Jul 4, 2011

லஞ்சம் கொடுக்க முடியாததால் நடுரோட்டில் பிரசவம்!

JULY 05, லக்னோ: லஞ்சம் கொடுக்க மறுத்த ஏழை கர்ப்பிணி பெண்ணை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அந்த பெண், சாலையோர நடை பாதையிலேயே, குழந்தையை பெற்றெடுத்தார். இந்த பரிதாப சம்பவம், உ.பி.,யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., மாநிலம் கன்னூச் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷில். இவரது மனைவி மம்தா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மம்தாவை, பிரசவத்துக்காக, அவரது கணவர், கன்னூச் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

அந்த மருத்துவமனையின் நர்ஸ் "உங்கள் மனைவியை மருத்துவமனையில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், 1,500 ரூபாய், லஞ்சமாக தர வேண்டும்' என, கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த சுஷில், "நான் ஏழை. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. என் மனைவி, பிரசவ வலியில் துடிக்கிறாள். தயவு செய்து, அவளை மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என, கெஞ்சினார். அங்கிருந்தவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை.

இதற்கிடையே, மருத்துவமனைக்கு வெளியில், சாலையோர நடைபாதையில் நின்று கொண்டிருந்த மம்தாவுக்கு, வலி அதிகரித்தது. சிறிது நேரத்தில், நடைபாதையிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. அருகில் இருந்தவர்கள், இதற்கு உதவினர். இதன்பின், மீண்டும் மருத்துவமனைக்குள் சென்ற சுஷில், "என் மனைவிக்கு குழந்தை பிறந்து விட்டது. இனிமேலாவது, மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என, கேட்டார்.

ஆனால், 1,500 ரூபாய் தந்தால் மட்டுமே, சேர்த்துக் கொள்வோம்' என, மருத்துவமனையில் இருந்தவர்கள் உறுதியாக கூறி விட்டனர். இதையடுத்து, எப்படியோ பணத்தை திரட்டிக் கொண்டு வந்து, மருத்துவமனையில் இருந்தவர்களிடம் கொடுத்தார், சுஷில். இதன் பின் தான், மருத்துவமனையில் மம்தாவை சிகிச்சைக்கு சேர்த்துக் கொண்டனர். இந்த தகவல் வெளியானதும், கன்னூச் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

3 comments:

அம்பாளடியாள் said...

பணத்துக்கும் பொருளுக்கம் கிடைக்கும் மதிப்பு என்பது ஒரு துளிகூட உயிருக்கு
கிடைப்பதில்லை என்பதுதான் இப்போதும் வேதனைக்குரிய விடயமே.............
நன்றி பகிர்வுக்கு

தலைத்தனையன் said...

ANIMALS. NO HUMAN NATURE. WHOM SHOULD WE BLAME FOR THIS INHUMAN ATTITUDE ? GOVERNMENT TAKE GOOD EFFORTS BUT UNABLE TO FOLLOW UP THINGS. THAT IS BAD PART OF GOVERNMENT. THERE SHOULD BE A TEAM VISITING THE HOSPITALS AND ALL OTHER GOVERNMENT INSTITUTIONS TO MONITOR THEIR DAILY ACTIVITIES.

PUTHIYATHENRAL said...

அம்பாளடியாள் said...
பணத்துக்கும் பொருளுக்கம் கிடைக்கும் மதிப்பு என்பது ஒரு துளிகூட உயிருக்கு
கிடைப்பதில்லை என்பதுதான் இப்போதும் வேதனைக்குரிய விடயமே.......நன்றி பகிர்வுக்கு
----------------------------------
PUTHIYATHENRAL said...
லஞ்சம் இந்தியாவின் எல்லா துறைகளிலும் புகுந்து ஆட்டி படைக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளே! பணக்காரர்கள் பணம் இருப்பதால் தனியார் மருத்துவமனைகளை நாடி போகிவிடுவார்கள். ஏழைகள் என்ன செய்வார்கள். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்து சொன்னதற்கு நன்றி அம்பாளடியாள் தொடர்ந்து வாருங்கள் படியுங்கள் உங்கள் கருத்துக்கள் உற்ச்சாகம் அளிக்கிறது. நன்றி!