Dec 18, 2010

பயங்கரவாதத்தை விரும்பாதவர்கள் இந்திய முஸ்லிம்கள் - விக்கிலீக்ஸ்

விக்கிலீக்ஸ் : இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும்பபில்லை என்றும், அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது தலைமையிடத்துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால், பயங்கரவாதத் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார். சானியா மிர்சா, ஷாருக்கான் போன்றவர்கள் இந்திய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் - அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி : அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளான்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாற சுனில் ஜோஷி திட்டமிட்டிருந்த காரணத்தினால் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் கருதுகிறது. ஆனால், ஜோஷி தன்னை தனிப்பட்ட ரீதியில் அவமதித்ததற்காகத்தான் இந்த கொலை நடந்தது என சோலங்கி வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த இரண்டு வாரமாக சோலங்கி போலீஸ் காவலில் உள்ளான். சோலாங்கியுடன் அவனது இரண்டு கூட்டாளிகளான ஆனந்த் கட்டாரியா, வசுதேவ் பார்மர் ஆகியோரையும் போலீஸ் கைதுச் செய்துள்ளது. ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும், காணாமல் போன மொபைல் ஃபோன்களும் கைப்பற்றப்பட்டன. கொலைக்கு பிறகு குற்றவாளிகள் குஜராத்தின் பல பகுதிகளிலும் தலைமறைவாக இருந்ததாக போலீஸ் கூறுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 2007 டிசம்பரில் சுனில் ஜோஷி கொல்லப்படுகிறார். அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நிகழ்த்திய பிறகு திவாஸ் மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள சுனா கடனில் வசித்துவந்தார் ஜோஷி. ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார். சுனில் ஜோஷி கொல்லப்படுவதற்கு முன்பு அவரை அழைத்தது சோலங்கி என்பது தொலைபேசி அழைப்புகளை பரிசோதித்தபோது தெரியவந்தது. சோலங்கிதான் சுனில் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். கட்டாரியா, பார்மர், மோஹன், மெஹுல் ஆகியோர் சோலங்கிக்கு உதவியுள்ளனர். கைதுச் செய்யப்பட்ட ஆனந்த இந்தூரைச் சார்ந்தவராவார். பார்மர் திவாஸ் மாவட்டத்தைச் சார்ந்தவர். குஜராத்தைச் சார்ந்த மோஹன், மெஹுல் ஆகியோர் உட்பட ஐந்துபேர் தலைமறைவாக உள்ளனர்.

அஜ்மீர் குண்டுவெடிப்புடன் புனே, பெஸ்ட் பேக்கரி வழக்குகளிலும் குற்றவாளியான சோலங்கி குஜராத்தைச் சார்ந்தவனாவான். மேலும் குற்றவாளிகளை கைதுச் செய்வதற்காக போலீஸ் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. கொலைக்காக பயன்படுத்திய மாருதி வேனும், ஆயுதங்களும் கண்டெடுக்கப்படவில்லை. கொல்லப்பட்ட சுனில் ஜோஷி உள்ளூர் காங்கிரஸ் தலைவரை கொலைச்செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாவார். கட்சி வட்டாரங்களில் குருஜி என்றழைக்கப்படும் இவன் ராகுல், மோகன், மெஹுல், ஜயந்தி உஸ்தாத் ஆகிய போலி பெயர்களில் செயல்பட்டுள்ளான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக கைதுச் செய்யப்பட்ட சோலங்கியை ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸிடம் ஒப்படைத்த பிறகு மத்திய பிரதேச மாநில போலீஸ் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

செய்தி:தேஜஸ்

ராஜா அப்ரூவராக மாறிஉண்மைகளை தெரிவிக்க வேண்டும்

சென்னை : முதல்வர் கருணாநிதி கூறியது போல, ஸ்பெக்ட்ரம்' பிரச்னையில், ராஜா ஒருவரால் இவ்வளவு பெரிய தொகையை ஊழல் செய்திருக்க முடியாது. அவர் அப்ரூவராக மாறி, உண்மைகளை வெளியே சொல்ல வேண்டும், என, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி கூறியுள்ளார்.சென்னையில், பல்கிவாலா அமைப்பு மற்றும் சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில், "ஊழலின் உண்மையான தாக்கம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு, முன்னாள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல் பேசியதாவது:இந்தியாவில், 120 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதில், அதிகளவு பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர். இவர்களை அரசியல்வாதிகள் ஓட்டு வங்கிக்கு மட்டும் தான் பயன்படுத்துகின்றனர். ஊழலை ஒழிப்பதற்கு அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும்.அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க வேண்டும். ஊழல் வழக்கில் யாராவது சிக்கினால், அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதற்கு பதில், டிஸ்மிஸ் செய்ய வேண்டும். நம் அரசு அலுவலகங்களில், ஊழல் போர்வை தான் படர்ந்துள்ளது. ஊழலை ஒழிப்பதற்கு, அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.இவ்வாறு விட்டல் பேசினார். அவரைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய, மூத்த பத்திரிகையாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ÷ஷாரி பேசியதாவது:நாட்டில் ஊழல் என்பது புற்றுநோய்க்கு சமமானது. அதை, முளையிலேயே அழித்துவிட வேண்டும். ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் எங்கள் மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், நாங்கள் பின்பற்றிய, முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை கொள்கையை, ராஜாவும் அவருக்கு முந்தைய தொலைத்தொடர்பு அமைச்சரும் பின்பற்றாமல், அவர்களுக்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றி கொண்டனர்.

நான் அமைச்சராக இருக்கும் போது அதில் சில மாற்றங்களை கொண்டு வந்தேன். அதை கூட அவர்கள் கடைபிடிக்கவில்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு நான் தயாராக உள்ளேன். பத்திரிகைகள், அரசியல்வாதிகளின் பேச்சை, அப்படியே எழுதாமல், அதில் உள்ள உண்மையை மட்டும் எழுத வேண்டும். நம் நாட்டில் ஒரு ஊழலை பற்றி விசாரிக்கும் போதே, அதை விட பெரிய ஊழல் பேச்சு ஏற்பட்டால், பழையதை மக்கள் மறந்து விடும் நிலை உள்ளது. நிரா ராடியா டேப் விவகாரம் வரும் வரை, பிரதமரை குற்றம் சாட்டினர். ஆனால், தற்போது அனைவரது கவனமும் ராடியா மேல் தான் உள்ளது.அமைச்சரவையில் நடக்கும் எல்லா விஷயங்களும், பிரதமருக்கு நிச்சயம் தெரியும். அவருக்கு தெரியாமல் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

ராடியா புதிய டேப் வெளியானது: ராசா- ரத்தன் டாடா ரகசிய பேரம் அம்பலம்

சென்னை : தொழிலதிபர் ரத்தன் டாடா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா இடையே நடைபெற்ற ரகசிய பேரத்தை அம்பலப்படுத்தும் நீரா ராடியாவின் புதிய டேப் வெளியாகி உள்ளது.

புதிய டேப் விவரங்களை "அவுட்லுக்' இதழ் சனிக்கிழமை வெளியிட்டது. டாடா- ராடியா: நீதிபதி ரகுபதியை நிர்பந்தித்த விவகாரத்தில் ஆ. ராசாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என்பது குறித்து ரத்தன் டாடாவும், நீரா ராடியாவும் தொலைபேசியில் பேசியது டேப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ராசா சர்ச்சையில் சிக்கியிருப்பது குறித்து ரத்தன் டாடா, நீரா ராடியாவிடம் கேள்வி எழுப்புகிறார்.

இதற்குப் பதிலளிக்கும் நீரா ராடியா, நீதிபதியிடம் ராசா பேசவில்லை, பார் கவுன்சில் தலைவர்தான் அவரது பெயரைப் பயன்படுத்தியுள்ளார், அதனை நீதிபதி ஏற்கவில்லை, இதனால் ராசாவின் பதவிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதாக உறுதியளிக்கிறார்.
ஆர்.கே.சண்டோலியா- ராடியா: ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியாவிடம், நீரா ராடியா பேசியது மற்றொரு டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரில் டாடா நிறுவன உதவியுடன் | 9 கோடி செலவில் மருத்துவமனை அமைப்பது குறித்து அந்த உரையாடலில் பேசப்படுகிறது.

ஆர்.கே.சண்டோலியாவிடம் பேசும் நீரா ராடியா, பெரம்பலூரில் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக டாடா சன்ஸ் நிறுவன இயக்குநர் கிருஷ்ணகுமாரிடம் பேசி விட்டேன், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துள்ளார் என்று கூறுகிறார். ராடியாவின் தொலைபேசி அழைப்பை ராசா எதிர்பார்த்து காத்திருப்பதாக ஆர்.கே. சண்டோலியா தெரிவிக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் டாடா டெலிகாம் நிறுவனத்துக்கு சாதகமாகச் செயல்பட நீரா ராடியா இரு தரப்பிலும் பேரம் பேசியிருப்பது புதிய டேப் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அஜ்மீர் குண்டு வெடிப்பு ... திக்விஜய் சிங்

புதுடில்லி:டில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாவது:அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் சுனில் ஜோஷி. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர். 2007ல் மத்திய பிரதேசத்தில் இவர், தனது சக நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார். குண்டு வெடிப்பு பின்னணி குறித்து சுனில் ஜோஷிக்கு அனைத்து விவரங்களும் தெரியும். இதனால் தான் அவரை கொலை செய்து விட்டனர். எனவே, இதன் பின்னணி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சுனில் ஜோஷியின் கொலை வழக்கை மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

முஸ்லிம் என்பதால் எரிக்கப்பட்டவர்கள்

ஜனநாயகத்தை உச்சரித்துக்கொண்டு குஜராத்தின் ஃபாசிச நரேந்திர மோடி அரசு எப்படி இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையிலும் மனித உரிமை மீறல்களிலும் தனது காவல்துறையையும் இராணுவத்தை ஈடுபடுத்தி எப்படி முஸ்லிம்களை அழித்தார்கள் என்பதை விளக்குகின்றது இப்படம்.

கர்ப்பமடைந்தவர்கள் மொபைல்போன் பேசுவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு

வாஷிங்டன் : கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மொபைல்போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது:மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.இவ்வாறு லீகா கூறினார்.

கறிவேப்பிலை: புற்று அபாயத்தை தடுக்கும்

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

சிவகுமார், சித்த‍ மருத்துவர்

போர் குற்றம் தொடர்பாக ஆய்வு, இலங்கையின் திடீர் மாற்றம்?

கொழும்பு : போர் குற்றம் தொடர்பாக ஆய்வு நடத்த வரும் ஐ.நா. குழுவை அனுமதிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று இலங்கை அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

முன்னதாக இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த நிபுணர்கள் குழுவை அனுப்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறியதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் நாட்டு உள்விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்றும் காட்டமாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இலங்கையின் நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறுவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பந்துலா ஜெயசேகர கூறியது: இலங்கையில் நடைபெற்ற போரில் போர் குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறி அதனை ஆய்வு செய்ய குழுவை அனுப்புவோம் என்று ஐ.நா. அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை அரசுக்கு கோரிக்கை வந்தால் அதனை பரிசீலிப்போம் என்று கூறிள்யுள்ளார். முன்னதாக இலங்கையில் நடைபெற்ற போர், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து ஆராய இலங்கை அரசே ஒரு குழுவை அமைத்தது. இதன் மூலம் உண்மையை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற போரின் போது சரணடைந்த விடுதலைப் புலிகளும், அப்பாவித் தமிழர்களும் எவ்வாறு சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பான வீடியோ சமீபத்தில் பிரிட்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

தமிழர்கள் படுகொலையை ராஜபட்சதான் முன்னின்று நடத்தினார் என்பதை விக்கி லீக்ஸ் இணையதளமும் அம்பலப்படுத்தியது. இதனால் இலங்கையில் நடைபெற்ற கொடூரங்களை அனைவரும் அறிந்து கொள்ள நேரிட்டது. பிரிட்டன் சென்ற ராஜபட்சக்கு அங்குள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அங்கு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளலாமல் ராஜபட்ச நாடு திரும்பினார். இதன் காரணமாக இலங்கை மீது சர்வதேச நெருக்குதல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஐ.நா. ஆய்வுக்குழுவை அனுமதிப்பதாக ராஜபட்ச அரசு அறிவித்துள்ளது. சர்வதேச குழு விசாரணை: இதனிடையே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறி நடந்து கொண்டது குறித்து ஐ.நா. தலைமையில் சர்வதேச குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

Dec 17, 2010

நாம ஜென்மபூமி!

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் மனமுடைந்து போய் இருப்பவர்கள் ரிலாக்ஸ் ஆகும் நோக்கில் வெட்டியின் சிறப்பு 'கடி'கள்!. பின்னூட்டத்திலும் கடிக்கலாம்!

வக்கீல்: இந்த கேஸில் ஹைகோர்டுல மேல்முறையீடு செய்யலாமா?

பாதிக்கப்பட்டவர்: வேணாம் சார் ரொம்ப செலவாகும்! நம்ம ராயபுரம் கபாலி அண்ணாத்தேகிட்டேயே போயிடுறேன்.

போலீஸ் : கபாலி! கட்டப்பஞ்சாயத்து செய்யிறத நிறுத்தலேன்னா உன்னை உள்ளே தள்ளிடுவேன்.

கபாலி : அப்படி சொல்லாதீங்க சார்! இப்பவெல்லாம் கபாலி பஞ்சாயத்தும் நீதிமன்றமும் ஒன்னுதான்!

ராமு: ஆட்டோ திருட்டுப்போன வழக்கில் என்ன தீர்ப்பு கிடைத்தது?

சோமு: எனக்கு ஒரு வீலும் திருடனுக்கு ரெண்டு வீலும் என்று தீர்ப்பு வழங்கி பிரிச்சுக் கொடுத்தாங்க!

குப்பன் : அண்ணே! நம்ம கபாலி அண்ணனுக்கு குசும்பு ஜாஸ்தி!

சுப்பன் : எதை வச்சுப்பா சொல்றே?

குப்பன் : அரிவாளுக்குப் பதிலாகக் கையில் சுத்தியல வச்சிருக்க

வக்கீல் (1): கபாலியும் நீதிபதியும் என்ன சீரியஸா பேசிக்கிறாங்க?

வக்கீல் (2): முக்கியமான தீர்ப்பு விசயமா கபாலிகிட்ட டிஸ்கஸ் பண்றாராம்!

குமாஸ்தா: எதுக்குசார் நீதிபதி உங்க மேல கடுப்பாயிருக்கார்?

வக்கீல் : ஏதோ ஞாபகத்தில் "கனம் கபாலி அவர்களே" என்று சொல்லிட்டேன்

விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆவேசம்.."உண்மைகளை வெளிக்கொண்டு வருவேன்

லண்டன் : பிரிட்டன் ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ள "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், "உண்மைகளை வெளிக்கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். சுவீடனுக்கு என்னைக் கொண்டு போகும் முயற்சி, என் மீதான அவதூறு பிரசாரத்தின் ஒரு பகுதி' என்று தெரிவித்துள்ளார். அவரது ஜாமீனுக்கான பிணையத் தொகை "ட்விட்டர்' இணையதளம் மூலம் திரட்டப்பட்டு வருகிறது.

பாலியல் குற்றச்சாட்டில் கடந்த 7ம் தேதி கைதான அசாஞ்ச், ஜாமீன் கோரி இரண்டு முறை மனு தாக்கல் செய்தார். முதன் முறை அவருக்கு மறுக்கப்பட்ட ஜாமீனை, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் இரண்டாவது முறை சில நிபந்தனைகளுடன் தர முன்வந்தது. ஆனால், சுவீடன் தரப்பு வக்கீல்கள் அந்த ஜாமீனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ததால், அசாஞ்ச் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில், அசாஞ்சின் ஜாமீனை எதிர்த்து தாங்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என, சுவீடன் வக்கீல்கள் தெரிவித்ததால் மேலும் குழப்பம் நீடித்தது. பிரிட்டன் அரசு தரப்பு வக்கீல்கள் தான், ஜாமீனை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் என்பது பின்பு தெரிந்தது. நேற்று ஐகோர்ட்டில், அரசு தரப்பு வாதம் நிராகரிக்கப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் விதித்த நிபந்தனைகளுடன், நேற்று முன்தினம் அசாஞ்சுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

ஜாமீனில் வெளியே வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"என் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: எனக்கு எதிரான இவ்வழக்கில், தனிப்பட்ட, உள்நாடு மற்றும் சர்வதேச உள்நோக்கங்கள் உள்ளன. ஆனால், இதன் மூலம் ஐரோப்பாவை சங்கடப்படுத்தும் சில உண்மைகள் வெளிவந்துள்ளன. உதாரணமாக, தனிநபர் ஒருவரை, ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்கு, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இன்றி நாடு கடத்த முடியும் என்பது இப்போது தெரிந்துள்ளது.இவ்வாறு அசாஞ்ச் தெரிவித்தார்.

இதற்கிடையில் அசாஞ்சை ஜாமீனில் எடுப்பதற்காக, கோர்ட்டில் செலுத்த வேண்டிய ஒன்றரை கோடி ரூபாய், "ட்விட்டர்' இணையதளம் மூலம் திரட்டப்பட்டு வருகிறது.பிரிட்டன் பத்திரிகையாளர் ஜான் பில்ஜர், பிரிட்டனில் இயங்கி வரும் புலனாய்வுப் பத்திரிகையியல் மையத்தின் இயக்குனர் காவின் மெக் பேடென் மற்றும் சூசன் பென் ஆகிய மூவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, இந்நிதி வசூலை கண்காணிக்கும்.

இதற்கிடையில், "விக்கிலீக்ஸ்' நிறுவனமும், அசாஞ்சும் ஆஸ்திரேலிய சட்டத்தை மீறவில்லை என, அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். "விக்கிலீக்ஸ்' செயல் குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஜூலியா கில்லார்டு, "பொறுப்பற்ற செயல்' என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

ராமன் கோவில் அருகே மசூதி கட்டவிடமாட்டோம் : சுப்ரமணிய சாணி கொக்கரிப்பு?.

விசுவ இந்து தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மே.மாம்பலம் இந்து வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.அவர், ’’ஸ்பெக்ட்ரம் அலை கற்றை பங்குகள் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட டெலிபோன் கம்பெனிக்கு விற்கப்பட்டது தவறு. அந்த கம்பெனி சீனாவிலுள்ள வேறொரு கம்பெனியுடன் தொடர்புடையது. பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதால் இந்தியாவில் யார் செல்போனில் பேசினாலும் அதை பாகிஸ்தான் டெலிபோன் கம்பெனியால் ஒட்டுக் கேட்கமுடியும். இதனால் இந்தியாவுக்கு ஆபத்து. (சுப்ரமணிய சுவாமியை அவரது அரசியல் எதிரிகள் CIA உளவாளி, சீன உளவாளி என்றெல்லாம் அடிக்கடி குற்றஞ்சாட்டுவர்)

இந்து எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்து ஊடகங்கள் விடுதலை பெறவேண்டும். ஊடகங்கள் பெரிய தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மீற முடியாமல் உள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதே இந்துக்களின் (பாப்பானின்) நோக்கம். ராம ஜென்ம பூமி அருகே எந்த மசூதியும் கட்ட விடமாட்டோம். இந்துத்துவால் தான் ஊழலை ஒழிக்க முடியும்’’ என்று பேசினார்.

லிபியாவில் 81 தமிழர்கள் விற்பனை!

மதுரை : லிபியா நாட்டில் விற்கப்பட்ட 81 தமிழர்கள் இந்திய தூதரகம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள், மதுரை போலீஸ் எஸ்.பி., மனோகரிடம் தஞ்சமடைந்தனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர், "வள்ளியம்ஸ் டிராவல்ஸ்' என்ற பெயரில் வெளிநாட்களுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நடத்தினார். தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் வெளிநாடு செல்ல இவரை அணுகினர். இவர்களில், எட்டாம் வகுப்பு படித்தவர் முதல் பட்டதாரிகள் வரை 81 பேர் லிபியாவில் (வட ஆப்ரிக்கா) வேலை பார்க்க தலா ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சக்திவேலிடம் கொடுத்தனர்.

மும்பையில், பெஞ்சமின் என்பவர் நடத்தி வந்த "ஜெடி பிசினஸ் லிங்க்' மூலம் 81 பேரும் டிச., 2009 ல் லிபியாவிற்கு அனுப்பப்பட்டனர். அங்கு, "எல்ரேட்' நிறுவனத்தின் கட்டுமான பணியில் 81 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் தலா 1,000 அமெரிக்க டாலர் கொடுத்து சக்திவேல், பெஞ்சமினிடம் இருந்து 81 பேரையும் விலைக்கு வாங்கியதாக அப்துல்லா தெரிவித்துள்ளார். எனவே,அவர் தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல் நடத்தியுள்ளார். தொழிலாளர்களுக்கு தினமும் இரண்டு வேலை "பிரட்' மட்டுமே உணவாக தந்ததோடு, ஒப்பந்தப்படி மாதம் 450 அமெரிக்க டாலர் சம்பளம் தரவில்லை.அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை பெற்றோரிடம் தெரிவித்தனர்.

தங்களது மகன்களை மீட்டுத்தரும்படி, அந்தந்த கலெக்டர்களிடம், பெற்றோர்கள் புகார் அளித்தனர். தமிழக அரசு முயற்சியை அடுத்து லிபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சுரேஷ், மணிமேகலை ஆகியோர் முயற்சியில், 81 பேரும் மீட்கப்பட்டு, தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களது புகார்படி, சக்திவேலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவர்களில் இலந்தைகுளம் முருகன், கமுதி பாண்டி, மீசல் முனியராஜ், கீழத்தூவல் அர்ச்சுனன், அவனியாபுரம் ராமர் உட்பட 51 பேர் தாங்கள் செலுத்திய தொகையை சக்திவேலிடம் இருந்து பெற்றுத் தருமாறு, மதுரை போலீஸ் எஸ்.பி., மனோகரிடம், கோரினர். எஸ்.பி., உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆக்கிரமிக்கும் போது எழும் தேச விடுதலைப் போர்!.

ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நாடு தனது தேசம் கடந்த சுரண்டலை நடத்தவும், அதே நேரம் தனது செல்வாக்கு மணடலங்களை (தனது சுரண்டலைப் பாதுகாக்க) நிறுவவும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றன
ஏகாதிபத்தியமில்லாத ஆக்கிரமிப்பு நாட்டின் பின், ஏகாதிபத்திய மறைமுகத் தலையீடும் இன்றி இவ் ஆக்கிரமிப்புக்கள் இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் சாத்தியமில்லை. இன்றைய நிலையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நாடு அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட முனைகிறது. காலனி அரைக்காலனி அல்லது நவகாலனித்துவ நோக்கத்தை கொண்ட ஆக்கரமிப்பு நாட்டின் சுரண்டும் வர்க்க கதவுகளை உடைத்தெறியப் போராடுவது அவசியமாகிறது.

இந்நிலையில் மூன்றாம் உலக நாடுகளில் தேசிய முதலாளித்துவப் பிரிவு தனது சுரண்டலைப் பாதுகாக்க முனைந்து போராட முனைகிறது. இப்பிரிவு சொந்தப்பலத்தில் நிற்கும் தகுதியை ஏகாதிபத்திய சகாப்தத்தில் இழந்து விடுவதால், அவர்கள் இயல்பில் ஆக்கிரமிப்பாளனிடம் சரணடைந்து சேவை செய்வதன் மூலம், தனது நலனைக் குறைந்த பட்சம் பாதுகாக்க தீவிரமாக முனைகிறது.

மறுபுறம் ஆக்கிரமிப்புக்கு எதிராக பரந்து பட்ட மக்கள் தமது தேசத்தைப் பாதுகாக்க தேசியவிடுதலைப் போரை பிரகடனம் செய்கின்றன. இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் தகுதியை பாட்டாளி வர்க்கம் கொண்டிருப்பதால், ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான போராட்டம் உள்ளுர் தரகுப் பிரிவை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நடத்தப்படுவதால் அத்தேச விடுதலைப் போர் வர்க்கப் போராக இயல்பில் கொண்டுள்ளது. இது சர்வதேச அடிப்படையைக் கொண்டதுமாகும்.

இவ்வர்க்கப் போரோ, தேசிய விடுதலைப் போரோ ஒன்றில் இருந்து ஒன்று விலகிவிடுவதில்லை. தேச விடுதலைப் போரும், வர்க்கப் போரும் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக, தனது எதிரியை ஏகாதிபத்தியமாகவும், அதற்கு சேவை செய்யும் தரகுப்பிரிவையும், நிலப்பிரபுத்துவத்தையும் ஒன்றாக இனங்காண்கிறது. இது அடிப்படையில் புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளதுடன், அது உள்ளடக்கத்தில் வர்க்கப் போராட்டத்தையும், தேசிய விடுதலைப் போரையும் உள்ளடக்கி, சர்வதேசிய கண்ணோட்டத்தில் வேறு பிரிக்க முடியாத வகையில் உள்ளது.

தேசிய முதலாளித்துவப் பிரிவு தவிர்க்க முடியாது இதனுடன் இணைந்தோ அல்லது கூட்டு அமைத்தோ போராட நிர்ப்பந்திப்பதன் மூலம் இத் தேச விடுதலைப் போர் தெளிவான வர்க்கப்போராகவும் எதிரியை சரியாக அடையாளம் காண்கின்றது.

பதிய ஜனநாயகம்

கொழும்பு - தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து : இலங்கை அரசு ஒப்புதல்

கொழும்பு: சுற்றுலாத் தொழிலை அபிவிருத்தி செய்யும் விதத்தில், இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே, சிறிய பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே சிறிய பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இருநாடுகளுக்கிடையே துவங்கப்படும் கப்பல் போக்குவரத்துக்கு, இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் இது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.துவக்கத்தில், கொழும்பு - தூத்துக்குடி மற்றும் தலைமன்னார் ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். பின், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பிற துறைமுகங்களை இணைக்கும் விதத்தில், கப்பல் போக்குவரத்து விரிவுபடுத்தப்படும். இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து தீவிரவாத குழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி

புதுதில்லி : லஷ்கர்- இ- தோய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2009 ஜூலையில் நடந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தோய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு ராகுல் காந்தி, இந்திய முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தோய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலையும், பதற்றத்தையும் உருவாக்கும் இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சி இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என ராகுல் காந்தி எச்சரித்ததாக அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராகுல் குறித்த விக்கிலீக்ஸ் வெளியீட்டில் சதிச்செயல் இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து உண்மையை ஆராய்வோம். இதன் பின்னணியில் சில சதிச்செயல்கள் இருக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.

Dec 16, 2010

மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்

படம் : ஆர் எஸ் எஸ் (அரைக்கால் டவுசர்) தீவீரவாதிகள்.


ஹைதரபாத் : கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதரபாத் மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களை போலீசார் வேண்டுமென்றே கொடுமைப்படுத்தியிருந்தால் அதற்காக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்புக்கேட்க ஆந்திர அரசு தயார் என அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி சட்டசபையில் அறிவித்தார்.

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அக்பருத்தீன் உவைஸி எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கையில் முதல்வர் இதனை தெரிவித்தார்.

போலீஸாரால் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பொருளாதார உதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் உறுதி அளித்தார்.

நிரபராதிகளான முஸ்லிம்களை மட்டுமல்ல, எந்த நபர்களையும் கொடுமைப்படுத்தியிருந்தாலும் அரசுக்கு அதுக்குறித்து கவலை உண்டு. ஆனால் பணியின் ஒருபகுதியாக, சூழ்நிலையின் அடிப்படையில் போலீஸ் எவருக்கெதிராகவும் வழக்கு பதிவுச் செய்யும் என முதல்வர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்குகளில் போலீசார் கல்விக் கற்ற முஸ்லிம் இளைஞர்களை தவறாக சேர்த்துள்ளனர் என உவைஸி சுட்டிக்காட்டினார்.

சி.பி.ஐ விசாரணை நடத்தியிருக்காவிட்டால் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நடத்தியது ஹிந்துத்துவா சக்திகள்தான் என்பது தெரியாமலேயே போயிருக்கும்.100 முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என அறிந்து விடுதலைச் செய்தபிறகும் அவர்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிட்டதால் எதிர்காலம் இருளடைந்துள்ளது என உவைஸி தெரிவித்தார்.

உவைஸியின் கருத்துக்களை எதிர்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரித்தார். சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை நடத்தும் பாஸ்கர ராவ் கமிட்டியின் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாக உள்துறை அமைச்சர் பி.ஸபீதா ரெட்டி அறிவித்தார். விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப்படும் போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ்

மனைவியை மயக்க ( ஆண்கள் மட்டும் வந்து படிக்கவும்)

மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது. மனைவியை மயக்க ஐடியாக்கள் இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க.

பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்.....

1. மதித்தல்

வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும் .. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. முதல் ஐடியாவிற்க்கே சோர்ந்து போனா எப்படி?

2.கனவுகள்

பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.(நண்பரே நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.. அவர்களின் கனவில் புடைவைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி? இதல்லெல்லாம் ஒரு கேள்வியா என்ன? பேசாமல்
புடைவைகளை வாங்கி கொடுங்கள்.)இது என்ன என் காசா பணமா?

3.வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள்.

மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் ( மல்லிகை பூ, அல்வா ) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள்( அதற்க்காக இன்னொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து இது உனக்கொரு புதிய தங்கை என்று அதிர்ச்சி கொடுக்காதிர்கள்... பெண்பாவம் பொல்லாதது)

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்.

ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது( நண்பரே மனைவி அடிக்கும் போதல்லாம் அழுகாதிர்கள் சில சமயங்களில் சிரியுங்கள். நம்மாளுக்கு மண்டை கழண்டு போய்யிடுச்சுன்னு சில அடிகளோட தப்பிக்கலாம்)

5.ஆலோசனைக் கேளுங்கள்.

நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். ( நண்பர்களே கருத்தை கேளுங்கள்& மதிப்பு கொடுங்கள் ஆனால் உங்கள் முடிவின் படி நடங்கள்)

6. சமைக்க கற்று கொள்ளுங்கள்.

பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?)

7. பேசுங்கள்

பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள். ( நண்பர்களே உண்மை வாழ்வில் பெண்கள் பேசமட்டும்தான் செய்வார்கள். கேட்கமாட்டார்கள் அப்படியே கேட்டாலும் ஏதோ பேசும் சந்தோஷத்தில் உங்களின் புதிய கேர்ல் ப்ரெண்டைப் பற்றி உளறி மாட்டிக்கொள்ளாதிர்கள்)

8.மனைவியின் குடும்பத்தில் பங்கு கொள்ளுங்கள்

உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள். ( நண்பரே நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்ததா? நீங்கள் உங்கள் மாமியார் மாமனாரோடுமட்டும் ஒத்துபோகாதிர்கள். மனைவியின் மாமியார் மாமனார் அண்ணண், தங்கைகளை ரொம்பபபப நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்)

மதுரை தமிழ்

பத்திரிகை புகைப்படகாரருடன் தள்ளு முள்ளு

பெங்களூர் : பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கில் ராமநகரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜரானார்.

பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு போன்ற குற்றங்களுக்காக ஐந்து பிரிவுகளில் நித்யானந்தா மீது பெங்களூர் அருகேயுள்ள பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நித்யானந்தா உள்ளிட்ட ஐந்து பேர் மீது சிஐடி போலீஸôர் ராமநகரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நவம்பர் 27-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நித்யானந்தாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்பேரில், நித்யானந்தா தனது சீடர்கள் பக்தானந்தா, சச்சிதானந்தா ஆகியோருடன் வியாழக்கிழமை காலை ராமநகரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பவதி முன்பு ஆஜரானார். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நித்யானந்தாவை படம் பிடிக்க பத்திரிகை புகைப்படக்காரர்கள் முயற்சித்தபோது, அவரது சீடர்கள் சிலர் தடுக்க முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவானது. போலீஸôர் தலையிட்டு நிலைமையைச் சரிசெய்தனர்.

அகில இந்திய அளவில் நுளைவுத்தேர்வா?

ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி பெற்ற சமூக நீதிக்கான உரிமைகளை பார்ப்பன அதிகாரவர்க்கம் கொல்லைப்புறம் வழியாகத் தட்டிப் பறிக்கும் சதியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இதனைப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தி, அதன் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மருத்துவக் குழு ஒரு முடிவை எடுத்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவக் கல்வி உட்பட எந்தக் கல்வியிலும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் வகையில் தனி சட்டமே இயற்றப்பட்டு விட்டது.

அகில இந்திய மருத்துவக் குழுவின் நுழைவுத் தேர்வினை ஏற்கும் வகையில் இருந்த மத்திய அரசும்கூட, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்குப் பிறகும், முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் குறுக்கீட்டுக்குப் பிறகும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக நடக்கும் வழக்கில் திமுக அரசு தம்மையும் இணைத்துக் கொண்ட நிலையில் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டது.

இத்தகு நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று முன்னாள் (13.12.2010) வழங்கிய தீர்ப்பில் அகில இந்திய மருத்துவக் குழுவின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறியிருப்பது - ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் மத்தியில் பேரதிர்ச் சியை ஏற்படுத்தி விட்டது.

அரசின் எத்தனை எத்தனையோ கொள்கை முடிவுகளில் தலையிட்டுள்ள நீதிமன்றங்கள், சமூக நீதிப் பிரச்சினை என்று வருகிறபோது மட்டும் இப்படியெல்லாம் வழுக்கிக் கொண்டு போவதைக் கவனிக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வழி வகுத்தால் - பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் தான்.

இந்தப் பகுதிகளிலிருந்து பெரும்பாலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், அகில இந்திய மருத்துவக் குழு, உச்சநீதிமன்றம் போன்றவை - அதன் உயிர் நாடியின் கழுத்தில் சுருக்குப் போடும் வகையில் நடத்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது.

இந்த நுழைவுத் தேர்வினை ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதலாம் என்கிற வாய்ப்பு - ஏற்பாடு வட இந்திய மாணவர்களுக்குக் கூடுதல் சலுகைகளை அளிக்கக் கூடியதாகி இந்தி பேசாத மக்களை வஞ்சிக்கும் இன்னொரு வகையான சதியாகும்.

நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களைச் சேர்க்கும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட கேடுகள் என்னவென்று மருத்துவக் குழுவோ, உச்சநீதிமன்றமோ விளக்குமா?

நெருக்கடி நிலை காலத்தில் (1976) கல்வியை மாநில அரசின் பட்டியலிலிருந்து பொதுப் பட்டிய லுக்குக் அபகரித்துக் கொண்டு செல்லப்பட்டதால் ஏற்பட்டுள்ள பல கேடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இன்னொரு கொடுமை ஏற்கெனவே நிகழ்த்தப் பட்டுக் கொண்டும் இருக்கிறது. மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்விக்கான இடங்களில் (எம்.பி.பி.எஸ்.) 15 விழுக்காடு இடங்களை மத்திய தொகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அது 25 விழுக் காடாக உயர்த்தப்பட வேண்டும் என்ற அழுத்தமும் கொடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவக் கல்விக்கான மேற்பட்டப் படிப்பில் (Post Graduate) 50 விழுக்காடு இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

ஒரு மாநில அரசின் பொருளாதாரத்தில் நடக்கும் கல்லூரிகளிலிருந்து இடங்களை இப்படிக் குண்டுக் கட்டாகத் தூக்கிச் செல்லும் அதிகாரத்தைத் தனக்குத் தானே நடுவண் அரசு எடுத்துச் சென்றிருப்பது கண்டிப்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையே கடிக்கும் கதைபோல மாநிலங்களி லிருந்த இடங்களைக் கவர்ந்து சென்றதோடு அல்லாமல், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்களைச் சேர்க்கவேண்டும் என்று உத்தரவிடும் ஆணவத்தை என்னவென்று சொல்லுவது?

தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்பதில் அய்யமில்லை. இந்தப் பிரச்சினையை வெறும் பார்வையாளராக இருந்து தமிழ்மண் கவனிக்காது களத்தில் இறக்கிப் போராடும் ஒரு நிலையை திராவிடர் கழகம் உருவாக்கும் என்று எச்சரிக்கிறோம்.

அசுரன் திராவிடன்

விக்கிலீக்ஸ் பற்றி படிங்க & கமெண்ட் எழுதுங்க

நீங்க மேலை நாடுகளில் வசிக்கிறீர்களா? அப்ப விக்கிலீக்ஸ் பற்றி படிப்பதும், கமெணட் எழுதுவதும் தப்புங்க அதற்க்காக உங்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் இந்தியாவில் இருந்தால் என்ன தப்பு வேணுமானாலும் பண்ணலாம், மக்கள் தப்பை மறைத்து விடுவார்கள் அவர்களூக்கு பணபலம் இருந்தால் அல்லது மக்கள் கூடிய சிக்கிரம் மறந்து விடுவார்கள். வேணா பாருங்களேன் ஒரு நடிகர் இன்னொரு நடிகையை காதலிகிறார் அல்லது கல்யாணம் செய்து கொள்ளப்போகிறார் அல்லது விவாகரத்து செய்ய போகிறார் என்ற செய்தி அல்லது நித்யானந்தா போன்ற சாமியார்களின் ஒரு வீடியோ க்ளீப் வந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசயம் அப்படியே அமுங்கி காணாமல் போகிடும்,

கூச்சல் போடுகிற எதிர்கட்சிகளூக்கு ஒரு வேண்டுகோள். யார்தாங்க ஊழல் பண்ணல இப்ப அவங்க பண்ணிட்டாங்க வர எலக்ஷ்ன்ல தோற்க்கப் போறங்க அப்புறம் நீங்க ஜெயிக்க போறீங்க அப்புறம் நீங்க என்ன பண்ண போறீங்க? நீங்க என்ன நாட்டுக்கு நல்லதா பண்ணப் போறிங்க? நீங்களும் இதைவிட பெரிசா பண்ணுவிங்க அவ்வளவுதான. இதுக்கு போய் சும்ம கத்தீக்கிட்டு இருக்காதீங்க நடக்கற வேலையை பாருங்க.

ச்சே எதையோ சொல்லவந்து எதையோ பேசிக்கிட்டு இருக்கேன்... வீக்கீலீக்ஸ் எல்லாம் நமக்கு எதுக்கு வந்தமா தமிழ் ப்ளாக் படித்தோமா நாலு பேறுக்கு கமெண்ட் போட்டமா + ஓட்டு போட்டமா இல்லை வம்பு இழுத்தமா என்று போய்கிட்டே இருக்கனும். ஒகே வா சரி சொல்லவந்தத சொல்லிர்றேண்.

மதுரை தமிழ்

இன்டெர்நெட் உபயோகம் : 20 மடங்கு அதிகரிப்பு!

உலகம் முழுவதும் இன்டெர்நெட்டை உபயோகப்படுத்துபவர்களில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என கூகுள் இந்தியாவிற்கான தலைமை பொறுப்பாளர் வினய் கோயல் தெரிவித்துள்ளார்.சீனாவில் 300மில்லியன் மக்கள் இன்டெர்நெட்டை பார்ப்பதால் முதலிடத்தையும், அமெரிக்காவில் 207 மில்லியன் மக்கள் இன்டெர்நெட்டை பார்ப்பதால் இரண்டாம் இடத்தையும், 100 மில்லியன் அளவை கொண்டு இந்தியா மூன்றாம்இடத்திலும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் 40 மில்லியன் மக்கள் மொபைல் போன் மூலம் இன்டெர்நெட்டை பார்ப்பதாகவும்,வரும் 2012-ம் ஆண்டிற்குள் மொபைல் இன்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களை லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பார்க்கவைக்க முயற்சி செய்துவருவதாகவும்,கடந்த 2007-ல் 2 மில்லியன் மக்கள் இன்டெர்நெட்டை பார்த்துவந்தனர். இது தற்போது 20 மடங்காக அதிகரித்துள்ளது. இன்நெட்டை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஆன்லைன் ஷாப்பிங் டில்லி முதலிடம்: ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதில் டில்லி முதலிடம் வகிக்கிறது. மும்பை நகரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஆன்லைனில் பெரும்பாலும் பெல்ட், பக்கிள்ஸ்,வாட்ச்சுகள்,போன்றவற்றையே வாங்குகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் ஆன்லைன் வர்த்தகம் பெரும்பாலும் புதுடில்லி, மும்பை, ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூரூ ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான இளைஞர்கள்,இளைஞிகள் மேற்கத்திய இசை அடங்கிய சிடிக்களையே ஆன்லைனில் பெறுகின்றனர்.

மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் உள்ள ஐ.டி.,துறை களை சேர்ந்தவர்களே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். தற்போது இந்தியாவின் புறநகர் பகுதிமக்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட துவங்கி விட்டனர்.

தமிழகத்தில் சி.பி.ஐ., சோதனை நடந்த இடங்கள் விவரம்

1. நிரா ராடியாவின், "வைஷ்ணவி கம்யூனிகேஷன்' சென்னை அலுவலகம்.
2. "டிராய்' முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலின் சென்னை வீடு.
3. "தமிழ் மையம்' அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் அலுவலகம்.
4. வார இதழ் இணை ஆசிரியர் காமராஜின் சென்னை வீடு.
5. பல்கலை பேராசிரியர் அகிலன் ராமநாதனின் வீடு.
6. திருச்சியை சேர்ந்த, "டிவி' நிருபர் நரசிம்மன் வீடு.
7. திருச்சி திருவானைக்காவலில் உள்ள ராஜாவின் அண்ணன் ராமச்சந்திரன் வீடு.
8. திருச்சியில் உள்ள ராஜாவின் சகோதரி சரோஜா வீடு.
9. பெரம்பலூரில் உள்ள ராஜா வீடு.
10. பெரம்பலூரில் உள்ள ராஜாவின் நண்பர் சுப்பிரமணி வீடு.
11. ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரமணியன் சென்னை வீடு.
12. முதல்வர் கருணாநிதியின் துணைவி, ராஜாத்தி மற்றும் கனிமொழியின் ஆடிட்டர் ரத்தினம் வீடு. இவை உட்பட தமிழகத்தில் 27 இடங்களில், சி.பி.ஐ., சோதனை நடந்துள்ளது.

சி.பி.ஐ., ரெய்டு வெறும் கண்துடைப்பு நாடகம்: " 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, நாடு முழுவதும் சி.பி.ஐ., நடத்திவரும் ரெய்டு, வெறும் கண்துடைப்பு நாடகம்' என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நிரா ராடியா உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில், நாடு முழுவதும் 34 இடங்களில் சி.பி.ஐ., நேற்று ரெய்டு நடத்தியது. இது குறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது: ஊழல் புகார்கள் எழுந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆனநிலையில், அவர்கள் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை தங்களது வீடுகளில் வைத்திருக்க மாட்டார்கள். எனவே, இது சற்று விசித்திரமான ரெய்டு; இதன் மூலம், எந்த ஒரு ஆவணங்களையும் கைப்பற்ற முடியாது. "2ஜி' ஊழல் விவகாரத்தில், நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மக்களிடையே காட்டுவதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. எனவே, இது வெறும் கண்துடைப்பு நாடகம் தான். ஏற்கனவே சி.பி.ஐ., நடத்திய ரெய்டின்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி மறியல்

தூத்துக்குடி : கிடப்பில் போடப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளிலும் அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. பழைய பஸ்ஸ்டாண்ட் முன் மாவட்ட செயலர் சண்முகவேல் தலைமையில் நடந்தமறியலில், 64 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேகோரிக்கைக்காக, கோவில்பட்டியில் சாலைமறியல் செய்த இச்சங்கத்தைச் சேர்ந்த, 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

Dec 15, 2010

இரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன லேசர் சிகிச்சை

லண்டன் : இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு, அதிநவீன லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலக அளவில் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால், பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர் திடீர் மரணங்களை தழுவும் ஆபத்துடன் வாழ்கின்றனர்.இரத்த குழாய் அடைப்பை நீக்குவதற்கு, பல சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், நிரந்தர தீர்வுக்கு, பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.ஆனால், இந்த அறுவை சிகிச்சை செய்ய பல மணி நேரம் தேவைப்படும். ஆபத்துகளும் அதிகம். நோயாளிகள் குணமாக நீண்ட காலம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், இரத்த குழாய் அடைப்பை உடனடியாக நீக்கும் வகையில், புதிய லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்குள், 'கதீட்டர்’ என்ற நுண்ணிய குழாயை செலுத்தி, அதன் வழியாக சக்தி வாய்ந்த லேசர் கற்றைகள் பாய்ச்சப்படும்.வெப்பம் காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ள, பகுதிக்குள் படிந்திருக்கும் தேவையில்லாத படிமங்கள் பொடிப் பொடியாக சிதறி விடும். இந்த லேசர் சிகிச்சைக்கு, 'எக்சைமர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், இரண்டு நோயாளிகளுக்கு இந்த லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. மேலும், அந்த நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்ட மறு நாளே, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.இந்த சிகிச்சை மூலம் நோயாளிகள் ஆச்சர்யமளிக்கும் வகையில் மிக விரைவில் பூரண குணமடைந்தனர்.

இந்த சிகிச்சைக்கான இறுதி கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த அதிநவீன லேசர் சிகிச்சை நடைமுறைக்கு வந்தால், இரத்தக் குழாய் அடைப்பால், பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர் பயனடைய வழி பிறக்கும்.

வளவாழ்வும்.... வலிமையும்

"A sound mind in a sound body is a short but full description of a happy state in the world." - John Locke (1632-1704)

"Bodily exercise, when compulsory, does no harm to the body. But knowledge which is acquired under compulsion obtains no hold on the mind."
- Plato (427 BC-347 BC) in 'The Republic'

மனித வாழ்க்கையில், மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம் என்பதை இன, மொழி, மத வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்வர். இப்பருவத்தில் நாம் பெறும் ஒழுக்கம் அல்லது ஒழுக்கமற்ற பயிற்சிதான் நம் வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும். இதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

மேற்காணும் முதல் பழமொழியில் ஜான் லோக்கி கூறுவதுபோல், உறுதியான உடலில் இருக்கும் உறுதியான மன நிலையே இவ்வுலக வாழ்வின் இனிமை நிலைக்குக் கட்டியம் கூறுவதாகும். இதையும் விஞ்சி, இரண்டாவது முதுமொழியில், 'The Republic' எனும் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பின் ஆசான் ப்லேட்டோ குறிப்பாகக் கூறுவது, இளமையில் செய்யவேண்டிய உடற்பயிற்சியின் இன்றியமையாமை பற்றியதாகும். இவர் அழகாகச் சொல்கிறார்: "கட்டாயமாகக் கொடுக்கப்பட்ட உடற்பயிற்சியானது, உடலுக்கு எந்தத் தீங்கும் செய்துவிடாது. ஆனால், கட்டாயத்தால் பெற்ற கல்வியறிவானது, மனத்துள் நிலைத்திருக்காது."

இன்று பெரும்பாலான கல்விக்கூடங்களில் பயிலும் மாணவ மாணவியர்க்குப் பாட நூல்களென்றும், வழிகாட்டி நூல்களென்றும், வீட்டுப் பாடங்களென்றும், 'ட்யூஷன்' பாடமென்றும், இன்னும் இவை போன்ற சுமைகள் பலவற்றைச் சுமத்தி, அவர்களைக் கல்வியாளர்களும் கல்விக் கூடங்களை நிர்வகிப்பவர்களும் வெறும் 'சுமை தூக்கிகளாக' ஆக்கிவிடுகின்றார்கள் என்று கூறினால் மிகைக் கூற்றாகாது. இந்நிலையில் சிறிதேனும் மாற்றத்தைச் செய்து, அவர்களுக்குத் தரமான உடற்பயிற்சிகளை வழங்கினால், அறிஞர் ப்லேட்டோ கூறுவது போன்று, உடலுக்குத் தீங்கு விளைக்காத சில உடற்பயிற்சிகளைக் கொடுத்து, ஜான் லோக்கி கூறுவது போன்று, 'A sound mind in a sound body' உடன் எதிர்காலத்தின் இளைய சமுதாயத்தினரைப் பரிணமிக்கச் செய்யலாம்.

அபூபிலால்

தேர்வு செய்தது "டைம்".. 2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனரை

நியூயார்க் . உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை (26) "டைம்" பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை இவ்வாறு "டைம்" பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. இதன் அடிப்படையில் மார்க் ஜுக்கர்பெர்க் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அசாஞ்சே ஜாமீன் கிடைத்தும் விடுதலை இல்லை

லண்டன் : விக்கி லீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட பின்னும் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்படவில்லை.

ஸ்வீடன் அரசு தரப்பில் அவரது ஜாமீனை எதிர்த்து பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் லண்டன் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை.

முன்னதாக பிறநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் தலைமைக்கு அனுப்பிய பல ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளிப்படுத்தி அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டினார் அசாஞ்சே.

இந்தநிலையில் ஸ்வீடனில் இருந்தபோது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதான வழக்கில் லண்டனில் கடந்த சில நாள்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் நீதிமன்றம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருந்த போதிலும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் அசாஞ்சேவை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் நாட்டைச் சேர்ந்தவர், அமெரிக்காவின் முகத்திரையை கிழித்துள்ளார். அவருக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

பாதிரியார் எரிப்பு வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடில்லி : ஒரிசாவில் பாதிரியார் மற்றும் அவரது இரண்டு மகன்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில், தாராசிங்குக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரிசாவின் கோஞ்சகார் மாவட்டம், மனோகர்பூர் கிராமத்தில் கடந்த 99ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி, சர்ச்சுக்கு வெளியே ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்த பாதிரியார் கிரகம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களை தாராசிங் மற்றும் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு தீ வைத்து கொன்றனர் . இந்த வழக்கில் கீழ் கோர்ட், தாராசிங்குக்கு மரண தண்டனையும், அவரது கூட்டாளிகள் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. ஐகோர்ட்டில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டதில், தாராசிங்குக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 11 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து தாராசிங், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.பாதிரியார் மற்றும் அவரது மகன்கள் இருவரையும் உயிரோடு எரித்த தாராசிங்கின் காட்டுமிராண்டித் தனமான செயலுக்கு மரண தண்டனை தான் ஏற்றது, என, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் கூறப்பட்டது. சி.பி.ஐ., சார்பிலான வாதத்தை கேட்ட நீதிபதிகள் சதாசிவம் மற்றும் பி.எஸ்.சவுகான் ஆகியோர் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

Dec 14, 2010

வயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள் !

நோயிலிருந்து காக்கும் ஆண்ட்டி-பயாட்டிக் மருந்துகளே வயிற்று உபாதைகளுக்கு காரணமாக அமையும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது சக்தி வாய்ந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மட்டுமல்லாது சாதாரண ஆண்ட்டி-பயாடிக்குகளும் கூட வயிற்றில் உள்ள உணவுச் செரிமான அடிக்குழாயில் உள்ள நுண்ணுயிரிகளின் சமச்சீர் நிலையைக் குலைத்து விடுகின்றன என்றும் அதுவே எதிர்பாராத ஆரோக்கிய கேடுகளுக்கும் இட்டுச் செல்கிறது என்றும் அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. நேஷனல் அகாடமி ஆஃப் சயன்சஸ் இது குறித்து ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

மூக்கு முதல் பாதம் வரை அனைத்து பாக்டீரியாக்களுக்கும் உகந்த அரிய மருந்து என்று கருதப்படும் 'சிப்ரோஃப்ளாக்சசின்' மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஒரு 3 பெண்களுக்கு பய‌ன்தரக்கூடிய பாக்டீரியாக்கள் முழுதுமே காலியாகியுள்ளது என்று இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

3 நபர்களுக்கு சிப்ரோஃபிளாக்சசின் மாத்திரைகளை நாளொன்றுக்கு இரண்டு என்ற வீதத்தில் கடந்த 10 மாத ஆய்வுகாலத்தில் கொடுத்து சோதனை செய்தனர் இந்த ஆய்வாளர்கள். அதன் பிறகு இவர்களின் மலத்தை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உடல் செரிமான அடிக்குழாயில் மீதமிருக்கும் நுண்ணுயிரிகளின் அளவு என்ன என்று தெரியவந்துள்ளது.

மனித ஜீரண அமைப்பிலேயே நுண்ணுயிரிகள் அருமையாக வேலை செய்கிறது. இதுவே கெட்ட கிருமிகளை அழிக்கிறது. உடல்பருமனாகும் கூறுகள் முதல் ஒவ்வாமை கூறுகள் வரையிலும் இந்த நல்ல நுண்ணுயிரிகள் உடன்பாடாக வேலை செய்கின்றன. தாய்ப்பாலில் காணப்படும் லேக்டோபேசிலஸ், சில வைரஸ் தாக்குதலைத் தடுக்கிறது.

இவ்வாறு மனித உடலும், விலங்கு உடலும் நுண்ணுயிரிகளுடன் ஒரு ஒத்திசைவான உறவுகளை வைத்துள்ளது. ஆண்ட்டி-பயாடிக்குகள் இந்த சமச்சீர் நிலையை மாற்றி அமைக்கின்றன. இதனால் சில நோய்கள் ஏற்படுவதோடு, ஆண்ட்டி-பயாட்டிக்குகளுக்கே பெப்பே காட்டும் நோய்க்கிருமிகளையும் உருவாக்கி விடுகிறது என்கிறது இந்த ஆய்வு.
பயன் தரும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு கெட்ட பாக்டீரியாக்களின் ஆதிக்கம் உடலில் ஏற்படுவதற்கு ஒரு காரணம் ஆண்ட்டி-பயாடிக்குகள் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

நன்றி : ஹாஜா

நித்யானந்தா சீடர்கள் இருவர் தலைமறைவு

பெங்களூரு : ""சாமியார் நித்யானந்தாவின் பெண் செயலர் உட்பட இருவர் தலைமறைவாகி விட்டனர்,'' என, சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா தெரிவித்தார். 16ம் தேதி(நாளை) நித்யானந்தா உட்பட, ஐந்து பேர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா மற்றும் அவரது சீடர் பக்தானந்தா ஆகியோர் சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யபட்டனர். 53 நாள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர். சாமியார் நித்யானந்தா மீது ராம் நகர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், சாமியார் நித்யானந்தாவுக்கு எதிரான ஆதாரங்களை அழித்ததாக அவரது செயலர் சச்சிதானந்தாவை சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும் இந்த வழக்கில் ராம்நகர் நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். அதில் சதானந்தா (எ) தனசேகர், மா.சச்சிதானந்தா (ராகினி) ஆகியோரை இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சி.ஐ.டி., போலீசார் சேர்த்திருந்தனர். ஆனால், இவர்கள் கைது செய்யபடவில்லை. விசாரணைக்காக பல முறை அவர்களை சி.ஐ.டி., போலீசார் அழைத்தும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பிடதி ஆசிரமத்தில் அவர்கள் இல்லை என, சி.ஐ.டி., தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இம்மனுவை விசாரித்த நீதிபதி, பிடதி ஆசிரம செயலர்கள் சதானந்தா (எ) தனசேகர், மா.சச்சிதானந்தா (எ) ராகினி ஆகியோர் மீது கைது வாரன்ட் பிரபித்து அவர்களை வரும் 16ம் தேதி(நாளை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், கைதாகி ஜாமீனில் இருக்கும் சாமியார் நித்யானந்தா, அவரது சீடர் பக்தானந்தா, அவரது செயலர் சச்சிதானந்தா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நித்யானந்தா தரப்பில், தங்கள் மீது சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்துள்ள குற்பத்திரிகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா கூறுகையில், "நித்யானந்தா செயலர்கள் சதானந்தா, மா.சச்சிதானந்தா இருவரும் பிடதி ஆசிரமத்தில் இல்லை. அவர்கள் தலைமறைவாகி விட்டனர்' என்றார்.

வீக்கிலீக்ஸ் ஜூலியன் அஸான்ஜேவுக்கு ஜாமீன்

லண்டன்,டிச.14:சுவீடனில் பதிவுச் செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் கைதுச் செய்யப்பட்ட விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அஸான்ஜேவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.இரண்டு லட்சம் யூரோ ஜாமீன் தொகையாக கட்டிவைக்குமாறு அஸான்ஜேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.சுவீடன் பாலியல் பலாத்காரம் தொடர்பாக அஸான்ஜேவுக்கு எதிராக வெளியிட்ட கைது வாரண்டைத் தொடர்ந்து கடந்த வாரம் அஸான்ஜே கைதுச் செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தபொழுதிலும் அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்திருந்தது.

மீண்டும் அஸான்ஜே தாக்கல் செய்த ஜாமீன் மனுவில்தான் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 4 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனைக்குரிய குற்றம்தான் அஸான்ஜே மீது சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை நிராகரித்த அஸான்ஜே, தனக்கு எதிராக நடந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இது என கூறியிருந்தார்

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: ஹிந்துதுவா அமைப்புகள் மீது குற்றபத்திரிக்கை தாக்கல்.

ஹைதராபாத்,டிச:ஹைதராபாத்தில் உள்ள மக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த இருவரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மக்கா மசூதியில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்தது. மசூதி வளாகத்திற்குள் வெடித்த இந்த குண்டில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு நடைபெற்ற வன்முறையை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் அபினவ் பாரத் என்ற வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் சர்மா, குப்தா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சர்மா, குப்தா ஆஜ்மீர் வழக்கில் சிக்கி கைதாகியிருந்தனர். அவர்களை ஹைதராபாத்துக்குக் கொண்டு வந்து விசாரித்த சிபிஐ, பின்னர் இருவரையும் ஹைதராபாத் சிறையில் அடைத்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்கிற ராம்ஜி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸிமானந்த் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்.

இந்த வழக்கில் நேற்று 14வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ. 80 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் அபினவ் பாரத் அமைப்புதான் இந்த செயலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது

அதிர்ச்சி ரிப்போர்ட்!!! .. சிக்கன் 65

ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.

இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்

குறைவான நேரம் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் மிக அவசியம்

பொழுபோக்குகள் பல பல. அதில் ஒன்று தூங்குவது. நிறைய பேர் கேப் கிடைச்சா தூங்கி விடுவர். பள்ளி நேரத்தில் தூக்கம், தூங்கி கொண்டே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பல பேர் ஆசைப்படுவர். தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நீண்ட நேரம் தூங்குவதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வருவதுடன் நம் வாழ்நாளில் 17 சதவீதம் குறையும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினாலே போதும்.

குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பிறந்த குழந்தைகள் வளர வளர தூங்கும் நேரம் குறைந்து கொண்டே போகும். பிறந்த குழந்தைகளுக்கு அதிக நேர தூக்கம் தேவை. அவைகள் தூங்கி கொண்டே இருக்கும். ஆனால், குழந்தைகளை போல தூங்கும் பழக்கம், பள்ளி செல்லும் மாணவர்களிடமும், சில பொரியவர்களிடமும் உள்ளது. மனிதர்களின் தூக்கம் குறித்து ஆய்வு செய்த வல்லுநர்கள், 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதால் மனிதனின் சராசரி வாழ்நாள் 17 சதவீதம் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரம் தூங்குவதால் சீரான உடல் இயக்கங்கள் தடைபடும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள் மற்றும் இதய நோய் உள்ளிட்ட தீராத கோளாறுகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில், நரம்பு மண்டல பாதிப்பு (தைராய்டு பிரச்னை) ஏற்படலாம் என மும்பை மருத்துவர் பிரகாஷ் ஒல்லா கூறுகிறார்.

கட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும். மேலும் உடல் சோர்வு ஏற்படுவதுடன் கோபம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். அதிக நேரம் தூங்குபவர்களில் 15 சதவிதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என மனநல மருத்துவர் சுனிதா துபே தெரிவித்துள்ளார்.

குறைவான நேரம் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் மிக அவசியம். தினமும் உடற்பயிற்சி, யோகா அல்லது நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இது சாத்தியமாகும். அதிக தூக்கத்தால் உணவு முறைகள் மாறி அதனால், பல்வேறு விளைவுகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

நன்றாக தூக்கம் வர தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்பு, இரவு உணவு சாப்பிடுங்கள். டின்னருக்கு முன் பழம் அல்லது பால் குடிக்கலாம். தினமும் உடற்பயிற்சி அவசியம். இதனால் நன்றாக தூக்கம் வருவதுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து, சில நிமிடங்களுக்கு பின் குளிப்பதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்.

படுக்கைக்கு செல்லும் முன் மேலோட்டமாக புத்தகம் படித்தால் ஆழ்ந்து தூங்க முடியும். காலையில் 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

மூட நம்பிக்கையா? சோ. ராமசாமிக்கு (சோமாறி) மறுப்பு!

அரசியல் அரங்கில் காமெடிக்கு ஒரு 'சாமி' என்றால், பத்திரிக்கை துறையிலோ காமெடிக்கு ஒரு 'சோ. ராமசாமி. இவர் ஆரம்பித்த இதழுக்கு முஸ்லிம் மன்னரான முகம்மது பின் துக்ளக் என்பவரின் இறுதி பகுதியை பெயராக சூட்டிய நாள் முதல், சமயம் கிடக்கும் போதெல்லாம் முஸ்லிம்களை சாட்டுவதையே தனது ஊடகப் பணியாக கொண்டிருக்கிறார். இந்நிலையில்,

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, ''விஜயதசமி கொன்டாடுகிறவரின் ஆட்சி வந்தால் மூடநம்பிக்கை பரவி நாட்டு காடாகிவிடும்' என்று பேசியுள்ளார்.

முதல்வரின் விஜயதசமி குறித்த கருத்து சோவை சோர்வடையச் செய்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? விஜயதசமி என்றால் என்ன; அதன் தாத்பரியங்கள் என்ன? எதற்காக விஜயதசமி கொண்டாடப் படுகிறது என்றெலாம் விளக்கி கருணாநிதியை மடக்கியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, 'புருஷன் மேல உள்ள கோபத்த புள்ள மேல காட்டுற பொம்பிளையைப் போல'

''விஜயதசமி கொண்டடுவதுதான் மூடநம்பிக்கையா? ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பது; பக்ரீத் கொண்டாடுவது;கிறிஸ்துமஸ் மற்றும் புனித வெள்ளி அனுஷ்டிப்பது போன்றவை கூட மூடநம்பிக்கைகளா? அந்த நம்பிக்கை உடையவர்கள் யாரவது ஆட்சிக்கு வந்தால் தமிழகம் காடகிவிடாமல் தப்பிக்குமா? இதை முதல்வரால் விளக்கமுடியுமா என்று புலம்பியுள்ளார் சோ''.

இவரின் இந்த வார்த்தைகள் அப்பட்டமான அவரின் மத துவேஷ உணர்வை வெளிக்காட்டுகிறது. மேலும் இவர் குறைந்த பட்சம் விஜயதசமி கொண்டாடுவது மூடநம்பிக்கையல்ல என்று தக்க சான்றுகளுடன் நிறுவிவிட்டு, பின்பு மற்ற மதங்களின் பண்டிகைகள் குறித்து விமர்சித்திருந்தால் கூட இவரை ஓரளவு அறிவாளி என கருதலாம்.

ஆனால் விஜயதசமியை பகுத்தறிவு ரீதியாக நிரூபிக்க இயலாததால், சம்மந்தமில்லாத முஸ்லிம்- கிறிஸ்தவர் மீது விழுந்து பிராண்டுகிறார். கிறிஸ்தவர்கள் பண்டிகை குறித்து அவர்கள் பதிலளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் அவர்களின் உரிமை. ஆனால் சோவால் மூடநம்பிக்கை என அடையாளம் காட்டப்பட்ட ரம்ஜான் நோன்பு மற்றும் பக்ரீத் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் பட்டது முஸ்லிம்கள் இறையச்சமுடையவர்களாக ஆகவேண்டும் என்பதற்காகவே. இறையச்சம் இந்த நோன்பில் மட்டும் வந்துவிடுமா என்றால் உண்மையான நோன்பாளியாக இருந்தால் கண்டிப்பாக வரும். எவ்வாறெனில், நோன்புடைய காலங்களில் பகல் வேளையில் உண்ணுதல்- பருகுதல்- மனைவியுடன் கூடுதல் கூடாது என்கிறது இஸ்லாம்.

நோன்பு நோற்ற ஒருவன் அவனது வீட்டில் அவனது உழைப்பால் உருவான உணவு இருக்கும். அவன் நினைத்தால் கதவை சாத்திவிட்டு ஒரு வெட்டு வெட்டிவிட்டு வாயை துடைத்துக்கொண்டு வெளியே வந்தால் யாரும் கண்டுகொள்ள முடியாது. ஆனாலும் ஒரூ நோன்பாளி அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில், நமது உணவாக இருந்தாலும், நாம் சாப்பிடுவதை பருகுவதை மனிதர்கள் யாரும் பார்க்காவிட்ட்டாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனவே நாம் சாப்பிடக்கூடாது என்று அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிரானே அதுதான் இறையச்சம்! தனது சொந்த உழைப்பில் உருவான உணவையே இறைவனுக்கு பயந்து தவிர்ந்துகொண்டவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படமாட்டான். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் நேர்மையாக இருப்பான். இவ்வாறு மாற்றியது நோன்பின் மூலம் பெறும் இறையச்சம்தானே!

அடுத்து, நோன்புடைய காலங்களில் பகலில் இல்லற வாழ்க்கை கூடாது. கணவன்-மனைவி மட்டும் இருக்கிறார்கள். அவ்விருவரும் நோன்பு நோற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவ்விருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்களை யாரும் கண்டுகொள்ளமுடியாது. ஆனாலும் அவர்கள் இறைவன் தடுத்திருக்கிறான் என்ற பயத்தின் காரணமாக தவிர்ந்து கொள்கிறார்களே தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்கிறார்களே இதுதான் இறையச்சம்! இப்படி தனக்கு சொந்தமான மனைவியை இறைவன் சொல்லிவிட்டான் என்பதற்காக தவிர்ந்துகொன்டவன், அந்நிய பெண்ணை ஏறெடுத்தும் பார்ப்பானா? எந்த இறைவனுக்கு பயந்து நோன்புடைய பகல் நேரத்தில் நம்முடைய சொந்த மனைவியை தவிர்ந்து கொண்டோமோ, அதே இறைவன்தான் கூறுகின்றான்; விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்; அன்னிய பெண்ணை பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் என்று. எனவே நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்று தன்னை தடுத்துக்கொள்வான். இந்த இறையச்சத்தை வழங்கியது நோன்பு அல்லவா? எனவே உள்ளச்சத்துடன் நோன்பு நோற்றால் இறையச்சம் நிச்சயம் வரும்.

இப்படிப்பட்ட பயிற்சியை வழங்கும் இஸ்லாமிய நோன்பு, அசைவம் தவிர்த்து; அரிசிச்சோறு தவிர்த்து அனைத்தையும் வெட்டலாம் என்ற நோன்பை சரிகாணும் சோ வுக்கு மூடநம்பிக்கையாக தெரிவது விந்தைதானே!

அடுத்து பக்ரீத் எனப்படும் தியாகத்திருநாளை மூடநம்பிக்கை என்று எந்த அடிப்படையில் சோ கூறுகிறார் என தெரியவில்லை. ஒருவேளை பக்ரீத் அன்று ஆடு-மாடு- ஒட்டகங்களை குர்பானி கொடுப்பதை வைத்து இப்படி கூறுகிறாரோ என்னவோ. குர்பானி தான் காரணம் என்றால், ஒவ்வொரு கோயில்களிலும் திருவிழாக்களில் பலியிடுவதை குறித்து சோ வின் நிலை என்ன?

மேலும், முஸ்லிம்கள தியாகத் திருநாளின்போது பலியிடும் குர்பானிக்கு பின்னால் ஒரு தியாகம் மறைந்துள்ளது. ஆம்! இறைத்தூதரும், இறைநேசருமான இப்ராஹீம்[அலை] அவர்கள் இறைவனின் கட்டளை எதுவாயினும் அதை அப்படியே நிறைவேற்றும் தியாக உள்ளம் கொண்டவர்கள். அப்படிப்பட்ட இப்ராஹீம் நபியின் வயோதிக காலத்தில் கிடைத்த வாரிசான இஸ்மாயில்[அலை] அவர்களை அறுத்துப் பலியிடுவது போன்ற ஒரு கனவை இப்ராஹீம் நபியவர்களுக்கு வழங்கி சோதித்தான் இறைவன்.

இறைவனின் கட்டளையை இனிதே ஏற்று தன் மகனை அறுத்துப் பலியிட இப்ராஹீம் நபியவர்கள் முன்வந்த போது அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொண்ட இறைவன், மகனை பயிடுவதை தடுத்து நிறுத்தி, ஒரு கால்நடையை பலியிட செய்தான் என்பது இறைவேதம் கூறும் சான்று. அத்தகைய இப்ராஹீம் நபியவர்களின் தியாத்தை நினைவு கூர்ந்து, முஸ்லிம்கள் குர்பானி கொடுத்து அதன் இறைச்சிகளை ஏழைகள்- உறவினர்களுக்கு வழங்கி மகிழ்வுடன் கொண்டாடும் பண்டிகைதான் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாளாகும். இதில் என்ன மூடநம்பிக்கையை கண்டுவிட்டார் திருவாளர் சோ.

மூடநம்பிக்கையில் முத்துக் குளிக்கும் சோ வுக்கு நாம் சொல்லிக்கொள்வது என்னவெனில், மூடநம்பிக்கைகளாக நீங்கள் அடையாளம் காட்டும் இந்த இரு விஷயங்கள் மட்டுமன்றி, இஸ்லாம் குறித்த எந்த விஷயமாயினும் அது குறித்து, நீங்கள் விரும்பினால் நீங்கள் அழைக்கும் நேரத்தில் உங்களோடு திறந்த மனதுடன் கலந்துரையாடுவதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராக உள்ளது என்பதை சொல்லிக்கொள்கிறோம். எனவே உங்கள் மதம் குறித்து விமர்சிக்கப் பட்டால் அது குறித்து விளக்கமளிப்பதை விடுத்து, அடுத்த மதத்தை இழுப்பதை இன்றோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

முகவை எஸ்.அப்பாஸ்.

20 ஆண்டுகளில் காஷ்மீறில் கொல்லப்பட்ட தலைவர்கள் 697 பேர்.

ஜம்மு,டிச.13:கடந்த 20 வருடங்களுக்கிடையே கஷ்மீரில் நடந்த மோதலில் 697 அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டுதான் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.2002-100 பேர், 2010-4 பேர், 2009-6 பேர், 2007- 9 பேர், 2006-17 பேர், 2005-40 பேர், 2004- 62 பேர், 2003-52 பேர், 2001- 76 பேர், 2000-35 பேர், என புள்ளிவிபரம் கூறுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சியின் 420 பேரும், பி.டி.பியைச் சார்ந்த 96 பேரும் இதில் உட்படுவர்.

விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி.

கான்பெர்ரா,டிச.13:ரகசிய விபரங்களை வெளியிட்டதற்காக விக்கிலீக்ஸ் மற்றும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் பிரிவுகள் இல்லை என கருத்து சுதந்திர பாதுகாப்பிற்கான ஐ.நாவின் சிறப்புத் தூதர் பிராங்க் லாரியூ தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி டுடேக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆனால், விக்கிலீக்ஸ் ஒரு ஊடகம் என்ற நிலையில் செயல்பட்டதை குற்றம் சொல்லமுடியாது. தகவல்களை பரிமாறுவதில் பொறுப்பேற்க தேவையில்லை என்பது பொதுவான தத்துவமாகும். வெளியிடும் விபரங்கள் தெளிவாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறினாலோ, ஏதேனும் நபர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை விளைவித்தாலோ தான் இக்காரியத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளியிடும் தகவல்களால் ஒரு அரசுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது என்பதற்காக மட்டும் அதனை தடைச்செய்வதற்கோ, நடவடிக்கை மேற்கொள்ளவோ இயலாது என பிராங்க் மேலும் கூறினார்.

நன்றி :செய்தி தேஜஸ் மலையாள நாளிதழ்

Dec 13, 2010

கல்விக் கடனுக்கு வட்டி தள்ளுபடி!

கல்வி இன்று வணிகமாகிவிட்டது. பணம் இருந்தால் தான் உயர்கல்வி என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்றால் 4-5 லட்சம் வரை தேவைப்படுகிறது. மாறிப்போன மக்களின் மனநிலை தான் இதற்கு காரணம்.

இஞ்சினியரிங் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் வேலை உறுதியாக கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது என்றால், சரி பரவாயில்லை என்று கடன் வாங்கியாவது படிக்க வைப்பதில் நியாயம் இருக்கிறது. வேலைக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில் கூட அறியாத அடித்தட்டு, நடுத்தர மக்கள் தங்கள் சக்திக்கு மீறி வீடு வாசலை விற்று வட்டிக்கு வாங்கி படிக்க வைக்கின்றனர். இந்நிலையில் வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது அவ்வளவு சுலபமான வழியல்ல. ஆனாலும் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடனுக்கு 2010-2011 ஆம் ஆண்டிலிருந்து வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது என்று வங்கிகள் அறிவித்துள்ளன.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவியர் உயர் கல்வி / தொழிநுட்பக் கல்வி பயில இத்திடத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அதற்கு கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.

தகுதிகள் :

1) 12ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட தொழில் நுட்பம் மற்றும் தொழில் முறை சார்ந்த படிப்பை வெளிநாட்டில் மேற்கொள்வதற்கு.

2) பெற்றோர் வருமானம் அனைத்து வழிவகைகளிலும் ஆண்டிற்கு ரூ. 4.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள குடும்பத்தைச் சார்ந்த, பொருளாதார நீதியாகப் பின்தங்கியுள்ள மாணவ மாணவியர்கள். (மாநில அரசால் இத்திட்டத்திற்கான வருமானச் சான்றிதழ் வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிகாரியிடமிருந்து சான்றிதழ் பெறவேண்டும்.

3) 1.4.2009 லிருந்து 31.3.2010 வரை (கல்வியாண்டு 2009-10) பெற்றுள்ள கல்விக்கடன் தொகை இத்திட்டத்தில் வட்டி மானியம் கிடைக்கும்.

4) 1.4.2009க்கு முன் கல்விக்கடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேற்குறிப்பிட்ட ஓராண்டில் (2009-10) பெற்ற கடன் தொகைக்கு மட்டும் வட்டிமானியம் கிடைக்கும்.

5) படிப்பு முடித்து அதன்பின் ஓராண்டு அல்லது வேலை கிடைத்த 6 மாதம் இவற்றில் எது முன்னரோ அதுவரை வட்டி மானியம் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு
www.indianbank.com

ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்.

ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை (Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் தொடங்கி உள்ளது. இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான ‌வீடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.

மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.

ஊழல், லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த இணையதளத்தை மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் நே‌ற்று தொடங்கி வைத்துப் பேசினார்.

கண்காணிப்பு அமைப்பை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காணிப்பு ஆணையம் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊழலை மக்கள் சகித்துக் கொள்ளாமல் அது குறித்து புகார் செய்ய முன்வருவது அதிகரிக்கும்'' என்றார் தாம‌ஸ்.

மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல் 'விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.

உடல் எடை குறைய, ஓட்டப் பயிற்சி சிறந்தது!

ஒரு மணி நேர ஓட்டப் பயிற்சி 500 கலோரி சக்தியை எடுத்துக் கொள்கிறது. உடலில் 3,500 கலோரி சக்தி குறைந்தால், அரை கிலோ எடை குறையும். ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், உடலில் வளர்சிதை மாற்றம் நல்ல முறையில் ஏற்பட்டு, உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. அறிவுப்பூர்வமான உணவுக் கட்டுப்பாட்டுடன், ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், ஒரே மாதத்தில், உடல் எடை சீராகும்; கட்டுக்கோப்பான உடல் கிடைக்கும். ஓடும் போது, உடலில் ரத்த நாளங்கள் விரிவடைந்து சுருங்கும் செயல்பாடு மும்மடங்கு அதிகரிக்கிறது.

இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் நோய் தவிர்க்கப்படுகிறது. பக்கவாதம், இதய அடைப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன.வயதான தோற்றம் ஏற்பட யாருமே விரும்புவதில்லை. ஓடும் போது, தசையும், எலும்பும் நல்ல நிலையில் இயக்கம் பெறுகின்றன. அவற்றின் பலம் அதிகரிப்பதால், ஆஸ்டியோபோரோசிஸ் உருவாவது தவிர்க்கப்படுகிறது.

ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், முகச் சுருக்கங்களை நீக்கச் செய்து கொள்ளப்படும் போடோக்ஸ் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி ஆகியவை தேவையே இல்லை. அனைவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறோம்.

மனதை குஷிப்படுத்த போதை மருந்து பயன்படுத்துவது சட்ட விரோதமானது. ஆல்கஹால் பருகுவது, நல்லதல்ல. ஆனால், ஓட்டப் பயிற்சியின் மூலம், சந்தோஷம் அடையலாம். ஓடும் போது, மனதை மகிழ்ச்சியாக வைக்கும், "எண்டார்பின்'கள் அதிகம் சுரக்கின்றன. 45 நிமிட ஓட்டப் பயிற்சி, நாள் முழுவதும் நம்மை மகிழ்ச்சியாக வைக்கிறது.

சாலையில் ஓடும் போது, கவனம் முழுவதும் சாலையில் தான் இருக்க வேண்டும். வீட்டுப் பிரச்னை, அலுவலகப் பிரச்னைகளை யோசிக்கக் கூடாது. மன அழுத்தத்தை விரட்ட, இது சிறந்த வழி. மாணவர்கள் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், பாடத்தில் கவனம் அதிகரித்து, எந்த நாளும் இனிய நாள் என்ற மனநிலையை ஏற்படுத்துகிறது.

மனதையும், உடலையும் பலம் மிக்கதாக ஆக்குகிறது. ஓட்டப் பயிற்சியை தினமும் மேற்கொள்ளும் மாணவர்கள், மற்ற மாணவர்களை விட, நீண்ட நேரம் கண் விழித்து படிக்கும் திறனைப் பெறுகின்றனர். ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளும் வகையில், சாலைகள் சீராக இருப்பதில்லை. குண்டும், குழியுமாகக் காணப்படுகின்றன.

இந்தத் தடைகளைக் கடக்கும் போது, மனதில் கவனம் ஒருங்கிணைப்பு, சீரான சிந்தனை ஆகியவை அதிகரிக்கின்றன. உடலும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது.ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களின் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் அதிக ரத்த ஓட்டம் கிடைப்பதால், தொற்று, நோய் ஆகியவை அதிகம் அண்டாது. நோய் ஏற்பட்டாலும்,
விரைவில் குணமாகி விடும். உழைக்கும் நேரம் வீணாகாது.

ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், இடுப்பு, முட்டி எலும்பில் பாதிப்பு ஏற்படுமென பொதுவாக கருதப்படுகிறது; ஆனால் அது மூட நம்பிக்கையே. எலும்பு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, ஓட்டப் பயிற்சிக்கு முன்னால், உடலை வளைத்து, நிமிர்த்தி, கை, கால்களை நீட்டி, மடக்கி, தசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். எடுத்த எடுப்பிலேயே ஓடத் துவங்காமல் 5 நிமிடம் நடைபயின்ற பின், ஓடலாம்.

ஓட்டப் பயிற்சியுடன், உடலுக்கு வலு சேர்க்க, "புஷ் அப்ஸ்' மேற்கொள்ளலாம். இதுவரை ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளாதவர்கள், தற்போது துவங்க, சில நடைமுறைகள் உள்ளன. 10 அடி நடத்தல், 10 அடி ஓடுதல் எனத் துவங்க வேண்டும்.

ஒரு வாரம் சென்ற பின், 10 அடி நடத்தல், 20 அடி ஓடுதல் என அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஓட்டப் பயிற்சிக்கு உடல் ஈடு கொடுக்கத் துவங்கிய பிறகு, தொடர்ந்து ஓடலாம். காலை வேளையில் தம்பதியர் பலரும், நடைபயிற்சி மேற்கொள்வதை பார்க்கிறோம். ஆண்கள், "டிராக் சூட்' போட்டு, காலில் ஷூ அணிந்து செல்கின்றனர்.

ஆனால் பெண்கள், புடவையைக் கட்டிக் கொண்டு திண்டாட்டத்துடன் நடக்கின்றனர். சல்வார் கமீஸ் அல்லது டிராக் பேன்ட் போடலாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் கிண்டல் அடிப்பார்களோ என கருத வேண்டாம்; வெட்கப்பட வேண்டாம்.

உங்கள் ஆரோக்கியம் சீராகி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை காணாமல் போய், மன அழுத்தமும், "டாட்டா' சொல்லும் போது, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் கிண்டல், கேலிப் பேச்சுகளை நீங்கள் "சட்டை' செய்யாத நிலைக்குச் செல்வீர்கள் என்பது நிச்சயம்! காலில் ஷூ அணியும் போது கவனிக்க வேண்டி முக்கிய விஷயம், கால் அதில் நன்கு பதிய வேண்டும் என்பது தான். சாக்ஸ் அணிவதும் அவசியம்.

அதிக எடையுள்ளவர்கள், கடினமான செருப்போ, ஷூவோ அணிந்து ஓட்டப் பயிற்சி மேற்கொண்டால், பாதம் வலிக்கத் துவங்கி விடும். நடக்கும் போது, செருப்பு அணிவதைத் தவிர்க்கவும். வேகமாக நடைபயிலும் போது, செருப்பிலிருந்து கால் வெளியே வந்து விடும். குதிகாலில் செருப்பு மோதிக் கொண்டே வருவது நல்லதல்ல.

வெப்புலகம்.

எச்சில் இலைகள் மீது உருளும் தலித் மக்கள்: இந்தியாவில் தொடரும் சாதிக் கொடுமை.

மங்களூர் அருகே உள்ள ஒரு கோவிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டு முடித்த எச்சிலைகளின் மேல் தலித்துகளும், மற்ற சாதியினரும் உருண்டு செல்கிறார்கள். அப்படி சென்றால் அவர்களுக்கு தோல் சம்பந்தப் பட்ட வியாதிகள் ஏதும் வராது என்பது நம்பிக்கையாம். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பழக்கம் கடந்த 400 வருடங்களாக கடைபிடிக்கப் படுகிறது என்பதும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் அடிக்கடி இக்கொவிலுக்கு விஜயம் செய்வது வழக்கம் என்பதும்தான். அரசுக்கு தெரிந்தே இது போல‌ மனிதர்களை சாதி ரீதியாக வர்க்கம் பிரிக்கும் முயற்சிகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதுதான்.

இத்தனைக்கும் அங்கே சாப்பிட்டவர்கள் யாரும் துறவிகளோ முனிவர்களோ கிடையாது. சாப்பிட்டவனும், அந்த எச்சிலையின் மேல் உருண்டவனும் ஒரே பள்ளியில் படிப்பவர்களாகவோ அல்லது ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவோ கூட இருக்கக் கூடும். இங்கே ஒருவனை உயர்ந்தவனாகவும், மற்றொருவனைத் தாழ்ந்தவனாகவும் ஆக்கி வைத்திருப்பது மனுதர்மத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. சாமியார், சாமி என்பதை எல்லாம் கூட அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என விட்டுவிட்டாலும், இது போன்ற சம்பவங்களை எந்த அடிப்படையில் அனுமதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் நிறைய இளைஞர்கள் இருந்தனர். உருண்டவர்களிலும்தான். இதுபோன்ற மனுதர்மம் சார்ந்த நம்பிக்கைகள் அடுத்த தலைமுறையினரிடமும் தொடர்கிறது என்பது வேதனை அளிக்கும் விஷயம்.

நன்றி : Mr. அன்பு

உலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).

"கூரையில் ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்."இந்தப் பழிமொழி இப்போது சரியாகப் பொருந்துவது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குத் தான். பிரித்தானியாவில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சமாளித்துக் கொள்ள அவர் வெளியிட்ட கருத்தே இப்படிக் கூற வைத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரையில் தெளிவுபடுத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாராம். தமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு அந்த நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளதாகவும் புலம்பியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. அவரது இந்த உரையைக் கேட்டபோது புல்லரிக்கிறது.

தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் தான் அவருக்கு எத்தனை ஆர்வம்.தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குப் புலிகளே தடையாக உள்ளனர். அவர்களை அழிக்கத் தான் இராணுவ நடவடிக்கை, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறிக் கொண்டு போரை நடத்தியவர் தான் மகிந்த ராஜபக்ஸ.

போர்முடிந்த பின்னர் அரசியல் தீர்வு வழங்குவேன் என்று கூறியவர்.ஆனால் போர் முடிந்த பின்னரும் அரசியல் தீர்வு பற்றியே சிந்திக்காதவர் அவர். தனது மனதில் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை உள்நாட்டில் அரசியல்கட்சிகளும் மக்களும் ஏற்க வேண்டும் என்று கூறிக் கொண்டு திரிந்தவர் திடீரென அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்திருப்பாரா என்ன? அரசியல் தீர்வை சர்வதேச சமூகத்திடம் முன்வைப்பதற்கு அவர் ஒக்ஸ்போர்ட்டைத் தான் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பதை அதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

அதைவிட எமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்போம் என்று கூறி வந்தவர் மகிந்த.தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழ் அரசியல்கட்சிகள் விடுக்கின்ற வேண்டுகோள்களை செவி சாய்க்காமல் இருக்கும் மகிந்த ராஜபக்ஸ, அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி யாரைத் தான் ஏமாற்ற முனைக்கிறார்? இதுவரை காலமும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை முட்டாளாக்கிய அவர் இப்போது சர்வதேசத்தை முட்டாளாக்க முனைகிறார்.

புலம்பெயர் தமிழர்களும் பிரித்தானியாவும் அரசியல் தீர்வை அறிவிக்கும் வாய்ப்பைக் கெடுத்து விட்டதாக அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார். அரசியல் தீர்வில் அவர் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால் பிரித்தானியா திருப்பிய அனுப்பிய கையோடு அதை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. இப்போதும் சரி -இனி எப்போதும் சரி அரசியல் தீர்வை அறிவிக்கின்ற எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது என்பதே உண்மை. அவரது மனதில் தீர்வு யோசனை இருப்பதாகக் கூறுவதெல்லாம் சுத்த பம்மாத்து.

அவரது மனதில் படிந்துள்ளதெல்லாம் தமிழருக்கு எதிரான இனவாதமும், குரோத மனப்பாங்கும் தான். தமிழரை எப்படியெல்லாம் அடக்கி ஆளலாம் என்று சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸவா அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்? அவரது இந்தக் கதைகளையெல்லாம் நம்புகின்ற நிலையில் தமிழர்கள் இல்லை.
அதனால் தான் அவர் அரசியல் தீர்வுக்கு ஒக்ஸ்போர்ட் உரையுடன் முடிச்சுப் போட்டு- கெடுத்து விட்டார்களே என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

அவர் உண்மையிலேயே தமிழர் பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலும் விருப்பமும் கொண்டவராக இருந்தால்- அந்த அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடலாம்.
ஆனால் அதை அவரால் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் சிங்களப் பேரினவாதத்தின் சக்கரவர்த்தியாக- சிங்களப் பேரினவாதத்தின் சின்னமாக- இருக்க விரும்புகிறாரே தவிர, தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது.

இந்த உண்மை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.அதேவேளை, மகிந்த ராஜபக்ஸ போடுகின்ற வேடத்தையும், ஆடுகின்ற நாடகத்தையும் மேற்கு நாடுகள் இப்போது ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன.எனவே, அரசியல்தீர்வு பற்றி அவர் அளக்கின்ற இந்தக் கதைகளையெல்லாம்- அவரைச் சுற்றியுள்ளவர்களைத் தவிர வேறு யாரும் நம்புகின்ற நிலையில் இல்லை. இது தான் உண்மை.

நன்றி: முகிலன்

மூளை வளர என்ன சாப்பிடலாம்?

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.