Mar 22, 2011

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!

மார்ச் 22,: சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றிய‌ை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என மத்திய அமைச்சர் மு.க., அழகிரி பேட்டியளித்தார். மதுரையில் இன்று மத்திய அமைச்சர் அழகிரியை சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் நிர்வாகி முத்தையா பசும்பொன் சந்தித்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., வுக்கு ஆதரவு நல்குவதாக அவர் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ரத்னா 50 பேருடன் , அமைச்சர் அழகிரி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அழகிரி, தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

அ.தி.மு.க., கூட்டணி தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் இயங்குவது போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 13ம் தேதி தேர்தலுக்குப் பின்னர் மக்கள் அ.தி.மு.க., வென்டிலேட்டரை அகற்றி விடுவார்கள். அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்ததன் மூலம் விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் விஜயகாந்த் படாத பாடு படுவார் என்றார். மேலும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற வியூகம் வகுத்து தர இருப்பதாகவும் கூறினார்.

2 comments:

ஜெ.சதீஷ் குமார் said...

அப்படி என்றால் இவர் மட்டும் ரோசக்காரரா? காங்கிரஸ் பின்னாலயே சென்று பிச்சை எடுத்து ,வடிவேலுவை துணைக்கு அழைத்த கைப்புள்ள !!!இங்கு யாருக்கும் ரோஷம் இல்லை.http://jskpondy.blogspot.com/2011/03/blog-post_22.html

YESRAMESH said...

டெல்லில எடுத்த காவடி எதுல சேத்தி