Jul 4, 2011

சிங்கள ராணுவத்தை சுடாத துப்பாக்கி தமிழ் சிறுவனை சுடுகிறது!

JULY 05, ’’தீவுத்திடல் அருகில் குடியிருக்கும் மக்கள் காலம் காலமாக அங்கு குடியிருந்து வருகின்றனர்.

இன்று எத்தனையோ மாட மாளிகைகளும் உல்லாச புரிகளும், ராணுவம் சார்ந்த குடியிருப்புகளும், கட்டிடங்களும் அப்பகுதியில் முளைத்திருக்கலாம்.

ஆனால் இம்மக்கள் அந்த மண்ணின் பூர்வீககுடிகள் அவர்களுக்கே அந்த மண்ணில் அனைத்துக்கும் முதல் உரிமை இருக்கிறது. சிறுவர்கள் மரங்களில் ஏறி விளையாடுவதால் ஒன்றும் இந்த நாட்டின் “இறையாண்மை” கெட்டுப் போய் விடாது.

அப்படியே சிறுவன் விளையாடியது தவறு என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவனை அழைத்து அன்பாக அறிவுறுத்தி வெளியே அனுப்புவதுதான் நெறி முறை.  அதை விடுத்து தன் கையில் துப்பாக்கி இருக்கிறது என்ற காரணத்துக்காக கொலை செய்வது என்பது மிருகத்தனம்.

நம் மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பதுதான் ராணுவத்தின் பணி என்கிறார்கள். ஆனால் ஒரு தவறும் செய்யாத சிறுவனை கொலை செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறார் இந்த ராணுவ “வீரர்” இது வீரம் கிடையாது.

நாட்டையும், நாட்டு மக்களையும் காப்போம் என்று கூறிப் பணியில் சேரும் ராணுவத்தைச் சேர்ந்தவர் அப்பாவி சிறுவனை கொலை செய்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு உரிய பரிகாரமே கிடையாது. சிறுவனைப் படுகொலை செய்த ராணுவத்தைச் சேர்ந்தவரை உடனே கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: சிங்கள இனவெறியர்களை சுடாத துப்பாகிகள் தமிழர்களை சுடுகின்றன. நூற்று கணக்கான தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டனர். அபோது எல்லாம் இந்த மக்களை பாது காக்கவேண்டிய ராணுவ துப்பாகிகள் எங்கே போயின.

No comments: