Nov 20, 2010

சுவாமி அசிமானந்தா கைது! பரபரப்பு செய்தி.

நவ.20:மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி அசிமானந்தாவை௦ சிபிஐ வெள்ளிக்கிழமையன்று கைது செய்தது.சுவாமி அசிமானந்தா கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.

குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் அசிமானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்தா நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் அசிமானந்தாவுக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன

சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழச்சாறு.


லண்டன்,நவ.21:சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்வில் தெரியவருகிறது, இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது.

ஏனெனில், மாதுளம் பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர். இருப்பினும், இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்துபார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.

இந்த செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூறத்தக்கது.

பாபர் மஸ்ஜித் கட்டவிட மாட்டோம்; தொகாடியா கொக்கரிப்பு!

முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மஸ்ஜிதில் , இரவோடு இரவாக சிலை வைத்து, பின்பு ஒரு கட்டத்தில் மஸ்ஜிதை உலகறிய இடித்து தரைமட்டமாகிவிட்டு, 'நாங்கள்தான் பள்ளியை இடித்தோம்; அதற்காக பெருமைப்படுகிறோம் என்று கொக்கரித்த தீவிரவாத இந்துத்துவாக்களின் கொட்டத்தை ஒடுக்கி, அவர்களை சிறைக்கூடத்தில் தள்ள துணிவற்ற ஆட்சி தொடர்ந்து நீடிப்பதாலும், மஸ்ஜித் நிலத்தை மரத்தடி தீர்ப்பின் மூலம் தீவிரவாத இந்துத்துவாக்களுக்கு தாரை வார்க்கும் நீதிமன்ற நீதிபதிகள்[!] நாட்டில் இருப்பதாலும், தீவிரவாத இந்துத்துவாக்களின் கொக்கரிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

அயோத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள தீவிரவாத விசுவ இந்து பரிஷத் தலைவர் தீவிரவாதி தொகாடியா, அயோத்தியில் ராமர் பிறந்த இடம் இதுதான் என்பதை உறுதியாக நம்புகிறோம். இந்த இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு நாங்கள் ஒரு போதும் அனுதிக்க மாட்டோம். இங்குள்ள 67 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மிகப் பெரிய ராமர் கோவிலை கட்டுவோம். இந்துக்களும் முஸ்லிம்களும் கலாச்சார ரீதியாக ஒன்றாக வாழ முடியாது என்று முகமது அலி ஜின்னாவே கூறி இருக்கிறார். அப்படி இருக்க மசூதியும், ராமர் கோவிலும் அருகருகே எப்படி இருக்க முடியும். அயோத்தியில் மசூதியும் கட்ட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதை நிறுத்தி விட்டு ராமர் கோவில் கட்டுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசியுள்ளார் அல்ல. உளறியுள்ளார். இதன் மூலம் தங்களுக்கு சாதகமான அலகாபாத் தீர்ப்பைக் கூட தீவிரவாத இந்துத்துவாக்கள் ஏற்கத் தாயரில்லை என்பதும், அவர்களின் நோக்கம் பாபர் மஸ்ஜித் இடத்தை முற்றிலுமாக அபகரிப்பது என்பதும் தெளிவாகிறது.

இரத்தத்தில் சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை

சர்க்கரையை கண்டுபிடிக்க நவீன பரிசோதனை hba1c அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரத்தத்தில் கடந்த மூன்று மாத காலமாக ஏறி இறங்கும் சர்க்கரையின் சராசரி அளவுகோல். இது எப்படி கண்டறியப்படுகிறது என்றால், நம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களிலிருந்து பிரித்தெடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. hba1c இதுவரை ஒருவருக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா என்று கண்டறிய செய்யப்பட்டு வந்தது. இப்போது இதே பரிசோதனை ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்க சர்க்கரை நோய் கழக ஆய்வில் சர்வதேச சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

பயன்கள்

எந்த நேரம் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒரே ரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை உள்ளதா? இல்லையா என்று கண்டறிய முடியும். இரண்டு அல்லது மூன்று வேளை ரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பரிசோதனை முடிவு 6.5சதவீதத்துக்கு மேல் இருந்தால் சர்க்கரை உள்ளது என்று உறுதி செய்யலாம். 6 முதல் 6.5 சதவீதம் வரை இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். 6 சதவீதத்துக்கு கீழ் இருந்தால், சர்க்கரை இல்லை என்று கூறலாம். சர்க்கரை அளவு உண்ணும் உணவை பொருத்து மாறுபடும். பரிசோதனைக்கு முன் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் சர்க்கரை அதிகமாக காட்டும். இதை வைத்து கொண்டு ஒருவருக்கு சர்க்கரை உள்ளது என்று தீர்மானம் செய்யக் கூடாது. இதனால் தான் இந்த புதிய பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பரிசோதனை அதிநவீன கருவிகளாக பயோரேட் d-10 அல்லது immunoturbidometry முறைகளில் செய்யப்பட வேண்டும். சாதாரண முறையில் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.

உணவு முறை

நார்சத்து நிறைந்த உணவு. உதாரணம்: நான்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் மூன்று இட்லி, ஒரு கப் காய்கறி பொரியல், ஒரு கப் கூட்டு, ஒரு கப் சுண்டல், காய்கறி சாலட், பழ சாலட் சாப்பிடுவதால், சாப்பிட்ட பின் சர்க்கரை 240 மி.கி.,லிருந்து 170 மி.கி., குறைந்துள்ளது. இந்த உணவு முறையே நமது ரிசார்ட் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. காய்கறி சேர்த்து சாப்பிடுவது இட்லி ஜீரணமாகும் தன்மை குறைந்து சர்க்கரை மெதுவாக ஏறுகிறது. நார்சத்து குறைந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசி நல்லதல்ல. இந்த மாதிரி உணவு சாப்பிட்டால், குறைவான அளவு இன்சுலின் இருந்தாலும் சர்க்கரை ஏறாது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, இன்சுலின் வேலை செய்யும் திறன் அதிகம். இதனால் உடலில் குறைந்த அளவு இன்சுலின் இருந்தாலும் அது முழுமையாக திறமையாக பணி செய்ய முடியும். இன்சுலின் தசைகளுக்குள் உள்ளே குளுகோஸ் செல்ல உதவுகிறது மற்றும் தசைகளுக்குள் சென்ற குளுகோஸை சக்தியாக மாற்றுவது இன்சுலினின் முக்கிய பணி. சுரக்கும் இன்சுலின் 30 – 40 சதவீதம் தசைகளில் தான் வேலை செய்கிறது. இதற்கு உடற்பயிற்சி அவசியம்.

நன்றி : லங்கா ஸ்ரீ

பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!

பிரிட்டனில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவரிடமிருந்து சுமார் 22 ஆயிரம் பவுண்ட்களை ஏமாற்றி பிரிட்டனில் இருந்து கேரளாவைச் சேர்ந்த இந்து சாமியார் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.ஹேமா பல்சோட் (வயது 37) என்ற அந்தப் பெண் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று சங்கர் என்ற இந்து சாமியரிடம் முறையிட்டுள்ளார். உனக்கு பேய் பிடித்து உள்ளது. பேயை விரட்ட வேண்டுமெனில் பூஜை செய்ய வேண்டும் என்று சங்கர் கூறியுள்ளார்.

சாமியாரின் பேச்சை நம்பிய ஹேமா பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். உன்னுடைய குடும்ப நகைகள் அனைத்தையும் கொண்டு வா என சாமியார் கூற, பூஜை நடக்கும் இடத்தில் அதனை வைத்துள்ளார். பின்னர் ஹேமா வீட்டினுள் சென்ற போது சாமியார் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார் என்று ஹேமா கூறுகிறார்.

பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சாமியாருடன் தொடர்பில் இருந்த போது, தமது வங்கியிலிருந்து கடனாகப் பெற்று 7 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்ததாகவும், பறிபோன நகைகளின் மதிப்பு 15 ஆயிரம் பவுண்டுகளுக்கும் அதிகம் எனவும் ஹேமா கூறுகிறார். சாமியார் சங்கர் தற்போது பிரிட்டனைவிட்டு வெளியே கேரளா வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் தன்னுடைய வீட்டு வாயிலில் கிடந்த "சாமியார் சேவை" விளம்பர நோட்டீஸ் மூலமே சாமியார் சங்கரை அறிந்ததாக ஹேமா கூறுகிறார்.எத்தனை படித்தாலும் இழப்பது காசைமட்டுமல்லாது கர்ப்பையும் சேர்த்து?

பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் 1993ஆம் ஆண்டு ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதே கோவில் முன்பு பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது ராமனது படத்தை எரித்த போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்தக் கோவிலில் மேலும் ஒரு பார்ப்பன ஆதிக்கத்தை தோழர்கள் முறியடித்திருக்கின்றனர்.

கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.

இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் ‘பாதந்தாங்கிகள்’ (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். “கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு” என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.

கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், “இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்” என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.

வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன. இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

“மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!”, என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் திருவரங்க கோவில் ரெங்கா கோபுரம் முன்பாக தோழர்கள் குவிய துவங்கினர். இதை கண்டவுடன் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பட்டரின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு வெளியில் பிரம்ம ரத ஊர்வலம் நட்த்த ஏதுவாக நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி, மனித உரிமை பதுகாப்பு மைய தோழர் வழக்குரைஞர் போஜகுமார் மற்றும் ம.க.இ.க தோழர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போராட்ட்த்தை தடுக்க காவல் துறை முயன்றது.

வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.

பல நூற்றாண்டுகளாக கடவுள் உண்டென்றும் அந்த கடவுளுக்கு நிகரானவன் தான் என்றும் ஆணவத்துடன் இருக்கும் பார்ப்பனக் கொழுப்புக்கும், ஆதிக்கத்துக்கும் பெயர் போன திருவரங்கத்தில் “சூத்திர, பஞ்சம, பெண்கள், குழந்தைகளை உள்ளிட்ட மக்களை அணிதிரட்டி ம.க.இ.க தோழர்கள் 1993ல் நடத்திய “கருவறை நுழைவு போராட்டத்தின்” வெற்றியை தொடர்ந்து இன்று மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.

இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.

இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் ’கைப்புள்ள கதைபோல்’ ’கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!’ என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர். ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.

எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

நன்றி : வினவு

ஹெட்போன்ஸ் உபயோகித்தால் வரும் பக்க விளைவுகள்!

செவிப்புலனை குறுகிய காலத்தில் நிரந்தரமாக இழக்க வைக்கக்கூடிய ஹெட்போன்ஸ. தினமும் எல்லோரும் பெரும்பாலும் Headphones பாவிக்கின்றோம். iPod தொடக்கம் கணணி வரை பல்வேறு கருவிகளில இந்த Headphonesஐ நாங்கள் பயன்படுத்தவேண்டி இருக்கின்றது.

*முக்கியமாக மற்றவர்களை இரைச்சல் மூலம் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதற்கும், இசையை நாங்கள் மட்டும் கேட்டு மகிழ்வதற்கும் இதை பாவிக்கின்றோம். பல்வேறு வடிவங்களில், வகைகளில், விலைகளில் Headphones இருக்கின்றன.

*கலைஞர்கள் பாடல்களை கலைக்கூடங்களில் ஒலிப்பதிவு செய்யும்போது.. அது தமிழ் சினிமா பாடலாக இருக்கட்டும்.. அல்லது Hollywoodல் உருவாக்கப்படும் ஓர் இசைAlbumமாக இருக்கட்டும்.. குறிப்பிட்ட பாடலை - இசையை கேட்பதற்கு சில அடிப்படை தரம் உள்ள கேட்கும் கருவிகளை ரசிகர்கள் பயன்படுத்தவேண்டும் என்று அவற்றை உருவாக்கும் கலைஞர்கள் எதிர்பார்ப்பார்கள். அவர்களின் இசையை முழுமையாக அனுபவிப்பதற்கு - இசையில் வருகின்ற ஒவ்வொரு சிறு ஒலியையும்.. இசையில் வருகின்ற பல்வேறு விதமான effectsஐயும் உணர்வதற்கு தரமான Headphones ஐ நாங்கள் பயன்படுத்துவது முக்கியம். தரமற்ற Speakers, Headphonesஐ நாங்கள் பயன்படுத்தினால் நல்ல ஓர் இசை அனுபவத்தை பெறமுடியாது.

*ஆனால்.. Headphones மூலம் ஒலியை கேட்கும்போது.. Volumeஐ அளவுடன் வைத்து இருக்கவேண்டும். நீண்டநேரம் அதிகVolumeஇல் Headphonesஐ பாவிக்கும்போது நாங்கள் எங்கள் செவிப்புலனை விரைவிலேயே நிரந்தரமாக இழக்கவேண்டிவரலாம். குறிப்பாக நாங்கள் வாகனத்தில் போகும்போது, பயணம் செய்யும்போது.. வெளி இரைச்சல்களையும் மேவி எங்களுக்கு காதினுள் இசை கேட்கும்படி Headphonesஇன் Volumeஐ அதிகரிக்கின்றோம். இது எமது செவிகளிற்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

நீங்கள் நல்ல தரமான Headphonesஐ பயன்படுத்தி நல்லதொரு இசை அனுபவத்தை பெறுகின்ற அதேநேரம் அதன் Volumeஐ அளவுடன் பயன்படுத்தி உங்கள் இனிய செவிப்புலனை உங்கள் ஆயுட்காலம் முழுவதும் நல்லநிலையில் பேணிக்காத்து கொள்ளுங்கள்.

நன்றி : களஞ்சியம்.

Nov 19, 2010

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் அவசரம் கூடாது: ரஷியா.

மாஸ்கோ, நவ. 19: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் அவசரம் காட்டினால் அதை எதிர்ப்போம் என்று ரஷியா அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியா, ஜப்பானுக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்காவின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தார்.

இது குறித்து மாஸ்கோவில் கருத்துத் தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலெக்சி சாஸ்நோவ், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் அவசரம் காட்டக் கூடாது. இதில் அனைத்து நாடுகளும் நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நாட்டைச் சேர்ப்பது தொடர்பான முடிவை எடுக்க ஐ.நா. பொது அவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இது தொடர்பான நடைமுறைகள் பல ஆண்டுகள் நீடிக்கும்.

இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற ரஷியா ஆதரவு அளிக்கிறது என்றார் அவர். முன்னதாக ரஷிய பிரதமர் விளாதிமிர் புதின், அதிபர் திமித்ரி மெத்வதேவ் ஆகியோர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற இந்தியா தகுதியுள்ள நாடு என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கு காத்திருப்போம்!


பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்திய மக்கள் ஒவ்வொரு வரின் முகத்திலும் பூசப் பட்ட அழுத்தமான கரி என்றால் அது மிகை அன்று... நீதியை, சட்டத்தின் ஆட்சியை, மத சார்பின்மை தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அலகாபாத் நீதி மன்ற தீர்ப்பு தகர்த்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

ஒரு நாட்டின் கறை படியா கடைசி நம்பிக்கையே நீதி பரிபாலனம் என கூறப்படும்போது, அந்த நீதி பரிபாலனம் விமர்சனத்திற்கு ஆளாகும்போது சாமான்ய மக்களால் அதிர்ச் சியடையாமல் இருக்கமுடியாது. வேண்டியவர் வேண்டாதவர் என பாகுபாடு பார்க்காது நீதியை நிலைநாட்டுவது. தான் கூர்மையான நீதி பரிபாலனத்தின் இயல்பாகும். ஆனால் அயோத்தியில் அமைந்திருந்த பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்கில் மட்டும் நீதி எப்போதுமே நத்தை வேகத்தில் ஆமை வேகத்தில் நகர்வது இந்திய முஸ்லிம்களின் வேதனையை நாளும் அதிகப்படுத்திவருகிறது. 22.12.1949 அன்று பாப்ரி பள்ளிக்குள் சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக ராமன்,சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சிலைகள் இரவோடு இரவாக வைக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்கள் சட்டயுத்தம் நிகழ்த்தியும் அவர்களது உரிமைக்கனவு நனவாகாமலே போனது.. 60 ஆண்டுகாலமாக கொஞ்சம் உயிர்வாழ்ந்த நம்பிக்கை 2010 செப்டம்பர் 30ஆம் தேதி நஞ்சூட்டி முழுசாக கொல்லப்பட்டது.

இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது என பார்க்கப்போனால் நாம் 1925 ஆம் ஆண்டு பின்னோக்கி செல்லவேண்டியிருக்கிறது.ஆர்.எஸ்.எஸ் என்ற சங்கப்பரிவார் உருவாக்கப்பட்ட அன்றிலிருந்து அந்த பாசிச சக்தி இந்திய மக்களின் ஒவ்வொரு அம்சங்களிலும் ஒரு வைரஸாக ஊடுருவியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தி அப்பாவி இந்து மக்களை உழைக்கும் மக்களை ஒருவருக்கொருவரை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் இழி செயலை அந்த தீய சக்தி தொடர்ந்து செய்து வருகிறது . அதன் விளைவே நாட்டின் தேசத்தந்தை என அழைக்கப்பட்ட காந்தியாரை இழந்தோம். பாப்ரி பள்ளிவாசலை இழந்தோம். இப்போது நீதித்துறையிலும் தற்போது பாசிசத்தின் சுவடுகள் தென்படத் தொடங்கிவிட்டன.

இதுவரை மறைமுகமாக தென்பட்ட சுவடுகள் தற்போது அலகாபாத் தீர்ப்பின் வாயிலாக வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. பாசிசம் என்ற நரி பசுத்தோல் போர்த்தி உலாவரத் தொடங்கியுள்ளது. அது சொல்வதை இந்திய அரசியல் அரங்கில் உள்ள பிரதான சக்திகள் கூட வழிமொழியத் தொடங்கியுள்ளது அபாயத்தின் உச்சக்கட்டம் .

இது போன்ற சூழலில் தீய சக்திகளின் சதிகளுக்கு இலக்காகாமல், நாம் அமைதி காப்பதோடு இந்திய மக்களின் அனைத்து தரப்பினரிடையேயும் நம் தரப்பு கருத்தை இணக்கத்துடனும் திறந்த மனதுடனும் முன்வைப்போம். உச்ச நீதிமன்றத்தில் நியாயம் வெல்லும் வரை நல்லெண்ண பூக்களை மலரச்செய்வோம். சதிகார கோட்டத்தின் சதி வலைகளை ஒற்றுமையுடன் அறுத்தெறிவோம். நாளைய வெற்றிக்கு இன்றே காத்திருப்போம்.

நன்றி : த மு மு க

கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பெண்கள்


சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையச் சோதனையின்போது பிடிபட்டிருக்கிறார்கள் 30 பெண்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களுடைய பாஸ்போர்ட்கள் ஒரிஜினல் என்றாலும் அதிலிருந்த சில முத்திரைகளைச் சோதித்தபோது அந்த முத்திரைகள் போலியென்று தெரிய வந்ததும் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். தமிழகம், கேரளம், ஆந்திரா மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் இதில் அடக்கம்.

வேலைகளுக்காக இவர்கள் வளைகுடா நாடான ஓமனுக்குக் கிளம்புவதற்கு முன்பு பிடிபட்டிருக்கிறார்கள். இதையொட்டி இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகச் சில ஏஜெண்டுகளைக் கைது செய்திருக்கிறார்கள் போலீசார். இது ஏதோ ஒரு நாளில் மட்டும் தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல. இதன் பின்னால்தான் எவ்வளவு அதிர்ச்சியூட்டும் பின்னணி? “சமீபத்தில் தென்னிந்தியாவிலிருந்து இளம்பெண்கள் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கு வீடுகளில் வேலைகளுக்குப் போவதாகச் சொன்னாலும் பெரும்பாலானவர்கள் அங்கு போனதும் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக எங்களுக்கு நிறைய புகார்கள் வந்திருக்கின்றன. பணம் தாராளமாகக் கிடைக்கும் என்று நம்பி எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாடுகளுக்குக் கிளம்பும் பெண்கள் அங்கு போனதும்தான் இதை உணர்கிறார்கள்.அதிலிருந்து விடுபடுவதற்குள் பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். அதனால்தான் தனியாகவோ, கும்பலாகவோ வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்களை விசாரிக்கிறபோதுதான் சிலர் மாட்டுகிறார்கள்” என்கிறார்கள் காவல்துறை தரப்பில்

தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இம்மாதிரியான பெண்களைத் தேர்வு செய்து அனுப்புவதற்கென்றே ஏஜெண்டுகள் பரவலாக இருக்கிறார்கள். ஒரு பெண்ணை எப்படியோ வெளிநாட்டுக்கு விமானத்தில் ஏற்றி விடுவதோடு அவர்களுடைய கடமை முடிந்து, அவர்களுக்கு அதற்குரிய கமிஷனும் வந்து விடுகிறது. ஆனால் வெளிநாடுகளுக்குப் போய்ச் சேரும் பெண்கள் என்ன ஆகிறார்கள்? பெரும்பாலும் டூரிஸ்ட் விசா மூலமாகத்தான் இந்தப் பெண்கள் வளைகுடா நாடுகளுக்குள் நுழைகிறார்கள். இதற்கும் அங்குள்ள யாராவது ‘ஸ்பான்சர்’ பண்ணினால்தான் விசா கிடைக்கும். இதன்படி டூரிஸ்ட் விசாவில் வருகிறவர்கள் அதிகபட்சமாக ஒரு மாதம்வரை தான் அங்கு தங்க முடியும். அதற்கு மேல் அங்கு தங்குகிற ஒவ்வொரு நாளுக்கும் 10 ரியால் (அதாவது சுமார் 1200 ரூபாய்) அபராதமாகக் கட்டியாக வேண்டும். கட்டாவிட்டால் நேரே அங்குள்ள சிறைதான். வளைகுடா நாடுகளான ஓமன், துபாய் போன்ற நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி பெண்களைப் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்துவதற்கென்றே தனிக் கும்பல் இருக்கிறது. நேரே இந்தக் கும்பலின் கையில் இந்தப் பெண்கள் சிக்கிவிடும்போது மொழி தெரியாத நிலையில் இவர்களால் சுலபமாகத் தப்பிவர முடிவதில்லை.

கட்டுப்பாட்டிற்குப் பெயர்போன துபாயில் இந்தியப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் நடத்தும் இடங்கள் இருப்பதை வருத்தத்துடன் சொல்கிறார்கள் அங்கு வேலை பார்க்கம் தமிழர்கள். “எல்லாம் பகிரங்கமாக நடக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் ஏஜெண்டுகள் மூலம் வரவழைக்கப்படுகிறார்கள். இங்கு வந்து இந்தச் சூழ்நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அழும் பெண்கள் கூட ஒரு மாத காலத்திற்குள் வேறு வழியில்லாமல் இதற்குப் பழகிவிடுகிறார்கள். அந்தக் கும்பலாகப் பார்த்து விடுவித்தால்தான் சொற்பப் பணத்துடன் இவர்கள் சொந்த ஊருக்குப் போய்ச் சேர முடியும்” என்கிறார் துபாயில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர். வளைகுடா நாடுகளில் வெளிவரும் ‘கல்ஃப் நியூஸ்’ ஆங்கிலப் பத்திரிகையில் வந்த ஒரு செய்திக் கட்டுரை தென்னிந்தியாவிலிருந்து சென்ற பெண்கள் அங்கு பலவிதமான சிரமங்களைச் சந்திப்பதையும், பாலியல் தொழிலில் இருக்கும் பலவந்தமான சூழ்நிலையையும் வெளியே கொண்டு வந்தது.

அதில் கேரளாவிலிருந்து ‘வீட்டு வேலை’ என்கிற பெயரில் துபாய்க்கு அழைத்துவரப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பிறகு கைதாகிச் சிறைக்குப் போய் விடுதலையான இரு பெண்களின் பேட்டி வெளியாகியிருந்தது. “ஏஜெண்டுகள் அங்கு சொன்னது ஒன்று. இங்கு வந்ததும் நடந்தது வேறு. எங்களுடைய விருப்பத்தையும் எதிர்ப்பையும் மீறி எங்களைப் பயன்படுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தபோது சித்ரவதை செய்தார்கள். இந்த நிலையில் நாங்கள் எப்படி எங்களுடைய ஊருக்குப் போவோம்” என்று கண்கலங்கப் பேசியிருந்தார்கள் அந்தப் பெண்கள்.வளைகுடா நாடான ‘ஓமன்’ தலைநகரான மஸ்கட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தியப் பெண்களைக் கொண்டுவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கென்றே பிரத்யேகமாக சில இடங்கள் இருக்கின்றன. இந்தியாவிலிருந்து மட்டும் இங்கு வந்து குடியேறி தொழில் அல்லது வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மட்டும் இரண்டரை லட்சம் பேர். இந்தியாவிலிருந்து பெண்கள் ‘வீட்டு வேலை’என்கிற பெயரில் அழைத்து வரப்பட்டு உபயோகிக்கப்படுவது இவர்களுக்குத் தெரிந்தும் ‘நாங்கள் ஒன்றும் செய்ய முடிவதில்லை’ என்று கைவிரிக்கிறார்கள்.
முறையான விசா இல்லாததே பெரிய குற்றமாகக் கருதப்படுகையில் அங்கு சென்று பாலியல் தொழிலில் (ஈடுபடுத்தப்பட்டாலும்) ஈடுபடுவது கூடுதல் குற்றமாகக் கருதப்பட்டு வளைகுடா நாடுகளில் உள்ள சிறைக்குப் போய் கஷ்டப்பட வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது இந்தப் பெண்களுக்கு. இந்தியத் தூதரகம் தலையிட்டு இவர்கள் விடுதலையாகி, இந்தியா திரும்புவதற்குள் பலருக்கு உயிர் போய்விட்டுத் திரும்பி வந்த மாதிரியான நிலைமை.

பத்து மாதங்களுக்கு முன்பு ஓமனில் உள்ள தொழிலாளர் துறை நடத்திய சோதனையில் முறையான விசா இல்லாமல் பிடிபட்டுச் சிறைக்குப் போனவர்கள் மூவாயிரம் பேர். இவர்களில் ‘பாலியல் தொழிலில்’ ஈடுபட்ட பெண்களும் அடக்கம்.இவ்வளவு அவஸ்தைகளுக்குப் பிறகும் இந்தப் பெண்கள் கையில் சில ஆயிரங்களுடன் மட்டுமே வீடு திரும்ப முடிகிறது. இன்னும் சிலர் அதிலிருந்து விடுபட்டால் போதும் என்கிற மனநிலையில் கையில் பணமில்லாத நிலையில் ஊர் திரும்புகிறார்கள்.
இதுதான் அங்குள்ள நிலைமை.

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இளம் பெண்கள் போய் ஏமாந்து திரும்பினாலும், இந்த வலையில் இவர்களைச் சிக்கவைக்கும் ஏஜெண்டுகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் கொடுக்கப்பட்டாலும் இவர்கள் இன்னும் எப்படித் தொடர்ந்து செயல்பட முடிகிறது? வெளிநாடுகளுக்குப் போகும் தமிழகத் தொழிலாளர்களைப் பற்றிய ‘சர்வே’யை எடுத்திருக்கும் தமிழகத்திலுள்ள தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் சொன்ன தகவல் இன்னும் அதிர வைக்கிறது. “இந்தியத் தூதரகத்துக்கு அங்கு பெண்கள் கொண்டு போகப்பட்டு படுகிற சிரமங்கள் நன்றாகத் தெரியும். அவர்களும் எச்சரிக்கிறார்கள். இருந்தும் அதையும் மீறிப் பெண்களைப் பல வழிகளில் அனுப்புவது தொடர்கிறது. தர்மபுரி, சேலம் பகுதிகளில் இளம் வயதில் விதவையான பெண்களைத் தேர்ந்தெடுத்து அங்கு அனுப்பிப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். அதோடு அங்கு போய்த் தப்பித் தவறிக் கர்ப்பமடைந்துவிட்டால் சட்டரீதியான சிக்கலைச் சந்திக்க வேண்டியிருப்பதால் சில பெண்களை அவர்களுடைய கர்ப்பப்பையை அகற்றிவிட்டு அனுப்புகிற கொடுமையை எங்கே போய்ச் சொல்வது?” என்கிறார் அவர். இது அதிர்ச்சியாக இருந்தாலும் பெண்கள் கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளுக்குப் பயணப்படத் தயாராகிக் கொண்டிருக்கையில் யாரை உஷார்ப்படுத்துவது?

எங்களுடைய விருப்பத்தையும் எதிர்ப்பையும் மீறி எங்களைப் பயன்படுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தபோது சித்ரவதை செய்தார்கள். இந்த நிலையில் நாங்கள் எப்படி எங்களுடைய ஊருக்குப் போவோம்” சமீபத்தில் தென்னிந்தியாவிலிருந்து இளம்பெண்கள் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கு வீடுகளில் வேலைகளுக்குப் போவதாகச் சொன்னாலும் பெரும்பாலானவர்கள் அங்கு போனதும் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

நட்பிலிருந்து ஊடறுவுக்காக யசோத

நன்றி : புதிய ஜனநாயகம்

செக்ஸ்! பற்றிய தவறான எண்ணங்கள்?

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

கிராமத்து பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body இமேஜ் என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது.

*முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன. இந்த நம்பிக்கைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

*இந்த நம்பிக்கைகள் எந்த காலகட்டத்தில் உருவானவை என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. விஞ்ஞானரீதியான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் இல்லாத காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கற்பனையில்தான் விடைகளை கண்டுபிடித்தார்கள். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், பெரியம்மை நோய். இது ஒரு வைரஸ் கிருமியால்தான் வருகிறது என்பது கண்டறியப்படாத காலகட்டத்தில், அம்மை என்றொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இது வருகிறது என்று உலகம் முழுவதும் நம்பினார்கள்.

*இதுபோல் பல நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள். ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து, இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்ட பிறகும், தலைமுறை தலைமுறையாக நன்றாக காலூன்றியிருக்கும் இந்த நம்பிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. இதுபோல்தான் பாடி இமேஜ் பற்றிய நம்பிக்கைகளும். ஏதோவொரு காலகட்டத்தில் தோன்றி, இன்றுவரை வந்திருக்கின்றன. இண்டெர்நெட்டில் நூற்றுக்கணக்கான சைட்கள் இதுபற்றி இருக்கின்றன என்றால், உலகம் முழுக்க இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு காலூன்றியுள்ளது பாருங்கள்.

*இனி, இந்த நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்ப்போம். முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது.

*அதாவது, பெண் பிறப்புறுப்பின் உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தைப் பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.

*சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் ஆண் பிறப்புறுப்பு 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில், 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் து}ண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன.

*அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.

*முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை. ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது.

*எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது. மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.

*சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் து}ரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஒப்ரிக்கல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.

*போலி டாக்டர்களும் மருந்து தயாரிப்பவர்களும் இந்த பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் பயன்படுத்திக் கொண்டு ‘‘சிறு வயதில் செய்த கோளாறுகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி விடுகிறது’’ என்று மேலும் அதிகம் பயங்காட்டி காசு சம்பாதிக்கிறார்கள். ஆனால் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புகளின் வளர்ச்சி நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு சிறிதாகாது என்பதுதான் உண்மை. மேலும் எந்த மருந்து மாத்திரைகள் மூலமும் உடற்பயிற்சி மூலமும் ஆண் பிறப்புறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞான ரீதியான உண்மை.

*இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.

*பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும்.

*பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

தளவாய் சுந்தரம்

2 வயது குழந்தையின் அறிவு கானொளியில்

கோடி கோடியாக கொட்டும் பிசினஸ்?


மும்பை: மிகப் பெரிய நிறுவனம்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்... பக்காவான தொழில் பயிற்சி... மாத வருவாய் 15 கோடிக்கு மேல்... ஊழியரின் சம்பளம் 15 ஆயிரத்துக்கு குறைவில்லை... என்ன, இப்படிப்பட்ட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கலையேன்னு நினைக்கத் தோன்றுதா... சாரி, அந்த எண்ணத்தை மாத்திக்குங்க. இது, முழுக்க முழுக்க ‘பிச்சை’ பிசினஸ் விவகாரம். மொழி, இனம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் மும்பை சாலைகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், தங்களின் பாஸுக்கு மாதந்தோறும் சம்பாதித்து தரும் தொகைதான் ரூ. 15 கோடி. தொழிலாளிக்கோ ஒருநாள் சம்பளம் ரூ. 500.

நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதற்காக பல கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உருவாவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பிச்சை எடுப்பது எப்படி என்பதை கற்றுத்தரும் பயிற்சி மையத்தை பற்றி சொன்னால் மூக்கின்மேல் விரலை வைக்கத் தோன்றுகிறது.

இந்தியாவின் வர்த்தக நகரம் என்றழைக்கப்படும் மும்பையில் இதுதான் இப்போதைய டாப் பிசினஸ். 1999-ம் ஆண்டு பிச்சை தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் மும்பையில் தட்டும் கையுமாக அலைந்தவர்களை போலீசாரும், அதிகாரிகளும் ஓடி ஓடி பிடித்தனர். அவர்களை மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லை குறைந்தபாடியில்லை. புதிதுபுதிதாக வர ஆரம்பித்தார்கள்.

இவர்கள் எங்கிருந்து உருவாகி வருகிறார்கள்? யார் இவர்களை உருவாக்குவது என்பதை அறியும் முயற்சியில் இறங்கினார் ஒரு பத்திரிகை உளவாளி. அழுக்குத் தலை, கிழிந்த சட்டையுடன் பிச்சைக்காரர்களுடன் ஊடுருவினார். மாறு வேடத்தில் சென்று திரட்டிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சித் தகவல்: மும்பை தாராவி, மால்வானி பகுதிகளில் பிச்சை எடுப்பது எப்படி என்று பயிற்சி தர ஒரு கும்பலே இருக்கிறதாம். இந்த கும்பலின் தலைவர்கள் ‘குரு’ என்று அழைக்கப்படுகின்றனர். எச்சைக் கையால காக்கா ஓட்டாத கருமியாக இருந்தாலும் அவரை விடாப்பிடியாக சுற்றிவந்து பிச்சை வாங்குவது எப்படி என்ற டெக்னிக்தான் இங்கு அளிக்கப்படும் முதல் பயிற்சி.

போலீசோ அல்லது வேறு யாராவதோ துரத்தினால் அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற தற்காப்பு கலையும் கற்றுத்தரப்படுகிறது. அப்ரன்டிஸ்டுகளாக சேர்பவர்கள், முதலில் சாப்பாடு கூடையைத்தான் தூக்க வேண்டும். நிரந்தரமாக ஒரு இடத்தில் அமர்ந்து பிச்சை எடுக்கும் தங்கள் கூட்டத்தை சேர்ந்தவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும். மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க பயிற்சிதானாம். மாற்றுத் திறனாளிகளுக்கு நடுரோட்டில் பரிதாபமாக உருண்டு புரண்டு பிச்சை எடுக்க பயிற்சி தரப்படுகிறது.

பயிற்சிக்கு முடிந்ததும் ஏதாவது ஒரு சாலையை அவர்களுக்கு ஒதுக்குவார்கள். அங்கு சுற்றித் திரிந்து பிச்சை எடுக்க வேண்டும். ஓடி, உருண்டு, கத்திக்கத்தி சேர்த்த பணத்தை பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். ரகசிய கேமராக்கள் மாதிரி, ஆங்காங்கே சில கண்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும். வசூலில் ஏதாவது சுருட்ட நினைத்தால் அவ்வளவுதான்.

பச்சிளம் குழந்தைகளுக்கு இங்கே ஏக கிராக்கி. சில பெண்கள் தங்கள் குழந்தைகளை பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு அனுப்புகின்றனர். ஒரு மாத கைக்குழந்தை என்றால் ஒருநாள் வாடகை ரூ. 100. ஒரு வயது குழந்தையென்றால் ரூ. 50, மூன்று முதல் 5 வயது வரை ரூ. 30 வாடகையாக தரப்படுகிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்தால் வசூல் கொட்டுகிறதாம். மாலையில் கைநிறைய காசோடு திரும்பும்போது பயிற்சி மையத்தில் ஏக வரவேற்புதான். வசூலாகும் தொகையை எல்லாரும் கொண்டுவந்து தந்ததும் எண்ணும் பணி நடக்கிறது.

அதில் ஒரு பகுதியை போலீஸ், உள்ளூர் ரவுடிகளுக்கு மாமூல் தர ஒதுக்கி வைக்கப்படுகிறது. மும்பை முழுவதும் சிக்னல்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் பிச்சை எடுக்கின்றனர். இவர்களுக்கு ஒருநாள் கூலியாக தலா ரூ. 500 தரப்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து மாதத்துக்கு ரூ. 15 கோடியை வசூலித்து ‘குரு’வின் காலில் கொட்டுகின்றனர். முதலீடே இல்லாமல் தர்ம பிரபுக்களின் தயவால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ‘தொழிலதிபர்களை’ போலீசாரும் கண்டுகொள்வதில்லை. ‘‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் மூலம் ஏராளமானவர்களை பிடித்து பாதுகாப்பு இல்லங்களில் அடைத்தோம். ஆனாலும் புற்றீசல்போல் இந்த கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது’’ என்கின்றனர் போலீசார்

நன்றி : த.குன்னம் முஸ்லீம்ஸ்

'பாப்ரி மஸ்ஜித் நீதியைத் தேடுகிறது


வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை 'பாப்ரி மஸ்ஜித் நீதியைத் தேடுகிறது' என்ற பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் நடத்த பெங்களூரில் கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாவது: டிசம்பர் 6 ஆம் தேதியும், ஜனவரி 30 ஆம் தேதியும் இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத தினங்களாகும்.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி ஹிந்துத்துவா பாசிசத்தின் ஏஜண்டுகள் மகாத்மா காந்திஜியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.டிசம்பர் 6-ஆம் தேதி அதே சக்திகள் பாப்ரி மஸ்ஜிதை தகர்த்தனர். டிசம்பர் 10 ஆம் தேதி 'பயங்கரவாத எதிர்ப்பு' தினமாக கடைப்பிடிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக 'பயங்கரவாதத்தோடு போராடுவோம்! மனித உரிமைகளை காப்போம்!' என்ற முழக்கத்துடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் நீதியற்ற தீர்ப்பு மற்றும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கை புலனாய்வு ஏஜன்சிகள் கண்டறிந்த சூழலில் இப்பிரச்சாரம் முக்கியத்துவம் பெறும். இப்பிரச்சாரத்தின் போது பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், சுவரொட்டி பிரச்சாரங்கள், மடக்கோலை விநியோகம் ஆகியன நடைபெறும்.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட டிசம்பர் 6ஆம் தேதி மற்றும் காந்திஜி கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதி ஆகிய தினங்களில் மதசார்பற்ற அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சோனியாகாந்திக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்களைச் செய்த கு.சி.சுதர்சனின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பயங்கரவாத தாக்குதல்களில் தங்களின் பங்கு வெட்டவெளிச்சமான சூழலில் அதிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை திசைத்திருப்ப இத்தகைய முறைகேடான வழிமுறைகளை கைக் கொள்கின்றனர்.

தங்களை நிர்பந்தத்தில் ஆழ்த்தி சுரண்ட நினைக்கும் சங்க்பரிவார சதித்திட்டங்களுக்கு முன்னால் தலைகுனிந்து விடாதீர்கள் என மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியை கேட்டுக்கொள்கிறோம். 1992 முதல் இந்தியாவில் நடைப்பெற்ற அனைத்துக் குண்டு வெடிப்புகளைக் குறித்தும் மறு விசாரணை நடத்த வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தியுள்ளது. இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துற் றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் உரையாற்றினார்.

செய்தி: தேஜஸ் - கூத்தாநல்லூர் முஸ்லிம்கள்

நேருக்கு நேர் on Sun News part 1 (1 of 2)

நேருக்கு நேர் on Sun News part 2 (1 of 2)

தெகல்கா வாக்குமூலங்கள் – டாக்டர்.ருத்ரன்


“”உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்”, என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.
“எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி’ என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. “தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்’ என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் “இதுவே நியாயம்’ என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். “வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்’ என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், “அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை’ என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை “வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்’ அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு “கோணலான கல்வி’ தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.
“திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி’யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. “மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை’ என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், “தர்மம்’ என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும். சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் “தான் உயர்ந்தவன்’ எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு “தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்’ என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.
பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், “பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு’ என்பதற்குப் பதிலாக, “யுத்த தர்மம்’ என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

“எதிரிகள் மனிதர்களேயல்ல’ என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. “தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்’, என்பதை மறந்து, “தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் “ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே’ என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் “கொலைவெறி’யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான். எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு “தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி’ எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் “கூட்டத்துக்குத் தலைவன்’ கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது “ராஜநீதி’ என்றும் கூட ஏற்கப்படும்.
இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது? வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; “ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே’ எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான “குயுக்தி’. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். “தன்னலக் குறிக்கோள்’ மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், “வெறியாடும் வாய்ப்பி’லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும். தனி மனிதனுக்கு “தன் வீடு, தன் இடம்’ எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் “தன் இடம்’ என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும். இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, “யுத்தம்’ எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் “கொல்லப்படுமுன் கொல்’ எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, “கூட்டம்’ ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். “தண்டனையைத் தவிர்ப்பதே!’ அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம். குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் “வீரர்களின் சேனை’யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் “போர்’ என்றும், அரசு பலத்தை “வீரமெ’ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான். போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் “தொற்று நோய்’ போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

·ருத்ரன்,
மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்

Nov 18, 2010

கிட்னியை பாதுகாப்பது எப்படி ?


இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டுஅங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரகவியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும்தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகமாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகவியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து,
செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்

காரணங்கள்

•சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள்
•வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல்
•சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.

அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன

•உடல எடை இழப்பு
•குமுட்டல் வாந்தி
•பொதுவான உடல்நலக்குறைவு
•சோர்வு
•தலைவலி
•அடிக்கடி ஏற்படும் விக்கல்
•உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)

பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன

•வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
•இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
•சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
•வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
•மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
•தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
•தோலில் வெள்ளைநிற படிகங்கள்
•கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
•அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
•அதிக தாகம் ஏற்படுதல்
•தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
•நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
•சுவாசம் நாற்றம் எடுத்தல்
•உயர் இரத்த அழுத்தம்
•பசியின்மை

எப்பொழுது மருத்துவ நிபுணரை அணுகுவது?

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருப்பின் மருத்துவரை அணுகலாம். அன்றாடம் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலே மருத்துவரை அணுகலாம்.

தடுப்புமுறை

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரத்தத்திலுள்ள சர்’க்கரை அளவினை மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதின் மூலமும் புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்துவிலகியிருப்பதன் மூலமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதினை தடுக்கலாம்.

சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சிறுநீரகம் என்பது முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் பாதி மூடப்பட்டுள்ள அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும். நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது. இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப்பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்யிறமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம். சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் மூலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்துகொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.

சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது. திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும்.

இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும். சிறுநீரகம் கழிவுப் பொருள்களைவெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும். பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது. பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம். கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ளகற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது. மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த மூலிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை.

பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின்
போதும் பலரிடம் வெளிப்படுகிறது.

இது உண்மைதானா?

நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.

thanks to a c m ibrahim

33 பொக்கிஷங்கள்

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது!

படித்துவிட்டீர்களா?
மீண்டும் ஒருமுறை படியுங்களேன்.
ப்ளீஸ்!
நன்றி:லப்பைக்குடிகாடு.காம்

சோ ராமசாமியின் பார்ப்பன பூணூல் நரித்தனமும் -புரியாத தமிழினமும்

பார்ப்பான சோ ராமசாமியின் துக்ளக் இல் கேட்கப்பட்ட கேள்வி ?

கேள்வி : ‘பெரும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, தஞ்சைப் பெரிய கோவிலுக்குள் சென்றால் அசம்பாவிதம் நிகழும். அதனால் அவர்கள் பட்டாடை தரித்துக் கொண்டு, சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டு சென்றால் தோஷம் தட்டாது’ – என்று நாராயண நம்பூதிரி பிராமணர், சில முக்கிய புள்ளிகளுக்குச் சொல்லியதால், பலர் அதைக் கடைப்பிடித்து வருகிறார்களாமே! இது உண்மையா? அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூர்-76

பதில் : இதில், மூடி மறைக்க வேண்டிய அவசியமே இல்லையே! முதல்வரின் கோவில் விஜயம் பற்றி நேரிடையாகக் கேட்க வேண்டியதுதானே! கலைஞர் பட்டாடை அணிந்ததற்கும், பிரதான வாயிலைத் தவிர்த்ததற்கும் – ஒரு நம்பூதிரியின் வார்த்தை தேவையே இல்லை. பதவி பறி போகும் என்று ஒரு கிளி ஜோஸ்யக்காரர் சொன்னாலே போதும், கலைஞர் உஷாராகி விடுவார். அவருடைய பகுத்தறிவு அத்தகையது.

பார்ப்பனீயம் என்னும் நச்சு பாம்பின் தலையாக செயல்படுபவர் இந்த சோ ராமசாமி இதற்காவே இவர் நடத்தும் இதழ் துக்ளக் .
// பதவி பறி போகும் என்று ஒரு கிளி ஜோஸ்யக்காரர் சொன்னாலே போதும், கலைஞர் உஷாராகி விடுவார். அவருடைய பகுத்தறிவு அத்தகையது.//
அனைத்து சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்தாரே கலைஞர் அது ஆகம விதிகளுக்கு முரணானது என்று கைபர் ,போலன் கூட்டம் உச்சநீதிமன்ற படிக்கட்டுகளுக்கு சென்று தவம் கிடக்கிறிர்களே ஏன்?

அவ்வாறே கலைஞர் உங்களின் ஆகம விதிகளுக்கு பயந்திருந்தால் அதை ஏன் செய்ய வேண்டும்.ஆட்சி போய் விடும் என்று பயந்து இருப்பாரே? பதவி ஏற்ற முதல் கை எழுத்தே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்று கோப்பில் கையெழுத்து தானே போட்டார் கலைஞர் .இன்று வரை அவருடைய ஆட்சி எந்தவித ஆபத்தும் இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது.உங்களின் ஆகமும் கடவுளும் கலைஞரிடம் ஒன்றும் புடுங்க முடியவில்லையே ஏன்?

எதற்க்காக உச்ச நீதிமன்றம் செல்கிரிர்கள் .அகில உலக லோக குரு, காவி சட்டைமுண்டம் ,பொம்பள பொறுக்கி ,அரை டிக்கெட்டு சங்கராச்சாரி ,தேவநாதன் ,முட்டாள் சோ ராமசாமி கூட்டம் எல்லாம் போய் யாகம் செய்ய வேண்டியது தானே ? கலைஞர் ஆட்சி கவிழ வேண்டும் என்று? மாறாக நீங்கள் அவ்வாறு செய்யவில்லை.ஆகவே நீங்கள் கடவுளை நம்பவில்லை என்பது தானே உண்மை. சோ ராமசாமி கூட்டத்தின் எண்ணமெல்லாம் கலைஞரை சிறுமை படுத்து வேண்டும்.இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அதை தன்னால் முடிந்தவரை செய்கிறார்கள்.ஏனென்றால் இன்னமும் பெரியார் என்றும் அண்ணா என்றும் திராவிடம் என்றும் அரசியலில் பேசி கொண்டு அத்தகைய திட்டங்களையும் நிறைவேற்றி கொண்டு இருப்பவர் கலைஞர் ஒருவரே.மற்றவர்கள் எல்லாம் அண்ணாவுக்கே நாமம் போட்டு விட்டனர்.எனவே பார்பனிய சோ ராம சாமி கூட்டம் இந்த கலைஞர் ஆட்சியை அவப்பெயர் செய்ய இவ்வாறு எழுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.ஆனால் இவற்றை எல்லாம் புரிந்து கொள்கிற பக்குவம் தமிழர்களுக்கு இல்லை என்பது தான் வருத்த படவேண்டிய விஷயம்.

சங்கராச்சாரிய எந்த பார்பானவது விட்டு கொடுக்கிறார்களா?
இன்னும் பெரியவா என்று தான் அழைக்கிறார்கள்.ஆனால் தமிழனோ ஒரு கலைஞரை எவ்வாறோ இழிபடுத்தும் கூட்டத்தோடு இணைந்து புரிந்தோ.புரியாமலோ ஜால்ரா அடிக்கும் போது தமிழன் ஏன் இன்னும் முன்னேறேவில்லை என்பதும் பார்ப்பனீயம் இன்னும் வேரூன்றி இருப்பதற்கும் ஒரு நல்ல உதாரணம். இதே போல் இவர்கள் இந்த திமுக ஆட்சி கவிழ 1971 ஆம் ஆண்டு கடவுளை வேண்டினர்.
இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் பார்ப்பான் அன்றிலிருந்து இன்று வரை எவ்வாறு மாறாமல் ஒத்த புத்தியுடன் உள்ளான் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.இதோ அந்த செய்தி

சேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி - பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள்! ஊர்வலத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது. அவ்வளவுதான்! மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனையும் பிரார்த்தித்தது தினமணி - தி.மு.க. தோற்க வேண்டுமாம்

முடிவு என்ன தெரியுமா? ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார்? தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.

இனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.

சோ ராமசாமி கூட்டமே இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?
ஆஸ்திகம் - நாஸ்திகத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ்திகம் வென்றுவிட்டதே - நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா? வீண் சவடால் வேண்டாம்! ஓடாதே, நில்! கலைஞர் ஜோசியத்துக்கு பயந்தார் என்றால்..காஞ்சி லோககுரு சுப்ரமணியன் மடத்துக்குள் செய்த காம லீலைகளும்,சங்கரராமன் கொலையும் எந்த ஆகமத்துக்கு உட்பட்டது?

தேவநாதன் செய்த நீல வண்ண லீலைகள் எந்த ஆகமத்துக்கு உட்பட்டது ?
சோ ராமசாமி கூட்டம் இதற்க்கு விளக்கம் கொடுக்குமா?
இவ்வாறு செய்ததால் இந்த காவாலிகள் எல்லாம் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் என்று தன் பேனா முனையை சுலட்டுவாரா சோ ராமசாமி இல்லை இந்து கடவுள் களின் யோக்கிதையே அப்படிதான் அதன் வழி வந்த இந்த லோககுரு சுப்ரமணியன் ,தேவநாதன் அப்படிதான் என்று சொல்வாரா சோ ராமசாமி.

--அசுரன் திராவிடன்

வாடகைத் தாய்மார்கள்...

உலகமயமாதல் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் சொற்களில் ஒன்றுதான், ‘அவுட்சோர்ஸிங்’. தமது நாட்டில் ஒரு வேலையைச் செய்வதற்கு அதிகமாக சம்பளம் தரவேண்டி இருப்பதால் அதே வேலையை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ளவர்களை வைத்து முடித்துக்கொண்டு செலவைக் குறைக்கும் வழியை அமெரிக்கா முதலிய நாடுகள் கண்டுபிடித்துள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகம் பேசப்பட்டுவந்த இந்த ‘அவுட்சோர்ஸிங்’ முறை இப்போது அபாயகரமான வடிவத்தை எடுத்திருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வதையும் கூட இப்போது ‘அவுட்சோர்ஸிங்’ செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு மலிவான இடமாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பெண்கள் பலர் வாடகைத் தாய்மார்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
உடல் உறுப்பு வியாபாரம் வேகமாகப் பெருகிக் கொண்டிருக்கும் நமது நாட்டில் இப்போது ‘வாடகை அம்மாக்களின்’ எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது. சிறுநீரகத்தை விற்பதை விட இது பரவாயில்லையென்று அவர்கள் கருதக்கூடும். கருப்பையை வாடகைக்கு விடுவதன் மூலம் ஒரு லட்ச ரூபாய்வரை அவர்களுக்குக் கிடைக்கிறது. நமது நாட்டின் வறுமை நிலையை வைத்துப் பார்க்கும் போது இது லாட்டரி அடிப்பதற்கு சமம் என்றுதான் சொல்லத்தோன்றும். சிறுநீரகத்தை விற்பதால் ஏற்படும் உடல் நலக்கேடு இதில் உண்டாவதில்லை என்பது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஏஜெண்டுகளின் வாதம்.

மக்கள் தொகை வேகமாகப் பெருகிவிரும் நமது நாட்டிலும் கூட குழந்தை இல்லாத தம்பதிகள் ஏராளமாக இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளிலோ அந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். இப்படி குழந்தையில்லாதவர்களின் குறையைத் தீர்ப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது தான் ‘டெஸ்ட்டியூப் பேபி’ முறையாகும். ஆனால் அதுவும் கூட பலருக்குப் பயனற்றுப் போய்விடுகிறது. இந்த நிலையில் தான் வாடகைக்குத் தாய்மார்களை அமர்த்திக் கொள்ளும் வழியை இப்போது மருத்துவ உலகம் கண்டுபிடித்துத் தந்திருக்கிறது. வாடகைத் தாயாவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்தல் என்பது ஒன்று. ‘டெஸ்ட் டியூப் பேபி’ எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐ.வி.எஃப் முறை என்பது மற்றொன்று. செயற்கை முறையில் கருத்தரிப்பதை ‘மரபான வாடகைத்தாய் முறை’ எனவும் அழைக்கிறார்கள். செயற்கை கருத்தரிப்பு என்பது தந்தையாக விரும்பும் ஒரு ஆணின் விந்தை எடுத்து ஊசி மூலமாக வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தி அவரது கருமுட்டையோடு கலக்கச்செய்து அவரை கர்ப்பமுறச் செய்வதாகும்.

குழந்தை இல்லாத தம்பதியில் பெண், சுத்தமாகக் கர்ப்பமுற வாய்ப்பே இல்லாது போனால் இந்த முறை கையாளப்படுகிறது. குழந்தையில்லாத பெண்ணுக்கு கருமுட்டை கூட உற்பத்தியாகாது என்ற சூழலில்தான் இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் வாடகைத்தாயாக வருபவருக்கு கருமுட்டை உற்பத்தியாவது தாமதமானால் மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி கருமுட்டையை உற்பத்தி செய்வதும் நடக்கிறது. இந்த முறையில் கருவை சுமக்கும் பெண்ணுக்கு அந்த குழந்தையோடு இறுக்கமான பிணைப்பு இருக்கிறது. இதனால் இந்த முறையைப் பெரும்பாலோர் விரும்புவதில்லை.
‘டெஸ்ட் டியூப் பேபி’ முறை என அழைக்கப்படும் ஐ.வி.எஃப் முறையில் நான்கு கட்டங்கள் உள்ளன. முதலில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருப்பையைத் தூண்டி கரு முட்டையை உருவாக்குகின்றனர். அடுத்து அந்த கருமுட்டையை கருப்பையிலிருந்து வெளியே பிரித்தெடுக்கின்றனர். பிரித்தெடுக்கப்பட்ட கருமுட்டையை ஆய்வுக்கூடத்தில் விந்தணுவுடன் சேர்த்து கரு உருவாக்கப்படுகிறது. கரு உருவானதும் அதை எடுத்து வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கின்றனர். கரு உருவாகி மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அது வாடகைத் தாயின் வயிற்றில் வைக்கப்படுகிறது. அப்படி வைக்கப்பட்டதும் அவர் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். இந்த முறைதான் உலகில் இப்போது அதிகம் கடைபிடிக்கப்படுகிற முறையாகும்.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாடகைத் தாய்மார்களை அமர்த்தித் தருவதற்கு ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அப்படியிருந்தும் அவர்கள் இந்தியாவைத் தேடி வருவதற்கு பணம் மட்டும் காரணமல்ல, அங்குள்ள கடுமையான சட்டங்களும் ஒரு காரணமாகும். இங்கிலாந்தை எடுத்துக்கொண்டால் வாடகைத் தாயாக இருப்பவர் தான் பெற்ற குழந்தைக்கு இரண்டு வயது ஆகும்வரை எப்போது விரும்பினாலும் குழந்தையைத் தானே எடுத்துக்கொள்ளலாமென சட்டம் சொல்கிறது. ஏராளமாகச் செலவு செய்து குழந்தை பிறந்தாலும் அது பறிபோய்விடுமோ என்ற அச்சம் செலவு செய்கிற தம்பதிக்கு இருக்கும். இந்தியாவில் அந்த தொந்தரவு கிடையாது. வாடகைத் தாய்க்கு சம்பளம் தருவதை பிரிட்டன் தடை செய்துள்ளது. அவர்கள் மருத்துவ செலவை மட்டுமே தரவேண்டும்.
அமெரிக்காவில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற வேண்டுமானால் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவாகும். வாடகைத் தாய்க்கு மட்டும் பத்து லட்ச ரூபாய் தர வேண்டும். இங்கிலாந்திலும் இதே நிலைதான். ஆனால் இந்தியாவில் வாடகைத் தாயாக இருப்பவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலே போதுமென்ற நிலை. அதுமட்டுமின்றி குழந்தைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று முதலிலேயே எழுதி வாங்கிக் கொள்கின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்து இங்கே குழந்தை பெறச் செய்து உடனே அவர்கள் எடுத்துக்கொண்டு போய்விடுவதால் அந்த வாடகைத் தாய் விரும்பினாலும்கூட அந்தக்குழந்தையை மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லை. இது குழந்தை பெற எண்ணும் தம்பதிக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறது.

மேலை நாடுகளில் வாடகைத் தாயாக யார் வேண்டுமானாலும் மாறிவிட முடியாது. அவரது ஆரோக்கியம், முதலில் பரிசோதிக்கப்படும். அவர் திருமணமாகிக் குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். அந்தக் குழந்தை உயிரோடு இருக்க வேண்டும். அவர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குற்றப்பின்னணி கொண்டவராக இருக்கக்கூடாது. கடந்த காலத்தில் நடந்த பிரசவங்கள் குறித்த மருத்துவ விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இத்தகைய சட்டதிட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை. ஐரோப்பிய நாடுகளிலிருந்து மட்டுமின்றி சிங்கப்பூர் முதலான ஆசிய நாடுகளிலிருந்தும் கூட குழந்தை வேண்டி பலர் இந்தியாவுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் வாடகைத் தாய்மார்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகப் பெருகி இருப்பதாகக் கூறப்படுகிறது. எத்தனைபேர் இப்படி இந்தியாவில் தமது கருப்பையை வாடகைக்கு விடுகிறார்கள் என்பது பற்றி சரியான புள்ளிவிரங்கள் இல்லை என்றபோதிலும் ஆண்டுதோறும் இப்படி நூறுமுதல் நூற்றைம்பது குழந்தைகள் வரை பிறப்பதாகக் கூறப்படுகிறது. உலகில் பிறக்கும் இப்படியான குழந்தைகளின் எண்ணிக்கையில் இது சுமார் கால் பங்காகும். இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளிலிருந்து மட்டுமின்றி ஃப்ரான்ஸ், போர்த்துக்கல், கனடா முதலான நாடுகளிலிருந்தும் கூட இந்தியாவுக்கு இப்படியான தம்பதிகள் குழந்தை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

2004ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் 47 வயது பெண்மணி ஒருவர் தனது மகளுக்காக வாடகைத் தாயாக மாறினார். அவருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு பெண் தனது பேரப்பிள்ளைகளைத் தானே சுமந்து பெற்ற அந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற நகரத்தில் நடந்தது. அதன்பிறகு அங்கே வாடகைத்தாய் விஷயம் சஜகமானதாகிவிட்டது. இப்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாடகைத் தாய்மார்கள் குஜராத்தில் தான் இருக்கிறார்கள். கிராமத்துப் பெண்கள் இதில் அதிகம் ஈடுபடுகிறார்கள். கர்ப்பம் தரித்தும் அருகாமையில் உள்ள சிறு நகரம் ஒன்றுக்குச் சென்று தங்கியிருந்து குழந்தையைப் பெற்றுக்கொடுத்து விட்டு வந்து விட வேண்டியது. உறவினர்களோ, அண்டை வீட்டுக்காரர்களோ கேட்டால் குழந்தை இறந்து விட்டதென்று பொய் சொல்லிவிட்டால் போதும். இதுதான் குஜராத்தில் உள்ள வாடகைத்தாய்மார்கள் கையாளும் தந்திரம். இது பாவச் செயல் இல்லையா? எனக்கேட்கப்பட்டால், குழந்தையில்லாத ஒரு தம்பதிக்குக் குழந்தை பெற்றுத் தருவது புண்ணியம் தானே? என்று அந்தப் பெண்கள் கேட்கிறார்கள். இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் காரணமாக ஒருவரே மீண்டும், மீண்டும் வாடகைத் தாயாக இருக்கவும் முன்வருகிறார்கள். புதிதாக ஒருவரைக் கண்டுபிடிப்பதைவிட இது சுலபமானதாகத் தெரிவதால் ஏஜண்டுகளும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒரு குழந்தையைத் தந்து எடுப்பதைவிட இப்போது இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதையே பலரும் விரும்புகின்றனர். தத்து எடுக்கப்படும் குழந்தையோடு தத்து எடுப்பவர்களுக்கு ரத்த சம்பந்தம் எதுவும் இருப்பதில்லை என்பதால் உணர்வுபூர்வமான உறவு ஏற்படுவதில்லை. வாடகைக் குழந்தை என்பது மரபணு ரீதியில் பார்த்தால் அவர்களது குழந்தை தான். எனவே இதை விரும்புவதற்கு நியாயம் இருக்கிறது.

இந்தியாவைப் போலவே சீனாவிலும் வாடகைத் தாய்மார்கள் பெருகிவருவதாகச் செய்திகள் கூறுகின்றன. அந்த நாட்டின் சட்டங்கள் கருப்பையை வாடகைக்கு விடுவதைத் தடை செய்துள்ளன என்ற போதிலும் சட்டத்தை மீறி இந்தத் தொழில் நடந்து கொண்டுதானிருக்கிறது. படித்த பெண்களுக்கு அங்கு கூடுதல் கிராக்கி. பட்டப்படிப்பு முடித்திருந்தால் அவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரைக் கூடுதலாக அங்கு தரப்படுகிறது.
வாடகைத்தாய் தொடர்பாக சட்டங்கள் கொண்டு வர வேண்டுமென்று இப்போது இந்தியாவிலும் கோரிக்கை எழும்பத் தொடங்கியுள்ளது. தேசிய பெண்கள் ஆணையம் இது தொடர்பாக முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். நமது நாட்டின் கதவுகளை வேகவேகமாக அந்நிய நாடுகளுக்குத் திறந்து விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு இதுபற்றி இதுவரை எந்தவித அக்கறையும் காட்டவில்லை.

சில்லறை வாணிபத்தில் அந்நிய முதலீட்டுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சோனியாகாந்தி இப்போது கருத்து தெரிவித்துள்ளார். இந்திய சந்தையைத் திறந்து விடலாமா? கூடாதா? என்பதில் கூட இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுத் தாய்மார்களின் கருவறைகளை அந்நிய நாட்டினருக்குத் திறந்து விடுவது நமது பெண்களுக்கு இழைக்கப்படும் அவமானமாகும்.
நாட்டைத் தாயோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டுகிற நாம், நமது தாய்மார்களை இப்படி வாடகைத் தாய்களாக வைத்திருப்போம் என்றால் அதைவிடக் கேவலம் வேறெதுவும் இருக்க முடியாது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கான சட்டங்களை இயற்ற வேண்டியது நமது அரசின் கடமை. பணத்துக்காக இந்தத் ‘தொழிலில்’ ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் இனியாவது தமது மருத்துவத்துறையின் பெருமையைக் காக்க முன்வரவேண்டும்.

நன்றி – நிறப்பிரிகை

மிடாலம் விநாயகர் கலவரம் – 2010

பார்வதி, தான் குளிப்பதனை யாரும் உற்றுப்பார்த்து விடாமல் இருக்க தனது உடலிலிருந்த அழுக்கினை உருட்டி பிள்ளையார் சிலையொன்றினைச் செய்து, அதற்கு உயிர் கொடுத்து, தான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை யாரையும் உள்ளே வர அனுமதிக்காதே என விநாயகருக்கு கட்டளையிட்டு வாசலில் காவல் இருக்கும்படி கேட்டு கொண்டார். பார்வதி குளித்துக் கொண்டிருக்கும்போது அவளுடைய கணவர் சிவன் நுழைய முற்பட்டார். அவரை விநாயகர் தடுத்தார். இதில் ஆத்திரம் கொண்ட சிவன், தனது இடையில் செருகியிருந்த வாளால் விநாயகரின் கழுத்தைத் துண்டித்தார். விநாயகர், ”அம்மா” எனக் கதறி உயிரை விட்டார். சத்தம் கேட்டு வெளியே வந்த பார்வதி தலையில்லா விநாயகரைக் கண்டு துக்கம் தாளாமல் அழுதார். தனது மனைவியைத் தேற்றுவதற்காக வெட்டுண்ட தலையைத் தேடியபோது தலையைக் காணவில்லை. இதனால் வாசலின் வெளியே நின்ற யானையின் தலையை வெட்டி அதனை விநாயகரின் கழுத்தில் ஒட்டவைத்து உயிர் கொடுத்ததாக சிவபுராணம் கூறுகிறது.

பார்வதி கருவுற்றிருக்கையில் ஒரு அரசன், கருப்பையில் காற்று வடிவமாகச் சென்று அக்கருவின் தலையை வெட்டிவிட்டு சென்றதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தை பெற்றுக் கொண்டதாக விநாயகர் புராணம் கூறுகிறது. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்கு சிவன் தனது மூத்த மகன் விநாயகரை அனுப்பி யுத்தம் செய்ததாகவும், அதில் விநாயகர் வெட்டுண்டு இறந்ததாகவும், போய் பார்த்ததில் தலையைக் காணாமல் வெறும் முண்டம் மட்டும் கிடந்ததால், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி உயிர்பித்ததாகவும் தக்கயாப்பரணி கூறுகிறது.

பார்வதி தனது உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்தூவாரத்திலுள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாள் என்றும், இதன் விளைவாக மாலினி குழந்தை ஒன்றினைப் பெற்றதாகவும் அக்குழந்தையை பார்வதி எடுத்துச் சென்றதாக பிரம்மவை வர்த்தப் புராணம் கூறுகிறது. விநாயகர் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையை கடித்துத் தின்றுவிட்டதாகவும், பிறந்த குழந்தை தலையில்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலைக்கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

இந்த கதைகளில் எது உண்மையானக் கதை என்பதனை யாரும் இதுவரை வரையறுத்துக் கூறவில்லை. இதனால் கதை சம்பந்தமான விமர்சனங்களும் கருத்துக்களும் தொடர்ந்து நீடித்த வண்ணமாக உள்ளது. அதைப்போன்று விநாயகருக்கு சித்தி, புத்தி, வல்லபை மற்றும் விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளான மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை என 15 மனைவியர் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. அதே வேளையில் விநாயகர் தனது தாய் பார்வதி போன்று மனைவி வேண்டுமென்று கூறியதாகவும், அப்படியொரு அழகான மனைவி கிடைக்கவில்லையென்றும் இதனால் அவர் குளங்களிலும் ஆறுகளிலும் குளிக்க வருகின்ற எந்தப் பெண்ணாவது தனது தாயைப்போன்று இருக்கிறரா என்று பார்க்கச் சென்றதாகவும், அதன் அடிப்படையில்தான் விநாயகர் கோவில்கள் குளக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் அமைக்கப்படுவதுமான கருத்துக்களும் மக்கள் மத்தியில் வியாபித்துள்ளன.

சமீப காலங்களாக விநாயகருக்கு மவுசு கூடியுள்ளது. இதற்கு காரணம் இந்து கோவில்களிலும், வீட்டுக் கன்னி மூலைகளிலும் விநாயகர் சிலைகள் வைத்திருந்தால் எந்த வினையும் அண்டாது என்கிற கருத்து மக்கள் மத்தியில் புதிதாக விதைக்கப்பட்டதாகும். இருப்பினும் தமிழ் உணர்வுள்ள இந்துக்கள் இதனை முழுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில் நமது கோவிலுக்குள் விநாயகர் நுழைந்து விட்டால், அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் வரும், ஐயர் நுழைவு வரும், சமஸ்கிருத மந்திரம் வரும், சர்க்கரைப் பொங்கல் வரும், பிள்ளையார் ஊர்வலம் வரும், அதனைத் தொடர்ந்து கலவரங்கள் வரும் என்பதாகும். தமிழ் கடவுளான முத்தாரம்மனும் மாடசாமியும் சொள்ளமாடனும் இசக்கியும் காணாமல் போவார்கள் என்பது அவர்களின் நியாயமான வருத்தமாக இருக்கிறது. இதற்கு விநாயகர் காரணமில்லை என்பது மட்டும் உண்மை.

செப்டம்பர் 18, 2010 அன்று சென்னையை அடுத்த நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் 5 அடி உயர விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்டத் தகராறில் 30 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் காண்டீபன் தனது நண்பர்கள் சதீஷ், செந்தில், ஈஸ்வரன் ஆகியோர் துணையுடன் 25 வயதான இந்து முன்னணிப் பிரமுகர் பிரபாகரனை பீர்பாட்டிலால் கழுத்து, வயிறு, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தற்பொழுது இரு குடும்பங்களும் அநாதையாக தெருவில் நிற்கிறது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தவர் பகீர் அஹம்மத். இவர் தண்டையார்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அவரை தலை, உடல் மற்றும் முகத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஜோ. தமிழ்ச்செல்வன்

170 கோடி மோசடி - அமெரிக்க இந்தியருக்கு 11 வருடம் சிறை


ஹோஸ்டன் (அமெரிக்கா) : தொலைபேசி நிறுவனத்தில் உயரதிகாரியாக வேலைபார்த்த சுஜாதா என்ற அமெரிக்க இந்திய பெண்ணுக்கு 11 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

"மில்வாக்கி" என்ற கையடக்க தொலைபேசி தயாரிக்கும் கோஸ் கார்ப் என்ற நிறுவனத்தில் நிதி அதிகாரியாக வேலைப்பார்த்த சுஜாதா சச்தேவா என்ற அமெரிக்க இந்திய பெண், சுமார் 170 கோடி ரூபாய் (31 மில்லியன்) பணத்தை தனது சொந்த செலவிற்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் 11 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்ட சுஜாதா தான் செய்த செயலுக்கு தனது குடும்பத்தினரிடமும், தான் வேலை பார்த்த நிறுவனத்திடமும் மன்னிப்பு கோரினார்.

ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது? ஏன்!


மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல்நலன் மற்றும் டயட்(எடை குறைப்பு) சம்பந்தமாக ஆண்கள் சொல்லும் அறிவுரைகள் பெண்களிடம் எப்பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைகழகம் நடத்திய ஆய்வின் படி ஒரு உணவை சாப்பிடுவது நல்லதா, தப்பா என்பது போன்ற உணவு பழக்கங்கள், உடல் எடை குறைப்பது அல்லது அதிகரிப்பது போன்ற டயட் ஆலோசனைகளை ஆண்கள் சொல்வதை விட பெண்கள் சொல்லும் போது தான் பெண்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

டயட் ஆலோசனைகளை ஆணும் பெண்ணும் சொல்லும் குறும் படங்களை பெண்களிடம் போட்டு காண்பித்ததில் ஆண்கள் பேசும் வீடியோக்களை கேட்ட பெண்கள் அதை பின்பற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அதே சமயத்தில் பெண்கள் பேசும் வீடியோவை கேட்ட பெண்கள் அதில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்து மேலும் தகவல் பெற்று பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்களை ரோல் மாடலாக கருதாமலும், ஆண்களின் அறிவுரைகளை கேட்காததாலும் தான் பெண்கள் ஆபத்தான முறையில் ஓரேடியாக தங்கள் எடையை மாடல்கள், விளம்பர அழகிகள் போன்று குறைத்து கொள்வதாகவும் ஆய்வு தெரிவிக்கின்றது. சுருங்க சொன்னால் ஆண்களுக்காக அல்லாமல் பெண்களுக்காக தான் பெண்கள் உடல் எடையை குறைத்து கொள்கின்றனர் என்பதே அது.

ஹைத்தியில் காலரா மரணம் 1000 ஐ தாண்டியது


போர்ட்ஆஃப்பிரின்ஸ்,நவ.19:ஹைத்தியில் காலரா மரணம் பெருகி வருகிறது. இதுவரை காலரா நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1000 தாண்டிவிட்டது.டொமினிக்கன் குடியரசு நாட்டிலும் நோய் பரவியுள்ளதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருவருக்கு காலரா பாதித்தது உறுதிச் செய்யப்பட்டதால் டொமினிக்கன் குடியரசின் ஹைத்தி எல்லையில் பரிசோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. தொற்று நோயால் பீடிக்கப்பட்ட 16,800 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா சமாதானப் படையில் அங்கம் வகிக்கும் நேபாள் ராணுவத்தினரால்தான் காலரா நோய் பரவியதாக ஊகங்கள் ஹைத்தியில் நிலவுகின்றன.

நேற்று முன்தினம் கேம்ப் ஹைத்தியில் கண்டனப் போராட்டங்கள் நடைப்பெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டோர் ஐ.நா மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். போராட்டத்தின் போது ஐ.நா சமாதானப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணித்தார். போலீஸ் நிலையம் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஹைத்தியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,30,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயரத்திலிருந்து மீளும் முன்பே இன்னொரு துயர நிகழ்வு ஹைத்தியை பாதித்துள்ளது.

கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்?

நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்குப் பரிந்துரை செய்திருந்த கல்விக் கட்டணத்தின் மீது உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் நீதிபதி விதித்திருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்ற ஆயம் தீர்ப்பளித்திருக்கிறது. இதன்படி பார்த்தால், தமிழகத்திலுள்ள 10,000- க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் தற்போதைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்திற்கு மேல் ஒரு பைசாகூடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என அவ்வாயம் நேர்மறையான தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றமோ பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக்கூடாது என்ற உத்திப்படித் தனது தீர்ப்பை அளித்திருக்கிறது. 6,400 தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இம்மேல்முறையீடுகளின் மீதான முடிவை நவம்பருக்குள் எடுக்கும்படி கோவிந்தராஜன் கமிட்டிக்கு உத்தரவிட்டிருக்கும் உயர் நீதிமன்றம், அதுவரை கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள் என இந்த 6,400 பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கவில்லை.

இதற்கு மாறாக, அந்த 6,400 தனியார் பள்ளிகளும் கடந்த கல்வியாண்டில் வசூலித்த கட்டணத்தையே நடப்புக் கல்வியாண்டிலும் வசூலித்துக் கொள்ளலாம் என அப்பள்ளிகளுக்குச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி வசூலிக்கப்படும் கட்டணம் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகமாக இருந்தால் – குறைவாக எப்படியிருக்கும்? – அக்கூடுதல் தொகையைத் தனியாக வங்கிகளில் போட்டு வைக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது, உயர் நீதிமன்றம். கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத 4,000 பள்ளிகளும்கூட அக்கமிட்டி நிர்ணயம் செய்திருக்கும் கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என இத்தீர்ப்புக் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, அப்பள்ளிகளும் கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் தனியாக வங்கிகளில் போட்டு வைக்க வேண்டும் என இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவிந்தராஜன் கமிட்டி ஒரு சிவில் நீதிமன்றத்திற்குரிய அதிகாரம் கொண்டதெனக் கூறப்படுகிறது. இக்கமிட்டியின் விதிகளின்படி தான் நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூல் வேட்டை நடத்தும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்; அப்பள்ளிகளின் முதலாளிகளுக்கு ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்கலாம்.
வெளிப்படையாகவே கட்டணக் கொள்ளை நடத்தி வரும் கல்வி வியாபாரிகளுக்கு இத்தண்டனையை அளிக்க உயர் நீதிமன்றத்திற்கு மனது வரவில்லை. அதே சமயம் வசூலித்த கூடுதல் கட்டணத்தைப் பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்கச் சொல்லி உத்தரவிடவும் நீதிமன்றம் விரும்பவில்லை. நீதிமன்றத்தின் இந்தக் கருணை முடிந்த அளவிற்குக் கட்டணக் கொள்ளையை நடத்திக் கொள்ளும் துணிச்சலைப் பல பள்ளிகளுக்கு வழங்கிவிட்டது.

இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் நவம்பரில் இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகு, பள்ளிகள் வசூலித்த கட்டணம் கூடுதலாக இருந்தால், அதனைப் பள்ளிகள் பெற்றோரிடம் திருப்பி வழங்கிவிடும் என நீதிபதிகள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். யானை வாயில் போன கரும்பு திரும்பி வருவது சாத்தியமென்றால், இதனையும் நாம் நம்பலாம்.
கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் தனியாக வங்கிகளில் போட்டுவைக்க வேண்டும் என்ற பெயரில், கல்வி வியாபாரிகள் இக்கொள்ளையைப் புறக்கடை வழியாக அனுபவிக்கும் உரிமையை அளித்திருக்கிறது, உயர் நீதிமன்ற ஆயம். உயர் நீதிமன்றத்தின் இந்தக் கபடத்தனத்தையும் கூட்டுக் களவாணித்தனத்தையும் எதிர்த்துப் போராட வேண்டிய வேளையில் பெற்றோர்களோ உயர் நீதிமன்றம் தங்களின் வயிற்றில் பாலை வார்த்திருப்பதாகப் பிதற்றிக் கொண்டுள்ளனர்.

கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு பள்ளிக் கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்து, அதன் அடிப்படையில் கோவிந்தராஜன் கமிட்டியை நிறுவியிருந்தாலும், தமிழக அரசின் நடைமுறை இப்பிரச்சினையில், “நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு” என்பதாகத்தான் அமைந்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த தமிழக அரசு, கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டண விகிதத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மிகவும் தாமதமாகத்தான் மேல்முறையீடு செய்தது.

கோவிந்தராஜன் கமிட்டி நிரணயம் செய்த கட்டணங்களை உடனடியாக வெளியிடாமல் அமுக்கி வைத்திருந்ததன் மூலம், தனியார் பள்ளிகள் தமது விருப்பம்போல கட்டணக் கொள்ளையை நடத்தத் துணை நின்றது, தமிழக அரசு. கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டண விகிதத்தை மூன்றாண்டுகளுக்கு மாற்ற முடியாது என அதனின் விதி கூறுகிறது. ஆனால், இக்கட்டண விகிதத்தை எதிர்த்துக் கூச்சல் போட்ட கல்வி வியாபாரிகள் முதலமைச்சரைச் சந்திக்கிறார்கள்; அங்கு என்ன பேரம் நடந்ததோ, உடனடியாக அவர்களை மேல்முறையீடு செய்ய அனுமதிக்கிறது, தமிழக அரசு; அம்மேல்முறையீட்டின் மீதான முடிவை நவம்பருக்குள் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இப்படியாக அவ்விதி செல்லாக்காசாக்கப்பட்டது.

நடப்புக் கல்வியாண்டு தொடங்கும் முன்பே தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையைத் தொடங்கி விட்டன என்பதும், கூடுதலாக வசூலிக்கும் பணத்திற்கு பள்ளிகள் எந்த ரசீதும் தருவதில்லை என்பதும், கூடுதல் கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவர்களைத் தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துச் சட்டவிரோதமாகப் பள்ளியிலிருந்து நீக்கி விடுகின்றன என்பதும் தமிழக அரசின் கண் முன்னேதான் நடந்து வருகின்றன. ஆனால், தமிழக அரசோ பள்ளிகள் மீது பெற்றோர் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறியே, தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

தமிழக அரசின் இந்த அனுசரணையான போக்கு ஒருபுறமிருக்க, தமிழகத்திலுள்ள பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் சிறுபான்மையினரின் பெயராலும், டிரஸ்டுகளின் பெயராலும்தான் நடத்தப்படுகின்றன. இப்படிச் செயல்படும் பள்ளிகள் தங்களின் பணத்தேவைக்குப் புரவலர்களைத்தான் அணுக வேண்டுமேயொழிய, கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது. ஆனால், தமிழக அரசு அமைத்த கோவிந்தராஜன் கமிட்டியோ டிரஸ்டுகளின் பெயரால் நடத்தப்படும் பள்ளிகளும் ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் 15 சதவீதம் இலாபத்தைப் பெறும்படிதான் கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்திருக்கிறது. மேலும், பேருந்துக் கட்டணம் போன்ற பிற வழிகளிலும் பெற்றோர்களைக் கொள்ளையடிப்பதற்கும் அப்பள்ளிகளுக்கு அனுமதி அளித்திருக் கிறது. விபச்சாரத்தை ஒழிக்க முடியாது; அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் மாற்று வழி என்பது போல, தனியார் பள்ளிகள் நடத்திவந்த கட்டணக் கொள்ளை யைச் சட்டபூர்வமாக்கியதுதான் தமிழக அரசும் கோவிந் தராஜன் கமிட்டியும் செய்திருக்கும் ‘சாதனை’.

கல்வி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் இக்கட்டணக் கொள்ளையை ஒழித்துக்கட்ட முடியும். ஆனால், ஆங்கிலக் கல்வி மோகத்தால் தனியார் மெட்ரிக் பள்ளிகளைப் புறக்கணிக்க விரும்பாத பெற்றோர்கள், அக்கல்வி வியாபாரிகள் தர்மகர்த்தாக்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படி அவர்கள் நடக்காதபட்சத்தில் அரசும் நீதிமன்றமும் தலையிட்டு அவர்களுக்குக் கடிவாளம் போட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இது, ஆடு ஓநாயிடம் நீதியைக் கேட்கும் புத்திசாலித்தனம் போன்றது.

நன்றி:வினவு.

அதிகரித்துவரும் இடைவெளி - வாழ்க இந்திய ஜனநாயகம்!

77 சதவீத இந்தியர்கள் தினசரி இருபது ரூபாய் கூட வருமானமில்லாதவர்கள் என அர்ஜூன்சென்குப்தாவின் அறிக்கைக் கூறுகிறது. ஐம்பது சதவீத இந்தியர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக என்.சி.சக்ஸேனாவின் அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.

இல்லை! இல்லை!, 37 சதவீத இந்தியர்கள்தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாக டெண்டுல்கர் கமிட்டி அறிக்கை கூறுகிறது. திட்டக் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டது என்ற அடிப்படையில் டெண்டுல்கர் கமிட்டி அறிக்கை இந்திய குடிமக்களின் வாழ்க்கை முறையினை படம் பிடித்துக் காட்டுவதைக் காண்கிறோம்.

வறுமைக்கோட்டிற்கு சற்று மேலே உள்ளவர்களெல்லாம் சுகமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்பது இவ்வறிக்கைகளின் பொருளன்று. வாழ்க்கையை ஓட்டுவதற்கு சிரமப்படும் பெரும்பாலான நடுத்தர மக்களின் நிலைமையை இந்தியா முழுவதும் பயணித்தால் காண இயலும். ஓர் அடி நிலத்திற்காக உயிரைக் கொடுக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் ஆதிவாசிகளின் இரத்தத்திலும் கண்ணீரிலும்தான் நமது தேசம் 64-ஆம் சுதந்திர தினத்தை கொண்டாடியது.

குடிநீர், மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இரவில் தூங்குவது தெருக்களிலாகும். ஆனால் இவையெல்லாம், எதற்கெடுத்தாலும் பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கும் எம்.பிக்களுக்கோ மூவர்ணக் கொடியை தாங்கி வாகனங்களில் பவனிவரும் அமைச்சர்களுக்கோ ஒரு பிரச்சனையே அல்ல.

அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட இந்தியக் குடிமக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் என வீம்புப் பேசும் இவர்கள் என்றாவது பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளார்களா? அல்லது குறைந்தபட்சம் வெளிநடப்புத்தான் செய்தார்களா? ஆனால், நமது ஏழைகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இந்தியா சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆகஸ்ட் மாதத்தில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டது எதற்குத் தெரியுமா? தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சம்பளம் 16 ஆயிரத்திலிருந்து ஐம்பதினாயிரமாக உயர்த்தியது போதாதாம். 80 ஆயிரமாக உயர்த்த வேண்டுமாம். போதிய அடிப்படை வசதிகளின்றி திக்குமுக்காடும் பீகார் மாநிலத்தின் லாலுபிரசாத் யாதவும், தலித் மக்களின் மெசய்யா எனக் கூறப்படும் முலாயாம் சிங்கும்தான் பாராளுமன்றத்தின் அவை நடுவில் சம்பள உயர்வுக்கான போராட்டத்தின் தலைமைத் தாங்கியவர்கள்.

பா.ஜ.கவும், இடதுசாரிகளும் நடப்பது நடக்கட்டும், கிடைத்தால் நமக்கும் லாபம் தானே என பாசாங்குச் செய்தன. அரசியல் வாதிகளுக்கு உலகத்திலேயே அதிகளவில் சம்பளம் கொடுத்து சீராட்டிவரும் சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தங்களுக்கு சம்பளம் வேண்டும் என்ற போராட்டத்தில் நமது எம்.பிக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேசத்தில் மிக அதிக சம்பளம் வாங்கும் மூத்த அதிகாரியைவிட ஒரு ரூபாய் அதிகமாக தங்களுக்கு வேண்டும் என்ற பிடிவாதத்தில்தான் 80001 ரூபாயாக சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏழைகளின் வாக்குகளை வாங்கி பாராளுமன்றத்திற்கு சுற்றுலாச் சென்ற நமது எம்.பிக்களின் கோரிக்கை.

நாம் நினைப்பதுபோல் இதுவெறும் ஐம்பதாயிரத்திலோ, எண்பதினாயிரத்திலோ ஒதுங்கிவிடுவது அல்ல. தினசரி அலவன்ஸ், பயண அலவன்ஸ், பென்ஷன், குடும்ப சகிதமாக வரம்பில்லாமல் முதல் தர ஏ.சி ரெயில் பயணம் என லட்சக்கணக்கான பணத்தை அரசு கஜானாவிலிருந்து ஆண்டு தோறும் கறந்து வருகின்றனர் நமது எம்.பிக்கள். தங்குமிடம், பயணம், மெடிக்கல் அலவன்ஸ், குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றுடன் கான்ஸ்டியூவன்ஸி அலவன்ஸ் என்ற அழைக்கப்படும் தொகுதி அலவன்ஸ், அலுவலகம், தொலைபேசி, இணையதள வசதி,பர்னிச்சர்,மின்சாரம் உள்ளிட்டவைகளில் இருபது லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒவ்வொரு எம்.பிக்கும் வருடந்தோறும் தானமாக வழங்கப்பட்டு வருகிறது.

லோடி எஸ்டேட், துக்ளக் லைன், அக்பர் சாலை, பெரோஸ் ஷா சாலை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள நவீன வசதி வாய்ப்புகளைக் கொண்ட ஹோட்டல்களில் தங்குவதற்காக மாதாந்திர வாடகை இரண்டு லட்சம் ரூபாய், அரசுச் செலவில் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 34 விமானப் பயணம் இவ்வாறு ஏறத்தாழ 37 லட்சம் ரூபாயை ஒரு எம்.பிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் உழைக்கும் சராசரி குடிமகன் சம்பாதிப்பதைவிட 68 மடங்கு அதிகமான பணத்தை, இந்த நாட்டில் குடிமக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்ற நமது எம்.பிக்கள் சத்தமில்லாமல் பெற்றுவருகின்றனர்.

அமெரிக்காவில் 35 மடங்கும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 10 மடங்கும்தான் சாதாரணக் குடிமகனின் வருவாயை விட அதிகமான சம்பளத்தை அந்நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் பெற்று வருகின்றனர். ஆக மொத்தத்தில் துயரத்தில் உழலும் இந்திய குடிமக்களின் வாழ்க்கைக்கும், சுகபோகத்தில் வாழும் எம்.பிக்களின் வாழ்க்கைக்கும் இடைவெளி அதிகரித்து அதிகரித்து நமது ஜனநாயகம் உலக அரங்கில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது(?).

வாழ்க இந்திய ஜனநாயகம்!