Dec 4, 2010

பெண்களுக்கு பிடித்த சில முக்கியமான விஷயங்கள்.

பெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்யலாமே. இது எல்லா பெண்களுக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.

1.பெண்கள் கூடி இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.

2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.

3.கவலையான நேரங்களில்,ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.

4.பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட்டி, பெருமை பட, அலட்ட பிடிக்கும்.

5.தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும். யாராவது வாய் விட்டு பாரட்ட.... அட அட மனசு நிறையும்.

6.ஊராரிடம் கம்பீரம்,புத்திசாலித்தனம்,வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)

7.உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.

8.அழுகை,பூ,பணம்,சீரியல்,நகை,ஆடைஅலங்காரம்,அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம்(?) பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள்.

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடுகிறோம்.

10. பெண்களுக்கு - பிடிசவங்க ; பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும்,
பிடிக்காதவங்க ; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது.

ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”.

விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன. நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான வெள்ளை கும்பினி படைகளோ , கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.
“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.
ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.”"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

கழுதைக்கு பெயர் முத்து மாலையாம்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜியாஸ் டேனியல்ஸ் (வயது 40). இவருடைய காதலி சாரா மோரே (39). இவர்கள் இருவரும் திருமணமாகா விட்டாலும் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் ஒரே விதமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செக்ஸ் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவுவதே இவர்களது தொழில்.“செக்ஸ்”சில் யாராவது திருப்தி அடையாமல் இருக்கும் பெண்களுக்கு உதவுவதை ஜியாஸ் டேனியலும், ஆண்களுக்கு உதவுவதை சாராமோரேவும் தொழிலாக கொண்டுள்ளனர். இந்த வகையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு “செக்ஸ்” மசாஜ் செய்வதுடன் அவர்களுடன் உறவும் வைத்து கொள்வார்கள்.

இந்த தொழில் மூலம் இதுவரை 3,323 ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருப்பதாக சாராமோரே கூறி இருக்கிறார். ஜியாஸ் டேனியல் 2,161 பெண்களுடன் உறவு வைத்து இருப்பதை கூறி இருக்கிறார். தொழிலை செய்வதற்காக உலகம் முழுவதும் சுற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த தொழில் செய்வதால் நாங்கள் விபசார தொழில் செய்வதாக கருதி விடக் கூடாது. இது ஒரு மருத்துவ தொழில் என்றும் அவர்கள் கூறினார்கள்.

Dec 3, 2010

வி.ஹெச்.பி கொள்ளைக்காரர்களின் கூடாரம்: மஹந்த் ஞான் தாஸ்.

அயோத்தியா,டிச.4: அகில பாரதீய அகாதா பரிஷத்தின் தலைவர் மஹந்த் ஞான் தாஸ், தங்கள் அமைப்பில் பிளவை ஏற்படுத்தியதற்காக வி.ஹெச்.பியையும், அதன் தலைவர் அசோக் சிங்காலையும் குற்றஞ்சாட்டினார்.வி.ஹெச்.பி கொள்ளைக்காரர்களின் கூடாரம் என வர்ணித்த ஞான் தாஸ் வி.ஹெச்.பியின் நோக்கம் ராமர் கோயிலைக் கட்டுவதைவிட அரசியலிலும், கலவரத்தை தூண்டுவதிலும்தான் அவர்களின் விருப்பம் அடங்கியுள்ளது என்றார்.

பாபர் மசூதி விவகாரத்தில் தீர்வைக் குறித்து நாங்கள் ஆலோசித்து வரும்பொழுது அவர்கள் அகாதா பரிஷத்தில் பிளவை ஏற்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். தான் இப்பொழுதும் அகாதா பரிஷத்தின் தலைவர் என்றும், ஜனவரி மாதத்திற்கு முன்பு அப்பதவியை ராஜினாமாச் செய்யப் போவதாகவும் தாஸ் தெரிவித்தார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தாங்கள் கண்டறிந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான பரிகார வழியை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக பாப்ரி மஸ்ஜித் வழக்கில் மனுதாரர்களான ஹாஷிம் அன்ஸாரியும், மஹந்த் ஞான தாஸும் அறிவித்துள்ளனர்.

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எல்லா மனுதாரர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்தால் தாங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கான பரிகார வழியை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என இருவரும் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.டிசம்பர் 10 ஆம் தேதி பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறையை பகிரங்கப்படுத்தப் போவதாக அன்ஸாரி நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.

6 மணி நேரத்திற்குள் புதிய இணையதள முகவரியில் விக்கிலீக்ஸ்.


EveryDNS.net விக்கிலீக்ஸ் டொமைனை நீக்கியதைத் தொடர்ந்து விக்கிலீக்ஸ் இணையதளம் 6மணி நேரம் முடக்கப்பட்டது. ஆனால், இணையதளத்தை சுவிட்சர்லாந்திற்கு மாற்றி பதிலடிக் கொடுத்த விக்கிலீக்ஸ் புதிய இணையதள முகவரியில் செயல்பட துவங்கியுள்ளது. அதாவது wikileaks.ch என்ற பெயரில் செயல்படத் துவங்கியுள்ளது.

இன்று அம்மாவுக்கு திதி, திவசம்.

இன்று அம்மாவுக்கு திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறை வேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.ஒரு பார்பன பூசாரியை பணம் கொடுத்து அமர்த்தி அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷா வருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.அந்த மந்திரத்தின் பொருள் என்ன வென்று பார்த்தால் நாம் யாரும் இந்த திதியை பண்ண மாட்டோம்.

மந்திரமும் அதன் பொருளும்:

மந்திரம் ::“என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”

பொருள் :: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது. என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர்.


இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, பூசாரி சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும் போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

THANK FOR : ராமானுஜ தாத்தாச்சாரியார்

பாரதிய ஜனதாவின் ஊழல் பெரிச்சாளிகள் மீது நடவைக்கை இல்லை: ராசா தலித் என்பதால் நடவைக்கையா?

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் பாரதிய ஜனதா ஊழல் பெரிச்சாளிகளான மத்திய அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்கள் உயர் ஜாதிக்கார்கள் என்பதால் அவர்கள் மீது நடவைக்கை இல்லையா? ராசா தலித் என்பதால் அவர் மீது நடவைக்கையா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது மக்கள் விரோத செயலாகும்.

பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோர் ராசாவை தனிமைப்படுத்தி பழிவாங்க துடிக்கின்றனர்.ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்களின் போக்கு தலித் விரோத போக்கு.

விக்கிலீக்ஸ்: ராஜபக்ச குற்றவாளி, விசாரணைக்கு தமிழர்கள் தயாரில்லை.

"ராஜபக்ச சகோதரர்களும், சரத் பொன்சேகாவும் போற்குற்றத்திற்கு பொறுப்பாளிகள். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் வரையில் எந்தவொரு விசாரணையும் நடைபெறப் போவதில்லை. அதே நேரம், தமிழர் தரப்பிலும் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு கிட்டவில்லை. இன்றைய நிலையில் போர்க்குற்ற விசாரணை நடக்குமாகில், அதனால் தமிழரே அதிகமாக பாதிக்கப்படுவர் என்று அஞ்சுகின்றனர். இந்த விடயத்தில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையில் தெட்டத் தெளிவான வேறுபாடு காணப்படுகின்றது." - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் PATRICIA A. BUTENIS(விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணங்களில் இருந்து).

மாவீரன் திப்புசுல்த்தான்: ஒரு வரலாற்று பார்வை.

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. 1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது..“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவின் அமைச்சர் பூர்ணய்யா செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி இவை எல்லாம் இன்றும் ஆங்கில ஆட்சியின் எதிர்ப்பை திப்பு சுல்தான் எப்படி வெளிபடுத்தினார் என்பதற்கு இன்றும் சான்றாக திகழ்கின்றன.
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெள்ளை தளபதி வெல்லெஸ்லி.

படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

உலகில் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

நன்றி: வினவு

Dec 2, 2010

மகாத்மா காந்தி & டாக்டர் அம்பேத்கர் & பெரியார் : ஒரு பார்வை.


காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற பார்ப்பன இந்து மதவெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதிராக கருதி கொன்றார்கள் என்பதால். காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடுமையாக எதிர்த்த பெரியார் தான் காந்தி தேசம் என்று பெயர் வைக்கச் சொன்னார்..
காந்தி கொலைக்கு முன்னும் பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சியின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி செய்த சதிக்கு, காந்தி கொலை செய்யப்பட்டிருந்தாலோ, மாவீரன் பகத்சிங்கிற்கு செய்த துரோகத்திற்கு பகத்சிங்கின் தோழர்கள் காந்தியை கொலை செய்திருந்தாலோ பெரியார் அவர்களை கண்டித்திருக்க மாட்டார். அந்தக் கொலையை ஆதரித்துதான் இருப்பார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, ரெட்டை வாக்குரிமையைகேட்டு அண்ணல் அம்பேத்கர், லண்டனில் வட்டமேசை மாநாட்டில் கடுமையாக காந்தியோடு மோதினார். அம்பேத்கரை வாதத்தால் வெல்லமுடியாத காந்தி, ‘எங்க ஊருக்கு வா உன்ன கவனிச்சிக்குறேன்’ என்று இந்தியாவிற்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.நாட்டையே, பதட்டமாக மாற்றிவிடுகிறார் காந்தி. ‘அய்யோ காந்தி செத்துவிடுவாரோ’ என்று எல்லாத் தலைவர்களும் கவலை கொள்கிறார்கள்? அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பதட்டப்படுகிறார்கள்.ஆனால், ஒரேஒரு தலைவர் மட்டும்தான், அம்பேத்கருக்கு தந்தி கொடுக்கிறார், கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிடவும், ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்திகொடுத்த ஒரே தலைவர் பெரியார்.

தாய்லாந்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற நடிகையின் கணவர் மீது புகார்.

மசாஜ் பார்லர் பணிக்காக தாய்லாந்து பெண்களை வரவழைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற நடிகையின் கணவர் உள்ளிட்ட மூவர் மீது, கமிஷனர் அலுவலகத்தில் தாய்லாந்து பெண்கள் புகார் அளித்தனர். அவர்களுடன், வக்கீல்களும், மகளிர் அமைப்பை சேர்ந்த கல்யாணசுந்தரி, விஜயமேரி, சுமதி தட்சிணாமூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர். தாய்லாந்து அழகிகள் 6 பேரும் புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தனர். புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.

தாய்லாந்து நாட்டில் இருந்து எங்களை போல 15 இளம் பெண்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்தோம். "3 ஆர் குரூப்" நிறுவனத்தின் உரிமையாளர்களான ரவீந்திரா (பிரபல நடிகை யுவராணியின் கணவர்) மற்றும் அவரது நண்பர்கள் இமானுவேல், ரமேஷ் ஆகியோர் எங்களை அழைத்து வந்தார்கள். `மசாஜ் கிளப்'களில் வேலை தருவதாகவும், மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தருவதாகவும் எங்களிடத்தில் ஒப்பந்தம் போட்டார்கள்.

ஒரு வருடம் வேலை பார்க்க வேண்டும் என்றும், தங்கும் இடம் இலவசமாக தருவோம் என்றும், ஆனால் நாங்கள் விருப்பப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் `மசாஜ்' செய்யும் கலையை கற்றுள்ளோம். எனவே, `மசாஜ்' மட்டும்தான் செய்வோம் என்றும், வேறு தவறான வழியில் எங்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும் சொல்லித்தான் வேலைக்கு வந்தோம்.

ஆனால் 2 மாதங்கள் மட்டும் ஒப்பந்தப்படி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். சென்னையில் வடபழனி மற்றும் தி.நகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் செயல்பட்டு வரும், "தாய் ஸ்பா" எனும் மசாஜ் பார்லர் கிளைகளில் நாங்கள் 6 பேரும் வேலைபார்க்கிறோம். மீதி உள்ள 9 பெண்களும் மதுரை, திருப்பூர், பெங்களூர் ஆகிய இடங்களில் `மசாஜ் கிளப்'களில் பணிபுரிகிறார்கள்.

கடந்த 8 மாதமாக எங்களுக்கு பேசியபடி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தராமல், ரூ.15 ஆயிரம் மட்டுமே தருகிறார்கள். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தரவேண்டுமென்றால் வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களை நிர்வாணமாக படுக்க வைத்து மசாஜ் செய்ய சொல்லுகிறார்கள். எங்களையும் ஆபாசமாக உடை அணிய சொல்லுகிறார்கள். ஒப்பந்தத்தை மீறி எங்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுக்கிறார்கள்.`செக்ஸ்' தொழில் செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை. இதனால் எங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம். எங்களது பாஸ்போர்ட்டையும், விசாவையும் பறித்து வைத்துக்கொண்டனர்.

சொந்த நாடான தாய்லாந்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று கேட்கிறார்கள். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் ஊருக்கு திரும்பி போக முடியாது என்றும், `செக்ஸ்' தொழில் செய்து எங்களுக்கும் சம்பாதித்து கொடுங்கள், நீங்களும் சம்பாதித்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை சொல்லுகிறார்கள். இல்லாவிட்டால் எங்களை கொலை செய்து, பிணத்தை கடலில் வீசிவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள்.

எங்களை கொத்தடிமை போல் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். அந்த அறை முழுவதும் கரப்பான் பூச்சிகளை விட்டு எங்களை சித்ரவதை செய்தனர். அவர்களுடைய கொடுமைகள் தாங்காமல் நாங்கள் தப்பி வந்து இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்களை சொந்த நாட்டுக்கு நல்லபடியாக திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எங்களைபோல் சித்ரவதையில் தவிக்கும் மேலும் 9 பெண்களையும் மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அசோக்நகர் உதவி கமிஷனர் பரந்தாமனுக்கு, கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் உத்தரவிட்டார். இதுபோல் மசாஜ் கிளப்களில் விபசாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷகில் அக்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட `மசாஜ் கிளப்'கள் உள்ளன. அவற்றை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவை இடுகாடாக்க இந்துத்துவா சதி!!!

இந்தியாவை கலவரபூமியாக மாற்றி, சுடுகாடாக ஆக்கி உலக வரைபடத்திலிருந்தே அப்புறப்படுத்தும் கோர சிந்தனையில் இந்துத்துவ சங்பரிவாரங்கள் செயல்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் விளங்கும். 1921ம் ஆண்டுமுதல் தூவப்பட்ட இந்த கள்ளிச் செடியின் விஷவித்து இன்று நாடு முழுவதும் பரவிக்கொண்டு வருவதையும், இந்தியா வல்லரசாக உருவாவதற்கு இது பெரும் இடராக இருப்பதையும் நாம் நன்றாகவே அறிவோம். இந்த சங்பரிவார வெறியர்களின் தமிழக ஏஜன்டாக ராமகோபாலன் திகழ்கிறார். வினாயகர் சதுர்த்தியை சாக்காக வைத்து அமைதிப் பூங்காவாம் தமிழகத்தை கலவரபூமியாக்க சதி செய்யூம் சங்பரிவார்களுக்கு தலைமை தாங்கி நடத்துவது திருவாளர் ராம கோபால ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது பயங்கரவாத சிந்தனைகளை பரப்பும் தினமலர், தினமணி போன்ற நாளிதள் மூலம் பிரச்சாரம் செய்கிறார்.

குஜ்ராத் மாநிலம் கோத்ராவில் ரயில் பெட்டியை சங்பரிவார்களே நெருப்பிட்டு கொளுத்திவிட்டு பழியை முஸ்லீம்கள் மீது சுமத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லீம்களின் கற்பு, உயிர் மற்றும் சொத்துக்களை சூரையாடியதை நாடு அவ்வளவு எழுதில் மறந்துவிடுமா என்ன? அந்த கோரசிந்தனையில் வளர்ந்தவர்தான் இந்த ராமகோபாலன். இன்னும் தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பல பகுதிகளில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மிகப்பெரிய கலவரத்தை நடத்த ஒவ்வொரு முறையும் முயற்சிப்பவர்தான் இந்த ராம கோபாலன். தமிழகத்தில் சில இடங்களில் முஸ்லிம்கள் ரமழான் மாத இரவுத்தொழுகைக்கு சென்ற சமயங்களில் அவர்களின் வீடுகளில் ஒரே போல் தொடர்ச்சியாக தீ வைத்து கொளுத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதன் பின்னணியில் சங்கபரிவார் கும்பல் இருந்து செயல்பட்டதாக உளவு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இராமேஸ்வரத்தில் ஆஸ்எஸ்எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் கடந்த சில மாதங்களாக திடீர் திடீரென துப்பாக்கிசுடும் சப்தம் கேட்பதை அங்குள்ளவர்கள் அறிவர். இத்தீவிரவாத பயிற்சிகளை எடுப்பது துர்காவாகினி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பெண் தீவிரவாதிகளும், இந்து முன்னனியினர் என்ற ராமகோபாலனின் அடியாட்களும் தான்.கன்னியாகுமரியில் ஆரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயிதங்களுடன் சாகா என்னும் திவிரவாத பயிற்சியை இக்குண்டர்கள் நடத்துவது அமைதியான தமிழகத்தின் பல ஊர்களில் கலவரத்தை நடத்திக்காட்டவே என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருப்பதுதான் கவலையை உண்டாக்குகின்றது. ஒரு முஸ்லிம் பஸ்டான்டில் பீடி பத்தவைப்பதற்கு தீப்பெட்டியுடன் நின்றிருந்தாலே பயங்கர வெடிபொருட்களுடன் தீவிரவாதி கைது, தமிழகத்தை தகர்க்க சதி என்று செய்தி வெளியிடும் காவல்துறை, பகிரங்கமாக ஆயுத பயிற்சியெடுக்கும் இந்து முன்னனி தீவிரவாதிகளை கைது செய்யத் தயங்குவது ஏன்? இது போன்ற பாராபட்சமான காவல்துறையின் செயல்பாடுகள் தமிழகத்தை கொலைக்களமாக்கி இரத்த ஆற்றை ஓட்ட செய்யும் சதிக்கு துணைபோவதாகும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

உடனடியாக இராமேஸ்வரம் உட்பட பாம்பன், கன்னியாகுமரி அதகுட்பட்ட சுசீந்திரம் , உடன்குடி, ஆத்தாங்கரை, கீழக்கரை, இராமநாதபுரம், மதுரை என சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதப் பயிற்சி எடுத்து வரும் இந்துத்துவ தீவிரவாதிகளை கைது செய்ய கோருகின்றோம். அரசு இது போன்ற இந்துத்துவ தீவிரவாதிகளின் பகிரங்க ஆயுதப்பயிற்சியை தடை செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்து அவர்களை தடை செய்யாவிட்டால், இது தமிழகத்தில் பரவலான ஒரு மோசமான ஆயுதக்கலாச்சாரத்திற்கு வழி வகுக்கும். இவர்களிடம் இருந்து நம் மக்களை பாதுகாக்க என்று சிறுபான்மையினரிலும் பாதிக்கப்பட்டவர்கள் பதிலடி கொடுக்க முயவர். இதன் மூலம் தமிழகத்தில் அமைதி கெட்டு வன்முறை கலாச்சாரம் பெருக வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம்.

இந்நிலையில் நாட்டில் பிரிவினையைத் தூண்டும் ராமகோபாலன் இந்துக்களை வீடுவீடாகச் சென்று ஒன்றுபடுத்தப் போகிறேன் என்று பேட்டியளிப்பது வெட்கக்கேடானது. சங்பரிவார பயங்கரவாதத்தின் தாய்சபையான ஆர்எஸ்எஸ் இதே கருத்தை முன்வைத்துத்தான் இந்துயூனிட்டி என்ற இணையதளத்தை ஆரம்பித்தது. இந்துக்களை ஒன்றுபடுத்தப் போகிறோம் என்ற ஆரம்பிக்கப்பட்ட அவ்விணையதளத்தில் இந்து மதத்தை சேர்ந்த படித்த பண்பாளர்கள், சட்ட மேதைகள், சமூகநீதி ஆர்வளர்கள் என்று பலரையும் பெயர் வெளியிட்டு பிளாக் லிஸ்ட் என்று கொலைகார பட்டியல் வெளியிட்டுள்ளார்கள்.

பார்க்க : http://hinduunity.org/hitlist.html)

நம் நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி, திரு முலாயம்சிங் யாதவ், திரு லல்லுபிரசாத் யாதவ் போன்ற பிரபலமான அரசியல் தலைவர்களையும் கொலை செய்யும் நோக்கில் அந்த பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளனர். இவைகள் நம்மில் எத்துனை பேருக்கும் தெரியும்? இது தான் ராமகோபாலன் சொல்லும் இந்து ஒற்றுமை நண்பர்களே. தமிழகத்தின் இந்து தீவிரவாதிகளோ ஒரு படி மேலே போய் தமிழக முதல்வர் அவர்களை கொலைகாராக சித்தறித்து அவர் மன்டை ஓட்டின் மீது அமாந்திருப்பது போன்று சித்திரமும் போட்டு முதல்வரை கொலை செய்ய சொல்லி இணையத்தில் வெறியூட்டி வருகின்றார்கள். இதைச் செய்பவர்கள் யார் என்ற விபரம் தமிழக அரசு கேட்டால் கையளிக்கப்படும்.

வெறியர்களின் இணையதளம் வெளியிட்ட படம் :::இப்படி இவர்கள் செய்யும் தேசவிரோத செயல்களையும், இவர்களின் எலும்புத்துண்டுகளுக்காக இணையத்தில் கூலிக்கு மாறடிக்கும் கூட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் ஆவனங்களாக வைத்துள்ளோம். தேவைப்பட்டால் நமது இந்திய திருநாட்டின் நலன் கருதி எமது கோப்புகள் அனைத்தையும் உள்துறை அமைச்சகம், தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறையினருக்கு அளிக்க உள்ளோம்.

தமிழகத்தின் தன்னிகரற்ற பன்முகத்தன்மையை கெடுக்கமுயலும் ராமகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று தமிழக அரசை வேண்டுகிறோம். மேலும் இந்து முன்னனி ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வீட்டிலும், அலுவலகங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கொடிய ஆயுதங்களை பரிமுதல் செய்யவும், வன்முறையைத்தூண்டும் பயங்கரவாத அமைப்பான இந்துமுன்னனியை உடனடியாக தடை செய்யவும் தமிழக மக்கள் சார்பாக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களே ராமகோபாலன் போன்ற பாசிச பயங்கரவாதிகளின் உளரல்களையும், பார்ப்பன தினமலம், தினமணி நாளிதலின் விஷமத்தனைத்தையும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேச ஒற்றுமைக்கு சவால்விடும் சங்பரிவார தீவிரவாதிகளை அலட்சியம் செய்யுங்கள். இந்தியாவை சுடுகாடாக மாற்றும் இவர்களின் சதியில் வீழ்ந்துவிடாமல் தமிழக மக்கள் என்றும்போல சகோதர வாஞ்சையுடனும் ஹிந்து, முஸ்லிம், கிருஸ்தவ நட்புறவோடும், ஒருதாய் மக்களாக சகோதர வந்சையோடும் வாழ உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

இரத்ததானம் கொடுக்கலாமா?

யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்?

« A குரூப்:

இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத்தான் கொடுக்க வேண்டும்.

« B குரூப்:

இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும்.

« AB குரூப்:

இவர்களுக்கு A AB O, B குரூப் இரத்தம் கொடுக்கலாம்.

« O குரூப்:

இவர்களுக்கு O குரூப் இரத்தம் தான் கொடுக்கவேண்டும்.

‘ஆர்எச்’ என்று சொல்கிறார்களே அது என்ன?

இரத்தத்தில் கி,ஙி,ளி வகையைத் தவிர, பார்க்க வேண்டிய மற்றொரு ஆன்டிஜனும் இருக்கிறது. ரிசங் என்ற ஒரு குரங்கிலிருந்து இந்த ஆன்டிஜன் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு ஆர்எச் என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த ஆர்எச், இரத்த சிவப்பு அணுக்களின் தோலின் மேல் சிலருக்கு இருக்கும். சிலருக்கு இருக்காது. இதைக் குறிப்பிட A+ மற்றும் A என்று பயன்படுத்துகிறார்கள்.

யார் யார் இரத்த தானம் செய்யலாம்?

« நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.

« 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

« குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

« இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.

எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடம்.

இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?

20 நிமிடம்.

இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?

350 மில்லி. நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. எடுக்கப்படுகிற இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.

இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?

10 லிருந்து 21 நாட்களில்.

இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயிரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல். ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே?

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.

சின்னச்சின்ன உடல்நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்_டை பயன்படுத்துங்கள்.

« சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

« ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

« ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

« குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

« அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

« குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.

« பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

« சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

« பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

« பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

« இதய நோய்கள் _ வேண்டாம்.

« இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

« வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம். மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

« தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

« நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

« மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

« மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.

« காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.

மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

« சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

« ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

« நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.

« இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

« ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

« இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?

« நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.

« ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.

3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

« இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.

www.tamilnadutalk.com/portal/index.

இந்திய சுதந்திர போராட்டத்தின் மாவீரன் ஹைதர் அலி.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் ஊற்றுக்கண்களான ஹைதரும் அவர் மகன் திப்புவும் மன்னர்குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.குதிரைப்படை வீரனாக மைசூர் மன்னரால் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஹைதர் தன்னுடைய போர்த்திறத்தால் உயர்ந்தவர்.1761இல் அதிகாரபூர்வமாகப் பதவிக்கு வந்த ஹைதர் ஒரு அறிவுக்கூர்மை கொண்ட போர்வீரன். முறைப்படுத்தப்பட்ட தொழில் முறை இராணுவம், போர்த்தந்திரம், நவீன தொழில் நுட்பம் ஆகிய மூன்றிலும் மேம்பட்டிருந்த ஐரோப்பியப் படைகளிடம் உதிரிக் கும்பல்களாக இருந்த உள்நாட்டு இராணுவங்கள் தோல்வியடைவதை இரண்டு கர்நாடகப் போர்களிலிருந்தும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.

“ஆங்கிலேயர்களை நாம் பல முறை தோற்கடித்து விட்டோம். ஆனால், ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்த முடியாது…… காந்தகார் மற்றும் பாரசீகத்தின் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராத்தாக்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் மேற்கொள்ளும் கூட்டான நடவடிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் மீது ஒரே நேரத்தில் எல்லா முனைகளிலும் போர் தொடுக்க வேண்டும.”ஹைதர் அலி தன் தளபதிகளிடம் ஆற்றிய உரை.

1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அந்த ஓவியத்தில் வரையபட்டிருந்ததை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற கும்பினி அதிகாரி.

“நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர். வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் ஹைதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.” ஹைதரின் காலனியாதிக்க வெறுப்புக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

நன்றி: வினவு.

Dec 1, 2010

தமிழ்நாட்டின் முன்னணி நாளிதழ்கள் பற்றிய ஒரு பார்வை.

தமிழக ஊடகங்கள் பெரிய அளவுக்கு விற்பனையாகி பரவலான வாசகர்களைக் கொண்டிருக்கக் கூடியவை தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி உள்ளிட்ட பத்திரிக்கைகள் உண்மையில் பத்திரிகை தருமத்தை கடைப்பிடித்து நடுநிலையுடன் எழுதுகின்றனவா? என்று பார்த்தால் வெறும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இவைகள் பத்திரிக்கை விபச்சாரம் நடத்தி பணம் சம்பாதிக்கின்றன. இந்த பத்திரிக்கைகளின் செயல்பாடுகள் குறித்து பாப்போம்.

1 ) தினமணி நாளேடு பார்ப்பனிய சிந்தனையை மையப்படுத்தி, ஹிந்துத்துவாவை மையபடுத்தி செயல்படும் நாளிதழ். ஆனால் இதை வெளியே காட்டிகொள்ளாமல் நடுநிலை நாளேடுபோல் வேஷம்போடும் பசும்தொல் போத்திய புலியை போல. இதன் போக்கால் இது இப்பொது வாசகர்களால் புறக்கணிக்கப்பட்டு விற்பனையில் சுருங்கி விட்டது,

2 ) தினமலர் நாளேடு இது தினமணி விட ஆபத்தான பத்திரிகை. மதவெறி, பார்பனியாம், ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களை வெளிப்படையாக ஆதரிப்பது, வர்ணாசிரம கொள்கை, ஹிந்துத்துவா கொள்கைகளை பரப்பும் ஒரு பிரச்சார ஏடாக வெளிப்படியாக செயல்பட்டு வருகிறது. ஆன்மிகம் என்ற பெயரில் மதப்பழமையைத் திணிப்பது என ஹிந்துத்துவா இயக்கங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு நாளேடு.

3 ) தினகரன் நாளேடு கலாநிதிமாறன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட தோற்றம் காட்டினாலும் அது பொதுவாக திமுக சார்புடையது என்பதை வாசகர்கள் தெளிவாக அறிவர். அதிலும் குறிப்பாக திமுகவிற்குள் நடக்கும் குடும்ப அரசியல் சதிராட்டத்தில், தங்களுக்குச் சார்பான பிரிவை தூக்கிப்பிடிக்கும் பணியை தினகரன் செய்து வருகிறது.

4 ) தினத்தந்தி நாளேடு தமிழ் நாட்டில் நாளிதழ் வாசிப்பைப் பரவலாக்கியதில் இந்த இதழின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பொதுவாக தினத்தந்தியை ஆளும்கட்சி நாளிதழ் என்று சொல்வதுண்டு. ஆட்சியாளர்களை ஆதரித்தால் அரசு விளம்பரம் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தைப் பெறலாம் என்பது தான்.

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் ஆயூள் முடிந்துவிடும்.

பூமியில் உயிர்கள் வாழ முக்கிய தேவையாக இருந்து கொண்டிருக்கும் சூரியன், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் என்றும், அதே காலகட்டத்தில், பூமியின் வாழ்நாளும் முடிவுக்கு வரும் என்று தற்போதைய புதிய ஆய்வில் அனுமானிக்கப் பட்டுள்ளது.தற்போது நமது சூரியனுக்கு 457 கோடி வயது ஆகிறது. நடுத்தர வயதுள்ள நட்சத்திரமாக சூரியன் திகழ்கின்றது. இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் ஆயுட்காலம் முடிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த கால கட்டத்தில், சூரியனில் உள்ள வாயுகள் தீர்ந்து போய், அதன் வெளிப்புறம் சிவப்பாக, அச்சப்படுத்தும் வகையில் காட்சியளிக்கும். ஆனால், சூரியன் மறைந்தாலும் பூமியில் வாழ முடியும் என்ற சூழ்நிலை அப்போது உருவாகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

டிசம்பர் 1 எயிட்ஸ் தினம்: எயிட்ஸ் பற்றிய சந்தேகங்களும் பதில்களும்.

இன்று உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கபடுகிறது. முறையில்லாத தவறான உறவுகள் மூலமாகத்தான் இந்த நோய் உண்டாகிறது. . அதுவல்லாமல் இந்த நோய் பற்றிய சில பொதுவான சந்தேகங்களை பற்றி இங்கு பாப்போம்.

1) முத்தமிடுவதால் எயிட்ஸ் பரவுமா?
***உமிழ் நீரில் வைரசின் அளவு மிகவும் குறைவு . இதன் மூலம் எயிட்ஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் குறைவானாலும்
உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் போது ஒருவருக்கு வாயினுள்ளே காயங்களோ சிறிய ரத்தக் கசிவுகளோ இருந்தால் எயிட்ஸ் பரவலாம்.

2) வாய்வழிப் புரர்ச்சியால் எயிட் பரவலாமா?
***நிச்சயமாகப் பரவலம்.ஆனால் பரவுகின்ற வீதம் குறைவு.

3) எயிட்ஸ் உள்ளவர்களோடு சேர்ந்து விளையாடலாமா?
***நிச்சயமாக விளையாடலாம். உடலுறவு, ரத்தத் தொடர்பற்ற எந்த விதத்திலும் எயிட்ஸ் நோயாளியோடு நீங்கள் பழகலாம்.4) எயிட்சுக்கு மருந்துகள் உள்ளனவா?***ஆம். இதை பூரணமாக குணமாக்க முடியாவிட்டாலும் வாழ்க்கைக் காலத்ததை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கவும் இந்த மருந்துகள் உதவும்.

5) இரத்தம் ஏற்றுவதன் மூலம் எயிட்ஸ் பரவலாமா?
***ஆம். ஆனாலும் அனைத்து வைத்திய சாலைகளிலும் இப்போது இரத்தம் பரிசோதிக்கப்பட்ட பின்பே ஏற்றப்படுவதால் அதற்காக அஞ்ச வேண்டியதில்லை.

6) ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவலாமா?
***ஆம். இதன் போதுதான் எயிட்ஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் அதிகம்.

7) தலைமுடி வெட்டும் போது எயிட்ஸ் தொ ற் றலாமா?
***ஒரு பிளேட் பல பேருக்குப் பாவிக்கப்ப்படும்போது தவறுதலாக சிறிய வெட்டுகள் ஏற்பட்டால் எயிட்ஸ் தொற்றலாம். நீங்கள் தலைமுடி வெட்டும் போது உங்களுக்காக புது பிளேட் போடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

8) பச்சை குத்தும்போது எயிட்ஸ் தொ ற் றலாமா ?
***ஆம். ஒரு உபகரணம் பல பேருக்கு பாவிக்கப்படுவதால் தொற்ற சந்தர்ப்பம் உள்ளது.

9) எயிட்ஸ் நோயாளி தாய்ப்பால் கொடுக்கலாமா?
***இல்லை.

நன்றி டாக்டர்: துமிழின் பக்கம்.

10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் வெளியாகிறது.


அம்பேத்கர் விருது பெற்றவருமான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி நடைபெற்றும், தமிழகத்தில் டாகடர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம்.ஒரு “தலித்” வாழும்போது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பின்னரும் சாதி ஆதிக்கத்தின் பிடியில் அவலம் நேரத்தான் செய்கிறது. இந்திய அரசியல் அமைப்பையே உருவாக்கிக் கொடுத்தவரும், இந்திய சமூக நீதிப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான டாக்டர். பி.ஆர். அம்பேத்கருக்கும் இந்த நிலைதான் என்பது எத்தனை மோசமானது.

ஆம், ஜபார் படேல் இயக்கிய “டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் தயாரிக்க கடந்த 1991 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு ரூ.7.7 கோடி ஒதுக்கியது. ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பார்த்து, பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டார்.
ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது. மிகத் துல்லியமான ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் கொண்டாடின. இதனால் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.

ஆனால், இத்தனைச் சிறப்புகளைப் பெற்ற அந்தப்படம், சேரவேண்டிய மக்களை அடையவில்லை. “இதற்கு காரணம் பெரும்பாலான தியேட்டர்கள் சாதி ஆதிக்க உணர்வு படைத்தவர்கள் வசம் இருப்பதே” என்று அன்றே தலித் விடுதலைப் போராளிகள் வருத்ததுடன் கூறினர்.

சுதந்திர இந்தியாவின் சட்டத்தை இயற்றியவருக்கே அநீதியா?” என்று நாம் கேட்கலாம். அது அப்படித்தான், இன்னும் வர்ணாசிரம கொள்கைகளே இந்தியாவில் ஆட்சி செய்கிறது என்பதையே பார்க்கமுடிகிறது. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகம் நடக்கிறது. ஆயிரத்து 800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன. ஆனாலும், ஒரு தலித் விடுதலைப் போராளியின் வரலாறு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது.

10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் அம்பேத்கர் இப்போது டிசமபர் 3ம் தேதி வெளியாக இருக்கிறார். இதுபற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகியும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் நீலவேந்தன் கூறுகையில், “இந்தியா முழுவதும் செய்ததைப் போல, தமிழகத்திலும் ஆதிக்க எண்ணம் கொண்ட சக்திகள் திரையரங்குகளில் படத்தை இருட்டடிப்பு செய்யக்கூடும். அதனை முறியடித்து, இந்தப் படத்தையே ஒரு இயக்கமாக்க வேண்டும்” என்றார்.

காஞ்சி சங்கரமடம், சிறீரங்கம் கோவில்: ஒரு வரலாற்று பார்வை.

காஞ்சிபுரம் ஒரு காலத்தில் பவுத்தர்களின் கோட்டமாக விளங்கியது. கி.பி. 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவான்சுவாங் என்ற சீன யாத்திரீகர் காஞ்சிபுரத்தில் நூறு பவுத்தப் பள்ளி களும், ஆயிரம் பிட்சுகளும் இருந்ததாகக் குறிப்பிட் டுள்ளார். காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் எனும் பெயரில் உள்ள சிவன் கோயில் தொடக்கத்தில் புத்தர் கோயிலாக இருந்தது. இக்கோயிலின் முன் கோபுரத்து அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இருப்பதை இன்றும் காணலாம். காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஒரு காலத்தில் பவுத்தரின் தாராதேவி ஆலயமாகும்.

பிற்காலத்தில் இவை எல்லாம் அடிச்சுவடு தெரியாமல் ஆரிய சதிகாரர்களால் அழிக்கப்பட்டு விட்டன என்பது தான் வரலாறு. மேலும் தகவல் அறிய விரும்புவோர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலான பவுத்தமும் தமிழும் என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.பவுத்தத்தை அழித்து ஆரியம் குடி கொண்ட ஆரிய பிராமணர்களின் வெறிச்சின்னம் தான் காஞ்சி சங்கரமடமாகும்.

அதுமட்டும் அல்ல சிறீரங்கம் கோயிலும் ஒரு காலத்தில் பவுத்தக் கோயிலாகவே இருந்திருக்கின்றது என்று ஆதாரங்கள் பேசுகின்றன. நாகைப்பட்டினத்தில் இருந்த அய்ம் பொன்னாலான பவுத்த சிலையைத் திருடிக் கொண்டு வந்து சிறீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு மதில்சுவர் எழுப்பினான் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்.(ஆதாரம் : தஞ்சைவாணன் கோவை).

சிந்திக்க; இப்படி பவுத்த கோவில்களை இடித்து இந்த வந்தேறி பிராமணர்கள் ஹிந்து கோவில்களை கட்டி இருகிறார்கள். ஹிந்து மதம் என்பது இந்த ஆரிய வந்தேறி கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. இவர்கள் மக்களை மதத்தை சொல்லி மூடநம்பிக்கைகளை சொல்லி, சில மேஜிக் வித்தைகளை காட்டி ஏமாற்றி, மத மாட்ச்சாரியங்கள் பேசி வர்ணாசிரம கொள்கைகள் மூலம் மக்களை பிளந்து, சிறு கூட்டமான இவர்கள் இந்தியாவின் எல்லா உயர் பீடங்களிலும் வீற்றிருகிரார்கள். என்று இவர்கள் சூழ்ச்சி முரியடிக்கபடுமோ அன்றுதான் இந்தியா ஒளிரமுடியும்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பற்றிய நூல்: வைகோ வெளியிட்டார்.

டெல்லியில் நடந்த வைகோவின் Yes ; we Can என்ற புத்தக வெளியீட்டு விழாவில் வைகோவை பிறவி போராளி என காஷ்மீரின் பாரூக் அப்துல்லா விளித்துள்ளார்."Yes we Can" என்ற இந்த புத்தகம் அமெரிக்காவின் கருப்பு இன தலைவர் இப்போதைய அதன் அதிபர் ஒபாமாவை பற்றியது. அவரது வாழ்க்கை வரலாற்றை கூறும் நூலாக வைகோ இதனை மதிமுக வின் வார இதழான சங்கொலியில் எழுதினார்.

மேலும் இந்த விழாவில் பங்கேற்று கொண்டு பேசிய, பஞ்சாப் துணை முதல்வர் பாதல் , வைகோ தமிழர்களிர்க்காக தம் அரசியல் பணிகளில் பலவாறு தியாகங்களை செய்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.மேலும் இந்த விழாவில், ஹர்யான முன்னாள் முதல்வர் ஒம் பிரகாஷ் சவுதாலா, தெலுகு தேசம் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் நம்ம நாகேஸ்வர ராவ் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பதவி பற்றிய ஒருகவிதை.


பதவி
-----
ஓட்டுப் போட
பணம் கொடுத்தேன்
பதவியை தந்தார்கள்
கொடுத்த பணத்தை
திரும்ப எடுத்தேன்
பதவியை கேட்டார்கள்,...
பார் முழுதும் பழித்தாலும்
படைத்தவனே கேட்டாலும்
பதவியை தரமாட்டேன். -- நன்றி: Aaryan66

Nov 30, 2010

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதான பாசிச அடக்குமுறை.

ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த 1992-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசு இத்தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இலங்கை அரசே புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், இங்கு மீண்டும் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க எந்த நியாயமுமில்லை.

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதாக அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதை அமெரிக்க அரசு தடுக்கவோ அவ்வமைப்பின் செயல்பாடுகளை முடக்கவோ இல்லை. ஆனால், அவ்வமைப்பை அபாயகரமானதாகச் சித்தரிக்கிறது இந்தியா. பிளவுவாத, பிரிவினைவாத, பயங்கரவாத, தீவிரவாதப் பீதியூட்டி அரசியல் ஆதாயமடைவதே பார்ப்பன பாசிச சக்திகளின் நிரந்தரக் கொள்கையாக உள்ளது. தேவையானபோது அரசியல் எதிரிகள் மீது கருப்புச் சட்டங்களை ஏவிவிட்டுப் பழிவாங்குவதே அவற்றின் நடைமுறையாக உள்ளது.

தமிழகத்தில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தடையை நீட்டிப்பதற்கான முகாந்திரங்களை உருவாக்கும் நோக்கத்தில் புலி ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குகள் போடுவதை உளவுத்துறை போலீசார் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். புலி ஆதரவாளர்கள் மீது போடப்பட்டுள்ள எந்த வழக்கும் எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு ராஜீவ் கொலை மட்டுமே ஒரே காரணமாகக் காட்டப்படுகிறதே தவிர, தகுந்த தடயங்கள் ஆதாரங்கள் இதுவரை முன்வைக்கப்படவுமில்லை.

இத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து ஈழம் என்று பேசினாலே குற்றமாகி, தடா – பொடா சட்டங்களின் மூலம் தமிழனின் வாயை மூடியது இந்திய அரசு. ஈழ அகதிகள் அனைவரும் புலி ஆதரவாளர்களாகச் சித்தரிக்கப்பட்டு வதைக்கப்பட்டனர். பொடா சட்டத்தின் கீழ் சிறையிடப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டு, ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் இயக்கத்தினர் அனைவரும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். பொதுகூட்டம் நடத்தக்கூட ஈழ விடுதலை ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெறவேண்டியுள்ளது. 19 ஆண்டுகளாகியும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நளினி, இன்னமும் விடுதலை செய்யப்படாத கொடுமை தொடர்கிறது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய இன உரிமைப் போராட்டங்களை மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், பூடான் முதலான அண்டை நாடுகளிலும் தலையிட்டு விடுதலைப் போராட்டங்களையும் இயக்கங்களையும் ஒடுக்கி வரும் தெற்காசியாவின் பிற்போக்கு எதிர்ப்புரட்சி கோட்டையாக திகழ்கிறது இந்திய அரசு. தமிழக தமிழினத்துக்கும் ஈழத் தமிழினத்துக்கும் இந்தியா என்றும் எதிரிதான். இத்தடை நீட்டிப்புக்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

உடம்பு ஸ்லிம்மா அழகா இருக்க...

***தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்:

இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம்.

*மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-

***தவிர்க்க வேண்டியவைகள்:
1. முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது இப்படி ஏதாவது பதிவு போடணும் என்றோ கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க.

*2. அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க.

*3. உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.

*4. வீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும்.

*5. மதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம்.

***அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்

இடுப்பில்:
1. பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.

*2. நல்ல நடைபயிற்சி மிக முக்கியம்.

*3. நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.)

*4. நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும10 முறை செய்யவும்.

*5. இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும்.

*6. எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும்.

*7. தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும்.

***இடுப்பு மற்றும் தொடைக்கு:

1. சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும்.

*2. நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி செய்யவும்.

*3. நன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.

***கைகளுக்கு:

1. இதுக்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை சரியாக செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும். இதுவே நல்ல பயிற்சி. முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.

***கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:

*1. சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை.
இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 10 முறை செய்யவும்.

*2. முகத்தை இட-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும்.

*3. முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது...

*தொடர்ந்து செய்யுங்கள் பலன் நிச்சயம்.....

நன்றி : களஞ்சியம்

காஞ்சி மடமும் அதன் வரலாற்று புரட்டும்: ஒரு சமூக பார்வை.

அயோக்கியனுக்காவது "சட்டத்தின் முன் மாட்டிக் கொண்டவன் என்ற அடையாளம் உண்டு. ஆனால் "கும்பகோண மடம்' என்றொரு கேடுகெட்ட திருட்டுக் கும்பல் இருக்கிறதே அதற்கொரு ஒழுங்கான முகவரி கிடையாது. அது நிறுவப்பட்டு சுமார் 160 ஆண்டுகள் இருக்கலாம்; தான்தான் காஞ்சிமடம், ஆதிசங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கே தனக்கென்று (ஸ்வயம் மடம், மத்தியமடம்) அந்த மடத்தைக் கட்டியதாக ஒரு புளுகை அவிழ்த்துவிட்டு திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. ஆதிசங்கரரின் மற்ற நான்கு மடங்களின் கண் முன்னாலேயே இதைச் சொல்வது மட்டுமல்லாமல், இன்றுவரை அவை அனைத்துமே தனக்குக் கீழ் அடங்கிய கிளை மடங்கள் என்று கம்பீரமாக, ஒய்யாரமாகப் பிதற்றிக் கொண்டும் இருக்கிறது.

இந்த வேடதாரியைப் பார்த்த பா.ஜ.க.வே கொஞ்சம் மிரண்டு போனது; ""ஒரு 160 வருசத்தை 2500 வருசமாக்கி என்ன வித்தை காட்டுகிறானடா இந்த ஜெகஜாலக் கில்லாடி'' என்று வியந்து காஞ்சி மடத்தானிடம் வந்து சரணடைந்து விழுந்து விட்டது.அந்தப் பொய்கள், புரட்டுக்கள் பற்றிப் பல நூல்கள் வந்துவிட்டன. திராவிடர் கழகத்திலிருந்து கி. வீரமணி எழுதிய "சங்கராச்சாரி யார்?', அருணன் எழுதிய "சங்கரமடத்தின் உண்மை வரலாறு' போன்றவை குறிப்பிடப்பட வேண்டியவை.

பின்னாளில் "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் அங்கீகாரம் கோரியபோது அது மறுக்கப்பட்டது. சாமி ஜெயிலுக்குப் போவதா? என்று கேட்கிறார்களே?'' என்று கேட்டபோது, ஜெயேந்திர சுப்பிரமணி சிறையிலிருந்தே விளக்கம் கொடுத்தார். ""ஸ்ரீராம பிரானுக்கே மானுட அவதாரம் எடுத்தபோது முன் கருமவினை தொடர்ந்ததல்லவா, அதுபோல நானும் அனுபவிக்கிறேன்'' என்றார். திருட்டுச் செய்யலாம், கொலை செய்யலாம், அடுத்தவர் மனைவியைப் பெண்டாளலாம் அதற்கும் மாயாவாத விளக்கம் உண்டு.

இப்போது சொல்லுங்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இந்தக் காஞ்சி சங்கரமடத்தைத் தேடி ஓடிவந்தது பொருத்தம்தானே? அவர்களின் பாணியிலேயே திருப்பிப் போடுவதானால், காஞ்சிமடம் 2500 ஆண்டுதானா என்பதற்கான சான்று தேடுவதற்காகத் அந்த இடத்தையே இடித்துப் தொல்பொருள் ஆராட்சி செய்து பார்த்து விட்டால் என்ன? புதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமா? அல்லது, புதிய கிரிமினல் கேஸ்களுக்கான ஆதாரங்களாக ஏதாவது சவங்கள், கிவங்கள் கிடைக்குமா? எப்படி இருந்தாலும் பலன் கிடைக்கும்; எது நடந்தாலும் நல்லதாகத்தானே நடக்கும்?

குறிப்பு :"அயோத்திராமன் இந்த இடத்தில்தான் அவதரித்தான். இதுவே இந்துக்களின் நம்பிக்கை!'' என்ற ஒரு பொய்யைச் சொல்லி பாபர் மசூதியை இடித்து அழித்த பிறகு தோண்டிப் பார்க்கவும் ஏற்பாடு செய்தது பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். கும்பல்; ஆனால், பாராளுமன்ற அரசியலைச் செய்வதற்காக ""சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்போம்'' என்று இன்னொரு பொய்யை மக்கள் முன்னால் வீசி நாடகமும் ஆடியது.

.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... என்றால் என்ன அர்த்தம்???

Monday, November 29,2010 தெரியுமா? .“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு...
திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள். பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண். கல்யாண வீட்டில் மதுவகையுடன் மாட்டிறைச்சியும். சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.

திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.

சிந்திக்க: OH MY GOD இந்த ஆர்.எஸ்.எஸ். பாசிச ஹிந்துத்துவாவை சார்ந்தவர்கள் பசுவதை தடைச்சட்டம் என்று சொல்லுவது எல்லாம் வெறும் கண்துடைப்பு என்பது கட்டுரையை படிக்கும் போதுதான் விளங்குகிறது. போலி ஹிந்துத்துவா பேசி ஆட்சியை பிடிக்கும் மாய்மாலம் என்பது தெளிவாகிறது. வாழ்க வளமுடன் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

இந்துமதம் எங்கே போகிறது பகுதி 40: அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

தொழுகை மிகச் சிறந்த யோகா :நாராயண் ஷெட்டி.

முஸ்லிம்களின் தொழுகை முறை சிறந்த யோகா இதனை இறைவனுக்காக முழுமையாக நேர்த்தியாக கடைபிடிக்கும்போது மிகச்சிறந்த யோகா கலையாகவும் பலனளிக்கும். யோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில் அமைந்திருக்கிறது என பதஞ்சலி யோகா சமிதியின் நாராயண் ஷெட்டி அவர்கள் கூறியுள்ளார். தெற்கு கன்னடா பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மங்களபுரம் ஸ்டேட் பேங்க் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகாசன பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. நாராயண் ஷெட்டியின் மாணவர் ஒருவர் யோகா கலையை செய்து காண்பித்தார் அதன் நன்மைகளை நாராயண் ஷெட்டி அவர்கள் தெளிவாக விளக்கினார்.தேசிய அளவில் 16 மாநிலங்களில் இது போன்றதொரு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

லண்டனில் தமிழர்களால் பின்வாசல் வழியே தப்பியோடிய ராஜபக்சே!

கடும் எதிர்ப்பையும் மீறி லண்டன் வந்துள்ள ராஜபக்சேவுக்கு ஹீத்ரு விமான நிலையத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால், ராஜபக்சேவை விமான நிலையத்தின் வேறு பகுதி வழியாக போலீஸார் வேகமாக அழைத்துச் சென்றனர். இதனால் ஹீத்ரூ விமான நிலையமே பரபரப்பானது.

உலகிலேயே மிகவும் பரபரப்பான, பிசியான ஹீத்ரூ விமான நிலையத்தை நேற்று தமிழர்களின் ‘படையெடுப்பு’ பெரும் பரபரப்பாக்கி விட்டது. ஒரு நாட்டின் தலைவரை இப்படி புறவாசல் வழியாக கூட்டிச் சென்றது ஹீத்ரூ விமான நிலைய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. லண்டனுக்கு இனி ஒரு சிங்களத் தலைவர் படு சுதந்திரமாக வந்து போவது எளிதான காரியமல்ல என்பதை ஈழத் தமிழர்கள் நேற்று ராஜபக்சேவுக்குக் காட்டி விட்டனர்.

இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது: இந்திய அரசு பயங்கரவாத சட்டங்கள்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
ஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை” என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.சட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.

சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது. இந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

Nov 29, 2010

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! – வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் I

நரேந்திர மோடி (கேடி) பிஜெபி அரசும் காவிக்கும்பலும், கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்ப்பிரஸ் துக்கத்தைத்தான்,.. 2002 ல் குஜராத்தில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்பட்ட கொடூரக் கொலை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் ஆகியவற்றிற்க்கு காரணமாக காட்டிக் கொண்டிருக்கிறது. தெஹெல்காவின் ஆறுமாத புலனாய்வில் இதன் பின்னணியில் உள்ள பொய்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. நரேந்திர மோடி அரசாங்கமே அடியாட்களுக்கு உத்தரவுகளும், லஞ்சமும் கொடுத்து இந்த கலவரத்தை நடத்தியது என்ற கலவரத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.இதோ நடந்ததாக கண்டறியப்பட்ட உண்மைகள்:

காவல் துறையின் வாதம்:

1. சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் சபர்மதி எக்ஸ்ப்பிரஸ்ஸின் எஸ்-6 பெட்டியை February 27, 2002 ல் சதிசெய்து கொளுத்தினார்கள். (கவனிக்க: எதேனும் ஒரு பெட்டியை அல்ல. குறிப்பாக எஸ்-6 பெட்டியை ).

2. முஹம்மது ஹுஸைன், அப்பொதைய கோத்ரா முனிசிபல் கவுன்சில் தலைவர், இரண்டு முஸ்லிம் முனிசிபல் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த ரயில் பெட்டியை எரிக்கும் குழுவில் இருந்து, எஸ்-6 பெட்டியை எரிக்க தூண்டினார்கள்.

3. போலீஸின் கூற்றுப்படி, எராளமான பெட்ரோல் எஸ்-6 ன் தளத்தில் ஊற்றி, பின் கொளுத்தப்பட்டது. இதற்க்காக 140 லிட்டர் பெட்ரோல் பிப்ரவரி 28ம் தியதி, கலாபாய் என்ற ஒரு முஸ்லிமுக்கு சொந்தமான பெட்ரோல் பம்பில் இருந்து வாங்கப்பட்டது. பின் 9 முஸ்லிம் கூலி தொழிலகளாலும், ஒரு ஹிந்து தொழிலாளியாலும் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் நின்றுகொண்டிருந்த காபின் A க்கு கொண்டுவரப்பட்டது.

4. சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியின் இணைப்பை மூன்று முஸ்லிம் தொழிலாளர்கள் துண்டித்ததால், ரயில் நிறுத்தப்பட்டது.

5. சில தொழிலாளிகள் 6 இன்ச் கனமுள்ள இரு பெட்டிகளையும் இணக்கும் தொடர்பை சாதாரண கத்தரிக்கோலால் வெட்டிய பிறகு எஸ்-6 க்குள் நுழைந்து பெட்டியின் தரையில் பெட்ரோலை ஊற்றினார்கள். கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் ஊற்றப்பட்டது. மேற்சொன்ன காவல் துறையின் ‘தியரி’ க்கான சாட்சிகள் :

1. போலீஸ் பெரும்பாலும் சம்பவத்தை நேரில் பார்த்த 9 பிஜேபி உறுப்பினர்களின் சாட்சியையே முக்கியமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. இவர்கள் 41 முஸ்லிம்களை அடையாளம் காட்டியிருக்கிறர்கள். (ஒரு பிஜெபி உறுப்பினர் திலீப் தேஸாதியா, பிறகு தன்னுடைய வாக்குமூலத்தை முழுவதுமாக வாபஸ் வாங்கிக்கொண்டார்.)

2. எஸ்-6 ல் பயணம் செய்த கரசேவகர்களின் வாக்குமூலங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

3. அங்கு ஏற்பட்ட புகையால் மயங்கிவிட்டதாகவும், என்ன நடந்தது என்றே காண இயலவில்லை என்றும் சொன்ன இரண்டு கரசேவர்கள், ஆறு மாதங்களுக்கு அப்புறம், தங்கள் நிலையை மாற்றி வெளியிலிருந்து எதோ திராவகம் தரையில் ஊற்றப்பட்டதை பார்த்ததாக சொன்னார்கள். இந்த வாக்குமூலம் தான் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்க்கு 15 தினங்களுக்குமுன் சேர்க்கப்பட்டு – போலீஸ் தியரியின் திடீர் சக்தியாக மாற்றப்பட்டுள்ளது.

4. போரென்சிக் ரிபோர்டின்படி, ” 60 லிட்டர் பெட்ரோல் தென் திசையிலிருந்து பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டிருக்கலாம் ” என்பது.

5. ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு, ஒரு டீக் கடை காரர், அஜய் பாரியா என்ற ஒரு சாட்சியை போலீஸ் திடீரென்று கொண்டு வந்து நிறுத்தியது. இந்த அஜய் பாரியா, தன்னை 9 முஸ்லிம் தொழிலாளிகள் எஸ்-6 பெட்டியில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்குமாறு கட்டயப்படுத்தியதாக விளம்பினார்.

6. இரண்டு முஸ்லிம் தொழிலாளர்கள் கைது செய்த ஒரு வாரத்திற்க்கப்புறம், ட்ரயின் இணைப்பைத் தாங்கள் துண்டித்ததாக ஒப்புக்கொண்டார்கள். அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

7. இதே போல் இன்னொரு முஸ்லிம் தொழிலாளி எஸ்-6 பெட்டியை கொளுத்திய கும்பலில் தானும் இருந்ததாக ஒப்புக்கொண்ட (?) வர், அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்.

8. சம்பவம் நடந்து 1 வருடம் கழித்து போலிஸ் இரண்டு இந்து சேல்ஸ்மேன்களை ஆஜர் படுத்தியது. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல்.

இவர்கள் இருவர்தான், பெட்ரொல் பம்பிலிருந்து 140 லிட்டர் பெட்ரோலை விற்ற சேல்ஸ்மேன்கள். இவர்க்ளுள் ஒருவர், அன்றைய தினத்தில் அப்படி யாருக்கும்ம் பெட்ரோல் விற்கவில்லை என்று தெரிவித்தார்.

9. இன்னொரு போலிஸின் சாட்சி, சம்பவ இடத்தில் இருந்த மற்ற முஸ்லிம் தலைவர்களுடன் மவுலவி யாக்கூப் பஞ்சாபி என்பவரும் கொளுத்த தூண்டிவிட்டார் என்று சாட்சி சொன்னார். பின்பு பொலீஸ் பஞ்சாபியை கைது செய்து பின் விட்டுவிட்டது. காரணம் பஞ்சாபி அந்த நாட்களில் சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதே.

10. இன்னும் இதில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், கொளுத்தியதாகவும் ‘ஒப்புக்கொண்ட’ ஆறு முஸ்லிம் தொழிலாளிகள், பின்னர் தங்களுடைய வாக்கு மூலத்தை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

இனி தெஹல்கா கண்டறிந்த கொடுமையான உண்மைகள்…

1. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல் என்ற இரு பெட்ரோல் பம்ப் சேல்ஸ்மேன்களுக்கும், தலைமை விசாரணை அதிகாரியே லஞ்சம் கொடுத்து, இப்படிச் சொல்லவும், தவறான நபர்களை அடையாளம் காட்டவும் பணித்தார். தெஹெல்க்காவின் கேமராவில் அந்த அதிகாரியே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 50,000 ரூபாய் இதற்க்காக இலஞ்சமாக கொடுக்கப்பட்டது.

2. சம்பவத்தை நேரில் பார்த்ததாக சொல்லப்பட்ட 9 பிஜெபி நபர்களும் அப்பொழுது அந்த இடத்திலேயே இருந்திருக்கவில்லை. தெஹெல்க்கா அவர்களுள் இருவரை – Kakul Pathak and Murli Mulchandani – பேட்டி கண்டதில் தாங்கள் அந்த இடத்திலேயே இல்லை என்றும், தாங்கள் பெயர் இருப்பது தாங்களுக்கே தெரியாது என்றும் கூறினர்.

3. பெட்டியின் இணைப்பை துண்டித்ததாக சொல்லப்பட்ட இரு முஸ்லிம் தொழிலாளிகளும் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், (பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்தியது உட்பட ) தெஹெல்க்காவிடம் வாக்குமூலமாக தந்தனர்.

4. பெட்ரோல் எப்படி எங்கிருந்து ஊற்றப்பட்டது? எப்படி எரிக்கப்பட்டது? என்ற போலீஸின் கூற்றும், போரென்சிக் லாபின் கூற்றும் முற்றிலும் மாறுபடுகிறது.

இது இந்துத்வா நடத்திய கபட நாடகம் என்று வெளிச்சத்திற்க்கு வந்தது. இதுதான் துவக்கம் இனிதான் காவிக்கும்பலின் நரபலி வேட்டை, கொலைகள், கற்பழிப்புகள், சிசுக் கொலைகள், அதை நடத்திய விதம், பேட்டிகள், செய்முறைகள், உத்தரவுகள் எல்லாம் தொடர்ந்து வெளிவர உள்ளன.

சிந்திக்க: ரயிலை கொளுத்தி , ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பதும், முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடுவதும், குஜராத்தின் ஆட்சியில் நிரந்தரமாக அமர்ந்திருப்பதும் தான் மோடியின் எண்ணம் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது. இவர்கள் தங்கள் ஹிந்துவா சிந்தனையை பரப்புவதற்கும், ஆட்சி கட்டில் நிரந்தரமாக அமர்ந்திருக்கவும் சொந்த மதத்தை சேர்ந்தவர்களையும், தங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களையும் பலிகொடுக்க தயங்க மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இவர்கள் பயங்கரவாதி ஹிட்லரின் வழிதோன்றல்கள்.

நன்றி : கதிரவன்

காபியுடன் சேர்க்கும் சர்க்கரை ஞாபக சக்தியை அதிகரிக்கும்

பொதுவாக காபியுடன் சர்க்கரை சேர்க்க கூடாது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் என கூறுவது உண்டு. ஆனால் காபியுடன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதன்மூலம் ஞாபகசக்தி அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், காபியில் உள்ள “காபைன்” என்ற பொருளுடன் சர்க்கரை சேர்க்கப் படும்போது மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதன்மூலம் ஞாபகசக்தி கூடுதலாகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு 40 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. முதலில் அவர்களுக்கு காபி மட்டும் கொடுக்கப்பட்டது. பின்னர் காபியுடன் சர்க்கரையும் சேர்த்து வழங்கப்பட்டது. இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் காபியுடன் சர்க்கரை சேர்க்கப்படும் பட்சத்தில் ஞாபகசக்தி அதிகரிப்பது தெரியவந்துள்ளது

புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினால் மரணிப்பவர்கள் ஆறு லட்சம் பேர்

வாஷிங்டன் : புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம்பேர் மரணிக்கின்றார்கள் என உலக சுகாதாரமையம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.
இவ்வாய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகளாவர். குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது. 165000 குழந்தைகள் புகைபிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பதனால் மரணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சார்ந்தவர்கள்.

சொந்த வீடுகளில் வைத்துதான் குழந்தைகளை இதர நபர்கள் விடும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகை பிடிப்பவர்களில்லாத வீடுகளில் வசிக்கும் குழந்தைகளை விட புகைபிடிப்போர் வசிக்கும் வீடுகளில் வாழும் குழந்தைகளின் நுரையீரல்கள் மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் உலகமுழுவதும் 40 சதவீத குழந்தைகளும், 33 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் மறைமுக புகையினால் பலியாகியுள்ளனர்.

நன்றி : தேஜஸ்

நேருவின் மீதும் வழக்குத் தொடருங்கள்: அருந்ததிராய் ஆவேசம்.

புதுடெல்லி,நவ.29:கஷ்மீர் குறித்து நான் கூறிய கருத்துக்களை தேசத்துரோக குற்றமாக கருதி வழக்கு பதிவுச்செய்ய வேண்டும் என உத்தரவிட்ட டெல்லி நீதிமன்றம், இதைப்போன்ற வழக்கை இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு மீதும் அவருடைய மரணத்திற்கு பிறகு பதிவுச் செய்யட்டும் என பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் தெரிவித்துள்ளார்.

கஷ்மீர் குறித்து நேரு வெளியிட்ட அறிக்கைகளும், அவர் அனுப்பிய தந்திகளின் தகவல்களையும் இதற்காக அருந்திராய் சுட்டிக் காட்டுகிறார்.நேருவின் சில முக்கியமான நிலைப்பாடுகளை அருந்ததிராய் தனது நிலைப்பாடுகளுக்கு ஆதாரமாக சுட்டிக் காட்டுகிறார்.

1947 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் இவ்வாறு கூறுகிறார்: 'இந்தியாவுடன் இணைவதற்காக கஷ்மீரை ஈர்க்கவேண்டும் என்பதற்காக அல்ல நாங்கள் இத்தகையதொரு குழப்பமான காலக்கட்டத்தில் நாங்கள் அம்மாநிலத்திற்கு உதவியது.

மாறாக, இவ்விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாடு என்னவெனில், ஏதேனும் சர்ச்சைக்குரிய பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென்றால் அது அப்பகுதி மக்களின் பரிபூரண சம்மதத்துடன்தான் நடைபெறும். இதுதான் எக்காலத்திலும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என நேரு அந்த தந்தியில் குறிப்பிடுகிறார்.

அதே ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பிய மற்றொரு தந்தியில் நேரு தெளிவுப்படுத்துவது என்னவெனில், மகாராஜாவின் கோரிக்கையின்படி கஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு ஒப்புக்கொள்வதாகவும், ஆனால், கஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீராகும் வரைதான் இது என்ற நிபந்தனையின் அடிப்படையிலாகும்.

கஷ்மீர் இந்தியாவுடன் இணைவதைக் குறித்து தீர்மானிக்க வேண்டியது கஷ்மீர் மக்கள்தான் என 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 2,3 ஆகிய தேதிகளில் நேரு வெளியிட்ட அறிக்கையாகும். கஷ்மீரில் சட்டம் ஒழுங்கும், சமாதானமும் சீரானால் உடனடியாக ஐ.நாவின் மேற்பார்வையில் இணைப்புத் தொடர்பாக கஷ்மீர் மக்களின் அபிப்ராய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என நேரு திட்டவட்டமாக தெரிவித்ததாக அருந்ததிராய் சுட்டிக் காட்டுகிறார்.

1947ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி இந்திய அரசியல் சட்ட அவையில் வைத்து நேரு வெளியிட்ட மற்றொரு அறிக்கையின் சுருக்கம் என்னவெனில், கஷ்மீரின் உண்மையான பிரச்சனை அம்மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டியது ராணுவமா? அல்லது கஷ்மீர் மக்களின் விருப்பமா? என்பதாகும்.

மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க கஷ்மீரிகளுக்கு வாய்ப்பு ஏற்படும்பொழுது பாரபட்சமற்ற அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடத்தட்டும் என நேரு அறிவித்தார்.

கஷ்மீர் மக்களின் மனோநிலைக்கு மாற்றமான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காது எனவும் நேரு தெளிவுப்படுத்தினார். பிரச்சனையை தீர்ப்பதற்கு கடைசி நிலைப்பாடு முதலாவதாக கஷ்மீர் மக்களின் நிலைப்பாடுதான் எனவும், இரண்டாவதாக மட்டுமே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே பேச்சுவார்த்தை எனவும் நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.

1955 ஆம் ஆண்டில் மக்களவையில் நேரு கூறியதாவது, கஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டையிடுவதற்கான பிரச்சனை அல்ல என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள். அம்மாநிலத்திற்கு தனிப்பட்ட மனமும் தன்மையும் உண்டு. எனத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பேசிய நேரு தனது உரையில் கஷ்மீர் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க பாராளுமன்றத்திற்கு கூட அதிகாரமில்லை. இறுதி தீர்மானம் எடுக்கவேண்டியது கஷ்மீர் மக்கள்தான் என்பதாகும். இதனை சுட்டிக் காட்டுகிறார் அருந்ததிராய்.

மீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் - பழ.நெடுமாறன்.

ஹிந்து பயங்கரவாத அமைப்புகளை பாலூட்டி வளர்த்ததே நம்ம காங்கிரஸ் கட்சிதான்.

“பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருக்கும் காவி பயங்கரவாதம் நமது நாட்டில் புதிதாகத் தலை தூக்கியுள்ளது” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறினார். இந்து பயங்கரவாத அமைப்பினர் உடனே துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டனர். நாடாளுமன்ற மேலவையை ஒருநாள் இயங்கவிடாமல் முடக்கினர்.

காங்கிரசுக் கட்சியின் இளைய தலைவரான ராகுல் காந்தி அண்மையில், “ஆர்.எஸ்.எஸ்., சிமி இரண்டு அமைப்புகளுமே அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்டவை. சிமி தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்படவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்”என்று பேட்டி அளித்தார். பா.ஜ.க. கட்சியோ, “வரலாறு தெரியாமல் பேசாதே” எனக் கூச்சல் போட்டு ராகுலுக்கு சில நூல்களையும் அனுப்பி வைத்தது.

அயோத்தி தீர்ப்பு வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன், “ராமர் கோவில் கட்டுவது என்பது பெரும்பாலான இந்துக்களின் உணர்வு” என அத்வானி குறிப்பிட்டதற்கு காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, “பழைய காயத்தை அத்வானி கிளற வேண்டாம்” எனச் சீறினார். அயோத்தி தீர்ப்பு வெளிவந்தவுடன் ப.சிதம்பரம், “மசூதி இடிக்கப்பட்டதைத் தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை. என்னைப் பொருத்தவரையில் அந்த குற்றச்செயல் அப்படியேதான் இருக்கிறது” எனக் ‘கடுமையாக’ப் பேசினார்.

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராகச் சீறுவதாக ப.சிதம்பரமும், ராகுல் காந்தியும் தீவிரமாக நடிக்கிறார்களே, அவர்களின் கட்சிதான் இந்த நாட்டில் இந்து மதவெறிப் பாசிசம் உருவாகி வளர்வதற்கு அடிக்கொள்ளியாக இருந்து வருகிறது. காந்தி படுகொலையில் இருந்து குஜராத் இனப்படுகொலை வரை இந்துமதவெறியைச் சீராட்டி வளர்த்தும் இருக்கிறது.

“ராமராஜ்ஜியம் அமைப்போம்”, “பசுவதை தடுப்போம்”, “கிறித்துவ மதமாற்றத்தை எதிர்ப்போம்”, “வர்ணாசிரம தர்மம் காப்போம்” போன்ற ஆர்.எஸ்.எஸ்.-க்கு நெருக்கமான கொள்கைகள்தான் காந்திக்கும் நெருக்கமானதாக இருந்தன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபையைச் சேர்ந்த மத வெறியர்கள் காங்கிரசிலும் உறுப்பினராவது, காந்தி காலத்தில் முரண்பாடானதாக இருந்ததில்லை. பாபர் மசூதி இடிப்புக்குத் துணை நின்ற காங்கிரசின் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவே அப்போதைய காக்கி டவுசர்வாலாதான். முசுலீம் மதவாத தேசியத்தை வளர்த்தது முசுலீம் லீக் என்றால், இந்து தேசியத்தை வளர்த்தது காங்கிரசு.

காந்தி படுகொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கத் துணைநின்றவர், காங்கிரசின் துணைப்பிரதமர் பட்டேல். 1947 -இல் சோமநாதபுரம் கோவிலைப் புதுப்பிக்கும் அரசியலைக் கையில் எடுத்தவர்களும் காங்கிரசின் வல்லபாய் பட்டேலும், குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தும்தான். இக்கோவிலில் இருந்துதான் 1990 -இல் அத்வானி ரதயாத்திரை தொடங்கினார்.

பெரும்பாலான வட மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள “பசுவதைத் தடைச் சட்டம்”, காங்கிரசு அந்தந்த மாநிலங்களில் ஆட்சியில் இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டன. குஜராத், உ.பி., பீகார் மாநிலங்களில் நடந்த மதக் கலவரங்களில் இளைஞர் காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ்.ஸூம் கைகோர்த்துக் கொண்டு முசுலீம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும்; மீரட், கான்பூர், தில்லி நிஜாமுதீன் ஆகிய இடங்களில் 80-களில் நடத்தப்பட்ட முஸ்லிம் படுகொலைகளில் காங்கிரசின் சேவாதளம் ஆற்றிய பங்குகள் பற்றியும் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. நெருக்கடி காலத்தில் சஞ்ச காந்தி முசுலீம் மக்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யக் கட்டாயப்படுத்தியதும், துருக்மான் கேட் பகுதியில் இருந்து ஏழை முசுலீம்களை அடித்து விரட்டியதும் என்றென்றும் மறக்க முடியாதவை.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபொழுது, இந்துக்களை தாஜா பண்ணுவதற்காக பாபர் மசூதி வளாகத்தினுள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை வழிபட அனுமதிக்கும் வண்ணம் பூட்டப்பட்டுக் கிடந்த அந்த மசூதி வளாகத்தை இந்துக்களுக்குத் திறந்துவிட்டார். இதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் ராமஜென்ம பூமியை முன்வைத்து இந்து மதவெறிப் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்துவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார், அவர். அதன் தொடர்ச்சியாக வட இந்தியாவெங்கும் பதற்றமும், படுகொலைகளும் பற்றிப் படர்ந்தன. 1990-இல் ரத யாத்திரை நடத்திய அத்வானி பீகாரில் கைதானதைத் தொடர்ந்து வி.பி.சிங்கின் அரசுக்கு பா.ஜ.க. ஆதரவை விலக்கிக்கொண்டபொழுது, பா.ஜ.க.-வோடு காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டது.

1992-இல் மசூதி இடிப்பின்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசு, ஒரு இலட்சம் துணை இராணுவத்தினரை மசூதிக்கு அருகில் நிறுத்தி வைத்து மசூதி முற்றிலுமாகத் தகர்க்கப்படுவதற்குப் ‘பாதுகாப்பு’ கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் ஆகிய இந்து மதவெறி அமைப்புகளைத் தடை செய்வது போலப் போக்குக் காட்டி விட்டு, ஆறே மாதங்களில் தடையை விலக்கியது. ஆனால் அவர்களுடன் சேர்த்து தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் தடைகளை நீக்காமல் நிரந்தரமாக்கியது.

மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பை நகரத்தில் சிவசேனா, பா.ஜ.க. கும்பல் ஒரு பயங்கர கலவரத்தை நடத்தி நூற்றுக்கணக்கான முசுலீம்களின் உயிரைப் பறித்தபொழுது, காங்கிரசுதான் அம்மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்தது. அக்கலவரம் நடந்தபொழுது அதனைத் தடுக்காத காங்கிரசு, பின்னர் அதனை விசாரிக்க சிறீகிருஷ்ணா கமிசனை நியமித்தது. அக்கமிஷன் பால் தாக்கரே முதல் போலீஸ் கமிஷனர் ஆர்.டி.தியாகி வரை பலரைக் குற்றஞ்சாட்டி இருந்தது. கலவரத்தின் பின் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. – சிவசேனா கும்பல் அக்கமிசனின் அறிக்கையை முடக்கி வைத்தது.

“கிருஷ்ணா கமிசன் அறிக்கையை நிறைவேற்றுவோம்” என வாக்குறுதி அளித்து தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களின் முதுகில்தான் குத்தியது. பால் தாக்கரே உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்யாததோடு, கிருஷ்ணா கமிசனால் குற்றஞ்சாட்டப்பட்ட பல போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்து கௌரவித்தது, காங்கிரசு.

ரோஹிண்டன் மிஸ்த்ரி என்ற நாவலாசிரியர், இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனாவின் இனவெறி அரசியலை விமர்சித்து எழுதிய “சச் எ லாங் ஜர்னி” (Such AS Long Journey) என்ற ஆங்கில நாவல் மும்பை பல்கலைக்கழகத்தின் இளங்கலை ஆங்கில பட்டப்படிப்புக்கான பாடத் திட்டத்தில் இருந்து வந்தது. தற்பொழுது அப்பல்கலைக்கழகத்தில் படித்து வரும் பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா தாக்கரே அந்நாவலைப் பாடத்திட்டத்தில் இருந்து விலக்கக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியவுடனேயே, அந்நூலைப் பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக்கொண்டு சிவசேனாவிடம் அடிபணிந்தது, காங்கிரசு.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரித்துப் பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோக வழக்குப் போடத் தயாராகும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைக் கக்கி வரும் நரேந்திர மோடி, பிரவீண் தொகாடியா போன்றோர் மீது ஒரு பெட்டி கேஸைப் போடக்கூடத் துணிந்ததில்லை. இது மட்டுமா, சோராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹன் ஆகியோரைப் போலி என்கவுண்டரில் நரேந்திர மோடி அரசு கொன்றதில் காங்கிரசிற்கும் கணிசமான பங்குண்டு.

இவ்வாறு இந்து தேசியவெறிக்கு அடிக்கொள்ளியாக இருந்தும், இந்து மதவெறிப் பயங்கரவாதிகளைத் தப்பவைத்தும், காவி பயங்கரவாதத்தின் பங்காளியாகவும் விளங்கும் காங்கிரசின் முசுலீம் விரோத அரசியலை 50 ஆண்டுகளாகப் பார்த்துவரும் முசுலீம் வாக்காளர்கள் காங்கிரசு, பா.ஜ.க. அல்லாத பிராந்தியக் கட்சிகளின் வாக்காளர்களாக மாறிப்போ விட்ட சூழலில் அவர்களை எப்படியாவது தாஜா செய்து, பீகார், உ.பி. போன்ற மாநிலங்களில் மறுபடியும் வேரூன்றுவதற்காகத்தான் சிதம்பரமும், ராகுலும் இப்போது ஆர். எஸ்.எஸ்., பா.ஜ.க.-வுக்கு எதிராகச் சவடால் அடிக்கின்றனர்.

நன்றி : வினவு

Nov 28, 2010

சீனாவிடம் இருந்து இலங்கையை மீட்கவே கிருஷ்ணா அனுப்பப்பட்டார்! ஆனால் அது முடியாது! : பழ. நெடுமாறன்.


துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல், இலங்கைக்கு எவ்வித நிபந்தனையுமில்லாமல் பொருளாதார உதவிகளை இந்தியா வாரி வாரி வழங்கி வருகிறது. இதன் மூலம் சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்டு விடலாம் என்று இந்தியா நம்புகின்றது. ஆனால் அது இந்தியாவால் முடியாத காரியம். இலங்கை என்றும் சீனாவுடன்தான் இருக்கும். இந்தியா இந்தவிசயத்தில் ஏமாறபோகிறது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.எஸ்.எம் கிருஷ்ணா இலங்கைத் தமிழர்கள் நிலைகுறித்துப் பேசுகையில் அந்நாட்டு அரசிற்கு சாதகமாகவே பேசியதை சுட்டிக்காட்டி, இது தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகம் என்று நெடுமாறன் சாடியுள்ளார்.

மறைவாக உள்ள பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்! : வைகோ, பழ.நெடுமாறன் பேச்சு.

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தற்போது மறைவாக உள்ளார். அவர் நிச்சயம் விரைவில் வெளிப்படுவார். தமிழீழம் மலரும், என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. சென்னை தியாகராய நகரில் சனிக்கிழமை இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது.இந்த நிகழ்வில் வைகோ, பழ நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

பழ நெடுமாறன் கூறியது போல் தாய் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை 5 ம் கட்ட ஈழப்போருக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். நிறைவாகும் வரை மறைவாக இரு என கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். இப்போது மறைவாக உள்ள அவர், அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருணத்தில் வெளியில் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்”, என்றார்.

தமிழீழ போராட்டத்தை கொட்ச்சை படுத்தும் கோட்சேயின் வழிதோன்றல்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா இராணுவ பயிற்சி வழங்கியது மிகப் பெரிய தவறு ஆகும் என்று பயங்கரவாத பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான Jaswant Singh தெரிவித்து உள்ளார். அவர் புதுடில்லியில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்து உள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்தியா செய்த அத்தவறினால்தான் தமிழர்கள் இன்றும் துன்பத்தில் உழல்கின்றார்கள் என்றார்.

சிந்திக்க: தமிழர் விடுதலை போராட்டத்தை கொட்ச்சை படுத்தும் இவர்கள் பாசிச பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடிகள். இவர்கள் மதத்தின் பெயரால் ஒற்றுமையை குலைத்து இந்தியாவில் வர்ணாசிரம கொள்கையை அடிப்படையாக கொண்ட ஒரு ஆட்சியை ஏற்படுத்த துடிப்பவர்கள். இவர்கள்களின் வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் பிரிவினைகளை மறந்து இன, மத வேறுபாடுகளை மறந்து எல்லாரும் தமிழர்கள் என்ற உணர்வோடு செயல்படுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். அதனால்தான் இந்தியாவில் புலிகளுக்கு ராணுவ பயிற்சி கொடுத்தது மிகபெரிய தவறு என்று பினாத்தி உள்ளார். ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் இந்தியாவை பட்டா போட்டு கொடுத்த மாதிரி. சீக்கிரம் இவர்களுக்கு சைனாக்காரன் வைப்பான் ஆப்பு. அப்போது தெரியும் ஐயையோ தமிழர்களோடு நாம் இருந்திருக்கலாமே என்று. ராஜ பக்சே கொடுப்பான் பெரிய அல்வா.

அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்!

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

1) குடல் புண் எதனால் ஏற்படுகிறது?:

*மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

**புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

2) குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:
1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

3) குடல் புண்ணின் அறிகுறிகள்:
காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.

இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.

சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

4) குடல் புண்ணோடு சேர்ந்து நெஞ்செரிச்சல்:
சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.

இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.

சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

5) குடல் புண்ணினால் ஏற்படும் ரத்தப் போக்கு:

சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.

ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

6) குடல் புண் குணமடைய செய்ய வேண்டியவை:
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

*1.வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

*2.மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

*3.பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

*4.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

*5.இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.

*6.எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.

*7.புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

7) குடல் புண்ணுக்கு நவீன சிகிச்சைகள்:

1.செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

*2.வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

*3.அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

*4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

*5.குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

*6.குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.

நன்றி : களஞ்சியம்