிட்டி ரெக்(64) . குறும்படம் தயாரிப்பாளரான இவர் , தனது மனைவி ரீட்டா(61) உடன் உலகத்தை சுற்றிவரும் நோக்கில் ,கடந்த 2004 ஜனவரியில் ஜெர்மனியிலிருந்து பயணத்தை துவங்கினார். இதற்காக படுக்கை, சமையல், லைட், கழிப்பறை, அவசரத்திற்கு வெளியே செல்ல சிறிய வாகனம் என பல்வேறு வசதிகளுடன் டிரக் வாகனத்தை தயார் செய்தார். ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அலேஸ்கா, சீனா என 85 நாடுகளில் 2 லட்சத்து 42 ஆயிரம் கி.மீ., தூரம் பயணம் செய்தப்படி இந்தியா வந்துள்ளார். பயணத்தின்போது ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மிருகங்கள், அது வாழும் விதம் குறித்து ஆய்வு செய்தப்படி ,இதை குறும்படமாக தயாரிக்கும் வகையில் வீடியோவும் எடுத்து வருகிறார். ராமேஸ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் வந்த ஜெர்மன் தம்பதியினர் கூறியதாவது: இந்தியாவின் கலாசாரம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இங்குள்ள போக்குவரத்துதான் மிகவும் அபாயகரமாக உள்ளது. சாலையில் விதிமுறை மீறல் அதிகமாகவே காணப்படுகிறது. இந்தியாவை தொடர்ந்து ,நேபால், பாகிஸ்தான் வழியாக சென்று 2112 ஜனவரியில் பயணத்தை முடிக்க உள்ளோம். இந்த பயணத்தின் வாயிலாக பல தகவல்களை தெரிந்துள்ளோம். இதுகுறித்து தனி வெப்சைட் வெளியிட்டுள்ளோம், என்றார்.

தனியார் மயம்!! கொள்ளையடிக்கும் கார்பரேட் முதலாளிகள்.

‘நட்டம் வரும் பொதுத்துறைகளை முட்டுக் கொடுத்து நிறுத்துவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் அவற்றை மட்டும் தனியாருக்கு விற்கப்போவதாகவும்’ சொல்லித்தான் தனியார்மயத்தை துவக்கத்தில் நியாயப்படுத்தியது பாரதிய ஜனதா அரசு. ஆனால், அரசின் புள்ளிவிவரங்களின் படியே 1992-98 காலத்தில் பொதுத்துறையின் இலாப விகிதம் 20.9% ஆகவும், தனியார் துறையின் இலாப விகிதம் 14.7% ஆகவும் இருந்தது. 1997-98 இல் அரசுத்துறையின் இலாப விகிதம் 26.9%. தனியார் துறையின் இலாபம் 2.5%.
இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் புதைத்து விட்டு, அரசுத் துறைகள் நட்டத்தில் நடப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, நாட்டை ஏமாற்றித்தான் அன்றைய பா.ஜ.க. ஆட்சியில் தனியார்மயமாக்கலுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண்ஷோரி தனியார் மயத்தை நியாயப்படுத்தினர்.

இலாபத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றால், அந்த அயோக்கியத்தனத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவது கடினம் என்பதால், அத்தகைய நிறுவனங்களின் உபரியை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் அவற்றை நட்டத்தில் தள்ளும் சதிகளில் அரசு இறங்கியது. விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பை நிர்ணயம் செய்யவும், விற்பனையை நியாயப்படுத்தும் வகையில் நட்டக் கணக்கு காட்டவும் மெக்கின்சி, பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் போன்ற உலக வங்கியால் சிபாரிசு செய்யப்படும் ஆலோசனை நிறுவனங்கள் அரசால் அமர்த்திக் கொள்ளப்பட்டன. இந்துஸ்தான் லீவருக்கு மாடர்ன் ஃபுட்ஸ் பங்குகளும், ஸ்டெரிலைட்டுக்கு பால்கோவின் பங்குகளும், டாடாவுக்கு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளும் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. வாங்கிய மறுகணமே இந்நிறுவனங்களின் சில சொத்துகளை மட்டுமே விற்று, போட்ட முதலுக்கு மேல் அவர்கள் காசு எடுத்து விட்டார்கள்.

பா.ஜ.க. ஆட்சி பொதுத்துறை தொழில்களை விற்பதற்கு ஒரு அமைச்சரையே நியமித்தது. டிஸ் இன்வெஸ்ட்மென்ட் துறை என்றழைக்கப்பட்ட இந்த அமீனாத் துறையின் அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி. 1999 முதல் 2003 வரை அருண் ஷோரியின் அமைச்சகத்துக்கு செயலராகவும், 2004 முதல் 2006 வரை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் இருந்து ‘கொள்கைபூர்வமாக’ பொதுத்துறையை முதலாளிகளுக்கு உடைமையாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயர் பிரதீப் பெஜால். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2007-இல் இவர் நீரா ராடியாவிடம் வேலைக்குச் சேர்ந்து, 2-ஜி அலைக்கற்றைகளை டாடாவுக்குச் சகாய விலையில் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும்!! வீடியோ உண்மையானது.

நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ படம் கடந்த வருடம் டி.வி. சேனல்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். ரஞ்சிதா தலைமறைவானார். வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. தற்போது பலமாத இடைவெளிக்கு பின் திடீரென்று ராம்நகர் கோர்ட்டில் ஆஜராகி ஆபாச வீடியோவை வெளியிட்டு தன்னை இழிவு படுத்தியதாக ரஞ்சிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.

வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் மறுத்துள்ளார். அது வேறு பெண் என்று கூறி உள்ளார். நித்யானந்தாவும் ஆபாச வீடியோ படம் உண்மையானது அல்ல என்று கூறியுள்ளார். மார்பிங் முறையில் தனது உருவத்தை பொருத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதனால் இவ்வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது. ஆபாச வீடியோ வழக்கை விசாரித்து வந்த கர்நாடக சி.ஐ.டி. போலீசாரும் ரஞ்சிதாவின் திடீர் பேட்டியால் குழம்பியுள்ளனர். அவர்கள் முன்னிலையில் ஆஜராகியும் ஆபாச சி.டி. போலி என்று வாக்குமூலம் அளித்துள்ளார். நித்யானந்தா கேட்டுக்கொண்டதால் இதுவரை சி.டி. பற்றி கருத்து சொல்லாமல் இருந்தேன் என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில் நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச வீடியோ படம் உண்மையானது என்று தடய அறிவியல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த துறையின் அதிகாரிகள் கூறியதாவது:- ரஞ்சிதா- நித்யானந்தா ஆபாச வீடியோ பட சி.டி. ஐதராபாத்தில் உள்ள தடய அறிவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டது. இதுபோல் சண்டிகாரில் உள்ள தடய அறிவியல் விஞ்ஞான கூடத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் சி.டி. உண்மையானது என தெரிய வந்தது. வீடியோவில் உள்ள போட்டோவும் சோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. அதில் இருப்பது ரஞ்சிதா, நித்யானந்தாதான் என உறுதிப்படுத்தப்பட்டது. அவை போலி என்று ரஞ்சிதா திடீரென பேட்டி அளித்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மும்பையில் அழுகி போகும் 200 டன் வெங்காயம்! அதிர்ச்சி ரிபோர்ட்.

மும்பை,ஜன:நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்தபடி உள்ள நிலையில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 200 டன் வெங்காயம், மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் அலட்சியப் போக்கால் மும்பையில் அழுகிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் வெங்காய விலை கடுமையாக உள்ளது. வெங்காயம் மட்டுமல்லாமல் தக்காளி உள்ளிட்டவற்றின் விலையும் கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதையடுத்து பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தானிலிருந்து கப்பல் மூலம் 200 டன் வெங்காயம் கொண்டு வரப்பட்டது. இந்த வெங்காயம் தற்போது மும்பை துறைமுகத்தில் வீணாக அழுகி வருகிறது.

இந்த வெங்காயத்தை வெளி மார்க்கெட்டுகளில் விநியோகிக்க மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் இதை இரு அரசுகளும் இன்னும் செய்யாமல் உள்ளன. இதன் விளைவாக வெங்காயம் வீணாகி அழுகிக் கொண்டிருக்கிறது.மொத்தம் எட்டு கன்டெய்னர்களில் இந்த வெங்காயம் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கொடுக்கப்பட்டால் மட்டுமே வெங்காயத்தைக் காப்பாற்ற முடியும்.இல்லாவிட்டால் முழுமையாக அழுகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதவெறி, காமவெறி இதுதான் ஹிந்துதுவாவா??

பூர்னியா(பீகார்),ஜன.4:பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜ் கிஷோர் கேசரி இன்று ஒரு பள்ளி ஆசிரியையால் குத்தி கொல்லப்பட்டார். அந்த பெண் ஏற்கனவே கேசரி தன்னை கற்பழித்தாக புகார் அளித்திருந்தார். பூர்னியாவில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் பூனம் பதக். அதே பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். கடந்த மே மாதம் எம்.எல்.ஏ கேசரி தன்னை கற்பழித்துவிட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் இந்த புகார் குறித்து போலீஸ் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பூனம் இன்று காலை கேசரியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். கேசரிக்கு அருகில் சென்றதும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தியுள்ளார்.இதையடுத்து அங்கிருந்தவர்கள் கேசரியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேசரியை குத்தியவுடன் அவரது ஆதரவாளர்கள் பூனத்தை தாக்கியதாகவும், அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதல்வர் நிதிஷ்குமார் பூர்னியா டிஐஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Jan 3, 2011

இந்தியாவின் போலி ஜனநாயகம்!!: உண்மையில் நடப்பது சர்வாதிகாரம்.

புதுடெல்லி,ஜன.:சொந்த நாட்டிலேயே தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை என்று மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மருத்துவர் விநாயக் சென்னின் மனைவி இலினா சென் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: "என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது.

விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மனு செய்யுமாறு எங்களுக்கு பலர் அறிவுறுத்தினர். ஆனால் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்ட சதிச் செயல்கள். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பதன் மூலம் என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக்கூடும். என்னை பாதுகாத்துக் கொள்ள ஏதேனும் ஜனநாயக நாட்டின் தூதரகத்தில் அரசியல் அடைக்கலம் கேட்பதே இப்போது எனக்கு தெரிந்த ஒரே வழியாக உள்ளது. சொந்த நாட்டிலேயே எனக்கு பாதுகாப்பில்லை. எனக்கு 20, 25 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். என் கவலை எல்லாம் அவர்களைப் பற்றிதான் உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அதனால் நான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஏஜெண்ட் என்று அவதூறு பிரசாரத்தை சிலர் மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம் நண்பர்கள் அதிகம் இருந்தால் அதை சட்ட விரோதமாக பார்க்கும் நிலை நாட்டில் நிலவுகிறது. என் கணவருக்கு பிறகு இப்போது நானும் அவதூறு குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளேன்" என்றார் இலினா சென்.

சிந்திக்க: சகோதரி இலினா சென் ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் அடைக்கலம் தேடபோவதாக சொல்லி இருக்கிறார். அவரது கூற்று சரிதான் இந்தியாவில் ஜனநாயகம் செத்து பல காலங்கள் ஆகிவிட்டதே ஜனநாயகத்தின் பெயரால் நடப்பது எல்லாம் சர்வாதிகாரம் என்பது பாவம் அவருக்கு இப்போது தான் தெரிந்திருகிறது. என்று போபாலுக்கு நீதிகிடைக்கவில்லையோ,என்று சொந்த நாட்டு பழங்குடி மக்களை காட்டுவேட்டை என்றபெயரில் மிருகங்கள் போல வேட்டையாடி வருகிறார்களோ இவர்களிடம் என்ன ஜனநாயகம் இருக்கபோகிறது. என்று பாபர் மசூதி தீர்ப்பை சட்டத்தின் அடிப்படையில் சொல்லாமல் மத உணர்வுகள் அடிப்படையில் கட்டபஞ்சயத்தாக சொன்னார்களோ இவர்களிண்டம் என்ன நீதி? என்ன நேர்மையை எதிர்பார்ப்பது.

இந்தியாவில் நெறிக்கப்படும் பத்திரிக்கைகளின் குரல்வளை.

பெங்களூர்,ஜன.4:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களை மிரட்டியதாக கூறி கர்நாடகா அரசு டெஹல்கா நிருபர் ஷாஹினாவின் மீது வழக்கு பதிவுச் செய்துள்ளது. இவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஷாஹினா மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுத்தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் வருகிற 7-ஆம் தேதி வெளியிடும்.

ஷாஹினாவின் ஜாமீன் மனுவில் வாதத்தை கேட்ட மடிக்கரை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பை 7ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. ஷாஹினாவின் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு இட்டுக் கட்டப்பட்டது என அவருடைய வழக்கறிஞர் வாதிட்டார். பிரபலமான பத்திரிகையாளரான ஷாஹினா ஜாமீன் கிடைத்தால் தலைமறைவாகமாட்டார் எனவும், எந்த நேரத்திலும் நீதிமன்றத்தில் ஆஜராக அவர் தயார் எனவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வெடிக்குண்டு வழக்கில் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சியம் அளித்த கே.கே.யோகானந்த், கெ.ரஃபீக் ஆகியோருடன் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி ஷாஹினா நேர்முகம் நடத்தியிருந்தார்.

நன்றி :தேஜஸ் மலையாள நாளிதழ்

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்.

நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.

மருத்துவ குணங்கள்

1) கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

2) கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.

3) கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

4) கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

5) கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

6) கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கலிபோர்னியாவின் புதிய கவர்னராக குடியரசு கட்சியின் ஜெர்ரி பிரவுன் தேர்வு.

கார்ப்பரேட், ஹாலிவுட், ரியல் எஸ்டேட், அரசியல் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த பிரபல நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னருமான அர்னால்டு நேற்று கவர்னர் பதவியில் இருந்து விலகினார்.ஹாலிவுட் பிரபல நடிகர் அர்னால்டு. இவர் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக தொடர்ந்து 7 ஆண்டுகள் பதவி வகித்தார். இவருக்கு அடுத்து குடியரசு கட்சியை சேர்ந்த ஜெர்ரி பிரவுன் கவர்னராகிறார்.

இந்நிலையில், அவருக்கு வழி விட்டு பதவியில் இருந்த நேற்று அர்னால்டு விலகினார். 63 வயதாகும் அர்னால்டை சுயசரிதை எழுத பல புத்தக வெளியீட்டாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். 4 குழந்தைகளுக்கு தந்தையான அர்னால்டு நல்ல திரைக்கதை கிடைத்தால் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடந்த பிரிவு உபசார விழாவில், ‘எந்த எதிர்கால திட்டமும் என்னிடம் இல்லை. சுற்றுப்புற சுகாதாரம், காற்றில் மாசு கலப்பதை தடுக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன்’ என்று ஆதரவாளர்களிடம் அர்னால்டு கூறினார்.

19 ஆண்டுகளுக்கு பின் ஐ.நா., கவுன்சிலில் இந்தியா.

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக, 19 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா மீண்டும் இடம் பெற்றது. இந்தாண்டின் ஆகஸ்ட் மற்றும் அடுத்தாண்டின் நவம்பர் மாதங்களில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்கும். ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில், 19 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா நேற்று அதிகாரப்பூர்வமாக நிரந்தரம் அல்லாத உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாண்டு காலம் (2011-2012) இந்தப் பொறுப்பில் நீடிக்கும். இந்தியாவுடன், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் நாடுகளும் பொறுப்பேற்றுக் கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாடு, பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பொறுப்பேற்கும். அது, ஆங்கில எழுத்தின் அகர வரிசைப்படி அமையும். அதன்படி, இந்தாண்டு ஆகஸ்ட் மற்றும் அடுத்தாண்டு நவம்பர் ஆகிய இரு மாதங்களில் இந்தியா தலைமை பொறுப்பேற்கும்.

நேற்று பொறுப்பேற்றது உட்பட, நிரந்தரம் அல்லாத உறுப்பினர் பதவிக்கு இந்தியா இதுவரை ஏழு முறை பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், ஐ.நா., அமைதிப் படை விவகாரம் மற்றும் மனித உரிமை செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பயங்கரவாதம் உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில், இந்தியாவுக்கு கிடைத்துள்ள இந்தப் பதவி, பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் நடவடிக்கைகளை உலகம் அறிந்து கொள்ள உதவிடும். இதுகுறித்து ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், "நமது முக்கிய இலக்கு பயங்கரவாத பிரச்னை தான். வரக் கூடிய மாதங்களில், கவுன்சிலோடு இணைந்து அதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கும்' என்றார்.

நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுது!!!


ஆந்திராவில் திருட்டுப்பழியை போக்க, பழங்குடி இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கைவிரல்களை விட்டு, குற்றமற்றவன் என்று நிரூபித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா வாரங்கல் மாவட்டம், கொம்முதண்டா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோகுலோத் வச்யா (30). இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அருகிலுள்ள லட்சுமிபூர் கிராமத்தில், தங்க நகைகளை திருடியதாக, குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, கொம்முதண்டா கிராம பஞ்சாயத்தார் வச்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, திருட்டுப்பழியை போக்க, கொதிக்கும் எண்ணெயில் கைவிரல்களை விட்டு குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என, வச்யாவிற்கு பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். இல்லாவிட்டால், கடும் தண்டனை கிடைக்கும் என எச்சரித்தனர்.

இதனால், வேறுவழி தெரியாத வச்யா, பஞ்சாயத்தார் உத்தரவுப்படி, கொதிக்கும் எண்ணெயில் கைவிரல்களை விட்டார். இதனால், அவரது கைவிரல்கள் எண்ணெயில் வெந்து, கடுமையான காயங்கள் ஏற்பட்டது. இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் நேற்று முன்தினம் அம்பலமானது. இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்றின் வழியாக, மெகபூபாபாத் நகர போலீஸ் நிலையத்தில் வச்யா புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து, கொம்முதண்டா கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வச்யா மீது முதலில் குற்றம் சாட்டியவர் உட்பட 10 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
"பழங்குடி மக்கள் இதுபோன்ற மூட நம்பிக்கைகள் மீது அதிநம்பிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படும்' என, தன்னார்வ நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சீத்தாராம் நாயக் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஆசிய வம்சாவளி உஸ்மான் காஜா.

சிட்னி,ஜன.3:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் பிறந்த 24 வயதேயாகும் அந்த இளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும். வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது, அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா. இங்கிலாந்து பந்து வீச்சு குறித்து சற்றும் பயமில்லாமல் மிகவும் தைரியமாக ஆடி வருகிறார் காஜா. முதல் இரு பந்துகளை ஒன்றை பவுண்டரிக்கும், இன்னொன்றில் 2 ரன்கள் எடுத்தும் ஆஸ்திரேலிய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார் காஜா. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

கோழைகள் வீரர்களை வென்றது எப்படி?

புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று இலங்கை அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போருக்கு இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. கடந்த வாரம், இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்தியா ராடர்களையும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், கடற்படைக் கப்பல்களையும் வழங்கியதை உறுதிப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியா இந்த உதவிகளை வழங்கியிருந்தது.

இலங்கைக்கு இந்தியா 'இந்திரா' ரக ராடர்களை வழங்கிய விவகாரம் முன்னரே வெளிச்சத்துக்கு வந்திருந்தது. அந்த ராடர்களை இயக்கியது இந்திய விமானப் படை அதிகாரிகள் தான் என்பதையும் பி.ரி.ஐ. உறுதி செய்துள்ளது. இவர்கள் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றும், இலங்கைப் படைகளின் தளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தி கூறியுள்ளது.

வவுனியா விமானப்படைத் தளம் மீது புலிகளின் கொமாண்டோ அணி தாக்குதல் மேற்கொண்ட போது இந்திய விமானப்படைப் பொறியியலாளர்கள் சிலர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை இந்திய அரசாங்கம் அப்போது உறுதிப்படுத்தவில்லை. விடுதலைப்புலிகளின் வான்படைப் பலத்தை முறியடிக்கும் நடவடிக்கைக்கு இந்தியா மிகவும் முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது என்பது இதிலிருந்து உறுதியாகியுள்ளது. அதைவிட ரஷ்யத் தயாரிப்பான விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் இந்தியா வழங்கியது என்ற செய்தி புதியதாகும்.

புலிகளுக்கு எதிரான போரின்போது பெருமளவிலான 'இக்லா' வகை ஏவுகணைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இவை விமானங்களைச் சுட்டுவீழ்த்த தரையில் இருந்து ஏவக் கூடியவை. இதுபற்றி இந்தியா ஒருபோதும் வாய் திறக்கவேயில்லை. இப்போது தான் அது தெரியவந்துள்ளது. இதைவிட, கடற்புலிகளை முறியடிப்பதற்காக இந்தியா இரண்டு ரோந்துக் கப்பல்களையும் வழங்கியிருந்தது. “சயுரா“, “சாகர“ என்ற பெயர்களில் கடற்படையினரின் பாவனையில் உள்ள இந்தப் போர்க் கப்பல்கள் ஆழ்கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

அதற்கும் அப்பால் ஆழ்கடலில் விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களைக் கண்காணித்து தகவல்களை வழங்கும் புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது.
இவை புலிகளுக்கு ஏதிரான போரில் இலங்கைப் படையினர் வெற்றி கொள்வதற்கு மிகவும் முக்கிய காரணங்களாகின. இவையெல்லாவற்றையும் மறைத்துத் தான் இலங்கை அரசு நாமே தனித்து நின்று போரிட்டு வென்றோம் என்று கூறிவருகிறது. இந்தியா இதைவிடவும் அதிகமான பங்களிப்பை வழங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால், அதையெல்லாம் வெளிப்படுத்த முடியாத நிலையில் இன்னும் அது இருக்கிறது. காரணம் தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய தேவை இந்தியா அரசுக்கு இருந்தது. உணர்வுபூர்வமான பிரச்சினையாக அது வெடிக்காமல் இருப்பதற்காக இந்தியா பல தகவல்களை வெளியே கசியவிடவில்லை என்பதே உண்மை. ஆனால், புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. அதற்காக முக்கியமான பங்களிப்புகளையும், உதவிகளையும் வழங்கியது.

போர் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில் தான் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பற்றிய உண்மைகள் இப்போது வெளியே வரத் தொடங்கியுள்ளன.
பல மாதங்களுக்கு முன்னர் நிகின் கோகலே என்ற இந்திய ஊடகவியலாளர் எழுதியிருந்த நூல் ஒன்றில், புலிகளுக்கு எதிரான போருக்காக இந்தியா எம்.ஐ 17 ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கியதாகக் கூறியிருந்தார். வாராவாரம் பாகிஸ்தான் அனுப்பி வைத்த மோட்டார் மற்றும் ஆட்டிலறிக் குண்டுகள், சீனா அனுப்பிய ஆயுதங்கள் என்று ஏராளமான சர்வதேச உதவிகளைக் கொண்டு தான் புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் வென்றது.

குறிப்பாகப் பாகிஸ்தானில் இருந்து கிடைத்த அபரிமிதமான வெடிபொருட்கள் தான் களத்தில் படைத்தரப்பின் வெற்றியைத் தீர்மானித்துள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.
இவையெல்லாம் இருந்த காரணத்தினால் தான் படைப்பலத்தைப் பெருக்கி இலங்கை அரசாங்கத்தினால் போரில் வெற்றியீட்ட முடிந்தது. ஆனால், இவையெல்லாவற்றையும் மறைத்து விட்டுத் தனியே போரை நடத்தியதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டத்தில் இந்தியாவில் நகைச்சுவை அரசியல்வாதி என்று பெயரெடுத்த சுப்ரமணியம் சுவாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை நகைப்புக்கிடமாக உள்ளது. 2008 - 09 காலப்பகுதியில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு பீரங்கி மற்றும் வான்படை உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா மறுத்ததால், பாகிஸ்தான் அவற்றை வழங்கி அங்கு தளம் அமைக்க உதவியது குறித்து விசாரணை செய்ய விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா தான் வழங்கிய ஆயுதங்களின் விவரங்களை வெளியிடாது மறைத்து வைத்திருப்பதால் தான் சுப்ரமணியம் சுவாமி இந்தக் கதையைக் கூறியுள்ளார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்க இந்தியா மறுத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் இந்தியா பெருமளவு ஆயுத தளபாடங்களை வழங்கியது. முன்னதாக இந்தியா போரில் பயன்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கமாட்டோம் என்று கூறியது உண்மை.

ஹெல்மெட் போன்ற உபகரணங்களை மட்டுமே விற்றதாகக் காரணம் கூறிய இந்திய அரசு, பின்னர் கடற்படைக் கப்பல்களை வழங்கியது. ராடர்களை வழங்கியது விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வழங்கியுள்ளது. இவை யெல்லாம் இந்தியாவின் ஆயுத உதவிகள்.
புலிகளுக்கு ஏதிரான போரை இலங்கை மட்டும் தனியே நின்று நடத்தவில்லை. இந்தியா, பாகிஸ்தான், சீனா என்று ஆசியாவில் வல்லமைமிக்க அரசுகள் இந்தப்போரில் இணைந்திருந்தன என்பதே அது. இந்த உண்மையை இலங்கை அரசாங்கத்தால் நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது. அந்த உண்மையை இலங்கை அரசு மறைத்தே வைத்திருந்தாலும், உதவி வழங்கிய நாடுகளின் வாயை நீண்டகாலத்துக்கு அடைக்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் & கம்யுனிஸ்ட் இயக்கம்: 2 ம் ஒன்றா?

பெங்களூர்,ஜன.3:கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிவரும் பி.கே.ஸ்ரீமதி ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விஞ்ஞான் பாரதி கடந்த டிசம்பர் மாதம் பெங்களூரில் நடத்திய நான்காவது ஆயுர்வேத மாநாட்டின் ஒருபகுதியாக நடந்த கண்காட்சியை கர்நாடக மாநில பா.ஜ.க அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.எ.ராம்தாஸுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரான ஸ்ரீமதி திறந்துவைத்தார்.

கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரும் கம்யூனிஸ்ட் அமைச்சருடன் மேடையில் வீற்றிருந்தனர். இந்தியாவில் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் விஞ்ஞான் பாரதி அமைப்பு ஆரோக்கிய எக்ஸ்போ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால், இச்செய்தியை வெளியிட்டால் சர்ச்சையாகும் எனக்கருதி கேரள மாநிலங்கள் மூடி மறைத்துள்ளன.
ஏகற்கனவே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பிராந்திய சங்கிக் நிகழ்ச்சியில் பங்கேற்ற கொல்லம் மேயரை கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி வெளியேற்றியிருந்தது.

இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைமையிலிருந்து அதன் தொண்டர்கள் வரை ஈடுபட்டதை புலனாய்வு ஏஜன்சிகள் கண்டறிந்துவரும் வேளையில் அவ்வமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒரு கம்யூனிஸ்ட் அமைச்சர் பங்கேற்றது அக்கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியின் அகில இந்திய நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுப் பெற்றவரும், இடதுசாரி சிந்தனையுடையவருமான ரசூல் பூக்குட்டி பங்கேற்றதும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

தேசதுரோகம் என்றால் என்ன? ஒரு சமூக பார்வை.


ஜனநாயக நாடுகள் மிகவும் அபூர்வமாகவே தங்களது குடிமகன்கள் மீது தேசத்துரோக வழக்கை சுமத்தும். தேசத்துரோகம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ஒருவேளை வரைவிலக்கணம் இல்லாததன் காரணமாகயிருக்கலாம். ஆனால், ஹிந்துத்துவாவின் நிர்பந்தத்தின் காரணமாக இந்தியாவின் ஜனநாயகம் சர்வாதிகாரமாக மாறிவருகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் சுவரொட்டியை ஒட்டுவதுகூட தேசத்துரோக வழக்காக சில இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் பிரபல மருத்துவரும், மனித உரிமை ஆர்வலருமான பினாயக்சென்னின் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டு ஆயுள் தண்டனையை விதித்தது செசன்ஸ் நீதிமன்றம். இதற்குமுன் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் மற்றும் கஷ்மீர் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவுச்செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் வழக்குப் பதிவுச் செய்தால் ஏற்படும் பின்விளைவுகளைக் குறித்து பயந்த மத்திய உள்துறை அமைச்சகம் தொடர் நடவடிக்கைகளை கைவிட்டது. பா.ஜ.கவைச் சார்ந்த ஒருவர் தாக்கல் செய்த புகார் மனுவின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப் பதிவுச்செய்ய டெல்லியில் ஒரு கீழ் நீதிமன்றம் உத்தரவிட்ட பொழுதிலும் இரண்டுபேரும் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளை நிகழ்த்தவில்லை என போலீஸ் அறிக்கையை சமர்ப்பித்தது.
கேரள மாநிலம் களமசேரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பஸ் எரிப்பு வழக்கின் பெயரால் பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல்நாஸர் மனைவி சூஃபியா மதனி மீது தேசத்துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பதிவுச் செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குதான் நகைப்பிற்கிடமானது. கர்நாடகா மாநிலத்தில் செயல்படும் பி.யு.சி.எல் என்ற மனித உரிமை அமைப்பு வெளியிடும் செய்திப் பத்திரிகையில் ஏராளமான தேசத்துரோகச் செய்திகள் அடங்கியுள்ளன எனக் குற்றஞ்சாட்டி விஜயநகர போலீசார் அப்பத்திரிகையை வெளியீட்டாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அப்பத்திரிகை கடந்த 2007 ஆம் ஆண்டே வெளியீட்டை நிறுத்தியிருந்தது. அதனைவிட கேலிக்கூத்தான சம்பவம் தமிழகத்தின் சேலத்தில் நடந்தேறியது. ஆதிவாசிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து வெளியிட்ட மடக்கோலையை குடியரசுதினத்தில் விநியோகம் செய்தது தேசத்துரோக வழக்காக பதிவுச் செய்யப்பட்டது. இப்படி தேசதுரோகம் என்றபெயரில் கட்டவிழ்த்து விடப்படும் அரசுபயங்கரவாதம் எண்ணில் அடங்காதது.

Jan 2, 2011

'மதுவை ஒழிப்போம்;​ தமிழகத்தை காப்போம்' !

திருச்சி,​​ ​ ஜன.​ 2: திருச்சியில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'மதுவை ஒழிப்போம்;​ தமிழகத்தை காப்போம்' என்பதை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,​​ அந்த அமைப்பின் மாநகரத் தலைவர் சைய்யது முகம்மது தலைமை வகித்தார்.அமைப்பின் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.​ ஜலாலுதீன்,​​ குடிபோதை மாற்று சிகிச்சை மையத் திட்ட இயக்குநர் எம்.​ பாரதிமோகன்,​​ பெண்கள் முன்னணி அமைப்பின் கரூர் மாவட்ட நிர்வாகி ஆர்.​ஜானகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது,​​ மதுவுக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன.​ கடந்த 24-ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு,​​ இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஜமா அத்தே இஸ்லாமி நிர்வாகிகள் தெரிவித்தனர்.​

தொடர் குண்டு வெடிப்புகள் கேரளாவில் திட்டமிடப்பட்டுள்ளது: அதிர்ச்சி தகவல்.

கோழிக்கோடு,ஜன.3:அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு மற்றும் தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்புடைய கேரளாவைச் சார்ந்த RSS அமைப்பின் சுரேஷ் நாயருக்கு நெருக்கமானவர்கள் 20பேரின் விபரங்களை மாநில உள்துறை பாதுகாப்பு படை (ஐ.எஸ்.டி) சேகரித்துள்ளது. இதில் பலரையும் ஆரம்ப கட்ட விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. சுரேஷ் நாயர் சிக்கினாரா? இல்லையா? என்பதுக் குறித்து ராஜஸ்தான் ஏ.டி.எஸ் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கேரளாவில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. மாநில போலீசாரோ, க்ரைம் பிராஞ்சோ சம்பந்தப்படாமால் இந்த விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் அனைத்தும் கேரளாவில் திட்டமிடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுரேஷ் நாயர் உடன் தொடர்புடையவர்களில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களும், பிரச்சாரக்குகளுமாவர். சுரேஷ் நாயர் கேரளாவில் வசிக்கும் தனது குடும்பத்தினருக்கு தெரியாமலேயே பலமுறை அம்மாநிலத்திற்கு வந்து சென்றுள்ளார் எனவும், பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு மூத்த உறுப்பினரான இந்திரேஷ் குமாருடனும் அவர் கேரளாவிற்கு வந்துள்ளார் என்ற தகவலும் ஐ.எஸ்.டிக்கு கிடைத்துள்ளது.

கேரளாவின் பல மாவட்டங்களிலும் நாச வேலைகளில் ஈடுபடும் நபர்களை தேசிய அளவில் நாசவேலைகளை நடத்துவதற்கு தேர்வுச் செய்யத்தான் சுரேஷ் நாயர் கேரளாவிற்கு வந்துள்ளார்.இதற்கிடையே சுரேஷ் நாயர் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வசம் சிக்கியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கூறுகிறது. இவர் அளித்த விபரங்களின் அடிப்படையில்தான் ஐ.எஸ்.டி விசாரணையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில்,சுரேஷ் நாயரின் கேரள மாநிலத் தொடர்புக் குறித்த விசாரணையை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.