இந்தியாவில் நீதிமன்றம்
சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி
நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று
யாராவது நம்பினால்…?
அயோத்தி தீர்ப்பே அந்த எண்ணத்திற்கு ஆப்பு!
“சர்ச்சைக்குரிய இடம்” யாருக்குச் சொந்தம்?
சட்டப்படி தீர்ப்பு சொல்லு என்றால்,
சர்ச்சைக்குரிய பிறவி ராமனுக்கே அது சொந்தம்
என்று கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை சொல்கிறான் என்றால்..
இது நீதிமன்றமா… சங்கரமடமா!
இவன் நீதிபதியா… சங்கராச்சாரியா!
ஹிந்து மதவெறியன் கடப்பாரையில்
இடித்துச் சொன்னதை… “பார் அட்லா” சுத்தியலால்
அடித்துச் சொல்லியிருக்கிறான்..
வேறுபாடு கருவியில்தான்
மற்றபடி இந்திய நீதித்துறை
எப்போதும் போல் பார்ப்பன படித்துறைதான்.
உழைக்கிற உழவுமாட்டுக்கு சூடு,
திரிகிற கோயில் மாட்டுக்கு தீனி, அகத்திக்கீரை!
இதுதான் இந்து தர்மம்!
உழைக்கும் மக்கள் அர்ச்சகராகி
கருவறைக்குள் நுழைய எதிர்ப்பு!
சந்நிதானத்திலேயே சங்கரராமனை போட்டுத்தள்ளிய
ஜெயேந்திரனுக்கு சட்டம் ஒரு செருப்பு!
இதுதான் அரசியல் சட்டம்!
இவனிடமா நீதி கிடைக்கும்?
பிரியங்கா போட்மாங்கே என்ற
தாழ்த்தப்பட்ட பெணணை
கும்பலாக வன்புணர்ந்து
பிணமான பின்பும் அவளைக் கடித்துக் குதறி,
அவள் பிறப்புறுப்பில் கட்டையைச் செருகிய
ஆதிக்கசாதி வெறிநாய்கள் மேல்,
வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்காட முடியாது என
அரசியல் சட்டத்தை அவள் பிணத்தில் செருகிய
ஆதிக்கசாதி பயங்கரவாதிகள்தான் இந்த நீதிபதிகள்.
இந்தியாவின் முகத்தின் மேல்
என் கழிவை இறக்குவேன்…
அதன் வேதிவினை பற்றி
விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கில்லை..
இது எங்கள் தொழில் ரகசியம் என
கொக்கரிக்கும் கோக்கோ கோலாவிடம்
பேசாமல்… சட்டப்புத்தகத்தால்
தன் பின்வாயைப் பொத்திக் கொள்ளும் நீதித்துறை
‘பந்த்’ வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என
போராடும் தொழிலாளர்கள் மேல் பாய்கிறது!
புரிகிறது… இளிச்சவாய் இந்தியனென்றால் விடாது இ.பி.கோ.!
பன்னாட்டுக் கம்பெனி என்றால்
நீதிமன்ற தராசையும் எடுத்துக்கோ!
முப்பதாயிரம் இந்தியர்களை
போபாலில் படுகொலை செய்த
அமெரிக்க யூனியன் கார்பைடு நச்சுப் புகையின்
வேதியியல் பெயர் “மெத்தில் ஐசோ சயனேட்
அதன் அரசியல் பெயர் “இந்தியன் பீனல் கோட்
அமெரிக்க ஆண்டர்சனின்
சிகரெட் குவளைக்குள் கிடக்கிறது
இந்திய நீதிமன்றங்களின் சாம்பல்
யூனியன் கார்பைடின் இலாபத் தாரசின்
எடைக்கு எடை இந்திய நீதிபதிகள்
இன்றும் கூட.. போபாலில்
உதடுகள் பிளந்து, கண்கள் பிதுங்கி,
மரபணு சிதைந்து…பிறக்கும் குழந்தைகளின்
முகத்தில் விகாரமாய்த் தெரிகிறது நீதித்துறை!
இந்திய பாசிச ஹிந்து காவித்துறை.
ஆந்திரா தேர்வு மையத்தில் காப்பியடித்து..
அலகாபாத் நீதிமன்ற ஊழியர்களின்
ஓய்வூதியத்தை கொள்ளையடித்து,
மாட்டிக் கொண்டவர்களை மடக்கிப் பிடித்தால்
அத்தனை பேரும் நீதிபதிகள்
இந்திய பாசிச ஹிந்து காவித்துறை.
நன்றி: வினவு
Oct 9, 2010
ஐ.நா அமைப்பின் அறிக்கையில் கஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் சுதந்திர நாடுகள்.

புதுடெல்லி,அக்,9:ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய கழகத்தின் (Food and Agriculture Organisation) அறிக்கையில் இந்தியாவுடன், ஜம்மு-கஷ்மீர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.கிழக்கு ஆசிய நாடுகளின் பட்டியலில்தான் இந்திய மாநிலங்களை நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச பால்பண்னை நிறுவனத்துடன் இணைந்து F.A.O வெளியிட்டுள்ள அறிக்கையில்தான் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் அக்ஷாய்சின் என்ற பகுதியும் சுதந்திர நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்ஷாய்சின் பகுதியை கஷ்மீரின் ஒரு பகுதி என இந்தியாவும், தங்களுக்கு சொந்தமானது என சீனாவும் உரிமைக் கொண்டாடுகின்றன.இந்திய மாநிலங்களை தனி நாடுகளாக குறிப்பிட்டது தவறானது அல்ல என விளக்கமளிக்கிறது F.A.O. சர்ச்சைக்குரிய பகுதிகள் சுதந்திர நாடுகளாகவே எடுத்துக்கொள்வதாக அவ்வமைப்பு கூறுகிறது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.
சிந்திக்க: இந்த பகுதிகள் மட்டும் இல்லை கூடிய சீக்கிரம் இந்தியாவின் பல மாநிலங்களும் இந்த லிஸ்டில் சேரபோவது உறுதி. இவர்கள் பலமத்ததவர் வாழும் ஒரு நாட்டை குறிப்பிட்ட ஒரு மதத்தின் நாடாக அறிவிக்க பாடுபட ஆரம்பித்ததில் இருந்து இது சீக்கிரம் நடக்கும் என்பது வெட்டவெளிச்சமாகிறது.
Oct 8, 2010
இந்திய சுதந்திர போராட்டம்: காந்திஜி & முஸ்லிம்கள் & பாசிச ஹிந்துத்துவா ஒரு வரலாற்று பார்வை.
காந்திஜி நடத்திய இந்திய சுதந்திர போராட்டத்தில் அவருக்கு துணையாக அபுல்கலாம் ஆசாத், முஹம்மது அலி, ஷவுக்கத் அலி,ஹஸ்ரத் மொஹானி, ஸெய்புத்தீன் கிச்லு, டாக்டர்.எம்.எ. அன்ஸாரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அறிஞர்களுடன் ஒன்றிணைந்தார். அதன் பயனாக, 1920 ஆம் ஆண்டு கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்கள் உருவாகின. கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்களின் முக்கிய செயல்திட்டமாக ஆங்கிலேய அரசுக்கு வரி செலுத்தமாட்டோம் என பிரகடனப்படுத்தினார் காந்திஜி. இந்திய குடிமக்களை பொருளாதார ரீதியாக சுரண்டும், துயரத்தில் ஆழ்த்தும் அந்நிய ஆக்கிரமிப்பு அரசுக்கு வரி கட்டாதீர்கள் என்ற வேண்டுகோளை பெரும்பாலானோர் நடைமுறைப்படுத்தியது ஆங்கில அரசுக்கு சவாலாக விளங்கியது.
இதனை எழுதும் வேளையில் நம்முன்னால் நிழலாடுகிறது ஒரு நிகழ்வு. ஏகாதிபத்திய சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் முதன்முதலாக வரி செலுத்தமாட்டோம் என பிரகடனப்படுத்தியது காந்திஜியோ அல்லது கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கங்களோ அல்ல என்பதுதான்.இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களின் எங்கோ ஒரு மூலையில் கவனிப்பாரற்று கிடக்கும் ஓர் தீரமிக்க முஸ்லிம் தலைவர்தான் அவர். ஆம், காந்திஜியும், அவரது தோழர்களும், அவர்கள் உருவாக்கிய இயக்கங்களெல்லாம் ஆங்கிலேயனுக்கு எதிராக போராட துணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் கேரளாவின் தெற்கு மலபாரில் பொன்னானி தாலுகாவில் ஒரு தீரமிக்க முஸ்லிம் வீரர் உமர்காழிதான் அவர்.
ஆங்கிலேயனுக்கு வரிசெலுத்தமாட்டோம் என அறிவித்த காரணத்தினாலேயே சிறைவாசத்தை அனுபவித்தவர் அவர். அரபு மொழியிலும், மலையாளத்திலும் அழகான கவிதைகளை வடித்துள்ள மார்க்க அறிஞரான உமர்காழியை இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறிலிருந்து மாற்றி நிறுத்தவே முடியாது என்பதுதான் உண்மை. துரதிர்ஷ்டவசத்தால் அவர் இந்திய மக்களிடம் பிரபலமடையாமல் போனார்.
காந்திஜி உள்ளிட்ட கிலாஃபத்-ஒத்துழையாமை இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இது இயக்கத் தொண்டர்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியது.
போராட்டம் நாள் செல்லச் செல்ல தீவிரமடையத் துவங்கியது.அரசு கல்விக் கூடங்களையும், நீதிமன்றங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்பது இப்போராட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் உள்ளிட்டோர் படிப்பை உதறினர். ஜமால் இபுராஹீம் சாஹிப் என்பவர் மிக உயர்ந்த கெளரவ மாஜிஸ்ட்ரேட் பதவியை 1920 ஆம் ஆண்டு ராஜினாமாச் செய்தார்.
தேச விடுதலைக்காக, ஆங்கிலேயருக்கு தங்களது தார்மீக எதிர்ப்பை காட்டுவதற்காக தங்கள் பதவிகளையும், அந்தஸ்துகளையும் துறந்த முஸ்லிம்கள் பலர் உள்ளனர். கல்வி நிலையங்களை விட்டு வெளிவந்த பலரும் கல்வியில் சிறந்து விளங்கியவர்கள். இவர்கள் தங்கள் கல்வியைத் தொடரவேண்டும் என்பதற்காக குஜராத் வித்யா பீடம், காசி வித்யா பீடம், ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா போன்ற கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டன.
இந்த நேரத்தில் நாம் முக்கியாமாக ஒன்றை நினைவு கூற வேண்டியது உள்ளது. காந்திஜி நடத்திய சுதந்திர போராட்டத்திற்கு முஸ்லிம்கள் தங்கள் படிப்பையும், உயர் பதவிகளையும் துறந்துவிட்டு உறுதுணையாக இருந்தார்கள். ஆனால் இந்த பிராமண வந்தேறி பாசிச ஹிந்துத்துவா சிந்தனை படைத்தவர்களோ வெள்ளைகாரர்களுக்கு சேவகம் செய்து உயர் பதவிகளில் இருந்து கொண்டு வெள்ளையர்களுக்கு சுதந்திர போராட்டவிரர்களை காட்டி கொடுத்தார்கள். பின்னர் தங்கள் ஹிந்து ராஜிய கனவுக்கு காந்திஜி இடைஞ்சலாக இருப்பார் என்று அவரையும் சுட்டு கொன்றார்கள்.
வெளிநாட்டு ஆடைகள் புறக்கணிப்பு, மதுவை ஒழிப்பு ஆகியவையும் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய பகுதிகளாக விளங்கவேண்டுமென காந்திஜியும், மெளலானாக்களும் தீர்மானித்தனர். ஏராளமானோர் தங்களுடைய விலைமதிப்புள்ள ஆடைகளை தீக்கிரையாக்கினர். பிரிட்டீஷ் துணி ஆலை முதலாளிகளை தோற்கடிக்கவும், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மைக்கு ஓரளவு பரிகாரம் காணவும் எல்லா இந்தியர்களும் கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைகளையே அணியவேண்டும் என காந்திஜி உபதேசித்தார். இவ்வாறு நெய்யப்பட்ட ஆடை கடினமாக இருந்தாலும் மதிப்புடன் அதனை அணியத் துவங்கினர் இந்திய மக்கள். இந்த ஆடைக்கு கத்ராடை எனப் பெயரிட்டவர், என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன என்று காந்திஜியால் வர்ணிக்கப்பட்ட அலிசகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள்தான். அவர்தான் தான் கைராட்டையில் நெய்த துணியை காந்திஜிக்கு அளித்து, இதனை கத்ராக(கெளரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் இந்த ஆடைக்கு கதர் ஆடை என பெயர் வந்தது.
ஒரு கோடி ரூபாயை திலகர் சுயராஜ்ஜிய நிதிக்கு வழங்கியதற்காக, முஸ்லிம் தொழிலதிபர் உமர் சுப்ஹானியின் ஆலைத்தொழிலை முடக்குவதற்கு ஆங்கிலேய அரசு செய்த சதியால் சுப்ஹானிக்கு அன்று ஏற்பட்ட இழப்பு மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம்.
அந்நியத்துணி புறக்கணிப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்த வேளையில், "அந்நியத் துணிகளை உங்கள் ஆலைகளில் எரியூட்டலாமா?" எனக்கேட்ட காந்திஜியிடம், உமர் சுப்ஹானி அளித்த பதில் இதுதான்: "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படவாப் போகிறது" என்பதாகும். அந்நியத்துணிகளை புறக்கணிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.
மது வியாபாரத்தின் மூலம், அதன் உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலேய அரசுக்கும் வரிகள் மூலம் ஏராளமான தொகை போய் சேர்ந்தது. இதனைத் தடுக்கும் நோக்கில் மது ஒழிப்பு பிரச்சாரத்துடன் வெளிநாட்டு மதுபானக்கடைகள், கள்ளுக்கடைகள் மறியல் போராட்டம் நடத்துவோம் என காந்திஜி உத்தரவிட்டார். அதனை செயல்படுத்திய ஹாஜி முஹம்மது மெளலானா சாஹிப் உள்ளிட்ட பலரும் சிறைச் சென்றனர்.
நாடுமுழுவதும் அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகத்தின் துவக்கமாக 1930 ஆம் ஆண்டு மே ஆறாம் நாள் காந்திஜி கைதுச் செய்யப்படுகிறார்.அதனைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்றனர். இவ்வாறு இந்தியாவில் சுதந்திரத்திற்காக காந்திஜி நடத்திய அகிம்சை போராட்டங்களுக்கு பெரும் ஆதரவை அளித்தவர்கள் முஸ்லிம்கள். அதனால்தான், காந்தி ஒருமுறை கூறினார், இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா உமரின் ஆட்சி இந்தியாவிற்கு தேவை என்று. ஆம், அமைதியான தேசமாக இந்தியா உருவாக வேண்டும் என்பதுதான் காந்தியின் நோக்கம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கும் விஷ விருட்சமாக வளர்ந்த ஹிந்துத்துவா பாசிசம் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவின் தேசத் தந்தையான காந்திஜியை சுட்டு வீழ்த்தியது. சாகும்பொழுது ‘ஹே ராம்! ஹே ராம்! என அவர் முனகியதாக கதைக் கட்டியது ஒரு கூட்டம். பின்னர் இது பொய் என நிரூபணமானது.
காந்தியை சுட்டுவீழ்த்திய கூட்டம்தான் பாப்ரி மஸ்ஜிதையும் தகர்த் தெறிந்தது. இந்தியாவில் வாழும் ஆயிரக்கணக்கான சிறுபான்மை இனத்தவரின் உயிர், உடைமைகளை கலவரங்களின் மூலம் பறித்ததும் இக்கூட்டம்தான். காந்தி கொலையில் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்ற வீரசாவர்க்கரின் உருவப்படத்தை பாராளுமன்றத்தில் காந்தியின் படம் இடம் பெற்றிருக்கும் இடத்தில் வைத்து அவமானப்படுத்தியது பாசிச கும்பல். காந்தியை நினைவுக்கூறும் வேளைகளில் பாசிச கும்பலின் சதி வேலைகளையும் நினைவுக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ஏனெனில் காந்தி விரும்பியது ஹிந்து ராஷ்ட்ரம் அல்ல! அமைதியான இந்தியாவை!
பாபர் மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் : டெல்லி தலைமை இமாம்.
புதுடெல்லி,அக்.8:அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜூம்மா மஸ்ஜித் தலைமை இமாம் மெளலானா சையத் அகமது புகாரி திட்டவட்டமாக அறிவித்தார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மத அறிஞர்கள் டெல்லியில் வியாழக்கிழமை கூடி அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தார்கள்.அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்."அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர்பாக தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.மஸ்ஜித்திற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபர் மஸ்ஜித் பிரச்னை தொடங்கியது முதல் அலாகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத்துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவைதான்.
முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக்கொண்டு, வகுப்புவாத சக்திகளுக்குத்தான் காங்கிரஸ் துணைபோய்க்கொண்டிருக்கிறது. இன்றைய கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம்கள் தனிச்சட்ட வாரிய உறுப்பினர்கள் சிலர் தாங்களாகவே சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு புறக்கடை வழியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரியான சமரசத் தீர்வை அவர்கள் காணப் போகிறார்கள்? இடிக்கப்பட்ட இடத்திலேயே மஸ்ஜிதை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். இன்றைக்கு டெல்லியில் கூடிய நாங்கள் எங்களுடைய அமைப்பு வாயிலாக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்" என்றார் சையத் அகமது புகாரி.
சிந்திக்க: இதை சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும்.சரியான தருணத்தில் சொல்லப்பட்ட சரியான வார்த்தைகள். இனியும் இஸ்லாமிய சமூகம் மவுனம் காத்தால் தங்கள் அழிவை தங்கள் கைகளாலே எற்படுத்திகொள்வதர்க்கு சமம்.இனியாவது இஸ்லாமிய சமூகத்தில் உள்ள எல்லா இயக்க தலைவர்களும் ஒன்று சேர்ந்து இம்மாம் புஹாரி கைகளை வலுபடுத்துவோம். இன்னும் இயக்க மாயை பேசித்திரிந்தால் இன்னும் கேவலப்பட்டு இதைவிட மோசமான நிலைக்கு இந்த சமூகம் ஆளாவதை யாரும் தடுக்க முடியாது. இந்த தருணத்தில் இதை துணிவாக சொன்ன இமாம் புஹாரி மற்றும் மார்க்க மேதைகளுக்கு வாழ்த்துக்கள்.
Oct 7, 2010
பாபர் மசூதியும் & அதை உடைத்த பாசிச ஹிந்துதுவாவும் குறித்த ஒரு ஆய்வு.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு என்பது ஏறக்குறைய இந்திய தேசத்தை ஒரு முழுமையான இந்துக்களின் தேசமாக மாற்றுவதற்கு இந்துத்துவ இந்தியாவின் சிந்தனை மடங்கள் கையாண்ட வழிமுறை, பாரதீய ஜனதாக் கட்சி என்பது ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவு என்பதை நானும் நீங்களும் ஒன்றும் அத்தனை கடினமாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, பாரதீய ஜனதாக் கட்சியின் எந்த முதலமைச்சரும் அதன் அதிகார பீடமாகிய ஆர்.எஸ்.எஸ் காட்டும் வழிமுறைகளின் படிதான் நடந்து கொள்ள முடியும், இரண்டு சமூகங்களுக்கு இடையில் வழக்கு நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு இடத்தில் அணைந்து கிடந்த நெருப்பை ஊதி ஊதிப் பெருஞ் சுடராக்கிய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்கள், இந்துத்துவ வெறியர்கள் அனைவரும் ரொம்ப நல்லவுங்க என்றும்,மசூதியை உடைத்த கரசேவகர்கள் ரொம்பப் புனிதமானவர்கள் என்றும் இப்போது பல அறிஞர்கள் தங்கள் அருளுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உடைக்கப்பட்ட மசூதிக்காக குய்யோ முறையோ என்று கூப்பாடு போடும் இஸ்லாமியர்கள் அனைவரும் அந்நிய ஆற்றல்கள், நேராக சவுதி அரேபியப் பாலைவனத்தின் ஈச்சை மரங்களில் இருந்து குதித்து அயோத்திக்கு வந்து விட்டார்கள் அல்லது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய கிரகத்து மனிதர்கள்.
இந்துத்துவ இயக்கங்கள் எத்தனை புனிதமானவை, அவை யாருக்கும் தீங்கு இழைத்திருக்குமா? குழந்தைகளோடு பாதிரியாரைக் நெருப்பில் இருந்து காப்பாற்றிய பெருந்தன்மையாளர்கள் ஆயிற்றே அவர்கள், பல கர்ப்பிணிப் பெண்களை அவர்களின் கருவைக் காப்பாற்றிய உதாரண புருஷர்கள் ஆயிற்றே அவர்கள், கலவரங்களில் கொல்லப்பட்ட பல மனிதர்களின் ஆவியை அழைத்துத் தான் இவர்களின் புனிதத்தை வேக வைக்க வேண்டும். இதே புனிதர்கள் தானே மதக் கலவரங்களை நடத்திக் காட்டினார்கள், இதே புனிதர்கள் தானே ரத யாத்திரை என்ற பெயரில் ஒரு ரத்தயாத்திரையை நடத்தி மதத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி இந்த நாட்டைத் துண்டாடவும், அதில் குளிர் காயவும் பயணம் துவங்கினார்கள்.நாடுமுழுக்க குண்டுவெடிப்புகளை நடத்தி அதை முஸ்லிம்கள் தலையில் போட்டு அரசியல் நடத்தினார்கள்.
இவர்கள் மசூதியை உடைத்து ராமர் கோவில் கட்டி ஹிந்து மதத்தை பாதுகாக்க போவதாகவும், ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கபோவதாகவும் கூப்பாடு போடுகிறார்கள் அப்படிப்பட்டவர்கள் எல்லா ஹிந்த்துக்களிடமும் உங்கள் பெருந்தன்மையை நிலைநாட்ட இன்று முதல் மனு தர்மத்திலும், கீதையிலும் திருத்தங்கள் செய்கிறோம், வருண அமைப்பு இந்து சமூகத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது, இனி அய்யரு வீட்டுப் புள்ளைகளை பள்ளன், பறையன், சக்கிலியனுக்கும் கட்டிக் குடுப்போம் என்று எவனாவது ஒரு இந்துத்துவ அமைப்பு சொல்லட்டும் பார்க்கலாம்.ராமரு என்ன, அவரு தம்பி லெட்சுமணர், பரதரு, அவுக அப்பா தசரதரு எல்லாப் பயலுகளுக்கும் ஆளாளுக்கு ஒரு கோவிலை கட்டி கொடுப்போம். இதை ஒரு இந்து நாடு என்றே அறிவிப்போம். இதை செய்ய இந்த காஞ்சி சங்கரமடமும், அத்வானியும், வாஜ்பேயும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் தாயாரா?
பாபர் மசூதி தீர்ப்பின் நீதிபதிகளில் ஒருவரான உல்லாக்கான் கூடத் தனது தீர்ப்பின் சாரத்தில், கண்டுபிடிப்புகளில் “மசூதியைக் கட்ட எந்தக் கட்டிடங்களும் இடிக்கப்படவில்லை” என்றே சொல்லி இருக்கிறார். அவர் தலைல குல்லா மட்டும் தானே போட்டீர்கள், இந்த நாட்டுக்குப் நீதிபதிகள் ஷர்மாவும், அகர்வாலும் போட்ட மாதிரி.இவர்கள் சட்டம் படிக்காம என்ன சனாதானமா படிச்சுட்டு அலகபாத் நீதி மன்றத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வெகுஜனங்களின் மத்தியில் ஒரே அலையடிக்க ஆரம்பிச்சு அது தானா வந்து மசூதியை இடித்து விட்டதாம் இந்த ஹிந்துத்துவா நிதிபதிகள் சொல்கிறார்கள். ஆமா, அங்கே அத்வானி இல்லை, கல்யாண் சிங் இல்ல, முரளி மனோகர் ஜோஷி இல்ல, வினய் கட்டியார் இல்ல, ஏன் இந்துக்களே இல்லை என்று சொல்லி விடுங்களேன், இஸ்லாமியர்களே இந்த மசூதியை இடித்து விட்டார்கள் என்று அவர்கள் மீதே பழியைத் திருப்பிப் போடலாமே, அதற்கு யாராவது ஒரு ஹிந்துத்துவ அறிவு ஜீவி கட்டுரை எழுதி உங்கள் பார்பன இங்கிலீஷ் பேப்பர்ல போடுங்களேன்.
கோபுரத்தின் கும்பங்கள் (மினாராக்கள்) மாறி மசூதியாக ஊடகங்களில் உருமாற்றம் பெற்று வந்து விட்டதாம், அட என்ன ஒரு கண்டு பிடிப்பு, கோபுரம் இடிஞ்சு விழுந்தா ஊருக்கே ஆபத்து, கோபுரத்தில விரிசல் விழுந்தா பரிகாரம் பண்ணிப் பால் குடம் எடுத்தாத் தான் நாடு செழிக்கும், நல்ல மழை பெய்யும் என்று ஊளை இடும் இந்துத்துவ அறிவுத் தளத்திற்கு ஒரு மசூதியின் கும்பங்கள் (மினாராக்கள்) கோபுரத்தைப் போன்ற நம்பிக்கைகள் சார்ந்தது தான் என்பது எப்படிப் புரியும், இதுக்கு மட்டும் வெகுஜன அலையடிக்கும், ஆனால், வாங்கப்பா ஒரு தலித் நடக்கக் கூடாதுன்னு சொல்ற பாதைய நாம எல்லாரும் போயித் திறந்து விடுவோம் என்று சொல்லிப் பாருங்கள், அலையும் அடிக்காது, காற்றும் அடிக்காது, ஒரு மயிரும் அடிக்காது.
இன்னும் அந்த மசூதியின் கீழ் என்ன என்ன இருந்தது என்று சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை, நிச்சயம் ஒரு நாள் ராமர் எழுதி வச்ச உயில் இருக்கு, அவர் போட்ட சட்டங்களின் நகல் இருக்கு, அதிலே அவர் தெளிவாக இட ஒதுக்கீடு எல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கார் என்றெல்லாம் சொல்வார்கள், இந்தியா எவ்வாளவு முன்னேறி வந்தாலும் தலித்து தான் பீ அள்ளனும், சக்கிலியன் தான் செருப்புத் தைக்கணும் என்று ராமர் அவுங்க அப்பா தசரதர் எல்லாம் போட்ட சட்ட நகல் கூட அப்படியே அந்த மசூதிக்குக் கீழே பத்திரமாய் இருக்கும். இன்னும் யாரவது ஒரு அகழ்வாராய்ச்சியாளர் வந்து அவற்றை தோண்டி எடுத்து நமக்கெல்லாம் அலகாபாத் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ சமர்ப்பணம் செய்வார். அதுவரையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
ராமருக்கு கோவில் கட்டும் வரை என் மனம் அமைதி அடையாது - அத்வானி.
ஜெய்ப்பூர்,அக்.7:ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது மனதின் ஆசை. ராமர் கோவில் கட்டப்படும் வரை எனது மனம் அமைதி அடையாது என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி அத்வானி. ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது மனதில் உள்ள ஆசை. எனவே ராமர் கோவில் கட்டும்வரை எனது மனது அமைதி அடையாது. ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக அக்டோபர் மாதம் 25-ந்தேதி நான் சோமநாதபுரத்தில் இருந்து ரத யாத்திரை (என்கிற ரத்த யாத்திரை) தொடங்கினேன். ஆனால் அந்த (ரத்த) யாத்திரை முடிவு பெறவில்லை(?). நான் இங்கு அக்டோபர் 25ம் தேதிதான் வருவதாக இருந்தது. ஆனால் எனது அயோத்தி (ரத்த யாத்திரை) முடிவடையாததால், நான் அக்டோபர் 25ம் தேதி வேறு எங்கும் செல்வதில்லை. சோமநாதபுரம் கோவிலுக்கு மட்டுமே செல்வது வழக்கம்." என்றார்
ஹிந்து பயங்கரவாதி அத்வானி.
பாப்ரி மஸ்ஜித் வழக்கு உச்சநீதிமன்றத்தை நோக்கி நகர்கிறது.

புதுடெல்லி,அக்.7:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்றாக பங்கு வைக்குமாறு தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியான போராட்டம் துவங்கவுள்ளது. வழக்கின் தற்போதைய மூன்று கட்சிதாரர்களும், உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக மேல்முறையீடு செய்யப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்யப்போவதாக சன்னி வக்ஃப்போர்டு அறிவித்துள்ளது. இவர்களுடன் முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கட்சிதாரராக இணையப் போகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த 2.77 ஏக்கர் நிலம் பரிபூரணமாக முஸ்லிம்களுக்கே சொந்தம் எனவே அதனை முஸ்லிம்களுக்கு அளிக்கவேண்டும் என சன்னி வக்ஃப் போர்டு வாதத்தை எடுத்து வைக்கும்.
இவ்வழக்கின் இதர இரண்டு கட்சிதாரர்களான நிர்மோஹி அகாராவும், ஹிந்து மகாசபையும், விசுவஹிந்து பரிஷத்துடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள்.
பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் மூன்றில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்த(?) தீர்ப்பைக் குறித்து இவர்கள் உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவர். ஆனால் விசுவஹிந்து பரிஷத்தோ, கோயில் கட்டுவதற்கு அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தையும் அளிக்கவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் கோரும்.
தற்பொழுது மூன்று பிரிவினருக்கும் 3500 சதுர அடி வீதம் பங்குவைக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமர் கோயில் கட்ட 2.77 ஏக்கர் நிலத்துடன் அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலத்தையும் அளிக்கவேண்டும் என வி.ஹெச்.பி கோரும்.
1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட பிறகும் 1993 ஆம் ஆண்டில்தான் பாப்ரி மஸ்ஜித் நிலத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு முன்பு, இந்த நிலத்தோடு இணைந்த 43 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி ட்ரஸ்டிற்கு அளிக்கப்பட்டிருந்தது. 70 ஏக்கர் நிலத்தில் டெல்லியிலுள்ள அக்ஷார்த்தம் கோயில் மாதிரியில் விசாலமான கோயில் கட்ட வி.ஹெச்.பி திட்டமிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ஹிந்து மதவெறியர்களின் அமைப்பு: ராகுல் காந்தி.

போபால்,அக்.7: ஆர்.எஸ்.எஸ்ஸும் ஹிந்து மதவெறியர்களின் அமைப்பு என ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்த அமைப்புக்கு ஹிந்து மத அடிப்படைவாத பார்வையே உள்ளது என அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மதவாத சிந்தனைக் கொண்டவர்களுக்கு இளைஞர் காங்கிரஸில் இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் மனோநிலை அரசியல் ரீதியான முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக பா.ஜ.க கூறியுள்ளது. மனோரீதியான நோயைக் கொண்ட ஒருவரால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச் செய்யப்பட்ட இயக்கமாக கூற முடியும் என்றும், பா.ஜ.க வின் செய்தித் தொடர்பாளர் ஹிந்து பயங்கரவாதி பிரகாஷ் ஜவேத்கர் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் தேசிய உணர்வுக் கொண்ட(?) அமைப்பு எனவும் ஹிந்து பயங்கரவாதி ஜவேத்கர் தெரிவித்தார்.
Oct 6, 2010
வெளுத்தது ரஜினியின் ஹிந்துத்துவா முகம்.

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார்.
பால்தாக்ரேயின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினகாந்த்
"பால்தாக்ரே கடவுளுக்கு நிகரானவர் அவர் எனக்கு கடவுள் மாதிரி" எனக் தெரிவித்துள்ளார். செய்தி ஆதாரம் பி.டி.ஐ. நியுஸ். ரஜினிகாந்த மஹாராஷ்ட்டிரிய தம்பதிகளுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இப்ப மேட்டருக்கு வருவோம், மேற்கண்ட செய்திக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை எனினும் இஸ்லாமிய சமூக இளைஞர்களுக்காக ஒரு சில வரிகள். இன்றைக்கு எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு எனக் கூறி தனது இளைய பருவத்தை வீணடித்துக் கொண்டிருகின்றனர். யார் இந்த ரஜினிகாந்த என்ற உண்மையை முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் உணர வேண்டும். முஸ்லிம் இனமே இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள பாசிச இயக்கத் தலைவன் தான் இந்த பால் தாக்ரே. இந்த பால்தாக்ரே தான் ரஜினிக்கு கடவுளாம்.
கடவுள் பால்தாக்ரேயின் கொள்கையான பாசிச ஹிந்த்துவாவை பக்த்தன் ரஜனியும் பற்றுவார் என்பது இதிலிருந்து தௌ்ளத் தெளிவாகத் தெரிகின்றது.பால் தாக்ரே கடவுள் மாதிரி என பகிரங்கமாகக் பேட்டியளித்து தனது பாசிச சிந்தனைக் கொண்ட காவி உருவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினகாந்த். நீ ரஜினி கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது உனக்கு நீயே சாவுமணி அடித்துக் கொள்வதற்கு சமம். நீ தியேட்டர் சென்று படம் பார்கும் பணமமெல்லாம் உன்னை அழிக்க நினைக்கும் பாசிச ஹிந்த்துதுவா சக்திகளுக்கு நன்கொடையாக போகின்றது.இனிமேலாவது திருந்துவார்களா இஸ்லாமிய சமூக இளைஞர்கள்.
ராமர் பிறந்த இடம்: அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்?

ராமர் பிறந்த இடம் - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் கருத்து:
""நீதிபதி டி.வி.சர்மா வழங்கிய தீர்ப்பில 'சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை ஆன்மீகப் புனிதத் தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமர் கிருத யுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்காக நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ அறியமுடியவில்லையே என அகம் நொந்து வருந்ததானே வேண்டியுள்ளது.""
அய்யோ பாவம் முதல்வர். இதெல்லாம் ஒரு பெரிய வேலையா?
ஏதாவது ஒரு பிடிக்காதவரின் இடத்தக்காட்டி அங்குதான் ராஜராஜன் இறந்தான் என்று கட்டுக்கதையை கட்டிவிட்டால் போதாதா?அப்புறம் இருக்கவே இருக்கு நீதிமன்றம் - மக்கள் நம்புகிறார்கள் என்று தீர்ப்பளித்துவிடாதா?
ஆனால் அவர் ஆதாரங்கள் குறித்து பேசுகிறார்: "ஆராய்ச்சிகள் மூலமாக தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரீகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத்தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரீகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது.""என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.
தமிழனின் நிலை பரிதாபகரமானது. வரலாற்று ஆதாரங்களின்படி தமிழனுக்கு 3 ஆயிரம் ஆண்டு நாகரீகம் உண்டு. ஆனால், மூடநம்பிக்கை, கட்டுக்கதைகளின் படி ஆரியர்கள் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவர்கள். 3 ஆயிரம் பெரிதா? 17 லட்சம் பெரிதா?
அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்? அதுதான் மூட நம்பிக்கையே போதுமானது என்று "நீதிமன்றமே" சொல்லிவிட்டதே!
நன்றி :பசுமை பக்கங்கள் ஆசிரியர் அருள்.
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்தது ஆபத்தானது :சிபிஎம் பொலிட் பீரோ.

புதுடெல்லி,அக்:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் உண்மைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "தீர்ப்பை மக்கள் எதிர்கொண்டவிதம் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், ஆதாரங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளாமல் நம்பிக்கைக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்தது கவலையை அளிக்கிறது. இத்தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும்.
பாப்ரி மஸ்ஜிதை இடித்தது கிரிமினல் குற்றமும், மதசார்பற்ற கொள்கையின் மீதான தாக்குதலுமாகும். இவ்விஷயம் நீதிமன்றத்தின் கவனத்தில் வராவிட்டாலும் கூட மஸ்ஜிதை தகர்த்தை நியாயப்படுத்தும் விதமாகவே நீதிமன்றத் தீர்ப்பு புரிந்துக் கொள்ளப்பட்டது.
மஸ்ஜித் இடிப்புத் தொடர்பான வழக்குகளை கையாளும் நீதிமன்றங்கள் இதனை மிக கவனத்தில் கொள்ளவேண்டுமென பொலிட் பீரோ வலியுறுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய நிலத்தை 3 ஆக பிரித்து அளிக்கும் தீர்ப்பைத் தொடர்ந்து பிரம்மாண்டமான கோயிலை கட்டுவதுத் தொடர்பாகத்தான் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம் எனக்கூறுவோர் கூட மஸ்ஜித் கட்டுவதைக் குறித்து மெளனம் சாதிக்கின்றனர். பொலிட் பீரோ கூட்டத்தின் தீர்மானங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாரஷ் காரட் விளக்கினார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Oct 4, 2010
பாபர் மசூதி தீர்ப்பு குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் பேட்டி.
பாபரி மஸ்ஜித் நில வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் நில வழக்கு சம்பந்தமாக வெளியிட்டுள்ள தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மூன்று நீதிபதிகளும் வழக்கின் முக்கிய பல விசயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. எனினும் தீர்ப்பின் மையக் கருத்து சர்ச்சைக்குரிய நிலத்தின் இரண்டு பகுதிகளை ஹிந்துக்களுக்கும், ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பிரித்து அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசலின் மைய பகுதியை ஹிந்துக்களுக்கு கொடுக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டைப் பொறுத்தவரையில் நீதிமன்ற தீர்ப்பு உண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை மாறாக வெறும் மதநம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இது நீதி பரிபாலன முறைக்கு ஏற்புடைய செயல் அல்ல. இதில் இன்னுமொரு வினோதம் மத நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் முஸ்லிம்கள் மத நம்பிக்கையுடன் 450 ஆண்டுகாலமாக தொழுகை நடத்தியதும் அங்கு நடந்த உண்மை நிகழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இவ்வழக்கில் அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்பிற்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கின்றது. அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் பார்த்தாலும் பாபரி மஸ்ஜிதில் மொத்தம் 5 அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சிகளில் ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரமோ அல்லது ராமர் கோயிலை இடித்துத்தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரமோ கிடைக்கப் பெறவில்லை. பிரபல அறிவு ஜீவிகளும் வரலாற்று ஆய்வாளர்களுமான ரொமிலா தாப்பர், டாக்டர் கே.என். பனிக்கர், கே.எம். ஸ்ரீ மாலி உட்பட 60க்கும் மேற்பட்ட பிரபல அறிஞர்களும் அறிவு ஜீவிகளும் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் செங்கல் கட்டிகள் மற்றும் சுண்ணாம்புக்கூடு ஆகியவை அகழ்வாராய்ச்சியின் போது கைப்பற்றப்பட்டதிலிருந்து மஸ்ஜிதிற்கு அடியில் கோயில் இருக்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. நெடுந் தூண்கள் இருப்பதாகக் கூறும் அகழ்வாராய்ச்சித் துறையின் சர்வே அறிக்கை தூண்கள் கண்டுபிடிக்காத சூழலில் போலியாகும். இவர்களின் ஆவணங்கள் வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் விரிவான ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும். ராமர் பிறந்த இடத்தில்தான் இதுநாள் வரை பாபர் மஸ்ஜித் நிலைபெற்றிருந்தது என்ற வாதத்தை நிரூபிக்க ஆதாரங்கள் ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கு நீதிபதிகள் கூறும் ஆதாரம் என்னவென்றால் தொன்றுதொட்டே இந்த நம்பிக்கை இருந்துவருகின்றது என்பதே. புராணக் கதைகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை அங்கீகரிப்பதோடு மட்டுமல்ல இத்தகையதொரு நம்பிக்கையை சொத்துத் தகராறில் பயன்படுத்துவதும் தவறாகும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். எனவே இனிவரும் காலங்களில் இந்நடைமுறையை பின்பற்றி அகழ்வாராய்ச்சியின் அடிப்படையில் தான் வழக்கின் தீர்ப்புகள் வரையறுக்கப்படுமானால், அது நம் நாட்டிலுள்ள பல மத மற்றும் பண்டைய கால கட்டடங்களுக்கு பெரும் ஆபத்தாக அமைய வாய்ப்பிருக்கின்றது. இன்னுமொரு முரண்பாடு இவ்வழக்கில் எந்த கட்சியினரும் நிலத்தை பிரித்து வழங்கும்படி கோரவில்லை. மொத்தத்தில் நீதிமன்ற நடைமுறைக்ளுக்கு மாறாக, அரசியல்வாதிகள் செய்வதை நீதிமன்றம் செய்துள்ளது. நீதிமன்றத்தின் வேலை சமரசம் செய்வது அல்ல, நீதியை வழங்கவேண்டும். எனவே இது நீதிப்பூர்வமான தீர்ப்பு அல்ல.
சங்பரிவார்களின் நிலைபாடு பற்றி?
சங்பரிவார்களின் நிலைப்பாட்டில் புதுமை ஒன்றும் இல்லை. அவர்கள் எப்போதும் போலவே எங்களை கேள்விகேட்க யாருமில்லை என்கின்ற ரீதியில் செயல்பட்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னர் V.H.P. போன்ற சங்பரிவார இயக்கங்கள் ராமஜன்ம பூமியைப் பற்றி தீர்ப்பு கூறுவதற்கு நீதிமன்றத்திற்கு தகுதியோ அதிகாரமோ இல்லை என்று கூறி 60 வருடமாக அவர்களும் பங்கேற்ற நீதிமன்ற நடவடிக்கையை கேலிக்கூத்தாக்கினர். நீதிமன்ற நடவடிக்கைகளை கொஞ்சமும் சட்டை செய்யாது, இராமர் கோயிலின் நீளம், அகலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் தீர்மானித்து தேசிய அளவில் ராமர்கோயில் கட்ட பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் இல. கணேசன் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்று தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்தினார். தீர்ப்பு வந்த பின்பும்கூட சங்பரிவார்கள் நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள ஒரு பங்கு இடத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றே கூறி வருகின்றனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரிடம் மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, முஸ்லிம்களுக்கு அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளன. அதனால் இன்னொரு மசூதியை கட்ட முஸ்லிம்களே விரும்பமாட்டார்கள் என்றும், முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்தும் மக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும், அதனால் இந்த இடத்தில்தான் மசூதி கட்ட வேண்டும் என்ற அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை என்றும் முஸ்லிம்கள் விசயத்தில் நாட்டாமை தனமாக தீர்ப்பே கூறிவிட்டார். வி.ஹி.ப. தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் கிசோர் இன்னும் ஒருபடி மேலேபோய் காசி, மதுராவையும் முஸ்லிம்கள் விட்டுக்க கொடுக்க முன்வரவேண்டும் என்று அடுத்த கட்ட பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டார். எனவே சட்டம், நீதி என்பதெல்லாம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதை போலத்தான் அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. நீதியின் மீதும் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதசார்பற்ற விழுமியங்கள் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு இந்த ஃபாஸிஸ நடவடிக்கையை முறியடிக்க முன்வருவதுதான் ஒரே வழி.
சட்டவல்லுநர்கள் இத்தீர்ப்பை எப்படி பார்க்கின்றனர்?
நாட்டின் மிகச்சிறந்த சட்ட வல்லுநர்கள் இத்தீர்ப்பு குறித்து ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர். நீதி வழங்கும் முறையின் அடிப்படை காற்றில் விடப்பட்டதாக கருத்து வெளியிட்டுள்ளனர். பாபரி மஸ்ஜித் என்று முஸ்லிம்களாலும் ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் அதாவது 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தமானது என்பதுதான் வழக்கு? மாறாக அங்கே இருக்க வேண்டியது பாபரி மஸ்ஜிதா அல்லது ராமர் கோயிலா என்பதல்ல வழக்கு. எனவே இந்த வழக்கின் அடிப்படையில் பார்த்தால் நீதிமன்றத்தின்பணி சட்டப்படி இடம் யாருக்கு சொந்தம் என்று தீர்மானிப்பதுதானே தவிர வெறும் மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவது அல்ல நீதிமன்றத்தின் வேலை. இதுதான் நியாயமானாதாக இருக்க முடியும். நீதிமன்றத்தின் வேலை சமரசம் செய்வது அல்ல, சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். இதை வழங்குவதில் நீதிமன்றம் சறுகியிருப்பதாகவே தெரிகின்றது. எனவேதான் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், மனிதஉரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர், உயர் நீதிமன்ற தீர்ப்பு முற்றிலும் ஆச்சரியமளிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இது சரியான தீர்ப்பு அல்ல. இத்தீர்ப்பு வெறும் தந்திரமே. நீதிபதிகள் மதம் மற்றும் ஜாதிக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டும். அவர்களையும் மதவெறி தீண்டிவிட்டதா என்ற ஐயத்தை உருவாக்குகின்றது 3 பங்காக பிரிக்க வேண்டும் என்ற தீர்ப்பு என்றிருக்கிறார். அதேபோல் அரசியல் சட்ட வல்லுநரான ராஜிவ் தவான் இத்தீர்ப்பு குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். நீதிமன்றத்தீர்ப்பு ஹிந்து பிரிவினருக்கு ஆதரவானது, முஸ்லிம்களுக்கு நிலத்தின் ஒரு பகுதியை வழங்குவதற்கான தீர்மானம் கருணை காண்பிப்பது போன்ற நடவடிக்கை எனவும் நீதிமன்றத் தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு முறையை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார். இதனையே மூத்த வழக்கறிஞரான பி.பி. ராவ் வழிமொழிந்துள்ளார். பிரபல அறிவு ஜீவிகளும் வரலாற்று ஆய்வாளர்களுமான ரொமிலா தாப்பர், டாக்டர் கே.என். பனிக்கர், கே.எம். ஸ்ரீ மாலி உட்பட 60க்கும் மேற்பட்ட பிரபல அறிஞர்களும் அறிவு ஜீவிகளும் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு தேசத்தின் மதச்சார்பின்மைக்கும் நீதித்துறையின் கட்டமைப்பின் மீதும் விழுந்த அடி எனத் தெரிவித்துள்ளனர். இவையனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. பொதுவில் நீதிமன்ற தீர்ப்பு நீதி பரிபாலனமுறையை கேள்விக் குறியாக்கியுள்ளது.
இந்திய முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
நமது அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களுக்கு நீண்ட காலமாக நடந்து வருகின்ற சோதனைதான் பாபரி மஸ்ஜித் பிரச்சனையும் நடந்துவருகின்ற வழக்கும் சுமார் 60 வருடகாலமாக முஸ்லிம்கள் பொறுமையோடு சட்டரீதியாக போராடிப் பெற்ற உயர் நீதிமன்றத்தீர்ப்பு நமக்கு அதிர்ச்சியை அளிக்கின்றது. ஆனால் உயர் நீதிமன்றத்தீர்ப்பு இறுதியானதல்ல. உச்ச நீதிமன்றம் இருக்கிறது. உ.பி. சுன்னத் முஸ்லிம் வக்ஃப் வாரியமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. எனவே இதில் விரக்தி அடையவோ ஆவேசம் அடையவோ ஒன்றும் இல்லை. குறிப்பாக இளைஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது, நீங்கள் தான் சமூகத்தின், தேசத்தின் எதிர்காலம் எனவே பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். உலக வரலாற்றில் சில நீதிமன்ற தீர்ப்புகள் கூட மிகப்பெரிய சமூகமாற்றத்தை மிகப்பெரிய விழிப்புணர்வை மிகப்பெரிய எழுச்சியை உண்டுபண்ணியிருக்கின்றது. எனவே இந்திய முஸ்லிம்களாகிய நாமும் மதசார்பற்ற விழுமியங்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து இந்திய மக்களும் ஒன்றிணைந்து நீதிக்காக போராடக்கிடைத்த வாய்ப்பாக இதனைக்கருதி சட்ட ரீதியிலும் ஜனநாயக அடிப்படையிலும் போராடி பாபரி மஸ்ஜிதின் நிலத்தை மீட்க வேண்டும். பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் என்றென்றும் பேணிபாதுகாக்க வேண்டும். எனவே இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் செயல்படிவேண்டிய தருணம் இது. நிச்சயமாக நம்பிக்கையுடன் செயல்படுவார்கள் என்று நம்புகின்றேன்.
பாப்புலர் ஃப்ரண்டின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பாப்புலர் ஃப்ரண்ட் முஸ்லிம் சமூகத்தையும், மதசார்பற்ற விழுமியங்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து இந்திய மக்களையும் ஒன்றிணைத்து ஜனநாயக மற்றும் சட்டரீதியான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி பாபரி மஸ்ஜிதின் நிலத்தை மீட்கப்போராடும். இன்ஷாஅல்லாஹ். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதற்கு பங்காற்றியது போலவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதிலும் முக்கிய பங்காற்றுவோம். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் டெல்லியில் அமர்ந்து நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள். உ.பி. சுன்னத் வக்ஃப் வாரிய வழக்கறிஞர்களோடும் சட்ட வல்லுநர்களோடும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நீதியின் மீதும், மதசார்பற்ற விழுமியங்களின் மீதும் நம்பிக்கையுள்ள சட்ட வல்லுனர்களை ஒருங்கிணைத்து நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்துவதைப் பற்றியும் ஆலோசித்து வருகின்றோம். தமிழகத்தில் செயலகக் குழுவில் கலந்தாலோசனை செய்துள்ளோம். விரைவில் மாநில செயற்குழுவும் கூடவிருக்கின்றது. அதில் இது சம்பந்தமாக கலந்தாலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம். பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்வது, முஸ்லிம் சமூகம் இதில் விரக்தியடையவோ, நிராசையடையவோ வேண்டிய அவசியம் இல்லை. இது இறுதியான தீர்ப்பும் இல்லை. சட்டத்தின் அடிப்படையில், உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நீதிக்கான குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளது. உண்மை மற்றும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்பட்டால் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் நமக்கு நீதி கிடைக்கும். எனவே தொடர்ந்து நாம் நீதிக்கான பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம். இன்ஷாஅல்லாஹ் நீதி நிலைபெறும்.

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் -பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
கோழிக்கோடு,அக்.4:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என கேரளமாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்ததும், அங்கு அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்டதும், 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் தெளிவாக தெரிந்த பிறகும் நிலத்தின் உரிமை யாருக்கு என்பதனை நிர்ணயிப்பதற்கு பதிலாக கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு மாதிரியில் சமரசத்தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
வரலாற்று உண்மைகளுக்கும், ஆதாரங்களுக்கும் மேலாக ஏதேனும் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவது இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இது முதல் தடவையாகும். ஒரு பிரிவினருக்கு சொந்தமான நிலத்தை நம்பிக்கையின் பெயரால் இன்னொரு பிரிவினர் சொந்தம் கொண்டாடினால் அதற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கியிருப்பது உலகில் எங்குமே இல்லாத நடைமுறையாகும். இவ்வழக்கில் அதுதான் நடந்துள்ளது.
சொத்து தகராறை நம்பிக்கை பிரச்சனையாக மாற்றுவது நீதித்துறையின் அந்தஸ்திற்கு உகந்ததல்ல. இது நீதித்துறையில் கடுமையான எதிர்விளைவுகளுக்கு வழிவகுப்பதாகும். சுதந்திரத்திற்கு முன்பு வழங்கப்பட்ட இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்புகள் அனைத்துமே முஸ்லிம்களுக்கு சாதகமாகவே வந்துள்ளன. நீதித்துறையின் மீது நம்பிக்கைவைத்துள்ள சமூகம் என்ற நிலையில் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என முன்பே முஸ்லிம்கள் கூறியிருந்தனர். ஆனால், நம்பிக்கைத் தொடர்பான விவகாரத்தை தீர்மானிப்பது நீதிமன்றம் அல்ல எனக்கூறியவர்கள் தற்பொழுது நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்து நல்லுபதேசம் செய்வதன் பின்னணியில் உள்ள விருப்பம் தெளிவானது.
1949 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதிற்குள் அத்துமீறி நுழைந்து சிலைகளை வைத்ததும், 1986 இல் மஸ்ஜிதின் பூட்டுகளை திறந்துக் கொடுத்ததும், மதில் சுவருக்குள் பூஜை நடத்த ஹிந்துக்களை அனுமதித்ததும், முஸ்லிம்களுக்கு மஸ்ஜிதிற்குள் நுழைய அனுமதி மறுத்ததும், தற்காலிக கோயிலுக்கு சட்ட அந்தஸ்து வழங்கியதுமெல்லாம் நீதிமறுக்கப்பட்டதன் உதாரணங்களாகும்.
லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு காட்டிவரும் தயக்கமும் நீதிமறுப்பின் இறுதி உதாரணமாகும். பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சட்டரீதியான போராட்டத்தை தொடர்வதுதான் முஸ்லிம்களுக்கு முன்னால் உள்ள வழி. நீதி கிடைக்கும்வரை சட்டரீதியான, ஜனநாயகரீதியான போராட்டங்களை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றும் களத்தில் நிற்கும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Oct 3, 2010
யாருக்குச் சொந்தம் ரோஜாக்களின் தேசம்? காஷ்மீர் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.

என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்? - ஈழ கவி: காசி ஆனந்தன்
மீண்டும் பற்றியெரிகிறது காஷ்மீர். இம்முறை தெருக்களில் இறங்கிப் போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்லர். காஷ்மீர மக்கள். சிறார்களும் இளைஞர்களும் யுவதிகளும் முதியோரும் என பால்வேறுபாடின்றி, வயது வேறுபாடின்றி எல்லோரும் வீதிகளில்.... கொப்பளிக்கும் கோபமும், குருதியும் ஒன்றாய்க் கலந்து காஷ்மீரத்தெருக்களில் ஓடுகிறது.
அவர்களின் கோரிக்கை என்ன? அதன் நியாயம் என்ன?
அதற்குமுன் நம் கவனத்திற்காக சிறு தகவல்கள்:
1) நடப்பு 2010-2011 நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட்டில் ராணுவ பட்ஜெட் மட்டும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ரூபாய். கடந்த 2006-2007 ஆம் நிதியாண்டின் ராணுவ பட்ஜெட்டைவிட 13 சதவீதம் அதிகம். உலக அளவில் பத்தாவது மிகப்பெரிய ராணுவபட்ஜெட் இந்தியாவினுடையது. (நன்றி தினமலர்)
2) ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 6 சதம்கூட கல்விக்காக ஒதுக்க முடியாத இந்திய அரசு, உயர்கல்வித்துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு பந்திபரிமாறுகின்றது. நிதிநெருக்கடி!!!
3) "இந்தியாவில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் நிதியில்லை என்று சொல்வது ஆதாரமற்ற, வடிகட்டின முழுப் பொய்'' - என்கிறார் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியல்மேதை அமார்த்தியா சென்.
4) இன்னொரு அதிர்ச்சி:
நடப்பாண்டின் பட்ஜெட்டில் மொத்த வரவு ரூபாய் 8,27,000 கோடி
மொத்த செலவு ரூபாய் 45,09,000 கோடி. இதில் இந்த ஆண்டு வாங்கி இந்த ஆண்டே திருப்பிக் கட்டவேண்டிய கடன்களின் மொத்தம் 33,80,000 கோடி ரூபாய்.ஆக உண்மையான செலவு ரூபாய் 11,09,000 கோடி மட்டும். ( நன்றி துக்ளக்)
ஏன் வந்தது இவ்வளவு கடன்? ராணுவத்தின் பெரும்பகுதி ஆற்றலும் செலவும் எங்கே செல்கின்றன?
5) 1947-ல் நடந்த முதலாம் இந்தோ-பாக் போர், 1962-ல் நடந்த இந்தோ-சீனப்போர், 1965-ல் நடந்த இரண்டாம் இந்தோ-பாக் போர், 1971-ல் நடந்த பங்களாதேசப்பிரிவினையை வெளிக்காரணம் காட்டி நடந்த மூன்றாம் இந்தோ-பாக் போர், 1999-ல் நடந்த கார்கில் யுத்தம் அனைத்தின் பிண்ணனியில் இருப்பது எது?
கேள்விகள் விதம்விதம்! விடை ஒரே விதம்!! காஷ்மீர்!
ரோஜாக்களின் தேசமாக இருந்த காஷ்மீர் மண் குருதியில் சிவக்கவும், ராணுவத்துக்கு மட்டுமே மிக முக்கியம் கொடுத்து மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் இந்திய,பாகிஸ்தானிய அரசுகள் தவிக்கவும் காரணமான ஒரே பெயர் காஷ்மீர்!
தேசபக்தி முகமூடிகளைக் கழட்டிவைத்துவிட்டுக் கொஞ்சம் காஷ்மீர்ப் பிரச்சினையின் மூலத்தை ஆராய்வோமா?
1947. ஆகஸ்டு மாதம் சுதந்திரம் அடைந்த நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றுதான் தலையிலடித்துச் சத்தியம் செய்கின்றன நம் வரலாற்று ஏடுகள்.ஆனால் அப்போது சுதந்திரம் பெற்ற ஐநூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள்?
அவைத் தங்கள் விருப்பம்போல இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளலாம் அல்லது விரும்பினால் தனித்தியங்கலாம்! எலிவளையானாலும் தனிவளைதான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற சிற்றரசுகளில் காஷ்மீரும் ஒன்று. தாங்கள் சுதந்திரமான தேசத்துக்குரியவர்கள் என்ற எண்ணம் காஷ்மீரிகளுக்கு இருந்தது. ஆனால் விழுங்கக்காத்திருக்கும் வல்லூறுகளுக்கு மத்தியில் சின்னப்புறாக்கள் எவ்வளவுநாட்கள் தாக்குப்பிடிக்க முடியும்? பஸ்தூன் பழங்குடியினரைக் கேடயமாக வைத்து காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் புகுந்தபோது தாக்குப்பிடிக்க இயலாத காஷ்மீர் அரசின் மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடுகிறார்; நெருப்புக்குப் பயந்து எண்ணெய்ச்சட்டிக்குள் விழுந்த கதை அவருக்குத் தெரியாதுபோலும்!
"இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிடமுடியாது;காஷ்மீரை எங்களுடன் இணைத்துவிட்டால் இந்தியா உங்களுக்குத்தேவையான எல்லா ராணுவ உதவிகளையும் செய்யும்" என்று வலைவிரித்தார் வல்லபாய் பட்டேல். பூனை கைக்குள் அகப்படுவதைவிட கூண்டுக்குள் இருப்பது மேல் என்ற முடிவுக்கு வந்த ஹரிசிங்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இந்த ஒப்பந்தம் (Instrument of Accession) கஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு, வெளியுறவு போன்ற சில துறைகளைத்தவிர்த்து ஏனைய அனைத்தும் காஷ்மீர் அரசின் வசமே இருக்கும். போர் முடிந்தவுடன் ஐ.நா சபையின் மேற்பார்வையில் ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதா, அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா, அல்லது தனித்தியங்குவதா என்பதை காஷ்மீர மக்களே முடிவு செய்வார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது.
ஜூன் 16.1952ல் இந்திய பாராளுமன்றத்தில் ஜவஹர்லால் நேரு உரையாற்றுகிறார்:
"முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு ”நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை” என காஷ்மீர் மக்கள் கூறுவார்களானால், எங்களுக்கு அது வருத்தமாக இருப்பினும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே உள்ளோம். நாங்கள் அவர்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பப்போவதில்லை” காஷ்மீரில் நுழைந்த இந்தியப்படைக்கும் பாகிஸ்தான் படைக்குமான போரில் மூன்றில் இரு பங்கு நிலப்பகுதி இந்தியாவின் வசமும், எஞ்சிய பகுதி பாகிஸ்தானின் கைக்கும் போனது.
காஷ்மீர் இணைப்பிற்கென்று இந்திய அரசியல்சாசனத்தில் இணைக்கப்பட்ட பிரிவு எண் 370 காஷ்மீர் தனக்கென ஒரு அரசியல்சாசனத்தை இயற்றிக்கொள்ள வகைசெய்ததும் இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.
நன்றி: விந்தை மனிதன்
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: தொல் திருமாவளவன் கண்டனம்.
சென்னை,அக்.3:அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.
பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும். இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது.
மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.
இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது." இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அயோத்தி: நடந்தது இதுதான்: பசுமை பக்கங்கள் ஆசிரியர் திரு. அருள்.

1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).
2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் - கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.
3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)
எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.
6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.
படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.
ஒரு குற்றச்செயல் தண்டனைக்குரியதா அல்லது போற்றுதலுக்குரியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.
நன்றி சகோதரர்:பசுமை பக்கங்கள் Mr. அருள்.(http://arulgreen.blogspot.com)
Subscribe to:
Posts (Atom)