Jul 3, 2011

கிரிக்கெட் என்பது பணக்கார்கள் நடத்தும் சூதாட்டமே!

JULY 03, கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டே அல்ல, 11 சோம்பேறிகள் விளையாட பல்லாயிரக்கணக்கான சோம்பேறிகள் உட்கார்ந்து பார்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

கால்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், கை பந்தாட்டம், சடுகுடு போன்ற வீர விளையாட்டுகள் இருக்க இந்த கிரிக்கெட் எப்படி இந்தியாவில் வந்தது என்பதே ஆச்சரியமான விடயம்தான்.

பின் ஏன் இந்த பார்ப்பன ஊடகங்களால் கிரிக்கெட் தூக்கி நிறுத்தப்படுகிறது என்று பார்த்தால் இந்த விளையாட்டில் பார்பனர்களின் அதிகம் மிகைத்திருப்பதே இதற்க்கு முக்கிய காரணம்.

கிரிக்கெட் என்பது வணிகமாக, தொழிலாக மாற்றப்பட்டு பணம் காய்க்கும் மரமாக மாறி விட்டது. கிரிக்கெட்டில் விளையாடுபவர்களுக்கு ஆண்டு சம்பளம் அல்லாமல் ஒவ்வொரு முறை விளையாடும் பொழுதும் லட்சக்கணக்கில் சம்பளம்.

வெற்றி பெற்று விட்டால் மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் ஊக்கத் தொகைகள், விலை உயர்ந்த வீட்டு மனைகள், பரிசு மழைகள் ஏராளம் ஏராளம். 5 நாள் கிரிக்கெட் (Test) என்ற கழுதை தேய்ந்து இப்ப ஒரு நாள் கிரிக்கெட் என்ற கட்டெறும்பாகி விட்டது. இப்பொழுது இப்ப அதுவும் தேய்ந்து அய்.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) என்று அரை நாள் போட்டியாக ஆகிவிட்டது.

பெரும் பண முதலைகளும், சினிமாக்காரர்களும் கிரிக்கெட் விளையாட்டுக் காரர்களை ஏலம் கூறி விலை பேசும் கேவலமாகி விட்டது. கோடிக் கணக்கான ரூபாய்க்கு இவர்கள் விலை பேசப்படுகிறார்கள்.
நாட்டுக்காக விளையாடும் போட்டிகளில் காட்டும் ஆர்வத்தைவிட அய்.பி.எல். போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். காரணம் கோடி கோடியாகப் பணம் கொட்டுகிறதே அதுதான்.

இந்த அய்.பி.எல். போட்டியை நேரில் பார்ப்பதற்கு டிக்கெட் 25 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய்களாம். இவ்வளவு பணம் கொடுத்து இதை ஈர் பார்ப்பார்கள் பணக்கார்கள் மட்டுமே. ஏழைக்கு ஒரு வேலை உணவில்லை இங்கே இவர்கள் கோடிகணக்கில் பணத்தைவைத்து இது போன்ற சூதாட்டங்களை நடத்தி கும்மாளமிடுகிறார்கள். இவ்வளவுப் பணம் புழங்கும் இந்த விளையாட்டுக்கு வரி விலக்காம்! கேளிக்கை வரிகூடக் கிடையாதாம். ஏழை மக்களை சுரண்டி தின்று கொளுத்த அரசு இயந்திரங்கள் மக்களுக்கு கொடுக்கும் பரிசுதான் இது.

No comments: