Dec 25, 2010

குடிநீரில் கேன்சர் அபாயம் : அமெரிக்காவில் எச்சரிக்கை.

வாஷிங்டன்: அமெரிக்காவில் பொது குடிநீர் குழாய்களில் வரும் நீரை குடிப்பதன் மூலம் கேன்சர் நோய் பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள ஹிங்க்லே, கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் தான் அதிகளவில் கேன்சர் மற்றும் பிற நோய்களை உருவாக்ககூடிய வேதிப்பொருட்கள் அதிகளவில் இருக்கிறது. அமெரிக்காவின் 31 நகரங்களில் குடிநீர் சுத்தமில்லாமல் இருப்பது குறித்து சுற்றுச் சூழல் அறிவியலார்கள் நடத்திய சோதனையில் நார்மன் பகுதிகளில் நீரில் கலந்துள்ள குரோமியத்தின் அளவு 6 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இந்த அபரிமிதமான அளவு கேன்சர் மற்றும் இதர நோய்களை உருவாக்குகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெடித்துச் சிதறியது.

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 25: ஜி.எஸ்.எல்.வி. எஃப்-6 ராக்கெட்டின் பயணம் தோல்வி அடைந்தது.ரூ.125 கோடியில் வடிவமைக்கப்பட்ட ஜிசாட்-5பி என்ற நவீன தொலைத்தொடர்பு செயற்கைக் கோள், சி-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்களுடன் 2,310 கிலோ எடையுள்ள இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ ஏற்பாடு செய்தது.இதன் மூலம் அதிக எடையுள்ள செயற்கைக் கோள்களை ஏவுகலனில் எடுத்துச் சென்று, துருவ வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் திறன் பெற்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சரியாக 29 மணி நேரத்துக்குப் பின், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த ராக்கெட் ஆரஞ்சு நிற புகையை கக்கியவாறு, ஏவுநிலைகளில் இருந்து விடுவித்துக் கொண்டு புறப்பட்டது.

ஆனால், விண்ணில் சீறிப் பாய்ந்த சில நிமிடங்களிலேயே ராக்கெட்டின் நிலை அடுக்குகளில் (ஸ்டேஜ்) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தனது பாதையில் இருந்து விலகிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட், அடுத்த சில விநாடிகளில் தீக்கோளமாக வெடித்துச் சிதறியது. இதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக, முதன் முறையாக முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ஏவப்பட்டு, தோல்வி அடைந்தது. 2-வது முறையாக இப்போதும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றி பெறாதது சற்று பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளின் வரிசையில் இது 3-வது தோல்வி ஆகும்.

முன்னதாக இந்த ஜி.எஸ்.எல்.வி. எஃப்-6 ராக்கெட்டை கடந்த 20-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ராக்கெட்டின் கிரையோஜெனிக் நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் இதன் ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறுகள் சீரமைக்கப்பட்ட பின்னரும், இப்போது ராக்கெட்டின் பயணம் தோல்வி அடைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிக உந்து திறனுள்ள கிரையோஜெனிக் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை செயற்கைக் கோள்களைச் செலுத்த இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது.

சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் தவறில்லை: துரோகி டக்ளஸ் தேவானந்தா.

கொழும்பு, டிச.25- இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் இசைக்கப்படுவதில் தவறில்லை என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக கூறமுடியாது என்றும் அவர் கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அஜ்மீர் குண்டுவெடிப்பு: பரபரப்பு துப்பு கிடைத்துள்ளது.


ஜெய்ப்பூர்,டிச.26:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு சாமியார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவரின் பெயர் விவரங்களும் கிடைத்துள்ளன. இது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.

கருப்பு நிற சான்ட்ரோ காரைத்தான் இந்த தீவிரவாத செயலுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கார் மத்தியப் பிரதேசத்தில் வைத்து சிக்கியுள்ளது. இந்தக் காரில் வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து குஜராத் மாநிலம் கோத்ராவுக்குப் போயுள்ளனர். கோத்ராவிலிருந்து அஜ்மீருக்கு பஸ்ஸில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அஜ்மீர் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

அத்வானியுடன் நீரா ராடியாவுக்கு தொடர்பு.

டெல்லி,டிச,26:காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் சிங்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பா.ஜ.க. தலைவர் அத்வானிக்கும் தரகர் நீரா ராடியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். நீரா ராடியா நடத்தும் அறக்கட்டளைக்கு டெல்லி வசந்த்கஞ்ச் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி கலந்து கொண்டார். அப்போது நீரா ராடியாவை அத்வானி பாராட்டினார் என்றும் அபிசேக் சிங்வி குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்தான் சுவிஸ் வங்கியில் ராடியா கணக்கு தொடங்கினார். அவருக்கு அத்வானி அனுமதி கொடுத்தார். சுவிஸ் வங்கி கணக்கில் நீரா ராடியா மட்டும்தான் பணம் போட்டுள்ளாரா? அல்லது அவருடன் சேர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் பணம் போட்டுள்ளார்களா? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

திருமணத்திற்கு பின் ஆண்கள்,..ஆய்வின் தவகல்

நியூயார்க்:திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் பெறும் மாறுதல் ஏற்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிரா பட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

திருமணத்திற்கு முன், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஆண்கள், திருமணத்திற்கு பின், அந்த செயல்களை அறவே தவிர்க்கின்றனர். அவர்களிடம் உள்ள முரட்டுத்தனம் மாறி, மென்மையானவர்களாகவும், இனிமையாக பழக கூடியவர்களாகவும் மாறுகின்றனர். பொய் சொல்வதை தவிர்க்கின்றனர்.பிறர் தவறு செய்யும் போது, அதை மன்னிக்கும் பக்குவமும் அவர்களிடம் வந்து விடுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற திருமணமாகாத 29 வயது ஆண்களில் 1.3 சதவீதம் பேர் முரட்டுத்தனமாகவும், சமூக விரோத போக்கை கடைபிடிப்பவர்களாகவும் இருந்தனர். அதே வயதில் திருமணமான 0.8 சதவீதம் பேர் மட்டுமே இந்த குணங்களை கொண்டிருந்தனர்.பரம்பரை மற்றும் வளர்ப்பு சூழல் காரணமாகவும் குழந்தையிலிருந்தே முரட்டுதனமான குணங்களை கொண்டிருந்தவர்களும் திருமணத்திற்கு பிறகு மாறுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.

இதுகுறித்து, இந்த ஆய்வில் பங்கேற்காத அல்பேனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரெயான் கிங் கூறியதாவது:திருமணத்திற்கு பின், ஆண்கள் மாறுகின்றனர் என்பது உண்மை தான் என்றாலும், அதற்கான காரணம் தான் புரியவில்லை. திருமணத்திற்கு முன்பு ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது உள்ளிட்ட பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். முரட்டுத்தனமான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் இதுவே காரணம். அவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இந்த தொடர்புகளை அவர்கள் துண்டித்து கொள்கின்றனர். எனவே, அவர்களின் குண மாற்றத்திற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ரெயான் கிங் தெரிவித்தார்.

பதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்

புதுடெல்லி டிச: மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் தலைமையை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளிகளை மேலும் விசாரணைச் செய்வதால் தங்களின் தலைவர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற கவலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆழ்ந்துள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய ஸஹசம்பர்க்கா பிரமுக்கும், 2007 முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் இந்தியாவில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளுக்கு பண உதவி அளித்ததும், சதித் திட்டங்களை தீட்ட நடந்த ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைக்கு தெரியாது என்பதை சி.பி.ஐ நம்பவில்லை. குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமல்ல அவர்கள் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு திட்டம் தீட்டியதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நெட்வொர்க்கை பயன்படுத்தித்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அஸிமானந்தாவை விசாரணைச் செய்தபொழுது சி.பி.ஐக்கு பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இவர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டால் மேலும் பல தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகும். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் 29 வரை நீண்ட சதித்திட்டம் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்திருக்கிறது என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இதற்காக தயார்செய்த பட்டியலில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ரகசிய கூட்டங்கள் முதல் குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த முயற்சி வரை இந்திரெஷிற்கு பங்குண்டு என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டன் முதல் மூத்த தலைவர்கள் வரை குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளாவர். குண்டுவெடிப்புகளுக்கு பொருளாதார உதவி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பதுங்கியிருக்க இடங்களை ஏற்பாடுச் செய்தல் உள்ளிட்ட சுப்ரீம் கமாண்டரின் ரோலை வகித்தது இந்திரேஷ்குமார் என்பது சி.பி.ஐயின் விசாரணை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

இந்திரேஷ் குமாரை விசாரிப்பதன் மூலம் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு மேலும் தெளிவாகும் என சி.பி.ஐ கருதுகிறது. தற்போது மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் பரந்து கிடக்கும் இவ்வழக்குகளில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை அறிக்கைகளை ஒன்றிணைத்து கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.

செய்தி:தேஜஸ்

விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணம்

துபாய்,டிச.25:ஹமாஸ் கமாண்டர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலைத் தொடர்பாக எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை உறுதிச்செய்யும் விதத்தில் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் அமையும் என துபாய் போலீஸ் தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் தாஹி கல்ஃபான் தமீம் கல்ஃப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உண்மையை வெளிப்படுத்துவது குற்றமல்ல என ஜூலியன் அஸென்ஜேவைக் குறித்து தாஹி கல்ஃபான் குறிப்பிட்டார். மப்ஹூஹின் கொலையில் இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாத்தின் பங்கை நிரூபிக்கும் ஆதாரங்களை விரைவில் வெளியிடப் போவதாக அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜூலியன் அஸென்ஜே தெரிவித்திருந்தார்.

இரண்டாம் லெபனான் யுத்தம், மப்ஹூஹ் கொலைத் தொடர்பான 3700க்கும் அதிகமான கோப்புகளை வெளியிடப் போவதாக அஸென்ஜே தெரிவித்திருந்தார். மப்ஹூஹ் கொலைத் தொடர்பான தகவல் தனக்கு புதிதல்ல என தாஹி கல்ஃபான் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி துபாயில் அல் புஸ்தான் ரொட்டானா ஹோட்டலின் 23-வது அறையில் வைத்து மப்ஹூஹ் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

செய்தி:தேஜஸ்

Dec 24, 2010

பேரீச்சையின் பயன்கள்.

இரத்த விருத்திக்கு பேரீச்சை

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

பேரீச்சையின் பயன்கள், கண்பார்வை தெளிவடைய

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

நன்றி : சங்கவி

விபச்சாரம்,.. புரோக்கர்கள் கைது

கொடைக்கானலில் விபச்சாரம் செய்த மூன்று புரோக்கர்கள், ஆந்திரா,கர்நாடகாவை சேர்ந்த ஏழு பெண்களை போலீசார் கைது செய்தனர். செண்பகனூரை சேர்ந்த டேவிட்(32) இவர் நடந்து செல்லும் போது, பெரியகுளம் பருப்புபட்டி சேர்ந்த சந்தோஷ்(32), கம்பத்தை சேர்ந்த கார்த்திக் என்ற செந்தில்(32), ஆந்திரா ரித்திஸ்(21) ஆகியோர் அவரிடம் லேக்ஏரியாவில் பங்களாவில் பெண்கள் இருப்பதாக கூறிவிபச்சாரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கர்நாடகா, ஆந்திரா, ஈரோடு, கரூரை சேர்ந்த ஏழு பெண்கள் இருந்தனர்.

இதுகுறித்து டேவிட் கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் சோதனை மேற்கொண்டு, புரோக்கர்களையும், பெண்களையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, ஏழு பெண்களையும் விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி, அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். புரோக்கர்கள் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாவோயிஸ்டுகள் சுட்டு மேற்க வங்கத்தில் 4 பேர் சாவு.

ஜார்கிரம், டிச. 24: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4 பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளை மாவோயிஸ்டு போராளிகள் செய்திருக்கலாம் என போலீஸôர் சந்தேகிக்கின்றனர்.

ஒடோல்சுவா கிராமத்தில் மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே மாவட்டத்தில் உள்ள சிருகோரா கிராமத்தில் ஜார்க்கண்ட் கட்சித் தொண்டர் ஒருவரையும் போராளிகள் சுட்டுக் கொன்றனர். அதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு கிராமமான கலபீரியாவைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரையும் போராளிகள் சுட்டுக் கொன்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை நோக்கி மாவோயிஸ்டு போராளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

வெளிநாடுகளுக்கு படையெடுப்பு..டாக்டர்கள் 56,000.

இந்திய டாக்டர்கள் 56,000 பேர் வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்றுள்ளதாக புள்ளியியல் விபரம் ஒன்று தெரிவிக்கின்றது. சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். லண்டன் , அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தான் இந்திய டாக்டர்கள் பெருமளிவில் வேலை தேடி செல்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் நர்சுகளும் இதே போல் மேலை நாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் இந்தியாவில் டாக்டர்கள் மற்றும் நர்சகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010 க்கும் ஆண்டுக்கான சர்வதேச புலம் பெயர்வோர் குறித்த அறிக்கை இத்தகவலை தெரிவித்துள்ளது.

டாக்டர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை: அநீதமான தீர்ப்பு.

ராய்ப்பூர், டிச.24- சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு போராளிகளுடன் டாக்டர் பினாயக் சென்னுக்கு உள்ள தொடர்பை உறுதிபடுத்திய நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஏற்கெனவே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவரை நீதிமன்ற வளாகத்தில் ராய்ப்பூர் போலீஸார் உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் அவர் குற்றவாளி என்று ராய்ப்பூர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் இயக்கத்தினர் நகர்ப்புறங்களிலும் செயல்பட டாக்டர் பினாயக் சென் உதவினார் என்று போலீஸார் தங்களது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தனர். 2007, மே மாதம், மாவோயிஸ்ட் தலைவர் சன்யாலை சிறையில் சந்தித்துப் பேசி, அவரிடம் இருந்து ரகசியமாக கடிதங்களை பெற்றுச் சென்று மாவோயிஸ்ட் போராளிகளுடன் கொடுக்க முயன்றபோது டாக்டர் பினாயக் சென் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dec 23, 2010

மசூதி குண்டு வெடிப்பு சம்பவம், தீவிரவாதி இந்திரேஷ் குமாரிடம் சிபிஐ விசாரணை

புதுதில்லி, டிச. 23: ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். சிபிஐ தன்னை அழைத்து விசாரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் சதியே காரணம் என்றார் அவர்.

தில்லியில் சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

தீவிரவாதி இந்திரேஷ் குமார் ஆர்எஸ்எஸ் மத்திய காரியக் குழு உறுப்பினராக உள்ளார். எனக்கும் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது இட்டுக்கட்டப்பட்டது. நான் வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஆர்எஸ்எஸ் இயக்கத்துடனான எனது தொடர்பில் ஒளிவுமறைவு இல்லை. எனது வாழ்வை தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.

ஹைதராபாதில் உள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டு வெடித்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். பைப்பில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செல்போன் மூலம் வெடிக்கச் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சம்பவத்தை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தேவேந்திர குப்தா மற்று லோகேஷ் சர்மா இருவரும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் இந்து அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக போலீஸôர் தெரிவித்தனர். இவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல் சங்ரா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். மேலும் சுவாமி ஆசிமானந்திடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சுனில் ஜோஷி மத்திய பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் சதியில் இந்திரேஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதையடுத்தது இந்திரேஷ் குமார் சிபிஐ அலுவலகத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மும்பையில் நான்கு பயங்கரவாதிகள் ஊடுருவல்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, பயங்கரவாதிகள் நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர், என, அந்நகர போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூ ராய் தெரிவித்துள்ளார். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெளி மாநிலத்திலிருந்து மும்பாயுக்குள் புகுந்துள்ளதாகவும், ஹிந்து பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அந்த நான்கு பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்'ல் பயிற்சி பெற்றவர்கள்.

மும்பை, ஆமதாபாத் நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், உளவுத் துறையினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை எச்சரித்தனர். இந்நிலையில், நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசிய மும்பை போலீஸ் இணை கமிஷனர் ஹிமான்சூராய், பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளது உண்மையே, என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நான்கு பேர் மும்பையில் ஊடுருவியுள்ளனர். இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. பயங்கரவாதிகளின் வயது 20 முதல் 30க்குள் இருக்கும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்தோடு இவர்கள் ஊடுருவியிருக்கலாம் என, சந்தேகிக்கிறோம்.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுருக்கிறோம், ஊடுருவிய நபர்களது பெயர்கள் பாரத் சென், மாரிப்பு ராய், தாக்கர் வாலே, அர்சுமன் சங்கே. இவ்வாறு ஹிமன்சூராய் கூறினார்.

ஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஓர் பார்வை!

படம்: குஜராத் இனப்படுகொலை காட்சிகள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் உரை நிகழ்த்திய திக்விஜய்சிங் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்திவரும் இன அழித்தொழிப்புகள் ஜெர்மன் நாசிப் படையினரின் யூத இன அழித்தொழிப்பிற்கு சமம் என தெரிவித்தது இஸ்ரேலுக்கு அவமானமாகிவிட்டது போலும்.
இரண்டாம் உலகப் போரில் ஆரிய இன சுத்திகரிப்பில் நம்பிக்கைக் கொண்ட நாசிகள் நடத்திய யூத இன அழித்தொழிப்பையும் குஜராத்திலும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஹிந்துத்துவா சக்திகள் நடத்திவரும் முஸ்லிம் இனப்படுகொலைகளையும் ஒப்பிடமுடியாது என இஸ்ரேல் தூதரகம் கோபத்தோடு பதிலளித்துள்ளது. ஆனால், இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு சென்று நாசிச-பாசிச தத்துவம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதனைக் குறித்து ஆய்வுச்செய்து அதனை இந்தியாவில் செயல்படுத்த துணிவுடன் களமிறங்கியது ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகரின் நூல்களில் காணக்கிடைப்பது இஸ்ரேலிய தூதரகத்தின் திறமைசாலிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது நம்ப முடியாததாகும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய 'நாம் அல்லது நமது தேசம் வரையறுக்கப்பட்டது (We or Our Nation Defined)' என்ற நூலின் துவக்கமே நாசி இயக்கத்தினரை புகழ்த்தியவாறே அமைந்துள்ளது. இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய சியோனிச தத்துவம் யூதர் அல்லாத இனத்தவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மட்டுமல்ல, தங்களது ஆக்கிரமிப்பிற்கும் அட்டூழியத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை கூட்டாக படுகொலைச் செய்வதை தேசிய கொள்கையாகவும் மாற்றியது. ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிபுரிந்த வேளையில் சியோனிஷ தலைவர்கள் நாசி ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணினர் என்பது நம்பமுடியாத ஒன்றாக இருந்தபோதிலும் யூத வரலாற்றாசிரியர்களே ஆதாரத்துடன் இதனை நிரூபித்துள்ளனர்.

இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொடூரமாக இனப்படுகொலையை நடத்தியது அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேக் காரணத்தினால்தான் என்பதுக் குறித்து இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் மட்டுமே சந்தேகம் ஏற்படும். அபினவ் பாரத், ஜெய் வந்தேமாதரம் போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாதுடன் தொடர்பு வைத்திருப்பதற்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது சியோனிஷ-ஹிந்துத்துவா உறவு வலுப்பெற்றதற்கும் காரணம் இனப்பகையும், இன அழித்தொழிப்புமாகும்.

அபினவ் பாரத்தின் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த கூடிய ரகசிய கூட்டங்களிலெல்லாம் இஸ்ரேலின் உதவியைக் குறித்து தொடர்ந்து பேசிய தகவல்கள் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை ஹேமந்த் கர்காரே விசாரிக்கும் போது வெளிவந்தன. நாசிகள் தங்களது இன அழித்தொழிப்பு வேட்டையை நடத்திய காலக்கட்டத்தில் யூதர்களை மட்டுமல்ல போலந்து நாட்டவர்களையும், ஜிப்ஸிகளையும் சிறையிலடைத்து கொலைச் செய்துள்ளனர். ஆனால், இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு யூதர்களை மட்டுமே ஹிட்லர் தலைமையிலான நாசிக்கள் இனப்படுகொலைச் செய்தார் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பது 'யூத படுகொலை' என்ற பிராண்டை பயன்படுத்தி ஃபலஸ்தீனர்களை இன அழித்தொழிப்பு செய்வதற்கான சியோனிஷத்தின் கொடூரமான கொள்கையாகும். ஆனால், அந்த பருப்பு இங்கு வேகாது. ஏனெனில் இனப்பகை, இன அழித்தொழிப்பு ஆகியவற்றில் ஹிந்துத்துவா சக்திகளும், சியோன்ஷ்டுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது இந்தியர்களுக்கு தெரியும்.

விமர்சகன்

நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் ஆஜர்.


சென்ற வருடம் முடிவடைந்த யுத்தத்தின் பின்னர் மூன்று லட்சம் தமிழர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட காலம் தொட்டே, அந்த முகாம்களுக்குள் பாதுகாப்புப் படையினர் வந்து ஆட்களைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருந்தன. விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலரை யுத்தம் நடந்த சமயத்தில் பார்த்தோம் ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் காணாமல் போயிருந்தனர் என்று அவர்களின் உறவினர்கள் கூறிவருகிறார்கள்.

புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 160 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிரமான முன்னாள் உறுப்பினர்கள் என்றும் இவர்களை யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்களிலிருந்து கைதுசெய்யதாகவும், தற்போதுவரை இவர்களை பயங்கரவாத விசாரணைத் துறையினர் தடுத்து வைத்திருந்தனர் என்றும் அரச தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நூற்று அறுபது பேரின் பெயர்களும் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டிருந்தது என்றாலும் இவர்கள் சார்பாக வழக்கறிஞர் ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கு பொலிசாருக்கு ஒன்றரை வருட காலம் எடுத்துள்ளது. ஆனாலும் இப்போதாவது சட்ட நடைமுறை ஆரம்பிக்கிறது என்பது வரவேற்கபட வேண்டிய ஒரு செய்திதான் என கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்காக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.

போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்கக்கூடிய குழு விரைவில் இலங்கை வந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியம் வழங்க வாய்ப்பு உள்ளது என்பதால்தான் இப்போது இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்கிறார்கள் என இன்னொரு வழக்கறிஞர் கூறுகிறார்

கொலைகாரப் படைக்கு" பிரிட்டன் பயிற்சி.

வங்க தேசத்தில் "கொலைகாரப் படை" என்று குற்றஞ்சாட்டப்படும் சிறப்பு காவல் துறையினருக்கு பிரிட்டிஷார் பயிற்சி அளித்தனர் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல்களை பிரித்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.அந்நாட்டில் ராபிட் ஆக்ஷன் பட்டாலியன் என்றழைக்கப்படும் சிறப்பு காவல் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று கூறி அமெரிக்கா அப்படியான பயிற்சிகளை வழங்க மறுத்துவிட்டது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு காவல் படை 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அது முதல் 550க்கும் அதிகமான கொலைகள் அவர்களால் செய்யப்பட்டுள்ளன என்றும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்தச் சிறப்பு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் யார் மீதும் இப்படியான கொலைகள் தொடர்பில் வழக்கு தொடரப்படவில்லை.

Dec 22, 2010

ஜப்பானில் பாடும் எலிகள்.

டோக்கியோ,டிச.23:மிக்கி-மவுஸ் கார்ட்டூன்களிலும், அனிமேஷன் சினிமாக்களிலும் கதாபாத்திரங்களான எலிகள் பேசுவதை பார்த்திருப்போம். ஆனால், இதனை உண்மையான எலிகளாலும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள். பறவைகளைப் போல் பாடும் திறமையுடைய எலிகளை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

மரபணு மாற்றம் ஏற்படுத்திய எலிகளை பயன்படுத்தி ஆய்வு நடத்தியபொழுது எதேச்சையாக எலிகளுக்கு பாடுவதற்கான ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்ல, பாடுவதற்கான ஆற்றலை அதன் தலைமுறையினருக்கும் பரவும் தன்மையுடையது என விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்பொழுது ஜப்பான் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடும் எலிகள் உள்ளன.

498 ரன்கள் எடுத்து அர்மான் சாதனை!

மும்பை : சச்சின் போன்ற மகத்தான வீரர்களை உருவாக்கிய மும்பை மண்ணில் இருந்து இன்னொரு சாதனையாளராக 13 வயதான அர்மான் ஜாபர் உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி அளவிலான போட்டியில் 498 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் கைல்ஸ் ஷீல்டு லீக் கிரிக்கெட் போட்டி(14 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. இதில், பந்த்ரா ரிஸ்வி ஸ்பிரிங்பீல்டு மற்றும் ராஜா சிவாஜி பள்ளிகள் மோதின. ஸ்பிரிங்பீல்டு பள்ளிக்காக விளையாடிய அர்மான் "சூப்பராக' பேட் செய்தார். மொத்தம் 77 பவுண்டரிகள் அடித்த இவர் 490 பந்துகளில் 498 ரன்களை குவித்தார். இதன் மூலம் பள்ளி அளவிலான போட்டிகளில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார். இதற்கு முன் ராஜா சிவாஜி பள்ளியின் பரிக்ஷத் வல்சங்கர் 366 ரன்கள் எடுத்திருந்தார். தவிர, கடந்த ஆண்டு ஹாரிஸ் ஷீல்டு பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில்(16 வயதுக்கு உட்பட்ட) அதிக ரன் எடுத்த சர்பராஸ் கான்(439) சாதனையையும் தகர்த்தார். அர்மான் இன்னும் 2 ரன்கள் எடுத்திருந்தால் 500 ரன்களை எட்டியிருக்கலாம். ஆனால் 498 ரன்களில் அவுட்டாகி விட்டார். இதையடுத்து ரிஸ்வி பள்ளி 8 விக்கெட்டுக்கு 800 ரன்களுக்கு "டிக்ளேர்' செய்தது.

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் மும்பை ரஞ்சி அணியின் கேப்டனுமான வாசிம் ஜாபரின் உறவினர் தான் அர்மான். தனது சாதனை குறித்து அர்மான் கூறுகையில்,""பள்ளி அளவிலான போட்டிகளில் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்த சச்சின் தான் எனது "ரோல் மாடல்'. எனது உறவினர் வாசிம் ஜாபர் அவ்வப்போது பயிற்சி அளிப்பார். நான் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடவில்லை. நீண்ட நேரம் பேட் செய்ய வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. 500 ரன்களை எட்ட தவறியது ஏமாற்றம் அளித்தது,''என்றார்.

பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்

கொல்கத்தா,டிச.23 : சாதாரணமான ஒரு பிரச்சனையை காரணமாக வைத்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்துள்ளனர்.

கொல்கத்தாவிற்கு அடுத்துள்ள பீவிஹகோலா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 12 மாணவிகள் ஆர்.எஸ்.எஸ் வெறிக் கும்பலின் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகியுள்ளனர்.
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தபொழுதிலும் ஊடகங்கள் இச்செய்தியை மூடி மறைத்துள்ளன. காளி பூஜைக்காக பள்ளிக்கூட சுற்றுப்புற பகுதியை அலங்காரம் செய்ததுத் தொடர்பாக இச்சம்பவத்தின் துவக்கம் அமைந்துள்ளது.

பூஜை கொண்டாட்டங்கள் முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பொழுதிலும் பள்ளிக்கூட காம்பவுண்டில் கட்டிய பந்தல் மாற்றப்படவில்லை. மேலும் பள்ளிக்கூட கேட்டில் மூங்கிலால் கட்டப்பட்ட வேலி மாணவ மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கூட நிர்வாகிகள் பாஞ்ச்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த 4 பேரைக் கொண்ட போலீஸ் குழு மூங்கில்களை மாற்றுவதற்கு ஆசிரியர்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் அதற்கு தயாராகவில்லை. பின்னர் அவ்விடத்தில் நின்றுக் கொண்டிருந்த மாணவிகளின் உதவியுடன் மூங்கில்கள் மாற்றப்பட்டன. ஆனால், நாங்கள் கட்டிய மூங்கில்களை மாற்றிவிட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் அங்கு வந்து சம்பவ இடத்திலிருந்த ஆசிரியர்களையும், மாணவிகளையும் தாக்க ஆரம்பித்தனர். பின்னர் 12 மாணவிகளை பள்ளிக்கூட குளத்தின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளது இந்த பயங்கரவாத காம வெறிப்பிடித்த கும்பல்.

இதில் ஷப்னம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காமவெறி இயக்கத்தைச் சார்ந்த தகப்பனும், மகனும் உட்பட 8 பேர் சேர்ந்து வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதனை பாதுகாவலர்கள் போலீசாரிடம் புகாராக அளித்துள்ளனர்.

ராஜ்குமார், அவனுடைய மகன் சுஜித் கொல்லா, பினோய் மண்ணா, பொய்கோந்தா ஆகியோரின் தலைமையில்தான் இந்த பயங்கரத்தை நடத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இந்தக் கொடூரத்தை தடுக்கவந்த பள்ளி தலைமை ஆசிரியரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தாக்கியுள்ளனர். கடுமையாக காயமுற்ற இவர் தற்பொழுதும் ஹவ்ரா பொது மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வருகிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு இரையான மாணவிகள் பலரும் தற்பொழுது மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுடைய பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர். துவக்கத்தில் வழக்கை பதிவுச்செய்ய தயங்கிய போலீசார் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காம வெறிக்கும்பல் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர்.

ஜாமீன் பெற இயலாத குற்றம் என்ற பொழுதிலும் ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் ஜாமீன் கிடைக்க தடையில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவிகளுக்கு நடந்த இந்த கொடூரத்தைக் குறித்து தேசிய ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. பல நாட்களுக்கு பிறகு 'கலம்' என்ற வங்காள பத்திரிகைதான் இச்செய்தியை முதலில் வெளிக்கொணர்ந்தது.

தொலைக்காட்சி சேனல்களையும், நாளிதழ்களையும் நேரில் அழைத்து இச்சம்பவம் குறித்து அறிவித்த பொழுதிலும் அவர்கள் இதனை செய்தியாக வெளியிட மறுத்துள்ளனர். இத்தகவலை 'வாரிகா' என்ற பத்திரிகையின் எடிட்டர் அஹ்மத் ஹஸன் தெரிவிக்கிறார்.
இச்சம்பவத்தின் பின்னணியில் மதவெறிதான் காரணமென பலரும் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தைக் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு மகளிர் உரிமை கமிஷன் தலைவி மாலினி பட்டாச்சார்யா உள்ளிட்டவர்கள் களமிறங்கியுள்ளனர்.

செய்தி:தேஜஸ்

கின்னஸ் சாதனை .. 617 வகை உணவுகளை தொடர்ந்து சமைத்து

பிரபல சமையல் கலைஞர் தாமோதரன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தமிழகத்தில், சமையல் கலையில் முத்திரை பதித்து வரும், தாமு என்ற தாமோதரன், தொடர்ந்து 25 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்ததால் அவருக்கு, "கின்னஸ் சாதனையாளர் விருது' வழங்கும் விழா, ஓட்டல் சவேராவில் நேற்று நடந்தது.

இதில் தாமோதரன் பேசியதாவது: சிறு வயதிலிருந்தே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் என்னிடம் இருந்தது. தற்போது அந்த எண்ணம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமையல் படிப்பு படிக்கும் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். என் சாதனையை என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு, துணை நின்ற குடும்பத்தாருக்கும், ஓட்டல் நிர்வாகத்திற்கும், கால்நடை துறை செயலர் நிர்மலாவுக்கும், கின்னஸ் சாதனை தூதர் லூசியா, பத்திரிகை நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நன்றி. இவ்வாறு தாமோதரன் பேசினார். தாமோதரன், 20ம் தேதி காலை எட்டு மணிக்கு சமைக்க தொடங்கி, நேற்று காலை 8:30 மணிக்கு முடித்தார். இதில் 617 வகையான 180.64 கிலோ உணவை தனி நபராக செய்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், தமிழக கால்நடை செயலர் நிர்மலா, சவேரா ஓட்டல் செயல் இயக்குனர் நீனா ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்திய காக்கிச்சட்டையின் லட்சணம்!

விசாரணையின்போது பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து நடத்துவது, சட்டவிரோத பார் மற்றும் சீட்டாட்ட கிளப்களுக்கு துணை போவது உள்ளிட்ட முறைகேடுகள், கோவை மாநகர போலீசில் அதிகரித்துள்ளன. முறைகேடு போலீஸ் மீது கமிஷனர் கடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கோவை மாநகர போலீசில் 15 ஸ்டேஷன்கள் உள்ளன. அடிதடி தகராறு, வாகனத்திருட்டு, குடும்பத் தகராறு, பணத்தகராறு, தற்கொலை, வாகன விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக தினமும் 20 வழக்குகள் வீதம் பதிவாகின்றன. தண்டனைக்குரிய குற்றம் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட வேண்டுமென்பது, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் விதி. ஆனால், வழக்குப்பதிவு செய்ய மறுப்பதும், பணம் பெற்று வழக்குப்பதிவு செய்வதும், விசாரணையின் போது பணம் பறிப்பதும் அதிகரித்துள்ளது. சிவில் விவகாரத்தில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து நடத்துவது, சட்ட விரோத சீட்டாட்ட கிளப்கள் மற்றும் பார்களுக்கு துணைபோவது, உள்ளிட்ட முறைகேடுகள் தலைதூக்கியுள்ளன. வாகனத்திருட்டு, வீடு புகுந்து திருட்டு, அடிதடி தகராறு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுவதில்லை. "அதிகாரிகள் இல்லை' எனக்கூறி கூறி வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடிக்கின்றனர். இதனால், பலரும் உதவிக்கமிஷனர், துணைக்கமிஷனர் மற்றும் கமிஷனரிடம் முறையிட்டு நிவாரணம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உயரதிகாரிகளிடம் புகார் அளித்தால் மட்டுமே சட்ட ரீதியான நிவாரணம் கிடைக்கும் எனக்கருதி தினமும் எண்ணற்ற மக்கள், கமிஷனர் அலுவலகத்தில் முறையிட வருகின்றனர். இவர்களிடம் நேரடி விசாரணை நடத்தும் கமிஷனர் சைலேந்திரபாபு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கிறார்.அதன்பிறகே, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கமிஷனரால் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் புகார்களின் மீதும் சில நேரங்களில் உரிய விசாரணை நடப்பதில்லை. "எங்களை மீறி நேரடியாக கமிஷனரிடமா முறையிடுகிறாய்?' எனக்கேட்டு ஆத்திரமடையும் போலீசாரின் ஏக வசனங்களையும், பாதிக்கப்பட்டவர்கள் கேட்க நேரிடுகிறது.

இவ்வாறு, கமிஷனரால் பரிந்துரைக்கப்பட்ட புகார் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், புகார்தாரரையே மிரட்டிய இரு பெண் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவமும் சமீபத்தில் நடந்திருக்கிறது.எனினும், சில போலீசாரின் அலட்சிய போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் புகார் மனு மீது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டால், கமிஷனரிடம் முறையிட வருவோரின் எண்ணிக்கை குறையும். அவ்வாறான விசாரணைகள் நியாயமாகவும், சட்டப்படியும் இல்லாததாலும்தான் கமிஷனரிடம் நேரடியாக முறையிட பலரும் வருகின்றனர். மிகச்சாதாரண பிரச்னைகளில் கூட கமிஷனரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே நியாயம் கிடைக் கும் என்ற எண்ணம் மக்களிடம் வேரூன்றிவிட்டதாகவே தோன்றுகிறது. இது, போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள் மற்றும் உதவிக்கமிஷனர்களின் செயல்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையே காட்டுகிறது. போலீஸ் நிர்வாகத்தில் உயரதிகாரிகள் மட்டும் பொறுப்புடன் பணியாற்றினால் போதாது. களப்பணியாற்றும் போலீசாரும், மேற்பார்வை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் பொறுப்புடன் செயலாற்றினால் மட்டுமே மக்களின் நன்மதிப்பை பெறமுடியும். ஆனால், துரதிஷ்டவசமாக அதற்கான வாய்ப்புகள் நகரில் குறைந்து வருகின்றன.

பலச்சாரும் ,,.. உடல் நலமும்.

தர்பூசணிப்பழச் சாறு :

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு :

அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம். இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு :

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:

தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு :

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.
பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு :

தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.
மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.

Fresh Fruit Juices - Food Habits and Nutrition Guide in Tamil

இந்திய டாக்டர் ஹனீஃபிற்கு 10 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க ஆஸி: சம்மதம்,

மெல்போர்ன்,டிச.22:ஆஸ்திரேலிய அரசு தன்னை தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சட்டவிரோதமாக சிறையில் அடைத்ததை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த இந்திய டாக்டர் முகம்மது ஹனீப், தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் சமரசமாகப் போக ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு பெரும் தொகையை இழப்பீடாக வழங்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய அரசு 10 லட்சம் டாலர் இழப்பீடுத் தொகையை வழங்கும் என்று தெரிகிறது. பெங்களூரைச் சேர்ந்தவர் முகம்மது ஹனீப்.டாக்டரான இவர்ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார்.கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பான விசாரணையின்போது, டாக்டர் ஹனீப்பை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கும், கிளாஸ்கோ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஹனீப்புக்கு எதிரான எந்த ஆதாரமும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அவர் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் அம்பலமானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் அவமானமும், தர்மசங்கடமும் ஏற்பட்டது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஹனீப் நாடு திரும்பி விட்டார். ஆனால் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, தவறான வழக்கில் கைது செய்து, தனது வாழ்க்கையையும், வேலையையும் கெடுத்த ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக, அந்த நாட்டின் முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அரசுக்கும், ஹனீப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியா வந்தார் ஹனீப். 10 நாள் விடுமுறையில் வந்த ஹனீப், ஆஸ்திரேலிய தரப்புடன் தனது வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டுள்ளார்.இதுகுறித்து ஹனீப் கூறுகையில், இந்த உடன்பாடு எனது வேலையை திரும்பப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது கெளரவமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவது குறித்து பரிசீலிக்கவுள்ளேன் என்றார்.

ஹனீப்புடன் அவரது மனைவி பிர்தோஸ் மற்றும் 3 வயது மகள் ஹனியா ஆகியோரும் வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்குப் பிறகு நாடு திரும்பிய ஹனீப் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனீப் தொடர்ந்து கூறுகையில், இந்த பிரச்சினை இத்துடன் முடிவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தவறான குற்றச்சாட்டின் பேரில் நான் கைது செய்யப்பட்டது எனக்கு பெரும் வேதனையான அனுபவத்தைக் கொடுத்தது. இன்று ஏற்பட்டுள்ள உடன்பாடு எனக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. எனது குடும்பத்தினருடன் இனி நிம்மதியான வாழ்வைத் தொடர்வேன். விரைவில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவோம் என்று கருதுகிறேன். அதுகுறித்து பரிசீலிக்கவுள்ளேன். ஏற்கனவே வேலை பார்த்து வந்த கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் மீண்டும் சேரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. இதுகுறித்து எனது குடும்பத்தினருடன் விவாதித்த பின்னரே முடிவெடுப்பேன் என்றார்.

ஹனீப்புக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து அவரது வக்கீல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனால் அவருக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்று மட்டும் தெரிவித்தனர். இருப்பினும் ஹனீப்புக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரிஸ்பேனில் அரசுத் தரப்புடன் கடந்த 2 நாட்களாக இறுதிக் கட்ட நஷ்ட ஈடு பேச்சுவார்த்தையில் ஹனீப்பும் அவரது வக்கீல்களும் ஈடுபட்டிருந்தனர். அது இன்று சமரசமாக முடிந்துள்ளது. இதையடுத்து முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது ஹனீப் தொடர்ந்த வழக்கு கைவிடப்படுகிறது.

மன உளைச்சல், வேலை பறிபோனது, வருமானம் பாதிக்கப்பட்டது, கெளரவம் பாதிக்கப்பட்டது உள்ளிட்டவற்றுக்காக தற்போது ஹனீப்புக்கு இழப்பீடு தரப்படவுள்ளது. ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றில் இப்படி ஒரு இழப்பீடு விவகாரம் இதுவரை நடந்ததே இல்லை என்று ஹனீப்பின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் நீதிபதி டோனி பிட்ஜெரால்ட் முன்னிலையில் இந்த இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

பாஜக ஆட்சியில் ரூ.1.43 லட்சம் கோடி இழப்பு.

புதுடெல்லி,டிச.22:பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 1999-ம் ஆண்டில் உரிமம் வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட தவறான நடைமுறையால் அரசுக்கு ரூ.1.43 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார். உரிமம் வழங்குவதற்கு கட்டண நிர்ணய முறையை மாற்றி, வருவாய் பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தியது பாஜக கூட்டணி ஆட்சிதான். மேலும் உரிமக் காலம் 10 ஆண்டுகளில் 20 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டதும் பாஜக கூட்டணி ஆட்சியில்தான். ஏல முறையும் பாஜக கூட்டணி ஆட்சியில் கைவிடப்பட்டது.தொலைத் தொடர்புத் கொள்கையில் பாஜக கூட்டணி அரசு செய்த தவறான மாற்றங்களால் அரசுக்கு ரூ.1.43 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

அலைக்கற்றை கையிருப்பு மற்றும் ஒதுக்கீட்டு கொள்கை தொடர்பாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கபில் சிபில் இந்தத் தகவலை செவ்வாய்க்கிழமை கூறினார். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படாது. இப்போது கைவசம் உள்ள அலைக்கற்றையை தேவையான அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நுழைவு கட்டணமாக ரூ.1,658 கோடி மட்டுமே செலுத்தி உள்ளன. குறைந்த நுழைவுக் கட்டணமே கடந்த சில ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறை இந்த அளவு வளர்ச்சி கண்டதற்கு காரணம் என்றார் அவர். 2001-ம் தொலைத் தொடர்பு சேவையைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம். ஆனால் 2007-ல் இது 18.22 சதவீதமாக அதிகரித்தது. 2009-ல் இது 61 சதவீதத்தைத் தொட்டது என்றார் அவர். இதன்படி 72 கோடி பேர் செல்போனை பயன்படுத்துகின்றனர். இதற்கு குறைந்த அளவிலான நுழைவுக் கட்டணம்தான் காரணம் என்றார் அவர்.

தொலைத் தொடர்பு கொள்கையை அமல்படுத்துவதில் தவறு நடந்துள்ளதா என்று கேட்டபோது, பல நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதிலிருந்து தவறு நடந்துள்ளதாகத்தான் தெரிகிறது. தொலைத் தொடர்பு கொள்கையை உருவாக்குவது, கொள்கையை அமல்படுத்துவது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற மூன்று வகைகளில் இந்தப் பிரச்னை கவனிக்கப்பட்டு வருகிறது என்றார் கபில் சிபல்.

Dec 21, 2010

20 லட்சம் கோடி! மாயம்?

ஊழல் செய்த பணம், வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், கமிஷனாக வாங்கிய பணம் என பல வழிகளில் வெள்ளைக் காலர் வில்லன்கள் சம்பாதிக்கும் பணமெல்லாம் கறுப்புப் பணமாகி கடைசியில் வெளிநாட்டு வங்கிகளின் லாக்கர்களை தஞ்சமடைந்து விடுகிறது. இப்படி வெளிநாட்டு வங்கிகளின் லாக்கர்களை நிரப்பிக் கொண்டிருக்கும் கறுப்புப் பணம் எவ்வளவு என்பது இன்னும்கூட தெளிவில்லாமல் இருக்கிறது. சிலர், 4 லட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் சிலர் 7 லட்சம் கோடி என்கிறார்கள். ''இதெல்லாம் உண்மையில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 2008 வரைஇங்கிருந்து வெளிநாட்டுக்குப் போன மொத்த கறுப்புப் பணம் 20 லட்சம் கோடி ரூபாய்'' என்று ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு எல்லோரையும் அதிரவைத்திருக்கிறார் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான தேவ் கர்.

இவர் ஐ.எம்.எஃப்-ல் மூத்த அதிகாரியாக வேலை பார்த்தவர். உலகப் பொருளாதாரம் பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர். அமெரிக்காவில் 'குளோபல் ஃபைனான்ஸியல் இன்டக்ரிட்டி’ என்கிற அமைப்பை இவர் நடத்தி வருகிறார். லாப நோக்கம் இல்லாமல் செயல்படும் இந்த நிறுவனம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து 462 பில்லியன் டாலர் கறுப்புப் பணம் வெளியே போயிருப்பதாகச் சொல்லி இருக்கிறது. பல மாதங்கள் ஆராய்ந்த பிறகே இப்படி ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறதாம் அந்த நிறுவனம். அதுமட்டுமல்ல, இந்த இருபது லட்சம் கோடியில் 70 சதவிகித பணம் 2000 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியே போயிருப்பதாகவும் அந்த ஆய்வு சொல்லி இருக்கிறது. இந்த கறுப்புப் பணத்தில் பாதி வேண்டாம், கால்வாசிப் பணம் இந்தியாவுக்குத் திரும்ப வந்தாலே போதும்; நமது வெளிநாட்டுக் கடனை ஒரே மூச்சில் கட்டி, கடனே இல்லாத நாடு என்கிற பேரை பெற்றுவிட முடியும். இந்தியாவில் அத்தனை கிராமங்களுக்கும் மின்சார வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். நல்ல பள்ளிக்கூடம், சாலைவசதி என மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க முடியும். ஆனால்,சுவிஸ் வங்கிகளில் கிடக்கும் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் வேலையைமுடிந்த அளவுக்கு மெதுவாக செய்கின்றனர் அரசியல்வாதிகள்.

வரும் தேர்தலிலாவது மக்கள் இதை ஒரு கோரிக்கையாக வைத்தால்தான் அந்த பணம் நமக்குக் கிடைக்கும்.- (Source- Vikatan)

இந்த ஊழல் எங்கிருந்து தொடங்குகிறது? அரசு அதிகாரிகளிடமிருந்தா? பொதுமக்களிடமிருந்தா?

இந்தக் கேள்விக்கான பதில், வருத்தம் தரக் கூடியதுதான். ஆனாலும் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டியது. இருவரிடமும் தொடங்குகிறது. அதாவது, ஓர் ஆரசாங்க அலுவலகத்தில் நமக்கு வேலை நடக்க வேண்டுமானால், நாம் பணம் கொடுத்தாவது முடித்துக்கொள்கிறோம்.அதாவது, அரசு அலுவலகம் என்றாலே அங்கு பணம் கொடுக்காமல், எந்த பணியும் நடக்காது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். அதனால், அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்பே நாம் பணம் கொடுத்துவிடுகிறோம். இதுதான் நிஜம்.

இந்த ஊழலின் மற்றொரு விதம், மக்களின் நலத்திற்க்காக போடப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்வது. பாலம் கட்டுவது, குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டித் தருவது, ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களைத் தூர்வாருவது போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, மீதம் பணம் இருந்தால் மட்டுமே, திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கோ, அல்லது பணம் கொடுப்பவர்களுக்கோ, அந்த வேலையை கொடுத்துவிடுகின்றனர்.ஆட்சித் தலைவர் பதவி முதல், அங்கன்வாடி பணியாளர் நியமனம் வரை, இந்த பரவியிருக்கும் இந்த நடைமுறை, ஊழலின் மற்றுமொரு பரிமாணம்.

இப்படி அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவியிருக்கும் ஊழலின் ஆரோக்யமான முன்னேற்றமாக, இன்று, ஜனநாயகக் கடமையான வோட்டுப் போடுவதற்குப் பணம் வாங்குவது வரை வந்துவிட்டது. கட்சியின் பாரம்பரியத்தையும், வேட்பாளரின் தரத்தையும் பார்த்து வாக்களித்த காலம் போய், அதிகப் பணம் கொடுப்பவனுக்கே வோட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. இப்படிக் கொடுத்த பணத்தைதான், ஆட்சிக்கு வந்தபிறகு ஊழல் செய்து மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுகொள்வது நியாயம்தானே. நம்மை நெறிப்படுத்தி நியாயமான முறையில் ஆட்சி செய்பவர்களைநாமே தேர்ந்தேடுத்துக்கொள்ளத்தான் ஜனநாயக முறை தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அந்த முறையிலேயே, நமக்குப் பணம் கொடுப்பவர்களை நாம் தேர்ந்தெடுத்தால், அந்த ஜனநாயகம் என்ற அமைப்புக்கு என்ன பயனிருக்க முடியும்? மக்களுக்காக, மக்களால் ஏற்படுத்தப்படும் ஆட்சிமுறை, ஜனன்னாயகம் என்பதுபோல, மக்களுக்காக, மக்களின் ஒத்துழைப்போடு நடப்பது ஊழல் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கு முதலில் மக்கள், தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தங்களின் காரியம் நிறைவேற வேண்டுமென்பதற்க்காக, லஞ்சம் கொடுக்காமல், அரசு அதிகாரிகளை நேர்மையாக பணிசெய்ய நிர்பந்திக்க வேண்டும். குறுக்கு வழிகளில் பயணம் செய்யாமல், நேரடியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம், பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதையாவது நிறுத்த வேண்டும். இது மக்கள் செய்ய வேண்டியது. அரசுத் தரப்பிலிருந்து, அரசாங்க அலுவலகங்களில் நிலவும் நடைமுறையை மாற்ற வேண்டும். R . T . O அலுவலகத்திலும், பத்திரப் பதிவு அலுவலகம் போன்ற இடங்களில் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, எளிமைப் படுத்த வேண்டும். இங்கு இருக்கும் விதிமுறைகள் புரியாமலே, பணம் கொடுத்து காரியம் முடிப்பவர்கள் அநேகம் பேர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தல், காஷ்மீர் போல தேசம் முழுவதும், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு, காஷ்மீர் போல ஆர்பாட்டங்களும், வன்முறையும் நடக்க வழிவகுத்துவிடும். இந்தியா அரசாங்கம், இந்த அவசர நிலையை உணர்ந்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இர்fபான்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்தான் காரணம் - தேசிய புலனாய்வு ஏஜன்ஸி

புதுடெல்லி டிச.22: 68 அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானாந்தாவும் அவரைச் சார்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளும்தான் காரணம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டறிந்துள்ளது. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சுவாமி அஸிமானந்தாவை விசாரணைச் செய்வதற்கு தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என என்.ஐ.ஏ சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது. இதனை அங்கீகரித்த செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரிது கார்க் ஜனவரி மூன்றாம் தேதி வரை என்.ஐ.ஏ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். ஹைதராபாத்தில் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அஸிமானந்தாவை கடந்த நவம்பர் 19-ஆம் தேதி சி.பி.ஐ ஹரித்துவாரில் வைத்து கைதுச் செய்தது. ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தனக்கு தொடர்பிருப்பதை அஸிமானந்தா விசாரணையின்போது சம்மதித்ததாக போலீஸ் அறிவித்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதை மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த ஹேமந்த் கர்காரேயும், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சி.பி.ஐயும் கண்டறிந்திருந்தனர். இந்தக் குண்டுவெடிப்புகளையெல்லாம் ஒரே கும்பல்தான் நிகழ்த்தியிருந்தது என்பதுதான் அவர்களின் கண்டறிந்தது. முன்னர் ஹரியானா ஏ.டி.எஸ் விசாரித்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வழக்கை பல மாநிலங்கள் தொடர்பிருப்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் இவ்வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தது.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் 68 பேர் மரணமடைந்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் லாகூருக்கு சென்றுக்கொண்டிருந்த பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாவர். ஸம்ஜோத்தா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் வெடிப்பொருட்களை சூட்கேஸில் பதுக்கிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. பிப்ரவரி 11-13 தேதிகளில் சுவாமி அஸிமானாந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில் சம்ஜோதா உட்பட பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்திருந்தது. அந்த தினங்களில் போலி பெயர்களில் சுவாமி அஸிமானந்தா தனது ஆசிரமத்தில் ஏற்பாடுச் செய்திருந்த சபரி கும்பமேளாவில் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளான பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
குண்டை நிர்மாணித்த சுனில் ஜோஷியை ரகசியம் வெளியே கசிந்துவிடாமலிருக்க ஆர்.எஸ்.எஸ் பின்னர் சுட்டுக்கொன்றுள்ளது என்பதை நேற்று முன் தினம் போலீஸ் கண்டறிந்திருந்தது.

செய்தி:தேஜஸ்

கூகிளுக்கு மாற்றீடாக சீனாவின் தேடுதல் இயந்திரம்

இணையதள உலகில் கூடுதலான கட்டுப்பாட்டை கைவசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீனா புதிய தேடுதல் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இணையதள தேடுதல் உலகின் ஜாம்பவானாக திகழும் கூகிளை ஒரு வரையறைக்குள் நிறுத்தும் திட்டத்துடன் 42 கோடி இணையதள பயனீட்டாளர்களை கவனத்தில்கொண்டு தேடுதல் இயந்திரத்தை சீனா உருவாக்கியுள்ளது. இதன்பெயர் goso.cn என்பதாகும். சீனாவில் அதிக வாசகர்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பீப்பில் டெய்லிதான் புதிய தேடுதல் இயந்திரத்தை உருவாக்கியதன் பின்னணியில் உள்ளது.

சீனாவில் செய்திகள் வெளியிடுவதில் கட்டுப்பாட்டை விதிக்கும் அரசு பத்திரிகை இனி இணையதள உலகிலும் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட துவங்கியுள்ளது. வலைப்பூ செய்திகள் அதிகாரப்பூர்வ பத்திரிகைக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூகிளின் சீன தேடுதல் இயந்திரம் கடந்த மார்ச் மாதம் சீன அரசால் தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூகிள் நிறுவனத்திற்கும், சீன அரசுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. சீனாவின் தணிக்கைக்கு ஒத்துவராததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலில் சம்மதிக்காத கூகிள் சில மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகளை அங்கீகரித்தது.

செய்தி:தேஜஸ்

சிபிஐ 4 மணி நேரம் ,.வீட்டுக்கே சென்று ராடியாவிடம் விசாரணை

அரசியல் தரகராகச் செயல்பட்ட வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். ராடியாவிடம் விசாரணை நடத்துவதற்காக வழக்கத்துக்கு மாறாக சிபிஐ அதிகாரிகள் அவரது பண்ணை இல்லத்துக்குச் சென்றுவிட்டனர். வழக்கமாக சிபிஐ அலுவலகத்தில்தான் விசாரணை நடைபெறும். விசாரிக்கப்படும் நபர் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்படும். ஆனால் நீரா ராடியா விஷயத்தில் சிபிஐ அதிகாரிகள், தில்லி சத்தர்பூர் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். இது அரசியல் வட்டாரத்திலும் அதிகாரிகள் அளவிலும் வியப்பை ஏற்படுத்தியது. சிபிஐ அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், சிபிஐ அலுவலகத்தில்தான் விசாரணை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. விசாரணை அதிகாரியின் விருப்பத்தைப் பொறுத்து விசாரணை நடைபெறும் இடம் எது என்பது முடிவு செய்யப்படும் என்றார்.

பெண்கள் மற்றும் 15 வயதுக்குள்பட்டவர் என்றால் அவர்களின் வீட்டுக்கே சென்று விசாரிக்க விதி உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன் இதுபோன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோருக்கு சிபிஐ திங்கள்கிழமை சம்மன் அனுப்பியது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நிகழ்ந்ததால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுவதாக சிபிஐ மீது, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை உறுதிப்படுத்தியது. இதனால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் ராசா. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ராசாவின் வீடு, அலுவலகம், அவரது உறவினர், நண்பர்களின் வீடுகளில் இரண்டு முறை சோதனை நடத்தினர். இது தவிர, அரசியல் தரகராகச் செயல்பட்ட வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் நீரா ராடியாவின் அலுவலகங்கள், வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. அரசு பங்கு விற்பனைப் பிரிவின் செயலரும், டிராய் அமைப்பின் தலைவருமாக இருந்த முன்னாள் அதிகாரி பிரதீப் பைஜால் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆ. ராசா, நீரா ராடியா இருவரும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திங்கள்கிழமை நோட்டீஸ் கொடுத்துவிட்டு செவ்வாய்க்கிழமை காலை நீரா ராடியாவின் பண்ணை வீட்டை சிபிஐ அதிகாரிகள் முற்றுகையிட்டனர். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் பேரம், பல முக்கிய புள்ளிகளுடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல் ஆகியவை குறித்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். விசாரணைக்குப் பின்னர் நீரா ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சிபிஐ அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது என்றும் இந்த விசாரணையில் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு ஆஜராகுமாறு ராசாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தில்லியில் உள்ள அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். இப்போது ராசா, சென்னையில் உள்ளார். அவர் எப்போது நேரில் ஆஜராவார் என்பது தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சில நிறுவனங்களுக்கு ராசா சலுகை காட்டியதால் அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 22 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ மதிப்பிட்டுள்ளது.

புதிய இந்திய அணி : கிரிக்கெட்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு "டுவென்டி-20' மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் சச்சின் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. செஞ்சுரியனில் நடந்த முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்து, தொடரில் பின்தங்கியுள்ளது. இத்தொடர் முடிந்தவுடன் ஒரு "டுவென்டி-20' (ஜன., 9, 2011), ஐந்து ஒருநாள் போட்டிகளில் (ஜன., 12-23, 2011) இந்திய அணி பங்கேற்கிறது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2011 உலககோப்பை தொடருக்கு முன் இந்தியா பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் சச்சின், சேவக் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். விக்கெட் கீப்பர் கேப்டன் தோனி தவிர, ஆறு பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஒரு ஆல் ரவுண்டர், 5 வேகப்பந்து, 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

சச்சின் "ரெடி': கடந்த பிப்., மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான குவாலியர் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் கடந்து சாதித்த சச்சின், அதன் பின் எந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது, உலக கோப்பை தொடருக்கு தயாராக வேண்டும் என்பதால் சச்சின் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, கடந்த 2006ல் ஜோகனஸ்பர்க்கில் (தென் ஆப்ரிக்கா) நடந்த "டுவென்டி-20' போட்டிக்கு பின், சச்சின் தானாகவே இவ்வகை போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான, "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேவக் வருகை: காயம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் இருந்த அதிரடி வீரர் சேவக், ஹர்பஜன் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர். தவிர, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர் இடத்தை ரவிந்திர ஜடேஜாவிடம் இருந்து யூசுப் பதான் தட்டிச் சென்றார். நியூசிலாந்து தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா, சவுரப் திவாரி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று, அடுத்தடுத்து அரைசதம் விளாசிய பார்த்திவ் படேல், காரணம் தெரியாமல் நீக்கப்பட்டார். அதேநேரம், சுழற்பந்து வீச்சாளர் பியுஸ் சாவ்லா இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வாய்ப்பு பெற்றுள்ளார்.

"டுவென்டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 வீரர்கள் அடங்கிய அணி விபரம்:
தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், விராத் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீண் குமார், முனாப் படேல், அஷ்வின், யூசுப் பதான், ஸ்ரீசாந்த், பியுஸ் சாவ்லா.

வழுக்கை தலை பிரச்சனையா..? ஸ்டெம்செல் சிகிச்சை

லண்டன் : வழுக்கை தலை பிரச்னையை ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என, ஜெர்மன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் 80 சதவீத ஆண்கள் வழுக்கை தலை பிரச்னையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வழுக்கை தலை பிரச்னைக்கு, சந்தையில் நாள்தோறும் புதிய மருந்துகள் அறிமுகமாகி வருகின்றன. ஆனால், அவை நிரந்தர பலன் தருமா அல்லது பக்க விளைவுகள் தருமா என்ற குழப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த நிலையில், வழுக்கை தலை பிரச்னைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும் என, ஜெர்மன் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது குறித்து பெர்லின் தொழில் நுட்ப பல்கலை விஞ்ஞானிகள், ஆய்வு நடத்தினர். இதில், ஸ்டெம்செல்லில் இருந்து முடிகளை வளர்க்க முடியும் என, அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ரோலண்டு லாஸ்ட்டர் கூறியதாவது: விலங்குகளின் திசுக்களிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம்செல்களிலிருந்து செயற்கையாக முடி வளர்ப்பது சாத்தியமாகியுள்ளது. இதே போன்று, மனிதர்களுக்கும், அவர்களின் ஸ்டெம்செல்களிலிருந்து முடி வளர்க்க இயலும். ஸ்டெம்செல்களை ஆய்வகத்தில் வைத்து செயற்கையாக முடி வளர்த்து, பின்பு அதை மனிதர்களின் தலையில் பதியம் செய்ய வேண்டும். இந்த சிகிச்சை விலங்குகளிடம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சிகிச்சையை மனிதர்களுக்கு அளித்து சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த சிகிச்சையை பெற முடியும். இதன் மூலம், வழுக்கை தலை பிரச்னையால், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோர் பயன் பெற வழி பிறக்கும். இவ்வாறு ரோலண்டு லாஸ்ட்டர் கூறினார்.

சிறந்த மனிதர் : இணையதளம் தேர்வு

பிரபல மைக்ரோசாப்ட் நெட்வொர்க் (எம்.எஸ்.என்.,) இணையதளம் நடத்திய ஓட்டெடுப்பில், இந்த ஆண்டின் சிறந்த மனிதராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பிரபலமானவர்களில் உங்கள் ஓட்டு யாருக்கு என்ற வகையில் மைக்ரோசாப்ட் நெட்வொர்க் இணையதளம் ஓட்டெடுப்பு நடத்தியது. இதில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, 28 சதவீதம் பேரும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, 27 சதவீதம் பேரும், விப்ரோ நிறுவன தலைவர் அசிம்பிரேம்ஜிக்கு, 20 சதவீதம் பேரும், தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு, 17 சதவீதம் பேரும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நடிகர் சல்மான் கானுக்கு, தலா 4 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இந்த ஓட்டெடுப்பில் நிதிஷ்குமார், 8,486 ஓட்டுகள் பெற்று முதலிடம் வகிப்பதால், எம்.எஸ்.என்., சார்பில் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Dec 20, 2010

ஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன?

ராஷ்ட்ரீய சுயம் சேவக் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் உருவாகி 85 ஆண்டுகள் நிறைவுறுகிறது. 3 முறை தேசிய அளவில் தடைச் செய்யப்பட்ட இவ்வமைப்பின் அஸ்திவாரமே வெறுப்பின் மீதுதான் போடப்பட்டது.இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியின் பாசிசம் என்ற விஷத்தை பருகி விருட்சமாக வளர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டிற்கு என்ன தொண்டை ஆற்றியது என்பதைவிட இந்த தேசத்திற்கு செய்த, செய்துக் கொண்டிருக்கும் அநீதங்கள் என்ன? என்பதுக் குறித்துதான் பேசவேண்டியுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னரே துவங்கிய இவ்வியக்கம் சொந்த மண்ணிலிருந்து அந்நியர்களை விரட்டியடிக்க இவர்கள் ஆயுதம் தாங்கி போர் செய்தார்களா? இல்லை அகிம்சை வழியில் போராடினார்களா? மாறாக சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்து பதவி சுகம் அனுபவித்தார்கள்.வர்ணாசிரமும், சிறுபான்மை எதிர்ப்பிலும் தங்களை வளர்த்துக் கொண்ட இந்த இயக்கம் தொடர்ந்து தேச பக்த வேடம் புனைந்து நாடகமாடி வந்தது. ஆனால், இவர்கள் இந்தியாவின் தேசிய கொடியை கூட அண்மைக்காலம் வரை அங்கீகரிக்காதவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான். சின்னஞ்சிறுசுகள் முதல் வயதானோர் வரை என சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் தனித்தனி இயக்கம் உருவாக்கி குடும்ப இயக்கமாக மாறியுள்ள ஆர்.எஸ்.எஸ் வெறுப்பை விதைத்து தேசத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வேளையில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை ஆங்கிலேயனிடம் காட்டிக் கொடுத்தது, இந்தியாவின் தேசத்தந்தை எனப் போ்ற்றப்படும் மகாத்மா காந்திஜியை கொலைச் செய்தது, வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியது, சிறுபான்மை முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் ஆயிரக்கணக்கான கலவரங்கள் வாயிலாகவும், இன அழித்தொழிப்பின் மூலமும் கொடூரமாக கொலைச்செய்தது, தங்களின் கேடுகெட்ட லட்சியம் நிறைவேற சொந்த சமுதாய மக்களையே காவுக் கொடுக்க தயங்காதது, மக்கள் நடமாடும் பகுதிகளிலும், வணக்கஸ்தலங்களிலும், மக்கள் பயணிக்கும் ரெயிலிலும் குண்டு வைத்து பொதுமக்களை கொன்றது என தொடர்கிறது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தேசப்பணி.

இந்நிலையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹேமந்த் கர்காரே என்ற நேர்மையான அதிகாரியால் வெளிக்கொணரப்பட்ட ஹிந்துத்துவாவின் உண்மை முகம் தொடர்ந்து அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு என ஆர்.எஸ்.எஸ்ஸின் சாயம் மீண்டும் ஒரு முறை வெளுத்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி அமெரிக்க தூதர் திமோத்தியிடம் லஷ்கரைவிட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதம் கொடூரமானது என்றுக் கூறிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

ராகுல் மட்டுமல்ல, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் எஃப்.பி.ஐயின் உயர் அதிகாரியிடம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கொடூர முகத்தைக் குறித்து பேசியுள்ளார் என்ற செய்தியை அதே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இத்தகவல்கள் வெளியானவுடன் ஆர்.எஸ்.எஸ். ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க சகட்டு மேனிக்கு அறிக்கைகளை விடுகிறது. திக்விஜய்சிங் கூறியதுபோல் எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகளல்ல! ஆனால் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களான ஹிந்துக்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரர்களே என்பது உள்ளங்கை நெல்லிக் கனியைப் போல் உண்மைதானே!

இந்தியாவிற்கு நாசத்தை தவிர வேறு எதனையும் தங்கள் உள்ளத்தில் கற்பனைக்கூட செய்யாத இந்த பாசிச இயக்கம் இந்த தேசத்திற்கு தேவையா? காங்கிரஸ் கட்சி தாங்கள் விடுக்கும் அறிக்கைகளும், தாங்கள் கட்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி இந்த தேசவிரோத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தொடர்ந்து இந்த விஷ விருட்சத்தையும் அதன் கிளைகளையும் வளரவிடுவது எதிர்கால இந்திய தேசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.

ஆகவே உடனடியாக இவ்வியக்கத்தை தடைச் செய்வதோடு இவர்களுக்கும் அந்நிய நாட்டு உளவுத்துறைகளுக்கு மிடையேயான உறவை பகிரங்கப்படுத்தி, இந்த பயங்கரவாதிகளை சிறையில் தள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளார்ந்த நேர்மை ஒன்று இருக்குமானால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும்!

நன்றி : விமர்சகன்

இலங்கை அரசு பயங்கரவாதிகளுக்கு ஐநா சபை கெடு நீடிப்பு.

ஐநா, டிச.21: இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை அளிக்க நிபுணர் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் பான் கி-மூன் டிசம்பர் இறுதிவரை காலஅவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இந்த அறிக்கையை டிசம்பர் 15-க்குள் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது அந்த கெடு டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பான் கி-மூனின் துணை செய்தித்தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் நியுயார்க்கில் தெரிவித்தார்.

ஆண்களை பாடாய் படுத்தும் ....

கணவன் அடித்தாலும் உதைத்தாலும், அவன் காலடியில் கிடந்து பெண்கள் வாழ்ந்த காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இப்போது, கணவனை பிடிக்கவில்லை என்றால், நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று, விவாகரத்து பெற்றுச் செல்லும் துணிச்சல் பெண்களுக்கு வந்துவிட்டது. குடும்ப பிரச்னைக்கு பெரும்பாலான மனைவிகள் கூறும் காரணம் ‘வரதட்சணை’. இந்த கொடுமையில் இருந்து அவர்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்டது தான் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம். இது, பெண்களை பாதுகாக்கும் காலம் மாறி, ஆண்கள் பலரை தேவதாஸ்களாக மாற்றி வருகிறது.

குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்னைகளைக் கூட சகித்துக் கொள்ள முடியாத பெண்களில் பலர், இந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகின்றனர். தங்களுக்கு கீழ்படியாத கணவன்களை வழிக்கு கொண்டு வரவும், தங்கள் பிரச்னைகளை தீர்க்கவும் இந்த சட்டத்தை பயன்படுத்தி மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அவர்களுடைய உண்மையான பிரச்னை தெரியாமல், காவல் துறையினரும் பெண்களின் வாக்குமூலம் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதுபோன்ற புகார்களை முறையாக விசாரித்த பின்புதான், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியும் பலன் இல்லை. வரதட்சணை கொடுமையால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த சட்டம் வரப்பிரசாதமாக அமைந்தாலும், தவறாக திசை திருப்பப்படுவது பல குடும்பங்கள் சீர்குலைய காரணமாக அமைகிறது. இதைத் தடுக்க ‘சமூகநல அலுவலகம் மூலம் விசாரித்து, அவர்கள் பரிந்துரை செய்யும் புகார்கள் மீது மட்டுமே காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சமூகநல அலுவலர்கள் பரிந்துரை செய்யும் புகார்கள் மீது மட்டுமே போலீசார் வழக்குப் பதிவு செய்கின்றனர். இதுபோன்ற புகார்கள் சமூக நலத்துறைக்கு வரும்போது, தம்பதிகளின் உண்மையான கேரக்டரை அக்கம்பக்கத்தில் விசாரித்து யார் மீது தவறு உள்ளது என்பதை கண்டுபிடிக்கின்றனர். பின்னர், அதற்கு தகுந்தவாறு கவுன்சலிங் மூலம் திருத்த பார்க்கின்றனர். அப்படியும் வழிக்கு வராதவர்கள் மட்டுமே நீதிமன்றத்தை நாடுகின்றனர். இந்த நடவடிக்கைகளை கடந்து செல்லும்போது யார் மீது தவறு உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இதனால், பொய் புகார்கள் குறைய தொடங்கியுள்ளது.

வரதட்சணை புகார்களில் 95 சதவீதம் பேர் விடுவிப்பு, மனைவி கொடுக்கும் வரதட்சணை புகாரை ஆதாரமாக வைத்து கணவன், தாய், தந்தை மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498 (ஏ) போலீசாருக்கு அதிகாரம் அளிக்கிறது. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே என்பதால் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற கைது நடவடிக்கை அதிகரித்து வருகிறது. உச்ச நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வரதட்சணை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2007ம் ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரதட்சணை வழக்குகள் பதிவாகின. இதில் 76 ஆயிரம் வழக்குகளில்தான் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தபட்ட 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2008ல் 2 லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 85 முதல் 95 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது. பல வரதட்சணை வழக்குகள் ஜோடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தீராத வியாதி.. டென்ஷன் !

இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம். நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது.ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது. மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.

டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியா செய்யமுடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன. இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.

நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது. நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம். வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது – ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது. உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது? அப்படித்தான் நம் உள்மனமும். வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும். தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.

நன்றி : தமிழ் மனம்

காந்தியை கொன்றவர்கல்தான், கர்கேரேயையும் கொன்றவர்கள் : திக் விஜய்சிங்.

போபால்/புதுடெல்லி : கர்காரேக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் விடுத்த மிரட்டல் தொடர்பாக நான் கூறிய கருத்தில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

"நான் எதனைக் கூறினேனோ அதில் இன்னமும் உறுதியாக இருக்கிறேன். எனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை." செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளிக்கவே திக்விஜய் சிங் இதனை தெரிவித்தார். மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு தீவிர ஹிந்துத்துவா (ஆர் எஸ் எஸ்)அமைப்புகளிடமிருந்து உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என திக்விஜய்சிங் தெரிவித்திருந்தார்.

இவர் கூறிய கருத்திற்கு சங்க்பரிவார அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனாலும், திக்விஜய்சிங் தனது கருத்தை வாபஸ் பெறவில்லை. எல்.கே.அத்வானி போன்றவர்கள் பிரக்யாசிங் தாக்கூரைச் சென்று சந்தித்தால் எவரும் ஒன்றும் கூறமாட்டார்கள். ஆனால், நான் எவரையும் சென்று சந்தித்தால் என்னை முஸ்லிம் ஆதரவாளன் என்றும், தேசத்துரோகி என்றும் முத்திரைக் குத்துவார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
"நீங்கள் வெளியிட்ட அறிக்கையைக் குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்தீர்களா?" என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், திக் விஜய்சிங், அவர்களின் ஆசி இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியே என தெரிவித்தார்.

About Hindutva, Sanghparivar, RSS, Fascism, Religious Terror,
"The whole business of Hindutva and its nationalism is a poison in the body politic of India. We have to accept that the poison has been injected and it will take a lot to purge it," Arundhati Roy

செய்தி:தேஜஸ்

Dec 19, 2010

அம்பலமாகும் ரகசியங்கள் : ராடியா கேட் - 2

அரசியல், வணிகம், ஊடகம் என பல்வேறு துறைகளின் பெருந்தலைகளிடமும் செல்வாக்குச் செலுத்திய நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளின் புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது. ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் உதவியாளர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மருமகன் உள்ளிட்டோரிடம் அவர் பேசிய உரையாடல்கள் கீழே:

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியிடம் பேசி தீர்ப்பில் தலையிட முயன்றதாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு பற்றி ராசாவின் முன்னாள் அந்தரங்கச் செயலர் ஆர்.கே.சந்தோலியாவும் ராடியாவும் பேசுகிறார்கள். "சென்னை உயர்நீதிமன்ற வழக்குக்கும் ஆ. ராசாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என ராடியாவிடம் சந்தோலியா கூறுகிறார்.

ராடியா: ஹாய்!

சந்தோலியா: ஹலோ, எப்படியிருக்கீங்க?

ராடியா: நான் இன்னும் மும்பையில்தான் இருக்கிறேன். தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்காக மன்னிக்கவும். எல்லாம் எப்படிப் போகிறது. உங்கள் அமைச்சரின் பெயர் செய்திகளில் அடிபடுகிறதே?

சந்:எதில்?

ராடியா:ம்... சென்னை உயர் நீதிமன்ற விவகாரத்தில்.

சந். அதனாலென்ன, அவருக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ராடியா: இல்லை... ஊடகங்களில் 9 மணிச் செய்திகளில் இரண்டு பெயர்கள் அடிபட்டன. ஆ.ராசா, அழகிரி....

சந்: ம்...

ராடியா:பின்னர் அழகிரியின் பெயர் விடப்பட்டது. அது அழகிரியில்லை என அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு ராசாவின் பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.

சந்:ம்...

ராடியா: இதே விஷயத்தை ராஜ்தீப்(தேசாய்)பும் என்னிடம் சொன்னார்: நியூஸ் எக்ஸýம் எனக்குச் சொன்னது. எல்லோரும் அவரது பெயரைத்தான் சொல்கிறார்கள். என்டிடிவியின் ஷிவ்நாத்(துக்ரால்)தை நான் சந்தித்தபோது அவரும் அது ராசாதான் என்று சொன்னார். பிறகு டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் நான் பேசினேன்... கேஸ் செய்தி பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதே பெயர்தான் விவாதத்தில் இருக்கிறது... சட்ட அமைச்சரிடம் சொல்லப்பட்டிருக்கிறது... அது ராசாதான்.

சந்: ம்... எனக்குத் தெரியாது. நான் யாரிடமும் பேசவில்லை.

ராடியா: உங்களுக்குத் தெரியட்டும் என்றுதான்... நிறைய பேர் அவருடைய பெயரை பரப்பி வருகிறார்கள்; அது உண்மையல்ல. அதனால்தான் உங்களுக்கு போன் செய்தேன்.

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுடன் ராடியா பேசியபோதும் சென்னை உயர் நீதிமன்ற விவகாரம் வருகிறது. 07.07.2009 அன்று இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ரத்தன் டாடா: ராசாவுக்கு எதிராக மாறன் தீவிரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதுதான் பிரச்னை. ராசா எதுவும் செய்திருக்க மாட்டார், எதுவும் ஆகாது என நம்புகிறேன்...

ராடியா: இல்லை. ராசா எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அமைச்சர் யாரும் போன் செய்யவில்லை என தலைமை நீதிபதியே அறிவித்துவிட்டாரே.

டாடா: ஓ! அப்படியா?

ராடியா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த விஷயம் விளக்கப்பட்டிருக்கிறது. அதனால் எதுவும் நடக்காது. மாறன் முட்டாள் தனம் செய்திருக்கிறார்.

டாடா: ஓகே.

ராடியா: எப்படியிருந்தாலும், "எனக்கு அந்த அமைச்சரைத் தெரியும்' என்று பார் கவுன்சில் தலைவர் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். "கேபினட் அமைச்சரின் செல்வாக்கை நீதிமன்றத்துக்குள் கொண்டுவராதீர்கள்' என்று நீதிபதி கூறியிருக்கிறார்.

டாடா: ஓகே.

ராடியா: ராசா ஒருபோதும் பேசவில்லை. அது தெளிவாக்கப்பட்டுவிட்டது.

டாடா: ஓகே.

2009-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி நீரா ராடியாவுடன் அடையாளம் தெரியாத ஒருவர் பேசும்போது "நான் இதுபற்றி உடனடியாகப் பேசுகிறேன். டெலினார் நிறுவனத்துடன் என்ன பிரச்னை' என்று கேட்கிறார்.

அடையாளம் தெரியாதவர்: யெஸ் மேடம்! குட் ஈவ்னிங்!

ராடியா: ஓகே. டெலினார் பாதுகாப்பு அனுமதி பற்றி ஏதாவது கேள்வி இருந்தால், பிகேஎம்மிடம் கேளுங்கள்

அ.தெ: ஓகே.

ராடியா: ஏனென்றால் எப்.ஐ.பி.பீ. (அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்) அனுமதி...

அ.தெ: ம்...

ராடியா: ஹா... ஏனென்றால் பாகிஸ்தானிலும் சேவை அளித்துவரும் நிறுவனம் டெலினார்...

அ.தெ: ஓ..ஹோ...

ராடியா: ஆனால் ஸ்வானும் அப்படித்தான்...

அ.தெ.: ஓகே.

ராடியா: திங்கள்கிழமை ஒரு கூட்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்...

அ.தெ: ஓகே.

ராடியா: ... ஐ.பி மற்றும் அனைவரும் டெலினார் பற்றி முடிவு செய்ய திங்கள்கிழமை கூடுகிறார்கள்.

அ.தெ: ஓகே.

ராடியா: அவரது பிரச்னைகள் என்னென்ன என்று மட்டும் உறுதி செய்யுங்கள்...

அ.தெ.: நான் உடனடியாகப் பேசுகிறேன்.

ராடியா: இல்லை... அவர்... ஸ்வான் பற்றியும் நாம் கேட்க வேண்டும் ஏனென்றால் அவர்களுக்கும் பாகிஸ்தானில் நெட்வொர்க் இருக்கிறது அல்லவா?

அ.தெ.: ஓகே.

ராடியா: ஓகே, ஓகே. பை.

2009-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி ஆ.ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா, நீரா ராடியாவுடன் பேசுகிறார். பெரம்பலூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு டாடா நிறுவனம் நிதியளிப்பது குறித்து இருவரும் உரையாடுகிறார்கள். இதன் பிறகு ராசாவின் சொந்த மாவட்டத்தில் மருத்துவமனைகளை மேம்படுத்த டாடா அறக்கட்டளை ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

ஆர்.கே. சந்தோலியா: ஹலோ...

நீரா ராடியா: ஹாய்! எப்படியிருக்கிறீர்கள்?

சந்: ம்... மதிய வணக்கம், நான் நலம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

ராடியா: ஆல்ரைட். மும்பையில் வேலைகளில் மூழ்கியிருக்கிறேன். பணிகள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

சந்:ஓகே.

ராடியா: எப்படியிருக்கிறீர்கள்?

சந்: எப்போது தில்லி திரும்புகிறீர்கள்?

ராடியா: செவ்வாய், புதன்கிழமைவரை இல்லை...

சந்: ஓகே, ஓகே... பேசலாமா? (டாடா) உபகரணங்களோ அல்லது வார்டுகளோ தரலாம்.

ராடியா: நான் கிருஷ்ண குமாருடன் பேசினேன். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று சொல்கிறேன். பெரம்பலூரில் உள்ள மருத்துவமனைக்கு செய்யலாம் என்கிறார்கள். பிரச்னை ஒன்றுமில்லையே? ஆனால், அவர்களது அறக்கட்டளை விதிப்படி குறிப்பிட்ட முறையில்தான் அவர்களால் செய்ய முடியும் என்பதால் மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்க விரும்புகிறார்கள்.

சந்: ஓகே.

ராடியா: அல்லது சில வார்டுகளை கட்டித் தரலாம் என்கிறார்கள். வார்டுகள் போல ஏதாவது கட்டித் தருவார்கள். காசோலை போல் எதுவும் இல்லை. நாம் ஒரு கடிதம் தர வேண்டும். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் அவர்கள் சில குறிப்பிட்ட வகையில் வார்டு அல்லது உபகரணங்கள் என மருத்துவமனையில் பணிகளைத் தொடங்குவார்கள். பின்னர் அந்த நிதி விநியோகங்கள் தொடங்கும்.

சந்: ஓகே. அதனால் ஒன்று செய்யுங்கள், அவருக்கு போன் செய்யுங்கள், அமைச்சருக்கு...

ராடியா: ம்...

சந்:அவரிடம் சொல்லுங்கள், ஏனென்றால் அவர் உங்களது போனுக்காக காத்திருந்தார்...

ராடியா: என் போனுக்காக காத்திருந்தாரா?

சந்: ஆமாம்... ஆமாம்...

ராடியா: ஓகே. அவர் சென்னைக்குப் போய்விட்டாரா அல்லது இன்னும் இங்கேயே இருக்கிறாரா?

சந்: இல்லை... அவர் சென்னையில் இருக்கிறார்.

ராடியா: சென்னையில் இருக்கிறாரா, அப்படியா?

சந்: ஆமாம். ஆமாம்.

ராடியா: எப்போது திரும்பி வருவார்?

சந்: திங்கள்கிழமை திரும்பி வருவார்.

ராடியா: திங்கள்கிழமை வருகிறார்... சரி. நான் பேசுகிறேன்.

சந்: தயவு செய்து அவரிடம் பேசுங்கள். பிறகு எனக்குச் சொல்லுங்கள்.

ராடியா: ஓகே. அதன் பிறகு அவரிடம் பேசவே இல்லை. மன்னியுங்கள். ஏனென்றால் நேற்றுத்தான் நாங்கள் பேசினோம்.

சந்: ம்... ம்...

ராடியா: அதனால்.... நான்... நான்... அதுதான் அவர் என்னிடம் சொன்னது. எனக்கு அந்தத் தெளிவு தேவைப்பட்டது. பிறகு நான் சொன்னேன்... அது எதுவோ, அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் (குரல் தெளிவில்லை) சமர்ப்பியுங்கள், புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட அனைத்தையும். இதுதான் நான் அவருக்குச் சொன்னது.

சந்: ம்...ம்...

முன்னதாக 2009-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி ராடியாவுடன் ஆர்.கே.சந்தோலியா பேசுகிறார். "ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்களைச் சந்தியுங்கள் என்று சார் (ராசா) சொன்னார்' என்று சந்தோலியா கூறுகிறார். ராடியா - ராசா இடையிலான சந்திப்பு நடந்த சிறிது நேரத்தில் இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஊடகங்களைக் கையாள்வதற்கு தேர்ந்த ஆளை ராசா தேடியபோது, தனக்கு நம்பகமான ஒருவரைத் தருவதாக சந்தோலியாவிடம் ராடியா பரிந்துரைக்கிறார்.

சந்: ஹலோ.

ராடியா: ஹாய்.

சந்: ஹாய், எல்லாம் எப்படிப் போகிறது?

ராடியா: இப்போதுதான் நமது அமைச்சரைச் சந்தித்தேன். வழக்கம்போல் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காமல் ஃபரீத் வெளியே இருந்தார்.

சந்: பிறகு சார் (ராசா) அனைவரையும் திட்டுவார்.

ராடியா: யார்?

சந்: அதிகாரிகளை அவர் திட்டினாரா?

ராடியா: ஆம். ஏதோ எரிச்சலில் இருந்தார். எத்தனை பேரைச் சந்திக்க வேண்டும் என்பதை வரையறுத்திருப்பதாக அவர் சொன்னார். அவரது அதிகாரிகளையெல்லாம் மாற்றவும் செய்திருக்கிறார். நீங்கள் சாதித்துவிட்டீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

சந்: இல்லை. இல்லை. அலுவலகத்தில் கூட அனைத்து ஊழியர்களையும் மாற்றியிருக்கிறோம். 2-3 பேரைத் தவிர. ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் மக்களைச் சந்திக்க வேண்டும் என்று சார் கூறியிருக்கிறார். நாள் முழுவதும் அல்ல. ஆள்கள் வந்துகொண்டும்... போய்க்கொண்டும் இருப்பார்கள்...

ராடியா: மிகச் சரி.

சந்: அதை நடைமுறைப்படுத்தப் போகிறோம்... முன்அனுமதி இல்லாமல் யாரும்..

ராடியா: செயலாளர் பற்றியும் பிஎஸ்என்எல் பற்றியும் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது சொந்த ஊடகம் பற்றியும் சொன்னார். அதனால், அதை எப்படிச் செய்வது என்பது பற்றி நான் உங்களுக்கு ஒரு திட்டம் தரப்போகிறேன். அவருக்காக ஊடகங்களைக் கையாள்வதற்கு ஒரு சரியான ஆளைத் தருகிறேன்.. சரியா?

சந்: ஓகே.

ராடியா: எனக்கு நம்பகமான நபர்களில் ஒருவரைத்தான் நான் தரப்போகிறேன். ஊடகங்களைக் கையாள்வதில் அவர் தேர்ந்தவர்.

சந்: ஓகே. நல்லது.

ராடியா: நீங்கள் விரும்புவது ஒரு சுதந்திரமான... என்னுடைய ஆலோசனை என்னவென்றால்,இந்தக் கச்சிதமானவற்றையெல்லாம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவைகளெல்லாம் அவர்களுடன் சேரக்கூடியவைகள்.

சந்: இல்லை. அது சரிதான். ஒருவர் எனக்குச் சொன்னார்...

ராடியா: என்னால் முடியாது. என்னிடம் ஒரு அருமையான குழு இருக்கிறது என்று சாஹித் சொல்லுவார். ஒரு நிமிடம்.... நாம் இன்று சந்திக்கிறோம் இல்லையா?

சந்: இன்று, நீங்கள் விரும்பினால் 3.30-க்கு வாருங்கள். சந்திக்கலாம்.

ராடியா: இல்லை. நான் குர்காவோன் போக வேண்டும். அதைப்பற்றியும் உங்களிடம் நான் பேச வேண்டும். இல்லையில்லை... நான் அங்கே போகவேண்டும்.

சந்: சரி.

ராடியா: அதனால்தான். அதனால் நான் விரும்பவில்லை... (தெளிவாக இல்லை) இறுதியில் எல்லா மகன்களும் தந்தையும் பேச்சுக்கு வந்துவிட்டார்கள்.

சந்: அப்படியானால் நாளை 3 மணிக்குச் சந்திப்போமா?

ராடியா: நாளை நான் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு போகிறேன்.

சந்: ஓகே. நல்லது. அப்படியானால் 11 மணிக்கு வாருங்கள்... வரமுடியுமா..?

ராடியா: செப்டம்பரில் இன்னும் ஒரே ஒருநாள்தான் இருக்கிறது (சிரிப்பு)

சந்: உங்களால் 11.15 மணிக்கு வர முடியுமா?

ராடியா: இப்போதே வர முடியும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மனோஜ் மோடியுடன் ராடியா பேசும்போது, சிவில் வழக்குகள், பொதுநல வழக்குகள் தொடர்வதற்கு சில தன்னார்வ அமைப்புகளின் (என்ஜிஓ) பெயர்கள் பரிசீலிக்கப்படுவது பற்றி ஆலோசிக்கிறார். 2009-ம் ஆண்டு மே 29-ம் தேதி இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மனோஜ் மோடி: ஹாய், நீரா.

நீரா ராடியா: ஹாய்.

மனோஜ் மோடி: எப்படியிருக்கிறீர்கள்?

ராடியா: நலம். நீங்க எப்படியிருக்கிறீர்கள்?

மோடி: நலமாக இருக்கிறேன். ராஜா என்னுடன் இருக்கிறார்.

ராடியா: ம்... ம்...

மோடி: நமது சட்ட வழக்கு, நிறுவன பிரிப்பு, வேறுசில பொதுநல வழக்குகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

ராடியா: ம்...

மோடி: இப்போது இந்த ஒரு என்ஜிஓ, ராம்ஜிபாய் மாவானி, நமது திட்டத்துக்காக வேலை செய்தவர்கள்.

ராடியா: ம்.

மோடி: இரண்டாவது, தில்லியில் நீங்கள் பார்த்து வைத்திருப்பது.

ராடியா:ம்.

மோடி: அதனால், எதுவென்றாலும் சரி. உங்களுடைய வசதியையும் விருப்பத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

ராடியா: இந்த ஆட்களைப் பற்றிய எனது கருத்து நல்லவிதமானது... அவர்கள் ஓகே என தெரிகிறது. எந்த வகையிலும் இதில் கவலைப்பட எதுவுமில்லை.

மோடி: ம்... இந்த ராஜ்கோட் ஆட்கள் ஓகே. ஏதும் தப்பாகிப் போகாது... இருந்தாலும் புது ஆட்களை இந்த விஷயத்தில் ஈடுபடுத்துவது நல்லது. இருந்தாலும், அவர்கள் மீது உங்களுக்கு சிறிய சந்தேகம் இருந்தாலும் நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்த உடைக்க முடியாத வழக்காகப் போகிறது.

ராடியா:ம்... ஓகே. அவர்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட என்ஜிஓதான், மனோஜ். அவர்கள் பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ.

மோடி: நல்லது. பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ என்றால் நல்லது. ஆனால்,அவர்கள் பின்வாங்கிவிடக்கூடாதல்லவா... பின்னர்...

ராடியா: இல்லை மனோஜ், நான்... உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன்... அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. அந்த ஒரு நபரை எனக்குத் தெரியும். அவர் தனது வாக்கில் இருந்து பின்வாங்குவார் என நான் நினைக்கவில்லை.

மோடி: உங்களுக்கு அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாதா?

ராடியா:இல்லை, அவர்களில் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் சொந்தமாக... அவர்கள் 5 பேர். மற்றொருவர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். அவர் பின்வாங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் நம்பகமானவர் என அவரை அறிந்தவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். அவர்கள் மிகவும் சீரியஸôனவர்கள். அவர்களுக்கு டிஎல்எப் அதிக நெருக்கடி கொடுத்துப் பார்த்தது, ஆனாலும் அவர்கள் பின்வாங்கவில்லை. பணம் கொடுத்தபோதும் அவர்கள் பின்வாங்கவில்லை.

மோடி: அவர்களது நம்பகம் பற்றி உங்களது முழுமையான சோதனைகளைச் செய்யலாமே? முடிவில்... நான் அதன்படி நடக்கலாம்...

ராடியா: செய்துவிட்டேன். அதனால்தான் அவர்களை நான் அணுகினேன். அப்போதுதான் டிஎல்எப் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தும் அவர்கள் பின்வாங்கவில்லை என்பதும் தெரிந்தது.

மோடி: டிஎல்எப் நெருக்கடி சாதாரணமானதுதான். நான் நம் ஆட்கள் எந்த அளவுக்கு நெருக்கடி தருவார்கள் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே, நம் ஆட்கள் அதிக நெருக்கடி தருவார்கள் என்று.

ராடியா: ஆம்... ஆம்... மனோஜ், நமக்கு இன்னும் எவ்வளவு அவகாசம் இருக்கிறது?

மோடி: (அருகில் யாருடனோ பேசுகிறார்) அடுத்து 2-3 நாள்களில் நாம் முடிவு செய்தாக வேண்டும். அதனால் நான் உங்களது முடிவுப்படி செயல்படவேண்டும். நாம் 2-3-4 விஷயங்களை முடிக்க வேண்டும்... நாம் செய்தாக வேண்டும்...

ராடியா: மனோஜ், இந்த நபரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்றாலும் அவரை நான் நம்புகிறேன். இந்த ஆள் மிகவும் நம்பகமானவர். மிகவும் நம்பகமான பின்னணியில் இருந்து வந்திருக்கிறார். அதனால் இவர் சந்தேகப்படும்படியான ஆள் என்று எனக்குத் தோன்றவில்லை.

இன்னொரு குரல் (முன்னர் குறிப்பிட்ட ராஜா என்பவராக இருக்கலாம்): நீரா, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு நெருக்கடி இருக்கக்கூடாது... அதாவது...

ராடியா: இல்லை.. இல்லை.. அவர்கள் 3 பேர். அவர்களில் ஒருவரை தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவர் பின்வாங்க மாட்டார் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். இன்னொருவர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். அவரும் நம்பகமானவர். ஏமாற்றமாட்டார். அவர் சர்தார். அவர் மீது எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மூன்றாவது ஆள் மிகவும் கூலானவர். அவருக்கு எனது ஊழியர்களுள் ஒருவர், தல்ஜீத்தை நன்றாகத் தெரியும். அப்படித்தான் விஷயங்களை ஒருங்கிணைத்தேன். பெயர்களுடன் அவர் என்னிடம் வந்தபோது, அவைகளைச் சரிபார்த்தேன். பின்னர் சுனீல் அரோராவை அவர்களுடன் பேச வைத்தேன். ஏனென்றால் சுனீல் அரோராவை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனக்குத் தெரியும் சுனீல் இறங்கிவிட்டால்... எப்போதெல்லாம் அவர் எனக்கு பரிந்துரைக்கிறாரோ... எப்போதும் தவறாகப் போனதில்லை, மனோஜ், குறைந்தபட்சம் இன்று வரைக்கும்... அவர் மீது எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

மோடி: நாம் இதைச் செய்யும்போது, ராம்ஜிபாய் மாவானியையும் பார்க்க வேண்டும். அவர்கள் அவரது வீட்டுக்குப் போய் எல்லாவகையான பைகளையும் எடுத்துவிட்டார்கள்.

ராடியா: ஆம்... ஆம்... அவர் செய்வார் என்று எனக்குத் தெரியும். இதுபற்றியெல்லாம் தெரிந்துதான் நான் அதைச் செய்தேன்,மனோஜ்.

மோடி: ஆம். இந்த வழக்கு மிக முக்கியமானது. எனவே எனது தேர்வு அவர்கள்தான். ஏனென்றால் அதே நபர் மீண்டும் நேரடியாக இதைச் செய்வதை நான் விரும்பவில்லை. இன்னொரு சாதாரணமான உணர்வு வர வேண்டும். அவர்கள் செய்வார்கள்.

ராடியா: அவர்கள் இருவரையும் கொண்டு நடத்திவிடலாம். அவரும் வருவார் அல்லவா?

மோடி: ஆமாம். ஆமாம். சில வேலைகள் நடக்கவேண்டியிருக்கிறது. வெவ்வேறு ஆள்களைக் கொண்டு அவைகளை முடிக்கலாம் என்றிருக்கிறேன்.

ராடியா: மிகவும் நல்லது, இல்லாவிட்டால் நம்பகம் இல்லாமல் போய்விடும் இல்லையா?

மோடி: அதைத்தான் நான் சொல்கிறேன். நான் முக்கியமாகக் குறிப்பிடுவது அதைத்தான். அதற்காகத்தான் இன்னொரு முறையும் சொல்கிறேன். நீங்கள் வைஷ்ணவ தேவி கோயில் பயணத்தை முடியுங்கள். அந்த நேரத்தில் இதை இன்னொரு முறை பரிசீலியுங்கள். ஒன்றும் பிரச்னையில்லை. யோசியுங்கள்.

ராடியா: ஓகே.

மோடி: பின்னர் ராஜா தனது வழக்குத் தொடரும் வேலையைச் செய்வார், ஏனென்றால், வழக்குத் தொடர்வதற்கு அவருக்கு எல்லா வகையிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டேன் ஆவணங்களைத் தயார் செய்வதற்கும்... மனுக்களைத் தயாரிப்பதற்கும்.... எல்லாவற்றுக்கும்.

ராடியா: ம்...

மோடி: ம்ம்...?

ராடியா: ம், கச்சிதம். நான் செய்ய வேண்டியது என் குழுவிடம் பேச வேண்டும், இன்னொரு முறை சுனீலுடன் நான் பேச வேண்டும். நான்... (இணைப்பு துண்டிக்கப்படுகிறது)

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மருமகன் (வளர்ப்பு மகளின் கணவர்) ரஞ்சன் பட்டாச்சார்யா,முகேஷ் அம்பானியுடனான தனது உரையாடல் குறித்து நீரா ராடியாவுடன் பேசுகிறார். 2009-ம் ஆண்டு மே 31-ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த பேச்சில், சுனில் மிட்டலை சுஹேல் சேத் வீட்டில் சந்தித்ததை ரஞ்சன் உறுதி செய்கிறார்.