Nov 6, 2010

ஈராக் மீது போர் தொடுத்தது தவறு புஷ் வருத்தம்.


நியூயார்க்,நவ.6:ஈராக் மீது போர் தொடுத்தது தவறு என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.புஷ், 'டெசிஷன் பாய்ண்ட்ஸ்' என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதி இருக்கிறார். இப்புத்தகம் அடுத்தவாரம் வெளிவர உள்ளது. இதில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.அதில் ஈராக் மீதான போர் குறித்தும் எழுதியுள்ளார். அந்நாட்டின் மீது போர் தொடுத்தது, நான் செய்த தவறு என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Nov 5, 2010

அதிபர் ஒபாமா வருகை :டெல்லி, மும்பையில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு.


அமெரிக்க அதிபர் ஒபாமா, நாளை காலை 11.50 மணிக்கு மும்பை வருகிறார். இதற்காக டெல்லி, மும்பையில் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பை நகரமே பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நவம்பர் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை 4 நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்.

அவருடைய மனைவி மிச்சலும் உடன் வருகிறார். ஒபாமாவின் பயண திட்டங்கள் குறித்து வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள், பாதுகாப்பு குழுவினர் இந்தியா வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். நாளை காலை 11.50 மணிக்கு மும்பை வரும் ஒபாமா, ஹெலிகாப்டரில் கொலாபாவில் உள்ள ஐ.என்.எஸ். ஷிக்ரா கப்பலில் வந்திறங்குகிறார்.

அங்கிருந்து காரில் மும்பை தாஜ் ஓட்டலுக்கு செல்கிறார். அரபிக் கடலின் ஓரத்தில் எழில்மிகு இடத்தில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. 107 ஆண்டுகள் பழமைவாய்ந்த தாஜ் ஓட்டலின் நாளையும், நாளை மறுதினமும் தங்குகிறார். அதற்காக ஓட்டலில் உள்ள 565 அறைகளையும் முன்பதிவு செய்துள்ளதாகவும் வெளியாட்கள் யாரும் தங்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.எல்லா வழிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள காந்தி மியூசியத்தையும் அவர் பார்வையிடுகிறார். பின்னர் தொழிலதிபர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். வேகமாக வளர்ந்து வரும் இந்திய மார்க்கெட்டில் வர்த்தக வாய்ப்புகளை பெருக்குவது, இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.

அமெரிக்க மக்களை கவர்ந்த மகாத்மா காந்தியை அதிபர் ஒபாமா மிகமுக்கிய தலைவராக மதிக்கிறார். எனவே, காந்தி மியூசியத்தை பார்வையிட ஒபாமா திட்டமிட்டுள்ளார். ஒபாமாவும், அவர் மனைவியும் இந்த பயணத்தின்போது தாஜ்மகாலை பார்க்கும் திட்டம் இல்லை. அதற்கு பதிலாக டெல்லியில் உள்ள மிகப்பெரிய கலாச்சார சின்னமான ஹுமாயூன் சமாதியை பார்வையிட உள்ளனர் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி தேசியத் திருவிழா கிடையாது. முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்.

தீபாவளி தேசியத் திருவிழா கிடையாது. முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
ஒரு விழா என்றால் அதில் பொருள் கருத்து இருக்கவேண்டும். ஆனால் தீபாவளியிலோ ஒரு பொருளும் இல்லை. பொருள் காசு செலவானதுதான் மிச்சம். காசு கரியானதுதான்-பட்டாசு வெடித்துக் கரியானது, அதாவது வீணானது தான் மிச்சம்.தீபாவளி ஏன் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால், நரகாசுரன் கதை என்று ஒரு கதையைக் கூறுவார்கள். புராணக் கதையில் எதிர்பார்க்கக் கூடாதுதான்-இருந்தாலும் மனக்கேட்டை முட்டாள்தனமான காரியமாக இல்லாமல் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

தீபாவளியைக் கொண்டாடப் போகிறீர்களா? அடிப்படைக் கதை தெரியுமா? ஆபாசத்தின், அக்கிரமத்தின் எவரெஸ்ட் தீபாவளி:

1. இந்த உலகம் என்கின்ற பூமியை இரண்யாட்சதன் (தங்கக் கண்ணன்) பாயாகச் சுருட்டி தூக்கிக்கொண்டு சமுத்திரத்துக்குள் போய் ஒளிந்து-கொண்டான்.

2. மகாவிஷ்ணு (கடவுள் பன்றி உருவமெடுத்து) சமுத்திரத்துக்குள் சென்று இரண்யாட்சதனைக் கொன்று பூமியைக் கொண்டு வந்து விரித்துவிட்டான்.

3. பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்பட்டு பன்றியுடன் காமலீலை செய்தது

4. அதன் பயனாக ஓர் ஆண் பிள்ளை பிறந்தது. அதன் பேர் நரகாசுரன். அவன் தேவர்களுக்கும், தேவேந்திரனுக்கும் துன்பம் விளைவித்தான்.

5. கடவுள் கிருஷ்ண உருவத்தில், அப்பிள்ளையான நரகாசுரனைக் கொல்ல அவனுடன் யுத்தம் செய்து அடிபட்டு மூர்ச்சித்தார்.

6. கடவுள் மனைவியாகிய சத்தியபாமை வந்து நரகாசுரனுடன் போர் செய்து அவனைக் கொன்றாள்.

7. கொன்ற அந்த நாளை நாம்திராவிடர்கள் கொண்டாட வேண்டுமாம்!

அதுதான் தீபாவளிப் பண்டிகையாம்?! -தந்தை பெரியார் (விடுதலை 24.10.1956).


இராமாயணக் கதை

தீபாவளி ஒரு கற்பனைப் பண்டிகை என்பதற்கு எடுத்துக்காட்டு மேலே குறிப்பிட்ட நரகாசுரன் கதை இராமாயணக் கதையோகும். தீபாவளியை வடநாட்டில் தொடர்பு படுத்திக் கொண்டாடுகிறார்கள். இராவணணுடன் போர் புரிந்து வென்று ராமன் அயோத்திக்குத் திரும்பும் நாள்தான் தீபாவளியாம்.

மனிதநேயர்கள் ஒருவன் இறந்தநாளைக் கொண்டாடுவது என்ன நாகரிகம், என்ன பண்பாடு? என்று வினா எழுப்பவே தீபங்கள் ஏற்றுவது ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் ஒளியை உணர்வது என்று புதிய விளக்கம் கூறினார்கள். ஆன்மா, கடவுள், மோட்சம் என்பதெல்லாமே புரட்டு என்று அய்யா கூறுகையில் பூத உடலுக்கு அப்பால் எல்லையில்லாப் பெருவெளியில் உள்ள மனத்தை அறிய ஏற்றப்படும் விளக்கு தீப ஒளி என்று கப்சாவைப் புதிதாகச் சேர்த்து ஆன்ம விளக்கங்கள் வேறு. வேடிக்கையாக இருக்கிறது.

நல்ல வாய்ப்பு தமிழ்நாட்டில் தீபாவளிக் கூத்து ஒரு நாளில் முடிந்துவிடுகிறது. வடநாட்டில் அய்ந்து நாள்கள் தீபாவளியாம். அங்கே செப்டம்பர், அக்டோபர் இடையே அதன் மாதத்தில் தொடங்கி கார்த்திகையில் அக்டோபர் - நவம்பரிடையே முடிவடைகிறது.

வடநாட்டில் லட்சுமி பூஜையாம்!

தீபாவளியோடு கிருஷ்ணன், இராமன், கற்பனையோடு நின்று விடுவதில்லை. வடநாட்டில் தீபாவளி என்றால் லட்சுமிபூஜை. எனவே விளக்கை ஏற்றி செல்வத்துக்கு அதிபதி என்று கருதும் லட்சுமியை வரவேற்கிறார்களாம்.

இங்கும் ஏதாவது புராணம், கற்பனைச் செய்தி இணைக்காவிடில் சுவைக்காதே. லட்சுமிக்கும், கிருஷ்ணனுக்கும், நரகாசுரன்; இராமனுக்கு இராவணன் போல் லட்சுமிக்கும் ஓர் அசுரன் வேண்டுமே மகாவலி கதையை எடுத்துக்கொண்டார்கள். பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் மட்டும் கிடைக்கவில்லை, அத்தோடு லட்சுமியும் கிடைத்தாள். அந்த நாள்தான் தீபாவளி என்று ஒன்றைக் கூட்டி-னார்கள்.

வாமன அவதாரம்

திருமாலின் அவதாரங்களில் ஒன்றாக வாமன அவதாரம். அது பார்ப்பன அவதாரம்.மகாபலி என்ற மன்னரை சத்திரியனை பார்ப்பன வாமனன் மூன்றடி மண் கேட்டு எங்கே நின்று தலையில் கால்வைத்துக் கொன்றானோ அவ்வாறு கொன்று விட்டு வைகுந்தம் வரும்போது வாசலில் நின்று லட்சுமி திருமாலை வரவேற்றாளாம். அதனால் வடநாட்டில் அது லட்சுமி பூஜையாம்.லட்சுமி என்பது சக்தி, விஷ்ணு என்பது மகிழ்ச்சி, என்றெல்லாம் என்னென்னவோ குளறுபடியைச் சேர்த்து லட்சுமி பஞ்சாயதன் என்று கூறினர். இதையெல்லாம் கேட்டு மூளை குழம்பாமலிருக்கவே இதை மேலும் விளக்காமல் விட்டுவிடுவோம்.

சுவிற்சலாந்தில் குர்ஆன், பைபிள் ஆகியவற்றை எரிக்க சதி: ஹிந்து தீவிரவாதிகள் கைது.


சுவிற்சலாந்தில் வாழும் இந்தியர்களான பாசிச இந்து தீவிரவாதிகள் மூவர் தீபாவளி தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு புனித நூல்களான குர்ஆன், பைபிள் ஆகியவற்றை பகிரங்கமாக எரித்து சாம்பலாக்குகின்றமைக்கு திட்டமிட்டு இருந்தனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொலிஸார் இம்மூவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்கினர்.இவர்கள் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இன் உறுபினர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பல்வேறு பெயர்களில் வெளிநாடுகளில் செயல்பட்டு வருவது குறிப்பிட தக்கது.

இவர் கடந்த எட்டு வருடங்களாக சுவிற்சலாந்தில் வசித்து வருகின்றார். இவர் நீதிமன்றில் சாட்சியம் வழங்குகையில் குர் ஆன், பைபிள் இரண்டும் தீய சக்திகளின் இரு கண்கள் மாதிரி, இந்நூல்களை குழந்தைகள் படிக்கின்றமையைகூட அவர்கள் விரும்பவில்லை என்று கூறி இருக்கின்றார். இவர்கள் குற்றவாளியாக கருதப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மன நோயின் அறிகுறிகள்.

மனச் சோர்வு நோயின் மிகத்தீவிரமான வகையைச் சேர்ந்தது.ஒரு நிமிடம் உலகத்தின் உச்சியில் நிற்பது போல் உற்சாகமாக இருக்கும் இந்த நோயாளிகள், அடுத்த நிமிடமே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது போன்று நடந்து கொள்வார்கள். அதீத சந்தோஷமும் அளவுக்கு மீறிய சோகமும் இவர்கள் நடத்தையில் வந்துபோகும். மிகவும் சிக்கலான நோய்.

சந்தேக மன நிலையிலேயே இவர்கள் எதையுமே செய்வார்கள். இவர்கள் சிந்தனைகள் கூட வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு சாத்தியப்படாத்தாக இருக்காது. தம்மை முன்னிலைப்படுத்த விரும்புவார்கள். சில நேரம் சந்தோஷமாக நடந்துகொள்பவர்... அடுத்த நாள், சோர்ந்து தளர்ந்து மனமுடைந்து காணப்படுவார்கள்.

நேற்று நான் ஏன் அப்படி செய்தேன்,ஏன் அப்படி சொன்னேன்,ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று துக்கப்படுவார்கள். அந்த சிந்தனையின் பிரதிபலிப்பாக மிக மனம் சோர்வடைந் திருப்பார்கள். இந்த நிலையில் இவர்களால் அடிப்படை வேலைகளைக்கூட செய்ய முடியாது இருக்கும்.அன்றாட உடல் பராமரிப்பை செய்ய மாட்டார்கள். வாழ்க்கை துளைந்துவிட்டதுபோன்று நடந்துகொள்வார்கள்.

பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக முரண்பாடான முடிவுகளை எடுத்துவிட்டு அடுத்தவர் மீது குற்றம் சாட்டுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். மற்றவர்கள் மீது கண்டிப்பு காட்டுவதும், மற்றவர்கள் மீது பிழை பிடிப்பதும், பாய்ந்து விழுவதும் இவர்களை மற்றவர்களின் தயவிலிருந்து தள்ளிவைக்கும்.

Nov 4, 2010

எனது பொருளாதாரக் கொள்கைகளால் அமெரிக்கா பின்னோக்கி செல்லாது: ஒபாமா.

வாஷிங்டன், நவ.4: தனது அரசு கடைப்பிடிக்கும் கொள்கைகளால் அமெரிக்க பொருளாதாரம் பின்னோக்கி செல்லாது என்று அதிபர் ஒபாமா உறுதி படக் கூறினார். ஒபாமா மேற்கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கைகளால் அமெரிக்கா பின்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு மாறாக பின்னோக்கி செல்கிறது என்று கூறப்படுகிறது. இதைப் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வாதம் புரிவதில் எவ்வித பலனும் இல்லை. ஆனால் இப்போது பொருளாதாரம் ஒரு நிலையில் உள்ளது. இது முன்னோக்கியும் நகரவில்லை, பின்னோக்கியும் செல்லவில்லை. அமெரிக்க இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே நோக்கமாகும். இதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அதிபராக பொறுப்பேற்றபோது, பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. தனியார் துறையில் வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் மேலும் அதிகரிப்பதற்கு ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும். நாம் எந்த இடத்தில் இருந்தோமோ அதே இடத்தில் இருக்கிறோம் என்பதை அமெரிக்க மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இதிலிருந்து மீள்வதற்கு அனைத்து வழிகளையும் கண்டறிந்து அதைச் செயல்படுத்தி வருகிறோம்.

குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் முன்னுரிமை விஷயத்தில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கும் என்று கருதவில்லை. வரியை எவ்விதம் குறைப்பது என்பதில் இரு கட்சியினருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேபோல குடியரசுக் கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தின்போது கூட கடன், பற்றாக்குறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெரிதாகப் பேசினர்.

ஆனாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சில உபயோகமான பரிந்துரைகளை நான் அளித்தபோது அதை அவர்கள் நிராகரித்துவிட்டனர். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பில் அவர்களது கொள்கைக்கும் எங்களது கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை அவர்களிடம் கேட்கவேண்டும் போலுள்ளது. வெறும் வரிச் சலுகை மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்து விடாது. அமெரிக்க மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான கொள்கையும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டிய அவசியமும் நமக்குள்ளது.

எரிசக்தி துறையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கடந்த 2 ஆண்டுகளில் எட்டப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் டிரக்குகளின் எரிபொருள் சிக்கனத்துக்கான வரையறை புகுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியே சட்ட திருத்தம் தேவையில்லை. எரிபொருள் சிக்கனத்தைக் கருதி கார் தயாரிப்பாளர்கள் செயலாற்றினாலே போதுமானது என்றார் ஒபாமா.

எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனாலேயே பல நல்ல செயல்திட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. இதற்குப் பதிலாக இரு கட்சியினரும் விரிவாக விவாதித்து முடிவு காண்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குடியரசுக் கட்சியினரின் ஒப்புதல் இன்றி எந்த ஒரு செயல்திட்டத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.

குடியரசுக் கட்சியினர் எந்த முயற்சிக்கும் ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள் என்பது தெரிகிறது. வேலை வாய்ப்பில் ஸ்திரமான வளர்ச்சி எட்டவேண்டுமெனில் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒத்துழைப்பு அளிக்காவிடில் பற்றாக்குறை அதிகரிக்கும் அத்தகைய சூழலை ஏற்படுத்தமாட்டார்கள் என நம்புகிறேன் என்றார் ஒபாமா.

தெற்கு கரோலினாவை தலைநிமிரச் செய்வேன்: நிக்கி ஹேலி.

வாஷிங்டன்,​​ நவ.​ 4: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தை அனைத்து விதத்திலும் தலைநிமிரச் செய்யப்போவதாக அந்த மாகாணத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிக்கி ஹேலி கூறியுள்ளார்.

குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கி தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நிக்கி ஹேலி.​ இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.​ இவரது பெற்றோர்கள் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.​ வெற்றி பெற்ற பின் ஹேலி,​​தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விட முடியாது.​ ஆனால் ஒரு மனிதனுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவனை தலை நிமிரச் செய்ய முடியும்.​ அதற்கான முயற்சிகளை செய்வோம். இனி நாங்கள் தெற்கு கரோலினா மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம்.​ மக்களின் துணையுடன் தெற்கு கரோலினா மாகாணத்தை தலை நிமிரச் செய்வோம்' என்றார்.

Nov 3, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும்! முஸ்லிம் சமுதாயமும்!

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும்!முஸ்லிம் சமுதாயமும்!

இந்திய தேசத்தின் தீர்ப்பா?
இல்லை!
இந்துத்துவத்தின் மீதான ஈர்ப்பு!

புராணங்களும் புரட்டுக்களும் ஆதாரமாம்!
அந்தோ!!
வரலாற்றுக்கு நேர்ந்தது அவமானம்!

சரிசம பங்கீடாம்!
இது கரிசனமா?
இல்லை களவாணித்தனமா?

அரசியல் சாசனத்தின் கல்லறை மீது
அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளது
ஹிந்துத்துவா பாசிசம்!

கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு
கட்டுப்படவேண்டும் என
கட்டளையிடுகிறது
கபோதிகள் கூட்டம்!

சமரசம் என்ற போர்வையில்
சங்க்பரிவாருக்கு
சாமரம் வீசத்துணிந்துள்ளனர்
சமுதாயத்துரோகிகள் சிலர்!

சலசலப்புக்கு அஞ்சுவதும்
சண்டாளர்களுக்கு சல்யூட் அடிப்பதும்
சரித்திர நாயகர்களின் பண்பல்ல!

கதிகலங்கவில்லை கர்ம வீரர்கள்!
அவர்கள்
காத்திருப்பது களமிறங்கத்தான்!

எங்களின் மயான அமைதிக்கு
கோழைத்தனம் என்பது பொருளல்ல!
குமுறும் எரிமலை நாங்கள்!

அக்னி பிழம்பாய்!
சுழன்று வீசும் சூறாவளியாய்!
கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளமாய்!
சுட்டெரிக்கும் சூரியனாய்!
கிளர்ந்தெழுவோம் ஒருநாள்!

எங்களின்
உணர்ச்சிகள் என்றென்றும்
உருக்குலையாது!


-ஆயிஷா மைந்தன்

பாப்ரி மஸ்ஜித் இடிப்பை நியாயப்படுத்த முடியாது - இடித்தவர்கள் தண்டிப்பட்டாக வேண்டும்: சோனியா காந்தி.

டெல்லி,நவ.3:அயோத்தி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தவில்லை. எனவே மசூதியை இடித்தவர்களை தண்டித்தேயாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று ஒரு நாள் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு சோனியா பேசும்போது; 2010ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி காங்கிஸ் கட்சியின் நிலைக்குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை என்று ஆணித்தரமாக கூறியிருந்தோம்.

பாபர் மசூதி இடிப்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை, அதை சரி என்று கூறவில்லை. இது ஒரு அவமானகரமான, குற்றவியல் நடவடிக்கை. இதில் சம்பந்தப்பட்டவகர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.தீர்ப்புக்கு முன்பு நாடு எந்த அளவுக்கு பதட்டமாக இருந்ததை அனைவரும் அறிவோம். ஆனால் மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணிக் காத்தனர்.

அனைத்து வகையான மதவாதங்களையும் எதிர்த்து நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். இனவாதம், மதவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அதை அனுமதிக்கக் கூடாது. மதச்சார்பற்ற இந்தியாவைக் கட்டிக் காக்க அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். என்றார்.

Nov 2, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய PFI முடிவு

பெங்களூர்,நவ.2:பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் கட்சிதாரராக இணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.பெங்களூரில் கடந்த அக்டோபர் 30,31 தேதிகளில் கூடிய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் லீகல் மானிட்டரிங் செல் (சட்டநடவடிக்கை கண்காணிப்பு பிரிவு) ஒன்றை உருவாக்கியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு அநீதியும், முன்னரே திட்டமிட்டதும், சட்டத்திற்கு புறம்பானதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழுக் கூட்டம் கருத்து தெரிவித்துள்ளது. ஹிந்தத்துவா அமைப்புகளின் வகுப்புவாதவெறி பிரச்சாரங்களை ஒப்புக்கொள்கிறது இத்தீர்ப்பு. இந்தியாவின் மதசார்பற்றக் கொள்கையின் மீதான மிகவும் அநீதியான தாக்குதல்தான் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நிகழ்வு.தேசம் முழுவதும் இதற்கு நீதியை எதிர்பார்த்திருந்த பொழுதிலும் நீதி என்பது தற்பொழுதும் எட்டாக்கனியாகவே உள்ளது.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிக்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் எப்பொழுதுமே முன்னணியில் இருந்துள்ளது. புதிய சூழலில் வருகிற டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதங்களில் பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தேசிய அளவில் பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்ய பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக-பொருளாதார சக்திப்படுத்துதலை செறிவூட்டுவதன் ஒரு பகுதியாக சமுதாய முன்னேற்றத்திற்கான பரிபூரணமான திட்டத்திற்கு இக்கூட்டத்தில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் இதன் ஒரு பகுதியாக சிறப்புத் திட்டங்களும், நிகழ்ச்சிகளும் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்திய பிறகு சிறப்பு ப்ராஜக்டுகள் (வேலைத் திட்டம்) உருவாக்கப்படும். இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேசிய பொதுமக்கள் ஆரோக்கிய வாரம் கடைப்பிடிக்கப்படும் எனவும் பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது. ஆரோக்கியம், சுத்தம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள், யோகா வகுப்புகள், ஃபிட்னஸ் முகாம்கள், சுத்தம் தொடர்பான நிகழ்ச்சிகள், ஆரோக்கிய விழிப்புணர்வு மடக்கோலைகள் விநியோகித்தல் ஆகியன உட்படுத்தியதுதான்

இந்த பிரச்சாரம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டத்திற்கு அவ்வமைப்பின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தேசியப் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், டாக்டர் மஹ்பூப் ஷெரீஃப், முஹம்மது இல்லியாஸ், வி.பி.நஸ்ருத்தீன், முஹம்மது அலி ஜின்னா, அஃப்ஸல் பாஷா, உஸ்மான் பேக், ரியாஸ் பாஷா உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்

இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றில் வழக்கு.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் வசித்து வரும் மூன்று புலி ஆதரவாளர்கள் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய மனோகரன், பொன்னம்பலம், தம்பையா ஆகியோரே இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளனர். இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களை மேற்கொண்டதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டென்மார்க் சட்டத்தரணி ஜோன் எல்ம்க்யூட்ஸ் என்பரிவினால் புலி ஆதரவாளர்களின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைகளின்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் 111 நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் அனைத்துலக நீதிமன்ற பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குத் தொடர்ந்த குறித்த புலி ஆதரவாளர்கள் மாதாந்தம் ஒரு லட்சம் யூரோக்களை புலிகளுக்காக திரட்டியுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

எழுத்தாளர் அருந்ததிராயை ஒழித்துவிடுவோம்: ஆர்.எஸ்.எஸ், பஜ்ராங்க்தல் அறிவிப்பு.

புதுடெல்லி,நவ.2:கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவேண்டுமென்ற தனது டெல்லி கருத்தரங்கு உரையின் பெயரால் தன் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி வழக்கு பதிவுச் செய்வதில்லை என மத்திய அரசு முடிவெடுத்த பொழுதும் சில தேசிய ஊடகங்களும்,ஹிந்து பாசிச தீவிரவாத அமைப்பினரும் தனக்கு தண்டனை பெற்றுத்தந்தே தீருவது என கச்சைக்கட்டி களமிறங்கியுள்ளனர்.என்னை ஒழித்துவிடுவோம் என தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸும், பஜ்ரங்தள்ளும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர் என பிரபல எழுத்தாளரான அருந்ததிராய் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாசிச பா.ஜ.கவின் பெண் அமைப்பான மஹிளாமோர்ச்சா தொண்டர்கள் டெல்லியில் அருந்ததிராயின் வீட்டை தாக்கியதைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "ஏராளமானோரின் மரணத்திற்கு காரணமான அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமாரை சி.பி.ஐ குற்றவாளியாக்கியதை திசை திருப்புவதற்காக நடத்திய முயற்சிதான் பா.ஜ.கவின் மஹிளா மோர்ச்சா நடத்திய தாக்குதல் என்பது நமக்கு புரியவரும்.

ஆனால், தேசிய ஊடகங்கள் ஒரு பிரிவு இதனைப் பிடித்துக்கொண்டு திரிவது ஏன்? ஒரு குண்டுவெடிப்பின் குற்றவாளியை விட ஆபத்தானவளா இந்த எழுத்தாளர்? எனது வீட்டில் மஹிளா மோர்ச்சா அமைப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அதனை படமெடுப்பதற்காக பிரபல தொலைக்காட்சி சேனல்களின் ஒ.பி வேன்கள் என் வீட்டிற்கு அருகே வருகைப் புரிந்தன. இனிமேலும் ஒ.பி வேன்கள் என் வீட்டின் சுற்றுவட்டாரத்தில் சுற்றுவதை கண்டால் தங்களுக்கு தெரிவிக்கவேண்டும் என போலீஸ் கூறியுள்ளது.
ஒ.பி வேன்கள் என் வீட்டை வட்டமிட ஆரம்பித்தால் அதற்கு காரணம் ஏதேனும் கும்பல் என் வீட்டை நோக்கி வருகிறது எனப் பொருளாகும்.

கடந்த ஜூனில் பி.டி.ஐ செய்தி நிறுவனம் என்னைக் குறித்து அவதூறானச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து மோட்டார் பைக்கில் வந்த இருவர் என் வீட்டின் மீது கல்வீசினர். இவர்களுடன் ஒரு டி.வி.காமராமேனும் வந்திருந்தார். நல்லதொரு காட்சிக்காக காத்திருக்கும் ஊடகங்களுக்கும் கிரிமினல்களுக்குமிடையேயான ஒப்பந்தத்தின் குணம்தான் என்ன?

என்னை ஒழித்துவிடுவோம் என ஆர்.எஸ்.எஸ்ஸும், பஜ்ரங்தள்ளும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். இந்தியா முழுவது என் மீது வழக்கு பதிவுச் செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். அரசு ஒரு எல்லை வரை முதிர்ச்சியை வெளிப்படுத்தும் பொழுது, நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு சில ஊடகங்களும், ஜனநாயகத்தின் அடிப்படை காரணிகளும் அடிபணிந்துவிட்டதா? என அருந்ததிராய் கேள்வி எழுப்புகிறார்.

Nov 1, 2010

புலிகள் இனி தமிழகத்தில் செயல்படுவார்கள்: தமிழீழம் அமைப்பதற்கு இல்லை தனி தமிழ்நாடு அமைக்க.


புது தில்லி, நவ. 1: சென்ற ஆண்டு இலங்கை ராணுவத்துடன் நடந்த சண்டையில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இந்தியாவில் மீண்டும் காலூன்ற முயல்வதாக மத்திய அரசு கூறியுள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி விக்ரம் ஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயத்திடம் மத்திய அரசு திங்கள்கிழமை இவ்வாறு தெரிவித்தது.

மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமர்ஜித் சிங் தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகி விடுதலைப்புலிகள் மீதான தடை தொடரப்பட வேண்டியதற்கான காரணங்கள் குறித்து அறிக்கை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "தோற்கடிக்கப்பட்டபின் எஞ்சியிருக்கும் சில விடுதலைப்புலிகள் தமிழகத்தை மையமாகக் கொண்டு மீண்டும் அணி திரள முயல்கின்றனர்.

இது இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏற்கெனவே அவர்கள் இணையதளத்தின் மூலம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அந்த இயக்கத்தின் மீதான தடை தொடர வேண்டும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலக தமிழர் பாதுகாப்பு படை: நீங்கள் மத்தியா அரசாக வெறும் பொம்மையாக மட்டும் இருங்கள். நீங்கள் யார் தமிழர்கள் விசயத்தில் தலையிட. உங்களால் உங்களது நாட்டின் ஒரு மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து அவர்களுக்கு வேண்டியதை செய்யமுடியவில்லை. ஏதும் நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆயூதம் கொடுத்து அப்பாவி தமிழர்களை இன அழிப்பு செய்ய காரணாமாக இருந்தீர்களே. நீங்கள் தமிழர்கள் விசயத்தில் பண்ணிய துரோகத்துக்கும் கீழ் அறுப்பு வேலைக்கும் இனி மானம் உள்ள எந்த தமிழனுக்கும் மத்திய அரசு என்று ஒரு அரசு தேவையில்லை. இனி நீங்கள் யார் உங்களிடம் கேட்டு கொண்டு நாங்கள் செயல்படுவதற்கு. தமிழர்களை ஒன்று சேர்த்து முதலில் தனி தமிழ் நாடு அமைத்து விட்டு அதன் பின்னால் தனி தமிழ் ஈழம் அமைக்கப்படும். புலிகள் இனி தமிழகத்தில் தான் செயல்படுவார்கள். தமிழிழம் அமைப்பதற்கு இல்லை தனி தமிழ்நாடு அமைக்க.

மினஞ்சல் பதிவு : உலக தமிழர் பாதுகாப்பு படை.

தீபாவளி குறித்து 1929-இல் பெரியார் கூறியவை.


இனி அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா என்று கேட்கின்றேன். தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித்தனமானது மாகும், அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப்பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவதாரத்தில் கொன்றாராம். அந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாம்.

சகோதரி சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ மனிதத் தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள். விஷ்ணு என்னும் கடவுள் பூமியை புணருவது என்றால் என்ன என்றாவது, அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? வருணன் குடை என்றால் என்ன? என்பதாவது, அப்படி ஒன்று இருக்க முடியுமா என்றாவது, இவைகள் உண்மையா? என்றாவது கருதிப் பாருங்கள்! இப்படி பொய்யானதும் அர்த்தமற்றதுமான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு ரூபா நஷ்டம்? எவ்வளவு கடன்? எவ்வளவு மனஸ்தாபம்? எவ்வளவு பிரயாணச் செலவு? என்பவைகளை ஒரு சிறிதுகூட நமது மக்கள் கவனிப்பதில்லையே! அப்பண்டிகையை உத்தேசித்து ஒவ்வொருவரும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணி வாங்க ஆசைப்படுகிறான்;

கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டுவிடுகின்றன. இதுதவிர மாமனார் வீட்டு செலவு எவ்வளவு. தவிர சுத்தமுட்டாள் தனமான பட்டாசுக் கொளுத்துவது எவ்வளவு? மற்றும் இதனால் பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்பு பிடித்து உயிர் போதலும்,பட்டாசு சுடுவதாலும் செய்வதாலும் மருந்து வெடித்து உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமையாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது? இவ்வளவும் அல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு, மானம் கெடுவது எவ்வளவு? மேலும் இதற்காக ‘இனாம் இனாம்’ என்று எத்தனை பாமர மக்கள் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு பணம் செலவாகின்றது என்று கணக்குப் பாருங்கள். இவைகளை எல்லாம் எந்த இந்திய பொருளாதார தேசீய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா? என்று கேழ்க்கின்றேன்.

துலாஸ் தானம் தவிரவும் இந்து மதத்திலேயே அய்ப்பசி துலாஸ்நானமென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் கஷ்டப்படுவதும் இதற்காக ஊரைவிட்டுவிட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும். ஒன்று இரண்டு தண்ணீர் இழுத்து கொண்டு போகப்படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு அரிசி பருப்பு பணம் காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவிரிப்புராணம் படிக்க கேட்பதும் அதற்காக அந்த பொய்யையும் கேட்டு விட்டு பார்ப்பானுக்கு சீலை வேஷ்டி சாமான் பணம் கொடுத்து காலில் விழுவது மான காரியம் செய்கின்றோம். காவேரியை பெண் தெய்வமென்பதும் அதில் ஆண்கள் குளிப்பதுமான காரியம் ஆபாசமல்லவா?

ஈ.வெ.ரா. [பெரியார், ´குடி அரசு´, - சொற்பொழிவு - 20.10.1929

நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!

காஞ்சிபுரம் அருகே உள்ள கலவை எனும் ஊரைச் சேர்ந்தவர் அம்பிகா. வயது 23 இருக்கலாம். பெற்றோருக்கு மூத்த பிள்ளை, ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள். வரும் ஜனவரி 8 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. சுங்குவார் சத்திரத்தில் இருக்கும் நோக்கியா ஆலையில் கடந்த முன்று வருடங்களாக அம்பிகா வேலை செய்கிறார். நேற்று இரவு அவர்,ஆலையில் கொடுரமாக இறந்து போயிருக்கிறார். எனினும் இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.

இந்தியா, சீனா இரண்டு நாடுகளில் இருக்கும் எல்லா நோக்கியா ஆலைகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் செல்போன்களை உற்பத்தி செய்து முடிப்பதற்கு வேலை செய்து வருகின்றன. இந்த இலக்கை அடைவதற்கு தொழிலாளிகள் இரக்கமின்றி ஒரு எந்திரம் போல வேலை செய்ய வேண்டும். செய்கிறார்கள்.

சென்னை நோக்கியா ஆலையில் ஏ,பி,சி எனும் மூன்று ஷிப்ட்டுகளிலும் தலா ஒன்று முதல் இரண்டு இலட்சம் செல்பேசிகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு அங்காடி தெரு திரைப்படத்தில் வரும் கொடூரமான சூபர்வைசர் அண்ணாச்சியை விட கொடூரமான மேலாள நிர்வாகிகள் அங்கு இருக்கின்றனர்.

நேற்று இரவு (31.10.2010) பி ஷிப்ட்டில் தொழிலாளி அம்பிகா வேலை செய்கிறார். அவரது யூனிட்டின் பெயர் “இன்ஜின் ஆபரேஷன் ஃபைனல் அசம்பிளி” என்று சொல்கிறார்கள். இங்கு “ரவுட்டர் கட்டிங் மிஷின்” எனும் இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித் துண்டுகளாக்கி பிரிக்கும். வேலையின் போது சில பீஸ் போர்டுகள் எந்திரத்தில் விழுந்தால் தொழிலாளிகள் அதை கைவிட்டு எடுப்பார்கள். அவர்கள் கை நுழைந்த உடனேயே அந்த எந்திரத்தில் உள்ள ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் இயங்கி அறுப்பதை நிறுத்தி வைக்கும்.

ஆனால் இந்த ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் வேலை செய்தால் அதனால் பத்து, பதினைந்து நிமிடம் உற்பத்தி தாமதாமாகிவிடும் என்பதால் இதை மூடியே வைத்திருப்பார்கள். அதாவது தொழிலாளி தன் உயிரை பணயம் வைத்து சில விநாடிகளுக்கும் விழுந்துவிட்ட ஃபோர்டுகளை எடுக்க வேண்டும். இது பச்சையான படுகொலை இல்லையா?

எந்திரத்தில் சில ஃபோர்டுகள் விழுந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனெனில் அறுக்கப்படும் எல்லா போர்டுகளுக்கும் தொழிலாளிகள் சரியான கணக்கு கொடுக்க வேண்டும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் ஏழுமணிக்கு அப்படி விழுந்துவிட்ட ஃபோர்டை எடுப்பதற்கு அம்பிகா முயன்றிருக்கிறார். எனினும் அப்போது அந்த எந்திரத்தின் சென்சார் வேலை செய்யும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அதன் செயல்பாடு நிறுத்தப் பட்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. அதன்படி அம்பிகா கழுத்தின் பின்புறமாக அந்த எந்திரம் அறுக்கத் தொடங்கியிருக்கிறது.

கழுத்து அறுபட அறுபட இரத்தம் ஏராளமாக வழிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு கம்பி கழுத்தில் ஆழமாக சென்றுவிட்டதால் இரத்தம் உடலுக்குள்ளேயே ஏராளமாக கசிய ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு நான்கைந்து முறை மாரடைப்பு வந்திருக்கிறது. ஆனால் வெளியே யாருக்கும் இது தெரியவில்லை. சில பெண் தொழிலாளிகள் இதைப் பார்த்துவிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். சில ஆண் தொழிலாளிகள் உடனே எந்திரத்தை உடைத்து அம்பிகாவை காப்பாற்ற முயன்றிருக்கின்றனர்.

ஆனால் அங்கிருந்த சூபர்வைசர் வெற்றி தேவராஜ் மேலிடத்தில் பேசிவிட்டு மிஷனை உடைப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அந்த எந்திரம் இரண்டு கோடி ரூபாய் விலை உள்ளது என்றும் அதை பொறுமையாக டூல்சை கொண்டு படிப்படியாக கழட்டலாம் என்று அவர் சொல்லிவிட்டு எந்திரத்தை உடைக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பாக செக்யூரிட்டிகளை நிறுத்தியிருக்கிறார். டூல்சை கொண்டு கழட்டலாம் என்றால் அங்கே டூல்ஸ் பாக்சும் இல்லை.

இதற்குள் 10 நிமிடங்கள் கழிந்துவிட்டன. ஏராளமான இரத்தம் வழிந்துவிட்டது. கழுத்தை அறுத்த அந்த எந்திரத்தில் இருந்து அம்பிகா மீட்கப்படவில்லை. இறுதியில் வேறுவழியின்றி தொழிலாளிகள் நிர்வாகத்துடன் சண்டை போட்டு எந்திரத்தின் கட்டரை உடைத்து அம்பிகாவை மீட்கின்றனர். இப்போது மொத்தம் 20 அல்லது 25 நிமிடங்கள் முடிந்துவிட்டன்.

ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார். அதற்குள் அவர் உயிர் பிரிகிறது. பின்னர் அவரை கே.எம்.சி, அப்பல்லோ என்று மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கிறார்கள். தொழிலாளிகளின் கூற்றுப்படி அம்பிகா அதற்கு முன்னரே இறந்து போயிருக்கிறார்.

ஆலைக்குள் வரும் தொழிலாளிகள் எவரும் தமது செல்பேசிகளை பணியிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்பதால் அம்பிகாவின் மரணம் அவர்களுக்கு உடனேயே தெரியவில்லை. “அசம்பிள் டூ ஆர்டர் செக்ஷன்” எனும் பிரிவின் சூபர்வைசர் ஜே.புருஷோத்தமன் அம்பிகாவின் மரணத்தை மறைத்து தொழிலாளர்களை தொடர்ந்து பணியாற்ற பணித்திருக்கிறான். அம்பிகாவுக்கு ஒன்றுமில்லை, இரத்தம் ஏற்றுகிறார்கள், எல்லாரும் வேலையை தொடருங்கள் என்றும் கூறியிருக்கிறான். இவன் மீது பாலியல் புகார் உள்ளிட்டு 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதே.

பின்னர் மருத்துவமனையின் நர்ஸ் வழியாக அம்பிகாவின் மரணச் செய்தி தொழிலாளிகளுக்கு கிடைக்கிறது. அதன் பின்னர் இரவு 12 மணிக்குத்தான் உற்பத்தியை நிறுத்துகிறார்கள். அதுவும் கூட தொழிலாளிகளின் கோபத்தால் நடந்ததே அன்றி நிர்வாகத்தால் அல்ல. அம்பிகாவின் மரணம் இரகசிய செய்தியாக கசிந்த பிறகே நிர்வாகம் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது. எப்படியும் உற்பத்தியை நிறுத்தக்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பம்.

மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள் குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை தந்துவிட்டால் தங்களது மகளின் உயிர் திரும்ப கிடைக்குமா என்றும் அவர்கள் ஆவேசப்படுகிறார்கள். தொழிலாளிகளுக்கு அறிவித்திருந்தால் அம்பிகா கொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் 100 மில்லியன் இலக்கை அடையமுடியாமல் போயிருக்குமே?

எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இரண்டு கோடி நட்டமாயிருக்குமே, அதற்கு என்ன செய்ய முடியும்? கட்டிங் இயந்திரத்தின் சென்சார் போர்டை எப்போதும் இயக்கத்தில் வைத்திருந்தால் அம்பிகா இறந்திருக்க மாட்டார். ஆனால் நிறுத்தப்படும் ஒவ்வொருமுறையும் உற்பத்தி தடங்கலுக்குள்ளாயிருக்குமே, அதற்கு என்ன செய்வது?

100 மில்லியன் இலக்கை அடைய வேண்டுமென்றால் இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில்தான் நோக்கியா தொழிலாளிகள் வேலை செய்ய வேண்டும். அப்படித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்ததினால்தான் இன்று அம்பிகா கொல்லப்பட்டிருக்கிறார்.சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6S) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். அந்த பாதுகாப்பு இலட்சணத்திற்கு ரத்த சாட்சியம்தான் அம்பிகா.

கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், அறிவித்தாலும் அபயாத்தோடு கையை விட்டு விழும் போர்டுகளை எடுப்பது என்று பின்னர் இயந்திரத்தை உடைக்க கூடாது என்று தடை போட்டு, இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அம்பிகா கொடுரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்.

சன் டி.வியில் ஒரு ஒற்றை வரி செய்தியோடு இந்த படுகொலை முடிந்து விட்டது. நோக்கியா ஆலைக்கு சென்ற வினவு செய்தியாளர்களைத் தவிர அங்கு எந்த ஊடக நபர்களும் இல்லை. எல்லா ஊடகங்களிலும் நோக்கியா விளம்பரம் கல்லா கட்டுகிறது என்ற உண்மை காரணமாக அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தொழிலாளிகளிடையே பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக போலீசு பெருமளவில் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது.

அம்பிகாவின் கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு தி.மு.க பிரமுகர்கள் முயல்கிறார்கள். போராட தொழிற்சங்க தலைமை இல்லாத காரணத்தால் தொழிலாளிகள் என்ன செய்வதென்று திகைத்திருக்கிறார்கள். அம்பிகாவின் உடல் அப்பல்லோவின் சவக்கிடங்கில் இருக்கிறது.

அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச்சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சிலாகிப்பார்கள்.அவர்கள் பருகுவது சாராயமல்ல, அம்பிகாவைப் போன்ற தொழிலாளிகளின் இரத்தம் என்பதை நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். பழி தீர்ப்போம்.

நன்றி: வினவு

தீபாவளி அன்று ஸ்டிரைக் இல்லை: காஷ்மீர் விடுதலை இயக்ககள் அறிவிப்பு.

ஸ்ரீநகர், நவ.1: நல்லெண்ண நடவடிக்கையாக தீபாவளியை முன்னிட்டு காஷ்மீரில் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக சையத் அலி ஷா தலைமையிலான ஹூரியத் மாநாடு அறிவித்துள்ளது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி ஸ்டிரைக் இருக்காது என ஹூரியத் மாநாடு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அயாஸ் அக்பர் தெரிவித்தார்.

தீபாவளியைக் கொண்டாடுவதற்காக நவம்பர் 5-ம் தேதி ஸ்டிரைக் நடத்தக்கூடாது என அனைத்து கட்சி சீக்கிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஜக்மோகன் சிங் ரெய்னா ஹூரியத் மாநாட்டுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மற்ற சமூகத்தினரின் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. அதனால் தீபாவளியைக் கொண்டாட இந்துக்களையும், சீக்கியர்களையும் அனுமதிக்கும்வகையில் ஸ்டிரைக்கை நிறுத்த ஹூரியத் மாநாடு தீர்மானித்துள்ளதாக அயாஸ் அக்பர் தெரிவித்தார்.

இணையதளத்தில் ஸ்யூஸ் மென்பொருளை பயன்படுத்தி கொள்ளையடித்த ரஷ்யர் குறித்த பரபரப்பு செய்தி.

வாஷிங்டன்,நா.1:இணையதள உலகின் மாபெரும் திருடனாக கருதப்படும் ஹேக்கர் ஓய்வு பெறுகிறார். பெரும் நிறுவனங்களின் மிகவும் ரகசியமான பாஸ்வேர்டுகளை திருடி பணக்கொள்ளை நடத்தும் கம்யூட்டர்கொள்ளைக்காரனான ஹேக்கர்களில் ஒருவர்தான்
ஓய்வு பெறும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஸ்யூஸ் என்ற ஆபத்தான மென்பொருளை பயன்படுத்தித்தான் இவர் இணையதளத்தில் ரகசிய கோடுகளை தகர்த்திருந்தார். வங்கிகளிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து அதன்மூலம் வாகனங்களும், கட்டிடங்களும் வாங்கிக் குவித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த இந்த தீவிரவாதி இப்பொழுதுகூட மர்மமாகத்தான் உள்ளார்.

ஆனாலும் இவருடைய மென்பொருளான ஸ்யூஸ் பிரசித்திப் பெற்றதாகும். இனிமேல் தான் இந்தத் தொழிலை நிறுத்தப்போவதாக ரஷ்யாவைச் சார்ந்த ஹேக்கர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க நகரங்களிலிருந்து பல்வேறு நிறுவனங்களின் நபர்களிடமிருந்து 100 மில்லியன் டாலர் திருடியதைத் தொடர்ந்துதான் இவர் பிரசித்திப் பெற்றார்.