Jul 12, 2011

பி. ஜெய்னுல் ஆபிதீன் நடத்தும் மதநல்லிணக்க நிகழ்ச்சி!

JULY 13, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழ் நாட்டில் முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத் தைப்பற்றி பரவி இருக்கும் தவறான கருத்துக் களை போக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை போக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக வாணியம்பாடியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான முஸ்லிமல்லாதவர்கள் பங்கு பெற்றனர். இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை பல ஆண்டுகளாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இந்த பொய் பிரச்சாரத்தின் மூலமாக ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை கெடுத்து இதன் மூலம் உயர்ஜாதி பார்பனர்கள் லாபம் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் ஹிந்து மக்களின் மனங்களில் எழும் இயல்பான சந்தேகங்களை போக்கும் வண்ணமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது பாராட்டப்படும் விசயமே.

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று மேடை போட்டு சொல்லும் அளவுக்கு முஸ்லிம்களை தள்ளியது  இந்த  ஹிந்துத்துவா. இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பரப்புரையை தொடங்கியது  இன்று நேற்று அல்ல ஒரு நூற்றாண்டு ஆகிறது. இதை முஸ்லிம்கள் எதிர் கொள்வதின் ஒரு பகுதியே இந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஆகும். ஹிந்துத்துவா சதியை முறியடித்து மதக்கலவரம் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ்ந்தால் சரி. வாணியம்பாடியில் இருந்து நண்பர் சிவக்குமார்.

6 comments:

சிந்திக்க உண்மைகள். said...

CLICK THE LINK AND READ

>>> இந்திய மூளை திருடப்பட்டு விட்டது. யாவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.
நாம் எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கொஞ்சமாவது யோசித்து பாருங்கள்


.

Anonymous said...

பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுடைய இந்த முயற்சி நன்மை பயக்குமா தெரியவில்லை.

அவர் தன் இன மக்களையே பிரித்து பிரித்து பல்வேறு பிரிவுகளை உடைய மிகப்பெரிய மதமாக உருவாக்கி விடுவார் போல் தெரிகிறது.

இவர் உருவானதற்குப் பிறகுதான் மிகச்சிறிய கால இடைவெளியில் இத்தனை அமைப்புகள் ஒரே கொள்கையை உடையனவாக ஆனால் பிரிந்து பிரிந்து பிரிந்து போய்கொண்டே........... இருக்கிறது.

இது ஒரு முஸ்லிம்களின் சூழ்ச்சியாகக் கூட இருக்குமோ என்று சந்தேகங்கோள்ள செய்கிறது.
என்ன கருமமோ தெரியவில்லை.

- naasamj

nidurali said...

அல்ஹம்துலில்லாஹ்!
The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
Jazak Allahu khayr جزاك اللهُ خيراً

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன உஜலாதேவி அவர்களுக்கு நன்றி! நன்றி மீண்டும் வாருங்கள்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன நீடூர் அலி அவர்களுக்கு நன்றி! நன்றி மீண்டும் வாருங்கள்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

PUTHIYATHENRAL said...

கருத்து சொன்ன அனைவர்களுக்கும் நன்றி! நன்றி மீண்டும் வாருங்கள்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.