Jan 1, 2011

முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்.

இலங்கையின் முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்''அண்ணா, முழங்கால் அளவு தண்ணீர். படுக்கக்கூட இடம் இல்லை. மடியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடுற மாதிரியே, அன்றாடக் கடன்களைக் கழிக்கவும் அல்லாட வேண்டிய நிலை. மாற்று உடைகள் இல்லாமல் தவிக்கிறோம் அண்ணா. இங்கே சாகக்கூட எங்களுக்கு வழி இல்லை. ஒருவர் குரல்வளையை இன்னொருவர் நெரிச்சு செத்தாத்தான் உண்டு!''

என் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் உளவுத் துறை பெருமகன்களே... இந்தக் கண்ணீரையும் கதறலையும் உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். அப்படியாவது அவர்களுடைய கல் மனது கரைகிறதா எனப் பார்க்கலாம். ஈழத்தில் இழவு விழுந்தாலும், இராமேஸ்வரம் இரத்தக்களறி ஆனாலும், தனுஷ்கோடியில் தமிழன் பிணம் மிதந்தாலும்... மூச்சுவிடாமல் இருப்பது எங்களின் தமிழர் குணம். ஆனால், 'ஐயோ’ எனக் கதறினால், 'அனுப்புங்கள் போலீஸை...’ என்கிற உத்தரவு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடும்.

புலம்பெயர் தமிழர்கள் மஹிந்தவை தண்டிப்பார்கள் : வைகோ உறுதி

சர்வதேசம் சுமத்தியுள்ள ஈழத் தமிழர்கள் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் விடுவிக்கப்பட்டுவிட முடியாதென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், யுத்தக் குற்றம் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை தண்டிக்காமல் விடமாட்டார்கள் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் முடிவு செய்வார் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த 2011ஆம் புத்தாண்டில் தமிழக அரசியலில் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்படும். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, முல்லை பெரியாறு விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் 100 கோடி ரூபா வெளிநாட்டு நாணயம் மோசடி.

கொழும்பில், பதிவுசெய்யப்படாத நிறுவனம் ஒன்றின் பேரில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து சுமார் 100 கோடி ரூபா வெளிநாட்டு நாணய மோசடியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் வங்கி முகாமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைத்து பதிவுசெய்யப்படாத நிறுவனத்தின் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து 100 கோடி ரூபா வெளிநாட்டு நாணய மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து ஆடை வகைகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று வருவதாக சந்தேக நபர்களால் எமக்கு கூறப்பட்டது. எனினும் அத்தகைய ஒரு கப்பல் வருவதாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. இச்சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வங்கியை நாம் நேற்று சோதனைக்கு உட்படுத்தியதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டோம். அந்த விசாரணையின் போது இவர்கள் இவ்வாறான மோசடிகளில் கடந்த 8 மாதங்களாக மேற்கொண்டு வருவதாக தெயவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மனித உரிமையா? கிலோ என்னவிலை? என்று கேட்க்கும் இந்தியா.

மனித உயிரை காக்கும் மருத்துவ சேவை, பணம் பறிக்கும் தொழிலாக மாறியிருப்பதையும், பணத்திற்காக உடல் உறுப்புகளை திருடி விற்கும் மருத்துவர்கள் பெருகி வருவதையும் நாம் அறிவோம். ஆனால் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை பார்ப்பது அரிது. அதிலும் மருத்துவத்தோடு நில்லாமல் மக்கள் படும் துன்பங்களுக்காகப் போராடும் மருத்துவர்களை காண்பது அரிதிலும் அரிது. அத்தகையதொரு அற்புதமான மருத்துவர்தான் பினாயக்சென். குழந்தைகள் நல மருத்துவத்தில் உயர்படிப்பு படித்து, மருத்தவத்துறையில் பிரபலமானவர் – கிராமபுறங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் குதிரைக் கொம்பாகிவிட்ட இக்காலத்தில் சத்தீஸ்கரில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை செய்து வருபவர் டாக்டர் பினாயக்சென்.

மேற்குவங்கம், ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் புதைந்து கிடக்கும் ஏராளமதான கனிவளங்களை கொள்ளையடித்துச் செல்ல தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தாராள அனுமதி கொடுத்துள்ளது மன்மோகன் அரசு. அதற்காக அப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை பலாத்காரமாக அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய, மாநில அரசுகள். தங்களின் வாழ்விடங்களை பாதுகாத்துக்கொள்ள போராடுவரும் பழங்குடி மக்கள் மீது, போலீசு மற்றும் இராணுவத்தைக் கொண்டும், “சல்வாஜூடும்” போன்ற சட்டவிரோத கொலைகார குழுக்களைக் கொண்டும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவிவருகிறது மன்மோகன் அரசு. இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்தான் மருத்துவர் பினாயக்சென்.

நமது இயற்கை வளங்களை அன்னியர்கள் கொள்ளையடித்துச் செல்ல அனுமதித்து வரும் தேசத் துரோக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சேவகர்களான மக்கள் விரோத போலீசுக்கும் மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது. “பினாயக்சென்” மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டார்” என்று பொய் குற்றம் சாட்டி போலியான ஆவணங்களைக் காட்டி பொய் வழக்கு போட்டது சத்தீஸ்கர் போலீசு. காவல்துறையின் போலியான ஆவணங்களை அப்படியே ஏற்றும் பினாயக்சென் தரப்பு உண்மையான ஆதாரங்களை ஏற்க மறுத்தும் மருத்துவர் பினாயக்சென், தோழர் நாராயன் சன்யால், பிஜூஷ்குஹா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, ராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம்.

இந்நீதிமன்ற தீர்ப்பை, “தீர்ப்பு வழங்கும் நெறிமுறைக்கே எதிரானது” என விமரிசத்து பினாயக்சென்-ஐ விடுதலை செய்யகோரி உள்ளது, சர்வதேச பொது மன்னிப்பு சபை. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், “நான் அறிந்தவரை பினாயக் சென் அற்புதமான மனிதர். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இத்தீர்ப்பிற்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். நாமும் மருத்தவர் பினாயக் சென் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

அறிவியல் மாநாடா அல்லது வெங்காய மாநாடா?


சென்னை : இந்திய அறிவியல் காங்கிரசின் 98வது மாநாட்டை நாளை துவக்கி வைக்க, பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். பிரதமர் வருகைக்காக, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகள் டில்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். இவர்கள் விழா நடக்கும் இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

விமான நிலையம் முதல் கிண்டி ராஜ்பவன் வரை உள்ள அனைத்து பகுதிகளும், இன்று காலை முதல் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்காக 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் கார் செல்லும் இடங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, சென்னை நகர கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலும், விழா நடக்கும் இடம், பிரதமர் வருகை, புறப்பாடு போன்ற இடங்களில் புறநகர் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலும் போலீசார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.கடலோர பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரதமர் கார் செல்லும் பாதையில், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

சிந்திக்க : மக்கள் அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்வால் தவிக்கிறார்கள் இவர்கள் என்ன வென்றால் அறிவியல் மாநாடு நடத்துகிறார்கள். வெங்காயத்திற்கு முதலில் பதில் சொல்லுங்கள். மக்கள் உயிர் வாழ வழியில்லை இவர்களுக்கு பாதுகாப்புக்கு மட்டும் குறைவில்லை.

ராஜபட்ச ஆட்சியில் இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது.

கொழும்பு, ஜன.1- அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு நீடிக்கும் வரை இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது என்று முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில், இலங்கையின் வீழ்ச்சியை யாரேனும் தடுப்பதற்கு முயன்றால் என்னைப் போல் அவர்களுக்கும் சிறைத் தண்டனையே கிடைக்கும். அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயத்தில் நாட்டு மக்கள் உள்ளனர். ராஜபட்ச தலைமையிலான ஆட்சி நீடிக்கும் வரை இலங்கைக்கு உண்மையான புத்தாண்டு என்பதே கிடையாது." என்று சரத் பொன்சேகா கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்திக்க: இராசபக்சே ஆட்சியில் இருக்கும் வரை இலங்கையில் புத்தாண்டே கிடையாது என்பதுபோல் சிங்களரின் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைத் தமிழர்களுக்கும் புத்தாண்டே கிடையாது. தமிழ் ஈழம் மலரும் நாளே அவர்களுக்குப் புத்தாண்டாகும்.

மத்திய அரசை மிரட்டும் விஸ்வ ஹிந்து பரிஷத்.

அயோத்தி, ஜன.1- அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலத்தை தரவேண்டும் என்று ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக்சிங்கல் மிரட்டிள்ளார். அயோத்தியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வழங்காவிட்டால் பெரியளவில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். எனினும், புதிய போராட்டத்தை உடனடியாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம். ராமர் கோயிலுக்கான கல் சிற்ப வேலைகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும்." என்று அசோக்சிங்கல் கூறினார்.

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் 'விக்கிலீக்ஸ்' க்கு கிடைத்தது எப்படி?

அமெரிக்க அரசு துறைகளுக்கிடையே தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நிகழ்ந்த குளறுபடிகளே, அரசு ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" இணையதளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசாங்க தகவல்களை, அரசு துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதற்காக 2006 ஆம் ஆண்டு 'நெட் சென்ட்ரிக் டிப்ளமசி' என்ற இணைய உபகரணம் உருவாக்கப்பட்டது. அந்த இணைய உபகரணத்தை பயன்படுத்தும் போது சில குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன. இந்த குளறுபடிதான் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசு தலைமைக்கு அனுப்பிய 2,50,000 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், விக்கிலீக்ஸ்' இணைய தளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்து விட்டது என்று அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ' வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நாகரீகத்திற்குப் பின் அநாகரிகமா? குறளுக்குப் பின் மனுநீதியா? : தோழர் மருதையன்.


பொருளின்றி உச்சரிக்கப்படும் சில சொற்கள் உண்டு. எனினும் அவை பொருளற்ற சொற்களல்ல. ”இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி? என்ற வியப்புக்குறி இத்தகைய ரகம்.
சாதிப்படுகொலை மதக்கலவரம், வரதட்சணைக் கொலை உடன் கட்டையேற்றம்
போன்ற சமூக ஒடுக்கு முறைகளானாலும், நரபலி, தீமிதி, சோதிடம், வாஸ்து சாத்திரம்
சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற மூட நம்பிக்கைகளானாலும், கல்வியறிவின்மை மருத்துவ வசதியின்மை, குடிநீர்ப் பஞ்சம், பட்டினிச்சாவு போன்ற வர்க்கச் சுரண்டல் களானாலும், மரண தண்டனை, துப்பாக்கிச் சூடு, காவல்நிலையக் கொலை போன்ற அரசு ஒடுக்கு முறைகளானாலும் இதே கேள்வி: இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?

கேட்பவர்கள் பாதிரியார்களாகவும், கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால் கேள்வி நியாயம்தான். கேட்பவர்கள் அறிவாளிகள் கேட்கப்படுவதோ – பாவம் நாட்காட்டி!
இருபதாம் நூற்றாண்டு என்ற நாள் என்ன செய்யும் ? நாட்காட்டி என் செய்யும்? டிசம்பர்-31 இரவு தனது கடைசி காகிதத்தையும் உதிர்த்த நாட்காட்டி ”யாமிருக்க பயமேன்” என்று இரண்டு துருப்பிடித்த ஆணிகளை மட்டுமே தனது பதிலாக நீட்டுகிறது. 2000 ஆண்டுகள் முடிந்து விட்டன, அதற்கென்ன? தனது அநாகரிகக் கொள்ளைக்கு ’எத்தனை ஆண்டுகள்’ – என்று எண்ண வேண்டிய ஜெயலலிதா ’இந்திய நாகரீகத்திற்கு 5000 ஆண்டு’ – என்று கணக்குச் சொல்கிறார்.

மதவாதம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அடிமைகளோ பரிதாபத்துக்குரிய கிறிஸ்துவைக் காலனியாதிக்க வாதியாக்குகிறார்கள். கலியுகத்திற்கு 5001-ஆம் ஆண்டு என்று பஞ்சாங்கத்தை நீட்டுகிறார்கள் -அட்டையில் பார்ப்பனப் பாம்பு சீறுகிறது.5000 ஆண்டுகளாகவே இருக்கட்டும். அதற்கென்ன? பூச்சியங்கள் என்ன செய்யும்? பூச்சியங்களின் மாயக்கவர்ச்சியில் கணிதம் மயங்கலாம்; வரலாறு மயங்குவதில்லை. மனித குலத்தின் வரலாற்று நெடுஞ்சாலையில் தப்பிப் பிழைத்த ஒரு மைல்கல் கிறிஸ்து சகாப்தம். சாலிவாகன சகாப்தம் விக்கிரம சகாப்தம் – எனத் தங்கள் திருப்பெயரால் கல்லை நட்ட கோமாளிகளின் நடுகற்களையும் காணவில்லை. திருச்சபையின் ஆட்சியை முடித்து வைத்த மூலதனம் ஆண்டவருக்கு வழங்கிய மானியம் ”கிறிஸ்து சகாப்தம்.”

கி.பி.2001 பூச்சியங்கள் கூடக்கூட மனிதகுலத்தின் முன்னேற்றம் கூடுமெனில் வயது கூடினால் மனிதனின் அறிவும் கூட வேண்டும். இருபதால் நூற்றாண்டிலா இப்படி என்ற வியப்புக்கு விடை அறிஞர் பெருமக்களே, இருபதாம் நூற்றாண்டில்தான் இப்படி!
தங்கம், வெள்ளி, வைரம், இரும்பு, செம்பு, துத்தநாகம், யுரேனியம், கோபால்ட் – போன்ற அனைத்து உலோகங்களையும் நெல், வாழை, கரும்பு, சோளம், காப்பி என்றனைத்துப் பயிர்களையும் விளைவிக்கும் – சயர்*1 பிச்சைக்கார நாடு!

இவையெதுவுமில்லாத ஜப்பான் பணக்கார நாடு. இருபதாம் நூற்றாண்டில்தான் இது சாத்தியம்.
வானம் பொய்த்த போது மனிதர்கள் பஞ்சத்தால் செத்திருக்கிறார்கள். கறந்த பாலைச் சாக்கடையிலும் விளைந்த கோதுமையைக் கடலிலும் கொட்டிவிட்டு ஆண்டுக்கு 150 லட்சம் மனிதர்களைப் பட்டினி போட்டுச் சாகடிப்பது இருபதாம் நூற்றாண்டில்தான். கொள்ளை நோய்களுக்கு மருந்து தெரியாமல் மக்கள் மடிந்த நூற்றாண்டுகளுண்டு. மருந்து வியாபாரிகளின் கொள்ளையால் மக்கள் மடிவது இருபதாம் நூற்றாண்டு.

துன்பத்தால் துடிக்கும் நோயாளியின் சட்டைப் பையைத் துழாவியிருப்பாரா ஹெராக்ளிடஸ்?*2
கையைப் பிடிக்குமுன் பையைப் பிடித்துப் பார்க்கிறார்கள் அவரது இருபதாம் நூற்றாண்டு சீடர்கள். முன்னேற்றம் காலத்தால் அளவிடப்படுவதில்லை. சிந்துவெளியின் நகர நாகரிகத்தை அழித்தனர் - ஆரியக் காட்டுமிராண்டிகள். காலத்தால் பிந்தையதென்பதால்
ஆரியம் – முன்னேற்றமலல.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளுக்குப் பிந்தையதுதான் மனுநீதி.
பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்தான் லூயி போனபார்ட்.*3அக்டோபர் புரட்சிக்குப் பிந்தையதுதான் எல்ட்சினின் ஆட்சிக் கவிழ்ப்பு. முன்னேற்றம் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை. காலம்தான் முன்னேற்றத்தால் அடையாளம் இடப்படுகிறது.இயற்கையுடன் மனிதன் கொண்ட உறவினால் காலத்தை அடையாளமிடுவதாயின் அன்று கற்காலம். இன்று கணினிக் காலம்.
மனிதனுடன் மனிதன் கொண்ட உறவினால் அடையாளமிடவதாயின் இது முதலாளித் துவத்தின் காலம்; ஏகபோக மூலதனத்தின் காலம். இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி என்று கேள்விக்குறியிடுவோர் முதலாளித்துவச் சமூகத்திலுமா இப்படி என்று சொல்லிப் பாருங்கள் கேள்வியின் முரண் கேட்பவரின் நாக்கையே அறுக்கும்.

அநீதியின் திரண்ட வடிவம் மூலதனம் பாட்டாளி வர்க்கம் உழைக்க உழைக்க,
பாற்கடலைக் கடையைக் கடைய, மூலதனம் எனும் ஆலகால விஷம்தான் திரண்டு வருகிறது.
கடலின் அடியாழத்தில் கிடந்த அனைத்துக் கசடுகளும் புதிய வீரியத்துடன் மிதந்து எழும்புகின்றன.ஆப்பிரிக்கப் பழங்குடிகள்,இந்தியச் சாதிகள்,ஆப்கான் இனக்குழுக்கள்
எகிப்தி மம்மிகள், இறந்தகாலத்தின் ஆவிகளனைத்தும் மூலதனத்தின் குரலில் அலறுகின்றன.

’21-ஆம் நூற்றாண்டிலா!’ என்ற வியப்புக்குறியைக் கேள்விக்குறியாக்குங்கள்.நாகரீகத்திற்குப் பின் அநாகரிகமா? குறளுக்குப் பின் மனுநீதியா? சோசலிசத்திற்குப் பின் முதலாளித்துவமா?
என்று கேட்டுப் பழகுங்கள்.

நன்றி: இதன் மூல உரைநடை வினவு.

வெங்காயத்தை பதுக்கும் கேடுகெட்ட வியாபார முதலைகள்.

புதுடெல்லி,ஜன.1: இந்தியாவில் சமீபத்தில் பெய்த பருவ மழையை காரணங்காட்டி வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் உண்மையில் 2009 ஆம் ஆண்டை விட 2010 ஆம் ஆண்டு வெங்காயம் அதிகமாகவே உற்பத்திச் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
வெங்காயத்தின் விலை உயர்வதை கருத்தில் கொண்ட பெரிய வியாபார முதலைகள் வெங்காயத்தை பதுக்கி வைத்ததால் அதன் விலை உயர்ந்து சாதாரண மக்களின் வாழ்க்கை திண்டாட்டமானது. இதனைத் தொடர்ந்து அரசு வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை முழுமையாக ரத்துச் செய்ததோடு, ஏற்றுமதிக்கும் தடை விதித்தது. இதுதவிர தற்போது பாகிஸ்தானிலிருந்து அதிக அளவில் வெங்காயத்தை இறக்குமதிச் செய்ய ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வருகிற 7-ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து பல ஆயிரம் டன் வெங்காயம் இந்தியாவுக்கு இறக்குமதியாகவிருக்கிறது.

குஜராத்தில் ஜனநாயகத்தின் ஆட்சியா? மோடியின் சர்வாதிகார ஆட்சியா?

அஹ்மதாபாத்,ஜன.1:குஜராத் இனப்படுகொலையின் போது கோத்ராவுக்கு அருகிலுள்ள பந்தர்வாடாவில் முஸ்லிம்களை கூட்டுப்படுகொலைச் செய்து குழி தோண்டி புதைத்த சம்பவத்தை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் ராகுல் சிங்கின் மீது வழக்குத் தொடர்ந்து அவரை தேடுகிறது குஜராத் மோடி அரசின் போலீஸ்.

ராகுல் சிங்கைத் தவிர மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டின் தலைமையில் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸின்(சி.ஜெ.பி) முன்னாள் உறுப்பினர் ரயீஸ் கான் உட்பட ஐந்து நபர்கள் மீது குஜராத் போலீஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ராகுல் சிங்கை விசாரிப்பதற்கான சம்மனுடன் குஜராத் போலீஸ் அவருடைய வீட்டிற்கு நான்கு வேன்களில் படையெடுத்தனர். இதனால் அந்த இடத்தின் சுற்றுப்புற சூழல் பரபரப்பானது. அந்த நேரத்தில் ராகுல் வீட்டில் இல்லை.பந்தர்வாடாவில் கூட்டுப்படுகொலைச் செய்து குழித்தோண்டி சம்பவத்தை செய்தியாக வெளியிட்டக் காரணத்தால் ராகுலிடம் விசாரணைச் செய்வதற்கு கைதுச் செய்ய வந்துள்ளதாக போலீஸ் அவருடைய வீட்டினரிடம் தெரிவித்தனர். ஆனால், ராகுலின் தந்தையும், ஹிந்துஸ்தான் டைம்ஸின் போபால் எடிசன் ரெஸிடண்ட் எடிட்டரான என்.கே.சிங் சம்மன்ஸை கைப்பற்றவில்லை. தேசிய மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களின் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து விசாரித்ததால் போலீசார் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

ராகுல் சஹாரா தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிய வேளையில்தான் இச்சம்பவம் வெளியானது. அதன் பிறகு அவர் போபாலில் டைம்ஸ் நவ்வில் பணியாற்றினார். தற்பொழுது அவர் டெல்லியில் ஹெட்லைன் டுடேயில் பணியாற்றி வருகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படு கொலையின்போது பந்தர்வாடாவில் அநியாயமாக கொல்லப்பட்ட 27 முஸ்லிம்களின் உடல்களை லூனாவாதாவில் பனாம் நதிக் கரையில் பெரிய குழியைத் தோண்டி மொத்தமாக புதைத்தனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டில் இனப்படு கொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நதிக் கரையில் மண்ணைத் தோண்டும் வேளையில் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களில் சிலர் இச்சம்பவத்தை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.தொடர்ந்து ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் அமைப்பு இவர்களுக்கு சட்ட உதவியை அளித்து வருகிறது.

Dec 31, 2010

சென்னையில் 34-வது புத்தக கண்காட்சி.

2011 புத்தாண்டு சிந்தனைகள்.

சிந்திக்கவும்: புத்தாண்டு கொண்டாட்டம் என்றபெயரில் உலகம் முழுவதும் வெடிக்கப்படும் வெடிகள் எத்தனையோ கோடி ரூபாய்களை தாண்டும். எத்தனையோ நாடுகளில் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். ஒருவேளை உணவு இல்லாமல் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இந்த சூழலில் இது போன்று பணத்தை கொண்டாட்டங்கள் என்ற பெயரில் வீணடிக்காமல் இந்த புத்தாண்டில் அது போன்ற மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த பணங்களை அனுப்பி கொடுத்தால் அதில் கொஞ்ச மக்களை காபாற்ற உதவும். இது ஒவ்வொரு மனித நேயம் உள்ள மனிதனின் கடமையாகும். இந்த புத்தாண்டில் இது போன்ற கொண்டாட்டங்களை தவிர்த்து. தினம்தினம் மருத்துவ மற்றும் உணவு வசதி இல்லாமல் சாகும் மக்களை பற்றி சிந்திப்போமாக, அவர்களது நல்வாழ்வுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் என்று உறுதி எடுப்போம். அன்புடன் ஆசிரியர்.

புத்தாண்டை வரவேற்கும் உலகம்.

புத்தாண்டை வர்ணமயமான வாண வேடிக்கைகளுடனும் மகிழ்ச்சி ஆரவாரங்களுடனும் வரவேற்பதற்காக இலட்சக் கணக்கான மக்கள் சிட்னி "ஹாபர் பிரிட்ஜ்' ஜில் கூடியுள்ளனர்.அத்துடன் கண்களைக் கொள்ளை கொள்ளும் வர்ணமயமான அலங்காரங்களுடன் புத்தாண்டை வரவேற்பதில் உலகளவில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற அதீத ஆர்வத்துடன் அவுஸ்திரேலியர்கள் ஹாபர் பிரிட்ஜ்'ஜை அலங்கரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு மலரும் நேரத்தில் குறைந்தது 15 இலட்சம் பேர் இங்கு குழுமியிருப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆசியாவிலும் களைகட்டியுள்ள நிலையில் வியட்நாம் முதல் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.அமெரிக்கா கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கின்ற நிலையிலும் நியூயோர்க்கின் ரைம்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு வேளையில் சுமார் 10இலட்சம் பேர் கூடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

வியட்நாமியர்களின் லுனார் வருடப் பிறப்பையே வழமையாகக் கொண்டாடி வருகின்ற போதும் மேற்குலக கலாசாரத்தின் செல்வாக்கு இங்கு அதிகரித்துள்ளதன் காரணமாக இம்முறை புதுவருடக் கொண்டாட்டங்கள் களை கட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடி நிலையை மறந்து புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஐரோப்பியர்களும் மூழ்கியுள்ள நிலையில் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களில் புத்தாண்டை மிகக் கோலாகலமாக வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய நகரங்களை தகர்க்க 1000 லாரிகள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல்.

சென்னை: நாடு முழுவதும் பெரும் நாச வேலைகளை நிகழ்த்தி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 1000 லாரிகள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 2 லாரி டிரைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர். அவர்கள்தான் இத்தகவலைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமின் இந்தத் திட்டத்தை அவனது கூட்டாளியான சோட்டா ஷகீல் நிறைவேற்ற திட்டமிட்டு வருவதாகவும் அந்தத் தகவல் கூறினாலும், இல்லாத தாவுத் இப்ராஹீம் பெயரை பயன்படுத்தி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்த திட்டத்தை தீட்டி இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், இதில் 90 சதவீதமானது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பது நாடறிந்த செய்தியே. எனவே இந்த தாக்குதல் திட்டமிடுதலிலும் ஹிந்துவா இருந்து செயல்படுவாதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்களது சதித் திட்டத்திற்காக பல லாரி டிரைவர்களை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பிடித்திருப்பதாகவும், இந்த லாரிகள் ஆங்காங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. புத்தாண்டையொட்டி தீவிரவாத தாக்குதல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்ப்பட்டுள்ளது.

திமுகவிற்கு தோல்வி பயம்: புதிய கட்சிகளை கண்டு பயப்படுகிறது.

சென்னை,டிச.31:திருவொற்றியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரம் செய்துக் கொண்டிருந்த சோசியல் டேமாகரடிவ் பார்ட்டி ஒப் இந்தியா கட்சி தொண்டர்கள் மீது தி.மு.கவைச் சார்ந்த ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வருகிற பிப்ரவரி மாதம் சென்னையில் எஸ்.டி.பி.ஐயின் மண்டல மாநாடு நடைபெற உள்ளதையொட்டி எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டர்கள் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டிருந்த எஸ்.டி.பி.ஐகட்சி உறுப்பினர் விநோத்தை தி.மு.கவினர் தாக்கியுள்ளனர். இதில் விநோத் காயமடைந்துள்ளார்.

இதற்கு முன்னர் தி.மு.கவினர் அம்லு கோவிந்தராஜன் என்ற பெண்மணியின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இச்செய்தியை கேள்விப்பட்டதும் சென்னை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரஷீத் மற்றும் அமீர் தலைமையில் எண்ணூர் சாத்தங்காடு போலீஸ் ஸ்டேசனை நோக்கி படையெடுத்தனர். போலீசார் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்ய மறுக்கவே இவர்கள் இரவு 1.30 மணிவரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ தொண்டர்களின் தொடர் வற்புறுத்தலுக்கிணங்க போலீசார் தி.மு.கவினர் மீது வழக்குப் பதிவுச் செய்தனர். தமிழகத்தில் செயல்படும் பற்பல புதிய கட்சிகளின் தொண்டர்கள் தொடர்ந்து பெரிய கட்சிகளால் தக்கபடுவதும், அவர்களை வளரவிடாமல் தடுப்பதும் ஒரு ஜனநாயக மரபு கிடையாது என்று நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

Dec 30, 2010

ஆச்சரியம் ஆனால் உண்மை 11000 ஹெச் 1 பி விசாக்கள் வாங்க ஆளில்லை!

உயர்நடுத்தர வர்க்கத்து இந்தியர்களைப் பொறுத்தவரை சொர்க்கத்துக்கான டிக்கெட் எதுவென்று கேட்டால், அமெரிக்க 'H 1 B விசா' என்பார்கள் தயங்காமல். இந்திய எல்லைக்குள் அத்தனை கட்டுப்பெட்டித்தனங்களையும் பத்திரமாகக் காப்பாற்றி, அதை கீழிருப்பவன் தலையில் சுமத்திவிட்டு, அமெரிக்க முதலாளியிடம் சாசனத்தில் கையெழுத்திட்ட கையோடு, மெக்டொனால்ட், கெண்டுகி, கோக், டின் பீர், வார இறுதிகளில் குஜால் பார்ட்டி, வெக்கேஷனில் இந்தியப் பெண்ணோடு திருமணம், அமெரிக்காவில் டிவோர்ஸ் என 'சுதந்திர' லைப்ஸ்டைலுக்குத் தாவ (இவையெல்லாம் இந்தியாவி்லேயே கிடைப்பது வேறு விஷயம்... ஆனால் இங்கே 'பார்த்துவிடுவார்களே'!), கட்டாயத் தேவை இந்த H1B.

ஆனால் ஆச்சர்யம் பாருங்கள் பல இந்தியர்களின் கனவான இந்த H1B-ஐ இன்று வாங்க ஆளில்லாத நிலை! கிட்டத்தட்ட 11000 H1B விசாக்கள், வருடம் முடியும் இந்தத் தருவாயிலும் தேங்கி நிற்பது, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பெரும் வியப்பைத் தந்துள்ளது. அவர்கள் அனுபவத்தில் இப்படி ஒரு தேக்கம் இதுவே முதல்முறை.

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஆண்டுக்கான H1B விசாவுக்கான கோட்டா 65000. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது. 2009-ல் கூட டிசம்பர் 21-ம் தேதியே இந்த அளவை எட்டிவிட்டோம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் 11000 விசாக்கள் வாங்கப்படாமலேயே உள்ளது", எனத் தெரிவித்துள்ளது (இந்த விசாவுக்கான கட்டணம் எக்கச்சக்கம்...வருமானம் போய்விட்ட கவலை அவர்களுக்கு!).

உடனே, தாயகத்தின் மீது அத்தனைப் பாசமா நம்மவர்களுக்கு என யாரும் சிலாகித்துவிட வேண்டாம். இந்த விசாக்கள் தேங்கிக் கிடக்கக் காரணம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் பரிதாப நி்லைதான். இன்னும் அங்கே வேலை இழப்புகள் நின்றபாடில்லை. பொருளாதார வளர்ச்சி இப்போதும் 3 சதவீதத்தைத் தாண்டவில்லை. இதுவரை உலக போலீஸ்காரனாகத் திகழ்ந்த அமெரிக்கா, விக்கிலீக்ஸ் விவகாரத்தில் உலகின் வில்லனாகப் பார்க்கப்படுகிறது. வெளியில் சொல்லாவிட்டாலும், பல நாடுகள் அமெரிக்க உறவை அளவோடு பேண முயலும் நிலை... முக்கியமாக அமெரிக்காவில் சம்பளம் மிகவும் குறைந்துவிட்டதாம்! இத்தனையும் சேர்த்து, H1B விசாக்களைத் தேங்க வைத்திருக்கிறது. இன்றைய தேதிக்கு, அமெரிக்காவுக்கு ஒரு 'ஆல்டர்நேட்' இருக்குமா என தீவிரமாகத் தேடுகிறார்கள் இந்தியாவின் 'ஹைடெக் அப்பர் மிடில்கிளாஸ் ஆசாமிகள்'!!

ஊழலோ! ஊழல்! : ஊழல்களில் இந்தியாவுக்கு முதலிடம்.

எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது இந்தியா. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா. இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது. பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை! இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் இருந்தே இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

1) 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு'

2) சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி: இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்! இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது. இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.
சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3) எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை: மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4) ஹர்ஷத் மேத்தா ரூ 5000 கோடி: லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5) வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி): கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

6) தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி): தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

8) கேதன் மேத்தா (ரூ 1000 கோடி): ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9) உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி): உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10) ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி): பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

பாரதிய ஜனதா சவப்பெட்டி ஊழல், 2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி... இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது. இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.

நாகர்கோவில், டிச.30: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தமிழகத்தில் திமுக தலைவர்களும் ராசாவைப் பாதுகாக்கும் வகையிலான அணுகுமுறையில் ஈடுபட்டுள்ளனர். அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது கடைப்பிடிக்க வேண்டிய 3 விதிகள் குறித்து அப்போதைய அமைச்சர் ராசாவுக்கு பிரதமர் 2 கடிதங்களை எழுதியிருக்கிறார். அவற்றுக்கு ராசா தரப்பிலிருந்தும் பதில்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. இதை பிரதமர் ஏன் தடுக்கவில்லை? எனவே அவருக்கும் தெரிந்தே எல்லாம் நடைபெற்றுள்ளது. இது ஒரு திட்டமிட்ட ஊழல். ஆனால் இது ஊழலே அல்ல, அரசுக்கு இழப்பு எனக் கூறி திமுக தலைவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவசம் என்றெல்லாம் கூறி மக்களை திசைதிருப்ப முடியாது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.

சீரழிந்துவரும் சிறீலங்கா: ஒரு பரபரப்பு ரிபோர்ட்.

யாழ்ப்பாணத்து பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல்ரீதியாத தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 17 வயதாகும் இம் மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச் சிப்பாய் யார் யாருடன் உடலுறவை வைத்திருந்தார் என மருத்துவர்கள் கண்டறிய முற்பட்டவேளை இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது. இச் சிப்பாய் குறித்த 17 வயது மாணவியோடு உறவுவைத்திருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் மருத்துவர்களுக்கு இப் பெண் தொடர்பாக அவசர செய்திகள் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடாத்தப்பட்ட விசாரணையின்போது, தன்னுடன் 76 ஆண்கள் தொடர்புகளை வைத்திருந்ததாக அவர் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளார். 14 வயதில் இருந்தே தன்னுடன் ஆண்கள் உடலுறவுரீதியான தொடர்புகளை பேணிவந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை மெற்கொள்ள வைத்திய வட்டாரங்கள் தயாராகி வருகின்றன. இவர்களில் கணிசமானவர்கள் படையினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் குடாநாட்டில் வேகமாகப் பரவிவரும் எயிட்ஸ் நோய் காரணமாக மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் 20 வயதுக்கும் குறைவான பெண்களே தினமும் கருக்கலைப்புக்கு வந்துபோவதாக மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்பாணத்தில் உள்ள சில முன்னணிப் பாடசாலைகளில் படிக்கும் மாணவ மாணவியரிடையே ஆபாசப் படங்கள் சி.டியாகவும், மற்றும் மொபைல் போன்களிலும் சரளமாகப் பிளங்குவதாகவும், மைதானங்கள் மற்றும் மலசலகூடங்களிலும் இவைகளை மாணவர்கள் மறைத்து வைத்துப் பார்க்கிறார்கள்.

ஒபாமா கென்யாவில் பிறந்தாரா? புதிய சர்ச்சை.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்தவர். எனவே, கென்யாவில் ஒபாமா பிறந்ததாகவும், அமெரிக்காவில் பிறக்காத ஒருவர் அந்நாட்டு அதிபரானது தவறு என்றும் எதிர்க்கட்சியினர் சிலர் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.இந்நிலையில், ஒபாமாவின் பிறப்பு பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக அவரது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவாய் மாகாண கவர்னர் நீல் அபெர்கிராம்பே தெரிவித்துள்ளார். ஒபாமாவின் பெற்றோர் எனது நண்பர்கள். அவர் ஹவாய் மாகாணத்தில் பிறந்தவர். அவர் பிறந்தபோது அருகில் இருந்தவன் நான். இதற்கான ஆவணங்களுடன் விரைவில் தகவல்களை வெளியிடுவேன். எனினும், இப்போது இது பிரச்னையல்ல. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முதல் வேலை’’ என்றார்.

இஸ்ரேலுக்கு ரகசிய சுற்றுப்பயணம் சென்ற காவி பயங்கரவாதிகள்.


இஸ்ரேலுக்கு பாஜகவின் அகில இந்தியத் தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தகவல்கள் தேசப்பற்றாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களை அறிய இவர்கள் சென்றதாக கூறப்பட்டாலும், பின்ன ணியில் திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். பா.ஜ.கவின் கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கத்காரி, கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தராஜே சிந்தியா, மற்றொரு பொதுச் செயலாளர் ராம்லால், பா.ஜ.கவின் விவசாயப் பிரிவின் தலைவர் ஓம்பிரகாஷ் தன்கர் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் இஸ்ரேல் என்ற மனித குல விரோத பாசிச சக்தி தொடர்ந்து செய்து வரும் இனப்படுகொலை, சமாதானத்திற்கு விரோதமான அச்சுறுத்தல்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட காவி முகாமின் செயல்கள் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் துணைப் பிரதமரும், உளவுத்துறை விவகார அமைச்சருமான டான் மெரிடர், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜீப்பி லிவ்னி, மற்றும் லிக்யூட் கட்சியின் உறுப்பினர் கள், இந்தியா-இஸ்ரேல் நாடாளுமன்ற குழுத்தலைவர் ராஷேல் அடாட்டோ ஆகியோ ருடன் இக்குழுவினர் நடத்திய ரகசிய சந்திப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் பினாயக் சென் விடுவிக்கப்பட வேண்டும்: வைகோ.

சென்னை : "சட்டீஸ்கரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, மனித நேயர் டாக்டர் பினாயக்சென் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற பினாயக் சென், மருத்துவ வசதி பெற முடியாமல் ஏழ்மையில் தவிக்கும் பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வந்தார். சட்டீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி கொள்ளையடிப்பதால், மாவோயிஸ்டுகள் போராட்டம் தீவிரம் ஆனது. இதன் தலைவர்களில் ஒருவரான நாராயண் சன்யாளுக்கு வயது 74. அவர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிறையில் வாடுவதை அறிந்த பினாயக்சென், சிறையில் சந்தித்தார்.

நாராயண் சன்யாள் தனது உடல் நலம் குறித்து நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தை பினாயக்சென் சிறைக்கு வெளியில் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், புரட்சியை தூண்டுவதாக போலீசாரே பொய்யாக கடிதம் தயாரித்து பினாயக் சென் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். நாராயண் சன்யாலுக்கும், பிஜிகுகா என்பவருக்கும், டாக்டர் பினாயக் சென்னுக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் செசன்ஸ் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பினாயக் சென்னுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய மத்திய அரசு அவரை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் கமிஷன்கள் எல்லாம் அரசியல் கண்துடைப்புகள்.

புதுடில்லி : தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான தனது ஆய்வறிக்கையை, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிஷன், நேற்று உள்துறை அமைச்சரிடம் தாக்கல் செய்தது. "இதுகுறித்து ஆந்திர அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பின், வரும் 6ம் தேதி அறிக்கையின் விவரங்கள் வெளியிடப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்."ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா பகுதியை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிட்டி, தனது ஆய்வறிக்கையை, உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் நேற்று அளித்தது.

ஆந்திராவில் தொடர்ந்து பதட்டம்: இதற்கிடையே, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்ததன் காரணமாக, ஆந்திரா முழுவதும் தொடர்ந்து பதட்டம் காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர டி.ஜி.பி., அரவிந்தா ராவ் கூறுகையில், "எந்த வகையான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

உணவுக்கு இல்லாமல் சாகும் மக்கள் ஒருபுறம்: உணவை தீயில் இட்டு கொளுத்தும் பார்ப்பனீயம் மறுபுறம்.

யாகம் என்னும் கலாச்சாரம்! யாகம் என்ற பெயரால் தீயில் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது ஆரியர்களின் கலாச்சாரம். ஆரியர்களின் இந்தத் தாக்கத்தால் தமிழ் அரசர்களும் கெட்டுக் குட்டிச் சுவர் ஆனதும் உண்டு. சிலப்பதிகாரத்திலும் பார்ப்பன யாகக் கடை விரிக்கப்பட்டுவிட்டது. பார்ப்பனர்களின் இந்த யாகத்தை எதிர்த்து கவுதமப் புத்தர் 2500 ஆண்டுகளுக்குமுன் போர்க் கொடி தூக்கினார். ஆடு, மாடுகளைத் தீயில் பலி கொடுத்து சொர்க்கம் போக முடியும் என்றால், உமது தகப்பனாரை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி, நேரடியாக மோட்சம் போவதுதானே? என்ற அறிவு சார்ந்த வினாவை நாக்கைப் பிடுங்கும்படிக் கேட்டார்.

தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகம், யாகப் புரோகிதர்களுடன் பட்டத்தரசிகளை அனுப்பி வைத்து அவர்கள்மூலம் கர்ப்பமாக்க வைத்த காரியம்தான் இந்து மதக் கலாச்சாரத்தின் உச்சகட்டம்.ஆரியர்களின் யஜுர் வேதம் என்பது முழுக்க முழுக்க உயிர்க் கொலை யாகங்கள் பற்றியே பிரஸ்தாபிப்பதாகும். 30 வகை யாகங்கள்பற்றிக் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அஸ்வ, மனுஷ்ய, அஜ, கோ பசுப்ர சமஸா என்பதாகும். குதிரை, மனிதன், ஆடு, மாடு முதலிய உயிர்களைக் கொன்று யாகம் நடத்துவதாகும்.

அரிச்சந்திரன் என்ற அரசன் புத்திரப் பேறில்லாது வருந்திக் கொண்டிருந்தபோது வருண தேவனின் கட்டளைக்கிணங்கி அஜூகர்த்த முனிவரின் புத்திரனான சுன சேபன் என்பவனை விலைக்கு வாங்கி, அவனைக் கொன்று நரமேத யாகம் செய்த தகவல் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. விசுவாமித்திரனின் சகோதரியின் மகன் அச்சிறுவன்; கடைசி நேரத்தில் தன் தவ வலிமையால் காப்பாற்றினாராம் முனிவர்.

இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்த பவுத்தர்களையும், சமணர்களையும் படுகொலை செய்தது பார்ப்பனியம். எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிய கொலைகார மதம்தான் இந்தப் பார்ப்பன இந்து மதம்.வேத வேள்வியை நிந்தனை செய் துழல்,ஆத மில்லிய மனோடு தேரரை,வாதில் வென்றழிக்க திரு வுள்ளமே என்ற மந்திரத்தை கூறி வேதங்களை யாகங்களைப் பழிக்கும் சமணர்களை வென்று அழித்திட அருள்புரிவாயாக என்று கடவுளுக்கு விண்ணப்பம் போடுகிறான் தேவார திருஞான சம்பந்தர். யாகங்களை பவுத்த சமணர்கள் எதிர்த்ததும், அவர்களைப் பார்ப்பனர்கள் அழித்ததும் நமது வரலாறாகும்.

இவ்வளவு பீடிகையும் எதற்காக? அண்மைக்காலமாகப் பார்ப்பனர்கள் யாகக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறார்கள். உலக க்ஷேமத்தை யாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
எத்தனை எத்தனை ஆண்டுகாலமாக இத்தகைய யாகங்களை நடத்தி வருகிறார்கள்? நாட்டில் அமைதி தாண்டவம் ஆடிவிட்டதா? இதோ ஒரு செய்தி: கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பையடுத்த குமாரகுடியில் ஏகாதசி மகா ருத்ர யாகமாம். இதில் ஜப்பான் நாட்டினர் நூறு பேர்கள் கலந்து கொண்டனராம். (முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது).

150-க்கும் மேற்பட்ட வேதப் பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நடத்தினார்களாம். ஸ்ரீ அகத்திய நாடி ஜோதிட நிலையம் மற்றும் ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனமும் இணைந்து உலக நன்மை வேண்டி இந்த யாகத்தை நடத்தினவாம். எவ்வளவு உணவுப் பொருள்கள் பாழாகி இருக்கும்? எவ்வளவுப் பட்டுச் சேலைகளைக் கொளுத்தியிருப்பார்கள்? உற்பத்தி நாசம் செய்யும் இந்தக் கொடியவர்களைத் தண்டிக்க வேண்டாமா? வேதப் பார்ப்பனர்கள் மக்களை சுரண்டிக் கொழுத்து, பார்ப்பனக் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இத்தியாதி யாகங்கள். சிந்திக்கும் திறனிருந்தால் சிந்தியுங்கள்.

நன்றி : விடுதலை நாளிதழ்

இலங்கை அரசு பயங்கரவாதம் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பரபரப்பு ஆவணங்கள்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு துணை இராணுவக்குழுக்களான ஈ.பி.டி.பி, பிள்ளையான் குழு உட்பட பல குழுக்களை பயன்படுத்தி படுகொலைகளில் ஈடுபட்டுவந்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. சிறீலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலில், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்த கொலைக் கும்பலை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, கொழும்பின் பாதுகாப்புக்கும் மகிந்தா இந்த குழுக்களை பயன்படுத்தி வந்துள்ளார். கொழும்பில் தங்கியிருப்பவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என கருதப்படுபவர்களை இந்த குழுக்களே கடத்தி படுகொலை செய்துள்ளன. சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையால் கொழும்பு நகரம் கடும் பதற்றத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளில் தலையிடவேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா யாழ் மாவட்ட கட்டளைத்தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார்.

துணை இராணுவக்குழுவினரே பெருமளவான நீதிக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர். துணை இராணுவக்குழுக்களுடன் இணைந்து செயற்பட்ட இராணுவப் புலனாய்வுப்பிரிவினரின் நடவடிக்கைகளிலும் தலையிடவேண்டாம் என இராணுவ உயர் அதிகாரிகள் பணிக்கப்பட்டிருந்தனர். டக்களஸ் தேவானந்தாவின் உதவியுடன் கருணாவே 2005 ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்திருந்தார். மகிந்தா ராஜபக்சா பதவியேற்ற பின்னர் ஒரு வாரத்தில் இது மேற்கொள்ளப் பட்டிருந்தது. அதே குழுவினரே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் என்பவரையும் படுகொலை செய்திருந்தனர். தமிழ் வர்த்தகர்களை பயமுறுத்தி பணத்தை சேகரிக்கும்படி கோத்தபாயாவே ஈ.பி.டி.பி மற்றும் கருணா குழுக்களை பணித்திருந்தார் என றொபேட் ஓ பிளேக் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

மனித உரிமைப் போராளி கே.ஜி.கண்ணபிரான் காலமானார்

சுதந்திரப் போராட்டத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் துவக்கிய மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties - PUCL) தலைவராக 15 ஆண்டுகள் இருந்த பிரபல மனித உரிமைப் போராளியும், இந்நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் காலமானார்.

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அவர் காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான், கடந்த 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று உடல் நிலை மோசமடைந்தது.

81 வயதான கே.ஜி. கண்ணபிரான், மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் தொடக்க காலத்தில் இருந்தே உறுப்பினராக இருந்து தீவிரமாக பணியாற்றிய மாபெரும் ஜனநாயகவாதியாவார். 1995ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பி.யு.சி.எல். அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.

ஹைதராபாத்தில் வழக்கறிஞர் பணியாற்றி வந்த கண்ணபிரான், முஸ்லீம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கி ஆந்திர மாநில அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசியம் குறித்து விரிவாக வாதிட்டார்.

ஆனால் தீர்ப்பு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வந்த நிலையில் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரையில் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு பெறுவதற்கான நியாயத்தை ஆணித்தரமாக வைத்தார்.

தீவிர சிகிச்சைக்கு சென்ற நிலைவரை ஒரு போராளியாகவே வாழ்ந்த பெருமையுடன் மறைந்துள்ளார் கே.ஜி.கண்ணபிரான்.

தமிழீழம் அமைவதை ஏன் பார்பனர்கள் எதிர்கிறார்கள்?


தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை!
தமிழீழம் அமைப்பதற்காக ஆயுத வழியில் போராடினார்கள். அந்த போராட்டம் சென்ற வருடம் முடிவுக்கு வந்தது. இதனை அனைவரும் அறிவோம். இலங்கையில் தனி நாடு கேட்பதால் இலங்கையரசு எதிர்கிறது. இதில் ஒரு நியாயம் உள்ளது என்று சொல்ல முடியும். ஆனால், தமிழீழம் அமைவதை பார்பனர்கள் ஏன் எதிர்கிறார்கள்?(உதாரணம்:சோ,ராம்,சு சுவாமி,ராம‌ கோபாலன்) இது நாள் வரை பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. தமிழீழ நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, தமிழர்கள் திராவிடர்கள் அவர்களை எதிர்ப்பது, அழிப்பது பார்பனர்களின் 'மத கடமை' என்றார். இது சரியான பதிலா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நான் பேசிய வகையில் பல தமிழர்களுக்கு தெரியவில்லை.உங்கள் பதில் தமிழீழ போராட்டத்தை அறிய விரும்புவோருக்கு உதவியாக அமையும்!

பிரபாகரன் இல்லாத ஈழ வீட்டில் கிழவன் ராஜபக்சே துள்ளி விளையாடுகிறான்.


கொழும்பு, டிச.30: இலங்கையில் இனி சிலோன் என்ற சொல் வழக்கில் இருக்காது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.சிலோன் என்ற ஆங்கிலச் சொல்லுடன் ஆரம்பிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், ஸ்ரீலங்கா என்ற பெயருடன் ஆரம்பிக்குமாறு மாற்றப்பட உள்ளதாக இலங்கை இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் இனிவரும் காலங்களில் இலங்கை என்ற தமிழ்ச்சொல்லும் மாற்றப்படுமோ என பலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்திக்க: இலங்கை அரசு கடந்த காலங்களில் சிங்கள இனவாத அரசாகவே செயல் பட்டு வந்துள்ளது. அப்போது அவர்களை எதிர்க்க விடுதலை புலிகள் இருந்தார்கள் இப்பொது யாரும் இல்லாத சூழலில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். தேசியகீதம் இனி சிங்களத்தில் இசைக்கப்படும் என்றார்கள் அதற்க்கு தமிழீன துரோகிகள் சிலரும் ஆதரவு தெரிவித்திருப்பதும் நாம் அறிந்ததே வெலுபிள்ளை பிரபாகரன் இல்லாத ஈழம் வீட்டில் கிழவன் ராஜபக்சே துள்ளி விளையாடுகிறான்.

மனைவிகளை காப்பாற்ற உயரிழந்த கணவன்கள்.

மெல்போர்ன், டிச.30: ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள பெங்குவின் தீவிலிருந்து ஒரு அபாயகரமான மணல்திட்டைக் கடக்கும்போது தங்கள் மனைவிகளை காப்பாற்ற முயன்ற 2 இந்தியர்கள் செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்தனர்.நண்பர்களான பவன் கானசாலா மற்றும் பிரவீண் ஸ்ரீகாந்த் ஆகியோர் மணல்திட்டைக் கடக்கும்போது நீருக்குள் சிக்கிக்கொண்ட தங்களது மனைவிகளை காப்பாற்று முயன்றனர். அப்போது கடுமையான காற்று காரணமாக திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
பலியானவர்களின் மனைவிகளும், அவர்களுடன் அந்த மணல்திட்டை கடக்க முயன்ற மேலும் 2 பேரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தேள் கடி விஷம் நீங்க அரும் மருந்து.

1) தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

2) எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.

3) நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: முன்னாள் இஸ்ரேல் அதிபர் மோஷே காட்ஸேவ் குற்றவாளி.

டெல்அவீவ்,டிச:முன்னாள் இஸ்ரேலிய அதிபர் மோஷே காட்ஸேவ் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் குற்றவாளியென இஸ்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த மோஷே காட்ஸேவ் தனக்கு கீழ் பணிபுரிந்த பெண்மணியொருவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அப்பெண்மணி ஆஜராக்கிய ஆதாரங்களும், வாக்குமூலமும் காட்ஸேவ் குற்றவாளி என்பதை நிரூபிப்பதாக நீதிபதி ஜோர்ஜ் காரே தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட பெஞ்சின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலில் பாலியல் வன்புணர்ச்சிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். காட்ஸேவ் உச்சநீதிமன்றத்தை மேல்முறையீட்டிற்காக அணுகுவார் எனத் தெரிகிறது.

2006 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்மணி வழக்கு தொடுத்ததையடுத்து காட்ஸே அடுத்த ஆண்டிலேயே பதவி விலகினார். 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுலாத்துறை அமைச்சக கட்டிடத்தில் வைத்தும், ஜெருசலமில் ஹோட்டல் அறையில் வைத்தும் காட்ஸே அப்பெண்மணியை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார். இதர இரண்டு பெண்மணிகளை கடந்த 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பாலியல் ரீதியாக கொடுமைச் செய்ததாகவும் அவருக்கெதிராக வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

காட்ஸேவின் கோரிக்கையின்படி பாலியல் கொடுமை வழக்கு 2008 ஆம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டுமுதல் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் இஸ்ரேலின் அதிபராக பதவி வகித்தவர் காட்ஸேவ். தீர்ப்பை கேட்பதற்கு காட்ஸேவ் தனது பிள்ளைகளுடன் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. தீவிர வலதுசாரி ஆதரவு கட்சியான லிக்யூட் கட்சியின் உறுப்பினரான காட்ஸேவ் அதிபராவதற்கு முன்னர் ஏராளமான அமைச்சக
பதவிகளை வகித்துள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி.

மும்பை,டிச.30:மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் உள்பட ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. ஜாமீன் வழங்கப்பட்டால் இவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதனை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் இதர குற்றவாளிகளான ராகேஷ் டவாடே, அஜய் ரஹிர்கர் ஆகியோரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடிச் செய்தது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்கள் இந்திய அரசை கவிழ்த்துவிட்டு ஹிந்துராஷ்ட்ரம் உருவாக்குவதற்கான செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும், இதற்காக அபினவ் பாரத் என்ற அமைப்பை உருவாக்கியதாகவும் அரசு தரப்பு வாதிட்டது.
தாங்கள் நிரபராதிகள் எனவும், குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட சூழலில் தங்களின் சிறைக்காவல் தேவையற்றது எனவும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியும் ஹிந்துத்துவ பெண் தீவிரவாதியுமான பிரக்யா சிங் தாக்கூரின் ஜாமீன் மனுவை வருகிற ஜனவரி 10 ஆம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆறு பேரின் மரணத்திற்கு காரணமான மலேகான் குண்டுவெடிப்பில் ஏழு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் கைதுச் செய்திருந்தது.

Dec 29, 2010

திருவண்ணாமலையில் நித்தியானந்தா பரபரப்பு செய்தி.

டிசம்பர் 30:நான் நிரபராதி, எந்தத் தவறும் செய்யாதவன் என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன் என்று திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ள குஜால் சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார். திருவண்ணாமலைக்கு தனது 34வது பிறந்த நாளையொட்டி வந்துள்ளார் ரஞ்சிதாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்து சிக்கி, தலைமறைவாகி, கைதாகி, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள நித்தியானந்தா. நேற்று காலை அண்ணாமலையார் கோவிலுக்கு அவர் போன போது பெரும் திரளான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் தப்பித்தோம், பிழைத்தோம் என்று பின்வாசல் வழியாக ஓடிப் போனார் நித்தியானந்தா. இந்த நிலையில் நேற்று கிரிவலப்பாதையில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ஜீவன் முக்த சமுதாயம் செய்வோம் என்ற பெயரில் ஒரு உரை நிகழ்த்தினார் நித்தியானந்தா.

இந்திய அரசு பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்டிய தெகல்கா' இதழின் பரபரப்பு பேட்டி.

2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில், அஸ்ஸாம் படையணியைச் சேர்ந்த ராணுவத்தினர், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார். ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவர் நடத்தும் பட்டினிப் போராட்டம் 10 ஆண்டுகளை (நவம்பர் 4, 2010) கடந்து விட்டன. இம்பாலில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனையில் வீட்டுக் காவலில் இருக்கும் சர்மிளாவிடம் "தெகல்கா' இதழ் எழுத்து மூலம் அளித்த கேள்விக்கு, மூன்று வாரங்கள் கழித்து அவர் அளித்துள்ள பதில்.

1) கடந்த பத்தாண்டுகளாக, ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சாப்பிட மறுக்கும் போராட்டத்தை நடத்தி வருவதில் வெற்றி பெறுவீர்களா?

நீதிக்காக நடத்தப்படும் என்னுடைய உண்மையான போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்.

2) நீங்கள் அமைதியானதொரு எதிர்ப்பைத் தெரிவிப்பதால்தான், அரசு உங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்று கருதுகிறீர்களா?

நான் அப்படி நினைக்கவில்லை. அதிகார வெறிபிடித்த (அதிகார) வர்க்கம், என்னைப் போன்ற குடிமக்களின் ஜனநாயகமான, நியாயமான கோரிக்கைகளை மதிப்பதில்லை. பிணங்களைப் பார்க்கும்போதுதான் அவர்களுக்கு உள்ளூர அச்சம் ஏற்படுகிறது. தவிர்க்க முடியாத போராட்டங்களை, தங்களுடைய மிக மூர்க்கத்தனமான செயல்பாடுகளால் ஒடுக்கவே அவர்கள் முயல்கின்றனர்.

3) நீங்கள் சாவைப் பார்த்து அஞ்சவில்லையா?

இப்புவியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் என்றோ ஒரு நாள் மடியத்தான் வேண்டும். எனவே, என் சாவைப் பற்றிய தேவையற்ற அச்சம் எனக்கில்லை.

4) உங்கள் போராட்டத்தைத் தொடர எது உந்து சக்தியாக இருக்கிறது?

இன்றைய என் சமூகத்தின் நிலையே என் உந்து சக்தியாக இருக்கிறது.

5) உங்களுடைய ஒவ்வொரு நாளையும் எப்படி கழிக்கிறீர்கள்?

நான் வழக்கமாக நடப்பது, படிப்பது, எழுதுவது என்று நாட்களை கழிக்கிறேன்.

6) உங்களுடைய போராட்டத்தைப் பார்த்து வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?

நம்முடைய உயிர்கள் மூர்க்கத்தனமான கொலைகாரர்களின் பிடியில் இருக்கும்போது, அவர்கள் வெறும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது. வாழ்விற்கான உரிமை முக்கியமானது. அப்பொழுதுதான் நாம் நாகரிக உலகில் வளமாகவும், ஆரோக்கியமாகவும், வெற்றிகரமான – மகிழ்ச்சியான குடிமக்களாக மாற முடியும்.

7) உங்களுடைய பட்டினிப் போராட்டத்தை எப்பொழுது நிறுத்துவீர்கள்?

என்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும்போதுதான் நான் பட்டினிப் போராட்டத்தை நிறுத்துவேன்.

சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்: ஜெ. உறுதி.

சென்னை : "சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: கருணாநிதி 2006ல் முதல்வராக பொறுப்பேற்ற பின்தான், மதமாற்ற தடைச்சட்டம்' நீக்கப்பட்டது என ஒரு தவறான செய்தி பிரபல நாளிதழ்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். மதமாற்ற தடைச்சட்டம்' கடந்த 2004 மே 18ம் தேதி எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் மூலம் அறவே ரத்து செய்யப்பட்டது. இது குறித்து நானும் பல முறை மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளேன். அ.தி.மு.க.,வும், நானும், என்றைக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு உறுதுணையாக, பாதுகாவலனாக இருப்போம் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். காருணாநீதி ஆட்சியில்தான் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்கள் நடந்தது எனது ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது என்று கூறினார்.

தமிழகத்தில் அரசு வேலைக்காக 62 லட்சம் பேர் காத்திருப்பு.

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளில் அதிகளவில் புதிய பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக மீனவனை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படையுடன் கூட்டுப்பயிற்சியா? :சீமான்.

தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டாக பயிற்சியில் ஈடுபடுவதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பேச்சு நடத்திய பின்பு இருநாட்டு கடற்படை உறவை மேம்படுத்தும் வகையில் 2011ம் ஆண்டு இலங்கை - இந்திய கடற்படையினர் இணைந்து இலங்கை கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு பிரிவினருக்கு மேலும் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்தியக் பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை தொடர்பாக ராஜபக்‌ஷேவை இனப்படுகொலையின் சூத்திரதாரியாகவும்,இலங்கையின் மீது விசாரணை நடத்தவும் உலகம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நிலையில்,இது தொடர்பாக ஐ.நா.குழு.இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில் இலங்கை கடற்படைக்கு பயிற்சி என்ற இந்திய பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்பு உலகின் கவனத்தை திசை திருப்பும் உத்தியாகும்.இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலையை அருகாமையில் இருந்து தொடர்ந்து மறைக்கும் முயற்சியாகும்.

இங்கோ தமிழ்நாட்டில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டபொழுதும் இந்தியக் கடற்படை இதுவரை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.தமிழ் மீனவன் படகிலும்,இந்தியக் கடற்படையின் கப்பலிலும் ஒரே இந்திய தேசியக் கொடி பறந்தாலும் தமிழ் மீனவன் கொல்லப்படும் பொழுதோ இந்தியக் கடற்படை செயலற்று உல்லாசமாக இருக்கிறது. இதோ இன்று கூட தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.ஆனால் நம் மீனவனைக் காப்பாற்ற எதிர்தாக்குதலோ,இலங்கை ராணுவத்திற்கு ஒப்புக்குக் கூட கண்டனமோ தெரிவிக்காத கடற்படை பிறகு யாரைக் காப்பாற்ற ரோந்துப் பயிற்சியை இணைந்து மேற்கொள்ளப் போகிறது?

ஏற்கனவே ஈழத்தமிழர்களைக் கொன்றதற்கு மறைமுகமாக ஆயுதங்கள் உட்பட அனைத்து உதவியையும் செய்த இந்திய அரசு இன்னும் மீதமிருக்கும் அங்குள்ள தமிழர்களையும்,இங்குள்ள தமிழ் மீனவனையும் கொல்வதற்கு சிங்கள ராணுவத்திற்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப் போகின்றதா?என்று தெரியவில்லை.இந்தியக் கடற்ப்டையின் தமிழர் விரோதப்போக்கு வெந்த எமது புண்ணில் வெந்நீரைப் பாய்ச்சுவதாக இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்குத் தனித்தனி கொடிகள் உருவாக்கப்படவேண்டும்.


இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்குத் தனித்தனி கொடிகள் உருவாக்கப்படவேண்டும்; ஆகஸ்ட் 15ம் தேதியன்று மாநிலக் கொடிகளும் ஜனவரி 26ம் தேதியன்று தேசியக் கொடியும் ஏற்றப்படவேண்டும் என்றும் சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெற்ற விசிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகிலுள்ள ஒவ்வொரு இனமும், மொழிவழி தேசியத்தின் அடிப்படையில் அல்லது மதவழி தேசியத்தின் அடிப்படையில் தமக்கான நாடு மற்றும் அரசை உருவாக்கி தம்மைத்தாமே ஆட்சி செய்து கொள்ளும் இறையாண்மையைப் பெற்றுள்ளது. மேலும் பல தேசிய இனங்கள் புதிது புதிதான தேசங்களையும், அரசுகளையும் உருவாக்கி தத்தமது இறையாண்மையென்னும் தன்னாட்சி உரிமைகளை வென்றெடுத்து வருகின்றன. இந்நிலையில் உலகமெங்கும் ஏறத்தாழ பத்து கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மூத்தக்குடியும் முதல் குடியுமான தமிழ்க்குடி மக்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்றும் அது தமிழீழமாக மலர வேண்டுமென்றும் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதமில்லா அறவழியிலும் ஆயுதமேந்திய அறவழியிலும் தமிழீழ விடுதலைப்போர் நடந்து வருகிறது. அப்போர், தற்போதைய சூழலில் இடைக்காலமாக ஒரு பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், அது முற்றும் முழுதாக முடிந்து விட்ட ஒன்றல்ல! ஏனெனில், அது வெறும் மண்மீட்புப்போர் அல்ல ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை மீட்சிக்கான போர் ! ஏற்கனவே நாடு, அரசு, ஆட்சி என்னும் கட்டமைப்புக்களைக் கொண்ட இறையாண்மையையுடைய ஒரு தேசிய இனமாக வாழ்ந்த தமிழினம், இழந்து போன இறையாண்மையை வென்றெடுக்கவே இன்று இந்த விடுதலைப் போரை நடத்தி வருகிறது. எனவே தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றத் தேவைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் இறையாண்மைக் கோரிக்கைகளை, அனைத்துலகச் சமூகம் முதலில் கொள்கையளவில் இசைந்தேற்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! ஆயுதப்போராட்ட வடிவம் அங்கே இடைக்காலமாக அழித்தொழிக்கப்பட்டாலும், விடுதலைப் போரட்டத்திற்கான தேவைகளும் காரணங்களும் அழித்தொழிக்க முடியாதவைகளாக உள்ளன. எனவே, இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன், தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழ்ப் பெண்களுக்கு இலங்கை அரசு இழைத்துவரும் கொடுமைகள்.

கொழும்பு, டிச.29- இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து கொடுமைகளை செய்து வருகிறது என்றும், இதுதொடர்பான விவரங்களை மனித உரிமை அமைப்புகளுக்கு உரிய ஆதாரங்களுடன் சமர்பிப்போம் என்றும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலங்காலமாக இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவந்துள்ள இன அழிப்பு முயற்சிகளை மிகக் கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் தமிழ்ப் பெண்கள், சிறுவர், முதியோர் ஆகியோரே. இலங்கை படைகள் சென்ற ஆண்டு நடத்திய போரின்போது அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து மேற்கொண்ட குண்டு வீச்சுக்கள், கொலைகளின் போது கூடுதலாகப் பாதிப்புக்குள்ளானவர்களும் இவர்களே.

அண்மைக்காலமாக ஊடகங்கள் வழியாக ஈழப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரக் கொடுமைகள், சித்ரவதைகள், படுகொலைகள் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இக்காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளெல்லாம் கொடூரமான கதையொன்றின் சிறுபகுதி மட்டுமே. இளம்பெண்கள் எத்தனையோ பேர் இலங்கை அரசின் பிடியில் சிக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு தினமும் உள்ளாகின்றனர். ஊடகவியலாளராகப் பணியாற்றிய இசைப்பிரியா, உசாலினி மற்றும் பலரது கொடூரம்மிக்க அனுபவங்கள் இலங்கை அரசின் கைகளில் தமிழ்ப் பெண்கள் வயது வேறுபாடின்றிக் கொடுமைக்குள்ளாவதைத் தெளிவாக்குகிறது.

எமது அமைச்சகமானது பெண்கள் சிறுவர் முதியோர்களுக்கு எதிராக இலங்கை அரசால் இழைக்கப்பட்ட, இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேச அளவில் இயங்கும் பெண்களுக்கான இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கு ஆவணங்கள் மூலமாகவும்; நேரடித் தொடர்புகள் ஊடாகவும் கொண்டு வந்து அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பிரிட்டன் பெண்கள் அமைச்சகம், நிழல் அமைச்சகம் போன்றவற்றுடனும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பாலாம்பிகை முருகதாஸ் அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்.

விசா கிடைப்பதில் காலதாமதம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்.

வாஷிங்டன் : அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், தங்களுக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். மும்பை தாக்குதல் சம்பவத்தில் சதி திட்டம் தீட்டிய அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி, விசாவில் மோசடி செய்து இந்தியாவுக்கு பலமுறை வந்து சென்றார். இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக, விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள் பழைய பாஸ்போர்ட்டை சமர்பிக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால், ஒரு நாளில் வழங்கக்கூடிய விசாவுக்காக ஒரு மாத காலம் இழுத்தடிப்பதாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். விசா வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை கண்டித்து ஹூஸ்டன், சிகாகோ, சான்பிரான்ஸ்சிஸ்கோ நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர். டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர் மாநாட்டின் போது, இப்பிரச்னையை கிளப்பப்போவதாக, சர்வதேச இந்திய வம்சா வழி அமைப்பின் தலைவர் இந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து.


வாஷிங்டன் : "குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் "டிவி' மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள குறைவான நேரமே செலவிடுகின்றனர்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் உள்ள சவுத் கலிபோர்னியா பல்கலை சார்பில், "நவீன தொழில்நுட்ப காலத்தில் குடும்ப உறவுகளின் நிலை' குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 57 சதவீத வீடுகளில் இன்டர்நெட் பயன்படுத்தவும், 60 சதவீத வீடுகளில் "டிவி' பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆய்வுக்குழுத் தலைவர் மைக்கேல் கில்பர்ட் இதுகுறித்து கூறியதாவது: தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது, பெரும்பாலான பெற்றோர்கள் "டிவி' மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதும், அமெரிக்க சிறுவர்கள் உண்மையான நண்பர்களை விட, ஆன்-லைன் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் தெரிந்தது.

"டிவி' மற்றும் இன்டர்நெட் காரணமாக, சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. அவர்களின் விளையாட்டு நேரமும் குறைகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக தங்களுக்குள் பேசிக்கொள்வதும் குறைந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டுகளில், சிறுவர் சிறுமியர் ஒரு நாளில் நான்கு மணிநேரம் தங்கள் பெற்றோருடன் செலவிட்டனர். இப்போது, இரண்டு மணிக்கும் குறைவான நேரமே ஒதுக்குகின்றனர். இதனால், குடும்ப உறவுகள் பலவீனமடைகின்றன; தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆன்-லைன் வீடியோ கேம்ஸ் மற்றும் சமூக வலைதளங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். நவீன தொழில்நுட்பத்தால், குடும்ப உறவுகள் பலப்படுவதற்கு மாறாக, பலவீனமடைந்து வருகின்றன. அதேசமயம், செல்போன் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் தங்களுக்கு பெரும் உதவிபுரிவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறினர். இவ்வாறு மைக்கேல் கில்பர்ட் கூறினார்

பள்ளிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிறந்தது குழந்தை...

உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் மல்லிகா (17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு வந்த மல்லிகா, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதால், ஆசிரியர்கள் அவரை ஆட்டோ ஒன்றில் வகுப்பு தோழிகள் இருவருடன் வீட்டுக்கு அனுப்பினர். ஆனால், வீட்டிற்கு செல்லாமல், மல்லிகா உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குள் சென்று சத்தம்போட்டு கதறினார். இதனால், மருத்துவமனை பணியாளர்கள் பதட்டமடைந்து கதவை திறந்து பார்த்த போது, மல்லிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. தாயையும், குழந்தையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால்? இந்த மானம்கெட்ட அரசுகள் எதற்கு?

தன்மகன் போரிலே புறமுதுகில் அம்பு தைத்து மாண்டு போனான் என்று கேள்விப்பட்டதும் அந்த கோழைக்கு இந்த மார்புகளா பாலூட்டியது’ என்று சினம் கொண்டு தன் மார்புகளை அறுத்தெரிந்தாளாம் ஒரு புறநானூற்றுத் தாய். இலக்கியத்தில் பதிவான அந்த வீரத்தாயின் வரிசையில் உண்மையாகவே ஒரு தாய் இருக்கிறாள். நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி என்ற கிராமத்தில் கூலி வேலைச் செய்து பிழைப்பை ஓட்டும் ஒரு பாவப்பட்ட கூலி ஏழை சந்திராதான் அந்த தாய். 45 வயதான இந்த தாய்க்கு 16 வயதில் ஒரு மகன்.

‘தன் மகன் ஒரு திருடன்’ என்று கேள்விப்பட்டவுடன் தூக்கு மாட்டிக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அந்த உத்தமி. அந்தத் தாய் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். கூலி வேலை செய்து சம்பாதித்த அற்பத் தொகையில் தன் மகனை 11ஆம் வகுப்பு வரை படிக்க வைக்கத்தான் முடிந்தது. வயிறார அவனுக்கு இரண்டு வேளை சோறு போட முடியவில்லை. வாழ வேண்டிய வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த அந்த அனாதைத் தாயால் உழைக்க முடிந்தது அவ்வளவுதான்.

அவனுக்கு சொந்த பந்தங்கள் இருந்தும் அந்தப் பாலகனின் பசியால் வாடிய முகத்தைப் பார்த்தும் கூட ஒருவாய் சோறு போட யாரும் முன் வரவில்லை. அடுத்தவர் சாப்பிடும் போது வாயையும், கையையும் பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி, இறுதியாக முடிவெடுத்தான், திருடித்தின்றாவது பசியாற்றுவதென்று. ‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’- என்ற பழமொழி உண்மையாயிற்று. எச்சில் கையோடு கைது செய்தது சேந்தமங்கலம் போலீசு. சுற்றி வளைத்துப் பிடித்துத் தந்தது சோத்துக்கு சொந்தக்காரர் கூட அல்ல, அக்கம் பக்கத்து வீட்டு ‘அரிச்சந்திரர்கள்’ தான்.

இந்தச் சமூக விரோத பெருங்குற்றத்திற்கு ‘யார் காரணம்?! அவனா… இல்லை அவனையும், அம்மாவையும் அனாதையாக விட்டு விட்டுச் செத்துப் போனாரே….அவனுடைய அப்பா, அவரா?! இல்லை, பச்சப்புள்ளையைப் பார்க்க வைத்துத் தின்றார்களே அவனுடைய சொந்த பந்தங்கள்.. அவர்களா?! இல்லை…’எப்படியாவது சாந்துச்சட்டி சுமந்து தன் மகனை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சா…. ஒரு நல்ல வேலை கெடச்சி, மகன் கஞ்சி குடிச்சி பொழச்சிக்குவான்’ என்று அந்தக் கனவிலேயே உடைந்து போன உடலோடும், வாழ்க்கையோடும் சித்தாள் வேலைக்குப் போய் 11-ஆம் வகுப்பு வரைப் படிக்க வைத்தாளே, அந்த மானமுள்ளத் தாயின் தவறா?!’ இப்படித்தானே நீங்களும் யோசிப்பீர்கள்?

நியாய விலைக் கடைகளில் கலைஞர் சிரிக்கிறார். “ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி”! மகிழ்ச்சி. அந்த ஒத்த ரூபாய் அரிசிகூட கிடைக்காமல் ஏன் அந்த ‘இளவரசன்’ சோத்தைத் திருடினான்? இதற்கு ‘நியாயமாக’ பதில் சொல்ல கலைஞரால் முடியுமா?! இல்லை… பூச்சியும், எலியும் தின்றால் கூட அந்த அரிசியை ஏழைகளுக்குத் தரமாட்டேனென்று அடம் பிடிக்கிறாரே… பிரதமர்… அவர் பதில் சொல்வாரா?! கலைஞர் வேண்டுமானால் ‘தம்பிக்கு கடிதம்’ எழுதி தப்பித்துக் கொள்ளலாம். இந்தக் கொடுமைக்கு அவரது குடும்பமே ஒன்று சேர்ந்தால் கூட பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை கடந்த நவம்பர் 17ஆம் தேதி தன் பேரன் துரை தயாநிதிக்கு நடந்த திருமணத்தில் ரேசன் அரிசி சோத்தை வேகவத்து விருந்து போட்டிருந்தால், இதற்கு பதில் சொல்லத் தகுதியிருந்திருக்கும் கலைஞருக்கு. ஆனால் ‘ஊருக்குத்தான் ஒத்த ரூபாய் அரிசி’!

சின்ன வயதிலேயே தகப்பனை எடுத்து விழுங்கிவிட்டு, வீட்டுக்காரர்கள் வந்து விடுவார்களோ என்ற பதற்றத்தில் கவளம், கவளமாக திருட்டுச் சோத்தை கண்ணில் நீர்வர விழுங்கி விட்டு, கடைசியில் ஒரே ஆதராவாக இருந்த தாயையும் எடுத்து விழுங்கி விட்டு, இப்போது சேலம் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான் இளவரசன். சட்டம் தன் கடமையைச் செய்கிறது. இருக்கட்டும், நல்லது.

சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ? ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு ஒத்தை ரூபா அரிச போன்றது அல்ல. ஒன்னே முக்கால் இலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று கூட அந்த ஏழைகள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த பூஜியங்களை அறிந்தவர்களுக்கும், அபகரித்தவர்களுக்கும் மான உணர்ச்சி கிஞ்சித்தும் இல்லையா? கலைஞர் குடும்பம், டாட குடும்பம், மந்திரிகள், அதிகாரிகள், முதலாளிகள் எங்கும் யாராவது ஒருவர் கூட தற்கொலை செய்ய வில்லையே? சோறு திருடுவதுதான் மானக்குறைவா, இலட்சம் கோடிகளில் திருடினால் அது பெருமையா?

காமன்வெல்த் போட்டிக்கு ஏற்பாடு செய்ததில், கேவலம் மலம் துடைக்கும் பேப்பரில்கூட கமிஷன் வச்சிகாசு திருடினாரே காங்கிராஸ் கல்மாடி… அவருடைய வீட்டுப் பெண்கள் யாராவது ரோசத்தோடு தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாமே…. ஏன் செய்யவில்லை? நம்ம நாட்டுல தேசபக்திக்கு மட்டும் குறைச்சலே இல்லை. நடிகர் விஜயகாந்தை, அர்ஜுனையே விஞ்சி விடுவார்கள். ‘வீரமரணம்’ அடைந்த கார்கில் வீரர்களின் விதவை மனைவி மார்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்ததில் தன்னுடைய மாமியார், மைத்துனி, மைத்துனர் ஆகியோருக்கும் ‘வீட்டு வசதி’ செய்து கொடுத்தாரே… மகாராஷ்டிரா முதல்வர் அசோக்சவான்… அவருடைய களவாணித்தனம் தெரிந்து அவருடைய வீட்டுப் பெண்களோ, ஆண்களோ இல்லை அவரோ ஏன் ஒருவர் கூட ஏன் தூக்கு மாட்டிக் கொள்ளத் துணிய வில்லை!!

இதற்கெல்லாம் மன்மோகனும், சிதம்பரமும் பதில் சொல்வார்களா? பதில் சொல்ல பிரதமருக்கு ஏது நேரம்! 10 ஆயிரம் கோடி செலவு செய்து அம்பானி கட்டியிருக்கிற ‘அன்டிலியா’ வீட்டுக்கு பால்காய்ச்சவே நேரம் போதவில்லை. ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தன் பிள்ளைகளுக்கு நோகாமல் எடுத்துத் தந்தாரே ஹிந்து மத வெறியன் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா… அவர் வீட்டில் யாராவது தேசப்பற்றோடு ஏன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை?!

தோல்வி மனப்பான்மையால் தற்கொலை செய்துக்கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை என்பது வேறு விசயம். ஆனால் அந்தத் தாயின் தன்மான உணர்ச்சி சுயமாரியாதையுள்ள அனைவரையும் தலைகுனிய வைக்கிறது. ஆனால் நாட்டையே திருடும், கூட்டிக் கொடுக்கும் திருடர்கள் தலை நிமிர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்களே… அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா?!

முதலாளிகள் போடும் எச்சில் காசில் வாழும் இந்த மானங்கெட்ட அரசும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் இனிமேலும் நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றுவார்கள் என்று உங்களால் நம்ப முடிகிறதா?! ஒன்றே ஒன்றுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். ஓன்று அவர்களாகவே தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும். அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால் எல்லாரும் சொரணை கெட்டவர்கள். நாம்தான் அவர்களை தூக்கிலேற்ற வேண்டும். மானமுள்ள எம் உழைப்பாளி மக்களே உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். வறுமைக்கும், தரித்திரத்திற்கும் காரணமானவர்களின் உயிரை எடுங்கள். இந்தத் தினவெடுத்த முதலாளித்துவத்திற்கு ஒரு உணவுக் கலகம் விடை சொல்லட்டும். அந்த உணவுக் கலகம் என்பது புரட்சிதான் என்பதற்கு முன்னோட்டமாக இருக்கட்டும்.

நன்றி: வினவு

வீர மங்கைகள்: ஆண்களை வீரத்தில் மிஞ்சும் பெண்கள்.

கடந்த டிசம்பர்-26 அன்று 'பிக்சிட்டி' என்று அழைக்கப்படும் பெரியபட்டிணத்தில் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த ஒரு கோர சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தின் போது சில பெண்களின் வீரம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஹபீப் நிஸா(38) என்ற தாய் தன்னுடைய நான்கு குழந்தைகளையும் நீச்சலடித்து காப்பாற்றி விட்டு தான் மரணித்து விட்டார்கள் என்பதை கேட்கும்போது நமக்கு உண்மையில் ஒரு வீர உணர்வு மேலெழும்புகிறது.

ஆண் மக்களே கடலில் இறங்க தயங்கும் நேரத்தில் ஒரு பெண் தனியாக தனது 4 குழந்தைகளையும் காப்பாற்றியது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
அதேபோல் ஷர்மிளா(35) என்ற வீரமங்கை தன் 8 மாத கைக்குழந்தையை காப்பாற்றி தானும் தப்பிவந்த சம்பவம் பெண்களின் வீரத்தை பரைசாற்றுகிறது. இன்னும் சில பெண்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தினை நினைக்கும் போது நவம்பர் 25,2009 ல் சவூதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேரை காப்பாற்றி தன் உயிரைவிட்ட பாகிஸ்தானை சேர்ந்த வீரர் ஃபர்மான்(32) தான் நம் ஞாபகத்துக்கு வருகிறார்.

நன்றி : ரியாஸ்.பெரியபட்டிணம்.

ஆசிட் வீசினால் ஆயுள்தண்டனை: இந்தியாவில் புதிய சட்டம்.

புதுடெல்லி,டிச.29:பெண்களின் உடலில் ஆசிட்டை வீசி(திராவகம்) காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் ஆவனச்செய்யும் சட்டம் இயற்றப்படவிருக்கிறது. மத்திய செயலாளர்கள் கமிட்டி இதுத்தொடர்பாக சிபாரிசுகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அமைச்சரவை அனுமதியளித்தால் சட்டம் அமுலுக்கு வரும். ஆசிட் வீச்சை இந்திய தண்டனைச் சட்டத்தின் சிறப்பு குற்றச்செயலாக மாற்றி தற்போதைய சட்டத்தை திருத்தம் செய்வதற்கு மத்திய உள்துறை செயலாளர் ஜி.கெ.பிள்ளையின் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி சிபாரிசுச் செய்துள்ளது.

Dec 28, 2010

பினாயக் சென்க்கு வழங்கப்பட்ட தீர்ப்பு அநீதமானது :அருந்ததிராய்.


புதுடெல்லி,டிச.29:நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட பினாயக் சென்னிற்கு எதிரான ஆதாரங்களை பரிசோதிக்காமலேயே சட்டீஷ்கர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான அருந்ததிராய் தெரிவித்தார். அஞ்சத்தக்க ஏதோ சம்பவிக்கப் போகிறது என்பதன் அறிகுறிதான் பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட தண்டனை. எவரையும் குற்றவாளியாக்கும் வகையில் இந்தியாவின் பல சட்டங்களும் குறைபாடுடையதாக காணப்படுகின்றன.

டாக்டர் பினாயக் சென்னிற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அருந்ததிராய்.
இப்போராட்டத்தை ஆல் இந்தியா விமன்ஸ் ப்ரோக்ரஸிவ் அசோசியேசன் மற்றும் ஆல் இந்தியா ஸ்டுடன்ஸ் அசோசியேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. சென், ப்யூஸ்குஹா, நாராயண் சன்யால் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றுக்கொன்று முரணானது என அருந்ததி தெரிவித்தார்.

பீதி வயப்படுத்தும் ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகின்றது என்பதன் அடையாளம்தான் பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட தண்டனை. கடந்த காலங்களில் சென் அனுபவித்த சிறைவாசமும், சித்திரவதைகளும் அவருடைய வாழ்வையும், பணியையும் சிதைத்துவிட்டன. இவ்வாறு அருந்ததிராய் உரை நிகழ்த்தினார். சென்னின் மீது தேசத்துரோக குற்றத்தை சுமத்தினால் என்மீதும் அந்த குற்றத்தை சுமத்தலாம் என சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார்.

பினாயக் சென் ஆத்மார்த்தமாக பணியாற்றும் நபராவார் என பாராட்டிய அக்னிவேஷ், எவரை உலுக்கச் செய்வதுதான் பினாயக் சென்னிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு என்றும் தெரிவித்தார். பினாயக் சென்னிற்கு நக்ஸலைட்டுகளுடன் தொடர்பிருக்கிறது என்பதற்கு அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தை வாசித்தால் எவரும் சிரித்துவிடுவர். சிறையில் மாவோயிஸ்டுகளை சந்தித்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், சென் சிகிட்சை அளிப்பதற்காகத்தான் அவர்களை சந்தித்தார் என அக்னிவேஷ் தெரிவித்தார்.

நீதியின் கருவை கலைக்கும் தீர்ப்பு என சமூக சேவகரான கவ்தம் நவ்லாகா தெரிவித்தார். இப்போராட்டத்தில் சமூக சேவர்கள், அறிஞர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பினாயக் சென்னிற்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு நகைக்கத்தக்கது என டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் முதன்மை நீதிபதி சச்சார் அஹ்மதாபாத்தில் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு சேவகம் புரிபவர்கள் ஆபத்தில் இருக்கின்றார்கள் என்பதை இந்த தீர்ப்பு தெளிவுப்படுத்துகிறது. இதற்கெதிராக போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாவோயிஸ்டுகளின் சித்தாந்த குருவாக கூறப்படும் சன்யாலை பிரக்யா சென் போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் சந்தித்துள்ளார். அவ்வாறெனில் அங்கு வைத்து எவ்வாறு ரகசிய கூட்டம் நடத்த இயலும்? என நீதிபதி சச்சார் கேள்வி எழுப்பினார். இன்று சென், நாளை சமூக சேவகர்களுக்கெதிராகவும் இத்தகைய வழக்கு பதிவுச் செய்யப்படலாம். அரசுக்கெதிராக எவரும் குரல் எழுப்பினால் அவர்களை இதே குற்றத்தை சுமத்தி சிறையிலடைக்கலாம். இதனை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு சச்சார் தெரிவித்தார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.

ஐக்கிய அரபுக் குடியரசில் வேலை விசா விதிகளில் சிறிது தளர்வு.

ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். அங்குள்ள வெளிநாட்டவர்களில் பெரும்பான்மையினராக 17 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். ஏற்கனவே உள்ள வேலை அனுமதிச் சட்டப்படி, ஒரு தொழிலாளர், தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து இன்னொரு நிறுவனத்துக்குச் செல்ல வேண்டுமானால் அவருக்கு ஆறு மாத காலம் தடை விதிக்கப்படும்.இது குறித்து துபாய் வானொலியில் பேசிய அந்நாட்டு தொழிலாளர் துறை செயல் இயக்குனர் ஹூமைத் பின் டீமாஸ் கூறியதாவது, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள, புதிய வேலை அனுமதிச் சட்டப்படி, அந்தத் தடை ரத்து செய்யப்படும்.இதனால் தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து புதிய நிறுவனத்துக்குச் செல்ல உடனடியாக விண்ணப்பம் அனுப்பி, தனது வேலையை தொழிலாளர் மாற்றிக் கொள்ளலாம். இதற்குக் குறைந்தபட்சத் தகுதியாக, ஒரு தொழிலாளர் ஒரு நிறுவனம் அல்லது தொழில் வழங்குவோரிடம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும்.

அரசியல் கோமாளியை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டுமாம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.,யின் போக்கு சரியான திசையில் செல்கிறது. இதில் என்னை அரசு வக்கீலாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, வரும் 7ம் தேதி முடிவு தெரியும். நான் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டால், சி.பி.ஐ., நடவடிக்கையை துரிதப்படுத்துவேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட தொகைகளின் முதலீடுகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு பிரதமர் சம்மதித்துள்ளார்.

சிந்திக்க: சுப்பிரமணிய சுவாமி என்ற கோமாளி இவர் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் பண்ணும் கோமாளித்தனம் இருகிறதே தாங்க முடியலப்பா... இந்த பார்பன பணிய கும்பல் பதவிக்காகவும் பணத்திற்காகவும் போடும் வேஷம் இருகிறதே மிகவும் கொடுமையானது. இவர் ஜனதா தளம் என்கிற முகமூடியை போட்டுகொண்டு செயல்படும் ஒரு ஆதிக்க வெறிபிடித்த ஹிந்த்துதுவா ஆதரவாளர் என்பது யாவரும் அறிந்ததே.
இவர் அரசு வக்கீலாக மாறி எந்த வைக்கோலை தின்ன போறாரோ தெரியல.

காங்கிரஸை எதிர்ப்பத அல்லது ஹிந்த்துவாவை பாதுகாப்பதா? பாரதிய ஜனதாவில் குழப்பம்.

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற பா.ஜ., கட்சித் தலைவர்களின் நிலைப்பாட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் முரளிமனோகர் ஜோஷிக்கும், சுஷ்மா சுவராஜுக் கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் மோதல் முற்றியுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கை, தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதன் காரணமாக, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, பதவி விலகினார். இருந்தாலும், எதிர்க்கட்சியினர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து தீவிரப் படுத்தினர். இதனால், பட்ஜெட்கூட்டத்தொடரும் முடக்கப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த விசாரணையை காங்கிரஸ் நிறுத்தி வைபதாக பேரம் பேசி பாரதிய ஜனதாவை பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைக்கும்படி கேட்டு கொண்டிருப்பதாக புலனாய்வு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பாரதிய ஜனதாவில் ஒரு குரூப் பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கவேண்டும் என்றும், இன்னொரு குரூப் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மேல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை நிறுத்தி ஹிந்துத்துவாவை பாதுகாக்க முடியும் என்றும் இரட்டை கருத்து ஏற்பட்டுள்ளது. இதானால் பாரதிய ஜனதா கட்ச்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.