May 31, 2011

ஈழத்தமிழர் படுகொலை புதிய சிடி வெளியிடுகிறார் வைகோ!!

JUNE 1, ஐநாவின் பொதுச்செயலளாரிடம் மூவர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்,

சேனல் -4’ல் இருந்து புதிதாக சில பிரேம்கள் எடுத்து குறுந்தகடு ஒன்று தாயரித்துள்ளேன்.

ஐநா மன்றத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையைப்பற்றி நான் சொல்லச் சொல்ல அந்த காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும்.

 50 நிமிடங்கள் ஓடும் அந்த குறுந்தகடு ஒரு வாரத்தில் வெளியிடப் போகிறேன்.

நான் தம்பிமார்களை,  இளைஞர்களைக் கேட்கிறேன். ஒவ்வொரு கல்லூரி வாயில்களிலும் நின்று வரும் பிள்ளைகளிடம் கொடுங்கள்.

அதில் நான் மதிமுகவைச் சொல்லவில்லை. பம்பரம் சின்னத்தைக் காட்டவில்லை. கட்சிக்கொடியை காட்டவில்லை.

நிலைமை என்னவென்று மாணவ, மாணவிகளுக்கு தெரியவேண்டும். அவர்கள் அந்த குறுந்தகட்டை வீடுகளுக்கு எடுத்துச்சென்று எல்லோரையும் பார்க்க வைக்கவேண்டும்.

அன்று இரவு சாப்பிடமுடியாது; அன்று இரவு தூங்கமுடியாது. குண்டு பாய்ந்திருக்கிறது ஒரு தாய்க்கு.

குண்டு பாய்ந்ததின் விளைவாக அந்த குண்டு முதுகு பக்கமாக வெளியேறியிருக்கிறது.

அப்போது இதயமும்,  நுரையீரலும் ரத்தில் துடிப்பது அந்த குறுந்தகட்டில் இருக்கிறது. அப்படிச்சாகிறாள். அதைப்பார்த்தால் சாப்பிடமுடியாது; தூங்க முடியாது.

பச்சைக்குழந்தைகள் எப்போது குண்டு வீசுவார்கள் என்று பயந்து பதுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா! அவர்கள் புலிகளா.

இசைப்பிரியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாளே. அவளை எப்படி கற்பழித்தோம் என்பதை சிங்கள மொழியில் பேசி செல்போனில் பதிவு செய்திருக்கானுங்க என்று தெரிவித்தார்.

1 comment:

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.



Share