Jul 10, 2011

விஜய்யும், சந்திர சேகரும் கண்தானம் செய்வார்களா?

JULY 11, நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் 50 பேர் கண் தானம் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது.  இதையடுத்து ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் முன்னிலையில் விஜய் ரசிகர்கள் 50 பேர் கண் தானம் செய்தனர்.

சிந்திக்கவும்: பாவம் படிப்பறிவு இல்லாத இந்த ஏழை ரசிகர்களை என்னவென்று சொல்வது. இவர்கள் கண்தானம் செய்கிறார்கள் நல்ல விசயம்தான். அரசு கண்தானத்தை ஊக்கப்படுத்துகிறது, எத்தனையோ பொது நல அமைப்புகள் கண்தானம் செய்வது பற்றி கருத்தரங்குகள் நடத்துகின்றன. சரி நீங்கள்தானே கண்தானம் செய்கிறீர்கள் உங்கள் தலைவர் விஜய் செய்திருக்கிறாரா? இல்லை சந்திர சேகர் செய்திருக்கிறாரா? இதுவெல்லாம் உங்களை வைத்து மேலும் புகழ்தேட, தங்கள் அரசியல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒரு திட்டமே அன்றி வேறில்லை.

விஜய் நடித்த படத்தை பாருங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் ரசிகர் மன்றம் அமைத்து, கட்டவுட்டுக்கு பால் ஊற்றி, படத்தை நூறுநாள் ஓடவைக்க உங்கள் கைகாசை போட்டு, இப்படி கண்தானம் கொடுத்து விஜய்க்கு பெரும் புகழும் தேடி கொடுக்கும் அளவுக்கு அவர்கள் எல்லாம் ஒன்றும் பெரிய சமூக அக்கறை படைத்தவர்கள் இல்லை. அவர்கள் சம்பாதித்த பணத்தை காக்க அடுத்து அரசியலுக்கு வர, புகழ் தேட நீங்கள் எல்லாம் துருப்பு சீட்டுகள்.

கண்தானம், ரெத்த தானம் எல்லாம் எத்தனையோ சமூக அமைப்புகள் பண்ணுகின்றன அதில் உங்களை இணைத்து கொண்டு செய்யுங்கள். ரசிகர் மன்றம் அமைத்து நேரங்களை வீணாக்குவதை விட உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை கல்வி, பொருளாதாரத்தை தேடும் வழியை பாருங்கள். உங்களை நம்பி உங்கள் கும்பம் உள்ளது என்பதை மனதில் நிறுத்தி செயல்படுங்கள்.  ரசிகர் மன்றம் அமைத்து தங்கள் படிப்பை தொலைத்து வாழ்க்கை இழந்த இளஞசர்கள் எத்தனயோ பெயர்.
-மலர்-

No comments: