Oct 30, 2010

தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு துரோகி கருணாநிதி தான் முக்கிய காரணம் : பழ. நெடுமாறன்.

சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த சில அறிக்கையில் தொடர்ந்து கூறி வருகிறார். இத்தனை நாளும் இதற்கு பதில் தராமலிருந்த, ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், இப்போது ஈழப் போராளிகள் விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதை மேடைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.

ஈழப் போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான் என்றும், தன்னை விட பிரபாகரனையே ஈழத் தமிழர்கள் மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.சமீபத்தில் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் இப்படிப் பேசினார்:

“கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச் செய்த துரோகங்கள் குறித்து இதுவரை நான் பேசாத பல விஷயங்களை இன்று பேசப்போகிறேன்.1985-ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை போராளி இயக்கங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். இந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார் என்பதால் புலிகள் பணம் வாங்கச் செல்லவில்லை. உடனே எரிச்சலடைந்த கருணாநிதி, “என் பணத்தை அவர்கள் வாங்க மாட்டார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில்தான் எந்த விளம்பரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருந்தார். தன் சொந்தப் பணத்தையே அள்ளிக் கொடுத்தார் அவர்.இருந்தாலும் புலிகளில் சில தம்பிகளுக்கு கருணாநிதி மேல் நம்பிக்கை இருந்ததால் அவரைச் சந்தித்து பணம் கேட்கலாம் என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர். சரி, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவாவது, போய் கேட்டுப் பாருங்கள் என நான் சொன்ன ஏற்பாட்டின்படி, 26.1.85 அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.

அவரிடம் டஎங்களுக்குப் பத்து கோடி ரூபாய் வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அவர்களை அனுப்பிவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’ என்றார் பெரும் அதிர்ச்சியுடன். பின்னர் புலிகள் அமைப்பினரைச் சந்திக்கும்போது ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அவரிடம் அனுப்பினேன்’ என்று கூறினேன்.

5.6.86-ம் ஆண்டு தி.மு.க கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. கடற்கரை மணலில் யாரோ குண்டை செருகி வைத்திருந்தார்கள். அந்தப் பழியை தி.மு.க தலைமை புலிகள் மீது போட்டது. நான் பாலசிங்கத்தையும்,பேபியையும் அனுப்பி உண்மையைச் சொல்ல வைத்தேன். பிறகு குண்டு வைத்தது ‘டெலோ’ அமைப்புதான் எனக் கண்டுபிடித்தனர்.
மீண்டும் கருணாநிதியை நாங்கள் சந்தித்தபோது, ‘பிரபாகரன் என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா? மக்களா? என்றால் இரண்டும் ஒன்றுதான். அந்த மக்கள் பிரபாகரனைத்தான் தலைவனாக நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்,’ என்றார்.

இந்தியா,-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணியின் அமிர்தலிங்கம் உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார். நான் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,’மத்திய உளவுப்பிரிவின் நெருக்குதலில்தான் நான் இந்த அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது ‘என் அறிக்கையைக் கண்டித்து கருணாநிதி பதில் அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது?’ என்று உளவுத் துறையினரிடம் கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம் அறிக்கை கொடுக்க மாட்டார்’ என்று உளவுப்பிரிவினர் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியேதான் கருணாநிதியும் நடந்து கொண்டார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.

அதற்கு பின் கருணாநிதியை அமிர்தலிங்கம் சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல் (பிரபாகரன்) அவன். இரண்டே நாளில் இந்திய ராணுவம் அவனது கொட்டத்தை அடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா? இல்லையா? இதை கருணாநிதி மறுப்பாரா?
1987-ம் ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை. உடன்பாட்டைத் தொடர்ந்து குமரப்பா உள்பட 12 பேர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இதைக் கண்டித்து அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள்.

ஆனால் நியூயார்க் மருத்துவமனையில், உடல் நலம் குன்றிய நிலையிலும் எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார். நாங்கள் நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர் பொன்னையனையே அனுப்பி வைத்தார். ஆனால் கருணாநிதி வாயே திறக்கவில்லை.
இவற்றையெல்லாம் விட மிக மோசம், கருணாநிதி செய்த இன்னொரு செயல்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதாவது 1973-ம் வருடம் தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் செல்லும்போது குட்டிமணியை போலீஸார் பிடித்தார்கள். அவரை சிங்களப் படையிடம் கருணாநிதிதான் ஒப்படைத்தார்.

குட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து 1983-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி ஒப்புக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர். மகிழ்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து பேச எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது அவர், ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியாது. அவர் இந்த விவகாரம் பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக் கோப்பை வாசிப்பேன்’, என்று கூறி அந்த ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.

அந்தத் தாள்களில் குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ், டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில், ‘ஒப்படைக்கிறேன்’ என கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த கடிதம் என அனைத்து ஆதாரங்களும் இருந்தன. சொன்னபடியே சட்டசபையில் எம்.ஜி.ஆர்.அந்த ஆதாரங்களை முழுமையாக வாசித்தார். இது சட்டமன்றக் கோப்புகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய கண்களை பார்வையில்லாத ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை அந்தக் கண்களின் வழியாக நான் பார்க்க விரும்புகிறேன்’, இலங்கை வெளிக்கடைச் சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன் குட்டிமணி மரணத்தின் வாயிலில் நின்று உகுத்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள ராணுவம் குட்டிமணியின் கண்களைத் தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய வரலாறை உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மறந்து விடவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்து வந்த தடா சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களது மரணச் சான்றிதழ்கள் இன்னமும் இலங்கை அரசால் வழங்கப்படவில்லை.

இதற்காக பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்குப் படையெடுத்தும் பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள இந்திய துணைத் தூதர் மற்றும் இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற சி.பி.ஐ. தலைமை விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன…”, என்றார்.

வைகோ பேசுகையில், “என்னை வெளிநாடுகளில் பேச அழைக்கிறார்கல் தமிழ்ச் சகோதரர்கள். ஆனால் நான் போகப் போவதில்லை. அந்த வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன்…” என்று ஆரம்பித்தவர், கருணாநிதியின் துரோகங்களைப் பட்டியலிட்டார்.
இறுதியில் “நிறைவாக இருக்கும் வரை மறைவாக இரு’ என காசி ஆனந்தனின் வரிகள், பிரபாகரனுக்கும் பொருந்தும்!” என்று அவர் தனது பேச்சை முடித்த போது கூட்டம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தது.

மன்மோகன் சிங்: மக்கள் பிரதிநியா? பண முதலைகளின் எடுபிடியா?


பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப் போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான். “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.

‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங். “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.

மன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார். “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது. இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்?” இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளலாம் ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.

மைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது. “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான், வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்! இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.

இந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங் தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது?

குஜராத்தை விட்டு வெளியேற காவி தீவிரவாதி அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.


ஆமதாபாத், அக்.30- குஜராத் மாநிலத்தில் இருந்து நாளை காலைக்குள் முன்னாள் அமைச்சர் தீவிரவாதி அமித் ஷா வெளியேற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அமித் ஷாவுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தனது இல்லத்தில் விசாரித்த நீதிபதி அஃப்டாப் ஆலம், குஜராத்தில் இருந்து நாளை காலைக்குள் தீவிரவாதி அமித் ஷா வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்.எனினும், தீவிரவாதி அமித் ஷாவின் ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. மறுஉத்தரவு வரும்வரை வெளிமாநிலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரளா: வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறிய SDPI.


திருவனந்தபுரம்,அக்.30:கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஐந்து பஞ்சாயத்து வார்டுகளில் இரண்டாவது இடத்தையும், 47 வார்டுகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது எஸ்.டி.பி.ஐ.எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட 114 வார்டுகளில் 63 இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் வெற்றித் தோல்வியை நிர்ணயித்தது எஸ்.டி.பி.ஐ.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் போட்டியிட்ட 22 வார்டுகளில் பன்னிரெண்டு வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ இரு கூட்டணிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிர்ணாயக சக்தியாக திகழ்ந்தது.
மாவட்ட பஞ்சாயத்திற்கு போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ பெண் வேட்பாளர் நாஃபிலா 1362 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட ஐந்து ப்ளாக் டிவிசனில் நான்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க இடதுசாரி-வலதுசாரி முன்னணிகள் பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்து விசித்திரமான கூட்டணியை உருவாக்கியதால் எஸ்.டி.பி.ஐ தோல்வியுறக் காரணமானது என எஸ்.டி.பி.ஐ தலைவர் எ.இப்ராஹீம் குட்டி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க சி.பி.எம்-காங்கிரஸ், சி.பி.எம்-பா.ஜ.க, காங்கிரஸ்-பா.ஜ.க என்ற விசித்திரமான கூட்டணி உருவானது. எஸ்.டி.பி.ஐ தோற்கடிக்க ஜமாஅத்தே இஸ்லாமியும் பல இடங்களில் இதரக் கூட்டணிகளுடன் சேர்ந்ததாகவும் இப்ராஹீம் குட்டி தெரிவித்தார். கொல்லம், கண்ணூர், காஸர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட்ட பல இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று நிர்ணாயக சக்தியாக விளங்கியுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ் (தமிழில் பாலைவனதூது).

Oct 29, 2010

தீவிரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ்.

டெல்லி,அக்.29:அஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் கண்டுபிடித்த தகவல்கள் ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பை தடைசெய்ய பொருத்தமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார். எனினும் ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பின் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்றார் அவர்.

Oct 28, 2010

ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து.

அமுக்கறான் கிழங்கு 700 கிராம், நிலபனை கிழங்கு 700 கிராம், சுக்கு 70 கிராம், மிளகு 70 கிராம், திப்பிலி 70 கிராம், சித்திர மூலம் 70 கிராம், ஏலம் 35 கிராம், கிராம்பு 35 கிராம், சிறுனாகபூ 35 கிராம், ஜாதிக்காய் 35 கிராம், லவங்க பத்திரி 35 கிராம், சவ்வியம் 72 கிராம், பேரிச்சம் காய் (விதை நீக்கியது) 525 , ஆகியவைகளை நாட்டு மருந்து கடையில் வங்கி நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஓன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து நன்றாக பாகு பதம் வரும்வரை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் இந்த பொடிகளை போட்டு நன்றாக கிளறி இறக்கிவிடுங்கள். நன்றாக சூடு ஆறியபிறகு அதில் 50 மில்லி தேனையும், 700 மில்லி நெய்யையும் போட்டு நன்றாக கிளறி காற்று போகாத ஒரு பாட்டலில் இட்டு மூடி வைத்துவிடுங்கள். ஐந்து நாட்கள் கழித்து ஒரு கோலிகுண்டு அளவு மூன்று நேரம் உணவுக்கு முன்னாள் 90 நாட்கள் சாப்பிட்டு வாருங்கள். ஆண்மை குறைவு நீங்கும்.

கிலானி, அருந்ததி ராய் மீது வழக்கு இல்லை.

புது தில்லி, அக். 28: காஷ்மீர் சுதந்திரத்தை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் சுதந்திர போராட்ட தலைவர் சையத் அலி ஷா கிலானி, காஷ்மீர் சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவர்களுக்கு தேவையற்ற விளம்பரமாக அமையும் என்பதாலும், சுதந்திர போராட்டத்திற்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்பதாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகள் மீதான தடை: அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை.

சென்னை, அக்.28: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை நீட்டிப்பு குறித்து, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் அமர்வுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, பழ.நெடுமாறன், வழக்கறிஞர்கள் தேவதாஸ், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜரான காவல் அதிகாரிகளிடம் வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.

இதுதொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் விவரம்:இன்று காலை 10.30 மணி அளவில், சென்னையில் பயங்கரவாத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயத்தின் நீதிபதி விக்ரம் ஜித் சென் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக வைகோ, பழ. நெடுமாறன், வழக்கறிஞர்கள் தேவதாஸ், சந்திரசேகர் ஆகியோர் தீர்ப்பாயத்திற்கு வந்தனர்.

அரசுத் தரப்பு சார்பில் சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சந்திரசேகரன், கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், சென்னை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முகமது அஸ்ரப் மற்றும் திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

சாட்சி சந்திரசேகரனிடம் வைகோ , சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 10 (a) (1) கீழ் யார் மீதாவது விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டின்மீது வழக்கு பதிவு செய்துள்ளீர்களா?" என்று கேட்டார். அப்படி எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சந்திரசேகரன் கூறினார்.

தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன் நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். அப்பொழுது வழக்கறிஞர் சந்திரசேகரன் உயர் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்றும் அப்பேச்சின் தொடர்ச்சியாக குற்றச் செயல்கள் ஏதேனும் நடந்திருந்தால்தான் குற்றமாகும் என்றும் தெரிவித்து சீமான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்து அது சாட்சிக்குத் தெரியுமா என்று கேட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தில்லி நீதிமன்றத்தில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்தார் என மதிமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைவெட்டி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் வெற்றி.

கொச்சி,அக்.28:தனது சொந்த வாக்கையே பதிவுச் செய்ய அனுமதியில்லாமல் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் 3992 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எ.எம்.குஞ்சு முஹம்மது 2089 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இடதுசாரி வேட்பாளரான யு.எஸ்.குஞ்சு முஹம்மதிற்கு 1666 வாக்குகளே கிடைத்தன.

இத்தொகுதியில் பி.டி.பி, ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான ஜனகீய விகசன முன்னணி, கேரள காங்கிரஸ் மாணி பிரிவு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கேரள அரசியல் வரலாற்றில் சிறையிலிருந்து ஒரு வேட்பாளர் வெற்றிப் பெறுவது அபூர்வ சம்பவமாகும்.

முவாற்றுப்புழாவில் பேராசிரியர் ஜோசப் என்பவர் நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் விதமாக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வினாத்தாள் தயாரித்த சம்பவத்தில் கோபமடைந்த இளைஞர்கள் யாரோ சிலர் அவருடைய கையை வெட்டினர். இதுத் தொடர்பாக போலீசாரால் பேராசிரியர் கைதுச் செய்யப்பட்டார்.

சிறைச் சட்டப்படி தண்டனைப் பெற்ற குற்றவாளிகளுக்கு வாக்களிக்க உரிமையில்லை. ஆனால், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சிறை அதிகாரிகள் மேற்கண்ட சட்டத்தையே நடைமுறைப்படுத்தியதால் பேராசிரியர் அனஸ் வாக்களிக்க இயலவில்லை.

பேராசிரியர் அனஸ் கைவெட்டி வழக்கில் நிரபராதி என இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளே கூறியதால் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி தேர்தலில் களமிறங்கினார் பேராசிரியர் அனஸ். முவாற்றுப்புழா நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்து அனுமதி கிடைத்த பிறகுதான் பேராசிரியர் அனஸ் தேர்தலில் போட்டியிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி போலீஸ் அழைத்ததன் பேரில் முவாற்றுப்புழா காவல் நிலையத்தில் ஆஜரான அனஸை கைதை பதிவுச் செய்யாமலேயே இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்தனர். சமூக-கலாச்சார களங்களில் தீவிர பணியாற்றிய முவாற்றுப்புழா இலாஹியா கல்லூரி பேராசிரியரான அனஸ் போட்டியின் துவக்கத்திலேயே தான் நிரபராதி என்பதை மக்கள் முன் விவரித்ததால் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

போலீசார் சதித்திட்டம் தீட்டி கல்வியறிவுப் பெற்ற முஸ்லிம் இளைஞர்களை தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்றும் வகையில் செயல்பட்டதே தனது விவகாரத்திலும் நடந்ததாக பேராசிரியர் அனஸ் வாக்காளர்களை புரியவைத்ததன் பலனாக அனஸிற்கு உயரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக அவரை தேர்தலில் வெற்றிப்பெற வைத்துள்ளனர் மக்கள்.

சிறையிலிருந்து தனது வெற்றியை அறிந்த பேராசிரியர் அனஸ் தனது நன்றியை வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொண்டார். தான் நிரபராதி என்பதை நிரூபித்து சிறையிலிருந்து விடுதலையானால் உடனடியாக ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து நன்றி தெரிவிப்பதாகவும் அனஸ் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அனஸை கைவெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்த்தைத் தொடர்ந்து இலாஹியா கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது. ஆனால் அக்கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் 21 இடங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ் (தமிழாக்கம் பாலைவன தூது.)

கேரளா மாநிலத்தில் SDPI அரசியல் பிரவசம் வெற்றிகரமாக தொடங்கியது.

திருவனந்தபுரம்,அக்.28:கேரள மாநிலத்தில் முதன்முறையாக தேர்தலில் பங்கேற்ற சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் நான்கு நகரசபை வார்டுகளிலும், ஒரு ப்ளாக் பஞ்சாயத்திலும், ஏழு கிராமப் பஞ்சாயத்துகளிலும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

பல்வேறு கட்சிகளைக் கூட்டணியில் உட்படுத்தி தேர்தல் களத்தில் குதித்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் முன்னணியினருக்கு மத்தியில் தன்னந்தனியாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ தனது தேர்தல் பிரவேசத்தை கம்பீரமாக்கியது.வெற்றிப்பெற்ற இடங்களைத் தவிர 70க்கும் மேற்பட்ட வார்டுகளில் நிர்ணய சக்தி என்பதையும் எஸ்.டி.பி.ஐ நிரூபித்துள்ளது.

பத்தணம் திட்டா நகரசபையில் குலசேகரபதி வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் எஸ்.ஷைலஜா 244 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.தொடுப்புழா நகரசபையில் கீரிக்கோடு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆசிரியை சுபைதா 310 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.சொர்ணூர் நகரசபையில் முனிசிபல் வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பீனா 270 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.

கண்ணூர் நகரசபையில் கஸனாக்கோட்டை தெற்கு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸுஃபீரா 325 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார். எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் 1903 வாக்குகளின் பெரும்பான்மையோடு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பேராசிரியர் அனஸ் வெற்றிப் பெற்றுள்ளார்.

முவாற்றுப்புழா பேராசிரியரின் கை வெட்டி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர் அனஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.வெற்றிப்பெற்ற இதர வேட்பாளர்கள் வருமாறு:

எர்ணாகுளம் கடுங்கல்லசூர் பஞ்சாயத்து வார்டு-எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸீனத் ஜலீல் வெற்றி

ஈராட்டுப்பேட்டை பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் என்.என்.பினு நாராயணன் வெற்றி

கொல்லம் குலசேகரபுரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ ஆதரவுப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் எ.நாஸர் வெற்றி

கொல்லம் போருவழி பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆமினா வெற்றி

திருச்சூர் சுவனூர் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஷாமிலா கபீர் வெற்றி

காஸர்கோடு மஞ்சேஷ்வரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் மைமூனா வெற்றி

மலப்புரம் வேங்கர பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் கதீஜா ஷம்ஸ் வெற்றி

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம்: அருந்ததி ராய்க்கு முழு ஆதரவு: தொல்.திருமாவளவன்.

சென்னை,அக்.28:காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று அருந்ததி ராய் பேசியதை முழுமையாக ஆதரிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "காஷ்மீர் குறித்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் கருத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை. பா.ஜ.க.வை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகிறார்கள் என்பதே உண்மை.

மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவில் ஒருவராக நான் காஷ்மீர் சென்றிருந்தேன். 'இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும்' என்று எங்களிடம் அந்த மாநில மக்கள் கோரிக்கை விடுத்தனர். அருந்ததி ராய் பேசியதாகக் கூறப்படும் செய்திகளில் எந்தத் தவறும், தேச விரோதமும் இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீர் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனைத் தான் அவர் பேசியுள்ளார்.

மேலும் யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மவுனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அருந்ததிராய்க்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம். ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும்." என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Oct 27, 2010

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி சேவை; அமல்படுத்துவது ஆலோசனை.


கோலாலம்பூர், அக்.27: இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் பெருகிவரும் மூட்டை பூச்சிகள்: அவதிப்படும் மக்கள்.


நியூயார்க்,அக்.27:கதவு இடுக்குகளில், நாற்காலிகளில், குறிப்பாக மரக் கட்டில்களில் மறைந்து இருந்து கைகளிலும் கால்களிலும் கடித்து, ரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப் பூச்சியை யாரும் மறக்க முடியாது. நியூயார்க் நகரின் வானளாவிய அலுவலகக் கட்டிடங்களிலும் பள்ளி கட்டிடங்களிலும் மூட்டைப் பூச்சி பரவி வருகிறதாம். நியூயார்க் நகரவாசிகள் பயந்துபோய் இருக்கிறார்கள். நியூயார்க்கை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் இதனால் கணிசமாகக் குறைந்துவிட்டதாம்.

நியூயார்க்கின் உயரமான கட்டிடம் எம்பயர் ஸ்டேட் பில்டிங். பிரபலமான மற்றொரு கட்டிடம் லிங்கன் சென்டர். இந்தக் கட்டிடங்களில் மூட்டைப் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் மக்கள் ஆடிப்போய் இருக்கிறார்கள். ஆப்பிள் விதை சைசில், பிரவுன் கலரில் இருக்கும் மூட்டைப் பூச்சிகள் நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் பல பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது. ஓராண்டு வரை உணவு இல்லாமல் உயிர் வாழும் என்பதால், மக்களும் அதிகாரிகளும் என்ன செய்வது எனத் தெரியாமல் விழிக்கின்றனர்.

பாபர் மசூதி விசயமாக தீவிரவாத ஹிந்துத்துவா அமைப்புகளுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டாம்: PFI

பெங்களூர்,அக்:பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் தீவிரவாத சங்க்பரிவார் மற்றும் அதன் துணை அமைப்புகளுடனான எல்லாவித சமரசப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு முஸ்லிம் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவெடுத்திருக்கும், சுன்னி வக்ஃப்போர்டு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய முஸ்லிம்களில் அதிக செல்வாக்குப் பெற்ற அமைப்பான முஸ்லிம் தனியார் சட்டவாரியம் இந்த மாதம் கூட்டிய கூட்டத்தில் வைத்து சமரசத் தீர்வு காண்பதற்கான சந்தேகங்களுக்கு முடிவுக்கட்டி, எதிர்கால செயல் திட்டங்களுக்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படவும் செய்ததாகும். ஆதாரங்களை விட நம்பிகையை அடிப்படையாகக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பின் அபத்தங்களை திருத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு உண்டு என அக்கூட்டம் மதிப்பீடுச் செய்திருந்தது.

கோயிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டப்பட்டது என்ற வாதம் நிரூபிக்கப்படாத சூழலில், பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடையாக அளிக்கவேண்டும் என்ற வாதம் உள்ளிட்ட சில தனிப்பட்ட கருத்துக்களை முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நிராகரித்துவிட்டது.

நிலைமை இவ்வாறிருக்க, மூத்த தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் இதுக்குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சில உறுப்பினர்களின் நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாகவும், தேவையற்றதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் விமர்சிக்கப்பட்டுள்ள தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார்,தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர்களான சுவாமி சிதானந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது வீண் வேலையாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் குறித்த முஸ்லிம்களின் உரிமைக் கோரிக்கையைக் குறித்து பொதுமக்களிடம் இது சந்தேகத்தை கிளப்பவே உதவும்.பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமன் பிறந்த இடம் என்பதை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமல் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காண இயலும் என தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்
தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முடிவுச் செய்துள்ள தீர்மானங்களைக் குறித்து எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசியத் தலைவர் கோரிக்கை விடுத்தார். ஹிந்தத்துவா அமைப்புகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் வாரியத்தின் உறுப்பினர்களை தலைவர்கள் சந்தித்து அந்த சிந்தனையிலிருந்து மாற்றவேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

அருந்ததி ராயை கைதுச் செய்யும் முயற்சி கண்டிக்கத்தக்கது : NCHRO


புதுடெல்லி,அக்.27:டெல்லியில் கருத்தரங்கில் கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்திய சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராயை தேசத்துரோகம் குற்றஞ்சாட்டி கைதுச் செய்ய முயல்வது அரசியல் சட்டம் அனுமதித்த அடிப்படை உரிமைகள் மீதான அத்துமீறல் என NCHRO என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய கமிட்டி தெரிவித்துள்ளது.

தனது கருத்தை வெளியிட்டதற்காக ஜனநாயக அரசு ராணுவ அரசு மேற்கொள்வதற்கு சமமான மனித உரிமை மீறலை நடத்துகிறது. சர்வதேச அளவில் பிரபலமான இலக்கியவாதியும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயை கைதுச் செய்ய நடத்தப்படும் முயற்சி
எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

அருந்ததிராயை பொய் வழக்கில் கைதுச்செய்து சிறைக்கொட்டடியில் அடைக்க முயற்சிக்கும் மத்திய அரசின் தீர்மானம் கண்டிக்கத்தக்கது என NCHRO தலைவர் நீதிபதி ஹெச்.சுரேஷ், தேசிய ஒருங்கிணைப்பாளர் ரெனி ஐலின் ஆகியோர் இவ்வறிக்கையை வெளியிட்டனர்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

கேள்வி கேட்பவர்களை சிறையில் தள்ளுவதா : இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி.

புதுடெல்லி,அக்.27:உலகில் மிகக் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்பிற்கு கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நீதியைக் கோரித்தான் டெல்லி கருத்தரங்கில் நான் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினேன் என பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது "கஷ்மீர் சுதந்திரம் குறித்து நான் பேசிய கருத்துக்களுக்காக, என் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டு கைதுச் செய்யப்படலாம் என செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன்.

கஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக தினந்தோறும் என்ன கூறுகிறார்களோ, அதைத்தான் நான் கூறினேன். வரலாற்று ஆசிரியர்களும், பல ஆண்டுகளாக எதை எழுதுகிறார்களோ அதைத்தான் நானும் பேசினேன். எனது உரையின் நகலை வாசிக்க எவராவது தயாரானால், அது அடிப்படை நீதிக்கான தேவை என காண இயலும்.

உலகத்தில் மிகக் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்பிற்கு கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நீதியைக் கோரித்தான் நான் பேசினேன். பிறந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட கஷ்மீரி பண்டிட்டுகளின் துயரமான வாழ்க்கையைக் குறித்தும், சுடாலூர் கிராமத்தில் இடுக்காட்டில் அடக்கம் செய்யப்பட்ட கஷ்மீரில் மரணமடைந்த தலித் ராணுவ வீரர்களுக்காகவும்தான் நான் பேசினேன்.

நேற்று தெற்கு கஷ்மீரின் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு பயணம் செய்தேன். 47 தினங்கள் நீண்ட போராட்டத்திற்கு காரணமான, ஷோபியானில் ஆஸியாவும், நிலோஃபரும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் என் நினைவலையில் வந்தன. அவர்களின் கொலையாளிகள் இதுவரை நீதியின் முன்னால் நிறுத்தப்படவில்லை. ஆஸியாவின் சகோதரரையும், நிலோஃபரின் கணவரையும் நான் கண்டேன்.

துயரத்திலும் கோபத்திலும் ஆழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் நடுவில் நாங்களிருந்தோம். இந்தியாவிலிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த அவர்கள், சுதந்திரம் ஒன்றே வழி என நம்புகின்றனர். கண்ணின் வழியாக தோட்டக்கள் பாய்ந்து சென்ற கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை நான் கண்டேன். கல்வீசியதற்கு தண்டனையாக அனந்தநாக்கில் தனது நண்பர்களான 3 இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து கையிலுள்ள நகங்களை பிய்த்து எறிந்ததாக என்னுடன் பயணம் செய்த இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

நான் துவேசப் பிரசங்கம் நிகழ்த்தியதாகவும்,இந்தியாவை பிரிக்கக் கோரியதாகவும் சில பத்திரிகைகள் எழுதுகின்றன.அன்பு மற்றும் அபிமானத்தின் காரணமாக எழுந்ததுதான் எனது வார்த்தைகள். மக்கள் கொல்லப்படக் கூடாது, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படக் கூடாது, சிறையிலடைக்கப்படக் கூடாது, நான் இந்தியக்காரன் எனக் கூறுவதற்காக அவர்களுடைய நகங்கள் பிய்த்து எறியப்படக் கூடாது என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே எனது உரை அமைந்தது.

சமூகம் ஒன்றாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். எழுத்தாளர்களின், சிந்தையில் தோன்றுவதை, பேசுவதை தடுத்து அமைதியாக்கும் இந்த தேசத்தை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். சமூகக் கொலைக்காரர்கள், பெரிய நிறுவனங்களை நடத்தும் ஊழல்வாதிகள், வன்புணர்ச்சியை செய்பவர்களும், ஏழைகளில் ஏழைகளான மக்களை இரையை வீசி பிடிப்பவர்களும் சுதந்திரமாக உலாவுகின்றனர். ஆனால் நீதிக்கேட்டு பேசுபவர்களை சிறையில் தள்ள நினைக்கும் இந்த தேசத்தை நினைத்து துக்கப்படுகிறேன்." இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்.

கேரள உள்ளாட்சித் தேர்தல்: எஸ்.டி.பி.ஐ வெற்றிக் கணக்கைத் துவக்கியது.

திருவனந்தபுரம்,அக்.27:கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று வருகிறது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக கால் பதித்துள்ள சமீபத்தில் துவக்கப்பட்ட சோஷியல் டெமோக்ரேடிக் கட்சி கண்ணூர், தொடுப்புழா, பாலக்காடு, காஸர்கோடு, பத்தணம் திட்டா ஆகிய நகரசபைகளின் வார்டுகளில் வெற்றிக் கணக்கைத் துவக்கியுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்தோனேசியாவில் சுனாமி 113 பேர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

ஜகார்த்தா,அக்.27:இந்தோனேசியாவில் திங்கள்கிழமை இரவு கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவானது. இதில் 113 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலநடுக்கத்தின் வீச்சு 7.7 ரிக்டர் அளவாக இருந்ததால் சுனாமி ஏற்பட்டது. 10 அடி உயரத்தில் உருவான அலைகள், மெந்தாவைய் தீவுக்குள் புகுந்தது. இதில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. சுனாமி ஏற்பட்டதை அறிந்த மக்கள் அவசர அவசரமாக வீடுகளைவிட்டு மேடான பகுதிக்கு சென்றுவிட்டனர். எனினும் சுனாமியில் சிக்கி 113 பேர் உயிரிழந்தனர். 500 பேரைக் காணவில்லை. அவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை.

ஆக்ரோஷமாக எழுந்த அலைகளால் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. கடலோரத்தில் படகு சாகசத்தில் ஈடுபட்டிருந்த சில ஆஸ்திரேலியர்களை அலை தூக்கி வீசியது. ஆனால் அவர்கள் நீந்தி உயிர் பிழைத்துவிட்டனர்.
இந்தோனேசியா நிலநடுக்க அபாயமிக்க பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. 2004-ல் அங்கு 9.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் உருவானது. இதில் 2,30,000 பேர் கொல்லப்பட்டனர்.

Oct 26, 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி இந்திரேஷ்குமார் விரைவில் கைது.

புதுடெல்லி,அக்.26:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரான தீவிரவாதி இந்திரேஷ்குமார் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்.ஸால் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தீவிரவாதி இந்திரேஷ் குமாரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தெளிவான தகவல்கள் கிடைத்தால் கைதுச் செய்யப்படுவார் எனவும் ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு ஆலோசனை நடத்திய ஜெய்பூர் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் இவர்கள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை போலீஸ் பரிசோதித்து வருகிறது.
குண்டுவெடிப்பிற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இங்கு வைத்து தீவிரவாதி இந்திரேஷ்குமார் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தவேண்டிய இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களிலும் தீவிரவாதி இந்திரேஷ்குமாரின் பங்கேற்புக் குறித்த விசாரணையில் தற்பொழுது ஏ.டி.எஸ் இறங்கியுள்ளது. குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் செக்-இன் பதிவேட்டில் முகவரி எழுதிய நபரின் கையெழுத்து இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான தீவிரவாதி சுனில் ஜோஷியுடையதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மனோஜ்சிங் என்ற பெயரில்தான் தீவிரவாதி சுனில் ஜோஷி அறையை புக் செய்துள்ளார். தீவிரவாதி சுனில் ஜோஷியின் தேவாஸ் என்ற இடத்திலிலுள்ள வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்ட் டயரியிலிலுள்ள தகவல்களையும் ஏ.டி.எஸ் பரிசோதித்து வருகிறது. தேவாஸில் தனது வீட்டில் வைத்து தீவிரவாதி சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புடைய தீவிரவாதி சுனில் ஜோஷியை ரகசிய வெளியே கசியாமலிருக்க அவருடைய சக தீவிரவாத தோழர்களே கொலைச் செய்துள்ளனர் என்பதும் தெளிவாகியுள்ளது.

இந்தூரிலிருந்து தீவிரவாதிசுனில் ஜோஷியும், தீவிரவாதி லோகேஷ் சர்மாவும் சேர்ந்து வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே மார்க்கெட்டிலிருந்துதான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைப்பதற்கான வெடிக்குண்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.

தீவிரவாதி இந்திரேஷ் குமாருடன், தற்பொழுது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கர்னல் புரோகித், பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரையும் ஏ.டி.எஸ் விசாரணைச் செய்யும். அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசியக் கூட்டத்தில் இருவரும் பங்கெடுத்திருந்தனர்.

பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம்: சந்தேகத்தை உண்டாக்குகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், மற்றும் அவ்வமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான ஆகியோர் இருவரும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.அவர்கள் இருவரும் மரணமடைந்துவிட்டதால் அவர்களது பெயர்கள் நீக்கப்படலாம் என்ற மத்தியப் புலனாய்வுத்துறை (சி.பி,ஐயின்) எம்.டி.எம்.ஏ எனும் கண்காணிப்புக்குழுவின் பரிந்துரையின் பேரில், பெயர் நீக்க உத்தரவை பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்கவென அமைக்கப்பட்டிருக்கும் தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி பிறப்பித்திருக்கிறார்.

இதனையடுத்து முதன்மைக் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகின்றன என்று நீதிபதி தட்சிணாமூர்த்தி கூறியுள்ளார்.அதே நேரம் எம்.டி.எம்.ஏ பிரிவு தொடர்ந்து புலனாய்வு செய்து அவ்வப்போது தனது அறிக்கைகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும் எனவும் நீதிபதி கூறியிருக்கிறார்.

அண்மைக் காலம் வரை பிரபாகரன் மரணம் குறித்து அதிகார பூர்வமாக கருத்தெதுவும் தெரிவிக்காத இந்திய அரசு இப்போது பிரபாகரன், மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மரணமடைந்து விட்டதால் அவர்கள் மீதான வழக்கு முடித்துக் கொள்ளப்படலாம் என்று அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்று பலரும் வியக்கிறார்கள்.

ஊட்டியில் போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது.

ஊட்டி,அக்,26:தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 186பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு,1925ம் ஆண்டு விஜயதசமி அன்று உருவாக்கப்பட்டதால் அதன் நினைவாக, ஆண்டுதோறும் விஜயதசமி காலத்தில் அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடப்பதாக இருந்தது; ஆனால், போலீசார் அனுமதி வழங்கவில்லை.

எனினும், தடையை மீறி அணிவகுப்பு நடத்தப்படும் என ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பினர் அறிவித்தனர். இதனால், ஊட்டி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நேற்று மதியம் 1 மணியளவில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சீருடையுடன், ஊட்டி பஸ் ஸ்டாண்டில் குவியத் துவங்கினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.

வழக்கமான கொடியேற்றம், சத்ய பிரமாணம் ஆகியவற்றை நிறைவேற்றி ஆர்.எஸ்.எஸ்., தீவிரவாத தொண்டர்கள் அணிவகுப்பு நடத்த முற்பட்டனர். தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்றதாக 186 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கல்லாறு ஆசிரமத்தைச் சேர்ந்த வேதாந்த மஹானந்தா மற்றும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் மாநில ஒருங்கிணைப்பாளர் நம்பி நாராயணன் ஆகியோர், அணிவகுப்பு முடிந்து பொதுக்கூட்டத்தில் பேசவிருந்தனர். எனினும் இவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அரங்கில் உரையாற்றினர்

Oct 25, 2010

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு குறித்த கருத்து சொல்லியதால் ராகுல் மீது வழக்கு.

ராஞ்சி, அக்.25- ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு ஹிந்து தீவிரவாத அமைப்பு என்று உண்மையை சொல்லியாதால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஷிஷ் குமார் சிங் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

சமீபத்தில் போபால் நகரில் பேசியபோது, ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துடன் ஒப்பீடு செய்து ராகுல் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து ராகுல் காந்தியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி: மனித உரிமை போராளி அருந்ததிராய் மீது வழக்கு.

புதுதில்லி, அக். 25: தில்லியில் காஷ்மீர்ருக்கு சுதந்திரம் அளிக்கவேண்டும் நடந்த கருத்தரங்கில் தேச விரோதமாகப் பேசியதாகக் கூறி பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸýக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கெனவே இந்த கருத்தரங்கில் தேச விரோதமாகப் பேசியதாக காஷ்மீர் மாநில ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸôருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தில்லியில் அண்மையில் நடந்த கருத்தரங்கில் கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், மாவோயிஸ்டு ஆதரவு தலைவர் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
தேச விரோதமாகவும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் கருத்தரங்கில் பேசியதாக கூறி பாஜக உள்ளிட்ட ஹிந்து தீவிரவாத கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன.

தேச விரோதமாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து தீவிரவாத அமைப்பான பாஜக மூத்த தலைவர் தீவிரவாதி அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து தில்லி போலீஸôர் ஆலோசித்து வருகின்றனர்.கிலானி மீது ஏற்கெனவே 90 வழக்குகள் உள்ளன. இது 91-வது வழக்கு என்று அவர் கூறியுள்ளார்.

ஹிந்து தீவிரவாத அமைப்புகளின் நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்தது. மனித உரிமை போராளிகள் மீது வழக்கு தொடர அனுமதி அளித்தது இந்தியாவில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறைமுக ஹிந்துதுவா ஆட்சி நடப்பதையும் இது காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் நடப்பது சர்வாதிகார ஹிட்லர் ஆட்சியை ஒத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு தீர்க்க வேண்டும்.

ஸ்ரீநகர், அக். 24: காஷ்மீரில் சுதந்திரம் கோரி போராடி வரும் ஹுரியத் மாநாட்டு கட்சி மத்திய அரசின் மூவர் குழுவைச் சந்திக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று இந்த அமைப்பின் தலைவர் மிர்வைஸ் உமர் பாரூக் அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்பட 8 அம்ச திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்த ஒரு குழுவை அமைப்பது என்பதும் அதில் ஒரு அம்சமாகும். இதன்படி மூத்த பத்திரிகையாளர் திலீப் படகோங்கர் தலைமையிலான மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நான்கு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு சனிக்கிழமை வந்தது.

இந்த மூவர் குழுவில் பேராசிரியர் ராதா குமார், தகவல் ஆணையர் எம்.எம். அன்சாரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி உள்பட பேச்சு நடத்த விரும்பும் எந்தக் குழுவுடனும் தாங்கள் பேசத் தயாராக இருப்பதாக படகோங்கர் கூறினார். ஆனால் மத்திய அரசின் மூவர் குழுவைச் சந்தித்துப் பேச சையத் அலி ஷா கிலானி மறுத்துவிட்டார். இதேபோல் ஹுரியத் மாநாட்டு கட்சியின் மற்றொரு தலைவர் மிர்வைஸ் உமர் பாரூக்கும் மூவர் குழுவைச் சந்திக்க மறுத்துவிட்டார்.

காஷ்மீர் மக்களின் கோரிக்கையில் தெளிவு இல்லை என்றால்தான் இதுபோன்ற தூதுக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் காஷ்மீர் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மிக தெளிவாகவும் உரத்த குரலிலும் கூறி வருகின்றனர். இதில் குழப்பத்துக்கு சிறிதும் இடமில்லை. இதுபோன்ற மூவர் குழுக்களால் தீர்வு மேலும் தாமதப்படும் என்று மிர்வைஸ் கூறினார்.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டியளித்தார். இதற்கு முன் இரு நாட்டு பிரதமர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அப்படியிருக்கும்போது மூவர் குழுவுடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார். பேச்சுவார்த்தை எப்போதும் உயர் மட்ட அளவில் இருக்க வேண்டும். இனி இதுபோன்ற குழுக்களுடன் பேச இயலாது என்றார் அவர்.

அமெரிக்க கொள்கையில் மாற்றம் வேண்டும்: காஷ்மீர் பிரச்னையைப் பொருத்தவரை அமெரிக்க தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்னையாகவே காஷ்மீர் இருந்து வந்தது. அதனால் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற நிலையை அமெரிக்கா கொண்டிருந்தது. ஆனால் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் தவறிவிட்டன. பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு இரு தரப்பிலும் உள்ள நம்பிக்கையின்மையே காரணம்.

காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாட்டின் தலையீட்டை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்குகிறோம். இந்தக் கையெழுத்து பிரதியை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் அளிக்க திட்டமிட்டுள்ளோம். வரும் நவம்பர் 5-ம் தேதி வரை ஜம்மு- காஷ்மீர் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு இந்த மனு நவம்பர் 6-ம் தேதி தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைக்கப்படும். தில்லி வரும் ஒபாமாவிடம் இந்த மனுவை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பிரச்னைக்கு அமைதி தீர்வுகாண்பதற்கு கடந்த 63 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இன்று வரை பிரச்னைக்குத் தீர்வுகண்டபாடில்லை என்றார் அவர்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் தெற்காசியாவில் அமைதியை ஏற்படுத்த முடியாது. எனவே மூன்றாம் தரப்பு தலையீடு மிக மிக அவசியம். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இதில் தலையிட்டு சுமுக தீர்வுக்கு வழிகாண வேண்டும் என்றார்

Oct 24, 2010

பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி தீவிரவாதிகளால் ஒருவர் வெட்டபட்டார்.


பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், இதனால் சமூகநீதியை நிலைநாட்டி விடுவோம் என கருணாநிதியால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு சாதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகம விதிகள், பூஜைகள் போன்ற கோயில் விதிகளில் பயிற்சியளிக்க 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.

அப்போதே மதுரையைச் சேர்ந்த சில பார்ப்பன அர்ச்சகர்களும், பட்டர்களும் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த தம்மைத் தவிர வேறு யாரும் சிலைகளைத் தொட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்ய தகுதி இல்லையென்றும், அப்படிச் செய்வதால் சிலை தீட்டுப் பட்டுப்போகும் என்றும் மீறி அப்படிச் செய்வதால் சிலையை விட்டும் கோயிலை விட்டும் சாமி வெளியேறி விடுவார் என்றும், என்னதான் மந்திரங்களையும், ஆகம விதிகளையும் படித்து இருந்தாலும் கருவறைக்குள் நின்று சிலையைத் தொடும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்றும் சொல்லி ஒரு தடையாணையைப் பெற்றனர்.

சமூகநீதியின் ஒரே அத்தாரிட்டி தாம் தான் என்று வெளியே சூரத்தனம் காட்டும் கருணாநிதி அரசு, பார்ப்பன அர்ச்சகர்களை வழக்குமன்றத்தில் முறியடிக்கும் உத்வேகம் இல்லாமல் வெறும் ஒப்புக்குச்சப்பாணி போல எதிர்வழக்காடி வருவகிறது.மட்டுமல்லாமல், மேற்கண்ட பயிற்சிக் கல்லூரிகளில் படித்துத் தேறிய மாணவர்களுக்கு இன்று வரையில் பணிநியமன ஆணையை வழங்காமல் உள்ளது. கல்லூரியில் படித்துத் தேறிய மாணவர்களுக்கான சான்றிதழையும் ம.உ.பா மையம்(HRPC) தலையிட்டு மாணவர்களை சங்கமாகத் திரட்டிப் போராடிய பின் தான் வழங்கப்பட்டுள்ளது.

தில்லி உச்சிக்குடுமிமன்றமும் சாக்குக் கிடைத்ததேயென்று எல்லா பயிற்சிக்கல்லூரிகளையும் மூட இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது வெறுமனே வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லையென்பதாலும், பார்ப்பனத் திமிர் உறைந்து கெட்டிப்பட்டுக் கிடக்கும் கருவறையை கழுவிச் சுத்தப்படுத்த சூத்திரர்களுக்குக் கிடத்துள்ள பொன்னான ஒரு வாய்ப்பு என்பதை அறிந்திருந்ததாலும், மாணவர்கள் சங்கம் சார்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு தரப்பினராகச் சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இவ்வழக்கின் தன்மை என்பது வெறும் சட்டவாத சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் உள்ள வளைவு சுழிவுகளால் மட்டுமே தீர்க்கக் கூடிய ஒன்றல்ல. கொலைகார காஞ்சி ஜெயேந்திரனும், காமவெறிபிடித்த பார்ப்பன அர்ச்சகனான தேவநாதன் போன்றவர்களுக்கும் சிலைகளைத் தொட்டு பூஜைகள் செய்ய தடையேதும் இல்லாத போது, மந்திரங்களையும் பூஜாவிதிகளையும் முறையாகப் படித்தாலும் பிறப்பைக் கொண்டு இம்மாணவர்களை ஒதுக்குவதானது கருவறைத் தீண்டாமையாகும்.

இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெரியாரின் பிறந்த நாள் அன்று அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை ரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் ம.உ.பா மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், பகுதி பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
தந்தை பெரியார் சிலைக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை அணிவித்ததை இந்து மதவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களது கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியார் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்து அதை நிறைவேறப் போராடியவர் பெரியார். அவர் நாத்திகரே ஆனாலும் சூத்திர ஆத்திகர்கள் மீதுள்ள தீண்டாமையை ஒழிக்க போராடினார். அதனால் அவருக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை சூட்டியது நிச்சயமாக பொருத்தமானதுதான். இதுதான் இந்து முன்னணிக்கு பிடிக்கவில்லை.

இப்படி இந்து பார்ப்பன தீண்டாமை வெறியாட்டம் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்து முண்ணனியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அன்று இரவே அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த ரங்கநாதனையும் ம.உ.ப மையத் தோழர்களையும் மறித்து ‘ஏன் இவ்வாறு போராடுகிறீர்கள்?’ என்று கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு, ‘இப்பவே கூட்டிப் போய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை வாங்கித் தந்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்’ என்று பதில் சொல்லியுள்ளார்கள் தோழர்கள். அதில் மூக்குடைபட்டுப்போன அவர், ‘அண்ணாமலையார் கோயிலிலெல்லாம் முடியாது. வேணும்னா ஏதாவது ரோட்டோர கோயில்ல பூசாரி வேலை வாங்கித் தருவோம்’ என்று திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

‘எல்லாரும் இந்துக்கள் தான்’ என்று ஊர் ஊருக்கு சொல்லிக் கொண்டு அலையும் இராம கோபாலன் பிராண்டு சமத்துவத்தின் யோக்கியதை இதுதான். பார்ப்பனர்களுக்கு உசந்த சாமி; கீழ் சாதிக்காரர்களுக்கு ரோட்டோர சாமியாம். பார்ப்பனர்களுக்கு நன்றாக கலெக்ஷன் கட்டும் மதுரை மீனாட்சி – சூத்திரனுக்கு ரோட்டோரத்தில் அம்போவெனக்கிடக்கும் பட்டத்தரசி. இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் போன்ற பார்ப்பன தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தளவில் சாமியோ ஆசாமியோ எல்லாவற்றிலும் மேன்மையானவைகளை மட்டும் குடுமிக்குள் முடிந்து வைத்துக் கொள்வார்கள்.

ஊடகங்களில் விவகாரம் நாறத் துவங்கியதும் இந்து முண்ணனியின் மாவட்டச் செயலாளர் ரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பது, அக்கம் பக்கத்தில் விசாரிப்பது என்று ரங்கநாதனின் உறுதியைக் குலைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட முயல்கிறார். இது போன்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்வதை அடுத்து, அக்டோபர் 15ம் தேதி ரங்கநாதனும் ம.உ.பா மையத் தோழர்களும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியைச் சந்தித்து ரங்கநாதனின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி மனு கொடுக்கிறார்கள்.

அவர் அந்த மனுவை டி.எஸ்.பியை விட்டு விசாரிக்கச் சொல்வதாகவும் அன்று மாலை அவரைச் சென்று பார்க்குமாறும் கேட்டுக் கொள்கிறார். அன்று மாலையே டி.எஸ்.பி அலுவலகத்திற்கு ரங்கநாதன் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடிகள், அவரை பலமாகத் தாக்குகிறார்கள். சுதாரித்துக் கொண்ட ரங்கநாதன் தன்னைத் தாக்கியவர்களை செல்போன் கேமராவில் படம் பிடித்து விடுகிறார். போட்டோ ஆதாரத்துடன் காவல் துறையில் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தற்போது விசாரித்து வருகிறார்கள்.

முதலில் மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களின் சங்கத்தைப் பிளந்து வழக்கை நீர்த்துப் போய்விடச் செய்து விடலாம் என்று பார்ப்பனர்கள் தரப்பில் முயன்றுள்ளனர். அந்தத் திட்டங்கள் மண்ணைக் கவ்வியதால், அடுத்து சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ‘உனக்கு என்ன வேண்டும், ஏதாவது சின்னக் கோயிலைத் உன் பொறுப்பில் தருகிறோமே. இல்லை நீ ஏதாவது கம்ப்யூடர் படி -நாங்கள் செலவைப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றெல்லாம் பலவாறு ஆசை காட்டி அவர்கள் வழக்கை திரும்பப் பெற வைக்க முயன்றனர். அதுவும் மண்ணைக் கவ்வியது.இப்போது பார்ப்பனர்களின் வழக்கமான உத்தியான ‘ஆனமட்டும் காலைப் பிடி ஆனபின்பு கழுத்தைப் பிடி’ என்கிற கதையாக தமிழகத்தில் பார்ப்பனர்களின் உருட்டுக் கட்டையாக விளங்கும் இந்து முண்ணனியைச் சேர்ந்த ரவுடிகளை ஏவி விட்டுள்ளனர்.

ஆனால், எத்தனை முறை எப்படியெல்லாம் ஆசை காட்டினாலும் சரி – மிரட்டினாலும் சரி – ஏன் உயிரே போவதானாலும் சரி; பார்ப்பனர்களிடம் சரணடைவதில்லை என்பதில் ரங்கநாதன் மிகத் தெளிவாய் இருக்கிறார். தொட்டால் தீட்டு என்று தெருவில் சொன்னால் அது குற்றம் என்பதற்கு சட்டம் இருக்கிறது – அதையே கருவறைக்குள் நின்று சொன்னால் சட்டம் செருப்பை வாசலிலேயே கழட்டி விட்டுவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பவ்வியமாய் நிற்கிறது. இதை எதிர்த்து தீண்டாமையின் கோட்டையாக விளங்கும் கருவறையிலேயே அதற்கு சமாதி கட்டும் தோழர்களின் போராட்ட உறுதியின் முன் பார்ப்பன இந்துமதவெறியர்களின் சதிகள் நிச்சயமாய் தோற்றுப் போகும்.
நன்றி: வினவு

குஜராத் கலவரத்தை தீவிரவாதி மோடிதான் தலைமை தாங்கி நடத்தினான் : உள்துறை அமைச்சர் பரபரப்பு வாக்குமூலம்.

அகமதாபாத்,அக்.24:2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.

இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.

கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா.

வெட்ட வெளிச்சமானது ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாத முகம்: காங்கிரஸ் அறிவிப்பு.

புதுடெல்லி,அக்.24:அஜ்மீர் குண்டுவெடிப்பு குற்றப்பத்திரிகையில் ஹிந்துத்துவா இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரை குற்றவாளியாக்கியதன் மூலம் அவ்வமைப்பின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என காங்கிரஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.

தேசத்தின் பன்முகத் தன்மைக்கும், மதசார்பற்ற கொள்கைகளுக்கு ஊறுவிளைவிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.தேசத்திற்கு அவசரமாக தேவைப்படும் மத நல்லிணக்கத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ் தகர்த்துள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.

அதேவேளையில், இந்திரேஷ்குமாரை அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் உட்படுத்தவில்லை என பா.ஜ.க கூறுகிறது.
இந்திரேஷ்குமாருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் ஒன்றுமில்லை எனவும், அரசு ஆர்.எஸ்.எஸ் போன்ற தேசியவாத(?) இயக்கங்களை குறிவைக்கிறது எனவும் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

அஜ்மீர் குண்டுவெடிப்பு: குற்றப்பத்திரிகையில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத தலைவரின் பெயர்


ஜெய்பூர்,அக்.24:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரும் ஆறு முக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான ரகசியக் கூட்டத்தில் பங்கெடுத்ததாக, அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐந்து ஆர்.எஸ்.எஸ், அபினவ் பாரத் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை குறிப்பிட்டுள்ளது.

இந்திரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்பில் தொடர்புக் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இவ்வழக்கில் அவரைகுற்றவாளியாக்கவில்லை எனவும் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஏ.டி.எஸ் கூறுகிறது. 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தி விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசியக் கூட்டத்தில்தான் இந்திரேஷ் குமாரும், இதர ஆறு முக்கிய் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.

வெளியானது உண்மை மட்டுமே எனவும், இதனை அங்கீகரிக்க ஆர்.எஸ்.எஸ் தயாராக வேண்டுமெனவும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சிறிது காலம் கழிந்தால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பங்கும் பின்னணியும் வெளிவரும். சத்தியம் வெளிவரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அசோக்கெலாட் தெரிவித்தார்.

அதேவேளையில், தனது பெயர் அரசியல் தூண்டுதலின் காரணமாகவே குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திரேஷ்குமார் தெரிவிக்கிறார். தேசத்துரோகிகளை(?) பாதுகாக்கும் அரசு, தேச விசுவாசிகளூக்கெதிராக(?) போர் புரிகிறது. அநீதிக்கெதிராக நீதிமன்றத்தை அணுகுவோம் இவ்வாறு இந்திரேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திரேஷ்குமாரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. இத்தகையச் செய்திகளை சட்டரீதியாக எதிர்க் கொள்வோம் என ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவிக்கிறார்.


செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

ஹிந்து தீவிரவாதிகள் என் கணவரை நிர்வாணமாக்கி உடல் உறுப்புகளை வெட்டி தீவைத்துக் கொளுத்தி கொலை செய்தார்கள்.

புதுடெல்லி,அக்.24:தனது கணவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய் நிர்வாணமாக்கிய பிறகு அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்வதை தான் நேரடியாக கண்டதாக, குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா கண்ணீர் சாட்சி அளித்துள்ளார்.

குல்பர்கா சொசைட்டி கூட்டு இனப் படுகொலையில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும் பொழுதுதான் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தார் ஸாகியா. 2002 பிப்ரவரி 22 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்திருந்தது.

"கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து பந்த் அறிவிக்கப்பட்டதால் வன்முறைக்களமாக மாறியது சூழல். அதிகாலை முதல் அக்கம்பக்கத்து முஸ்லிம்கள் எங்கள் வீட்டை நோக்கி வரத் துவங்கினர். அவர்களை ஹிந்துத்துவாவாதிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க போலீஸை அழைக்க அவர்கள் ஜாஃப்ரியிடம் கோரினர்.காலை 7.30 க்கு அவர்களை வீட்டிற்குள் அழைத்த ஜாஃப்ரி, ஒன்றாக இருக்கக் கூறியதுடன் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் எனக் கூறினார்.

இந்த நேரத்திலிருந்தே ஜாஃப்ரி தொலைபேசியில் பலரையும் அழைக்க ஆரம்பித்தார். 11.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் பி.ஸி.பாண்டே வீட்டிற்கு வந்து ஜாஃப்ரியை வெளியே அழைத்தார். இதர முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தனது காரில் ஜாஃப்ரியையும், குடும்பத்தினரையும் மட்டும் அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்தார் பாண்டே.

ஆனால், மிரண்டுபோன இதர முஸ்லிம்களை விட்டுச்செல்ல ஜாஃப்ரி மறுத்துவிட்டார். பாண்டே திரும்பிச் சென்றபிறகு, வன்முறையாளர்கள் சிறிய கேட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் வீட்டை நெருங்கிய பொழுது வீட்டின் மாடிக்கு செல்லுமாறு என்னிடம் கூறினார் ஜாஃப்ரி. கோஷங்களை எழுப்பியவாறு வந்த ஆயுதங்கள் ஏந்திய கும்பல் ஜாஃப்ரியிடம் வெளியே வருமாறு கூறினர். தான் வெளியே வருவதாகவும், ஆனால் தனது வீட்டில் புகலிடம் தேடி வந்தவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் எனவும் ஜாஃப்ரி வன்முறையாளர்களிடம் கூறினார்.

வெளியேவந்த ஜாஃப்ரியை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆடைகளை கீறி எறிந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி எறிந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்தனர்." -இதனை சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி பி.யு.ஜோஷியின் முன்னால் ஸாகியா தெரிவித்தார்.

"ஆனால் போலீஸ் வந்தது மாலை 5.30 மணிக்காகும். வீட்டின் உள்ளே ஒழிந்திருந்த எங்களை வெளியேவருமாறு கூறினர். 18-19 உடல்கள் வீட்டின் வராந்தாவிலும் இதர இடங்களிலும் கிடந்தன. அதில் ஒன்று, தங்களுடைய அயல் வீட்டாரான கஸம்பாயின் கர்ப்பிணியான மருமகளாவார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்து சிசு வெளியே வந்திருந்தது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அக்கிரமக்காரர்கள்தான் இந்தக் கொலைகளை நடத்தினர்." இவ்வாறு ஸாக்கியா கூறினார்.

பாபர் மசூதி நிலம் தொடர்பாக ஹிந்து தீவிரவாத அமைப்புகளுக்கிடையே மோதல்.

புதுடெல்லி,அக்,24:பாப்ரி மஸ்ஜித் நிலத்தை மூன்று துண்டுகளாக பங்குவைத்துக் கொடுத்து தீர்ப்பளித்து அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச். இதில் இரு பகுதிகள் ராமலல்லாவுக்கும், நிர்மோஹி அகாராவுக்கும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் மூன்று தரப்பினருமே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய முடிவுச் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஹிந்து அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் மற்றும் நிர்மோஹி அகாராவுக்குமிடையே நீதிமன்றத்தில் பங்குவைக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக தர்க்கம் துவங்கியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் தலையிடக்கூடாது எனவும், கோயிலை கட்டும் பொறுப்பு எங்களுடையது என நிர்மோஹி அகாராவின் தலைவர் மஹந்த் பாஸ்கர்தாஸ் கூறியுள்ளார்.

ராமஜென்மபூமி நியாஸ் ராமர் கோயிலை கட்டும் என்ற வி.ஹெச்.பி யின் கட்டுப்பாட்டிலிலுள்ள அமைப்பான உச்சாதிகார் சமிதியின் அறிவிப்பு நிர்மோஹி அகாராவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ஏதேனும் கட்டிடப் பணிகளை நிர்வகிக்க வி.ஹெச்.பியையோ அதன் துணை அமைப்புகளையோ அனுமதிக்கமாட்டோம் என மஹந்த் பாஸ்கர் தாஸ் உறுதிப்படக் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: உயர்நீதிமன்றம் எங்களுக்கு ஒரு பங்கை பிரித்து தந்துள்ளது. இன்னொரு பகுதி வழங்கப்பட்டுள்ள ராம்லல்லாவின் பிரதிநிதியாக செயல்படுவது ஆர்.எஸ்.எஸ் என்றாலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ,ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அங்கு உரிமை வழங்கப்படவில்லை.கோயில் கட்டும் உரிமைத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். ஹிந்துக்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ள இடத்தின் உரிமை யாருக்கு என்பதுக் குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

எங்களுடைய இடத்தில் ராம்லாலா வீரஜ்மான் கோயில் கட்ட அனுமதியுண்டு. ஆனால், நீதிமன்றம் பங்குவைத்த இன்னொரு பகுதி ஹிந்துக்களுக்கு எனக் கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் ஹிந்து சமூகத்தின் சிறியதொரு பகுதியினருக்கு மட்டும்தான் பிரதிநிதிகளாக செயல்படுகின்றன. உங்களுக்கு நிலத்தில் உரிமை உண்டு எனக் கூறுவதற்கு முன்னால் தீர்ப்பை வாசிக்க வேண்டும். சீதாவின் சமையலறை, ராம்சாபூத்ரா உள்ளிட்ட பகுதிகள் நிர்மோஹி அகாராவுக்கு என நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ராம்லாலா வீரஜ்மான் உள்ளிட்ட பகுதியும் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தோடு இணைந்துள்ளன. ஆதலால் அங்கு கோயில் கட்டுவதற்கான உரிமை எங்களுடையதாகும்.

சாந்த் உச்சாதிகார் சமிதி,ராம்ஜென்மபூமி நியாஸ் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்ஸும், வி.ஹெச்.பியும் துவங்கிய அமைப்புகளாகும். கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸின் நிழல் அமைப்புகளாக செயல்பட்ட இவர்களை எங்களால் அங்கீகரிக்க இயலாது. என கூறினார்

ஜம்மு கஷ்மீரிலிருந்து உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறவேண்டும்.

புதுடெல்லி,அக்.24:ஜம்மு கஷ்மீரிலிருந்து உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெற வேண்டுமென கமிட்டி ஃபார் ரிலீஸ் ஆஃப் பொலிடிகல் ப்ரிஸனர்ஸ் என்ற அமைப்பின் சார்பில் டெல்லியில் நடந்த கஷ்மீருக்கு சுதந்திரம் ஒன்றே வழி என்ற கருத்தரங்கில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதிதான் ஜம்மு கஷ்மீர் என்பதை அதிகாரப்பூர்வமாக இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: கஷ்மீரிலும் நாட்டிலும் எல்லா சிறைகளிலும் வாடும் கஷ்மீரின் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும்.

கஷ்மீரில் அடையாளம் தெரியாத கல்லறைகளைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.
சிறப்பு ஆயுதச்சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். நிரபராதிகளான அப்பாவி மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும்.கஷ்மீர் அங்குள்ள மக்களுக்கு கொடுமைகள் நிறைந்த சிறைக்கூடமாக மாறிவிட்டது. சில மாதங்களாக நடந்துவரும் மோதலில் அங்கு 110 பேர் கொல்லப்பட்டது இதற்கு சான்று பகிர்கிறது.

எல்லா தந்திரங்களும் கஷ்மீரிகளின் மீது பிரயோகிக்கப்படுகிறது. ஆனாலும், உயர்வான பொறுமையும், தைரியத்தையும் கஷ்மீர் மக்கள் பேணி வருகின்றனர். கஷ்மீரிகளின் சுயநிர்ணய அவகாச உரிமை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் மற்றும் ராணுவ அத்துமீறல்களின் மீது உலகத்தின் கவனம் திரும்பவேண்டிய சூழல்தான் இது.கஷ்மீர் மக்கள் சுதந்திரத்தை விரும்புகின்றனர் என்பது உறுதியானதாகும். சுதந்திரம் மட்டுமே பிரச்சனைகளுக்கு பரிகாரமான ஒரே வழி.

கடந்த பல ஆண்டுகளாக சமாதான முறையில் கஷ்மீரிகள் போராடி வருகின்றனர். அங்கு அக்கிரமம் புரிவது இந்திய ராணுவம் மட்டுமே. மனித உரிமை மீறல்களும், ஆட்கள் காணாமல் போவதும் தொடர்கிறது. அவசரமாக இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
ஏழு லட்சம் ராணுவத்தினர் கஷ்மீரில் உள்ளனர். இந்தியாவின் ஆக்கிரமிப்பை ஊக்கமூட்டும் செயலாகும் இது. இந்த பிரச்சனைகளையெல்லாம் அவசரமாக கவனத்தில் கொள்ளவேண்டும் என டெல்லி கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளன.