Dec 11, 2010

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது ?

கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை.

அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.

காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடியால் வெற்றி பெறமுடிகிறது.

ஹேமந்த் கர்காரேக்கு தொலைபேசி மூலம் கொலைமிரட்டல்; பின்னணியில் ஹிந்துத்துவா.

நாக்பூர்,டிச.12:மும்பை தாக்குதலின்போது கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேக்கு கொலைச் செய்யப்படுவதற்கு முன்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதைக் குறித்து விபரங்களை அளிக்க போலீசாருக்கு உத்தரவிடப்படும் என மஹாராஷ்ட்ரா மாநில துணைமுதல்வர் அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கர்காரே தன்னை அழைத்துக் கூறினார் என காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் விடுத்துள்ள அறிக்கையைக் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அஜீத் பவார் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழக காவல்துறையும் & ஹிந்துதுவாவும் : ஒரு சமூக பார்வை.

திண்டுக்கல்,டிச.11:தீவிரவாதிகள் திடீரென தாக்கினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பதுக் குறித்த பாதுகாப்பு ஒத்திகை கடந்த 9-06-2010 அன்று திண்டுக்கல்லில் போலீசாரால் நடத்தப்பட்டது.nதீவிரவாதிகளாக வேடமிட்டு ஒத்திகையில் கலந்துக் கொண்டவர்களின் முகத்தில் தாடி ஒட்டப்பட்டு முஸ்லிம்கள் போல் காணப்பட்டன.

இச்செய்தி பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியானது. ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறான மத அடையாளங்கள் உள்ளன. முஸ்லிம் ஆண்கள் மார்க்க கடமையாக கருதி தாடியை வளர்க்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் என்றாலே அவர்களை முஸ்லிம்கள் தான் என்று தீர்மானிப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனமின்றி வேறென்ன? பகுத்து அறியும் ஆற்றலைப் பெற்ற கலைஞரின் ஆட்சியில் அவரது கட்டுப்பாட்டிலிலுள்ள போலீஸ் துறைதான் இந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் ஏன் தமிழகத்தின் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் தங்களது தலைமையகத்திற்கு தாங்களே குண்டை வைத்து விட்டு முஸ்லிம்களின் பழியைப்போட தீட்டவும் செய்தனர்.

கிறிஸ்தவ ஆலயங்களை இடித்தும், முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்ற கொடூர பாவிகள். குஜராத் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை கூட்டமாக சுற்றி நின்று கற்பழித்து அதை விடியோ எடுத்து ரசித்தவர்கள். குஜராத் பேஸ்ட் பேக்கரியில் அதன் உரிமையாளர் மற்றும் வேலை செய்தவர்கள் எல்லாரையும் அப்படியே தீயிட்டு கொளுத்தியவர்கள். குஜராத்தின் காங்கிரஸ் முன்னாள் MP யையும் அவர் வீட்டில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எல்லோரையும் வெட்டி கொன்று தீயிட்டு கொளுத்தினர்.

ஆஸ்திரேலிய கிறஸ்தவ பாதரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் காரோடு வைத்து தீவைத்து கொளுத்திய கொடும் பாவிகள். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணை வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தாயையும் குழந்தையையும் கொன்றார்கள். இவர்கள் போல் உள்ள ஒரு கொடியவர்களை வரலாறுகளில் பார்க்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கமுடயுமா? இவர்கள் மனிதர்களா? இல்லை மிருகங்களா? இவர்கள் மனம்தான் என்ன இரும்பினால் செய்யபட்டதா? இப்படி பட்ட ரெத்த வெறி பிடித்த கயவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மிருகங்கள். இந்நிலையில் தீவிரவாதிகளாக ஏன்? இவர்கள் போல் வேடம் இட்டு ஒத்திகை பார்க்கவேண்டியது தானே.
இதில் இருந்து தமிழக காவல் துறையில் ஹிந்துதுவாவின் தாக்கத்தை உணரமுடிகிறது.

தொடர்ந்து தமிழக காவல் துறை முஸ்லிம் விரோத போக்கோடு செயல்பட்டு வருகிறது. கோவையில் செல்வராஜ் என்ற ட்ராபிக் கான்ஸ்டபில் கொல்லப்பட்டபோது சம்மந்த பட்டவர்கள் மீது வழக்கு தொடராமல். 19 முஸ்லிம்களை சுட்டு கொன்ற கயவர்கள் ஆச்சே இவர்கள்.. ஜனநாயக முறையில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களை தீவிரவாதமாக சித்தரிப்பது, அவர்கள் மீது திட்ட மிட்டு பொய் வழக்குகள் போடுவது, இப்படி தமிழக காவல்துறை ஹிந்துதுவாவின் மறு உருவமாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகளை கலைஞரின் போலீஸ் துறை மேற்கொள்வது அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சமூக நல்லிணத்தை சீரழிக்கவே உதவும். தமிழக காவல்துறையின் இத்தகைய செயலுக்கு அனைத்து மக்களும் தங்களது கண்டனத்தை பதிவுச்செய்ய வேண்டும்.

இந்தியாவின் வளங்களை சுரண்டும் அந்நியநாட்டு பெருச்சாளிகள்.

தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்பு உருக்காலைக்கு எதிராக கடந்த ஐந்தாண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. ஒரிசா மாநில அரசு பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிட்ட பின்னும், அப்போராட்டம் பின்னடைவுக்கு உள்ளாகவில்லை. போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையாய் நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங். இப்படிபட்ட நிலையில் இப்பிரச்சினையில் மைய அரசு திடீர் உத்தமர் வேடம் போடக் கிளம்பியிருக்கிறது.இப்படி மொத்த இந்தியாவையும் டாடாவுக்கும், பிர்லாவுக்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும், மாக கார்பரேட் முதலாளிகளுக்கு பட்டா போட்டு கொடுத்துவிடத் உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசு பயங்கரவாதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறிவருகிறது.

போஸ்கோ நிறுவனம், ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்புச் சுரங்கம், இரும்பு உருக்காலை மற்றும் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்வதற்கான துறைமுகம் ஆகியவற்றுக்கு விதிமுறைகளின்படி சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்றுள்ளதா? அந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபொழுது இந்திய வனச் சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? இத்திட்டத்தால் தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதா? அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் உள்ளனவா? – ஆகியவை குறித்து ஆராய மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் நான்கு பேர் கொண்ட கமிட்டியொன்றை அமைத்தது. மீனா குப்தா என்பவர் இக்கமிட்டியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் போஸ்கோ திட்டத்திற்குத் தேவைப்பட்ட அனுமதிகளை வாரிவழங்கியபொழுது, மீனா குப்தா அத்துறையில் செயலராக இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படிபட்ட பின்னணி கொண்டவரை கமிட்டியின் உறுப்பினராக மட்டுமின்றி, தலைவராகவும் நியமித்ததில் இருந்தே மைய அரசின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.மீனா குப்தாவும் மைய அரசை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கவில்லை.இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க போஸ்கோவிற்கு கால அவகாசம் அளிப்பதன் மூலமும், சுற்றுப்புறச் சுழல் பாதிப்பு தொடர்பாக இன்னும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுமாறு போஸ்கோவிற்கு உத்திரவிடுவதன் மூலமும் இத்திட்டத்தைத் தொடர அனுமதிக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபொழுதில் பழங்குடியின விவகாரங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் ஊர்மிளா பிங்க்ளே, முன்னாள் இந்திய வன அளவை இயக்குநர் ஜெனரல் தேவேந்திர பாண்டே, சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞரும் மனித உரிமை ஆர்வலருமான வீ.சுரேஷ் ஆகிய மற்ற மூன்று உறுப்பினர்கள், “உண்மைகளை மூடிமறைத்தும் சட்ட விரோதமான முறையிலும் போஸ்கோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக’’த் தமது அறிக்கையில் நிரூபித்துள்ளதோடு, போஸ்கோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

நன்றி: வினவு

சிறுநீரக செயல் இழப்பு...அறியவேண்டியவை !

சிறுநீரகம் (Kidney)நமது உயிர்வாழ்க்கைகுத் தேவையான முக்கியமான உறுப்பாகும்.

இதன் தொழில்கள் ,

1.குருதியில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல்
2.உடலில் நீரின் அளவை சரியான அளவில் வைத்திருத்தல்
3.உடலில் சோடியம் பொற்றாசியம் உட்பட்ட பல மூலகங்களை கட்டுப் பாட்டில் வைத்திருத்தல்
4.குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களின் உற்பத்தியை தூண்டும் ஹார்மோனை உற்பத்தி செய்தல்
5.குருதி அமுக்கத்தை கட்டுப் படுத்தல்

இவ்வாறு பல முக்கியமான செயற்பாடுகளை செய்யும் சிறுநீரகம் பல காரணங்களால் செயல் இழந்து போகலாம். இந்த செயல் இழப்பானது சடுதியானதாக (Acute renal failure) இருக்கலாம் அல்லது நாட்பட்டதாக(Chronic renal failure) இருக்கலாம்.

சடுதியாக ஏற்படும் சிறுநீரக செயல் இழப்பு(acute renal failure)

இதில் திடீரென சிறுநீரகத்தின் செயற்பாடு குறையும்.

இதை ஏற்படுத்தக் கூடிய காரணிகள்

1.சடுதியாக குருதியின் அளவு குறைதல் -குருதிப் பெருக்குக் காரணமாக
2.உடலில் இருந்து அதிகளவான நீர் வெளியேறுதல்-வயிற்றோட்டம் வாந்தி பேதி போன்றவை மூலம்
3.சிறுநீரகத்திற்கு இரத்தம் கொண்டு போகும் குழாய்களில் ஏற்படும் அடைப்புக்கள்
4.உடலில் பரவலான கிருமித் தொற்று(sepsis)
5.சிலவகை மருந்துகள் - பொதுவாக வலிநிவாரநிகளாக கொடுக்கப்படும்
NSAID எனப்படும் வகை மாத்திரைகள் .
6.சிலவகை நஞ்சுகளால் ஏற்படலாம் (நஞ்சு அருந்தியவர்களில்)
7.சிலவகை பாம்புக் கடி
8.எலிக்காய்ச்சல்

இப்படி ஏராளமான காரணங்களால் சிறுநீரகத்தின் செயற்பாடு சடுதியாக குறையலாம்.

இவ்வாறு சடுதியாக குறையும் சிறுநீரகச் செயற்பாடு அநேகமான சந்தர்ப்பங்களில் தற்காலிகமாதுதான்(மாறாக நாட்பட்ட சிறுநீரக செயல் இழப்பு நிரந்தரமானது)சடுதியான சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்திய காரணி சரியாக்கப் பட்டால் மீண்டும் சிறுநீரகம் தன் செயற்பாட்டை பெற்று சாதாரண நிலையை அடையலாம்.

இதனால் ஏற்படும் அறிகுறிகளை ஒருவர் அறிவதற்கு முன்னமே வைத்தியரினால் அது அடையாளம்கண்டு பிடிக்கப்பட்டு விடும். ஆனாலும அந்த நேரத்தில் சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளின் அறிகுறிகள் இருக்கும்.உதாரணமாக எலிக்காய்ச்சல், பாம்புக்கடி அதிகமான வாந்தி ,குருதிப் பெருக்கு இவ்வாறான பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கும்.அது தவீர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுவதை தொடர்ந்து உடம்பில் ஏற்படுகின்ற மாற்றங்களின்அறிகுறிகள் வெளிக்காட்டப் படும்.அவை சிலவேளைகளில் பாரதூரமானவை.

சிறுநீரக செயழ் இழப்பினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள்
1.குருதியில் நச்சுப் பதார்த்தங்கள் அதிகரித்தல்
2.பொட்டாசியம் ,சோடியம் போன்றவற்றில் கட்டுப்பாடு இல்லாமல் போதல்
3.உடலில் அளவுக்கதிகமாக நீர் தேங்குதல். என்பவை முக்கியமான மாற்றங்கள்.
நச்சுப் பதார்த்தங்கள் மூலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சோடியம் ,பொட்டாசியம் என்பவற்றின் கட்டுப் பாடுகள் இல்லாமல் போவதால் பல செயற்பாடுகள் பாதிக்கப்படும். குறிப்பாக பொட்டாசியம் அதிகரிப்பதால் இதயம் செயல் இழக்கலாம்.

மருத்துவம்: சடுதியான சிறுநீரகச் செயழ் இழப்பிற்கு மருத்துவ முறையில் முக்கியமாக 3 விடயங்கள்கருத்தில் கொள்ளப்படும்.

1.சிறுநீரக செயழ் இழப்பை ஏற்படுத்திய காரணியை நிவர்த்தி செய்தல்
2.சிறுநீரக பாதிப்பால் உடலில் ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்தல்
3.தொடர்ந்து சிறுநீரகம் மீண்டும் பழைய நிலைக்கு வரும் வரை வரக்கூடிய பாதிப்புக்களுக்கு முன் ஏற்பாடு எடுத்தல்.

அநேகமான சடுதியான சிறுநீரக செயழ் இழப்புக்கள் அதற்கான காரணியை நிவர்த்தி செய்யும் போது சரியாகி மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடும். ஆனால் அது பழைய நிலையை அடையும் வரை போதிய மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட வேண்டும்.உதாரணத்திற்கு பொட்டாசியம் குருதியில் அதிகரித்தால் அதை குறைத்து சரியான அளவிலே வைத்திருக்க மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.குருதியில் நச்சுப் பதார்த்தங்கள் அதிகரித்தால் அவற்றை டயாலிசிஸ் (Dialysis)எனப்படும் முறை மூலம் நீக்க வேண்டும். இவ்வாறு தற்காலிக கண்காணிப்புக்கள் சிறுநீரகம் மீண்டும் பழைய நிலையை அடையும் வரை வழங்கப் பட வேண்டும்.

நன்றி : தமிழ் மனம்

தினமலர், தினமணியின் பத்திரிகை தர்மம்: முதலாளித்துவத்தின் அடிவருடிகள்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆதாரங்கள், செய்திகள், வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன.

தினமலர், தினமணி போன்ற பார்பன பத்திரிக்கைகள் ஹிந்துத்துவா ஆதரவு செய்திகளை போட்டு வழக்கம்போல் இந்தியாவில் யாருக்கும் கொசுகடித்தாலும் ஐ.எஸ்.ஐ. சதி என்றும் செய்தி போட்டு அரிப்பை சொரிந்து கொள்கிறார்கள். தங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகள் அம்பலமான போது அதை மறைத்தும் திசை திருப்பியும் செய்தி போட்டார்கள்.தமிழகம் ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் பெண்கள் அமைப்பான துர்காவாகினியை சேர்ந்த பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டதை பற்றி ஒரு செய்தியும் போடாமல் இருட்டடிப்பு செய்தார்கள். தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இந்த விக்கிலீக்ஸ் பற்றிய எந்த செய்தியும் போடாமல் செய்தி “ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. "பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் இந்த பார்பன ஹிந்துத்துவா பத்திரிக்கைகளின் தரமும், தர்மமும் போலும்.

முதலாளித்துவ நாடுகள் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். இந்த பார்பன வந்தேறிகள் சுதந்திரத்துக்கு முன்னாள் இந்திய சுதந்திர வீரர்களை வெள்ளை பிரிட்டிஷ்காரர்களுக்கு காட்டி கொடுத்து உயர் பதவிகள் வகித்தார்கள் இப்ப முதலாளித்தவ விசுவாசிகளாகி மேற்கத்திய நாடுகளுக்கு குடை பிடிகிறார்கள். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது. இப்பொழுது ஒரே ஆறுதலும், ஆதரவும் இணையதளங்கள் தான் கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.

நன்றி: தீராத பக்கங்கள்

Dec 10, 2010

இந்திய ராணுவத்தின் டிரவுசர் கிழிந்தது: தேசபக்தியா? ஊழல் பக்தியா?.

மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு. இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.

மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்),பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நாக்பூரைச் சேர்ந்த பெரும் தொழிலதிபருமான அஜய் சஞ்சேதியின் மகன், பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும்,விதிமுறைகளை மீறி இந்தக் குடியிருப்புக்கு அனுமதி அளித்த, 2004-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதிப் வியாஸின் மனைவி நீனா வியாஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் துணைச் செயலர் பி.வி. தேஷ்முக் என ஒரு பெரிய அதிகார வர்க்கக் கும்பலும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.

ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடியைக் காட்டிலும், செத்துப்போன சிப்பாய்களின் உடலைக் காட்டி இராணுவ உயர் அதிகாரிகள் இதில் நடத்தியிருக்கும் கொள்ளைதான் மிகவும் கீழ்த்தரமானது. தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய அதி உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இக்குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆதர்ஷ் மோசடிகள் பற்றி அறிவதற்காக பூனாவைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு இரண்டுமுறை தகவல் மறுக்கப்பட்டது. காரணம், மராட்டிய அரசின் தகவல் கமிஷனர் ரமானந்த் திவாரியின் மகனுக்கும் ஆதர்சில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது.

தற்போது முதலமைச்சர் மாற்றம், சி.பி.ஐ விசாரணை என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொலாபாவில் உள்ள இராணுவ எஸ்டேட் அலுவலகத்தின் கோப்புகளில் முக்கியமான ஆவணங்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இராணுவத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு மார்ச் 2000-இல் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைக் காணவில்லை. முதன்முதலில் எந்தெந்த சிப்பாய்களுக்கு வீடு ஒதுக்குவதாகச் சொல்லி இந்தத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டதோ, அதனையும் காணவில்லை. மகாராட்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஆதர்ஷ் சொசைட்டி தொடர்பான கோப்புகளிலும் முக்கியமான காகிதங்களைக் காணவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது.

ஆதர்ஷ் ஊழலைத் தொடர்ந்து, இதைவிடப் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் ஊழலான லவாசா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. விவசாய நிலங்கள், பழங்குடி மக்களின் நிலங்கள் அடங்கிய சுமார் 12,316 ஏக்கர் மலைப்பிராந்தியத்தை மகாராட்டிர அரசு 2001-இல் தாரை வார்த்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. “சிறு கடை வியாபாரிகளையும், குடிசை வாசிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளும் அரசு, ஆதர்ஷ் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார், மேதா பட்கர். தனக்குச் சொந்தமான நிலத்தையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத இராணுவம், தேசத்தை எப்படிக் காப்பாற்றும் என்று எள்ளி நகையாடுகிறார். மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு அருகிலேயே இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விலை பேசப்பட்டு கட்டிடங்களாக மாறியிருப்பதையும் அம்பலமாக்கியிருக்கிறார்.

நாடு முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கும் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விலை பேசப்பட்டவை எத்தனை, எத்தனை ஆயிரம் கோடிகளை இராணுவ அதிகாரிகள் விழுங்கியுள்ளார்கள் என்ற விவரங்கள் ஒருக்காலும் வெளியே வரப்போவதில்லை. ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன் தலைமைத் தளபதிகள் கபூர், விஜ் ஆகியோர் “இந்த வீடுகள் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று எங்களுக்குத் தெரியாது” என்று பச்சையாகப் புளுகியிருக்கின்றனர். வீடுகளைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அறிவித்திருக்கின்றனர்.

நேர்மை, கட்டுப்பாடு, தியாகம், ஒழுக்கம் என்றெல்லாம் கதை சொல்லித்தான், சிவில் சமூகத்துக்கு மேம்பட்ட கேட்பாரற்ற அதிகாரமாக இராணுவம் பாதுகாக்கப்படுகிறது. பச்சைப் படுகொலைகள் பல அம்பலமாகி, காஷ்மீரே பற்றி எரியும் சூழ்நிலையிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யக்கூடாது என்றும், தாங்கள் செய்யும் சட்டவிரோதப் படுகொலைகளுக்காக எல்லோரையும்போல நீதிமன்றத்தில் நின்று இராணுவம் பதில் சொல்ல முடியாது என்றும் திமிர்த்தனமாகப் பேசி வருகிறது இராணுவத்தின் அதிகார வர்க்கம்.

ஆனால், கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதப்பசுவாகச் சித்தரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இராணுவத்தின் யோக்கியதை ஆதர்ஷ் ஊழலில் சந்தி சிரிக்கிறது. போர் முனையில் உயிர் விட்ட தனது சிப்பாய்களுடைய பிணத்தைக் காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியிருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளைக் காட்டிலும் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

பொதுச்சொத்தை கொள்ளையிடுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் இராணுவத்தின் உடுப்பையும் களைந்து நிர்வாணமாக்கி இருகின்றன. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி. ஆதர்ஷ் ஊழலில் இந்த சதவீதக் கணக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. 103-க்கு 100 ஊழல். அதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர்முனையில் இருந்தவர்கள்.ஆதர்ஷ் என்ற இந்திச் சொல்லுக்கு முன்மாதிரி என்று பொருள். தேசத்துக்கே இராணுவம்தான் முன்மாதிரி எனும்போது, இராணுவம் சம்பந்தப்பட்ட ஊழலும் முன்மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

நன்றி; வினவு

குஜராத் கொலைகளுக்கு அனுமதி அளித்தது நரந்திர மோடி" : DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றக் கலவரங்களின்போது முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில் மோடிக்குத் தொடர்பில்லை" என்று சிறப்புப் புலனாய்வுக்குழு (Special Investigation Team - SIT) வெளியிட்டுள்ள அண்டப்புளுகு வெள்ளை அறிக்கைக்கு எதிராக, குஜராத் முதலமைச்சர் மோடியின்கீழ் காவல் துறையில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் குரலெழுப்பியுள்ளார்.

குஜராத்தில் இனப்படுகொலைகளை நடத்திய சங்பரிவார குண்டர்களே "மோடிதான் கொல்லச் சொன்னார்" என்று வெளிப்படையாகவும் பெருமையாகவும் ஒப்புக் கொண்ட பின்னரும் அம்புகளான அந்த குண்டர்கள் மீதும் எய்தவரான குஜராத் முதல்வர் மோடியின் மீதும் நடவடிக்கை எடுக்க வக்கற்றுப்போய் "மோடி ஓர் அப்பாவி" என்று அறிக்கை வெளியிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினரை என்னவென்பது?

சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் அறிக்கையை எதிர்த்து ஒருகுரல் எழுந்து உரத்து ஒலிக்கிறது.கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குஜராத் காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் (DGP-புலனாய்வுப் பிரிவு) ஜெனரல் ஸ்ரீகுமார் கடந்த திங்களன்று (6.12.2010) திருவனந்தபுரத்தில் நடந்தேறிய ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மோடியை அப்பாவியாக அடையாளப் படுத்துவதற்கு, குஜராத்தில் இயங்கும் ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, SITஇன் தலைவர் ஆர் கே ராகவனை வளைத்துப் போட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சித் தலைவருக்கு எதிராகவும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் பட்டியலிட்டு எழுதிய முப்பது பக்கக் கோரிக்கை மனுவையும் இக்கூட்டத்தில் அவர் வெளியிட்டார். "முஸ்லிம்கள் கொத்து-கொத்துகளாகக் கொல்லப்பட்டு, அழித்தொழிப்பு நிறைவேறும்வரை கைகட்டி வேடிக்கை பார்க்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டவர் மோடிதான்" என்ற உண்மையை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் முன்னாள் DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.

அரசியல் சாசனத்துக்கு எதிரான மோடி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் கட்டளைகளின்படி செயல்பட மறுப்புத் தெரிவித்ததால் ஸ்ரீகுமாருக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மறுக்கப் பட்டது. இவர் டிஜிபி ஆகப் பதவி உயர்வு பெற்றதே தனிக்கதை.கோத்ரா கலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்த நாநாவதி கமிஷன்முன் ஆஜராகி, குஜராத் அரசுக்கு எதிராகப் பல தகவல்களை ஆகஸ்ட் 2004இல் ஸ்ரீகுமார் அளித்தார். அதனால், 2005இல் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை குஜராத் அரசு கொடுக்கவில்லை.

அதை எதிர்த்து மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்றாண்டு விசாரணைக்குப் பின்னர், கடந்த 2008 மே மாதம் 2ஆம் தேதியன்று - அதாவது ஸ்ரீகுமார் ஓய்வு பெற்ற பின்னர் - டிஜிபி ஆகப் பதவி உயர்வு அளிக்கப் பட்டார்.

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் மோடிக்கு ஏற்ற தலைமைச் செயலராக இருந்த ஜி.எஸ்.சுப்பாராவ் என்பவர், "மாநிலத்தில் காவல்துறை வலுவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில், அடிக்கடி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும் அதற்கு, "அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வது இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி பிரிவின்படி குற்றமாகும்" என்று தான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது ஸ்ரீகுமார் கூறினார்.

குஜராத் கலவரம் குறித்துப் புலனாய்வுத்துறையினர் (IB) விசாரித்தால் இன்ன இன்ன மாதிரிதான் சொல்ல வேண்டும் என்று ஸ்ரீகுமாரின் உயரதிகாரி பீ.ஸீ. பாண்டே வற்புறுத்தியுள்ளார். அதை ஸ்ரீகுமார் பதிவு செய்து வைத்துள்ளார். தன்னை அடிபணிய வைப்பதற்காகவே தனக்கு வரவேண்டிய பதவி உயர்வுக்கு, தன் ஜூனியரான அஹமதாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர் கௌசிக்கை குஜராத் அரசு தேர்வு செய்து நியமித்தது என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

குஜராத் காவல்துறையில் 1972இல் சேர்ந்த ஸ்ரீகுமார், 2002ஆம் ஆண்டின் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் துவங்கிய, 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலை நடைபெற்றுத் தொடர்ந்து கொண்டிந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2002வரை குஜராத் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கூடுதல் இயக்குனராகப் பணியாற்றினார்.

குஜராத்தில் புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றியபோது குறிப்பெடுத்து வைத்திருந்த பல முக்கிய அம்சங்கள் அடங்கிய, 620 பக்கங்களுக்கும் அதிகமான வாக்குமூலப் பிரமாணங்களை, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் சமர்ப்பித்ததாகவும் அவற்றை (SIT) கண்டு கொள்ளாமல் முற்றாகப் புறக்கணித்து, வேண்டுமென்றே வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார் ஸ்ரீகுமார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, "எதிர்கட்சி தலைவர்கள் சங்கர் சிங் வாகேலா மற்றும் ஓராண்டுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட கேபினட் மந்திரி ஹரேன் பாண்டியா போன்றவர்களின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்யும்படி மோடி எனக்குக் கட்டளையிட்டார்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.

"இங்கு இதை நான் மீண்டும் மேலெழுப்புவதற்குக் காரணம் யாதெனில் மோடியைப் புனிதப் படுத்த முயலும் SITஇன் இந்த அறிக்கை, இந்திய அரசியலமைப்பின் இறையாண்மைக்கும் தனித்துவத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த அறிக்கை, நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆட்டிப் பார்ப்பதாக உள்ளது என்பதாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளை உருவாக்கும் என்பதாலும்தான்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.

மேலும், "குஜராத் கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், அவற்றைப்போல் மேலும் பல கொடுமையான நிகழ்வுகளுக்கு உந்துதலாக அமைந்து விடும்" என்றும் அவர் எச்சரித்தார்.


மதக் கலவரங்களின்போது நடந்த குற்றங்களை மறுவிசாரணை செய்ய மார்ச் 2008இல் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மூலம் இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அமைக்கப்பட்டது. குஜராத் கலவரத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் ஜாஃப்ரியின் மனைவி ஸகிய்யா நஸீம் ஜாஃப்ரியின் புகார் மனுவை ஆய்வு செய்திட, கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம், சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்கு ஆணையிட்டது.

ஸ்ரீகுமார் தமது வாக்குமூலப் பிரமாணத்தில், அரசாங்க அதிகாரிகள் அந்தக் கலவரத்தில் பங்கு வகித்து, பொதுமக்களுள் 100-130 பேரை நரோதபடியா எனும் இடத்திலுள்ள காவல் நிலையத் தலைமையகத்தின் எதிரில் வைத்துக் கொன்றொழித்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி மேலும் விளக்கம் கேட்டோ விசாரிக்கவோ அவர் அழைக்கப்படவில்லை. மோடி உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாதங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அப்படியே ஏற்றுக் கொண்டு, உண்மைகளை மூடிமறைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

தான் வழங்கிய ஆதாரங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை, ஜாஃப்ரி விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் 87 பாராக்களில் 36 பாராக்கள் தனது வாக்குப்பிரமாணத்தின் மூலப் பகுதிகள்தாம் என்றும் ஸ்ரீகுமார் கூறினார் "திருமதி ஜாஃப்ரியின் புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனது ஆதாரங்களைப் பொய்யாக்கும் சதித் திட்டத்துடன் இந்த நீதிமன்ற விசாரணையின் துவக்கம் முதலே முயன்று வருகின்றனர்" என்றும் "உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நியமிக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT), மோடியின் குஜராத் காவல் துறையின்கீழ் இயங்கும் ஒரு துணைக் குழுவாகவே செயல் பட்டு வந்தது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

குஜராத் கலவரத்துக்கு முன்னர், 1990 மற்றும் 1998 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பதற்காக மத்திய அரசாங்க விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டவர் ஸ்ரீகுமார். "இந்துத்துவ இயக்கச் செயல்வீரர்கள் சட்ட விரோதமான செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை; நீங்கள் சந்தேகத்திற்குரிய முஸ்லிம் போராளிகள்மீது கவனம் செலுத்தினால் போதும்" என்று மோடி தன்னிடம் கூறியதாகவும் ஸ்ரீகுமார் குறிப்பிட்டுள்ளார். தான் பிறப்பால் ஒரு ஹிந்து என்றும் சனாதன தர்மமான ஹிந்துத்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதன் போதனைகள்தாம் தனக்கு இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராகப் போராட உந்துதலாக உள்ளது என்றும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.

சரித்திரத்தில் முதுநிலை பட்டம் படித்துள்ள ஸ்ரீகுமார், இந்தியக் காவல் சேவை(Indian Police Service - IPS)யில் இணைவதற்கு முன்னர் காந்தியச் சிந்தனைகளையும் படித்துள்ளார். "உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்வரை எந்த ஒரு விசாரணைக்கும் முற்றுப் புள்ளியில்லை" என்று தான் நம்புவதாகவும் "உண்மை குற்றவாளிகள் ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

"மிகவும் கீழ்த்தரமான இரண்டு நிகழ்வுகள், நடந்தேறிய பாவகாரச் செயல்கள் ஆகியன தன்மானமுள்ள எந்தவோர் உண்மையான ஹிந்துவுக்கும் மிகப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தும். ஒன்று தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகிய பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு. இரண்டாவது சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான இனப்படுகொலை. இவ்விரண்டு சாத்தானியச் செயல்களும் பீஜேபி எனும் கட்சியின் தீவிரவாத குண்டர்களால் அதன் தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது" என்று அவர் கூறினார்.

உண்மையைப் புதைக்க முயலும் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிட சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து வருவதாக ஸ்ரீகுமார் கூறினார். "ஏனெனில், இக்குற்றவாளிகள் சட்டமுறைப்படி தண்டிக்கப் படவில்லையென்றால் நடுவுநிலை முஸ்லிம்களின் நிலமை விரக்தியாலும் கவலையாலும் இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் அது, தீவிரவாத சிந்தனைக்கும் செயல்களுக்கும் வழிவகுத்திடும்" எனக்கூறி முடித்தார் ஸ்ரீகுமார்

விஷமாகி வரும் இந்திய காய்கறிகள் !

புதுடில்லி : இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால், காய்கறிகள் மற்றும் பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், தடை செய்யப்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, டில்லியில் உள்ள "நுகர்வோர் குரல்' என்ற தன்னார்வ அமைப்பு டில்லி, பெங்களூரு மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த காய்கறி கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை ஆய்வு செய்தது.இதில், ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், இந்தியாவில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விஷத்தன்மை கொண்டதாக மாறிவருவது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள விஷத்தன்மையை விட, 750 மடங்கு அதிகமாக இந்திய காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.இந்த நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

இதுகுறித்து, ஆய்வுக் குழுவை சேர்ந்த சிஷர் கோஷ் கூறியதாவது:சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களை இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், காய்கறிகள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தக்காளி, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, சுரைக்காய், முட்டை கோஸ், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளும், சில வகை பழங்களும் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது.இதனால், அதை உண்பவர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இத்தகைய தடை செய்யப்பட்ட உரங்களை பயன்படுத்தை தடுக்க, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சிசர் கோஷ் கூறினார்.

உடல் உறுப்புகளை திருடுவதற்காக ஃபலஸ்தீனர்களை கடத்தும் இஸ்ரேல் ராணுவம்.

காஸ்ஸா : குற்றவாளிகள் என்று குற்றச்சாட்டைக் கூறி இஸ்ரேல் ராணுவம் கைதுச்செய்யப்படும் ஃபலஸ்தீன் இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளை திருடி விட்டு உடலை வழியில் எறிந்துவிட்டுச் செல்லுகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியை ஸ்வீடன் நாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழான ஆஃப்டன்ப்ளேடட்(Aftonbladet) என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
உடல் உறுப்புகளை திருடவும் அவற்றை சர்வதேச சந்தையில் விற்பதற்கும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. மேற்குகரையிலிருந்தும், காஸ்ஸா முனையிலிருந்தும் கைதுச்செய்யப்படும் ஏராளமான ஃபலஸ்தீனர்களிடமிருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டது ஆய்வில் உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் டொனால்ட் போஸ்ட்ரம் கூறுகிறார்.
நப்லஸிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தினரால் பிடித்துச்செல்லப்பட்ட ஃஹாலித் என்ற இளைஞனின் இறந்துப்போன உடல்தான் அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது. ஜனாஸாவை குளிப்பாட்டும்போது உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்களை பரிசோதித்தபொழுதுதான் உடல் உறுப்புகள் திருடப்பட்டது தெரியவந்தது. பல குடும்பங்களும் இத்தகைய சூழல் தங்களுக்கும் நேர்ந்ததை தன்னிடம் விவரித்ததாக ஆஃப்டன்ப்ளேட்டின் செய்தியாளர் கூறுகின்றார். பிலால் என்ற இளைஞரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச்சென்று நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச்செய்தது. 5 நாள்கள் கழித்துதான் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் நடந்த உடல் பரிசோதனையில் அவருடைய வயிறு கிழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய உறுப்புகளெல்லாம் திருடப்பட்டிருந்தது.
1992 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேல் ராணுவத்திற்கெதிராக உடல் உறுப்புகளை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதுபற்றிய தெளிவான விசாரணை அறிக்கை வெளிவரவில்லை. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்திற்கு தொடர்பிருப்பதாகவும் அப்பத்திரிகை குற்றஞ்சாட்டுகிறது.
இப்பத்திரிகைச் செய்தியைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தால் கடத்திச்செல்லப்பட்டு கொலைச்செய்யப்படும் ஃபலஸ்தீனர்களின் உடலை பரிசோதனைச்செய்யப்போவதாக ஃபலஸ்தீனர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.
News: Thejas

காஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா?: தினமலர்???

பார்ப்பன ஏடுகள் பக்தியைப் பரப்புவதில் - மூட நம்பிக்கைகளைக் குழைத்துத் தருவதில் முன்னணியில் எப்பொழுதும் இருப்பவை - தொழில் போட்டியில் பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக இதழ்களை நடத்திக்கொண்டு திரிகின்றனர் - நாய்விற்ற காசு குரைக்கப்போவதில்லையே!

போலிச் சாமியார்களை நம்பாதீர்கள்! என்ற ஒரு தலைப்பிலே தினமலர் வார மலர் (தினமலம்28.11.2010) ஒரு கட்டுக் கதையை வெளியிட்டுள்ளது.திருக்கோயிலூரைத் தலை நகரமாகக் கொண்டு மெய்ப் பொருளார் என்பவர் ஆட்சி செய்து வந்தாராம். திருநீறுப்பூசிய சைவ மெய்யன்பர்கள் மீது ஏகப்பட்ட மரியாதையாம் அவருக்கு. முத்தநாதன் என்பவர் ஒரு நாத்திகனாம் - மெய்ப்பொருளாரின் பலகீனத்தைப் பயன் படுத்தி உடல் முழுவதும் திருநீறு அணிந்து அந்த அரசனைப் பார்க்க வந்தாராம்.

திருநீறு அணிந்த சாமியார்கள் வந்தால் அவர்களைத் தடுக்கக் கூடாது என்பது அரசக் கட்டளையாம்; அதனால் அந்த முத்தநாதன் அரசரின் அந்தப் புரத்திற்குள்ளேயே நுழைந்து விட்டானாம். ராணியுடன் அந்தப்புரத்தில் இருந்த அரசன் திடுக்கிட்டான்; ஆனால், திருநீறு கோலத்தில் வந்துவிட்டாரே, அரசன் என்ன செய்வான்?

திருநீறு அணிந்த ஆசாமியின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டபோது மறைத்து வைத்திருந்த வாளால் தாக் கினாராம்; அவனைக் கொல்ல காவலாளி முயன்றபோது திரு நீறுப் பூசியவரைக் கொல்லக் கூடாது என்று அரசன் உத்தரவிட்டானாம். தன் பக்தனின் உண்மைப் பக்தியைக் கண்டு வழக்கம் போல சிவபெருமான் அங்குத் தோன்றி உயிர்நீத்த மெய்ப் பொருளாராகிய அரசனுக்கு உயிர் கொடுத்தானாம். அதன் பின் அரசன் பல காலம் சிவத்தொண்டு செய்ய கைலாயத்துக்கு அனுப்பி வைத்தாராம் சிவன்.

இந்த சிவன் தன் மதக் கோட்டைத் தாண்டி மற்ற மதப் பக்தர்களைச் சோதிக்கமாட்டார். அடுத்த மதக்காரன்தான் இந்தக் கடவுளைச் சீண்ட மாட்டானே! தன் பக்தனை சோதித்துத்தான் ஒரு கடவுளால் உணர முடியும் என்றால், அவன் எப்படி சர்வ சக்திக் கடவுளாவான்?
நாத்திகனைக் கொலையாளி என்று காட்டவும், வேடக்காரன் என்று காட்டவும் புனையப்பட்ட கதை இது.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த அத்வானியும், கரசேவர்களும் நாத்திகர்களா? பக்தர்கள்தானே! இன்னொரு மதக்கடவுள் சம்பந்தப்பட்ட நினைவிடத்தையல்லவா அடித்து நொறுக்கினார்கள்? எந்த நாத்திகன் எந்தக் கோயிலை இடித்தான்? நிரூபிக்க முடியுமா?
கடைசியாக தினமலர் என்ன கூறி முடிக்கிறது? போலிச் சாமியார்களை அவர்களின் உருவத்தைக் கண்டு கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகிறது.சாமியார்களில் என்ன ஒரிஜினல் சாமியார்? போலி சாமியார்? யானை லத்தியில் முதல் லத்தி என்ன, இரண்டாம் லத்தி என்ன? அதுசரி, காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சாமியார்? போலியா? ஒரிஜினலா? தினமலர், தின மணி, கல்கி, சோ கூட்டம் கொஞ்சம் பதில் சொன்னால் நல்லது! thanks - மயிலாடன்

Dec 9, 2010

நித்யானந்தா அமெரிக்க கிளப்புகளில் பெண்களுடன் நிர்வாண நடனம்.

நான் சாப்ட்வேர் என்ஜீனியர் நான் நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் போது என்னை மதுவாங்கி வரும்படி சொன்னார். நான் மைசூர் ரோட்டில் உள்ள மது கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வந்து நித்யானந்தாவிடம் கொடுத்தேன். சிறிது நேரம் தியானம் செய்த அவர் அந்த மது பாட்டிலை என்னிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். எனக்கு பயமாக இருந்தது. எனக்கு மது அருந்தி பழக்கம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் சாமி என்று கெஞ்சினேன்.

அதற்கு அவர், மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் தியாக குணம் அவசியம். அந்த குணத்தை நீ பெற வேண்டும் என்பதற்காகத்தான் குடிக்கச் சொன்னேன். இதில் தவறு எதுவும் இல்லை என்றார்.

இதனால் நான் மது குடித்தேன். சிறிது நேரத்தில் நான் போதையில் மயங்கியதும் என்னை நித்யானந்தா பலவந்தமாக கற்பழித்தார். இதனால் நான் கதறி அழுதேன். ஏன் என்னை நாசப்படுத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், இதுதான் மோட்ச மார்க்கம். கவலைப்படாதே என்று கூறினார்.

சிலநாள் கழித்து அவர் என்னையும் மேலும் சில இளம்பெண்களையும் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை கவர்ச்சியாக உடை உடுத்தும் படி கூறினார். அவரும் காவி உடைக்கு விடை கொடுத்து விட்டு ஜீன்ஸ்-டி-சர்ட் அணிந்து கொண்டார்.

என்னை அங்குள்ள “நிர்வாண கிளப்” ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அவர்களைப் போல் எங்களையும் நிர்வாணமாக நின்று ஆட வைத்தார். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் அவர் வற்புறுத்தலால் எதுவும் செய்ய முடியவில்லை. லாஸ்வேகாசில் வைத்தும் அவர் என்னை கொடூரமான முறையில் கற்பழித்தார்.

இதுபற்றி போலீசில் புகார் செய்தால் என் மானம் போய் விடுமே என்று கருதி அவர் மீது புகார் எதுவும் செய்யவில்லை. 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவரது பிடியில் சிக்கி தவித்தேன். அவரது சித்ரவதை தொடர்ந்ததால் ஆசிரமத்தை விட்டு வெளியேறினேன் ’என்று கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசேஞ்சுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும்: ரஷ்யா.

மாஸ்கோ : விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியான் அசேஞ்சுக்கு ‌அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என ரஷ்யா பரிந்துரைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட பல்வேறு ரகசியங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது. அமெரிக்காவின் குட்டு உடைபட்டதால் ஏக குஷியில் இருக்கும் ரஷ்யாவில் ஜூலியான் அசேஞ்சுக்கு ஆதரவு கோஷங்கள் தான். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக அரங்கில் முன்வைக்க வேண்டும் என அதிபர் டிமிட்ரி மெத்வேதேவ் அலுவலகத்தில் இருந்தே சிபாரிசுகள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோபல் பரிசுக்கு போட்டியாக கன்பூசியஸ் அமைதி பரிசு; சீனா அறிவிப்பு.

பீஜிங் : மேற்கத்திய நாடுகள் சீனாவை தனிமைப்படுத்த முயல்வதாக, சீன ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. சீன அரசுக்கு எதிராக போராடி வரும், லியூ ஷியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறையில் இருக்கும் லியூவை விடுதலை செய்யவும் அந்நாடு மறுத்துவிட்டது. நோபல் பரிசு வழங்கும் விழாவை, சீனா உட்பட அதன் 18 நட்பு நாடுகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதில் தற்போது இலங்கையும் அடக்கம்.

நோபல் பரிசுக்கு போட்டியாக, சீன தத்துவஞானி கன்பூசியஸ் பெயரில்," கன்பூசியஸ் அமைதி பரிசு' வழங்கப்போவதாகவும் சீனா அறிவித்தது. இந்த பரிசுக்கு தைவான் நாட்டு முன்னாள் துணை ஜனாதிபதி லியான் சான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இதனிடையே, மேற்கத்திய நாடுகள் சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, என்ற சீனாவின் அரசு ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.லியூ ஷியாபோ, சீன அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவருக்கு சில மேற்கத்திய நாடுகளில் உள்ள அமைப்புகள் உதவி செய்கின்றன, என்று அவை கூறியுள்ளன.

பயங்கரவாத இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள்.

கொழும்பு, டிச.9: இலங்கை ராணுவத்தினரின் போர் குற்றங்கள் தொடர்பான மேலும் சில விடியோ ஆதாரங்களை பிரிட்டனின் சேனல் 4 வெளியிட்டுள்ளது. இதில் ஆடைகள் ஏதும் இன்றி கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் ஏராளமான தமிழர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் இலங்கை மீது ஐ.நா. போர் குற்றம் தொடர்பான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில், சரணடைந்த விடுதலைப்புலிகள், தமிழர்கள் பலர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பான விடியோ ஆதாரங்கள் சிலவும் வெளியிடப்பட்டன. அதில், விடுதலைப் புலிகளின் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய இசைப்பிரியா என்ற இளம்பெண் கொடூரமாக மானபங்கப்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் வெளியானது.

இப்போது கிடைத்துள்ள விடியோவில் ஏராளமான தமிழர்கள் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் உடலில் ஆடைகள் ஏதும் இல்லை. அவர்கள் அனைவரும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதும் தெரிகிறது.

இது குறித்து நியூயார்க்கில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவத்தின் 53-வது படைப்பிரிவு இத்தகையை கொடூரங்களை அரங்கேற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இலங்கை அரசு மறுத்துள்ளது. இவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்ட விடியோக்கள் என்று கூறியுள்ளது.

தாம்பத்தியம் தழைக்க தங்கமான சில யோசனைகள் !

தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும்,காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது. உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.

உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும். தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். அன்றாட வாழ்வில் அலையலையாய் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அது நீடிக்கக்கூடாது. பரஸ்பரம் புரிதலோடு பேசித் தீர்க்க வேண்டும்.

மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி தேகவேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.

வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல. கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான். கணவனுக்கும் மனைவிக்கும் தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.

ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும்.

அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.

தமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்.

சமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.

சமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட்சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.

சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை.

VHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை
இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர். கடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் ‘ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை”. எனக் கருத்துத் தெரிவித்ததார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்? என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

திட்டப் பணி

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.

பொய் விஞ்ஞானிகள்

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.

அறிவியல் உண்மை

பூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும். .

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.

விக்கிலீக்ஸ்சின் ஹேக்கிங் போர்: விசா, மாஸ்டர் கார்ட் இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டன.

ஸ்டாக்ஹோம்,டிச.9:விக்கிலீக்ஸிடம் எதிரிகளாக நடந்துக் கொள்வோர் மீது அந்த இணையதளத்தின் ஆதரவாளர்கள் ஹேக்கிங் போரை துவக்கியுள்ளனர்.விக்கிலீக்ஸிற்கு எதிராக செயல்படும் நிறுவனங்கள், அரசுகள் ஆகியவற்றின் இணையதளங்களை குறிவைத்து நிரந்தரமாக தாக்குதல் நடத்திக்கொண்டு புதுவிதமான போரைத் துவக்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக ஸ்வீடன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவர்கள் ஹேக்கிங் மூலம் முடக்கிவிட்டனர்.இத்தாக்குதலைத் தொடர்ந்து ரிகெரின்ஜென் regeringen.se என்ற சுவீடன் அரசின் இணையதளம் பல மணிநேரம் செயல்படாமல் முடங்கியது.பாலியல் குற்றஞ்சாட்டி சுவீடன் அரசு விக்கிலீக்ஸின் ஸ்தாபகரான ஜூலியன் அஸென்ஜேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பிரிட்டன் போலீசாரால் கைதுச் செய்யப்பட்ட ஜூலியன் அஸென்ஜே போலீஸ் காவலில் உள்ளார்.

க்ரெடிட் கார்ட் நிறுவனங்களான விசா, மாஸ்டர் ஆகியவற்றின் இணையதளங்களும் தாக்குதலுக்குள்ளாயின. அமெரிக்க அரசு அளித்த நிர்பந்தத்தினால் விசாவும், மாஸ்டரும் விக்கிலீக்ஸின் நிதி வருகைக்கு தடைவிதித்திருந்தது. விக்கிலீக்ஸிற்கு வந்த நிதியுதவியை தடுத்த பே பாலின் மீதும் ஹேக்கர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

விக்கிலீக்ஸின் எதிரிகளின் மீதான தங்களின் பிரச்சாரம் தொடரும் என கோல்ட்ப்ளட் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் ஹேக்கிங் குழு அறிவித்துள்ளது. இணையதளங்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏராளமான வாலண்டியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.போட்நெட் என்ற குறிப்பிட சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்து ஏராளமான கம்ப்யூட்டர்கள் ஒருங்கிணைந்து இணையதளங்களுக்கெதிரான டிடோஸ் தாக்குதலை நடத்திவருகின்றன.

மனிதர்களின் ரத்தத்தையும், இயற்க்கை வளங்களையும் உறிஞ்சும்: டாடா!!!

1) 2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. இதனால் கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான நிலபரப்பில் அமைந்துள்ள கடற்பூங்கா மாசுபட்டு போனது. டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்களின் விவசாய நிலங்கள் பாழ்படுத்தபட்டன.

2 ) ஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியில் அமைந்துள்ள டாடாவின் இரும்பு எஃகு ஆலை திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, . கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. மேலும் அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.

3) ஜோடா நகரம் இதில் டாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற கம்பனிகள் இரும்புக் கனிமச் சுரங்கங்களை அமைத்துள்ளன. 1950-களில் இந்நகரம் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி இந் நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய படுபாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் பணி, இதனால் மிக மோசமாகத் தூசு கிளப்புவதால் உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது.

4) மேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. நிலக்கரியை கழுவ அங்குள்ள ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இப்படி கழுவிய பின்னால் வெளியேறும் கழிவு தண்ணீர் மீண்டும் அந்த ஆற்றில் கொட்டப்பட்டு அந்த ஆறு முற்றிலும் நாசம் செய்யப்பட்டது.

5) 1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.

6) 1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் பலமுறை போராடியிருக்கிறார்கள். குறைவான ஊதியம், வேலை நிலைமைகள், ஆகியவை இவர்கள் போராடுவதற்கான முக்கியமான பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபட்டு பல படுகொலைகளை நடத்தி டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.

7) 1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மாண்டனர். டாடாவின் சுதேசி துணி ஆலையை மூடி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வியாபாரம் செய்ய நினைத்தது டாடா நிறுவனம் இந்த பிரச்சனையில் 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

8) குறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.

9) 1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது.

நன்றி: வினவு

சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.

சென்னை : சினிமாக்காரர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்த‌ை ரத்து செய்து சென்னை ஐகோர்‌ட் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த செய்தி தினமலர் நாளிதழில் வந்தது. சீமான் கைது செய்ததை இந்த தினமலம் (தினமலர்) பத்திரிக்கை வரவேற்கிறதா? இல்லை விடுதலை செய்த நீதிபதிகளை கண்டிக்கிறதா?

அதென்னா சினிமாகாரர் சீமான்? சினிமாவில் இருந்து வந்த முதல்வர் இருக்கிறார், எதிர்கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். தண்ணி அடித்துவிட்டு பேசும் விஜயகாந்த் இருக்கிறார். இவர்களையெல்லாம் விட சீமான் என்ன குற்றம் செய்தார்? தமிழர்கள் ஒன்றுபட்டால் பார்பன வந்தேறி கூட்டத்திற்கு பிடிக்காது தானே. இந்த பார்பன கூட்டம் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் தானே. இவர்களுக்கும் தமிழனுக்கும் என்ன சம்மந்தம்.

இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்ககோரி வைகோ வழக்கு.

அமெரிக்கா விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தாலும் அந்நாட்டில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு செயல்பட அனு மதிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பாயம் விடு தலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்வது தவறு என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- கடந்த மே 14-ந்தேதி விடு தலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறி விப்பாணை ஒன்றை வெளியிட்டது. இதுபற்றி விசாரித்த தீர்ப்பாயம் புலிகள் மீதான தடை நீட்டிப்பை உறுதி செய்தது. மேலும் அதை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து கடந்த நவம்பர் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பானது இயற்கை நீதிக்கு முரணானது.

மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டின் பகுதியையும் சேர்த்து தனி நாடு வேண்டி போராடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி உள்ளது. அமெரிக்கா விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தாலும் அந்நாட்டில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு செயல்பட அனு மதிக்கப்பட்டுள்ளது.

போரில் சிதறடிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் ஒன்று கூடி மீண்டும் போராடுவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் கூறி இருப்பது தவறு. ஈழ போராட்டம் தொடர்பாக செய்திகள் வெளியாகும் இணைய தளங்கள் யாவும் புலிகள் இயக்கத்திற்கு சொந்தமானதல்ல. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பாயம் விடு தலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்வது அதனை சட்ட விரோத அமைப்பு என அறிவித்தது தவறு. எனவே தீர்ப்பாயத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் வைகோ குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

மானம்கெட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ்: ஜட்டி!! சோதனை!! போங்கடா போங்க!!

புதுதில்லி, டிச.9: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரிடம் சோதனை நடத்தப்பட்டது ஏற்க முடியாதது என்றும் இதை அமெரிக்க அரசிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த கிருஷ்ணா, இந்திய அரசால் இதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் மீண்டும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.முன்னால் பாதுக்காப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை ஜட்டியோடு சோதனை செய்தது மறந்துட்டுதா கண்ணா?? இந்தியாவின் (மானம் கெட்ட பாரதிய ஜனதா கட்சியின்) முன்னால் பாதுக்காப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் "எ" நாங்கள் ஜட்டியோடு விட்டோம் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்.)

மீரா சங்கர் கடந்த டிசம்பர் 4-ம் தேதியன்று மிஸ்ஸிஸிப்பியில் விமான நிலைய பாதுகாப்பு வரிசையில் இருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் உடல் முழுவதும் சோதனையிடப்பட்டார். தான் தூதர் எனக் கூறியும் அவரிடம் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பால்டிமோர் செல்வதற்காக மீரா சங்கர் ஜாக்ஸன்-ஈவர்ஸ் சர்வதேச விமானநிலையம் வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. விமானநிலைய அதிகாரிகளிடம் தூதரக ஆவணங்களை மீரா சங்கர் காட்டியுள்ளார். எனினும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீரா சங்கரை கைகளால் உடல் முழுவதும் சோதனையிட்டதாக நேரி்ல் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வெற்றியடைய சுலபமான 10 வழிகள் !

நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் :

1. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.

2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல !

3. உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் !

4. முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் ! இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.

5. காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.

6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.

7. எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.

8.மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் : அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.

9. தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.

10. செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.

Dec 8, 2010

ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை குடி: இல்லையேல் எட்டு வயதுக்குள் திருமணம் செய்துவை.

“மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா பிதா பிபதி கோனிதம்...”என்ன சொல்கிறது இந்த மநு தர்ம மந்திரம் புரியலையா? நீ ஏன்டா உன் பெண்ணுக்கு எட்டு வயது வரை கல்யாணம் செய்யாமல் இருந்தாய். கன்னிகா தர்மத்தை கால்களில் போட்டு மிதித்து விட்டாயே, இது பாவம் என்று உனக்குத் தெரியாதா? இந்த பாவத்துக்கு தண்டனை என்ன என்று உனக்கு தெரியாதா? என மநு ஸ்மிருதி அந்த அப்பாவி அப்பாக்களை பார்த்து அதட்டுகிறது.

இக்கால அப்பாக்களுக்கு அந்த தண்டனை என்ன என்று தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு தர்மம் வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள். அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது... தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்கா விட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு தர்மம் சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.

அடப்பாவிகளா? வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ, பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ண வேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.
அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு தர்மம் எத்தனை கடுமை?... கொடுமை?... எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி... இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறது மநு தர்மம். அப்படியா? என்ன பரிகாரம்?.

இந்த கொடுமையான தண்டனை அதிலிருந்து தப்பிக்க பிராமணர்களுக்கு வருமானம் தருகின்ற ஒரு பரிகாரத்தையும் மனுதர்ம நூல் சொல்லி கொடுகிறது.அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின் (மாதவிடாய்) போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.

அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ... அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். இப்போது புரிகிறதா... எங்கு போய் எங்கு வருகிறது மநு தர்மம் என்று? அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா? கொடுமையான தண்டனை அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’ தருகின்ற பரிகாரம். சரி, கோதானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டது.அப்படி ஆகிவிட்டால் அடுத்த ஒருவருஷம் வரை அந்த மணமகனும், மணமகளும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்? அதாவது அக்னி காரியம் தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம். அந்த ஒரு வருடம் வரை அவள் கணவன் வீட்டில் இருந்தாலும், கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும், ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் (உடலுறவு) கொள்ளக்கூடாது.

ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம் (சாந்தி முகுர்த்தம்). இதற்கிடையில் ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும், அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்லை) கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன் இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்(சிரிப்பான விஷயம்).

இப்பழக்கம் ஆதிகாலத்தியது க்ருஹ சூத்திரம்(மநு தர்மம்) சொல்வது. இதன்படி, வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை. என்ன ஆனது? இந்த சட்டம் அந்த ஒரு வருஷ காலம் என்பது 6 மாசங்களானது. அப்படி இருந்தும் என்னடா இவ்வளவு நாள்கள் ஆகிறதே என்று கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது. அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள். 15 நாள்கள் ஆக்கினார்கள். அதுவும் தேய்ந்து 7 நாள்களானது. பின் கல்யாணம் ஆகி 3 நாள்கள் கழித்து என்று ஆகினார்கள். இப்போது அதுவும் போயி காலையில் கல்யாணம், ராத்திரி சாந்தி கல்யாணம் என்று ஆக்கினார்கள்.நமது சௌகரியத்துக் கேற்ப சாஸ்திரம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம் என்பதற்காக சொல்ல வந்தேன்.

சரி... மநு தர்மம் சொன்னபடி பால்ய கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் யாரையாவது காண்பிக்க முடியுமா?.

ஆக்கங்கள்: அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

பாகிஸ்தானுடன் ராணுவ ஒப்பந்தமா : இலங்கை மறுப்பு.

கொழும்பு : பாகிஸ்தானுடன் ராணுவ ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லை, என இலங்கை அதிபரின் சகோதரர் கோத்தபயா தெரிவித்துள்ளார். இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்த போது பாகிஸ்தான் கணிசமான ஆயுத உதவி அளித்தது. இதற்கிடையே பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இலங்கையில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டார். இது குறித்து இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபயா குறிப்பிடுகையில், " சர்தாரி வருகையின் போது பாகிஸ்தானுடன் ராணுவ ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. புலிகளுடன் நடந்த சண்டையின் போதும் எல்லா நாடுகளிடம் பெற்ற ஆயுத உதவி போல, பாகிஸ்தானிடமும் ஆயுத உதவி பெறப்பட்டது. மற்றபடி அந்த நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. இலங்கை ராணுவத்தில் இரண்டு லட்சம் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கான சம்பளம் மற்றும் அதி நவீன கருவிகளுக்காக பட்ஜெட்டில், 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்று கோத்த பயா கூறினார்.

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்பதை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்.


சென்னை, டிச.8- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அவ்வாறு அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவ்வாறு ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னையில் பல வருடங்களுக்கு முன்னர் டக்ளஸ் தேவானந்தா மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தில் அவர் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், எழும்பூர் நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்நிலையில், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அவ்வாறு ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்திய அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!!


மக்கள் தொடர்பு அதிகாரி, லயசன் ஆபீசர் என்றெல்லாம் குறிப்பிடப்படும் அதிகாரத் தரகர்கள், அரசாங்கத்தில் எந்தக் காரியமானாலும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்; அதிகாரத் தரகர்கள் மூலமாகப் போனால்தான் அரசாங்கத்தின் நெடிய கதவுகள் திறக்கும். பெருமுதலாளிகள் ஒரு ஒப்பந்தத்தை முடிக்கவோ, போட்டியாளர்களைக் கழுத்தறுக்கவோ, விதிமுறைகளை மீறி ஒரு புதிய தொழில் உரிமம் பெறவோ, தங்களுக்குச் சாதகமாக அரசின் கொள்கைகளை மாற்றவோ அதிகாரத் தரகர்களை அமர்த்திக் கொள்கிறார்கள். அதிகாரத் தரகு வேலைக்கான செலவுகளை பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் “அபிவிருத்தி வேலைகளுக்கான செலவுகள்” என்று குறிப்பிடுகின்றன. முதலாளித்துவ அரசியலமைப்பு முறையின் பிரிக்க முடியாத அங்கம்தான் இந்த அதிகாரத் தரகர்கள். இத்தகைய அதிகாரத் தரகர்களில் ஒருவர்தான் நீரா ராடியா. குறிப்பாக ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி நிறுவனங்களுக்கு உரிமங்கள், ஒப்பந்தங்கள் முதலானவற்றை அதிகார வர்க்கத்துடன் பேசி முடித்துத் தரும் வேலைகளை இவர் செய்துள்ளார். இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவகாரமாகியுள்ளது.

2009-இல் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது, யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி, என்ன துறை ஒதுக்கப்படும், தொலைத்தொடர்பு அமைச்சர் நியமனத்தின் பின்னணியில் அம்பானியும் டாடாவும் எப்படி கா நகர்த்துகிறார்கள் என்ற விவரங்களும், நீரா ராடியா இதில் முக்கிய பங்காற்றியிருப்பதையும் அவரது தொலைபேசி உரையாடல்கள் நிரூபித்துக் காட்டுகின்றன. பத்மசிறீ விருது பெற்ற என்.டி.டிவி-யின் நிர்வாக ஆசிரியரான பர்கா தத், பிரபல பத்திரிகையாளரான வீர் சங்வி ஆகியோர் நீரா ராடியாவுடன் நடத்தியுள்ள தொலைபேசி உரையாடல்கள், பத்திரிகையாளர்கள் எப்படி கார்ப்பரேட் தரகர்களாக உள்ளனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களும் பத்திரிகையாளர்களும் கள்ளக்கூட்டுச் சேர்ந்து உருவாக்கும் செய்திகளே நாளேடுகளிலும் ஊடகங்களிலும் பிரபலமாக்கப்படுவதையும் இது நிரூபித்துக் காட்டுகிறது.
முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானி, தனது அண்ணனுடன் ஏற்பட்ட தொழில் போட்டியின் காரணமாக, நீராவைச் சிக்க வைத்தால் முகேஷின் வேகமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கணக்கிட்டுச் சில ஊடகங்களுக்கு கோடிகளை வாரியிறைத்ததன் விளைவாக, இப்போது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் கசியத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம் தரகுப் பெருமுதலாளியான டாடா, தனது நிறுவனத்தின் மக்கள்தொடர்பாளராக – அதிகாரத் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியாவுடன் தான் உரையாடியதை அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் இரகசியமாகப் பதிவு செய்து, அலைக்கற்றை ஊழலுக்குத் தொடர்பில்லாத தனிப்பட்ட விவகாரங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும் என்று சாடுகிறார். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகத் தனிநபர் உரிமையையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுவதால், நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் உரையாடியாதை ஊடகங்களில் வெளியிடுவது தன்னுடைய தனிநபர் உரிமையில் தலையிடும் மனித உரிமை மீறலாகும் என்று சீறுகிறார். அரசின் பொறுப்பிலுள்ள இந்த உரையாடல் பதிவுகளை வெளியே கசிய விட்டது யார், அல்லது யார் திருடினார்கள் என்பதைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். இதையொட்டி, உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் திரட்ட அரசே இத்தகைய அதிகாரத் தரகு நிறுவனங்களை அமர்த்திக் கொண்டது. அந்தத் தரகர்கள் மூலம் பல அந்நியக் கம்பெனிகள் கோடிகளை விழுங்கிக் கொள்ளையடிக்க அரசே உடந்தையாக நின்றுள்ளது. அது நியாயம் என்றால், அதே தரகு வேலையைச் செய்துள்ள நீரா ராடியா மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்? இப்போது அமலாக்கப்பிரிவும் மையப்புலனாவுத் துறையும் நீரா ராடியாவிடம் விசாரிப்பதாக ஊடகங்கள் பரபரப்பூட்டினாலும், கொள்ளையடித்த முதலாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யவோ, தண்டிக்கவோ அடிப்படை ஏதாவது இருக்கிறதா? டாடா போன்ற தரகுப் பெருமுதலாளிகளின் பொதுக்கருத்துக்கு எதிராக அரசும் நீதித்துறையும் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொணரும் என்று நம்பத்தான் முடியுமா?

நன்றி : வினவு

வழுக்கை தலயில் முடிவளர சித்தவைத்திய முறை.


வழுக்கை தலையில் முடிவளர:

சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.


Dec 7, 2010

சாமியார் நித்தியானந்தா அறையில் ஆணுறைகள்: பெண் பரபரப்பு வாக்குமூலம்.

சாமியார் நித்தியானந்தா தனது பிடதி ஆசிரமத்தில் எப்போதும் ஆணுறைகள், மது வகைகளை வைத்திருப்பார். ஆணுறைகளை அவர் வைத்திருந்ததை நானே எனது கண்ணால் பார்த்துள்ளேன் என்று நித்தியானந்தா வழக்கில் ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சமீபத்தில் நித்தியானந்தா வழக்கில் ராம்நகர் கோர்ட்டில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையுடன் இந்த வாக்கு மூலத்தையும் இணைத்துள்ளனர்.பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பெண் சாட்சிதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவரிடம், மோட்சம் அடைவீர்கள் என்று சொல்லி சாமியார் நித்தியானந்தா உடல் ரீதியான உறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அந்தப் பெண் கூறுகையில், நான் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு மதுக் கடையிலிருந்து மது வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார் நித்தியானந்தா.இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். இருப்பினும் நித்தியானந்தாவின் போதனைகளால் எனது மனம் அந்த அதிர்ச்சியை புறக்கணித்தது. எந்த ஒரு குடும்பப் பெண்ணும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்க மாட்டார். ஆனால் நித்தியானந்தாவின் போதனையால் பிரெய்ன் வாஷ் செய்யப்பட்டிருந்த நான் ஆசிரமத்திற்கு அருகில் இருந்த மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்தேன். பின்னர் அதை தனது அறைக்குக் கொண்டு வருமாறு கூறினார் நித்தியானந்தா. அங்கு கொண்டு போய்க் கொடுத்ததும் அதை வாங்கி அருந்தினார். என்னால் அந்த மதுவின் நெடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நான் வாந்தி எடுத்து விட்டேன். பின்னர் நான் மயங்கி விட்டேன்.
சில மணிநேரம் கழித்து நித்தியானந்தா எழுப்பிய பிறகே நான் கண் விழித்தேன். நான் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. நான் படுக்கையில் படுத்திருந்தேன். என்னை அவர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எனது உடைகள் கலைந்திருந்தன.பிறகு என்னை டிரஸ் செய்து கொள்ளச் சொல்லி அங்கிருந்து போகுமாறு பணித்தார் நித்தியானந்தா. நான் ஆசிரமத்தில் சேர்ந்தபோது நித்தியானந்தா போட்ட விதிமுறைகளில் ஒன்றாக எனக்குக் கூறப்பட்டவை ஆசிரமத்திற்குள் மது அருந்தக் கூடாது என்பது. ஆனால் என்னையே மது வாங்கச் சொல்லி அனுப்பி வைத்தவர் நித்தியானந்தா.அதேசமயம், நான் அவருக்கு மது வாங்கி வந்ததையும், அவர் அருந்தியதையும் யாரிடமும் கூறக் கூடாது என்று என்னை எச்சரித்தார் நித்தியானந்தா என்று அந்த பெண் கூறியுள்ளார். மது மட்டுமல்லாமல் ஆணுறைகளும் நித்தியானந்தா அறையில் இருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். இவை இரண்டும் நித்தியானந்தா அறையில் எப்போதும் இருக்கும் என்றும் அப்பெண் கூறியுள்ளதாக அந்த வாக்குமூலம் தெரிவிக்கிறது.

மன்மதன் அம்பு: கமலின் வக்கிரம்.

கமலகாசன் சிறந்த வியாபாரி.இவர் கவுதமியை கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது. இவர் இதற்க்கு முன்னாள் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தி நிறைய படங்கள் எடுத்துள்ளார். அப்போது எல்லாம் இந்த பார்பன பத்திரிக்கைகள் அதை பெரிய விசயமாக எடுத்து கொண்டது இல்லை. இது ஒருபுறம் இருக்க இவர் ஹிந்து மத மக்களின் உணர்வுகளை காயபடுத்தி மன்மதன் அம்பு படத்தில் சில பாடல்கள் எழுதி இருக்கிறார் என்ற கண்டனம் எழுந்துள்ளது. இவர் இதன் மூலம் அந்த படத்திற்கு விளம்பரம் தேடுகிறார் என்றே சொல்ல முடிகிறது. இந்த விஷயம் முற்றிலும் கண்டிக்கபட வேண்டியது. இந்த தருணத்தில் மக்கள் எல்லாரும் சேர்ந்து இந்த மன்மதன் அன்பு படத்தை பார்ப்பதை தவிர்ப்பது தான் இதற்க்கு நீங்கள் செலுத்தும் சிறந்த எதிர்ப்பாகும். இன்னும் எத்தனை ஏழை எளிய மக்கள் கமல் ரசிகர் மன்றம் அமைத்து கமல் பட கட் அவுட்களுக்கு பால் அபிசேகம் செய்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து இந்த படத்திற்கு கொடுக்கும் தோல்விதான் இவர்களுக்கு சிறந்த பாடத்தை கற்று கொடுக்கும்.

வாரணாசி குண்டு வெடிப்பு : ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பா?

வாரணாசி, டிச. 7-உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செவ்வா யன்று மாலை குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள ஷீட்லா கட் பகுதியில் தினந்தோறும் நடைபெறும் சிறப்புமிக்க தீப ஆராதனை நிகழ்ச்சியைக் காண செவ்வாயன்று மாலை ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலை 5.40 மணியளவில் இந்த ஆராதனை நிகழ்ச்சி துவங்கும். செவ்வாய்க் கிழமையும் நிகழ்ச்சி துவங்கி நடந்து கொண்டிருந்த போது 6.25 மணியளவில், தீப ஆராதனை நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். சற்று தொலைவில் குண்டு வெடித்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 150 மீட்டர் சுற்றளவிற்கு அதன் பாதிப்பு இருந்தது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 1 வெளி நாட்டவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதர விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்த்துதுவா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடத்த சில வருடங்களாக நடந்த தொடர் குண்டு விடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கபடும் இந்த வேளையில் அதில் குழப்பத்தை ஏற்படுத்தவும், மீண்டும் அயோத்தியில் ராமர் கோவில் கேட்டுவோம் என்று கூறி ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த குண்டு நடத்தபட்டிருக்கலாம் என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கபட்டு வருவதாகவும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மாரடைப்பை தடுப்பது எப்படி?

இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான புகைபிடித்தல் போன்ற காரணங்களை தவிர்த்து, அத்தகைய மருத்துவ காரணங்கள் (உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு) இருப்பின் அதை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான சில வாழ்வு முறைகளை அமைத்து, அதை தவறாமல் கடைபிடித்து வருவதே மாரடைப்பை தடுக்க சிறந்த வழி.

ஆரோக்கியமான வாழ்வு முறை:

கொழுப்புச் சத்து குறைந்த உணவு உட்கொள்ளுதல். உணவில் சரியான அளவு பழவகைகளையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்ளுதல். உப்பின் அளவை குறைத்தல். இத்தகைய உணவு முறைகளின் மூலம் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து போன்ற மருத்துவ காரணங்களையும் கட்டுப்படுத்துவது எளிதாகிறது.

சரியான உடல் எடையை பேணுதல்:

இது உங்கள் உயரத்தை பொறுத்தது. இதைக் கண்டறிய, உங்கள் உயரத்தை சென்டி மீட்டரில் அளந்து, அதிலிருந்து 100ஐ கழித்தால் வரும் எண்ணின் அளவிலான, “கிலோ’ அளவே உங்கள் சரியான எடை. உதாரணமாக உங்கள் உயரம் 160 செ.மீ., என்றால், உங்களின் சரியான எடை (100 கழித்து) 60 கிலோ இருக்க வேண்டும்.

இடுப்பின் சுற்றளவு, ஆண்களுக்கு 90 செ.மீ.,க்கு மிகாமலும், பெண்களுக்கு 80 செ.மீ.,க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இடுப்பின் அளவு இதற்கு மிகையாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பின்னாளில் மாரடைப்போ, பக்கவாத நோயோ வரும் சாத்தியக் கூறுகள் இருமடங்காகின்றன. இதன் பொருள் என்னவென்றால், உடலின் மற்ற பாகங்களில் தேங்கும் கொழுப்பை விட, இடுப்பில் படியும் கொழுப்பு, உடலின் உள்ளுறுப்புகளின் கொழுப்பு சதவீதத்தை பிரதிபலிக்கிறது. – டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா.

இந்த நூற்றாண்டின் சிறந்த பெண் போராளி ஐரோம் ஷர்மிளா.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற அப்பாவிகள்.

மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன்கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது.

ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரின் போராட்ட உறுதியையும், அவரது போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறைகூடத் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார். உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்.அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை. அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூ கி-யைப் பதினைந்து ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக் ‘குடியரசு’ ஐரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!

நன்றி: வினவு

ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு - ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை

சென்னை : ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலியாக, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சங்கிலித் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. சென்னை சேத்துப்பட்டு எம்.வி.நாயுடு தெருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகமும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

கடந்த 1993ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 பேர் பலியாயினர். இந்த குண்டுவெடிப்பில் உடல்கள் சிதறி, எதிர் வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் மீது வந்து உடல் பாகங்கள் விழுந்தன. அந்த அளவுக்கு குண்டு வெடிப்பு மிக பயங்கரமாக நடந்தது.

இந்த வழக்கில் அபுபக்கர் சித்திக், ரபிக் அகமது, ஹைதர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீ்ர்ப்பில், இந்த மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டது. ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர் போன்ற வெடி பொருட்களை வாங்கியதாக மூவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒப்புதல் வாக்குமூலம் தவிர, அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வேறு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
குறிப்பு: இந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இருந்து செயல்பட்டது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.